“பிறரை உயர்த்தித் தான் உயரும் நிலையையும்.. பிறரைக் காத்துத் தன்னைக் காக்கும் நிலையையும்… பிறரை வலுவாக்கித் தன்னை வலுவாக்கிக் கொள்ளும் நிலையையும்…” கொடுத்தார் குருநாதர்…!

“பிறரை உயர்த்தித் தான் உயரும் நிலையையும்.. பிறரைக் காத்துத் தன்னைக் காக்கும் நிலையையும்… பிறரை வலுவாக்கித் தன்னை வலுவாக்கிக் கொள்ளும் நிலையையும்…” கொடுத்தார் குருநாதர்…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைக் (ஞானகுரு) காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைப் பெறச் செய்தார்.

விஷத் தன்மை கொண்ட பாம்பினங்கள் அது விஷத்தால் தன் உடலை வளர்த்தாலும் அது உடலை விட்டுச் சென்ற பின் மடிந்த அந்த உடலிலிருந்த விஷத்தின் அணுத் தன்மைகள் அங்கே படர்கின்றது

அது சில கலவைகளாகி தாவர இனங்களில் மோதப்பட்டு புது விதமான செடியாக உருவாகின்றது.

அந்தச் செடியின் விழுதைக் காட்டினால் அதை நுகரும் விஷம் கொண்ட பாம்பினங்களும் விஷத்தால் இயக்கும் மற்ற உயிரினங்களும் ஒடுங்குகிறது என்பதனைக் காட்டிற்குள் நேரடியாகக் காட்டுகின்றார் குருநாதர்.

1.உயிரணுக்களின் வளர்ச்சியில் உடல்கள் உருவாகி
2.இந்த உடலில் பெற்ற உணர்வுகள் மற்ற தாவர இனத்துடன் கலந்து
3.அந்த (உடல்களில் உள்ள) இரத்தத்தைக் கவர்ந்து கொண்ட பின்
4.அந்தத் தாவர இனங்கள் (மணம், விழுது) என்ன செய்கின்றது…?
5.விஷத்தின் தன்மை பெருகிய பின் அந்த விஷத்தின் தன்மையால் என்ன செய்கிறது..?
7.இயற்கை எப்படி மாறுகின்றது…?
8.எந்தெந்த இயக்க வடிவில் அது வருகின்றது..? என்று
9.காட்டுக்குள் அழைத்துச் சென்று நேரடியாகக் காட்டினார்.

இப்படி உருவான தாவர இனங்கள் அக்காலங்களில் “ஏராளம்… ஏராளம்…” என்று காட்டி இதன் அறிவாக நீ தெளிந்து கொள் என்றார் குருநாதர்.

இன்று கேன்சர் என்ற விஷத் தன்மையை அடக்குவதற்கு விஞ்ஞானிகள் எத்தனையோ நிலைகளைக் கையாளுகின்றனர். ஆனால் அது முடியவில்லை.

TB நோய் வரும்போது அணுக்களின் தன்மைகளில் கிருமிப் போர் என்ற நிலைகளில் இதைக் காட்டிலும் வல்லமை கொண்ட உணர்வை ஒரு உடலில் உருவாக்குகின்றார்கள். அதாவது
1.TB நோயை உருவாக்கும் அணுக்கள்
2.உடலிலுள்ள எலும்பையும் மற்ற உறுப்புகளையும் அது கரைத்துக் கொன்று புசித்தால்
3.அதற்கு மாறான அவைகளைக் கொன்று புசிக்கும் அணுக்களைப் பெருக்கி
4.அந்த TB அணுக்களைக் கொன்று மனிதனைக் காக்கின்றார்கள்

இப்படிக் காத்து மனிதனை நோயிலிருந்து மீட்டினாலும் இவர்கள் கொடுக்கும் மருந்தால் இன்னொரு விஷத் தன்மையான அணுக்களை வளர்க்கும் பொழுது விஷத் தன்மை கொண்ட சிந்தனைகள் மனிதனின் நினைவில் வருகின்றது.

விஷமான இந்த நினைவுடன் உடலை விட்டுச் சென்ற பின் இன்னொரு உடலுக்குள் சென்றாலும்
1.அந்த உடலைக் கரைத்திடும் நிலையும்
2.விஷத்தை உருவாக்கும் தன்மை கொண்டும்
3.மனிதனுக்குள் அது மனிதனாகச் சென்றாலும்
4.மனிதனாகப் பிறக்க முடியாத நிலை ஆகின்றது.

அந்த உடலிலிருந்து அவன் ஆன்மா வெளிச் சென்றால் மீண்டும் விஷத்தைப் பெருக்கி விஷத்தால் ஜீரணிக்கும் சக்தி கொண்ட உடலாக மனிதனல்லாத விஷப் பாம்பாகவோ மற்ற விஷமான ஜெந்துக்களாகவோ தான் பிறக்க நேரும் என்று காட்டுக்குள் வைத்துக் காட்டுகின்றர் குருநாதர்.

இயற்கையின் உண்மை நிலைகள் என்ன..? இயற்கை எவ்வாறு இயங்குகிறது என்று அறிவதற்காகப் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் வாழ்ந்த நிலைகளைக் காட்டினார் குருநாதர்.

எந்தெந்த இடங்களில் அதிகமாக அகஸ்தியனின் உணர்வுகள் உந்தப் பட்டதோ அந்தப் பகுதிகளுக்கெல்லாம் என்னை அழைத்துச் சென்றார். இந்த உண்மையின் உணர்வுகளை அறியச் செய்தார்.

இதை அறிந்து கொண்ட பின் எனக்குள் வளர்ந்தால் மட்டும் போதுமா…? நீங்களும் அதைப் பெற வேண்டும் அல்லவா…!

அந்த அகஸ்தியன் கண்ட இயற்கையின் உண்மை உணர்வுகளை உலக மக்கள் அனைவரும் பெறச் செய்ய வேண்டும். அதற்காகத்தான் உனக்கு இதையெல்லாம் கொடுக்கிறேன் என்றார் குருநாதர்.

ஆனால் நீ சுயநலமாக
1.நான் வளர்த்துக் கொண்டேன்… நான் பெரிய மகான்…!
2.நான் அதைச் செய்வேன்… நான் இதைச் செய்வேன்.. என்று உனது பெருமையைச் சாற்றினால்,
3.அதனால் உனக்குச் சிறுமையே வரும்…!

இதனை நீ கற்றுணர்ந்த பின் “நான் இதையெல்லாம் அறிந்தேன்” என்ற அகம் எப்போது உனக்கு தோன்றுகிறதோ அப்போதே உண்மையை அறியும் தன்மையை நீ இழக்கின்றாய் என்றார் குருநாதர்.

ஆகவே இதனை நீ எவ்வாறு செய்யப் போகின்றாய்…? எவ்வாறு நீ வெளிப்படுத்தப் போகின்றாய்…?

கடுமையான நிலைகளில் உன்னை எதிர்த்துத் தாக்கும் உணர்வுடைய உலகில் நீ வாழ்கின்றாய். இதனின்று மீளும் மார்க்கம் என்ன…?

இப்படி அடிக்கடி வினாக்களைப் போட்டு அவர் கண்டுணர்ந்த உண்மையின் தன்மைகளை உணர்த்தினார். ஆகவே
1.ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி
2.அவர்களை உயர்த்தும்படி நீ இதைச் செய்தால்
3.நீ உயர்கின்றாய்… அவர்களையும் உயர்த்துகின்றாய்…!
4.உயர்ந்த நிலையை நீயும் நுகருகின்றாய்… அவர்களும் உயர்கின்றனர்.
5.ஒருவர் உயர வேண்டும் என்ற உணர்வை எப்போது நீ உணர்த்துகின்றாயோ…
6.அவர்கள் பெற வேண்டும் என்று எதை நீ ஆசைப்படுகின்றாயோ…
7.அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ… அதை உருவாக்குகின்றாயோ…
8.அது உருவான உணர்வின் தன்மை உன்னை வலுவாக்கவும்
9.உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களைப் பாதுகாக்கும் நிலையாகவும் இது வருகிறது.

இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கிறேன் என்றார் குருநாதர்.

“மற்றவர்களை உயர்த்தும் பொழுதுதான்…” நீ உயர முடியும் என்றார் குருநாதர்

“மற்றவர்களை உயர்த்தும் பொழுதுதான்…” நீ உயர முடியும் என்றார் குருநாதர்

இயற்கையின் உண்மைகள் எவ்வாறு இயங்குகின்றது…? என்று அறிந்து கொள்வதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்று பல அனுபவங்களைக் கொடுத்தார்.

மேலும்
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியன் எப்பகுதியில் எந்தெந்த இடங்களில்
2.அவன் உணர்வுகளும் மூச்சலைகளும் பதிவாகியுள்ளதோ அங்கெல்லாம் குருநாதர் அழைத்துச் சென்றார்.

அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின் பேருண்மைகளை என்னை அறியச் செய்தார். அவர் காட்டிய வழியில் உண்மைகளை அறிய முடிந்தது, உணரவும் முடிந்தது.

அறிந்து கொண்ட பின் எனக்குள் மட்டும் வளர்ந்தால் போதுமா..,? “நீங்களும்… அதைப் பெறவேண்டும் அல்லவா…”

ஆகவே.. “எல்லோரையும்… அதைப் பெறச் செய்…” என்றார் குருநாதர்.

ஆனால். நீ சுயநலம் கொண்டு நான் வளர்த்துக் கொண்டேன்.., “நான் பெரிய மகான்” நான் அதைச் செய்வேன்.., இதைச் செய்வேன்.., என்று உனது பெருமையைக் காட்டினால் உனக்குச் சிறுமையே வரும்.

1.ஒவ்வொருவரும் பெருமைப்படும்படி “அவர்களை உயர்த்தும்படி…” நீ இதைப் பெறச் செய்தால் நீ உயர்கின்றாய்..,.
2.அவர்களை உயர்த்துகின்றாய்… அந்த உயர்ந்த நிலைகளை நீ நுகர்கின்றாய்.
3.அவர்களும் உயர்கின்றனர்… அப்பொழுது நீயும் உயர்கின்றாய்…

இதைத்தான் நான் உன்னைச் செய்யச் சொல்கின்றேன்.

நீ இத்தனையும் கற்றுணர்ந்தபின் எல்லாம் செய்த பின்… “நான் தான் இதையெல்லாம் செய்தேன்…” என்ற “அகம்” எப்பொழுது உனக்குத் தோன்றுகின்றதோ அப்பொழுது உண்மையை அறியும் தன்மையினை இழக்கின்றாய்.

1.“ஒருவர் உயர வேண்டும்” என்ற உணர்வினை எப்பொழுது நீ ஊட்டுகின்றாயோ
2.அவர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எப்போது ஆசைப்படுகின்றாயோ
3.அவர்களைக் கேட்க வைக்கின்றாயோ அந்த அருள் ஞானத்தை உருவாக்குகின்றாயோ உருவான அந்த உணர்வு “உன்னை… வலுவாக்கும்…”

அதே சமயத்தில் உன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் அவர்களையும் காக்கும் நிலை வருகின்றது.

நீ இதை எவ்வாறு செய்யப் போகின்றாய்…? எவ்வாறு வெளிப்படுத்தப் போகின்றாய்…? கடும் தீமைகள் எதிர்த்துத் தாக்கும் உணர்வின் உலகில் நீ வாழ்கின்றாய். இதிலிருந்து நீ மீளும் மார்க்கம் என்ன…?

இப்படி அடிக்கடி எனக்குள் வினாக்களை எழுப்பி அந்த உண்மைகளை உணர்த்தினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆன அந்த ஆற்றல்களை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும் என்று அவர் காட்டிய அருள் வழியில் தான் உங்களுக்குள் இதைத் திரும்பத் திரும்பப் பதிவாக்குகின்றோம், நினைவு படுத்துகின்றோம்.

1.அகஸ்தியன் பெற்ற ஆற்றல்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.அவன் தீமையை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராக துருவ நட்சத்திரமாக வாழ்வது போல் நீங்களும் அந்த நிலை பெறுங்கள்.

மனிதரால் இது சாத்தியமானதே.

“பூமியைச் சமப்படுத்திய அகஸ்தியனைப் போன்று” உலகைக் காக்கும் வல்லவர்களாக நாம் ஆக வேண்டும்

“பூமியைச் சமப்படுத்திய அகஸ்தியனைப் போன்று” உலகைக் காக்கும் வல்லவர்களாக நாம் ஆக வேண்டும்

 

விஞ்ஞான அறிவினால் இன்று தன் நாட்டைக் காக்க எண்ணினாலும் அதனால் விளைந்த நஞ்சு நாட்டையும் மக்களையும் அழித்து விடும். விஞ்ஞான அறிவு இதைத்தான் இன்று பெருக்கிக் கொண்டுள்ளது.

