அருள் ஞான ஒலிபரப்பு

அருள் ஞான ஒலிபரப்பு

 

கல்வியில் தகுதி பெற கல்விச்சாலைக்குச் சென்று விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ள எண்ணும் பொழுது அதைச் செயல்படுத்துகிறோம். அதே போல் இஞ்சினியர் நிலைகளுக்குச் செல்ல விரும்பும் போது அதைப் படிக்கின்றோம். அதனை அறிய எண்ணத்தைச் செயல்படுத்தும் போது அதனின் கூர்மை நிலை வரப்படும் போது அதை வளர்த்துக் கொள்கிறோம்.

மருத்துவ நிலைகளுக்குச் செல்லப்படும் பொழுது அதனின் எண்ணங்கள் ஓங்கி வளரப்படும் பொழுது அதை வளர்த்துக் கொள்கின்றோம். விவசாயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அதை வளர்த்துக் கொள்கின்றோம். கணக்குகளைச் சரி பார்க்க வேண்டும் என்றால் அதற்குண்டான நிலைகளை வளர்த்துக் கொள்கின்றோம்.

இவையெல்லாம் மனித வாழ்க்கைக்கு உதவும்.

மனிதனை ஒழுங்குபடுத்தும் நிலைகளில் படித்த நிலைகள் கொண்டு செயல்படும் போது அதிலே சிறிதளவு குறைகள் ஏற்பட்டால் அதனால் ஒரு சமயம் வேதனை ஆகிவிட்டால் நாம் கண்டுணர்ந்த விஞ்ஞானத்தின் நிலைகளும் வீழ்ச்சி அடைகின்றது.

அதிலிருந்து மீள முடியாதபடி நம்மைச் சோர்வடையச் செய்து பல காலம் படித்திருந்தாலும் செயலிழந்த நிலைகளுக்குச் சென்று விடுகின்றது.

ஆனால் நான் படிப்பறிவற்றவன் தான். மெய் ஞானிகள் கண்ட உணர்வின் தன்மையை நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் நான் இதையெல்லாம் பேசுகிறேன் என்றால்
1.குரு கொடுத்த உணர்வின் ஆற்றல் எனக்குள் அதைப் பதிவு செய்ததும்
2.அதை நினைவு கொள்ளும் பொழுது அந்த ஆற்றல் காற்றிலிருப்பதை நுகர்ந்து
3.அதை நுகரச் செய்யும் போது உயிரான இயற்கை அந்த உணர்வலைகளை ஒலி பரப்பும் நிலையாக
4.எண்ணங்களாக என்னை அதைப் பேச வைக்கின்றது.

உதாரணமாக.. படித்துணர்ந்தோர் ஒரு பாட்டைப் பாடுகின்றார்கள் என்றால் முதலில் அந்தத் தலைப்பு (ஆரம்பம்) வந்தால் கடைசி வரையும் சரியாக வரும். பாடலைப் பாடி வரும் பொழுது இடைப்பட்ட நிலைகள் மறந்து விட்டால் பாடலின் முழுமையும் வராது.

அப்படி இல்லாதபடி மெய் ஞானியின் உணர்வலைகளை குருநாதர் எமக்குப் பதிய வைத்தது போன்று உங்களுக்குள்ளும் ஆழமாகப் பதிவு செய்கின்றேன்.

அந்த பதிவினை நீங்கள் நினைவு கொள்ளும் பொழுது உங்களை அறியாது வந்த இருளை நீக்கி மெய்ப் பொருள் காணும் திறன் உங்களுக்குள் வளர வேண்டும் என்ற இச்சையில் இந்த உணர்வை நான் சுவாசிக்கும் பொழுது
1.நீங்கள் இருளில் இருந்து மீள வேண்டும் மெய்ப்பொருள் காண வேண்டும் என்று என் குருவின் ஆணைப்படி
2.நான் சுவாசித்த உணர்வுகள் ஒலியாகப் பரப்புகின்றது என் உயிர்.
3.உடலில் தன்மையை அந்த அங்கங்களைக் கிரியையாகச் செயல்படுத்துகின்றது..

இந்தக் கிரியை அது வெளிப்படும் பொழுது கேட்டுணர்ந்தோர் நிலைகளிலும் நான் நுகர்ந்த நிலைகளைப் பெறச் செய்து… அருள் ஞானனத்தின் செயலாக இந்த உடலைப் பக்குவப்படுத்தும் நிலையும் பக்குவமாகப் பேசும் நிலையையும் உருவாக்குகின்றது.

இந்த ஞானத்தின் நிலைகள் இப்போது உங்களுக்குள் பதிவாகும் பொழுது அந்தப் பதிவின் நிலைகள் உங்களைச் சீர்படுத்தும் நிலையாக வரும்.

ஒரு கட்டுப் பீடி… 10 சிகரெட்டை வைத்து நோயை நீக்கும் சக்தி கொடுத்தார் குரு – சூடு போட்ட பூச்சியினிடம் அனுபவம்

ஒரு கட்டுப் பீடி… 10 சிகரெட்டை வைத்து நோயை நீக்கும் சக்தி கொடுத்தார் குரு – சூடு போட்ட பூச்சியினிடம் அனுபவம்

 

குருநாதர் எமக்குக் கொடுத்ததை நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் தான் குரு காட்டிய அருள் ஒளிகள் அந்த ஒளி பெறும் உணர்வின் ஆற்றல் உங்களுக்குள் பெருக வேண்டும்.

நீங்கள் செய்த நன்மையின் தன்மை இருள் சூழச் செய்யும் விஷத்தின் தன்மை அகல வேண்டும். நீங்கள் இடும் மூச்சுலைகள் இங்கே படர்ந்துள்ள நஞ்சின் தன்மையை அகற்ற வேண்டும்.

இதைக் கேட்டுணர்ந்தோர் உள்ளங்களிலும் இந்த அரும்பெரும் சக்தி ஊடுருவி அவர் அறியாது இருள் சூழச் செய்யும் நிலைகள் விலக வேண்டும்… மெய்ப்பொருள் காண வேண்டும்.

அந்த மெய்ப்பொருளை அறிய வேண்டும் என்ற உணர்வினை நீ எப்படிப் பருக வேண்டும் என்று தான் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்று உணர்த்துகின்றார்.

வேஷ்டி தான் கட்டி இருக்கின்றேன். ஆனால் காட்டிற்குள் கொசு அதிகமாக உண்டு. யானையே அந்த இடத்தில் நிற்காது. அது போன்ற கொசுக்களை எம்மீது தாக்க வைக்கின்றார்.

அது மட்டுமல்லாதபடி அங்கே ஒரு எறும்பு இருக்கின்றது. ஊறிக்கொண்டே செல்லும்/ பேசாமல் விட்டால் அது பாட்டுக்குப் போகும். ஆனால் தொட்டு விட்டால் போதும்… லபக் என்று அப்படியே கடிக்கும்.

