தீமைகள் வரும் பொழுது “புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை எண்ணி” மூடிப் பழக வேண்டும்

Image

third-eye breathing

தீமைகள் வரும் பொழுது “புருவ மத்தியில் துருவ நட்சத்திரத்தை எண்ணி” மூடிப் பழக வேண்டும்

 

பல கோடி உடல்களில் தீமையை நீக்கிய “துருவ நட்சத்திரத்தின் பெரருளைப் பெறும்” அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

 

1.அந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி நமது கண்களின் நினைவிற்கு கொண்டு வரவேண்டும்.

2.பின் புருவ மத்திக்குக் கண்களின் நினைவைக் கொண்டு வரவேண்டும்.

3.நம் மூக்கின் வழி சுவாசிப்பதற்கு மாறாகக் கண் வழி கவர்ந்து இதை நமக்குள் இணைக்கின்றோம்.

4.இது வலிமையான பின் உணர்வின் பிராணயாமம்.

5.அந்தத் துருவ நட்சத்திரத்தின் இயக்கமாக மாற்றுகின்றோம். இது தான் முருகு – மாற்றி அமைக்கும் சக்தி.

 

தீமைகளை நீக்கிய அருள் உணர்வை உயிரிலே இணைத்தபின் தீமைகள் நம் உடலுக்குள் செல்லாது உடலைச் சுற்றியே நிற்கும்.

 

அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களிலே கலந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும் என்று வலுவெற்ற வேண்டும்.

 

ஒரு நிமிடம் வலுவானபின் அந்தச் சக்தி உடலுக்குள் வலுவாக்கப்படும்போது உடலைச் சுற்றி இருக்கும் தீமைகள் நம்மைவிட்டு அகலும்.

 

துணியில் அழுக்குப்பட்டால் எப்படிச் சோப்பைப் போட்டு நுரையை ஏற்றி அழுக்கை அப்புறப்படுத்துகின்றோமோ அதைப் போல துருவ நட்சத்திரத்தின் பேரருளை நம் உடலுக்குள் செலுத்தி அதை வலுவாக்கித் தீமைகளை நம் ஈர்ப்பு வட்டத்தை விட்டு அகன்று செல்லச் செய்கின்றோம்.

 

ஒரு நோயாளியைப் பார்த்திருந்தால் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை நீங்கள் பெற்று உடல் நலம் பெறுவீர்கள் என்று வாக்கினை அங்கு பதிவு செய்தால் அவரும் நலம் பெறுவார்.

 

இராமனின் பக்தன் ஆஞ்சனேயன் சுவைக்கொப்ப எண்ணங்கள் சீதாராமன். தீமைகளை நீக்கியது துருவ நட்சத்திரம் அது சீதாராம். அந்த ராமனின் பக்தன் ஆஞ்சனேயன். அவன் வாயு புத்திரன் சுக்ரீவனின் மந்திரி.

 

சுக்ரீவன் என்பது துருவ நட்சத்திரம். அதை எண்ணத்தால் எண்ணி (சீதாராம்) நமக்குள் வலுப் பெற்று மற்றவர்கள் பெறவேண்டும் என்று சொல்லும்போது அந்த வலுவான எண்ணம் (ஆஞ்சனேயன்) வாயுவாகச் சென்று மற்றவர்களையும் பெறச் செய்யும்.

 

மற்றவர்களின் வேதனையை நுகர்ந்தால் அது வாலி. நம் நல்ல குணங்களை அடக்குகின்றது. உடலுக்குள் சென்றால் இராவணன். நல்ல குணங்களைக் கொல்கின்றது.

 

வாலியை உள்ளுக்குள் செல்ல விடாமல் இராமன் பாறையைப் போட்டு மூடி விடுகின்றான்.

1நமது உயிரின் துணை கொண்டு

2.நமக்கு மேல் இருக்கின்ற அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி புருவ மத்தியில் மூடிப் பழக வேண்டும்.

3.மூடிப் பழகிவிட்டால் நாம் நுகர்ந்த உணர்வின் செயலாக்கம் குறைந்துவிடும் என்பதற்காக

4.இராமாயணக் காவியத்தில் இவ்வளவு தெளிவாகக் கொடுக்கின்றார்கள்.

 

நமது உடலுக்குள் தீமை புகாது தடுத்து நிறுத்தி நாம் சொல்லாகச் சொல்லப்படும் பொழுது நமது சொல் வெளிப்பட்டு பிறர் செவிகளில் படுகின்றது.

 

அவருடைய கண் நம்மைப் பார்த்து உணர்வை நுகர்கின்றது. உயிரிலே பட்டு வாயுவாக மாறுகின்றது. அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே இணைகின்றது.

 

மற்றவர்களும் தீமைகளிலிருந்து விடுபடும் சந்தர்ப்பம் உருவாகின்றது. இதுதான் இராமனின் பக்தன் ஆஞ்சனேயன். சுக்ரீவனின் மந்திரி என்று இராமாயணக் காவியத்தில் தெளிவாகக் காட்டப்பட்டது.

இராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு

Image

rameswaram - ramanatha saamigal

இராமேஸ்வரத்தில் “27 கிணறைக் காட்டியுள்ளார்கள்” மனிதனுடைய பொக்கிஷம் அத்தனையும் அதிலே உண்டு

 

நம் எண்ணத்தால் உருவாக்கப்பட்டது தான் நமது உடல். இதைத்தான்  “இராமேஸ்வரம்”என்று வைத்தார்கள் ஞானிகள்.

 

நாம் எதை எண்ணினோமோ அதன் வழிப்படி இந்த உடலான பரத்தை உருவாக்கியது உயிர். இதுதான் இராமேஸ்வரம்,

 

இதை ஸ்தல புராணமாக உருவாக்கி இதே எண்ணத்தால் ஒளி என்ற உணர்வு பெற்ற துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்வதற்கு  இராமேஸ்வரத்தை அமைத்தார்கள்.