அகஸ்தியன் மூடனாக இருப்பினும் சந்தர்ப்பத்தால் தாய் தந்தையின் அருளால் விண்ணின் ஆற்றலைப் பருகி
1.தீமைகளை அகற்றிடும் வல்லமையான நிலைகள் அவனுக்குள் பெருக்கிக் கொண்டது.
2.இருளான நஞ்சினை அகற்ற இவனுக்குள் ஒளியின் தன்மை பெருக்கும் நிலைகளை வளர்த்துக் கொண்டது.
3.பூமியின் இயல்பான நிலைகளையும் இதை உருவாக்கும்… மாற்றம் செய்யக் கூடியதும்… அத்தகைய வல்லமை இவனுக்கே உண்டு.

இவன் தான் உலகின் தன்மையை அன்று சமப்படுத்தினான்.

பூமி சுழலும் பொழுது துருவப் பகுதி பார்வதி…! விண்வெளியில் இருந்து வரக்கூடிய சக்திகளைக் கவர்கின்றது. துருவப் பகுதியில் வரப்படும் பொழுது அந்தச் சக்தி சிவம் ஆகின்றது.

1.பூமி சுழலும் சக்தி பார்வதி… தன் பார்வையில் பட்ட உணர்வைக் கவர்ந்த இந்த சக்தி உறைவிடமாக வருகின்றது.
2.அது தான் சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்.

சிவன் என்பது பூமி…! அதன் சுழற்சியின் சக்தியால் தனக்குள் கவர்ந்து சிவனுக்கும் பார்வதிக்கும் கல்யாணம்… கவர்ந்தது சிவத்துடன் இரண்டறக் கலக்கின்றது.

பூமியுடன் சேர்த்து அது ஒன்றாகக் கலக்கின்றது என்ற நிலை வந்தாலும் இதனின் நிலைகளைப் பார்க்க வெகு கோடி ஜனங்கள் இங்கே வருவார்கள்.

கவர்ந்த உணர்வின் தன்மை அணுக்களாகப் பெருகி சக்தியின் தன்மை பெருகப்படும் பொழுது பூமியின் தன்மை கவிழும் தன்மை வரும். திசை மாறி இந்த எடைக்கொப்ப எடையற்ற நிலைகளை மீண்டும் கவர்ந்து அதனின் உறைத்தன்மையாகி இது கரைய அது வளரும்.

இப்படி… பூமியின் சுழற்சியின் மாற்றங்கள் வருவதிலிருந்து அன்று அகஸ்தியன் இதைக் காத்தான்.

திருமணம் ஆகும் காலங்களில் இங்கே கூட்டங்கள் அதிகரித்து விடும்… பூமி நிலை தடுமாறும். ஆகையினால் சிவன் அகஸ்தியனை நீ தெற்கில் செல்… நீ தெற்கே சென்று இந்தப் பூமியைச் சமப்படுத்து என்ற எண்ணத்தை இவன் உருவாக்கினான்.

1.அதன் படி அகஸ்தியன் தெற்கே சென்று சமமான பகுதியில் நின்று
2.பூமி கவரும் சக்திகள் குளிர்ச்சியான நிலைகள் கொண்டு வடக்கிலே உறைந்தாலும்
3.தெற்கிலே நின்று நேர்முகமாக நின்று சூரியனின் காந்தப் புலனை எடுத்து இந்தப் பூமிக்குள் பரவச் செய்கின்றான்.
4.அப்பொழுதுதான் பனிப்பாறைகள் உருகிக் கடலாகக் கரைந்து இந்த பூமியின் தன்மையைச் சமப்படுத்தியது.

சிவன் அகஸ்தியனைத் தெற்கிலே செல்லும்படி சொல்லி இந்த உணர்வின் தன்மை தனக்குள் உற்றுப் பார்த்து இந்தப் பூமியைச் சமப்படுத்து என்று சொன்னது.

மனிதனான இவனின் உணர்வின் தன்மை கொண்டு அந்த வெப்ப அலைகளைத் தனக்குள் பரப்பப்படும் பொழுது கவர்ந்து பனிப்பாறைகள் கடலாக மாற்றியது.

1.அதனால் தான் அகஸ்தியனுக்குக் கமண்டம் கொடுத்திருப்பார்கள்.. நீர் சக்தி.
2.அந்தக் காலத்தில் முதல் மனிதன் அகஸ்தியன் பூமியை இவ்வாறு தான் திருப்பிச் சீராக இயங்கும்படிச் செய்தான்.

மழை நீர் உருவாகும் விதம்

மழை நீர் உருவாகும் விதம்

 

அகஸ்தியன் தாய் கருவிலிருக்கும் பொழுது நஞ்சினை வென்றிடும் அருள் சக்தி பெற்றான்.

அவன் குழந்தையாகப் பிறந்த பின் அவன் உடலில் இருந்து வெளிப்படும் மணங்கள் நஞ்சு கொண்ட உயிரினங்கள் அவனை அணுகாது அவனைப் பாதுகாக்கும் நிலையாக அமைந்தது.
1.அத்தகைய மணம் உண்மையின் உணர்வின் தன்மையை இயக்கி அதன்வழி அவன் வளர்ந்து
2.வான் வீதியின் உணர்வுகளை நுகர்ந்து வளர்ச்சி பெற்றான்.

நஞ்சை வென்றிடும் சக்தியைத் தாயின் கருவிலே பெற்றான். அதன் வழி கொண்டு வான் வீதியிலிருந்து நுகர்ந்தான் என்றால்… எதை…?

நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து விஷத் தன்மையைத் தான் கவர்கின்றது. பால்வெளி மண்டலங்களாக மாற்றிக் கொள்கின்றது.

பால்வெளி மண்டலங்களாக மாற்றும் பொழுது தூசுகளாக வருகின்றது.
1.இந்தத் தூசிகள் சூரியன் அருகிலே வரப்படும் பொழுது மோதுகின்றது.
2.ஒன்றுடன் ஒன்று மோதி எதிர் நிலையாகி மின்கதிர்களாக மாறுகின்றது.

மின் கதிர்களாக மாறும் ஒளிக் கற்றைகளை வெள்ளிக் கோள் எடுத்துக் கொள்கின்றது. அதிலே விஷத்தின் தன்மை பிரிவதைக் கேதுக் கோள் அந்த விஷத்தினைத் தான் வலு கொண்டு கவர்ந்து கொள்கின்றது. அதே சமயத்தில் இணைத்த உணர்வின் தன்மையை ராகுக் கோள் தனக்குள் கவர்ந்து தன்னுடன் இணைத்துக் கொள்கிறது.

இதிலே வரும் ஓசை… சப்தத்தை செவ்வாய்க் கோள் எடுத்துக் கொள்கின்றது. இதிலே வரும் கழிவு ஆவித் தன்மை தனித்தன்மை அடைந்ததைச் சனிக்கோள் எடுத்துக் கொள்கின்றது.

