பக்தி கொண்ட ஆன்மாக்களின் நிலைகள்

Image

http://omeswara.blogspot.com/2013/01/blog-post_5923.html

  1. பக்தியில் மந்திரம் சொல்வதால் ஏற்படும் விளைவுகள்

மனிதனாகப் பிறந்த நாம், எதனையும் உருவாக்கத் தெரிந்து கொண்டவர்கள்.  நாம் இன்றைய மனித வாழ்க்கையில்,  மந்திரங்களைச் சொல்லி நமக்குள் உருவாக்கிக் கொள்கின்றோம் உருவாக்கிய பின் அந்த தெய்வம் தான்,  எல்லாம் என்ற வகையில் சதா அந்த மந்திரத்தை சொல்லி வருகின்றோம்.

உதாரணமாக முருகன் படத்தில் இருந்து வரக்கூடிய கலர்,  அதன் மேல் போட்ட துணியின் கலர்,  இவைகளைக் கண் பார்த்து, அதன் கலர்களைக் காட்டுகின்றது. அதிலிருந்து அந்த உணர்வை எடுக்கின்றது. எடுக்க எடுக்க,  அந்த முருகன் மாதிரியே,  நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.

நாம் ஜெபித்த சொல் (மந்திரம்),  நமக்குள் பதிவாகின்றது. இந்த உணர்வின் தன்மையை ஆயுள் முழுவதும்,  நமக்குள் உருப் பெறச் செய்கின்றோம். யாராவது நம்மிடம் வந்தார்கள் என்றால், முருகன் அருள் கிடைக்கும், உனக்கு நன்றாகி விடும் என்று சொல்கின்றோம். அந்த வலுவான எண்ணங்கள் அவர்களுக்குள் சென்றவுடன், அவர்களுக்கு நன்றாகி விடுகின்றது.

இருந்தாலும் இதை உருவாக்கப்பட்டு,  என்னென்ன மந்திரத்தை சொல்லுகின்றேனோ, “நீ இத்தனை முறை மந்திரத்தைச் சொன்னால், முருகனையே நீ  காணலாம்”,  அவன் அருள் கிடைக்கும்.

இதைப் போன்று,  “வராகி,  சுடலை மாடன்”  என்று சொல்லுவார்கள். அந்தந்த உணர்வுகள் குவிக்கப்பட்டு,  அந்த உருவம் உனக்குள் தெரியும். இந்த உணர்வை வளர்த்து வந்தால், நாம் இறந்தபின்,  இதே மந்திரத்தைச் சொன்னார்களென்றால்,  அந்த உணர்வையே எடுத்து,  நாம் போட்ட பூஷ்பத்தைப் போட்டால் முருகனையே கைவல்யப்படுத்தலாம்,  என்றெல்லாம் சொல்வார்கள்.

அப்பொழுது,  முருகனையே எனக்குள் வடித்துக் கொள்கின்றேன். எனக்குள் உருவான நிலைகளில்,  என் உருவம் தெரியாது.  எனக்குள் எந்த உருவத்தை நினைவுபடுத்திக் கொண்டேனோ,  அந்த அலைகள் பரவும். அப்பொழுது அங்கு,  முருகனாகக் காட்சி கொடுக்கும்.

காட்சிகளில்,  முருகனாகப் பார்ப்பது எல்லாம்,  பக்தி கொண்ட நிலைகள்தான்.  ஒரு முருகன் ஒரு விதமாகப் பேசுவார். இன்னொரு முருகன் வேறு விதமாகப் பேசுவார்.

அவரவர் உணர்வில் கலந்த உணர்வின் வேகங்கள்தான்,  அந்தந்த அலைகளாகப் படரும் பொழுது, அவரவர்களுக்குக் கிடைத்த நிலைகள் கொண்டு பேசுவார்கள்.

ஒரு முருகன் ரோட்டில் உருளும்,  இன்னொரு முருகன்,  “இரு நான் பார்க்கின்றேன்” என்று ஆசீர்வதிக்கும். இப்படி முருகனில்,  யார் யார் எந்தெந்த உணர்வு கொண்டு வளர்த்தார்களோ,  அந்த அலைகளாகப் படரும். படர்ந்த அலைகள் குவிந்தவுடன், “முருகனையே  தரிசனம் செய்தேன்”  என்று சொல்வார்கள். அந்த உணர்வின் ஒலிகள் வரும் பொழுது அதற்குரிய மந்திரத்தைச் சொன்னால் போதும், சஷ்டிக் கவசத்தைப் பாடுகின்றார்கள்.

அந்த உணர்வின் ஒலிகள் ஒருவர் மேல் பட்டவுடன்,  அந்த உடலில் இருப்பது எல்லாம் இங்கு இழுத்துவிடும்.

அந்த உணர்வுகள் இவருக்குள் வந்தபின்,  கஷ்டமெல்லாம் இவருக்கு வந்துவிடும்.இப்படி ஆயிரம் கஷ்டம் வந்தவுடன்,“முருகன் இப்படி சோதிக்கின்றான் என்பார்கள்”.

  1. பக்தி கொண்ட ஒரு அம்மாவின் நிலை

ஒரு சமயம்,  நான் சுற்று பயணம் செய்யும் பொழுது, ஒரு கிராமத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். அந்த கிராமத்தில் ஒரு அம்மா இருந்தது. அது ஒரு முருக பக்தர். அந்த அம்மாவிற்குச் சொத்து அதிகம் இருந்தது, எல்லாவற்றையும் எழுதிக் கொடுத்து விட்டது.

என்னை, அந்த அம்மா இருந்த வீட்டில், திண்ணையில் உட்காரச் சொன்னார்  குருநாதர்.  அந்த அம்மாவால், எழுந்து நடக்க முடியாது.

அந்த அம்மாவிற்கு,   வயது எழுபது இருக்கும். அது புலம்பிக் கொண்டே இருந்தது. என்னிடம் இருந்த சொத்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு,  என்னை அநாதையாக்கி விட்டார்கள்.

செல்வமும் செருக்கும் உள்ள பொழுது,  என் மடிமேல் உட்கார்ந்து விளையாடுவையே, “முருகா!”, இப்பொழுது எங்கடா போனாய்?. செல்வம் இருப்பவர்களைத் தான் பார்ப்பாயா?  நான் இப்பொழுது அநாதையாக இருக்கின்றேன் என்னைக் காக்கவில்லையா? நான் அநாதைதானா?, என்று புலம்பிக் கொண்டு உள்ளது. ஆனால், உடலெல்லாம் மலத்தால் சூழ்ந்து, அசிங்கமாக வைத்திருந்தது.

அந்த அம்மா வீடு பெரியது,  ஆனால் சாலையில் தூக்கிப் போட்டு விட்டுப் போய்விட்டார்கள். “முருகா!,  நான் நினைக்கும் பொழுதெல்லாம் வரம் கொடுத்தாய்,  நான் சொல்லுகின்றவருக்கு எல்லாம் நல்லது செய்தாய்,  எனக்கு நல்ல வழியும் காட்டினாய்”.  என்னிடம் செல்வம் இல்லையென்று, நீ கூட வராமல் போய்விட்டாயேடா,  என்று சொல்லிக் கொண்டு இருந்தது.