 

அங்கு அதிகாலை 4.00 மணியில் இருந்து 6.00 மணிக்குள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பதற்காகக் கடலுக்கருகில் கோவிலை அமைத்தார்கள்.

 

அதன் உணர்வை ஒரு மண்டலம் (48 நாட்கள்) வளர்த்துக் கொண்டபின்  நம் குடும்பத்தில் நமது மூதாதையர்களையோ உடலை விட்டுப் பிரிந்து சென்றவர்களையோ விண் செலுத்தித் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க முடியும்.

 

மூதாதையர்களின் உணர்வு நமக்குள் உண்டு.

 

அதன் துணை கொண்டு “எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த குலதெய்வமான உயிராத்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தில் கலந்து உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து பெருவீடு பெருநிலை அடைந்து அழியா ஒளி சரீரம் பெறவேண்டும்”என்று பிறவி இல்லா நிலையை அடையச் செய்யும் இடம் அது.

 

1.சிறிது காலமே மனித உடலில் வாழ்கின்றோம்.

2.அதற்குள் இந்த மனித உடலில் “மனதைக் குவித்தல்” வேண்டும்.

3.அதாவது மனதில் எல்லாக் குடும்பங்களும் நல்லது பெறவேண்டும், என்று எண்ண வேண்டும்.

4.இதைத்தான் இராமேஸ்வரத்தில் இராமன் மணலைக் குவித்ததாக இராமாயணத்தில் காட்டினார்கள்.

 

இராமேஸ்வரத்தில் “மனிதனுடைய பொக்கிஷம்” அத்தனையும் உண்டு.

 

27 நட்சத்திரங்களின் சத்தைச் சூரியன் எவ்வாறு பாதரசங்களாக மாற்றுகின்றதோ அதே போன்று 27 நட்சத்திரங்களின் சத்தைச் சூரியன் கவர்ந்து இயக்க அணுவாக மாற்றியதை  ஜீவ அணுவாக்கி இந்த  உடலை உருவாக்கியது உயிர்.

1.மனிதனான பின் 27  நட்சத்திரத்தையும் சேர்த்து

2.முழுமை அடையும் பக்குவத்தைத்தான் இராமேஸ்வரத்தில் காட்டினார்கள்.

 

இராமேஸ்வரத்தில் 27 கிணறைக் காட்டி இருப்பார்கள். எது எது உணர்வுகள் ஊற்றெடுத்து நமக்குள் ஒன்றாக்குகின்றது என்று இராமேஸ்வரத்தில் காட்டப்பட்டது.

 

நம் மனதைக் குவிக்கும் இடம் இராமேஸ்வரம்.

 

அங்கு நம் மூதாதையர்களை எண்ண “எங்களுடன் வாழ்ந்து வளர்ந்த, மூதாதையர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிராத்மாக்கள் அனைத்தும்

1.சப்தரிஷி மண்டலத்தில் கலந்து

2.உடலில் பெற்ற நஞ்சுகள் கரைந்து,

3.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழவேண்டும்”

4.என அவர்களை விண் செலுத்தும் இடம் அது.

5.மனிதன் ஒருவன் தான் அதைப் பெறமுடியும். கடைசி முடிவு.

 

அணுக்களாகச் சேர்த்துச் சூரியனாகிப் பிரபஞ்சமாகிப்  பிரபஞ்சத்தில் உயிரணுவாகி உயிரணு தோன்றியபின் “ஒளியின் உடலாவதுதான்”  இறுதி நிலை.

 

ஆகையால்  முதாதையர்களை முறைப்படி விண் செலுத்தினால்  அவர்கள் பிறவி இல்லா நிலை அடைகின்றனர்.  அவர்கள் முன் சென்றால்  அவர்களைப் பின்பற்றி நாம் எல்லோரும் அங்கு சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்லலாம்.

நம் வாழ்க்கையில் அறியாது வரும் துன்பங்களை நீக்கிடவே ஆலயங்களை உருவாக்கினார்கள் ஞானிகள் – துன்பங்களை நீக்கினால் உங்கள் வீடு கோவிலாகின்றது

Image

Temple Thiruvannamalai

நம் வாழ்க்கையில் அறியாது வரும் துன்பங்களை நீக்கிடவே ஆலயங்களை உருவாக்கினார்கள் ஞானிகள் – துன்பங்களை நீக்கினால் உங்கள் வீடு கோவிலாகின்றது

 

வாழ்க்கையில் நல்லதையே செய்து கொண்டு எவருக்கும் தீங்கு செய்யாமல் இருந்தாலும் சந்தர்ப்பவசத்தால் எதிர்பாராது பயந்து விடுகிறோம்.

 

அச்சமயம் பய உணர்வலைகள் நம் உடலில் சேர்ந்து விடுகின்றது.

 

நண்பர் ஒருவர் அவருக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை வேதனையுடன் சொல்லுகிறார். அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவர் வேதனையுடன் சொன்ன உணர்வலைகள் நம் உடலில் சேர்ந்து, நம்மையும் வேதனைப்படச் செய்துவிடுகின்றது. இவ்வாறு

  1. நம் வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே
  2. பல துன்பங்கள் பலவித வேதனை உணர்வுகள் நம்மையறியாது சூழ்ந்து கொண்டு

3.மன அமைதியைக் குலைக்கின்றது நோயை உருவாக்குகின்றது.

 

ஆகவே துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களின் துன்ப உணர்வுகளைப் போக்கவே ஞானிகள் அன்று ஆலயங்களை அமைத்தார்கள்.

