ஞானம் பெற படிப்பறிவு தேவை இல்லை – அனுபவம் தான் தேவை

great gnana

ஞானம் பெற படிப்பறிவு தேவை இல்லை – அனுபவம் தான் தேவை

ஒருவர் நம்மைத் தாக்கிப் பேசினால் பதிலுக்கு அவனைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகள் தான் தூண்டுகின்றது. அப்படித் தூண்டும்போது ஆத்திரமான உணர்வுகளை நாம் சுவாசிக்க நேருகின்றது.

ஆத்திரமான உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்துவிட்டால் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது. அல்லது வாத நோய் வருவதற்குண்டான வித்தாக மாறுகின்றது.

அதிலிருந்து தப்ப முடியாத நிலை ஆகின்றது. ஆனாலும் அது சந்தர்ப்பம் தான்.

அதே மாதிரி நாம் தவறே செய்யவில்லை என்றாலும் இரண்டு பேர் ஒருவரை ஒருவர் தாக்கப்படும் பொழுது நாம் பார்க்கின்றோம்.

“சும்மா இருப்பவனைத் தாக்குகின்றானே…” என்று நாம் உணர்ச்சிவசப்படுகின்றோம். அப்படி உணர்ச்சிவசப்படும் பொழுது “இதைக் காட்டிலும் நமக்கு ஆத்திரம் அதிகமாகின்றது”.

அப்பொழுது அவனைப் பார்த்து “ஏனப்பா.., சும்மா இருப்பவனை அடிக்கின்றாய்…?” என்று கேட்டால் அவன் திருப்பிப் பதில் சொன்னால் போதும்.
1.கோபமும் ஆத்திரமும் இரு மடங்காகி
2.அந்த உணர்வை நாம் அழுத்தமாகச் சுவாசிக்க நேருகின்றது.
3.ஆனால் நன்மை செய்வதாகத்தான் நாம் எண்ணுகின்றோம்.
4.அதே சமயம் நமக்குள் ஆத்திர உணர்வுகள் ஈர்க்கப்பட்டு இரத்தக் கொதிப்பாகும் என்று நாம் அறியவில்லை,

அந்த விஷத்தின் தன்மை நமக்குள் அதிகமாகி நம் மனித நினைவை இழக்கச் செய்து அது வியாதியாகி நஞ்சுகள் அதிகமாகி கடைசியில் குறுகிய நிலைகள் கொண்டு இயங்குவது போல் “குறுக்கும் உணர்வுகள்” உடலுக்குள் விளைந்து விடுகின்றது.

உயிராத்மாவில் சேரும் இந்த உணர்வுகள் இந்த உடலைக் குறுக்கி வேறு விஷமான உடலைப் பெறும் தகுதியைத்தான் ஏற்படுத்தும்.

இதை மாற்ற வேண்டும் அல்லவா…!

அந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அடுத்த நிமிடமே ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி ஏங்குதல் வேண்டும்.

இந்த மனித வாழ்க்கையில் வந்த அந்த இருண்ட சந்தர்ப்பத்தை மாற்றி மெய்ஞானிகளின் அருள் ஒளியைப் பெறுதல் வேண்டும்.

நம்மை ஒருவர் குறைத்துப் பேசிவிட்டால் ஆத்திரம் மூண்டு “இப்படிக் கேவலப்படுத்திவிட்டான்…” என்ற வேட்கையைக் கூட்டி அழிக்கும் உணர்வுகளே அந்தச் சந்தர்ப்பத்தில் தோன்றுகின்றது.

இதைப் போல சந்தர்ப்பங்கள் வந்தாலும் உடனடியாக விண்ணை நோக்கி ஏகி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்றால்
1.வரும் அசுத்தத்தை நீக்குகின்றோம்.
2.அதே சமயத்தில் மெய் ஒளியைப் பெறுகின்றோம்
3.இப்படித்தான் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் நல்லதாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் உயர்வதும் தாழ்வதும் “படித்துணர்ந்து… நான் அதைச் செய்வேன்…” என்றால் விஞ்ஞான அறிவிற்குத்தான் செல்ல முடியும். 

மெய் ஞான அறிவில் படித்து வர முடியாது. அந்த மெய் ஞானிகள் காட்டிய அருள் வழியில் “அனுபவரீதியில் தான்” நாம் அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆகவே எப்பொழுதெல்லாம் துன்பங்கள் வருகின்றதோ அந்தச் சந்தர்ப்பங்களையெல்லாம் நல்லதாகப் பயன்படுத்த “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிருடன் புருவ மத்தியில் தொடர்பு கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்களில் கலந்து உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று உடலில் சேர்த்துத் தூய்மையாக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அருள் சக்திகளைப் பெறுவதையே நம் வாழ்க்கையாக அமைக்க வேண்டும். இதைத்தான் “வாழ்க்கையே தியானம்” என்பது.

“அத்வைதம்” – கண்களுக்குப் புலப்படாதது (சூட்சம சக்தி) கண்களுக்குப் புலப்படக்கூடிய பொருளாக எவ்வாறு உருவாகின்றது என்று உணர்த்தியவர் ஆதிசங்கரர்

Sri Adi Shankarar

“அத்வைதம்” – கண்களுக்குப் புலப்படாதது (சூட்சம சக்தி) கண்களுக்குப் புலப்படக்கூடிய பொருளாக எவ்வாறு உருவாகின்றது என்று உணர்த்தியவர் ஆதிசங்கரர்

சூட்சம நிலையில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் அலைகள் (சுவாசம்) அது எவ்வாறு செயல்படுகின்றது என்ற நிலையில் ஆதிசங்கரர் பாடுகின்றார்.

“ஐகிரி நந்தினி… நந்தித மேதினி…
விஸ்வ விநோதினி… நந்தினிதே…”

ஒவ்வொரு அணுவுக்குள்ளும் இருப்பது ஐந்து அறிவின் புலனறிவுதான். அதாவது ஒரு வெப்ப காந்தமும் அது எடுத்துக்கொண்ட உணர்வின் சத்தும் சேர்க்கப்படும்போது மூன்று.

ஒரு வெப்பத்திற்குள் மறைந்திருக்கக்கூடிய காந்தம் அது ஈர்க்கும் சக்தி. அந்த வெப்பத்தை உருவாக்கும் அணுவின் தன்மையை அது பொருளைக் கொடுத்தவுடன்
1.உருவாக்கவும் செய்கின்றது.
2.அது மற்றதை மறைக்கவும் செய்கின்றது.

ஒரு மரத்திற்குள் வெப்பம் இருக்கும்போது அது உருப்பெறுகின்றது.

மரம் புவியின் ஈர்ப்பைவிட்டு நகர்ந்து விட்டால் அதற்குள் இருக்கக்கூடிய சக்தியைக் காயச் செய்கின்றது. ஆக இரு வேலைகளைச் செய்யும்.

நமக்குள் ஒரு உணர்வின் தன்மையை மறைத்து மாய்த்துவிட்டு, ஒன்றைத் தனக்குள் எடுத்து அது வளர்க்கச் செய்யும்.

ஒன்றுடன் ஒன்று சேர்க்கப்படும்போது ஒரு கருவின் தன்மை மாய்த்துவிட்டு ஒரு சக்தியின் தன்மையை உருவாக்கும்.

இந்த வெப்பத்திற்கு – மூன்று சக்தி. அதைப்போன்று நாம் எந்தக் குணத்தின் தன்மையை எடுத்துக்கொண்டோமோ இந்த உணர்வின் சக்தி அணுவுக்குள் சேர்க்கப்படும்போது அணுவின் தன்மை அந்த மணத்தை வெளிப்படுத்தும்.