“நான் அவர்களுக்கு எல்லாம் செய்தேனே,  எனக்கு இப்படிச் செய்கின்றார்களே,  எனக்குச் சொத்து வேண்டாம், நீ இருந்தால் போதும் முருகா”. “என்னை இந்த நிலைக்கு விட்டு விட்டார்கள்,  நான் அசிங்கமான நிலையில் இருக்கின்றேன், என்னை கவனிப்பதற்கு, நீ கூட வரவில்லையே, இந்த அசிங்கத்தைப் பார்த்து, நீ கூட விலகி விட்டாயா?”  என்று கேட்டுக் கொண்டிருந்தது.  இரண்டு மணி நேரம்,  அந்த அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இதையெல்லாம்,  என் அனுபவத்தில் நான் கண்டதைச் சொல்லுகின்றேன்.  அந்த அம்மா புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து,  நான் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனேன். அந்த அம்மவை பக்கத்தில் இருந்த கிணற்றில் குளிக்க வைத்து,  துணிகளை துவைத்துக் கொடுக்கச் சொன்னார் குருநாதர்,  செய்தேன். பின்பு,  ஆசீர்வாதம் கொடுத்தேன்.

மனது தெளிவடைந்து அந்த அம்மா அமர்ந்தது,   “முருகா!, நீ வந்துவிட்டாயா?”. “நீ இந்த ரூபத்தில் வருவாய் என்று எனக்குத் தெரியவில்லையே”, என்று முருகனைத் தான் நினைக்கின்றது.

“என் பிள்ளை மாதிரி என் மடியில் அமர்ந்து விளையாடுவாய், இப்பொழுது, பெரிய ஆளாய் வந்து இருக்கின்றாய், நீ திருடனப்பா”  என்று சொல்லுகின்றது. அந்த இடத்தில், அவர்கள் உணர்வுகளைத் தெரிந்து கொண்டு,  அந்த அம்மாவிற்கு உபதேசம் கொடுக்கின்றார், குருநாதர்.

“நீ நல்லதைச் செய்தாய்,  ஆனால், பிறருடைய கஷ்டமெல்லாம்,  நீ எடுத்துக் கொண்டாய்”. “உனக்குப் பணம் வேண்டாம் என்று அவர்களிடம் கொடுத்து விட்டாய்”. “அவர்களின் கஷ்டத்தை நீ எடுத்துக் கொண்டாய்.

அவர்களின் கஷ்டங்களை நீ எடுத்து, அது நோயாக வந்து விட்டது.  “கடைசியில் நீ என்னைக் கைவிட்டு விட்டாய் என்று,  வெறுப்பைத்தான் எண்ணுகின்றாய்.

இந்த ஆறாவது அறிவின் (முருகன்) தன்மையை உனக்குள் ஒளிச் சுடராக மாற்றிடாமல்,  உடல் பற்றைத் தான் வைத்தாய்.

சொத்து வேண்டாமென்று விட்டு விட்டாய், நீ கூட மறந்து விட்டாய் என்று,   உடல் பற்றைத் தான் வைத்தாய்.

பக்தியில்,  துயரத்திற்கு அவன் (முருகன்) காக்கவில்லை என்ற நிலை வருகின்றது.  அந்த சமயத்தில்,  அருள் ஞானிகள் காட்டிய நிலைகள், இங்கு வரவே இல்லை என்பதைக் காட்டுகின்றார், குருநாதர்.

ஆனால்,  இதே நிலைகளில்,  பக்தியில் இந்த ஆன்மா வெளியே சென்றால்,  இது யார் மேல் வெறுப்பு கொண்டதோ, அவர் உடலுக்குள் தான் இந்த ஆன்மா செல்லும் என்று குருநாதர் சொல்கின்றார்.

அந்த அம்மாவிடம் கேட்கப்படும் பொழுது, “என் சொத்துகளை சொந்தங்களுக்கு எழுதி வைத்தேன்”  என்று சொல்லுகின்றது. சொத்துகளை வேண்டாம் என்று ஒதுக்கினாலும்,

உடலை விட்டு பிரியும் இந்த ஆன்மா, அவர்களிடமே (அந்த அம்மாவின் சொந்தங்கள்) செல்லுகின்றது.  

  1. பக்தி கொண்ட மற்றொருவரின் நிலை

இதை விட்டு விட்டு, இன்னொரு இடத்திற்குப் போகச் சொன்னார் குருநாதர்.

அது ஒரு சின்ன கிராமம், அது பெண், இது ஆண். அவருக்கு வயது அதிகமாகிவிட்டது. “என்னை ஏன்டா சோதிக்கின்றாய் முருகா, எல்லாவற்றையும் கொடுத்தாச்சு,  பேரன் பேத்தி எடுத்தாச்சு,  என்னை நீ உன்னிடம் அழைத்துக்கொள் முருகா”.  “எதுக்கு இந்த கஷ்டமெல்லாம் பட வேண்டும்?”, “பேரனுக்கு சம்பாதித்து வைத்தோம்,  அவன் அப்படித் திரிகின்றான்,  மகன் இப்படித் திரிகின்றான்”, “எல்லாம் பார்க்கச் சகிக்கவில்லை,  எவ்வளவு கஷ்டப்பட்டேன், சம்பாதித்தேன்,  அவர்கள் செய்கின்றதைப் பார்க்கும் பொழுது, எனக்குப் பிடிக்கவில்லை முருகா”. அவர் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றார்.

என்னை அங்கே போகச் சொல்லுகின்றார் குருநாதர்,  “பக்தியில் எந்தளவிற்கு இருக்கின்றார்கள் என்பதைப் பார்”,  என்கிறார். எந்த முருகன் மேல் பக்தி வைத்தாரோ, இவருடைய நல்ல ஒழுக்கமும், அந்த சொத்து மேல் பற்று இல்லையென்றாலும்,  சொத்து சேர்த்து வைத்தேன்,  பையன் ஒழுக்கமாக இல்லையே என்ற நிலை தான் வளருகின்றது.

அவர்கள் செய்வது சகிக்கவில்லையப்பா,  நான் உன்னிடமே வந்து விடுகின்றேன் என்ற இந்த எண்ணம்தான் வளருகின்றது. சொத்தையும், பையனையும் வெறுக்கின்றார். முருகனிடம் வருகின்றேன் என்கின்றார். திருச்செந்தூர் முருகனைத்தான் எண்ணிக் கொண்டு இருக்கின்றார்.

“நீ எத்தனையோ தீயதுகளை சம்காரம் பண்ணினாய். என் பையன்களுக்கு தீமைகள் வராதபடி சம்காரம் பண்ணப்பா. அவர்களுக்கு நல்ல வழி காட்டப்பா”  என்று முருகனையே எண்ணிக் கொண்டிருக்கின்றார்.  இதே மாதிரி முருகனையே எண்ணிக் கொண்டிருந்த ஆவி,  எப்படி இவர் உடலில் நுழைகின்றது என்பதை, குருநாதர் காட்டுகின்றார்.

அவர் அருளாடுகின்றார்,  அப்பொழுது வருகிறவர்களுக்கு எல்லாம் நல்லதாகும் என்று சொல்லுகின்றார். நல்லாதாகின்றது. எவ்வளவோ நன்மைகளைச் செய்தார். இந்த உணர்வின் ஆன்மா உடலுக்குள் சென்றவுடனே,  பிறருடைய கஷ்டங்களைப் பார்த்தால்,  “மகனே வந்துவிட்டாயா,  உன் நோயெல்லாம் தீரும்” என்று சொன்னவுடனே,  இந்த உணர்வின் வலு அவரிடம் இருப்பதால்,  அந்த நோயெல்லாம் இவரிடம் வந்து விடுகின்றது,   மற்றவருக்கு நல்லதாகின்றது.

