பிறரைத் தாக்கும் நிலைகளுக்கு நம் எண்ணம் சொல் செயல் செல்லாது “எல்லோரையும் காக்கும் சக்தியாக” நாம் செயல்பட வேண்டும் – “தாக்கும் சக்தி.., காக்கும் சக்தி”

Image

healing rays

பிறரைத் தாக்கும் நிலைகளுக்கு நம் எண்ணம் சொல் செயல் செல்லாது “எல்லோரையும் காக்கும் சக்தியாக” நாம் செயல்பட வேண்டும் – “தாக்கும் சக்தி.., காக்கும் சக்தி”

 

(1)ஆனைமலைக் காட்டிற்குள் எம்மை அழைத்துச் சென்றார், குருநாதர்

ஒரு சமயம் குருநாதர் எம்மை யானைக் காட்டுக்குள் கூட்டிக்கொண்டு போனார். “நீ இதைப் போய் ஒரு அடையாளத்தை எடு”. இந்த இடத்தில் நீ போய் இருக்கவேண்டும் என்று சொல்கிறார்.

 

சாயங்காலம் பொழுது சாய்ந்த நேரம் ஆனைமலைக் காட்டுக்குள்ளே யானையைக் குழி தோண்டி பிடிப்பார்கள். யானைகளைக் குழி தோண்டிப் பிடிக்கின்ற இடம் அது. அந்த இடத்திற்கு, என்னை கூட்டிக்கொண்டு போகின்றார் குருநாதர்.

 

கூட்டிக்கொண்டு போகும்போது அவர் பின்னாடியே நான் போனேன். ஒரு பெரிய மரத்தின் அருகிலே  நின்று கொண்டார். ஒத்தையடிப் பாதை இருக்கின்றது. இங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் நான் நடக்க வேண்டும்.

 

சாயங்காலம் ஆறு மணிக்கு மேலே அங்கே யானைகள் நடமாட்டம் இருக்கக்கூடிய நேரம். தண்ணீருக்கோ தான் போகின்ற இடத்திற்கோ இருப்பிடத்திற்கோ போகக்கூடிய  நேரம்.

 

அப்படிப்பட்ட இடத்தில் கொண்டு போய்விட்டு நீ போய் இன்ன இடத்தில் இன்ன மாதிரி மரம் இருக்கின்றது. இன்னென்ன மாதிரித் தடம் இருக்கும். நீ அங்கே போய் ஒரு அடையாளத்தை எடுத்துக்கொண்டு வா என்கிறார், குருநாதர்.

 

“சரி…” என்று சொல்லிவிட்டுப் போனேன்.

 

ஒரு இரண்டு பர்லாங்கு நடந்திருப்பேன். இவர் இங்கே இருக்கிறார். அங்கே என்ன இருக்கின்றது? அந்தப் பக்கம் பதுங்கு குழி தோண்டிருக்கிறார்கள் அந்தப் பதுங்கு குழி தோண்டியிருக்கின்ற இடத்தில்  குச்சியை  ஊன்றிக்கொண்டே வருகிறது  ஒரு யானை.

 

முதலில் வந்தது ஒரு கொம்பானை பெரியது. அப்படியே ஆளைப் பார்த்தவுடனே காது இரண்டும் விடைத்துவிட்டது. “காதை விடைத்தாலே… அடிக்கும்” என்று தெரியும்.

 

நான் பேசாமல் இருந்தேன். பேசாமல் இருந்தோம் என்றால் ஒன்றுமில்லை.

 

இப்படிக் காதை தூக்கி, விடைத்து விட்டு நிமிர்ந்துவிட்டது. அதற்குp பயம் வந்துவிட்டது என்று அர்த்தம். “நிச்சயம் நம்மை அடிக்கும்” என்பது உறுதியாகி விட்டது.

 

இங்கே  எனக்கு தன்னாலே கலக்கின்றது.

 

(2) குருநாதர் எனக்குக் கொடுத்த “சக்தி”

ஆனால் குருநாதர் என்னிடம் “சக்தி” கொடுத்திருக்கிறார். எப்படிப்பட்ட சக்தி கொடுத்திருக்கிறார்?

 

அதாவது ஒரு யானையை…, “போகும் பொழுதே நீ இந்த மாதிரிச் சொல்லி செய்தாய்…” என்றால், அதற்குக் கையும் வராது காலும் வராது. அப்படியே நின்று போகும்.

 

அது எத்தனை வந்தாலும் நீ இதைச் சொல்லி நீ இப்படிச் செய்  என்கிறார் குருநாதர்.  ஆனால் அதையும் சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்தார்?

 

(3) மற்றொன்றைத் தாக்கும் சக்தியை எடுத்தால் அது நம்மைத்தான் முதலில் பாதிக்கும்

நீ கையும் காலும் வராதபடி அதை நினைத்து இதை நீ உனக்குள் எடுக்கும் போது அது “முதலில்” உன்னிடம் விளைகின்றது.

 

அப்பொழுது இது விளைந்த பிற்பாடு அந்தச் சக்தி கொண்டு யானக்குக் கை கால் வராமல் செய்யும்படி நீ செய்தாய் என்றால் என்ன ஆகும்?

 

1.இன்றைக்கு நீ செய்து விடுகின்றாய்.

2.கை கால் விளங்காத அந்தச் சக்தியை உன்னில் சேர்த்துக் கொண்டாய் அல்லவா.

3.அந்தக் கை கால் விளங்காத சக்தி உனக்குள் விளையும் என்று குருநாதர் இதையும் சொல்லி விட்டார்.

 

இதை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எதற்காக வேண்டி இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் குருநாதர் கஷ்டப்பட்டார் சில உண்மைகளைச் சொன்னார். மனித வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டி இதையெல்லாம் காட்டுகின்றார்.

 

காட்டுக்குள் யானை போகின்றது, புலி இருக்கின்றது, கரடி இருக்கின்றது, இத்தனையும் இருக்கின்றது, ஆனால், “இப்பொழுது நீ தைரியமாகப் போ” என்று சொல்லிவிட்டு, இந்தச் சக்தியைச் செய்தே காண்பிக்கிறார்,

 

குருநாதர். எம்மையும் அந்தச் சக்தியை “இப்படி அப்படிச் செய்து பார்க்கச் சொல்கிறார்…”

 

இப்பொழுது அங்கே போகும் போது நீ இந்த மச்சத்தை (அடையாளத்தை) எடுத்து வா என்று சொல்லி எனக்கு இப்படித்தான் அனுபவம் கொடுத்தார்.

 

அது ஒரு முச்சந்தி நான்கு சாலை சந்திக்கின்றது. முன்னாடி ஒரு கொம்பானை வருகின்றது. இதைப் பார்த்தவுடனே குருநாதர் நினைவு வருகின்றது.

 

அவர் கொடுத்த சக்தியை எண்ணினோம் என்றால் அதனுடைய கை கால் வாயைக் கட்டி நீ சில நிலைகளைச் செய்யலாம்.

 

அப்படிச் செய்தால் முதலில் இதை நீ எடுத்துக் கொள்கிறாய். அப்புறம் இது இணைத்து உன்னிடம் விளையும் இன்னும் கொஞ்சம் நாளில் உனக்கு கை கால் வராமல் போய்விடும்.

 

இந்த வயதுக்குள்ளே நீ எதை எடுக்கின்றாயோ, இப்பொழுதே நீ பார்க்கலாம். ஏனென்றால் ஒரு விதையைப் போட்டோம் என்றால் அது முளைக்கின்றது. நீ எந்த அளவுக்கு வேகமாக எடுத்து அதை முளைக்க வைக்கின்றாயோ அந்த அளவுக்கு அது முளைக்கின்றது.

 

அந்த அளவுக்கு அதை அடிக்கடி நீ செய்ய ஆரம்பித்துவிட்டால் சீக்கிரம் விளைந்து சீக்கிரமாகவே நீ கை கால் முடங்கி நீ இருந்து கொள்ள வேண்டும்.

 

இந்தச் சக்தியை எல்லாம் முதலில் எமக்குக் கொடுத்துவிட்டு இந்தச் சக்தியை நீ எடுத்துப் பயன்படுத்தினால் “இப்படியெல்லாம் ஆகும்” என்று சொல்கின்றார் குருநாதர்.

 

(4). “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே”

இதை  எதற்காக உங்களுக்குச் சொல்கிறோம் என்றால் இப்பொழுது அடுத்தவர்கள் என்ன செய்வார்கள்?

1.“உன்னை என்ன செய்கிறேன் பார்…?” என்று சொல்வார்கள்.

2.“நீ உருப்படுவாயா…” என்பார்கள்.

3.“நீ இப்படி நாசமாகப் போய்விடுவாய்…” என்பார்கள்.

 

இந்த உணர்வுகளை எல்லாம் முதலில் எடுத்துக் கொண்டால் என்னவாகும்? ஆக அதுவெல்லாம் முதலில் நமக்குள்ளே விளைகின்றது. அடிக்கடி சொன்னால் என்னவாகும்? அந்த உணர்வின் தன்மை நமக்குள் வளரும்.

 

நாம் சொல்லும் போது என்ன செய்யும்? அடுத்தபடியாக, இந்தச் சொல் அடுத்தவரிடம் பேசப் போனால் நமக்கு எதிரியாக வரும். “யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே”.

 

நீங்கள் பாத்திரத்தில் ஒரு பொருளைப் போட்டு, வேக வைத்தால் என்ன வாசனை வரும்? இதே மாதிரி உங்கள் எண்ணத்திற்குள் போட்டீர்கள் என்றால் அந்த எண்ணம் உள்ளே விழுகின்றது.

 

இந்த வேதனையும், சங்கடமும், எடுத்து வேக வைத்தால், கை கால் குடைச்சல் “அம்மா..,” என்று சொல்வோம். நல்ல சொல்லே நம்மால் சொல்ல முடியாது.