 

எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் முதலில் விநாயகர் கோவிலுக்குச் சென்று விநாயகரைப் பார்த்து ஓம் ஈஸ்வரா’ என்று உயிரை நினைத்து வணங்க வேண்டும்.

 

பின் வானை நோக்கிப் பார்த்து இவற்றையெல்லாம் அருளிய, மகரிஷிகளின் அருளாசியை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கவேண்டும்.

 

பின் கண்களை மூடி துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவான்மாக்கள் பெறவேண்டும் என்ற உணர்வுடன் உடலுக்குள் நினைவைச் செலுத்த வேண்டும்.

 

கண்களைத் திறந்து, தீப ஆராதனை காட்டும் பொழுது கண்களைத் திறந்து வழியறிந்து செயல்படும் ஞான நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கவேண்டும்.

 

அங்கிருக்கும் மலரைப் பார்த்து மலரின் நறுமணம் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்றும் கனிகளைப் பார்த்து இக்கனிகளின் சுவை போன்று எங்கள் சொல்லும் செயலும் சுவை பெற அருள்வாய் ஈஸ்வரா என்றும் எண்ணி ஏங்கவேண்டும்.

 

பின் இங்கு வருபவர் அனைவரும் மகரிஷிகளின் அருளாசி பெறவேண்டும். அவர்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று எண்ணி ஏங்கவேண்டும்.

 

கோவிலுக்குச் செல்லும் பொழுது முதலில் விநாயகர் ஆலயத்திற்குச் சென்று மேலே குறிப்பிட்டவாறு தியானிக்க வேண்டும். அடுத்து உள்ளே செல்லும் பொழுது,

1.கோபுர வாயிலுக்கு முன் வந்தவுடன்… “கோபுரத்தைப் பார்த்து”

2.என்னில் “உயர்வான எண்ணம்” பெறவேண்டும் என்று எண்ணி ஏங்கவேண்டும்.

 

பின் இதே உணர்வுடன் யாருடனும் பேசாமல் பிரகாரத்தைச் சுற்றி வலம் வந்து சன்னதிக்கு முன் அமைந்திருக்கும் கொடிக்கம்பம் அல்லது தூபஸ்தூபி இருக்கும் இடத்தில் ஒரு நிமிடம் நின்று “சன்னதியை” நேராகப் பார்க்க வேண்டும்.

 

இந்த தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா, என்ற ஏக்க உணர்வுடன் உங்கள் உயிரை நினைத்து வானை நோக்கிப் பார்க்கவேண்டும்.

 

வானை நோக்கிப் பார்க்கும் பொழுது இந்தத் தெய்வ குணத்தை அருளிய துருவ மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுடன் ஏங்கியவாறே கண்களை மூடி அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஒரு நிமிடம் தியானித்துவிட்டுக் கண்களைத் திறந்து ஆலயத்திற்குள் செல்ல வேண்டும்.

 

பிரகாரம் வலம் வரும் பொழுது இந்தத் தெய்வ குணமாக எங்கள் சொல்லும் செயலும் இருக்க வேண்டும் என்ற உணர்வுடன் வலம் வந்து மூலஸ்தானம் வந்தவுடன் “இதே உணர்வுடன் மூலவரைப் பார்த்துக் கொண்டிருங்கள்”.

 

தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது வழியறிந்து செயல்படும் இந்த “ஜோதி நிலை” பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வுடன் பாருங்கள்.

 

அப்போது மூலவருக்குச் சாத்தப்பட்டுள்ள மலர் அலங்காரம் தெரியும் அச்சமயம் இந்த மலரின் நறுமணம் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுடன் ஏங்குங்கள்.

 

அங்கே படைத்துள்ள கனிகள் நமக்குத் தெரியும். அப்பொழுது அந்தக் கனிகளைப் பார்க்கும் பொழுது, கனிகளின் சுவையைப் போன்று எங்கள் சொல்லும் செயலும், சுவை பெற அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வுடன் எண்ணி ஏங்கி ஒரு நிமிடம் கண்களை மூடித் தியானியுங்கள்.

 

தெய்வச் சிலையைப் பார்க்கும்போது “இந்தத் தெய்வ நிலை” நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை ஒரு நிமிடம் உடல் முழுவதும் செலுத்த வேண்டும்.

 

இங்கு வருபவர்கள் அனைவரும் இந்தத் தெய்வ நிலை பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

 

சன்னதியில் இருந்து வெளியில் வந்தபின் ஆலயத்தில் அமைதியான இடத்தைப் பார்த்து ஓரமாக அமர்ந்து கொண்டு மேற்குறிப்பிட்டவாறு ஐந்து நிமிடம் கண்களை மூடித் தியானிக்க வேண்டும்.

 

பின் கண்களைத் திறந்து இந்த ஆலயத்திற்கு வரும் மனிதர்களின் உடல்களை ஆலயமாக எண்ணி அந்த உடல்களை இயக்கி ஆண்டு கொண்டிருக்கும் உயிரைக் கடவுளாக எண்ணி

1.இங்கு அருள் பெற வரும் உயிராத்மாக்கள் அனைவரும்

2.துருவ மகரிஷிகளின் அருள்சக்தி பெற்று

3.எல்லா நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வை ஆலயங்களில் படரச் செய்யுங்கள்.

 

இந்த முறைப்படி ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு தியானிப்பதால் ஞானிகள் மகரிஷிகள் உபதேசித்த அருள் சக்திகள் உங்கள் ஆத்மாவில் சேருகின்றன. அதனால் உங்கள் ஆத்மா தெய்வ நிலை பெறுகின்றது.

 

நீங்கள் ஆலயத்தில் பத்து நிமிடம் தியானத்தில் அமர்ந்து ஆலயத்திற்கு வரும் அனைவரும் வாழ்க்கையில் நலமும் வளமும் பெறவேண்டும் ஈஸ்வரா என்ற உணர்வுடன் படரச் செய்த மூச்சலைகளால் ஆலயத்திற்கு வரும் அனைவரும் அவர்கள் வாழ்வில் நலமும் வளமும் பெற உதவி செய்தவர்களாவீர்கள்.

