கெட்ட நேரத்தை “நல்ல நேரமாக மாற்ற முடியும்…”

Chitrai festival

கெட்ட நேரத்தை “நல்ல நேரமாக மாற்ற முடியும்…”

திட்டியவர்களை எண்ணும் பொழுது அந்த உணர்வின் தன்மை நம்முள் பதிவாகின்றது. அவர்களை எண்ணினால் அந்தக் குணம் நமக்குள் குருவாக இயக்கி அவருடன் சண்டையிடச் செய்யும்.

ஒருவர் வேதனைப்பட்டு சொல்லும் நிலைகளை நாம் எண்ணத்தில் எடுத்துக் கொண்டால் அதுவும் நமக்குள் பதிவாகின்றது.

அவர் கஷ்டப்படுகின்றார் என்று மீண்டும் நினைக்கப்படும் பொழுது, அந்த வேதனையான உணர்வின் சக்தி நமக்குள் குருவாக நின்று அடிக்கடி வேதனைப்படச் செய்து கடைசியில் நோயை உருவாக்கும்

சண்டை போடுபவர்களையும் கஷ்டப்படுபவர்களையும் எந்த அளைவிற்கு நாம் வேடிக்கை பார்த்து அவர்களுடைய குறைகளை ஏற்றுக்கொள்கின்றோமோ அதே போல
1.நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் குறைகள் நீங்க வேண்டும்,
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்
3.அவர்கள் பெற்ற மெய் ஒளி பெற வேண்டும் என்று
4.கூர்மையான எண்ணங்களைச் செலுத்தி ஏக்க உணர்வுடன் நாம் இருந்தால்
5.அதுவே நமக்குள் குருவாக நின்று இயக்கி மெய் வழியில் அழைத்துச் செல்லும்.

இயற்கையின் சக்தி நம்மை எப்படி மனிதனாக வளர்த்ததோ இதைப் போல மனிதனாக வளர்ந்து உணர்வை ஒளியாக மாற்றி விண் சென்ற அந்த மெய் ஒளியின் தொடரை நாமும் தொடர முடியும்.

இப்படி எடுத்துக் கொண்டால் தான் அந்த ஆற்றல்களைப் பெற முடியுமே தவிர நாம் அமைதி கொண்ட நேரத்தில் இதைப் பெறவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தால் அது நடக்காத காரியம்.

ஏனென்றால் அமைதி கொண்டு தியானித்து எழுந்த பின் பிறர் செய்யும் செயலைக் கண்ணுற்றுப் பார்த்து அதை நுகர்ந்தால் நம் உயிர் அதனின் இயக்கமாக இயக்கி உணர்ச்சிகளைத் தூண்டி நுகர்ந்த உணர்வின் சொல்லாகவும் செயலாகவும் செயல்படுத்திவிடும்.

தீமைகள் வரும் பொழுதெல்லாம் அந்த இயக்கத்தையே உபயோகித்து “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று விண்ணிலே நினைவைச் செலுத்தினால் நம் எண்ணங்கள் புவி ஈர்ப்பின் பிடிப்பைக் கடந்து செல்லும்.

இப்படிப் பழக்கப்படுத்திக் கொண்டால்
1.தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்காது.
2.விண்ணின் தொடர்புக்குள் நாம் செல்கிறோம்.
3.மகரிஷிகள் ஆற்றலைப் பெறும் தகுதி துரிதமாக வந்து சேரும்.
4.தீமைகளை அகற்றும் ஆற்றல்களைப் பெறுகின்றோம்.
5.மெய் ஒளி நமக்குள் சிறுகச் சிறுகப் பெருகுகின்றது.
6.மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திலேயே வாழத் தொடங்குகின்றோம்.

சந்தர்ப்பங்கள் நம்மை இயக்கினாலும் அதே சந்தர்ப்பத்தையே நன்மையைப் பெறும் சந்தர்ப்பமாக நாம் மாற்ற முடியும். மனிதன் ஒருவனால் தான் இது முடியும்.

“மெய் ஞானத்தைப் பெறவேண்டும்” என்ற எண்ணத்தில் ஏங்கி வருவோருக்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

Image

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

“மெய் ஞானத்தைப் பெறவேண்டும்” என்ற எண்ணத்தில் ஏங்கி வருவோருக்காகத்தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

 

தன்னுடைய கௌரவத்தைக் காண்பிப்பதற்காக “ஒரு செயலை நீ செய்… பரவாயில்லை…!” என்று சொல்வோரும் உண்டு. ஏனென்றால் தபோவனத்தை அவர்களுடைய சுயநலன்களுக்குப் பயன்படுத்தும் நிலைகள் வந்து விட்டது.

தபோவனத்திற்கு எதற்காக வந்தோம்…?

1.பிறருடைய நிலைகளைக் கண்டு உணர்ந்து அவர்கள் மகிழச் செய்வதற்காகத்தான் வருகின்றோம்.
2.அதற்காகத்தான் இங்கே நாம் தங்கி இருக்கின்றோம் என்ற எண்ணம் இல்லை.
3.அவரவர்கள் கௌரவத்தை காட்டும் நிலைகள் தான் வருகின்றது.

நான் (ஞானகுரு) எத்தனையோ பாடுபட்டு மகரிஷிகள் கண்டறிந்த உண்மையின் நிலைகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று இதைச் செயல்படுத்தும் நிலையில் அதை அழிக்கக்கூடிய சக்திக்கு வந்துவிட்டார்கள்.

மக்கள் அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று எண்ணிய நிலைகளையெல்லாம் தகர்க்கும் நிலைகளுக்கு வருகின்றது.
1.தவறென்று தெரிகின்றது.
2.தவறைத் திருத்தும் நிலைகள் வரவில்லை.

