இந்தத் தியான வழியினை யாருக்கும் கட்டாயப்படுத்தி நாம் சொல்லக் கூடாது

இந்தத் தியான வழியினை யாருக்கும் கட்டாயப்படுத்தி நாம் சொல்லக் கூடாது

 

எப்பொழுதெல்லாம் உங்கள் மனம் தெளிய வேண்டுமோ அப்பொழுதெல்லாம் எம்முடைய அருள் ஞான நூல்களை எடுத்துப் படியுங்கள் எமது உபதேசங்களைக் கேளுங்கள்.

உங்கள் நண்பர்களுக்கும் எடுத்து ஓதுங்கள்… அவர்களுக்குள் பதிவாக்குங்கள்… நினைவாக்குங்கள். அவர்களையும் அந்த அரும்பெரும் சக்தியைப் பெறச் செய்யுங்கள்.

அந்தத் துணிவு உங்களுக்கு வரவேண்டும்.

1.நீங்கள் கண்ட உண்மைகளை எடுத்துச் சொல்லுங்கள்… கேட்காதவரிடம் சொல்ல வேண்டியதில்லை.
2.ஒரு சிலர் கேட்க மறுப்பார்கள். அவர்களிடம் நாம் இதைப் பேச வேண்டியது இல்லை.
3.அவர்களுக்கும் நல்ல காலம் வரும் நல்வழி நடப்பார்கள்… என்று நாம் அவர்களுக்காகத் தவம் இருக்க வேண்டும்.

மீறிச் சொன்னால் நம்மைக் கிண்டலாகச் சொல்வார்கள். அது தான் நடக்கும். பரவாயில்லை… ஒரு காலம் உங்களை அறியும்… உண்மைகளை அறியும் அந்தச் சக்தி நீங்கள் பெறுவீர்கள் என்று சொல்லி விடுங்கள்.

1.உலக மக்களுக்காக நீங்கள் பேசும் இத்தகைய அருள் உணர்வுகள் உங்களுக்குள் விளைகின்றது… உங்களுக்குள் பரவுகின்றது.
2.அவர்கள் முதலிலே கேட்க மறுத்தாலும் கூடச் சங்கடம் வரும் பொழுது உங்களை எண்ணுவார்கள்… உடலில் பதிவானது நினைவுக்கு வரும்.

நாம் சொன்னதைச் செய்தால் நல்லது வரும் என்ற சிந்தனை அவர்களுக்கும் வரும். அப்பொழுது அந்த உணர்வுகளை நுகர்ந்து நம்மை அணுகி வருவார்கள்.

முதலில் சொல்கின்றோம் ஆனால் அவரிடம் “விவாதிக்கும் தன்மைக்கு” நாம் போகக்கூடாது… அதை விட்டு விட வேண்டும். நீங்கள் நன்மை பெறுவீர்கள் நல் வழி நடக்கும் நீங்கள் நுகர்ந்த இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும் என்று மட்டும் நாம் சொன்னால் போதும்.

1.அடுத்து அழுத்தமாக இதைப் பெற்றே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக் கூடாது.
2.யாருக்கும் கட்டாயப்படுத்தி இந்தச் சக்தியைத் திணித்து அவர்களைப் பெறச் செய்ய முடியாது.

அன்புடன் அரவணைத்து உண்மையின் உணர்வை எடுத்துச் சொல்லத் துணிவு வேண்டும்.

இந்தத் தியானத்தை கடைபிடிப்போர் அனைவரும் உலக மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகளை நாம் அடிக்கடி வெளிப்படுத்துதல் வேண்டும். இந்த உணர்வுகள் பூமியிலே படரும்.

ஒருவரிடம் சொல்கின்றோம் அவர்கள் நினைவானால் கவரும் சந்தர்ப்பம் வருகின்றது. சிந்திக்கும் ஆற்றல் அவர்களுக்குள் வரும். உங்கள் சொல்லும் வீணாகாது.

ஆனால் ஏற்கும் பருவம் கொண்டு அவருக்குள் பதிவு செய்து ஏற்க வைத்து விட்டால்
1.நாளைக்கு ஒரு சிரமம் வரும் பொழுது உங்கள் நினைவு வரும்.
2.நீங்கள் எடுத்துக் கொண்ட உணர்வு இங்கே இருக்கும்… அதைப் பெற வேண்டும் என்ற நினைவு அவருக்கு வரும்.

ஆனால் கட்டாயப்படுத்த கட்டாயப்படுத்த வெறுப்பின் தன்மை தான் வளரும்… ஏற்றுக்கொள்ளும் பருவமே இழக்கப்படுகிறது.

ஒரு பொருளில் விஷம் கலந்தால் அது எல்லாம் விஷமாகத்தான் மாறும். ஆகவே கட்டாயப்படுத்தி யாருக்கும் சொல்ல வேண்டாம்.

அரவணைத்து அன்புடன் ஞானத்தைப் பதிவு செய்தால் சந்தர்ப்பம் வரும் பொழுது மற்றவர்களும் இந்த அருள் ஞானத்தைப் பெறுவார்கள். ஆகவே அந்தத் தகுதியைப் பெறச் செய்யுங்கள்.

ஆக்ஞை

ஆக்ஞை

சில சமயங்களில் நாம் எவ்வளவு தெளிவாக இருந்தாலும் நம்முடைய பையன் அடம் பிடித்தால் போதும், இந்தப் பற்று இங்கே வந்து விடுகின்றது. அது நம் எண்ணத்தை ஆன்மாவிலே மறைத்து விடுகின்றது. இந்த உயர்ந்த எண்ணத்தைப் பெறும் தகுதியை இழக்கச் செய்கின்றது.

இந்த நஞ்சான உணர்வு வந்து ஊடுருவப்படும் பொழுது இது தன் இரையை எடுத்துக் கொள்கின்றது. இந்த உடல் பற்றின் உணர்வுகள் அந்த அணுவின் வளர்ச்சியும் நமக்குள் தொடர்ந்து விடுகின்றது. இதைத் துடைப்பதற்கு அவ்வப்பொழுது எண்ண வலுவைக் கொண்டு வரவேண்டும்.

அதற்குத்தான் நாம் ஒவ்வொரு நிமிடமும்
1.“ஈஸ்வரா” என்று நம் உயிரிடம் எண்ணத்தைச் செலுத்திப் பழக வேண்டும்… கண்ணின் நினைவை அங்கே கொண்டு போக வேண்டும்.
2.கூட்டுத் தியானத்தில் நாம் பெறும் அந்த மகரிஷிகளின் உணர்வை கண்ணின் நினைவிற்குக் கொண்டு வந்து உயிருடன் இணைக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இணைக்க வேண்டும்.

இவ்வாறு காட்டியதைத்தான் இந்தக் குண்டலினி யோகக்காரர்கள் “ஆக்ஞை” இடப்பட்டு என்று சொல்வார்கள்.
1.நாம் எந்த உணர்வைச் செலுத்துகின்றோமோ அது “மூலாதாரத்தில்” உடலின் அணுக்களில் இயக்குகின்றது.
2.உடலின் உறுப்புக்களுக்கு மூலம் அணுக்களின் தன்மை… இங்கே உயிர் மூலாதாரம்.

இதைத்தான் “மூலாதாரத்தில் மூண்டெழும் கனலைக் காலமறிந்து” என்கிற பொழுது நம்மிடத்தில் தீய அணுக்கள் உண்டு. அதற்கு வளர்ச்சி இல்லாதபடி… மூண்டெழும் கனலைக் காலமறிந்து கருத்துடன் செயல்பட வேண்டும் என்று தான் அந்த இடத்தில் காட்டப்பட்டது.

இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் அங்கே கட்டளை இடப்படும் பொழுது தான் ஆக்ஞை என்ற நிலையைக் கொண்டு வருகின்றார்கள். அப்பொழுது ஆக்ஞை இட்டுப் பரவுலகத்தை மேலே உச்சிக்குக் கொண்டு போய் இதன் வழி கொண்டு மோட்ச லோகத்திற்குக் கொண்டு போ என்று சொல்கின்றார்கள்.

மூலாதாரம்… இந்த உடல் முழுவதற்கும் இங்கே கீழே இழுக்கப்பட்டு இந்த உணர்வுகள் சமைக்கப்பட்டு இந்த உணர்வின் தன்மை இரத்த நாளங்களில் இருந்து பிரிக்கப்படுகின்றது என்று இவர்களின் அனுமானம். மூலாதாரம் கீழே இருக்கின்றது என்று இவர்கள் கொண்டு போகின்றார்கள்.

1.ஆனால் நமக்கு மூலம் உயிர்… நாம் எடுக்கும் உணர்வுகள் நமக்கு ஆதாரம்.
2.இந்த ஆதாரத்தை நமக்குள் மறைந்திருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்கும் சேர்ப்பிக்க வேண்டும்… இதுதான் குண்டலினி.

கண்ணின் நினைவு கொண்டு உயிருடன் ஒன்றி உணர்வினை உடலுக்குள் பரப்புதல் வேண்டும். அந்த உணர்வின் தன்மை வலுப்பெறும் பொழுது தீமைகளைப் பிளக்கின்றது.

ஏனென்றால் நமக்குள் பதிவான குணங்கள் பல கோடி. அது அது சாப்பாட்டிற்குக் கிளர்ந்தெழத்தான் செய்யும். பூமிக்குள் என்னென்ன விதை மறைந்திருக்கின்றதோ மழைக் காலம் வந்து விட்டதென்றால் துணிந்து ஆகாரத்தை எடுத்துத் தழைக்க ஆரம்பித்துவிடும்.

அதே மாதிரி அந்தந்தக் காலப் பருவத்தில் அது அதை எடுத்துக் கொள்கின்றது.

ஒருவர் கோபப்படுவதைப் பார்த்துப் பதிவு செய்து விட்டால் சண்டை போடுவதைப் பார்த்தால் அந்தக் காலப்பருவம் வந்துவிட்டது. உடனே ஆன்மாவில் சேர்ந்துவிடும்.
1.உடனே சண்டை போடுகிற மாதிரிதான் வரும்.
2.சண்டையை வேடிக்கை பார்த்தால் வீட்டில் சண்டை போடுவீர்கள்.
3.அந்தக் காலப்பருவத்தில் அது வளர ஆரம்பித்து விடுகின்றது.

நமக்குள் விளைய வைத்த வித்துகள் அந்தந்தக் காலப்பருவம் வந்து விட்டால் அது அது விளைய ஆரம்பித்து விடுகின்றது. எந்தக் காலப்பருவத்தில் விளைந்தாலும் நமக்குத் தேவைப்பட்டதை விளையச் செய்யக் களையை நீக்குகின்றோம். அதை நீக்குவதற்குச் சக்தி கொடுக்கின்றோம்.

1.எந்தக் காலப்பருவமானாலும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற வேண்டும்.
2.அந்த உணர்வை உள்முகமாக உடலுக்குள் செலுத்தி வலுப் பெறச் செய்து அதற்குச் சாப்பாடு இல்லாமல் செய்ய வேண்டும்.

இந்தக் களையை நீக்க வேண்டும். இதை நீக்கினால்தான் அதற்குச் சாப்பாடு கிடைக்காது. இல்லையென்றால் சண்டை போட்ட அணுவெல்லாம் சாப்பாடு எடுத்துவிடும்.

ஓரு குடும்பத்தில் வேதனைப்படுகிறார்கள். அந்த வேதனையான சொல்லைக் கேட்டுக் கொண்டிருந்தோமென்றால் அந்தக் காலப்பருவம் என்ன செய்யும்…? அந்த வேதனையான அணுக்கள் நம்மிடம் வந்து வளர்ச்சி அடைய ஆரம்பித்து விடுகின்றது.

இப்படிப் பெரும்பகுதி எங்கு திரும்பினாலும்… ரயிலில் போகும் பொழுது… அடுத்தவர்கள் செய்யும் தவறைப் பார்த்தால் வேதனை. கடையில் இருக்கும் போது ஒருத்தருக்குக் கடன் கொடுத்துவிட்டு அவர் திரும்பத் தரவில்லை என்றால் வேதனை கோபம் குரோதம் வெறுப்பு.

1.இதுவெல்லாம் சந்தர்ப்பத்தால் விளையப்படும் போது உள்ளுக்குள் ஊட்டம் கொடுத்துக் கொண்டேயிருக்கும்… அது அது வளரும்.
2.மனிதருடைய மனநிலை காலையில் ஒரு மனதாக இருக்கும்.
3.இதை விட்டு வெளியே போகின்றோம் என்றால் மனது வேறு விதமாக மாறும்.

தொழிலில் அமர்ந்தவுடன் என்ன ஆகும்…?

ஒருவன் நம் சொல்லைக் கேட்காமல் இருப்பான். நமக்கு இடைஞ்சல் செய்து கொண்டே இருப்பான். நாம் இங்கே இருக்கும் வரையில் இதையெல்லாம் மறந்து இருப்போம். ரோட்டில் போகும் பொழுது மறந்திருப்போம். தொழிலில் உட்கார்ந்தவுடனே அவனைப் பார்த்தவுடனே மீண்டும் அந்தக் களை முளைக்க ஆரம்பித்துவிடும்.

வேதனை வெறுப்பு வந்து விட்டால் நல்லவர்களையும் வெறுத்துப் பேச ஆரம்பித்துவிடும். ஒரு நல்ல அமைப்பை அமைக்க வேண்டுமென்றால் வெறுப்பாகத்தான் வரும். அந்தந்தக் காலப்பருவத்தில் அது அது விளைகின்றது.

நாம் ஒவ்வொரு நிமிடத்திலும் மனிதன் காலப்பருவத்தை மாற்றுகின்றோம். அதே போல
1.மாற்றியமைத்த அருள் ஞானிகளின் உணர்வுகளை உடலுக்குள் செலுத்தி
2.அந்தந்தப் பருவங்கள் வரப்படும் பொழுது களைகளை நீக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதுதான் ஆத்ம சுத்தி என்பது.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று நம் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து பல முறை எண்ண வேண்டும்.

இதைத்தான் அன்று ஞானிகள் சொன்னது ஆக்ஞை..! இந்த உணர்வின் தன்மை கொண்டு நம் உயிருடன் எதை எண்ணுகின்றோமோ உயிர் அதை இயக்கும்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி, எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வைப் புருவ மத்தியின் வழியாக உடலுக்குள் கொண்டு போக வேண்டும்.

சிறிது நாட்களுக்குப் பழக்கம் வந்து விட்டதென்றால் இது உள்ளுக்குள் கொண்டு போகும். அப்பொழுது இந்த உணர்வின் செல்களை வளர்க்கப்படும் பொழுது எதை அங்கு பற்றினோமோ இந்த நினைவு துருவ நட்சத்திரத்திற்குக் கொண்டு போகும்.

By praying to almighty we can succeed

By praying to almighty we can succeed

Without our knowledge we get into us some of the powers of the spirits around us. By this our character is influenced by those of the spirit.
1.We should be strong on our powers and should not become a slave of those atoms
2.by engaging ourselves in meditation.

If we allow outside atoms to enter into our body and influence our thoughts they will become our master. Even if we are steady in our state the breath of those who mingle with us and their thought waves will attack us and our state is likely to change.

When we are surrounded by people who are in a happy mood we also feel happy. Similarly when we are in a place where all the people are in a sorrowful state we also get into that state.

The air around us is mixed with all states. When we are in a certain surrounding we breathe the same type of breath that is there and we also enter in that state.
1.We get into the state that exists in the place that we enter without our knowledge.
2.It is our thoughts that take us into the various states.

