விஞ்ஞான அறிவுக்கும் மெய் ஞான அறிவுக்குண்டான வித்தியாசம்

விஞ்ஞான அறிவுக்கும் மெய் ஞான அறிவுக்குண்டான வித்தியாசம்

 

நம் பூமியில் அன்று வாழ்ந்த அகஸ்தியன் தான் வானுலக ஆற்றலை முதன் முதலிலே கண்டுணர்ந்தான். அவன் கண்டுணர்ந்த அவனில் விளைந்த உணர்வுகள் தான் இன்றும் நமது பூமியில் படர்ந்து கொண்டுள்ளது.
1.விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் அறிந்து…
2.தீமைகளை அகற்றி உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றித் துருவம் சென்று
3.துருவ நட்சத்திரமாக அவன் இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான்.

விஞ்ஞான அறிவால் இங்கிருந்து ராக்கெட்டுகளை ஏவிக் கோள்களின் நிலைகளைத் தரையில் இருக்கக்கூடிய இயந்திரங்களின் துணை கொண்டு கவர்ந்து அறிகின்றான்… படமாகவும் எடுக்கின்றான்.

இதே போலத்தான் அகஸ்தியன் தனக்குள் இருக்கும் ஆற்றலின் தன்மை கொண்டு தன் எண்ணங்களை விண்ணிலே பாய்ச்சி அதை எல்லாம் அறிகின்றான்.

ஆனால் விஞ்ஞானக் கருவிகளில் அந்த ஆற்றல்மிக்க சக்தியை “ஒளியாண்டு” என்று சொல்வார்கள். ஒளி எவ்வளவு தூரம் பாய்கிறதோ…? ஒரு லைட்டைப் போட்டோம் என்றால் அதனின் வெளிச்சம் எவ்வளவு தூரம் சீறிப் பாய்கின்றது…? என்ற நிலையைக் கணக்கிட்டு ஒளியாண்டு என்று தூரத்தைக் காட்டுகிறார்கள்.

உதாரணமாக எரி நட்சத்திரம் ஒன்று வியாழன் கோளில் விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். விஞ்ஞானக் கருவியால் இங்கிருந்து அதைப் படம் எடுக்கின்றார்கள்.

1.அவ்வாறு எடுத்த படம் இங்கு வந்து சேர்வதற்கே அதனுடைய வேகத்துடிப்பு அதிகமாகி குறைந்தபட்சம் நான்கு நாளாவது ஆகும்.
2.அந்த நான்கு நாள்களுக்குள் படம் எடுத்த அந்த உணர்வுகள் அலைகளாக இங்கே வருகிறது (நேரடிப் படமாக வருவதில்லை).

இயந்திரத்தின் துணை கொண்டு அந்தச் சிறிதளவு புள்ளியைப் பெரிதளவாகப் பெருக்குகின்றான். பின் எரிகல் விழுந்த இடத்தையும் அவன் அறிகின்றான்.

ஆனால் அங்கிருந்து படம் எடுத்து வந்தாலும் இந்த அலைகள் வரும் பொழுது
1.அதன் பாதையில் எதிர் நிலையான அலைகள் பட்டால் இது பிரிக்கும்.
2.படம் எடுத்த ஒளியின் தன்மை அங்கிருந்து அலைகளாக வரும் பொழுது இங்கு மாற்றங்களே ஏற்படும்.

இருந்தாலும் ஒரு எல்லையைக் குறித்து இதனின் வேகத் துடிப்பு வரும் பொழுது சுழற்சியின் வேகத்தில் அதைக் கண்டுணரலாம். மலை போன்ற உள்ள பெரும் பாறைகள் அது சுழன்று வரப்படும் பொழுது இது வியாழன் கோளிலே வந்து மோதும் வேகமும்… வியாழன் சுழற்சியின் வேகம் அதிகரிக்கப்படும் பொழுது அதீத வெப்பமாகும்.

வியாழனில் மேல் பரப்பு பனிப்பாறைகளால் ஆனது தான். இருந்தாலும் அதன் சுழற்சியின் வேகம் கூடும் பொழுது எரிகல் அதன் ஈர்ப்புக்குள் வந்தவுடனே சுக்கு நூறாகத் தெறித்துப் பஸ்பமாக மாறும்.

உதாரணமாக…
1.அத்தகைய எரிகல் நமது பூமியின் ஈர்ப்புக்குள் வரும்போது பெரும் பாறாங்கல்லாக இருப்பது சிறு கல்லாகத் தேய்ந்து இங்கே விழுகின்றது.
2.அந்தக் கல் உராய்வின் தன்மையில் எரியவில்லை என்றால் நாம் மனிதர்கள் இங்கே வாழவே முடியாது.

அதனுடைய சுழற்சியின் வேகத்தில் பூமிக்குள் வரும் போது காற்று மண்டலத்தில் உராய்ந்து தான் அது வருகின்றது. பன்மடங்கு சுழலும் நிலைகளில் அது வருகின்றது.

அதே போல் நமது பிரபஞ்சத்தில் ஏராளமான பாறைகள் சுழன்று கொண்டுதான் உள்ளது. பாறை என்று சொல்வதற்கு.. அணுவின் தன்மை காந்தப்புலனால் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து… (ஒரு மேக்னட்) எப்படி ஒரு இரும்புத் துண்டை உராய்ந்தால் அதனின் உணர்வின் தன்மை கொண்டு நீர் சத்தே இல்லாது அது உறைந்து ஒரு பாறை போல ஒரு பொருளாக அது உருவம் பெறுகின்றது.