வாத நோய் உள்ளவருக்கெல்லாம்,  திருநீறு கொடுத்திருக்கின்றார். அந்த உணர்வுகள் வரவர,  இவருக்கு கைகால் வராமல் போய்விட்டது. “முருகா!,  எல்லோருக்கும் நல்லது செய்தாயே,  என்னை இப்படி விட்டு விட்டாயே”  என்று புலம்புகின்றார்.

சிறிது காலம் மற்ற இடங்களில் சுற்றித் திரிந்து விட்டு,  திரும்ப அவர் இருந்த இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். கை, கால், வராமல் கிடந்தார். நன்மை செய்யும் உணர்வுகளை தனக்குள் வலுவாக்கிக் கொண்டார்.

அவருக்குள் இந்த உணர்வுகள் சென்றபின், பிற உடல்களில் இருந்து இழுத்து அவர்களுக்கு நல்லது ஆகின்றது. ஆனால், பிறருடைய தீய உணர்வுகள், இவருக்குள் விளைந்து, இந்த உடலை வீழ்த்துகின்றது. 

“முருகன் எனக்கு தரிசனம் கொடுத்தான்,  எல்லாம் செய்தான், இன்றைக்கு அவனைக் காணவில்லையே”,  நோய் வந்தவுடன் இதையே தான், அவர் நினைக்கின்றார்.

தீமையின் உணர்வுகள் வந்தவுடன்,  அவர் எடுத்துக் கொண்ட நிலைகள் மங்கிப் போகின்றது. மங்கியபின்,  இந்த உடலை விட்டுச் சென்று விட்டால்,  கடைசி நிலைகளில், அந்த உயிரான்மா எப்படிப் போகின்றது? என்று அந்தளவிற்கு, அழைத்துச் சென்றார் குருநாதர்.

அந்த உயிராத்மா மனித உடலுக்கு போவதில்லை. எத்தனை பேருடைய நஞ்சுகள் இதில் கலந்ததோ,  அந்த விஷத் தன்மை கொண்ட உணர்வுகள், பரமாத்மாவில் கலக்கின்றது. கலந்தபின்,  இதற்கு ஒத்த உடல் கிடைக்கும் வரை,  சூட்சுமத்திலேயே இருக்கின்றது. அதைப் பின்தொடர்ந்து, போகச் சொல்கின்றார் குருநாதர்.

எனக்குச் சரியான பாதுகாப்பு கொடுத்தார். “நீ இந்த எண்ணத்தில் இருந்தால் உன்னிடம் வந்துவிடும்” என்று குருநாதர் சொல்லுகின்றார்.

பிறருடைய வேதனைகளை, அவர் எவ்வளவு எடுத்துக் கொண்டாரே, அதற்குத் தக்க,  “கட்டுவீரியன்”  பாம்பின் ஈர்ப்பிற்குள் போகின்றார்.

இந்த ஆன்மா எவ்வளவு உயர்ந்ததை செய்தது,  ஒரு உடலுக்குள் போனவுடன்,  பல விஷத்தன்மையை எடுத்தது. இந்த உணர்வின் தன்மை கட்டுக்கட்டாக விளைகின்றது.

இந்த உடலைவிட்டுச் சென்றபின்,  அந்த ஆன்மா கட்டுவீரியன் பாம்பின் ஈர்ப்பிற்குள் எப்படிப் போகின்றது. அந்த உணர்வின் தன்மை கருவாகி,  அதே பாம்பாக ரூபமாகின்றது. இதை நேரடியாக, அந்த உணர்வைத் தேடிப் பிடித்துப் பார்க்கின்றவரை,  என்னை விடவில்லை குருநாதர்.  இப்படித்தான் சில அனுபவங்களைக் காட்டினார். குருநாதர்.

  1. மகரிஷிகள் காட்டிய காக்கக் கூடிய சக்தி

அவர் (பக்தியில் இருந்தவர்) தப்புச் செய்யவில்லை, பக்தி கொண்டார். நல்லதைச் செய்தார், நன்மையும் செய்தார்.  அந்தத் தீய உணர்வுகள் இவருக்குள் வரும் பொழுது, தன்னைக் காக்கக் கூடிய சக்தி,  அந்த மகரிஷிகள் காட்டிய சக்தி அவரிடம் இல்லை.

ஏனென்றால்,  நஞ்சின் உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள். மனிதருக்குள் விளைய வைத்த உணர்வுகள்,  நன்மைகள் பல செய்ய வேண்டும் என்று எண்ணினாலும், அவர் உடலில் இருந்து வந்த உணர்வுகள், நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. 

அந்த ஆன்மா, இன்னொரு உடலுக்குள் சென்றால், என்ன செய்கின்றது? என்பதைத் தெளிவாகக் காட்டினார்.

இன்று பெரும் பகுதியானவர்கள்,  தங்கள் கஷ்டத்தைத்தான் சொல்லுகின்றார்கள். நாம் அதைக் கேட்காமல் இருக்க முடியாது. ஆனால் கேட்டவுடன்,  பிறருடைய கஷ்டமான  உணர்வுகள் நமக்குள் வளராமல், விளையாமல் தடுக்கும் நிலை பெறவேண்டும்.

 நஞ்சினை வென்று,  உணர்வினை ஒளியாக்கிய,  என்றும் பதினாறு என்று, மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும்,  அந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும்,  பேரருளையும் பேரொளியையும், நம் உடலை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று இணைத்துப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்தோம் என்றால்,  பிறருடைய தீமைகள் நமக்குள் வராமல் தடுக்கின்றோம்,  இந்த வாழ்க்கையில்,  மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் அனைவரும் வாழும் நிலையும்,  இந்த வாழ்க்கைக்குப் பின் நம் உயிராத்மா பிறவி இல்லா நிலை என்னும் அழியா ஒளி சரீரம் பெறுகின்றது. இது தான் எல்லை.

“ஒ…..ம்” நாம் எதை நமக்குள் பிரணவமாக்க (ஜீவன் பெறச்செய்ய) வேண்டும்? ஞானிகளின் விளக்கம்

Image

http://omeswara.blogspot.com/2016/09/blog-post_9.html

நமக்குள் இதற்கு முன் அறியாது சேர்ந்த எத்தனையோ உணர்வுகளால் கேன்சர், டி.பி., ஆஸ்த்மா போன்ற நோய்கள் வருகின்றது. அந்த உணர்வுக்கொப்ப அணுக்கள் தூண்டுகின்றது. அந்த உணர்வின் தன்மையை நுகர்கின்றோம்.

அதனால் நம்மை அறியாமலே உடலில் வேதனைப்படுகின்றோம். வேதனை என்ற உணர்ச்சிகளை உந்துகின்றது.

வேதனைப்படும் அணுக்கள் நம் உடலில் சேர்ந்தால் அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது நம் இரத்தத்தின் வழி உயிரின் சிறு மூளைக்கு எட்டுகின்றது. அணுக்களுக்குள் வேதனை என்ற உணர்வு வருகின்றது.

நம் உயிர் உடனே கண் காது மூக்கு இவைகளுக்கு ஆணையிடுகின்றது. அந்த உணர்வின் நினைவாற்றல் “வலிக்கும் இடத்தைக் காட்டுகின்றது”.

அந்த உணர்வின் தன்மையை நுகரப்படும் பொழுது அந்த வலி இருக்கும் இடங்களில் எந்த விஷத் தன்மையை அந்த அணுக்கள் பெற்றதோ அதற்கு நேரடியாகவே உணவைச் செலுத்தச் செய்கின்றது.

