கோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்?

Image

vijaya dhasami - kalki

கோப உணர்வை அதிகமாக வளர்த்துக் கொண்டால் அதனுடைய பின் விளைவுகள் எப்படிப்பட்டதாகும்?

 

நாம் எதனெதன் உணர்வுகளை நம் உடலாக இணைத்துச் சிவமாக்கி அதன் உணர்வின் இயக்கமாக வித்தாக வைத்திருக்கின்றோமோ “வினை” – விநாயகா.

 

நம் உடலிலே எதன் எதன் வழியில் சுவாசித்து உணர்வின் தன்மை உடலில் சேர்க்கின்றோமோ அந்தக் கணக்கின் பிரகாரம் வினைக்கு நாயகனாக அது அது இயங்கத் தொடங்குகின்றது.

 

1.கோபமான உணர்வின் தன்மையை நாம் சுவாசித்து

2.அந்த உணர்வின் ஞானமாக அதனின் உணர்ச்சிகள் நமக்குள் செயல்படும் பொழுது

3.கோபமான உணர்வின் அணுக்கள் பெருக்கமாகின்றது.

4.கோபத்தின் அணுக்கள் பெருக்கமானபின் அதனின் ஞானத்தைக் கொண்டு

5.அதையே உணவாக உட்கொள்ளும் ஞானத்தைப் பெருக்குகின்றது.

 

தன் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கோப உணர்ச்சிகள் வருகின்றது. அதற்குச் சாப்பாடு கிடைக்கவில்லை என்றால் என்ன செய்யும்…!

 

அதே கோப உணர்ச்சியைத் தூண்டச் செய்து

1.பையனைத் திட்டச் சொல்லும்.

2.நண்பனை வெறுக்கச் சொல்லும்.

3.வியாபாரம் செய்து கொண்டிருந்தோம் என்றால் அதை மறக்கச் செய்யும்.

4.பொருள்களைக் கோபத்தால் வீசி எறியச் செய்யும்.

 

அந்த உணர்ச்சிகள் உணர்வான பின் அந்தச் சூட்சம உணர்வை எடுத்து அந்த அணுக்கள் விளைந்து இந்தக் கணக்குகள் நமக்குள் கூடினால் அந்த வினைக்கு நாயகனாக “இரத்தக் கொதிப்பாக” உருவாகின்றது.

 

இரத்தக் கொதிப்பான பின் எல்லோரையும் நாம் வெறுக்கும் நிலையாகி நம் உடலுக்குள்

1.நல்ல குணங்களை வெறுக்கும் உணர்ச்சிகளைத் தூண்டிச் செயலற்ற நிலைகள் வரும் பொழுது

2.நம் உடலின் அங்கங்கள் குறுக்கப்படும்.

3.நரம்பு சம்பந்தப்பட்ட (வாத) நோய்கள் வரும்

4.அந்த நிலையான பின் நம்மால் உடலால் நடந்து செல்ல முடியாது.

 

முடியவில்லை என்றால் ஒருவரை எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்போம். எதிர்பார்த்தவுடன் வரவில்லை என்றால் அவன் மீது சீறிப் பாயும் நிலைகள் வரும்.

 

“நம்மால் முடியவில்லை…” என்று அவர் சிரமப்பட்டுக் கொண்டு நமக்காக வந்தாலும்

1.நினைத்த மாத்திரத்தில் வரவில்லை என்றால்

2.வெறி கொண்ட நாயைப் போலத் தாக்கிப் பேசும் உணர்வுகள் தான் வருகின்றது.

 

நம்மால் முடியவில்லை. ஆனால் கோபத்தின் நிலை வரும். அதுவும் முடியவில்லை என்றால் “அழுகை” வரும்.

 

முந்தைய வாழ்க்கையும் இன்றைய நிலைகளும் முடியவில்லை என்ற நிலைகள் சேர்ந்து வெகு நேரம் ஆகிவிட்டால் தேம்பித் தேம்பி அழுகும் நிலை ஆகின்றது.

 

இப்படி இரத்தக்கொதிப்பாகச் சுருங்கிவிட்டால் நண்பன் என்ற நிலைகள் பழகிய உணர்வு பட்டபின் நண்பனைப் பார்க்கும் பொழுது – என் நிலை இப்படி ஆகிவிட்டது… சொல்லால் பேச முடியவில்லை என்றால்…, “அழுகையால் காட்டும் ஞானம்” வருகின்றது.

 

இதெல்லாம் இயற்கையின் நியதிகள்.

 

நாம் பல கோடிச் சரீரங்களில் தீமையை நீக்கி நீக்கி இன்று மனிதனாக வந்துள்ளோம். மனிதனான பின்

1.நன்மை பயக்கும் நல்ல குணங்களைப் பக்குவப்படுத்துதல் வேண்டும்.

2.அதுதான் சரஸ்வதி பூஜை – ஆயுத பூஜை.

3.நம் மனதைத் தெளிவாக்கினால் அந்த உணர்ச்சிகள் அந்த ஆயுதமாக மாறி நண்பனைக் காக்கும். அந்த நண்பனும் நம்மைக் காப்பான்.

 

அதே சமயத்தில் ஆறாவது அறிவு கொண்டு “கார்த்திகேயா” நாம் தெரிந்து கொள்ளும் அறிவு வருகின்றது. தீமைகளை நீக்கிய உணர்வின் தன்மையை இந்த ஆறாவது அறிவால் அறிய முடிகின்றது.

 

தீமைகளை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி ஒளியின் சரீரம் பெற்றவர்கள் பத்தாவது நிலையில் (விஜய தசமி) துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலமாகவும் உள்ளார்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியையும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியையும் நாம் பெற்று இந்த வாழ்க்கையில் வரும் இன்னல்களை அகற்றி அவர்களைப் போன்று பத்தாவது நிலை அடையும் தன்மையை நினைவுபடுத்தச் செய்யும் நாள் தான் “விஜய தசமி”.

குரு என்பவர் யார்…? குரு அருளைப் பெறுவது எப்படி…? குரு பலம் என்றால் என்ன…?

guru purnima

குரு என்பவர் யார்…? குரு அருளைப் பெறுவது எப்படி…? குரு பலம் என்றால் என்ன…?

உதாரணமாக
1.ஆசிரியர் கற்றுத் தரும் பாடங்களை
2.மாணவன் தான் கூர்மையாக உற்றுப் பார்த்துத் தனக்குள் பதிவாக்கி
3.ஆசிரியர் மேல் பற்று கொண்ட உணர்வின் தன்மையையும் மாணவன் தனக்குள்  பதிவாக்கினால்
4.ஆசிரியர் தமக்குள் கற்றுணர்ந்த உணர்வின் தன்மைகள் மாணவனிடத்தில் பரவி
5.அந்த உணர்வே… “ஆசிரியராக” இருந்து
6.இது இவ்வாறு…, இது இந்த நிலை…, என்பது போன்ற சிந்திக்கும் திறனும் செயலும் அதற்குண்டான உணர்வும் வரும்.

இப்படி ஒருவர் கற்றுத் தரும் போதனையைக் கூர்மையாகக் கவனித்து அதன் உணர்வின் தன்மையை எவர் தமக்குள் பதிவு செய்கின்றனரோ அதன் வழி அவருக்குள் இயக்கமாகின்றது.

