“உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி… அதை மாற்றி அமைக்கும் திறன்…” மனிதனுக்கு மட்டும் தான் உண்டு

“உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி… அதை மாற்றி அமைக்கும் திறன்…” மனிதனுக்கு மட்டும் தான் உண்டு

 

உணர்வுடன் கூடிய எண்ணத்தால் ஞானத்தின் சக்தி கொண்டு… பக்தி என்ற முறைப்படுத்தி உயர் சக்தியை ஞான வழியின் ஜெபமாக்கி… நமக்கு மேல் உயர்ந்த சக்தி கொண்ட சப்தரிஷிகளின் அலையை நாம் எடுக்க எடுக்க… நற்சக்தியின் அமில குணங்கள் நமக்குள் வளர்ச்சியாகிப் பெருகும்.

அப்படிப் பெருகத் தொடங்கினால் உடலுடன் கூடிய உணர்வான
1.சோம்பல்
2,தூக்கம்
3.பசி
4.காம இச்சைகள்
5.உடல் கழிவுகளின் உந்தல்
6.உடலில் ஏற்பட்டுள்ள வியாதியின் வலிகள் என்ற இந்த ஆறு நிலைகளும்
7.உணர்வால் வெளிப்படும் நிலைதனை நம்மால் மாற்றி அமைக்க முடியும்.

தன் எண்ண பலத்தால் எத்தன்மையான சோர்வு வந்தாலும் எண்ணத்தின் நிலைக்கொப்ப “சோர்வை…” அகற்ற முடிகின்றது.

“தூக்கத்தையும்…” நம் வேலையின் நேரத்திற்கொப்ப உணர்வால் எடுக்கும் எண்ணம் கொண்டு மாற்றி அமைக்க முடிகின்றது.

எண்ணத்தால் வேறு ஒரு செயலில் உள்ள பொழுது “பசியையும்…” மாற்ற முடிகிறது.

உடல் “காம இச்சையையும்…” மனிதனால் இச்சைக்குகந்த நிலையில் செல்லாமல் ஒழுங்குமுறைப்படுத்திக் கொள்ள முடிகிறது.

அதே போல் “உடல் வியாதியையும்…” எண்ணத்தால் அவ்வலியையே மறக்கக்கூடிய தன்மை மனிதனுக்கு உண்டு.

உணர்வால் உந்தப்படும் உடலின் இச்சைகளையே ஒழுங்குநிலைப்படுத்தி
1.உணர்வின் தன்மையில் செல்லாமல்
2.ஞானத்தால் கால நிலை அனுசரித்து
3.உடல் பிம்ப உணர்வு உந்தலின் அலையையே
4.எண்ணத்தால் ஒழுங்குபடுத்துகின்றான் மனிதன்.

எண்ணத்தைக் கொண்டு எச்செயலையும் செய்விக்கும் மனிதனைப் போல் மிருகங்களின் நிலைக்கு இல்லை.

அதன் உடலில் ஏற்படும் உணர்வின் உந்தலானது ஞானத்தின் எண்ணம் கொண்டு மாற்றியமைக்கக்கூடிய பக்குவமும் செயல் திறனும் மிருகங்களுக்கு இல்லாததனால்தான் மனிதனை ஒத்த உணர்வை மாற்றியமைத்து வாழ்க்கை என்ற “சமுதாயப் பிணைப்பு” ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆனால் மனிதன் தன் எண்ணத்திற்குகந்த வளர்ச்சி செயல் ஞானத்தைச் செய்விக்கின்றான். உணர்வை மாற்றி அமைக்கக்கூடிய எண்ணம் செயல் மற்ற இனங்களுக்கு இல்லை.

1.உணவைத் தேடி உண்டு கழித்து உறங்கி காம இச்சையின் இனப் பெருக்க உணர்வும்…
2.உடல் பிணியில் உண்டாகும் அவஸ்தையில் சர்வ சதா அவ்வலியின் தன்மையுடன் ஒன்றியும்…
3.உணர்வை மாற்றியமைக்க முடியாத நிலை தான் மற்ற இனங்களுக்குண்டு.

மனிதனின் ஞானம் எவ்வுணர்வையும் கால நிலை சூழ்நிலை இதன் வட்டத்தைக் கொண்டு ஒழுங்குமுறைப்படுத்தித் தன் ஞானத்தால் உணர்வின் எண்ணத்தையே செயல்படுத்தும் திறன் பெற்றது.

உடலில் வரும் வலியையும் வேதனையும் போக்க எண்ணத்தால் நாம் செய்ய வேண்டிய பயிற்சி

உடலில் வரும் வலியையும் வேதனையும் போக்க எண்ணத்தால் நாம் செய்ய வேண்டிய பயிற்சி

 

நம் உடலுக்குள் எத்தகைய விஷம் கொண்ட அணுக்கள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை அங்கே செலுத்தச் செலுத்த அந்த அணுக்களை மாற்றி அமைத்து விடலாம்.

நம் உடலில் இடுப்பு வலியோ முதுகு வலியோ எலும்புகள் வலியோ அல்லது தசை மண்டலங்களில் வலியோ அதிலே வேதனைகள் வந்தால்
1.கண்ணின் நினைவு கொண்டு அந்த வலி இருக்கும் இடத்தில் எல்லாம்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளைச் செலுத்தி வலி நீங்கி அங்கே நலமாகும் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணிப் பழகுதல் வேண்டும்.

ஒரு சிலருக்கு இருதய வலி இருக்கலாம் சிலருக்கு குலை நோய் இருக்கலாம் சிலருக்கு வயிற்றுக்குள் நோய் இருக்கலாம் சிலருக்கு கர்ப்பப்பையில் வலி இருக்கலாம்.

அங்கங்கே வலி வருவதை நம்முடைய கண்ணால் தான் அதை உணர முடிகின்றது. அதன் தொடர் கொண்டு “இன்ன இடத்தில் இப்படி வலிக்கிறது…” என்பதை உணர முடிகின்றது.

ஆகவே நாம் கண்ணிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து கர்ப்பப்பையில் குறைபாடுகள் இருந்தால் அங்கே நினைவைச் செலுத்தி அங்கே இருக்கக்கூடிய கட்டிகள் கரைய வேண்டும்… கர்ப்பப்பை சீராக வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

உதிரப்போக்குகள் நிற்காது இருந்தால்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அந்தக் கர்ப்பப்பையை உருவாக்கிய அணுக்கள் பெற வேண்டும்.
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரருள் பெற்று இந்தப் பை சீராக உருவாக வேண்டும்
3.உதிரப் போக்கு நீங்க வேண்டும் உடல் நலம் பெற வேண்டும் என்று
4.பெண்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவையாவது செய்து செயல்படுத்த வேண்டும்.
5.அதிலே பலவீனமான நிலைகள் மாறும்.

கர்ப்பப்பையை உருவாக்கி அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வுகள் பெறும் பொழுது அதில் உருவான விஷமான அணுக்களின் தன்மை மாறும். நல்ல அணுக்களை அங்கே நாம் உருவாக்க முடியும்.