நமக்குள் தீமையை விளைவிக்கும் அல்லது நம் உடலுக்குள் வேதனையை உருவாக்கும் நம் உடலைச் சிதையச் செய்யும் அணுக்கள் உருவாகியிருந்தால் அத்தகையை சிதைவின் நேரத்தில் நமக்குள் வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது,

ஆக, இந்த உணர்வின் தன்மை உயிருக்கு எட்டுகின்றது. ஆனால் எட்டும் பொழுது வேதனை உணர்வை நுகர்ந்தால் அந்த வேதனையான அணுக்களைத் தான் பெருக்க உதவுகின்றது.

அதை மாற்ற வேண்டுமா வேண்டாமா..,?

ஆகவே, நாம் எதைப் பெருக்க வேண்டும்?

துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நம் உடலில் எங்கே வேதனை உருவாகி இருக்கின்றதோ அந்த அணுக்கள் மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும், அவை மகிழச் செய்யும் அணுக்களாக மாற வேண்டும் இந்த உடலில் நாம் நலம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால், வேதனைப்படுவதற்கு மாறாக, வேதனையை உருவாக்கும் அணுக்கள் உருவாக விடாமல் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வு பெறவேண்டும், மகிழ்விக்கும் உணர்வின் அணுவாக விளைய வேண்டும் என்று நாம் நம் நினைவாற்றலைச் செலுத்தப் பழகிக் கொள்தல் வேண்டும்.

இராமாயணத்தில் காட்டுகின்றார்கள். இராமன் எப்பொழுது கல்யாணராமனாகின்றான்? (சீதா என்ற) மகிழ்ச்சி என்ற உணர்வைச் சேர்க்கும் பொழுதுதான் கல்யாணராமன் ஆகின்றான்.

எல்லோருடைய எண்ணங்களை ஒன்றாக இணைத்து எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை ஒன்றாக்கிப் பாருங்கள். மகிழ்ந்து வாழும் சக்தி அனைவரும் பெற்று நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

உங்களுக்குள் “ஆனந்தக் கண்ணீர்” வரும். ஆக, அன்புடன் அரவணைக்கும் அணுவின் தன்மை உருவாகும். இதைப் போன்ற உணர்வுகளைத் தான் ஜீவ அணுவாக நம் உடலாக மாற்ற வேண்டும் என்று ஞானிகள் காட்டினார்கள்.

ஏனென்றால் நம் உயிர் “ஓ.., ம்” என்று ஜீவ அணுவாக நம் உடலாக மாற்றுகின்றது. நாம் எண்ணும் உணர்வே ஓம் என்று ஜீவ அணுவாக மாறுகின்றது. ஆகவே, நாம் எதை எண்ண வேண்டும் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது நல்லது.

இதைத்தான் அன்று ஞானிகள் செய்தார்கள்.

வெறுமனே “ஓம் ஓம்” என்று சொன்னால் அர்த்தமற்றது. நாம் “ஓம்.., ஓம்.., ஓம்..,” என்று சொல்வதில் பொருள் இல்லை.

ஆகவே, இதைப் போன்று நீங்கள் உங்கள் உடலில் வேதனை என்ற உணர்வுகள் வந்தால் இப்பொழுது யாம் கூறிய தியான முறைப்படி அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்தால் அந்த உணர்வின் தன்மை நமக்குள் அணுவாகின்றது.

அந்த உணர்வின் வலுவை நமக்குள் உருவாக்கும் அணுக்கள் உருவாகின்றது. இதன் வழி கொண்டு மகரிஷிகளின் ஆற்றல் நாங்கள் பெறவேண்டும் என்று அந்த உணர்வை வளர்த்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்குச் செலுத்துங்கள்.

இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது “நம்முடைய நினைவாற்றல்” அங்கே பெருகுகின்றது. அவ்வாறு பெருகும் நிலைகள் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அங்கே மகரிஷிகள் அருள் வட்டத்திற்குச் செல்கின்றோம்.

சப்தரிஷி மண்டலம் அடைகின்றோம், மனிதனின் கடைசி எல்லை அதுவே.

உயிர் உடலை விட்டு எதனால் பிரிகின்றது…?

Image

நாம் சுவாசிக்கும் உணர்வுகள் உடலில் எல்லா அணுக்களிலும் இணைகின்றது

நாம் சுவாசித்த அந்த அணுக்களின் தன்மை நம் உடலின் எல்லா பாகங்களுக்கும் போய்விட்டுத்தான் வரும்.

ஆக, நாம் எந்தெந்த குணங்களைச் சுவாசிக்கின்றோமோ, இவை அனைத்தும் நம் உடலுக்குள் அது உருவாகின்றது.

தீய உணர்வுகளை நாம் சுவாசிக்க நேர்ந்தால், அவை நமக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுடன் மோதும் பொழுது, அதற்கு பதட்டமும் பயமும் ஏற்படுகின்றது.

நாம் அடிக்கடி கெட்டதையே சுவாசித்துக் கொண்டிருந்தால் உடலில் நோய் வருகின்றது.

சலிப்படையும் பொழுது நாம் மனம் சோர்வடைந்து பேசுகிறோம். ஒரு நெடியான வாசனையைக் கண்டவுடன் உடலுக்குள் அந்த நெடியின் தன்மை வருகின்றது.

இதைப் போலத்தான், நாம் சுவாசிப்பது ஒவ்வொன்றும் நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களுக்குள் அது இணைந்தவுடன் அது நம் உடலுடன் சேர்ந்து இயக்கப்படும் பொழுது, சிறுகச் சிறுக மாசுபடும் நிலை வருகின்றது.

நாம் வாழ்க்கையிலே பல அசிங்கமான நிலைகளைச் சந்திக்கிறோம், அடித்தவனைப் பார்க்கிறோ, அடி வாங்கியவனைப் பார்க்கிறோம். அடிக்கடி சண்டை போடுபவர்களைப் பார்த்தால், நாமும் சண்டை போடுவதற்குத் தயாராகின்றோம்.

ஒருவன் பயத்தினுடைய நிலைகளில் இருப்பதை நாம் அடிக்கடி பார்த்தால் அந்த உணர்வுகள் நமக்குள் பய அலைகளைத் தோற்றுவித்துவிடும்..

குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் குழம்பை நாம் வெறுக்கின்றோம். அதே போன்று காரம் அதிகமாகிவிட்டால் அதையும் நாம் வெறுக்கின்றோம். இதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஆயிரம் கோடி நமக்குள் இருக்கின்றது.

நாம் தவறு செய்யவில்லை என்றாலும். பிறர் செய்யும் தவறின் நிலைகளை நாம் பார்க்காமல் இருக்கமுடியாது. நாம் நல்லது கெட்டது என்று பார்த்தாலும் அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் வந்துசேர்ந்துவிடும்.

அவ்வாறு நம் உடலுக்குள் சேரும் பொழுது, அன்றைய தினத்தில் எதையெல்லாம் பார்த்தோமோ அதற்குத் தகுந்த மாதிரித்தான் அன்றைய தினம் நமது செயலும் இருக்கும்.

உயிர் உடலை விட்டு எதனால் பிரிகின்றது?

இரவிலே கண் வலி, காதில் வலி போன்ற நிலைகள் வரக் காரணமாகின்றது. ஒரு மோட்டாரில் கரண்ட் அதிகமாகிவிட்டால் அது சூடாகின்றது.

அதைப் போல கோபம், ஆத்திரம், பயம் போன்ற இந்த உணர்வுகளை நாம் அடிக்கடி இழுக்கும் பொழுது, ஒலிகளை சமமாக ஊட்டக் கூடிய அந்தக் காதுகளும் சூடாகி தேய்மானமாகி விடுகின்றது. அதனுடைய காந்தசக்தி குறைந்துவிடுகின்றது.