சாதாரணமாக… நாம் சமையல் செய்யும் போது நாம் பல பொருள்களை எடுத்து வேக வைக்கின்றோம் அப்பொழுது அந்தச் சத்தெல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து விடுகின்றது.

ஆவித் தன்மைகள் மேலே செல்லுகின்றது. ஆவித் தன்மை அடைந்தபின் மேகக் கூட்டத்துடன் இணைந்து கொள்கின்றது.
1.அதில் நீர் என்ற நிலைகள் வந்தாலும் மேகக் கூட்டத்திற்குள் கலந்தபின்
2.அதன் உணர்வின் தன்மையை பல வர்ணங்களில் பல ஒளிக் கற்றைகள் மின்னல்கள் தாக்கப்படும் பொழுது
3.அதில் கலந்து கொண்ட உணர்வின் தன்மையுடன் மோதுகின்றது….
4.அப்பொழுது பளீர்…ர்ர் என்று மின்னல் ஆகிறது… மின் கதிர்கள் அதைக் கருக்குகின்றது.
5.கருக்கிய நிலைகள் கொண்டு ஆவித் தன்மை மேகம் சுத்தம் ஆகின்றது.
6.சுத்தமான பின் இதிலே பிரிந்த உப்புச் சத்தின் தன்மை கலக்கப்படும் பொழுது மழை நீராகப் பெய்கின்றது.

எத்தனையோ வகைகள் இப்படிச் செல்கின்றது.

ஆனால் மனிதனான பின் விஷம் கலந்த உணர்வின் தன்மை (தொழிற்சாலைகளிலிருந்து வருவது) ஆவியாக மாறப்படும் பொழுது வான் வீதியில் சென்று அது மேகக் கூட்டங்களாக மாறி மழை நீராக வரப்படும் பொழுது “கெமிக்கல் மழை…” என்று விஞ்ஞானத்தின் தன்மையால் ஏற்படுகின்றது.

“மின்னலைப் பார்…” என்றார் குருநாதர்

“மின்னலைப் பார்…” என்றார் குருநாதர்

குருநாதர் எம்மைப் பார்த்து “மின்னலைப் பார்…” என்று பல முறை கூறினார். ஆனால் யாம் மறுத்துக் கொண்டே இருந்தோம்.

சந்தர்ப்பத்தால் ஒரு முறை திடீரென்று எமக்கு முன்னால் மின்னல் ஒன்று பாய்ந்தது. “மின்னலைப் பார்த்தாயல்லவா… இதனால் உன் கண் என்ன ஆனது…?” என்று கேட்டார் குருநாதர்.
1.இது போன்ற சில உணர்வுகளை
2.நான் கொடுத்த சக்தியின் துணை கொண்டு உனக்குள் அடக்கி
3.வீரிய உணர்வு கொண்டு பாய்ச்சு…! என்றார்.

மின்னல் கடலில் தாக்கப்பட்டு மணலாக மாறினலும் ஒரு மீன் மின்னலின் உணர்வுகளால் தாக்கப்படும் பொழுது அது “எலக்ட்ரிக் மீனாக” மாறுகின்றது. அதனுடைய அறிவானது வெகு தூரத்தில் இருப்பதையும் அறியக்கூடிய சக்தி பெறுகின்றது.

1.கடலில் மின்னல் தாக்கப்படும் பொழுது மின்னலானது ஒரு மீனைத் தாக்கினால் அந்த மீன் இறந்தாலும்
2.மீண்டும் அது உருப்பெற்று புது விதமான மீனாக உருவாகி
3.வெகு தொலைவில் இருப்பதையும் அறிந்துணரக் கூடிய சக்தி பெறுகின்றது.
4.அப்படிப்பட்ட வளர்ச்சியின் தன்மையில் “டால்பின் மீன்” என்ற நிலைகள் உருவானது.

அதாவது “ஞானத்தைக் கொண்டு வளர்க்கும் சக்தி…” கடல் வாழ் நிலைகளில்தான் உருவானது என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்தினார்.

இது போன்று
1.நட்சத்திரங்கள் வெளிப்படுத்தும் ஒளிக்கற்றைகளை அகஸ்தியர் தமக்குள் சுவாசிக்கும் போது அதனின் வளர்ச்சியில்
2.நமது பிரபஞ்சத்தையும் நமது பிரபஞ்சம் பிற மண்டலங்களில் இருந்து தன் உணவை எடுப்பதையும் முழுமையாக அறிந்துணர்ந்தார்.

நமது குருநாதர் அருள் துணை கொண்டு அகஸ்தியர் கண்டுணர்ந்த உணர்வுகளை நாமும் கவர்ந்து நம் உடலை உருவாக்கிய அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்தால்
1.இந்தப் பிறவியில் அழியா ஒளிச்சரீரம் பெற முடியும்.
2.அகஸ்தியர் கண்ட அண்டத்தின் பேருண்மைகளையும் நாம் அனைவரும் அறிய முடியும்.

இதன் வழி பின்பற்றும் அனைவருக்கும் எமது அருளாசிகள்.

அகஸ்தியனின் புலன்

அகஸ்தியனின் புலன்

 

ஒரு மனிதன் வேதனைப்படுகின்றான். சந்தர்ப்பத்திலே அதைப் பார்க்கின்றோம். அந்த வேதனையை நாமும் நுகர நேர்கின்றது… நம்மையும் அது இயக்குகிறது.

அதே போன்றுதான் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற சந்தர்ப்பம் அகஸ்தியனின் தாய் தந்தையருக்குக் கிடைத்தது. எப்படி…?

1.மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்வதற்காகப் பச்சிலை மூலிகைகளைப் பயன்படுத்தினார்கள்.
2.அந்த மணங்களைச் சுவாசித்த பின் அந்தச் சந்தர்ப்பம் பல விஷத் தன்மை முறிக்கும் நிலை வந்தது.
3.அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள்… ஏனென்றால் மிருகங்கள் தங்களைக் கொன்று விடும்… தன்னைக் காக்க வேண்டும் என்று.
4.அந்தச் சந்தர்ப்பத்தால் தீமைகளை வெல்லும் சக்தி பெற்றார்கள்.

நுகரும் உணர்வுகள் புலனறிவாக எப்படி இயக்குகிறது…? என்று “புலஸ்தியர்…” என்று அக்கால மக்களைச் சொல்வார்கள்.

இன்று விஞ்ஞானிகள் மெய் ஞானிகள் என்று சொல்கிறோம் அல்லவா. அது போல
1.புலனின் உணர்வுகளைத் தெரிந்து கொண்டவர்கள்… புலஸ்தியர்… பூமியின் முதல் மனிதர்கள்.
2.ஒரு தாவர இனத்தைத் தனக்குள் சேர்த்துக் கொண்டால் அதனின் அறிவு என்ன செய்கிறது…? என்ற உண்மையின் இயக்கத்தை அறிந்தவர்கள்.

