Image

Noble soul - agastya
மெய்ப் பொருள் காணும் திறனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்

 

ஒவ்வொரு சமயத்திலும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு (ஞானகுரு) எப்படி ஞானத்தைப் போதித்தாரோ அதை அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுடன் போதிக்கிறோம்.
1.அருள் ஞானத்தைப் பெறச் செய்யும்.
2.இருளைப் பிளக்க செய்யும்… பொருளைக் காணச் செய்யும்.
3.வாழ்க்கையில் இதுவே உங்களுக்குத் தெளிவான வழி காட்டும்.

தவறு மற்றவர்கள் செய்தாலும் அல்லது நாமே செய்திருந்தாலும் அதற்குள் மறைந்த உண்மைப் பொருளை நாம் காண முடியும். அங்கிருக்கும் இருளைப் பிளக்கின்றது. உண்மையின் உணர்வின் தன்மையை நாம் அறிய முடியும்.

இப்படி அந்த மகரிஷிகளின் உணர்வுகள் நமக்குள் பெருகி நம் ஆன்மாவில் மறைத்துக் கொண்டிருக்கும் இந்த இருளைப் பிளக்கும். அப்பொழுது மெய்ப் பொருளைக் காணும் அந்தத் திறன் நாம் பெறுகின்றோம்.

இதைச் சிறிது காலம் கடைப்பிடித்தாலே உங்களால் தெளிவாக உணர முடியும். உங்களுக்குள் அந்தச் சக்திகள் கூடுவதைப் பார்க்கலாம்.

இன்று காற்று மண்டலம் மிக நச்சுத் தன்மையாக இருக்கிறது. மனிதனின் சிந்தனைகளும் குறைந்து கொண்டே வருகின்றது

இப்படி இருக்கின்றதே…! ஐயோ நச்சுத் தன்மையாக இருக்கின்றதே..! என்று அதைப் பதிவு செய்துவிட்டால் நச்சுத் தன்மைகளை இழுக்கும். நச்சுத் தன்மை தான் நமக்குள்ளும் வளரும். நம் நல்ல சிந்தனையும் குறையும்.

நச்சுத்தன்மை என்ற உணர்வு வந்தவுடன் அது நம்மை இழுக்கிறது… நம்மை மாற்றுகின்றது. அதற்குப் பதிலாக
1.மகரிஷிகளின் அருள் சக்தி இங்கு படர வேண்டும்
2.மகரிஷிகளின் அருள் சக்திகளை எல்லோரும் பெறுவோம்.
3.வாழ்க்கையில் எல்லோருக்கும் அந்த உயர்ந்த நிலை கிடைக்க வேண்டும் என்று
4.இதை எண்ணி அந்த அலைகளை நாம் பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும்.

குரு அருளை உங்களுக்குள் திரு அருளாக மாற்றும் நிலைக்கே இதை உபதேசிக்கின்றோம்.

ஆகவே மகரிஷிகளின் அருள் சக்தி பெற நாம் தியானிப்போம், மகரிஷிகளின் அருள் சக்தி உலக மக்கள் அனைவரும் பெறத் தவமிருப்போம்.

“கொசு மூலமாக…!” யுத்த காலங்களில் அன்று வேவு பார்த்ததன் உண்மைகள்

Image

Drone

“கொசு மூலமாக…!” யுத்த காலங்களில் அன்று வேவு பார்த்ததன் உண்மைகள்

 

உலகப் போர் நடந்த சமயங்களில் அமெரிக்காவிலேயோ ஜெர்மனிலேயோ யுத்தக் காலத்தில் கொசுக்களில் ரேடியம் (RADIUM) என்ற உணர்வினைப் பதிக்கச் செய்து அதில் ஈர்க்கும் காந்தத்தை அனுப்பி மறைமுகமாக உளவு பார்த்தார்கள்.

அதாவது கொசுவின் மூலமாக இரகசியமாகப் பேசுவோர் ஒலி அலைகளை அறிந்து கொண்டார்கள்.

எங்கே இரகசியமாகத் திட்டம் தீட்டுகின்றார்களோ கொசு அங்கே தான் இருக்கும். அவர்களால் அதை அறிய முடியாது.

ஆனால் அது கவரும் உணர்வினை விஞ்ஞானக் கருவிகள் கொண்டு ஆயிரம் மடங்கு பெருக்கி ஒலி அலைகளை எவ்வாறு கவருகின்றான் என்ற நிலைகளை குருநாதர் காட்டினார்.

கொசுவில் ரேடியத்தை இணைத்து அதனைப் பரப்பச் செய்து உள்ளே செல்லும். ஆனால் அது மடிந்து விடும். மனிதனுக்குத் தொல்லை கிடையாது.

உள்ளே ச்என்று மடிந்த கொசுவிலிருந்து அங்கே இரகசியமாகப் பேசும் உணர்வுகளைக் கவர்ந்து அதற்குண்டான சாதனத்தின் மூலம் ஒலி அலைகளைப் பரப்பப்படும் போது சூரியனுடைய காந்த சக்தி அவைகளைக் கவர்ந்து கொள்கிறது. (WIRELESS – SATELLITE என்று சொல்கிறோம் அல்லவா)

அன்று அவர்கள் செய்த இராஜ தந்திரம் விஞ்ஞான அறிவால் எவ்வாறு செய்தார்கள்? அலைகளாக அது எப்படிப் படருகின்றது என்ற நிலையைக் குருநாதர் உணர்த்துகின்றார்.

தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே அவர்கள் பேசிய இரகசிய திட்டங்களை பதியச் செய்து ஆயிரம் மடங்காக அதைப் பெருக்கி தான் அறிந்து கொண்ட பின் அதற்குத்தக்க தன் படைகலன்களை மாற்றி அவர்களை இவன் அழிக்க முற்படுகின்றான்.

