மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் முலாமாகப் பூச வேண்டும்

மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் முலாமாகப் பூச வேண்டும்

 

தியானமிருந்து பழகிக் கொண்டவர்கள் கேட்டுணர்ந்தவர்கள் இந்த ஆத்ம சுத்தி என்ற நிலைகளில் செயல்பட வேண்டும். எப்பொழுது நாம் வீட்டை விட்டு வெளியில் போகும் பொழுதும் கண்டிப்பாக ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.

உதாரணமாக நம்முடைய நண்பர் ஒருவர் அவருடைய கஷ்டத்தைச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நாம் காது கொடுத்துக் கேட்கிறோம். அவருடைய கஷ்டத்தை நாம் கேட்கும் பொழுது நமது உடல் சுருங்குகின்றது. நம்மையறியாமலேயே முகம் வாடுகின்றது.

அவ்வாறு அவருடைய கஷ்டத்தையெல்லாம் நாம் கேட்டுணரும் பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் சென்று அது உமிழ் நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்து நாம் எந்த நல்ல குணத்துடன் கேட்டோமோ அந்த உணர்வான சத்து ஆகாரத்துடன் கலந்து நாம் எண்ணிய நல்ல எண்ணங்களுக்குள் கலந்து விடுகின்றது.

1.அவருக்கு நாம் பணத்தைக் கொடுத்து உதவி செய்தாலும் கூட
2.அவருடைய துன்பமான அந்த உணர்வுகள் உமிழ் நீராக வடிக்கப்பட்டு நம் ஆகாரத்துடன் கலந்து இரத்தத்துடன் கலந்து செல்லும் போது
3.நமது (நுரையீரல்) சுவாசப்பை எடுக்கப்படும் பொழுது இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் உறுப்புகளுக்கு அனுப்பப்படும் பொழுது
4.அவர்கள் எப்படி வேதனைப்பட்டார்களோ அந்த வேதனையான உணர்ச்சிகள் நம் உறுப்புகளிலும் முதலில் ஏற்படும்.
5.அந்த இரத்தத்தைச் சுத்தப்படுத்தப் போகும் போது கிட்னி சரியாகச் சுத்தப்படுத்தாது.
6.சுத்தப்படுத்தாமல் நம் உடல் முழுவதற்கும் இரத்தங்கள் செல்லும் பொழுது நமது உடலுக்குள் அது வேதனையை உண்டாக்கும் நிலை வருகிறது.
7.வேதனையான உணர்வுகள் செல்லும்போது நாம் எந்த நல்ல குணங்களைக் கொண்டு எடுத்தோமோ
8.அந்த நல்ல குணத்துடன் இது இரண்டறக் கலந்து விடுகின்றது.

உதாரணமாக ஒரு தொட்டியில் நீரை ஊற்றி ஒரு தங்கக் கட்டியை எலக்ட்ரானுடன் இணைக்கப்பட்டு நீருக்குள் போட்டு விடுவார்கள். அதே சமயம் ஒரு செம்புக் கட்டியுடன் எலக்ட்ரானிக்கைக் கலக்கச் செய்து அந்த நீருக்குள் போட்டு விடுவார்கள்.

1.செம்பில் எலக்ட்ரானிக்கை அதிகமாகக் கூட்டி தங்கத்திலே குறைத்துக் கொடுக்கும் பொழுது
2.தங்கத்திலிருக்கக்கூடிய சக்திகள் கரைந்து அதிகமாகக் கூடிய செம்பின் எலக்ட்ரானிக் தங்கத்தைக் கவர்ந்து செம்புக்குள் தங்க முலாம் பூசிவிடும்.

உள்ளே இருக்கக்கூடிய செம்பு கறுப்பதை விடுத்து இந்தத் தங்கத்தின் முலாமாக ஆகி அது தெளிவாகின்றது.

ஆனால் அதே சமயம்
1.தங்கத்திற்குள் எலக்ட்ரானிக்கை அதிகமாகச் சேர்த்து செம்பில் குறைவான எலக்ட்ரானிக்கைச் சேர்த்தால்
2.செம்பின் சக்தி தங்கத்திற்குள் முலாமாகப் பூசப்பட்டு செம்பு எப்படிக் கறுக்கின்றதோ அதே மாதிரி தங்கம் கறுத்துவிடும்.

உங்கள் நல்ல எண்ணங்கள் கொண்டு நீங்கள் ஒருவருடைய துன்பமான உணர்வைக் கேட்டறியும் போது அந்த உணர்வுகள் நம் இரத்தத்துடன் கலந்து அது உடலுக்குள் செல்லும் போது நாம் எந்த குணம் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தோமோ அந்த நல்ல குணத்தில் இது முலாம் பூசிவிடும்.

ஏனென்றால் நல்ல குணம் கொண்டு நாம் பேசினாலும்
1.அவர் படும் துன்பத்தின் மேல் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தி… “உனக்கு எப்படி வந்தது…?” என்று கேட்கப்படும் போது
2.அந்த நல்ல உணர்வுகளுடன் அவரிடம் இருந்த நோயான உணர்வுகள் முலாம் பூசிவிடும்.

முதலில் நமக்குள் நல்ல உணர்வான நல்ல குணங்கள் நோயற்ற நிலையும் தெளிவான நிலைகளும் உடலில் தெம்பாக இருந்தது.

ஏனென்றால் தங்கம் எப்படி பளப்பளப்பாக இருந்ததோ அதைப் போல நமது தெளிவான எண்ணங்களினுடைய நிலைகளில் அவருடைய குணங்கள் கலக்கப்படும் பொழுது நம்மை அறியாமலேயே இப்படிச் சோர்வின் தன்மை அடைந்து இது நாளாக நாளாக, நமக்குள் நோயாக வந்து சேர்ந்து விடுகின்றது. நமது எண்ணமும் தெளிவற்றதாகப் போய்விடுகின்றது.

நாம் துன்பத்தைக் கேட்டறிந்தோம். அதைத் துடைக்க வேண்டுமல்லவா…?

செம்பும் வெள்ளியும் கலந்து ஒரு நகையைப் பற்ற வைக்கின்றோம். நெருப்பிலே காட்டும் போது தங்கம் இளகுவதற்கு நேரமாகும். ஆனால் செம்பையும் வெள்ளியையும் கலந்து கொஞ்சம் பொடியாக வைத்தபின் அது சீக்கிரம் உருகி விடுகின்றது. அதே சமயம் தங்கத்துடன் ஒட்டிக் கொள்கின்றது.

இதைப் போலத்தான்
1.ஒருவர் துன்பமான நிலையைச் சொல்லும் போது அது உடனடியாக நமக்குள் இயக்கச் சக்தியாகி
2.அந்தச் செம்பான நிலைகள் உருகுவது போல நமக்குள் அவருடைய கஷ்டமான நிலைகள் சீக்கிரம் வந்து நம்மிடம் ஒட்டிக் கொள்கின்றது.

தங்க நகை செய்யும் போது ஒட்ட வைத்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது. அப்பொழுதுதான் நகை ஆகின்றது.

இதைப் போல ஒரு மனிதனுக்குத் துன்பம் ஏற்படும் போது அதை மற்றவர்களிடம் சொல்லும் பொழுது நாம் கேட்டுணர்ந்துதான் ஆக வேண்டியதிருக்கிறது.

