இருந்த இடத்திலிருந்தே… “ஈஸ்வரனின் துணை கொண்டு” வரும் சிக்கல்களிலிருந்து நாம் விடுபட முடியும்

Grace of Eswara

இருந்த இடத்திலிருந்தே… “ஈஸ்வரனின் துணை கொண்டு” வரும் சிக்கல்களிலிருந்து நாம் விடுபட முடியும்

ஒருவன் கெடுதல் செய்கிறான் என்று பார்க்கின்றோம். நம் கண்கள் காட்டுகின்றது. கெடுதல் செய்யும் உணர்வினை உடலுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றது,

நம் கண்கள் எதைப் பார்த்து பதிவு செய்ததோ அவனைப் பார்த்தவுடனே “தவறு செய்பவன்…” என்று நமக்கு உணர்த்துகின்றது. கெட்டவன் என்று தெரியும் போது அந்த உணர்வால் விலகிச் செல்கின்றோம். கண்கள் நம்மைக் காப்பாற்றுகின்றது.

அல்லது அவன் தாக்க வருகின்றான் என்றால் அதைத் தடுப்பதற்குத் தக்க ஆயுதத்தை நம்மிடம் வைத்துத் தன்னைப் பாதுகாக்கவும் செய்கின்றது… இதே கண்கள் தான்.

இருந்தாலும் அவன் நம்மைத் தாக்க வருகின்றான் எனும் பொழுது நாம் நுகர்ந்த உணர்வோ அவனை நாம் அழிக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
1.நம் உயிர் என்ன செய்கின்றது…?
2.அதே உணர்வின் அணுவாக மாற்றுகின்றது.
3.அப்போது அவன் அழிக்க வேண்டும் என்ற உணர்வு இங்கே இரத்தத்தில் கருவாக உருவாகின்றது.
4.இப்படிச் செய்கின்றான்… அவனை விடுவதா… விடுவதா… விடுவதா…? என்று இதைக் கூட்டுகின்றோம்.

அப்போது கருவுற்ற ஒரு கோழி கேறுகின்ற மாதிரி நமக்குள் அது உருவாக்கி விடுகின்றது. அது உருவாக்கிய பிற்பாடு என்ன செய்கின்றது?

அவன் எப்படி நமக்கு இடையூறு செய்ய வேண்டும் என்று நினைத்தானோ அது நமக்குள் வந்து நம்மிடமிக்கும் நல்ல குணத்தை இது இடையூறு செய்து கொண்டே இருக்கும். நல்லதைச் செயல்படுத்த விடாது.

தவறு செய்பவன் எங்கயோ இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். அவன் உடலில் விளைந்தது நமக்குள் நரகாசுரனாக அசுர குணங்களாக உருவாக்குகின்றது.

அவன் அசுரன் என்று காட்டுகின்றது. நாம் நுகர்ந்து அறிகிறோம். ஆனால் நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

அசுத்தம் என்று தெரிகின்றது. அந்தச் சாக்கடை மேலே பட்டவுடனே அறிகிறோம் – “கார்த்திகேயா…!” உடனே நல்ல நீரை வைத்துச் சுத்தப்படுத்திக் கொள்கிறோம்.

அதே மாதிரி அசுர குணம் என்று தெரிகின்றது. அதை நிறுத்த வேண்டும் அல்லவா…?

அதை அடக்குவதற்கு அந்த அருள் ஞானியின் உணர்வைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த அசுர குணத்தை அடக்கி விடுகின்றது. அதை எழுந்திரிக்க விடுவதில்லை.

1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாங்கள் பெற வேண்டும்.
2.வைரத்தைப் போல எங்கள் வாழ்க்கை ஜொலிக்க வேண்டும்.
3.எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும்… செயல் ஜொலிக்க வேண்டும் என்று கூட்டிவிட்டோம் என்றால்
4.இந்த வெளிச்சத்திற்குள்ளே அந்த இருள் (அசுர குணம்) மறைந்துவிடுகின்றது.

இந்த வைரம் விஷம் கொண்டது தான். ஆனால் அது ஜொலிக்கின்றது. வைரத்தைப் போல தன் உணர்வுகளை எல்லாம் ஜொலிக்கச் செய்தவன் துருவன்.

அப்போது நமக்குள் வேதனை என்ற உணர்வு வரப்போகும் போது துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து நுகர்ந்தோம் என்றால் இருள் மறைகின்றது.

இல்லை என்றால் நம் அறிவை மழுங்கச் செய்யும் போது நமக்குள் என்ன செய்யும்..?

எவ்வளவு திறமையாக இருக்கும் கொஞ்சம் விஷம் போட்டால் என்ன செய்யும்…? நம் எல்லா வலுவும் இழந்து விடுகின்றது. ஐய்யயோ ஐய்யயோ இப்படி ஆகின்றதே.. செத்துப் போய்விடுவோம் என்ற இந்த உணர்வு தான் வருகிறது. தன்னைக் காப்பாற்றுவதற்கு முடிகிறதோ…?

பதறுவோம்… பதட்டமாவோம்…! காப்பாற்றுவதற்கு முயற்சியும் எடுக்கின்றோம். முயற்சி எடுத்தாலும் முடியாத நிலை வரப்போகும் போது அது வீழ்த்தி விடுகின்றது.
1.நம்மால் முடியவில்லை…!
2.பின் வேறு யாராவது தான் வந்து நமக்கு உதவி செய்ய வேண்டும்.

ஆனால் நாம் இருந்த இடத்திலிருந்தே உதவியைப் பெற வேண்டும் என்றால் யாரிடம் கேட்க வேண்டும்…? எப்படிக் கேட்க வேண்டும்…?

எதிர்பாராத நிலை வந்து விட்டது. ஒருவன் தவறு செய்கின்றான். நம்மால் முடியவில்லை என்கிற பொழுது
1.“ஈஸ்வரா…..” என்று புருவ மத்தியில் நம் உயிரிடம் கேட்க வேண்டும்.
2.ஈஸ்வரா என்று சொன்னவுடனே கண்ணோட நினைவு நேரடியாக அந்தத் துருவ மகரிஷியின் பால் செல்ல வேண்டும்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும் உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி எடுக்க வேண்டும்
4.இந்த இருட்டை அப்பொழுதே அது வெல்லுகின்றது.

அந்த இரண்டையும் சேர்த்து துருவ நட்சத்திரத்தின் அணுவாக உருவாக்கப்படும் போது வேதனைகளை அடக்குகின்றது.

இதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் இருந்த இடத்திலிருந்தே உயிரின் துணை கொண்டு வரும் சிக்கல்களிலிருந்து விடுபட முடியும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேரருள் பேரொளியின் உணர்வுகள் நமக்குள் வளர்கின்றது.

உடலில் உருவான அணுக்களுக்கெல்லாம் சாப்பாடு கொடுத்து வளர்ப்பது உயிரின் வேலை – தீமை செய்யும் அணுக்கள் நம் உடலில் வளராமல் தடுக்கும் வழி என்ன…?

Image

divine breathing

உடலில் உருவான அணுக்களுக்கெல்லாம் சாப்பாடு கொடுத்து வளர்ப்பது உயிரின் வேலை – தீமை செய்யும் அணுக்கள் நம் உடலில் வளராமல் தடுக்கும் வழி என்ன…?

 

செடியிலிருந்து வித்து விளைந்து வருகின்றது. கீழே விழுகின்றது. விழுந்த வித்து
1.மண்ணின் மேலே இருந்தது என்றால் முளைக்காது.
2.மழை பெய்தாலும் மண்ணுக்குள் பதிவானால் தான் முளைக்கும்.
3.அப்படியே முளைத்தாலும் மேலே இருந்தது என்றால் கருகிப் போகும்.

அதே மாதிரி நம் வாழ்க்கையில் எத்தனையோ குணங்கள் கொண்ட உணர்வுகளைச் சுவாசிக்கின்றோம்.

உதாரணமாக சந்தர்ப்பத்தில் வேதனையை அதிகமாக எடுத்துக் கொள்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எடுத்துக் கொண்ட வேதனை உணர்வுகள் இரத்தத்தின் வழியாக உடல் முழுவதும் சுற்றுகின்றது.

எந்த நேரத்தில் வேதனைப்படுபவரை மீண்டும் மீண்டும் நினைக்கின்றோமோ அந்த உணர்வலைகள் எந்த உறுப்பின் பாகம் வழியாகப் போய்க் கொண்டிருக்கின்றதோ அந்த உறுப்பில் போய் ஒட்டிக் கொள்கின்றது.
1.ஒட்டியவுடனே என்ன செய்யும்…?
2.இந்தப் பிடிப்பின் நிலைகள் வரும்
3.அந்த நேரத்தில் நமக்குப் படபடபடபடவென அடிக்கும்.