விஷமான எறும்பு கடித்த பின் அந்த இடத்திலே தடிப்பாகிவிடும். பத்து இருபது எறும்பு கடித்தால் போதும் மயக்கம் போட்டு கீழே விழுந்து விடுவோம்.

அத்தகைய எறும்புகள் ஊறி வரும் பொழுது அது எம்மைக் கடிக்கின்றது கை கால் எல்லாம் வீங்குகிறது. இப்படிச் செய்து விட்டாரே என்று குருவை எண்ணி ஏங்குகிறேன்.

வேதனை பொறுக்காதபடி என்ன வாழ்க்கை…? என்று உடலில் எல்லை கடந்த துன்பம் வரப்படும் பொழுது சிந்தனையற்ற நிலைகள் வருகின்றது.

இதைக் காட்டிலும் இன்னொரு பூச்சி இருக்கின்றது. அது மேலே பட்டால் சூடு போட்டது மாதிரி ஆகிவிடும். அந்தப் பூச்சியில் இருக்கும் விஷத்தின் தன்மை உடலில் பட்டால் சூடு கோலால் சுட்டது போன்று வார் வாராக அச்சு விழுகின்றது..

எரிச்சல்… நெருப்பு மேலே பட்டால் எப்படி எரியுமோ அப்படி எரிகின்றது. அந்த இடத்திலே எம்மை அமரச் செய்து போகனைப் பற்றியும் காட்டுகின்றார். அந்தச் சித்தர்கள் அதைப் போக்க ஆற்றல்மிக்க நிலைகள் எடுப்பதையும் காட்டுகின்றார்.

சிறு பூச்சி தான்… அது உன் மீது ஊர்ந்து செல்லப்படும் பொழுது உன்னுடைய உணர்வின் ஆற்றலுக்கும் அந்தப் பூச்சியின் உணர்வுக்கும் எதிர் நிலையாகும் பொழுது அது எப்படிச் சூடாகி… நெருப்பில் இட்டால் எப்படியோ அது போல மேலே பட்டால் கருகுகின்றது.

அப்படி என்னைச் சுடும்படி வைக்கின்றார். ஒன்றல்ல பல…! அது மேலே ஊறுகின்றது… என்னை இம்சிக்கின்றது… அலறுகின்றேன். குருநாதர் அதற்கு முன் உபதேசித்த உணர்வுகளை எல்லாம் மறந்து விட்டேன்… உடலில் இருந்து இதைத்தான் எண்ணுகின்றேன்.

போகன் இதையெல்லாம் எப்படி மாற்றி அமைத்தான்…? தனக்கு வரும் துன்பங்களை நீக்க வலுக்கொண்ட உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி அந்தத் துன்பத்தை நீக்கி அந்த உணர்வைத் தனக்குள் வளர்த்துப் பிறர் துன்பத்தை எப்படிப் போக்கினான்…?

சீதா ராமா சுவை கொண்ட சொல்லாக வெளிவரும் பொழுது அந்த உணர்வுகள் அம்பாகப் பாய்ந்து அவர் உடலில் உள்ள தீய விளைவுகளை எப்படி மாற்றுகின்றது…? காட்டுக்குள் அமர வைத்து இத்தகைய தொல்லைகளுக்கு மத்தியில் காட்டுகின்றார்.

இந்த நினைவை நான் ஏற்கப்படும் பொழுது… நீ இப்படி வேதனைப்படுகின்றாய். ஆனால் அது போன்ற பூச்சிகளாகவும் நீ இருந்திருந்தாய… அந்த எறும்பாகவும் நீ இருந்தாய்.

உன் உயிர் தான் அதிலிருந்து படிப்படியாக வளர்த்தது. அந்தந்த உடல்களில் தன்னைக் காத்துக் கொள்ள அந்த உணர்வின் ஆற்றல் வருகின்றது. காத்துக் கொண்ட உணர்வின் தன்மை அதற்குள் கலந்து உணர்வின் சத்தாக விளைந்து மனிதனாக வரப்படும் பொழுது இவை அனைத்திலிருந்தும் மீட்டிடும் உணர்வே எண்ணங்களாக உனக்குள் எப்படி விளைந்தது…? என்று காட்டுகின்றார்.

ஏனென்றால் இதெல்லாம் பாட நூல்களுக்கு வராது.

குரு காட்டிய அருள் வழியில் ஒரு மனிதனின் உடலுக்குள் எப்படி இயக்குகின்றது…? என்ற நிலையில் ஒரு கட்டுப் பீடிகட்டைக் கொடுக்கின்றார்… தொப்பி சிகரெட் பத்தை ஒன்றாக வைத்து வாயில் வைத்து ஊது என்றார்.

அவர் சொன்ன முறைப்படி குடிக்கப்படும் பொழுது அருள் மணங்களை எவ்வாறு சுவாசிக்க வேண்டும் என்று உணர்த்துகிறார்…? காற்றிலிருந்து இப்பொழுது எப்படிச் சுவாசிக்கின்றாயோ…? இதை எப்படி ரசிக்கின்றாயோ… இதை எப்படி வெறுக்கின்றாயோ…? இதைப் போல அது எந்தெந்த நிலைகளுக்கு எப்படி எப்படி என்று நுகரும்படிச் செய்கின்றார்.

அந்த வாசனைகளை நுகர்ந்த பின் என் உடலிலே அந்த சூடு போன்ற இருந்த நிலைகள் மாறுகிறது. அந்தச் சூடு மாறும் பொழுது இதே உணர்வு கொண்டு அந்தப் பூச்சியினையும் நேர்கொண்டு பார் என்றார் குருநாதர்.

அப்போது அந்தப் பூச்சி என்ன ஆகிறது…? அதை முறிக்கும் உணர்வை உனக்குள் எடுத்து உன் பார்வையை நீ அங்கே செலுத்தப்படும் பொழுது அதனுடைய விஷத்தன்மைகள் எப்படிச் செயல் இழக்கின்றது…?

விஷம் செயலிழந்த பின் பூச்சி என்னாகின்றது…? என்று காட்டிற்குள் அமைத்து இத்தனையும் காட்டுகின்றார் குருநாதர்.

என்னிடமிருந்து உயர்ந்த சக்தியைப் பெறும் சரியான முறை

என்னிடமிருந்து உயர்ந்த சக்தியைப் பெறும் சரியான முறை

 

அருள் ஞானத்தின் உணர்வை நீங்கள் எடுத்தால் உங்களுக்குள் தீமை விளைவிக்கும் நிலைகளை அது தூய்மைப்படுத்தும். இது தான் விநாயகர் சதுர்த்தி.