இது ரஷ்யாவிலே நடந்த நிலைகள்.

ஏனென்றால் வேதங்களின் சாரங்களைக் கற்றுணர்ந்த இந்த ரஷ்யாவில் இந்த நுண்ணிய நிலைகளைக் கொசுக்களின் ரூபமாக அறியத் தொடங்கினான். அதிலேதான் ஜெர்மனி வீழ்ந்தது.

இரகசியக் கூடங்களையும் அணுக்கதிரியக்கங்களையும் எவ்வாறு உருவாக்குகின்றான். இராக்கெட்1, D1, D2 என்று ஏவப்பட்டு அதன் முகப்பில் ஆயுதங்களைப் பரப்பித் திடீரென்று தாக்கும்படி குறித்த எல்லையில் அந்த நுகரும் சாதனத்தை வைத்தான்.

ஏனென்றால் அவன் சாதனத்தை வைத்த ஜெர்மனியின் இந்த உணர்வின் தன்மை தான் கொசு ரூபமாக அந்தப் தொழிற்சாலைக்குள் அனுப்பப்பட்டு அதனையும் கவர்ந்துணர்ந்து அதனை இதை எதிர்மறையாக செயலாக்கும் தன்மைக்குக் கொண்டு வந்தான்.

1.அந்த விஞ்ஞானிகள் கற்றுணர்ந்த உணர்வலைகளின் பதிவு எவ்வாறு இருக்கிறதென்றும்
2.இது எவ்வாறு இரஷ்யாவிற்கு வந்தது என்றும்
3.குருநாதர் காட்டவில்லை என்றால் எமக்கும் இது தெரியாது.

இந்த உலகத்தில் விஞ்ஞானம் தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் சாமிக்கு (ஞானகுரு) விஞ்ஞான அறிவு தெரியாது என்று நினைக்க வேண்டாம் என்பதற்காக வேண்டி இதைச் சொல்கின்றேன்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை இப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் அவருடைய உணர்வுகளைக் கவர்ந்த பிற்பாடு தான் அவருடைய ஆற்றல்களை என்னால் அறிய முடிந்தது.

இதையெல்லாம் அறிய முடிந்தது என்று சொன்னால் என் தாய் கருவிலே நான் (ஞானகுரு) பிறந்த பூர்வ புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்.

1.பல கோடிப் பணம் செலவழித்தாலும்
2.இதனை அறிந்து கொள்ள வேண்டும் என்றால்
3.இந்த உடலுக்கு ஆயுள் பத்தாது.

குருநாதர் காட்டிய அந்த அருள் வழியில் அவரால் இந்த நுண்ணிய நிலைகளை அறிய முடிந்தது. அதை உங்களிடம் தெரியப்படுத்தவும் முடிகின்றது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை நமக்குள் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால் ஒவ்வொரு செயலிலும் குருவாக நம்மை அது வழி நடத்தும்

Image

ஈஸ்வராய குருதேவர் தபோவனம்

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வுகளை நமக்குள் பதிவாக்கி வளர்த்துக் கொண்டால் ஒவ்வொரு செயலிலும் “குருவாக நம்மை அது வழி நடத்தும்”

 

புத்தகத்தைப் படித்துவிட்டு இயந்திரத்தில் அமிலத்தைக் கலந்து புதிய துணிக்கு சாயத்தைக் (நிறம்) கொடுக்கின்றோம். படித்தவர்கள் இந்த அளவு கோல்படி அமிலத்தை ஊற்றினால் நூல் கெட்டுப் போய்விடும் என்று அந்த அளவுகோலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.

தெரியாதவர்கள் அமிலத்தை அதிகமாக ஊற்றிவிட்டார்கள் என்றால் நூலுடன் கலந்து சாயத்தைக் கெட்டியாகக் கொண்டு போய்விடும். சிறிது நாளைக்கு இந்தச் சாயம் இருக்கும். பின் துணியே கிழிந்து போய்விடும்.

அந்த அமிலத்தின் அளவைக் குறையாக ஊற்றியிருந்தால் சாயத்தை இழுத்து வைக்கக்கூடிய நிலைகள் குறைந்திடும். தண்ணீருக்குள் துணியைப் போட்டவுடனே சாயம் போய் விடும்.

சாயம் ஒன்றுதான். ஆனால் அமிலத்தின் அளவுகோல் இதனுடன் இணைந்திருக்கும் போது எது அதிகமோ எது குறைவோ அதற்குத் தகுந்த நிலைகளைச் செய்யும்.

புத்தக அறிவில் படித்துக் கொண்டவர்கள் தான் படித்த உணர்வு கொண்டு அவர்கள் அறிவுக்கெட்டிய நிலைகள் கொண்டு நிதானிக்கின்றார்கள். ஒருவர் போடுவதைப் பார்த்த உடனே இவர் துணியின் அளவுகோலைப் பார்க்கின்றார்.

நூல் எந்த அளவிற்குப் போடுகின்றார்களோ அதற்குத்தகுந்த சாயத்தையும் அமிலத்தையும் போடுகின்றார்கள். அது பழக்கத்திற்கு வரும் வரையிலும் சரியாக வராது.

படித்தவர்கள் துணி கெட்டியாக இருக்க வேண்டும் என்று அளவுகோல் படி அமிலத்தை இணைப்பார்கள். ஆனால் துணி இத்துப் போய்விடும் என்று தெரியாது.

அதே சமயத்தில் பெயர் வாங்க வேண்டும் அளவுகோலை அதிகப்படுத்தி விட்டால் துணி போய்விடும். கெட்டிச் சாயம் என்று துணி வாங்குவோம் துணி போய்விடும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அனுபவத்தில் எல்லாவற்றையும் அதை அறிந்து கொண்டவர். குருநாதர் தெளிந்த நிலை பெற்றவர்.