குறிப்பிட்ட காலம் வந்த பின் அந்த அணு என்ன செய்யும்..? இந்த உணர்வின் தன்மை துடித்தவுடனே முட்டையில் இருந்து குஞ்சு வெளியில் வரும். வந்தவுடனே கத்துகின்றது.

கோழி முட்டையிட்டு அடைகாத்து முட்டை பொரிந்து குஞ்சுகள் வெளியில் வந்ததும் குஞ்சுகள் எல்லாம் கத்தும். உடனே கொக்..கொக்..கோ…! என்று தாய் கூப்பிடுகின்றது. அதற்கு இரையைக் கொடுக்கின்றது. பின்னாடியே குஞ்சு போகின்றது அந்த உணவை எடுக்கின்றது.

இது போல் தான் நம் உடல் உறுப்புகளில் ஒட்டிய அணுகக்ள் தன் இனத்தைப் பெருக்கிக் குஞ்சாகி விட்டது என்றால்
1.அது தன் பசிக்காக உணர்ச்சிகளை உந்தும்.
2.அந்த உணர்ச்சிகள் சிறு மூளைக்கு எட்டுகின்றது.
3.உடனே கண் காது மூக்கிற்கு அது ஆணையிடுகின்றது.
4.ஆணையிட்டவுடனே என்ன செய்கின்றது…? காற்றில் இருந்து இழுக்கின்றது
5.அந்த வேதனையான உணர்வைச் சுவாசித்து இதே உயிர் அந்த வேதனையான அணுக்களை வளர்க்கின்றது.
6.நம் உயிர் தான் அதற்குச் சாப்பாடு கொடுக்கின்றது.

சுவாசித்ததை இயக்கி.. உருவாக்கி அதற்கு உணவு கொடுத்து வளர்ப்பது தான் “உயிரின் வேலை…” நீ ஏன் “சாப்பாடு கொடுக்கின்றாய்…?” என்று நம் உயிரிடம் கேட்க முடியுமா…?

1.இந்த ஆறாவது அறிவால் அதைத் தடைபடுத்த வேண்டும். தடுத்துப் பழக வேண்டும்.
2.இல்லை என்றால் அதை அடக்கிப் பழக வேண்டும்.

ஆறாவது அறிவு கொண்ட நாம் மற்றதை வல்லமை கொண்டவர்கள். அப்போது நாம் எதைக் கொண்டு அடக்க வேண்டும்..? அது தான் அங்குசபாசவா.

அங்குசம் சிறிது தான்…! ஆனால் அவ்வளவு பெரிய யானையை அது அடக்குகின்றது.

அதைப் போன்று தான் நம் வாழ்க்கையில் சந்திக்கும் தீமைகள் வலிமையானதாகவும் கடுமையானதாகவும் இருந்தாலும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைப் பாய்ச்சினோம் என்றால் அதை அடக்குகின்றது.

நம் ஆறாவது அறிவை முருகனாகக் காட்டி தீமைகளை எல்லாம் அடக்கக்கூடிய வல்லமை பெற்றவர்கள் என்று காவியத்தில் ஞானிகள் தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

ஆனால் நாம் அதைக் கதையாகத்தான் படித்துவிட்டுப் போகின்றோம். காவியத்தின் மூலக் கருத்தை அறியவில்லை. அதைப் பயன்படுத்தவும் இல்லை.

ஒரு சிலையை வைத்து ஞானிகள் நமக்கு இவ்வளவு விரிவுரை கொடுத்திருக்கின்றார்கள். ஞானிகள் சொன்னதைப் புரிந்து கொண்டால் போதும். நாம் போகும் பாதை தெளிவாகும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் ஞானிகள் காவியத்தில் கொடுத்த உண்மைகளைத்தான் உணர்த்திக் கொண்டு வருகின்றோம்.

மற்றவர்கள் நம்மைப் பழித்தால் புரையேறுமா…?

சப்தரிஷி மண்டலம் துருவ நடத்திரம்

மற்றவர்கள் நம்மைப் பழித்தால் புரையேறுமா…? 

நண்பர்களாக ஒருவருக்கொருவர் பழகுகின்றோம். குடும்பத்திற்குள் ஒருவருக்கொருவர் பற்றும் பாசத்துடன் இருக்கின்றோம். உறவினர்களுடனும் நாம் பாசமாப் பழகுகின்றோம்.

1.பாசத்துடன் நாம் பழகி வந்தாலும்
2.நாம் (ஒவ்வொருவரும்) பேசியது நமக்குள் பதிவானது நமக்குள் உருவானது இரண்டும் கலந்தது
3.இது எல்லாவற்றையும் சூரியனின் காந்த சக்தி (வெயில் என்று சொல்கிறோம் அல்லவா) எடுத்து
4.இங்கே தனித்தனியாக (அலாக்காக) அலைகளாக இந்தக் காற்று மண்டலத்தில் வைத்திருக்கின்றது
5.இன்று BANK என்று சொல்வது போல் காற்று மண்டலத்தில் எல்லாவற்றையும் சூரியன் அலைகளாக மாற்றி வைத்திருக்கின்றது.

டி.வி. ரேடியோ கம்ப்யுட்டர் மூலம் ஒலி, ஒளிபரப்பு செய்கின்றார்கள். அலைகளாகத் தான் இருக்கின்றது. நாம் கண்ணிலேயா பார்க்கின்றோம். பார்க்க முடிவதில்லை.

ஒலி ஒளியாக வருகின்றது. அதை இயந்திரத்தில் எடுத்து எந்த ஸ்டேசனோ அதைத் திருப்பி வைத்தோம் என்றால் அது பிரித்துக் கொடுக்கின்றது. நாம் பார்க்கவும் கேட்கவும் முடிகின்றது.

அதைப் போன்று தான் இப்போது நீங்கள் சும்மா இருக்கின்றீர்கள். உங்களுக்கு வேண்டாதவர் அமெரிக்காவில் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

சும்மா உட்கார்ந்திருக்கும் அந்த நேரத்தில் இரண்டு பேருக்கும் வேண்டிய நண்பர் உங்களைச் சந்திக்க வருகின்றார்.

நான் அமெரிக்காவிற்குப் போனேன். அங்கே அந்த நண்பரைப் பார்த்தேன். அவரைப் பார்த்தோம் என்றால் எக்கச்க்கமாகச் சம்பாரிக்கின்றார் என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார்.

அதைக் கேட்டவுடனே அந்த அலைகளைக் கவர்ந்து
1.“ஜிர்ர்ர்ர்……!” என்று கோபம் வருகிறது
2.அவனா…? துரோகி..! எனக்கு இடைஞ்சல் செய்தான்…
3.எங்கே போனாலும் அவன் உருப்பட மாட்டான் என்று சொல்கிறோம்.

நமக்குப் பிடிக்காதவன் நன்றாக இருக்கின்றான் என்று சொன்னால் நம்மை அது சந்தோஷப்பட வைக்குமா,…?

அவர் அப்படிச் சொன்னவுடனே அமெரிக்காவிலிருக்கும் அவனின் நினைவலைகள் வருகின்றது. அந்த உருவமே இங்கே தெளிவாகத் தெரியும்.

அவனின் நினைவலைகளை எடுத்து இதனுடன் கலந்து” உருப்படாமல் போவான்…!” என்று சொன்னவுடன் இந்த உணர்வுகள் அங்கே (அமெரிக்காவில்) அவனுக்குள் போய் இணைத்துவிடும் (CONNECT).

1.அமெரிக்காவில் அவர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது இந்த மாதிரி ஆனால் என்றால் புரை ஓடிவிடுகின்றது.
2.மற்றொருவருடன் ஒரு நல்ல பேச்சு பேசிக் கொண்டு இருக்கும் போது உடனே குறுக்காட்டிப் (இடைமறித்து) புரை ஓடுகின்றது.
3.காரோ வேறு ஏதாவது வாகனம் ஓட்டி கொண்டு போனாலும் புரை ஓடும். ஒரு விநாடி அந்த அலைகள் மாறி ஏமாந்தோம் என்றால் கார் ஓட்டிக்கொண்டு இருக்கும் போது மோதி ஆக்ஸிடென்ட் ஆகிவிடும்.

சும்மா இருக்கும் போது புரை ஓடுவது வேறு…! சாப்பாடு சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது புரை ஓடினால் மூக்கு காது தொண்டை ஈரக்கொலை எல்லாம் புரை ஓடிவிடும். “உயிருக்கே ஆபத்தாகும்….!”

மனிதனின் உணர்வலைகள் இப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்ட நிலையில் இயக்குகின்றது.