இப்படி நம் உடல் உறுப்புகளில் எந்தப் பாகத்தில் வலி வந்தாலும் இருதயமோ குடல் பாகங்களோ நுரையீரல் போன்ற உறுப்புகளில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும் என்று கண்ணின் நினைவை உறுப்புகளில் செலுத்திக் கொண்டே வரவேண்டும்.

அப்பொழுது அங்கே இருக்கக்கூடிய குறைபாடுகள் அகன்று நல்ல அணுக்களாக உருவாக்க முடியும்.

ஆனால் வலியோ வேதனையோ நோயோ வரக் காரணம் என்ன…?

நாம் நல்லவர்களாகத் தான் இருக்கின்றோம். இருந்தாலும் பிறருடைய வேதனைகளைக் கேட்டு நுகரும் பொழுது நம் உடல் உறுப்புகளுக்குள் அந்த வேதனை பரவி உடல் உறுப்புகளில் அதே வலியும் வேதனை உருவாகின்றது.
1.கண்ணால் பார்த்துக் கவர்ந்த நுகர்ந்த அந்த உணர்வுகள்
2.நம் இரத்தத்தில் கலக்கப்படும் போது இப்படித் தீமைகள் பரவி விடுகின்றது.

கார்த்திகேயா…! எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளக்கூடிய சக்தியாக நமது ஆறாவது அறிவு இருக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நமது ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கி
2.உயிரான ஈசனிடம் அதைப் பொருதப்படும் பொழுது
3.இந்த உணர்வின் இயக்கமாக உயிரிலேயும் வலுப் பெறுகின்றது.

ஏற்கனவே நாம் அறியாத நுகர்ந்த வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் சோர்வு வேதனை இவைகளை உள்புகாதபடி அகற்றி விடுகின்றது அல்லது மாற்றி விடுகின்றது.

இப்படி நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு நம் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை உணவாகக் கொடுத்து
1.கண்ணின் நினைவு கொண்டு அங்கே கட்டளை இடப்படும் போது இந்த உறுப்புகள் வலுப்பெறுகின்றது.
2.தீமையிலிருந்து விடுபடக்கூடிய சக்தியும் நோயிலிருந்து விடுபடக்கூடிய சக்தியும்
3.ஆரோக்கியமாக வாழும் நிலைகளும் நாம் பெறுகின்றோம்.

அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லா அணுக்களிலும் சேர்க்கச் சேர்க்க துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து வாழும் அந்தத் தகுதியும் நாம் பெறுகின்றோம்.

இதே மாதிரி யாம் பயிற்சி கொடுத்த முறைப்படி செய்து பழகுங்கள்.

நாற்றமாகும் நம் உடலைத்தான்… ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

நாற்றமாகும் நம் உடலைத்தான்… ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

 

நாம் இப்பொழுது “இது என் உடல்… நமது உடல்…” என்று நினைக்கின்றோம்.
1.நம் உடலுக்குள் எத்தனையோ விதமான உணர்வின் அணுக்கள் உண்டு….
2.அதனின் மலமே நம் உடல்…! அதாவது “அணுக்களின் மலம் தான்” இந்த உடல். தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த உயிரான ஈசன் உடலை விட்டுப் போய்விட்டால் இந்த உடலான சிவம் சவமாகி விடுன்றது.

நாம் எண்ணும் உணர்வுகள் ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என்று நம் உடலாக மாறிக் கொண்டேயுள்ளது. ஆனால் உயிரின் இயக்கத்தால் தான் நாம் இயங்குகின்றோம்.

உயிரின் இயக்கம் இல்லை என்றால் நம் உடலிலுள்ள அணுக்களிலும் இயக்கம் இல்லை.

எத்தகைய உணர்வை நாம் சுவாசித்து இந்த உடலில் வளர்த்துக் கொண்டோமோ அந்த அணுக்களின் மலமே நம் உடலாகின்றது.

அந்த அணுக்களின் மலமாக நம் உடலானாலும் இந்த உடலை விட்டு உயிர் சென்று விட்டால் நம் உடலையே தின்னும் அணுக்களாக மாறி விடுகின்றது.

அதாவது…
1.நம் உடலை உருவாக்கிய அதே அணுக்கள் உயிர் வெளியில் சென்றபின்
2.நம் உடலை உணவாக உட்கொள்ளும் அணுவாக மாறிவிடுகின்றது.

இப்படி ஆன அந்த அணுக்களின் மலம் வெளிப்படும் பொழுது நாற்றமாகின்றது.

முதலில் நுகர்ந்த உணர்வின் மணம் அந்த உணர்ச்சிக்கொப்ப நம் உடலாக நல்ல உடலாகின்றது. ஆனால், உயிர் வெளியே சென்று விட்டால் அதே அணு ஜீவ அணுவாக இருப்பது உயிரணுவாக மாறுகின்றது.

உயிரின் துடிப்பால் இயக்கும் அணு “ஜீவ அணு”. அது நுகர்ந்த உணர்வின் மலம் நம் உடலாகும் பொழுது சிவமாகின்றது.

ஆனாலும் இந்த உயிர் உடலை விட்டுச் சென்றபின் இந்த ஜீவ அணு உயிரணுவாக மாறுகின்றது. உயிரணுவாக மாறிய பின் எந்த ஜீவ அணு நம் உடலை உருவாக்கியதோ அந்த உடலையே உணவாக உட்கொள்ளும் நிலை வருகின்றது.

அது உணவாக உட்கொண்டு வளர்ந்த பின் உயிரணுவான பிற்பாடு அதன் மலத்தை வெளியிடும் பொழுது நாற்றம் சகிக்க முடியாது. இறந்த பின் உடலிலிருந்து நாற்றம் வருவதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த உடலாக நாம் எந்தெந்த குணத்தை நாம் எடுத்தோமோ அதற்குத்தக்க நம் உடலில் “நல்ல மணங்களாக” இருக்கின்றது. ஆனால்…
1.அதே உடலை இந்த உயிரணு நுகர்ந்து அது உணவாக உட்கொண்டால் நாற்றமாகின்றது
2.நம்மால் பக்கத்தில் இருக்க முடியவில்லை.

எத்தனை வகைச் செடிகளை இது கவர்ந்து அந்த அணுக்கள் அதன் உணர்வின் தன்மையை நம் உயிரணு கவர்ந்து ஜீவ அணுக்களாக மாறியதோ இது உயிர் சென்ற பின் இந்த உடலை இந்த ஜீவ அணுக்கள் உயிரணுக்களாக மாறி அதன் உடலாகிப் புழுக்களாகி விடுகின்றது.

மனிதனுக்குள் எத்தனை விதமன வேதனைகளைப் பட்டோமோ எத்தனை வேதனைப்படுத்தினோமோ எத்தனை துயர்படுத்தினோமோ இந்த உணர்வின் அணுக்கள் புழுவாகி மலமாகும் பொழுது அந்த நாற்றமாக வெளிப்படுகின்றது.

1.இப்படி நாற்றமாகும் உடலைத்தான்…
1.நம் வாழ்நாளில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் நாம் பெரிதாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்
3.யாரும் இல்லை என்று மறுக்க முடியுமா?

என் அம்மா என்போம்… அப்பா என்போம்… கணவன் என்போம்… மனைவி என்போம்… அண்ணன் தம்பி தங்கை… இன்னும் என்னென்னவோ சொல்வோம்.

உயிர் வெளியேறி விட்டால்
1.எவ்வளவு நேரம் அந்த உடலை வைத்திருக்கின்றோம்…?
2.”உடலை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்…?” என்று தான் உடனே கேட்கின்றோம்.

அந்த மெய் ஞானிகள் காட்டியது உயிரே கடவுள்..! அவனின்றி ஒரு அணுவும் அசையாது.
1.ஆனால் உயிரைப் பற்றி நாம் சிறிதளவாவது… சிறிது நேரமாவது சிந்திக்கின்றோமா…?
2.“அவனுடன் அவனாக” (உயிருடன்) – “அவனாக ஆகும் நிலையை” நாம் எய்த வேண்டும்
3.இதைத்தான் கோவில்களில் மனித உடலைப் பெற்ற நீ… “தெய்வமாக ஆகு…!” என்று தெளிவாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஆனால் நாம் இன்றும் கடவுளைத் தேடிக் கொண்டே தான் இருக்கின்றோம்…!

உயிர் காக்கும் நண்பனாக இருந்தாலும் பரிதாபப்படக் கூடாது

உயிர் காக்கும் நண்பனாக இருந்தாலும் பரிதாபப்படக் கூடாது

 

இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப்பொழுதும் எடுக்கக்கூடிய உணர்வின் எண்ணச் சுவாசமானது பிறர் ஈர்ப்பில் பாவம் என்ற பரிதாபச் சுழற்சியில் தன் எண்ணத்தைச் செலுத்தாமல் இருத்தல் வேண்டும்.

1.தாயாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும்
2.கணவன் மனைவி குழந்தைகள் என்று இருந்தாலும்
3.சகோதர பந்தபாசங்கள்… உயிர் காக்கும் நண்பனாக இருந்தாலும்
4.ஆண்டவனாக இருந்தாலும்…
5.அவர்கள் எடுக்கும் உணர்வின் எண்ணத்தை அவர்களுக்கு ஏற்படும் இன்னலைக் கண்டு உடல் நலக் குறைவு எதுவாக இருந்தாலும்
6.அவர்கள் மேல் பரிதாப எண்ணத்தைச் செலுத்தி அவர்கள் பரிதாப எண்ணத்தில் நாம் சிக்காமல்
7.சுயநலம் கொண்ட தன் நலமுடன் பிறரின் நலம் காண நம் உணர்வின் எண்ணச் செயல் பட்டு
8.அவர்கள் அலை நம் மேல் சாடாமல் நம் அலையின் சக்தியை அவர்கள் மேல் பாய்ச்சி
9.அவர்கள் நல்ல நிலை பெற வேண்டும்…! என்ற உயர்வான சக்தி அலையைத்தான் நம் எண்ணத்தில் எடுக்க வேண்டும்.

பரிதாபப்பட்டுச் செய்யும் தர்மம்… பரிதாப அலை உணர்வை நம்மை அறியாமல் நம் எண்ணம் எடுப்பதினால்… பரிதாப எண்ணத்திற்குரிய அலை குண அமிலமாக… “இவ்வுடல் பிம்ப அமிலம் அவர்கள் எடுத்த அலைத் தொடரின் ஈர்ப்பில் சிக்கிவிடுகின்றது…”

ஆக நம் உணர்வுடன் அது கூடி நம் எண்ணமே அச்சுழற்சி அலையுடன் சென்று நாளாவட்டத்தில் அவ்வுணர்வின் “பரிதாப நிலைக்கு நாமும் செல்லக்கூடிய நிலை…” ஏற்பட்டு விடுகிறது.

1.உணர்வின் எண்ணத்தால் எடுக்கும் செயலின் ஈர்ப்பானது உடனே நம்மைச் சாடும்.
2.இரத்தத் தொடர்பு கொண்டவர்களின் அலைத் தொடர் “இன்னும் வேகமாக…!” நம் உணர்வுடன் ஏறிவிடுகின்றது

வைத்தியர்கள் மற்றவர்களுக்குத் தன் உணர்வின் எண்ணத்தைச் செயல் கொண்டு செய்விக்கும் மருத்துவத்தினால் வியாதியஸ்தர்களின் ஈர்ப்பில் பெரும்பகுதி சிக்க மாட்டார்கள்.

அவர்கள் சொல்லும் அந்த வியாதிக்குத் தக்கவாறு… “தான் செய்ய வேண்டிய மருத்துவ ஞான அலையை உணர்ந்து” அதன் வழியில் செய்யப்படும் மருத்துவத்தால் அவர்களுக்குக் குணமாக வேண்டும் என்ற செயலின் நிலைக்கொப்ப வைத்திய முறையைக் கடைப்பிடிக்க முடிகின்றது.

1.நோயாளிகளின் ஈர்ப்பில் சிக்காமல்
2.அவர்கள் படும் இன்னலின் பரிதாபம் கொள்ளாமல்
3.மருத்துவத்தால் மாற்றியமைக்கலாம் என்ற உணர்வுடன் செய்யப்படும் நிலைக்கொப்ப
4.பிறர் ஈர்ப்பும் இத்தகைய மருத்துவரைச் சாடுவதில்லை.

அப்படிப்பட்ட மருத்துவரால் செய்யப்படும் செயல் குணமும் நலம் பெற வழி கொள்கின்றது.

ஆனால் அதுவே தன் குழந்தை தன் தாய் தந்தையர் என்ற சுற்றத்தில் உள்ளவர்களின் நிலைக்காகச் செய்யப்படும் மருத்துவத்தில் பயம் கலந்த உணர்வு கூடி விடுகிறது.

அவ்வாறு கூடுவதனால்… உணர்வின் எண்ணம் பாசம் என்ற பரிதாப அலையை எடுக்கும் பொழுது தன்னுடைய செயலில் தடுமாற்றம் ஏற்படுகின்றது.

ஆகவே…
1“உணர்வின் எண்ண ஒலிக்கு உள்ள உண்மையை உணர்ந்து…!”
2.ஒவ்வொருவரும் பிறர் அலையின் ஈர்ப்பில் சிக்காமல்
3.சுயநலம் என்ற தன் நல வளர்ப்பால் பிறர் நலத்தை வளர்க்கக்கூடிய வளர்ப்பாக்குங்கள்.

உணர்வின் எண்ணம் உயர் ஞான சக்தியின் தொடர்புடன்… நமக்கு மேல் சக்தி கொண்ட நமக்குச் சித்தர்களினால் வழிப்படுத்திச் சென்ற சக்திகளின் தொடரை ஜெபம் கொண்டு “ஒவ்வொரு வழியிலும் உணர்த்தி வரும்… முன்னோர்களின் தொடர் அலையை எடுக்கப் பழகுங்கள்…!”

குறைகளைக் காணும்போது அதை அறிவிப்பாக (INTIMATION) மட்டும் எடுத்துக் கொண்டு “நீக்கும் வழியைத் தான் நாம் பார்க்க வேண்டும்”

குறைகளைக் காணும்போது அதை அறிவிப்பாக (INTIMATION) மட்டும் எடுத்துக் கொண்டு “நீக்கும் வழியைத் தான் நாம் பார்க்க வேண்டும்”

 

வெறுப்பு வேதனை கோபம் என்ற நிலையில் பிறரைக் குறை கூறும் உணர்வுகளைத் தான் நாம் இன்று அதிகமாக வளர்த்திருக்கின்றோமே தவிர… குறைகளை நீக்கும் உணர்வுகளை நாம் வளர்க்கவில்லை.

சாக்கடைக்குள் இருக்கும் நாற்றத்தைப் பிளந்து அதில் இருக்கும் நல்லதை நுகரும் வராகனைப் போன்று (பன்றி)
1.நாம் பிறருடைய குறைகளைக் கண்டுணர்ந்தாலும் அதைப் பிளந்து விட்டு
2.அவர்களை அறியாது சேர்ந்த அந்தக் குறைகள் நீங்க வேண்டும் என்ற நல்ல உணர்வை நுகரப் பழக வேண்டும்.

தெளிந்துணர்ந்து செயல்படும் அந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்கப்படும் பொழுது இந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் விளைந்து நம் சொல்லின் உணர்வுகளை அங்கே செலுத்தப்படும் பொழுது குறைகளை நீக்கிடும் சக்தியாக அங்கே தோன்றுகின்றது.

இதை எனக்குத் (ஞானகுரு) தெளிவாக்குவதற்குத் தான் சாக்கடை அருகே அமரச் செய்து சாக்கடை உபதேசமாகக் கொடுத்தார் குருநாதர்.

உனக்குள் வரும் தீமைகளை அகற்றிடும் சக்தியாகவும்… தீமைகள் உனக்குள் புகாத நிலையும் பெற வேண்டும் என்பதற்காகத் தான் சாக்கடை அருகே அமரச் செய்தேன்.

அப்போது நீ எதை நுகர்கின்றாய்…? அந்தச் சாக்கடையை எண்ணி ஐய்யய்யே…ஐய்யய்யே.. என்று நினைக்கும் போதெல்லாம் உனக்குள் அந்தச் சாக்கடை நாற்றமே வருகின்றது.
1.ஆனால் இந்த நாற்றத்தை நீக்க வேண்டும் என்று நீ எண்ணும் பொழுது
2.அதை நீக்கும் எண்ணங்களாக உனக்குள் வளர்கின்றது.

இதைப் போன்று தான் நீ யாரைக் கண்டாலும்… எவரைக் கண்டாலும்… அங்கே குறைகள் எதுவாக இருந்தாலும்… அந்த மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்று உனக்குள் ஏற்றுக் கொண்டு
1.அந்த மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும்
2.அவர் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.மெய்ப் பொருள் கண்டுணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்று நீ எண்ணுவாய் என்றால்
4.உனக்குள் அறிவித்த இந்த உணர்வுகள் “மெய்ப்பொருள் காணும் நிலையாக உன்னிலே வரும்…” என்று உணர்த்தினார் குருநாதர்.

ஆகவே நாம் இந்த மனித வாழ்க்கையில் பிறருடைய குறைகளைக் காண… அது நமக்குள் அறிவிக்கச் செய்கின்றது
1.அறிவிக்க மட்டும் தான் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.அதற்கு அடுத்து அதைப் பயன்படுத்தக் கூடாது..

ஏனென்றால் அறிவிக்கச் செய்யும் நிலையைத் திரும்பத் திரும்ப எண்ணினால் என்ன ஆகும்…?

இப்படிச் செய்தான்… அப்படிச் சொன்னான்… அப்படிச் செய்தான்… இப்படியே செய்து கொண்டிருக்கின்றான்…! என்று எண்ணும் பொழுது
1.அந்த அறிவிக்கும் நிலை நமக்குள் எதைத் தவறு என்று காட்டியதோ
2.அந்தத் தவறின் உணர்வுகளை நமக்குள் விளைய வைத்து
3.நம்மைத் தவறு செய்வோராகவே வளர்த்து விடும்.

அதற்குப் பதிலாக “தவறை நீக்கும் நிலைகளைக் கொண்டு வந்தோம்…” என்றால் அது தெளிவாக இருக்கும்.

ஏனென்றால் குறையே இல்லாத மனிதர்கள் எவரும் இல்லை.

ஒரு மனிதனுடைய சந்தர்ப்பம் குறையான உணர்வுகள் வரும் பொழுது… அதுவே இயக்கச் சக்தியாக இயக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து நாம் எவ்வாறு விலகிச் செல்ல வேண்டும்…?
2.குறைகளை எப்படி அகற்ற வேண்டும்…? என்று
3.அந்த அருள் ஞானிகள் உணர்வை வலுவாக ஏற்று நாம் எண்ணுவுமேயானால்
4.”குறைகளை அகற்றிடும் சக்தியாக நாம் மாறுகின்றோம்…”

ஆகவே நாம் யாருடன் பழகியிருந்தாலும் அவரின் உணர்வு நமக்குள் வந்தாலும் அவர் அறியாமல் வந்த தீமைகள் நீங்கி… பொருளறிந்து செயல்படும் ஆற்றல் அவர் பெற வேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது இருளை நீக்கிடும் நிலையாக… “ரிமோட் கண்ட்ரோல்…” போல் வேலை செய்யும்.

டி.வி. மற்றும் இது போல் உள்ள சாதனங்களில் மூடி மறைத்திருப்பதை “நாம் அந்த சுவிட்சைப் போடும்போது…” தெளிவாகத் தெரிகின்றது. அந்த படங்களைத் திறந்து கவர்ந்திடும் நிலையாக ஆக்குகின்றது.

இதைப் போன்று தான்
1.அருள் ஞானிகள் உணர்வினை நாம் எண்ணும் பொழுது
2.எல்லோருக்கும் அது கிடைக்க வேண்டும் எண்ணத்தை நமக்குள் கொண்டு வரும் பொழுது
3.மெய்ப் பொருளைக் கண்டுணரும் நிலைகள் “ரிமோட் கண்ட்ரோல்” ஆக நம்மை அங்கே அழைத்துச் செல்லும்
4.நம் சொல்லைக் கேட்பவருடைய நிலைகளும் அங்கே இயக்கும்
5.குறைகளை மாற்றி அமைக்க இது உதவும்.
6.நல்ல குணங்களை நமக்குள் தெளிந்து கொள்ளும் நிலையாகவும் வருகிறது.

இதைத்தான் “மகா சிவன் இராத்திரி – நீ விழித்திரு…!” என்று சொல்வது.

உருவாகும் சக்திக்கே “சுயநலம் தான் காரணம்…”

உருவாகும் சக்திக்கே “சுயநலம் தான் காரணம்…”

 

1.தன்னலத்தை வளர்த்துத் தான் பிற நலத்தை வளர்க்க முடியுமே அன்றி
2.பிறர் நலத்தால் தன் நலம் என்றுமே வளராது.

உருவாகும் சக்திக்கே சுயநலம் தான் காரணம்…! ஜீவ சக்தி கொண்ட துடிப்பனைத்திற்குமே சுயநிலையுடன் கூடிய தன்னலம் கொண்ட சுய நலம் உண்டு.

சுயநலமில்லா எச்சக்தியும் வளர முடியாது. உணர்வின் எண்ணத்திற்கே சுயநலம் உண்டு.

1.சுயநலம் கொண்டு தான் முருகனைப் படைத்த போகனும் செயல் கொள்கின்றான்
2.வெங்கடாசலபதியைப் படைத்த கொங்கணவனும் செயல்படுகின்றான்.

சூரியனாக உருளும் சூரிய தேவனின் சக்தியும் சுயநலம் கொண்டு தன் வளர்ப்பைத் தான் ஈர்த்துப் பிற மண்டலங்களுக்குச் சூரியனின் சக்தி செல்கிறது.

மிதந்து கொண்டேயுள்ள இப்பேரண்டத்தில் உருண்டோடுகின்ற மையப்புள்ளியாக தன் சுயநல வளர்ப்பின் சக்தி கொண்ட பெரிய மண்டலமான சூரிய மண்டலம் தன் வளர்ப்பின் சக்தி வளர சூரியனின் குடும்ப மண்டலமாக உள்ள நாற்பத்தியேழு மண்டலங்களையும் தன் ஈர்ப்பின் வட்டத்தின் சுழற்சியுடன் வளரவிட்டுக் கொள்கிறது.

வளர்ந்த மண்டலங்களின் அமில சுழற்சி கொண்ட அலையைச் சூரியன் தனக்கு உணவாக எடுத்துத் தன் வளர்ப்பில் தன்னைச் சார்ந்துள்ள பிற மண்டலங்களையும் வளர்க்கச் செய்கிறதேயன்றி சுயநலமின்றிப் பிற நலமாக எதுவும் செயல்படவில்லை.

சூரியனானாலும் சரி… வளர்ந்தோடும் மற்றெல்லா மண்டலங்களும் சரி… சப்தரிஷிகளானாலும் சரி… சப்தரிஷியின் தொடர் கொண்ட சகல ஜீவ உணர்வு உயிரணுக்களும் சரி… எல்லாமே சுயநலத்தின் தொடர் படைப்புத்தான்.

ஆதிசக்தியின் சக்தி என்கிறோம்…!
1.அச்சக்தியே ஆக்கல் காத்தல் மாற்றல் என்ற சுழற்சி சுயநலம் கொண்டு தான் படைக்கின்றான்
2.படைப்பின் பலன் காணுகின்றான்
3.மீண்டும் படைப்பின் படைப்பையே உருவாக்க படைத்ததை மாற்றி மாற்றி அழிக்கின்றான்.
4.உரு மாறி மாறி சக்தி நிலை செயல்பட்டால் தான் சக்தியின் சக்திக்கே சக்தி கூடுகின்றது,

ஒன்றான சக்திக்கு ஜீவன் ஏது…?

ஒன்று ஒன்றுடன் சேர்ந்து இரண்டு ஒன்றாகி… ஒன்றுடன் பிறிதொன்று சேர்ந்து இரண்டாகி.. ஒன்றாகி… இரண்டாகி… ஒன்றாகி…
1.சுயநலம் கொண்டு கருவாகும் சக்தி அலை இருந்தால் தான்
2.படைப்பின் பொருள் வளர்ந்து கொண்டே இருக்கும்.

சுயநலம் கொண்ட வாழ்க்கை தான் மனித வாழ்க்கை.

சுயநலம் கொண்டு பிறர் நலம் காணுங்கள். ஆக… தன் வளர்ச்சியைக் கொண்டு தான் பிற வளர்ச்சியை நிச்சயம் வளர்க்க முடியும்…!

பெற்ற உண்மைகளை யாருக்குச் சொல்ல வேண்டும் என்று தெரியுமா…?

பெற்ற உண்மைகளை யாருக்குச் சொல்ல வேண்டும் என்று தெரியுமா…?

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எம்மைப் பல இடங்களுக்கு நேரடியாகவும் சூட்சமமாகவும் அழைத்துச் சென்று பல உண்மைகளை உணர்த்தினார்… காட்டினார்.

அதைப் போல
1.ஒவ்வொரு மெய் ஞானியும் எதன் வழி கொண்டு மெய் ஞானத்தின் மூலக்கூறுகளை அறிந்தார்கள்…? என்று
2.”அக்காலங்களுக்கே அழைத்துச் சென்று…” அந்த உணர்வுகள் பரவியிருப்பதையும் நுகரச் செய்து அறியும்படி செய்தார்.

அவர்கள் மனிதனாக வாழும்போது வரும் இன்னல்களிலிருந்து விடுபடும் ஆற்றல்களைப் பெற்று இன்று விண்ணிலே ஒளியின் சுழன்று கொண்டிருப்பதையும் உணர்த்தினார்.

இதை எல்லாம் அவர் காட்சியாகவும்… உணர்வுப் பூர்வமாகவும் அனுபவமாகவும் எனக்குக் காட்டினார். இயக்கத்தின் உண்மையை அறிந்து கொண்டேன்.

குருநாதர் கொடுத்தார்…!
1.என்னாலும் அதைப் பார்க்க முடிந்தது.. அறிய முடிந்தது… உணரவும் முடிந்தது
2.அந்த மெய் ஞானிகள் பெற்ற ஆற்றலையும் பெற முடிந்தது… பெற்றேன்.

அவ்வாறு யாம் பெற்ற இந்த நிலைகளை யாருக்குச் சொல்ல வேண்டும் என்று தெரியுமா…?

1.என்னுடன் சீடர்களாக வந்து நான் சொல்கிறபடியெல்லாம் கேட்கின்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்
2.அவர்கள் ஒழுக்கமாக வருகின்றார்களா…? இல்லையா…! என்று பார்த்து அதற்கப்புறம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
3.சீரான நிலைகளில் வழி நடப்பதற்கு வரம்புகளை விதித்து, கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து அந்தக் கட்டுப்பாட்டின்படி வருகின்றார்களா..? இல்லையா..! என்று பார்க்க வேண்டும்.
4.உண்மைகளை எல்லாம் சொல்லிப் பதிவாக்கி அதன்படி நடப்பார்களா இல்லையா என்று தெரிந்து கொண்டு பல தடவை இழுத்தடித்த பின்பு மெம்பராக்க வேண்டும்.
5.கடைசியாக நான் இதிலிருந்து மாறவே மாட்டேன் என்று சொல்லி “சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்…”

இப்படிச் சத்தியம் செய்து கொடுத்தவர்களுக்குத் தான் மற்ற ஸ்தாபனங்களில் அவர்கள் கற்றுக் கொண்ட நிலைகளைக் கொடுப்பார்கள். ஒரு ஸ்தாபனத்திற்குள் (உள்ளுக்குள்) போனால் மாற மாட்டேன் என்ற வாக்கினை முதலில் வாங்கிக் கொள்வார்கள்.

உங்களிடம் இதையெல்லாம் நான் வாங்கவில்லை. குருநாதர் அப்படிச் செய்யச் சொல்லவில்லை.
1.உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கச் சொன்னார்
2.உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கச் சொன்னார்
3.ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயங்கள் பரிசுத்தம் ஆகவேண்டும் என்று “நீ தூய்மைப்படுத்து” என்றார்.
4.அவ்வாறு நீ தூய்மைப்படுத்தினால் உன் உயிரான ஈசன் உனக்குக் கூலி கொடுப்பான் என்றார்.

“அவர் காட்டிய வழியில்… அவர் சொன்ன முறைப்படித்தான்… அவர் இட்ட கட்டளைப்படித்தான்… இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்…!”

மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டால் எதையுமே சீராக்க முடியும்

மகரிஷிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டால் எதையுமே சீராக்க முடியும்

 

நம் பூமி இல்லாவிட்டால் நாம் ஏது…? நம் பூமியையே வளர்க்கும் சூரியனின் சக்தி இல்லாவிட்டால் நம் பூமி தான் ஏது…?

சூரியனுக்குச் சக்தி தருவது சூரியனைச் சுற்றியுள்ள 47 மண்டங்கள் தாம். 47 மண்டலங்களின் துணையுடன் இயங்கும் சூரியன் தன் அலையைக் கொண்டு பிற மண்டலங்களின் அலையை எடுத்துத் தான் வளர்ந்து பிற மண்டலங்களையும் வாழ வைக்கின்றது.

சூரிய அலையை ஈர்க்கும் மண்டலமாக நம் பூமியின் ஜீவன் உள்ளது.
1.சூரிய மண்டலத்திலிருந்து வெளிப்படும் அலையைக் கொண்டு
2.நம் பூமி வெளிப்படுத்தும் அலையின் மோதலில் உருவான ஓ…ம் என்ற ஒலியின் சுழற்சி கொண்டு
3.உருண்டோடும் இவ்வுலக சுழற்சி ஓட்டத்தில் உருவான உயிர் ஜீவன்கள்
4.ஓமுக்குள் ஓமாய் ஓ…ம் என்ற நாதத்துடன் உருண்டோடும் பூமியில்
5.அந்நாதத்தால் உருவான ஜீவ நீரும் காற்றும் ஒளியும் கொண்டு ஜீவத் துடிப்பு பெற்று
5.இந்தப் பூமியின் ஈர்ப்பு ஜீவ உடல் கொண்ட உயிர் பிம்பங்களின் சுவாசத்தில் எடுக்கும் ஒலி தான் “ஓமுக்குள் ஓமாய் உள்ள ஒலி…!”

ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தனித்தொரு நிலையில் எதுவும் இல்லாமல் இரண்டு ஒன்றாகி அவ்வொன்றுடன் பிறிதொன்று சேர்ந்து ஒன்றாகி உருளுகின்ற உயிர் ஜீவ சக்திக்குத் தனித்த சக்தி நிலை எது..?
1.தனித்த ஒன்றான நான் என்ற சக்திக்கு ஜீவனே இல்லை.
2.ஜீவனற்ற சக்தி தான் “நான்” என்ற சக்தி.

இதனை உணர்ந்து ஒவ்வொரு ஆத்மாவும் இவ்வுடல் பிம்பத்தில் ஏற்படும் எந்த ஒரு பிணியையும் உணர்வால் எடுக்கும் எண்ணத்தின் சக்தியை மகரிஷிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு நீக்கிட முடியும்.

“மேல் நோக்கிய சுவாசமாக…” இவ்வுடல் பிம்ப உணர்வு எண்ணம் கொண்டு உடல் பிம்பத்தில் நிறைந்துள்ள பன்னிரெண்டு வகையான குண அமிலத்தையும்… ஆறு வகை குண அமிலத்தையும்… நற்சக்திப்படுத்தும் நிலை கொண்டு செயல்படுத்திடல் வேண்டும்.

1.சலிப்பைச் சாந்தமாக்கி… கோபத்தை வீரமாக்கி… சங்கடத்தை அன்பாக்கி…
2.இப்படி உணர்வின் குணத்தால் உந்தப்பட்டு அவற்றினால் உடல் பிம்பத்தில் ஏற்கனவே ஏற்றிக் கொண்டுள்ள வியாதியின் தன்மையை மாற்றிட
3.நம் குண நலத்தை ஞான வழி பூண்டு மெய் ஞானிகளின் அருள் உணர்வுகளைக் கவர்ந்து
4.நம் உணர்வுடன் கூடிய எண்ணத்தால் உடல் பிம்ப ஆரோக்கியத்திற்கு அதை நம் உடலில் பாய வைத்துக் கொண்டு
5.உடல் ஆரோக்கியமும் ஞான வழி ஈர்ப்பையும் வழித் தொடர் ஜெபத்தையும் பெற்றிடலாம்.

இப்படி இந்தப் பூமியின் ஈர்ப்பு மண்டல சுழற்சியுடன் சிக்குண்டு வாழ் நாட்களை சலிப்பு சங்கடம் கோபம் வஞ்சனை குரோதம் காமம் வெறி என்ற உணர்வுகளிலிருந்து மாற்றிடும்
1.நற்குணத்தின் அமிலத்தின் வளர்ப்பின் ஞானத்தின் வளர்ச்சியால்
2.எந்த மண்டலத்திலும் செயல் கொள்ளும் நிலை பெற்ற உயிராத்மாவாக
3.நம் உயிராத்மாவை வளர்த்துக் கொள்ள முடியும்.

உடல் பிணியின் வேதனைப்பிடியிலிருந்து உணர்வின் எண்ணத்தைச் சுயநலம் மிக்க தன்னலம் கொண்டு செயல்பட்டால் தன்னலத்தின் வளர்ப்பால் பிற நலத்தை வளர்க்கலாம்.

1.உடல் என்ற பிம்பத்தை வைத்துத்தான் எந்த ஞானத்தையும் வளர்க்க முடியும்.
2.உடல் பிணிக்கு ஏற்ற மருந்து தேவை.
3.உணர்வின் பிடிக்கு உணர்வின் எண்ண நிலைக்கொப்ப சுழல விடாமல்
4.உணர்வின் எண்ணத்திற்கு ஞானம் தேவை.

பல கோடிச் சரீரங்களில் நாம் பெற்ற “தீமையை நீக்கும் சக்தி – சேனாதிபதி”

பல கோடிச் சரீரங்களில் நாம் பெற்ற “தீமையை நீக்கும் சக்தி – சேனாதிபதி”

 

1.நம்முடைய ஆறாவது அறிவைச் “சேனாதிபதி…” என்று காட்டி
2.அதை இந்த உடலுக்குக் காவல்காரன்…! என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

உதாரணமாக போர்முறை என்று வரும் பொழுது தன் நாட்டைக் காக்க இந்தச் சேனாதிபதி கட்டளையிட்டு… சிப்பாய்களை எல்லாம் தயார் செய்து வரும் எதிரிகளை வீழ்த்தும் தன்மை பெற்றது.

இது போன்றுதான் ஓர் உயிரணு பூமிக்குள் விஜயம் செய்து… அது பல கோடி உடல்களைக் கடந்து… அதிலே பல கோடித் தீமைகளை நீக்கிடும் அறிவாக… மனிதனாக ஆனபின் இந்த ஆறாவது அறிவாக உருவானது.

1.ஆதியிலே அப்படி வளர்ச்சி பெற்று விண்ணுலகம் சென்றவன் தான் அகஸ்தியன்.
2.அவன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி… இன்றும் ஒளியின் உடலாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கின்றான்.

அவன் தீமைகளை வென்று வெளிப்படுத்திய உணர்வுகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பிரபஞ்சத்தில் பரவச் செய்தாலும் துருவத்தின் வழியாக நம் பூமி அதைக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்கின்றது.

ஆறாவது அறிவு கொண்டு அதை நாம் கவர்ந்து உயிரிலே மோதச் செய்து… கண்ணின் நினைவினை உடலுக்குள் செலுத்தி எல்லா அணுக்களையும் அந்தச் சக்தியைப் பெறச் செய்ய முடியும்.

இந்த மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தில்…
1.எந்தத் தீமையை நாம் பார்த்தாலும் அது நமக்குள் ஊடுருவி
2.வாயிலே உமிழ் நீராக மாறி ஆகாரத்துடன் கலந்து விஷமாகப் போவதற்கு முன்
3.கண்ணின் நினைவு கொண்டு துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் புருவ மத்தியில் வைத்துத் தடுத்து விட்டால் “அது சேனாதிபதி…!”
4.தீமை என்று தெரிந்து கொண்டபின் அதைத் தடுத்து நிறுத்த இப்படிப் பழகிக் கொள்ள வேண்டும்.

நம் உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களை உருவாக்கிய அணுக்கள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவினைச் செலுத்தப்படும் பொழுது அந்த அணுக்களுக்கு “வீரிய சக்தி கிடைக்கின்றது…”

உதாரணமாக… ஒரு மனிதன் நமக்குத் தீங்கு செய்கின்றான் என்றால்… அந்த உணர்வின் தன்மையை நம் கண்களில் உள்ள கருவிழி ருக்மணி தான் விலா எலும்புகளில் வித்தாகப் பதிவாக்குகின்றது.

எனக்குத் தீங்கு செய்தான்… தீங்கு செய்தான்… என்று மீண்டும் எண்ணும் பொழுது அந்த உணர்வுகள்… தீங்கு செய்தவன் அமெரிக்காவில் இருந்தாலும்… அவன் உணவை உட்கொள்ளும் போது நினைத்தால் அவனுக்குள் புரையோடி… சாப்பிட முடியாது தடுக்கின்றது.

அல்லது அவன் வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தால் “எனக்குத் துரோகம் செய்தான்… அவன் உருப்படுவானா…?” என்ற உணர்வைச் செலுத்தப்படும் பொழுது அவன் சிந்தனை குறைந்து அங்கே விபத்துக்கள் உண்டாகிறது.

அதே சமயத்தில் “அவன் இப்படிச் செய்தானே…” என்று வீரிய உணர்வுகள் நமக்குள் வரும் பொழுது நம்முடைய சிந்தனைகளும் குறைந்து மேடு பள்ளம் தெரியாதபடி… அல்லது எதிரிலே இருக்கும் பொருள் தெரியாது நாமும் மோதிக் கீழே விழுகும் நிலை வருகின்றது.

எது இதைச் செய்கிறது…? நாம் நுகர்ந்த உணர்வைத் தான் நம் உயிர் இவ்வாறெல்லாம் இயக்குகின்றது. ஆகவே… இதைப் போன்று
1.“இதன் வழி இப்படி வரும் – கார்த்திகேயா…!” என்று நாம் தெரிந்து கொள்ளும் நிலையாக
2.ஆறாவது அறிவை எப்படிப் பயன்படுத்துவது…? என்பதைத் தெளிவாக
3.அந்த ஞானிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

திட்டியவனை எண்ணும் பொழுது இங்கே நமக்கு விபத்து ஆகின்றது… அங்கே அவனுக்கும் விபத்துக்களை உருவாக்கும் சக்தி ஆகிறது. உணர்வுகள் தடுமாறி உடலுக்குள் சென்ற பின் தீய விளைவின் உணர்வுகள் நல்ல அணுக்களைச் செயலற்றதாக ஆக்கி இந்த உடலுக்குள் நோயாக மாற்றுகிறது.

இதைப் போன்ற தீமையிலிருந்து விடுபடுவதற்குத் தான் உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்குகிறோம்.

தீமை எப்பொழுது வருகின்றதோ பதிவாக்கியதை நினைவாக்கி… அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ணினால் உள் புகாது தடுக்கின்றது.

அதற்குப் பின் என்ன செய்ய வேண்டும்…?

எந்த மனிதன்… “அவன் தீங்கு செய்தான்…” என்ற உணர்வினை நம் கண் கருவிழி ருக்மணி பதிவாக்கியதோ அடுத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
1.நாம் ஏங்கிப் பெற்றால் இதே கருவிழி ருக்மணி
2.அவன் செய்த தீங்கின் தொடர் கொண்டு பதிவானதன்… நம் உடலுக்குள் அதன் அருகிலேயே பதிவாக்கி விடுகின்றது.

இரண்டும் உயிரிலே மோதப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் வலுவான நிலைகள் வரப்படும் பொழுது வேதனையைத் தடுக்கும் சக்தி வருகின்றது… துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நமக்குள் வலுவாகின்றது.

அதே சமயத்தில்…
1.அந்தத் தொக்கிய விஷத்தின் தன்மை உள்ளே போகாதபடி கவர்ந்து இழுக்காதபடி
2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று
3.கண்ணின் நினைவை உள்ளே பாய்ச்சப்படும் பொழுது அந்த அணுக்கள் எல்லாம் வீரிய உணர்வுகள் பெறுகின்றது… இங்கே தடுக்கின்றோம்.

அதாவது நாம் கவர்ந்த தீமையின் உணர்வுகள் உமிழ் நீராக மாறி ஆகரத்தின் வழி சென்று… ஜீரணித்து… இரத்தத்துடன் கலந்து உடலுக்குள் பரவுவதற்கு முன்… “ஆறாவது அறிவால்…” முன் கூட்டியே அதைத் தடுத்து விடுகின்றோம்.

இப்படிப் பழகிக் கொண்ட பின் மிளகாயைக் குழம்பிலே போட்டு அதைச் சுவையாக மாற்றுவது போன்று
1.தீமை என்றோ வேதனை என்றோ உணர்வுகள் செயல்பட்டாலும் அல்லது அவைகளை அறிந்து கொண்டாலும்
2.அறிந்து கொண்ட அந்த விஷத்தின் தன்மையை நமக்குள் வளராது தடுக்க இது உதவும்.

அதற்குத்தான் தியானப் பயிற்சியாக இதைக் கொடுக்கின்றோம்.

நோய்க்குக் காரணமான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது

நோய்க்குக் காரணமான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது

 

உணர்வுடன் கூடிய எண்ணத்தால் வரக்கூடிய வியாதிகள் மனிதனுக்கு மட்டும் தான் உண்டு.

கை கால் உணர்விழந்து வாதப்பிடிப்பு நோய்கள் எப்படி வருகின்றன…?

1.கோப உணர்வை வளரவிட்டுப் படபடக்கும் உணர்வுடன்
2.சலிப்பு சோம்பல் என்ற சங்கடத்துடன் கோப உணர்வின் அலையை மீண்டும் மீண்டும் எடுத்து அதனை அடக்கி
3.தன் சந்தோஷ உணர்வைக் கூட்டிக் கொள்ள உந்தலை அடக்கி
4.மற்றொரு உணர்வின் ஈர்ப்பில் எண்ணத்தைச் செலுத்திச் செலுத்தி
5.கோபத்தினால் வரக்கூடிய விளைவுகளைக் கண்டு அஞ்சி
6.சந்தோஷத்தால் மாற்றியமைக்க முடியும் என்ற தன் எண்ணத்தை மாற்றியமைத்து
7.இன்பம் என்று எதனைச் செயல்படுத்த எண்ணுகின்றானோ
8.இவ்விரண்டு அலைகளும் இவன் உணர்ந்து எண்ணும் எண்ணத்தால் சுவாசமுடன் மோதுண்டு
9.சத்ரு மித்ரு நிலையாகி நரம்புகளின் இயக்கத் தன்மை குறைவாகி உணர்வின் ஈர்ப்பு நரம்புகள் பாதிக்கப்பட்டு
10.சிறு மூளை பெருமூளை நரம்புகள் சரிவர இரத்த ஓட்டங்கள் ஓடப் பெறாமல் சில அடைப்புகளாகி
11.அதனால் வரும் வியாதிகள் தானப்பா இந்த வாத நோய்கள் எல்லாம்.

தோல்களில் ஏற்படும் சர்ம வியாதிகள் எப்படி வருகின்றன…? கட்டிகளும் சில புண்களும் எப்படி வருகின்றன…? உடலில் உள்ள பாக்கித் தன்மை எல்லாம் சரி வர இருந்தாலும் சர்மங்களில் ஏற்படும் ஒரு சில வியாதிகள் எப்படி வருகின்றன…?

உடலில் உள்ள சிறு உறுப்பிற்கும் நகம் முதற் கொண்டு ரோமங்கள் வரை ஜீவ சக்தி இருந்தால் தான் சீராக வளர்கின்றது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் அதற்குகந்த அமில ஈர்ப்பை அந்தந்த உறுப்புகளே தனக்குகந்த ஆகாரத்தைத்தான் எடுத்து வளர்கின்றது.

நகத்தின் அமிலமும் பற்கள் ரோமம் எலும்பு சதை எல்லாமே அதனதன் குண அமில ஆகாரத்தைத் தன் ஈர்ப்பின் சுவாசத்தால் எடுத்துத் தான் வாழ்கின்றன.

இப்படி வாழும் நிலையில் சர்மங்களில் அந்தந்த இடங்களின் ஈர்ப்பு ஜீவ சக்தி பாதிக்கும் பொழுது அதற்குகந்த துடிப்பு உணர்வை எடுக்காத முறையில் ஏற்படுவது தான் உடலில் ஏற்படும் சில கொப்பளங்களும் நகங்களின் வெடிப்புத் தன்மையும்.

ஈறுகளில் ஏற்படும் விஷ அணுக்களின் தாக்குதலினால் பற்களில் வியாதியும் சில அமில பாதிப்பால் ரோம (தலை முடி) வளர்ச்சி குன்றி உதிர்வதும் ஏற்படுகின்றன.

மனித எண்ண உணர்வு நிலைக்கொப்ப வியாதிகள் வரும் பொழுது இன்றைய விஞ்ஞானத்தால் சில செயற்கை முறை கொண்ட மருத்துவத்தால் பல சாதனைகளைச் செய்கிறார்கள்.

டி,பி வியாதிக்கெல்லாம் அந்த வியாதிக் கிருமியை அழிக்க அதற்கு மேல் சக்தி கொண்ட சில மருந்துகளைச் செலுத்தி இவ்விஷ விரிய சக்தி உடலைப் பாதிக்காமல் இருக்க அதற்கு மாற்று மருந்தையும் அதனுடன் உட்கொள்ளச் செய்கின்றனர்.

1.உள்ள வியாதியை மற்றொரு சக்தியினால் அதனை மாற்றி…
2.மாற்றக்கூடிய அச்சக்திக்கு அதன் வீரிய குண படர்ப்பு உடலைப் பாதிக்காமல் இருக்க
3.மற்றொரு மருந்தையும் தந்து தான் விஞ்ஞான மருத்துவம் இன்றுள்ளது.

புற்று நோய்க்கெல்லாம் உறுப்புகளில் எந்தெந்தப் பாகத்தில் அதிகமாகத் தாக்கப்பட்டு அதனை ஆரம்ப காலத்தில் கண்டுணரும் முறை கொண்டு அந்தந்த உறுப்புகளை நீக்கி விடுகின்றனர்.

அதாவது உயிர் வாழக்கூடிய நிலை இருந்தால் கருப்பை மார்பகங்கள் குடல்கள் இவற்றின் நிலையில் புற்று நோய் தாக்கப்பட்ட இடங்களை நீக்கிச் செயல் கொள்கிறது மருத்துவ விஞ்ஞானம்.

நீக்கிவிட்டு உயிர் வாழ முடியாத பாகமாக இருந்தால் அத்தகைய தாக்குண்ட இடங்களில் உள்ள புற்று வியாதியை கதிரியக்கம் கொண்டு மின் அலையினால் அந்தந்தப் பாகங்களைச் செயலிழக்கச் செய்து செயல் கொள்ள வைக்கின்றார்கள்.

1.மின் அலையின் சாதனத்தால் உடல் மண்டல நரம்புகள் அனைத்தும் செயல் கொள்ளும் முறைகளையும்
2.உடல் உறுப்பின் உள் நிலைகளைக் காணக்கூடிய சாதனைகளையும் (X RAY, SCAN) இன்றைய விஞ்ஞானம் செய்கிறது.

இன்னும் பல விநோதக் கருவிகளை உருவாக்கி அதன் மூலம் உடல் முழுவதையுமே ஆராய்ந்து உயிர் காக்கும் செயல் ரூபம் அனைத்துமே
1.இன்று பொருளை ஈட்டும் வழியில் தான்…
2.விஞ்ஞான மருத்துவத்தில் வளர்ந்து கொண்டுள்ளதே தவிர
3.உணர்வின் எண்ணம் கொண்டு
4.நாம் எடுக்கும் சுவாசத்திற்கு வலுத் தந்து வளர்க்கும்
5.உன்னத சக்தியின் அலையை ஈர்ப்பார் யாரும் இல்லை…!

உடலில் தசைகளில் உருவான நோய்களை அகற்றினாலும் எண்ணத்தின் உணர்வால் உருவான “மூல வித்தை…” மாற்றியமைக்காது செய்யும் எந்த மருத்துவமும் முடிவில் பலன் அளிக்காது.