அவர் பெற்ற ஆற்றல்களை நமக்குள் பதிவு செய்யப்படும்போது அது மகரிஷிகளின் அருள் சக்தியை இணைத்து அந்தந்தப் பக்குவ நிலைக்கு நமக்குள் குருவாக நின்று வழி நடத்தும்.

கம்ப்யூட்டரில் சீராகப் பதிவு செய்திருந்தால் ஒவ்வொரு நிமிடத்திலும் அது அளவுகோல் கொடுக்கும். ஒரு எல்லை வரும்போது ஒரே நிமிடத்தில் உணர்வின் அழுத்தத்திற்குத் தக்கவாறு பல நிலைகளை நாம் பதிவு செய்ததை அந்தக் கம்ப்யூட்டர் இயக்கித் தெளிவாக்குகின்றது.

ஆகவே குருநாதர் கண்டுணர்ந்த மெய்யுணர்வின் தன்மையை ஆழமாகப் பதிவு செய்து கொண்டால் ஒவ்வொரு நிமிடத்திலும் வாழ்க்கையில் நமக்கு அளவுகோல் கொடுக்கும்.

அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நிலைகளிலும்
1.நல்லது எது கெட்டது எது என்று எப்படி அறிவது?
2.நல்லதை எப்படிப் பிரித்து எடுத்துக் கொள்வது?
3.கெட்டதை எப்படி விலக்கித் தள்ளுவது?
4.கெட்டதை எப்படி நல்லதாக்குவது?
5.நன்மையின் பலனை எல்லோரையும் எப்படிப் பெறச் செய்வது என்ற தெளிவைக் கொடுக்கும்.

அனுபவத்தில் பார்க்கலாம்.

மகிழ்ச்சியை ஊட்டும் இந்திரலோகமாக இருக்கும் நம் உடல் வேதனையைத் தரும் நரகலோகமாக எதனால் மாறுகின்றது?

Image

Yama loka
மகிழ்ச்சியை ஊட்டும் இந்திரலோகமாக இருக்கும் நம் உடல் வேதனையைத் தரும் நரகலோகமாக எதனால் மாறுகின்றது?

 

எமன் என்ன செய்கின்றான்? அக்னி குண்டத்தில் போட்டு வறுக்கின்றான்.

1.ஒருவர் ஐய்யய்யோ.. எரியுதே…! என்று சொல்கின்றார்
2.அம்மம்மா.. குத்துகிறதே…! என்று ஒருவர் சொல்லுகின்றார்
3.மண்டையெல்லாம் இடிக்கிறதே என்று சொல்லுகின்றார்கள்
இப்படி நமக்குள் குத்தல் குடைச்சல் எல்லாம் வருகின்றது.

ஏன் வருகின்றது…?

நம் கண்கள் – சித்திர புத்திரனாக நாம் உற்றுப் பார்ப்பதையெல்லாம் உடலுக்குள் பதிவாக்கி விடுகின்றது. உயிரோ அதை அணுவாக உருவாக்கிவிடுகின்றது.

தீமை செய்வோர் வேதனைப்படுவோர் ஆத்திரப்படுவோர் உணர்வுகளை எல்லாம் நாம் உற்றுப் பார்த்துக் கவரும் பொழுது அவையெல்லாம் சுவாசத்தின் வழியாக நமக்குள் வந்து அணுக்களாக உருவாகிவிடுகின்றது.

அப்பொழுது உடலுக்குள் இருக்கும் நல்ல குணங்களால் உருவான அணுக்களுக்கும் இதற்கும் போர் முறையாகிவிடுகின்றது. அப்பொழுது உடலுக்குள் வலியும் வேதனையும் வருகின்றது. பின் நோயாகின்றது.

நாம் யாரும் தவறு செய்யவில்லை. வேடிக்கை தான் பார்த்தோம்.

1.பார்த்தது சித்திரம் (படமாக) தான்
2.ஆனால் புத்திரனாக (உடலுக்குள் அணுக்களாக) விளைந்து
3.அதனின் கணக்குப் பிரகாரம் (நல்ல அணுக்கள்- கெட்ட அணுக்கள்)
4.எமன் தண்டனை கொடுக்கின்றான் எனும் நிலையாக
5.நாம் நுகர்ந்த எண்ணங்களே எமனாக மாறுகின்றது.
6.நல்ல குணங்களுக்கெல்லாம் நம்முடைய எண்ணமே எமன் ஆகின்றது.

எமன் என்ற இந்த எண்ணம் நமக்குள் செயலாகி எமலோகத்திற்கு அழைத்துச் சென்று அதனால் நரகலோகத்தை அனுபவிக்கின்றோம்.

நம் உடல் ஒரு இந்திரலோகம் தான். ஆனால் வேதனை என்ற நிலைகள் வரும்போது நரக லோகமாக மாறி விடுகின்றது. இந்திரலோகமாக இருக்கும் இந்த உடலை நரக லோகமாகவே மாற்றி விடுகின்றோம்.

எமன் எருமை மேல் வருகின்றான். நாம் எதன் மேல் எண்ணத்தைச் செலுத்துகின்றோமோ அது தான் பாசக் கயிறு. அதன் வழி கொண்டுதான் இந்த எண்ணங்கள் இயக்குகின்றது என்று இவ்வளவு தெளிவாகக் கொடுத்திருக்கின்றார்கள்.

படங்களும் போட்டு காட்டுகின்றார்கள். நாம் அதைப் புரிந்து கொள்கிறோமோ என்றால் இல்லை.

ஞானிகள் நமக்குக் காட்டிய சாஸ்திரங்கள் சாதாரணமானவை அல்ல.