அதே சமயம் அந்த உணர்வின் தன்மை ஒரு பொருளுக்குள் சேர்ந்தவுடன் இந்த உணர்வுகள் தூண்டப்பட்டு இயக்கும். ஆக ஐந்து.
1.வெப்பம் – உருவாக்கும் சக்தி
2.காந்தம் – ஈர்க்கும் சக்தி
3.விஷம் – இயக்கும் சக்தி
4.மணம் – 1,2,3 சேர்ந்து பிறிதொன்றைக் கவர்ந்தது
5.உணர்வு – 1,2,3 கவர்ந்த மணத்தை அங்கே இயக்கமாக்குகின்றது.., உணர்ச்சி.

இதைப் போன்று மனிதனுக்குள் புலனறிவு ஐந்து.

“ஐகிரி நந்தினி நந்தித மேதினி
விஸ்வ விநோதினி நந்தினிதே”
என்று சொல்லும்போது ஐந்து புலனறிவுகள்.

நாம் சுவாசிக்கும் இந்த உணர்வின் தன்மைகள் எந்த குணத்தைக் கொண்டு சுவாசிக்கின்றோமோ அதே உணர்வின் தன்மை தன் உயிருடன் சேர்க்கப்படும்போது “விஸ்வ விநோதினி”

“ஐகிரி நந்தினி” நம் உடலைச் சுற்றி வருகின்ற சுவாசத்தை நாம் சுவாசித்தவுடன் நாம் உயிரின் நிலைகளில் சுவாசித்து நம் உயிரில் பட்டவுடன் அதே ஐந்து உணர்வுதான் நந்திதமேதினி விஸ்வ விநோதினி.

நாம் சுவாசித்த உணர்வின் தன்மை உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை “சூட்சம நிலையாக” (கண்களுக்குப் புலப்படாமல்) ஆற்றல் மிக்க சக்தியாகச் செயல்பட்டு அது எவ்வாறு அணுக்களாக உடலாக விளைகிறது என்ற நிலையை
1.தனக்குள் உள் நின்று அதை உணர்ந்து
2.அத்வைதத்தின் தத்துவத்தை அன்று ஆதிசங்கரர் ஒலிபரப்பினார்

இயற்கையில் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தி, எவ்வாறு உடலுக்குள் நின்று செயல்படுகிறதென்று உணர்த்தினார்.

1.சூட்சமமாக மறைவான நிலையில் இருப்பது
2.அது பல உணர்வுகள் சேர்த்து ஒரு பொருளாகும்போது,
3.திடப்பொருளாக எவ்வாறு ஆகின்றது என்ற
4.இந்த உண்மையினுடைய நிலைகளைத்தான் கண்டுணர்ந்தார் மெய்ஞானி ஆதிசங்கரர்.

“அகஸ்தியரின் வளர்ப்பாக” நாம் ஆக என்ன செய்ய வேண்டும்…?

Dhuruva maharishi Agastya

“அகஸ்தியரின் வளர்ப்பாக” நாம் ஆக என்ன செய்ய வேண்டும்…? 

 

அணுவின் தன்மை ஒன்றை ஒன்று வென்றுதான் ஒன்று வலுப்பட்டு வந்தது. இது இயற்கையின் நியதி. “மனிதனான பின்னும் அவ்வாறே”.

ஆரம்ப நிலைகளில் அணுவாகத் தோன்றினாலும் அவ்வாறு தோன்றிய நிலைகள் பலவாறு ஒன்றை ஒன்று விழுங்கி அணுத்தன்மை வளர்ந்து அதன் வழிகளில் கோளாகின்றது.

கோளின் தன்மை ஆற்றல் பெற்று நட்சத்திரமாகி நட்சத்திரத்தின் நிலைகள் சூரியனாகி அதனின்று விளைந்து ஒரு பிரபஞ்சமாகின்றது.

பிரபஞ்சத்திற்குள் ஒரு கோளாகி இந்தக் கோளுக்குள் மற்ற அனைத்தும் வடிக்கச் செய்து பூமியான நிலைகள் கொண்டு மற்ற கல்லும் மண்ணும் ஆவியாக மாறி தாவர இனச் சத்துக்களாக மாறி அதிலே உயிரணுக்களாகத் தோன்றுகின்றது.

உயிரணுவான பின் தாவர இனச் சத்தினுடைய ஆவிகளைச் சுவாசித்து உயிரணு அதனுடைய நிலைகளில் உட்கொண்டு அதை வடித்து அணுத்திசுக்களாக உயிரணுவாகத் தோற்றமாகி மனிதனாகின்றது.

எப்படி ஒரு அணுவின் தன்மை பெற்று சூரியன் ஆனதோ அதைப் போன்று பிரபஞ்சத்திற்குள் தோன்றிய ஒரு உயிரணுவின் துடிப்பு மற்ற உணர்வின் சத்தை எடுத்து மனிதனாக வரும் பொழுது “எதையுமே அடக்கி ஆளும் சக்தி” மனிதனுக்கு உண்டு.

ஆரம்ப நிலையில் அணுவின் தன்மை பெற்ற நாம் மனிதனாகி வந்தாலும் அந்தச் சூரியனாகி வந்தாலும் சூரியனை அடக்கி ஆளும் சக்தி மனிதனுக்குண்டு.

அத்தகைய ஆற்றலின் தன்மை எல்லாவற்றிலும் வடித்து உணர்வின் இரசத்தின் தன்மையை வடிகட்டிய நிலைகள் கொண்டு மனிதன் உருப்பெற்றான்.

அவ்வாறு உருப்பெற்றவனுடைய நிலைகளில் இவன் எண்ணத்தைச் சூரியனிடத்திலே பாய்ச்சி இவனுடைய உணர்வலைகளை ஊடுருவச் செய்து சூரியனையே திசை திருப்பவும் கோள்களைத் திசை திருப்பவும் ஆற்றல் பெற்றார்கள் அன்றைய மெய்ஞானிகள்.

அவ்வாறு பெற்றவர்தான் “அகஸ்திய மாமகரிஷி”.

அகஸ்தியன் அவன் நம் தென்பகுதியில் தோன்றினாலும் பூமிக்குள் எங்கு சென்றாலும்
1.இவனுடைய உணர்வின் நிலைகள் கொண்டு
2.இவன் விட்ட மூச்சலைகள்தான்
3.மற்ற ஞானங்கள் தோன்றுவதற்கே காரணமாகின்றது.

அவ்வாறு மனிதனாகத் தோன்றி இந்த உணர்வின் ஆற்றலைப் பெற்று விண் சென்றவர்தான் “துருவ மகரிஷி” என்று பின் நாட்களில் அழைக்கப்பட்டவர்.

அகத்திய மகரிஷிதான் துருவ மகரிஷி.., தெற்கே தோன்றி தன் ஆற்றலின் தன்மை பெற்று அங்கே வடதுருவப்பகுதியில் எல்லை கொண்டு விண்ணிலே வரக்கூடிய ஆற்றலைத் தான் நுகர்ந்து ஒளியின் சரீரமாக ஆனார்.

அகஸ்தியர் ஒளி சரீரமாக ஆகி துருவ நட்சத்திரமானார். அதனின்று வரும் மூச்சலைகள் மனிதனாகத் தோன்றிய ஒவ்வொருக்குள்ளும் பட்டு  அந்த உயிராத்மாக்களை ஒளி நிலை பெறச் செய்யும்.

இனம் இனத்தை வளர்க்கும்.

ஒரு வித்தின் தன்மை உதாரணமாக ஒரு மாஞ்செடியை வளர்த்து விட்டால் அது மா இனத்தையே வளர்க்கும். அதே மாதிரி புல் இனச் செடிகள் வளர்ந்துவிட்டால் தன் இனத்தை வளர்க்கும்.

இதைப் போன்றுதான் ஒரு மனிதனுக்குள் எல்லை கடந்த உணர்வின் ஆற்றல் வெளிப்பட்டுவிட்டால் அந்த உணர்வின் அலைகள் மற்றொரு மனிதன்பால் படும்போது அந்த இனத்தை வளர்க்கச் செய்யும்.