இதைத்தான் குரு எமக்குக் காண்பித்து எம்முள் பதிவாக்கினார்.

1.தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பும்
2.குரு தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும்
3.உலகில் மிக மிக உயர்வானது.

இதில் குருவானவர் தன்  சிஷ்யனுக்கு எதை எப்பொழுது எப்படிக் கொடுப்பது என்பதை நன்கு அறிந்திருக்கிறார்.

ஒவ்வொருவரும் தான் உயர்ந்தவைகளைப் பெற வேண்டும் என்று உயர்ந்த நல் எண்ணங்களை எண்ணி ஏங்கும் பொழுது குரு அருளைப் பெற முடிகின்றது. இதைத்தான் “குரு பலம்” என்று சொல்வது.

உலக நிலையை அறியச் செய்திடும் ஆசிரியர் என்ற நிலையில் குருவின் உணர்வின் தன்மையை எமக்குள் பதிவு செய்து கொண்டபின் உலகின் தன்மையையும் கடந்த காலத்தில் மனிதர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்றும் எமக்கு உணர்த்தினார் குரு.

இப்படி இதன்வழி கொண்டு எண்ணும் பொழுது அவர் கற்றுணர்ந்த உணர்வின் இயக்கங்கள் எம்மைச் சிந்திக்கச் செய்யும் நிலையாகவும் அதன் வழி கொண்டு வாழ்க்கை அமைத்திடும் நிலையும் வருகின்றது.

இப்பொழுது யாம் உபதேசிக்கும் உணர்வுகளை நீங்கள் உங்களுக்குள் பதிவாக்கிப் பதிவாக்கியதை மீண்டும் நினைவு கொண்டால் தீமையிலிருந்து விடுபடும் உணர்வின் அணுக்கள் உங்களுள் உருவாகின்றது.

நீங்களும் இதை நுகர்ந்தறிந்து தீமையிலிருந்து விடுபடும் சக்தி வாய்ந்த மனிதனாகின்றீர்கள்.

ஆனால் “ஒருவன் என்னை ஏசுகின்றான்…, எனக்குத் தொல்லை கொடுக்கின்றான்…” என்ற உணர்வின் தன்மையைப் பதிவாக்கிக் கொண்டு தீமை செய்தவனை எண்ணும் பொழுது என்னவாகும்?

மீண்டும் நமக்குள் தீமையின் உணர்வுகள் வளர்ந்து நம்மிடத்தில் கை கால் குடைச்சலாகி சிந்திக்கும் தன்மை இழந்து கோப உணர்வுகள் வருகின்றது.

சிந்திக்கும் தன்மையை இழக்கப்படும் பொழுது செயலின் தன்மை குறைகின்றது. நமது செயல் நற் பலன் தரவில்லையென்றால் உணர்ச்சியின் தன்மை கூடுகின்றது. கொதிப்பின் தன்மை ஏற்படுகின்றது.

கொதிப்பின் உணர்வுகள் நமக்குள் வளர்ந்து நமது நல்ல அணுக்களைச் செயலற்றதாக மாற்றுகின்றது. இதுவே நமக்குள் வளர்ந்து கடும் நோயாகவும் மாறுகின்றது.

இதுவும் ஆசிரியராக வருகின்றது. குருவாக வருகின்றது. ஆகவே எதனின் தன்மையை நம்முள் பதிவாக்குகின்றோமோ அதன் வலிமை கொண்டு நம்மை இயக்கிவிடும்.

இதை வென்றவர் துருவ மகரிஷி. அவர் கண்டுணர்ந்த உணர்வை நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கற்றுணர்ந்தார்.

விண்ணுலக ஆற்றலின் தன்மையை அவர் வாழ்க்கையில் கண்டறிந்தார். அதனின் நெறி முறைகளை அவருக்குள்ளேயே விளைய வைத்தார். அவ்வாறு அவருக்குள் விளைய வைத்த நிலைகளை எமக்கு உபதேசித்தார்.

குரு உபதேசித்த உணர்வினை அவரிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வுகளை யாமும் நுகர்ந்தோம் கண்டறிந்தோம்.

விண்ணுலக ஆற்றலை எவ்வாறு பருக வேண்டும்? எல்லோரையும் எப்படிப் பருகச் செய்ய வேண்டும் என்று உணர்த்திய அருள் நெறிகளை நீங்களும் பெறவேண்டும்.

அதனை நீங்கள் பெறவேண்டும் என்று எண்ணத்தால் எண்ணும் பொழுது மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் கவர்ந்து இந்த உணர்வை வலுக்கொண்டதாக மாற்றிட முடியும்.

இம்மனித வாழ்க்கையைக் கடந்து செல்வோம் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில் என்றும் நிலைத்திடும் நிலையாக இருந்திட முடியும்.

நாம் அனைவரும் அத்தகைய நிலைகளை நிச்சயம் பெறுவோம்.

அகஸ்தியர் கண்ட உண்மைகளைக் காட்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் அறியும் வழி

Spiritual realization - vision

அகஸ்தியர் கண்ட உண்மைகளைக் காட்சியாகவும் உணர்வுபூர்வமாகவும் அறியும் வழி 

ஒரு நோயாளி தன் நோய் தீர வேண்டும் என்றால் மருத்துவர் தரும் மருந்தைக் கட்டாயமாகச் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

இதே போன்று நம்முள் அறியாது சேர்ந்த நஞ்சான உணர்வுக்ளை நீக்க வேண்டுமென்றால் நமக்குள் கட்டாயப்படுத்தித்தான் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெருகச் செய்ய வேண்டும்.

ஆகவே தான் உங்கள் அனைவரையும் துருவ நட்சத்திரத்துடன் ஒன்றச் செய்யும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

அந்த உணர்வோடு கொண்டு போகப்படும் பொழுது அவ்வுணர்வின் ஒளிக் கற்றைகளை உங்களில் சேர்த்துப் பழகுங்கள். மின் கதிர்களை எண்ணிச் சுவாசிக்கப்படும் பொழுது அதன் உணர்வின் தன்மையினை உங்களிடத்தில் ஒவ்வொரு அணுவிலும் சேர்க்க உதவும்.

நாம் நுகர்ந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்து மற்ற அணுக்களில் சேர்கின்றது இவையெல்லாம், குரு தன்மையால் வருவது.

“சாமி (ஞானகுரு) சொன்னார்.., இதையெல்லாம் பெறவேண்டும்” என்று எண்ணப்படும் பொழுது நீங்கள் எண்ணிய ஆற்றல் பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.

நான் “தனித்தன்மையில் செல்வேன்” என்று எண்ணினால் முடியாது.

குரு இல்லாத வித்தை எதுவுமே வித்தையாகாது. ஆகையால், “குருநாதர் சொன்னார்…” என்ற நிலையில் ஒன்றை இணைத்துப் பார்க்கும் பொழுது தனக்குள் உருவாகும்.

ஆகவே இதன் வழியில்தான் நாம் அறிய முடியும்.

நமது குருநாதர் தம் உணர்வின் தன்மை கொண்டு அகண்ட அண்டத்தையும் அகஸ்தியர் கண்டுணர்ந்த உணர்வையும் அறிந்துணர்ந்தார்.

தமக்குள் பெற்ற பேரருளின் உணர்வுகளை  எமக்குள் யாம் எவ்வாறு பெறவேண்டும் எனும் வழிமுறைகளைக் காண்பித்தார்.