 

கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்து வீட்டு முற்றத்தில் அமர்ந்து நம் குடும்பத்தில் அனைவரும் தெய்வ குணம் பெறவேண்டும். நம்மிடம் வியாபார நிமித்தம் வருபவர்கள் நலமும் வளமும் பெறவேண்டும். நாம் தொழில் செய்யும் இடங்கள் செழித்தோங்க வேண்டும் ஈஸ்வரா என்று ஐந்து நிமிடம் தியானியுங்கள்.

 

தியானித்துவிட்டு கோவிலிலிருந்து கொண்டு வந்த திருநீறு மலர்களை நீருள்ள சொம்பில் போட்டு மேற்கூறிய உணர்வுடன் அந்த நீரை “வீட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளித்துவிடுங்கள்”.

 

இவ்வாறு செய்வதால் வீட்டில் உள்ள தீய உணர்வலைகள் மறைந்து நல்ல உணர்வலைகள் படரும்.

1.வீடு கோவிலாகிறது.

2.உங்கள் எண்ணம் தெய்வமாகின்றது.

3.உங்கள் உயிர் கடவுளாகிறது.

விஞ்ஞானம் உடலைக் காக்கத்தான் முயல்கிறது… நம்மை அல்ல…!

Healing lights

விஞ்ஞானம் உடலைக் காக்கத்தான் முயல்கிறது… நம்மை அல்ல…! 

தர்ம சிந்தனையுடன் அன்பு, பரிவு, பாசம், ஞானம், தைரியம், சாந்தமாக வாழ எண்ணி உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலும் ஒருவர் மற்றொருவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும்போது நீங்கள் அவரைப் பார்க்கின்றீர்கள்.

அப்பொழுது உங்கள் புலனறிவால் கோப உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள ஈர்ப்பு காந்தத்தில் இணைந்தவுடன் உடல் காற்றில் கலந்துள்ள கோப உணர்வலைகளை ஈர்ப்பதனால் உங்கள் சுவாசத்துடன் அது கலக்கின்றது.

சுவாசம் உயிரில் உராய்வதனால் ஆத்திர உணர்வின் எண்ணம் இயக்கி உங்களையறியாமலேயே ஆத்திரத்துடன் பேசவோ கேட்கவோ தூண்டுகின்றது.

அச்சமயம் உங்கள் உமிழ் நீரும் மாறுபட்டு நீங்கள் உட்கொண்ட ஆகாரத்துடன் கலப்பதால் குடலில் ஒருவித எரிச்சல் ஏற்படுகின்றது. அப்பொழுது எதைச் சாப்பிட்டாலும் சுவை குன்றியே இருக்கும்.

அதனால் ஆகாரம் குறைத்துச் சாப்பிட்டு உடல் சோர்வடையக் காரணமாகின்றது. உணர்வலைகளை இரத்தம் வடித்துக் கொள்வதனால், இரவில் உறங்கும் பொழுது இரத்தம் தசைகளாக மாறும் சமயம் உடலில் ஒருவித எரிச்சலும் தூக்கமின்மையும் ஏற்படக் காரணமாகின்றது.

உதாரணமாக நீங்கள் வயலைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்து, அதனால் நெல் முளைத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.

காற்றில் மிதந்து வந்த வேண்டாத வித்துக்கள் வயலில் வீழ்ந்து களைகளாக முளைத்து நெல்லிற்கு இட்ட உரத்தைக் களைகள் எடுத்துக் கொண்டு களைகள் பெருகுகின்றன.

களைகளை நீக்கவில்லை என்றால் நெல் பயிர் வளர்ச்சி குன்றி நெல்லின் தரம் குறைந்து விடுகின்றது.

இதைப் போன்று நீங்கள் சுவாசித்த கோப குணங்களின் உணர்வலைகளின் நுண் அணுக்கள் உங்கள் இரத்தத்தில் பெருகி தசைகளாக மாறும் பொழுது தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் பெருகி மேல்வலி தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றது.

அதனால் உடல் சோர்ந்து எச்செயலையும் சோர்வுடன் செய்யக் காரணமாகின்றன.

நீங்கள் உலக நிலைகளை அறிந்துகொள்ளும் வண்ணம் டி.வி., பத்திரிக்கைகளைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

இரவு 8.00 மணியளவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என்று கொள்ளையர்கள் வீடு புகுந்தனர். வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அடித்துப் படுகாயப்படுத்தினர். வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள் என்று பத்திரிக்கையில் படிக்க நேர்கின்றது.

அப்பொழுது உங்களையறியாது பயம் கலந்த வேதனை உணர்வுகளைச் சுவாசிப்பதனால் அவை உங்கள் இரத்தத்தில் கலந்துவிடுகின்றன

அன்று இரவு நீங்கள் அமைதியாகப் படுத்திருந்தாலும் வேறு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும்
1.எதிர்பாராது சன்னல் கதவின் ஓசை “டப்…” என்று உங்கள் செவிகளில் கேட்டவுடன்
2..உங்களையறியாது பய உணர்வு உந்தப்பட்டு
3.உடல் சிலிர்த்து பய உணர்வலைகளைச் சுவாசித்து
4.மேலும் மேலும் பய உணர்வுகள் பெருகக் காரணமாகின்றன.

இது போன்று அடிக்கடி நேர்ந்தால் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் மனத்தில் ஒருவிதப் பயத்துடன் செயல்படும் நிலை ஏற்படுகின்றது,

நீங்கள் வேலையின் நிமித்தம் தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

தெருவின் முனை அருகில் செல்லும் சமயம் ஒரு கார் திடீரென்று திரும்புகையில் உங்கள் மீது மோதும் நிலையை நீங்கள் பார்க்க நேர்ந்தால் “ஆ…” என்று பயப்படுகின்றோம்.