 

இதே சொல்லை அடுத்தவர்களிடம் பேசும் பொழுது இதனுடன் கலந்து பாலில் கொஞ்சம் போல காரத்தைப் போட்டால் என்ன செய்யும்?

 

சாப்பிட்டால், “உஷ்.., உஷ்..,” என்று சொல்லிவிட்டுப் பாலைக் குடிக்க முடியாமல் வைத்துக் கொண்டிருப்போம். பாலில் இனிப்பு மட்டும் தனியாக இருந்தால், “கட கட.. கட கட..” என்று போகும்.

 

இதைப்போல உங்கள் சொல் எந்தக் காரியத்திற்குப் போனாலும் நல்லவர்களையும் எதிரியாக்குகின்றது, உங்கள் மனதுதான்.

 

இதைச் சொல்கிறார் குருநாதர்.

 

இந்த வாழ்க்கையில் இப்படியெல்லாம் வரும். உன்னிடம் இப்படிப்பட்ட சக்தி இருக்கிறது என்று

1.நீ உன் திறனைக் காட்டினாய் என்றால்

2.இது எதிரியாகத்தான் வரும்.

 

(5) யானையிடமிருந்து தப்பிக்க “என் திறமைக்கு..” விட்டுவிட்டார் குருநாதர்

ஆனால் எனக்கு விஷயத்தைச் சொல்லாமல் யானைக்காட்டிற்குச் சொல்லி அனுப்பிவிட்டு இத்தனை சக்திகளையும் கொடுத்துவிட்டு வேறு எதுவுமே சொல்லாதபடி என் திறமைக்கு விட்டுவிட்டார் குருநாதர்.

 

ஆனால் இப்பொழுது உங்களுக்கு யாம் எல்லா விஷயத்தையும் சொல்கின்றோம்.

 

எனக்கு விஷயத்தைச் சொல்லாதபடி மந்திரத்தைக் கொடுத்து இதைச் செய் என்றால் கை கால் வராது. அங்கே புலி வருகிறதென்றால் இப்படிக் கட்டிவிடலாம் மண்டி போடச் செய்யலாம் எல்லாம் செய்யலாம்.

 

யானை… அது ஒன்றுமில்லாத ஐந்தறிவு ஜீவன். அதற்குத் தெரியாது. ஆனால் நீ எல்லா விஷயத்தையும் தெரிந்து எடுக்கின்றாய். உன்னிடம் நான் சக்தியைக் கொடுக்கின்றேன். இதை நீ செய்கின்றாய். ஆனால், இதை வைத்து அங்கே போகும் போது “இது தான் ஆகும்…” என்று சொல்கிறார்.

 

நான் இதை வைத்துக்கொண்டு என்ன செய்தேன்? அங்கே பார்த்தவுடனே  இது அத்தனையும் ஞாபகத்திற்கு வருகின்றது.

 

காப்பாற்றுவதற்கு என்ன வழி என்று குருநாதர் சொல்லவில்லை.

 

என்ன செய்வது…? வேறு வழியே இல்லை. அந்தச் சக்தி எனக்குத் தெரியாது.

 

ஆனால் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வேண்டி உயர்ந்த சக்தியை குருநாதர் கொடுத்திருக்கின்றார் என்று சொன்னால் என்ன செய்கின்றது?

 

அது கெடுதல். அது கை கால்களை முடக்கச் செய்கின்றது. அதற்கு புத்தி வரவழைப்பதற்குத் தெரியாது அப்போது அந்த யானைக்கு “நல்ல புத்தி வரவழைப்பதற்கு எப்படி…!” என்று சொல்லவில்லை குருநாதர்.

 

யானை அப்படியே குச்சியை ஊன்றிக் கொண்டு வருகின்றது. இப்படியே பார்க்கின்றது. முன்னாடி வந்த யானை என்னைப் பார்த்தவுடனே, காது இரண்டும் விடைத்துவிட்டது.

 

எப்படி…?

 

இப்படி முச்சந்தியில் நான் போனவுடனே பத்தடி வித்தியாசத்திற்குள்ளே இருக்கின்றது சந்திப்பு.

 

ஓடினால், தாவி இரண்டே எட்டில் எட்டிப் பிடித்துவிடும் வேறு வழி இல்லை. அதற்குப் பின்னாடி வருகின்றது ஒரு கூட்டம்.

 

ஏனென்றால் இந்தப் பதுங்குகுழி போட்டு வைத்துள்ளதால் அந்த வெறித்தனமாக வருகின்றது.

 

குழி தோண்டி வைத்திருக்கிறார்கள் என்பதால் மனிதனைக் கண்டால் விரட்டி விரட்டி அடிக்கும்.

 

அந்த மாதிரிக் குழிதோண்டி பிடிப்பதால் அதில் அது அனுபவப்பட்டது. அதனால், பயத்தினால் முதலில் அடித்துப் போட்டு விட்டுத்தான் இரண்டாவது மற்ற வேலையைப் பார்க்கும்.

 

இப்படி வந்துவிட்டது.

 

(6) யானையைப் பார்த்து, பயம் ஆனதும் எனக்கு ஏற்பட்ட நிலைகள்

அப்படியே நின்றவுடனே நான் வேஷ்டியில் கழிந்துவிட்டேன். முதலில் சக்தியைக் கொடுக்கின்றார். ஆனால் அதை அப்படிப் பயன்படுத்தினால் இப்படி ஆகிவிடுவாய் என்று அதையும் இவர் சொல்கிறார்.

 

கடைசியில் நம்மிடம் வந்தால் என்ன செய்யும் என்று அப்படியே கழிந்துவிட்டேன்.

 

இனி என்ன செய்வது…, “சாமி…” என்றேன் நான்

 

அப்படிச் சொன்னதும் “முன்னே வைத்த காலை…, பின்னே வைக்காதடா…” என்கிறார் குருநாதர்.

 

யானையைக் கண்டவுடனே, அவ்வளவு பயமான உணர்வுகள் எடுத்து, எம்மைக் கட்டுப்படுத்த முடியாதபடி உறுப்புகள் அனைத்தும் இயங்குகின்றது.

 

ஆக அந்தப் பயமான அலைகளைச் சுவாசித்து அதிக நேரம் வாழ முடியாது.

 

அப்படி எடுத்த சுவாசம் ஒரு செகண்டுக்குள்ளே “கட.. கட.. கட.., என்று வயிறு பொருமுகின்றது. எல்லாம் போகின்றது. எனக்கு பலவீனமாகின்ற மாதிரி ஆகிவிட்டது.

 

அந்தச் சுவாசத்தைக் காட்டுகிறார். அந்த இடத்தில் பய உணர்வுகளை நீ எடுக்கப்போகும் போது… எப்படியாகின்றது…? என்கிறார் குருநாதர்.

 

ஒரு மந்திர உணர்வை நீ எடுத்துச் சொல்லப்போகும் போது அது எப்படித் தாக்குகின்றது? அதே மந்திர உணர்வை நீ எடுத்து மற்றதை அழிக்கும் நிலைகள் கொண்டு வரும் போது பின்னாடி உன் உடலில் எப்படி விளைகின்றது?

 

இதுதான் அனுபவம்.

 

இது விளைந்த பிற்பாடு அடக்கி விடுகிறாய். பின்னாடி அதே  நிலைக்கு நீ ஆகின்றாய். அதுதான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்

 

“ஐய்யய்யோ.., நான் பிழைக்கப் போகின்றேனா?” அதை நினைத்தவுடன் அந்த உணர்வின் தன்மை கை கால் “வெட.. வெட.. வெட..,” என்று வருகின்றது

 

“முன்னே வைத்த காலை, பின்னே வைக்காதே” என்கிறார் குருநாதர்.

 

நான் எதைச் செய்வது? இங்கே தாங்க முடியவில்லை. வேறு வழி இல்லை. இப்பொழுது கோயிலில் போய் முறையிடுகின்ற மாதிரித் தான் யாமும் அந்த நேரத்தில் செயல்பட்டோம்.

 

(7) யானைகளுக்கு “என்னைத் தாக்காத எண்ணம் வரவேண்டும்” என்று எண்ணினேன்

குருநாதருடைய அருள்வழி எனக்குள்ளே இருந்து அதாவது, என்னைக் காக்கக்கூடிய எண்ணமாக எனக்குள் வளர வேண்டும்.

1.என்னைப் பார்க்கும்போது யானைக்கு “ஒரு நல்ல மனது”

2.அது என்னைத் தாக்காத எண்ணம் வர வேண்டும் என்று எண்ணினோம்.

 

ஏனென்றால் குருநாதர் இருப்பதனால், அவர் இவ்வளவு தைரியமாக அணுகுவதனால் இந்தக் கெட்ட சக்தியை எடுப்பதற்குப் பதில் குருவின் துணை கொண்டு அதை எண்ணி “தாக்காத எண்ணமாக எனக்குள் வரவேண்டும்” என்று எண்ணினோம்.

 

மலமெல்லாம் பயத்தில் கழிந்த பிற்பாடு “இனி எப்படியோ…!” விதி போல் ஆகின்றது. நாம் எண்ணிப் பார்ப்போம் என்று ஏங்கும் பொழுது “அப்படி உதயத்தைக் கொடுக்கிறார் குருநாதர்”.

 

அப்பொழுது அந்த உதயத்தைக் கொடுத்து அந்த அலைகளை எடுக்கும் போதுதான் அப்படியே நின்று செய்தவுடனே “கண்ணை இறுக்கி மூடிவிட்டேன்”.

 

இந்த வேகம் என்ன செய்கின்றது? எனக்குள் அந்த அலைகள் வருகின்றது.

 

போகிற யானை சும்மாவா போகின்றது. அது என்னை உரசிக் கொண்டே போகின்றது.

 

உரசியவுடனே என்ன செய்கின்றது? கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றேன். நினைவு எல்லாம் இங்கே இருக்கின்றது. “யானைகளுக்கு என்னைத் தாக்காத உணர்வு வர வேண்டும்” என்ற நினைவை ஓங்கி வளர்த்து குருதேவரை நினைத்து நின்றுவிட்டேன்.

