
இயற்கையில் உருவாகும் சுழிக் காற்றும்… அதனின் விளைவுகளும்
வாழ்க்கையில் ஓரளவுக்கு நான் மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் காட்டுக்குள் என்னை அழைத்துச் சென்றார் குருநாதர்.
அங்கே பல பல தாவர இனங்களின் சத்துக்களை சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்தாலும் கவர்ந்த உணர்வலைகள் அலைகளாகத் தொடரப்படும் பொழுது அந்த ஒவ்வொரு உணர்வுகளும் எப்படித் தனக்குள் எடுத்து வளர்த்து தனது சக்தியாக… பல பல செடிகள் உருவாகி அது எப்படி வந்தது…?
ஒவ்வொரு செடியாக உருவாகி அதனின் மணங்கள் உணர்வலைகளாக வெளிப்பட்டதைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்ந்திருந்தாலும்
1.எந்தச் செடியாக உருவானதோ அந்தச் செடியில் இருந்து வெளிப்பட்ட இந்த உணர்வின் வித்து இன்னொரு பக்கம் பட்ட பின்
2.தன் தாய்ச் செடியில் இருந்து வந்ததைத் தன் இனமாகக் கவர்ந்து செடிகள் எவ்வாறு உருவாகிறது…? என்று நீ பார் என்று காட்டினார்.
அந்தச் செடிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அப்படி இணையப்படும் பொழுது சுழிக்காற்று உருவாகின்றது… நாம் பார்க்கலாம்.
மற்ற செடிகளின் உணர்வுகள் ஒன்றுடன் ஒன்று இணையப்படும் பொழுது சுழிக் காற்றுகளாக உருவாகி அதிலே எந்த உணர்வின் சத்து அதிகமாகின்றதோ அது மற்றதைக் கவர்ந்து அதற்குள் சேர்த்து… ஒரு உணர்வின் கருவாக உருவாகிப் புவியின் ஈர்ப்புக்குள் சென்று… “ஒரு புதுச் செடியாக உருவாகின்றது…”
இதைப் போன்று தான் மனித வாழ்க்கையில் நாம் உயர்ந்த குணங்கள் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தாலும்
1.பிறரிடமிருந்து வரும் எண்ணத்தின் உணர்வுகளை நாம் சுவாசித்து
2.நம் உயிருக்குள் பட்ட உடனே சுழிக் காற்று போல நமக்குள் அந்த சுழலும் தன்மை அடைகிறது.
நாம் ஒன்றைப் பார்த்த உணர்வினைப் பொறுமையாகக் கண் எடுத்துப் பதிவு செய்தாலும்…
1.அதனால் சுழலின் தன்மை ஆகி இரண்டும் ஒன்றாகி இது விளையும் கருவாக வித்தாக
2.தான் ஈர்க்கும் சக்தியாக உருவாவதை நீ பார் என்று உணர்த்தினார்.
இவ்வாறு உணர்த்தியபின் வாழ்க்கையில் மனிதர்கள் தவறு செய்யாமலேயே… தன்னை அறியாமலே பல வேதனைகளை எவ்வாறு படுகின்றனர்…? என்ற நிலையினைக் காட்டுகிறார்.
பிறருடைய எண்ணங்களை நமக்குள் எண்ணிய பின் இந்த உணர்வின் ஆற்றல் மறைந்து உடலில் புதுப்புது கருவித்துகளாக ஊன்றி இந்தக் காற்றிலே படர்ந்து வெளிப்பட்ட உணர்வுகளை அது தன்னிச்சையாகக் கவர்ந்து எப்படி வளர்கிறது…?
1.மனிதனுடைய நிலைகளே சீர்கெடும் நிலைகளுக்கு எப்படி உருவாகிறது…? என்று காட்டுக்குள்ளும் ஊரிலும் சுற்றிக் காண்பித்து
2.இதிலிருந்து மீளும் வழி என்ன…? என்ற நிலையையும் காட்டுகின்றார்.
அன்றைய மெய் ஞானியான அகஸ்தியன் தனக்குள் தீமையை வென்றிட தன் எண்ணத்தால் மேகத்தை உற்றுப் பார்க்கப்படும் பொழுது அந்த மேகங்களைத் தனக்குள் கவர்ந்து தன் உடலுக்குள் வரும் பொழுது நீராகச் சுரந்து தன் ஜீவித நிலைகளை உருவாக்குகின்றான்.
அதே போல் மற்ற தாவர இனச் சத்தை அவன் நுகர்ந்தறிந்து தன் உடலிலே பதிந்து கொள்கின்றான்.
1.எங்கே நின்று இதையெல்லாம் அவன் கவர்ந்தானோ அந்தப் பகுதிகளுக்கு எல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்றார்.
2.அந்தப் பகுதிகளில் அவனின் உணர்வலைகள் பூமியிலே படரப்பட்டு இன்றும் பல பல நீர் சத்துக்களை அது கவர்ந்து
3.அந்தப் பாறைகள் உணவாக எடுத்துத் தன் சத்தின் தன்மையாக அதை எப்படி மாற்றிக் கொண்டிருக்கின்றது…? என்று நீ பார் என்றார்.
பல பல தாவர இனங்களின் சத்தை உணவாக எடுத்து வளர்ச்சிக்கு வந்தாலும் அவனுக்குள் வளர்ந்த உணர்வின் சத்து எண்ணங்கள் ஆக மாறி அந்த எண்ணத்தின் வலு தொடர் கொண்டு விண்ணின் ஆற்றலை நுகர்ந்து தனக்குள் பெறுகின்றான் அகஸ்தியன்.
ஒவ்வொரு செடியும் நஞ்சின் தன்மை கொண்டு இயங்கினாலும் அந்தச் செடிக்குள் கலந்த நஞ்சின் சத்தை அகஸ்தியர் முறியடிக்கின்றார்.
அதாவது…
1.ஒரு நஞ்சு கொண்ட பாம்பு தனக்குள் இருக்கும் சத்தை…
2.மற்ற உயிரின்ங்களில் நஞ்சைப் பாய்ச்சி அதனைக் கரையச் செய்து தனக்குள் உணவாக எப்படி எடுத்ததோ
3.இதைப் போல மனிதனின் உணர்வுக்குள் இருக்கும் நஞ்சினை உணர்ந்து அதனைக் கரைக்கச் செய்து
4.அதைத் தனக்குள் செயலற்றதாக ஆக்கித் தன் உடலில் உள்ள அனைத்தையும் ஒளியின் உணர்வாக மாற்றினார்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.