பல நிகழ்ச்சிகளை எனக்குள்ளேயே நடத்திக் காட்டித் தான் எம்மைத் தெளிவாக்கினார் குருநாதர்

பல நிகழ்ச்சிகளை எனக்குள்ளேயே நடத்திக் காட்டித் தான் எம்மைத் தெளிவாக்கினார் குருநாதர்

 

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக உருப்பெற்றுள்ளோம்.

மனிதரான பின் வேதனைப்படுபவரை நுகர்ந்தால் அந்த வேதனை உணர்வு நமக்குள் வந்து விடுகின்றது. அதை வளர்த்துக் கொண்டால் வேதனைப்பட்ட மனித உயிரான்மா நமக்குள் வந்து விடுகின்றது. அந்த உணர்வையே மீண்டும் வளர்க்கின்றது… இந்த உடலை வீழ்த்துகின்றது.

வேதனை உணர்வுகள் அணுக்களாக ஆன பின் அந்த மனிதன் உடலை விட்டுச் சென்ற பின் விஷத்தின் தன்மை கொண்ட உடலாக அவனை உருமாற்றி விடுகின்றது அந்த உயிர்.

இதிலிருந்தெல்லாம் எவ்வாறு நீ மீளப் போகின்றாய் என்று பல வினாக்களை குருநாதர் எழுப்பி எம்மைத் தெளிவாக்கினார்.

அதன் பின் இதை மாற்றுவதற்கு நீ என்ன செய்கின்றாய்…? என்று காலையில் 4:00 மணிக்கு விண்ணை நோக்கி ஏகும்படி செய்கின்றார். விண்ணிலே துருவ நட்சத்திரம் அந்த நான்கு மணி அளவில் தான் பூமியின் நிலையில் இருந்து துருவப் பகுதியில் நம்மை அறியும் படிச் செய்கின்றது.

காரணம்… துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் சக்திகளைச் சூரியனின் ஒளிக் கதிர்கள் கவர்ந்து அலைகளாக மாற்றப்படும் பொழுது ஒளி அலைகள் அங்கே பிறக்கின்றது.

அதனின் உணர்வுகள் பரவி வரும் பொழுது நம் பூமியின் சுழற்சி வட்டத்தில் துருவப் பகுதி வழி நம் பூமி எவ்வாறு அதை இழுக்கிறது…? என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார்.

இதைப் போன்ற நிகழ்ச்சிகளை நேரடியாகக் காண்பித்து
1.அந்தந்தக் காலங்களில் விஷத்தை எவ்வாறு முறியடிப்பது…? என்ற நிலைகளையும்
2.அதை உற்று நோக்கிக் காலையில் நான்கில் இருந்து ஆறுக்குள் இதை வழக்கமாக வைத்துக்
3.காலையிலிருந்து இரவு வரையிலும் பல பல தீமைகளைச் சந்திக்கச் செய்தும் நுகரச் செய்தும் உடலுக்குள் உபாதைகளை உருவாக்குவதும்
4.காலையில் 4:00 மணிக்கு எல்லாம் குருவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நுகரப்படும் பொழுது
5/இந்த விஷத்தன்மைகள் ஒடுங்குவதையும் காட்டுகின்றார்.
6.இதை அடுத்து அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலங்கள் எவ்வாறு சுழல்கின்றது…?
7.அதனின்று உமிழ்த்தும் உணர்வுகள் எவ்வாறு பரவுகின்றது…?
8.அதனை நீ எவ்வாறு நுகர வேண்டும்…? என்பதனைத் தெளிவாக்குகின்றார்.

அவ்வாறு தெளிவாக்கிய பின் நுகர்ந்த உணர்வுகள் நாம் இந்த வாழ்க்கையில் இதை அறிவதற்காகச் சில சில நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுகின்றார்.

அந்த மண்டலங்களின் சக்திகளை நுகர்ந்தறிந்து இந்த உடலுக்குள் அதைச் சேர்க்கும் போது விஷத் தன்மைகள் எவ்வாறு ஒடுங்குகின்றது…? இதிலிருந்து நீ எவ்வாறு மீள வேண்டும்…? என்பதனைத் தெளிவாக்குகின்றார்.

இப்படித்தான் அனுபவரீதியில் மனிதன் தீமைகளிலிருந்து விஷத்தை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இன்று சப்தரிஷி மண்டலமாக நிலைத்து வாழ்கின்றான்…? வளர்ந்து கொண்டே உள்ளான்…? என்றும் 16 என்ற நிலைகளை அடைந்து கொண்டுள்ளான்…?
1.அதை நீ பெறுகின்றாயா…? அல்லது
2.இன்றைய நிலையில் கொண்டு பல மூலிகைகளைக் கொண்டு பிறருடைய துன்பங்களைப் போக்குகின்றேன் என்று வைத்தியன் என்ற நிலைகளை அடைகின்றாயா…? அல்லது
3.பல தாவர இனங்களை பச்சிலைகளைம்க் கையில் எடுத்துக் கொண்டு தேளிடம் அதைக் காட்டப்படும் பொழுது அது ஒடுங்குவதும் விஷப்பூச்சிகளிடம் அதைக் காட்டப்படும் பொழுது பம்முவதும் இது போன்ற கடுமையான மிருகங்களிடம் அதைக் காட்டிய பின் அவை எல்லாம் அஞ்சி ஓடுவதும் அதிலே பெருமை சாற்றி உன் வலிமையைக் காட்டி உன்னுடைய திறமையைக் காட்டிப் பொருளையும் புகழையும் தேடிச் செல்கின்றாயா…? அல்லது
4.அந்த புகழின் தன்மையால் நீ எடுத்துக் கொண்ட உணர்வுகள் மீண்டும் விஷத்தின் தன்மை அடைந்து மடிகின்றாயா…? அல்லது
5.மனித உணர்வுகளை மாற்றி உயிருடன் ஒன்றி ஒளிச் சரீரம் பெறுகின்றாயா…? என்று
6.பல பல வினாக்களை எழுப்பித்தான் எம்மைத் தெளிவாக்கினார் குருநாதர்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.