அந்த ஆற்றல்களை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் காலை துருவ தியான நேரத்திலே அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்தச் சக்தியைத் தொடர்ந்து எடுக்கும்படி சொல்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து “உங்கள் உடலுக்குள் அது அணுவாகும் தத்துவத்தைத் தான்…” குரு வழியில் உபதேசிக்கின்றோம்.

எல்லா நேரமும் நாம் தியானம் செய்யலாம். இருந்தாலும் இந்த அதிகாலை நேரத்தில் உங்கள் எண்ணத்தை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து அந்த உணர்வுகளைக் கலந்து உங்களுக்குள் அந்த உண்மையின் உணர்வை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அறிந்து கொள்ள ஏற்படுத்துகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது…? நாம் ஏன் கோபப்படுகின்றோம்…? நாம் ஏன் வேதனைப்படுகின்றோம்…? நாம் ஏன் தீமை செய்கின்றோம்…? என்று சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும்.

ஒருவன் தவறு செய்கிறேன் என்றால் அவனை நாம் குற்றவாளியாக ஆக்குவதற்கு மாறாக அவன் உணர்வை நாம் எடுத்தால் பல தடவை அதைக் கேட்டறிந்தால் சந்தர்ப்பம் நம்மையும் குற்றம் இழைக்கக்கூடிய நிலையாக… குற்றம் செய்பவனாக வளர்த்து விடுகின்றது.

நான் தவறே செய்ய மாட்டேன் என்பார்கள். ஆனால் தவறு செய்தவர்களை அடிக்கடி உற்று நோக்கினார்கள் என்றால் இவர்களும் அதைச் செய்ய ஆரம்பிப்பார்கள்.

1.எல்லாமே சந்தர்ப்பம் தான்.
2.ஆகவே நல்ல சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்த வேண்டும்.

பகைமையோ வெறுப்பையோ வேதனையோ சலிப்போ சஞ்சலமோ சங்கடமோ கோபமோ வரும் பொழுது துருவ தியானத்தில் உங்களுக்குக் கொடுத்த சக்தியின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருளை பெற வேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் தீமையை வலுவிழக்கச் செய்து அந்த உணர்வினை நமக்குள் வலுவாக்கிக் கொண்டே வர வேண்டும்.

தெளிந்து தெளிவான நிலைகள் கொண்டு வாழ்ந்து தீமைகளை அகற்றி வாழ்வதற்குத் தான் குருநாதர் சொன்ன வழியினைப் போதிக்கின்றோம்.

1.அகஸ்தியன் அருளை… அவன் எப்படிப் புலனின் நிலையை அறிந்தானோ
2.அந்த புலனின் தன்மையை நுகரச் செய்து உங்கள் நல்ல புலனாக அறிந்திடும் அறிவின் புலனாக
3.அகஸ்தியனின் புலனை… அவன் ஒளியான உணர்வின் புலனை உங்களுக்குள் செவி வழி கேட்கும் படிச் செய்து
4.உங்களை நுகரச் செய்து உங்கள் ஆகாரத்தின் வழி ரத்தத்தில் கலக்கச் செய்து கொண்டிருக்கின்றேன்.

இதை நீங்கள் தொடர்ந்து வளர்த்துக் கொண்டால் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து கல்கி என்ர நிலையை அடைய முடியும்.

ராமேஸ்வரம் – எண்ணத்தால் உருவாக்கப்பட்ட இந்த உடல்…! தனுசு கோடி – ஒவ்வொரு நிமிடமும் தீமை என்ற உணர்வுகளைத் துருவ நட்சத்திரத்தின் சக்தி கொண்டு மாற்றிக் கொண்டே வரவேண்டும்.

1.கோடிக்கணக்கான உணர்வுகள் நமக்குள் தோன்றுகிறது.
2.அதற்குள் துருவ நட்சத்திரத்தின் சக்தியைக் கலந்து கொண்டே வந்தால் தனுசு கோடி.

எத்தனை கோடி உணர்வுகள் வந்தாலும் அதை ஒளியாக மாற்றிக் கொள்ளும் சக்தி பெற்றது துருவ நட்சத்திரம்.
1.அந்த ஆற்றலை நாமும் நிச்சயம் பெற முடியும்
2.அகஸ்தியனின் புலன் கொண்டு அந்த முழுமையை அடைய முடியும்.

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆவது தான் “சைவ சித்தாந்தத்தின் மூலம்…”

உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் ஆவது தான் “சைவ சித்தாந்தத்தின் மூலம்…”

 

சூரியனின் காந்த சக்தி எதனைத் தனக்குள் கவர்ந்து எடுத்துக் கொண்டதோ அதனின் உணர்வின் இயக்கமாக இயங்குவது காயத்ரி. அன்று ஏழு ரிஷிகள் இந்த உணர்வின் இயக்கங்களைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

அதற்குப் பின் வந்த வேதாந்தத்தின் நிலைகள் கொண்டு வேதத்தின் தன்மைகள் தாவர இனத்தின் உணர்வுகள் இயங்குவதை ரிக் வேதம் சாம வேதம் யஜுர் வேதம் அதர்வண வேதம் என்று பிரித்தார்கள்.

அதிலே ஒரு தாவர இனம் மற்றொன்றைப் புசிக்கும் பொழுது இந்த உணர்வின் மாற்றங்கள் ஆகும்பொழுது அது அதர்வண வேதம்.

அதையே உயிரினம் மற்றொன்றைக் கொன்று பூசிக்குமே என்றால் உதாரணமாக மானின் உணர்வுக்குள் புலியின் உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது… புலி கொன்று அதைச் செயலற்றதாக ஆக்குகின்றது. இது அதர்வண வேதம்.

வியாசகருக்கு அன்று எழுத்தறிவு இல்லை என்றாலும் வெளிப்படுத்திய உணர்வுகள் அது விரிவாக இல்லை.

1.வேதங்கள் என்பது சுருதியின் இயக்கங்களைக் கண்டுணர்ந்து எழுத்து வடிவில் கொண்டு வந்து
2.மீண்டும் அந்த உணர்வின் ஆற்றலாக இயக்கச் செய்வது தான் அது.