 

யானைகள் அனைத்தும் எம்மை ஒன்றும் செய்யாமல் அமைதியாகச் சென்றன. பின் குருநாதர் சொன்ன அடையாளத்தை எடுத்து வந்தோம்.

 

இது நடந்த நிகழ்ச்சி.

கோபம் வந்தால் “உச்சி முடி நட்டமாக நிற்கிறது” பயம் வந்தால் உடல் “ஜில்…” என்று ஆகின்றது… ஏன்…?

Self control

கோபம் வந்தால் “உச்சி முடி நட்டமாக நிற்கிறது” பயம் வந்தால் உடல் “ஜில்…” என்று ஆகின்றது… ஏன்…?

நாம் சாதாரண மனிதர்களிடத்தில் தொடர்பு கொண்டு பேசுகின்றோம் சண்டை போட்டுக் கொள்கின்றோம், அல்லது சந்தோசமாக இருக்கின்றோம்.

ஏதாவது ஒன்றை நினைவுபடுத்தியவுடன் அந்த எண்ணங்கள் நமக்குள் தோன்றி அவர் பேசிய எண்ணங்கள் ஆத்திரமோ, கோபமோ, பயமோ, இதைப் போன்ற நிலைகளில் நாம் தொடர்ந்து அதைப் பேச ஆரம்பித்துவிடுகின்றோம்.

இவைகள் எல்லாம் ஒரு மனிதனுக்குள் பதிவு செய்து கொண்ட இந்த நினைவலைகள் நாம் சண்டை போடும் பொழுதும் பேசும் பொழுதும் இந்த உணர்வுகள் ஒவ்வொருவருக்குள்ளும் பதிவாகி விடுகின்றது.

அப்படிப் பதிவான உணர்வுகளை மீண்டும் நினைவுபடுத்தும் பொழுது உதாரணமாக நாம் பாசமுடன் இருந்து நினைவுபடுத்தினால் பாசமான உணர்வை நாம் சுவாசித்துப் பாசத்திற்குத் தக்கவாறு அன்றைய செயல் பேச்சு இருக்கும்.

அதே சமயத்தில் ஒருவருடன் கோப நிலைகளில் பேசி இருந்தால் அந்தக் கோபத்தில் அவருடை பேரைச் சொல்லி (அவர் நமக்கு இடைஞ்சல் செய்திருப்பார்)

1.அவரை நினைவுபடுத்தியவுடன் சண்டை போட்ட உணர்ச்சியின் உணவுகள் தூண்டப்பட்டு
2.அவரின் உணர்வைச் சுவாசித்து
3.ஆத்திரத்துடன் நாம் பதில் சொல்ல ஆரம்பிப்போம்.

அதே சமயம் அதே உணர்வுகளை நாம் வியாபாரத்தில் உட்கார்ந்திருக்கும்போது நினைவுபடுத்தினால் சரியான பதில் கொடுக்க மாட்டோம்.

ஏனென்றால் நமக்குள் வெறுப்பான எண்ணங்களைத் தோற்றுவித்தவருடைய உணர்வுகளைச் சுவாசிக்கும்போது இந்த உணர்வின் எண்ணம் “நமக்கு முன்னால்…” நிற்கின்றது.

அதாவது நாம் எதை எண்ணுகிறோமோ அந்த உணர்வின் அலைகள் நம் உடலைச்சுற்றி கவசமாக இருக்கும்.

1.அதுதான் முன்னாடி இருந்து நம்மை சுவாசிக்கச் செய்து
2.எந்த குணத்தில் இருந்தோமோ அந்த குணத்தைப் பாதுகாக்க
3.அதன்வழி ஞானத்தைக் கொடுக்கும்.

இப்பொழுது கோபமான நிலைகளில் நாம் பேசினால் அந்தக் கோபத்திற்குத் தகுந்தவாறு இப்படிச் செய்ததனால்தான் நாம் இப்படிச் செய்தோம் என்ற அந்த உணர்வு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய உணர்வின் ஞானத்தைப் பேசும்.

இதைபோன்றுதான் நம் உடலில் எந்தெந்த குணங்கள் இருந்தாலும் அதை நாம் நினைவுபடுத்தும்போது இந்த உணர்வுகள் ஆற்றல் பெற்று உடனே சுவாசித்து அது செயல்படுத்துகின்றது.

பல நிலைகள் நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன.

நாம் தவறு செய்யவில்லை. நாம் வயிறு நிறைய சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பிறர் நம்முடன் சண்டை போட்டதன் நினைவுகளை  நாம் கொண்டுவந்தவுடன் அன்று நமக்கு அஜீரணமாகின்றது அல்லது சாப்பிட்ட ஆகாரத்தை சரியாகச் செயல்படுத்துவதில்லை.

ஏனென்றால் நம் உடலில் “அனைத்து குணங்களின் செல்கள்” பதிவாகியிருக்கின்றது.

நாம் எந்த குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ அந்த உணர்வான செல்கள் அனைத்துமே ஒருங்கிணைந்து இயக்கப்படும்போது அதற்குத் தக்கவாறுதான்
1.நம் நரம்பு இயங்குவதும்
2.நம் சுவாசம் இயங்குவதும்,
3.குடல் இயங்குவதும்
4.நம் எண்ணங்கள் பேசுவதும் எல்லாமே.

கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால் உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும்.

பயம் கலந்த ஒரு கோபத்தை உண்டாக்கப்படும்போதும் சில்லென்ற நிலை ஏற்படும்படி எதிர்பாராத ஒரு பயத்தை உண்டாக்கினாலும் நம் தலைமுடி “கிர்..ர்ர்..” என்று மேலே எழுந்துவிடும்.

இவையெல்லாம் இந்த  உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான். நாமல்ல…!  நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.

இப்படித்தான் இயற்கையிலேயே நம்மை அறியாமலேயே, பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும்.

அதற்கு என்ன செய்வது…? அதற்குத்தான் இப்பொழுது தியானத்தின் நிலைகளை யாம் உங்களுக்கு உணர்த்துகின்றோம்.

மெய்ஞானிகள் அவர்கள் விண்ணுலக சக்தியைப் பெற்று அவர்கள்  உடலிலே அதை ஆற்றல்மிக்கதாக வளர்த்து அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலங்களில் அவர்கள் உடலில் ஆற்றல்மிக்க சக்திகளைப் பெற்று தன்னையறியாமல் ஆட்டிப்படைக்கும் உணர்வுகளை அவர்கள் அடக்கினர்.

நமக்கு கோபம் வருகிறதென்றால் நம்மையறியாமல் “துடிப்போம்”.

ஆனால் ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால்
1.அது அவர்களுக்குள் “அடங்கி…,”
2.அதற்குண்டான ஞானத்தை ஊட்டி
3.எந்தச் செயல் வேண்டுமோ அந்தச் செயலுக்குண்டான “வலுவை…” ஊட்டும்.

அந்த மெய்ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை நாமும் தியானத்தின் மூலமாகப் பெற்று நமக்குள் வரும் அனைத்துத் துன்பங்களிலிருந்து மீள்வோம். மற்றவர்களையும் மீட்டிடுவோம்.

ஒரு சொல்லைக் கேட்டவுடனேயே உணர்ச்சிவசப்படுவதைத் தடுக்கும் வழி (TENSION)

tension-stress-relief

ஒரு சொல்லைக் கேட்டவுடனேயே உணர்ச்சிவசப்படுவதைத் தடுக்கும் வழி (TENSION

இப்பொழுது நாம் நல்லவர்களாக இருக்கிறோம். ஒருவர் சிறு குற்றமான செயலைச் செய்கிறார். ஆனால் நம் மீது அந்தப் பழிச் சொல்லைச் சொல்கிறார்.

அந்தச் சொல் வெறும் வார்த்தைதான். அதைச் சொன்னவுடன் என்ன ஆகின்றது?
1.அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு நமக்குள் அடக்கமுடியவில்லை.
2.இவ்வாறு சொல்கிறானே…! என்று பதட்டமும்
3.பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.

ஏனென்றால் அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கி தவறு செய்யும் நிலைகளுக்கு எங்கிருந்து அந்தத் தவறு வந்ததோ அவர்களை அழிப்பதற்கு வருகின்றது.

“இல்லாததைச் சொல்கிறான்…” என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது. ஏனென்றால் அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.

ஆனால் மெய்ஞானிகள் விண்ணின் ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால்
1.அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும்
2.அவர்களுடைய உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை.

எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும் அந்த உணர்ச்சிகள் தூண்டாவண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள்
1.இவருடைய பார்வையில் பட்டவுடன்
2.அவர்களுக்குள் இருக்கக்கூடிய கெட்ட குணங்கள் அப்படியே அடங்கிவிடும்.

அதே சமயம் நாம் கோபப்பட்ட உணர்வுகள் உமிழ்நீராகச் சுரந்து நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

ஆகாரத்துடன் கலந்தவுடன் அது நம் உடலில் சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தியிழந்து அதனுடைய செயல்களைச் செயலாக்கத் தொடங்கி விடுகின்றது.

அது இரத்தமாக மாறி கோபத்தைத் தூண்டும் ஜீவ அணுக்களாக நம் தசைகளாக மாறிவிடுகின்றது. அதை மாற்றவில்லை என்றால் இரத்தக் கொதிப்பாக மாறி நம் அங்கங்களைச் செயலற்றதாக்கிவிடும்.

அதை நாம் எப்படி மாற்றுவது?

மெய்ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த பெரும் தொல்லைகளை நீக்க
1.விண்ணின் ஆற்றல்களை அவர்கள் பெற்று
2.அவர்கள் உடலிலே வந்த தீமைகளையெல்லாம் மாற்றி
3.உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர்.