That is why our elders have taught us about the ways of bakthi and meditation so that we will enter into that state.

People who know about this raise questions as to why those who are in such state also get some ailments in their bodies and other troubles…?

Sri Ramakrishna Parama Hamsa who lived in this Kali Yuga taught the people of this world several truths in different states, the ways of meditation and puja that they have to follow.

In spite of his doing so much good to the people of this world why is it that he was attacked by so many ailments at the end of his life…?

1.He did not consider his body as a permanent thing and that it belongs to him.
2.The way in which Bogar considers his body is quite different from the way in which Sri Rama Krishna took it.

When people approached him worshipping him as God and prayed for relief from the ailments in their bodies…
1.he absorbed those ailments from the bodies of his devotees into his body which gave relief to the devotees.
2.The devotees took him as God but he had to suffer from the ailments which he had absorbed from the bodies of his devotees.

As soon as he had absorbed those sick atoms from the bodies of his devotees into his body
1.he should have driven them out of his body by his powers of meditation before they get lodged in his body.
2.This state he knew, but did not spend his energy in curing his own body.

He thought that the body does not belong to him and it is only a temporary vehicle for his immortal soul to proceed along its journey through this material world.

The state of such Thapasies is the same. It is possible to absorb the ailments from the devotee’s bodies into their body and then expel them out.

This can be done only for those ailments that are connected with the tissues and flesh and not for those that have entered the bone.

1.Whatever power any Rishi gets from Sakthi will be overcome by Sakthi herself.
2.It is only by praying to Sakthi that we can succeed.

By entertaining good thoughts within us we should save ourselves from the influence of other atoms that are inside us.

மனித உடலாக நாம் வளர்ச்சிக்கு வந்த நிலை

மனித உடலாக நாம் வளர்ச்சிக்கு வந்த நிலை

 

குளவிக்கு உமிழ் நீர் ஊறுகின்றது அந்த உமிழ் நீரைக் கொட்டி மண்ணைப் பிசைகின்றது “ஹொய்ங்… ஹொய்ங்… டுன்… டுன்…” என்று அது எப்படி இரைகின்றதோ அந்த இறக்கைகளில் நாதங்கள் வருவது போன்று தன் உணர்வின் இரைச்சலை அந்த மண்ணிலே கொடுக்கின்றது.

இறக்கையாலும் நாதத்தைக் கொடுக்கிறது உணர்வின் ஒலிகளையும் கொடுக்கின்றது மண்ணை உருண்டையாக உருட்டுகின்றது.
1.மண்ணிற்குள் கலந்திருக்கக் கூடிய காந்த ஈர்ப்புக்குள் அது ஈர்க்கப்படுகிறது.
2.ஏனென்றால் மண்ணும் அது ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் வளர்ச்சியின் தன்மை பெற்றது.

குளவி தன் உமிழ் நீரை அதற்குள் கொட்டி அதைப் பிசைந்து நாதங்களைச் செருகுகின்றது. செருகிய நிலைகள் கொண்டு குளவி கூட்டைக் கட்டுகின்றது. கூட்டைக் கட்டிய பின் புழுவைத் தேடிச் செல்கின்றது. தேடிச் சென்று புழுவைத் தூக்குகின்றது.

கூட்டுக்குள் கொண்டு வந்து வைத்தவுடன் லேசாகக் கொட்டுகின்றது. கொட்டும் போது குளவியின் பால் புழுவின் நினைவு திரும்புகிறது. உயிரின் துடிப்பின் வேகம் அதிகமாகக் கூடுகின்றது.

தேள் கொட்டியுடன் நாம் துடிக்கின்றோம் அல்லவா… குளவியே கொட்டினாலும் துடிக்கின்றோம். இதைப் போல அந்தப் புழுவைக் குளவி கொட்டியபின் உணர்வுகள் தூண்டி எழுந்து உற்சாகத்துடன் வரும் பொழுது வேகத்தின் நிலைகள் அதிகமாகின்றது.

1.கொட்டிய விஷத்தின் தன்மைகள் புழுவின் தோலைச் சீக்கிரம் கருகச் செய்கின்றது… கருகிய பின் சருகு போல் ஆகிறது.
2.சருகு போல் ஆகும் தன்மை வரும் பொழுது இரண்டாவது தரம் கொட்டியவுடன் துடிப்பு அதிகமாகின்றது.
3.சருகு போல் ஆனபின் கொட்டிய வேகத்தில் கோழி முட்டைக்கு எப்படி ஓடு உருவாகின்றதோ
4.அதைப் போல புழுவின் தசைகள் அனைத்தும் அழுகி சருகு போல ஒரு கருவாக உருவாகின்றது.

ஆனால் புழுவை உருவாக்கிய அந்த அணுக்கள் அனைத்தும் துடிக்கும் நிலை பெறுகின்றது. மண்ணை வைத்து அந்தக் கூட்டைக் குளவி மூடிவிடுகிறது.

அந்தக் கூட்டிற்குள் அடங்கிய புழுவினைக் குளவி கொட்டியதால்
1.உயிரின் வேகத் துடிப்பு அதிகமாகி அந்த இயக்கத்தின் நிலைகள் கொண்டு காந்தம் அதிகமாகி
2.விஷத்தின் தன்மை உமிழ்ந்து அதனால் கட்டப்பட்டக் கூட்டின் மூலம்
3.வெளியிலிருக்கும் காந்த அலைகளைத் தனக்குள் ஈர்க்கும் நிலை வருகின்றது.
4.அவ்வாறு ஈர்க்கப்படும் பொழுது இந்த உயிரின் துடிப்பு வேகும் பொழுது காந்தப் புலன்கள் அதிகமாகிச் சூடாகி
5.உடலுக்குள் இருக்கக்கூடிய அழுகிய புழுவின் தசையை ஆவியாக மாற்றி உயிரின் துடிப்புக்குள் கொண்டு வருகின்றது.
6.ஒரு மத்தாப்பை நெருப்பை வைத்துக் கொளுத்தினால் அது பல ரூபங்கள் ஆவது போல
7.குளவியின் நிலைகள் உயிரிலே கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளாகச் சேர்த்து அந்தப் புழுவே குளவியாக மாறுகின்றது.

குளவியாக மாறி குளவி உருப்பெற்ற பின் அதற்கும் உமிழ் நீர் ஊறுகின்றது. கூட்டிற்குள் உமிழ் நீரைக் கொட்டுகின்றது. ஈரமான பின் துவாரமிட்டுத் தன்னிச்சையாக வெளி வருகின்றது.

கூட்டைக் கட்டிய குளவி போய் அதைத் திறப்பதில்லை. புழு குளவியாக ஆன பின் உமிழ் நீர் சுரந்து உமிழ் நீரைக் கொட்டித்தான் குளவி வெளி வருகின்றது.

அப்படி வெளியே வந்த பின் முதல் குளவி எதைச் செய்ததோ புழு குளவியான பின் அதே நிலையைச் செய்கின்றது. ஏனென்றால் அந்த உணர்வுக்கொப்ப வேலையைச் செய்கின்றது.

இதைப் போல் தான் ஒரு மாங்கனி தனக்குள் வித்தாக ஆனபின் அதை மண்ணிலே நடப்படும் பொழுது தன் உணர்வின் ஆற்றலைப் பெருக்கி இந்த உணர்வின் தன்மை ஈர்க்கப்பட்டு “அந்த மரத்தின் இலையைப் போன்று ரூபங்களை உருவாக்குகின்றது…”

இவ்வாறு எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல அணுக்களாகச் சேர்த்து வெளியிலே வந்த பல அணுக்கள் கலக்கப்படும் பொழுது “வேறு ஒரு புது வித்தாக…” மாறுகின்றது.