இப்படிப் பிரித்துக் கொடுத்த உணர்வின் இயக்கங்கள் தான் வேதங்கள். ஆக “சைவ சித்தாந்தம்…!” தாவர இனங்கள் எவ்வாறு வளர்ந்தது…? என்றும் உணர்வின் ஆற்றலால் எவ்வாறு நிலை கொண்டது…? என்பதை அகஸ்தியன் அன்று காட்டினான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று அவன் காட்டிய உணர்வை எல்லோரும் அறிந்திடும் அறிவானாலும்
1.தன்னுடன் இணைந்திடும் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மகிழ்ந்திடும் உணர்ச்சியைக் கூட்டி
2.அந்த உணர்வைப் பெருக்கி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலை கொள்ளும் நிலைகள் தான் சைவ சித்தாந்தம்.
3.தீமைகள் வரும் பொழுது அதிலிருந்து அகன்றிடும் முறைகளைத் தெளிந்த நிலைகள் கொண்டு சைவ சித்தாந்தம் காட்டியது.

ஆனால் இதையெல்லாம் அன்றைய அரசர்கள் தான் ஆட்சி புரியும் காலத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு… இந்த சித்தாந்தத்தில் உண்மை நிலைகளை வேதங்களாக மாற்றப்பட்டு… சுருதியின் தன்மைகளை எழுத்தின் நாதங்களை மாற்றப்பட்டு மாற்றிய நிலைகளைத் தான் இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம்.

அன்றைய அரசர்கள் ராமன் என்றும் கண்ணன் என்றும் சிவன் என்றும் ஈசன் என்றும் காளி என்றும் மாரி என்றும் மாற்றி
1.அதைத் தனது குலதெய்வங்கள் என்று சித்தாந்தங்கள் பிரிக்கப்பட்டு
2.அரசன் தன்னுடைய ஆட்சிக்காக குலதெய்வங்களாக உருவாக்கப்பட்டு அதனின் நிலையில் தான் ஆட்சி பீடங்கள் வழி நடத்தி வந்தது.

அரசனுக்குக் கீழ் குடிமக்கள் அவன் காட்டியதைப் பதிவு செய்து அந்த உணர்வின் இயக்கங்கள் தான் மதங்களாக அதற்குப் பின் இனங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்படிப் பிரித்த நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் கொன்றும் ரசிக்கும் உணர்வின் தன்மை வந்து விட்டது

அதாவது…
1.அதர்வண வேதத்தின் அடிப்படையில் எது பரவப்பட்டதோ எவ்வாறெல்லாம் அதைப் பெற முடியும்…?
2.தீமைகளை எவ்வாறு உருவாக்க முடியும்…? என்ற அடிப்படையில்
3.நாட்டு மக்களை எல்லாம் அழிவின் வழிக்குக் கொண்டு சென்றது தான்.

வேதங்கள் உலகம் முழுவதற்கும் உண்டு. அது இல்லாத மதம் இல்லை. மதத்தால் உருவாக்கப்பட்ட உணர்வின் நாதங்களும் அந்த சுருதிகளும் எவ்வாறு நமக்குள் இயக்குகின்றதோ…? அதன் செயலாக்கங்கள் தான் இன்றும் வழி தொடர்ந்து கொண்டுள்ளது.

இதையெல்லாம் உங்களுக்குத் தொட்டுக் காட்டியுள்ளேன். “சிலவற்றைச் சொல்லக்கூடாது…” என்பதற்குத் தான் அதை மறைத்து வெளிப்படுத்துகின்றேன்.

ஆனால்
1.உண்மைகளை உணர்ந்திட வேண்டும்… தெளிந்த நிலையில் மெய் வழியினைப் பெற வேண்டும் என்று எவர் எண்ணுகின்றார்களோ
2.அவர்களுக்கு இது கிடைக்கப் பெற்று… இருளைப் போக்கிப் பொருள் காணும் சக்தியாக விளையும்.

காரணம்… அதர்வண வேதத்தைப் பற்றிய உண்மைகளைச் சுட்டிக் காட்டி விட்டால் மற்றொன்றை அழித்துச் சுகபோகத்தின் அடிப்படைக்கே கொண்டு செல்லும்.

அன்று அரசர்கள் செய்த நிலைகள் தான் “இன்றும் உலகில் போர் முறையாக நடக்கின்றது…!” அதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.
1.அகஸ்தியன் காட்டிய பேருண்மையின் நிலைகளை
2.அந்த மூலத்தின் இயக்கங்கள் எவ்வாறு இயங்குகிறது…? என்பதை அறிந்து கொண்டால் “அதுவே போதுமானது…”

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலகம் சென்றானோ அந்த வழியில் நாமும் செல்ல வேண்டும்

ஆதியிலே அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலகம் சென்றானோ அந்த வழியில் நாமும் செல்ல வேண்டும்

 

அன்னை தந்தையர் அருளாசி பெற வேண்டும் என்று அனு தினமும் நாம் எண்ணி அவர்களிடம் அதைப் பெற வேண்டும்.

1.பேரண்டமும் பேருலகமும் உன் அன்னை தந்தையர் தான் என்ற உணர்வு கொண்டு
2.இந்த இணைப்பின் பிணைப்பின் நிலைகள் வரப்படும் பொழுது தான் முழுமை அடைய முடியும் என்று
3.அதை முதலில் வினையாகச் சேர்க்கச் சொல்லி… நமக்குள் ஊழ்வினையாக
4.”அந்த வினைக்கு நாயகனாக நீ ஆக வேண்டும்…” என்று நாரதன் ஞானக் கனியைக் கொடுக்கின்றான் என்று ஞானிகள் அன்று காட்டினார்கள்.

நம் அன்னை தந்தையர் உடலை விட்டுப் பிரிந்து சென்று விட்டால் விநாயகரைப் பார்க்கப்படும் பொழுது எவ்வாறு எண்ண வேண்டும்…? என்ற நிலையையும் அன்று ஞானிகள் உணர்த்தி உள்ளார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற என் அன்னை தந்தையரின் உயிரான்மாக்கள் எங்கள் குலதெய்மான உயிரான்மாக்கள்
1.அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் அந்த அகஸ்திய மாமகரிஷியின் அருள் வட்டத்திலே இணைந்து
2.என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை அங்கே உந்தி
3.இன்னோரு உடல் பெறும் நிலைகளை மாற்றிப் பிறவாநிலை பெறச் செய்வதற்கு
4.அந்த இணைப்பின் தன்மையைக் கொண்டு வரச் சொன்னார்கள்.

இதை உணர்த்திய ஞானி விண்ணிலே இருக்கின்றான். அவன் உணர்வை நமக்குள் கூட்டி இந்த உணர்வினை நினைவுபடுத்தி இணைத்துக் கொண்டபின் இந்த உயிரான்மா பிறவா நிலை பெற வேண்டும் என்று முதலில் செயல்படுத்தும் முறையைச் சொன்னான்.
1.ஆகவே அந்த வினையை வினைக்கு நாயகனாக ஆக்கி அதனின் உணர்வு கொண்டு
2.”ஒளியின் சரீரமாக வினைக்கு நாயகனாக நீ ஆகு…” என்ற நிலையை உணர்த்தினார்கள்.