தபோவனத்திற்குள் இருக்கின்றோம் என்று சொன்னால் வெளியிலிருந்து இங்கே வருகின்றவர்கள் நம்மைப் பார்த்து சந்தோஷப்பட வேண்டும்.

அதை விடுத்துவிட்டு ஒருவருக்கொருவர் குறை கூறும் நிலைகளில் தான் இருக்கின்றார்கள். தபோவனத்தை வளர்க்க வரவில்லை. தபோவனத்திற்குள்ளேயே இருந்து கொண்டு தபோவனத்தை அப்படியே பாதிக்கக்கூடிய நிலைகளில் சில பேருடைய வேலைகள் நடக்கின்றது.

ஆனால் சாமி (ஞானகுரு) மேல் பற்று உண்டு. சாமிக்காக வேண்டிப் நான் பார்க்கின்றேன்… இல்லையானால் “உன்னை செய்வேன் பார் தெரியுமா…!” என்கின்றனர்.

பகைமை உணர்வைத்தான் வளர்க்க முடிகின்றது. பகைமையை அறவே அறுக்க வேண்டியதற்காக வேண்டிச் செய்கின்ற செயலை யாருமே செய்யவில்லை.

ஏனென்றால் அதற்காக வேண்டி இந்தத் தபோவனத்தை வைக்கவில்லை.
1.அரும்பெரும் சக்தி பெற வேண்டும்
2.மெய் ஞானத்தைப் பெறவேண்டும் ஏங்கி வருவோருக்காகத்தான்
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனம் அமைக்கப்பட்டுள்ளது.

இவைகளெல்லாம் மாற வேண்டும். ஒருங்கிணைந்த நிலைகள் கொண்டு நமது குரு அருளை எப்படிப் பரப்ப வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும்.

“நான் இல்லை என்றால்…, தபோவனமே இல்லை…!” என்ற நிலைக்கு ஒவ்வொருவரும் தயாராகி விட்டார்கள். அவர்களால் தான் (சுமார் 40 பேர்) தபோவனம் நடக்கின்றது என்ற நிலையும் “குருவினால் அல்ல…!” என்ற நிலைகளில் நடந்து கொண்டு உள்ளார்கள்.

நான் எத்தனை அரும்பாடுபட்டு வந்தேனோ அதை எல்லாம் தடுக்கும் நிலைகளுக்கு விளைகின்றது. ஆனால் அவர்களுடைய குற்றம் அல்ல. புற நிலையிலே உணர்வுகள் இங்கே வளர்க்கப்படும் நிலைகளேதான் வருகின்றது.

இதைப் போன்ற தீமைகளை நிறுத்தியாக வேண்டும். நாம் பிறருக்கு நல்லதை நாம் எடுத்து வளர்த்தே ஆக வேண்டும் என்ற உணர்வினைக் கடைப்பிடிக்க வேண்டும்.

தபோவனத்திற்குள் வந்தால் குரு அருளின் தன்மை கொண்டு எல்லோரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணங்கள் வர வேண்டுமே தவிர “தீமையின் நிலைகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்…” என்று வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

வெளியிலிருந்து எவ்வளவோ பேர் ஆர்வமாக வந்து ஞானத்தில் வளர்ச்சி அடைகின்றனர். நாம் இங்கே இருக்கின்றோம் என்று சொன்னோம் என்றால் அவர்களுக்கு நாம் எப்படிப்பட்ட சேவை செய்வதாக இருக்க வேண்டும் என்ற நிலை இல்லை.

“நானா… நீயா…!” என்றும் சிலருடைய செயல்களைப் பார்த்தவுடனே “சீ…” என்று காறித் துப்பும் அளவிற்குச் செயல்படுகின்றார்கள்.

அருள் ஞானப் பாதையில் போகும் எவரையும் யாருமே தடைப்படுத்தக்கூடாது.
1.தடைப்படுத்தினால் அந்தத் தடையின் உணர்வுகளை
2.அவர்களே அறிய வேண்டிய நிலைகள் நிச்சயம் வரும்.

ஏனென்றால் உலகம் கடும் நஞ்சு கொண்ட நிலைகளாகச் சென்று கொண்டிருக்கும் நிலையில் இதில் சிறிதளவு எடுத்து நமக்குள் பதியச் செய்து விட்டால் போதும். அந்த நஞ்சு… “நல்ல உள்ளங்களை மாற்றிவிடும்…”

எங்கிருந்தோ ஏங்கி வரக்கூடிய நிலைகளில் தபோவனத்திற்கு வந்திருக்கின்றோம் என்றால்
1.நாம் பக்குவம் அடைய இங்கே வந்தோமே தவிர
2.பக்குவத்தைச் சிதறச் செய்ய அல்ல.
3.பிறர் பக்குவமடைந்தால் அவரைப் புண்படும் நிலைகளுக்குக் கொண்டு செல்வதற்கு அல்ல.

1.சாமிக்காக வேண்டிப் பார்க்கிறேன்.
2.நான் தபோவனத்தைக் காக்கின்றேன்…! என்று சொல்லி
3.இப்படியெல்லாம் யாரும் செயல்படுத்த முடியாது.

ஏனென்றால் “முண்டாசு” கட்டுகின்ற நிலைக்குக் கூடச் சிலர் போய் விட்டனர். எதன் அடிப்படையில் எங்கே வந்து எதனைச் செய்கின்றோம் என்ற நிலைகளில் சற்றும் சிந்தித்துச் செய்கின்றார்களா என்றால் இல்லை.