1.உங்களை அறியாது வந்த தீமையான உணர்வுகளை நீக்கும் ஆற்றல் – நீங்கள் அந்த சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான்
2.என் குருநாதர் காட்டிய நிலைகளை உணர்வுகளை நான் பெற வேண்டும் பெற வேண்டும் என்ற உணர்வை வளர்த்து
3.அந்த உணர்வின் எண்ணங்களை இரவிலும் சரி இன்றும் சரி இப்போதும் சரி அந்த நினைவு கொண்டு தான் அலைகளைப் பரப்புகின்றேன்.
4.எல்லா நேரத்திலும் இரவிலும் இன்றும் அதைத் தான் செயல்படுத்துகின்றேன்.

பல ஆயிரம் பேர் எம்மைச் சந்திக்க வருகின்றீர்கள்… சாமி எனக்குக் கஷ்டமாக இருக்கின்றது… தலை வலிக்கின்றது… மேல் வலிக்கின்றது என்றெல்லாம் உணர்வைப் பாய்ச்சுவீர்கள்.

என் உணர்வு உங்களிடம் இருப்பதால் எந்த வகையில் நீங்கள் எம்மை பதிவுப் செய்கின்றீர்களோ அந்த வகையில் தான் உங்களிடம் வரும்.

சாமி கஷ்டத்தை எல்லாம் தீர்ப்பார் என்று எண்ணிப் பதிவு செய்து விட்டால் அதைத்தான் நீங்கள் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருவீர்கள்.

1.சாமி…! நாங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
2.அந்த உயர்ந்த சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணினால்
3.என்னிடம் இருந்து அந்த சக்தி உங்களுக்குக் கிடைக்கும்… அது வளரும்.

ஆனால் அதற்கு மாறாக… என் கஷ்டம் எல்லாம் இப்படி இருக்கிறது… தலைவலி எனக்கு இப்படியே தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றது என்றால் அதைத் தான் வளர்க்கின்றீர்கள் என்று பொருள்.

அதே சமயத்தில் என்னிடம் பேசி இதே வேதனையான உணர்வைப் பதிவு செய்து விட்டால்… நீங்கள் எண்ணும் போதெல்லாம் “என் ஆன்மாவிலே அந்த உணர்வுகள் வந்து மோதும்…”

இதையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு அந்த
1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.
2.கொஞ்சம் ஏமாந்தால் உங்களை மாதிரி என்னையும் கொண்டு வந்து விடும்.
3.24 மணி நேரமும் மகரிஷிகளின் அருள் வட்ட்த்திலேயே என் நினைவுகளைச் செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

சிறிது ஏமாந்தாலும் போய்விடும். ஒரு நாளைக்கு அந்த மாதிரி ஆகிவிட்டால் அதைக் கழி[ப்பதற்கு நான் படும் சிரமம் எனக்குத் தான் தெரியும்.

குருநாதரிடம் கூட… அவர் என்னைக் காட்டிற்குள் அழைத்துச் செல்லும் பொழுது கூட அத்தகைய சிரமம் எனக்குத் தெரியவில்லை முதலில் ஏதேதோ சொல்வார். அப்போது அந்த உணர்வுகளை வளர்த்துக் கொண்டபின் தீமையிலிருந்து விடுபடும் சந்தோஷம் வரும்.

1.கொஞ்ச நேரத்திற்குக் கஷ்டமாக இருக்கும் அதற்குப் பின் சந்தோசம் தான் வரும்.
2.எவ்வளவு நேரம் வருத்தப்பட்டேனோ அந்த அளவிற்கு சந்தோஷத்தை உருவாக்கும்.

குருநாதர் எம்மை அப்படித்தான் வளர்த்தார்.

உங்களை எல்லாம் அருள் ஞானியாக ஆக்கும்படி சொன்னார் குருநாதர்

உங்களை எல்லாம் அருள் ஞானியாக ஆக்கும்படி சொன்னார் குருநாதர்

நம் வாழ்க்கையில் நஞ்சான நிலைகள் வேதனை என்ற நிலைகள் வந்தாலும் அதைத் துடைக்க துடைத்திட்ட அருள் ஞானிகளின் உணர்வை நாம் பருக வேண்டும் என்ற இந்த நிலையைத்தான் அன்றைய ஞானிகள் தெளிவுறக் காட்டியுள்ளார்கள்.

1.எந்த உயிர் நம்மை சிருஷ்டித்ததோ அந்த உயிரிடமே வேண்டி
2.என்னை அறியாத பிழைகளை நீக்கி
3.அந்த மெய் ஞானிகளின் உணர்வைப் பெற வேண்டும் என்று எந்த மனிதன் ஏங்குகின்றானோ
4.அந்த உணர்வின் துணை கொண்டு அறியாது வந்த தீமைகளை அகற்ற முடியும்.

நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த உயிரை ஈசனாக மதித்து நடக்க வேண்டும். நாம் எண்ணியது அனைத்தையும் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றது நமது உயிர் என்ற இந்த நிலையை உணர்த்துவதற்குத்தான் இராமாயாணம் மகாபாரதம் கந்தபுராணம் என்ற காவியங்களைச் சாதாரண மக்கள் புரிந்து கொள்வதற்குத் தீட்டினர் ஞானிகள்.

நம் முன் சூட்சமத்தில் காற்றலைகளுக்குள் படர்ந்திருக்கும் நிலையும் நாம் எண்ணிய உணர்வுகள் சூட்சமமாக மறைந்திருக்கும் நிலையும் உயிருக்குள் பட்டு “ஓ…” என்று ஜீவனாகின்றது.

அந்த உணர்வின் சத்து “ம்…” என்று நம் சரீரமாகி நம் சரீரத்திற்குள் நின்று நாம் எந்தெந்த குணங்களை எண்ணினோமோ அதனின் சக்தியாக நமக்குள் இயங்குகின்றது.

பின் அதே உணர்வு நமக்குள் இயக்கப்பட்டு அதன் துணை கொண்டு நாம் உயர்ந்த குணங்களை எடுத்தால் உடல் ஆரோக்கிய நிலை பெறுகின்றோம்.

1.ஆனாலும் உயர்ந்த குணங்களை எடுத்துக் கொண்டாலும் வேதனை என்ற உணர்வினை ஒரு துளி எடுத்தாலும்
2.இந்த உடல் அனைத்தும் சோர்வடைந்து நல்ல குணங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றது.

இதையெல்லாம் நாம் அறிந்து கொள்வதற்காகப் பல காவியங்களை எழுதி மனிதன் இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் அதைத் தீமைகளை நீக்கிட முடியும் என்று காட்டினார்கள் ஞானிகள்.

ஆறாவது அறிவைத் தான் பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன் என்பது. முருகு என்பது மாற்றியமைக்கும் நிலை. முருகா என்பது அழகுபடுத்தும் நிலை.

இந்த ஆறாவது அறிவின் துணை கொண்டு நமக்குள் நம்மை அறியாது புகுந்த தீமைகளை அகற்றிடும் நிலையாகத்தான் இந்த நிலையைத் தெளிவுற எடுத்து உணர்த்தினார் குருநாதர்.