புருவ மத்தியில் ஈஸ்வரா என்று எண்ணி அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணி எங்கிச் சுவாசித்தால் அகஸ்தியரின் ஆற்றல்களை நாம் பெற முடியும்.

அதை நமக்குள் வளர்த்துக் கொண்டால் அந்த மெய்ஞானிகளின் இனமாக அவரின் வளர்ப்பின் வளர்ப்பாகச் சென்று அவருடன் ஐக்கியமாகலாம்.

கெடுதல் செய்பவர்களை உற்றுப் பார்க்கும்போது நம் எண்ணங்கள் “கெட்டவர்கள்” என்றுதான் எண்ணத் தோன்றுகிறது – அந்தக் கெட்டது நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை

Image

Soul protection method

கெடுதல் செய்பவர்களை உற்றுப் பார்க்கும்போது நம் எண்ணங்கள் “கெட்டவர்கள்” என்றுதான் எண்ணத் தோன்றுகிறது – அந்தக் கெட்டது நமக்குள் வராது தடுக்க வேண்டும் என்ற எண்ணமே வருவதில்லை

 

இப்பொழுது  விஷத்தன்மையான உணர்வுகள் பரவியுள்ளதால்,. யாரிடமாவது வேகமாகச் சண்டை போட்டால் “இரண்டில் ஒன்று பார்க்கலாம்… போ..!” என்ற எண்ணம் வரும்.

 

அதைப்போலத்தான் கொலைகளும் கொள்ளைகளும் நடப்பது. அவன் செய்கிறான் என்று நினைக்க வேண்டாம். நம்மையும் செய்யத் தூண்டி விடும்.

 

அவன்தான் செய்கிறான் என்று எண்ண வேண்டாம்.

1.அதே உணர்வுகளை நாம் அதிகமாக நுகர்ந்தோமென்றால்

2.நம்மையும் அந்த நிலைக்கு ஆளாக்கும்.

 

அந்த நஞ்சுக்குள் இருந்து நாம் தப்ப முடியாது என்ற நிலைக்கு நாம் வருகிறோம். நாம் நினைக்கிறோம்… “அவன்தானே அப்படிச் செய்கிறான்” என்று,

 

இந்த உணர்வின் விஷத் தன்மையைப் பார்க்கப்படும்போது தன் நண்பனிடத்தில் பழகினாலும் அவன் விட்டுக் கொடுக்கவில்லை என்றால் “இரண்டில் ஒன்று தீர்த்துக்கட்டு…” என்ற உணர்வுதான் இங்கே வரும்.

 

அவனில் விளைந்த உணர்வுகள் என்ன ஆகிறது?

1.நமக்கு இடையூறு செய்கிறானா…!

2.”அரசனாக்கி அவனைத் தொலைத்துக்கட்டு” என்ற நிலைகளில் நமக்குள் இருக்கும் உணர்வுகள் உந்தும்.

 

“என்னமோ ஆகிவிட்டுப் போகட்டும்…. விடு…” என்கிற நிலையில் நம் நல்ல குணத்தை அழித்துவிடும்.

 

“எங்கோ நடக்கிறது…” என்று எண்ண வேண்டாம். நமக்குள் இருந்து நமக்குள் எதிரியாகி நம் நல்ல உணர்வைக் கொன்று இப்படித்தான் புசிக்கும்.

 

அன்று மகரிஷிகள் தனக்குள் தீமையை அகற்றும் நிலைகளைத் தனக்குள் வளர்த்து அந்தத் தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு அகற்றிய மெய்ஞானியின் உணர்வை அரசாக்கி “வேகா நிலை” என்ற முழுமை அடைந்தனர்.

 

இதைப்போன்ற நிலைகளைப் பெறுவதற்கு “சாமி நன்றாகச் சொன்னார்…” என்ற நிலைக்குப் போகாதபடி “நாம் இதைப் பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு” முற்பட வேண்டும்.

 

இதைக் கேட்டுணர்ந்தவர்கள் எல்லோரும் அந்தத் தீமைகளை அகற்றும் நிலைக்கு அதை முறைப்படிச் செயலாக்கும் நிலைக்கு வரவேண்டும்.

 

அடுத்தவர்களுடைய தீமையான உணர்வுகள் நமக்குள் வளராது தடுக்கும் எண்ணம் வர வேண்டும். அப்பொழுது அவருக்குள் விளைந்த தீயவினைகள் நமக்குள் விளையாது தடுக்கலாம்.

 

இந்த உணர்வு பரவப் பரவ நம் மீது அவர் எண்ண எண்ண அவர் உணர்வுகள் மாறும். மாறி விட்டதென்றால் அவனுள் விளைந்த தீமைகளை அடக்கவும் அவனால் முடியும்.

 

எல்லா நெல்லும் அரிசியாகும்போது முழுவதாக வரவில்லை. ஒரு நெல்லைப் போடுகிறோம் விளைகிறது. ஒன்று கருக்காயாகப் போய் விடுகிறது. ஒன்று  வெறும் சோடையாகப் போய் விடுகிறது.

 

எல்லாம் ஒரே செடியில்தான் அதையும் மிஞ்சி வருவதுதான் நல்லவைகளாக வருகிறது.

 

“அது என்னடா…? ஞானத்தைப் பெறவேண்டும் என்று இந்த வழியில் வருகிறார்கள். வந்த பின் இந்த மாதிரிச் செய்கிறார்கள்…! என்கிற நிலை வரப்படும்போது இதில் இரண்டு கருக்காயாகும் நிலை வரும்.

 

இவன் அயோக்கியத்தனம் பண்ணிக் கொண்டிருந்தான். இவன் போய் இந்தத் தியானத்தில் சேர்ந்திருக்கிறான், அங்கே இவரைச் சேர்த்துக் கொண்டார்கள் என்று ஒரு கற்பனை.

 

ஒருவர் தவறு செய்கின்றார். அவர் திருந்த வேண்டுமென்று இங்கே வருகிறார்.

 

அவன் அயோக்கியத்தனம் செய்தான். “பார்…” இவர்களுடன் சேர்ந்து கொண்டு இருக்கிறான். “இவனுக்கு எப்படிப் பக்தி வரும்” என்று இப்படிச் சிலர் சொல்வார்கள்.

 

ஆனால் அவர்கள் செய்யும் அயோக்கியத்தனம் அதை வலுப்படுத்தி, அதை அரசனாக்குகிறது. இவர் இதைத்தான் சுட்டிக் காட்டுவார்.

1.அவர் அவருக்குள் நல்லதை வளரவிடவில்லை.

2.நல்லதைப்பற்றி வளர்ப்பதற்கு எண்ணமும் இல்லை.

3.நல்லவராக ஆகவேண்டுமென்ற எண்ணமில்லை.

4.எண்ணியது அவருடைய நிலைகளில் “அவர் கெட்டவர்” என்றுதான் எண்ணுகின்றார்.

 

கெட்டவர் என்ற நிலைகளில் நாம் எண்ணும் போதெல்லாம், ஒருவன் வேதனைப்படுவதைப் பார்த்து அதை ரசித்துச் சாப்பிடுபவர்கள் போன்றுதான்.

 

இந்த மாதிரிச் சொல்பவர்கள் எல்லோருக்கும் மனம் எப்படி இருக்கும்…! ஒருவர் அடிக்கடி கஷ்டப்பட வேண்டும். இவர்கள் அவர்களைப் பார்த்து ரசிப்பார்கள்.

 

ஆனால் கடைசியில் இவர்கள் எங்கே போவார்கள்?

 

தெரியாது…!

 

இன்று மனிதனாக இருக்கிறோம். எல்லாம் தெரிந்து கொண்டோம் என்றிருப்போம்.

1.அசல் பாம்பாகத்தான் செல்வார்கள்,

2.அல்லது “கடு…கடு…” என்று இருந்தால் தேள் இனமாகத்தான் செல்வார்கள்.