வெகு தூரத்திலிருந்து இங்கே தபோவனத்திற்கு ஞானத்தைப் பெறுவதற்காக வருவோரைப் புண்படும்படிச் செய்தால் அதனுடைய விளைவு என்ன ஆகும்…! என்று அறிய வேண்டும்.

பிறர் மேல் குறை கூறும் நிலைகள் அறவே அகற்றப்பட வேண்டும். பிறருக்குத் தீங்கு செய்யாது நாமே அப்புறப்படுத்திக் கொள்வது தான் நல்லது.

நிறைவான மனங்கள் பெற வேண்டும் என்று ஒருவொருக்கொருவர் நாம் தியானித்து அதைத் தவமாக இருக்க வேண்டும். ஆகவே தபோவனத்திற்குள் வந்தால் சேவையின் மனப்பான்மையில் தான் வர வேண்டும்.

1.எல்லோரையும் மகிழச் செய்யும் நிலைகளுக்கு வர வேண்டும்.
2.பிறரை மகிழச் செய்தால் அந்த மகிழும் உணர்வுகள் நமக்குள்ளும் வளர்கின்றது.
3.நம்மையும் மகிழச் செய்கின்றது.
4.தீமையற்ற நிலையை நமக்குள் வளர்க்கின்றது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நாம் தியானித்தல் வேண்டும். அதே போல் நாம் பார்ப்போரெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று அவர்கள் வாழ்க்கையில் எல்லோரும் மகிழ வேண்டும் என்ற தவத்தை நாம் மேற்கொள்ள வேண்டும்.

தீமை என்ற நிலைகளை அகற்றி அருள் ஞானியின் உணர்வை நாம் பெருக்கித் தபோவனத்தையும் புதிய பூமியையும் வளர்த்தல் வேண்டும்.

தபோவனத்திற்குள்ளும் சரி புதிய பூமியிலும் சரி. குரு நான் நல்ல “நீங்கள் தான் குருவாக வளர்ந்து காட்ட வேண்டும்…” இங்கு வருவோருடைய நிலைகளுக்கு நம்முடைய ஞானங்கள் குருவாக இருக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் அந்த எடுத்துக்காட்டான நிலைகளை அந்தப் பரிவும் பணிவும் பண்பும் கொண்டு குரு சேவையின் கடமையில் நாம் வளர வேண்டும்.

துருவ மகரிஷிகளின் உணர்வைப் பின்பற்றி இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக எப்படி வாழ்கின்றார்களோ இதைப் போன்று நாம் குரு அருளின் தன்மை கொண்டு ஒரு மண்டலமாக வாழ்ந்து உலகைக் காத்திடும் நிலையாக வளர்தல் வேண்டும்.

“குரு அருளை நமக்குள் ஏற்று…” எல்லோருக்கும் அந்த உயர்ந்த பண்புகள் வளர வேண்டும் என்ற எடுத்துக்காட்டாக நாம் வர வேண்டும்.

இயக்கச் சக்தியின் ஒட்டத்தை அதிகமாகக் கூட்டி “எண்ணிய சக்தியைப் பெறும் வழி

prayer (2)

இயக்கச் சக்தியின் ஒட்டத்தை அதிகமாகக் கூட்டி “எண்ணிய சக்தியைப் பெறும் வழி 

 

இன்று ரேடியோக்களிலோ மற்ற டி.வி.களிலோ ஒலி/ஒளிப்பரப்புச் செய்யும் உணர்வின் அலைகளை (மின் காந்த அலைகளை) ஒரு இயந்திரத்தில் அதே அலை வரிசையில் வைத்துப் பட நிலைகளையும் ஒலி அலைகளையும் நாம் பார்க்கின்றோம் கேட்கின்றோம்.

இதைப் போன்றுதான் ஒவ்வொரு மனிதனும் நாம் பேசும் சாதாரணப் பேச்சாக இருந்தாலும் சூரியனின் காந்தச் சக்தி கவர்ந்து அலைகளாகப் படரச் செய்கின்றது.

ஞானிகள் மகரிஷிகள் அவர்கள் உடல்களில் எடுத்துக் கொண்ட ஆற்றல் மிக்க சக்திகளும் அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்படுத்திய உணர்வலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு அலைகளாக இன்றும் நமக்கு முன் சுழன்று கொண்டிருகின்றது.

அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க அச்சக்தியைப் பெறுவதற்குத்தான் தியானம் என்ற நிலைகளில் நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.

மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெற வேண்டும் என்றால் நமது உயிரின் ஆற்றலையும் அது நமக்குள் இயக்கக்கூடிய சக்தியையும் உணர்ந்தறிந்து கொள்ள வேண்டும்.

ஒரு மேக்னட்டில் காந்தத்தை அதிகமாகக் கூட்டச் செய்யும்போது அந்தச் சுழற்சியின் வேகத்தைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றது.

அதைப் போல நம் உயிரின் இயக்க ஓட்டத்தின் நிலைகள் கொண்ட நமக்குள் காந்தப் புலனை அதிகமாகக் கூட்டினால் அதன் வழி கொண்டு நமக்குள் ஆற்றலின் சக்தியை பெருக்கச் செய்ய முடியும்.

குற்றம் செய்தவரை எண்ணும்போது இந்த உணர்வுகள் நமக்குள் இயக்கியவுடன் கோப உணர்ச்சிகள் மிகவும் துரிதமாக இயக்குகின்றது.

இதைப் போன்றுதான் நம் உயிரின் நினைவலைகளை அந்த மகரிஷிகளின் பால் செலுத்தி மெய் ஒளி பெற வேண்டும் என்று ஆற்றலின் நினைவை நாம் கூட்டும் போது
1.இயக்கச் சக்தியின் ஓட்டத்தை அதிகமாக கூட்டி
2.நாம் “எண்ணிய சக்தியைப் பெறக்கூடிய தகுதி…” பெறுகின்றோம்.