இத்தகைய எதிர்பாராது இயக்கக்கூடிய தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் எடுத்து ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) போல அந்த அலைகள் நமக்குள் புகாது பாதுகாப்புக் கவசமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

1.அதிகாலையில் எழுந்திருக்கும் பொழுதும்
2.இரவு படுக்கும் பொழுதும்
3.அல்லது வெளியில் எங்கு செல்வதாக இருந்தாலும்
4.எந்த ஒரு காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னாடியும்
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
6.நாங்கள் பார்க்கும் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
7.நம் ஆன்மாவில் பரப்பி வைத்துக் கொள்ள வேண்டும்.
8.நம் எண்ணத்திற்குள் அந்த மகரிஷிகளின் வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

நம் ஆன்மாவில் மகரிஷிகளின் அருள் சக்தி அதிகமானால் ராடார் (RADAR) இயக்கம் போல் தீமை செய்யும் உணர்வலைகள் நம் ஆன்மாவில் வந்து மோதும் சமயம் அதை உள்ளே விடாது விலக்கித் தள்ளிவிடும்.

இதற்குப் பெயர் தான் ஆத்ம சுத்தி என்பது. சக்தி வாய்ந்த ஆயுதமாக உங்களுக்குக் கொடுக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தீமையையும் உணர்த்தி… அதைச் சேர்க்கக் கூடாது….! என்று உணர்த்தும் “ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோமா…!”

murugu-karthi

தீமையையும் உணர்த்தி… அதைச் சேர்க்கக் கூடாது….! என்று உணர்த்தும் “ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்துகின்றோமா…!”

இப்போது நாம் மனிதனாக இருக்கின்றோம். பிறர் நம்மைப் பற்றிக் தவறாகச் சொன்னால் “பாவி… என்னைப் பற்றி இப்படி இல்லாததைச் சொல்கின்றானே… உருப்படுவானா இவன்…?” என்று சொல்லி விட்டுப் பிடிவாதமாக இருக்கின்றோம்.

அவர்கள் உடலில் எது கெட வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உணர்வு பூராம் இங்கே நமக்குள் கெடுதல் ஆக்குகின்றது.
1.கெடுதல் ஆனாலும் நமக்குள் அது தெரிகின்றது.
2.அவனால் தான் இந்த மாதிரி வருகின்றது.. அதனால் தனக்கு என்னவெல்லாம் வருகின்றது என்றும் தெரிகின்றது.
3.ஆனால் அதை நீக்கத் தெரிகின்றதா…?

ஏனென்றால் நம் ஆறாவது அறிவு அதை உணர்த்துகின்றது. உணர்த்தி அதை மீட்க வேண்டும் என்ற உணர்வையும் ஆறாவது அறிவு கொடுக்கின்றது.

1.இருந்தாலும் நாம் அந்த ஆறாவது அறிவை அடக்குகின்றோம்
2.அவர்கள் உணர்வால் அது அடக்கப்படுகின்றது.
3.நம்மால் நல்லதைச் சிந்திக்க முடியவில்லை
4.அதிலிருந்து விடுபட்டு வெளியில் வர வேண்டும் என்றால் அவர்கள் உணர்வு தான் வருகின்றது.

நாம் குழம்பு வைக்கும் பொழுது அதில் கொஞ்சம் போல காரத்தை அதிகமாகச் சேர்த்து விட்டால் என்ன ஆகும். காரம் தான் முன்னாடி இருக்கும். விஷத்தைச் சேர்த்தால் விஷம் தான் முன்னாடி இருக்கும். உப்பைச் சேர்த்தால் உப்பு தான் முன்னாடி இருக்கும்.

ருசியெல்லாம் கெடுத்து விடுகின்றது. “எது அதிகமோ” அது ஆக்கிரமிப்பு செய்கின்றது.

ஆகவே மனித வாழ்க்கையில் வரும் இதைப் போன்ற தீமைகளை நீக்கியவர்கள் யார்…? அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக ஆனது.

1.அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து “பல அலைகள்” பேரருள் பேரொளியாக வருகின்றது.
2.அதை நாம் எடுத்து நம் உடலுக்குள் சேர்த்துத் தீமைகளை அகற்றப் பழக வேண்டும்.
3.சூட்சுமத்தில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றது.
4.அதனை எடுப்பதற்குத்தான் விநாயகத் தத்துவத்தையே ஞானிகள் வைக்கின்றார்கள்.
5.ஒரு தடவைப் பதிவு செய்து கொண்டாலும் அதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவதற்குத் தான்
6,அந்த உருவத்தை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

காவியமாகப் படைத்து அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகித் துருவ நட்சத்திரமாக “எப்படி ஒளியாக ஆனான்…?” என்று கருத்தினை அறியும்படி செய்கின்றார்கள்.

ஒருவன் தீங்கு செய்கிறான் என்று தெரிகின்றது.. நாம் பார்க்கின்றோம். அது நம் உடலுக்குள் பதிவாகும் போது வினையாகின்றது. அதைப் போன்ற தீய வினைகளை எல்லாம் நீக்கியவன் துருவ மகரிஷி என்று நம் ஆறாவது அறிவால் தெரிகின்றது அது “கார்த்திகேயா…”

நம் வாழ்க்கையில் தீமை வரும் பொழுது அடுத்த கணமே அந்தத் தீய வினையை நீக்கத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்றோம் என்றால் நமக்குள் வரும் இருளை நீக்கும். நம் உணர்வுகள் தெளிவாகும்.

தீமைகளை நம் உடலுக்குள் உருவாகாதபடி தடுத்து விடுகின்றோம். அதைத்தான் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்…!” என்று நம் ஆறாவது அறிவைப் பற்றித் தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.

இந்த உலகையே அடிமைப்படுத்தி ஒரு சாம்ராஜ்யமாக ஆள நினைத்த பிருகு கடைசியில் என்ன ஆனார்…?

Divine Relations

இந்த உலகையே அடிமைப்படுத்தி ஒரு சாம்ராஜ்யமாக ஆள நினைத்த பிருகு கடைசியில் என்ன ஆனார்…? 

இருபத்தியேழு நட்சத்திரங்களும் பிற மண்டலங்களிலிருந்து கவர்வதை நமது பிரபஞ்சத்திற்குள் கொண்டு வந்து அந்தச் சக்தியை நமது பூமிக்கு எப்படிக் கொடுக்கின்றது என்பதை ஆதியிலே அகஸ்தியன் கண்டான்.

4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வியாசகனும் அகஸ்தியன் உணர்வைக் கவர்ந்து அதை வெளிப்படுத்தினான்.

அந்த இருபத்தியேழு நட்சத்திரத்தின் ஓட்டங்களையும் அதனுடைய இயக்கங்களையும் அதனின் உணர்வுகளைப் பற்றியும் வியாசகன் கூறிய உணர்வுகளை அவனுப்பின் வந்த பிருகு தன் நினைவின் ஆற்றலால் பதிவு செய்து கொண்டான்.

நட்சத்திரங்களின் இயக்கங்களைப் பற்றித் தான் அறிந்து கொண்டவைகளைத் தன் குழந்தைகளுக்குக் கருவில் இருக்கும் போதே உபதேசித்து அந்த உணர்வுகளைப் பதியச் செய்தான்.

தன் சாம்ராஜ்யம் தழைத்திருக்க வேண்டும் என்ற ஆசையில் பிரபாகரன் பார்கவன் என்ற இரு குழந்தைகளுக்கும் தான் கற்றுணர்ந்த வியாசகரின் தத்துவத்தைக் கருவிலேயே உருவாக்கினான்.
1.என்றென்றும் இந்தச் சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்ற பேராசை கொண்டு
2.அந்த ஆசையினால் தான் கண்டுணர்ந்த உணர்வுகளை
3.தன் இனத்திற்குள் (குழந்தைகளுக்குள்) பாய்ச்சிப் பதிவாக்கினான்.

நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றுக்கொன்று எதிர் நிலையாகும் பொழுதுதான் அதன் உணர்வுகள் மின்னலாகப் பாய்கின்றது.

இதைப் போன்ற உணர்வுகளையும் தன் எண்ணத்தால் பாய்ச்சி அதை அடக்கும் நிலைகள் பெற்றவர் தான் பிருகு.

இன்று மற்ற நாடுகளின் மீது லேசர் (LASER) கதிரியக்கங்களை பாய்ச்சி அவர்களை விஞ்ஞான அறிவு கொண்டு அடக்குவது போலத்தான் அக்காலத்தில் பிருகும் செய்தார்.

1.அவருடைய உடலிலே விளைந்த நட்சத்திரங்களின் ஆற்றல் கொண்டு
2.தன் பார்வையால் அதை மற்ற நாடுகளில் பாய்ச்சி
3.எந்த ஒரு நாட்டையும் அடிமைப்படுத்தும் நிலையாகச் செயல்படுத்தப்பட்டு
4.தன் சாம்ராஜ்யமாகப் பெருக்கிக் கொண்டவர்.

பிருகு என்பவர் கடுமையான தவத்தின் தன்மை பெற்றவர்.

