மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்யும் தியானம் 

Sages network connection

மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்யும் தியானம் 

உங்கள் ஆசை எதில் இருக்க வேண்டும்…?

அந்த சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் அந்த சக்தி எங்களுக்குள் வளர வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும்.

1.யாரவது கஷ்டப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டால்
2.அவர்களுக்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும்
3.அவர்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் என்ற இந்த உணர்வை நீங்கள் எடுத்து உங்களுக்குள் சமைத்து
4.அதில் நீங்கள் மகிழ்ச்சியைத் தெரிந்து கொள்ள ஆசைப்பட வேண்டும்
5.இதை நீங்கள் பெருக்க வேண்டும்

ஒருவர் உடலில் ஆவி செயல்படுகிறது என்றால் 4 பேர் சேர்ந்து கூட்டுத் தியானம் இருக்க வேண்டும். மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று இந்த சக்தியைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தியைக் கூட்டிக்கொண்டபின் அவர் உடலில் உள்ள ஆன்மா மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும். அந்த ஆன்மா அவருக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று சொல்லவேண்டும்.

அவர்களையும் நீ இந்த மாதிரி ஆத்ம சுத்தி செய்யச் சொல்லி நீ சீக்கிரம் நன்றாகிப்போ என்று சொல்லவேண்டும் இதைப் போல் எடுத்தார்கள் என்றால் அவர்களுக்கு லாபம். இதைப் பெருக்கிப்பழக வேண்டும்

ஏனென்றால் நீங்கள் அந்தப் பேருண்மையைப் பார்க்கப் பார்க்க உங்களை அறியாமலேயே அந்த உணர்வலைகளுக்குள் சென்றவுடனே  சப்தரிஷி மண்டலத்துடன் உங்கள் உணர்வுகள் சுழல்வதைப்பார்க்கலாம்.

இந்தத் தொடர்புக்குள் அந்த உணர்வுகள் தன்னிச்சையாகவே அதை எடுக்கும்.

1.ஒரு அரசமரத்தின் வித்து பாழடைந்த இடத்தில் பட்டாலும்
2.நீர் இல்லையென்றாலும் காற்றில் இருப்பதை எடுத்து
3.விழுதுகளைப் பாய்ச்சி தன் சத்தை எடுத்து வளர்ந்துவிடும்.

அதைப் போல உங்கள் நினைவின் ஆற்றல் எல்லாம் விண்ணுக்குச் சென்று பழக வேண்டும். அப்படிப் போனால் பல அற்புதங்கள் தெரியும். பல அதிசயங்கள் தெரியும்.

ஆரம்பத்தில் (30 வருடங்களுக்கு முன்) உங்களுக்கு என்ன காட்சி கிடைத்தது? உங்களுக்கு என்ன தெரிந்தது? என்று நான் கேட்பேன்.

அப்பொழுது எல்லாருக்கும் காட்சிகள் தெரியும். எல்லோரும் “அதைப் பார்த்தேன்… இதைப் பார்த்தேன்…” என்று சொல்வார்கள்

அப்படிச் சொன்னவர்களுக்கெல்லாம் என்ன ஆகியது? அந்த ஆசையில்தான் மூழ்கிவிட்டார்கள். அதிலிருந்து மீள்வதற்கு வழி இல்லாமல் போய்விட்டது

1அகண்ட பேரண்டக் காட்சியை நாம் அந்த மகரிஷிகளின் உணர்வுகளோடு பார்க்கவேண்டும்
2.அந்த மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்ற ஆசையை நாம் அங்கே வைக்கவேண்டும்
3.அதை நாம் வளர்க்கப் பழகவேண்டும்

ஏனென்றால் அதை நாம் எதில் பார்க்கவேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று இதை நம் உடலுக்குள் ஏற்ற வேண்டும்.

இதன்வழி கொண்டு ஏற்றியபின் உங்கள் பார்வையால் யார் கஷ்டப்பட்டாலும் மகரிஷிகளின் அருள்சக்தி அவர்கள் பெறவேண்டும் அவர்கள் உடலில் உள்ள தீமைகள் எல்லாம் நீங்கவேண்டும் என்று “இந்தச் சக்தியை வைத்து… அந்த உண்மையான சக்தியை” நீங்கள்  பார்க்கலாம்.

இதைப் பார்க்கப்படும்போது அந்த தீமைகள் விலகி மகிழ்ச்சியின் உணர்வுகள் உங்களுக்குள் வரும். அந்த உணர்வின் எண்ணம் வேகமாகக் கொண்டு போகின்றது.

இதன் ரூபத்தில்தான் நீங்கள் பார்க்க வேண்டுமே தவிர எனக்குச் சப்தரிஷி மண்டலம் தெரியவில்லையே அது எப்படி வருகிறது? அது எப்படி இருக்குமோ…! என்று இந்த சந்தேகம் கூடாது.

படிப்படியாகத்தான் நாம் போக வேண்டும்.

ஒரு சினிமா காட்டுகின்றார்கள் என்றால்
1.அங்கே இருக்கும் போது ஒளியாகத்தான் படுகின்றது
2.அதைத் தடுத்து நிறுத்தும் போதுதான் உருவம் தெரிகின்றது
3.நாம் குறுக்கே பார்க்கும் போது தெரிவதில்லை (ஒளி தான் தெரியும்)
4.அதிலே தடுத்து நிற்கும் போதுதான் (திரையில்) அந்த உணர்வு தெரிகின்றது

அதே மாதிரிதான் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் நமக்கு முதலில் தெரியாது. “ஒளியின் அணுக்களாகத்தான் தெரியும்”.

உணர்வின் தன்மை தனக்குள் அதை நிறுத்தி அதை வைக்கப்படும் போது உருவத்தின் தன்மை “யார்…யார்…!” என்ற உணர்வுகள் நமக்குத் தெரிகின்றது

இவையெல்லாம் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு நேரடியாகக் காட்டிய நிலைகள்.
1.நீங்களும் அந்த மகரிஷிகளைப் பார்க்கலாம்.
2.அவர்களுடன் தொடர்பும் கொள்ள முடியும்.

Leave a Reply