கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி

 

பல கோடிச் சரீரங்களிலும் ஒவ்வொரு நிலைகளிலும் தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை கொண்டு மனிதனாக எவ்வாறு ஆனோம் என்று அன்று ஞானிகள் காட்டினார்கள்.

ராசிகள் 12 ஆனாலும்… 12 மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திலும் 30 அல்லது 31 நாட்கள் என்று இருப்பினும் இதிலே விளைந்த உணர்வின் தன்மை எவ்வாறு…? என்று சாஸ்திர விதிகள் விதிக்கப்பட்டு மனிதன் வாழ்க்கையில் இருள் சூழ்ந்த நிலையிலிருந்து மீளும் மார்க்கங்களைக் கொண்டு வருகின்றார்கள் ஞானிகள்.

அப்படி வந்த நிலைகள் தான் கார்த்திகை அன்று தீபத்தை வைத்து மற்ற பொருளைக் காணும் நிலைகளும் இருண்ட உலகில் ஒளியைக் காட்டும் பொழுது
1.அது அழகான நிலைகளில் பல திரிகளை இட்டு விளக்குகளாக எரியும் தன்மை பார்க்கப்படும் பொழுது மகிழ்ச்சி வருகின்றது.
2.அது எப்படிச் சுடராகத் தெரிகின்றதோ இது போன்று தனது வாழ்க்கையில் எத்தனையோ சரீரங்களில் தன்னை மீட்டிடும் அறிவின் தன்மை கொண்டு
3.பிறிதொரு இருளிலிருந்து தன்னை மீட்டிட எண்ணிய உணர்வுகளும் அதனின் நிலையில் வளர்ச்சியாகி வளர்ச்சியாகி
4.மனிதன் தன் பிறவியிலே தீமைகளை அகற்றி அறிந்திடும் அறிவும் நமக்குள் எவ்வாறு தெளிந்த நிலைகள் பெற்றது…? என்று
5.ஆறாவது அறிவு ஏழாவது ஒளியின் நிலைகள் அடையும் தகுதி பெற்றது.

ஆக… மனித உடலில் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் நஞ்சினை மலமாக மாற்றிவிட்டு நல்ல உணர்வினை உடலாக மாற்றும் நிலையைச் சாதாரண மக்களும் தெரிந்து கொள்வதற்காக “சரஹணபவா குகா கந்தா கடம்பா கார்த்திகேயா…”

உட்கொள்ளும் உணவில் மறைந்த நஞ்சினை மலமாக மாற்றி நஞ்சைச் சரணமடையச் செய்யக்கூடிய சக்தி என்று காட்டுகின்றார்கள்.

நஞ்சினை அடக்கி அதைச் சரணமடையச் செய்யும் சக்தியே சரஹணபவா இந்த உடலுக்குள் நின்று கந்தா என்பது பலவற்றை அறிந்து அதைச் சுவைமிக்கதாக உருவாக்கும் தன்மை பெற்றவன் கடம்பா உருவாக்கி… – கார்த்திகேயா.

1.நமது பிரபஞ்சத்தில் முதன் முதலில் சூரியன் உருவாகி இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கிய பின்
2.அது உமிழ்த்திய உணர்வுகள் கோளாகி அதனின் வளர்ச்சியின் அறிவாகி
3.முதல் நட்சத்திரமாகத் தோன்றுகிறது கார்த்திகை நட்சத்திரம்.

விண்ணுலக ஆற்றலைத் தனக்குள் எடுத்து எடுத்து அந்த உணர்வின் துணை கொண்டு அந்தக் கார்த்திகை நட்சத்திரம் உமிழ்த்தும் உணர்வுகள் அனைத்தும் பரவிப் பரவி… தாவர இனங்கள் அனைத்திலும் கார்த்திகை நட்சத்திரம் உமிழ்த்தும் உணர்வுகள் தாவர இன அறிவை உருவாக்கும் திறன் பெற்றது.

1.கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வரும் அலைகள் நம் பூமியிலே அதிகமாகப் படரும் நாள் கார்த்திகை மாதம்.
2.நம் பூமியில் அது பரவி வரும் பொழுது அதனின் அறிவு கொண்டு அதில் விளைந்த மகரிஷிகள்… “அனைத்தும் அறிந்தவர்கள்…”

கார்த்திகை நட்சத்திரம் உமிழ்த்தும் சக்திகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது… பிரபஞ்சத்தில் மிதக்கச் செய்கின்றது. தாவர இனங்களுக்கும் கல் மண் பாறைகளுக்கும் அதனுடைய அறிவின் தன்மை கூட்டி… கவரும் சக்தியாக இணைந்து வளர்ந்தாலும்
1.அதில் விளைந்த கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வுகள் மனித எண்ணங்களுக்குள் புகுந்து
2.ஒவ்வொரு பொருளையும் பிளந்து… எண்ணங்களாக அறிந்திடும் அறிவாக விளைந்தது.

இதை யாம் சுருங்கச் சொன்னால் தான் உங்களுக்கு விளங்கும். ஆனால் கணக்குப் போட்டு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தோம் என்றால் பத்து வருடமாவது ஆகும்… தெளிவாக நீங்கள் தெரிந்து கொள்வதற்கு…!

ஆகவே சுருக்கமாக இதை உங்களுக்குள் இணைத்து
1.நீங்களே அந்த அறிவின் தன்மையாக வளர்ந்திடும் சக்தியாக விளையச் செய்வதற்கு
2.இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.. ஞாபகப்படுத்துகின்றேன்.

மனித வாழ்க்கையில் வேதனை வேதனை என்று இந்த நஞ்சான உணர்வைச் சுவாசித்து மனிதன் சிந்தனைகள் குறைந்து உடல் நோய்கள் அதிகரித்து எண்ணிலடங்காத வேதனையும் துயரமும் சிந்தனை இயக்கும் நிலைகளும் வருகின்றது.

இருள் சூழும் இத்தகைய நிலையிலிருந்து விடுபட்டு… மெய் ஒளியின் தன்மையாக நமக்குள் விளைந்திடும் நிலைகளை நினைவுபடுத்தும் நந்நாள் தான் கார்த்திகை தீபம். ஒளிச் சுடராக வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர வேண்டும்.

அந்தப் பிரபஞ்சத்தில் கார்த்திகை நட்சத்திரத்திம் உமிழ்த்தும் சக்திகள் ஒவ்வொரு தாவர இனத்திற்குள்ளும் ஊடுருவி
1.ஒவ்வொரு தாவர இனத்திற்கும் அறிவாக ஊட்டுகிறது
2.அதன் வழி அந்தந்தத் தாவர இனத்தின் அளவுகோல் எதுவோ அதற்குத் தக்க தான் அதன் அறிவின் வளர்ச்சியும்
3.அதனுடைய மணமும் அதனுடைய உணர்வும் அதனுடைய சுவையும் மாறிக்கொண்டே இருக்கும்.
4.இது எல்லாவற்றுக்குமே பொருந்தும்.

இதிலே பல கோடிச் சரீரங்களில் வளர்ச்சி பெற்று மனிதனாகி உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ மகரிஷி தீமைகளை அகற்றித் தீமைகளை அடக்கிடும் உணர்வின் சக்தியைத் தனக்குள் விளைய வைத்த முதல் மனிதன் அகஸ்தியன் முழுமை அடைந்து துருவ நட்சத்திரமாக இன்று இருக்கின்றான்.

அதை நாம் அனைவரும் பெற வேண்டும்…!


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.