ஆகவே இதை நினைவில் கொண்டுதான் இயக்கப்பட வேண்டும். எட்டாத தூரத்தில் விண்ணிலே மகரிஷிகள் இருந்தாலும் இந்த முறையைக் கையாண்டால் அவர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்.

ரேடியோ டி.வி. போல்
1.(LIVE) நேரடியாக அந்த அலையின் தொடரிலே உணர முடியும்.
2.அவர்கள் துணை கொண்டு இயக்கவும் இயங்கவும் நம்மால் முடியும்…!

நம் அன்றாட வாழ்க்கையில் வரும் பகைமையான உணர்வுகளை அகற்றிப் பழக வேண்டும்

Image

நம் அன்றாட வாழ்க்கையில் வரும் பகைமையான உணர்வுகளை அகற்றிப் பழக வேண்டும்

தினசரி நாம் உடல் அழுக்கைப் போக்கி விடுகின்றோம். துணிகளில் பட்ட அழுக்கினைத் துவைத்து விடுகின்றோம்.

ஆனால் நம் உணர்வுகளில் (ஆன்மாவில்) படும் அழுக்குகளைப் போக்க ஞானிகள் காட்டிய முறையைக் கடைபிடிக்கத் தவறி விட்டோம்.

அன்றாட வாழ்க்கையில் நம்மை அறியாது எத்தனையோ நிலைகளில் குடும்பத்திலும் சரி தொழிலும் சரி வேலை பார்க்கும் இடங்களிலும் சரி
1.ஒருவருக்கொருவர் பகைமையாகி விடுகின்றது.
2.நம் மன அமைதியைக் குலைத்து விடுகின்றது.

சிறிது நேரம் அமைதியாக இருந்தாலே அந்த எண்ணங்கள் நமக்குள் மேலோங்கி வந்து சிந்தித்துச் செயல்படும் நல்ல உணர்வுகளை மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளில் பிறர் மேல் உள்ள பகைமைகளை எண்ணாது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று இந்த உணர்வினை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதை வளர்க்க வளர்க்க இந்த உணர்வின் தன்மை நமக்குள் வலுப் பெற வலுப் பெற நம்மை எண்ணும்போதெல்லாம் கடும் ஆயுதமாக அவர்களை மாற்றும்.

இதை நுகர்ந்தார்கள் என்றால் அவர்கள் அறிவின் நிலையை மடக்கும். அங்கே தீமையின் நிலையை செயலற்றதாக மாற்றும்.

அவர்கள் சிந்தித்தால் சிந்தித்த வினையின் தன்மை கொண்டு நன்மை அடைவார்கள். இல்லையென்றால்
1.அவருக்குள் விளைந்த உணர்வுகள் அனைத்தும் ஒடுங்கி
2.பிறப்பின் உண்மையை அவர்கள் அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.
3.இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

இந்த மனித வாழ்க்கையில்
1.நாம் தீமையைப் பார்க்காமல் இருக்க முடியாது.
2.தீமை என்று உணரவில்லையென்றால் தீமையில் இருந்து விடுபட முடியாது.
3.ஆனால் தீமையை நுகரும் பொழுது அதை ஜீவ அணுவாக மாற்றி விடுகின்றது நமது உயிர்.

அந்தத் தீமையின் உணர்வுகள் மீண்டும் மீண்டும் நமக்குள் வந்தே சேரும். அப்பொழுதெல்லாம். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உயிரிடம் கட்டளையிட்டு அந்த உணர்வின் தன்மையை ஈர்ப்பின் தன்மை இல்லாது துடைத்தல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய முறைப்படி பிறரின் உணர்வுகள் நமக்குள் பதிவாகாதபடி தடைப்படுத்த வேண்டும். சந்தர்ப்பத்தால் வாழ்க்கையில் வரும் தீமைகளை நாம் அடிக்கடி தூய்மைப்படுத்தல் வேண்டும்.

இந்த உணர்வை ஒட்டி வரும் போதுதான் நம்மைக் காத்திடும் நிலையாக வளர முடியும்.

மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று சேர்வது எப்படி…?

self-confidence

மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் சென்று சேர்வது எப்படி…?

இந்த மனித உடலுக்குப் பின் அடுத்து நம்முடைய எல்லை எது? என்று ஒரு முடிவிற்கு ஒவ்வொருவரும் வர வேண்டும். ஏனென்றால் நமது எல்லை அந்தச் சப்தரிஷி மண்டலம் தான்.

இந்த வாழ்க்கையில் வரக்கூடிய எத்தகைய தீமையாக இருந்தாலும் உடனுக்குடனே இது மாற்ற வேண்டும்.

மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

கெட்டதைப் பார்க்கின்றோம். அதைத் தெரிந்து கொள்கின்றோம். ஆனால் அந்தத் தீமையான உணர்வு நமக்குள் பதிந்து விடக்கூடாது.

கெட்டது விளையாமல் தடுப்பதற்குத்தான் உங்களுக்கு சக்தி கொடுக்கின்றோம். அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

வெளியிலிருந்து உள்ளுக்குள் புகும் தீமைகளை “ஈஸ்வரா…” என்று புருவ மத்தியில் எண்ணி அதை இடைமறித்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் என்று இதை இணைக்க வேண்டும்.

ஏனென்றால் முதலில் சிறிதளவு உள்ளே போயிருந்தாலும்ம் அதற்குண்டான அணுவாக உருவாகும் கருவாகி விடுகின்றது.
1.அந்தக் கருவின் தன்மை அணுவின் தன்மை அடைவதற்கு முன்னாடி
2.அந்தக் கருவிற்குள்ளேயே அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று
3.அதனுடன் இணைத்து விட வேண்டும்.

எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று இந்த அலைகளைப் பரப்பப்போகும் போது இது வலுவாகின்றது.

தீமையைத் தள்ளி விடுகின்றது.

நாம் தவறு செய்தவர்களைக் கண்ணிலே பார்க்கும் பொழுது கண்ணின் கரு விழி நம் எலும்புக்குள் ஊழ்வினையாகப் பதிவாகி விடுகின்றது.

நிலத்திற்குள் ஒரு வித்தை ஊன்றினால் எப்படியோ அதே மாதிரி ஊழ்வினை என்பது ஒரு வித்து. நீங்கள் எந்த எண்ணத்தின் தன்மை கொண்டு பார்த்தாலும் அவைகள் உடலுக்குள் வித்தாகத்தான் மாறுகின்றது.
1.அந்த வித்தின் அலைத் தொடரை அது எடுக்கும்
2.ஆன்மாவாகும் போது சுவாசித்து அதை அறிகின்றோம்.
3.அந்த உணர்வலைகள் உடலுக்குள் போகின்றது.
4.உருவான அணுக்களுக்கெல்லாம் ஆகாரம் கொடுக்கின்றது.

ஆனால் வித்து பதிவாகவில்லை என்றால் எடுக்கவே எடுக்காது.

அதைப் போன்று தான் அந்த மகரிஷிகளின் உணர்வைப் பதிவாக்கும் போது உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகி விடுகின்றது.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிக்கும் பொழுது அந்த மகரிஷிகள் உணர்வுடன் குருநாதர் காட்டியதை இணைத்துப் பார்க்கும் போது
1.கண்களிலே சில வித்தியாசங்கள் வரும்.
2.அந்த வித்தியாசங்கள் வரப்போகும் போது
3.“பளீர்…” என்று அந்த ஒளி அலைகள் வரும்.

எப்படிக் கெட்டவர்களைப் பார்க்கும் போது உங்களுக்குள் பதிவாகி விடுகின்றதோ இதைப்போன்று தான் மகரிஷிகளின் அருள் ஒளி பெற வேண்டும் என்ற ஏக்க அலைகள் வரும் போது ஒளிச் சுடராகப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் அது நினைவிற்கு வரப்போகும் சக்தி வாய்ந்ததாக உருவாகி காற்றிலிருக்கும் மகரிஷிகளின் உணர்வை எளிதில் இழுத்துக் கவர முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு (ஞானகுரு) ஒன்றைக் கொடுத்தார். அதை எப்படிப் பக்குவப்படுத்தச் சொன்னாரோ அந்த வழியில் தான் உங்கள் அனைவருக்குமே பெறச் செய்கின்றோம்.

குருநாதர் சொன்ன வழியில் எடுத்தீர்கள் என்றால் மெய்ப் பொருளை வளர்க்க முடியும். சப்தரிஷி மண்டல எல்லையை அடைய முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நம்மையெல்லாம் கடவுளாக ஆக்குகின்றார்

Image

Gurudevar (2)

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் “நம்மையெல்லாம் கடவுளாக ஆக்குகின்றார்”

 

சாதாரண மக்களும் எதன்னை அறியாது வந்த தீமைகளிலிருந்து எப்படி மீள வேண்டும் என்று மகரிஷிகள் காட்டிய அந்த அருள் நெறிகளை நாம் கடைபிடித்தல் வேண்டும்.

விஞ்ஞான அறிவால் பேரழிவு வந்து கொண்டு இருக்கும் இவ்வேளையில் நமது குருநாதர் “மகரிஷி ஈஸ்வரப்பட்டாய குருதேவர்” அவர் கண்ட உண்மையினுடைய நிலைகள் மக்கள் மீள வேண்டும் என்று
1.நம்மையெல்லாம் கடவுளாக்குகின்றார்.
2.நம்மைக் கடவுளாக மதிக்கின்றார்.
3.நாம் அனைவரும் கடவுளாக வேண்டும் என்று விரும்புகின்றார்.

அதனைச் செயல்படுத்த அவர் காட்டிய நெறிகளை எல்லோரும் பெற வேண்டும் என்று அந்த உணர்வை இங்கே வழிகாட்டுகின்றார்.

அவர் உணர்த்திய உணர்வை நமக்குள் பதிவு செய்து அந்த முறைப்படி மகரிஷிகளின் அருள் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டால்
1.அவனுடன் அவனாகி
2.அவனின் ஒளியாக உயிருடன் ஒன்றிடலாம்

நாம் எடுக்கும் உணர்வின் தன்மையை நம் உயிர் அறிவாகக் காட்டுகின்றது.

மற்றவருடைய உணர்வை நுகரும் பொழுது அதனின் அறிவாக உயிர் இயக்கிக் காட்டினாலும் என்றுமே ஒளியாக நிலை கொண்டிருக்கும் மகரிஷிகள் உணர்வை நமக்குள் சேர்க்கும்போது ஒளியாகவே நாம் நிற்க முடியும்.