3.நிச்சயம் அவர்கள் உயிர் அங்கேதான் கொண்டு செல்லும்.

 

இதையெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

“அறிதல்…” என்ற நிலையில் சிலர் மற்றவர்களின் துயரங்களையெல்லாம் சொல்லி அவர்களுக்கு “நல்லது செய்கிறேன்” என்பார்கள் – அதனின் பின் விளைவுகள் என்ன ஆகும்?

Image

Divine horoscope

“அறிதல்…” என்ற நிலையில் சிலர் மற்றவர்களின் துயரங்களையெல்லாம் சொல்லி அவர்களுக்கு “நல்லது செய்கிறேன்” என்பார்கள் – அதனின் பின் விளைவுகள் என்ன ஆகும்?

 

நுகரும் ஆற்றல் கொண்டு ஒருவருக்கு ஜோதிடம் பார்ப்பது போல் முன்னாடியே அறியக்கூடிய நிலையும் நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் பார்த்துச் சொல்லலாம்.

 

அத்தகைய நிலைகள் சென்றால் ஒரு மனிதனுக்குள் விளைவைத்த “தீமையின் உணர்வும்…” நமக்குள் வந்து சேரும்.

 

சாதாரணமாக உங்கள் உடலிலிருந்து பல உணர்வுகள் வெளிப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

 

உங்களைச் சந்தித்தவுடனே உங்கள் உணர்வின் தன்மை அனைத்துமே நான் அறிந்து கொள்ள முடியும்.

 

உங்கள் வாழ்க்கையிலே எத்தகைய துன்பங்களை அனுபவித்தீர்களோ

1.அந்த உணர்வை இழுத்து

2.அதை நான் சுவாசித்துத்தான்

3.உங்கள் நிலையைச் சொல்ல முடியும்.

 

ஒருவன் துன்பப்படுவதைப் பார்த்தபின் “இப்படிக் கஷ்டப்படுகின்றானே…!” என்று பரிவுடன் ஏக்கத்துடன் பார்த்தால் அவன் உடலில் விளையக்கூடிய துன்ப உணர்வின் அலைகள் நமக்குள் நிச்சயம் வந்துவிடும்.

 

வந்த பின் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்குத் தக்கவாறு நடுக்கமும் பயத்தையும் சோர்வையும் அல்லது மயக்கத்தையும் நமக்கு உண்டாக்கும்.

 

நமக்குச் சம்பந்தமே இல்லை என்று கூடச் சொல்லலாம். திடீரென்று எதிர்ப்பார்க்காதபடி ஒருவர் விபத்துக்குள்ளாகிவிட்டால் அந்தப் பரிவான குணம் கொண்டு பார்க்கும்போது

1.பயம் கலந்த நிலைகளில் ஈர்த்துவிட்டால்

2.நாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றாலும்

3.அது நுகரப்பட்டு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி மயக்கமடையச் செய்யும்.

 

இதைப் போன்று வலுக்கட்டாயமாக ஒருவர் உடலிலிருக்கும் துன்பத்தை அறிந்துணர்ந்து சக்தியின் தன்மை பெற்றவர்கள் அதைச் சொல்ல வேண்டும் என்றாலும் அவர் கஷ்ட நஷ்டங்களையும் அவர் எதிர்கால நிலைமைகளையும் சுவாசித்துத்தான் அதை உணர்ந்து தான் சொல்ல முடியும்.

 

சொன்னாலும் அந்த வலுக்கட்டாயமாகக் கவர்ந்த பிறர் உடலிலிருக்கக்கூடிய தீய சக்திகள் நம் உடலில் பெருகத் தொடங்கும்.

 

சிலர் இதே மாதிரி “ஒவ்வொருவருடைய துன்பங்களையும் நான் போக்குவேன்…” என்ற நிலையில் மந்திரங்கள் யந்திரங்கள் செயல்படுத்திச் சொல்வார்கள்.

 

இதே மாதிரியான ஈர்க்கும் ஆற்றல் கொண்டு பிறருக்கு மந்திரித்து அல்லது மந்திரங்கள் சொல்லி அவர் உடலில் உள்ள தீமையின் விளைவுகளை இந்த உடலில் இழுத்துக் கொள்ள முடியும்.

 

ஏனென்றால் “அறிதல்…” என்ற நிலையில்

1.ஈர்த்துச் சொல்லக்கூடிய பக்குவம் வந்துவிட்டாலே

2.ஒருவர் உடலிலிருப்பது தன்னிச்சையாகவே

3.இவர் நினைக்கும் பொழுது  வந்துவிடுகின்றது.

 

அவரைப் பற்றியதெல்லாம் அறிந்து சொல்வார். அவரின் வியாதியைப் போக்கும் நிலையும் வரலாம். நான் நல்லது செய்தேன் என்று அவரும் நினைக்கலாம்.

 

வியாதியைப் போக்கும் பொழுது இவர் உடலில் அவரின் வியாதியை உருவாக்கிய தீய சக்திகள் விளைந்து மறுபடியும் மனித உணர்வல்லாத ஈர்ப்புக்குள் தான் இவர் செல்ல முடியும்.

 

மிருக இனங்களுக்குத்தான் அழைத்துச் செல்லும். ஞானிகளின் உணர்வலைக்குள் செல்ல முடியாது.

 

காரணம் சாதாரண மனிதனின் எண்ணங்களைப் பாய்ச்சப்படும் பொழுது அந்த மெய் ஞானிகளின் அருள் அருகில் போனால் என்ன செய்யும்?

 

மெய் ஞானிகள் தீமைகளை மாய்க்கும் கடும் அக்கினி சக்தி பெற்றவர்கள். அந்த நெருப்புக்கு அருகில் சென்றால் சுட்டுப் பொசுக்கிவிடும். நம் உணர்வுகளைக் கருக்கிவிடும். ஞானிகள் அருள் மிக்க ஆற்றல் பெற்றவர்கள்.

 

நம் எண்ணத்தால் சாதாரணமாக அவர்களைக் கவர வேண்டும் என்றால் நடக்காது. அந்தச் சக்திகளைக் கவர வேண்டும் என்றால்

1.அவர்களின் உணர்வை நமக்குள் பதிவாக்கி இருக்க வேண்டும்.

2.பதிவாக்கியதை நினைவுக்குக் கொண்டு வந்து

3.விண்ணிலிருந்து அதைப் பெறவேண்டும் என்றால் கவர முடியும்.

 

அதைப் பதிவாக்கும் நிலைக்கே பல கோணங்களிலும் உங்களுக்குள் இணை சேர்த்துக் கொண்டு வருகின்றோம்.

 

அதன் வழி சென்றால் நீங்கள் மெய்ஞானிகளின் உணர்வை எளிதில் பெறலாம். மெய் ஞானிகளின் உணர்வைச் சேர்க்கும் நேரமெல்லாம் உங்களுக்கு நல்ல நேரமாக மாறும்.

1.உங்கள் காரியங்கள் அனைத்தும் சித்தியாகும்.

2.யாரிடமும் நீங்கள் சென்று ஆலோசனை கேட்க வேண்டியதில்லை.

“நல்லது நடக்க வேண்டும்” என்றால் நம் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்…?

Divine Guru Master

“நல்லது நடக்க வேண்டும்” என்றால் நம் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்..?

ஒருவனுடைய நிலைகளில் தீமை விளைகிறதென்றால் அது “மெய்”. அந்தத் தீமையின் உணர்வுகளை நுகர்ந்ததனால் தீமையின் செயலாக இயக்குகின்றது.

ஆனால் தீமையை அகற்றும் நிலையாக அவனுக்குள் எதை இணைக்கின்றோமோ அந்தத் தீமையை அகன்றபின் எதை இணைத்தோமோ அது இயக்குகின்றது.

இது மெய். இந்த மெய்யை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் நாம் தவறு செய்யவில்லை. பிறருடைய செயல்கள் நம்மை இயக்குகின்றது.