அவருக்கு வாழ்க்கையின் நிலைகளில் நாம் நன்மை செய்தால்தான் மனிதனின் நிலையும் ஆகும். நன்மையினுடைய நிலைகளை நாம் செய்தாலும் இந்த வாழ்க்கையில்
1.இன்று ஒருவருக்கு நாம் உதவி செய்தால்தான் நாளைக்கு நமக்கு ஒருவர் உதவி செய்வார்.
2.இன்று உதவி இல்லை என்று சொன்னால் அவர் நாளைக்கு நமக்கு எந்த உதவியும் செய்ய மாட்டார்.

அவருடைய துன்பத்தை நாம் கேட்டறியவில்லை என்றால் நம்முடைய துன்பத்தையும் அவர் கேட்டறிய மாட்டார். கேட்டறிந்தாலும் எப்படி நகை செய்யும் போது, செம்பும் வெள்ளியும் வைத்து நாம் பற்ற வைக்கின்றோமோ அதைப் போல வாழ்க்கையில் இந்தக் குறைகள் நிச்சயம் வரத்தான் செய்யும்.

ஆனால் இந்த வாழ்க்கை என்ற நிலைகளில் நாம் ஓட்டினாலும் அடுத்த நகை செய்யும் போது தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றி அதைச் சுத்தப்படுத்தி விட்டு அடுத்த நகையைச் செய்கின்றனர்.

அதைப் போல ஒரு நண்பன் அவருடைய கஷ்டத்தைச் சொல்லும் போது நாம் கேட்டறியும் போது அதைக் கேட்டுணர்ந்து அவருக்கு உதவி செய்து விடுகின்றோம்.

தங்கத்துடன் செம்பும் வெள்ளியும் சேர்ந்து கொண்டபின் எல்லாமே ஒன்றாகி விடுகிறது. அடிக்கடி இதே நகையை அழித்து அழித்துச் செய்யும்போது செம்பும் வெள்ளியும் அடிக்கடி சேர்ந்தால் என்னாகும்…?

அந்த செம்பின் தன்மை கூடித் தங்கத்தின் தன்மை குறைந்துவிடும்.

இதைப்போல நாம் அடிக்கடி கவலையையும், சஞ்சலத்தையும் கேட்டுக் கொண்டேயிருந்தால் நமக்குள் நல்ல குணம் எல்லாம் குறைந்து நமக்குள் அது நோயாக விளைந்து
1.நமக்குள் நல்ல குணமெல்லாம் கெடுவதோடு மட்டுமல்லாதபடி நல்ல உடலும் கெட்டு விடுகின்றது.
2.நமது நல்ல சொல்லும் கெட்டு விடுகின்றது… நமது சொல்லும்கூட நமக்கு வெறுப்பாகத் தோன்றும்.

கஷ்டமாக இருப்பவர்கள் பிறரிடம் போய்ச் சொல்லும் போது அந்த வேதனை கொண்டே சொல்வார்கள். எப்பொழுது பார்த்தாலும் நச்சு நச்சென்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அவர்கள் சொல்ல வந்தாலே நாம் ஓடுவோம். ஆனால் அந்தச் சங்கடமான உணர்வுகள் நோயாகவும் மாறிவிடுகின்றது.

நாம் தவறு செய்யவில்லை கேட்டுணர்கிறோம். ஒவ்வொரு நிமிடத்திலும் பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம். அவருடைய கஷ்டங்களைக் கேட்கின்றோம்… பார்க்கின்றோம்.

இன்று பத்திரிக்கை வாயிலாகப் பார்க்கப்படும் பொழுது அடிக்கடி நம்மையறியாமலேயே வேதனையும் துயரமும் பயமும் உங்களுக்குள் வந்து சேர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இதை எப்படிப் போக்கிக் கொள்வது…? ஏதாவது வழி இருக்கிறதா…?

அதற்குத்தான் அந்த ஞானிகள் சொன்ன அந்த உண்மையின் சக்தியை உங்களுக்குள் இந்நேரம் வரையிலும் யாம் உபதேசித்தது. கூட்டுத் தியானத்தில் எல்லோருடைய அருள் வாக்கும் யாம் மட்டுமல்ல… உங்கள் அனைவருடைய அருள் வாக்கும் சேர்க்கப்படும் பொழுதுதான் அந்த வலு கூடுகின்றது என்று நமது குருநாதர் சொன்னார்.

ஆத்ம சுத்தி என்ற அந்த ஆயுதத்தை எடுத்து
1.“ஓம் ஈஸ்வரா…” என்று உங்கள் உயிரை வேண்டித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி
2.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற ஏக்கத்துடன் நமக்குள் சேர்க்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்களும் பெற வேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் கண்களைத் திறந்து ஒரு நிமிடமும் கண்களை மூடி இரு நிமிடமும் நமக்குள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு கண்களைத் திறந்து கஷ்டப்படுபவர்களிடம் “துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நீங்கள் பெறுவீர்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் நீங்கும்” என்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

அவர்களது கஷ்டம் உங்களுக்குள் வராமல் தடுக்கவும் முடிகின்றது. நாம் அடுத்த நகை செய்யும் பொழுது, செம்பையும் வெள்ளியையும் சுத்தப்படுத்திக் கொள்வது போல அடுத்த நிமிடமே இதைச் சுத்தப்படுத்திக் கொண்டு நமது மனதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுதான் தியானம் என்பது.

நமக்குள் தீயது சேராது தடுக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்தியின் துணை கொண்டு நமக்குள் தியானமிருக்க வேண்டும்..
1.தியானம் என்பது எது…? கெட்டது நமக்குள் சேர விடாது, வைராக்கியமான நிலைகள் பெற வேண்டும், இதுதான் தியானம் என்பது.
2.பக்தியில் நல்லதை நினைத்துக் கொண்டிரு என்பார்கள்.
3.ஆனால், தியானம் என்பது “நமக்குள் சேர்த்துக் கொள்ளும் திறனை” வளர்த்துக் கொள்வது.
4.பக்தி என்பது நல்லதை நினைப்பது… தியானம் என்பது உயர்ந்த ஞானிகளின் சக்தி கொண்டு நமக்குள் நல்லதைக் காக்கச் செய்வது.

ஆகவே… அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெற ஒவ்வொரு நிமிடமும் தியானிப்போம்.

Mesmerism

Mesmerism

When we use one mould we will get the same figure. When we Sow one seed we will get the same plant.
1.Our life will depend upon the way in which we execute our thoughts.
2.A person’s life is as per his thoughts.
3.Live as per your thoughts is the saying of our elders.

The character of all the children born of one mother do not remain the same. It is not the character only that differs but the smell of the body of the children also differ from one another.

All living beings that are born in this world have a smell of their own and some particular power. Every body the individual souls have taken has its own character and power.

These they grow with the help of some other soul in the astral world which has got the same character and power.

Where is water in this earth…? Where are water springs…? Some persons have the power in their bodies to know about the existence of water inside the earth.

All people cannot do it.
1.Only some persons who have got connection with some other souls of the same type
2.which remains inside their body will be able to know about the existence of water springs under the earth.
3.In the same way the existence of metals under the surface of the earth can also be found out.