இதைப் போலத்தான் நமது பிரபஞ்சத்தில் சுழற்சி நிலை இல்லாது, நீர் நிலை இல்லாது தனது உணர்வின் தன்மை மேக்னட்டால் நுகர்ந்து தன் உணர்வின் தன்மை எதுவோ எக்கோளிலிருந்து உமிழ்த்தியதோ அக்கோளின் தன்மையைச் சேர்க்கின்றது.

இதைப் போல உருவாகி வலுவற்ற நிலையாகப் பாறைகளாக இருக்கின்றது.
1.மற்ற கோள்கள் இதைக் கவர்ந்தாலோ அது ஊடுருவி வரப்படும் பொழுது பஸ்பங்களாக மாற்றுகின்றது.
2.இதைத் தான் எரிகல் என்று நாம் சொல்கின்றோம்.

இதிலேயே தனக்குள் அது உருகி வேகமாக வரும் பொழுது பொடித் துகள்களாக இருப்பது ஒன்றாகச் சேர்த்து இங்கே வருகின்றது. இதனுடைய நிலைகள் இதுதான்.

ஏனென்றால் இந்த விஞ்ஞான அறிவால் சில நிலைகள் கண்டுணர்ந்தாலும் மெய் ஞானிகள் அக்காலங்களிலேயே இதன் செயலாக்கங்களைக் கண்டுணர்ந்தார்கள்.

இருப்பினும் விண்வெளியில் வருவதை இன்று விஞ்ஞான அறிவால் டெலஸ்கோப்பும் மற்ற சக்தி வாய்ந்த ஒரு சில தூரதிருஷ்டி இயந்திரங்களை வைத்துப் படமாக எடுக்கின்றார்கள்.

இதற்கு முன்னாடி இதைப் போன்ற பெரிய பாறைகள் எல்லாம் விழுந்த நிலையும் அது உராய்ந்து வரப்படும் பொழுது இந்த வியாழன் கோளில் இருக்கக்கூடிய பனிப்பாறைகள் இது வரும் வேகத்தால் என்ன ஆகிறது…?
1.ஒரு ஐஸ்கட்டியை நாம் நெருப்பிலே காட்டிய பின் அது எப்படிக் கரைகின்றதோ இதைப் போல
2.அதனின் வேகத் துடிப்பும் வியாழனில் உள்ள பனிப்பாறைகள் உருகி வெளியே செல்லும் பொழுது… படப்பிடிப்புக்கு ஆழமாகத் தெரியும் (CRATER)
3.மெய் ஞானியான அன்றைய அகஸ்தியன் வியாழன் சக்தியினைக் கண்டுணர்ந்தவன்.

இன்று… சுழற்சியின் வேகத்திலேயேயும் இது சுழலும் வேகத்தையும் போகும் வட்டத்தையும் விஞ்ஞானிகள் கண்டுணர்கின்றார்கள். அன்று மெய் ஞானிகள் காட்டிய நிலைகள் கொண்டு தான் இதைக் காண முடிகிறது.

ஒரு கோளின் திசை மாற்றமும் திங்கள் செவ்வாய் என்ற நிலையும் இன்று சூரியனைச் சுற்றி கோள்கள் எவ்வாறு விரிவடைந்த நிலைகள் கொண்டு சுற்றுவதையும்.. அதே போல் ஒவ்வொரு நட்சத்திரமும் இதன் சுழற்சி வேகப் பாதை எவ்வளவு தூரத்தில் இருக்கின்றதோ அதைக் கணித்து இன்னின்ன காலத்தில் இன்னென்ன நிலைகள் நேர்கோட்டில் வருகிறதென்று வெறும் எழுத்திலே அதைக் கூட்டிப் பார்த்தாலே நமது ஜாதகக் கணிப்பில் தெளிவாகக் காட்டி இருப்பார்கள்.

அவன் காட்டிய நிலைகள் கொண்டுதான்…
1.இன்று விஞ்ஞான அறிவும் இதனுடைய பாதைகளை உற்று நோக்கி
2.அந்த வழிகளில் தான் விஞ்ஞானி இன்று எந்திரத்தைச் செலுத்துகிறானே தவிர தனித்தன்மையில் அவனாக அவன பார்க்கவில்லை.

உன்னிப்பான நிலைகள் கொண்டு அகஸ்தியன் தன் உணர்வின் கண்ணோட்டத்தை ஊடுருவச் செய்து அங்கங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றுப் பார்த்தவன் அவன்.
1.அதிலேயே உணர்வின் தன்மையை தனக்குள் பதிய வைத்து அதைக் காட்டிலும்
2.நம் சூரிய குடும்பத்தினைச் சேர்ந்து இணைந்து சுற்றிக் கொண்டிருக்கும் 2000 சூரியக் குடும்பத்தையும் அளந்தறிந்தவன் அகஸ்தியன்.
3.அவனில் விளைந்த உணர்வுகள்… அவனுக்குள் கண்டுணர்ந்த உணர்வுகள் இன்றும் இங்கே பரவிக் கிடக்கின்றன.

இன்று விஞ்ஞானிகள் பாறையின் அளவுகோலை இதனுடைய தன்மையை எங்கிருந்து வந்தது…? இது எத்தனையாவது ஆண்டு இவ்வாறு சேர்ந்தது…? என்ற நிலைகளும் ஒரு கணிப்பின் ஆதாரத்தை வைத்து… இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் இந்த பாறைகள் உருவானது என்று விஞ்ஞானி இப்போது கண்டுபிடிக்கின்றான்.

மெய் ஞானிகள் காட்டிய உணர்வின் நிலையை இவனுக்குள் அளந்தறிந்து இயந்திரங்களின் தன்மை கொண்டு தான் இங்கு அளந்தெடுக்கின்றானே தவிர வேறு எதுவும் இல்லை.

ஏனென்றால் விஞ்ஞான அறிவுக்கும் மெய் ஞான அறிவுக்குண்டான வித்தியாசம் இதுதான்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.