நாம் மெய்யைக் காண வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறோம். இந்த ஆர்வத்தில் இருக்கும் போது
1.ஒருவன் சிறு தவறு செய்தால்
2.இங்கே நமது எண்ணத்தை விட்டு விடுகிறோம்.
3.ஆனால் தவறை நீக்க வேண்டும் என்று முதலில் நாம் பிரயத்தனம் (முயற்சி) எடுத்தால் “நீக்கும் உபாயம்…” கிடைக்கும்.

நீக்கும் உபாயம் நமக்குள் கிடைத்தவுடன், “அவர்கள் தெரியாமல் செய்கிறார்கள்”என்ற நிலையில் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும் என்று நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.இதை ஓங்கி வளர்த்துக் கொண்டு
2.அவனுக்காக வேண்டி எண்ணி
3.நமக்குள் வரும் பிறிதொருவரின் உணர்வினைத் தணிக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட வேண்டும் என்று இதை நமக்குள் திணித்துவிட்டால் “அவன் செய்த தவறு… நமக்குள் வளராது”.

இல்லையென்றால் “இத்தனை பேர் சொல்கிறார்களே… கேட்க மாட்டேன் என்கிறானே…”என்ற இந்த உணர்வுகள் இங்கே வளரும்.
1.நமக்குள் அந்த எண்ணம் வளராது
2.நம் எண்ணம் அவன் நல்லதைப் பெற வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும்.

ஆகவே “குருவின் வேலை என்ன…?” என்று கேட்டீர்களானால் உங்களுக்கு அந்த நல்லதைப் பெறச் செய்யும் காலத்தை ஏற்படுத்த வேண்டும்.

உங்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்வுடன் இருப்பார்கள். அந்த உணர்வுக்குத் தக்கவாறு பதிவு செய்கிறோம். அதற்குத்தான் இந்த நிலைகளில் உபதேசிக்கிறோம்.

யாம் உங்களிடம் சாதாரண நிலைகளில்தான் இருக்கிறோம். காரணம் உங்களுடன் ஒன்றியிருந்தால்தான் நீங்கள் இதைக் கேட்பீர்கள்.

யாம் கொஞ்சம் ஜபர்தஸ்து பண்ணிக் கொண்டிருந்தால் பக்கத்தில் வரப் பயம் வரும். சொல்வதன் உண்மை நிலைகளை இதுவே தடைப்படுத்திவிடும். உங்களை அறியவிடாமல் செய்யும்.
1.எம்மை உயர்த்திக் கொண்டிருப்பீர்கள்.
2.உங்களைத் தாழ்த்திக் கொண்டேதான் இருப்பீர்கள்.
3.சொல்வது அர்த்தமாகிறதல்லவா?

ஆகையினாலேதான் உங்களை அணுகி வருகிறோம்.

எமது குருநாதர் பித்தனைப் போல இருந்தார். “இப்படி இருக்கிறாரே…, என்ன சொல்லப் போகிறார்…?” என்று யாம் அவரை அறிய ஆரம்பிக்கின்றோம்.

இதைப் போலத்தான் எம்மை அணுகி வரப்படும்போது அந்தப் பற்றே வரும். எமது மேலே பற்று வரவில்லை என்று சொன்னால் இதை எடுக்க முடியாது. உண்மையான பற்று அங்கே வரவேண்டும்.

எனவே உண்மையான பற்றை உங்களிடம் ஏற்படுத்தச் செய்கிறோம். என்னைப் போற்ற வேண்டுமென்றால் ஜபர்தஸ்துதான் வரும்.

உண்மையான இயக்கம் எதன் வழியில் எதைப் பெற்றது? என்ற நிலையை நாம் அறிந்து கொள்வது மிகவும் நல்லது. ஏனென்றால் நாளை “இந்தச் சாமி இப்படி இருந்தார்… அந்தச் சாமி இப்படி இருந்தார்…” என்று எத்தனையோ பேர் சொல்வார்கள்.

இது எந்தெந்த வழிகள்…? என்ற ஞானம் உங்களுக்கு வரும்.

இந்த ஞானம் வரத்தொடங்கி விட்டாலே மெய்ஞானம் உங்களுக்குள் தன்னாலே வளரும்.

யாம் உபதேசித்த உணர்வைப் பதிவாக்கிக் கொண்டவர்கள் எந்தக் காவியத்தைப் படித்தாலும்
1.அதைப் “பிளந்து”
2.அதிலிருக்கும் உண்மையை உணரும் தன்மையே வரும். இது வர வேண்டும்.
3.இல்லையென்றால் அந்த மெய்ஞானம் வராது.

“மெய்ஞானம்…” எல்லோரும் பெறவேண்டும். எல்லோரும்  “மெய்ஞானிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும்” என்பதற்கே இதை உபதேசிக்கின்றோம்.

“முருகன் வீரபத்திரன்” – தீமைகளை வென்றிடும் ஞானமும் வலிமை மிக்க சக்தியும் நாம் பெறவேண்டும்

Image

 

Murugan Veerabhadra

“முருகன் வீரபத்திரன்” – தீமைகளை வென்றிடும் ஞானமும் வலிமை மிக்க எண்ணமும் நாம் பெறவேண்டும்

 

மனிதனுக்குள் விளைந்த சக்தி ஆறாவது அறிவு மிக சக்தி வாய்ந்தது. ஆனால் நஞ்சுக்கோ மிக சக்தி உண்டு.

 

நஞ்சின் சக்தி மிக அதிகமாக இருப்பினும் மனிதனின் ஆறாவது அறிவின் சக்திக்கு எல்லாமே அடிமை. அதைச் சீராகப் பயன்படுத்தினால் நஞ்சினையும் நாம் ஒடுக்க முடியும்.

 

அணுகுண்டை உருவாக்கியவனும் மனிதன்தான். அதே சமயத்தில் அதை அடக்கி வைத்து வெடிக்கச் செய்வதும் மனிதன்தான்.

 

அன்று அரசனாக இருந்த “கோலமாமகரிஷி” தன் தவத்தின் நிலைகள் வரப்படும்போது இவர் செய்த தவறுகள் எத்தனையோ. அவை அனைத்தும் இவருக்குள் அலைகளாக வருகின்றது.

 

இவர் யாக வேள்விகள் நடத்தப்படும்போது, பல அசுரர்கள் பல நிலைகளில் இடையூறு செய்தார்கள் என்று காவியத்தில் சொல்வார்கள்.

 

அதற்காகத்தான் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ஒரு பக்கம் முருகனும் இன்னொரு பக்கம் வீரபத்திர சாமியும் காவல் தெய்வமாக இருக்கிறார்கள்.

1.வலுவான எண்ணங்கள் கொண்டு

2.நஞ்சினை நீக்கிப் பழகவேண்டும்.

இந்தத் தத்துவமெல்லாம் புரிந்துவிட்டது அல்லவா…!

 

முருகன் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொன்னால், அர்த்தம் என்ன…? கோவிலில் ஒரு பக்கம் முருகன் மறு அக்கம் வீரபத்திரசாமி.

 

ஆறாவது அறிவின் (முருகன்) துணை கொண்டு தனக்கு இணையாக வலுவின் (வீரபத்திரன்) துணை கொண்டு எதற்குமே அஞ்சா நெஞ்சன் துணை கொண்டு வெல்ல வேண்டும்.

 

உயர்ந்த நிலைகள் எதுவோ அதைத்தான் கோலமாமகரிஷி கைப்பற்றினார் என்ற நிலையும் அதிலே கண்டுணர்ந்த சக்திதான் இங்கே ஆறாவது அறிவு என்று தெளிவாகக் காட்டினார்.

 

கொல்லூரில் பார்த்தால் அதுதான் இருக்கும்.