விண்ணின் ஆற்றலைக் கற்றுணர்ந்த முதல் மனிதன் அகஸ்தியன்

Image

agastiyar
விண்ணின் ஆற்றலைக் கற்றுணர்ந்த “முதல் மனிதன் அகஸ்தியன்”

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய முதல் மனிதன் அகஸ்தியன் விண்ணின் ஆற்றலைப் பருகக் கற்றுக் கொண்டான். இது அவனின் சந்தர்ப்பம் தான்.

அது எப்படி அவனுக்குக் கிடைத்தது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

காடுகளில் விஷத் தன்மை கொண்ட எத்தனையோ உயிர் இனங்கள் அதனதன் வாழ்க்கைக்காக தன் இரையைத் தேடி வருகின்றது.

அதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அகஸ்தியனுடைய தாய் தந்தையர்கள்
1.அந்த உயிரினங்களுக்கு எதிர் மறையான பல தாவர இனச் சத்தை அரைத்துத்
2.தங்கள் உடலிலே முலாமாகப் பூசிக் கொண்டார்கள்.
3.மின்னலத் தணியச் செய்யும் வேர்களையும் விழுதுகளையும்
4.தங்களைக் காப்பதற்காக அணிகலன்களாக அணிந்து கொண்டார்கள்.

முலாமகப் பூசிய இவர்கள் உடலில் இருந்து வெளிப்படும் அந்த மணங்களை நுகர்ந்தறியும் புலியோ பாம்போ தேளோ கொசுவோ விஷம் கொண்ட மற்ற உயிர் இனங்களோ எதுவும் இவர்களை அணுகுவதில்லை. விலகிச் சென்று விடுகின்றன.

இப்படித் தனக்குள் பூசிய முலாம்களின் வாசனைகள் தன் உடலில் இருந்து வருவதை அகஸ்தியனுடைய தாயும் சுவாசிக்கின்றது. அப்பொழுது கருவிலே இருக்கக்கூடிய குழந்தைக்கு (அகஸ்தியனுக்கும்) இது இரத்தத்தின் வழி கூடி சிறுகச் சிறுக சேர்ந்து விடுகின்றது.

அன்று சூரியனைத் தான் கடவுளாக அவர்கள் வழிபட்டு வந்தனர்.

ஏனென்றால் இருளில் இருந்து ஒளி காட்டி வரும் அந்தச் சூரியனை அடிக்கடி உற்றுப் பார்த்து “கடவுள்…” என்று சூரியனை வணங்கி வந்த காலம் அது.

அப்போது தன்னைக் காத்திடும் உணர்வின் தன்மை கொண்டு விண்ணை நோக்கி ஏங்கும் பொழுது சூரியனின் காந்தப்புலன் அறிவுகள் இவருக்குள் விளைகின்றது.

அதே சமயத்தில் “அல்ட்ரா வயலெட்” என்ற நஞ்சை அது உமிழ்த்தும் போது இவர் உடலிலுள்ள நஞ்சும் இதனுடைய உணர்வின் மணங்களும் கலக்கப்படுகின்றது.

இவ்வாறு சூரியனிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் என்ற இந்த விஷத் தன்மையும் தாய் கருவில் இருக்கும் அகஸ்தியனுக்குக் கிடைக்கின்றது.

இது எல்லாம் அகஸ்தியன் உடலிலே இரண்டறக் கலந்து பிறந்த பின் அவன் உடலில் இருந்து வரக்கூடிய மணத்தை நுகர்ந்த பின் பாம்பு பயப்படுகின்றது. புலி பயப்படுகின்றது. கொசு மற்ற பூச்சிகள் அனைத்தும் விலகி ஓடுகின்றது.

அப்பொழுது அந்தக் குழந்தையை அவர்கள் தாய் தகப்பனார் இது கடவுள் கொடுத்த பிள்ளை – கடவுளின் அவதாரம் என்று போற்றித் துதிக்கும் நிலை வருகின்றது.

இன்றும் நாம் பாம்பிடம் ஒரு வேரைக் காண்பித்தோம் என்றால் ஓடிப் போய் விடும். சில செடியின் இலைகளைப் போட்டோம் என்றால் கொசுக்கள் வராது.

எரி பூச்சி என்று சொல்வார்கள். அது நம் மேலே பட்டால் சூடு போட்ட மாதிரி ஆகிவிடும். அதற்கு இந்த இலையைப் போட்டோம் என்றால் அது போய்விடும். பார்க்கலாம் நீங்கள்…!

இந்த மாதிரித் தான் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில்
1.அகஸ்தியன் தாய் தந்தையர் அன்று நுகர்ந்த உணர்வுகளே
2.கருவிலே இருக்கக்கூடிய அகஸ்தியனுக்குப் பூர்வ புண்ணியமாக அமைந்துவிட்டது.

ஆகவே அகஸ்தியன் தெரிந்து வரவில்லை.

தாய் கருவிலேயே நஞ்சை அடக்கிடும் ஆற்றல்களைப் பெற்றதால்தான் ஐந்து வயதில் துருவத்தின் வழியாக நம் பிரபஞ்சத்தை அறியும் ஆற்றல் பெற்றான்.

அவனின் வளர்ச்சியில் 27 நட்சத்திரங்கள் பிற அண்டங்களிலிருந்து கவரும் ஆற்றல்களைத் தன் கதிரியக்கச் சக்தியால் பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதையும் அறிந்துணர்ந்தான்.