திடீரென்று பார்க்கும்போது கண்களின் ஈர்ப்பு காந்தத்தில் பாய்ச்சுவதால் உங்கள் உடல் துரித நிலையில் பய உணர்வுகளை அதீதமாக சுவாசித்துத் துரிதமாக இயங்குகின்றது.

அப்பொழுது உடல் நடுக்கமாகி உங்களைக் காக்கும் எண்ணம் உருப்பெற்று விபத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.

அதே சமயத்தில் அதீதமான பயத் துடிப்புடன் ஓட்டுநரைப் பார்க்கும் பொழுது ஆத்திர உணர்வுகள் உந்தப்பட்டு ஆத்திர உணர்வுகளையும் சுவாசிக்க நேர்கின்றது.

ஆக பயத் துடிப்புடன் ஆத்திர உணர்வலைகள் உயிரில் உராய்வதால் புலன்களின் பொறிகள் இயக்கப்பட்டு ஆத்திரத்துடன் பேசுவதும் அதற்குரிய செயலையும் செய்விக்கின்றன.

நீங்கள் விபத்திலிருந்து தப்பியதைப் பார்த்தவர்கள்.. உங்களைப் பார்த்து…, “நீங்கள் செய்த தர்மத்தால் உங்களைத் தெய்வம் காப்பாற்றியது”, என்று ஆறுதல் கூறுவார்கள்.

ஆனால் நீங்கள் சுவாசித்த அதீத பய ஆத்திர உணர்வலைகளின் நுண் அணுக்கள் இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுகின்றன.

வயல்களைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்து பயிராக முளைத்து வரும் நிலையில் எங்கோ காற்றில் கலந்து வந்த வித்துகள் வயலில் வந்து வீழ்ந்தால் அதுவும் முளைத்து விடுகின்றது.

நீங்கள் எதிர்பாராது அதீத பய உணர்வுடன் ஆத்திர உணர்வையும் சுவாசித்ததால்
1.இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுவதும்
2.தசைகளில் பய உணர்வுகளின் அணு திசுக்களும் ஆத்திர உணர்வுகளின் அணு திசுக்களும் உருப்பெற்று
3.அதன் இயக்கத்தால் தசைகளில் அமிலங்கள் சுரந்து
4.இந்த அமிலங்கள் உடலை இயக்கும் நரம்புகளில் ஈர்க்கப்பட்டு நரம்புகள் இயங்குவதால்
5.நரம்புகளில் உள்ள அமிலங்களின் உணர்வுகளின் சத்தை எலும்பின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு
6.எலும்பினுள் “ஊனாக”வடித்துக் கொள்கின்றன.
7.இந்த ஊனைத்தான் ஞானிகள் “ஊழ்வினை”என்று பெயர் வைத்தார்கள்.

அவ்வாறு ஊனாக வடித்து வைப்பதனால் உயிரின் இயக்கத்தால் எலும்பின் காந்த ஈர்ப்பினால் உடல் காற்றில் பரவி இருக்கும் பய உணர்வலைகளையும் ஆத்திர உணர்வலைகளையும் ஈர்க்கின்றது.

உங்கள் உடல் ஈர்க்கும் அந்த உணர்வுகளை நீங்கள் சுவாசித்துக் கொண்டு இருப்பதனால் இரத்தம் வடித்துக் கொண்டதால் பய ஆத்திர குணங்களின் உணர்வலைகள் இரத்தத்தில் நுண் அணுக்களாக வளர்ச்சி பெற்று  நோய்களாக உருப் பெறுகின்றது.

இரத்தக் கொதிப்பு தசைவாதம் குடல்வாதம் பக்கவாதம் கீல் வாதம், மூட்டுவாதம், முடக்குவாதம் போன்ற நோய்கள் உருப்பெறக் காரணமாகின்றது.

நோய்கள் உருப்பெற்று அதில் விளைந்த  நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்குவதும் உயிராத்மா வளர்ச்சி குன்றி உடலை விட்டுப் உயிராத்மா பிரிந்து செல்கின்றது.

இவ்வாறு பிரிந்த உயிராத்மா மறு பிறவியில் மனித உருப் பெறும் தகுதியை இழக்கின்றது.

உடல்களில் பதிவாகி “உருப்பெற்ற நோய்களைத்தான்” விஞ்ஞானிகளால் போக்க முடியும்.

ஆனால் நோய்களினால் உடலில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று
1.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கும்,
2.உணர்வுகளின் அணுசிசுக்களை மாற்ற விஞ்ஞானிகளால் முடியாது.

விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனித உடல்களைப் பாதுகாக்க முடியுமே தவிர
1.அவர்களின் உடலை இயக்கும் உயிராத்மாவை
2.”ஒளி நிலையாக மாற்றும் ஆற்றல்” விஞ்ஞானிகளுக்கு இல்லை.

ஞானிகள் மகரிஷிகள் பேரண்டத்தில் பரவிக் கிடக்கும் பேராற்றல்களின் உணர்வலைகளின் உண்மைகளைக் கண்டறிந்து  அந்தப் பேராற்றல்களின் உணர்வலைகளைத் தங்கள் உடல்களில் சேர்த்து வளர்த்துக் கொண்டனர்.

அதனால் சந்தர்ப்பவசத்தால் தங்களுக்குள் வந்த தீய கோப குரோத ஆத்திர குணங்கள் போன்ற உணர்வலைகளை மாய்த்துவிடுகின்றனர்.