 

அரசனாக இருக்கும்போது அவர் பல கொடூரச் செயல்கள் செய்தது இங்கே பதிந்திருக்கிறது. தன் ஆன்மாவில் வந்து பல எதிர்ப்பு சக்திகள் கொடுக்கிறது.

 

தவம் என்பது உயிர். யாகம் என்பது உயிரின் நெருப்பில், தன் எண்ணத்தால் விண்ணின் ஆற்றலைப் போடும்போது அசுர குணங்கள் தனக்குள் வராது தடுக்க முடியும் என்பதுதான் அவர் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று.

 

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும்போது அதை உணரத்தான் பயன்படுத்த வேண்டும்.

 

உணர்ந்தபின் அதை நீக்கிவிடுதல் வேண்டும்.

 

1.அதாவது தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.

2.ஆனால் தெரிந்த உணர்வுகளை உடலிலே இணைத்திடக் கூடாது

3.தீமைகள் எதுவோ அவைகளை நீக்கி

4.நன்மையின் பயன் எதுவோ அதை ஆக்கப்பூர்வமான நிலைக்கு மாற்றிடல் வேண்டும்.

 

நஞ்சுக்கு மிக சக்தி வாய்ந்த நிலை உண்டு. இருந்தாலும் மனிதனுக்குள் உள்ள மிகச்சக்தி வாய்ந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு அந்தச் சக்தியை நீக்க முடியும்.

 

இதைப் பயன்படுத்தவேண்டும்.

 

கோலமாமகரிஷி அழியாப் பெருவாழ்வு என்ற நிலை பெறவேண்டும் என்று எண்ணினார். இன்னொரு சரீரம் வேண்டியதில்லை என்ற வலுவான எண்ணத்தை அவர் எடுத்துக் கொண்டார்.

 

என்றும் அந்தச் சப்தரிஷிகளுடன் இணைந்திடல் வேண்டும் என்று தன் எல்லையை வகுத்துக் கொண்டார். தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி மெய்ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்து விண்ணுலகம் சென்றார்.

 

மிகக் குறுகிய காலங்களில்தான் அவர் அந்த எல்லையை அடைந்தார். இவையெல்லாம் 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சி.

 

கோலமாமகரிஷி அவர் வளர்த்த அந்தச் சக்தி நம்முன் படர்ந்து கொண்டிருப்பதை நாம் கவர்ந்து நமக்குள் இணைப்போம்.

 

“வலுவான எண்ணம் கொண்டு…” தனக்குள் வந்த கடுமையான சாப வினைகளையும் தீய வினைகளையும் “அவர் அகற்றியது போல்” நாமும் அகற்றுவோம்.

புறக்கண்ணின் நினைவை “அகக்கண்ணுடன் இணைத்தால்” அது தீமைகளை அகற்றும் சரியான மார்க்கம் ஆகிறது

 

Third eye opening tech

புறக்கண்ணின் நினைவை “அகக்கண்ணுடன் இணைத்தால்” அது தீமைகளை அகற்றும் சரியான மார்க்கம் ஆகிறது 

இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும் பிறருடைய துயர் துடைக்கக் கேட்டுணர்ந்த அந்தத் துயரமான உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

வந்தபின் அந்த உணர்வுகள் இரண்டறக் கலந்து அது ஓங்கி வளர்ந்து உடலை மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை அது செயல்படாது தடுத்துவிடுகின்றது.
1.அதனால் உடல் நலிந்து
2.உணர்வுகள் குறைந்து எண்ணங்கள் நலிந்து
3.நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.

இதிலிருந்து நம்மைக் காத்திட இத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு ஆத்ம சுத்தி செய்வோம் என்றால் நாம் நம்மைக் காத்திட முடியும்.

ஆத்ம சுத்தி என்ற ஆற்றலைப் பெறுவதற்காக அருள் ஞானிகள் கண்டுணர்ந்த மெய் உணர்வின் சாரத்தை
1.உங்களைக் காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
2.அதை வலுப்பெறச் செய்யும் நிலைக்குத்தான் இதை உபதேசிப்பது.

வியாசர் காட்டிய அருள் வழியில் கண்ணன் காட்டிய வழி – “நமது கண்களின் துணை கொண்டு இதை நினைவு கூர்ந்து எண்ணும்போது அந்த வலுவின் தன்மை நீங்கள் பெற முடியும்.

அந்த அருள்ஞானிகளின் உணர்வுகளை நுகர வேண்டும். உங்களை அறியாது வந்த தீமையை ஒடுக்க வேண்டும். அருள்ஞானிகளின் உணர்வுகளை வளர்க்க வேண்டும் என்ற இந்த நிலைக்குத்தான் இதைச் சொல்கிறோம்.

மற்றவர்களுடைய துயரைக் கேட்டறிந்த நிலைகள் உங்கள் நல்ல குணங்களை நலியச் செய்த அந்த உணர்வின் தன்மையை, மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் புகுந்து நலிந்ததை மீட்கச் செய்து நல்ல உணர்வாக வளர்க்கச் செய்யும்.

உயிருடன் ஒன்றும் உணர்வை அனைத்தும் ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் கலந்து உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்களும் பெற வேண்டும் என்ற ஆசையில் வியாசகர் காட்டிய அந்த உணர்வின் சாரத்தை உங்களுக்குள் பெறச் செய்கின்றோம்.

கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டு “அதோ வருகின்றான் நாரதன்”என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்திச் செயல்படுகின்றோம்.

நம் கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி இப்போது உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றச் செய்தல் வேண்டும்.

“உயிரான கண் அகக்கண்” “நம்முடய கண் புறக்கண்”

புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கும் பொழுது ”சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கிவிடுவான்” என்பதாகும்.

நம் உடலான சிவத்திற்குள்
1.உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில்,
2.புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றி,
3.மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கி
4.அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும்
5.எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெறவேண்டும் என்று
6.உள் நினைவில் கண்களை மூடி
7.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படர வேண்டும் என்று செய்வதே
8.கண்ணன் காட்டிய திருட்டு வழி.

கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளை உள் செலுத்தும்போது அந்த ஞானிகளின் உணர்வுகள் “பிராணாயாமம்” அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் ஆகி வளர்ச்சியாகின்றது.

நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேகவைக்கும் பொழுது அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருகின்றது. அதைப் போன்று
1.அந்த (ஞானிகளின் அருள்சக்தி) மணத்தின் வீரியத் தன்மை
2.உள் நின்று வெளி வருவது
3.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

நாம் பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி உடலுக்குள் சேர்க்கும்முன் நம் ஆன்மாவாக மணமாக மாறுகின்றது.

அது மடிமேல் ஆன்மாவாக இருந்தாலும் வரும் மகரிஷிகளின் உணர்வுகளை உயிருடன் ஒன்றி உள் செலுத்தப்படும்போது அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவது
1.மடி மீது சுருண்டு கொண்டிருக்கும்
2.வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை இது பிளக்கின்றது.

இவ்வாறு தீமையைப் பிளந்து நம் ஆன்மாவிலிருந்து அகற்றும் நிலையையே “ஆத்ம சுத்தி” என்பது.

பொன்மொழிகள் – QUOTES
ஞானகுரு உபதேச வாயிலாகக் கொடுத்த நுணுக்கமான கருத்துக்கள்

“சேவல் கொடியோனே” என்று ஆறாவது அறிவின் சிறப்பை ஞானிகள் காட்டியுள்ளார்கள் – ஞானத்தை வழங்கும் ஞானஸ்தானத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமல்லவா…!

Image

Seval kodi - Lord mUrugan

“சேவல் கொடியோனே” என்று ஆறாவது அறிவின் சிறப்பை ஞானிகள் காட்டியுள்ளார்கள் – ஞானத்தை வழங்கும் ஞானஸ்தானத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டுமல்லவா…!

 

பழனி கோவிலுக்குச் சென்றால் அங்கே இது “அபிஷேக விபூதி” என்று ஏமாற்றுகின்றார்கள்.