உணர்வின் உணர்ச்சிகளை எமக்குள் தூண்டச் செய்து “செவி வழி ஓதி… உணர்வுகளை அறியும்படி” நுகர்ந்தறியும் ஆற்றலைக் கொடுத்தார்.

1.நுகரும்போது உடல் உணர்ச்சி கொண்டு அறிவதும்
2.உணர்வின் தன்மை கூறும்போது காட்சியாகத் தெரிவதும் போன்ற நிலைகள் கொண்டு எம்மை அறியச் செய்தார் அறிந்தோம்.
3.அதனின் உணர்வுகளை உங்களுக்குள்ளும் யாம் பதிவாக்குகின்றோம்.

இதனை உங்களுக்குள் ஏங்கிப் பெறும் நிலை வரும்பொழுது அதற்குத் தக்கவாறு உங்களில் உருப்பெறும் தன்மை வருகின்றது.

உணர்வுகளை உங்களில் குவிக்கப்படும் பொழுது அது காட்சியாகவும் உங்களுக்குத் தெரியும்.
1.கண் திறந்திருந்தாலும் சரி
2.கண் மூடியிருந்தாலும் சரி உணர்வின் அலைகளாக மாறும் தன்மை வரும்.

தெளிந்த மனம் கொண்டு கண்களை மூடித் தியானித்தால் உணர்வின் தன்மை புற நிலைகளை அடக்கும். அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையைப் பெருக்கும்.

நமக்குள் உணர்வின் தன்மைகள் காட்சியாகத் தெரியும். ஆகவே  நீங்களும் இதைப் பெறவேண்டும்.

ஏனென்றால் ஒரு வித்து ஒருவருக்குப் பசி தீர்க்காது. நீங்கள் பெற்ற அருள் உணர்வின் சத்தை மற்றவர்களிடத்திலும் படரச் செய்யும் உணர்வை  நீங்கள் உங்களிடத்தில் வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் ஒன்றென இணைந்துவிடலாம்.

சிறு துளி என்ற நிலை வரப்படும் பொழுது அதன் தன்மை புவியில் தங்கி விடுகின்றது. சிறு துளிகள் இணைந்து பெரும் வெள்ளமாக வரப்படும் பொழுது பலவற்றிற்கும் பயன்படுகிறது.

அது போன்று நாம் சிறு துளியாக இருப்பினும் பலரிடத்தில் அருளுணர்வுகளை வளர்த்து அனைவரும் ஒன்றென இணைக்கப்படும் பொழுது அரும்பெரும் சக்திகளை நாமும் பெறலாம்,
1.வரும் தீமைகள் அனைத்தையும் நீக்கவும் செய்யலாம்.
2.அருள் ஒளியின் உணர்வுகளை நமக்குள் பெருக்கவும் முடியும்.

மருந்துடன் கலக்கப்படும் சிறிதளவு விஷம் உடலுக்குள் ஊடுருவி நோயை ஒடுக்குவது போல் மகரிஷிகளின் அருள் சக்தியை இணைத்தால் “ஒருவன்  நமக்கு எத்தகைய தீமை செய்தாலும்… அது நம்மைப் பாதிக்காது”

Image

Maharsishi Meditation

மருந்துடன் கலக்கப்படும் சிறிதளவு விஷம் உடலுக்குள் ஊடுருவி நோயை ஒடுக்குவது போல் மகரிஷிகளின் அருள் சக்தியை இணைத்தால் “ஒருவன்  நமக்கு எத்தகைய தீமை செய்தாலும்… அது நம்மைப் பாதிக்காது”

 

தீமை தரக்கூடியவைகளாக இருந்தாலும் மனிதன் அவைகளை தனக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கின்றான்.

 

அதே போன்று தீமை செய்வோரின் உணர்வுகள் நமது உணர்வில் கலந்துவிட்டால் அந்த தீமையை விளைவிக்கும் உணர்வுகளை நமக்குள் விளையாது தடுத்துச் சமப்படுத்திடல் வேண்டும்.

 

உதாரணமாக உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல மருந்துடன் சிறிது விஷத்தைக் கலக்கப்படும் பொழுது அது நல்ல மருந்திற்கு ஊட்டச் சக்தியாக மாறுகின்றது.

 

எந்த மருந்தைச் சிறிது விஷத்துடன் கலந்து கொடுக்கின்றோமோ அந்த விஷம் ஊடுருவி இந்த நல்ல மருந்தின் தன்மையை உடலெங்கும்  பரவச் செய்கின்றது.

 

நோய்வாய்ப்பட்ட மனிதனின் உடலில் மருந்தினைச் செலுத்தும் பொழுது

1.மருந்துடன் கலந்துள்ள விஷம் மருந்தினை எடுத்துச் சென்று

2.உடலில் உள்ள வேதனையை உருவாக்கும் உணர்வின் அணுக்களை உணவாக உட்கொண்டு

3.தன் இனத்தை உருவாக்கும் தன்மையால் நல்ல மருந்தின் தன்மை அடர்த்தியாகி

4.வேதனையை உருவாக்கும் அணுக்களை வளரவிடாமல் தடுக்கச் செய்கின்றது,

 

இதைப் போன்று ஞானிகள் காண்பித்த வழியில் அருள்

1.ஞானிகளின் உணர்வை நம் எண்ணத்துடன் கலந்து

2.நாம் எத்தகைய தீமையின் உணர்வினைக் கண்டுணர்ந்தோமோ அதற்குள்

3.அந்த மகரிஷியின் ஆற்றல்மிக்க சக்தி பெறவேண்டும் என இணைத்து நம் உடலுக்குள் செலுத்திவிட்டால்

4.அருள்ஞானியின் உணர்வுகள் இந்த விஷமான நிலையை ஒடுக்கிவிட்டு

5.நமக்குள் வலுகொண்ட நிலையாக மாறுகின்றது.

 

ஏனென்றால் மகரிஷிகள் தம்மிடத்தில் தீமையின் உணர்வுகள் வந்து மோதும் பொழுது அவைகளைச் செயலற்றதாக்கி தம்மிடத்தில் தீமையின் உணர்வினை ஒடுக்கி அதனுடைய செயலாக்கங்களை மாற்றித் தமது உணர்வினை வலிமை மிக்கதாக மாற்றுகின்றனர்.

 

அதே போன்று தீமையின் உணர்வுகளை நமக்குள் ஒடுக்குகின்ற பொழுது ஒருவன்… “நமக்கு எத்தகைய தீமைகளைச் செய்து கொண்டிருந்தாலும்” அது நம் உடலுக்குள் தீமை விளைவிக்கும் அணுக்களை உருவாக்குவதில்லை.

 

அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நம் உடலில் கலக்கப்படும் பொழுது

1.நம் உடலில் தீமையை உருவாக்கும் அணுக்கள் விளைந்திருப்பினும்

2.அவைகளை “நமக்குள் நன்மை பயக்கும் அணுக்களாக” மாற்றுகின்றன.