1.ஒவ்வொரு உயிரையும் கடவுளாக ஈசனாக மதி என்றார்.
2.அவர்கள் உடலை ஆலயமாக மதி என்றார்.
3.அந்த ஆலயங்களில் அமைந்துள்ள உயர்ந்த குணங்கள் அனைத்தும்
4.மனிதனாக உருவாக்க உதவிய அந்த நற்குணங்களைத் தெய்வமாக மதி என்றார்.

ஒவ்வொரு மனிதனையும் தீமைகளிலிருந்து அகற்றிடவும் மனிதன் என்ற புனிதத் தன்மை பெறவும் மனித நிலையிலிருந்து விடுபட்டு ஒளியின் சரீரமாக என்றும் நிலையாக நிலைத்திருக்கும் அந்த அருள் ஞானிகளின் உணர்வுகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று “நீ பிரார்த்தனை செய்” என்றார்.

1.உனக்குக் கிடைக்க வேண்டும் என்று எதை நான் பிரார்த்தித்தேனோ
2.எதை உபதேசித்தேனோ
3.அதை நீ எவ்வாறு கூர்ந்து கவனித்தாயோ
4.இந்த உணர்வுகள் உனக்குள் பதிவாகின்றது

அந்தப் பதிவை மீண்டும் நீ நினைவாக்கப்படும் பொழுது நான் கூறிய உணர்வும்… நான் உணர்த்திய உணர்வும் நீ பெறும் தகுதியைப் பெறுகின்றாய்.

“நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்…”

பிறருடைய தீமைகளை அகற்றி அதன் வழியில் மெய் வழி பெறவேண்டும் என்று ஏங்கி அதனை நீ ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதித்து நீ செயல்படு என்றார்.

நான் உனக்குக் காட்டிய அருள் வழிப்படி அந்த ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு விண்ணின் ஆற்றலைப் பருக நீ எண்ணு.

“எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்…” என்ற ஏக்க உணர்வுடன் நீ பெறுவாய் என்றால்
1.எல்லோருடைய வலுவும் உனக்குக் கிடைக்கின்றது.
2.அவர்களின் துணை கொண்டு மெய் ஒளியினைப் பெறுகின்றாய்.
3.அது உனக்குள் விளைந்து உன் சொல்லைக் கேட்போர் உடலுக்குள்ளும் விளையும்.

அவ்வாறு விளையச் செய்ய அந்த மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளை ஆழப் பதியச் செய் என்றார். அவர்களை மீண்டும் நினைவு கொள்ளும்படிச் செய். அவர்கள் நினைவு கொள்ளும் பொழுது அவர்களும் தீமைகளிலிருந்து விடுபடுகின்றனர்.

அவர்கள் அறியாது சேர்ந்த தீமைகளிலிருந்து விடுபட
1.நீ கண்டறிந்த உபாயத்தை
2.உனக்கு உணர்த்திய இந்த உணர்வை
3.உணர்த்திய வழியில் நீ கண்டறிந்த அறிவினை
4.எல்லா மக்களுக்கும் உபதேசி என்றார்.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படித்தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் இந்த அருள் ஞானச் சக்கரம்

கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் இந்த அருள் ஞானச் சக்கரம்

 

ஆயுள் கால மெம்பர்களுக்கு அந்த உண்மையின் உணர்வின் சக்தி பெற கடும் தவத்தால் கொடுக்கப்பட்டது தான் அருள் ஞானச் சக்கரம். எமக்கு குருநாதர் முதலிலே அப்படித்தான் கொடுத்தார்.

அதைப் போல அவர் காட்டிய அருள் வழியில்
1.27 நட்சத்திரங்களும்
2.சிவசக்தி விஷ்ணு சக்தி பிரம்ம சக்தி சித்தி விநாயகர் என்ற இந்த உணர்வின் தன்மை இணைத்து
3.அந்த வட்டத்திற்குள் கணங்களுக்கு அதிபதி சித்தி விநாயகர் என்று அதை முறைப்படுத்தியது.

இன்று கம்ப்யூட்டர் நாடாக்களில் எப்படிப் பல விதமான ஆணைகளைப் பதிவு செய்கின்றனரோ அதைப் போன்று தான் அருள் ஒளியின் உணர்வின் தன்மைகளை எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்குகின்றோம். உங்கள் உடலிலும் பதிவாக்கி உள்ளோம்.

1.அந்தச் சக்கரத்தைப் பார்த்துத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் நுகரப்படும் பொழுதெல்லாம்
2.தீமைகளை அகற்றி உங்கள் செயல்களை அது நல்லதாக மாற்றும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் எங்கள் உடலில் படர வேண்டும்… அகஸ்தியரின் உணர்வு எங்களுக்குள் படர வேண்டும்… மெய் ஒளி காணும் அந்த அருள் சக்தி பெற வேண்டும்… என்று இந்த உணர்வுகளை எடுத்து வலிமை பெறச் செய்து விட்டு…
1.அடுத்து எந்தக் காரியமாக இருந்தாலும் எந்தச் செயலாக இருந்தாலும்
2.அது நல்லதாக அமைய வேண்டும் என்று செயல்படுத்திப் பாருங்கள்.

அதே சமயத்தில் எங்கள் சொல்லும் செயலும் புனிதமாக வேண்டும் என்ற இந்த உணர்வுடன் உங்கள் வாழ்க்கையை வழி நடத்துங்கள். அருள் உணர்வுகளைப் பெறுங்கள்… இருளை அகற்றிடும் அருள் சக்தி பெறுங்கள்.

1.குரு காட்டிய நிலையில் கொண்டு உங்களை ஆயுள் கால மெம்பராக அமைத்து
2.அதன் வழி துருவ நட்சத்திரத்துடன் இனைந்து வாழச் செய்ய
3.கம்ப்யூட்டரில் ரெக்கார்ட் செய்வது போன்று இதைப் பதிவு செய்கின்றோம்.

இதன் வழி உங்கள் எண்ணத்தைச் செலுத்துங்கள்… பேரருளைப் பெறுங்கள். இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றுங்கள். நஞ்சினை வென்றிடும் ஆற்றலைப் பெறுங்கள்.

எங்கள் சொல்லும் செயலும் இந்த உலகைப் புனிதமாக்கும் நிலை பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

அருள் மகரிஷிகள் உணர்வுகளைப் பெருக்கி இந்த உணர்வின் தன்மையை எல்லா இடங்களிலும் பரப்பப்படும் பொழுது இந்த உலகில் வரக்கூடிய தீமைகளிலிருந்து நாமும் மீண்டு மற்றவரையும் மீட்டிட முடியும்.

நாட்டுக்கு நாடு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் ஊருக்கு ஊர் தெய்வத்திற்குத் தெய்வம் என்று எத்தனையோ பேத உணர்வுகள் இன்று சூழ்ந்து கொண்டுள்ளது.