 

“விபூதி”அபிஷேகத்திற்குப் போகவில்லை என்று தெரிகின்றது. ஆனாலும் பரவாயில்லை பழனியாண்டவர் சன்னதிக்கு வந்து விட்டோம் என்று விளம்பரத்தைப் பார்த்து வாங்குகின்றோம்.

 

பழனில் முருகனின் அருளைப் பெறலாம் என்று வருபவர்களை ஏமாற்றிக் கொண்டுதான் உள்ளார்கள். நாம் ஏமாந்து கொண்டுதான் இருக்கின்றோம்.

 

நாம் முருகன் ஆலயத்தில் நேரடியாகச் சென்று வணங்க தடை ஏதும் இல்லை.

 

ஆனால் பழனி ஆலயத்திற்குச் சென்று தன் கண் திருஷ்டி தீரவேண்டும் என்று சிதறு தேங்காய் போடுவார்கள். இதில் சிதறு தேங்காய் எடுக்கும் உரிமை பெற்ற காண்ட்ராக்டர்கள் என்ன செய்வார்கள்?

 

தேங்காய் உடைக்க வருபவர்களிடம் இங்கேதான் உடைக்க வேண்டும் என்று கூறுவார்கள். ஏனெனில் வேறு ஒரு இடத்தில் உடைத்தால் வேறு காண்ட்ராக்டருக்குத்தான் போகும் என்று அப்படிச் சொல்கின்றார்கள்.

 

சிதறு தேங்காய் உடைக்க வருபவர்கள் “நான் சாமிக்கு முன்னாடிதான் உடைப்பேன்”என்று சொன்னால் கூட இந்தக் காண்ட்ராக்டர்கள் விடுவதில்லை.

 

அவரை மறித்து “இங்கே தேங்காயை உடை”என்று கட்டாயப்படுத்துவார்கள்.

 

1.“நம்மைத் தெய்வம் காக்கும்…” என்று நினைக்கின்றோம் அல்லவா…!

2.நாம் தெய்வத்தை வணங்கி வந்தோம் அல்லவா…!

3.அந்தத் தெய்வம் இங்கே அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட வேண்டும் அல்லவா?

 

ஆசையின் நிலைகொண்டுதான் இதையெல்லாம் செய்கின்றனர்.

 

இதைத்தான் இராமாயணத்தில் என்ன சொல்கின்றார்கள்? வசிஷ்டர் தசரத சக்கரவர்த்திக்குப் பிரம்ம குரு என்று அதில் உணர்த்தியுள்ளார்கள்.

1.அதாவது கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ

2.அதுவே நம்ம வழி நடத்தும் என்று பொருள்.

 

நாம் என்ன செய்கிறோம்…? சிதறு தேங்காய் போட்டால் கடவுள் நமக்கு நல்லது செய்வார் என்று நம்புகின்றோம். அப்பொழுது இது வசியம். அதைக் கவர்ந்து கொள்ளுகின்றோம்.

 

1.நுகர்ந்த உணர்வின் தன்மை நமக்குள் பிரம்மமாகின்றது.

2.நாம் எண்ணிய எண்ணம் அருந்ததி நமக்குள் பதிவாகிவிடுகின்றது.

எப்படியும் கஷ்டப்பட்டாவது செய்தால்தான் நன்றாக இருக்கும். செய்யவில்லை என்றால் “சாமி கோபித்துக் கொள்ளும்…” என்ற நிலைகளில் தான் போகின்றார்கள்.

 

சிதறு தேங்காயைப் போட்டால் காண்ட்ராக்டர் எடுத்து விற்றுக் கொள்கிறார். இதே போன்று பக்தர்கள் கோவிலுக்குச் சேவலையும் நேர்த்திக் கடனாகக் கொண்டு போய் விடுகின்றார்கள்.

 

கோவிலில் கொண்டு போய் கோழியையோ சேவலையோ விட்டால், அவைகள் “பத்து நாளைக்குப் பட்டினி” இருக்கும்.

 

“சேவற் கொடியோனே…” என்று சொன்னால் நாளை வரக்கூடிய நிலைகளை தெரிந்து கொள்ளும் சக்தி பெற்றது நம் ஆறாவது அறிவு.

 

இதற்குத்தான் முருகனைச் “சேவற் கொடியோனே…” என்று ஞானிகள் அழைத்தார்கள்.

 

காலையில் சேவல் கூவுகின்றது. விடியப் போவதைக் காட்டுகின்றது. இதைப்போன்று ஆறாவது அறிவு பெற்றவர்கள் உண்மையின் உணர்வை அறியக்கூடியவர் என்று “சேவற் கொடியோனே”என்ற தத்துவத்தைக் கொடுத்தார்கள்.

 

ஆனால் சேவலை நேர்த்திக்கடன் கொடுக்கிறேன் என்று சொல்லி தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுக் காண்ட்ராக்டர் எடுத்துச் சென்று, சேவல் கொல்லப்படும் வரையிலும் அது இரண வேதனை அடைகின்றது.

 

சேவலை சாமிக்கு அர்ப்பணித்து காண்ட்ராக்டர் கையில் கொண்டு போய்க் கொடுத்து சேவலைப் பத்து நாளைக்கு பட்டினியாகப் போடும்பொழுது

1.சேவல் இவருடைய உணர்வை நினைத்தால் சேவலின் ஜீவன் என்ன பண்ணும்?

2.“பாவி…, என்னைப் பட்டினி போட்டுக் கொல்கிறானே…!” என்று எண்ணும்.

 

சேவல்களை ஏலம் போடுவதற்கு முன்னால் அவைகள் படும் அவஸ்தையைப் பார்த்தால் நமக்கு மிகவும் வேதனையாக இருக்கும்.

 

சேவலை முருகனுக்கு வேண்டி சும்மா பறக்க விட்டு விட்டுச் சென்றால் கூட யாராவது பிடித்துக் கொண்டு சென்று விடுவார்கள். தொந்தரவு இல்லை.

 

சேவல் கொடி கட்டியிருக்கும் இடத்திலேயே “சேவலைப் போட வேண்டும்” என்று எண்ணுகின்றோம்.

1.நம்முடைய ஆசையின் நிமித்தம்

2.நம்முடைய அறிவை இழந்து என்ன செய்கின்றோம்?

 

1.அருள் ஒளியை நமக்குள் கூட்டி,

2.இருளை நீக்கி உண்மையின் உணர்வை ஊட்டும்

3.நமது ஆறாவது அறிவைத் தெளிவாக்கும் “ஞானஸ்தானத்தையே சூனியமாக்கிக் கொண்டிருக்கின்றோம்”.

 

மனிதரை அறியாமையிலிருந்து விடுபடச் செய்து உண்மையை அறிந்துணர்ந்து தெளிந்து வாழச் செய்யும் நிலைக்கே ஆலயங்கள் ஞானிகளால் உருவாக்கப்பட்டன.

 

இதனின் உண்மைளை அறிந்த நாம் ஆலயங்களுக்குச் சென்று வணங்கும் பொழுது தெய்வத்தைப் பார்க்கும்போது அந்தத் தெய்வ குணம் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

அங்கே வைக்கப்பட்டுள்ள கனியின் சுவையின் இனிமை என் சொல்லிலும் செயலிலும் நாங்கள் பெறவேண்டும் மலரைப் போன்ற மணம் நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

 

தெய்வச் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளைக் காணும் பொழுது “தங்கம் போன்று மனம் மங்காத நிலை” நாங்கள் பெறவேண்டும் என்று எண்ண வேண்டும்.

 

இந்த ஆலயம் வருவோர் அனைவரும் தெய்வ குணம் பெறவேண்டும்  இந்த ஆலயம் வருவோர் அனைவரது குடும்பங்களிலும் அருள் சக்தி படரவேண்டும்.