நாம் வெறுப்புடன் இருக்கும் பொழுது நெருங்கிய நண்பன் சிரித்தால் கூட சந்தேகம் வருகின்றது அந்தச் சந்தர்ப்பம் பகைமையை ஊட்டுகின்றது – தெளிவுபடுத்தும் ஞானத்தை ஊட்டும் நாள் தான் சரஸ்வதி பூஜை

Image

Breathing states

நாம் வெறுப்புடன் இருக்கும் பொழுது நெருங்கிய நண்பன் சிரித்தால் கூட சந்தேகம் வருகின்றது அந்தச் சந்தர்ப்பம் பகைமையை ஊட்டுகின்றது – தெளிவுபடுத்தும் “ஞானத்தை ஊட்டும்” நாள் தான் சரஸ்வதி பூஜை

 

வேதனை வெறுப்பு எடுத்து விவசாயம் செய்தால் உங்கள் “கண்களிலிருந்து வெளிப்படும்” அந்த வேதனையான உணர்வுகள் பயிர்களில் பட்டுச் சரியாக விளையாது. நல்ல பலன்களைக் கொடுக்காது.

 

குடும்பத்தில் சங்கடப்பட்டுக் கொண்டு விவசாயம் செய்யட்டும்.

 

அவர்கள் கண் பார்வை பட்டு அந்த விதைகளை விதைக்கப்படும் பொழுதே இந்த வேதனை என்ற விஷங்கள் அதிலே கலக்கப்பட்டு அது சரியான பயிராக வராது.

 

அதே போல வியாபாரத்தில் வேதனையுடன் ஒரு பொருளை எடுத்துக் கொடுத்தாலோ இந்த உணர்வு பட்டு வாங்குபவர்கள் நுகர்ந்து பார்க்கும் பொழுது அந்தப் பொருளை வெறுக்கும் தன்மையே வரும்.

 

ஒரு புடவையாக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் பொருளாக இருந்தாலும் சரி. அதனால் வியாபாரம் மந்தமாகும்.

 

வியாபாரம் இல்லை என்கிற பொழுது கடைச் செலவு மற்ற செலவுகள் வீட்டுச் செலவுகள் எல்லாம் தொக்காகும். (குறைவாகிவிடும்)

 

அப்பொழுது எதை வைத்து வருகின்றது? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

 

நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். நம் நல்ல குணங்களைச் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். அதை நினைவுபடுத்துவதற்காக வேண்டித்தான் சரஸ்வதி பூஜை என்று வைக்கின்றார்கள்.

1.சரஸ்வதி பூஜை என்றால்

2.ஞானத்தை வளர்க்கும் நாள். அது தான் ஆயுத பூஜை.

 

நீங்கள் நன்மை பெறவேண்டும் என்ற உனர்வை எனக்குள் எடுத்தால் எனக்குள் நன்மை பயக்கும் சக்தி வருகின்றது.

 

ஆனால் “வெறுமனே…,” நன்மை பயக்க வேண்டுமென்றால் வராது.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்ற உணர்வுடன் அந்த வலு கொண்ட சக்தியைச் சேர்த்து அந்த உணர்வுடன் கலந்து நல்லவைகளை எண்ணுதல் வேண்டும்.

 

நன்மை பெறவேண்டும் உடல் நலம் பெறவேண்டும் தொழில் நலம் பெறவேண்டும் என்று எண்ணினால்

1.இந்த உணர்வுகள் என் உடலுக்குள்ளும் பாய்கின்றது.

2.இந்த உணர்வின் சொல் உங்களுக்குள்ளும் இந்த உணர்ச்சியைத் தூண்டுகின்றது.

3.அதையே இயக்குகின்றது.

 

ஒரு பக்கம் நாம் வெறுப்பாகும்படி ஒருவர் செயல்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவர் வெறுப்பான உணர்வுகள் செயல்படுவதைப் பார்த்தவுடன் அந்த வெறுப்புடன் நான் இருக்கின்றேன்.

 

அந்த வெறுப்பின் தன்மை வரப்படும்போது என் நண்பன் வருகின்றான். நம்மைப் பார்த்து.., “ஏம்ப்பா பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது…! என்று சொல்லிச் சிரிக்கின்றான்.

 

நண்பன் சிரிப்பதைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் தன்மையுடன் இருக்கும் பொழுது “என்ன..! இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்…?” அவன் அப்படிப் பேசினான்.., ஆனால் இவன் நம்மைப் பார்த்துச் சிரிக்கின்றான்.

 

ஆக சந்தோஷமாகச் சிரித்தாலும் இங்கே வெறுப்பு வருகின்றது.

 

அப்பொழுது என்ன செய்கின்றது? அந்த வேதனைப்படுத்தும் உணர்வுகள் இதனுடன் கலந்தபின் நண்பனின் உணர்வு இங்கே “எதிரியாகத் தெரிகின்றது”.

 

விஷத்திற்குள் நல்ல பொருளைப் போட்டால் என்ன செய்யும்? ருசியாக இருக்குமா…? அதுவும் மயக்கத்தான் செய்யும்.

 

இதைப் போன்று இயற்கையின் நிலைகள் வருவதை நாம் மனத் தூய்மை செய்ய வேண்டும். அதற்காகத்தான் ஆயுத பூஜை என்று வைத்தது. நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

 

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

பின் யார் சங்கடப்பட்டார்களோ வேதனைப்பட்டார்களோ அவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் அவர்கள் மன பலம் பெறவேண்டும் சிந்தித்துச் செயல்படும் திறன் பெறவேண்டும் அவர்கள் செயல்கள் அனைத்தும் நல்லதாக இருக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

அப்பொழுது அவர்கள் உணர்வை நாம் எடுப்பதில்லை.

 

ஆனால் நாம் வேதனையாக இருக்கும் பொழுது நண்பன் சிரித்ததைப் பார்த்தவுடன் இந்த வெறுப்பின் உணர்வை ஊட்டி என்ன செய்கின்றோம்?

 

1.அந்த நண்பன் மேல் உணர்வு வரப்படும் பொழுது

2.அவனைப் பார்க்கும் பொழுது நம்மைக் கேலி செய்கின்றான் கிண்டல் செய்கின்றான்

3.நாம் இருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது என்ற இந்த உணர்வு வரும்.

 

சில பேரைப் பார்த்துமே…, “நம்மைப் பிடிக்கவில்லை போலத் தெரிகிறது…” என்று சொல்வோம். அப்பொழுது எது நம்மை இயக்குகின்றது?

 

“நாம் நுகர்ந்த உணர்வை நம் உயிர் இயக்குகின்றது”. தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

இந்த உயிர் பூமிக்குள் விஜயம் செய்து பல கோடிச் சரீரங்கள் பெற்றுத் தீமைகளை நீக்கி ஒளியின் சரீரம் பெறும் நாள் விஜய தசமி. அதை நினைவு படுத்தும் நாளாக ஞானிகள் வைத்துள்ளார்கள்.

 

பத்தாவது நிலையாக கல்கியை அடையக் கூடிய நாம் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளை எப்படி நீக்க வேண்டும் என்ற உணர்வைத் தெளிவாக்கி நம்மை முழுமைப்படுத்தும் நாள் தான் “சரஸ்வதி பூஜை – விஜய தசமி”

யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே…!

Breathing circle

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே…!

பூமியில் உள்ள காற்றுக்குள் பல வித செடிகள் மரங்கள் வெளியிட்ட உணர்வின் அலைகள் பரவியிருக்கின்றன.

அவ்வாறு பலவிதமான உணர்வின் அலைகள் பரவி இருந்தாலும் ஒரு வித்து தன் இனத்தின் சத்தை அதிலிருந்து பிரித்து எடுத்துச் செடியாக மரமாக வெளிப்படுகின்றது.