The earth absorbs energy from other planets and emits them out. In the same way the body of some persons have the capacity to absorb some particular type of atoms that come out from this earth.

All the energies are mixed in the air. Just as some metals grow inside the earth by absorbing that type of atoms every body has got a power of absorbing certain kind of atoms.

We do not know which type of power each body has got and do not develop them.

Today there are people who know about the way to control another person’s mind by what is called mesmerism. By this a person will have control over another person’s mind and can make him do or say anything that he wants by infusing such thoughts into the victim’s mind.

What is the state in such things…?

People may say that it is due to intelligence. This state does not come only by education. This is similar to the way in which some Swamies produce holy ash, flowers and other things simply by stretching their empty hands in the air in our presence.

By mesmerism a person with the help of some spirit which enters the body of the Victim who is under his control, submerges his thoughts and infuses the thoughts of the mesmeriser into that person’s mind and makes him say or do what he orders.

1.This is a great mistake which they do knowingly or unknowingly.
2.Both the person’s souls get affected by this and the growth of their souls are retarded.
3.They waste the time and energy without utilising the powers given by God in the right way.

If they do meditating they can get good powers and make this world to prosper by changing the poisonous air that exists now round us and make the vegetables grow well.

All the living beings in this world will prosper by eating the good grains and fruits that will grow on this earth under such condition.

நேரடியாகக் கொடுப்பதைக் காட்டிலும் மறைமுகமாகத் தான் உங்களுக்கு நிறையச் சக்தி கொடுக்கின்றோம்

நேரடியாகக் கொடுப்பதைக் காட்டிலும் மறைமுகமாகத் தான் உங்களுக்கு நிறையச் சக்தி கொடுக்கின்றோம்

 

வாழ்க்கையில் சங்கடம் வருகின்றது… சங்கடம் வந்தாலும் பரவாயில்லை…! பின் வேதனையும் வருகின்றது. வேதனை வந்தால் விஷமாக மாறுகிறது… சம்பாதித்த பணம் எல்லாம் விரயமாகத் தொடங்குகிறது.

பதார்த்தங்களை எல்லாம் சுவையாகச் செய்தாலும் அதிலே சிறிதளவு விஷம் பட்டுவிட்டால் அதனுடைய ருசியை… சத்தை எல்லாவற்றையும் கவர்ந்து கொள்கின்றது… அதற்கு வலு கூடி விடுகிறது.

அந்த விஷத்தை நாம் மாற்ற வேண்டும் அல்லவா.

1.போகர் தன்னுடைய ஏழ்மையிலே எடுத்துக் கொண்டது… ஏக்க உணர்வுக்குள் சிக்கியது… உண்மையை அறிய முடிந்தது.
2.அவர் பெற்ற ஒவ்வொரு சக்தியும் அவருடைய சந்தர்ப்பம் தான்.
3.இராமலிங்க அடிகள் சக்தி பெற்றதும் சந்தர்ப்பம் தான்.
4.எந்த ஞானியும் தெரிந்து எடுக்கவில்லை.

அந்த ஞானிகளுக்கு ஏற்பட்ட சந்தர்ப்பத்தைப் போன்று தான் உங்களுக்கும் இப்பொழுது ஊட்டுகின்றோம்.

ஏதாவது கஷ்டம் என்று வந்து விட்டதா…? அந்தச் சமயத்தில் அதை விட்டுவிட்டு ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி அந்தச் சந்தர்ப்பத்தை மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று வலுவைக் கூட்டினால் அது மாறும்.

சங்கடத்திலேயே இருந்தால் விஷம் கலந்து விட்டால் நல்ல எண்ணம் எது இருந்தாலும் அது அதற்குள் சிக்கிவிடும்.

அதை நீங்கள் மாற்றை அமைப்பதற்குத்தான்
1.யாம் 12 வருட காலம் காடு மேடெல்லாம் உருட்டி உருட்டி உருட்டி உருட்டி
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆத்ம சுத்தி என்ற வாக்கை உங்களுக்குக் கொடுப்பதற்கு அதைப் பெற்றது.

ஆரம்பத்தில் இதை யாருக்கும் பயன்படுத்தவில்லை. பின் இந்த வாக்கினைக் கொடுத்து அந்தச் சத்தினை ஏற்றிக் கொடுக்கும் பொழுது தான்… உங்களுக்கு அந்தப் பவர் எடுக்கும். எத்தனையோ வகையான நிலைகளுக்கு அது எடுக்கும்.

ஆத்ம சக்தி என்ற அந்த ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்த பின்பு தான் “எல்லாவற்றையும் அள்ளி வீசுகின்றோம்…” ஞானிகளைப் பற்றி அதிகமாக உங்களுக்கு எடுத்துரைப்பது.

1.சில நேரங்களில் உபதேசம் கொடுக்கும் பொழுது அதிலே யாம் சிலதை மறைப்பது உண்டு. எப்படி இருந்தாலும் மறைத்துவிடுவேன்.
2.ஒரு சமயம் நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் நிலையே மாறிவிட்டது.
3.ஏதோ சில ரகசியத்தைச் சொல்லி விட்டேன் போல் தெரிகிறது. பேசும் பொழுது தன் நிலை இல்லை.

வெஜிடபிள் பிரியாணி போட்டது போன்று பேசுகிறார் என்று என் வாயிலிருந்தே பேச வைக்கிறார் குருநாதர். உபதேசம் சொல்லிக் கடைசியில் முடிக்கப்படும் பொழுது வந்துவிட்டது.

என்னென்னமோ சொல்கிறேன்…! அது ரொம்பவும் முக்கியமானது…! அதை மாற்றுவதற்கு என்னென்னமோ போட்டுத் திருப்பி விட்டேன்…!
1.தாராளமாகச் சொல்லலாம் எது வேண்டும் என்றாலும் சொல்லலாம்.
2.ஆனால் இந்த முக்கியத்துவத்தைக் கொண்டு அதைப் பதிவு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மனிதனை ஞானியாக மாற்றியமைக்கும் சக்தி “துருவ நட்சத்திரம்”

மனிதனை ஞானியாக மாற்றியமைக்கும் சக்தி “துருவ நட்சத்திரம்”

 

T.V. நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்கின்றார்கள். எந்த அலைவரிசை என்று தெரிந்து கொண்டு அந்த அலைவரிசையை வைத்தால் உடனே அதை எடுத்து வேலை செய்கின்றது.

அதே போன்று நம் உடலில் எத்தனையோ குணங்களைப் பதிவாக்கி வைத்திருக்கின்றோம்.
1.என்னைத் திட்டினான் என்று எண்ணியவுடன் அந்த அலைவரிசை வந்தவுடன் கோபம் வரும்.
2.கோபமான நிலைகளில் கணக்குப் போட்டால் தப்பாக வரும்.
3.அதே சமயத்தில் வீட்டில் சண்டைக்குப் போவோம்.

எது இருந்தாலும் அந்த உணர்ச்சிக்குத் தக்கவாறுதான் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

அதே சமயத்தில் கோபமாக இருந்து ஒருவன் எனக்குத் தீங்கு செய்தான் என்று எண்ணினால் அவனும் அங்கு கெடுகின்றான்… அங்கு அவனுக்குப் புரை ஓடும்.