அதையெல்லாம் ஆற்றல்மிக்க சக்திகளாக… “விஷத்தை ஒளியாக மாற்றிடும்” அணுக்களாகத் தனக்குள் பெருக்கிக் கொண்டான்

தனது பதினாறாவது வயதில் திருமணமாகி தான் பெற்ற சக்தியைத் தன் மனைவிக்குக் கொடுத்து துருவ மகரிஷியானான். துருவ நட்சத்திரமாக இன்றும் பூமியின் வட துருவத்தில் எல்லையாக நிலை கொண்டுள்ளான்.

1.தன்னை அறிந்தான்
2.விண்ணை அறிந்தான்
3.விண்ணிலே ஒளி நட்சத்திரமாக என்றும் பதினாறாக ஏகாந்தமாக வாழ்கின்றான்.

ஏனென்றால் ஆதியிலே அந்தச் சந்தர்ப்பம் முதல் மனிதனான அகஸ்தியனுக்கு எப்படியெல்லாம் சக்தி கிடைத்தது என்று தெளிவாகக் காட்டுகின்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

பல கோடிச் சரீரங்களிலிருந்து மனிதனான நாம் வாழ்க்கையில் வரும் தீமையை அகற்றத் தெரிந்து கொண்டு அதை மாற்றி அமைக்கும் சக்தியைப் பெற வேண்டும்.

அதைப் பெற வேண்டும் என்றால் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான அதனின்று வெளிவரும் உணர்வலைகளை நாம் நுகரப் பழக வேண்டும்.

நம் உடலில் அந்த ஒளியான அணுக்கள் பெருகப் பெருக அகஸ்தியன் நஞ்சை நீக்கி ஒளியாக ஆன அந்த நிலையை நாமும் அடைய முடியும்.

போகன் மக்களை மகிழ்ச்சி அடையச் செய்து அவர்கள் மகிழ்ச்சியைத் தான் சுவாசித்து உயிராத்மாவை ஒளியாக்கி விண் சென்றான்

rishi-bogar
போகன் மக்களை மகிழ்ச்சி அடையச் செய்து அவர்கள் மகிழ்ச்சியைத் தான் சுவாசித்து உயிராத்மாவை ஒளியாக்கி “விண் சென்றான்”

1.மனிதன் எவ்வாறு வாழ வேண்டும்?
2.தன்னை அறியாது வரும் தீமைகளை எப்படி அகற்ற வேண்டும்? என்று
3,அன்று 5300 ஆண்டுகளுக்கு முன் போகர் வழி வகுத்த நிலைகள்.

நம் ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதித்தான். அவனால் உருவாக்கப்பட்ட ஆலயம் என்று ஒவ்வொரு உடலையும் எண்ணினான். அதற்குள் மனிதனாக உருவாக்கிய 1008 குணங்களையும் அரும் பெரும் சக்திகளாக எண்ணினான்.

அந்த மனிதர்கள் மகிழ்ந்தால் அதன் மூலம் மகிழ்ச்சியின் தன்மையைத் தான் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் தான் கண்டுணர்ந்த நிலையை முருகன் சிலையாக நவபாஷாணத்தில் உருவாக்கினான்.

முருகனைக் கண்டு எத்தனை பேர் மகிழ்ச்சி அடைகின்றனரோ அந்த மகிழ்ச்சியின் தன்மை ஏகி மனிதனுக்குள் உருவான உணர்வின் சத்தை இவன் அந்த உணர்வாகத் தன் உடலுக்குள் வளர்த்துக் கொண்டான்.

அதைப் பெறுவதற்காகத்தான் தன் உடலினின்றே பல கோடித் தாவர இனச் சத்தைப் போகித்து மோகித்து அதைக் காயகல்பமாக மாற்றிக் கொண்டான்.

அந்த நிலையைத் தான் பெறக்கூடிய பாக்கியமாக அடையும் வரையிலும் இன்னொரு உடலுக்குள் போகாது இந்த உடலினின்றே அவன் செயல்படுத்தினான்.

அவன் கண்டுணர்ந்த உணர்வின் சத்தை மக்கள் எடுக்கும் சந்தர்ப்பமாகப் பழனி மலையில் சிலையாக உருவாக்கினான்.

1.மக்கள் மகிழ்ந்து வெளிப்படுத்தும் உணர்வின் ஆற்றலை அவனுக்குள் பெருக்கி
2.மெய் ஞான உணர்வைத் தனக்குள் ஒளியாக்கி
3.அந்த நினைவின் ஆற்றல் கொண்டு உடலை விட்டு விண் செல்லும் மார்க்கத்தைக் கொண்டு வந்தான்.

இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் ஒரு அங்கமாக ஒளியின் சரீரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

இது தான் போகன் அன்று செய்த நிலைகள்.

அந்த போகமாமகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெற்று அவன் செய்தது போன்று நம் பார்வையால் சொல்லால் செயலால் மூச்சால் மக்களை மகிழச் செய்வோம்.

1.பிறர் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியான உணர்வுகளை
2.நம் உயிராத்மாவிற்கு ஊட்டமாக ஏற்று
3.போகரைப் போன்று ஏகாந்தமாக நாமும் விண் செல்வோம்.

கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜனின் உண்மை நிலைகள் – உப்பு நீரை மழை நீராகச் சுத்தமாகப் பெய்ய வைக்கும் நிலை…!

Image

Serene power of Sages
கடலுக்குள் இருக்கும் ஹைட்ரஜனின் உண்மை நிலைகள் – உப்பு நீரை மழை நீராகச் சுத்தமாகப் பெய்ய வைக்கும் நிலை…!

 

எல்லோரும் “ஏகக்காலத்தில் சேர்ந்து…” மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கித் தியானியுங்கள்
1.மகரிஷிகளின் அருள் சக்தியால் மக்கள் நன்றாக இருக்க வேண்டும்
2.ஒவ்வொருவருக்குள்ளும் அறியாது சேர்ந்த பகைமையெல்லாம் நீங்க வேண்டும் என்று எண்ணி
3.அந்த அலைகளைப் பாய்ச்ச வேண்டும்.