இதைப் போன்றுதான் நமது உடல் பூமிக்குச் சமமானது.

உயிரின் இயக்கத்தால் நாம் கவரும் நிலைகள் மற்றும் பகிர்ந்து கொண்ட உணர்வின் தன்மைகளைப் பதிவு செய்து கொண்டபின் பதிந்த நிலைகளை தன் இனமான உணர்வின் அலைகளைக் காற்றிலிருந்து கவர்ந்து தன் ஆன்மாவாக மாற்றுகின்றது.

பூமியில் ஒரு விதையினை ஊன்றினால் அந்த வித்தானது தனது உணர்வின் சத்தைக் காற்றிலிருந்து கவரும். அந்தப் பரப்புக்குள் நாம் செல்ல நேர்ந்தால் அதன் வாசனையை நாம் அறியமுடியும். இதைப் போன்றுதான்
1.நம் உடலான நிலத்திற்குள்
2.நாம் எண்ணிய உணர்வின் சத்தைப் பதிவு செய்துகொண்டால்
3.உணர்வு அதிலிருந்து கவர்ந்து நமது ஆன்மாவாக மாறுகின்றது.

இருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும்பொழுது அந்த உணர்வின் அலைகள் நம்முள் கலந்து ஊழ்வினையாகின்றது. அந்த உணர்வின் அலைகள் நமக்குள் பெருகி ஆன்மாவாகின்றது.

அவர்களுக்குள் எந்த வெறுப்பின் தன்மை கொண்டு சண்டையிடுகின்றனரோ அதைப் போன்று சண்டையிடும் உணர்வுகளை நமக்குள் நுகர்ந்து நுகர்ந்து அதையே பதிவாக்குகின்றோம்.

பிறருடைய நிலைகளை எண்ணி “இப்படி ஆகிவிட்டதே…”என்று அந்தச் சோர்வின் தன்மையை நாம் எடுத்துவிட்டால் அந்தச் சோர்வின் உணர்வுகள் நமக்குள் வித்தாகப் பதிவாகி சோர்வின் தன்மை கொண்ட உணர்வின் சத்து அதிகரித்துவிடும்.

பின் அதனின் உணர்வுகள் நம் ஆன்மாவாகும் பொழுது நம்மிடத்தில் தெளிவற்ற நிலைகளாக அமைந்து நாம் சிந்தித்தாலும் சிந்திக்க இயலாத நிலையை நம்மிடத்தில் உருவாக்கிவிடுகின்றது.

1.இந்த ஆன்மாவில் எது பெருகியிருக்கின்றதோ
2.அதனின் உணர்வுகள் – நாம் ஒரு சொல் சொல்வதற்குமுன் வெளிப்பட்டு
3.“யானை வரும் பின்னே… மணியோசை வரும் முன்னே…”என்பதைப் போன்று
4.நாம் பேச இருப்பவரின் உணர்வில் “மோதுகின்றது”.

நாம் அவரிடம் உதவி கேட்டுச் சென்றிருப்போம். அவருடைய உதவியைக் கோரி நாம் பேசும் பொழுது…
1.நம் ஆன்மாவில் கலந்து பெருகியுள்ள சோர்வடைந்த உணர்வுகள்
2.நம் சொல்லைக் கேட்டுக் கொண்டிருப்போரின் சுவாசத்தில் மோதி
3.நமக்கு அவர் உதவி செய்ய விரும்பி இருந்தாலும்
4.உதவி செய்ய விரும்பும் அவரின் எண்ணத்தை இது தடுக்கும்
5.இங்கே யாரும் தவறு செய்யவில்லை.

ஆனால் உதவி செய்ய விரும்புவரிடத்தில் நமது கஷ்டங்களையும், வேதனைகளையும் எடுத்துச் சொல்லும் பொழுது இந்த உணர்வின் தன்மை அவரிடத்தில் விளைகின்றது.

நாம் எத்தகைய கஷ்டங்களை அனுபவித்தோமோ அதனின் உணர்வுகளை அவர் நுகர்கின்றார். பின்
1.அவர் தலையை ஆட்டிவிட்டு.., “அப்புறம் பார்ப்போம்” என்பார்
2.இங்கே நம்முடைய சொல்லே நமக்கு எதிரியாகின்றது அவர்களல்ல.

அவர் உதவி செய்ய விரும்பினாலும் அவர்களுடைய உணர்வுகள் இத்தகைய நிலைகளில் விளையும்.

அதே சமயம் நமது தொழில்கள் தடைப்படும்பொழுது வேதனை என்ற நிலை வரும். வேதனை என்பதே நஞ்சு.  இந்த நஞ்சின் தன்மை வந்துவிட்டால் இந்த உணர்வின் தன்மை நமக்குள் அதிகமாக வளர்ந்து, கை கால் குடைச்சல் சோர்வு போன்ற நிலைகள் சூழ்ந்துவிடுகின்றது.

பின் நாம் தொழில் செய்ய முடியாத நிலைகளும் நாம் அதன் வழியில் யாருடன் பேச்சின் தொடர்பு வைத்துக் கொண்டாலும் அவைகளைக் கேட்டுணர்வோரின் நிலைகளையும் சோர்வடையச் செய்துவிடும்.

அவர்கள் நம்மைப் பார்க்கும் பொழுது “இவர் எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான்…”என்று நம்மைப் பற்றிய ஒரு எண்ணத்தை அவரிடத்தில் உருவாக்கும்.

“இவர் எதையும் செய்ய மாட்டார்…” என்ற உணர்வே அவரிடத்தில் ஓங்கி நிற்கும். இந்த இடத்தில் நம் ஆன்மாவே நமக்கு எதிரியாக வினை புரிகின்றது.

ஆகவே இதைப் போன்று நம் ஆன்மாவில் படரும் தீமையான உணர்வுகளை நீக்குவதற்குத் தான் ஒவ்வொரு நொடியும் நாம் ஆத்ம சுத்தி செய்துகொள்ள வேண்டும்.

விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் அந்தத்  துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நம் புருவ மத்தியில் இயக்கிக் கொண்டிருக்கும் உயிர் வழி நுகர்தல் வேண்டும்.

நுகர்ந்த அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை  நம் உடலில் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுத்து உள் முகமாக  இணைக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

இதன் வழி நாம் தொடர்ந்து செய்யும்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றல் மிக்க சக்தி நமது ஆன்மாவில் பாதுகாப்புக் கவசமாக பெரும் அருள் வட்டமாகி விடுகின்றது.

அது நம்முள் எத்தகைய தீமைகளையும் நம் அருகில் வராதபடி தள்ளிவிடுகின்றது. நம் ஆன்மா பரிசுத்தமாகி நாம் மகிழ்ந்து வாழ முடியும்.

இந்தப் பிறவிக்குப் பின் நம் உயிராத்மா அந்த சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து நாம் அனைவரும் பிறவி இல்லா நிலை என்ற அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.

அனைவரும் மகிழ்ந்திடும் நிலையில் அதனைக் கண்டு “நாம் அடையும் மகிழ்ச்சியே” நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் “அழியாச் சொத்து”

Image

Our family earth

அனைவரும் மகிழ்ந்திடும் நிலையில் அதனைக் கண்டு “நாம் அடையும் மகிழ்ச்சியே” நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் “அழியாச் சொத்து”

 

நமது பூமியே நமக்குத் தாய்.