வியாசகன் கூறிய நிலையும் நட்சத்திரத்தின் இயக்க ஓட்டங்கள் என்ற நிலையை அதனுடைய விரிவுரைகளை வேத சாஸ்திரங்களாக – மொழியாக மாற்றி அதாவது எழுத்து வடிவிற்குக் கொண்டு வந்தவர்.

அதன் உணர்வுகளைத் தனக்குள் ஆழமாக பதிவு செய்து கொண்ட பின் இந்த உலகையே ஒரு சாம்ராஜ்யமாகத் “தான் ஆள வேண்டும்…!” என்ற வலுவின் தன்மை பெற்றவன் பிருகு.

பிருகு மற்ற நாடுகளை இப்படி அடக்கிக் கொண்டிருந்தாலும் இங்கே தன் சாம்ராஜ்யத்தில் அவன் குழந்தைகள் ரூபமாகப் போர் வருகின்றது.

அதாவது மூத்த மகனும் இளைய மகனும் சகல வித்தைகளையும் நாங்கள் கற்றுக் கொண்டோம். தனித் தனியே எங்களுக்குல் இந்த சாம்ராஜ்யத்தில் பங்குகள் வேண்டும் என்று தந்தையிடமே மோதுகின்றார்கள்.

அரச சட்ட நியதிப்படி மூத்தவன் தான் ஆட்சி புரிய வேண்டும். இளையவன் அவனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இருந்தாலும் அது பார்க்கவனுக்குக் கோபத்தை அதிகமாகக் கிளரச் செய்தது.

சகோதரர் ஒருவருக்கொருவர் போர் முறை கொண்டு கடைசியில் கற்றுணர்ந்த உணர்வு கொண்டு இந்தப் பிருகுவையே ஒளி கொண்டு பாய்ச்சி அவருடைய சக்தியை இழக்கச் செய்தார்கள்… சூனியமாக்கினார்கள்.

ஏனென்றால் பிருகு கல்வி அறிவு கொண்டவராக இருந்தாலும் அவர் கற்றறிந்த உணர்வின் அறிவின் ஞானத்தை யாருக்கும் ஊட்டவில்லை.

போருக்காகவும் தன் புகழுக்காவும் மற்றோரை அடக்கி ஆட்சி புரிய வேண்டும் என்று “அந்த ஒன்றைத் தான்” அவனுக்குள் வளர்த்தான். தன் இனமும் அதையே தான் செய்ய வேண்டும் என்று விரும்பினான்.

இதைத்தான் கீதையிலே கண்ணன் சொல்லுகின்றான்… “நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகவே நீ ஆகின்றாய்…!”

1.உலகையே அடக்கி.. “தான் செயல்பட வேண்டும்” என்று பிருகு நினைக்கப்படும் போது
2.அதுவே வளர்ந்து அவனை அடக்கிடும் நிலையாக அது வருகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் அறிந்து கொள்ள வேண்டும்.

சாஸ்திரங்களை ஞானிகள் எவ்வாறு கொடுத்தார்கள்…? அதிலே திசை மாறிச் செல்லும் போது அவர்களின் நிலைகள் எதுவாக மாறுகிறது…?

ஏனென்றால் இன்று லேசர் இயக்கம் என்று சொல்வது போல மின் அலைகளை வைத்து நாடுகளை அடிமைப்படுத்துவதற்காக அன்றே இவர்கள் ஆயுதம் செய்தவர்கள்.

“நாக(ம்)…!” என்று ஒவ்வொரு விஷத்தின் தன்மைக்கொப்ப ஒவ்வொரு ஆயுதங்களை எண்ணி… அதை எடுத்து… உணர்வின் ஒலி அலைகளை எதிர் அலைகளாகப் பாய்ச்சி.. “மற்ற நாடுகளைச் சூனியமாக்கியவர்கள்…”

இதனால் காற்று மண்டலமும் சூனியமாகி அங்கு வாழும் மக்களையும் அது மடியச் செய்கிறது.

அக்காலங்களில் இத்தகைய போர் மூண்டு அதிலே மடிந்த நகரங்கள் ஏராளம் உண்டு. பூமியிலே மண்ணுடன் மண்ணான அத்தகைய நகரங்கள் பல இருக்கின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அதை எல்லாம் எமக்குத் (ஞானகுரு) தெளிவாகக் காட்டுகின்றார்.

போர் முறையாகி எல்லாம் மடிந்த பின் அவர்கள் செய்த அந்த அறிவின் ஞானங்கள் வளரப்படும் பொழுதுதான் (இன்றைய) விஞ்ஞான அறிவாக மாறுகின்றது.

தீமையின் நிலைகளை தனக்குள் மடியச் செய்து உணர்வை ஒளியாக மாற்றி விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் “அந்த ஞானங்கள் மறைந்தே போய்விட்டது….!”

இன்றைய உலகில் மனிதனின் எண்ண உணர்வுகள் முழுவதும் நஞ்சாகப் பாய்ச்சப்பட்டு இந்த உணர்வுகள் பெருகி “மனிதர்கள் அனைவரும் நஞ்சான உயிரினங்களாக மாறும் நிலைகளாகத் தான்” விஞ்ஞான அறிவால் வளர்ந்து கொண்டிருக்கின்றோம்.

மனிதன் மனிதனாக இருப்பினும் அசுர உணர்வுகள் கொண்டு அசுரனாக மாற்றிக் கொண்டுள்ளது.

இந்த விஷத் தன்மைகள் பரவி மனிதனின் உணர்வை அழித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது குரு காட்டிய அருள் வழியில் செயல்பட்டு “உலகம் நலம் பெற வேண்டும்” என்ற தவத்தை மேற்கொள்ள வேண்டும்.

எந்த ஆலயங்களுக்குச் சென்றாலும் அங்கே ஒரு ஓரத்தில் அமர்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானித்து இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா… என்று வேண்டுங்கள்.

பொருளறிந்து செயல்படும் அருள் சக்தி பெற வேண்டும்… இங்கே ஆலயம் வரும் குடும்பங்கள் மகிழ்ந்து வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும் என்று நாம் வாழ்த்தினால் இதைப் பின்பற்றி வருவோரும் இதைச் செய்யத் தொடங்குவார்கள்.

மகரிஷிகள் காட்டிய அருள் வழியில் இதைப்போல நீங்கள் ஒவ்வொருவரும் செய்து காட்டுங்கள். மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற உங்கள் மூச்சலைகளை அங்கே பரப்புங்கள்.

நம்மைக் காப்போம். மக்களைக் காப்போம். எல்லோரும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழ்ந்திடத் தவமிருப்போம்…!

தீமைகளைத் திரும்பத் திரும்ப எண்ணாமல் “விட்டுவிட்டோம்…” என்றால் தீமைகள் நமக்குள் வளரவே முடியாது…!

human-aura

தீமைகளைத் திரும்பத் திரும்ப எண்ணாமல் “விட்டுவிட்டோம்…” என்றால் தீமைகள் நமக்குள் வளரவே முடியாது…!

சந்தர்ப்பத்தால் ஒருவர் மேல் நமக்கு வெறுப்பாக வருகின்றது. அப்போது அவர் உணர்வை நமக்குள் பதிவாக்கிக் கொள்கின்றோம். அதே சமயத்தில் அவரும் நம் மீது வெறுப்பு அடைகிறார். இரண்டுமே நமக்குள் பதிவாகின்றது.

1.நாம் கோபமாக இருக்கின்றோம் என்பது தெரிகின்றது.
2.நம் மேல் அவர் கோபமாக இருப்பதும் தெரிகின்றது.
3.அவர் கோபிக்கின்றார் என்று தெரிகின்றது… எதனால் கோபித்தார்…? என்கின்ற வகையிலும் தெரிகின்றது.
4.அதாவது வெளிச்சத்தில் “பொருள்கள் தெரிவது போல்” இது எல்லாமே தெரிகின்றது.

மகாபாரதத்தில் கௌரவர்கள் பஞ்ச பாண்டவர்கள் என்று தனித் தனியாகக் காட்டுகின்றனர். பாண்டவர்கள் ஐந்து பேர். கௌரவர்கள் நூறு பேர்.

கௌரவர்கள் என்ன செய்கின்றார்கள்…? அவர்கள் எதையும் விட்டுக் கொடுப்பதில்லை.
1.தான் எடுத்த காரியத்தை சாதிப்பது…! இது தான் கௌரவர்கள்களுடைய வேலை.
2.”நாங்கள் ஜெயிக்க வேண்டும்….” என்று எண்ணத்திலேதான் செயல்படுகிறார்கள்.

அதாவது நாம் எடுத்துக் கொண்ட அந்தக் குணம் அதனின் இயல்பை விட்டுக் கொடுப்பதில்லை.

அந்த மாதிரித்தான் நமக்குள் இருக்கக்கூடிய (உணர்வுகள்) அந்தப் பிடிவாத குணம்
1.ஒருவருக்கு நாம் தாழ்பணிவதா…? என்கிற நிலை வருகிறது (நமக்கே இது தெரியும்)
2.நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று தெரிகின்றது
3.நமக்கு விட்டுக் கொடுப்பதற்கு மனம் இல்லை.
4.நாம் விட்டுக் கொடுத்தாலும் அவர் விட்டு கொடுப்பதற்கு மனம் இல்லை.

அப்போது விட்டுக் கொடுக்காமல் இருக்கக் காரணம் என்ன…? ஒரு செடியில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் என்ன செய்யும்…?

அந்தச் செடியில் (தாய்ச் செடி) இருக்கின்ற சத்தை ஏற்கனவே சூரியன் எடுத்து வைத்திருக்கின்றது. அதில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால் சூரியன் கவர்ந்து வைத்திருக்கும் அந்தச் சத்தைப் பூமியின் ஈர்ப்பின் துணை கொண்டு அது இழுக்கின்றது.

அதற்குள் சேர்கின்றது. அந்த உணர்வுக்கொப்ப அந்தச் செடி விளைகின்றது. பின் தன் இனத்தை விருத்தி செய்கின்றது.

அதே போன்று தான் ஒரு மனிதன் உடலில் அந்தப் பிடிவாத குணம் விளைகின்றது என்றால் அந்த வித்துதான் சொல்லாகப் போய் பாயும்.

அந்த உணர்வுகள் பாயும் பொழுது உயிர் அதை நுகர்கின்றது. நம் எலும்புக்குள் இருக்கும் ஊனுக்குள் அதனின் வித்தாகப் பதிவாக்கி விடுகின்றது.

வித்தாகப் பதிவாக்கப்படும் போது “கோபிக்கின்றான்” என்று தெரிகின்றது.
1.அவர் உணர்வுகள் நம் உடல் முழுவதும் சுழலும் பொழுது
2.பதட்டமும் கோபமும் இன்னும் கொஞ்சம் நமக்கு அதிகமாக வரும்.
3.ஏனென்றால் நுகர்ந்த அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது.

அப்புறம் என்ன செய்கின்றோம்…?

ஒரு கோழி கருவாக (கருவுற்று) இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த நேரத்தில் என்ன செய்கின்றது…?
1.உருவான கரு “முட்டையாக…!” முழுமையாவதற்கு கேறிக் கொண்டே இருக்கிறது.
2.அந்த உணர்வின் ஒலிகளை எடுத்துக் கொண்டே இருக்கிறது.
3.கேறவில்லை என்றால் முட்டை கூகையாகிப் போகும்.
(கேறுதல் என்றால் சப்தமிடுதல். கூகை – கூமுட்டை அதில் குஞ்சு உருவாகாது)

அதைப் போன்று தான் ஒருவன் நம்மைத் திட்டுகிறான் அல்லது கோபத்தில் ஒன்றைச் சொல்லி விட்டான் என்றால் “சரி போகட்டும்…!” என்று அதை “விட்டு விட்டோம்…” என்று சொன்னால் அது நமக்குள் சுத்தமாக விளையாது.

எது…?

“இப்படித் திட்டிக் கொண்டே இருக்கின்றானே…” அவன் எப்படி இப்படிப் பேசலாம்…? நம்மை அவன் இப்படித் திட்டலாமா…? என்று நாம் திரும்ப திரும்பச் சொன்னோம் என்றால் அவன் எந்தக் கெடுதலை எண்ணிச் சொன்னானோ அது நமக்குள் விளைகின்றது.

அதாவது ஒரு தடவை திட்டியிருந்தாலும் அது நமக்குள் பதிவானாலும் அதை மீண்டும் மீண்டும் எண்ணும் பொழுது கோழி கேறுவது போன்று ஆகி
1.கோபித்துப் பேசிய உணர்வுகள் நமக்குள் ஒரு முட்டையாக முழுமை அடைந்து விடுகின்றது.
2.அது வெடித்து கோபத்தை ஊட்டும் அணுவாக வெளி வந்து
3.அவன் கோபித்துப் பேசியது போல் நம்மையும் பேச வைக்கும்.

அதனின் வளர்ச்சியில் ஒருவரிடம் பதிவு செய்து விட்டால் அடுத்து அவரைப் பார்த்தவுடனே நமக்குக் கோபம் வருகின்றது. மனதை அடக்கினாலும் முடியவில்லை…!

மற்றவர்கள் சொன்னாலும்… எங்கேங்க….? கோபத்தை என்னால் அடக்கவே முடியவில்லை. அவனைப் பார்த்ததும் எனக்குக் கோபம் பயங்கரமாக வருகிறது என்பார்கள்.

அதை எல்லாம் மாற்றுவதற்காகத்தான் நம் குருநாதர் காட்டிய வழியில் “ஆத்ம சுத்தி” என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.

யார் எதைச் சொன்னாலும் அடுத்த கணமே ஈஸ்வரா என்று புருவ மத்தியில் உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை விண்ணிலே செலுத்தி கவர்ந்த அந்த அருள் சக்திகளைக் உடலுக்குள் பரவச் செய்தால் திட்டுபவரின் உணர்வுகள் நமக்குள் வராது.

திட்டுபவனை மீண்டும் மீண்டும் எண்ணினால் கெடுதல் செய்யும் உணர்வுகள் நமக்குள் விளைந்து நம்மையும் கெடுக்கும். கெடுதலான செயல்களைச் செய்ய வைக்கும்.

1.தீமைகளை நீக்கி உணர்வை ஒளியாக மாற்றிய மகரிஷிகளை எண்ணினால்
2.கெடுதல் செய்யும் உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்கும்.
3.கெடுதல்கள் செய்பவர்களையும் இந்த உணர்வுகள் போய்ச் சிந்திக்கச் செய்யும்.
4.கெடுதல் செய்யும் அந்த எண்ணத்தையே அவர்களுக்குள் மாற்றிவிடும்.

செய்து பாருங்கள்…! உங்கள் அனுபவம் பேசும்…

சப்தரிஷி மண்டலத்தில் வாழும் ஒளியான குடும்பங்கள்

Alcor-Mizar

சப்தரிஷி மண்டலத்தில் வாழும் ஒளியான குடும்பங்கள்  

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியன் தன் வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி ஒளியின் சிகரமாகித் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அவன் உணர்வை வளர்த்துக் கொண்ட அக்கால மக்களும் அவன் ஈர்ப்பு வட்டத்தில் அவனைப் போன்றே ஒளிச் சரீரமாகிப் பேரின்ப வாழ்க்கையாக சப்தரிஷி மண்டலங்களாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

அக்காலங்களில் அவர்கள் சென்றிருந்தாலும் அவர்களுக்குப் பின் அழியா ஒளிச் சரீரம் பெற்று சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்குச் செல்லும் நிலை படிப்படியாகக் குறைந்து குறைந்து அந்தப் பாதையே தெரியாத நிலை உருவாகிவிட்டது.

யார் அதைப் பெறுகின்றனர்…? அதனில் யார் போய் இணைகின்றனர்…!

இப்போது நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்த மெய் வழி செல்லும் மார்க்கத்தைக் காட்டிய பின் அதைச் செயலாக்குகின்றோம். ஏனென்றால் இனம் இனத்தைச் சேர்க்கும்.

ஒளியின் சுடர் கொண்டு எந்த ஒளியின் சரீரத்தை நாம் எடுக்கின்றோமோ அந்த ஒளியின் தன்மையை வளர்க்கப்படும் போது இனம் இனத்தைச் சேர்க்கும்…!

இப்போது நான் கோபிக்கின்றேன் என்றால் அதே மாதிரியே இன்னொருத்தரும் கோபப்பட்டார் என்றால் கோபப்பட்ட இரண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து விடுவார்கள்.

ஒருவர் வேதனைப்பட்டுக் கொண்டே இருக்கிறார் என்றால் வாழ்க்கையில் கஷ்டம் என்றால்.. “வேதனையைத்தானே பட வேண்டும்” என்று இந்த இரண்டு உணர்வும் ஒன்றாகச் சேரும்.

இதெல்லாம் இயற்கையின் சில நியதிகள். நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

கணவனை இழந்தவர்கள் என்ற நிலையில் யாரும் எண்ண வேண்டாம். அவர்களினுடைய உணர்வுகள் உங்களுடன் ஒன்றியே உண்டு.

அவர்கள் உங்களிடமிருந்து என்றும் பிரியவில்லை. அவர்கள் உணர்வு உங்களுடன் வாழ்கின்றது. அவருடன் வாழ்ந்த காலங்கள் நினைவுக்கு வரும்போது அந்த இயக்கங்களும் வருகின்றது.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிராத்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கச் செய்யும்போது உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகின்றது. அதனால் அவர்கள் இன்னொரு உடலுக்குள் போவதில்லை. ஆனால்…,
1.இன்னொரு உடலுக்குள் போய்விட்டால் (மனவிக்கு) தனக்குக் கணவன் ஏது….!
2.உடலை விட்டுச் சென்று விட்டால் எப்போது கணவனும் மனைவியும் இணைவது…?

ஆகவே உடலை விட்டுப் பிரிந்த உயிராத்மா (கணவனோ அல்லது மனைவியோ) “பேயாகச் சென்று… நோயாகச் சென்று… இன்னொரு உடலுக்குள் போகாமல் தடுக்கும் நிலையைத்தான் “எமனிடமிருந்து… சாவித்திரி தன் கணவனை மீட்டினாள்…!” என்று சாஸ்திரங்களில் ஞானிகள் உணர்த்தியுள்ளார்கள்.

உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாவைத் தனக்குள் ஒன்றிய நிலைகள் கொண்டு அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளுதல் எண்ணுதல் வேண்டும்.

தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்றாலும் மீண்டும் இன்னொரு உடல் பெறாதபடி பிறவியில்லா நிலைகள் அடைய வேண்டும் என்று அந்த ஆன்மாக்களை விண்ணிலே செலுத்துதல் வேண்டும்.

ஒரு குடும்பப் பற்றுடன் வரப்படும் போது இதனைப் பார்க்கலாம். “வசிஷ்டரும் அருந்ததியும்” என்று சொல்வார்கள். அதாவது
1.தாய் தந்தையர்கள் இணைந்து ஒரு நட்சத்திரமானாலும்
2.திருமணமாகாத குழந்தையின் உயிரான்மாக்களும் அவர்களுடன் சேர்ந்தே
3.அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும்.

வசிஷ்டரும் அருந்ததி என்ற நட்சத்திரத்தில் ஒன்று மட்டுமல்ல நான்கு நட்சத்திரங்கள் உண்டு. அதாவது இரண்டு நட்சத்திரத்தின் (வசிஷ்டர் நட்சத்திரத்தின்) அருகிலே ஒன்று வரும்.. மற்றொன்றும் வரும். ஆக நான்கு நிலைகள் அங்கே வருகின்றது.

இன்று விஞ்ஞான அறிவினால் டெலஸ்கோப்பின் துணை கொண்டு சப்தரிஷி மண்டலத்தைப் பார்க்கின்றார்கள். வசிஷ்டர் அருந்ததி என்று இரண்டைத் தான் பார்ப்பார்கள். ஒன்று மற்றொன்று பின்னாடி செல்லும் போது மறைந்து விடும்.
1.மறைந்து விட்டால் முதலில் “ஒன்று” என்பார்கள்
2.அப்புறம் திடீரென்று…. “அபூர்வமாக இன்னொன்றும் தெரிகிறது…!” என்பார்கள்.

தாய் தந்தையின் மீது பற்று கொண்டவர்கள் தன் உடலை விட்டுச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம் சென்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் என்றும் பிறவியில்லா நிலைகளாக
1.இப்போது தன் குடும்பத்தில் எப்படிக் குழந்தைகளுடன் வாழ்கின்றாரோ அதே போல்
2.ஒளியின் சுடராக அன்னை தந்தையின் ஈர்ப்பு வட்டத்தில் இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

இவைகளை நீங்கள் எப்படி விஞ்ஞானக் கருவி கொண்டு பார்க்கின்றீர்களோ இதைப்போல மெய் ஞானிகளின் உணர்வை எமக்குள் (ஞானகுரு) செலுத்தி இந்த உணர்வின் தன்மை கொண்டு விண்ணுலக ஆற்றல் எவ்வாறு இருக்கிறது என்ற நிலையைத் தெளிவாக்கிக் காட்டினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குருநாதர் சொன்னபடி விளையச் செய்த அந்த உணர்வின் ஞானத்தைத்தான் “சொல் வடிவில்” உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

இதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால் உங்கள் எலும்புக்குள் ஊழ்வினையாக இது பதிவாகின்றது. பதிவானதை மீண்டும் மீண்டும் நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் அந்த அருள் ஞானி அகஸ்தியன் சென்ற வழிகளில் நீங்களும் செல்லலாம்.

கணவன் மனைவி குழந்தைகள் சகிதம் குடும்பமாக எளிதில் பெறலாம். இதில் ஒன்றும் கஷ்டமில்லை….!
1.நான் குண்டலினியைத் தட்டியெழுப்ப வேண்டும்.
2.கீழிருந்து மேலே ஏற்ற வேண்டும்.
3.காட்டுக்குள் போய் தவமிருக்க வேண்டும் என்று
4.காட்டிலே தவம் இருந்து பெறக் கூடியது அல்ல இது….!

பிறந்தது “பெண்” என்று தெரிந்தாலே அதைச் சிலர் கொன்று விடுகின்றார்கள் – அந்த அளவிற்கு “மனிதத் தன்மையற்ற நரகலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்…!”

Image

Woman safety

பிறந்தது “பெண்” என்று தெரிந்தாலே அதைச் சிலர் கொன்று விடுகின்றார்கள் – அந்த அளவிற்கு “மனிதத் தன்மையற்ற நரகலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்…!”

 

பெண் குழந்தைகள் பிறந்து விட்டாலோ நரகலோகமும் சேர்த்தே வந்து விடுகின்றது. ஏனென்றால் நாளைக்குக் கட்டிக் கொடுக்கின்ற வரையிலும் அதற்கு எத்தனையோ பொருளாதாரத் தேவை… மற்ற எல்லாம் வந்து விடுகின்றது.

இதற்காக வேண்டி இப்போது சில இடங்களில் பெண் குழந்தைகள் பிறந்து விட்டால் அவர்களைக் கொன்றே விடுகின்றார்கள்.

குழந்தைகளைக் காக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். ஆனால் பிறந்தது பெண் என்று தெரிந்தால் அந்தக் குழந்தையைக் கொல்லுகின்றார்கள்.
1.இன்றைக்கு வாழ முடியவில்லை என்றால்
2.மனிதனாகப் பாசமாக இருந்தாலும்
3.மனிதத் தன்மையற்ற நிலையில் தன் இனத்தையே அழித்திடும் நிலை வந்து விட்டது.

பெண்ணாக இருந்தாலும் தாய் பாசத்தைப் பற்றி நிறையப் பேசுவார்கள். ஆனால் திருமணமாகி அடுத்து மாமியாராக ஆகிவிட்டால்
1.அந்தப் பெண் இனமே
2.பெண்ணைப் (மருமகளை) பேயாக ஆட்டிப் படைக்கின்றது.

நியாயத்தைப் பேசுகின்றோம்; தர்மத்தையும் பேசுகின்றோம்; ஆயிரம் கோயில்களுக்குச் செல்லுகின்றோம்; ஆயிரம் தர்ம நியதிகளைப் பேசுகின்றோம்.

ஆனால் மனிதனுக்குள் ஆசை என்ற நிலைகளில் உட்புகுந்த அசுர சக்திகளால் இரக்கமற்ற நிலைகள் கொண்டு தன் மகள் வேறு… தன் மருமகள் வேறு…! என்று தான் பார்க்கின்றார்கள்.

வந்த மருமகளை மகளாக எப்படி மதிக்க வேண்டும்…? உயர்ந்த குணங்களை எப்படிக் கொண்டு வர வேண்டும்…? என்ற நிலை இல்லை.

தான் எண்ணியபடி வரவில்லை என்றால் பொருள் (பணம்) இல்லை என்றால் அது மருமகள் அல்ல. அது பேய் என்ற நிலைகள் வருகின்றது. (கேட்டால் என் மாமியாரும் என்னை இப்படித்தான் நடத்தினார் என்பார்கள்)

ஆக பெண் இனமே பெண் இனத்தை மதிக்காத நிலைகள் கொண்டு துன்புறுத்திக் கொண்டிருக்கும் அசுர சக்திகளாக இயக்கிக் கொண்டுள்ளது.

இப்படி ஒவ்வொரு செயலிலும் நம்மை அறியாதபடி தீங்கை விளைவித்து அதன் வழி இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு
1.நமக்குள் நஞ்சு கொண்ட உணர்வு கொண்டு
2.வேதனையான நரகலோகத்தை நமக்குள் சிருஷ்டித்துக் கொண்டே இருக்கின்றோம்.
3.நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் அத்தகைய தீமைகளிலிருந்து..
4.நரகலோகத்திலிருந்து ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும்.

ஆகையினாலே இதைப் படித்துணர்ந்த அனைவருமே நம்மை அறியாது உட்புகுந்து நமக்குள் தீமை விளைவித்து கொண்டிருக்கும் அந்த அசுர சக்தியிலிருந்து விடுபடும் நிலையாக
1.நாம் அந்த மக்களை… அந்தப் பெண் இனத்தைக் “காக்கும் சக்தியை வளர்ப்போம்”
2.மெய் ஞானிகளின் உணர்வை வளர்ப்போம்
3.வளர்த்த மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு தீமைகளை அகற்றுவோம்
3.நாம் விடும் மூச்சலைகளால் தீமையை அகற்றிடும் சக்தியாக நாம் பரவச் செய்வோம்
4.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உலகை அடைவோம்

இருளுக்குள் மறைந்த பொருளை ஒளி பட்ட பின் அதைத் தெரிந்து கொள்கின்றோம். அது போல் நமது வாழ்க்கையில் அறியாது வந்த இருள்கள் நல்லதைக் காணவிடாது மறைத்தாலும் அந்த அருள் ஞானி உணர்வை நாம் சுவாசித்துப் பொருளைக் காண முடியும்.

அந்த அருள் ஞானியின் உணர்வலைகள் நமக்குள் விளைந்து நம் எண்ணம் சொல் செயல் எல்லாமே ஒளியின் சுடராகப் பெறுவோம். அழியாத ஒளியின் சரீரமாக நாம் பெறுவோம்.

நம் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்யக்கூடிய செயல்களால் மகிழ்ச்சி அடைகிறோமா….? துயரப்படுகின்றோமா…!

Prestige issue

நம் கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக நாம் செய்யக்கூடிய செயல்களால் மகிழ்ச்சி அடைகிறோமா….? துயரப்படுகின்றோமா…!

அன்பால் பாசத்தால் பரிவால் நாம் வாழ்ந்து வந்தாலும் நம்மை அறியாது புகும் தீமைகள் என்ன செய்கின்றது…?

தன்னை அடுத்தவர்கள் மதிக்க வேண்டும் என்ற நிலையில் தான் நாம் எல்லோரும் வேண்டி விரும்பிக் கொண்டிருக்கின்றோம்.

ஆனால் ஒரு காரியத்தையோ செயலையோ சொன்னபடி சொன்ன நேரத்தில் நாம் செய்யவில்லை செய்ய முடியவில்லை என்றால்
1.மற்றவர்கள் நம்மை மதிக்க மாட்டார்கள்
2.எல்லோர் முன்னாடியும் கேவலமாகப் பேசுவார்கள் என்று
3.நம்மை அறியாமலே நமக்குள் இந்தத் தீய சக்திகள் வளர்ந்து
4.நம் நல்லதைக் காக்க முடியாத நிலைகள் துயர் கொண்டு அலையத் தொடங்குகின்றோம்.

அதே போன்று தான் கௌரவமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது நம் காது பட யாராவது ஒருவர்… “ஆஅ…! இவர் பெரியவரா…?” என்று சிறிதளவு சொன்னால் போதும்.
1.உன்னைத் “தொலைத்துக் காட்டுகின்றேன் பார்…!” என்று
2.அப்பொழுதே நம் அசுர உணர்வுகள் புகுந்து கொள்கின்றது
3.அப்புறம் தன் கௌரவத்தை எப்படிக் காப்பாற்றுவது…! முடியுமா…?

தொலைத்துக் கட்டுகின்றேன் என்ற உணர்வை எடுத்தவுடனே அது நல்ல உணர்வுக்குள் சேர்ந்து விடுகின்றது. சேர்ந்தவுடனே நல்ல உணர்வுகளை வேலை செய்யவிடாது.

என்னை இப்படிச் செய்தானே..! அவனை… “இரண்டில் ஒன்று பார்க்கின்றேன்… இரண்டில் ஒன்று பார்க்கின்றேன்…!” என்ற இந்த உணர்வு வரும்.

அந்த உணர்வு வந்தவுடனே நோயாக உருவாகின்றது. இப்படி நம் நல்ல குணங்களை இந்த அசுர சக்திகள் கொல்லுகின்றது.

உதாரணமாக மாமனார் வீட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இங்கே மாப்பிள்ளை வீட்டில் சம்பந்தி என்ற நிலையில் “உங்கள் அப்பா மாப்பிள்ளைக்கு என்ன செய்கிறார்…?” என்று மருமகளைக் கேட்பார்கள்.

அவர்களிடம் இல்லை என்று தெரியும். தெரிகின்றது. தெரிந்த பின் சரி இருக்கட்டும்…
1.நாளைக்கு அவருக்கு நல்ல வருமானம் வரட்டும்…!
2.வருமானம் வந்த பின் மாப்பிள்ளைக்கும் மருமகளுக்கும் செய்யட்டும்…! என்று
3.அந்த ஊக்கத்தை நாம் யாராவது சொல்கின்றோமா என்றால் இல்லை.

சாஸ்திரத்தையும் பேசுவோம். சட்டத்தையும் பேசுவோம். என் பையனுக்குச் செய்யவில்லை என்றாலோ என் மருமகளுக்குச் செய்யவில்லை என்றாலோ இன்று நான் பேசுவேன்.

ஆனால் என் பெண்ணுக்கு நான் செய்யவில்லை. என்னால் செய்ய முடியவில்லை என்றால் அவர்களைப் பிடித்துப் பேசுவோம். இதே மாதிரித்தான் மற்றவர்களும் பேசுகின்றார்கள்.

நியாயம் பேசுவது நாம் தான்….! நம்முடைய உணர்வுகளுக்கொப்ப “இப்படித்தான்” (மாற்றி) பேசுகின்றோம்.

ஏனென்றால் நம்மை அறியாமலே இந்த அசுர சக்திகள் தான் நம் நல்ல குணங்களை அழித்து கொண்டு இருக்கின்றது. இதைப்போன்ற நிலைகளில் இருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

ஒருவரால் முடியவில்லையா.., சரி இருக்கட்டும்…! அவருக்கு நல்ல வருமானம் வரட்டும்; நமக்குச் செய்யட்டும்; அவர்களுக்குள் அன்பு வளரட்டும்; பண்பினுடைய நிலைகள் வளரட்டும்; ஞானிகள் காட்டிய அருள் வழியில் சகோதர உணர்வுகள் வளரட்டும்; தீமைகள் நுழையா வண்ணம் இருக்கட்டும்; தீமையான உணர்வுகள் வளராது தடுக்கும் நிலையாக வரட்டும் என்கிற வகையில் யாராவது எண்ணுகின்றோமா என்றால் இல்லை.

இராமன் காட்டிற்குள் அலைந்தான் என்று இராமயாணத்தைப் பற்றிப் பேசுவோம்…! கண்ணன் எத்தகைய கீதா உபதேசம் சொல்கின்றான்…! என்று அதையும் கேட்போம்.

வியாசகர் எத்தனையோ பெரிய தத்துவத்தை வேதங்களை எழுதி வைத்தார். அதில் சாஸ்திர நுணுக்கங்கள் எத்தனையோ வைத்துள்ளார். அந்த வேத சாஸ்திரப் பிரகாரம் தான் எல்லாம் நடக்கின்றது என்று சொல்வார்கள்.

அதையெல்லாம் நாம் சீராகக் கேட்டுக் கொள்வோம். ஆனால் அவர்கள் வரதட்சணைக் கொடுமையில் இருந்து மீட்டுவதற்கு இல்லை.
1.பெண் வீட்டில் சரியாகச் செய்யவில்லை.
2.உடனே பெண்ணை அவர்கள் வீட்டிற்கு “விரட்டி விடு…” என்பார்கள்.

இன்றைக்குத் தங்கம் விலை ஜாஸ்தியாக இருக்கின்றது. அதே சமயத்தில் நான்கைந்து பெண்கள் வீட்டில் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் படுகின்ற அவஸ்தையைப் பார்த்தால் நரகலோகத்தில் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.

நாம் என்றைக்குக் கஷ்டத்திலிருந்து மீள்வது…? இந்தப் பிள்ளைகளை எல்லாம் எப்படிக் கரை சேர்ப்பது…? என்று இப்படிப்பட்ட வேதனையைத்தான் உருவாக்க முடிகின்றது.

எப்படியோ கடனை வாங்கிக் கல்யாணம் செய்து கொடுத்தாலும் அடுத்தாற்போல கடனைக் கட்ட முடியவில்லை என்றால் தற்கொலைக்குத் தான் செல்கிறார்கள்.

இந்த உணர்வின் தன்மை கொண்டு எங்கே போனாலும் நரக லோகத்திற்குத்தான் அழைத்துச் செல்லுகின்றது. இதைப்போன்ற நிலைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

மனிதன் என்று உருவாகிவிட்டாலே அவன் முழு முதல் கடவுள் தான். நம் உயிரைக் கடவுளாக மதிக்க வேண்டும்.

நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் கூர்மையாகி ஈஸ்வரா… என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி ஏங்குதல் வேண்டும்.