விஞ்ஞானத்தால் ஏற்படுத்தப்பட்ட கதிரியக்கங்கள் “நியூட்ரான்” என்ற விஷத்தன்மைகளும் பரவிக் கொண்டுள்ளது. இது எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது தான்.

குருநாதர் காட்டிய வழியில் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி பெற்று சூழ்ந்திருக்கும் இந்த விஷத் தன்மையிலிருந்து மீண்டு அனைவரையும் மீட்டிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எடுக்கும் போது நம் உடலுக்குள் அந்த உணர்வுகள் வலுப் பெறுகிறது.

1.எத்தகைய நஞ்சையும் பிளந்து உணர்வினை ஒளியாக மாற்றி
2.துருவ நட்சத்திரத்துடன் இணைந்து என்றும் பிறவில்லா நிலை அடைவோம்.

உங்களுக்குத் தெரியாமலே உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றேன்

உங்களுக்குத் தெரியாமலே உயர்ந்த சக்திகளைக் கொடுக்கின்றேன்

கேள்வி:-
ஈஸ்வரபட்டர் உங்களுக்கு எல்லாச் சக்திகளும் கொடுத்தார்… நீங்கள் அதை எல்லாம் பெற்றீர்கள். ஆனால் எங்களுக்கு நீங்கள் ஒன்றும் கொடுக்கவில்லையே… உபதேசமாகத் தான் சொல்லிக் கொண்டே போகிறீர்கள்…!

யாருக்காவது நீங்கள் கொடுத்து அதைப் பார்த்துத் தெரிந்து கொண்டால் நாங்களும் ஆர்வமாகச் செய்வோம். இது எங்களுக்குச் சந்தேகமாகவும் ஒரு யோசனையாகவும் இருக்கிறது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சாமி.

ஞானகுருவின் பதில்:-
நீங்கள் சாப்பாடு போடுகிறீர்கள். “நன்றாகத்தான் இருக்கின்றது…” என்று நான் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா…?

நல்ல சுவையான சாப்பாடை நான் சாப்பிட்டால்தான் எனக்கு நல்லது. ஆகையினால் போடும் சாப்பாட்டைச் சரியான முறையில் சாப்பிட வேண்டும். அப்பொழுது தான் அந்த ருசியின் தன்மை தெரியும்

1.இன்னொருவர் சாப்பிட்டுவிட்டு “நன்றாகத் தான் இருந்தது” என்று சொல்கிறார்.
2.எப்படி இருந்தது…? என்று கேட்கும் போது நன்றாக இருந்தது… நன்றாக இருந்தது… என்றே சொன்னால்
3.அது எப்படி நன்றாக இருந்தது…? என்று திரும்பவும் கேட்டால் சொல்லத் தெரியாமல் இருக்கின்றோம்…!

உதாரணமாக… உடலில் ஒரு இடத்தில் புண்ணாகி விடுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அது நம்மை வேதனைப்படுத்தினாலும் மருந்தைப் போட்டுக் குணப்படுத்த விரும்புகின்றோம்.

ஆனால் அப்போதும் சிறிது வேதனை இருக்கிறது. ஆற வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தால் புண்ணுக்கு அந்த மருந்தைப் போட்டுக் கொள்கிறோம்.

ஆனால் மருந்தைப் போட்டுக் கடுகடுப்பாகி விட்டால் என்ன…! இப்படி ஆகி விட்டதே…? என்று மருந்தைத் தூக்கி எறிந்து விட்டால் புண் ஆறுமா…?

இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நிலையில் நமக்குள் எத்தனையோ விதமான வேதனைகளைத் தோற்றுவிக்கும்.
1.எத்தனை விதமான வேதனைகளைத் தோற்றுவித்தாலும்
2.அதை மாற்றியமைத்த அருள் ஞானிகளின் அருள் உணர்வுகளை நாம் அடிக்கடி நுகர்தல் வேண்டும்.

அப்பொழுது அந்த வேதனையைப் போக்கும் சக்தி கிடைக்கின்றது

1.இப்பொழுது என்ன தான் நான் (ஞானகுரு) உங்களுக்கு உயர்ந்த சக்திகளைக் கொடுத்தாலும்
2.நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடிய முறையில்தான் அது இருக்கின்றது.

உங்களுக்குத் தெரியாமலே எவ்வளவோ மிக உயர்ந்த சக்தியைக் கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு அது தெரியாது.

ஆனால் அது எப்படி இருக்கிறது…? என்று உங்களிடம் சொல்ல ஆரம்பித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்…? “ஜீபூம்பா…” வேலையெல்லாம் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்.

அப்படி நடந்ததுதான் முந்திய கால நிலைகள்.
1.எனக்கே சக்தி இருக்கின்றது…
2.சாமி தயவு என்ன வேண்டிக் கிடக்கிறது…? என்று
3.பிய்த்துக் கொண்டு போனவர்கள் தான் பெரும்பகுதியான நிலைகள்.

குருநாதர் மூலம் பெற்ற அரும் பெரும் சக்திகளை எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த அற்புதமான நிலைகளைத் தெரிந்து கொண்டால் “உலகத்திற்கு எவ்வளவோ நன்மை பயக்கும்…” என்றும் நினைத்தேன்.

கடைசியில் எல்லோருக்கும் அது ஆசையைத் தூண்டி விடும் நிலையில் தான் முடிந்துவிட்டது. ஆக மொத்தம்
1.ஒருவருக்கு புரியக் கூடிய சக்தியைக் கொடுத்தாலும்
2.அடுத்தவர்கள் புரிந்து விடக் கூடாது என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
3.எல்லாம் தெரிந்த பின் அவர்கள் குருவாகவே மாறி விட்டார்கள்.

நான் கொடுப்பதை விட நீங்கள் எந்த அளவுக்கு அந்தச் சக்திகளை எடுக்கின்றீர்களோ… குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிக்கின்றீர்களோ… அதை மற்றவர்களுக்கு அப்படியே பெறச் செய்கிறீர்களோ… அதிலே நீங்கள் இந்தச் சக்திகளைக் காண முடியும்.

குருநாதர் எமக்குச் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் “என்னுடைய ஒரே ஆசை…”

குருநாதர் எமக்குச் சொல்லிக் கொடுத்த அனைத்தையும் நீங்கள் பெற வேண்டும் என்பதுதான் “என்னுடைய ஒரே ஆசை…”

 

ஒன்றுக்குள் ஒன்று கலந்துள்ள நஞ்சின் தன்மை எதனின் நஞ்சாக அடைகின்றதோ அதனின் நிலையில் நம்மை அடக்கி ஆளுகின்றது என்பதை ஞானிகள் காட்டினார்கள்.

எப்படி…?