தன் பையன் லெட்டர் போடவில்லை என்று பாசத்தால் தாய் எண்ணி வேதனைப்பட்டால் அந்த வேதனையான உணர்வு பையனைப் பாதிக்கும்.

1.அவன் அந்த நேரத்தில் கணக்குப் போட்டால் அந்த வேதனை அவன் சிந்தனையைக் குறைத்துக் கணக்கு தப்பாகும்… கெட்ட பெயர் வாங்கி விடுவான்.
2.அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கின்றான் என்றால் “என்னை எதிர்க்கின்றார்கள்…” என்று அங்கிருந்து லெட்டர் வரும்.

தாய் எண்ணியது என்று அவனுக்குத் தெரியாது.

அதே சமயத்தில் ரோட்டில் நடந்து போகும் பொழுது… தாய் இம்மாதிரி எண்ணினால் விபத்தில் கொண்டு போய் விட்டுவிடும். தாயின் நினைவு இப்படி வந்துவிடும்.

இதையெல்லாம் நாம் மாற்ற வேண்டும்.

காரணம்… இதெல்லாம் காற்றில் இருக்கின்றது. அதே சமயத்தில் ஊழ்வினை என்ற வித்தாக நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
1.நாம் யாரை எண்ணுகின்றோமோ உடனே அது வேலை செய்யும்.
2.மனிதனுக்கு மனிதன் நாம் கலந்துதான் இருக்கின்றோம்… யாரும் தனித்து இருக்க முடியாது.

சமுதாய அமைப்பில் மனிதன் ஒன்றோடொன்று இணைந்து தான் வாழுகின்றான்.

நமது உடலுக்குள் எது எது எல்லாம் பதிவாகி இருக்கின்றதோ அவைகள் இந்தக் காற்று மண்டலத்திலும் உண்டு. நமது உடலுக்குள் பதிவானவைகளில எதை நாம் நினைக்கின்றோமோ அவை காற்றிலிருந்து நம் ஈர்ப்பிற்கு வந்து அந்த அலைகள் நம்மை இயக்கத்தான் செய்யும்.

இதுவெல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

இப்படி… நாம் எதை எண்ணினாலும் உடனே அதை நல்லதாக மாற்றுகின்ற சக்தி வேண்டும்.

நாம் விஞ்ஞான யுகத்தில் வாழுகிறோம். மனிதன் எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் ஏதேதோ செய்கின்றான். நமது ஞானிகள் இயற்கையின் உண்மையின் உணர்வுகளைத் தெளிவாகக் காட்டியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் தெரிந்து கொண்டால்
1.நாம் எப்படி இயங்குகின்றோம்…? நமது உயிர் எப்படி இயங்குகின்றது…? என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
2.எந்த உணர்வும் நம்மை இயக்காமல் அதை நமக்கு உதவியாக மாற்றிக் கொள்வதற்கு ஒரு சக்தி தேவை.
3.அதற்குச் சக்தி ஊட்டுவதுதான் துருவ நட்சத்திரம்.

தரைகளிலும் மண்ணிலும் இருக்கும்… “ஈர்க்கும் காந்த சக்தியும்… அதனின் இயக்கங்களையும்” அறிதல் வேண்டும்

தரைகளிலும் மண்ணிலும் இருக்கும்… “ஈர்க்கும் காந்த சக்தியும்… அதனின் இயக்கங்களையும்” அறிதல் வேண்டும்

 

வீட்டில் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்பார்கள். வீட்டுக்கு முன் முச்சந்தியில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கே மிளகாயை வைத்து அந்த மண்ணையும் வைத்துத் தலையைச் சுற்றி அதற்குப் பின் அடுப்பிலே போடுங்கள்.

மிளகாயின் நெடி வருகிறதா…? என்று பாருங்கள்.
1.ஏனென்றால் குழந்தை உடலில் அந்தக் கார உணர்வு இருந்தால் அதை இழுத்துக் கொள்ளும்.
2.அதற்கு அந்த இழுக்கக்கூடிய சக்தி இருக்கின்றது… குழந்தையின் உடல் நலமாகிவிடும்.

இதே போல் வீட்டிலே பெண்கள் கோலம் போடுகின்றார்கள். புள்ளிகளை வைத்து எங்கள் குடும்பம் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் எங்கள் குடும்பத்தில் வருவோர் அனைவரும் நலமும் வளமும் பெற வேண்டும் என்று இத்தகைய எண்ணங்களை எண்ணி உற்றுப் பார்த்து இந்த உணர்வின் தன்மை பதிவாக்கி அந்தக் கோலத்தை இட வேண்டும்.

நாம் போடும் அந்தக் கோலப் பவுடரில் மேக்னெட் உண்டு.

1.குடும்ப ஒற்றுமைக்காக வேண்டி உயர்ந்த எண்ணங்களை எண்ணி
2.அருள் ஞானம் பெருக வேண்டும் அருள் சக்தி பெருக வேண்டும் என்றும்
3.எதை எதையெல்லாம் நல்லதாக வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதை எண்ணி அந்தக் கோலத்தைப் போட்டுப் பாருங்கள்.

இந்த உணர்வு இயக்கச் சக்தியாக மாறும்… நமக்குள்ளும் பதிவாகிறது.

பக்கத்து வீட்டுக்காரரோ நண்பரோ உங்கள் வீட்டிற்கு வந்து அவர் கஷ்டத்தை எல்லாம் சொல்வார். உ…ம் கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
1.எங்கே உட்கார்ந்து பேசினாரோ அந்த இடத்திலே பதிவாகும்… இருவர் உடலிலும் பதிவாகும்.
2.அடுத்து சுழன்று வரும் பொழுது அந்த இடத்திற்கு வந்தால் அந்த வாசனை அறியாமலே இயக்கி
3.ஏதோ சங்கடமாக இருக்கிறது என்று உணர்வுகளைத் தூண்டி அங்கேயே திரும்ப உட்காரும்படிச் செய்யும்.

ரோட்டில் நடந்து செல்லும் போது குறைகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்றால் அந்த பாதையிலேயே தான் மீண்டும் செல்வார்கள்.

அதே போல் ரோட்டில் சின்னப் பாலங்கள் இருக்கும். அதில் உட்கார்ந்து ஊரில் நடக்கும் குறைகளை எல்லாம் பேசி இருப்பார்கள். அங்கே போனால் அந்தக் குறைகள் வரும். அதையெல்லாம் எடுத்து வீட்டுக்குள் வந்தால் இங்கேயும் அந்தக் குறை தான் வளரும்.

1.சுவாசிப்பது மனிதனுக்குள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலைகளாக நமக்குள் எப்படி உருமாறுகிறது…?
2.நாம் சுவாசித்த உணர்வுகள் நம்மை அறியாமலே சூட்சமத்தில் எப்படி இயக்குகிறது…?
3.இதிலிருந்தெல்லாம் நீங்கள் விடுபட்டு நல்ல முறையில் எப்படி வாழ வேண்டும்…? என்பதற்குத்தான்
4.அருள் உணர்வுகளை உங்களுக்கு உபதேச வாயிலாக ஆழமாகப் பதிவு செய்கிறேன்.
5.ஏனென்றால் அதனுடைய இயல்புகளையும் விளைவுகளையும் அனுபவித்துச் சொல்கின்றேன்.