 

நாம் மகிழ்ச்சியுடன் இருக்கும் பொழுது அதனைக் காணும் தாய் மனமும் மகிழ்ச்சி அடைகின்றது. அது போன்று நாம் மகிழ்ச்சியடையும் பொழுது வெளிப்படும் மூச்சலைகள் நமது தாய்பூமியில் படர்கின்றது.

 

இந்த மகிழ்ச்சியான உணர்வுகள் பரவும் பொழுது நமது தாய் நாடு மகிழ்ந்திருக்கும். இதில் வாழும் கோடிக்கணக்கான மக்களும் மகிழ்ச்சியின் உணர்வுகளைப் பெறுவர்.

 

பூமியில் ஒரு வெடிகுண்டை வீசினால் அதனின் நச்சுத் தன்மை காற்றில் பரவி அதனைச் சுவாசிக்க நேர்பவர்கள் மடிகின்றனர்.

 

ஆனால் மகிழ்ச்சியான உணர்வுகள் காற்றில் பரவும் பொழுது அதனை நுகர்பவர்கள் மகிழும் நிலை வருகின்றது.

 

நமது பூமியே நமக்குத் தாய் என்கின்ற பொழுது அந்தத் தாய்க்கு நாம் சேவை செய்வது எவ்வாறு இருக்க வேண்டும்…? என்ற நிலையில் சிந்தித்தல் வேண்டும்.

 

1.இந்தப் பூமியில் பிறந்த நாம்

2.இந்தத் தாயின் பிள்ளைகள் என்று ஒருங்கிணைந்து

3.தாயுடன் நாம் எவ்வாறு அரவணைத்துச் செல்கின்றோமோ

4.தாய் எவ்வாறு நம்மை அரவணைத்து வாழ்த்துகின்றதோ

5.இது போன்று நாம் தாயுடன் அணுகிய நிலைகள் கொண்டு

6.நாம் அனைவரும் சகோதரர் என்றும்

7.இன பேதமின்றி மத பேதமின்றி மொழி பேதமின்றி மன பேதமின்றி நாம் வாழ்நிடுவதே நலம்.

 

நாம் அனைவரும் “ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்” என்று எண்ண வேண்டும்.  இந்த எண்ணமானது நம் பூமியைக் காக்கும்.

 

இந்த பூமித்தாயைக் காப்பது போன்று நம்மை ஈன்ற தாயும், மகிழ்ந்திடும் நிலையாக நாம் செயலாற்றிட வேண்டும்.

 

நமது தாய் தந்தையர் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் நம்மிடத்தில் அன்பைக் காட்டி நல்லறிவை ஊட்டி நம்மை வளர்த்தனர். உணவும் உடையும் கொடுத்துக் கல்விக்கு வேண்டிய வசதிகளும் செய்து கொடுத்தனர்.

 

ஆகவே  நாம், நம் தாய், தந்தையை மகிழ்ந்திடச் செய்யும் நிலை பெறவேண்டும்.

1.தீய உணர்வுகளை அடக்க வேண்டுமென்றால்

2.தாயின் பேரன்பைப் பெறவேண்டும்.

3.தாயின் பேரன்பைப் பெற்றால் மகரிஷிகளின் அருள் சக்தியை எளிதில் பெற முடியும்.

அதைப் பெற்று உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய உணர்வுகளை அடக்கிடல் வேண்டும்.

 

மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்து உங்கள் அன்னை தந்தையைப் பேரின்பப் பெரு நிலை பெறச் செய்ய வேண்டும்.

 

உங்கள் அன்னை தந்தை அவர்கள் பெறுகின்ற மகிழ்ச்சியினால் வெளிப்படும் மூச்சலைகள் இந்த பூமியில் படர்கின்றன.

 

நம் தாய் பூமியான இந்த உலகில் நாம் அனைவரும் மகிழ்ந்திடும் உணர்வை வெளிப்படுத்தினால் தாய் பூமியும் மகிழ்ந்திடும் நிலை உருவாகும்.

 

1.அனைவரும் மகிழ்ந்திடும் நிலையில்

2.அதனைக் கண்டு நாம் அடையும் மகிழ்ச்சியே

3.நம் உயிரான்மாவிற்குச் சேமிக்கும் “அழியாச் சொத்து”.

உடலை விட்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்…?

Noble soul

உடலை விட்டு எவ்வாறு வெளி செல்ல வேண்டும்…? 

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் ஞான வித்தை எமக்குள் ஆழமாகப் பதிவு செய்தார்.

பதித்த வித்தை எமக்குள் வளர்ப்பதற்கு “எங்கெங்கெல்லாம் மகரிஷிகளின் அருள்ஞான சக்தி தொடர்ந்து உள்ளதோ… அங்கெல்லாம்…” எம்மைக் கால் நடையாக சென்றுவர கட்டளையிட்டார்.

ஞானிகளின் உடலில் விளைந்த அருள் ஞான சக்திகள் அந்த இடங்களில் பதிந்திருப்பதை படர்ந்திருப்பதை எம்மை நுகர்ந்தறியச் செய்தார்.

மேலும் அதனின் “ஆனந்த நிலையினை” எமக்குள் விளைவித்துக் கொள்ளச் செய்தார்.

பூமியில் மனிதராக பிறந்த நாம்
1.எவ்வாறு இந்த உடலை விட்டு வெளியே செல்ல வேண்டும்?
2.சென்றபின் எவ்வாறு நிலைத்திருக்க வேண்டும் என்று அதையும் குருநாதர் செய்து காட்டுகின்றார்.
3.உயிரான்மாவை உடலை விட்டுபிரியச்  செய்கின்றார்… “ஒளியின் சுடரைக் காட்டுகின்றார்”.
4.ஒளியின் சுடராக ஆனபின் இந்த உயிரான்மா எந்த நிலையில் இருக்கும்? என்பதையும் நிலைக்கச் செய்து காட்டுகின்றார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் துருவ நட்சத்திரத்தின் இயல்புகளைக் காட்டி அதிலிருந்து ஆற்றல்மிக்க சக்திகள் வருவதை எம்மை நுகரும்படி செய்தார்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எமக்கு எவ்வாறு பெறும்படி செய்தாரோ அதே வழியில் தான் உங்களுக்கும் பெறச் செய்துகொண்டிருக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று உங்கள் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி உயிர் வழி சுவாசியுங்கள்.

பேரருள் பேரொளியின் உணர்வின் தன்மையை நீங்கள் எடுக்கும் பொழுது உங்களுக்குள் தீமையை அகற்றிடும் சக்தியாக “ஒளியின் சுடராக” விளைகின்றது.

நீங்கள் அனைவரும் அதனைப் பெறவேண்டும் என்பதற்காக அருள் உரைகளை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

1.நீங்கள் எந்த அளவிற்கு உபதேசங்களைக் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ
2.அந்த அளவுக்கு ஆழமாக
3.யாம் கொடுக்கும் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகின்றன.

யாம் கொடுக்கும் உபதேசங்களை அடிக்கடி நினைவு கூர்ந்து உங்கள் வாழ்வில் கடைப்பிடித்துப் பாருங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று
1.உங்கள் உயிரை எண்ணி ஏங்கும்போது
2.அங்கே உங்களுக்கு உடனடியாக அந்தச் சக்தி கிடைத்து
3.உங்களிடத்தில் தீமையின் தன்மைகள் சேராது காக்கப்படுகின்றீர்கள்.