விநாயகர் ஆலயத்தில் பார்த்தோமென்றால் இரண்டு பாம்புகளைப் பிணைத்துக் காண்பித்து இருப்பார்கள்.
1.விஷத்தின் தன்மை வரப்படும் பொழுது அது எப்படி ஒடுக்குகின்றது…?
2.ஒரு அணுவின் தன்மை எப்படிப் பிணைந்து கொள்கின்றது…? என்ற தத்துவத்தையும் காட்டி இருக்கின்றார்கள்.

ஆனால் அதில் உள்ள பொருளைக் காணாத நிலையில் தான் நாம் இன்று இருக்கின்றோம்.

நீங்கள் அனைவரும் அந்த மெய் ஞானிகள் அருள் சக்தி பெற்று இருள் சூழ்ந்த நிலையிலிருந்து மீண்டு
1.சகோதர உணர்வுகளைப் பிரித்தாளும் சக்தியாக வருவதை வெல்லும் சக்தியாக
2.நீங்கள் எடுக்கும் அருள் உணர்வுகள்… உங்கள் மூச்சுலைகள் படர்ந்து
3.இந்த நாட்டிற்குள்ளும் உலகிலும் படர்ந்துள்ள நச்சுத்தன்மைகள் அகல வேண்டும் என்ற நிலைக்குத் தான்
4.குருநாதர் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்து ஒளி பெறும் சக்தியாக வளர வேண்டும் என்று வேண்டுகின்றேன்.

உங்களுடைய மூச்சலைகள் இருள் நீக்கிப் பொருள் காணும் அருள் சக்தியாக வளர வேண்டும் என்ற நிலைக்குத்தான் குரு உணர்வுகளை ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.

1.கல்வி அறிவில்லாதவனான எனக்கு… மூடனான எனக்குள் இருந்த இருளை நீக்குவதற்கு
2.குருநாதர் கண்டுணர்ந்த பேருண்மைகளை உபதேசித்து என் உணர்வுக்குள் அவர் காட்டிய நிலைகள் கொண்டு
3.கருக்களாக உருப் பெறும் அணுக்கள் ஒவ்வொன்றுக்கும் உபதேசித்த உணர்வு தான்
4.அதற்குள் இருந்து அந்த ஞானத்தின் நிலைகளை நான் நுகர முடிகின்றது… அந்த அலைகளைப் பரப்ப முடிகின்றது.

இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் இதைப் பின்பற்றிப் பாருங்கள். மனிதன் என்ற தன்னிலை அடைய முடியும்… உங்களால் நிச்சயம் முடியும்… உங்களை நம்புங்கள்.

உயிரை ஈசனாக மதித்துப் பழகுங்கள். உங்கள் உடலை அவன் படைத்த கோவிலாக சிவனாக மதியுங்கள்… ஆலயமாக மதியுங்கள்.

இந்த உடலான ஆலயத்திற்குள் எண்ணிலடங்காத தெய்வங்கள் உண்டு. அந்த உயர்ந்த தெய்வ நிலைகள் அனைத்தையும் சேர்த்து அந்த வலுவின் நிலைகள் கொண்டு வர முடியும்.

குழம்பிற்குள் நாம் பல பொருள்களை இணைத்து அதை ருசியாகக் கொண்டு வருகின்றோம். அதைப் போல்
1.உங்களுக்குள் பலவாறு பல நிலைகள் கொண்ட உணர்வுகள் வந்தாலும் அது அனைத்தையும் அடக்கிட
2.அந்த உணர்வின் தன்மை ஆற்றல் பெற்ற அந்த அகஸ்தியனுடைய அருள் ஒளியை நீங்கள் பருக வேண்டும்.
3.அவன் சமப்படுத்தியது போன்று ஒளியின் தன்மையாக உங்கள் எண்ணங்கள் ஒளியின் சுடராகப் பிரகாசிக்க வேண்டும்.

உங்கள் சொல்லைக் கேட்போர் உணர்வுகளில் மகிழ்ச்சி தாண்டவமாட வேண்டும். அனைவரும் மகிழ வேண்டும் என்ற இந்த (இச்சை) இச்சா சக்தி தான் என் குரு காட்டிய நிலைகள் கொண்டு அதுவே எனக்குள் கிரியை ஆகி என் உடலுக்குள் இயக்கி அது தான் சொல்லாக வெளி வருகின்றது.

1.இதை நீங்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதுதான் என் குருநாதர் ஆசைப்படி எனது ஆசையாக அமைகின்றது.
2.நீங்கள் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்
3.நீங்கள் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்
4.உங்களை அறியாது வந்த தீமைகள் அகல வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

நான் எண்ணிய இந்த ஆசையை என் உயிர் எனக்குள் அதைப் படைக்கின்றது.

இதைப் போன்று நீங்களும் ஒவ்வொரு நிமிடமும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி வானை நோக்கி ஏகி மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி உங்களுக்குள் வரும் தீமைகளை நீக்குங்கள்.

அதன் வலுக் கொண்டு நீங்கள் பார்ப்போர் அனைவருக்கும் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் அவர்கள் அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப் பொருள் கண்டுனரும் சக்தி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் தீமையை நீக்கிடும் ஆற்றல்மிக்க சக்தியாக உருப் பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணிச் செயல்படுங்கள்.

1.அப்படிச் செய்தால் அதே உணர்வுகள் உங்களுக்குள்ளும் விளைந்து
2.அதனின் உணர்வாக உங்கள் உயிர் உங்களை ஆண்டு
3.அதனின் உணர்வின் ஒளியாக உங்களுக்குள் சேர்த்து
4.இந்த உடலை ஒளிச் சரீரமாக… உங்களை ஆண்டு கொண்டிருக்கும் உயிர் அதைச் செயல்படுத்துவான்,

நம் எண்ணத்தால் அகண்ட அண்டத்தையும் அளந்தறிய முடியும்

நம் எண்ணத்தால் அகண்ட அண்டத்தையும் அளந்தறிய முடியும்

 

நாம் இந்தச் சூரிய குடும்பத்தில் தான் வாழ்கின்றோம் என்று நினைக்கின்றோம். இங்கிருந்து ராக்கெட்டிலே நாம் மற்ற கோள்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் எவ்வளவு காலம் ஆகின்றது…?

1.எண்ணத்தின் மனோ நிலை ஆனாலும்
2.குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் எண்ணும் பொழுது உடனடியாக அங்கே டச் (TOUCH) ஆகும்.

குருநாதர் 2000 சூரியக் குடும்பங்களுக்கும் மனதைப் பாய்ச்சும் படி செய்கின்றார். அங்கே மனதைப் பாய்ச்சப்படும் பொழுது
1.ஒவ்வொரு சூரியக் குடும்பமும் என்ன செய்கின்றது…?
2.அதிலே ஒதுங்கிய தூசிகள் என்ன செய்கின்றது…?
3.ஒன்றுடன் தொடர்பு கொண்டு ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து எப்படி வாழுகின்றது…? என்பதை உணர முடிகிறது.