நான் புத்தகங்களைப் படித்து விட்டு வந்து சொல்லவில்லை.

நீசமாகும் உடலுக்கு நாம் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை

நீசமாகும் உடலுக்கு நாம் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை

 

உதாரணமாக நாம் நமது நண்பர் ஒருவர் வீட்டிற்குச் செல்வோம். அப்பொழுது அவர் ஏதோ ஒரு சங்கடத்தில் இருந்திருப்பார். அவர் தன் சங்கட நிலையில் நம்மை “வாங்க…!” என்று அழைக்காது விட்டு விட்டால் போதும்.

நமது மனதில் “இவனுக்கு வந்த கௌரவத்தைப் பார்… வீடு தேடி வந்திருக்கிறேன்… கொஞ்சமாவது மதிக்கிறானா…?” என்ற வெறுப்பு உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. “நம்மை மதிக்கவில்லையே…” என்று எண்ணும் பொழுது, வேதனை உணர்வுள் நம்மிடத்தில் வருகின்றது.

1.“வாங்க…” என்று எந்த மனிதர் நம்மை அழைக்கவில்லையோ
2.அந்த மனிதருடைய நல்ல குணங்களை நல்ல பண்புகளை நாம் அறிய முடியாதபடி
3.நம்முடைய வேதனையான உணர்வுகள் மறைத்து விடுகின்றன.

நண்பராக இருந்து அன்புடன் பழகிய அவரின் நல்ல உணர்வுகளை நாம் அறிய முடியாதவாறு நம்முடைய சிந்தனைத் திறனும் தெளிந்த மனமும் குறைந்து கொண்டே வருகின்றது.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள் வந்தாலும் அத்தகைய தீமைகளை நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் யாம் அருள் ஞானத்தை உங்களுள் பதிவாக்குகின்றோம்.

நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன் இந்த உடலை விட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை. நாம் எத்தனை கௌரவம்… எத்தனை துணி… எத்தனை அலங்காரம்… எத்தனை சுகமான நிலை… எத்தனை பஞ்சு மெத்தை…? போட்டு வைத்திருந்தாலும் இந்த ஈசன் போய்விட்டால் குப்பையில் போட்டு எரித்துவிடுவார்கள்.

நடைமுறையில் நாம் பார்க்கும் கௌரவம் எல்லாம்… இப்படியெல்லாம் இருந்தார்கள் என்று பார்க்கிறோமோ…?
1.இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும் போதும் மண்ணைக் கொட்டும் போதும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.
2.ஏன்டா இப்படிச் செய்கின்றாய்…? என்று கேட்கின்றோமோ…!
3.ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால் நாற்றம் அடிக்கும் என்று தூக்கிச் சென்று விடுகிறோம்.

இப்படி இருக்கப்படும் பொழுது இந்த உடலிலே ஈசன் இருக்கும் போழுதே நீங்கள் இந்த கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும் அந்த மெய் ஞானியின் உணர்வை எடுத்து அந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி அந்த மெய் ஞானியின் உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.

இந்தக் கௌரவப் பிரச்சனை நமக்குள் நிறையவே உண்டு. ஏனென்றால் நாம் அல்ல.

அரசனுக்கு… கௌரவத்தில் என்ன செய்கிறான்…? யார்… என்ன தப்புப் பண்ணினாலும் சரி…? உடனே போர் தான். நான் சொன்னேன் கேட்கவில்லை… உடனே போர் முறை.

இப்பொழுது நான் வலுவாக நிலையில் இருக்கிறேன்.
1.நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் உடனே எதிர்த்துவிடு.
2.என்னை எதிர்த்துப் பழகி விட்டால் அதே உணர்வு என்ன சொன்னாலும் அங்கே கேட்க மாட்டார்கள்.
3.இந்த உணர்வினுடைய வேலை எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டே தான் இருக்கும்.

ஆக எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ அது வேலை செய்து கொண்டே இருக்கும்.

இதை மாற்றுவதற்காகத் தான் உங்களுக்கு இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். இதை வைத்து வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் வருகிறதோ அப்பொழுது நிவர்த்தி செய்து பழக வேண்டும்.

இன்று நாம் நமது மனித வாழ்க்கையில் உடல் பற்று கொண்டு உடலை வளர்க்கச் செல்வத்தைத் தேடி அலைகின்றோம். அதே சமயம் தேடிச் சேர்த்த செல்வம் நாம் இறந்தபின் நம்முடன் வருமா…? வருவதில்லை. நமது உடல் கூட வருவதில்லை.

ஆனால் நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை எண்ணி அந்தச் செல்வத்தைத் தன் மகன் காப்பானா…? அடுத்தவர்கள் திருடிக் கொண்டு போய்விடுவார்களா…? என்ற அச்சமும் வேதனையும் கொள்கின்றோம்.

தன் மகனைக் காக்க வேண்டுமென்றுதான் எண்ணுகிறோம்.
1.அவனை எப்படிக் காக்கப் போகிறேன்…? என்று அவனை நினைத்து வேதனையை நமக்குள் வளர்த்து விட்டால்
2.நமது உடலில் விஷ அணுக்கள் பரவி நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது…
3.கடும் நோயினை நமக்குள் உருவாக்கிவிடுகின்றது.

நோயானபின் உடல் நலிந்து மனித உடலை உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அழிந்து விஷம் கொண்ட உணர்வுகள் உடலில் பெருகிய நிலையில் உடலை விட்டு உயிரான்மா வெளியில் வருகின்றது.

எந்த மகன் மீது பற்று வைத்தோமோ அவனுடைய உடலுக்குள் புகுந்து விடுகின்றது.

குடும்பத்தில் பத்துப் பேர் இருந்தாலும்
1.பத்துப் பேரில் யார் மீது அதிகப் பாச உணர்வைச் செலுத்தினோமோ
2.இந்த உயிரான்மா இதன் தொடர் கொண்டு பற்று கொண்ட உடலுக்குள் தான் செல்கின்றது.

இது போன்றே பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட நீங்கள்… நான் அவனுக்கு உதவி செய்தேன். ஆனால் அவன் என்னை மதிக்கவில்லை. உதவி வேண்டும் போது மட்டும் என்னை அணுகினான் அவனுக்கு வசதி சேர்ந்தபின் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்று வேதனைப்படுகின்றோம்.

வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள் எண்ணினால் வேதனையின் உணர்வுகள் வளர்ந்து எந்த மனிதனை எண்ணி வேதனையின் உணர்வுகளை வளர்த்தார்களோ அதனின் உணர்வுகள் உங்கள் உடலில் பெருகி இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் எந்த உணர்வின் தன்மையைத் தன்னுள் வளர்த்தீர்களோ உயிராத்மா அவரின் உடலுக்குள் சென்றுவிடும்.