இதைப் போல சோர்வு, சஞ்சலம் போன்ற உணர்வுகளை அதிகமாக எடுக்கும் பொழுது கண்களில் இருக்கக்கூடிய கருவிழிகள் பலவீனமாகி, அதனுடைய இயக்கச் சக்தியினுடைய நிலைகள் குறைவாகும்.

நம் உடலில் நாம் சுவாசிக்கும் உணர்வின் நிலைகள் நம் உடலைச் சுற்றி இருக்கும் மேக்னட், அதாவது எலும்புக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளில் நம் உடலுக்குள் கரண்டை உற்பத்தி செய்யக்கூடிய காந்தம் இருந்தால்தான் அந்த உயிரே துடிக்கும்.

காந்தம் குறைவாகிவிட்டால், இந்த உயிருக்குள் இருக்கக்கூடிய துடிப்பு கொண்டு உடலை விட்டு வெளியிலே இருக்கக்கூடிய காந்தத்தை இழுத்துக் கொள்ளும். இந்த உடலிலே விளைய. வைத்துவிடும். அதுதான் மரணம் என்பது.

உடலில் அந்தத் துடிப்பின் நிலைகள் காந்தம் என்று குறைவாகின்றதோ அன்று உயிராத்மா வெளியிலே சென்றுவிடும்.

“எல்லாமே அவன் செயல் தான்”

God exists

1.கோவிலுனுடைய தத்துவம் என்ன?

1.வெளிச்சத்தைக் காட்டும் பொழுதுதான் பொருள் தெரிகின்றது. ஆகவே, தெரிந்து உணர்வது வெளிச்சம். அதுதான் தீப ஆராதனை.
2.அந்த மணத்தை நுகரவேண்டும் என்பது துவைதம்.
3.சுவாசிப்பது அத்வைதம்.
4.பார்ப்பது சிவம்.
5.நாம் அதிலிருந்து எடுப்பது சக்தி.
6.சுவாசிக்கும் பொழுது சக்தியின் இயக்கம்.
7.என் உடலுடன் சேர்க்கும் பொழுது சிவம். இதுதான் “ஓம் நமசிவாய, சிவாய நம் ஓம்”.

ஓ…ம் என்பது சக்தி

சக்தியின் உணர்வின் வேகம் எதுவோ, அந்த உணர்வின் தன்மை எனக்குள் ஆகும் பொழுது, அந்த சக்தியின் நிலைகள் எனக்குள் உடலாக மாறுகின்றது – சிவம், “ஓம் நமச் சிவாய” நமதாக மாறுகின்றது.

நாம் எந்த குணத்தை எண்ணுகின்றோமோ, அது உயிரிலே பட்டவுடன் “ஓங்காரம்” இயக்கம். அந்த உணர்வின் அலைகள் நமக்குள் சேர்ந்து, அது உமிழ்நீராக மாறி, நம் உடலுடன் சேர்க்கப்படும் பொழுது, “ஐக்கிய சிவம்” என்று இவ்வாறு பொருள்பட, அன்று சிவ சக்தியின் தன்மையை மெய்ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

துவைதம் என்பது, பொருள் எதுவோ அந்த உணர்வின் தன்மையை நமக்குள் கூட்ட வேண்டும். கோவிலிலே, அந்த மலரின் மணத்தை நாம் நுகரும் .பொழுது, அந்த மலரின் உணர்வின் மணம் “ஈசன்”.

அந்த மலரின் உணர்வின் சத்து உடலுடன் சேர்க்கப்படும் பொழுது, சிவனுக்கு “அமுது”. ஆக, ஈசனுக்கு மணம், இங்கே சிவனுக்கு அமுது.

கண் புலனறிவுக்கு, உடல், மற்றவைகளுக்கும் அந்த உணர்வின் இயக்கமே, நாம் அறிந்துணர்ந்து செயல்படும் தன்மைகள்.

இதைத்தான் ஒவ்வொரு பாகமாகப் பிரிக்கப்பட்டு உடலின் உறுப்பின் தன்மை செயலாக்கும் பொழுது அதற்கு தெய்வ வடிவைக் கொடுத்துஆற்றல்மிக்க பெயரைக் கொடுத்து வைத்தான் ஞானி.

ஒரு இயந்திரத்தை நாம் பார்க்கும் பொழுது, இது பல் சக்கரம், (gear, pinion, sprocket, chain) இது இன்னென்ன என்று பெயர் வைக்கிறோம். இதைப் போன்று, நம் உடலின் உறுப்பின் தன்மையின் செயலாக்கத்திற்கு, சக்தியின் நிலையும், ஒவ்வொரு குணத்தின் ஆற்றலினுடைய நிலைகளுக்கு அன்று மெய்ஞானிகள் பெயர் வைத்தார்கள்.

2. ஆண்டவன் காணிக்கை கேட்கின்றானா?

ஆனால், இதை விடுத்துவிட்டு தெய்வம் எங்கேயோ இருக்கிறது என்ற நிலைகளில், மொட்டை போடுகின்றேன், அதைக் கொடுக்கின்றேன், இதைக் கொடுக்கின்றேன் என்று நமக்குள் வேண்டி வருத்தி, நம்மையறியாத நிலைகளில் நம்மைத் தாழ்த்திக் கொள்கின்றோம்.

முடிகொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, முடி கொடுக்கப் போக முடியவில்லை என்றால், ஜோசியக்காரனிடம் செல்கிறார்கள்.
1.“ஆண்டவனுக்கு நீ வேண்டியிருக்கின்றாய்… காணிக்கையைச் செலுத்தவில்லை,
2.அதனால்தான் துன்பம்” என்பார்.
3.ஆண்டவனுக்குக் காணிக்கை செலுத்தாதினால், துன்பத்தை உண்டாக்கி உன்னை வரவழைக்கின்றார் என்பார்.

இவைகளெல்லாம், நமக்கு வேண்டாத வேலைகள். ஆக, ஆண்டவன் என்பது யார்?

3.“எல்லாமே அவன் செயல் தான்” என்றால் என்ன அர்த்தம்?

நம் உயிர்தான் நம்மை ஆண்டுகொண்டிருக்கின்றது. ஆனால், அவனன்றி ஒரு அணுவும் அசையாது. இந்த உயிர்” உடலில் இல்லையென்றால் எது அசையும்?

நாம் என்ன செய்கின்றோம்? அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்று விண்ணைக் காட்டுகின்றோம்.

“அவனன்றி அணுவும் அசையாது” என்று சுருக்கமாகச் சொற்றொடர்களைச் சொன்னால், நாம் வானத்தைக் காட்டி, “எல்லாமே அவன்தான்” என்கிறோம்.

அவன் உடலுக்குள் இருக்கின்றான். இங்கே உடலை இயக்குகின்றான் என்ற நிலையை, அன்று ஞானிகள் உணர்த்தினார்கள்.

அன்று அண்டத்தினுடைய நிலைகள் செயலாக்கினாலும், அண்டத்தினுடைய நிலைகள் பிண்டத்திலிருந்து உணர்வின் இயக்கமாக இயங்குகின்றது. நினைவு கொண்டு அது இயக்குகின்றது.

அந்த உணர்வு சந்தர்ப்பத்தாலே இயங்குகின்றது. அதைச் சந்தர்ப்பத்தாலேதான் இயக்க முடியும். அதே சமயத்தில், சந்தர்ப்பத்தை ஊட்டும் தன்மை மனிதனுக்கு உண்டு. சந்தர்ப்பத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், அது (அண்டம்) சந்தர்ப்பத்தை ஏற்படுத்தாது. அது போகும் பாதையில் சந்தர்ப்பங்கள், சந்திக்கும் நிலையில்தான் உருமாற்றம், இன மாற்றம், மற்ற மாற்றம் எல்லாமே.