அப்பொழுது என்ன நடக்கின்றது…?

நமக்குள் இருக்கும் பகைமை என்ற பிடிப்புகளை அறுத்து விட்டு விடுகின்றோம். நம் மீது பகைமையாக இருப்பவர்களும் வெறுப்பு இல்லாமல் பகைமையை அறுத்து விட்டு விடுகின்றார்கள்.

பகைமை உணர்வுகள் யாருடைய பிடிப்பிலும் இல்லாததால் அனாதையாகி விடுகின்றது எது…? நாம் முதலில் சண்டை போட்டதெல்லாம் சூரியன் காந்த சக்தியால் கவரப்பட்டு அனாதையாக இருக்கின்றது.

ஏகக் காலத்தில் நாம் எண்ணிய வலு என்ன செய்யும்?
1.ஒருவருக்கொருவர் சண்டை போட்ட பகைமையான உணர்வையெல்லாம் துரத்திக் கொண்டு ஓடும்.
2.செடிகள் இருக்கின்ற பக்கம் போகாது.
3.அது நேராக கடல் பக்கம் தான் போகும்.

கடல் பக்கம் யாரும் (உள்ளே) அதிகம் போவதில்லை. கடலில் அலைகள் எழும்பி வந்து இழுத்து இழுத்து உள்ளே போய்க் கொண்டே இருக்கும். அதற்குள் பகைமையான உணர்வுகள் சென்று (உப்பாக) ஐக்கியமாகிவிடும்.

அதாவது அதில் இருக்கின்ற நீரை உப்பாக மாற்றி விட்டு அடுத்து மீண்டும் நன்றாக மழையாகப் பெய்கின்றது.

மேலே ஆவியாகப் போகும் போது அதில் உள்ள (ஹைட்ரஜன்) உப்பைத் தனியாகப் பிரித்து விடுகின்றது. இதில் வெப்பத்தின் தன்மை ஆனவுடனே ஆவியாகப் போய்விடும்.

ஆவியாகப் போய் மழை மேகத்திற்குள் இந்த உப்பு மறுபடியும் பட்டவுடனே மழையாகப் பெய்யும். சொல்வது உங்களுக்கு அர்த்தம் ஆகிறதல்லவா…!

முதலில் உப்பைப் பிரிக்கின்றது. இருந்தாலும் மழையாகக் கொட்டப் போகும் போது இந்த கனம் தாங்காது அது கூடப் போனவுடனே இந்த உப்புச் சத்திற்கு மூல காரணமான ஹைட்ரஜனை இதற்குள் சேர்த்துவிடும்.

இதற்குள் இருக்கின்ற தீமையை பிரித்து விட்டு நல்ல தண்ணீராக விழுகும். மழை நீருடன் கலந்து வரும் அந்தச் சத்து (ஹைட்ரஜன்) செடிகளுக்குப் படுகின்றது.

மழை பெய்யும் பொழுது செடிகளை எல்லாம் பார்த்தால் ஜோராக இருக்கும். செடியின் சத்துக்குள் கலந்தவுடனே தீமைகள் எல்லாம் ஒடுங்கும். அன்றைக்கு நமக்குப் பார்த்தால்
1.அந்த மழையின் குளிரால் நமக்குள் வரும் உணர்வுகளை
2.உஹ்ஹ்ஹுஹூ… உஹ்ஹ்ஹுஹூ…! என்று எடுத்துப் பாருங்கள்
3.அந்த உணர்வுகள் அப்படியே உங்களுக்குள் இனிமையாகிறதைப் பார்க்கலாம்.

நம்மை அறியாமல் அந்த உணர்வுகள் ரம்மியமாக என்ன செய்கின்றது என்று இதெல்லாம் அனுபவத்தில் பார்க்கலாம். ஏனென்றால் குருநாதர் எனக்கு இயற்கையின் உண்மைகளை அது ஒவ்வொன்றையுமே அனுபவமாகத் தான் கொடுத்தார்.

உங்கள் வாழ்க்கையில் கஷ்டம் வரும் போதெல்லாம் நான் சொன்னதை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள் என்றால்
1.அந்தச் சந்தர்ப்பம் சந்தித்த உணர்வுகள் உங்களை என்ன செய்கின்றது…?
2.அதிலிருந்து எப்படி மீள்வது…? மற்றவர்களையும் எப்படி மீட்பது என்ற
3.பேருண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பைத்தியம் போன்று வாழ்ந்த ஈஸ்வரபட்டரின் இரகசியங்கள் யாருக்கும் தெரியாது…!

eswarapattar ori.

பைத்தியம் போன்று வாழ்ந்த ஈஸ்வரபட்டரின் இரகசியங்கள் யாருக்கும் தெரியாது…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் பித்தனைப் போலத்தான் இருந்தார். பல நிலைகளிலும் பல இன்னல்களைப் பட்டார்.

விண் செல்லும் மார்க்கத்தைக் கண்டுணர்ந்து விண்ணின் ஒரு அங்கமாக அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்.

மனிதனாக வாழ்ந்த காலத்தில் பிறர் அவரைப் பார்க்கும் போது தன்னைப் பைத்தியக்காரனாகத்தான் காட்டினார். ஆனால் அந்தப் பைத்தியக்கார நிலையில் அவருக்குள் எவ்வளவு பெரிய “ரகசியங்கள்” இருந்தது. ஆனால் நம் நிலைகளுக்கு அது தெரியாது…!

அதே குருநாதரை வைத்து நான் அதைச் செய்கிறேன்… இதைச் செய்கிறேன்… ரசமணி செய்கிறேன்…! என்று மந்திரங்கள் தந்திரங்கள் என்று இப்படியும் சில பேர் செய்திருக்கிறார்கள். அவர் பேரைச் சொல்லி இன்றும் செய்து கொண்டும் இருக்கின்றார்கள்.