இந்த உபதேசத்தைப் படித்துத் தெரிந்து கொள்ளும் அன்பர்கள் அனைவரும் இருள் சூழ்ந்த இவ்வுலகில் நஞ்சான நிலையை நீக்கி நன்மைகளைப் பெறும் விதமாக
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளை பேரொளியைப் பெறவேண்டும்
2.மெய்ஞானிகள் காட்டிய உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்
3.“என்றும் பதினாறு” என்ற நிலைத்த ஒளி சரீரத்தை பெறவேண்டும் என்று
4.நெஞ்சில் அவா கொண்டு இதை வெளிப்படுத்துகின்றோம்.

குருநாதர் காட்டிய மெய் வழியைக் கடைப்பிடித்து வரும் அனைவருக்கும் எமது அருளாற்றலைப் “பூரணமாக” வழங்குகின்றோம்.

ஆகவே உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை மகாஞானிகளின் அருளாற்றலின் துணை கொண்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதன் மூலம் விண்ணும் மண்ணும் போற்றும் மகாஞானிகளில்… “நீங்களும்” ஒருவராக இருப்பீர்கள்.

நம் எண்ணங்களைத் (ஆயுதங்களை) தூய்மைப்படுத்துவதே “ஆயுத பூஜை” – ஞானிகள் சொன்ன சாஸ்திரம்

Image

Saraswathi Pooja

நம் எண்ணங்களைத் (ஆயுதங்களை)  தூய்மைப்படுத்துவதே “ஆயுத பூஜை” – ஞானிகள் சொன்ன சாஸ்திரம்

 

ஆயுத பூஜை என்றால் அதனின் அர்த்தமே “இப்பொழுது” வேறுவிதமாக இருக்கின்றது.

 

படங்களை எடுத்து வைப்பது புத்தகங்களை எடுத்து வைப்பது அரிவாள்மனையை எடுத்து வைப்பது கோடாலியை எடுத்து வைப்பது ஆட்டை அறுப்பவன் கத்தியை எடுத்து வைப்பது என்று இதற்கெல்லாம் பூஜை செய்வது.

 

ஆக ஆட்டை அறுத்தவன் இந்தக் கத்தியை வைத்து இத்தனை ஆடுகளை நான் அறுத்தேன் அதனால் எனக்கு வருமானம் வந்தது என்று அவனும் “கத்தியை வைத்து ஆயுத பூஜை செய்கின்றான்”.

 

“பார்க்கலாம் நீங்கள்…,” ஆடு அறுக்கும் கடையில் அல்லது வீட்டில் கத்தியை வைத்துப் பூஜை செய்கின்றான்.

 

கத்தியால் ஆட்டை அறுத்து அதைக் கொன்று விற்று நான் சாப்பிட்டேன். அதனால் இது நல்ல முறையில் இருந்தால் இன்னும் எத்தனையோ ஆட்டை இதை வைத்து அறுப்பேன் என்று அவனும் இப்படிப் பூஜை செய்கின்றான்.

 

ஆயுத பூஜை அன்று இந்த வேடிக்கையெல்லாம் பார்க்கலாம்.

 

அதே சமயத்தில் நான் ஏமாற்றி எல்லாவற்றையும் விற்றேன்  என்று தராசுகளையும் மற்றவைகளையும் வைத்துப் பூஜை செய்வார்கள்.

 

தன்னிடம் பொருள் வாங்கிச் செல்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் அவர்கள் வாழ்க்கையில் நலம் பெறவேண்டும் கொடுத்த காசு திரும்ப வரவேண்டும் என்று எண்ணினால் பரவாயில்லை.

 

ஆனால் அப்படி எண்ணுவதில்லை. தராசைச் சுத்தப்படுத்தி வைத்துவிட்டால் போதும்.

 

எத்தனையோ வகையில் ஒருவருக்கு அளவுகோலைக் குறைத்துக் கொடுத்திருப்பேன். இப்படியெல்லாம் எனக்கு நீ சம்பாரித்துக் கொடுத்தாய் சரஸ்வதி பூஜை என்று சொல்லிவிட்டு “தராசை வைத்துப் பூஜை செய்வார்கள்”.

 

ஏனென்றால் திருடுவதற்கு அந்த ஞானத்தைக் கொடுத்தாய் என்று சொல்லி அந்தப் பூஜை செய்கிறவர்கள் தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள்.

 

நன்றாக யோசனை செய்து பாருங்கள் சரஸ்வதி பூஜை/ஆயுத பூஜை அன்று நாம் என்ன செய்கிறோம்? பெரும்பகுதியானவர்கள் இப்படித் தவறு செய்யும் நிலையாக உள்ளார்கள்.

 

செய்யும் தவறை நீக்குவதற்கு யாராவது எண்ணுகிறார்களா…, என்றால் “இல்லை”.

 

மனித வாழ்க்கையில் நம்மை அறியாது சேர்ந்த தீமைகளையும் தீய செயல்களையும் நாம் அறியாது செய்த தவறுகளையும் நீக்க வேண்டும் என்று “இந்த ஞானத்தை” எடுக்க வேண்டும்.

 

இதை நாம் கவர்ந்தோம் என்றால் வசிஷ்டர் அந்த உணர்வின் தன்மை நம் உடலாகும் பொழுது பிரம்மம். ஆக அதன் சக்தியாக அருந்ததியாக நம்மை இயக்கும்.

 

1.நாங்கள் நல்லதைச் செய்ய வேண்டும்

2.தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்

3.எல்லோரும் நல்லவராக வேண்டும்

4.எங்கள் தொழில் சீராக அமைய வேண்டும்

5.பொய் சொல்லாத நிலை வேண்டும்

6.தவறு செய்யாத நிலைகள் வேண்டும் என்ற

7.இந்தக் குணங்களை.., “இந்த ஆயுதத்தைச் சுத்தப்படுத்த வேண்டும்”.

 

எத்தனை பேர் இந்த மாதிரிச் சுத்தப்படுத்துகின்றோம்…! யாருமே இப்படி நினைப்பதில்லை. இந்த ஆயுதத்தைச் சுத்தப்படுத்தும் நிலைக்குத்தான் ஆயுத பூஜை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள்.

 

தொழிலில் என்னை அறியாது எத்தனையோ ஏமாற்றியிருப்பேன். ஏமாற்றும் நிலைகள் மாறி சமப்படுத்தும் நிலை பெறவேண்டும்

1.என் தொழில் சீராக வேண்டும்

2.என்னிடம் பொருள் வாங்குபவர்கள் மனம் நோகக்கூடாது

3.மனம் நோகும்படி என் செயல் இருக்கக்கூடாது

4.மனம் நோகும்படி என் சொல் இருக்கக்கூடாது

5.எல்லோரும் சந்தோஷமாக இருக்கக்கூடிய வழியில் நம் எண்ணங்களை

6.”இந்த ஆன்மாவைச் சுத்தப்படுத்த வேண்டும்”.

 

எத்தனை பேர் சுத்தப்படுத்துகின்றோம்?

 

ஆயுத பூஜை அன்று சுண்டலை அவித்து எல்லோருக்கும் கொடுக்கத் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆயுத பூஜை அன்று இப்படியெல்லாம் படைத்துப் பூஜை செய்தால் கடையில் நன்றாக வியாபாரம் ஆகும்.