நம்முடைய ஆறாவது அறிவின் தன்மை கொண்டு, எந்த சந்தர்ப்பத்திலும் நமக்கு வேண்டியதை நம் உடலுக்குள் மாற்றிக் கொள்ள முடியும். ஆக, இத்தகைய ஆற்றல், இந்தப் பிண்டத்திற்குள் (நம் உடலுக்குள்) இருக்கின்றது.

அன்று மெய்ஞானிகள் காட்டிய உணர்வின் தன்மையை, தெய்வச் சிலையாகக் காட்டி, அந்த மணத்தை எடு என்று, அந்த குணத்தைக் கதையாகக் காட்டி உன் உணர்வுக்குள் சேர்த்துக் கொள் என்றார்கள். இந்தத் தெய்வம் நல்லது செய்கிறதென்றால், அந்த குணத்தை நுகர்ந்து, நல்லது செய்யக்கூடிய நிலைகளை எடு என்றார்கள்.

ஆகவே, அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி, நாம் அனைவருமே அந்த தெய்வ குணத்தைப் பெறுவோம், தெய்வ சக்தியை வளர்ப்போம்,

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

Image

உயிரே கடவுள்

நம் ஞானகுரு அவர்கள்,  தமது குருநாதர் காட்டிய அருள் வழிப்படி, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்று, வானவியல், புவிஇயல், உயிரியல் ஆகியவற்றின் உண்மை நிலைகளைப் பெற்று, அறிந்து, உணர்ந்து. அதை அனைவரும் பெற வேண்டுமென்ற ஆசையினால் தியானத்தின் மூலமாகவும் உபதேசங்களால் மூலமாகவும் உணர்த்தியுள்ளார்கள்.

ஞானகுரு கட்டிய அருள் வழியில், சாமியம்மா தியானப் பயிற்சியும் அருளாசியும் வழங்கி  வருகின்றார்கள்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா புஞ்சை புளியம்பட்டி நகருக்கு அருகில் வடுகபாளையம் என்ற ஊரில் தமது குருநாதர் பெயரால் “மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தை உருவாக்கி அதில் “மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை” என்று ஏற்படுத்தி உள்ளதை ஞானகுரு அவர்கள் ஒளிநிலை அடைந்த பிறகு. சாமி அம்மா வழிநடத்தி செல்கிறார்கள்.

தபோவனத்தில் “பௌர்ணமி தியானத்தில்” நாம் விண்ணை நோக்கி துருவ நட்சத்திரத்தை எண்ணி தியானிக்கும் போது, விண்ணிலே துருவ நட்சத்திரத்திளிருந்தும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும், பரவெளிகளில் இருந்தும் வெளிப்படும் அருள்ஞான சக்திகளை சாமி அம்மா அவர்கள் காட்டிய அருள்வழி கொண்டு, நமக்கு கிடைக்குமாறு உதவ முடிகின்றது.

பௌர்ணமி நாளில் கூட்டுத்  தியானத்தில் நமது குலதெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களையும், நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற, நண்பர்கள், உற்றார், உறவினர்களது   உயிரான்மாக்களையும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து பிறவி இல்லா நிலை பெறச்  செய்வது சிறப்பு அம்சமாகும்.

அன்றைய தினம் தியானமிருக்கும் அன்பர்களுக்கு அபரிதமான சக்திகளை சாமி அம்மா தியானத்தின் மூலம் பெற உதவுகின்றார்கள். அதைப் பயன்படுத்தி விண்ணிலிருந்து கிடைக்கும் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும், சப்தரிஷி மனடலங்களின் பேரருளையும் பேரொளியையும், நாம் அனைவரும் பெற பௌர்ணமி தியானம் ஒரு அறிய வாய்ப்பாகும்.

அதைப் பயன்படுத்தி, பல ஊர்களிலிருந்து தபோவன உறுப்பினர்களும், வெளிஊர், வெளி மாநில அன்பர்களும் தபோவனத்தைச் சுற்றி அமைந்திருக்கும் கிராமங்களிலிருந்தும் அன்பர்கள் கலந்து கொண்டு சாமி அம்மா அவர்கள்  ஆசி பெற்று வருகின்றனர்.

சாமி அம்மாவை தபோவனத்தில் சந்தித்து தியானப் பயிற்சி, உபதேசம் பெறவும் விளக்கங்கள் கேட்டுப் பெற வரும் அன்பர்களுக்குத் தங்கிச் செல்ல தங்கும் அறைகளும்,  உணவு உண்ண உணவு விடுதியும் அமைக்கப்பட்டுள்ளது.

தபோவனம், புஞ்சை புளியம்பட்டியிலிருந்து சத்தியமங்கலம் போகும் பாதையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. உடனுக்குடன் பஸ் வசதியும் உள்ளது. எண் 6, 6A, N6 ஆகிய பேருந்துகள் தபோவன வழித்தடத்தில் ஓடுகின்றன. கோவையிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் பாதை வழியாகவும், ஈரோடு, அவிநாசி, புஞ்சை புளியம்பட்டி பாதை வழியாகவும் தபோவனத்தை அடையலாம்.

தபோவனத்திலிருந்து, “உயிரே கடவுள்” என்ற மெய் ஞான மாத இதழ் ஞானகுருவின் அருள்ஞான உபதேசங்களைத் தாங்கி வெளி வருகின்றது. அதன் வருடச் சந்தா ரூ 100/-  ஆகவும், ஆயுள் காலச் சந்தா ரூ 500/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் மெய்ஞான தியான வளர்ப்பு திருச்சபை ஆயுள்கால அங்கத்தினராக  ரூ 1500/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்டுள்ள ஆயுள்கால உறுப்பினராகவும், உயிரே கடவுள் மாத இதழ் ஆயுள்கால உறுப்பினராகவும் ஆகும் அன்பர்களுக்கு அருள்ஞானச் சக்கரம் சாமி அம்மா நேரடியாக அளித்து ஆசி வழங்குவார்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்
வடுகபாளையம்
புஞ்சை புளியம்பட்டி
ஈரோடு மாவட்டம்

Location of Mamakarishi Eswaraya Guruthevar Thapovanam

http://g.co/maps/v3qff

click this link to see the geographical location of  Thapovanam

வேதனை தீரவில்லையே என்று எண்ணக் கூடாது…! வேதனைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்துத் தியானிக்க வேண்டும்

%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d

வேதனை தீரவில்லையே என்று எண்ணக் கூடாது…! வேதனைகளிலிருந்து முழுவதும் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தை முன்னணியில் வைத்துத் தியானிக்க வேண்டும்

 

பல காலம் எண்ணி பல காலத்திற்குப் பின் தான் மனிதருக்குள் நோய் என்ற விளைவே சாதாரணமாக வருகின்றது. ஏனென்றால்
1.நம் வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நம்மை அறியாமல் தீமையான நிலைகளைப் பார்க்க நேருகின்றது.
2,அதனால் தீமை செய்யும் உணர்வுகளின் அணுக்கள் நம்முள் பெருகிவிடுகின்றது.

அந்த அணுக்கள் வளர்ச்சியான பின் அதனின் மலங்கள் நமக்குள் நல்ல அணுக்களில் உள்ள மலங்களில் படப்படும் பொழுதுதான் இந்தத் தசைகள் கரைகின்றது.

அப்பொழுது நம் உடலில் வலிகள் வருகின்றது… வேதனையாகின்றது… நோயாகின்றது.