அப்படி அடைந்தவர்கள்தான் மகரிஷிகள்… “கல்கி”

இறப்பை யாரும் தடுக்க முடியாது…! – துருவ நட்சத்திரத்தின் உணர்வை “வாழும் இந்தச் சிறிது காலத்தில்” எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்

Destiny of Life

இறப்பை யாரும் தடுக்க முடியாது…! – துருவ நட்சத்திரத்தின் உணர்வை “வாழும் இந்தச் சிறிது காலத்தில்” எடுத்து வளர்த்துக் கொள்ள வேண்டும்

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் அனைவரது குடும்பங்களிலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் அனைவரது இரத்த நாளங்களில் கலந்து உடல்களிலுள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் அனைத்தும் பெற்று அவர்களது வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாப வினைகள் பூர்வ ஜென்ம வினைகள் பாவ வினைகள் அனைத்தும் அகன்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கணவனும் மனைவியும் பெற்று வசிஷ்டரும் அருந்ததி போன்று வாழ்ந்து நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒன்றி வாழ்ந்து இரு உயிரும் ஒன்றி வாழ்ந்து இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றிட அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி குடும்பங்களில் வளர்ந்து வரும் குழந்தைகள் பெற்று கல்வியில் ஞானமும் கருத்தறிந்து செயல்படும் திறனும் பெற்று உலக ஞானம் பெற்று உலகைக் காத்திடும் அருள் ஞானக் குழந்தைகளாக வளர்ந்து அருள்வாய் ஈஸ்வரா.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அனைவரது உடல்களிலும் படர்ந்து மன நோய் நீங்கி மனபலம் பெற்று உடல் நோய் நீங்கி உடல் நலம் பெற்று அருள் வாழ்க்கை வாழ்ந்து அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்திட அருள்வாய் ஈஸ்வரா.

கூட்டுத் தியானங்களில் நாம் எல்லோரும் சேர்ந்து ஒன்று போலச் இதைச் சொல்ல வேண்டும்.
1.எல்லாருடைய செவிகளிலும் இது படர்கின்றது.
2.இந்த உணர்ச்சிகள் உயிருக்கு எட்டுகின்றது.
3.அந்த நினைவலைகள் கண்ணுக்கு வருகின்றது.
4.கண்ணின் கருவிழி பதிவாக்குகின்றது.
5.கண்ணோடு சேர்ந்த காந்தப்புலன் இந்த உணர்வை இழுக்கின்றது.
6.நம்மைச் சுவாசிக்கச் செய்கின்றது. உயிரிலே மோதுகின்றது.
7.இந்த உணர்ச்சிகள் நம் இரத்த நாளங்களிலே கலக்கின்றது.
8.எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற இந்த உணர்வு வலுப் பெறுகின்றது.
9.நாம் சொன்ன உணர்வெல்லாம் பூமியில் பரவி படர்கின்றது.

எல்லோரும் நன்றாக ஆகும் போது எல்லா உணர்வும் நமக்கும் நல்லதாகின்றது. இதைப்போல கூட்டமைப்பில் நாம் சொல்லப்படும் போது மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுகின்றது.

குடும்பத்தில் சிரமங்கள் நீங்க மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கூட்டுத் தியானங்கள் வைத்து இந்தக் குடும்பத்தைப் பரிசுத்தப்படுத்தலாம். இது ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.

ஒரு நோய் உள்ளவருக்குக் கூட இந்த மாதிரி கூட்டாகச் சொல்லித் தியானித்தால் நோய் எல்லாம் நீங்கிப் போய்விடும்.

எந்த நோயாக இருந்தாலும் அதனுடைய வலிமையைக் குறைக்கலாம். ஆனால் “இறப்பவர்கள் யாரையும்… தடுக்க முடியாது…!”

அவர்கள் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்ப உடலை விட்டுச் சென்றாலும் அந்த உயிராத்மாவைக் கூட்டுத் தியானத்தின் மூலம் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துப் பிறவியில்லா நிலை பெறச் செய்யலாம்.

1.ஆயுள் காலம் முழுவதும் நோயெல்லாம் நீக்கி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால்
2.முழுமையாக இருக்கப் போவது யாரும் இல்லை.
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வை அவர்களைப் பெறச் செய்வதற்காக வேண்டி
4.சிறிது காலம் வாழ வைக்க முடியுமே தவிர
5.முழுமையாக யாரையும் நாம் காப்பாற்ற முடியாது.
6.நம்மையே நாம் காப்பாற்றப் போவதில்லை… யாரை நாம் காப்பாற்ற முடியும்..!
7.முழுமை என்பது துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் முழுமையாகப் பெறுவதற்குத் தான்.

நம் ஆன்மாவில் படும் தீமைகளை நீக்கும் முறை – “ஆத்ம சுத்தி”

soul-cleaningநம் ஆன்மாவில் படும் தீமைகளை நீக்கும் முறை – “ஆத்ம சுத்தி”

 

இன்று பக்தியின் மார்க்கத்தில் சென்று நல்ல ஒழுக்கங்களைத்தான் நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

நாம் எல்லோரும் நல்லதைத்தான் எண்ணுகின்றோம். அப்படி எண்ணினாலும் தீமை என்ற நிலைகள் வந்தால் அது வலு பெற்றது. ஏனென்றால் விஷத்திற்கு வலு ஜாஸ்தி.

அந்த வலுவான நிலைகள் நுகர்ந்தபின் தீமையின் எல்லையை அறிகின்றோம். அறிந்து கொண்டாலும் அந்தத் தீமையை விளைவிக்கும் உணர்வே நமக்குள் வலுப் பெறுகின்றது.

அந்த தீமை நமக்குள் விளையாது தடுக்க என்ன செய்கிறோம்? நமக்குள் இருக்கும் நல்லதைக் காக்க என்ன வைத்திருக்கின்றோம்?

அதற்காக வேண்டித்தான் வாழ்க்கையிலே ஒவ்வொரு நொடியிலேயும் நமது குருநாதர் காட்டிய அருள் வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்வது.

அதைக் கடைப்பிடிப்பதில் “ஒன்றும் கஷ்டமில்லை..!”