1.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் இப்படித்தான் அத்தனை சக்திகளும் நமக்குள் விளைந்து
2.இன்று மனிதனாக உருப் பெற்று இருக்கிறோம் என்பதை நாம் அறிய வேண்டும்.

ஒவ்வொரு குணத்திலும்… உணர்விலும்… செயலிலும்… துருவ நட்சத்திரத்தை இணைக்க வேண்டும்

ஒவ்வொரு குணத்திலும்… உணர்விலும்… செயலிலும்… துருவ நட்சத்திரத்தை இணைக்க வேண்டும்

 

வீட்டில் ஏதாவது சலிப்பு சஞ்சலம் வந்து விட்டால் “ஈஸ்வரா…” (நமது உயிரை) என்று சொல்லுங்கள். அந்த உணர்வை மாற்றுங்கள். என் பிள்ளை ஞானியாக வேண்டும். அவன் கல்வியில் உயர்ந்தவனாக வேண்டும், உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

யாராவது எதிரியாகப் பேசுகிறார்கள் என்றால் உடனே “ஈஸ்வரா…” என்று எண்ணி அதைத் தடுத்து விடுங்கள். அவர்கள் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற வேண்டும். அவர்கள் செய்வது யாருக்கும் தொல்லையில்லாத நிலை பெற வேண்டும். அவர்களது பகைமையூட்டும் இந்த நிலைகள் மாற வேண்டும் என்று எண்ணுங்கள். இவ்வாறு நாம் எண்ணும் பொழுது அவர்கள் உணர்வுகள் நமக்குள் வருவதில்லை.

ஏனென்றால்
1.“ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்திகளை நம் உடலுக்குள் செலுத்தும் போது
2.நாம் எடுக்கும் அருள் உணர்வுகள் இரத்தத்தில் கலந்து செல்லும்… இந்த அருள் உணர்வுகள் நம் ஆன்மாவாக மாறுகின்றது.
3.அப்பொழுது நம்மை எவர் திட்டினாரோ இது கொஞ்சம் கொஞ்சமாக அங்கே போய்ச் சேரும்… அவர் திருந்தும் நிலை வரும்.

அவன் எடுத்துக் கொண்ட உணர்வு திருந்த எண்ணினால் வருகின்றது. ஆனால் நம்மைத் திட்டும்போது நம் உடலுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சொல்வது உங்களுக்கு அர்த்தமாகிறதல்லவா.

இதே மாதிரி வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு நிமிடத்திலும்…
1.ஒவ்வொரு குணங்களிலும்
2.ஒவ்வொரு உணர்விலும்
3.ஒவ்வொரு செயல்களிலும்
4.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கலந்து கொண்டே வரவேண்டும்.

பல விதமான குழம்பு வைக்கிறோம்… பல விதமான பலகாரம் செய்கின்றோம். இதே மாதிரி நமக்குள் அந்தத் தீமை செய்யும் உணர்வை மாற்றிச் சுவை மிக்கதாக மாற்றி விடுகிறோம். இப்படி நம் இரத்தத்தில் கலக்கும் பொழுது நம் உடலிலுள்ள அணுக்களுக்கு எல்லாம் சேர்கின்றது.

கொஞ்சம் இதில் பொறுமை தேவை.

ஏனென்றால் மனிதனுடைய உணர்வுகள் ஒருவர் மேல் வெறுப்பாகி விட்டால் ரோட்டில் போகும் பொழுது பார்த்தால் “போகின்றான் பார்…” என்ற இந்த உணர்வை வளர்த்துக் கொள்கின்றோம்.

இதே மாதிரி ஒருவன் யாருக்கோ தவறு செய்கின்றான். அதை நாம் பார்க்கின்றோம். பார்த்தவுடன் அவனின் நினைவு வருகின்றது. அவன் உணர்வை எடுத்துத் தவறு செய்யும் அணுக்களைத்தான் நாம் வளர்க்கின்றோம்.

ஒருவன் சாபம் விடுகின்றான்… அவனைப் பார்த்தவுடன் பதிவு செய்து விடுகின்றோம். அவன் எதைப் பார்த்தாலும் சாபம் விட்டுக் கொண்டே இருப்பான். சாப அலைகள் என்று நமக்குள் எதை எடுத்தாலும் அந்தத் தீமை செய்யும் அணுக்கள் வளர்ச்சி பெறுகின்றது.

1.அந்த மாதிரி உணர்வுகள் வரும் பொழுதெல்லாம் அந்தக் கணமே
2.“ஈஸ்வரா…” என்று துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் புருவ மத்தியில் கொண்டு வரவேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.

நம் வாழ்க்கையில் இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இவ்வாறு செய்து… அந்தத் தீமையான உணர்வுகளை “நம் ஈர்ப்பு வட்டத்திலிருந்து வெளியே தள்ளிப் பழக வேண்டும்…” எமது அருளாசிகள்.

Kasi

Kasi

In these lessons I have been telling you about the good and bad acts of the souls that are without a body. The influence of such souls have a greater effect on the bodies of persons who live in this world, then what their own souls have.

Today people travel with great trouble long distances and go to holy places like Kasi and Rameswarm with the belief that they can wash off the effects of the sins that they have committed in the holy waters.

People go to Kasi to get the grace of the Rishi Kasi Viswanatha who is there.
1.But what is the state exists there now…?
2.Are the thoughts of the people who live in that place and the acts that they do help in making the place holy…?
3.When people go there to wash off their sins how can they become virtuous in that place…?

The water flowing in the river Ganges there runs mixed with the blood of persons who are being murdered there and the effects of robberies that are taking place there every day.

On the belief that the souls which have left the bodies of persons will becomes virtuous if the dead bodies are thrown in the river Ganges at that place, people from several miles away bring the dead bodies of their kith and kin to that place and throw them in the river Ganges.

1.The holy place Kasi and the holy river Ganga have now become the seat of sin.
2.The great soul still remains in that place seeing all the sins that are being committed there and gives his grace as per the thoughts of each individual.

For the sins that people commit what can he do…?

Those who have evil thoughts in them breath again and again the atoms of the sins that they commit and fill their bodies with such atoms and become prepared to do any sinful act and live on the banks of the river.

People ask why God should not give them advice and lead them in the right way…?

I have told you enough about the states of God and spirits.
1.No God can save a person who has become the slave of his evil thoughts.
2.The states of such souls after they leave the bodies can be ascertained only from the way it is disposed of.

A person who lives in that way will not be able to know about his state after the soul leaves the body. It will be suffering leading a life of what we say hell wandering in the spirit world and even if it takes a birth it will be born as a dog or any other animal below that state.

During our life time which lasts for about 60 to 70 years what is the use of living a life of treachery, malignity, impatience and lust…? During this short time man makes his soul yield to his desires.

The time during which this immortal soul lives in the human body is very short.
1.It is only during this short time that the soul lives in the human body
2.that it has got the previlege of rising up to the state in which it can go to the mental regions reaping the fruits of taking birth in this world.

People are ignorant of this fact and do not know that they should mend their lives in such a way that they can swim across the ocean of daily life and reach the goal of human birth.

Our elders have built many temples with the power they have got from Sakthi, and made those places sacred and shown us the way.

1.But those places are now being used by the people of today
2.as places of recreation, fun fare and all sorts of uses for their enjoyment.

The result is that several spirits have made these holy places and rivers their abode and enter into the bodies of like minded persons who come there to do virtuous deeds and get their desires fulfilled.

After completing their work they are not able to come out of those bodies, but continue living in those bodies.

1.People go to such places with the idea of doing some virtuous acts
2.but they get themselves involved in the thoughts that surround the places
3.and they are unable to do what they wanted to do.

Instead we return with a “bundle of sin” on our head.