உடலை விட்டுச் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் ஒளிச் சரீரம் பெற வேண்டும். என்றும் பதினாறு என்ற நிலையை அடைய வேண்டும். குழந்தையாக வாழும் காலத்தில் எங்களுக்கு வழி காட்டியது போன்று
1.பொருளறிந்து செயல்படும் உணர்வின் சுடராக எங்கள் உணர்வுக்குள் நின்று
2.”எங்களுக்கு என்றென்றும் வழி காட்ட வேண்டும்…” என்று இப்படித்தான்… இந்த வினையை வினைக்கு நாயகனாக்க வேண்டும்.

மனித வாழ்வில் விண் சென்ற மெய் ஞானி எங்கே அடைந்தானோ எங்கள் அன்னை தந்தையர் அந்த எல்லையை முதலில் அடைய வேண்டும் என்று காட்டி… “அதற்குப் பின் தான் நாம் அங்கே செல்ல முடியும்…” என்பதையும் உணர்த்தினார்கள்.

அன்னை தந்தையர் முதலிலே மனிதனாக ஆனார்கள். அடுத்து நம்மை மனிதனாக உருவாக்கினார்கள். மனிதனான பின்
1.மனித நிலையிலிருந்து உணர்வினை ஒளியாக மாற்றித் தான் முதல் மனிதன் அகஸ்தியன் விண் சென்றான்.
2.அணுவின் ஆற்றலை அறிந்தான்… உணர்வின் தன்மை ஒளியாக மாற்றினான்.

அதே வினையைத் தன் அன்னை தந்தையருக்கு அது வினைக்கு நாயகனாக ஆக்க வேண்டும் என்று அவர்களையும் இணைத்தே விண் சென்றான்… ஒருக்கிணைந்து செயல்படும் தன்மையை அங்கே உருவாக்கினான்.

விநாயகரைக் காட்டப்படும் பொழுது அருகிலே அரச மரத்தையும் வைத்திருப்பார்கள். அந்த அரச மரம் விண்வெளியில் தன்னிச்சையாகத் தன் சத்தை எடுத்து வளர்கின்றது. அதே போல்…
1.மனிதன் நீ அரசைப் போல் என்றும் நிலையான நிலையில் நீ ஒங்கி வளர வேண்டும்.
2.அந்த மகரிஷிகளின் ஒளி வட்டத்தில் நீ இணைய வேண்டும் என்று உணர்த்துவதற்கு
3.சூட்சும நிலையில் நடப்பதை உருவத்தைக் காட்டிச் சொல்லின் உணர்வு கொண்டு வினையாகப் பதிவு செய்து
4.வினைக்கு நாயகனாகச் சுவாசித்து அதை உடலாக உனக்குள் சேர்த்துக் கொள் என்று காட்டினான்.

ஓ…ம் நமச்சிவாய சிவாய நம ஓ…ம் என்று மனிதன் எண்ணிய உணர்வுகள் இங்கே இயங்கினாலும் அதைச் சிவமாக்கி சிவத்தின் தன்மை ஒளியின் சுடராக என்றும் நிலையாக ஒளியின் சரீரம் பெற வேண்டும்.

அன்னை தந்தையரை நினைத்து நீ இதைச் செயல்படுத்த வேண்டும் என்று காட்டுகின்றார்கள். கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

1.அன்னை தந்தையர் அங்கே ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணினால் தான் அது சரியாக இருக்கும்.
2.அவர்கள் முன் செல்கிறார்கள்… அவர்கள் வழியில் அடுத்து நாமும் ஒளிச் சரீரம் பெறுகின்றோம்.

அகஸ்தியனைப் போன்றே இந்தப் பூமியை மீண்டும் நாம் சமப்படுத்த வேண்டும்

அகஸ்தியனைப் போன்றே இந்தப் பூமியை மீண்டும் நாம் சமப்படுத்த வேண்டும்

 

சிவன் ஏனோ ஆலகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்திக் கொண்டான் என்று சொல்வார்கள். நம் பூமி தான் சிவம்… இதற்குள் உருவானது தான் அனைத்தும்.

சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
1.துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றலைப் பூமி நுகர்கின்றது
2.விஷத்தின் தன்மை பூராம் அங்கே அடக்குகின்றது.

வெப்பத்தின் தன்மை கொண்டு ஆவியாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மை மற்றொன்றுடன் சேர்க்கின்றது. சேர்த்து அங்கே திரளுகின்றது… வெண்ணை ஆகின்றது.

இப்படி விளைந்தது பூராம் எப்படி உருவங்களாக உருவானது என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.

அதாவது…
1.மேரு என்ற மலையை மத்தாக வைத்து அப்படி என்றால் பூமி சுற்றுகின்றது.
2.வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து என்றால் விஷத்தின் தாக்குதல்… அது தொடர்ந்து தாக்கும் போது தான் பூமியைச் சுழற்றுகின்றது.

துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றல்களை நுகரப்படும் பொழுது அது சிவம்… பார்வதி. அதன் வழி உள்ள வந்து அங்கே இணையும் பொழுது சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் (பனிப்பாறையாக உறையும் இடம்).

அந்த இடத்திலே சக்திகள் சேமிக்கப்படும் பொழுது நீளமாக வளர்ந்து கொண்டே வருகின்றது. இது வளர்ச்சியாகி அப்படியே சென்று விட்டால் தலை குப்புறக் கவிழ்ந்து விடும்.
1.அகஸ்தியனால் ஆரம்பத்தில் இது தடுக்கப்பட்டு மாற்றப்பட்டது
2.ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்திலே பல அகஸ்தியர்கள் தோன்றினால் தான் மீண்டும் உலக மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.

அணுக்கதிரியக்கத்தைப் ஒரு பக்கத்திலே வெடிக்கச் செய்தால் பூமியின் ஈர்ப்பு வழி கூடி மேகங்கள் வரப்படும் போது காந்த ஈர்ப்பின் தன்மை தடுக்கப்பட்டால் பூமியை மாற்றலாம்.

ஆனால் இவர்கள் எடுத்த அணு விஷக் கதிரியக்கம் இங்கே பரவும். இதிலேயும் லாயக்கில்லை அதிலேயும் லாயக்கில்லை. கதிரியக்கங்களால் அடர்த்தியாக முடியும். சூரியனுடைய ஒளிக்கதிர்கள் மாற்றப்படும் பொழுது பூமியைத் திசை மாற்றலாம்.

ஆனால் அணுக்கதிரியக்கங்கள் இங்கே பரவினால் யார் வாழ முடியும்…? திசை திருப்பலாம்… விஷத் தன்மைகள் தான் பரவும்.