அவ்வாறு தங்களின் உடல்களில் பேராற்றல் மிக்க உணர்வலைகளை வளர்த்துக் கொண்டு உயிராத்மாவை ஒளியாக மாற்றி இன்றும் துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி ஒளியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள் பரவெளியில் பரவிக் கொண்டே இருக்கின்றன.

மேற்கூறிய நிலைகளை குருநாதர் காட்சியாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் உணர்த்தி உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

அந்த மெய்ஞானிகள் மகரிஷிகள் உபதேசித்து அருளிய ஒளியான உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற்று
1.உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று
2.உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற வேண்டுகின்றோம்.

 

என்ன வாழ்க்கை…? என்று “விரக்தி அடைந்தவர்களுக்கு…!”

Divine healing

என்ன வாழ்க்கை…? என்று “விரக்தி அடைந்தவர்களுக்கு..!” 

 

ஒரு சமயம் குருநாதர் சொன்னபடி திருப்பதியில் மேலே நாரதர் மன்றம் என்ற இடத்தில் அமர்ந்து என்னைத் (ஞானகுரு) தியானிக்கும்படி கூறியிருந்தார்.

தியானத்தில் அமர்ந்த சிறிது நேரத்தில் என் நினைவு எங்கெங்கோ சென்றது. மனைவி மக்கள் நினைவும் தன்னிச்சையாகச் செலவு செய்து கொண்டு நண்பர்களுடன் திரிந்து கொண்டிருந்த அந்த நினைவுகள் தான் வந்தது.

குருநாதரிடம் இப்படிச் சிக்கிக் கொண்டு காட்டில் அநாதையாக சரியான ஆகாரம் இல்லாமல் இப்படியெல்லாம் இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டதே…! என்ற எண்ணங்கள் வந்ததே தவிர “தியானம்” இருக்க முடியவில்லை.

சிறிது நேரத்தில் கண்களைத் திறந்துவிட்டேன்.

ஆனால் மனது “பட…பட…வென்று” துடிக்க ஆரம்பித்துவிட்டது. துடிப்பை அமைதிப்படுத்த எழுந்து நடந்தேன். அச்சமயம் அங்கே குரங்குகள் கூட்டம் தென்பட்டது.

அதை வேடிக்கை பார்த்து மனதை அமைதிப்படுத்தலாம் என்று எண்ணிக் குரங்குகள் கூட்டமாக இருக்கும் இடத்திற்கு அருகில் சென்று ஓர் மரத்தடியில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு முரட்டுக் குரங்கு குரங்குக் கூட்டங்களை விரட்டிக் கடித்துக் கொண்டிருந்தது. அப்போது சின்னக் குட்டிகள் ஓடி வந்து தாய்க் குரங்கைத் தாவிக் கட்டிப்பிடித்துக் கொளவதும் தாய்க்குரங்கு குட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடுவதையும் பார்த்தேன்.

அதை பார்த்தவுடன் என் மனம் “அலைமோதிக் கொண்டு” என் குழந்தைகளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஏக்கமும் அதிகரித்து மயக்கம் வந்துவிட்டது. மரத்தடியில் அப்படியே சாய்ந்து விட்டேன்.

மயக்க நிலையில் என் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் காட்சியாகத் தெரிகின்றன. என் மூத்த பையன் “லாரிக்கு டயர் வாங்கவும் ரிப்பேர் செலவுக்குப் பணம் வேண்டும், எங்காவது பணம் வாங்கிக் கொடு…” என்று என் மனைவியிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

பணத்திற்கு நான் எங்கு போவேன்…? என்று என் மனைவி சொல்லிக் கொண்டிருக்கின்றது.

“பணம் வாங்கித் தருகிறாயா…? இல்லையா…?” என்று மிரட்டுகிறான் பையன்.

உன் அப்பாவிடம் போய்க் கேள் என்று சொன்னவுடன் வீட்டை அடமானம் வைத்துப் பணம் தருகிறாயா? இல்லையா? என்று மிரட்டுகிறான் பையன்.

அப்பொழுது என் மனைவி அழுது கொண்டே “கையிலிருக்கும் பணத்தையெல்லாம் தொலைத்து வயலையும் அடமானம் வைத்துத் தொலைத்துவிட்டாய்,

இனி வீட்டை அடமானம் வைத்து உனக்குக் கொடுத்துவிட்டு நாங்கள் எங்காவது விழுந்து “சாக வேண்டியதுதான்” என்று சொல்லிச் சத்தம் போட்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த 2½ வயது பையனும் பெண் குழந்தைகளும் அழுது கொண்டே “அப்பா வரட்டும் சொல்லுகிறேன்”என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

உடனே என் மனைவி கடைசிப் பையனைத் தூக்கிக் கொண்டு “குளம் குட்டையில் விழுந்து சாவோம்”என்று சொல்லி வீட்டை விட்டு வெளியில் செல்கின்றார்கள்.

அச்சமயம்… அக்கம் பக்கம் உள்ளவர்கள் என் மனைவியையும், குழந்தைகளையும் தடுத்து நிறுத்தி
1.என் பெயரைச் சொல்லி
2.“பாவிப்பயல்…! இப்படிச் செய்துவிட்டு எங்கோ போய் விட்டானே…” என்று ஏசுகிறார்கள்.

இது காட்சியாகத் தெரிந்தவுடன் என் உடலில் உந்தப்பட்டு மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தேன்.

“இது என்ன வாழ்க்கை…!”என்ற வெறுப்பு மேலோங்கி தற்கொலை செய்து கொள்ளும் உணர்வுகள் உந்தப்பட்டு எழுந்து நீர் வீழ்ச்சியை நோக்கி நடக்கலானேன்.