1.அங்கே சென்று தன்னுள் வளர்த்த வேதனையை அவரிடத்திலும் உருவாக்கி
2.வேதனையின் உணர்வுகளை அதிகமாக வளர்த்த நிலையில் தான் புகுந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளி வந்தபின்
3.உயிரான்மா… பாம்பாகவோ தேளாகவோ தான் அடுத்த உடலைப் பெறும்.

ஆகவே நல்ல நினைவு இருக்கும் போதே உயிரை மதித்து மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிரான்மாவுக்குச் சேர்க்கும் அழியாச் சொத்தாக ஆக்க வேண்டும்.

இச்சை… கிரியை… ஞானம்…!

இச்சை… கிரியை… ஞானம்…!

 

ரோட்டிலே சண்டை போடுகின்றார்கள்… ஏன் சண்டை போடுகின்றார்கள்…? என்று இச்சைப்படுகின்றோம். நுகர்கின்றீர்கள்… கிரியை ஆகின்றது. பார் நடு ரோட்டில் சண்டை செய்கின்றான் பார்…! என்பீர்கள்

அப்போது யார் பேசுவது…? அந்த உணர்வு உங்களை இயக்குகின்றது. அது கிரியை ஆகி அதன் ஞானப்படித் தான் நீங்கள் பேச ஆரம்பிக்கின்றீர்கள்.

நான் இங்கே உபதேசம் கொடுத்துக் கொண்டிருக்கின்றேன்.
1.அந்த அருளைப் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று பதிவு செய்து விட்டால்
2.இதை நீங்கள் எண்ணும் பொழுது அந்தச் சண்டை போட்ட உணர்வுகள் இயங்காதபடி அதை அமுக்கித் தடைப்படுத்தி விடும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை இச்சைப்படும் பொழுது இது முதலில் புகுந்து விடுகின்றது.

போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று யார் முந்திப் புகார் (COMPLAINT) செய்கின்றார்களோ அவர்களுடைய உணர்வுகள் தான் எடுபடும்.

ஆக நம் உயிர் இருக்கும் இடம் போலீஸ் ஸ்டேஷன்…! இவர்கள் உணர்வை உள்ளே விட்ட பின் என்ன ஆகின்றது.
1.உள்ளுக்கே சென்று அந்த உணர்ச்சியைத் தூண்டுவதற்கு முன்னாடி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தடுத்து விட்டால்
3.இங்கே உயிரிடம் ரிப்போர்ட் கொடுத்து விடுகின்றோம்.
4.கெட்டது உள்ளே வராதபடி அதை துரத்துகின்றது… உள்ளே போகாதபடி தடுக்கப்படுகிறது.

சொல்வது அர்த்தமாகிறதல்லவா.

உங்கள் நண்பனைக் காண வேண்டும் என்று விரும்புகின்றீர்கள். பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆளைக் காணோமே…? எங்கே…? என்று கேட்பீர்கள்.

ஐயோ…! உங்களுக்குத் தெரியாதுங்களா…? அவர் உடல் நிலை சரியில்லாதபடி படுத்திருக்கின்றார் என்று சொல்கிறார்கள்.

இதைக் கேட்ட பின் பதிவாகின்றது… அந்த உணர்வைச் சுவாசிக்கின்றீர்கள் மூஷிகவாகனா.
1.அடுத்த கணம் நண்பரைப் பார்க்க அந்த உணர்வு இங்கிருந்து நம்மை அழைத்துச் செல்கின்றது.
2.அந்த உணர்வுகள் தான் உணர்ச்சியாக எண்ணங்களாக சொல்லாக வந்து இழுத்துச் செல்கின்றது.

இச்சை… கிரியை… ஞானம்…! அவனைக் காண வேண்டும் என்று ஞானத்தை ஊட்டுகின்றது.

வாழ்க்கையில் இதையெல்லாம் புரிந்து கொள்வதற்குக் காவியங்களைப் படைத்து நம் உடலுக்குள் ஒவ்வொரு உணர்வும் என்ன செய்கின்றது…? நம்மை எப்படி இயக்குகின்றது…? நாம் இந்த வாழ்க்கையில் எப்படிச் செல்ல வேண்டும்…? என்று தான் கோவிலில் வைத்துக் காட்டுகின்றார்கள்.

அதை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை.

நண்பனைப் பார்க்கின்றோம். அவர் என்னால் முடியவில்லை என்று சொல்லும் பொழுது.. பாசத்தால் நாம் கேட்கப்படும் போது என்ன நடக்கிறது…? அதைக் கவர்கின்றீர்கள்… இச்சைப்படுகின்றீர்கள்… நீங்களும் சேர்ந்து அழுக ஆரம்பிக்கின்றீர்கள்.

அந்த ஞானத்தின் தன்மை கொண்டு இப்படி ஆகிவிட்டதா…? நேற்று நன்றாகத் தானே இருந்தாய் இன்று இப்படி ஆகி விட்டாயா…? என்ற ஞானத்தைத் தான் பேசுகின்றது.

ஆகவே இந்த வாழ்க்கையின் நிலைகளில்
1.நம் ஆறாவது அறிவை வைத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து
2.இதுபோன்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் வரும் தீமைகளை உடலுக்குள் இயக்கச் சக்தியாக மாறாதபடி நாம் தடுத்துக் கொள்ள வேண்டும்.
3.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் அடிக்கடி எடுத்து அதை உயிரிலே நிலை நிறுத்த வேண்டும்.

புது மனை புகுகிறோம் என்றால் அங்கே அருளைப் பெருக்கும் மனையாக அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்

புது மனை புகுகிறோம் என்றால் அங்கே அருளைப் பெருக்கும் மனையாக அனைவரும் சேர்ந்து உருவாக்க வேண்டும்

 

பெரும்பகுதியானவர்கள் புதிதாக்க் கட்டிய வீட்டிலே பெரிய யாகத்தை நடத்துகின்றார்கள்… அதன் மூலம் தோஷத்தை எல்லாம் போக்குகிறோம் என்பார்கள்.

நெருப்பை உண்டாக்கிப் பல பொருள்களைப் போட்டு புகையை மூட்டுவார்கள். வீட்டிற்குள் இருக்கும் மற்றவர்கள் கண்ணைக் கசக்கிக் கொண்டிருப்பார்கள். எப்படா இது முடியும்…? என்று எண்ணுவார்கள்.

காசைக் கொடுத்துத் தான் யாகத்தை நடத்துகின்றார்கள். மந்திரம் சொல்கின்றார் என்றாலும் அதை யாராவது நினைக்கின்றார்களா என்றால் இல்லை.

1.அங்கே உட்கார்ந்து இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் எத்தனையோ விதமான எண்ணங்கள் செல்கின்றது.
2.வீடு கட்டி இருப்பதைப் பார்த்த பின்… எப்படிக் கட்டி இருப்பார்கள்…? என்ற இந்த உணர்வு வரும்.
3.கடன் வாங்கிக் (லோன் வாங்கி) கட்டியிருப்பார்கள் போல என்று அடுத்தவரிடம் பேசுவார்கள்.
4.எவ்வளவு கடன் வாங்கி இருப்பார்கள்…? என்று தெரியவில்லை…!

வீட்டிற்குள் வந்தபின் இந்த நினைவெல்லாம் வருகின்றது.

