நாம் சுவாசிக்கும் உணர்வுகள் “ட்ரான்சாக்ஷன் நடக்கும் இடமான உயிரில் மோதும் போது” ஏற்படும் சில விசித்திரங்கள்

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் “ட்ரான்சாக்ஷன் நடக்கும் இடமான உயிரில் மோதும் போது” ஏற்படும் சில விசித்திரங்கள்

 

ஒருவர் மற்றவரை வேதனைப்படுத்துகின்றார் தொல்லைப்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம். வேதனைப்படுத்துவனும் அதை நுகர்கின்றான். ஆனால் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவனைப் பார்த்த பின் நமக்கும் கோபம் வருகிறது. வேதனைப்படுவதைப் பார்த்து நாமும் வேதனைப்படுகின்றோம்.

அந்த வேதனைப்படுபவன் அழுகும் போது என்ன இப்படிச் செய்கின்றான்…? என்று தொல்லைப்படுத்துபவன் மீது கோபம் வருகிறது.

இந்த உணர்வின் தன்மை நாம் நுகர்ந்த பின் இது நம் ரத்தத்திலே கலந்து விடுகின்றது. இந்த உணர்ச்சிகள் அதிகமானால் மனித உடலை… உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்களிலும் போய்ச் சேர்ந்து விடுகின்றது.

1.நல்ல அணுக்களுக்குள் இது சேரும் பொழுது அதன் ரூபம் மாறி உறுப்புகளும் குறையத் தொடங்குகிறது…
2.குறைந்தால் உடலும் நலிகின்றது. உடல் நலியும் பொழுது நம் சிந்தனைகள் குறைந்து விடுகின்றது.

இந்த உணர்ச்சியின் தன்மை எதையும் கோபமாகவே பேசும் தன்மை வருகின்றது.
1.அந்த இரத்தம் சுழன்று வரும் பொழுது ட்ரான்ஷாக்ஷன் செய்யக்கூடிய உயிரில் மோதும் பொழுது விரிவடைகின்றது.
2.சிந்தனைகள் குறைந்து கண்கள் சிவக்கின்றது.

அந்த கோபமான நேரத்தில் கண்கள் சிவக்கப் படும் பொழுது ஒரு பொருளை நாம் பார்ப்பதோ அல்லது கணக்கு வழக்குகளைச் சீராக பார்ப்பதோ நம்மால் முடியுமா…? கணக்குகள் தவறாகிவிடும். அதைச் சீராகப் பார்க்க முடியாது.

யார் கணக்கை எழுதினார்களோ எவன்டா இதை எழுதியது…? என்று அவனைக் கோபிக்கச் செய்யும். யாராவது ஒரு நல்ல பொருளைச் செய்து கொண்டு வந்து நமக்கு முன் அதைக் காட்டினால் அந்த கோபத்தின் தன்மைப்கொப்ப பொருளைப் பார்த்தால் அது தப்பாகத் தான் தெரியும்.

காரணம்
1.இந்த உணர்ச்சியின் தன்மை ரத்த நாளங்களில் கலந்து
2.கருவிழிக்கு இந்த உணர்ச்சியின் மோதலை உண்டாக்கப்படும் பொழுது நல்லதைக் காண முடியாது.

அந்த நேரத்தில் தரமான பொருளைப் பிரித்துப் பார்க்க முடியாது. அதை அதைத் தூக்கி அந்தப் பக்கம் போட்டுப் போ…! என்று தான் வரும்.

இரண்டாவது தரம் கேட்டால்… நான் என்ன பார்க்காமலா பேசுகின்றேன்…? பார்த்துத் தான் சொல்கிறேன்… என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும்…? கோபத்தை உண்டாக்காதே…! என்று தான் சொல் வரும். சீரான நிலையில் பார்க்கும் நிலைகள் வராது. தவறின் நிலைகள் அதைத் தான் காட்டும்.

இங்கே தவறு செய்வது யார்…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நம்மைத் தவறு செய்யும்படி வைக்கின்றது.

1.இப்படி இந்த கோபமான உணர்வுகளை அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க
2.நம் உயிரிலே மோதி அந்த உணர்வை ஈர்க்கும் அனைத்தும் பலூன் போன்ற உப்ப ஆரம்பித்து விடும்.
3.அப்படி உப்பினால் அதற்கு மேல் சிந்தனை இருக்காது.
4.கிர்…! என்று அதற்குண்டான அழுத்தம் அந்த வாயு இது போகவில்லை என்றால் அடுத்த உணர்வின் துடிப்பு அதிகமாகும்…
5.நுரையீரலிலும் அழுத்தம் அதிகமாகும்… வலி எடுக்க ஆரம்பிக்கும்.

நாம் தவறு செய்யவில்லை… இந்த உணர்வு நமக்குள் இவ்வாறு இயங்குகின்றது. இதே மாதிரி அடிக்கடி செயல்பட்டால் வீட்டில் சாப்பாட்டைக் கொண்டு வரச் சொன்னால் சிறிது நேரமானால் அவசரப்படுவோம்… கோபம் வரும்.

கடையில் உட்கார்ந்து வியாபாரம் பார்க்கப்படும் பொழுது பொருள் வேண்டும் என்று கேட்பார்கள். அந்தச் சாமானை எடுத்து வா என்போம். அதன் படி கடைப் பையன் அவன் எடுத்து வரும் பொழுது “பொருளை எடுத்துட்டு வர “இவ்வளவு நேரமா…?’ என்று அவனைக் கோபிக்கச் சொல்லும்.

இது எதனால் வருகிறது…?
1.நாம் நுகர்ந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு அது நம்மை இயக்குகின்றது…
2.அதன் வழி உடலை இயக்குகிறது. அதன் படி நம் எண்ணம் சொல் செயல் இயக்குகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply