விநாயக சதுர்த்தி

Image

Ganesa Idol

 

விநாயக சதுர்த்தி

 

வினை என்பது எது? வினைக்கு நாயகனாக எப்படி உருவானது? அதை எப்படி நிறுத்துவது? என்பதுதான் விநாயகர் சதுர்த்தி.

 

ஒரு உயிரணு பிறந்ததிலிருந்து பரிணாம வளர்ச்சியில் மனிதனாக வளர்ந்தபின் நமக்குள் பாசத்தால், அன்பால், பரிவால் பிறருடைய துன்பங்களைக் கேட்டறியும் பொழுது, நமக்குள் வேதனை என்ற தீயவினைகள் சேருகின்றது.

 

அதை நாம் எப்படித் தடுத்து நிறுத்துவது?

 

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நல்ல குணங்கள் கொண்டு செயல்பட்டாலும் வேதனைப்படும் பொழுது தீயவினைகள் சேர்க்கப்படுகின்றது.

 

அதையெல்லாம் நாம் துடைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நாள்தான் விநாயக சதுர்த்தி. ஒருவர் மேல் உள்ள பகைமைகளை நிறுத்துவதற்குத்தான் விநாயக சதுர்த்தி என்பது.

 

ஒருவர் என்னை ஏசுகின்றார் என்றால், அந்த ஏசிய உணர்வுகள் எனக்குள் நிலைக்காமல் செய்வதும் அந்த உணர்வு எனக்குள் விளையாமல் தடுப்பதும் “விநாயகர் சதுர்த்தி”.

 

1.நமது வாழ்க்கையில் நாம் யார் யார் மீதெல்லாம்

2.தொழில் முறையிலோ நண்பர் என்ற முறையிலோ கொடுக்கல் வாங்கல் என்ற நிலையிலோ அல்லது

3.ரோட்டில் நடக்கும் பொழுது, இடித்துத் தள்ளிவிட்டால் அவர் மேல் குரோதம் கொண்டோ

4.இப்படிப் பல சமயங்களில் பல சந்தர்ப்பங்களில் வேதனையான எண்ணம் சேர்ந்துவிடும் பொழுது

5.அப்படிச் சேர்ந்த இந்த நிலைகளை நீக்குவதற்குத்தான் விநாயக சதுர்த்தி.

 

ஒருவருக்கொருவர் பகைமைகளை நீக்கி நமக்குள் மெய்ஞானிகளின் உணர்வை வினையாகச் சேர்த்து மனித வாழ்க்கையில் இந்த விநாயக சதுர்த்திக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் பொருளறிந்து செயல்படும் தன்மையைப் பெறவேண்டும்.

 

ஒவ்வொரு நிமிடத்திலும் பொருளை அறியும் பொழுதும் பொருளை அறியாத நிலைகளிலும் அந்த ஞானியரின் அருளை எடுத்துப் பொருளை மறைக்கும் உணர்வின் தன்மையைத் துடைப்பதற்கு இந்த நாளைத் தேர்ந்தெடுத்தனர் ஞானியர்.

 

வருடத்தில் ஒரு நாள் விநாயகர் சதுர்த்தி என்று வைத்து நம்மை இயக்கும் நிலைகளை அறியும் வண்ணம் ஞானிகள் செய்தார்கள்.

 

நாம் தீயவினைகளைத் தடுத்து நிறுத்தும் நாளாக அகஸ்தியன் தனக்குள் தீயவினைகளை அகற்றி மெய் ஒளி பெற்ற நிலையை நீங்களும் பெறவேண்டும் என்பதற்காகத்தான் யாம் உபதேசிக்கின்றோம்.

 

இன்று நாம் எப்படிக் கொண்டாடுகின்றோம்.

 

விநாயகரை எடுத்துக் கொண்டால் புல்லைப் போடுகின்றோம். அடுத்து இலைளையும், செடிகளையும் போடுகின்றோம். விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்து சாப்பிடுகின்றோம்.

 

சதுர்த்தி என்றால் என்ன? இயற்கையில் விளைந்த நிலைகளை நிறுத்திவிட்டு நமக்கு வேண்டிய சுவையான நிலைகளை நாம் படைத்துச் சாப்பிடும் நாள் சதுர்த்தி.

 

விநாயக சதுர்த்தி அன்று என்ன செய்கின்றோம்? களிமண்ணால் பொம்மையைச் செய்கின்றோம். நாம் எதற்குச் செய்கிறோம்? ஏன் செய்கிறோம்? என்று தெரியாது.

 

வருடத்திற்கு ஒரு தரம் களிமண்ணால் விநாயகரைச் செய்கிறோம். கொழுக்கட்டை செய்து சுவையான கரும்பும் மற்றவைகளும் வைத்துப் பூஜிக்கின்றோம்.

 

நாம் முன் சேர்த்துக் கொண்ட வினைகளை எல்லாம் கரைப்பதற்காக வேண்டி

1.விநாயகர் சதுர்த்தி அன்று நினைவுபடுத்தி

2.கெட்டதை நீக்கி அன்று நல்லதைப் பெறுவதற்காகத் தான்

3.இவ்வாறு விநாயகர் சதுர்த்தியை வைத்தார்கள்.

விநாயகர் சதுர்த்தியை ஏன் வைத்தார்கள் என்று தெரியாது?

 

கொழுக்கட்டை அவருக்குப் பிரியமானது. அவருக்கு நல்ல அருகம்புல்லை வைத்தால் எனக்கு வரம் கொடுப்பார் என்றுதான் புல்லைக் கொண்டு வைத்து பூஜிக்கின்றோம்.

 

கல்யாணம் ஆகவேண்டும் என்றால், எருக்கன் மாலையைப் போட்டால் பண்ணிக் கொடுப்பார் என்றும் அங்கிருக்கும் வேம்பையும் அரசையும் சுற்றி வந்தால் கொடுப்பார் என்பார்கள்.

 

அரசையும் வேம்பையும் ஏன் வைத்தார்கள்? என்ற நிலையையாவது நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

 

அதாவது ஸ்தல விருட்சத்தில் மாரியம்மனுக்குக் கசப்பு. அதே சமயத்தில் இங்கு அரசும் வேம்பும் விநாயகனுக்கு வைத்தார்கள். இரண்டும் பின்னிப் பிணைக்கப்பட்டது.

 

இந்த மனித வாழ்க்கையில் நல்லதை நாம் கேட்கிறோம். அதே சமயத்தில் ஒருவர் தன் கஷ்டமான நிலைகளைச் சொல்லப்படும் பொழுது காது கொடுத்துக் கேட்கின்றோம்.

 

அப்பொழுது அந்தக் கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது. கசப்பான உணர்வுகள் நமக்குள் வந்தவுடன் என்ன செய்கின்றது?

 

“மாரி…” அவர் கஷ்டப்படும் எண்ணமெல்லாம் எனக்குள் மாறி, அவர்கள் நோயெல்லாம் எனக்குள் வந்துவிடுகின்றது. மாரியம்மன். இந்தச் சக்தியெல்லாம் உனக்குள் வந்துவிடுகின்றது என்று மாரியம்மனை வைத்துச் சக்தி எடுத்துக் காட்டுகிறார்கள்.

 

அங்கே ஸ்தல விருட்சம் என்ன? கசப்பு. மாரியம்மன் கோவிலில் என்ன இருக்கிறது? அக்கினிச் சட்டி. அக்கினிச் சட்டி ஏன் வைத்திருக்கிறார்கள்?

 

நெருப்பில் ஒரு பொருளைப் போட்டால் என்ன செய்யும்? அதில் இருக்கக்கூடிய விஷத்தன்மையை நீக்கும்.

 

அந்த மாரியம்மன் கோவிலில் அக்கினிச் சட்டி எடுப்பார்கள். ஸ்தல விருட்சம் கசப்பு. “நெருப்பிலே போட்டுக் கசப்பை நீக்கு” என்று பொருள்.

 

அரச மரத்தையும் வேப்ப மரத்தையும், விநாயகருக்கு ஸ்தல விருட்சமாக ஏன் வைத்தார்கள்?

 

அதே சமயத்தில் இந்த விநாயகருக்கு என்ன வைத்துள்ளார்கள்? அரசும் வேம்பும் வைத்துள்ளார்கள்.

 

கசப்பைச் சிறுத்து அந்த அரசின் நிலைகளில் நீ உயர்ந்த நிலைகளை எண்ணி எடு என்பதற்காகத்தான் அரசும் வேம்பும் வைத்தார்கள்.

 

நாம் இந்த மனித வாழ்க்கையில் என்ன செய்கின்றோம்?

 

உடல் அழுக்கைப் போக்குவதற்கு நீரில் குளிக்கின்றோம். உடல் அழுக்கை நீக்கியவுடன் நேராக வந்து விநாயகனைப் பார்க்கப்படும் பொழுது நாம் எதை எண்ண வேண்டும்?

 

பல கோடிச் சரீரங்களில் புல்லைத் தின்றோம் இலை தழைகளையும் செடிகளையும் தின்றோம்.

 

இன்று அறுசுவையாகக் கொழுக்கட்டை செய்து நமக்கு வேண்டியதைப் படைத்து உணவாக உட்கொள்ளும் இந்த மனிதச் சரீரத்தைப் பெற்றோம்.

 

இந்த உண்மையை உணர்த்திய அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்க வேண்டும். மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கிச் செலுத்த வேண்டும்.

 

கசப்பின் நிலைகளை நாம் எப்படி அக்கினியில் போட்டுப் பொசுக்கினோமோ அதைப் போல மெய்ஞானிகள் இவை எல்லாவற்றையும் சுட்டுப் பொசுக்கித்தான் விண் சென்றார்கள்.

 

அந்த மெய்ஞானிகளின் உணர்வை நமக்குள் செலுத்தி இந்தக் “கசப்பைச் சிறுக்கச் செய்தல்” வேண்டும்.

 

அந்த உயர்ந்த எண்ணங்களை மெய்ஞானி எப்படி வளர்த்தானோ அதை ஆட்சி புரிந்த நிலைகளில்,

1.தீயதை நீக்கி நல்லதை வளர்க்கும் அந்த “அரசாக”

2.நமக்குள் ஆட்சி புரியும் என்றுதான் இந்த ஸ்தல விருட்சத்தை வைத்தார்கள்.

 

அகஸ்தியன் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகப் பெற்றுத் துருவ நட்சத்திரமாக விண் சென்ற நந்நாளே விநாயகர் சதுர்த்தி.

 

அரசைப் போன்று வாழ்ந்து கொண்டிருக்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அனைவரும் பெறுவோம். மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

Image

New book Heading

“ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்

 

1. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளால் மெய்ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்

 

  1. பொருளைத் தேடித்தான் வருகின்றார்கள் அருளைத் தேடினால் “பைத்தியம்” என்கிறார்கள்குருநாதர் பைத்தியம் போன்று இருந்துதான் பேருண்மைகள் அனைத்தையும் உணர்த்தினார்
  2. இரசமணி சித்தர் – ஈஸ்வரபட்டர் – உயிரை மணியாக்க வேண்டும்
  3. “மந்திரம் சொல்வதையும்… மந்திரம் ஓதுவதைக் கேட்பதையும்…” பற்றி குருநாதர் எமக்கு உணர்த்திய உண்மைகள்
  4. ஆலயத்தில் நாம் எண்ணத்தால் எண்ணி எடுக்க வேண்டிய ஆற்றல்களை 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதிசங்கரர் உணர்த்தியுள்ளார்
  5. நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உயிர் செய்கின்றது அதனால் தான் “உங்களை நீங்கள் நம்புங்கள்” என்று சொல்கின்றோம்
  6. ஞானத்தைப் போதிக்கும் குருவிடம் நாம் எதைக் கேட்க வேண்டும்?
  7. பாத்திரத்தில் ஓட்டை உடைசலை அடைப்பது போல் இல்லாமல் வாழ்க்கையில் வரும் “இருள் சூழ்ந்த நிலைகளைத் தட்டியெறிந்துவிட்டு” மெய் ஒளியினைப் பெறுங்கள்
  8. தியானம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன் ஆனால், இடைஞ்சல் செய்துகொண்டே இருந்தால் என்னால் எவ்வளவு தான் பொறுக்க முடியும் என்பார்கள் – மாற்றும் வழி என்ன?
  9. நம் உடலுக்குள் வேதனைப்பட்ட ஆன்மா இருந்தால் தியானம் செய்யவிடாது – அதை மாற்றி “தியானத்தின் மூலம் ஆற்றலைக் கூட்டும் வழி”
  10. எதிர்பாராது ஏற்படும் விபத்துக்களிலிருந்து “நீங்கள் நிச்சயம் விடுபட முடியும்” – அந்த ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) சக்தியைப் பெறுங்கள்
  11. இந்தத் தியானத்தின் மூலம் விண்ணிலிருக்கும் மெய்ஞானிகளுடன் “நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்” (சுவிட்சைப் போட்டவுடன் விளக்கு எரிவது போல்)
  12. ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுக்குக் கொடுக்கும் சக்தி இவ்வளவு தான் என்று அளவிட முடியாது
  13. குரு அருளைத் திருவருளாக மாற்றி அருள் பெறும் மக்களாக அனவரையும் உருவாக்குங்கள்
  14. குரு சிஷ்யன் என்ற நிலைகளில் யாம் உபதேசிக்கவில்லை – உங்கள் உயிரைக் கடவுளாக நினைத்து “மகரிஷிகளின் அருள் வட்டத்தில் அனைவரையும் இணைத்துக் கொண்டிருக்கின்றோம்”
  15. ஒரு பேட்டரியில் சார்ஜ் குறைந்தால் மீண்டும் ஏற்றிக் கொடுக்கவில்லை என்றால் “அது இயக்காது” – ஞானத்தின் வளர்ச்சிக்கு “குருவிடம் என்றுமே தொடர்பு கொண்ட நிலையில் இருத்தல்” மிக மிக அவசியம்

 

 

2.அனுபவங்கள் மூலமாக குரு எமக்குக் கொடுத்த பேராற்றல்கள் – ஞானகுரு

 1. பழனியில் “பித்தரைப் போன்று” இருந்த நமது குருநாதர் “ஆண்டவன் என்றால்.., யார்…?” என்று எமக்குத் தெளிவாக உணர்த்தினார்
 2. அன்று நாற்றத்தை நாற்றம் என்று எண்ணி நீ விலகி இருந்தால் இன்று “கெட்டதைப் பிரித்து… நல்லதைச் சமைக்கும் சக்தி உனக்குக் கிடைக்காதப்பா…!” என்று உணர்த்தினார் குருநாதர்
 3. துரத்தி வரும் நாயைக் கண்டு நாம் அச்சப்படுவோம் – அச்சத்தை மாற்றி வலிமையான உணர்வு கொண்டு அதைத் தடுத்து நிறுத்தும் வழிமுறை
 4. “சாப அலைகள்” எப்படி ஒருவரை அழிக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
 5. எதிர்பாராத விபத்துக்கள் ஏன் ஏற்படுகின்றது? விபத்தைத் தடுக்க ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும்? திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வைத்து நேரடியாகக் காட்டினார் குருநாதர் – நடந்த நிகழ்ச்சி
 6. மரணமடையும் நிலையில் இருந்த ஒரு பெண்ணைக் காத்த நிகழ்ச்சி
 7. திருப்பதி பள்ளதாக்கில் உள்ள நீர் வீழ்ச்சியில் குருநாதர் கொடுத்த அனுபவம் – நடந்த நிகழ்ச்சி – தொல்லையான இடங்களிலிருந்து தப்பிக்கும் “முன் சிந்தனை” வேண்டும்
 8. “போகர்” தன் வாக்கின் தன்மை கொண்டு மற்றவர்களின் நோயை எவ்வாறு போக்கினார் என்று அனுபவபூர்வமாக உணர்த்தினார் குருநாதர் – எம்மையும் அதைச் செயல்படுத்தும்படி சொன்னார்
 9. பொய் உலகை விட்டு விட்டு.., “நீ மெய் உலகம் செல்” என்றார் குருநாதர்
 10. “என்னைத் தாழ்த்தி உங்களை உயர்த்துகின்றேன்” – குரு எனக்குப் பக்குவப்படுத்தியது இது தான்

 

3.அகஸ்தியனைப் போன்று என்றும் ஒளியின் சுடராக வாழுங்கள் – தூங்காமல் தூங்கும் ஒளி நிலை

 

 1. அக்காலங்களில் நடந்தவற்றை குருநாதர் எமக்குக் காட்டினார்
 2. அகஸ்தியன் “பாகமண்டலத்தில் அமர்ந்து” அகண்ட அண்டத்தையும் அறிந்தான் – அந்த அறிவின் ஆற்றலை நாமும் பெறுவோம்
 3. அகஸ்தியன் “பல கோடி மின்னல்களைக் கவர்ந்து” அவனுடன் ஒளியாக மாற்றும் அணுத்தன்மையாக மாற்றினான்…, துருவ நட்சத்திரமானான்
 4. அகஸ்தியன் தான் கண்டுணர்ந்தவைகளை – தன் இன மக்கள் பெறவேண்டும் என்று “உணர்வாக.., மூச்சலைகள்..,” வெளிப்படுத்தியதை நாம் நுகர்தல் வேண்டும்
 5. பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் பெற்ற அருள் மணங்களைப் பெறச் செய்யும் தியானம்
 6. விண் சென்ற முதல் மனிதன் – அகஸ்தியனின் ஆற்றலை துருவத்தை எண்ணி எளிதில் பெறமுடியும்
 7. மனிதனை முழுமை அடையச் செய்யும் “அகஸ்தியமாமகரிஷியின் செயலாக்கங்கள்”
 8. அகஸ்தியர் அவர் மனைவியும் ஒன்றி வாழ்வது போல் கணவன் மனைவி நீங்கள் ஏகாந்தமாக வாழும் அருள் சக்தியைப் பெறுங்கள்
 9. “மற்றவர்களை உயர்த்தும் பொழுதுதான்..,” நீ உயர முடியும் என்று தெளிவாக உணர்த்தினார் குருநாதர்
 10. உலகில் தற்பொழுது பரவி வரும் நஞ்சினை அகற்றிட “அகஸ்தியனின் உணர்வைப் பரவச் செய்யுங்கள்” – மரணமில்லாப் பெரு வாழ்வு பெற்றிடுங்கள்
 11. நீங்கள் ஒவ்வொருவருமே மெய் ஞானியாக ஆக முடியும் – ஒன்றும் சிரமமில்லை “எளிதானது தான்”
 12. துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்து மெய் ஞானிகளை உருவாக்கும் தன்மைக்கு வளர வேண்டும்
 13. இந்த உலகம் மறையும் முன் “மக்களைக் காக்க வேண்டும்” என்றார் குருநாதர்
 14. உலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்
 15. என்றுமே ஒளியின் சுடராக “தூங்காமல் தூங்கும் நிலை” – அகஸ்தியன் அடைந்த நிலை

நாம் ஆகாரம் உட்கொள்வது போல் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அகஸ்தியர் உணர்வைப் பெறச் செய்ய வேண்டும்

Image

Spiritual food - Agastya

நாம் ஆகாரம் உட்கொள்வது போல் உடலை உருவாக்கிய அணுக்களுக்கு அகஸ்தியர் உணர்வைப் பெறச் செய்ய வேண்டும்

 

அகண்ட அண்டத்தில் சூரியன் எத்தனையோ மைல் பரப்பளவு கொண்டது என்று சொன்னாலும் நாம் கண்ணுற்றுப் பார்க்கும் பொழுது நமது நெற்றியில் பொட்டு வைப்பது போன்றுதான் காண முடிகின்றது.

 

ஆனால் நமது பிரபஞ்சத்தில் வியாழன் கோள் மிகவும் பெரிதானது. அதை நாம் பார்க்க முடிகிறதா என்றால் இல்லை.

 

சனிக் கோளைப் பார்க்க முடிகின்றதா என்றால் முடியவில்லை. அது நுகர்ந்து எடுக்கும் உணர்வுகள் அதிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் வெளி வரும்பொழுது இரண்டும் மோதலில் உறைந்து வளையம் போல் சுழன்று அது தனக்குள் இத்தகைய நிலைகளை உருவாக்கும் நிலைகள் பெற்றது.

 

அது கரைந்து வரும் உணர்வின் நிலைகளைச் சூரியன் காந்தப் புலனறிவு கவர்ந்து மற்ற நட்சத்திரங்களின் உணர்வுகளுடன் கலக்கின்றது.

 

அவ்வாறு இணைந்து இருந்தால்தான் ஒன்றுடன் ஒன்று இணைந்து கலக்கும் சக்தியும் வளரும் பருவமும் உருவாகும் தன்மையும் பெறுகின்றது.

 

சனி அனைத்தையும் பெருக்கும் சக்தி பெற்றது. சனிக்கோள் செயலிழந்து விட்டால் நமது பூமியில் நீர் நிலைகளே இல்லாது போய்விடும். நீர் நிலைகள் இல்லையென்றால் நம் பூமியில் உயிரினங்கள் வாழ முடியாது.

 

வான் வீதியில் மற்ற கோள்களில் நீருடன் கலந்திருக்கும் பொழுது பாறைகள் உருவாகின்றது. அது இணைந்திடும் நிலைகள் கொண்டு நடு மையம் ஏற்படும் வெப்பத்தால் தன் அருகில் இருப்பதை உருக்குகின்றது.

 

அவ்வாறு உருக்குவதும் ஆவியாக மாற்றுவதும் கோள்கள் அதை வெளித் தள்ளுவதும் பல வித்தியாசமான பொருள்கள் உருமாறுவதும் நமது பூமியிலும் சரி மற்ற கோள்களிலும் சரி இவ்வாறு வருகின்றது,

 

இதுவெல்லாம் (அகஸ்தியன்) துருவன் கண்டுணர்ந்தவை அவனில் கண்டுணர்ந்து வெளிப்பட்ட முச்சலைகள் சூரியனால் கவரப்பட்டு நம் பூமியிலும் பரவியுள்ளது.

 

இதைத்தான் நமது குருநாதர் நுகரும்படி செய்தார்.

 

பிரபஞ்சத்தின் இரகசியமும் பேரண்டத்தின் அகண்ட நிலையையும், உணர்வுப் பூர்வமாக உணர்ச்சிகள் எப்படி இயக்குகின்றது? உணர்ச்சிகள் எப்படி மாறுகின்றது? என்ற நிலையையும் தெளிவாக்குகின்றார் நமது குரு.

 

அந்தத் தெளிவான உணர்வின் தன்மையைத்தான் சொல்லாக வெளிப்படும் பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றுகின்றது.

 

“உங்களுடைய நினைவுகள்” அகஸ்தியன்பால்

1.கூர்மையாக நினைவாற்றலைச் செலுத்தும் பொழுது

2.அவரின் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாவதும்

3.பதிவான பின் ஈர்க்கும் சக்தி வருவதும்

4.அதை நுகரும் சக்தி பெறுவதும்

5.உயிருடன் ஒன்றி உடலுக்குள் பரப்பும் சக்தி பெறுவதும்

6.இப்படிப் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றது.

 

அதன்வழி உங்களுக்குள் வரும் சக்தியின் நிலைகளை நீங்கள் நுகருவதற்கு உங்களில் பதிவாகி பதிவான உணர்வின் துணை கொண்டு “அகண்ட அண்டத்தின் நிலைகளை” நீங்கள் அறியும் பருவம் பெறுகிறீர்கள்.

 

அகண்ட அண்டத்திலிருந்து வரும் உணர்வுகளைக் கவர்ந்து “என்றும் மரணமில்லாப் பெருவாழ்வு” என்ற நிலையை அடைந்திடும் நிலையும் “ஒளியின் சரீரமாக உருப்பெறும் சக்தியும்” நீங்கள் பெறும் தகுதியை இப்பொழுது உபதேசிக்கும் உபதேசத்தின் வாயிலாக உங்களுக்குள் அருள் ஞான வித்தாகப் பதிவாக்கப்படுகின்றது.

 

எமது குருநாதர் எமக்கு உருவாக்கியது போன்று உங்களுக்குள்ளும் இதை உருவாக்கி நினைவினை வலுக்கொண்டு நுகரப்படும் பொழுது அதனைப் பெறும் நிலையும் உருவாக்கும் நிலையும் நீங்கள் பெறுகின்றீர்கள்.

 

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் நாம் பெறவேண்டும் என்ற ஆசையுடன் நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறும் வண்ணம் தியானித்து வருகின்றோம்.

 

தினம் தினம் அதிகாலை 4.00 – 6.00 மணிக்குள் ஒரு அரை மணி நேரமாவது உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெற நீங்கள் தியானித்துப் பழக வேண்டும்.

 

இதை நீங்கள் தலையாயக் கடமையாகப் பழக வேண்டும்.

 

நம் உடலுக்கு நாம் எப்படி ஆகாரத்தைச் சாப்பிடுகின்றோமோ அதைப் போன்று நம் உடலில் உள்ள அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறச் செய்ய வேண்டும்.

 

நம் பூமியில் 27 நட்சத்திரங்களில் இருந்து வரும் உணர்வுகள் புவி ஈர்ப்பின் துணை கொண்டு கவர்ந்து அது மின்னலாகப் படருகின்றது.

 

சில நட்சத்திரங்களின் உணர்வுகள் எப்பகுதியில் அதிகமாகப் படர்கின்றதோ அந்தந்த நட்சத்திரங்களின் குணங்களுக்கு ஒப்ப மண்ணுடன் கலந்து வைரங்களாக விளைகின்றது. இதைப் போன்று

1.துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும்

2.நம் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுகச் சேர்க்க

3.அந்த ஜீவ அணுக்கள் உயிரைப் போலவே உயிரணுவாக மாறிவிடும்.

 

இந்த உடலில் உள்ள பல கோடிக்கணக்கான ஜீவ அணுக்களையும் உயிரைப் போலவே உயிரணுவாக மாற்றும் பொழுது

1.ஓர் ஒளியின் உடலாகவும்

2.எத்தகைய விஷத்தன்மையும் ஒளியாக மாற்றும் திறனையும்,

3.நமது உயிர் பெறுகின்றது (நாம் பெறுகின்றோம்) என்பதனை அறிதல் வேண்டும்.

அருள் ஞானச்சக்கரத்தைப் பார்த்துத் தியானிப்பதன் மூலம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எளிதில் பெறலாம்

Chakkar

அருள் ஞானச்சக்கரத்தைப் பார்த்துத் தியானிப்பதன் மூலம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை எளிதில் பெறலாம் 

இந்த அருள் ஞானச்சக்கரத்தைப் பார்த்தீர்கள் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் ஒளிகள் இதிலிருந்து வரும்.
1.நாளுக்கு நாள் அது வளர ஆரம்பிக்கும்.
2.உங்கள் உணர்வுகளில் ஒரு தெளிவான மணம் கிடைக்கும்.

இதனுடைய வரிசையில் வரப்படும் பொழுது சில சமயங்களிலே பிரபஞ்சங்களும் தெரியலாம். “அந்த மகரிஷிகள் யார்?” என்ற நிலைகளும் உங்களுக்குத் தெரியவரும்.

தெரிய வரும் என்று சொன்னவுடன் “தெரியவில்லையே…!” என்ற உணர்வுக்குப் போய்விடாதீர்கள்.

நாம் அதைப் பெற வேண்டும் என்ற உணர்வை மட்டும் செலுத்திக் கொண்டு வந்தால் போதும். ஏனெனில் அந்த உணர்வு உங்களுக்குள் வளர்ச்சியாகும்.

ஒரு செடியை வைத்துவிட்டு உடனே பூ பூக்கவில்லை… காய் காய்க்கவில்லை… என்றால் முடியுமோ?

எத்தனையோ ஆண்டுகள் பல உடல்கள் பெற்று இப்பொழுது மனிதனாகப் பிறந்துள்ளோம். இவ்வாறு மனிதனாகப் பிறந்ததில் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொன்றாகச் சேர்க்கிறோம்.

அந்த நினைவின் ஆற்றலும் ஈர்ப்பும் வருவதற்காகவே இந்த அருள் ஞானச்சக்கரத்தைக் குறைந்தது மூன்று வருடமாக பூஜை அறையிலே வைத்து அதற்காகத் தியானம் பண்ணியுள்ளேன்.

எங்கே போக வேண்டும் என்றாலும் கொஞ்ச நேரம் சக்கரத்தின் முன் நின்று சக்கரத்தைப் பார்த்து…. “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை எண்ணித் தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணிப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்.

எங்கள் சொல்லும் செயலும் புனிதம் பெறவேண்டும். எங்கள் பேச்சும் மூச்சும் உலக நன்மை பெறக் கூடிய சக்தியாக வளரவேண்டும். நாங்கள் பார்க்கும் அனைவரும் அந்தச் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

குழந்தைகளுக்கு நன்றாகப் படிப்பு வரவேண்டும். நல்ல ஞாபக சக்தி வரவேண்டும் என்று எண்ண வேண்டும். குடும்பத்திலுள்ளோர் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற்று உடல் நலம் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

தொழிலுக்குப் போகும் பொழுது என் தொழில் நன்றாக இருக்க வேண்டும். என் வாடிக்கையாளர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட்டுச் செல்லுங்கள்.

அந்தச் சக்கரத்தின் முன்னால் தியானிப்பதற்குச் சௌகரியப்படும் இடத்தில் சக்கரத்தை வைத்துக் கொள்ளுங்கள். உடகார்ந்து பார்ப்பதற்கோ நின்று பார்ப்பதற்கோ தகுந்த மாதிரி செய்து கொள்ளுங்கள்.

அதைப் பார்த்துவிட்டு உங்கள் காரியங்கள் ஜெயமாக வேண்டும் என்று இந்த உணர்வை மீண்டும் மீண்டும் வலுப் பெறச் செய்து கொள்ளுங்கள்.
1.மன உறுதி கிடைக்கும்.
2.உங்கள் சொல் கேட்போருக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியை ஊட்டும்.

ஆகையினால் நம் குழந்தைகளும், இந்த மாதிரிச் செய்து அதைக் கட்டாயாமாக்கிப் பழக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும்.

இந்த சக்திகளை நீங்கள் அனைவரும் பெற்று மகிழ்ந்து வாழ்ந்து பிறரையும் மகிழ்வித்து வாழ்ந்து பேரின்பப் பெருவாழ்வு வாழ்ந்து வளர்ந்திட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.

குற்றவாளியைச் சட்டத்தின் மூலம் வாதாடிக் காக்கலாம் ஆனால் “வாதாடியவர்… தனக்குள் உள்ள நல்லதைக் காக்கத் தவறிவிடுவார்”

Image

Vakil Judge

குற்றவாளியைச் சட்டத்தின் மூலம் வாதாடிக் காக்கலாம் ஆனால் “வாதாடியவர்… தனக்குள் உள்ள நல்லதைக் காக்கத் தவறிவிடுவார்”

 

வக்கீல்கள் சட்டத்தைப் படிப்பார்கள். அவரிடம் ஏராளமான நூல்கள் இருக்கும்.

 

கால சூழ்நிலை சந்தர்ப்பம் எப்படி ஆனது? குற்றத்திலிருந்து இவனைப் பிரிப்பது எப்படி என்பது தான் வக்கீல்களின் வேலை.

 

நன்மை செய்பவனைக் காக்க வேண்டும் என்ற உணர்வினால் அந்த நூல்களைப் படித்து வந்தால் நன்மை செய்தவனையும் காக்கும். வக்கீலையும் காக்கும் நிலை வரும்.

 

ஆனால் குற்றம் செய்தோரை குற்றத்திலிருந்து மீட்டிடும் நிலையாகக் குற்றம் செய்தோருக்குச் சாதகமாகச் செயல்படும் பொழுது என்ன ஆகிறது?

 

அதற்காக வாதாடலாம். காசையும் பெறலாம். இதனின் செயலாக எவருக்குத் துன்பம் உருவாக்கினாரோ அது அவருக்குள் முழுமை அடைகின்றது.

 

குற்றம் செய்தோர் மகிழ்வர். ஆனால் நன்மை செய்தோர் சோர்வடைவர். அவரின் உணர்வு வக்கீலின் மீது பாயும். தீமை செய்யும் உணர்வுகள் இங்கே சேரும்.

 

பாதாம் பால் நல்லது தான். அதிலே தெரியாதபடி விஷம் பட்டுவிட்டால் அதைக் குடித்தால் நம்மை மடியச் செய்துவிடும்.

 

அதைப் போன்று தான் நல்ல மணம் கொண்டவன் வேதனைப்படுகின்றான். வேதனையான உணர்வுகளை நுகர்கின்றான். நல்ல மனம் விஷம் தோய்ந்து கெடுகின்றது.

 

எவரால் இத்தகைய நிலை வருகிறது என்று (வக்கீலையோ நீதிபதியையோ) உற்று நோக்குகின்றான். “அடப் பாவி எனக்குத் துரோகம் செய்தாய்..” என்று எண்ணுவான்.

 

அந்த உணர்வு இங்கே பதிவானபின் அது மீண்டும் நினைவுக்கு வரும். இங்கே பாதக நிலையை உருவாக்கும்.

1.தீமையுள்ளவனைச் சட்டங்கள் இயற்றிக் காக்கலாம்.

2.ஆனால் “இவனுக்குள் நல்லதைக் காக்கத் தவறிவிடுவான்”.

 

வக்கீல்களின் குடும்பங்களில் தீமையின் உணர்வு வந்து கஷ்டப்படுபவர்களைப் பார்க்கலாம். இவர் (வக்கீல்) சோர்வடையும் பொழுது இவருடைய பிள்ளைகள் இவரைத் தாக்கும் உணர்வுகள் வரும்.

 

அதே சமயத்தில் சுற்றியுள்ளவர்களையும் இவருக்கு எதிரி என்ற நிலையை உருவாக்கும். வாழ்க்கை குறுகிவிடும்.

 

“திறமை…” என்ற நிலைகள் கொண்டு தீமைகள் எப்படி என்று உணர்ந்து

1.தீமை உள்ளவரைத் தீமை இல்லாதவர் என்று வாதிட்டு

2.ஜெயிக்கின்றவர்களுக்கே நீதிபதி பதவி கிடைக்கின்றது.

 

நீதிபதி பதவி வரும் பொழுது இந்த உணர்வின் அனுபவம் பெற்ற பின் எதிர் வக்கீலின் உணர்வைக் கண்டபின் இந்த நுண்ணிய அறிவு கொண்டு “தர்மத்தின் எல்லையை வைத்தால்” நீதியைக் காக்க முடியும்.

 

நீதிபதியாக உள்ளவர்களோ இன்று பெரும்பகுதி செல்வத்திற்குத்தான் அடிமையாகின்றனர். அநீதியைத்தான் அவருக்குள் வளர்த்துக் கொள்ள முடிகின்றது.

 

ஆனால் அநீதியின் வழியில் செல்வம் தேடுவோர் குடும்பங்களில் மன நோய் அதிகரித்து நீதிபதியின் உடல் நலம் கெடும். அந்த உடல் மண்ணுக்குத்தான் செல்கிறது.

 

இந்த உடலை வளர்க்கச் செல்வத்தைத் தேடினார். செல்வம் வந்தாலும் அந்தச் செல்வத்தால் எதிரியின் உணர்வுகளே அதிகரித்துவிடுகின்றது.

 

சேர்த்துக் கொண்ட உணர்வுகள் மனிதனின் சிந்தனையைச் சிதறச் செய்து சிந்தனையற்ற செயலின் தன்மை உருவான பின் இந்த உயிர் “நீ இதை அனுபவி…” என்று மாற்று உடலில் செலுத்திவிடுகின்றது.

 

இதை எல்லாம் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

 

இன்று நாம் சாப்பிடும் உணவில் அரிசியும் பருப்பும் கலந்து உணவை உட்கொண்டால் சுவையாக இருக்கின்றது. ஆனால் அதிலே பருப்புடன் அரிசிக்குப் பதிலாக சோளத்தையும் கம்பையும் கேழ்வரகையும் சேர்த்துச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்?

 

உணவிலே சுவையைக் கூட்ட குழம்பு எல்லாவற்றையும் இணைத்துச் சாப்பிடுகின்றோம். ஆனால் அரிசி கம்பு சோளம் எல்லாவற்றையும் இணைத்துச் சாப்பிட்டால் சுவை வருமோ?

 

ஒன்று சீக்கிரம் வேகும். ஒன்று காலதாமதமாகும். எல்லாவற்றையும் கலந்துவிட்டு “நான் ருசியாக்கிவிடுவேன்…” என்று சொன்னால் ருசியாகுமா? பகுதி வெந்திருக்கும் பகுதி வேகாதிருக்கும்.

 

சமைக்கும் பக்குவம் அறிந்து சமைத்தால் தான் ருசி வரும். வாழ்க்கையில் நாம் வழி அறிந்து செயல்படுதல் வேண்டும்.

 

ஆகவே இதையெல்லாம் வெளிப்படுத்துகின்றோம் என்றால் அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பொக்கிஷமாக உங்களுக்குள் படைக்கின்றோம். இதைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

 

அரும்பெரும் சக்தியாக உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள இது உதவும். காலம் வரும் பொழுது இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

 

செல்வத்தைத் தேடி வைத்திருந்தால் நோய் என்று வரும் பொழுது நோயைச் சீக்கிரம் விரட்டிவிடலாம். ஆனால் செல்வம் இருக்கும்போது தாரளமாகச் செலவழித்துவிட்டால் நோய் வந்தால் என்ன செய்வது?

 

செல்வத்தைத் தேட வேண்டும் என்று பிறரை இம்சித்து அந்தச் செல்வத்தைத் தேடினாலும் செல்வத்தை எடுத்துச் சுவைக்கும் தன்மையும் இழந்துவிடுகின்றது.

 

இதையெல்லாம் நாம் சிந்தனை செய்தல் வேண்டும். இந்த மனித வாழ்க்கையில் அருள் மகரிஷிகளின் ஒளி கொண்டு நம் உடலை அவ்வப்பொழுது தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

செல்வத்தைக் கொண்டு பல நறுமணங்களைப் பூசி என் உடல் சுத்தமாக இருக்கிறது என்றால் அது பிறருக்குத்தான் மணமாகும். நம் உடலுக்குள் “இருள்..” என்ற உணர்வு நோயாகும்.

 

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபடுங்கள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று தியானித்து என்றுமே அந்தப் பேரருளுடன் ஒன்றி வாழ வேண்டும் என்ற நிலைக்கு வாருங்கள்.

 

துரித நிலைகள் கொண்டு உங்களுக்குள் அருள் ஞானத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்கே இதைப் பதிவாக்குகின்றோம்.

 

அருள் வழியில் அழைத்துச் செல்வதில் “தாயாகவும்” சந்தோஷத்தை ஏற்படுத்துவதில் “குழந்தையாகவும்” உங்களை அணுகி வருகின்றோம்

Image

Spiritual happiness and bliss

அருள் வழியில் அழைத்துச் செல்வதில் “தாயாகவும்” சந்தோஷத்தை ஏற்படுத்துவதில் “குழந்தையாகவும்” உங்களை அணுகி வருகின்றோம்

 

நீங்களெல்லாம் நன்றாக மகிழ்ச்சியாக இருப்பதுதான் எமது குறிக்கோளே தவிர பிறர் மாதிரி என்னை நீங்கள் கௌரவமாக மதித்துப் போற்ற வேண்டுமென்பதல்ல.

 

எப்பொழுது நீங்கள் சந்தோஷமாகச் சொல்கிறீர்களோ அதுதான் எமக்கு மகிழ்ச்சி. எம்மைக் கண்டவுடன் “அப்படி இருக்கிறது… இப்படி இருக்கிறது” என்று பெருமை பேசுவதற்கு அல்ல.

 

நாளை அதே நிலையை எதிர்ப்பார்த்து இருந்து “அது இல்லை” என்று சொன்னால் பெருமை ஒரு நொடிக்குள் போய்விடும்.

 

எமக்குள் இருக்கக்கூடிய பெருமை எப்பொழுதுமே நீங்கள் எல்லாம் மகிழ்ந்து,

1.நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்

2.மகிழ்ச்சியான நிலையில் தொழில் செய்கிறோம்

3.மகிழ்ச்சியான நிலைகளில் இருக்கிறோம் என்று சொல்வதுதான் அது ஒரு பெருமை.

 

அந்தப் பெருமையைத்தான் நான் எதிர்ப்பார்க்கிறேனே தவிர எம்மைப் போற்ற வேண்டுமென்பதற்காக வேண்டி அல்ல. உங்களில் தவறிருந்தால் அதை நிவர்த்திக்க வேண்டி ஏதாவது செய்துதான் ஆக வேண்டும்.

 

அதற்காக வேண்டித் தவறை வளர்க்கச் சென்றால் அப்பொழுது நான் புகழுக்கு எதிர்ப்பார்க்கிறேன் என்றுதான் அர்த்தம். எப்படி இருந்தால் என்ன? நீங்கள் எம்மை மதித்தால் போதும் என்ற இந்த மதிப்பு அல்ல.

 

1.நீங்கள் எப்பொழுதுமே மகிழ்ச்சியான நிலைகளில் இருக்கிறீர்கள் என்றால்

2.அது தான் எமக்குப் பெருமையும் புகழுமே தவிர வேறொன்றுமில்லை.

3.இதை ஒவ்வொருவரும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

 

எல்லோரையும் போல உங்களிடம் மகிழ்ச்சியை எதிர்ப்பார்க்கிறோம். குருநாதர் இப்படி இருக்கிறார்… அப்படி இருக்கிறார்.. என்று புகழ்ந்து பேசி அந்தப் புகழ்ச்சியினுடைய மறைவில் அது ஒரு நிமிடம் கூட நிற்காது.

 

“அதை யாம் எதிர்ப்பார்க்கவே இல்லை”.

 

யாம் உங்களுடன் ஒட்டி சாதாரண நிலைகளில் யாம் வந்து கொண்டிருக்கின்றோம் என்றால் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சகஜமான நிலைகளில் யாம் தாய்ப் பாசத்துடன் வருகிறோம்.

 

1.உங்களைத் தாயாக எண்ணி

2.நான் குழந்தையினுடைய பாசத்தில் இப்படி அணுகி வருகிறோம்.

3.ஆனால் செயலாக்கும் பொழுது தாயாக இருக்கிறோம்.

 

1.குழந்தை திட்டிவிட்டால் தாய் என்ன செய்யும்? அந்த இடத்தில் “தாயாக” இருக்கிறோம்.

2.நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு அந்த இடத்தில் “குழந்தையாக” அணுகி வருகிறோம்.

 

குழந்தையாக எண்ணி உங்களை உயர்த்திப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியை அங்கே ஊட்ட வேண்டும்.

 

இந்த இரண்டு நிலைகளைத்தான் குருநாதர் சொன்னார். மனிதனுடைய வாழ்க்கையில் நாம் இதைச் செய்ய வேண்டும். அதைத்தான் செயல்படுத்துகிறோம்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் ஏழ்மையாக இருந்து பைத்தியமாக இருந்து எல்லா நிலைகளையும் சுட்டிக்காட்டி உலகம் எப்படி இருக்கிறது என்று உணர்த்தினார்.

 

குப்பையிலிருந்துதான் மரம் சத்து எடுக்கிறது, அதைப் போல குப்பையான இந்தச் சரீரத்திலிருந்து சத்தான எண்ணங்களைக் கூட்டுவோம்.

 

1.நீ சரீரத்தைக் குப்பையாக எண்ணினாலும்

2.உனக்குள் இருக்கக்கூடிய அந்த நல்ல எண்ணத்தை அந்த வைரத்தை

3.குப்பையான சரீரத்திலிருந்து விளையச் செய் அதுதான் சொந்தம் என்றார் குருநாதர்.

 

ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் எத்தனையோ துன்பங்கள் இருக்கிறது. அந்தத் துன்பங்களை விளைவிக்கக் கூடிய எண்ணங்கள் இருக்கிறது. அந்தத் துன்பத்தை விளைவிக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து அவர்களை மீட்க வேண்டும்.

 

ஆகவே “அவர்களிடமிருந்து நீ மகிழ்ச்சியை எதிர்பார். அந்த மகிழ்ச்சியே உனக்குச் சொர்க்கம்” என்ற நிலைகளை குருநாதர் எமக்குச் சொன்னார்.

 

“நீங்கள் மகிழும் பொழுதுதான்” யாம் சொர்க்கத்தைக் காண்கிறோம்.

நாம் ரோசப்பட வேண்டிய விஷயம் எது…?

soul is god

நாம் ரோசப்பட வேண்டிய விஷயம் எது…?

நமக்கெல்லாம் பண வசதி இல்லை. வேலைக்குப் போனால் இரண்டு பேர் திட்டுவார்கள். பேசுவார்கள். இத்தனை உணர்வும் உங்களுக்குள் விஷமாகச் சேர்கின்றது.

நாம் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். இரண்டு பேர் சண்டை போடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் இரவு கை கால் குடைகின்றது, கண் வலிக்கின்றது, மேல் வலிக்கின்றது என்போம்.

ஏனென்றால் அந்த அளவுக்கு விஷ அலைகள் பரவியுள்ளது. மனித உடலில் வேதனையாகப் பேசிச் சண்டை போடுவதைப் பார்த்தால் அந்த அளவுக்கு மேல் வலிக்கும் கை கால் வலிக்கும்.

ஒருவருக்குச் சரவாங்கி நோய் வந்துவிட்டது. அவர்களைப் பற்றி பிரியமாகக் கேட்டுக் கொண்டிருந்தால் உங்களுக்கு முதுகு முழுமையும் வலிக்க ஆரம்பித்துவிடும். அதுதான் “மாரி”

“மாரித்தாய்” என்று ஊருக்கு ஊர், முச்சந்தியில் கோயில் கட்டிக் கும்பிடுகிறோம் அல்லவா…! என்ன செய்யும்? இந்தச் சக்தி நம்மிடமும் மாறிவிடும்.

அப்படி மாறாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? மெய்ஞானிகள் ஒளியை நாம் எடுத்துச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த மாரித்தாய் கோயிலுக்குச் சென்று அழுதால் போதும். அந்த அழுகையுடன் உங்களிடம் மாரி(றி) வந்துவிடும்.

பெரும்பகுதியான பெண்கள் கோயிலுக்குப்போய்க் கும்பிட்டுத் தன் கஷ்டத்தையெல்லாம் சொல்லிச் சொல்லி அழுது கொண்டிருப்பார்கள்.

அதே நிலைகளில் இறந்தவர்கள் அந்த மாரியம்மன் கோயிலில் பம்பைக் கொண்டு தட்டினால் போதும். அந்த உணர்வுகளை இந்த ஆத்மா உள்ளே இழுத்துக் கொண்டு வரும்.

1.நான் தான் வந்துள்ளேன்…
2.எனக்கு ஏன் அக்னிச் சட்டி எடுக்கவில்லை என்று
3.இந்த உடலுக்குள் வந்து ஆடும். இதுதான் மாரித்தாயினுடைய நிலை.

ஏனென்றால் மனித உடலுக்குள் நாம் எதையெல்லாம் எண்ணுகிறோமோ அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் வந்து இயங்கி விடுகின்றது. இதுதான் மெய்ஞானிகள் காட்டிய பேருண்மைகள்.

நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன் இந்த உடலை விட்டுப் போய்விட்டது என்றால் இந்த நீசத்திற்கு வேலையே இல்லை.

நாம் எத்தனையோ கௌரவம் எத்தனையோ துணிமணிகள் எத்தனையோ அலங்காரங்கள் சுகமான நிலைக்கு எத்தனையோ பஞ்சு மெத்தை போட்டு வைத்திருந்தாலும்
1.உயிரான ஈசன் போய்விட்டால்
2.குப்பையில் கொண்டு போய் எரித்து விடுவார்கள்.

நாம் இங்கு பார்க்கும் கௌரவமெல்லாம் “இப்படியெல்லாம் இருந்தார்கள் என்றா பார்க்கின்றோம்…? ஆனால்,
1.இழுத்துக் கொண்டு கட்டையில் வைக்கும்போதும்
2.மண்ணைக் கொட்டும் போதும்
3.”பார்த்துக் கொண்டேதான்…” இருக்கின்றோம்.

“ஏண்டா இப்படிச் செய்கின்றாய்… என்று கேட்கின்றோமோ…!”

ஒரு நாளைக்கு மேல் வைத்திருந்தால் “நாற்றம் அடிக்கும்” என்று தூக்கிச் சென்று விடுகிறோம்.

இப்படி இருக்கப்படும் பொழுது இந்த உடலிலே அந்த ஈசன் இருக்கும்போதே நீங்கள் கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும்
1.அந்த மெய்ஞானியின் உணர்வை எடுத்து
2.அந்த நீசமான உணர்வு வளராதபடி மெய்ஞானியின் உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.

இந்தக் கௌரவப் பிரச்னை நம் அனைவருக்குமே நிறைய உண்டு. ஏனென்றால் நாம் அல்ல. அரசனுக்கு அந்த கௌரவத்தில் என்ன செய்கிறான்? என்ன தப்புப் பண்ணினாலும் சரி? உடனே போர் முறைதான்.

நான் சொன்னேன் கேட்கவில்லை. உடனே போர்முறை.

இப்பொழுது நான் வலுவாக நிலையில் இருக்கிறேன். நான் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் உடனே எதிர்த்துவிடு. என்னை எதிர்த்துப் பழகி ஆகிவிட்டால் அதே உணர்வு “என்ன சொன்னாலும்…, அங்கே கேட்கமாட்டார்கள்”.

இந்த உணர்வினுடைய வேலை எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டேதான் இருக்கும்.
1.எந்தெந்த உணர்வுகள் நமக்குள் முன்னனியிலே நிற்கிறதோ
2.அது வேலை செய்து கொண்டே இருக்கும்.

இதை மாற்றுவதற்குத்தான் உங்களுக்கு இந்த ஆத்மசுத்தி என்ற ஆயுதத்தை வைத்து வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் வருகிறதோ அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து நிவர்த்தி செய்து பழக வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானம் இருக்க வேண்டும். வீட்டில் அவசியம் தியானமிருக்க வேண்டும்.

உடலை விட்டுச் சென்றால் அவனுடன் அவனாகி அவனாக நாம் ஆக வேண்டும். (உயிரான ஈசனுடன்)

அகஸ்தியன் பெற்ற அற்புத சக்திகளையும் பல தாவர இனங்களின் மூலிகை மணங்களையும் நாம் பெற தியானிக்க வேண்டிய முறை

Image

Agastya rishi muni

அகஸ்தியன் பெற்ற அற்புத சக்திகளையும் பல தாவர இனங்களின் மூலிகை மணங்களையும் நாம் பெற தியானிக்க வேண்டிய முறை

 

நாம் எண்ணும் உணர்வுகள் அனைத்தும் கேட்டுணர்ந்த உணர்வுகள் அனைத்தையும் உங்கள் உயிர் ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. ஓ…ம் நமச்சிவாய.. என்று நம் உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

 

அதைத் தான் பார்வதி பஜே நமச்சிவாய என்பது.

 

நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரிலே பட்டு இந்த உணர்ச்சிகள் நம் இரத்தத்துடன் கலந்து நம் உடலாக உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.

 

இது தான் “ஓ…” பிரணவம் “ம்…” பிரம்மம் என்று நம் சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது. அதன் வழியில் நாம் எண்ணும் பார்க்கும் நுகர்ந்து அறியும் அனைத்தையும் சதாசிவமாக ஆக்கிக் கொண்டேயுள்ளது நம் உயிர்.

 

அதாவது சதா நம் உடலாக மாற்றிக் கொண்டேயுள்ளது என்று பொருள்படும்படி நம் ஞானியர்கள் கூறியுள்ளார்கள்.

 

நாம் சதாசிவமாக்க வேண்டியது எது?

 

இருளை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் ஞானத்தை நாம் நுகர்ந்தறிந்து நம் உடலில் இருளை அகற்றிடும் அருள் ஞானத்தைச் சதா சிவமாக்கிக் கொண்டேயிருத்தல் வேண்டும்.

 

நமது உணர்வுகள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து நம் வாழ்க்கையில் என்றும் ஏகாந்த நிலை என பேரருள் பேரொளி என ஆகி என்றும் பிறவியில்லா நிலை அடைய இது உதவும்.

 

நாம் அனைவரும் அகஸ்தியன் துருவனாகி திருமணமாகி இரு மனமும் ஒன்றாகி அகண்ட அண்டத்தையும் அறிந்துணர்ந்து இருண்ட உலகை அகற்றிப் பேரருள் பேரொளி என ஆகி அந்த அருள் சக்திகளைப் பெறவேண்டும் என்று நாம் ஏங்கித் தியானிப்போம்.

 

அகஸ்தியர் அவர் வாழ்ந்த காலங்களில் எதை எதையெல்லாம் நுகர்ந்தாரோ அந்தத் தாவர இனங்களின் நறுமணங்களும் தீமைகளை நீக்கிடும் பச்சிலைகளின் மணங்களும் இங்கே வரும்.

 

நீங்கள் தியானிக்கும் பொழுது பல விஷத் தன்மைகளும் விஷமான உணர்ச்சிகளையும் தீமைகளை நீக்கிடும் அல்லது அடக்கிடும் அருள் மணங்கள் உங்களுக்குள் வரும்.

 

இவை அனைத்தும் உங்கள் உடலுக்குள் சென்று தீமையை அடக்கி அருள் ஞானத்தைப் பெருக்க இது உதவி செய்யும்.

 

உங்கள் மனைதை அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரருளுடன் இணைத்து அந்தப் பேரருளைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்துடன் தியானியுங்கள்.

 

சர்வ பிணிகளையும் அகற்றிடும் அருள் சக்தியாக அகஸ்தியன் கண்ட பல மூலிகைகளின் மணங்கள் இப்பொழுது இங்கே வரும்.

 

அதை ஏங்கிப் பெற்று நமக்குள் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களை அகற்றிடும் அருள் ஞான சக்தியைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிப்போம்.

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று நம் உயிரை வேண்டி கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அதனின்று வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

 

அவ்வாறு துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கித் தியானித்துப் பேரருளை உங்கள் உடலில் உருவாக்குங்கள். பேரருளைப் பெருக்குங்கள்.

 

அகஸ்தியன் பெற்ற பல அற்புத சக்திகள் இப்பொழுது இங்கே வெளி வந்து கொண்டிருக்கின்றது. அதை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் உள்ள இரத்த நாளங்களுக்குள் இணைக்கச் செய்யுங்கள்.

 

இருளை அகற்றி உலகை அறிந்து மெய்ப்பொருள் காணும் அருள் சக்தி அருள் ஞான வழியில் வாழ்ந்திடும் வாழச் செய்யும் மன உறுதியும் அருள் ஞானத்தைப் பெறச் செய்யும் ஆற்றல் உங்கள் உடலிலுள்ள இரத்தங்கள் முழுவதிலும் படர்ந்து கொண்டுள்ளது.

 

தாவர இனங்களின் பல மூலிகை மணங்கள் இப்பொழுது நீங்கள் பெறுகின்றீர்கள்.

 

அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் தாய் தந்தையர் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாம் ஏங்கித் தியானித்து நம் அன்னை தந்தையர் உடல் முழுவதும் படரச் செய்து நமக்காகப் பட்ட துயரினை அகற்றச் செய்து பேரருள் பெறவேண்டும் என்று அன்னை தந்தையரை ஏங்கித் தியானியுங்கள்.

 

உங்கள் அன்னை தந்தையர் உடல் முழுவதும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

 

அகஸ்தியன் பெற்ற அற்புத சக்திகளைப் பெற நாம் தியானிக்க வேண்டிய முறை இது. இதைத் தொடர்ந்து செய்து வந்தால் எத்தகையை தீமைகளையும் பிணிகளையும் போக்க முடியும்.

 

நம் பார்வையால் பேச்சால் மூச்சால் மற்றவர்கள் தீமைகளும் அகலும். செய்து பாருங்கள்.

 

பிடிக்காதவர்களிடம் இருந்து விலகி இருக்க முடியுமா…?

 

soul protections

பிடிக்காதவர்களிடம் இருந்து விலகி இருக்க முடியுமா…?

ஒருவர் கஷ்டப்படுகின்றார் என்றால் மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர் நன்றாக ஆகவேண்டும் என்று வேண்டுங்கள். அந்த உடலிலிருந்து நல்லது கிடைக்கும், அந்த உணர்வின் தன்மையில் நல்லது நடக்கும்.

அதே சமயத்தில் உங்களுக்குப் பிடிக்காத நிலைகளில் இருக்கிறார்கள் என்று சொன்னால் விலகி நில்லுங்கள்.
1.அவர்கள் சங்கடத்தைப்பற்றி எண்ண வேண்டாம்
2.”விலகி நில்லுங்கள்”
3.அவர்களுக்கு “நல்ல நேரம் வரட்டும்…” என்று சொல்லிவிடுங்கள்.
4.அவர்கள் இம்சை கொடுக்கிறார்கள்… இம்சை கொடுக்கிறார்கள்… என்று எண்ண வேண்டாம்,

இதை நீங்கள் செய்து பழகி வாருங்கள்.

நான் எப்படி உங்களை வேண்டுகின்றேனோ அதைப்போல ஆத்ம சுத்தி செய்துவிட்டு நன்றாக ஆக வேண்டுமென்று நீங்கள் சொல்லிப் பாருங்கள்.