அவர்கள் எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும் பேச்சாலும் சொல்லாலும் அவர்கள் வெளிப்படுத்தினார்களோ அந்த அலைகள் நம் பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது.

அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.

நம்மைப்  போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம் ஆற்றல் மிக்க உணர்வின்  சக்தி கொண்ட வெப்ப காந்தங்கள் தாக்கியவுடன் அது அழித்துவிடும்.

அந்த உணர்வுகள் இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு மற்ற உணர்வுகள் காரத்துடன் காரம் சேர்த்துக் காரமாக உருப்பெற்று மற்றவர்களைத் தாக்கும் உணர்வாகச் சென்றுவிடும்.

ஆனால் மெய்ஞானியின் சக்திவாய்ந்த உணர்வலைகள் புவிக்குள் வருவதை மற்ற சாதாரணமான நிலைகளால் அதைச் செயலிழக்கச் செய்யமுடியாது.

ஆகையினால் அந்த ஞானிகளுடைய சக்தியை மனிதன் சாதாரணமாக எடுக்க முடியாது.

1.வரும் தீமைகள நீக்கிட ஆத்ம சுத்தி செய்வதற்கு
2.‘’ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிருடன் தொடர்பு கொண்டு
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும்போது
4.நீங்கள் “நினைத்தவுடன்…” அந்த அருள் சக்தியைப் பெறமுடியும் என்று யாம் உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.

அதை எடுத்து உங்களுக்குள் உணர்ச்சியைத் தூண்டும் நிலைகளைச் சமப்படுத்த முடியும். சிந்தித்துச் செயல்பட முடியும். இரத்தக் கொதிப்பு வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

காரணம் அவர்கள் எடுத்துக்கொண்ட ஆற்றல் எவ்வழிகளில் பெற்றார்களோ அதை அவருடைய நிலைகளை உபதேசித்து உங்கள் உணர்வலைகளுக்குள் பதியச் செய்யும்போது இந்த உணர்வுகள் உங்களுக்குள் வித்தாக மாறுகின்றது.

அந்த வித்திற்கு நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்து ஊட்டினால்தான் அந்தச் சக்தி கூடும்.

‘’ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிருடன் தொடர்பு கொண்டு புருவ மத்தியில் நினைவுபடுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று எண்ணி
1.உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்தமுடியும்.
2.எல்லா அணுக்களிலும் செலுத்தி சர்வ தீமைகளையும் நீக்கி
3.உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி மகிழ்ந்து வாழ முடியும்,
4.பிறவியில்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் நாம் அனைவரும் பெற முடியும்.

போகமாமகரிஷி தன் உயிராத்மாவிற்குப் பெற்ற “காயகல்ப சக்தி”

Image

Rishi Bogar

போகமாமகரிஷி தன் உயிராத்மாவிற்குப் பெற்ற “காயகல்ப சக்தி”

 

தாவர இனச் சத்தினை நமக்குள் எடுத்தாலும் “காயகல்ப சித்தி” இந்த உடலுக்கு உதவாது என்பதை அறிந்தார் போகமாமகரிஷி.

 

தாவர இனச் சத்தின் நிலைகள் கொண்டு உடல் பிணிகளை நீக்கினாலும்

1.அதற்குள் இருக்கும் விஷத்தின் ஆற்றல்

2.உடலின் திசுக்களில் எதிர் நிலையை உருவாக்கிவிடும் என்பதை போகர் அறிந்து உணர்ந்தார்.

 

நம் உடலுக்குள் இருக்கும் எண்ணத்திற்குள் எத்தனையோ கோடி உணர்வுகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

 

ஒரு உணர்வின் தன்மை கொண்டு உடலில் பிணியாக வந்தாலும் அதற்கு வேறொரு சத்தின் தன்மையை நமக்குள் செலுத்தப்படும் பொழுது இது நிவர்த்தியாகும்.

 

ஆனால் இதற்கு எதிரான வேறொரு அணுக்களை இது புசிக்கும் பொழுது எதிர்நிலைகள் கொண்டு அணுவின் தன்மை வளர்ந்து விடுகின்றது.

 

ஆனால் கடினமான நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மைக்கு விஷத்தின் ஆற்றல் கொண்ட தாவர இன சத்தை ஊட்டினாலும் இந்த உணர்வின் நிலைகள் கொண்டு மாய்த்துவிடலாம். ஆனால்

1.அதைவிட எளிமையான நிலையில் (நம் உடலுக்குள்) இருப்பது

2.இந்த விஷத்தை (நோயை) அழிக்கும் இந்த உணர்வின் ஆற்றல் நம் உடலுக்குள் நின்று

3.இந்த ஆவியின் தன்மையில் தான் ஏற்றுக்கொள்ளும் நிலைகள் தடுமாறி,

4.அதனுடைய நிலைகள் நிலைகுலையச் செய்யும் ஆற்றல் பெற்று விடுகின்றது.

 

அவ்வாறு அதற்கு மேல் சேர்ந்தாலும் அதனுடைய நிலைகள் தவறிழைக்கப்படும் பொழுது அந்த அணுவின் தன்மை மாறுகின்றது.

 

இந்த உடலில் இருக்கக்கூடிய உபத்திரவத்தை நீக்கினாலும் நல்ல உணர்வின் தன்மைகள் சாந்த உணர்வை ஊட்டும் உணர்வின் தன்மையை… “விஷத்தின் ஆற்றல்” இதைத் தாக்கப்படும் பொழுது அதனுடைய நிலைகளை நிலைகுலையச் செய்கின்றது.

 

நமக்குள் சாந்தத்தை ஊட்டி அதைக் கொண்டு சிந்திக்கச் செய்யும் உணர்விற்குள் விஷத்தின் தன்மை ஆனவுடன் துரித எண்ணங்கள் கொண்டு சிந்தனையுடைய நிலைகள் இதைச் செய்யும்.

1.அந்தத் துரித வேகத்திற்கு ஈடு செய்யும் முறையில்

2.எதிர் நிலையில் இருக்கும் செயலாற்றல் குறைவாக இருந்தால்,

3.உடனே அதிக வேகமும் ஆத்திரமும் உண்டாகும்.

 

இதைப் போன்ற உணர்வுகளைத் தோற்றுவிக்கும் உணர்வின் நிலைகளை போகமாமகரிஷி தெள்ளத் தெளிவாக தேர்ந்தெடுத்துத் தனக்குள் இருக்கக்கூடிய “விஷத்தின் ஆற்றலை ஜீரணிக்கக்கூடிய சக்தியை” உருவாக்கினார்.

 

1.நட்சத்திரங்கள் தனக்குள் ஆற்றலைச் சிறுகச் சிறுகச் சேமித்து

2.அந்தச் சேமிப்பின் தன்மை கொண்டு உலோகத் தன்மையை உருகச் செய்து

3.விஷத்தின் ஆற்றலை அடங்கச் செய்து தன் ஆவியின் தன்மையை வெளிப்படுத்தும் பொழுது,

4.அது விஷத்தின் தன்மையைப் பிரபஞ்சத்தில் வெளிப்படுத்துகிறது.

 

அதைப் போன்று மனித உடலுக்குள் எடுத்துக் கொண்டாலும் இந்த விஷத்தின் தன்மை சிறுகச் சிறுகக் கூடி இந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருத்து விட்டால் அதை அடக்கும் தன்மையான “வெப்ப நிலைகள்” தேவை.

 

அந்த நிலைகள் சூரியனுக்குள் உதிக்கும் ஒவ்வொரு பாதரசத்திலும் அது உமிழ்த்தி வெளிப்படுத்தும் நிலைகளிலும் விஷங்கள் உண்டு. அதற்குண்டான காந்தமும் உண்டு.

 

இதைப் போன்று நாம் சுவாசிக்கும் உணர்வின் தன்மையில்

1.விருப்பு வெறுப்பு என்ற உணர்வுகள் நம்மை அறியாமல் உட்செல்லும் பொழுது

2.அதற்குச் சமமான வெப்பத்தைக் கூட்டவில்லை என்றால்

3.அதனுடைய ஆற்றல்மிக்க நிலைகள் நம் உடலில் செயல்படுத்திவிடும்.

 

தாவர இனச் சத்தினுடைய நிலைகளை நாம் கொடுத்து நம் உடலிலுள்ள பிணிகளை நீக்கினாலும் அந்தத் தாவர இன சத்தின் நிலைகள் “மற்ற நிலைகளில் பாதிப்பதைத் தடுக்க முடியாது”.

 

இதை போகமா மகரிஷி தனக்குள் கற்றுணர்ந்து எத்தகைய நிலைகள் வந்தாலும்…, “சாந்தத்தை உருவாக்கும் காந்தத்தைத்” தனக்குள் சேர்த்துக் கொண்டார்.

 

அப்படி எடுத்துக் கொண்ட வெப்ப காந்தத்தின் நிலைகள் பிறிதொன்று தன்னை அணுகாத நிலைகளில் தற்காத்துக் கொண்டு ஆற்றல் மிக்க நிலைகளாக நமக்குள் எவ்வாறு செயல்படுகின்றது என்ற பேருண்மையை போக மாமகரிஷி கண்டுணர்ந்தார்.

அகண்ட அண்டத்தையும் ஆதி சக்தியின் இயக்கத்தையும் கண்டுணர்ந்த “அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி” நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா

Image

agastyamala idol

அகண்ட அண்டத்தையும் ஆதி சக்தியின் இயக்கத்தையும் கண்டுணர்ந்த “அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி” நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா

 

இன்று விஞ்ஞான அறிவு கொண்டு பல மைல் உயரத்தில் விமானத்தில் சென்று காந்தப் புலனறிவை உயரத்திலிருந்து பாய்ச்சி நீர் எங்கு அதிமாக உள்ளது? எந்தப் பாறை உள்ளது? என்று கண்டுணருகின்றனர் விஞ்ஞானிகள்.