ஏனென்றால் அவர் உடலில் பல உணர்வுகள் உண்டு. அவர் எடுத்துக் கொண்ட நிலைகளிலும் கற்றுணர்ந்த நிலைகளிலும் அவர் உடலில் பிணைத்த உணர்வுகள் பல உண்டு. அதன் வழியில் உடல் ஆசை கொண்டு பொருளை எண்ணுவோர்க்குத் தீமையே கிடைக்கும்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் ஒளி பெற வேண்டுபவர்களுக்கு அந்த மெய் ஒளி கிடைக்கும். அந்த அருள் ஞானத்தை நாம் பெறுவோம் என்றால் மெய் வழி காணும் நிலைகள் கிடைக்கும்.

1.குருநாதர் நமக்கு அழியாச் சொத்தாக ஞானப் பொக்கிஷமாக
2.எவ்வளவோ புதையலைக் கொடுத்திருக்கின்றார்.
3.அதை எடுத்து அடுத்துப் பிறவியில்லா நிலையை நாம் அடைய வேண்டும்.
4.அந்தச் சக்தியை பெறுவதற்குண்டான நிலையைத்தான் நம் குரு வழியில் உங்களுக்குள் பதியச் செய்து கொண்டே வருகின்றோம்.

நாம் இந்த உடலில் இருக்கும்போதே அந்த அருளைப் பெற வேண்டும். அதை நமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியும் இதைப் போல் எண்ணுதல் வேண்டும்.

இன்று துருவப் பகுதியில் பேரின்பப் பெரு வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அகஸ்தியர் வழியில் விண்ணுலகம் அடைவோம். இன்னொரு பிறவி நமக்கு வேண்டாம்.

குருநாதரைப் போன்று என்றும் ஏகாந்த நிலை பெற்று விண்ணிலே அவருடன் சென்று ஐக்கியமாவோம்.

“நல்லது… கெட்டது…” இயற்கையில் எப்படி உள்ளது…?

Good and bad

“நல்லது… கெட்டது…” இயற்கையில் எப்படி உள்ளது…?

 

குழம்பு வைக்க காரம் புளிப்பு உப்பு எல்லாம் தேவைதான். ஆனால் சமப்படுத்துதல் வேண்டும். நமக்குள் அனைத்து உணர்வுகளும் இருந்தால்தான் அனைத்தையும் பெருகின்றேன்.

தீமை என்ற உணர்வு நமக்குள் இருந்தால் எதையும் அறிய முடியாது. வெறுப்பான நிலைகள் நமகுள் இல்லை என்றால் வெறுப்பின் தன்மை வராது. ஏனென்றால் நமக்கு அது தெரியாது.

ஆனால் தெரியப்படுத்தும் வெறுப்பு இருந்தாலும் அந்த வெறுப்பின் தன்மை தெரிவித்து வெறுப்பின் தன்மைகளையே வளர்த்துக் கொண்டால், வெறுப்பின் தன்மையே வரும். வெறுப்பை விலக்க வேண்டும்.

உப்பு கைப்பு என்ற நிலை இருந்தாலும் சுவையைக் கூட்ட உப்பைக் கலக்க வேண்டும். உணர்ச்சியைத் தூண்டும் காரத்தைக் குறைக்க வேண்டும். காரத்தை அதிகமாகக் கலந்தால் ஆபத்தை உருவாக்கும்.

இதைப் போன்ற நிலைகளில் எதுவும் கெட்டது அல்ல.

நல்லது நல்லதும் அல்ல. கெட்டது கெட்டதும் அல்ல. ஆறாவது அறிவு கொண்ட நாம் நமக்குள் அறிந்து
1.தவறு என்று உணர்ந்துவிட்டால்
2.நாமே திருத்தி அதை மாற்றி அமைக்க வேண்டும்.

பிறருடைய நிலைகளைக் குறை கூறுவது போல் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுக்குள் குறைகள் வராது நீக்கிப் பழக வேண்டும்.

நம்மை அறியாது குறைகள் வந்தாலும் நமக்கு நாமே நீக்க வேண்டுமே தவிர
1.நம்மால் பிறருக்குத் தீங்கு வரக் கூடாது.
2.நம்மால் பிறரது மனம் உடையக் கூடாது என்ற இந்த உணர்வுகளை நமக்குள் வளர்த்தல் வேண்டும்.

ஒரு சொல்லைச் சொல்லும்போது அது ஒருவரை புண்படச் செய்யும் நிலையாக வந்துவிடலாம். அப்பொழுது பகைமை ஆகிவிடும். எதனால் வந்ததோ அதுவே நமக்குள்ளும் விளைந்துவிடும்.

அருள் ஞானத்தை எப்படிப் பெருக்குவது? இந்தத் தீமைகளை எப்படி அடக்குவது? என்ற நிலைக்கு ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தையும் கொடுக்கின்றோம்.

அதைப் பயன்படுத்தி மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உங்களுக்குள் வரும் தீமைகளை அவ்வப்பொழுது அகற்றப் பழகிக்  கொள்ளுங்கள்.

என் (ஞானகுரு) சக்தியின் நிலைகளை நீங்கள் பயன்படுத்தினாலும் உங்களை உயர்த்திக் காட்டினால்தான் எல்லோருக்கும் சந்தோஷம் கிடைக்கும். உங்களுக்கும் சந்தோஷம் கிடைக்கும்.

எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கலாம். எமது அருளாசிகள்.

“மகா மகான்களாக” நீங்கள் வளர்வீர்கள்…!

18 SIDDHARs

“மகா மகான்களாக” நீங்கள் வளர்வீர்கள்…!