நாம் புதிதாக வீடு கட்டி விடுகின்றோம். அடுத்தாற்போல் தூசி விழுகின்றது. அந்தத் தூசியை துடைக்காமல் விட்டால் என்ன ஆகும்?

வீட்டிற்குள் எண்ணெய் சிந்திவிடுகின்றது. அங்கு அதன் மீது அழுக்குப்பட்டால் “பிசு…பிசு…” என்று ஒட்டுகின்றது.

அந்த இடத்தில் மண்ணெண்ணெயைப் (KERSOENE) போட்டுத் தேய்த்தோம் என்றால் இந்தப் பிசு பிசுப்பான எண்ணெயை நீக்கி விடுகின்றது.

எண்ணெய் கொட்டிவிட்டது. அதை நான் கூட்டினேன். ஆனால் மீண்டும் மீண்டும் அந்த இடத்தில் அழுக்கு ஒட்டுகின்றது என்று அப்படியே விட்டு விட்டுப் போகின்றோமா என்றால் இல்லை.

அதற்குத்தக்க உபாயத்தைக் கூட்டி நாம் துடைக்கின்றோம். முழுமையாகச் சுத்தப்படுத்தி விடுகின்றோம் அல்லவா…!

இதைப் போன்றுதான் நம் வாழ்க்கையிலும் நம்மை அறியாது எத்தனையோ வகையான நிலைகள் நமக்குள் ஒட்டிக் கொள்கின்றது. இதை நாம் சுத்தப்படுத்த வேண்டுமா வேண்டாமா…?

அதைச் சுத்தப்படுத்துவதற்காக உங்களுக்கு அந்தச் சக்தியை ஊட்டுவதற்குத் தான் ஞானிகளைப் பற்றிச் சொல்கிறோம்.
1.நீங்கள் ஆற்றல் மிக்க சக்தி பெற வேண்டும்
2.ஞானியாக வேண்டும் என்பதற்குத்தான் இதைச் செய்கின்றோம்.

முன்னாடி பரவலாகச் சொல்லிக் கொண்டு வந்தோம். இப்பொழுது உங்களுக்கு முழுமையாக இணைத்துக் கொடுக்கின்றோம்.

தீமையோ கஷ்டமோ துன்பமோ வேதனையோ வரும் பொழுதெல்லாம்
1.உங்கள் கண்களின் நினைவு ஈஸ்வரா என்று
2.புருவ மத்திக்குச் சென்று அதைத் தடைப்படுத்த வேண்டும்.

மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று இதை நீங்கள் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நான் (ஞானகுரு) பெறுகின்றேன். உங்களுக்கும் மகரிஷிகளின் அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று ஜெபம் இருக்கின்றேன்.

நீங்கள் எதை எல்லாம் நல்லதாக வேண்டும் என்று செய்கின்றீர்களோ அது நல்லதாக வேண்டும் என்று ஜெபம் செய்கின்றேன்.

ஏனென்றால் உபதேசம் செய்த உணர்வலைகள் இங்கே இருக்கின்றது. உங்களுக்குள்ளும் பதிவாக்குகின்றோம்.

டி.வி. ஸ்டேசனிலிருந்து ஒலி – ஒளி பரப்பு செய்யும் போது அதே ஸ்டேசனை வைத்தால் எப்படிப் படம் தெரிகின்றதோ அதே போல்
1.ஈஸ்வரா…! என்று உயிரை நினைக்கும்போது
2.அந்த மகரிஷிகளின் உணர்வலைகள் உங்களுக்குக் கிடைக்கும்.
3.நீங்கள் அதை வளர்ப்பதற்கு உங்களுக்குச் சந்தர்ப்பம் இருக்கின்றது.

உங்களால் முடியும்…!

குருநாதர் கொடுத்த சக்திகளைக் காட்டிலும் பன் மடங்கு உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றேன் – ஞானகுரு

Image

குருநாதர் கொடுத்த சக்திகளைக் காட்டிலும் “பன் மடங்கு” உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றேன் – ஞானகுரு

குருநாதர் மூன்று இலட்சம் பேர் குடும்பங்களைப் பற்றி அனுபவ வாயிலாகத் தெரிந்து கொள்வதற்காகக் காடு மேடெல்லாம் என்னை அலையச் சொன்னார்.

காலில் செருப்பில்லாமல் நடக்கச் சொன்னார். வெயிலில் நடக்கச் சொன்னார். இந்த உணர்வுகள் எப்படி எல்லாம் உனக்குள் உந்துகின்றது என்று பார்…!

1.அப்பொழுது உனக்கு என்னென்ன ஆசைகள் எல்லாம் வருகின்றது?
2.ஆசைகள் வரும்போது கஷ்டங்கள் வந்து இடைமறித்து உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?
3.உன்னுடைய ஆசைகள் மனக் கோட்டைகள் எல்லாம் தகர்ந்து போகும்போது அது உனக்கு என்னென்ன தடை விதிக்கின்றது?
4.இதே மாதிரி ஒவ்வொரு மனிதனுக்கும் எந்தெந்த அளவிலே சிக்கல்களும் துயரங்களும் வருகின்றது? என்பதை நேரடியாகக் காட்டினார்.
5.அப்பொழுது உனக்குள் வரும் தீமைகளைத் தடுக்க நீ என்ன செய்ய வேண்டும்?
6.அதே போல மற்றவர்களை மீட்க நீ என்ன செய்ய வேண்டும்?
7.மகரிஷிகளும் ஞானிகளும் எவ்வாறு விண்ணிலே இன்று துருவ நட்சத்திரமாகவும் சப்தரிஷி மண்டலங்களாகவும் அழியாத நிலைகள் கொண்டு வாழ்கின்றார்கள்?
8.அவர்கள் ஆற்றலை எப்படிப் பெறவேண்டும்?
9.அதை நீ எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும்?
10.நீ வளர்த்துக் கொண்ட சக்திகளை மற்றவர்களுக்கு எவ்வாறு போதிக்க வேண்டும் என்று தான்
11.மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து அனுபவ வாயிலாகப் பல சக்திகளைப் பெறச் செய்தார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

குருநாதர் எனக்கு எவ்வளவு கொடுத்தாரோ அதைக் காட்டிலும் பன் மடங்கு சக்திகளை உங்களுக்குக் கொடுக்கின்றேன். அந்தச் சக்தியின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் எடுக்க வேண்டும்.