 

அவர்கள் பூமி தன் ஆத்மாவாக எடுப்பதைத்தான் அவ்வாறு கண்டுணர்ந்து அதன் மூலமாகத்தான் இதையெல்லாம் அறியும் நிலை பெறுகின்றனர்.

 

மகரிஷிகள் பண்டைய காலங்களில் அவர்களது நுகரும் சக்தியால் இப்பூமிக்குள் இருக்கும் வெப்ப நிலையையும் அது அனைத்தும் ஆவியாக மாறித் தாவர இனங்களாக மாறி பரமாத்மாவில் தாவர இனச்சத்து சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்டுக் கலப்பதை அறிந்துணர்ந்தார்கள்.

 

தம் உடலில் உள்ள உணர்வின் இயக்கத்தைக் கண்டறிந்த மகரிஷிகள் தம் எண்ணத்தைப் பூமிக்குள் செலுத்தி அதற்குள் இருக்கும் தாவர இனச்சத்தையும் பாறைகளின் நிலையையும் நுகர்ந்தறிந்தார்கள்.

 

இன்றைய விஞ்ஞானிகள் “இயந்திரத்தின் துணை கொண்டு” கண்டுணர்கின்றனர்.

 

அன்றைய நிலையில் மகரிஷிகள் பூமிக்குள்ளிருக்கும் வெப்ப நிலைகளையும் மாற்றங்களையும் காடுகள் உருவாகின்றதையும் “தம் உணர்வின் ஆற்றலால்” கண்டுணர்ந்தார்கள்.

 

1.ஒரு உயிரணு தனக்குள் நுகர்ந்து உணர்ந்து உடலாகும் நிலையும்

2.புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையும்

3.மனிதனானபின் தன் ஆற்றல்மிக்கச் சக்தியால் தாம் கண்டுணரும் சக்தி பெற்று,

4.இந்த பூமிக்குள் இருக்கும் செயலாக்கத்தைத் தன் உடலில் இருக்கும் உணர்வலைகளைச் செலுத்தி

5.அதையெல்லாம் அறிந்து கொண்டனர்.

 

அகத்தியர் என்பவர் முதல் மனிதனாக

1.இயற்கையின் மாற்றம் எவ்வாறு ஆகின்றது?

2.இயற்கையின் அணுவின் ஆற்றல் எவ்வாறு ஆகின்றது?

3.அணுவின் வளர்ச்சி எவ்வாறு ஆகின்றது? என்ற நிலைகளைக் கண்டுணர்ந்தார்.

 

பூமிக்குள் நடக்கும் செயல்களையும் உறைந்த நிலைகளும் விண்ணின் ஆற்றல்களையும் வேறு பிரபஞ்சத்தில் ஏற்படும் சில நிலைகளையும் அவர் அறிந்துணர்ந்தார்.

 

நமது பூமிக்குள் ஏற்படும் மாற்றங்களையும் பூமியிலிருந்து வெளிப்படுவதைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து பூமியில் பரமாத்மாவாக மாறுகிறது என்ற நிலையையும் அவர் தெளிவாகக் கண்டுணர்ந்தார்.

 

அவர் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வின் அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து இன்றும் பூமியிலே படர்ந்து கொண்டிருக்கின்றது.

 

விண்ணுலகின் ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் முதல் மனிதனான அகத்தியர் புழுவிலிருந்து மனிதனாக மாறிப் பேரண்டத்தின் சக்தியையும் பூமிக்குள் இருக்கின்ற சக்தியையும் பூமிக்குள் இருக்கும் உணர்வலைகளையும் கண்டுணர்ந்தார்.

 

தனக்குள் (மனித உணர்வுக்குள்) கண்டுணர்ந்ததைச் சக்தி வாய்ந்ததாக மாற்றி

1.தன் எண்ணத்தை எங்கும் செலுத்தி

2.எதனையும் அறிந்திடும் ஆற்றல்மிக்க உணர்வின் சத்தைத் தனக்குள் வளர்த்துக் கொண்டு

3.தனக்குள் உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொண்டவர் அகத்தியர்.

 

“அணுவின் ஆற்றலை அறிந்தவர்” என்று சொல்வார்கள். இன்று கதைகளில் வரும் அகத்தியர் இவரல்ல.

 

அன்று பல இலட்சம் ஆண்டுகளுக்குமுன் முதல் மனிதனாக விண்ணின் ஆற்றலைக் கண்டுணர்ந்தவரே அகத்தியர். சந்தர்ப்பவசத்தால் அவருக்கு இத்தகைய ஆற்றல் கிடைக்கின்றது.

 

1.அவர் கற்றுணர்ந்த இந்த உணர்வுகள்

2.அவர் உடலிலே விளைந்த ஆற்றல்மிக்க சக்திகள்

3.இன்றும் பூமியிலே பரமாத்மாவில் கலந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.

 

அதை நுகரவே இந்த உபதேசம். நுகர்ந்தால் அவரைப் போன்று நாமும் மெய்ஞானியாக முடியும். அவர் ஈர்ப்பு வட்டத்தில் நாம் இணைந்து வாழலாம்.

“விண் செல்லும் மார்க்கம்” – குருநாதர் தான் விண் செல்வதை என்னைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்தார்

Image

Astral path and way

“விண் செல்லும் மார்க்கம்” – குருநாதர் தான் விண் செல்வதை என்னைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்தார்

 

வைகுண்ட ஏகாதசி என்ற நந்நாளில் தான் குரு பூஜையாக வைத்துள்ளோம்.

 

குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு ஒளியின் சுடராக ஒளியின் சரீரமாகி எந்த உடலின் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றார். (1971)

 

ஒளியின் சுடராக அவர் தனக்குள் மலரச் செய்து மனித வாழ்க்கையில் வந்த இருள் சூழ்ந்த நஞ்சினை மாய்க்கும் ஆற்றல்மிக்க சக்திகளை  அவர் வெளிப்படுத்தியுள்ளார்,

 

அந்த உணர்வலைகள் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இந்தப் பூமியில் சுழன்று கொண்டிருக்கின்றது. அவர் விண் சென்றது போல் நீங்கள் அனைவரும் அந்த ஆற்றல்களைப் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் “குரு பூஜை”.

 

1.”குரு…” என்பது

2.நாம் எதை ஆழமாகப் பதியச் செய்கின்றோமோ

3.அதை மீண்டும் செய்ய எண்ணும் பொழுது

4.அது குருவாக நின்று நமக்குள் செயல்படுத்துகின்றது.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தன் உணர்வுகளை ஒளியாக மாற்றி ஒளியின் சுடராகச் சென்ற அந்த நாள் தான் வைகுண்ட ஏகாதசி.

 

அவர் ஒளிச் சரீரத்தைப் பெற்றபின் தான் உடலை விட்டுச் செல்லும்போது “என்னைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்தார்”.

 

இந்தப் பூமிக்குள் நான் வாழ்ந்த காலங்களில் எத்தனையோ உணர்வு கொண்டு எல்லோரிடமும் பழகினேன். அதே சமயம் எல்லோருடைய நோய்களையும் நீக்கவும் உதவினேன்.

 

அவர்கள் அனைவரும் என் பால் பற்றுதலும் கொண்டார்கள். இருப்பினும்

1.அவர்களுடைய பாச உணர்வுக்குள் சிக்காது

2.அவர்கள் எண்ணும் ஏக்கம் என்னை இயக்காது

3.அவர்களுக்குள் உள்ள இருள்களை நீக்கிடவும்

4.மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்ற நிலைக்குத்தான் என் உணர்வுகள் செயல்பட்டது.

 

இந்த உடலை விட்டு (உயிரான்மா) “நான் செல்கின்றேன்”. ஒளியின் சுடராக எவருக்கும் சிக்காது இந்த உயிரான்மா எப்படிச் செல்கிறது என்று “பார்…” என்று உணர்த்தினார்.

 

குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி சுமார் 30 வருடங்கள் காடு மேடெல்லாம் அலைந்து யாம் அனுபவபூர்வமாகப் பெற்ற நிலைகளைத்தான் “விண் செல்லும் மார்க்கமாக” உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

 

5000 வருடங்களுக்கு முன் விண் சென்றவர்கள் பலர். அதன் பின் விண் சென்றவர்கள் மிகவும் சொற்பம் தான். ஆதிசங்கரருக்குப் பின் முற்றிலும் அது தடையாகி விட்டது.

 

1.அதையெல்லாம் குருநாதர் தெளிவாக்கி விண் செல்லும் ஆற்றல்களைக் கொடுத்தார்.

2.என்னையும் பெறும்படி செய்தார்.

3.இதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்றார்.

 

அவர் இட்ட கட்டளைப்படித்தான் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

நாம் பேசும் பேச்சுக்கள் “தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகி” என்ன செய்யும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

Remote action

நாம் பேசும் பேச்சுக்கள் “தரைகளிலும் சுவர்களிலும் பதிவாகி” என்ன செய்யும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்

எத்தனையோ பேர் குருநாதரோடு (மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்) பழகினார்கள்.

அவர் ரசமணி செய்து கொடுத்தால் சக்தி கிடைக்கும். அவரிடம் சித்துகள் பெற்றால் நானும் சக்தி பெறுவேன் என்று அந்த ஆசையில்தான் வந்தார்கள்.

அவர் யாரிடமெல்லாம் பழகினாரோ அவர்களெல்லாம் சாமி எங்கள் வீட்டில் தான் படுத்திருந்தார். நான் சோறு போட்டேன் என்று சொல்லுவார்கள்.

அதே சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வந்தால் மலம் இருந்து வைத்து விடுவார். துணியைக் கிழித்து வைத்து விடுவார் என்று சொல்லுகிறவர்களும் உண்டு.

நம் வீட்டிற்கு வந்தாலும் தொட்டியில் இருக்கின்ற தண்ணீரில் தவிடை எடுத்துப் போட்டு “அனைத்தும் அசிங்கமாயிடுச்சு”என்று சொல்லி அனைத்தையும் கொட்டிவிடச் சொல்வார்.

