தெய்வத்தை வணங்கச் செல்லும் ஆலயங்களுக்குள்ளும் தீவிரவாதம் வந்து விட்டது…!

kali-purush

தெய்வத்தை வணங்கச் செல்லும் ஆலயங்களுக்குள்ளும் தீவிரவாதம் வந்து விட்டது…!

 

மனிதனுக்கு மனிதன் ஒரு மதத்தின் அடிப்படையிலோ அல்லது மொழியின் அடிப்படையிலோ இனத்தின் அடிப்படையிலோ அந்த இனத்தின் கட்டுப்பாட்டுக்கு வரவில்லை என்று அறிந்து கொண்டால்
1.அந்த மத குருக்கள் காட்டிய நெறிப்படி அதைத் தவறு என்று சொன்னால்
2.அந்த இனத்தைச் சேர்ந்தவனே தீவிரவாதம் கொண்டு அவனைக் கொல்கின்றான்.

ஆண்டவன் என்ற நிலையில் பக்தி கொண்டு இருப்பினும் ஆண்டவனை வணங்கும் அத்தகைய ஆலயங்களிலும்
1.அங்கு வருவோருக்குத் தொல்லை கொடுக்கின்றார்கள்
2.அவர்கள் பொருளை அபகரிக்கின்றார்கள்
3.அந்தத் தெய்வத்தின் பொருளையும் அபகரிக்கின்றார்கள்.

அவன் உணர்வுகள் அதுவாகின்றது. அது போல ஆலயங்களில் தவறு செய்யக் கூடாது என்றாலும் சில கொலையாளிகளுக்கு அங்கு தான் சந்தர்ப்பம்… இடம்.. எல்லாமே…!

தெய்வத்தை வணங்கிக் கொண்டிருக்கும்போது கூட்டத்தில் தாக்கி கொன்று விட்டுச் சென்றால் “யார்..? எவர்…? என்று பார்க்க முடியாது என்று ஆலயங்களுக்குள்ளேயே இத்தகைய செயல்களைச் செய்கின்றார்கள்.

இதை எல்லாம் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்.

1.நாம் வழிபடும் தெய்வங்கள் நம்மைக் காக்கும் என்ற நோக்கத்தில் தான் ஆலயங்களுக்குச் செல்கின்றோம்…!
2..ஆனால் அந்தத் தெய்வம் எப்படி காக்கும்…?

ஞானிகளால் உருவாக்க்கப்பட்ட ஆலயங்களில்
1.அந்தத் தெய்வ குணத்தை நமக்குள் எடுத்து வளர்த்து
2.நன்மை செய்ய வேண்டும் என்ற அந்த உணர்வுகளை ஒரு மனிதனுக்குள் பாய்ச்சப்படும் போது
3.நம்முடைய சொல் அவனுடைய உடலில் பாய்ந்து அது தெய்வமாக இயக்கும் தன்மை வருகிறது
4.நம் செயல் தெய்வச் செயலாகின்றது.

தவறு செய்யும் நிலைகளிலிருந்து மீட்டிட அவன் அதை எடுக்கவில்லை என்றால் அவனுடைய குற்றமே ஆகும். ஆனால் நமக்குள் தீமை வராது பாதுகாத்துக் கொள்ளும் தன்மை வரவேண்டும்.

இன்று ஒவ்வொரு மதங்களிலும் எடுத்துக் கொண்டால் ஆலயங்களில் தீவிரவாதம் என்ற நிலைகள் கொண்டு
1.நான் வணங்கும் முறைகள் வேறு
2.நீ வணங்கும் முறைகள் வேறு என்று
3.ஆலயத்தில் தொழுது கொண்டு இருப்பவனையே சுட்டுக் கொல்கின்றனர்.

எல்லா மதங்களிலும் இத்தகைய தீவிரவாதங்கள் வந்து ஆண்டவனின் பெயரைச் சொல்லித் தான் கொலை களங்களை ஏற்படுத்துகின்றனர். மதங்களுக்குள் உள்ள இனங்களிலும் தன் இனத்தை அவமதிக்கிறான்.

ஆண்டவனோ கடவுளோ தெய்வமோ என்ற நிலை இருப்பினும் நல்லதைச் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களும்
1.அந்த தெய்வத்திற்கு மாறுபட்ட நிலைகளில் சிலர் செல்கிறார்கள் என்று அறிந்த பின்
2.தெய்வத்தின் உண்மை நிலையை உணர்த்திட
3.அந்த தெய்வத்தின் சக்தியை அவனுக்குள் பாய்ச்சி
4.அவனைத் தவறிலிருந்து திருத்தச் செல்லும் நிலைகளுக்கு மாறாக
5.அவனைக் கொன்று குவிப்பது என்ற நிலைக்கே செயல்படுத்துகின்றனர்.

மதங்கள் இவ்வாறு இயக்கப்பட்டு அரசியலிலும் தீவிரவாதம் என்ற நிலைகள் புகுத்தப்பட்டுவிட்டது.

அரசியல் பண்புகளைக் கெடுக்கின்றான் இவனை எப்படி வாழ விடுவது…? நமது அரசியலுக்கு இவன் இழுக்காக இருக்கின்றான். ஆகவே இவனைக் கொலை செய்ய வேண்டும் என்ற உணர்வு தான் வருகிறது.

நாட்டின் அரசியல் மாண்பைக் காக்க வேண்டும். தவறின் வழியில் செயல்படுபவனையும் நல்லவனாக ஆக்க வேண்டும் என்ற உணர்வுகள் எங்குமே தோன்றுவதில்லை.

இதைப் போல ஒவ்வொரு நொடியிலும் தீவிரவாதம் என்ற விஷத் தன்மைகள் அனைத்து மனித உடல்களிலும் புகுந்து விட்டது. குடும்பத்திலும் சரி… தொழிலும் சரி… பொது வாழ்க்கையிலும் சரி…! எல்லா இடங்களிலும் இந்த நிலை ஆகிவிட்டது.

குடும்பத்திற்குள் எடுத்துக் கொண்டால் ஒருவன் பிடிவாதமாக இருக்கும் போது
1.அவன் இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்…
2.”அவனைத் தொலைத்தால் தான் சரியாக இருக்கும்..!” என்ற உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்கின்றனர்.
3.உடல் பற்றுடன் இத்தகைய உணர்வுகளை எடுத்தோம் என்றால் இது நமக்குள் தீவிரவாதமாகி விடுகிறது.

தீவிரவாதமாக்கப்படும்போது சிவ தனுசாக மாறுகிறது. மீண்டும் பிறவிக்கு வரும் தன்மையே வருகிறது. இதைப் போன்ற நிலைகள் அது நமக்குள் இயக்காதபடி அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நமது வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் தீமைகளை அகற்றுதல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நாம் பருகி நம் ரத்த நாளங்களிலே கலந்து அந்த உணர்வின் தன்மையை வலிமையாக்கி விட்டால் மற்றவர்கள் சொல்லும் எந்த உணர்வுகளும் நம்மை இயக்காது.

நாம் வெளிப்படுத்தும் நல் உணர்வின் சொற்கள் நம்மைக் காக்கும். நம் உணர்வின் தன்மையை வலிமை ஆக்கும்.

1.குறுகிய காலமே வளர்ந்து வரும் நாம் பேரருள் உணர்வுகளை நமக்குள் பெருக்கி
2.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலை அடைவது தான்
3.நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழி.

Leave a Reply