அந்த மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று கண்ணின் நினைவு கொண்டு உடலுக்குள் செலுத்த வேண்டும்

நம் உடலான இந்திரலோகத்தில் அந்த மெய் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்த்து தீமையற்ற உலகமாக உருவாக்கிடல் வேண்டும். இந்த இந்திரலோகத்திற்குள் தீமையான அசுர சக்திகள் நுழையாது தடுக்க அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் ஊடுருவச் செய்தல் வேண்டும்.

நாம் பிறரிடம் பேசினாலும் கேட்போருடைய நிலைகள் அவர்கள் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் நிலையாக அவர்கள் துன்பத்தை நீக்கும் நிலையாக நம் சொல்லும் செயலும் இருக்க வேண்டும்.

இப்படி ஒருவருக்கொருவர் நம்மை அறியாமல் சேர்க்கும் அந்த தீமையிலிருந்து விடுபட்டு இந்த மனித வாழ்க்கையில் எவ்வாறு
1.மகிழ்ச்சியாக வாழ வேண்டும்
2.சகோதர உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்
3.சகோதரத்துவத்தை வளர்த்திட வேண்டும் என்பதற்காகத்தான்
4.ஞானிகள் சாஸ்திரங்களை நமக்கு அமைத்துக் கொடுத்தார்கள்.

சப்தரிஷிகள் உபதேசித்து உணர்த்திய அருள் வழி எங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க அருள்வாய் ஈஸ்வரா.

“பூனைக்குக் கொண்டாட்டம்… எலிக்குத் திண்டாட்டம்…!” என்ற நிலைகளில் தான் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்

Image

deepavali-greetings

“பூனைக்குக் கொண்டாட்டம்… எலிக்குத் திண்டாட்டம்…!” என்ற நிலைகளில் தான் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்

 

தீபாவளி என்று வந்து விட்டாலே நிறையக் குடும்பத்தில் அன்று திண்டாட்டமாக இருக்கின்றது.

மகளைத் திருமணம் செய்து கொடுத்தாகி விட்டதென்றால் மருமகனையும் கூப்பிட வேண்டும் மகளையும் கூப்பிட வேண்டும். தங்கத்தில் செயினோ மோதிரமோ கொடுக்க வேண்டும். சேலை துணிமணிகள் கொடுக்க வேண்டும். இதெல்லாம் கட்டாயமாகிவிட்டது.

மரியாதைக்காகச் செய்ய வேண்டும் என்றாலும் குறைந்தது ஒரு பவுன் எடுக்க வேண்டும் என்றாலும் 25000 ரூபாய் ஆகிவிடும். அதனுடன் பட்டுச் சேலையும் எடுக்க வேண்டும் என்றால் அது ஒரு 10000 ரூபாய் ஓடிப்போய் விடும்.

எடுத்துக் கொடுக்கவில்லை என்றால் என்ன சொல்வார்கள்…? தீபாவளிக்கு என்ன செய்தார்..? உங்கள் அப்பா…! என்று அங்கே இரண்டு பேச்சுப் பேசுவார்கள்.

ஆகவே இப்படிப் பேச்சு இல்லாமல் இருக்க கடன் வாங்கியாவது அந்தத் தொல்லைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்னும் சில இடங்களில் கௌரவத்திற்கு ஒரு வாட்ச்… அப்புறம் ஒரு தங்கச் செயின்…! என்று வரிசையில் அடுக்கிக் கொண்டே போவார்கள். மருமகனுக்கு இப்படி மரியாதை செய்ய வேண்டும் என்பார்கள்.

1.”நரகாசுரனைக் கொன்ற நாள் தான் தீபாவளி” என்று சொல்லிக் கொண்டு
2.இருள் சூழ்ந்த நிலைகளை அந்த நரக வேதனைகளைத் தான்
3.தீபாவளி அன்றைக்கு அணைத்துக் கொள்கின்றோம்.

யாரும் இல்லை என்று மறுக்க முடியுமா…!

வேலை பார்க்கும் இடத்தில் தீபாவளிக்குப் போனஸ் வாங்குவதிலும் தகராறு. எப்படியோ வாங்கி வந்தவுடனே பட்டாசை வாங்கி வெடித்துத் தள்ளிவிட வேண்டும்.

அப்புறம் வட்டிக்குப் பணத்தை வாங்கி அவனுக்குக் கொடுத்தோம் இவனுக்குக் கொடுத்தோம் என்ற நிலையில் இது தனிக் கணக்கு.

பற்றாக்குறைக்கு கவனக்குறைவாகிப் போனது என்றால் பட்டாசு வெடிக்கும் பொழுது முகத்தில் பட்டுவிட்டது என்று டாக்டரிடம் போய் இன்னும் கொஞ்சம் வேதனைகளைச் சேர்த்துக் கொள்கின்றோம்.

1.தீபாவளி அன்றைக்கு பூனைக்குக் கொண்டாட்டம்….
2.எலிக்குத் திண்டாட்டம்…! என்கிற மாதிரித் தான் நாம் இருக்கின்றோம்.

இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றுக் கல்யாணம் செய்து கொடுத்திருந்தால் அவர்களுக்கு அந்தத் தீபாவளி திண்டாட்டம் தான். ஏனென்றால் தீபாவளி முடிந்த பின் வாங்கிய கடனைக் கட்ட முடியாத நிலை ஆகிவிடுகின்றது.

இந்த மாதிரி ஒவ்வொரு குடும்பத்திலேயும் தனக்கு வேண்டியதை “வரவுக்கு மீறிய செலவாக மாற்றி…” நமக்குள் துயரத்தை எடுத்துக் கொள்ளும் நாளாகத்தான் பண்டிகைகளை உருவாக்கி வைத்திருக்கின்றோம்.

அந்த நாளில் ஞானிகள் காட்டிய வழியில் மெய் உணர்வுகளைப் பெற்று வாழ்க்கையில் வரும் துயரத்தைத் துடைத்து சிக்கனமாக இருந்து இருள் சூழ்ந்த நிலைகளை அக்ற்றிச் சிந்திக்கும் திறனை ஒவ்வொருவரும் நாம் வளர்க்கின்றோமா…..?

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

ஞானிகள் தீப ஒளித் திருநாளைப் பற்றி மக்களுக்கு உணர்த்தியது என்ன…?

பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் கெட்டதிலிருந்து மீட்டிக் கொள்ளும் உடலாக நம்மை அமைத்துக் கொடுத்தது நமது கண்கள் தான்…!

தன்னைத் தாக்கும் தீமைகளிலிருந்து விடுபட “பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்ற நிலையில் கூர்மையாக உற்றுப் பார்த்து தன்னை மீட்டிடும் உணர்வுகள் வளர்ந்து… வளர்ந்து… கூர்மையாகி…! நாம் வலுவாக ஆனதற்குக் காரணமும் இந்தக் கண்கள் தான்…!

தன்னை மீட்டிக் கொள்ளும் உணர்வுகள் கூர்மையான பின் அதனின்று வலுவான நாற்றத்தைப் பிளந்து நல்ல சக்தியை நுகரும் வராகனாகின்றது.

தீமைகளைப் பிரித்து நல்லதை நுகரும் சக்தியாக வலுவான நிலைகள் கொண்டு உயிர் நம்மை மனித உடலாக உருவாக்கினாலும் அத்தகைய இருள் சூழா நிலைகள் பெற ஒவ்வொரு நிமிடமும் நமக்கு வழி காட்டியது இந்தக் கண்கள் தான்…!

இப்படியெல்லாம் நம்மை நமது கண்கள் காத்து வளர்ந்து வந்த நிலையில் மனித வாழ்க்கையில் நாம் சந்தர்ப்பத்தால் வரும் கொடிய தீமைகளிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்…?

தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற
1.அந்த மாமகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்
2.நம் “கண்ணின் நினைவாற்றலை…” விண்ணிலே கூர்மையாகச் செலுத்தி
3.அந்த உணர்வின் தன்மையை நுகர்ந்து (வராகனாக) நமக்குள் வலிமை பெற்றதாக ஆக்கி
4.நம் வாழ்க்கையில் வந்த அசுர சக்திகளைக் கொன்று
5.ஆறாவது அறிவின் துணை கொண்டு எந்தத் தீமையும் நமக்குள் இயங்காதபடி அடிமைப்படுத்தி
6.என்றும் நிலையான ஒளிச் சரீரம் பெறும் தன்மையை நினைவுபடுத்தும் நன்னாள் தான்…
7.ஞானிகள் உணர்த்திய தீப ஒளித் திருநாள்…!

ஒவ்வொரு மாதமும் மக்களை ஒருங்கிணைக்கச் செய்து மகிழ்ச்சியாக வாழச் செய்வதற்குத்தான் ஞானிகள் பண்டிகைகளை பன்னிரெண்டு மாதங்களிலும் கொடுத்தார்கள்.

இனியாவது நாம் அந்த ஞானிகள் காட்டிய அருள் வழிகளை இந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்..,!