“அவரவர்கள் வீட்டில்…” குடும்பமாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்

“அவரவர்கள் வீட்டில்…” குடும்பமாக அமர்ந்து தியானம் செய்ய வேண்டும்

 

வீட்டில் உள்ள தரை சுவர் கல் மண் அனைத்திலும் காந்தப்புலன் உண்டு. நாம் பேசுவது அனைத்துமே அதிலே பதிவாகின்றது.

ஒரு வீட்டிலிருப்போர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்… ஒருவரை ஒருவர் கொடூரமான நிலையில் தாக்கிக் கொள்கின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் அந்த வீட்டைக் காலி செய்த பின் அந்த வீட்டிற்குப் புதிதாக குடி புகுந்தார்கள் என்றால்
1.இந்த உணர்வுகளை இழுக்கப்பட்டு இவர்களும் சண்டை போட ஆரம்பிப்பார்கள்.
2.மோசமான உணர்வின் செயல்கள் அந்த வீட்டிலே பதிவாகி இருந்தால்
3.புதிதாக வந்தவர்களையும் அந்த உணர்வுகள் தாக்கி அவர்களையும் சண்டை போட வைக்கும்.
4.அவர்களை அங்கே குடி இருக்க விடாது… ஒற்றுமையில்லாது சண்டையிடச் செய்து வெளியேற்றிவிடும்.

காரணம்… அதில் உள்ள மேக்னெட் இழுத்துக் கவர்ந்து அவ்வாறு இயக்கச் சக்தியாகக் கொண்டு வருகின்றது. அதை மாற்ற வேண்டும் அல்லவா…! என்ன செய்ய வேண்டும்…?

1.உங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய ஒவ்வொரு அணுக்களுக்கும்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஈர்க்கப் பழக்க வேண்டும்.

எனக்கு குருநாதர் வானியல் புவியியல் தாவரயியல் அகண்ட அண்டத்தின் உண்மைகளை உபதேசத்தின் மூலமாக உணர்த்தினார். அதே போல் தான் உங்களுக்கும் உபதேசிக்கின்றேன்.

குருநாதர் கொடுத்ததை ஈர்க்கும் சக்தியாக அந்த உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டச் செய்து… தியானிக்கும் போது உங்கள் உடலில் உள்ள அணுக்கள் அதைப் பெறக்கூடிய தகுதியைக் கொடுக்கின்றோம்.

அந்தத் தகுதியை ஏற்படுத்தி
1.அதன் வழி கொண்டு உயர்ந்த உணர்வுகள் உங்கள் வீட்டில் பரவப்படும் பொழுது
2.உயர்ந்த சக்திகள் தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகிறது.

அத்தகைய அருள் உணர்வுகளை வீட்டிலே ஆழமாகப் பதிவு செய்யப்படும் பொழுது சிந்திக்கும் ஆற்றலும் தன்னை அறிதலும் பகைமையிலிருந்து விடுபடச் செய்யவும் பகைமையற்ற உணர்வைச் சேர்த்துக் கொள்ளவும் இது உதவி செய்யும்.

ஏனென்றால் இது மிக மிகச் சக்தி வாய்ந்த நிலைகள். அந்த அருள் உணர்வை வீட்டில் நாம் பரவச் செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டிலே தியானிக்கும் போது அந்த இடங்களில் பதிவாகிறது.
1.அதே சமயத்தில் அந்த அலைகள் படர்கின்றது பதிவாக்கும் பொழுது அந்த உணர்வு இழுக்கும்… “நல்ல நறுமணத்தை உண்டாக்கும்…”
2.மகரிஷிகள் கொடுத்த வானஇயல் புவியியல் தத்துவங்களை வீட்டிலே பதிவு செய்ய வேண்டும்.

உலக இருளை நீக்க நம் உணர்வின் தன்மையைத் தெளிவாக்கும் அந்த உணர்வின் அறிவை நாம் பெறுவதற்குத் தான் நாம் அனைவரும் அவரவர்கள் வீட்டிலே குடும்ப தியானத்தை அவசியம் அமைக்க வேண்டும். கூட்டமைப்பாக நாம் அந்த மூச்சலைகளைப் பதிவு செய்தல் வேண்டும்.

உதாரணமாக எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் மடிந்த டைனோசார் மண்ணுடன் மண்ணாகிக் கல்லாகி விட்டது.

அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து அலைகளாக இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது. விஞ்ஞானிகள் அதை எலெக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற உணர்வின் அதிர்வுகளைக் கொண்டு இன்ன இடத்திலே இப்படித்தான் வாழ்ந்தது என்று கண்டுபிடிக்கின்றார்கள்.

அதில் உள்ள செல்களை எடுத்து அதே டைனோசாரைப் போன்று ஜீவ அணுக்களை உருவாக்க முடியும் என்று விஞ்ஞானி சொல்கின்றான்.

இதே போன்றுதான் எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்
1.அன்று வாழ்ந்த “அகஸ்தியன் வெளியிட்ட மூச்சலைகள்… உணர்வலைகள்… நம் பூமியிலே உண்டு…”
2.அதன் தொடர் கொண்டு வளர்ச்சி அடைந்த துருவ நட்சத்திரம் உண்டு.
3.அதை வரிசைப்படுத்தி எடுத்து இந்த உணர்வை உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்கப்படும் பொழுது “இந்த நினைவு உங்களைக் காக்கும்…”

இந்த அருளை ஒவ்வொரு நிமிடமும் உங்கள் உடலில் உள்ள ஜீவணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை வளர்க்கச் செய்து வாழ்க்கையில் அறியாது வரும் இருளை நீக்கித் தெளிந்து தெளிவான வாழ்ந்திட உதவும்.

இதைக் கேட்போர் அவரவர்கள் வீட்டிலே இந்த உயர்ந்த சக்திகளைப் பதிவு செய்தல் வேண்டும்.

வீட்டில் உள்ள அனைவரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து மலரைப் போன்ற மணம் பெற்று மகிழ்ந்து வாழும் சக்தி பெற வேண்டும். இந்த வீட்டிற்கு வரும் அனைவரும் அவர்கள் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் தியானிப்போம்… தவமிருப்போம்…!

தியானத்தில் வளர்ச்சி பெற்றோர் அவசியம் தெரிய வேண்டியது

தியானத்தில் வளர்ச்சி பெற்றோர் அவசியம் தெரிய வேண்டியது

 

நாம் குரு காட்டிய வழியில் தியானத்தைக் கடைப்பிடித்து வாழ்கின்றோம். அப்படிச் சீராகக் கடைப்பிடிக்கும் பொழுது பிறருடைய கஷ்டமான உணர்வுகளைப் பிரித்துக் காட்டும்.

1.மகரிஷிகள் உணர்வை எடுத்து அதை நமக்குள் நீக்கிய பின் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்டி விட்டோம் என்றால்
2.வாழ்க்கையில் தீமைகள் வராதபடி தடுத்துக் கொள்ளலாம்.

இதை நீக்காமல் இருந்துவிட்டு இந்த உணர்வின் தன்மை எடுத்துக் கொண்டால் அதுவும் இதுவும் கலந்திருக்கும். இந்த ஆன்மாவில் உள்ளதை நாம் சுவாசித்தவுடன் உயிரில் கலக்கும்.
1.இரவில் புலனடங்கித் தூங்கும் போது இதெல்லாம் காட்சிப் பொருளாகவும் கெட்ட கனவுகளாகவும் வரும்.
2.இதைப் புரிந்து கொண்டோம் என்றால் நன்றாக இருக்கும்

ஒரு வெளிச்சத்தைப் போட்டு அதிலே எந்தக் கலர் சுற்றுகின்றோமோ அது தான் தெரியும். அது போல அறிவின் ஞானத்தை ஊட்டி இந்த உணர்வின் தன்மை வரப்படும் போது அந்த உணர்வு தான் நமக்குத் தெரியும்.

அப்பொழுது பிறருடைய குறைகளை உணர முடியும். “இப்படி நடக்கின்றது… அவருக்கு இடையூறு வருகின்றது” என்று தெரியும்.

பிறர் தவறு செய்திருப்பார்கள். அவருடைய இன்னலான நிலைகள் தெரிய வந்திருக்கும். எனக்குக் காட்சி கிடைத்தது. அவரைப் பார்த்தேன். இந்த மாதிரிக் கஷ்டமாக வந்துவிட்டது.. எனக்கு முதலிலேயே தெரிந்தது என்று சொல்வோம்.

ஏனென்றால அவருடைய தவறின் உணர்வுகளை அறிய முடிகின்றது. இதைத்தான் நாம் நுகர்ந்து சொல்கின்றோம். அப்பொழுது அந்த மாதிரி நேரங்களில் காட்சிகளைக் கொடுத்தவுடனே இதை எப்படிச் செய்ய வேண்டும்…?

1.அருள் வழியில் பற்றுடன் ஆத்ம சுத்தி செய்து விட்டோம் என்றால் ஒருவரது நிலைகளைச் சொன்னாலும்
2.அவர் நஞ்சு கொண்ட வேதனையான உணர்வுகள் நம் ஆன்மாவில் கலக்காது.

ஆனால் இரவில் நம் வாழ்க்கையில் ஆத்ம சுத்தி செய்யாமலோ… அல்லது செய்திருந்தாலும் அந்த ஆத்ம சுத்தியில் குறை இருந்தாலோ என்ன ஆகும்…?

ஒரு பாத்திரத்தில் அழுக்கு சிறிது ஒட்டியிருந்தால் அது சீக்கிரம் போய் விடுகின்றது. அதோடு ஒன்றிய நிலைகள் இருக்கும் போது இரண்டு தரம் தேய்த்துக் கழுவினாலும் போகாது. இதே மாதிரி நம் ஆத்ம சுத்தியிலும் ஏற்படும். இதெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நான் ஆத்ம சுத்தி செய்கிறேன்… “இப்படித் தெரிகிறதே…!” என்று ஏங்கக்கூடாது. இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.நாம் போகும் மார்க்கங்கள் மனிதனின் முழுமை அடையும் நிலைகள்
2.பிறருடைய இருளைப் போக்கும் தகுதி பெற்றவர்கள் நாம்.
3.அதனால் அந்தத் தகுதியை நமக்குள் வளர்த்துக் கொள்வது நல்லது.

மற்றவர்களுடைய தவறைக் கண்ணால் பார்க்கின்றோம். நமக்குள் பதிவு செய்து விடுகின்றோம். நாம் ஆத்ம சுத்தி என்ற வலு சேர்த்திருந்தாலும் அந்த நிமிடம்தான் அந்த வலு.

அதிலே துடைப்பு அதிகம் இருக்காது. தூங்கப்போகும் போது இது வந்துவிடும்.

வெறுப்பின் உணர்வுகள் இங்கு வரப்படும் பொழுது தூக்கம் வராது. என்னதான் ஆத்ம சுத்தி செய்தாலும் தூக்கம் வரவில்லை என்போம். ஏனென்றால் அந்த உணர்வின் இயக்கங்களே நமக்குள் இருக்கும்.

அப்பொழுது நாம் ஆத்ம சுத்தி செய்த பின்பும் அந்தக் கடினமான நிலைகள் விலகவில்லை என்று பொருள். இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்…?

1.நம் நினைவைத் துருவ மகரிஷியோடு இணைக்க வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தோடு சப்தரிஷி மண்டலத்தோடு இணைக்க வேண்டும்.
3.இதைக் கூட்டிக் கொண்டே இருந்தோமென்றால் அந்த உணர்வுகள் நமக்குள் வர வர இது ஒடுங்கும்.

இந்த ஆன்மாவைச் அது சுத்தப்படுத்தும்.

அதே சமயத்தில் நம் உடலில் நாம் கேட்டறிந்த தீமையான அணுக்களுக்குச் சாப்பாடு போய்ச் சேராது. நம் வாழ்க்கையில் தொடர்ந்து அதிலே இருக்க வேண்டும்.
1.நம் வாழ்க்கையையே தியானமாக்க வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் எடுத்து இந்த உடலென்ற சட்டியில் சமைக்க வேண்டும்.

நாம் எந்தெந்தக் காய்களை குழம்பில் போட்டுச் சமைக்கின்றோமோ அந்த வாசனைதான் வரும். நாம் உயர்ந்த சரக்குகளைப் போட்டாலும் காரமோ உப்பின் தன்மையோ கூடிவிட்டால் அந்தக் குழம்பின் சுவை கெட்டுவிடும்.

இந்தக் குழம்பைப் போன்றுதான் நம் வாழ்க்கையின் நிலைகளில் எதைச் செயல்படுத்துகின்றோமோ அந்த மணம் நமக்குள் சுவை கொண்ட சொல்லாகவும் செயலாகவும் வரும். அந்தச் சுவை கொண்ட உணர்ச்சிகளைத் தூண்டும்.

குழம்பில் சிறிது வித்தியாசமாகிப் போய்விட்டது என்றால் உள்ளுக்குள் இழுக்காது. சுவை கெட்டுவிடும். ஆனால் உணவு எவ்வளவு சத்தான நிலைகளில் இருந்தாலும் உள்ளே ஏற்றுக் கொள்ளாது மறுக்கின்றது.

சாப்பாட்டில் அதிலே போட்டிருக்கின்ற மணம் தான் முலாம். மணத்தின் உணர்ச்சிகள் நமக்குள் தூண்டப்படும் பொழுது உள்ளுக்குள் இழுக்காது. வெளியில் தள்ளி விடுகின்றது. ஆனால் பசி எடுக்கும். இந்த மணத்தை நுகரும் உணர்ச்சிகள் நம்மை இயக்கினால் தான் இது உள்ளே போகும்.

ஆகையால்
1.நாம் நமது வாழ்க்கையில் குருநாதர் காட்டிய அருள் வழியில்
2.“மகரிஷிகளின் அருள் மணங்களை” ஒவ்வொரு நொடிப் பொழுதும் நுகர்ந்து பழக வேண்டும்.

சும்மா இருக்கும் பொழுது ஒருவரை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம் என்றால் அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு திடீரென்று நினைவு ஓட்டம் ஓடும்,

ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன் அங்கு இருக்கும் பொருள் தெரிய வரும். அதைப் போல ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது அந்த உண்மைகளை நாம் உணர முடியும். தொழிலில் இருப்போம். இந்த உணர்வுகள் அங்கே பிரித்துக் காட்டும்.

ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்டவுடன்… உதாரணமாக எழுத்து வடிவிலே ஆங்கிலமோ தமிழோ கொடுக்கிறார்கள். அதனதன் அழுத்தத்தைக் கொடுத்தவுடன் மற்றதைப் பிரித்துக் காட்டுகின்றது.

இதைப் போல நமது உயிர் சூரியனின் காந்த சக்தி கவர்ந்த இந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது அதை எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
1.அதனுடைய செறிவினுடைய அளவுகோல் எதுவோ அதற்குத் தகுந்த மாதிரி நம் உடலை இயக்குகின்றது.
2.அதன் அளவுகோல் எதுவோ அதற்குத்தகுந்த மாதிரி நமது உயிர் அந்தக் காந்தத்தை இழுக்கின்றது.
3.அதில் வந்த உணர்வின் அழுத்தம் எவ்வளவு இருக்கின்றதோ அதற்குத் தகுந்த மாதிரி எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது.
4.மாற்றிய உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது அதற்குத் தகுந்த அதிர்வுகளைக் கொடுத்து உடலை இயக்குகின்றது.
5.அதற்குத் தகுந்த சிந்தனைகளைக் கொடுத்து அதற்குண்டான செயல்களையும் செய்கின்றது.

இதைப் போலத்தான் நமக்குள் நூற்றுக்கணக்கான பிரிவுகள் உண்டு.

அது வெளிப்படும் பொழுது எந்தெந்த அளவுகோல் இருக்கின்றதோ அதற்குத் தக்கவாறுதான் புலனடங்கித் தூங்கும் பொழுது அதிலே இந்த வாழ்க்கையில் நாம் எந்த உணர்வை அதிகமாகச் சேர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்களின் உணர்ச்சிகள் அதிகமாகத் தூண்டும்… அது ஆன்மாவாக மாறும்.

இது இரண்டும் கலந்து உயிரிலே படும் பொழுதுதான் எலக்ட்ரானிக்காக மாற்றிப் பல நிலைகளை நாம் தெரிந்து கொள்கின்றோம்.
1.தியான வழிகளில் இது ரொம்பத் தெளிவாகத் தெரியும்.
2.தூக்கத்தில் இருந்தாலும் சும்மா படுத்திருந்தாலும் நாம் அமைதியாக இருக்கும் பொழுது
3.இந்த ஆன்மாவில் உள்ளபடி நம் மனநிலையில் மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கும்.
4.அந்த மாதிரி நேரங்களில் தீமையான அணுக்களுக்கு ஆகாரம் கிடைக்காதபடி ஆத்ம சுத்தி செய்து அகற்ற வேண்டும்.

இதுதான் ஆத்ம சுத்தியில் உள்ள மூலக்கூறு.

Nadi

Nadi

Our elders who have shown us the way and those who lived with us some time ago and now have risen up to the state of Sabdha Rishies, were worshipping nature as God.

Even today they are guiding us in some way. You may ask in which way…?

In several places there are people who tell about our past and future lives with the help of what they call ‘Nadi’ an astrological treatise written by Rishis like Agastiya, Bogar, Brigu etc. and identified by their names.

These were written seyeral thousands of years ago and how do they concur with the present state and even the names of the persons given in the Nadies agree with their present names…?

1.These Nadies cannot be read and understood by all persons.
2.The person who reads them meditates with reference on the person who wrote it
3.and the person who wrote it comes and reads those things and express through the reader’s voice.

The state of these Nadies is quite different from the education of the people of today who read it so that it becomes impossible for the people of today to read and understand them.

The people of today can understand a few points only. It is those who wrote them, that come at that time and tell the details.

There are some other Nadies called by the names of the Goddess Kamatchi and Meenatchi in which cases the Goddesses themselves come and express through the persons who read them.

If the people have belief in what is read then they get the grace of the Goddesses. The world works on belief. After hearing what the Nadi tells if the person goes on brooding over what is said in the Nadi his state will change.

The wealth that we get from God is the state of bakthi that we get into. As we are living mixed with several souls from the spirit world which suffer a great deal in executing their desires with much difficulty in this world, the only way for us to escape from the worldly affairs is to cultivate our bakthi and do similar acts.

In this vast world if we give room for the slightest fatigue, anger or malignity it will not be possible for us to escape from the influence of these spirits.

1.If we realise the power of God that exists in every one of us and meditate on Eswara
2.in whatever state we may be, we will escape from the influence of these spirits that are roaming round us in the astral world.

This world is struggling in danger by the plans of the spirits in the astral world.

பிராணாயாமத்தில் உள்ள தத்துவம்

பிராணாயாமத்தில் உள்ள தத்துவம்

 

நான் சொல்லக்கூடிய உணர்வுகள் அனைத்தும் உங்கள் உயிரிலே மோதப்பட்டு உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நான் பேசிய உணர்வை அந்த இயக்க அணு உங்கள் உயிரிலே மோதிய பின் உமிழ் நீராக மாறுகின்றது.

அது தான் ஓ…ம் இந்த உணர்வுகள் அனைத்தும் இயக்கப்பட்டு ம்… என்று உமிழ் நீராக மாறுகின்றது. அந்த உமிழ் நீர் சிறுகுடலுக்கு வருகின்றது. ஒரு உயர்ந்த உணர்வுகளைச் சொல்லும் பொழுது சிறுகுடலில் உள்ள அணுக்கள் உற்சாகமடைகின்றது.

சாப்பிட்ட ஆகாரத்தை அப்பொழுது துரிதமாக நல்ல நிலைகளில் ஜீரணிக்கும் சக்தி கிடைக்கின்றது. அடுத்து பெருங்குடலுக்கு வரும் பொழுது பாம்பைப் போன்று உள்ளுக்குள் இழுத்து இழுத்து நசுக்கி அது ஜீரணிக்கும்… அதனின் இயக்கம்.

1.ஆகாரத்தை எடுத்து இவ்வாறு நசுக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சத்துக்களை (ஆவி) ஃபில்டர் பண்ணும்.
2.ஒரு துணியை வைத்து பிழிந்தால் எப்படியோ… வேக வைத்தால் எப்படி ஆவி வருகின்றதோ
3.பெருங்குடலுக்கு வந்தபின் ஆவியாகிப் பிரித்துச் சத்தை எடுத்துக் கொள்கின்றது.
4.குடலுடன் சேர்த்த நரம்பு மண்டலங்கள் அதில் புனல் போன்று உண்டு… அது அந்த ஆவிகளை வடிகட்டிப் பிரிக்கின்றது.

கரும்புச்சாற்றை எடுத்த பின் பல கெமிக்கல்களைப் போட்டு எத்தனையோ வகைகளில் செயல் முறைப்படுத்தி அதைச் சர்க்கரையாகப் பிரித்து எடுக்கின்றார்கள் அல்லவா…!

இதைப் போன்று புனல் போன்று உள்ள கணையத்தில் மொத்தமாக வருவதை மூன்று விதமாகப் பிரித்து ரத்தத்திற்கு கொழுப்பிற்கு உடல் சத்திற்கு என்று எடுக்கின்றது.

பிரித்ததை மற்ற பாகங்களுக்கு அனுப்பித் தசைகளுக்குள் இருக்கும் அணுக்களுக்குச் சாப்பாடு ஆகிறது
1.ஆவியாக மாறுகின்றது… அதை எடுக்கின்றது… சாப்பிடுகின்றது
2.அது மலமாகிறது… அந்த உறுப்புகள் ஆகின்றது.

ஞானிகள் காட்டிய நிலையில்… நம் உயிரின் இயக்கம் எப்படி இருக்கின்றது…? நுகர்ந்த உணர்வுகள் உடலாக எப்படி மாறுகின்றது…? என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.

அடுத்து கல்லீரலுக்கு வரப்படும் பொழுது அதுவும் வடிகட்டுகிறது.

தண்ணீரில் அதிகமான அழுக்குகள் இருந்தால் விஞ்ஞான முறைப்படி பெரிய கல் சிறிய கற்கள் மணலைப் போட்டு வடிகட்டி அதை நல்ல தண்ணீராக மாற்றுகின்றார்கள்.

இதைப் போன்று தான் நாம் உணவாக உட்கொண்ட ஆகாரத்தில் உள்ள கசடுகளை எல்லாம் கல்லீரல் மாற்றி வடிகட்டி ரத்தத்தைச் சுத்தப்படுத்துகின்றது
1.தசைகளில் இருக்கும் திசுக்களுக்கு உணவாகப் போய்ச் சேருகின்றது.
2.அந்தத் திசுக்கள் தேனீக்கள் கூடு கட்டுவது போன்று உறுப்புகளாக உருவாகின்றது.

மண்ணீரலுக்கு வந்த பின் ரத்தங்கள் வடிகட்டப்படுகிறது. அடுத்து நுரையீரல் பாகம் வருகின்றது. அது பம்ப் பண்ணி எடுக்கின்றது.

இதில் எந்தெந்த உணர்வுகள் கலக்கின்றதோ மூக்கு வழி காற்றிலிருந்து எடுத்து அதைச் சேர்க்கின்றது. நல்லதாக இருந்தால் அதே உணர்வாக ஆனபின் அதன் வழி இழுக்கின்றது.

இது இரண்டும் சேர்த்துப் பிராணவாயுவாக நாம் எதை எடுத்தோமோ இந்த உணர்வின் தன்மை இயக்கத்திற்கு ஆகின்றது. ஆனால் வேதனை என்ற உணர்வானால் வேதனையின் மூச்சாகி நாமும் சோர்வடைகின்றோம்.

ஓம் உயிரிலே பட்டுப் பிரணவமானாலும் அதற்குத்தக்க இது எப்படி இயக்குகின்றது…? என்பதை நாம் தெரிந்து கொள்வது நல்லது.

1.வேதனை வெறுப்பு போன்ற உணர்வுகள் நுரையீரலுக்கு வரும் பொழுது ஆவியாகி நீராக மாறி விடுகின்றது… அங்கே நீராகும் பொழுது சளி கட்டுகின்றது.
2.அடிக்கடி வேதனைகளை எடுத்து அது அங்கே தேங்கி விட்டால் விஷக்கிருமிகள் உண்டாகின்றது…
3.அப்புறம் அரிக்க ஆரம்பிக்கின்றது… சளி உண்டாகிக் கொண்டே இருக்கும்.
4.சளி கட்டிய பின் சுவாசம் சீராக இல்லாதபடி அடைப்பாகித் தடையாகிறது.
5.நாளடைவில் விஷக்கிருமிகள் தேங்கி விட்டால் டிபி நோயாகவும் மாறுகின்றது.

வேதனையான உணர்வுகள் எல்லை கடந்து வெளிப்படுத்துவோரைப் பார்க்கிறோம். கேன்சர் நோயினால் அவதிப்படுவரைப் பார்க்கின்றோம். அது போன்ற நிலைகளை நுகர்ந்து விட்டால் இங்கே சேர்ந்து அதுவே கிருமி ஏற்படவும் காரணம் ஆகிறது.

இந்த வாழ்க்கையில் இது போன்ற நிலைகளைக் காணாமல் இருக்க முடியாது. விஷத்தின் வலிமையாகும் பொழுது அந்த விஷத்தை ஒன்று சேர்த்து உணவாக உட்கொள்ளும் அணுவின் தன்மை ஆகின்றது.

கேன்சர் என்று சொல்லும் பொழுது அது விஷத்தை உட்கொள்கின்றது பாம்பு எப்படி விஷத்தைப் பாய்ச்சி அதை உணவாக உட்கொள்கின்றதோ அதைப் போல் விஷத் தன்மைகள் ஆனால் ஒரு நோயாளியின் உடலில் அந்த விஷமானால் அங்கே அத்தகைய அணுவாகிறது.

அந்த மூச்சின் தன்மை படர்ந்து அத்தகைய இயக்க அணுக்களாக உருவாகி விட்டால் நம் உடலுக்குள் வந்து இத்தகைய நிலையைச் செய்கின்றது. ஆனால் தவறு செய்யவில்லை. இயற்கையின் மாற்றங்கள்.

கல்லீரல் மண்ணீரலுக்கு வந்து அடுத்து நுரையீரலுக்கு வருகின்றது. ரத்தத்தை மற்ற பாகங்களுக்கு எல்லாம் சுத்தப்படுத்தி அனுப்புகின்றது. ரத்தத்தில் உள்ள கழிவை நீராக மாற்றுகின்றது.

உப்புச் சத்து சர்க்கரைச் சத்து வாத நீர் என்ற விஷத்தன்மைகளை கிட்னி சுத்திகரித்து வடிகட்டி நீராக மாற்றி வெளியேற்றுகின்றது. வடிகட்டப்பட்ட சுத்த ரத்தம் இருதயத்திற்கு வருகின்றது.

இருதயத்திலிருந்து ரத்தம் உடல் முழுவதும் அனுப்பப்பட்டு உற்சாகப்படுத்தி நல்ல அணுக்களாக மாற்றுகின்றது. ஆனால் வேதனையான உணர்வுகள் அதிகரித்து விட்டால் அதைச் சிறுநீரகம் சரியாக இயக்கவில்லை என்றால் உப்புச் சத்து வந்துவிடும்… சர்க்கரைச் சத்தும் வந்துவிடும்.

1.ரத்தத்தில் அந்தக் கசடுகள் கலந்து இருதயத்திற்கு வரும் பொழுது அது பலவீனமாகின்றது.
2.சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு வேதனை என்று வடிகட்ட முடியாதபடி வரும் பொழுது இருதயத்திலே அடைப்பாகின்றது…
3.உப்புச் சத்தினால் ரத்தம் உறைகின்றது… நெஞ்சு வலி வருகிறது.

வேதனையும் உற்சாகமும் வரும் போது நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் அந்த இரண்டுக்கும் எர்த் ஆகும் போது ஒரு விதமான மயக்கம் வருகின்றது.

மயக்கமாகி நீரானால் நுரையீரலில் உப்புசமாகி எப்படி வேர்க்கின்றதோ இதை போன்று நம் மூளை பாகத்தில் வெப்பமாகி அது ஆவியாக மாறுகின்றது. தலை சிரசிலே இரண்டு மூன்று தோல் பகுதிகள் உண்டு மூளையைப் பாதுகாக்க.
1.அதைக் கடந்து இரண்டாவது பாகத்தில் வந்த பின் நீராக வடிகின்றது.
2.ஒரு சிலருக்குச் சிலந்தி பூச்சியாக அங்கே எடுப்பார்கள்… தலைவலி இருக்கும்.
3.அந்த நிலை ஆகிவிட்டால் நச்சு நச்சு என்று தும்மிக் கொண்டிருப்பார்கள்.
4.சில நேரங்களில் எதிர்பாராதபடி மூச்சுத் திணறலாகக் கூட வந்து விடும்.

ஆனால் தவறு செய்யவில்லை. வேடிக்கையாகப் பார்த்த நிலைகள் இப்படி எல்லாம் உறுப்புகளில் மாற்றம் ஆகின்றது. இதையெல்லாம் இயக்குவது யார்…? நமது உயிர். நுகர்ந்ததை இயக்குவதும் உடல் ஆக்குவதும் எல்லாவற்றையும் செயலாக்குவது உயிர்தான். அவன் இன்றி அணுவும் அசையாது.

அதனால் தீராத தலைவலியும் வந்து விடுகின்றது முதல் பாகத்திலே அழுத்தமாகி இவ்வாறு தேக்கமாகி விட்டால் கல்லீரலிலும் வேர்த்து நீராக மாறி குடம் குடமாக நீரை வெளியேற்றுவார்கள்.

வாயு மண்டலங்கள் அதிகமாகி அதிகமான விஷத்தன்மையாகி வெப்பமானால் மூட்டுகளில் முழங்காலில் நீர் கோர்க்க ஆரம்பிக்கும். அங்கே வலி வரும். இது எல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படக்கூடிய உணர்வுகள்.

இப்படி உடலில் மாறிக் கொண்டே வருகின்றது. ஆனால் யாரும் தவறு செய்யவில்லை. தவறு செய்பவர்களைப் பார்க்காமல் வேதனைப்படுவோரைப் பார்க்காமல் நாம் இருக்க முடியாது.

ஆனாலும்
1.இதனுடைய இயக்க நிலைகளை நம்மைப் பற்றி நாம் தெரிந்து கொண்டால்
2.நாம் சுவாசிக்கும் உணர்வுகளால் என்னென்ன விளைவுகள் வருகிறது…?
3.அதிலிருந்து தடுக்கும் உபாயத்தை நீங்கள் பெற வேண்டும்
4.அதைப் பயன்படுத்தும் பக்குவ நிலை பெற வேண்டும் என்பதற்குத் தான் இதையெல்லாம் உபதேசமாகக் கொடுக்கின்றோம்.