 

கடையை அறிமுகப்படுத்தி வைப்பதற்கு சுண்டலை இனாமாகக் கொடுத்தால் கடையைத் தேடி வருவார்கள். இப்படிக் கொடுத்தால் இந்தக் கடையில் இந்தச் சரக்கு இருக்கின்றது என்று தேடி வருவார்கள் என்று இது விளம்பரப்படுத்துவதற்காகச் செய்கின்றார்கள்.

 

படிக்கும் குழந்தைகள் என்ன செய்கின்றார்கள்?

 

1.கல்வியில் ஞானம் பெறவேண்டும் என்ற

2.உணர்வின் கூர்மையை அது தூய்மைப்படுத்துகின்றார்களா…?

3.தூய்மைப்படுத்த வேண்டும் என்று எண்ணுகின்றார்களா…?

 

தாய் தந்தையரின் அருள் நாங்கள் பெறவேண்டும் அருள் ஞானம் பெறவேண்டும் அருள் சக்தி பெறவேண்டும் இருளை அகற்றும் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்.

 

மகரிஷிகள் உபதேசித்த உணர்வுகள் நாங்கள் நடக்க வேண்டும் அவர்கள் இருளை அகற்றிப் பொருள் கண்டுணர்ந்த அந்த ஒளியான நிலைகள் நாங்கள் பெறவேண்டும் என்று “இப்படி நுகர்ந்தால்… மனத் தூய்மை ஆகின்றது”.

 

நம் உடலிலுள்ள அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றியமைக்கின்றோம். அந்த ஞானத்தின் வழி நமக்குள் சேர்க்கும் பொழுது எதை நுகர்கின்றோமோ அது “ஓ…” என்று பிரம்மமாகின்றது.

 

இந்த உணர்வுகளை நாம் கவர்ந்து கொள்கின்றோம். கவர்ந்து கொண்ட உணர்வுகளை நுகரப்படும் பொழுது உடலாகின்றது. அருந்ததி தன்னுடன் இணைந்து அந்தச் சக்தியாக நமக்குள் வேலை செய்கின்றது.

 

ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திங்கள் இதுதான்.

தியானத்தின் மூலம் நாம் பெறக்கூடிய பாசுபத அஸ்திரம்…!

Lord shiva and arjuna

தியானத்தின் மூலம் நாம் பெறக்கூடிய பாசுபத அஸ்திரம்…! 

கார்த்திகை நட்சத்திரம் சூரியனைப் போன்று தனக்கென்று உபகோள்களை அமைத்து ஒரு பிரபஞ்சமாக மாறி வருகின்றது. நம் பிரபஞ்சத்திலுள்ள 27 நட்சத்திரங்களும் 27 பிரபஞ்சங்களாக மாறிவிட்டால் நமது சூரியனுக்கு உணவில்லாது போய்விடும்.

ஏற்கனவே இந்த நிலையாகி விட்டது.

நம் பிரபஞ்சத்தில் முன்னிலையில் இருப்பது கார்த்திகை நட்சத்திரம்.

கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க உணர்வலைகளே மனிதனின் ஆறாவது அறிவான அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைக்கு காரணம்.

அறிந்திடும் உணர்வுகள் ஒளியான உணர்வின் அலைகள் மற்ற அணுக்களுடன் கலக்கப்படும் பொழுது
1.அணுவின் இயக்கத் தொடரை அறிந்திடும் செயல்
2.”ஒலியின் நாதங்களாக” எழுப்பச் செய்து அந்த உணர்வின் தன்மை கொண்டு
3.மற்றவர்களுக்கு நுகரச் செய்யும் உணரச் செய்யும்
4.உணர்த்திடும் உணர்வின் ஒளி அலைகளைப் பெற்றது கார்த்திகை நட்சத்திரம்.

அதனின் செயலாக்கத்தை அது உமிழாது தனக்குள் அடக்கிக் கொண்டால் நம் பிரபஞ்சமான சூரியனுக்குள் உணர்வின் தன்மை ஒலியாகி எதிர் நிலையின் தன்மை நாம் கண்டுணரும் நிலைகள் மறைக்கப்படும் நிலைகள் வந்துவிடும்.

அப்படி ஆகும்போது மனிதனின் சிந்தனைகள் குறைவுற்று மிருக உணர்வுகளின் தன்மைகள் அதிகமாகி பூமி சீர்கெடும் நிலை உருவாகிவிடும்.

இதைப் போன்ற நிலைகளில் இருந்து நம்மை மீட்டுக் கொள்ள அன்று கண்ணன் (கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்தே ஆக வேண்டும்.

1.நம் நினைவுகளை விண்ணிலே கூர்மையாகச் செலுத்தி
2.“நரசிம்ம அவதாரமாக” தீய நிலைகள் நமது உடலுக்குள் வராதபடி அதைப் பிளந்து
3.அந்த மகரிஷிகளின் ஆற்றல்மிக்க உணர்வுகளை நமக்குள் சேர்த்து
4.அதைப் பருகிடும் நிலையாக நாம் சுவாசிக்கும் நிலைகள்,
5.அந்த ஆற்றல்மிக்க நிலையாகப் பெறச் செய்வதே யாம் சொல்லும் தியானம்.

மகாபாரதக் காவியத்தில் கண்ணன் சொல்லுகின்றான்.
1.சிவனான இந்த உடலுக்கு
2.அந்த ரிஷியின் தவக்கோலத்தில் இருந்து பெற்ற
3.”தவத்தின் பலனால் தான்” உனக்குள் இருக்கக்கூடிய தீமைகளை நீக்க முடியும் என்று
4.”விண்ணை நோக்கி ஏகும் முறையை” அர்ச்சுனனுக்குத் தெளிவாக எடுத்துரைத்தான்.

“சிறு துளி பெருவெள்ளம்” என்பது போல ஞானிகளின் உணர்வின் ஆற்றல்மிக்க எண்ணத்தின் தன்மை “ஒரு வித்தாக” உங்களுக்குள் வலுப் பெறும் சத்தாக ஊழ்வினையாகப் பதிவாக்கப்படுகின்றது.

இதனின் துணை கொண்டு “எண்ணும்பொழுது” நீங்கள் அந்தச் சக்திகளைப் பெற முடியும்.

ஒரு நூலால் இழுக்க முடியாத ஒரு பொருளை பல நூல்களை ஒன்றாகச் சேர்த்து கயிறாக்கி இழுக்கின்றோம். அது போன்று
1.எல்லாருடைய  எண்ணங்களும் ஒருமித்த நிலைகள் கொண்டு
2.“மகரிஷிகள் அருள் ஒளி அனைவரும் பெற வேண்டும்” என்ற ஏக்க உணர்வுடன் தியானித்தால்
3.சுலப நிலைகளில் உங்களுக்குள் அது இணையும்.

அவ்வாறு எண்ணி எடுத்து நீங்கள் ஒவ்வொருவரும் இடும் முச்சலைகள் அழுத்தமான நிலைகளில் பரவி நம்மைக் காக்கலாம் நம்மைச் சார்ந்தவர்களையும் காக்கலாம்.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் செயலிழந்தாலும் “நாம் என்றுமே அழியா ஒளியின் சரீரமாக” துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழ முடியும்.