குடத்தில் இருக்கும் தண்ணீரை வீடு முழுவதும் ஊற்றிவிட்டு “வீடு அசிங்கமாக இருக்கு, அதைக் கழுவுகின்றேன்”என்று சொல்வார். வீட்டிற்குள் சின்ன ரூமில் சிறுநீர் கழித்துவிட்டு “எவனோ அசிங்கம் பண்ணி வைத்திருக்கான். அதைக் கழுவ வேண்டும்” என்பார்.

எனது (ஞானகுரு) மாமியார் “பைத்தியத்தை வீட்டுக்குள் விட்டு இந்த மாதிரி செய்கின்றான்”என்று சொல்லி என்னைத் திட்டும்.

ஒரு நாள் இங்கே வந்து “இந்தச் சொத்து போய்விடும்.., இந்த வீடு போய்விடும், எல்லாமே போய்விடும்..”என்று குருநாதர் சொல்கிறார்.

இது சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுது மாமியார் அருளாட ஆரம்பித்து விட்டது. “உடம்பெல்லாம் எரியுது தண்ணீர் ஊற்று” என்று சொல்கிறது.

குருநாதர், “எனக்குத் தெரியாமல் எப்படி இந்தச் சாமி வருகிறது” என்று சொல்கிறார். “எரியுதா…!” “உனக்கு இன்னும் எரியும் பார்” என்கின்றார். அக்கினியாகின்றது.

“அந்தக் கிழவனை போகச் சொல்”என்கிறது அந்த அம்மா.

என்னிடம்“தண்ணீர் எடுத்து அடி”என்றார், அடித்தவுடன் கீழே விழுந்துவிட்டது. அது உடலில் இருந்த பேய் போய்விட்டது.

கழுவிவிட வேண்டும் என்று சொன்ன நிலைகள்
1.இந்த வீட்டில் “அந்த அம்மா பாதங்களால் பதிவானது”
2.என் மனைவியின் சின்னம்மா அது சாபமிட்ட அலைகள் இங்கு இருக்கின்றது
3.அதனால் தான் தண்ணீரை ஊற்றி கழுவச் சொன்னேன் என்றார் குருநாதர்.

துணியைப் போட்டுத் தேய்க்கின்றார் குருநாதர்.

எல்லாம் போய்விட்டது என்றேன் நான்.

உன் கண்களுக்குத் தெரியவில்லை, நீ முட்டாள்டா என்கிறார். “உற்றுப் பார்…” என்றார்.

“பார்க்கும் பொழுது” அந்தம்மா திட்டியது…, பேசியது…, எல்லாம் டேப் ரிக்கார்டரில் பதிவான மாதிரி.., சுழன்று கொண்டு இருக்கின்றது.

இதுவெல்லாம் நடந்த நிகழ்ச்சிகள்.

நாம் வீட்டில் வாழ்ந்தவர்கள் இறந்து போய்விட்டார்கள் என்று நினைக்கிறோம். அவர்கள் உடலில் எந்தெந்த எண்ணங்களை வேகமாக எண்ணினார்களோ
1.பூமியில் (தரையில்) இருக்கின்ற காந்தம்
2.அதைப் பதிவு செய்து வைத்துக் கொள்கின்றது.

சில பேர் நல்லவர்களாக இருப்பார்கள். பக்கத்து வீட்டுகாரர் என்ன செய்வார்?

குடும்பக் கஷ்டங்களை எல்லாம் உங்களிடம் பேசினால் நிம்மதியாக இருக்கின்றது என்று சொல்லி உட்கார்ந்து இரண்டு பேரும் பேசுவார்கள்.

1.எந்த இடத்தில் உட்கார்ந்து பேசினார்களோ
2.அந்த இடத்தில் பதிவாகிவிடும். அந்த அலைகள் எல்லாம் சேர்ந்து விடும்.
3.அடுத்து நிம்மதியாக இருந்த வீட்டிற்குள் சண்டையும் சச்சரவுமாக வந்து விடும்.
4.நாங்கள் என்ன பாவம் செய்தோமோ… தெரியவில்லையே…! என்பார்கள்.

காரணம் இரண்டு பேரும் கலந்து உறவாடிய உணர்வுகள் தரையிலும் அடுத்து அந்த வீட்டின் சுவரிலும் பதிவாகி விடுகின்றது.

சங்கடமாக இருந்தால் “வேறு எங்கும்” போக மாட்டார்கள்,
1.சங்கடமாக எங்கு பேசினார்களோ..,
2.அங்கு போய்த் தான் உட்காருவார்கள்.

இதே மாதிரி நீங்கள் வெளி இடங்களிலும் பார்க்கலாம்.

சாதரணமாக சுற்றுலா மையங்களில் பார்த்தால் சில பேர் ஒதுங்கித் தனியாகப் போவார்கள். உட்காருவதற்கே இடமிருக்காத அந்த இடங்களில், ஒற்றைக் காலில் நிற்பார்கள்.
1.ஊரில் இருக்கின்ற குறைகளெல்லாம் பேசிக் கொண்டு இருப்பார்கள்.
2.இவை அனைத்தும் அந்த இடங்களில் பதிவாகும்.

அந்த இடத்திற்கு வந்தவுடனே ஊரில் உள்ள குறைகளைப் பேசிக் கொண்டே இருப்பார்கள். குறைகளைப் பேசப் பேச, அவர்கள் தொழில் நலிந்துவிடும்.

1.உலகத்தில் எல்லோரும் ஏமாற்றுகின்றார்கள்,
2.ஏமாற்றுபவர்கள் நன்றாக இருக்கிறார்கள்
3.நம் தொழில் மட்டும் நலிந்து கொண்டே இருக்கின்றது என்று சொல்வார்கள்.

நான் குமாரபாளையத்தில் இருக்கும்பொழுது தலையில் உருமா கட்டிக் கொண்டு சுற்றுலா செல்வார்கள். சின்ன ஒற்றைக் கல்லில் ஒரு காலில் நின்றுகொண்டு பேசுவார்கள். அதைப் போய் பார்க்கச் சொல்வார் குருநாதர்.

அங்கு சென்று பார்த்தால் பேசியது எல்லாம் அங்கு பதிவாகி இருக்கும், அதெல்லாம் டேப் செய்யப்பட்டு இருக்கும், அந்த உணர்வலைகளைக் கவனித்தால் அவர்கள் பேசியதெல்லாம் இருக்கும்.

நமது உயிர் எலெக்ட்ரிக். நாம் நுகர்வதை (சுவாசிப்பதை) எலக்ட்ரானிக்காக மாற்றுகின்றது. ஒவ்வொரு நிலையிலும் கரண்டை உற்பத்தி செய்கின்றது. எடுத்துக் கொண்ட உணர்வை அலைகளாக இயக்குகின்றது.

இந்த உண்மையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் என்னைக் காடு மேடெல்லாம் அலைய வைத்தார். மெய்ஞானியின் உணர்வைப் பெறக்கூடிய நிலைகளை உணர்த்தினார்.

அந்த மெய்ஞானிகளின் உணர்வை வளர்த்து அதைப் பெற வேண்டுமென்று அவர்கள் பெற்ற உணர்வை வளர்த்தால் நாம் அங்கே போகலாம்.

நமது எல்லை துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பில் வாழும் சப்தரிஷி மண்டலமாகத்தான் இருக்க வேண்டும். அந்த உணர்வை வளர்த்து அங்கே செல்வதுதான் “மனிதனின் கடைசி எல்லை”.

அந்த எல்லையை அடையும் அருள் வாழ்க்கையை நீங்கள் அனைவரும் வாழ குரு அருளும் எமது அருளும் எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

இன்று பெண்கள் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதால்… “சாப அலைகளாகி” உலகில் பெரும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றது

Adhi sakthi - earth change

இன்று பெண்கள் அதிக அளவில் துன்புறுத்தப்படுவதால்… “சாப அலைகளாகி” உலகில் பெரும் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றது

மிருகங்களில் ஆண் பெண் என்ற நிலை இருக்கப்படும் பொழுது, ஆணுக்கு ஆணே போர் செய்கின்றன. பெண் மிருகங்களைப் போரில் இணைப்பதில்லை.

மிருகங்களில் ஆணுக்கு ஆண்தான் மோதுகின்றதே தவிர பெண் பாலை அரவணைத்தே செல்கின்றது. ஆனால் மனிதர்களாக இருக்கும் நாம் பெண்களைத் துன்புறுத்தும் நிலையே இன்று இருக்கின்றது.

1.பெண்களைத் துன்புறுத்தும் நிலையில் வேதனை என்ற உணர்வுகள் கலந்தால்
2.ஆண் பெண் என்று இருவருடைய உணர்வுகளிலும்
3.வேதனை என்ற விஷத்தின் தன்மை கலக்கின்றது என்பதை உணர்வதில்லை.

காரணம் பெண்பாலில் உருவாகும் வேதனை என்ற விஷத்தின் தன்மையினை ஆண்பால் நுகர நேர்ந்தால் வெறுப்பாகவோ வேதனையாகவோ இருந்து அதனின் விஷத்தன்மை அதிகரித்து அங்கே படர்கின்றது.

பெண்பால் வேதனை என்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது கேட்போர் மற்றும் வேடிக்கை பார்ப்போரின் உணர்வுகளிலும்கூட அது பதிவாகின்றது.

ஆகவே பெண்களைத் துன்புறுத்தும் நிலையினை விடுத்துப் பழகவேண்டும். ஏனென்றால் பெண்பால் எத்தகைய துன்பங்களை அனுபவிக்கின்றதோ அதன் உணர்வின் தன்மையினை வெளிப்படுத்தும் பொழுது இந்த வேதனையின் உணர்வுகள் “புவியின் காற்றில்” பரவுகின்றது.

பெண்களைத்  துன்புறுத்தும் உணர்வுகள் அதிகரித்தால் ஆண்களும் நரகவேதனை என்ற நிலைகளை அனுபவிக்க நேரும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் எத்தனையோ துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்கள் விடும் மூச்சலைகளெல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் படர்கின்றன.