வலித்தவுடன் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும், எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி அந்த உணர்வை வலுக்கொண்டு நமக்குள் கவர்தல் வேண்டும்.

இப்படி நம் உடலில் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைக் கலக்கச் செய்ய வேண்டும். ஆனால் சிலர் என்ன சொல்வார்கள்…?
1.இப்படித்தான் நான் எண்ணினேன்.
2.,இன்னும் வலி குறையவில்லை… வலி நிற்கவில்லையே…! என்பார்கள்.
3.வலி நிற்கவில்லையே…! என்ற உணர்வைச் சேர்த்தால் என்ன நடக்கும்…?

ஒரு கம்ப்யூட்டரில் பதிவு செய்யும்போது ஒரு இடத்தில் (நிறுத்திய பின்)
1.“FULL STOP” என்று புரோகிராம் செய்து வைத்தால்
2.அந்த இடம் வந்தவுடன் தன்னாலே நின்றுவிடும்.

அதைப் போன்றுதான் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்… வலி நீங்க வேண்டும்… என்ற நிலைக்கு வந்தால் நாம் தொடர்ந்து இதைக் கூட்டும்போது அதனுடைய பருவம் வரும் பொழுது “நிச்சயம் வலி நிற்கும்”.

அதற்குள் நான் “ஐய்யய்யோ… அம்மம்மா… இன்னும் நிற்கவில்லையே…!” என்று எண்ணிக் கொண்டு என்ன செய்வார்கள்…?
1.அந்த மகரிஷிகளை எண்ணி “வலி நிற்கவில்லையே…
2.வலி நிற்கவில்லையே…” என்று இப்படித்தான் மாற்றுகின்றார்கள்.

அருள் மகரிஷிகளின் அருள் ஒளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும், அந்தத் தசைப் பாகம் உள்ள அணுக்களில் அருள் ஞானம் விளைய வேண்டும் என்று இப்படித்தான் அதைக் கலக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தால் நாம் தீமையைப் பார்த்த உணர்வுகள் அதன் உணர்வு கொண்டு கருவாகி சுழன்று வரப்படும் பொழுது தேங்கிய இடத்தில் வெடித்த உணர்வுகள் அணுவாக உருவாகின்றது.

உருவான அந்த அணு தன் உணர்வின் உணர்ச்சியைத் தூண்டி அது உணவுக்காக ஏங்கும் நிலைகளில் அது தன் இனத்தைப் பெருக்குகின்றது. தன் இனத்தைப் பெருக்கும் போது நம் உடலில் ஏற்கனவே உருவான அணுக்களுக்கு எதிர்நிலை ஆகின்றது.

அப்பொழுது நம் நல்ல அணுக்களின் செயலாக்கங்கள் குறைகின்றது. அதனால் அது சோர்வடைகின்றது. அதனால் நம் உடலில் வேதனையும் வலியும் ஏற்படுகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

இதையெல்லாம் அறிந்துணர்ந்த நீங்கள் ஒவ்வொரு நிமிடத்திலும் எதைச் செய்யவேண்டும் என்பதைச் சற்று சிந்தியுங்கள். “எதை நம்முள் முன்னிலைப்படுத்த வேண்டும்..?” என்ற நிலைக்கு வாருங்கள்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை முன்னிலைப்படுத்தி
2.உடலுக்குள் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் அதைச் சேர்த்தோம் என்றால்
3.வலியோ… வேதனையோ… நோயோ… எதுவாக இருந்தாலும் அதனின் வீரியத்தை அடக்கி அதைத் தணித்து நம்மை நலம் பெறச் செய்யும்.

தீமைகளை அகற்றிடும் வல்லமை நிச்சயம் நீங்கள் பெற முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

நொச்சி இலையின் பயன்கள் (தபோவனம்)

நொச்சி மரத்தை உங்கள் வீடுகளிலேயும், அக்கம்பக்கம் உள்ள வீடுகளிலும் வளருங்கள்.

தபோவனத்திற்கு வரும் பொழுது நோச்சிக் குச்சியை எடுத்துக் கொண்டு போய் ஊன்றி உங்கள் வீடுகளில் வளருங்கள். ஏனென்றால், அந்த மரத்தில் தியானம் பண்ணி வைத்திருக்கின்றோம்.

அந்த நொச்சி இலையை நான்கு அல்லது ஐந்தைப் போட்டு, நன்றாகக் காய்ச்சி அந்தச் சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரவு படுக்கப்போகும் பொழுது அரை டம்ளர் குடியுங்கள். இருதயத்தில் இருக்கக்கூடிய, நுரையீரலில் இருக்கக்கூடிய சளி எல்லாம் கட்டி கட்டியாக வெளியே வந்துவிடும்.

காய்ச்சல் வந்தால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அந்த வைரஸ் கிருமிகள் அழிந்துவிடும் உஷ்ணம் அதிகம் இருப்பதால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அடிக்கடி வரக்கூடிய காய்ச்சலைத் தடுக்கும்.

அதே போன்று தும்மலுக்கு, மூக்கில் தோடர்ந்து தண்ணீர் வருபவர்களுக்கு வேறு ஒன்றும் வேண்டியதில்லை. மஞ்சள், நொச்சி இலை, வேப்பிலை பச்சையாகப் போட்டு புகை போடுங்கள், அதை நுகருங்கள். சரியாகப் போகும்.

ஆஸ்த்மாவிற்கு, சரவாங்கி நோய்க்கு, வாத நோய் எல்லாவற்றுக்குமே இந்த நொச்சி இலையைச் சாப்பிட்டாலே சரியாகும்.
தபோவனத்திலிருந்து நொச்சி மரக்குச்சியை வீட்டில் நட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த நொச்சி மரத்திலே சில சக்திகளைப் பாய்ச்சி வைத்திருக்கின்றேன். அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இறந்தவர்களின் ஆன்மாக்களைச் சாந்தி அடையச் செய்ய வேண்டிய முறை

இறந்தவர்களின் ஆன்மாக்களைச் சாந்தி அடையச் செய்ய வேண்டிய முறை…? 

பொதுவாக இன்று குடும்பத்தில் உடலை விட்டு ஒருவர் பிரிந்தால் என்ன செய்வார்கள்?

1.நேற்று வரை நன்றாக இருந்தீர்கள்.
2.நன்றாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள்
3.எங்களுக்கெல்லாம் சம்பாரித்துக் கொடுத்தீர்கள்,
4.”இன்று இப்படிப் போய்விட்டீர்கள்…!” என்று சொல்லி எண்ணி எண்ணி அழுவார்கள்.

அதாவது சொந்தம் அதிகமாக இருந்ததால் இப்படி அழுவார்கள். இப்படிச் செய்தால் அந்த உணர்வின் தன்மை என்ன ஆகும்?

1.இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட்டாய்… இன்னும் நீ கஷ்டப்படு…!
2.என் உடலுக்குள் வந்து என்னையும் கஷ்டப்படுத்து…!
ஆக மீண்டும் இந்த நரகத்துக்குத்தான் அழைக்கிறார்கள்.

பாசத்தால் அவர்களை எண்ணி ஏங்கினால் உடலைவிட்டுப் பிரிந்த அந்த ஆன்மா – நாம் உடலுடன் இருப்பதல் நம் ஈர்ப்புக்குள் வந்துவிடும். நம் இரத்தத்தில் இரத்த நாளங்களில் அந்த ஆன்மா சுழலத் தொடங்கும்.