இது உங்களுக்கு நன்மையைத் தரும்.

உங்களை யாராவது திட்டிகொண்டே இருந்தால் உடனே சொல்லுங்கள்.
1.மகரிஷிகள் அருள் சக்தியால் அவர் அறியாமல் திட்டிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் மாறி
2.எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடிய எண்ணம் அவருக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் திட்டும் பொழுதெல்லாம் கேட்கும் பொழுதெல்லாம் இதைச் சொல்லிக்கொண்டே வாருங்கள்,
1.அவர் திட்டுவது உங்களுக்கு வராது.
2.நீங்கள் செய்வது அவருக்குப் போய்ச் சேரும்.

ஆனால் “இப்படித் திட்டுகிறானே…, இருக்கட்டும் பார்க்கிறேன்” என்று சொன்னால் ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் வந்து இரத்தக் கொதிப்பு கை கால் குடைச்சல் தலைவலி போன்று நமக்குள் வர ஆரம்பித்துவிடும்.

இதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஆகவே உங்களை நீங்கள் காப்பாற்றாமல் சாமி காப்பாற்றுவார்… சாமியார் காப்பாற்றுவார்… ஜோசியம் காப்பாற்றும்… இயந்திரம் காப்பாற்றும்…” என்று நினைக்க வேண்டாம். ஒன்றும் காப்பாற்றாது,

இந்த உடலிலும் சரி இந்த உடலை விட்டுப் போனாலும் சரி
1.உயிருடன் ஒன்றிய நிலையில் அருள் உணர்வைச் சேர்த்து
2.உயிர் வெளியிலே போனால்
3.அவனுடன் ஒன்றி விண்ணுலகம் போக வேண்டும்,
4.அதற்கு நீங்கள் தயார் பண்ணிக்கொள்ளுங்கள்.

எமது குருநாதர் அவர் இட்ட கட்டளை அனைவரது உயிரையும் கடவுளாக மதிக்கச் சொல்லி இருக்கிறார். உங்களிடமெல்லாம் வரம் கேட்கச் சொல்லியிருக்கிறார்.

அதே மாதிரி நீங்கள் ஒவ்வொருவரும் “மகரிஷிகளின் அருளால் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும். அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று வரம் கேளுங்கள். நீங்கள் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.

அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி “துருவ நட்சத்திரமான உணர்வை” பாதுகாப்புக் கவசமாக உருவாக்கிக் கொள்ளுங்கள் – “தலைக்கு மேல் கத்தியைத் தொங்கவிட்டு” வாழும் நிலை தான் இன்றைய நிலை

Image

Remote control switch

“தலைக்கு மேல் கத்தியைத் தொங்கவிட்டு” வாழும் நிலை தான் இன்றைய நிலை – அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி “துருவ நட்சத்திரமான உணர்வை” பாதுகாப்புக் கவசமாக உருவாக்கிக் கொள்ளுங்கள்

 

இனி வரும் காலங்களில் நாம் எந்த நிலைகளில் இருப்போம் என்றே சொல்ல முடியாது. பக்கத்தில் நெருங்கிக் கொண்டேதான் இருக்கிறது. அதற்குள் நீங்கள் தைரியத்தைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

 

ஒவ்வொரு நாட்டிலும் அணுகுண்டுகளையும் ஹைட்ரஜன் குண்டுகளையும் கெமிக்கல் கலந்த குண்டுகளையும் எல்லாம் மண்ணுக்குள்ளும் கடலுக்குள்ளும் போட்டு வைத்திருக்கிறார்கள்.

 

இன்று அவர்கள் மோப்பம் (SENSORS) பிடிப்பது போல் அளந்தறிந்து வைத்துள்ளார்கள். அங்கிருந்து தட்டிவிட்டால் போதும். எங்கேயாவது இரண்டு ஊர் கடலுக்குள் போய்விடும்.

 

அணுகுண்டை கடலுக்குள் போட்டு வைத்திருக்கிறார்கள். மோப்பம் பிடித்து ஏதாவது லேசரை (LASER) அழுத்தம் கொடுத்தால் கம்ப்யூட்டரெல்லாம் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

 

இப்பொழுது கம்ப்யூட்டரில்தான் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். ஒரு பாயிண்ட் தட்டினால் என்னவாகும் என்று லேசரை ஏவி வைத்திருக்கிறான். இந்த மாதிரிக் கண்டுபிடித்து பூமிக்குள் ஒளித்து வைத்திருக்கிறான்.

 

1.நம் எண்ணங்கள் எப்படிப் பாய்கிறதோ இதே மாதிரி

2.மோப்ப நிலைகளில் ஊடுருவி

3.இதிலிருக்கக்கூடிய லேசர் கதிரியக்கத்தில் பாய்வது போல இருக்கிறது.

 

அதை இவன் அழிப்பதற்கும் வழியில்லை. கடலுக்குள் போட்டாலும், ஆவியாக வந்து சேர்ந்து விடுகிறது. “என்னடா பண்ணுவது…!” என்கிற வகையில் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

இந்த அளவில் நாம் இருக்கப்படும்போது சுலபமான முறையில் செயல்படுத்த முயற்சிக்கிறான்.

 

அணுகுண்டில் பல வகைகள் இருக்கிறது. அதனின் வெப்பத்தால் கடல் அலைகளாகப் பொங்கி வரும். “கடலோரத்தில் இருக்கும் ரொம்ப ஊர்கள் கடலுக்குள் போய்விடும்”.

 

இனி நடக்கப்போகிறது. அங்கே வெடிக்கிறது தண்ணீருக்குள் போகப்போகிறார்கள், இறந்துவிடுவார்கள். அது மேட்டிலிருந்து நாம் இந்த நிலைக்கு வந்தால் பிட்ஸ் வந்து ஜன்னி வந்துவிடும். எடுத்துத் தண்ணீர் கொடுப்பதற்குக் கூட ஆள் இருக்காது.

 

தென்னாப்பிரிக்காவில் என்ன செய்தார்கள்…! செய்கிறார்கள் தெரியுமா?

 

கெமிக்கல் விஷத்தைத் தூவி செடி கொடிகளெல்லாம் அங்கே வளரவிடாதபடி செய்து வைத்துவிட்டு “அங்கு சாப்பாட்டிற்கு இல்லாமல்… கஷ்டப்படுகிறார்கள்” என்கிறார்கள்.

 

எந்தச் செடியும் வளராது சாப்பாட்டிற்கு இல்லாதபடி கஷ்டப்படுகின்றார்கள் என்று உலகம் முழுவதும் தெரிந்தபின் “இவன் பிழைப்பான்… பிழைக்கமாட்டான்…” என்ற நிலைகளில் இவன் சாப்பாட்டிற்குக்கூட மார்க் போட்டுக் கொடுத்தார்கள்.

 

இவ்வாறு கொடுத்தாலும் 4,5 நாட்கள்தான் காப்பாற்ற முடியும் என்று வரிசைப்படுத்தி அனுப்பிக் கொண்டிருந்தார்கள். உலகம் முழுவதும் போட்டோ எடுத்துக் இன்றும் காட்டிக் கொண்ருக்கின்றார்கள்.

 

அந்த மாதிரி இன்றும் நமக்கு(ம்) மார்க் போடும் நிலை வந்துவிட்டது.

 

1.இதில் யார் யார் மிஞ்சுவார்கள்…!

2.அடுத்தாக மார்க் போட்டு நீ இப்படிப்போ… நீ அப்படிப்போ…” என்று சொல்லும் நிலை வந்துவிட்டது.

 

இதிலிருந்தெல்லாம் நாம் தப்புவதற்கு என்ன வைத்திருக்கின்றோம்? ஏதாவது வழி வேண்டுமா இல்லையா…!

 

1.நீங்கள் இந்த “ரிமோட் சுவிட்சை” (REMOTE SWITCH)

2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று

3.உங்களுக்குள் அதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

1.யாம் சொல்லும் முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்றால்

2.உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு “உங்களுக்குள் அந்த உணர்வு தோன்றும்”.

3.அந்த நிமிடத்தில் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

 

உலக மாற்றங்கள் குறித்து இனி விஞ்ஞானிகள் “நாள்… நேரம்… இத்தனை நொடி…” என்று கூடச் சொல்வார்கள். அதற்குள் பாதுகாப்புக் கவசத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.