1.சூரியனின் தொடர் கொண்டு தன் எண்ணத்தால் அதை குறுக்காட்டப்படும் பொழுது அகஸ்தியன் அன்று திசை திருப்புகின்றான்.
2.அப்படித் திருப்பிய நிலைகள் தான் அங்கே ஒரு அண்டம் வருகின்றது… இது கரைகிறது.

இப்படி அவன் வளர்த்துக் கொண்டான்.

இன்னொரு காலம் இந்தப் பூமிக்குள் அது போல் வரும். அதிலே நாம் தப்பித்தால் நல்லது. தப்புவிக்க யாம் சொல்வது என்ன…?

அகஸ்தியன் அவன் தாய் கருவிலே எவ்வாறு வளர்ச்சி பெற்றானோ அதைப் போல் கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கும் அதே சக்தியை ஊட்ட வேண்டும்.

அந்தக் கருவிலே உருவான சிசுக்களுக்குள்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி விளைய வேண்டும்
2.அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.சப்தரிஷி மண்டலங்களின் சக்தி விளைய வேண்டும்
4.உலக ஞானம் பெற வேண்டும் என்று கருவுற்ற தாய் ஊட்டினால்
5.அந்த சக்தி மீண்டும் வந்து அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெறும் தகுதியாக வருகிறது.

அவர்களுக்கு இந்த உபதேசத்தை கொடுத்துக் கருவிலேயே பூர்வ புண்ணியமாகக் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறோம்.

ஆக அகஸ்தியநின் ஆற்றலைப் பெறும்படி செய்து பூமியின் மாற்றங்களை நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

கணவன் மனைவியாக இணைந்தால் தான் ரிஷித் தன்மை பெற முடியும்

 

27 நட்சத்திரங்களும் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய விஷமான சக்திகளைத் தனக்கு உணவாக எடுத்து அதை மாற்றி அமைத்துத் துகள்களாக அனுப்பப்படும் பொழுது ஒன்றுக்கொன்று எதிர்மறையானால் பூமிக்குள் வரும் போது மின்னல்களாகப் பாய்கின்றது.

கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகின்றது. அதே விஷத்தின் தன்மை மற்ற தாவரங்களில் எதிர்நிலையாகும் பொழுது அது கருகுகின்றது. இதன் உணர்வுகள் பூமியின் ஈர்ப்புக்குள் நடு மையம் சென்றால் அந்த உணர்வின் வேகத்தால் பாறைகள் உருகுகின்றது. பின் நிலநடுக்கம் ஆகின்றது. இது எல்லாம் மின்னலால் ஏற்படக்கூடிய நிலைகள்.

1.ஆனால் இத்தகைய நஞ்சையும் தாய் கருவிலே பெற்ற பச்சிலை மூலிகைகளின் சக்திகளால் அடக்கியவன் அகஸ்தியன்.
2.அவன் கண்ட உண்மையின் உணர்வின் தன்மை மின்னல்களில் இருந்து வரக்கூடிய ஆற்றல்கள் அவனுக்குள் தணிகின்றது.

மின்னல்கள் பிரபஞ்சத்தில் பாயும் பொழுது அதை வெள்ளிக் கோள் கவர்ந்து கொள்கின்றது.
1.அந்த உணர்வின் தன்மையை அகஸ்தியன் நுகர்ந்து உடலுக்குள் பெருக்கி
2.உயிரைப் போன்றே உணர்வின் அறிவை வளர்த்துக் கொள்கின்றான்.

மின்னல் கடலிலே தாக்கப்பட்டால் மணலாக மாறுகிறது. ஆனாலும் அந்த மின்னலின் வீரிய உணர்வுகள் பாயும் பொழுது… சந்தர்ப்பம் மீன்கள் அதன் அருகில் சென்றால் அந்த ஒளிக்கற்றைகள் அதற்குள் பாயப்பட்டு அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

மின்னல் தாக்கும் பொழுது எப்படி ஒளிக்கற்றைகள் பரவுகின்றதோ மீன் இனங்களுக்குள் இது பட்டபின் அது நீருக்குள் உராய்ந்து செல்லும் பொழுது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.
1.இயற்கையின் நிலைகள் இப்படி மாறுவது போல
2.அந்த அகஸ்தியன் பெற்ற அருளை நாம் நுகர்ந்தால் “நாமும் ஒளியாக முடியும்…”

அவன் துருவனானான். பின் பதினாறாவது வயதில் திருமணம் ஆகின்றது. தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவிக்கு எடுத்துச் சொல்கின்றான். மனைவியும் அதையெல்லாம் தனக்குள் பதிவாக்குகின்றது.

பதிவான நிலைகள் கணவன் மேலும் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுகின்றது. அகஸ்தியன் தான் கண்ட உண்மைகளை எல்லாம் தன் மனைவி பெற வேண்டும் என்று… இப்படி அந்த இரண்டு பேருமே இந்த உணர்வை வளர்த்து ஒரே உணர்வாக எண்ணப்படும் பொழுது ரிஷித்தன்மை பெறுகின்றார்கள்… துருவ மகரிஷியாகின்றார்கள்.

அந்த ரிஷி என்ற நிலை வரவேண்டும் என்றால் “கணவன் மனைவியாக இருந்தால் தான் முடியும்…”

செடி கொடிகளில் ஆண் பெண் என்ற நிலையில் இணைந்தால் தான் தன் இன வித்துக்களை உருவாக்க முடியும். உயிரினங்களிலும் ஆண் பெண் என்ற நிலைகள் இணைந்தால் தான் இனத்தின் தன்மை விருத்தி செய்ய முடியும்.

தீமைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம். அகஸ்தியன் எப்படித் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமானானோ கணவன் மனைவி ஒன்றி ஒளி நிலை பெற்றார்களோ அதிலிருந்து வெளிப்படும் சக்திகளை சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது.

உங்களுக்குள் அதைத்தான் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். அதை எண்ணி நீங்கள் பெற்று உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று
1.கண்களை மூடிப் புருவ மத்தியில் எண்ணி உயிரான ஈசனிடம் வேண்டித் தியானியுங்கள்.
2.உங்கள் புருவ மத்தியில் “மின் அணுக்கள் உருவாகும்…”
3.நுகர்ந்து உடலுக்குள் செலுத்தப்படும் பொழுது உடலுக்குள்ளும் ஒளியான உணர்வுகள் தோன்றும்.
4.உடலிலிருந்து வெளிச்சங்கள் வெளி வரும்… சிலருக்கு இது தெரியும்.
5.சிலருக்கு மகிழ்ச்சியான உணர்வுகளை ஊட்டும்.