அச்சமயம் மாலை 6.00 மணியிருக்கும். திடீர் என்று குருநாதர் காட்சி கொடுத்தார்.
1.“நான் சொல்வதைச் செய்கிறேன் என்றாய்
2.இப்பொழுது சாகப் போகிறேன் என்று சொல்கிறாயே…”என்று சொல்லி சிரிக்கத் தொடங்கிவிட்டார்.

உடனே என் கலக்கம் தீர்ந்தது. மனம் அமைதி அடைந்தது.

ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தேன். குருதேவர் காட்சி கொடுத்த நிலையிலேயே உபதேசிக்கலானார்.

சூரியன் தனக்குத் தானே வெப்பத்தை உருவாக்கிக் கொண்டு இயங்குகின்றது.

அதைப் போன்று சூரியனில் உதித்த ஒரு உயிரணு சூரியனால் பிரபஞ்சத்தில் வீசப்பட்டு சூரியனைப் போன்று தனக்குத் தானே வெப்பத்தை உருவாக்கும் துடிப்பு நிலை கொண்டு பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்க்கின்றது.

அப்படி மிதந்து கொண்டிருக்கும் அந்த உயிரணு பூமியால் ஈர்க்கப்பட்டு பூமியில் மிதந்து தாவர இனங்களில் வீழ்ந்து தாவர சத்தினை ஈர்த்து நுண்ணிய கிருமியாய் உடல் பெறுகின்றது.

சில நாட்களில் உடலில் வளர்ச்சிப் பெற்ற நுண்ணணுக்கள் உயிரில் ஆத்மாவாகச் சேர்ந்து கிருமியான உடல் மடிந்து விடுகின்றது. கிருமியின் உடலில் இயங்கும்போது உயிரில் ஆத்மாவாக சேர்த்துக் கொண்ட உணர்வின் சத்து மறுபிறப்பாக புழுவாக மறு உடல் பெறுகின்றது.

இவ்வாறே ஒவ்வொரு உடலிலும் உணவும் உணர்வும் எடுத்துக் கொண்டு ஜீவித்த நிலைகளுக்கொப்ப பூச்சியாக பாம்பாக பறவையாக, மிருகமாக, இவ்வாறு பல கோடி ஜென்மங்கள் பிறந்து இறந்து
1.மனித உடல் வரை உருவாகியது
2.”உயிரின் துடிப்பின்… ஈர்ப்பு நிலையால்தான்” என்பதை
3.முன்பு காட்சியாகக் காண்பித்து உணர்த்தியுள்ளேன் என்று கூறினார்.

உன் வாழ்க்கையில் குடும்பப் பற்றும் குழந்தைகளின்பால் உனக்கு உள்ள பாசத்தால் உன் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் உந்தப்பட்டு எவ்வாறு உன் உடலில் செயல்படுகின்றன?

அதை நீ “அறிந்து உணரவே” உன் உணர்வுகளை உந்தச் செய்து உன் குடும்பச் சூழ்நிலைகளைக் காட்சியாகக் காணச் செய்தேன். ஆனால் காட்சியாகக் கண்ட நிகழ்ச்சிகளினால்,
1.”உன் உடலின் உணர்வுகள் உந்தப்பட்டு”
2.நீ சுவாசித்த மூச்சால் சிந்திக்கும் திறன் இழந்து உடல் சோர்வடைந்து,
3.”தற்கொலை…” செய்து கொள்ளும் எண்ணம் உருப்பெற்று,
4.உன் குழந்தைகளின்பால் உள்ள பாசத்தையும் மறந்து
5.உன் உடலையும் மாய்த்துவிடச் செயல்படுத்தியதல்லவா…? “உன் சோர்வடைந்த உணர்வுகள்” என்றார் குருநாதர்.

இதைப் போன்றே சுற்றுப்புறச் சூழ்நிலைகளினால் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்
1.புலனறிவால் ஈர்க்கப்பட்ட உணர்வின் சுவாசத்தால்
2.”உடலில் உள்ள உணர்வுகள் உந்தப்பட்டு”
3.தீய செயல்களைச் செயல்படுத்தச் செய்யும் தீய உணர்வுகளை மாய்த்திட
4.நான் உனக்கு “ஆத்ம சுத்தி”செய்து கொள்ளும் ஆற்றல் பெறக் கற்றுக் கொடுத்தேன் அல்லவா
5.நீ முயன்று ஆத்ம சுத்தி செய்து கொள்ளூம் ஆற்றலை ஏன் பெறவில்லை? என்று கேட்டார்.

பின் தியானத்தில் அமர்ந்தேன். விடிவதற்குள் “ஆத்ம சுத்தி செய்து கொள்ளும் உணர்வின் ஆற்றலைப் பெறும்படி”பல நிலைகளை உணர்த்திக் காட்டினார்.

குருநாதரிடம் அனுபவபூர்வமாக இவ்வாறு பெற்ற அருள் மகரிஷிகளின் ஆற்றல்களைத்தான் ஞான வித்துக்களாக உங்களுக்குள் ஊன்றுகின்றோம்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எத்தகையை நிலையாக இருந்தாலும் அதிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணம் கொண்டு ஆத்ம சுத்தி செய்தீர்கள் என்றால் விடுபடும் ஆற்றல் கிடைக்கும்.

அதற்குண்டான மார்க்கங்களும் வரும். செய்து பாருங்கள்.

“உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய பணி எது…” என்று காட்டினார் குருநாதர்

Image

Soul is sole God

“உயிரான ஈசனுக்குச் செய்ய வேண்டிய பணி எது…” என்று எனக்குக் காட்டினார் குருநாதர்

 

உயிரே கடவுள்.

 

1.உன் உடலை ஆள்பவனும் ஆண்டவனாக இருப்பவனும் உன் உயிர்தான்.

2.உடலின் இயக்கத்தின் உணர்வில் எழும் எண்ணத்தினால்

3.சுவாசிக்கும் உணர்வே (உன் உயிர்) இறையாகி

4.உடல் வளர இறைவன் ஆகின்றான்.