1.சோகமும் வேதனையும் கொண்ட இத்தகைய உணர்வுகள் காற்றில் படரும்பொழுது
2.நம் பூமியின் நிலைகளில் மாற்றங்களே ஏற்படும்.
3.இங்கு மட்டுமல்ல உலகெங்கிலுமே பெண் இனத்தைத் துன்புறுத்தும் நிலை இருக்கின்றது.

மற்ற உயிரினங்களில் பெண்பாலை அரவணைத்துச் செல்லும் தன்மை இருக்கின்றது. அதனில் அன்பு கலந்த சந்தோஷமும் பெறுகின்றன.

மனிதனானபின் பெண்களைத் துன்புறுத்தும் நிலை அதிகரிக்கும் பொழுது இதனின் உணர்வுகள் நமது உடலில் மட்டுமல்ல வேடிக்கை பார்ப்போரின் உடல்களிலும் கூட வேதனையும் சோகமும் உருவாக்கப்படுகின்றது.

ஆகையால் இணைத்துக் கொண்ட உணர்வின் தன்மைக்கேற்ப இப்படி மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாதபடி புவியின் காற்று மண்டலத்திலும் கலந்திருக்கும் நிலையில் இதனைச் “சாப அலைகள்” என்று சொல்வார்கள்.

துன்புறுத்தும் உணர்வுகளும் சரி வேடிக்கை பார்க்கும் உணர்வுகளும் சரி இன்று மனிதருக்குள் தீய உணர்வின் தன்மை அதிகரிக்கும் நிலைகளில் மனிதர்களிடையே “ஒருவருக்கொருவர் கொன்று குவிக்கும் நிலையே” வருகின்றது.

இவைகள் அனைத்தையும் நாம் சிந்தித்து
1.பெண்பால் என்ற உணர்வினை அரவணைத்து அன்பு கலந்த உணர்வினைச் சேர்த்து
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நமக்குள் பெருக்கி இருளை அகற்றி
3.நம்மையும் நம் நாட்டு மக்களையும் இனிப் பிறவியில்லா நிலை என்ற நிலையை அடையச்  செய்வோம்.

இன்று விஞ்ஞானம் நிரூபிக்கின்றது. இரும்பு உலோகத்தில் தென் துருவம் வட துருவம் என்பது.

வட துருவத்தில் இருக்கக் கூடிய காந்தப்புலன் ஈர்க்கும் சக்தி பெற்றது, தென் துருவத்தில் இருக்கக்கூடிய காந்தப்புலன் ஒதுக்கும் சக்தி பெற்றது.

சூரியனின் நிலைகள் வரப்படும் பொழுது இதனுடைய அளவுகோல்படி மிதக்கும் தன்மை வருகின்றது. இன்று காந்தத்தின் துருவங்கள் ஒன்றைக் கண்டு ஒன்று அழுத்தங்களாக இருக்கின்றன.

ஒரு காந்தப்புலனுக்குள் மறைந்துள்ள இத்தகைய ஆற்றலை மனிதர்கள் கண்டுணர்ந்து அதற்குத் தக்க எந்திரங்களை உருவாக்குகின்றனர்.

நமது பூமி மற்ற பொருள் தனக்குக் கிடைக்கும் நிலையில் தன் வெப்பத்தின் துணை கொண்டு அதனைத் தன்னில் இணைத்து வாழும் தன்மை கொண்டுள்ளது.

ஆண் பெண் என்ற நிலைகளில் பெண்களும் ஆண்களை மதித்து அவர் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்ற உயர்ந்த நோக்கங்களைக் கொண்டால் ஆண்கள் உயரந்த நிலைகள் பெறுகின்றனர், தொழில் வளம் பெறுகின்றனர், “குடும்பத்தில் மகிழ்ச்சி” என்ற நிலை உருவாகின்றது.

மகரிஷிகள் என்பவர்கள் தாங்கள் காட்டிற்குள் வசித்தாலும் கணவனும் மனைவியுமாக ஒன்று சேர்ந்து வாழ்ந்து உணர்வின் சக்தியினை வளர்த்தனர்.  அதன் தொடர் கொண்டே நமக்குக் காவியத் தொகுப்புகள் கிடைத்தன.

ஆனால் பிற்காலத்தவர்களோ இந்தக் காவியத் தொகுப்புகளை அவரவர் நலங்களுக்கேற்ப மாற்றியமைத்து உண்மைகளை மறைத்துவிட்டனர்.

இதன் நிலையாக இன்று மனித இனமே அழிந்து போகும் நிலைக்குப் பிரபஞ்சம் முழுவதும் விஷத் தன்மை கொண்டதாக மாறிவிட்டது. தான் சுகமாக வாழவேண்டும் என்ற உணர்வின் அறிவுகள் வளர்ந்து விட்டது.

தீமைகளை அடக்கி உணர்வுகளை ஒளியாக மாற்றும் திறன் பெற்ற இந்த மனிதச் சரீரத்தில் நாட்டாசையும், உடலாசையும், பொன்னாசையும், பெண்ணாசையும் கொண்ட உணர்வின் தன்மையை வளர்த்து மனித குலத்தைச் சீர்குலைத்து அழிக்கச் செய்யும் நிலைகளையே வளர்த்துள்ளனர்.

மனித குலத்தையே கூண்டோடு அழிக்கச் செய்யும் மிருக உணர்வுகள் புவியில் துரித நிலைகளில் இயங்கிக் கொண்டுள்ளது.

1.இந்தச் “சந்ததிக்குப்பின்”
2.பெரும் புயல்களை போன்று சூறாவளிகளைப் போன்று பெரும் நில நடுக்கங்களைப் போன்று உருவாகி
3.பெரும் பெரும் கட்டிடங்களே நொறுங்குவது போன்று மனித உணர்வின் தன்மை சீர்குலைந்து,
4.மனிதனுக்கு மனிதன் நொறுங்கி மடியும் தன்மையும் மனித இனமே கூண்டோடு அழியும் தன்மையும் வந்து கொண்டே இருக்கின்றது.

இது போன்ற தீமைகளிலிருந்து நாம் அனைவரும் மீளவேண்டும்.

நமது குருநாதர் காட்டிய அருள்வழியில் ஒவ்வொரு குடும்பத்திலும், கணவனும் மனைவியும் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து உயர்ந்த நிலைகளைத் தங்களுக்குள் உருவாக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ஆகவே, ஒவ்வொரு நிமிடமும் பெண்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணி நாமும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்று எண்ணினால் நமக்குள் உயர்வு தரும்.

ஏனென்றால் குறுகிய காலமே நமக்கு இருக்கின்றது.

இராமாயணத்தில் இராமன் நேரமாகிவிட்டது என்று இராமேஸ்வரத்தில் இதுவே கடைசி நிலை என்று மணலைக் குவித்துச் சிவலிங்கம் அமைத்துப் பூஜித்தார் என்று காண்பிக்கப்பட்டது.

ஏனென்றால் இராமன் என்ற எண்ணங்கள் இந்த மனித உடலில் கடைசி நிலையில் இருக்கின்றது.

ஆகவே  “நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும்”  என்ற உணர்வை நமக்குள் கலந்துவிட்டால் கடைசி என்ற நிலைகள் வரும், “தனுசுகோடி”.

1நம்முடைய கடைசி எண்ணத்தின் நிலைகளாக
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வைத் தனுசாக நமக்குள் உட்செலுத்தி,
3.தீமை என்ற நிலைகளை அகற்றி
4.உணர்வை ஒளி என்ற நிலைகளில் மாற்றி
5.இனிப் பிறவி இல்லை என்ற நிலைக்கு நாம் அனைவரும் செல்ல வேண்டும்.

மந்திரம் சொல்பவர்கள் அவசியம் தெரிய வேண்டிய முக்கியமானது…!

mantra

மந்திரம் சொல்பவர்கள் அவசியம் தெரிய வேண்டிய முக்கியமானது…! 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல மந்திரங்களைக் கற்றுணர்ந்தவர்.
1.மந்திரத்தின் உண்மைகளையும் அறிந்தார்.
2.மந்திரத்திற்குள் இருக்கும் உட்பொருளை அறிந்தார்.
3.மெய்ப்பொருளைக் காணும் நிலையில் தன் எண்ணத்தைச் செலுத்தினார்.
4.மெய்ப்பொருளை அடைந்தார்.

தன் வாழ்க்கையில் மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டால் அதன் பின் விளைவுகள் என்ன ஆகும்…? என்று குருநாதர் எமக்குத் தெளிவுபடுத்திக் காட்டினார்.

1.யார் யார் எந்தெந்த மந்திரங்களைப் பதிவு செய்து கொண்டார்களோ
2.அதே மந்திரத்தைத் திரும்பச் சொல்லப்படும் பொழுது
3.அந்த மந்திரத்தைப் பதிவு செய்தவரின் உணர்வுகள்
4.அந்த உடலை விட்டு உயிர் பிரிந்தபின் (இறந்தபின்) அந்த ஆன்மா மந்திரம் சொல்பவர் உடலுக்குள் வருகின்றது.
5.இந்த மனிதனின் உடலுக்குத்தான் இது பயன்படுத்த முடியும் என்ற நிலையைக் குருநாதர் தெளிவாக உணர்த்துகின்றார்.
6ஆகவே இதைப் போல மந்திரங்களை எவர் சொன்னாலும் அதை நீ பதிவு செய்யாதே.

அந்த மந்திரங்களை மற்றவர்கள் சொல்வதை நீ கேட்டறிந்தாலும் உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என் உடல் முழுவதும் அது படரவேண்டும் என்று மெய் ஒளியின் உணர்வை வைத்துத் துடைத்துக் கொள்.

கேட்டு… இரசித்து… “மந்திரம் தானே…!” என்ற நிலைகள் நீ கேட்டறிந்தாலும் அது உனக்குள் பதிவாகிவிடுகின்றது.