மரம் செடி கொடிகள் இருந்தாலும் எதுவும் தனித்து வாழ முடியாது. ஒரு செடி உருவானாலும் அதனுடன் இணை சேர்த்த தாவரங்கள் மறைந்தால் இதற்குச் சத்து குறைந்து விடும்… இதுவும் வீழ்ச்சியடையும்.

சில தாவர இனங்களுடைய சத்துகள் கலந்து புதுப் புதுச் செடிகள் உருவாகி இருக்கும். அப்படிக் கலந்த செடிகளின் இனங்கள் மறைந்து விட்டால்… இந்தச் செடி சிறிது காலம் தான் வளரும்.

1.காரணம் அந்தச் சத்து தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தால் இதுவும் வளரும்… அது இல்லை என்றால் மடியும்.
2.இதையெல்லாம் குருநாதர் எமக்குத் தெளிவாகக் காட்டுகின்றார்.

காட்டுப் பகுதிக்குள் எம்மை அழைத்துச் சென்று காடுகளில் தாவரங்கள் எப்படி வளர்கின்றது…? மடிகின்றது…? இதை போன்ற உணர்வுகளைத் தெளிவாகக் காட்டிக் காட்டி மனிதன் எப்படி வாழ வேண்டும்…? என்று உணர்த்துகிறார்.

மனிதன் சிறிது காலம் வாழ்ந்த பின் அவனுடைய கடந்த கால உணர்வுகள் அழிந்து விடுகின்றது… ஆனாலும் கல் மண் இவைகளில் அது பதிவாகின்றது.

மனிதன் எல்லாவற்றையும் கலந்து சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப வரப்படும் பொழுது பதிவாகிறது. அவ்வாறு பதிவான கடந்த கால மனிதனுடைய உணர்வுகளை மறுபடியும் அதை ஆயிரம் மடங்கு பெருக்கினால் இந்த உணர்வின் அதிர்வும் அவருடைய உருவத்தையும் புகைப்படமாக எடுக்க முடியும்.

கம்ப்யூட்டர் என்ற எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம்
1.ஆஸ்பத்திரி கேட் மேலே தாவி ஒருவன் தப்பிச் சென்றான் என்று அதிலே பதிவான உணர்வு கொண்டு கண்டுபிடித்து
2.அவனுக்கு ஒரு கண் இல்லை (ஓற்றைக் கண் சிவராசன்) என்று உணர்வின் ஒலி அதிர்வுகளை எடுத்து
3.இந்த உணர்வின் அதிர்வுகளைக் கூட்டப்படும் பொழுது அவனுடைய ரூபத்தைக் காட்டுகின்றது… விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர்.

அதே விஞ்ஞான அறிவு கொண்டு 1500 வருடம் மனிதன் வாழலாம் என்று இதையும் சொல்கின்றார்கள்.

1.ஆனால் அத்தகைய பிழைகள் வந்து வரும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நுகர்ந்து நுகர்ந்து
2.வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் தவறு என்று தெரிகின்றதோ அந்தத் தவறு விளையாதபடி
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்று இணைத்து விட்டால்
4.இந்த வாழ்க்கையில் வரும் நிலைகளை தணித்து அருள் உணர்வுகளைப் பெருக்க முடியும்.

இது தான் வாழ்க்கையே தியானம் என்பது.

1.நான் சும்மா உங்களிடம் கொடுக்கவில்லை…
2.குருநாதர் எமக்குச் சும்மா கொடுக்கவில்லை.
3.இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவானால்… அந்த நினைவின் தன்மை கொண்டு தான் அதை எடுக்க முடியும்.

ஆனால் இந்த உடலின் இச்சைக்கு வாழக் கற்றுக் கொண்டால்… உடலை வளர்க்கவும் கௌரவத்தை வளர்க்கவும்… “அதை வைத்து என்னை மெச்சிக் கொள்ள வாழ வேண்டும் என்று எண்ணினால்” இந்த உடலுக்காகத் தான் நாம் வாழ முடியும். அப்போது குருநாதர் கொடுத்த சக்திகள் பயனற்றதாக ஆகிவிடும்.

ஆகவே இந்த உடலில் இருக்கக்கூடிய உணர்வுகள் உடலின் இச்சைக்குச் செல்லாதபடி எல்லோருக்கும் இந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று அந்த ஆசையைத் தூண்டுதல் வேண்டும்.

நீங்கள் அந்த உயர்ந்த சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் நான் முதலிலே பெறுகின்றேன். உங்களுக்குப் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது நான் பெறுகின்றேன்.

அதைத்தான் குருநாதர் எமக்குள் உருவாக்கினார்.

1.இந்தப் பேருண்மையின் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி…
2.அந்தப் பதிவின் நினைவை உங்களுக்குள் வளர்ப்பதற்குத் தான் இதைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.
3.வாழ்க்கையையே ஒவ்வொரு நொடிப்பொழுதும் தியானமாக அமைக்க வேண்டும் என்று சொல்கின்றோம்.

இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”

இந்த உடலையும் உயிரையும் “குருவே எப்போதும் வழிநடத்த வேண்டும்…”

 

குருநாதர் எம்மைக் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது…? உயிரணுக்கள் உயிரினங்கள் எவ்வாறு விளைகின்றது…? கோள்கள் மற்ற சத்துக்களைக் கவர்ந்து எவ்வாறு வளர்கின்றது…? என்ற நிலையைச் சாப்பாடு இல்லாதபடி காட்டிலே அமர்த்தி அதை எல்லாம் அறியும்படி செய்தார்.

விஞ்ஞானிகள் இயந்திரத்தின் துணை கொண்டு பல நிலைகளைக் கண்டு கொண்டே இருக்கின்றார்கள். ஆனால் முழுமையும் அவர்கள் காணவில்லை.

அன்று மெய் ஞானிகள் தனக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலின் துணை கொண்டு
1.நம் குருநாதரும் அதை அறிந்து… அதை நாம் அறியும் நிலைக்கு எமக்குள் அதைப் பதியச் செய்கின்றார்.
2.பதிந்த உணர்வினை நினைவு கொண்டு நான் விண்ணை நோக்கும் பொழுது விண்வெளியில் நடக்கும் அதிசயங்களை உணரும்படி செய்கின்றார்.
3.சில நேரங்களில் காட்சியாகவும் பெறும்படிச் செய்கின்றார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.ஒவ்வொரு ரூபத்திலும் அவர் பதிய வைத்த உணர்வை… ஏட்டை நினைவு கொள்ளும் பொழுது இதை உணர்த்தி
2.அவரே தான் இந்த உடலை வழி நடத்துகின்றார்… ஏனென்றால் என்னுள் இருந்து அல்ல…!

நாடாக்களில் பதிவு செய்தது போன்று அவர் உணர்வுகள் எனக்குள் பதிவானது…!