 

அவர்களது குடும்பங்களில் உள்ள அனைவரும் தெளிந்த ஞானமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

 

இதன் நிலைகள் கொண்டு நம்முள்ளும் அருள் ஞான சக்தி பெருகுகின்றது. நமது வாழ்க்கையும் அருள் ஞான வாழ்க்கையாக அமைகின்றது.

 

ஆலயங்களுக்குச் சென்றால் “இப்படித்தான் ஞானிகள் காட்டிய வழியில் எண்ண வேண்டும்”.

“இராமனின் தூதுவன் ஆஞ்சநேயன்” – வாயு புத்திரன், சுக்ரீவனின் மந்திரி – விளக்கம்

Image

Jai Anjanaeya

“இராமனின் தூதுவன் ஆஞ்சநேயன்” – வாயு புத்திரன், சுக்ரீவனின் மந்திரி – விளக்கம்

 

நாம் இரக்கம் ஈகை அன்பு கொண்டு வாழும் பொழுது நமது குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

 

நமது மகன் நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று எண்ணி வருகின்ற பொழுது அதற்கு மாறாக அவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் வேதனைப்படுகின்றோம்.

 

இதனால் வேதனையின் உணர்ச்சியாகி அவன் இப்படி இருக்கிறானே… சரியாகப் படிக்கவில்லையே… அவனின் எதிர்காலம் என்னாவது…! என்று எண்ணி

1.இதனைச் சமைத்து நமது உடலையும் கெடுத்து

2.அவனிடத்திலும் கோபப்பட்டு வேதனைப்படுகின்றோம்.

 

அவ்வாறு வேதனைப்பட்டு, அவனிடம் ஏன்டா…! இப்படி இருந்தால் என்னாவது…? என்று சொல்லும் பொழுது இதனின் உணர்வுகள் அவனுடைய உடலில் பாயும்.

 

இதனால் அவன் இன்னும் அதிகமாக படிப்பிலும் செயலிலும் மந்தமாவான்.

 

அவன் படிக்கவில்லையே… இப்படிச் செய்கிறான் என்று எண்ணும் பொழுது என்ன செய்கின்றது? வாலி என்ற உணர்வுகள் நமக்குள் போய் நமது உடலில் அவன் மீது இருக்கும் பிரியத்தை எல்லாம் கெடுத்துவிடுகின்றது.

 

பிறகு “அவனை உதைத்தால்தான் சரிப்பட்டு வரும். அவன் தொலைந்தால் பரவாயில்லை” என்ற உணர்வு கொண்டு நாம் அடிக்கடி இப்படி எண்ணினோம் என்றால் நாம் எண்ணும் அந்த உணர்வுகள், அவனை அங்கே வழிநடத்தச் செய்கின்றது.

 

தந்தையான நாம் மகனைப் பார்த்து “டேய்… இங்கே வாடா…” என்று முறைத்துப் பார்த்துக் கொண்டே அழைப்போம்,

 

அதற்கு மகன் “என்னைத் திட்டினாய் என்னை நீ ஏன் கூப்பிடுகிறாய்” என்பான். இதைத் தடுத்து நிறுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடலிலுள்ள ஜீவாத்மாக்கள் ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணி நமது உடலில் எழும் வேதனையின் உணர்வுகளை முதலில் அடக்க வேண்டும்.

 

பின் தன் மகன் “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவன் உடல் முழுவதும் படர வேண்டும் அவன் அருள் ஞானிகளைப் போன்று சிந்திக்கும் தன்மை பெற வேண்டும் என்று

1.இதனின் உணர்வுகளைச் சமைத்துவிட்டு

2.பின் இதன் நிலை கொண்டு நல் அறிவுரையை அவனுக்குச் சொல்ல வேண்டும்.

 

இராமாயணத்தில் என்ன சொல்கிறார்கள்?

 

வேதனைப்படும் உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நமக்குள் வாலியாகின்றது. நமது உடலிலுள்ள நல்ல குணங்களை வலி இழக்கச் செய்கின்றது.

 

சுக்ரீவன் எல்லோருக்கும் உதவிகள் செய்கிறார் என்றும் சொல்கிறார்கள். மனிதரில் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமானவர்.

 

எல்லாத் தீமைகளையும் நீக்கும் வல்லமை பெற்றவர். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் உணர்வுகளைத்தான் சுக்ரீவன் என்று அழைத்தார்கள் ஞானிகள்.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்ற உணர்வை நமக்குள் வலிமையாக்கினால் என்ன ஆகின்றது?

 

மகனால் வேதனைப்பட்ட உணர்வுகள் இங்கே நமக்கு முன்னாடி நமது ஆன்மாவில் இருக்கின்றது.

 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் வலிமையான பின்

1.வேதனையால் வந்த தீமையின் உணர்வுகளை

2.நமது ஆன்மாவிலிருந்து ஒதுக்கித் தள்ளி விட்டுவிடும்.

 

இப்படி நமது ஈர்ப்பு வட்டத்திலிருந்து விலகும் பொழுது அதனின் உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து கொண்டு மேலே சென்று விடுகின்றது. இதன் மூலம் நம் ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.

 

இப்படிச் சுத்தப்படுத்திக் கொண்டபின்

1.அவன் கல்வியில் ஞானம் பெறவேண்டும்

2.அருள் ஞானிகளின் அருள்சக்தி பெறவேண்டும்

3.அவன் தெளிந்த மனம் பெற வேண்டும் என்று

துருவ நட்சத்திரத்தை எண்ணி இதனின் உணர்வுகளை அவனுக்குள் பாய்ச்ச வேண்டும்.

 

பின் அவனிடத்தில் சந்தோஷமாக இருக்க வேண்டியதைப் பற்றி சொல்லாகச் சொல்லப்படும் பொழுது “சீதா..,” (சீதா என்றால் சுவை) இதைச் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பமும் காந்தமும் கவர்ந்து கொள்கின்றது.

 

ஆகவே இது பரப்பிரம்மம். எந்தச் சுவை இணைந்ததோ அதன் மணம் வரும்பொழுது ஞானம்.

 

அப்பொழுது தன் மகனைக் கண் கொண்டு பார்த்து “அவன் அருள் ஞானம் பெற வேண்டும்”என்று சொல்லால் சொல்கின்றோம்.

1.அவன் இதைக் காதால் கேட்கின்றான்.

2.அவனின் கண் கவர்கின்றது.

3.உயிரால் நுகரப்படும் பொழுது – நுகர்ந்த உணர்வின் உணர்ச்சி

4.அவனை ஆளச் செய்கின்றது “ஆண்டாள்”.

 

நாம் இப்படிச் சமைத்து சொல்லக் கூடிய சொல்லைச் சூரியன் எடுத்துக் கொண்டால் சீதாராமன். இதனின் சுவைக்கொப்ப உணர்ச்சியின் எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

 

இதனின் உணர்வுகள் அவனுக்குள் பதிவானதால் நாம் வெளியூருக்குச் சென்றால் அங்கிருக்கும் பொழுது தன் மகனின் மீதான ஞாபகத்துடன் இருந்தால் அதனின் உணர்ச்சிகள் அவனைத் தூண்டச் செய்கின்றது. சுவையின் உணர்ச்சியை அறியும் தன்மை வருகின்றது.

 

இப்படி நாம் சொன்னவுடனே வாயு புத்திரன் ஆஞ்சநேயன். இராமனின் பக்தன் அவன் ஒரு மந்திரி.

1.அவன் இராமனின் தூதுவன்.

2.நாம் எண்ணிய நல்ல எண்ணங்கள் வாயுவாகச் சென்று அங்கே இயக்குகின்றது.

3.இதனால் மகன் சோர்விலிருந்து விடுபட்டுச் சிந்தித்துச் செயல்படும் தன்மை பெறுகின்றான்.

4.குடும்பத்தில் ஒற்றுமையும் பண்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

 

செய்து பாருங்கள்.