மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

உயிரே கடவுள்

நம் ஞானகுரு அவர்கள்,  தமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, வானவியல், புவிஇயல், உயிரியல் ஆகியவற்றின் உண்மை நிலைகளைப் பெற்று, அறிந்து, உணர்ந்து. அதை அனைவரும் பெற வேண்டுமென்ற ஆசையினால் தியானத்தின் மூலமாகவும் உபதேசங்களால் மூலமாகவும் உணர்த்தியுள்ளார்கள்.

ஞானகுரு கட்டிய அருள் வழியில், சாமியம்மா தியானப் பயிற்சியும் அருளாசியும் வழங்கி  வருகின்றார்கள்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் தமது குருநாதர் பெயரால் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை உருவாக்கி அதில் “மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை” என்று ஏற்படுத்தி உள்ளதை ஞானகுரு அவர்கள் ஒளிநிலை அடைந்த பிறகு. சாமி அம்மா வழிநடத்தி செல்கிறார்கள்.

தபோவனத்தில் “பௌர்ணமி தியானத்தில்” நாம் விண்ணை நோக்கி துருவ நட்சத்திரத்தை எண்ணி தியானிக்கும் போது, விண்ணிலே துருவ நட்சத்திரத்திளிருந்தும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், பரவெளிகளில் இருந்தும் வெளிப்படும் அருள்ஞான சக்திகளை சாமி அம்மா அவர்கள் காட்டிய அருள்வழி கொண்டு, நமக்கு கிடைக்குமாறு உதவ முடிகின்றது.

பௌர்ணமி நாளில் கூட்டுத்  தியானத்தில் நமது குலதெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களையும், நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற, நண்பர்கள், உற்றார், உறவினர்களது   உயிரான்மாக்களையும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து பிறவி இல்லா நிலை பெறச்  செய்வது சிறப்பு அம்சமாகும்.

அன்றைய தினம் தியானமிருக்கும் அன்பர்களுக்கு அபரிதமான சக்திகளை சாமி அம்மா தியானத்தின் மூலம் பெற உதவுகின்றார்கள். அதைப் பயன்படுத்தி விண்ணிலிருந்து கிடைக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும், சப்தரிஷி மனடலங்களின் பேரருளையும் பேரொளியையும், நாம் அனைவரும் பெற பௌர்ணமி தியானம் ஒரு அறிய வாய்ப்பாகும்.

அதைப் பயன்படுத்தி, பல ஊர்களிலிருந்து தபோவன உறுப்பினர்களும், வெளிஊர், வெளி மாநில அன்பர்களும் தபோவனத்தைச் சுற்றி அமைந்திருக்கும் கிராமங்களிலிருந்தும் அன்பர்கள் கலந்து கொண்டு சாமி அம்மா அவர்கள்  ஆசி பெற்று வருகின்றனர்.

சாமி அம்மாவை தபோவனத்தில் சந்தித்து தியானப் பயிற்சி, உபதேசம் பெறவும் விளக்கங்கள் கேட்டுப் பெற வரும் அன்பர்களுக்குத் தங்கிச் செல்ல தங்கும் அறைகளும்,  உணவு உண்ண உணவு விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

தபோவனம், புஞ்சை புளியம்பட்டியிலிருந்து சத்தியமங்கலம் போகும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. உடனுக்குடன் பஸ் வசதியும் உள்ளது. எண் 6, 6A, N6 ஆகிய பேருந்துகள் தபோவன வழித்தடத்தில் ஓடுகின்றன. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் பாதை வழியாகவும், ஈரோடு, அவிநாசி, புஞ்சை புளியம்பட்டி பாதை வழியாகவும் தபோவனத்தை அடையலாம்.

தபோவனத்திலிருந்து, “உயிரே கடவுள்” என்ற மெய் ஞான மாத இதழ் ஞானகுருவின் அருள்ஞான உபதேசங்களைத் தாங்கி வெளி வருகின்றது. அதன் வருடச் சந்தா ரூ 100/-  ஆகவும், ஆயுள் காலச் சந்தா ரூ 500/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை ஆயுள்கால அங்கத்தினராக  ரூ 1500/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள ஆயுள்கால உறுப்பினராகவும், உயிரே கடவுள் மாத இதழ் ஆயுள்கால உறுப்பினராகவும் ஆகும் அன்பர்களுக்கு அருள்ஞானச் சக்கரம் சாமி அம்மா நேரடியாக அளித்து ஆசி வழங்குவார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
வடுகபாளையம்
புஞ்சை புளியம்பட்டி
ஈரோடு மாவட்டம்

Location of Mamakarishi Eswaraya Guruthevar Thapovanam

http://g.co/maps/v3qff

click this link to see the geographical location of  Thapovanam

Leave a Reply