1.அதை நான் எண்ணும் போது அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு அதைப் பெறப்பட்டு
2.அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று அவர் செய்த உணர்வைத் தான் நான் செய்கின்றேன்.
3.அந்த உணர்வு தான் என்னை இவ்வாறு செயல்படுத்த வைக்கின்றது.

ஆகவே மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை நாம் அனைவரும் பெறுவோம். அவர் காட்டிய அருள் வழியில் செல்வோம்.

இந்த மனித வாழ்க்கையில் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்வோம். இந்த உடல் வாழ்க்கையிலே மகிழ்ச்சி பெறச் செய்வோம். நாம் பார்க்கும் அனைவரையும் மகிழச் செய்வோம். மகிழ்ந்த உணர்வுடனே வாழ்வோம்.

1.என்றும் பேரானந்த நிலை பெற்ற அந்த மகரிஷிகளுடன் ஒன்றி வாழ்வோம்
2.அவர்களுடன் ஒன்றி வாழும் நிலையை உருவாக்குவோம்… அவர்களுடனே வாழ்வோம் என்று பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

உங்களிடம் இதற்கு முன்பு படிப்படியாகச் சிறுகச் சிறுக சொல்லிக் கொண்டு வந்தேன்… இப்பொழுது விளக்க உரைகளைக் கொடுக்கின்றேன். பூரணமாகச் சொல்ல வேண்டும் என்றால் அதற்குண்டான கால நேரம் இல்லை.

1.குருநாதர் பதிவு செய்தது எண்ணிலடங்காதது.
2.அனைத்தையும் நாம் முழுமையாக அறிய வேண்டுமென்றால் இந்த மனித உடலுக்கு ஆயுள் பத்தாது.

அவ்வளவு பெரிய அண்டத்தின் உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார். அதை எல்லோரும் நீங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் அவ்வப்போது துணுக்குத் துணுக்காகக் கொடுத்து அந்த நினைவுகளை உங்களுக்குள் ஊட்டுகின்றோம்.

1.அவ்வாறு ஊட்டி உங்கள் உணர்வை ஒளியாக்கி அதனை எண்ணமாக்கி
2.உங்களுக்குள் இயக்கும் சக்தியாக அதைக் கொண்டு வருகின்றேன்.

எமது ஆசியைத் தாள் பணிந்து நீங்கள் பெறுவதல்ல… கண் கொண்டு நேர்முகமாகப் பார்த்துக் கவர வேண்டியதே அது…!

எமது ஆசியைத் தாள் பணிந்து நீங்கள் பெறுவதல்ல… கண் கொண்டு நேர்முகமாகப் பார்த்துக் கவர வேண்டியதே அது…!

 

தீமையை விளைவிக்கும் சக்திகள் உங்களை அடிபணியும் நிலையாக உபதேசிக்கும் உணர்வுகள் உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்றே ஆசீர்வதிக்கின்றேன்.

உங்கள் தாய் தந்தையரைத் தாள் பணிந்து அவருடைய அருள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.என்றைக்கும் உங்களுக்குக் குரு அவர்களே தெய்வமும் அவர்களே தாயின் உயிரே கடவுள்
2.ஒருக்கிணைந்து அவர்களை அடிபணிந்தால் உங்களுக்கு வழிகாட்டிய உணர்வின் தன்மை அவர்கள் சொல்லும் வாக்கை நாம் ஏற்றிடும் நிலையும்
3.நம்மைக் காத்திடும் உணர்வுகள் பதிவு செய்தது ஓங்கி வளர்ந்து தீமைகளை அடிபணியச் செய்து
4.மெய் உணர்வைப் பெறும் தகுதியாக நாம் உருவாக்க வேண்டும்.

குருவிடம் கேட்பதெல்லாம்… உபதேசித்த உணர்வுகள் எனக்குள் ஓங்கி வளர்ந்து என்னை அறியாது இருள் சூழ்ந்த நிலைகளுக்கு அழைத்துச் செல்லும் அந்தத் தீமைகள் அடிபணிந்து
1.மெய் உணர்வைக் காணும் நிலையாகக் குரு அருள் பெற வேண்டும் என்று கண்ணைத் திறந்து
2.நான் ஆசி கொடுக்கும் போது நீங்கள் என்னை நேர்முகமாகப் பார்ப்பதுதான் முறை.

கொடுக்கும் அருள் வாக்கின் நிலையை “நேரடியாகக் கண்கொண்டு பார்த்தால்…” கண்ணின் காந்தப் புலன் என்னைப் படம் எடுத்தாலும் கண்ணின் கருவிழி அதனுடன் இணைந்த காந்தப்புலன் யாம் வெளிப்படுத்தும் அலைகளைக் கவர்ந்து உங்களுக்குள் சுவாசிக்கச் செய்து அருள் மகரிஷிகளின் சக்தியைப் பெறச் செய்யும்.

இந்த முறைப்படி தான் நீங்கள் ஆசி பெற வேண்டும்.

ஆனால் பெரியவரை நாம் வணங்காது எப்படி இருப்பது…? என்ற தவறான வழிகள் காட்டப்பட்டதை விடாது பிடித்துக் கொண்டுள்ளார்கள். பாத நமஸ்காரம் செய்யத் தான் வருகிறார்கள். அதை விடுத்துவிடுங்கள்.

யாம் உபதேசம் கொடுக்கும் பொழுதெல்லாம்
1.யாம் கொடுக்கும் அந்த அருள் சக்திகளை
2.கண் கொண்டு பாய்ச்சும் உணர்வலைகளை
3.உபதேச வாயிலாகச் சொல்லாகச் சொல்வதை நீங்கள் உற்று நோக்கி
4.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் பெற வேண்டும் என்ற ஏக்கத்துடன்
5.கூர்ந்து கவனித்து எடுத்தால் தான் அந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் ஆழமாகப் பதிவாகின்றது.

ஆகவே தயவு செய்து அதன் வழி செயல்படுத்துங்கள்.

யாம் கொடுக்கும் வாக்குகள் அந்தச் சக்தி வாய்ந்த எண்ண வித்தாக விளைந்து… உங்கள் எண்ணத்தால் தீமைகளை அகற்றி… உங்களுக்குள் நன்மை பெறும் நிலையும்… அருள் ஞானம் பெறும் தகுதியையும் பெறுகின்றீர்கள்.

அந்தத் தகுதியை நீங்கள் இழந்து விடக்கூடாது என்பதற்குத் தான் படிப்படியாகச் சொல்கின்றேன்.

உபதேசிக்கும்போது அதை ஏங்கிப் பெற வேண்டும் என்ற நினைவுடன் வரும் பொழுது தான்
1.என்னுடைய ஆசீர்வாதம் அருள் சக்தியாக உங்களுக்குள் விளைந்து உயர்ந்த ஆற்றலாகப் பெருகும்
2.மறவாது நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று பிராத்தித்துக் கொள்கின்றேன்.