நானும் வீடு கட்டலாம் என்று நினைக்கின்றேன்… முடியவில்லை…! பெண்கள் மத்தியிலே இந்த உணர்வுகளை உருவாக்கி விடுகின்றார்கள்… ஆண்களும் அதே மாதிரித் தான்.

ஆனால் புதிதாக வீட்டைக் கட்டி இருக்கின்றார்கள்
1.அதை வாழ்த்த வந்திருக்கின்றோம் என்று தெரிவதில்லை.
2.அங்கே யாகத்தை வளர்த்து அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
3.ஆனால் இங்கே இந்த யாகத்தை நடத்தி வேண்டாத்தை எல்லாம் சிந்தனை பண்ணிக் கொண்டிருப்போம்.

கண் எரிகிறது என்று ஒரு சிலர் வெளியிலே உட்கார்ந்து இருப்பார்கள். சொந்தபந்தங்கள் எல்லாம் கண்ணைக் கசக்கிக் கொண்டு உள்ளே உட்கார்ந்து இருப்பார்கள்.

ஞானிகள் நமக்குக் காட்டியது உயிர் ஒரு நெருப்பு.
1.புது மனையிலே அமர்ந்து குருநாதர் காட்டிய வழியில் அகண்ட அண்டத்தின் உணர்வுகளை இந்தப் பிண்டத்திற்குள் கொண்டு வருகின்றோம்.
2.இந்தப் பிண்டத்திற்குள் ஒளியாக மாற்றிய உணர்வின் தன்மையை உங்களிடம் செவிகளில் படும்படிப் பதிவு செய்கின்றோம்.

இதைப் பதிவு செய்த நிலையில் உங்கள் உடலில் கை கால் வலியோ மற்ற நிலைகளோ குறைந்திருக்கும். மனதில் ஒரு நிம்மதி இருக்கும்.

உபதேச உணர்வுகளை நீங்கள் காதிலே கேட்டு அதனின் மூச்சலைகள் இந்த வீட்டிற்குள் படர்ந்தால் எப்படி இருக்கும்…?

இந்தத் தியானத்தை எடுத்து
1.இந்த வீட்டிலே மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும்.
2.தொழில் வளம் பெறுக வேண்டும்
3.இங்கே வசிப்போர் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எல்லோரும் சொன்னால்
4.இந்த வீட்டிலும் பதிவாகின்றது… இந்த வீட்டுக்காரர்கள் செவிகளிலும் படுகின்றது.
5.இந்த உணர்வை அவர்கள் நுகர்கின்றார்கள்… அவர் ரத்தத்தில் கலக்கின்றது.
6.இந்த வலுவான சக்தியை நாம் அனைவரும் சேர்ந்து அவர்களுக்குக் கொடுக்கின்றோம்.

இது தான் உண்மையான யாகம் என்பது. அது புறத் தீ… இது அகத் தீ…! அகத்திற்குள் இருக்கும் தீயிற்குள் (உயிறுக்குள்) அருள் சக்தியைப் பாய்ச்சி அந்த உணர்வலைகளை ஊட்ட வேண்டும்.

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காசைக் கொடுத்து யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்று நினைத்தால் அப்படி முடியாது. பாவத்தைச் சேர்க்கும் நிலையாகத் தான் ஆகும். ஆசை என்ற நிலைகள் வளரும். இருளைப் போக்கும் தன்மை நமக்குள் இருக்காது.

ஈஸ்வரா…! என்று உயிரை எண்ணி தீமை புகாது தடுக்கும் அந்தச் சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் இந்த இல்லத்தில் அமர்ந்து யாம் இதை உபதேசிப்பது.

ஆகவே குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் அருள் ஞானத்தைப் பெருக்கி அருள் உணர்வுகளைக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஊட்ட வேண்டும்.

1.பொறுமையுடன் பொறுத்திருந்து அருள் மணம் கமழும் வாக்கினை இந்தப் புது மனையிலே வெளிப்படுத்த வேண்டும்.
2.உலகிற்கு எடுத்துக்காட்டும் ஞானக் குடும்பமாக நாம் அனைவரும் வளர வேண்டும்.
3.அதை வளர்ப்பதற்குத் தான் இந்தப் பதிவும்… நினைவும்… மீண்டும் நினைவும்…!

இது தான் உண்மையான யாகம்.

ஆனால் யாகத்தை வளர்த்து மந்திரங்களைச் சொல்கின்றார்கள். இந்த மந்திரத்தை நாம் நுகர்ந்தால் உடலுக்குள் பதிவாகின்றது. இறந்த பின் அதே மந்திரத்தைச் சொல்லி நமது ஆன்மாவைக் கைகவல்யப்படுத்த உதவும்.

மந்திரத்தின் உண்மை நிலை இது தான்.

ஆனால் அருளைப் பெற வேண்டும் என்று அந்த மகரிஷிகளின் உணர்வுகளைச் செவி வழி உணர்ச்சிகளை உந்தி இரத்தத்தில் கலந்தால்
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் இந்த இல்லத்தில் பெருக்கப்பட்டு
2.இருளைப் போக்கி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் தன்மை வருகின்றது… பகைமையை அகற்றுகின்றது.

பெண்கள் தலையில் உருவாகும் பேன் பற்றிய உண்மைகள்

பெண்கள் தலையில் உருவாகும் பேன் பற்றிய உண்மைகள்

 

உதாரணமாக பெண்கள் தங்களது குழந்தைகள் மீது அன்பாக இருப்பார்கள்… பாசமாக இருப்பார்கள். ஆனால் பையன் சேட்டை செய்யும் பொழுது “சும்மா சேட்டை செய்கிறானே… தொலைஞ்சு போறவன்…” என்று, பெண்கள் தங்களது பையனைப் பேசி விடுவார்கள்.
1.தன் குழந்தை மேல் பாசமாக இருந்தாலும்
2.கோபத்தில் “தொலைஞ்சு போறவனே…!” என்ற வார்த்தையைச் சுலபமாகச் சொல்லிவிடுவார்கள்.

இதே போன்று மாமியார் மருமகளைப் பார்த்து ஒரு வேலையாக “ஏம்மா இப்படிச் செய்கிறாய்…? அதைச் செய்தால் என்ன…?” என்று ஒரு முறைக்கு இரு முறையாகச் சொல்லி விட்டால் போதும்.

உடனே மருமகள்… “சும்மா சொல்லிக் கொண்டேயிருந்தால் எப்படி…? நான் செய்ய மாட்டேனா… எனக்குத் தெரியாதா…?” என்று வெறுப்பை வெளிக்காட்டி விடுவார்.

1.இந்த உணர்வின் அலைகள் புவியின் ஈர்ப்பால் வீட்டில் பதிந்து விடுகின்றது.
2.பதிந்தபின் இந்த உணர்வுகள் அலைகளாக வெளிப்படுகின்றது.
3.நுகர்ந்த உணர்வுகள் அங்கே வெறுப்பாகின்றது.
4.வெறுப்பான உணர்வுகள் இருவரிடத்திலும் படரப்படும் பொழுது அது அவர்களிடம் விஷ அணுக்களை உருவாக்கத் தொடங்குகிறது,
5.அவர்களது உடலில் நல்ல குணத்திற்கு எதிர்மறையான உணர்வுகள் மோதும் பொழுது அவர்களது உடலில் அரிப்பு வரும்

சில வீடுகளில் சங்கடமும் சஞ்சலமும் இருந்தால் போதும். அங்கிருப்பவர்களுக்கு உடலில் அரிப்பு வரும்… பார்க்கலாம். அதுவும் சிறிது நாள் சென்றால் அவர்களுடைய தலைகளில் சீலைப் பேனாக மாறிவிடும்.