சிறிது நாள்களுக்குப் பின் உங்களுக்குக் கை கால குடைச்சல் வரும் அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் பட்ட துன்பங்களையும் நோய்களையும் இரத்தத்திலிருக்கும் அந்த ஆன்மா நம் உடலுக்குள் பெருக்கத் தொடங்கும்.

கடைசியில் நாமும் கடுமையான வேதனைப்பட்டுத் தான் உடலை விட்டுப் பிரிய நேரும். இதைத் தான் நாம் செய்து கொண்டிருக்கின்றோம்.

ஆனால் நமக்கு ஞானிகள் காட்டிய அருள் வழி… அந்த மெய் வழி எது…?

நல்ல வழியில் வாழ்ந்து எங்களுக்காகப் பல துன்பங்களையும் பட்டு எங்களுக்கு வாழ வழி செய்தீர்கள்.
1.இனிமேல் நீங்கள் என்றுமே துன்பமே இல்லாத
2.பேரின்ப பேருவாழ்வு என்ற பேரானந்த நிலை அடைய வேண்டும்.
3.ஏகாந்த நிலை என்ற உயிருடன் ஒன்றி அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்று அவர்களை உந்தித் தள்ள வேண்டும்.

எங்கே…?

துருவ நட்சத்திரத்தின் ஈர்பபு வட்டத்திற்குள் உடலை விட்டுப் பிரிந்த அந்த உயிரான்மாக்களைச் செலுத்த வேண்டும். இதுதான் ஞானிகள் சொன்ன முறை.

யாராவது நாம் இப்படிச் செய்கிறோமா…? சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால் இதெல்லாம் மாறி இன்று மந்திரங்களைச் சொல்லி சாங்கிய சாஸ்திரங்களைச் செய்து மீண்டும் ஒரு உடல் பெறும் நிலைக்குத்தான் செயல்படுத்துகிறோம்.

இப்படிச் செய்யவில்லை என்றால் தோஷம் என்று சொல்லி ஞானிகள் காட்டிய அந்த மெய் வழிகளையே பெறவிடாதபடி செய்துவிட்டார்கள் அன்று ஆண்ட அரசர்கள்.

இன்றும் நாம் அதையே பிடித்துக் கொண்டு நல்லதை தேடிக் கொண்டேயுள்ளோம். அதைப் பெறும் தகுதியையும் இழந்திருக்கின்றோம்.

நீங்கள் இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபடவேண்டும்.

குடும்பத்தில் ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் எல்லோரும் ஒன்று சேர்த்து காலை துருவ தியானத்தில் அவர்களை நம் குருநாதர் காட்டிய அருள்வழியில் விண் செலுத்திப் பழக வேண்டும்.

அவர்களை விண் செலுத்தினால் பரம்பரை நோய் என்ற நிலைகள் நமக்குள் வராது. அதே சமயத்தில் அந்த ஆன்மாவும் ஒளியின் சரீரம் பெறுகிறது.

ஒரு 48 நாள்கள் குடும்பத்திலுள்ளோர் வேறு வேறு ஊர்களிலிருந்தாலும் ஒரே நேரத்தில் எல்லோரும் அமர்ந்து ஒரு 10 நிமிடமாவது தியானம் செய்து அந்த ஆன்மாக்களை விண் செலுத்தினால் நீங்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழமுடியும்.

உங்கள் குடும்பத்தில் அறியாது வரும் சாப வினைகள் தீய வினைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும். இந்த உடலுக்குப் பின் நாமும் நம் முன்னோர்கள் சென்ற அந்த எல்லையை எளிதில் அடைய முடியும்.

“சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும்” என்ற எண்ணமே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக இருத்தல் வேண்டும்.

மனிதனுடய கடைசி எல்லை அது தான்.

அதைத்தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டினார்.

நினைவு நாள் என்றால் என்ன…? – விளக்கம்

உடலை விட்டுப் பிரிந்தவர்களுக்கு நினைவு நாள் எப்படிக் கொண்டாட வேண்டும்…?

பிசாசைக் கண்டு பயந்த “குடுகுடுப்பைக்காரனின் உண்மை நிலை”

Image

Beware of Black Magic

பிசாசைக் கண்டு பயந்த “குடுகுடுப்பைக்காரனின் உண்மை நிலை”

 

“நல்ல காலம் வருகின்றது, நல்ல காலம் வருகின்றது” என்று சொல்லி குடுகுடுப்பையை அடித்துக் கொண்டு நடு இரவு வருவார்கள்

அப்படி வரும் பொழுது, உங்களுக்குச் செய்வினை செய்திருக்கிறார்கள், தோஷம் இருக்கிறது என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருவான்.

ஒரு சமயம் குருநாதர் என்ன செய்தார்? ஒரு கம்பளித் துணியை என் உடலில் சுற்றிக் கொள்ளச் செய்தார். மரத்தின் மேல் ஏறி நின்று கொள் என்றார்.

“குடுகுடுப்பைக்காரன் வரும் பொழுது, அப்படியே மரத்திலிருந்து குதிடா” என்றார்.

குடுகுடுப்பைக்காரன் வரும் பொழுது அதே மாதிரி சொல்லிக் கொண்டு நான் குதித்தேன்.

அவன் என்ன செய்தான்?

“கத்துகின்றான்.., சீ பிசாசு, சீ பிசாசு போ.., போ..,” என்று ஓடுகின்றான். கையிலிருந்த பொருளை எல்லாம் போட்டுவிட்டு

அப்படியே கிடு கிடு என்று நடுக்கமாகி, கீழே மயக்கம் போட்டு விழுந்துவிட்டான்.

அப்புறம் மறுநாள் அதே இடத்திற்குச் செல்லச் சொன்னார் குருநாதர். ஒன்றும் தெரியாத மாதிரி குடுகுடுப்பைக்காரனிடம் “என்னப்பா..,” என்று கேட்டேன்.

“இந்த ஊரில் பெரிய பிசாசு இருக்கின்றது” என்று பிசாசு ஓட்டுபவன் சொல்கின்றான். அதனால், இந்த ஊருக்குள் வருவது மிகவும் ஆபத்தானது. இந்த ஊருக்குள் நான் இனிமேல் வரவே மாட்டேன் என்றான்.

ஆக, குடுகுடுப்பைக்காரனிடம் என்ன இருக்கிறது? அவனுக்கு முன்னால் குதிக்கும் பொழுது எதெல்லாம் அவனுக்குள் இயக்குகின்றது? என்ற இந்த உண்மைகளை அறிவதற்காக வேண்டி குருநாதர் எம்மை இந்த வேஷம் போடச் சொன்னார்.

குருநாதர் பிறகு என்ன செய்தார்? இந்த விபூதியைக் கொடுத்து இந்த மாதிரிச் செய்து குடுகுடுப்பைக்காரனைக் காப்பாற்றிவிடு, இதே பயம் வந்தது என்றால் செத்துப் போவான், இந்தப் பாவத்தை நீ ஏற்றுக் கொள்ளாதே, கொண்டு போய் கொடுத்து வா என்று எம்மிடம் சொன்னார்.

அதே மாதிரி அவனிடம் சொன்னவுடன், சாமி என்னைக் காப்பாற்றினீர்கள். இப்பொழுதுதான் எனக்குத் தெளிவாகின்றது என்றான்.

இதெல்லாம் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஒவ்வொரு நிமிடமும் மனிதர்கள் எப்படியெல்லாம் செய்கின்றார்கள்? மனித உடலிலிருந்து மந்திரத்தால் கவர்ந்து என்னென்ன வேலையெல்லாம் செய்கின்றார்கள் என்று உணர்த்துகின்றார்.