 

உன் உடலில் சேர்த்துக் கொண்ட உணர்வின் ஆற்றலை உன் சொல்லின் செயலின் ஆற்றலும் அதாவது மயில் துத்தத்தைக் (விஷத்தை) கண்களால் பார்க்கின்றாய் என்று வைத்துக்கொள்.

 

அதைப் பார்க்கும் பொழுது அமைதி கொண்டிருக்கின்றது. ஒரு தீங்கும் செய்வதில்லை. அதை நீ சாப்பிட்டால் உன் உடலின் இயக்கமே மாறுபட்டு குமட்டலும் வாந்தியும் வரச் செய்கின்றது.

1.உடலைச் சோர்வடையச் செய்கின்றது.

2.இறந்துவிடுவோமோ என்று தோன்றுகின்றது.

 

இதைப் போன்றே மிளகாயைப் பார்க்க அமைதியாகத் தெரிகின்றது. சாப்பிட்டாலோ “ஆ…” என்று அலறச் செய்கின்றது. காரத்தைத் தணிக்க எண்ணம் தோன்றுகின்றது. நீரைத் தேடிச் சென்று குடிக்கச் செய்கின்றது.

 

சுவையான இனிப்பைச் சாப்பிட்டாலோ மனது மகிழ்ச்சியடைகின்றது. ஆனால் இனிப்பு அதிகமாகிவிட்டாலோ அதைத் தணிக்க எண்ணம் தோன்றுகின்றது. நீரைத் தேடிச் சென்று குடிக்கச் செய்கின்றது.

 

இதைப் போன்றே நீ சுவாசிக்கும் உணர்வின் செயலே தெய்வம் ஆகின்றது. தெய்வச் செயலாக அமைகின்றது.

 

நீ வாழ்க்கையில் பற்பல குணங்கள் கொண்ட மனிதர்களிடம் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அச்சமயம் எதிர்பாராது ஒரு முரடனிடம் வாக்குவாதங்கள் முற்றுகின்றது என்று வைத்துக் கொள்வோம்.

 

நீ உனக்குள் வலுவை மனதில் வைத்து “உன்னை அழித்துவிடுகிறேன் பார்… என்று முரடனைப் பார்த்துச் சொல்கிறாய்.”

 

உன் சொல்லில் வெளிப்படும் உணர்வுகள் முரடனின் செவிகளில் ஒலித்து அவன் உடலின் உணர்வுகள் உந்தப்பட்டு உன்னை அழித்துவிடும் எண்ணம் அவனுக்கு அதிகம் உருப்பெறுகிறது.

 

இந்தச் சந்தர்ப்பத்தில் நீ சுவாசிக்கும் உணர்வுகள் உன் இரத்தத்தில் கலந்து முரடனை அழித்துவிடும் எண்ணத்தை உணர்த்திக் கொண்டே இருக்கும்.

 

“முரட்டுத்தனமான உணர்வுகள்…” உன் உடலில் சேர்ந்து கொண்டு வினையாக விளைந்து உன் உடலில் ஆத்மாவாகச் சேர்ந்து சேர்த்துக் கொண்ட வினைகள் அணு சிசுக்களாக உருப்பெற்று விடுகின்றன.

 

உன் உடலை விட்டு உயிர் வெளியே செல்லும் பொழுது உயிரின் ஈர்ப்பில் வளர்ச்சி பெற்ற உன் உணர்வின் வினைகள் மறு பிறவியில் மற்றொன்றைக் கொன்று புசிக்கும் மிருக உருவமாக உடலைப் பெற்றுவிடும் என்று உணர்வாகவும் காட்சியாகவும் உணர்த்தினார்.

 

இதையெல்லாம் அறிந்ததும் என்னை அயறியாது எனக்குப் பய உணர்வுகள் வந்துகொண்டிருந்தது.

1.என் சொல்லும் செயலும் நன்மை செய்யும் நிலை பெறவேண்டும்.

2.என் சொல்லும் செயலும் பிறருக்குத் தீங்கு செய்யாது காக்க வேண்டும் என்று குருநாதரிடம் வேண்டினேன்.

 

அவர் பலமாகச் சிரித்துவிட்டு “உயிரே கடவுள்…”அவன் வீற்றிருக்கும் ஆலயம் உன் உடல். அதில் அசுத்தம் சேராது காக்க வேண்டியது உன் கடமை. உன்னையறியாது அசுத்தமாவதைச் சுத்தம் செய்வது உன் பொறுப்பு என்று கூறினார்.

 

இந்தப் பூமியில் மனிதர்களாக வாழ்ந்து வாழ்க்கையில், தன்னுள் சேர்த்த தீய உணர்வுகளை மாய்த்து மகரிஷிகளாகி உயிருடன் உணர்வுகள் ஒளியின் ஒளியாக ஒன்றி ஒளியின் உருவமாக ஒளிர்ந்து விண்ணில் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டுள்ளார்கள்.

 

அதனின்று வெளிப்படும் உணர்வின் ஆற்றலை

1.அந்த மகரிஷிகள் வெளிப்படுத்தும் உணர்வின் ஒளி அலைகளை உனக்குள் சேர்த்து,

2.உன்னையறியாது உன்னில் சேர்ந்த தீய உணர்வுகளை மாய்த்து

3.உன் எண்ணம் சொல் செயல் புனிதம் பெறு.

4.இதுவே உனக்குள் உயிராய் வீற்றிருந்து உன்னை ஆண்டு கொண்டிருக்கும் ஆண்டவனுக்கு நீ செய்யும் பணியாகும்.

 

இப்பணியில் ஆண்டவனின் பணியாக “நீ ஒளி நிலை பெறுவாயாக…!” என்று ஆசீர்வதித்தார்.