வீட்டில் சஞ்சலமும் சலிப்பும் சங்கடமும் வேதனையும் கொண்டவர்கள் தலையில் நிச்சயம் பேன் வரும்.
1.சந்தோஷத்தை உருவாக்கிப் பாருங்கள்… பேன் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.
2.ஏனென்றால் பேனிற்கு மனிதரின் சந்தோஷமான உணர்வுகள் எதிரி.

வீட்டில் சலிப்பு… மாமியாரின் கோபம்… பையனின் சேட்டை… கடை வியாபாரத்தில் மந்தம்… பக்கத்து வீட்டுக்காரரின் வம்பு… என்று பலவற்றை எண்ணிச் சலித்து வெறுத்துப் பேசிக் கொண்டிருந்தால் போதும். நிச்சயம் அவர்கள் தலையில் பேன் வரும்.

அந்தப் பேன் அவர் தலையை விட்டு இறங்கினால் அடுத்து சஞ்சலம் கொண்ட இன்னொருத்தரிடம்தான் போகுமே தவிர மற்றவர்களைப் பார்த்தால் அஞ்சி ஓடிவிடும். ஒரு வீட்டில் நாலைந்து பேர் இருந்தாலும் சஞ்சலம் கொண்டவரிடத்தில் மட்டுமே பேன்கள் உருவாகும்.

இது எதனால் இப்படி ஆகிறது…?

நமக்குள் எடுத்துக் கொண்ட மூச்சலைகளையும்… நாம் வெளிப்படுத்தும் எண்ண ஒலி அலைகளையும் சூரியனின் காந்தச் சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது.
1.மீண்டும் அதை நம்முள் சேர்த்தவுடனே அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
2.நம் உடலிலிருந்து வந்தது… நம் உடலிலேயே பாய்கின்றது.

இந்த உணர்வின் தன்மையை ஒட்டி இதனுடைய சக்தியை எடுத்து அது அணுவாக மாறுகின்றது. நம் உடலுக்குள் வந்து சாப்பிட ஆரம்பிக்கின்றது.

இதை நாம் தெரிந்து கொள்வது நலம்.

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!

தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…!

 

மைனர்கள் எல்லோரும் “தியானத்தில் இருந்தால் மட்டும் பத்தாது…” நீங்கள் ஒவ்வொருவரும் வழிகாட்டியாக அமைய வேண்டும்… உலகத்திற்கு எடுத்துக்காட்டாக ஞானிகளாக மாற வேண்டும்.

சாமி மீது உங்களுக்குப் பற்று அதிகமாக இருக்கலாம்… ஆனால்
1.பற்று எதுவாக இருக்க வேண்டும்…?
2.அந்த அருளைப் பற்ற வேண்டும் இருளைப் போக்க வேண்டும்.
3.அந்த அருள் பற்று தான் நமக்குத் தேவை.

சாமியினுடைய உடல் பற்றல்ல…!

1.சாமியைக் கௌரவிப்பதும் சாமியை உயர்வாகச் சொல்வதும் உடலைத் தான்.
2.சாமியிடம் கேட்கும் உபதேசங்களை… அந்த அருளைப் பற்றி அதை நாம் போற்றுதல் வேண்டும்.

சாமியிடம் இருக்கும் அருள் பற்று எப்படி இருக்க வேண்டும்…?
1.ஞானத்தை வளர்த்தால் சாமியின் உடல் பற்று வராது.
2.சாமியின் ஞானப்பற்று தான் உங்களுக்கு வரவேண்டும்.

“எங்கள் சாமி உயர்ந்தவர்…” என்று சொல்வதைக் காட்டிலும்…
1.”அந்த உயர்ந்த உணர்வு என்னிலே வளர்கிறது…” என்று
2.உலகிற்கு நீங்கள் எடுத்துக் காட்டினால்… வழி நடத்தினால் அருள் பற்று வருகின்றது.

இந்தத் தியானத்தைக் கடைபிடிப்போர்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் அனைவரும் இன்னொரு வேலை செய்ய வேண்டும். என்னுடைய உபதேசங்களை எழுத்து வடிவிற்குப் புத்தகமாகக் கொண்டு வர வேண்டும்.
1.அதை எழுதி என்னிடம் கொடுங்கள்… திருத்தங்களைச் சொல்லிக் கொடுக்கின்றேன்
2.ஒவ்வொருவரும் அருள் ஞானத்தை வெளிப்படுத்தும் நூல் ஆசிரியராக வாருங்கள்.

அந்த மாதிரிப் பழகிக் கொண்டால் பகைமைகள் புகாது தடுக்கலாம். அருளைப் பெருக்கலாம். இருண்ட உலகில் இருந்து மீட்டித் தெளிந்த மக்களாக கொண்டு வர முடியும்.

விஞ்ஞானத்தின் விளைவுகளிலிருந்து நம்மையும் நாட்டையும் உலகையும் காக்க முடியும்.

ஒரு வித்தை மண்ணில் ஊன்றினோம் என்றால் அது உபயோகமற்றதாக மாறுகின்றது. பின் செடியாக வளர்ந்து தன் இனத்தின் வித்தைக் கவர்ந்து எல்லோருக்கும் பசியாற்றுகின்றது.

இதைப் போன்று கருவில் வளரும் சிசுக்களுக்கெல்லாம் அருள் ஞான வித்துக்களைப் பதிவு செய்து ஊன்றினால் அவன் வளர்ந்து அருள் ஞானத்தைக் கொண்டு அனைவரையும் காக்கும் திறன் கொண்ட ஞானி ஆகின்றான்… நாட்டைக் காக்கும் ஞானியாகின்றான்.

இத்தகைய அருள் ஞானிகளை வளர்த்தால் தான்
1.இனி அரசாங்கங்க நிர்வாகத்தைத் தனதாக மாற்றி
2.“நாம்…” என்ற நிலைகளில் ஒன்றுபட்ட இயக்கமாக அவன் கொண்டு வருவான்.

இப்பொழுது உலகெங்கிலும் நடக்கும் அரசாங்கங்கள் அனைத்தும் “நான்…” என்ற நிலையில் தான் நடக்கிறது.

நாம் என்ற நிலையில் அத்தகைய அரசாங்கத்தை உருவாக்கி மகிழ்ந்து வாழும் மக்களாக நாம் உருவாக்க வேண்டும். அத்தகைய ஞானிகள் உருவானால் அனைவரையும் பிறவி இல்லா நிலை அடையச் செய்யும் அரும்பெரும் சக்தியாக அது மாறும்.
1.ஆகவே ஞானிகளை உருவாக்குவோம்.
2.நமக்கு இனி ஒரு பிறப்பு வேண்டாம்… நம்முடைய எல்லை ஒளி உடல் பெறுவது தான்.