சாமி (ஞானகுரு) சொல்கின்றார். நான் படுகின்ற இம்சை எனக்குத்தான் தெரியும் என்று இதைக் கலந்துவிட்டால் நீங்கள் இதைப் பெற முடியாது.

குருநாதர் சொன்னதைச் செய்தால் நாம் அனைவருமே அதைப் பெற முடியும். அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் எண்ணங்களாகி அந்த மணங்கள் நமக்குள் வந்துவிடும்.

“உங்களை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்…! என்று ஏன் சொல்கிறோம்…?

Trust begins from self

“உங்களை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்…! என்று ஏன் சொல்கிறோம்…? 

நான் (ஞானகுரு) கூடத்தான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று சொல்கின்றேன்.

அதனுடைய அர்த்தம் உபதேசிக்கும் இந்தச் சொல்லின் நிலைகள் தான் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று பொருள். ஞானிகளைப் பற்றிய உபதேசத்தை நீங்கள் எடுத்துக் கொண்டால்தான் அது உதவியாக வரும்.

மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் நீங்கள் ஏங்கி எடுக்கும் பொழுது நான் கொடுத்த எண்ணங்களுக்கு வலுக் கூடுகின்றது. அப்பொழுது உங்களுக்கு உறுதுணையாக அது வரும்.

ஆனால் நான் காப்பாற்றிக் கொடுக்கிறேன் என்றால் நான் கடவுள் அல்ல.
1.நான் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்
2.நீங்கள் உங்களை மறந்துவிடுவீர்கள்.
3.சாமி (ஞானகுரு) நம்மை காப்பாற்றி விடுவார் என்று எண்ணுவீர்கள்.
4.நீங்கள் நல்ல மருந்தைச் சாப்பிட்டால் அது தான் உங்களைக் காக்கும்.

அது போல் நான் சொன்ன முறைப்படி மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்கள் உடலுக்குள் நீங்கள் உயிரான ஈசனிடம் ஏங்கி எண்ணிச் சேர்த்தால் தான் உங்கள் உடலில் உள்ள தீமைகள் அகலும்.

இது மிகவும் முக்கியம்.

உதாரணமாக வேதனையை நீக்க வேண்டுமென்றால் வேதனையை உருவாக்கித்தான் அந்த வேதைனையை நீக்க வேண்டும். அந்த மருந்து அதற்கு (நோய்க்கு) வேதனையை உருவாக்கும்.

வேதனை உருவாகும்போது உடலுக்குள் அந்த நோயான அணு உருவாகின்றது. இதை நல்லதாக்க வேண்டுமென்றால் விஞ்ஞான அறிவுப்படி நல்ல மருந்தைச் சேர்க்கின்றார்கள்.

நல்ல மருந்துடன் சேர்க்கப்பட்ட விஷம் உடலில் வேகமாக ஊடுருவி அலைய ஆரம்பித்துவிடும். அப்பொழுது நல்ல சத்தின் தன்மை வலு அதிகரிக்கப்படும்போது வேதனையால் உருவான அணுவிற்குள் போனவுடனே தேங்கி நின்று இதைச் சேமிக்க ஆரம்பிக்கின்றது.\

அதனால் நோயால் உருவான அணுக்களுக்கு வேதனை ஆகின்றது. மருந்து சாப்பிடும்பொழுது வேதனையைக் கலைத்து விட்டால் “அய்யோ…! அம்மா…! மேல் எல்லாம் கலையுதே…!” என்பார்கள்.

கலைந்த உணர்வின் தன்மை நீராக மாறி சிறுநீராகப் போகும். அல்லது அந்த உணர்வின் தன்மை சீதமாக வெளியே போகும். அப்பொழுது உடம்பெல்லாம் வலிக்கும்.

அந்த மருந்தின் தன்மை நோயின் உற்பத்தியைக் குறைக்கும். “அய்யய்யோ…! எனக்கு மருந்தைக் கொடுத்தார் இப்படி ஆகிவிட்டது..” என்று சொல்லிவிட்டு வேறு மருந்தைச் சாப்பிட்டால் என்ன ஆகும்?

இது இரண்டையும் ஏற்றுக் கொள்ளாத நிலைகளில் மீண்டும் கடுமையான நோயாக மாறும். விஷத்திற்கு இவ்வளவு பெரிய ஆற்றல்.

இந்தச் சாமியைக் கும்பிட்டேன். சாமியாரைப் போய் பார்த்தேன் வேறு மதத்திற்குப் போனேன் அதைச் செய்து பார்த்தேன் இதைச் செய்து பார்த்தேன் என்று சொல்லிக் கொண்டே போக வேண்டியது தான்.

1.உங்கள் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்தாமல் (நம்பாமல்)
2.மகரிஷிகளின் அருள் சக்தியை உடலுக்குள் அணுக்களாக மாற்றாமல்
3.எந்த ஒரு நிலையான நல்ல மாற்றத்தையும் நமக்குள் கொண்டு வர முடியாது.

வாழ்க்கையில் நாம் இதையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.