பிறருடைய பிணிகளிலிருந்து தீமைகளிலிருந்து அவர்களை விடுபடச் செய்யும் மகான்களாக நீங்கள் வளர வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் நம் குரு காட்டிய அருள் வழியில்… அந்த மகானாக மாறியே ஆக வேண்டும்.

இன்று விஞ்ஞான உலகில் அஞ்ஞான வாழ்க்கை வரப்படும் போது இது செய்யப்பட வேண்டும்.

1.உடலை விட்டு ஒருவர் போனபின்
2.அவரை நான் மகானாக ஆக்கினேன் என்று அந்த நிலைக்குப் போய்விடாதீர்கள்
3.அவர் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்று
4.அந்த உணர்வின் தன்மையைக் கூட்டிக் கொள்ளுங்கள்.
5.“நான் செய்தேன்…!” என்ற உணர்வு வந்து விட்டால் அகம் வந்துவிடும்.

இந்த அகத்தின் தன்மை துணிந்து விட்டால் இந்த உணர்வு கொண்டு “நான் இதைச் செயலாக்குகிறேன் பார்…!” என்று அகத்துடன் கூறுவோம்.

இந்த உணர்வின் தன்மை உடலில் உள்ள அணுக்களில் எதிர் நிலையை உருவாக்கும். பின் “உங்கள் வாக்குப் பலிக்காது..!”.

துன்பம் கஷ்டம் நஷ்டம் என்று கேட்டறியும் போதெல்லாம் அடுத்த நிமிடம் உங்களுக்குக் கொடுத்த ஆற்றலின் துணை கொண்டு ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

அருள் மகரிஷியின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா பெற வேண்டும் என்ற உணர்வினை உள் செலுத்தி அதைத் தடுத்துக் கொள்ளுங்கள்.

கஷ்டப்படுபவர்களிடமும் நஷ்டம் அடைந்தவர்களிட்ம் சொல்லி அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கி எடுக்கச் சொல்லுங்கள். அப்படி எடுப்பதால்
1.குடும்பத்திலோ வியாபாரத்திலோ அது எப்படி இருக்கிறது என்ற தெளிந்த சிந்தனை வரும்.
2.அதை நீக்குவதற்குண்டான தக்க உபாயங்கள் வரும்.
3.உங்கள் குடும்பத்தில் அனைவரும் நலம் பெறுவர்.
4.உங்கள் வாடிக்கையாளர் நலம் பெறுவர்… பொருளைப் பயன்படுத்துவோர் நலம் பெறுவர்.
5.உங்கள் வியாபாரம் பெருகும். அருள் ஞானம் வளரும்.
6.அருள் வழியில் மகிழ்ச்சி பெறுவீர்கள் என்ற
7.உங்கள் வாக்கை அவர்களுக்குப் பதிவு செய்யுங்கள்.

இதே போன்று அவர்களையும் அதன் வழி செயல்படுத்தும்படிச் செய்யுங்கள்.

சிறிது காலம் செய்தால் அவர் உணர்வுகள் அங்கே விளைகின்றது. அவர் இந்த நல்ல நினைவாற்றலுடன் ஒரு பொருளை எடுத்துக் கொடுத்தால் மற்றவர்களுக்கும் நல்லதாகிறது.

அதே சமயத்தில் தன் வியாபாரத்திற்காக பொருளை வாங்கச் சென்றாலும் நல்ல பொருளைத் தரம் பார்த்து வாங்கும் நிலையும்  வருகிறது.

வேதனையான எண்ணம் கொண்டு
1.எனக்குக் கஷ்டம்… நஷ்டம்… என்ற உணர்வுடன் தொடர்பு கொண்டு சென்றால்
2.இந்த உணர்வின் அலைகள் ஒரு பொருளைத் தரம் பார்க்க விடாது.
3.தரம் இல்லாத பொருளை வாங்கி வருவோம்.
4.வியாபாரம் ஆகவில்லை… என்னை ஏமாற்றி விட்டான்…! என்று சொல்லுவோம்.

இந்த உணர்வுக்கொப்பத் தான் அந்த அறிவின் தன்மை இயக்கும். அந்தப் பொருளையும் நமக்குக் கண் உணர்த்தும்.

கோபமாக இருக்கும் போது பாருங்கள் கண்கள் சிவக்கும். வேதனையான சமயத்தில் நீல நிறமாக இருளடைந்தது போன்று இருக்கும். அதனால் உடல் சோர்வடைவதையும் பார்க்கலாம்.

நினைவின் தன்மை கொண்டு கண்களால் உற்றுப் பார்த்துத்தான் பொருளைத் தேர்ந்தெடுக்கிறோம். அதைத் தான் கீதையில், “ நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகிறாய்” என்று சொன்னார்கள்.

தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை கொண்டு சம்பாரிக்க எண்ணி பொருளைச் சேமிக்க விரும்புகின்றோம். அதற்குண்டான வழியில் நாம் சொல்லைச் சொல்லும் போது மற்றவர்கள் கேட்டுணரும் போது சிலர் பகைமையாக்கிக் கொள்வார்கள்.

பகைமை கொண்ட உணர்வை அவர்கள் எடுத்து விட்டால் நாம் செய்யும் காரியத்திற்குத் தடை விதிப்பார். அவர் சிக்கல்களை நமக்கு ஏற்படுத்துவார்.

1.அவர் தெரியாமல் செய்தாலும் அல்லது ஏமாற்றிச் சொன்னாலும் கூட
2.இந்த அருள் உணர்வுகள் கலந்தபின் ஏமாற்றுகிறார் என்று நமக்குத் தெரியும்.
1.ஏமாற்றும் உணர்வு வரும் போது அவனும் ