
விண்ணுலக நஞ்சினை உணவாக எடுத்து அதை ஒளியாக மாற்றி வாழ்பவர்களே மகரிஷிகள்
விண்ணிலே பேரண்டத்தில் நம் பிரபஞ்சம் சுழன்று வரப்படும் பொழுது அந்தச் சுழற்சியின் நிலைகள் முன்னிலையில் இருப்பது நட்சத்திரங்கள் தான். நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கச் சக்தி அது மின் அணுவின் தன்மை அடைந்தது… அது மிகவும் நஞ்சு கொண்டது.
அதிலிருந்து வீசும் இந்த உணர்வின் இயக்கங்கள்
1.பேரண்டத்திலிருந்து வரும் அந்தச் சக்தியைத் தன் கதிரியக்கச் சக்தி கொண்டு பாய்ச்சி அது ஒவ்வொன்றும்
2.நம் பிரபஞ்சமான இந்தச் சூரியனுக்குப் பாதுகாப்புக் கவசமாக பால்வெளி மண்டலங்களாக மாற்றுகின்றது.
3.தனக்குள் எடுத்துக் கொள்ளும் உணர்வின் தன்மையைத் தன் நஞ்சின் தன்மையைப் பாய்ச்சி இந்தப் பிரபஞ்சத்திற்கு ஏற்றதாக மாற்றுகின்றது.
அது மாற்றிய நிலைகள் கொண்டு சிறுகச் சிறுகத் தேய்ந்து பிரபஞ்சத்தின் ஈர்ப்பான நிலைகள் வரும் பொழுது அது படர்ந்து சிறுகச் சிறுகத் தேய்ந்து அணுத் தூசுகளாகப் படர்ந்து வருவதை மற்ற கோள்கள் நுகர்ந்து அதனைத் தனக்குள் பாறைகளாக மாற்றுகின்றது.
அதிலிருந்து கலவையான உணர்வுகள் சூரியனின் காந்த சக்தி இணைந்து அதிலிருந்து வெளிப்படும் உமிழ்த்தும் உணர்வின் தன்மையை சூரியன் தனக்குள் கவர்ந்து அதிலே இணைந்த நஞ்சினைப் பிரித்து ஒளியாக மாற்றுகின்றது.
நட்சத்திரங்கள் உமிழ்த்துவது எதிலும் சிக்காது புவியின் ஈர்ப்புக்குள் வந்தால் பூமிக்குள் அது பதிந்து விடுகிறது. அங்கே அந்த உணர்வின் ஆற்றல்மிக்க நிலையை தன் இனமான நிலைகள் கரு கூட்டச் செய்கிறது.
விண்ணிலிருந்து வரும் மற்ற தாவர இனங்களுக்கு வரும் நஞ்சின் தன்மையை எந்த நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்ததோ அதனின்று வெளிப்படும் சத்தை இதனின் வலுக் கொண்டு அது கவர்ந்து தனக்குள் அமைந்து கருக்களாக உருவாக்கி அந்த நட்சத்திரத்தின் உணர்வை இது சுவாசித்து அது நஞ்சின் தன்மை அடைந்து வைரமாக அதனின் அளவுகோல் வந்தபின் வெடித்துத் தனித்த வைரமாக விளைகிறது.
ஒரு நஞ்சு கொண்ட பாம்பினமோ மற்ற உயிரினங்களுக்குள் அதன் நஞ்சைப் பாய்ச்சி அதைத் தனக்கு உணவாக எடுத்தாலும்
1.நஞ்சின் விளைவைத் தனக்குள் திரும்பத் திரும்ப அது வடிகட்டித் தன் ஆகாரத்துடன் கலந்து
2.அதிலே கலந்த நஞ்சின் தன்மை இதற்குள் விளைந்து அதற்குள் உறைந்து நாகரத்தினமாக அது வளர்கின்றது.
இதைப் போன்று தான் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப யானைகளுக்கும் “ஒரு முத்து வளரும்…” எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை சிறுகச் சிறுக அது சிந்தித்த உணர்வின் தன்மை யானையின் சிரசிலே இது விளையும்.
மனிதனுக்கும் இதைப் போல விளையும். வைரம் மற்ற நிலைகளைப் பிரித்து விட்டுத் தன் உணர்வின் சத்தை ஒளியாக எடுத்து ஒளியின் சுடராக வைரம் விளைகின்றது.
இதைப் போன்று
1.மனிதனாக வாழ்ந்த காலத்தில் தீமையினை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றி உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக உருப்பெற்றாலும்
2.விண்ணிலே பிற மண்டலத்திலிருந்து வருவதை நட்சத்திரங்கள் எப்படித் தன் கதிரியக்கச் சக்திகளைப் பாய்ச்சிச் செயலற்றதாக ஆக்கி
3.அவைகளை இந்தப் பிரபஞ்சத்திற்கு உணவாக மாற்றுகின்றதோ இதைப்போல
4.படரப்பட்ட இந்த நிலையை அருள் ஞானிகள் தன் உணர்வின் அலையால் அவர்கள் அதை நுகர்ந்து தனக்குள் தெளிந்த நிலையாக
5.இதைக் காட்டிலும் நஞ்சான நிலைகள் எதுவும் இல்லை என்ற நிலையில் அந்த நஞ்சின் தன்மையைத் தனக்குள் உணவாக எடுத்து
6.உணர்வின் சத்தை ஒளியாக மாற்றி என்றும் எதுவும் தன்னை அசைத்திடாத நிலைகள் கொண்டு
7.என்றும் 16 என்ற நிலையில் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள் மகரிஷிகள்.
எந்த நஞ்சும் தன்னைத் தாக்காது உணர்வின் தன்மை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அகஸ்தியன்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.