பதிவான பின் அதை நீ நுகர நேரும். இந்த உடலை விட்டுச் சென்றபின் அந்த “மந்திர ஒலிகளிலே” நம் உயிரான்மா அது இயக்கப்பட்டுவிடும்.., சிக்கிவிடும்.

ஆகையினால் எந்த மந்திர ஒலிகளை ஒருவர் சொன்னாலும் அதை அழித்திட “ஓ…ம் ஈஸ்வரா” என்று உயிரை வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று விண்ணை நோக்கி அந்த உணர்வின் ஆற்றலை உன் உடலுக்குள் சேர்த்துக் கொள்.

நம் உடலை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ துணியில் இருக்கும் அழுக்கை எப்படித் தூய்மைப்படுத்துகின்றோமோ அதைப் போல் நம் ஆன்மாவிற்குள் பட்ட இந்த உணர்வின் தன்மையைத் துடைக்க வேண்டும் என்றார் குருநாதர்.

இதே மாதிரித்தான் இந்த மனித வாழ்க்கையில் நாம் தீமைகள் எதைக் கண்டாலும் வெறுக்கும் நிலைகளுக்கு ஆகி பதிலுக்கு வெறுத்திடும் செயலாக நம்மையும் செயல்படுத்தச் செய்கின்றது.

ஏனென்றால் நாம் கொடுப்பதைத்தான் நம் உயிர் இயக்குகின்றது. அவையெல்லாம் அழுக்காகச் சேர்ந்து நம் நல்ல உணர்வினை இயக்காது தீமையான உணர்வுகளாக நம் உடலுக்குள் ஜீவன் பெற்றுவிடுகின்றது.

ஆக நல்லதைச் செயல்படுத்துவதைத் தடுக்கும் இத்தகைய தீமைகளை உடனடியாகச் சுத்தப்படுத்த வேண்டும். ஆத்ம சுத்தி என்ற நிலைகள் கொண்டு “விண்ணை நோக்கி ஏகு” என்றார் குருநாதர்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று தியானித்து தீமை செய்யும் உணர்வின் தன்மையைத் துடைத்துவிடு என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்.

எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்குள் எப்படி இயங்குகின்றது? அதனுடைய விளைவுகள் என்ன? என்பதைக் காட்டுகிறது “இராமாயணம்”

Image

Ramayanam

எண்ணங்களும் உணர்ச்சிகளும் நமக்குள் எப்படி இயங்குகின்றது? அதனுடைய விளைவுகள் என்ன? என்பதைக் காட்டுகிறது “இராமாயணம்”

 

மனிதராக உள்ள நாம் இந்த வாழ்க்கையில் கோபமான உணர்வுகளையே நம்முள் அதிகமாகச் சேர்த்துக் கொண்டிருப்போம் என்றால் நமது அடுத்த சரீரம் புலியின் ரூபமாகத்தான் அமையும் என்பதை இராமாயணத்தில் காண்பித்தார்கள்.

 

அதாவது இராவணன் தான் மூன்று லோகத்தையும் அடக்கவேண்டும், தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று அதற்கான ஆற்றலைப் பெறுவதற்காக வேண்டி விஷ்ணுவை நோக்கிக் கடுந்தவம் இருந்தான் என்று இராமாயணக் காவியம் கூறுகின்றது.

 

இந்திரலோகம் என்பது இன்பம் நிறைந்ததாக இருக்கும் லோகம். ஆனால் இராவணன் அரக்கத்தன்மை கொண்டு தான் அனைத்தையும் அடக்கவேண்டும் என்று இந்த உயிரை வைத்துத்தான் எண்ணுகின்றான்.

 

விஷ்ணுவை நோக்கி இராவணன் தவம் இருந்தான் என்றார்கள். விஷ்ணு என்பது யார்? விஷ்ணு என்பது நமது உயிர்.

 

இந்த உடலில் அனைத்தையும் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வது ஆறாவது அறிவு. இதனைத்தான் கன்னியர்கள் இந்திரலோகத்தை மகிழ்ச்சி நிறைந்திருக்கும்படி வைத்திருந்தார்கள் என்றனர் ஞானிகள்.

 

மகிழ்ச்சி நிறைந்திருக்கும் இந்திரலோகத்தை அடக்கவேண்டும், தனக்குக் கீழ் கொண்டு வரவேண்டும் என்று எண்ணிய இராவணன் கடுந்தவம் மேற்கொண்டான் என்றும் தனக்குக் கீழ்படியாதவர்களைக் கொல்லவேண்டும் என்றும் எண்ணினான் என்று காவியத்தில் கூறினார்கள்.

 

1.நாம் பிறிதொருவரிடம் உள்ள தீய குணங்கள் அகல வேண்டும் என்று எண்ணினால் நல்லது.

2.ஆனால் தீய குணம் கொண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்று எண்ணினால்

3.நமக்குள் கொல்லும் உணர்வுகள்தான் விளையும்.

 

இதைத்தான் இராமாயணத்தில் தசரதச் சக்கரவர்த்தி

1.பத்தாவது நிலையை அடையக் கூடிய உயிரும்

2.உயிரால் நுகரப்பட்ட உணர்வுக்கொப்ப உடலும்

3.உடலின் தன்மை பெற்றபின் உடலை வளர்க்க உணர்வுகள் என்ன செய்கின்றது என்றும்

4.நல்ல நிலைகள் பெறவேண்டும் என்ற எண்ணத்தால் வளர்ந்த இராமனும்

5.இராமனிடத்தில் நன்மையை நாடும் உணர்வுகள் எப்படி இயங்குகின்றதென்ற நிலையை ஞானிகள் காட்டியுள்ளனர்,

 

அதே சமயத்தில் இராவணனிடத்தில் அசுர குணங்கள் எப்படி இயங்குகிறது என்பதையும் மனிதர்கள் பத்தாவது நிலையை அடைவதற்குத் தடைகள் எப்படி வருகின்றது என்பதையும் இராமாயணத்தில் தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.

 

இராவணன் பிரம்மாவை நோக்கித் தவம் இருந்தான். பிரம்மாவும் இராவணனுக்கு வரம் கொடுத்தார்.

 

பிரம்மா விஷ்ணுவின் மகனல்லவா. ஆகவே பிரம்மாவும், இராவணனின் தவத்திற்கேற்ப… “நீ அனுபவி…” என்று வரம் கொடுத்துவிடுகின்றார்.

 

இராவணனும் தன் தவத்திற்கேற்ப இந்திரலோகத்தைக் கைவல்யப்படுத்தினான்.

 

உதாரணமாக நாம் பிறிதொருவரைக் “கொல்ல வேண்டும், கொல்ல வேண்டும்”என்று எண்ணினால் இந்த உணர்வின் தன்மையை உயிரான ஈசன் நமக்குள் இந்திரலோகமாக மாற்றி விடுகின்றது.

 

1.“கொல்ல வேண்டும்”என்ற உணர்வு நமக்குள் வந்தவுடனே என்னவாகிறதென்றால்

2.இந்திரலோகத்தில் கொல்லக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு அணுவாக மாறுகின்றது – இது பிரம்மா.

3.கொல்லக்கூடிய உணர்வின் தன்மை கொண்டு விளைந்த அணு

4.நம்முள் தீமைகளை வளர்த்திடும் சக்தி பெறுகின்றது.

 

நாம் மனிதராக இருக்கக்கூடிய நிலைகளில் மனிதராக உருவாக்கிய நல்ல குணங்களை மாற்றும் தன்மை வந்து எமலோகமாக மாறுகின்ற பொழுது மனிதர்கள் என்ன செய்கின்றனரென்றால் சீதா எனும் மகிழ்வான உணர்வைச் சிறைப்பிடித்து விடுகின்றனர்.

 

அதாவது மகிழ்ச்சியான உணர்வு வெளியே வராதபடி அடக்கப்படுகின்றது. இதை மாற்ற வேண்டுமல்லவா? அதைத் தான் இராமாயணத்தில்

1.உயிரின் இயக்கத்தையும்

2.உடலின் ஆக்கத்தையும்

3.பின் விளைவுகள் என்ன? என்பதையும் தெளிவுபட எழுதினார்கள்.

 

“சீதாராமா”எனும் பொழுது எந்த குணத்தின் சத்தை எடுக்கின்றோமோ அதன் உணர்ச்சியின் எண்ணங்களை இயக்கும், அதனின் உணர்வுகள் உணர்ச்சிகளைத் தூண்டும். உணர்வுக்கொப்ப உடலின் அமைப்பு வரும் என்னும் நிலையைத் தெளிவாக இராமாயணத்தில் கொடுத்துள்ளார்கள்.

 

ஆகவே நாம் தீமையான நிலைகளைக் காணும் பொழுது அதிலிருந்து மீண்டிடும் நிலையாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் சேர்த்திடல் வேண்டும். நமது உயிரை ஈசன் என்று மதித்திடல் வேண்டும்.

 

ஈசன் வீற்றிருக்கும் இந்த உடலை ஆலயமாக மதித்துத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்த உடல் முழுவதும் படரச் செய்து பரிசுத்தமாக்க வேண்டும்.

 

நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களைக் காத்திடல் வேண்டும் என்பதைத்தான் சாஸ்திரங்கள் தெளிவாக்குகின்றன.

 

இராமாயணம் நமக்குக் கிடைத்த அரும்பெரும் பொக்கிஷம்.  யாம் இப்பொழுது உரைத்ததன் தொடர் கொண்டு இராமாயணத்தை நீங்கள் அனைவரும் படிப்பீர்களென்றால் இராமாயணக் காவியத்தின் அர்த்தங்களைத் தெளிவாக அறியமுடியும்.

 

அதன் வழியில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது வரும் சர்வ தீமைகளிலிருந்து விடுபடும் அருள் சக்தி நீங்கள் பெற்று மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றென்றும் மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்திடுங்கள்.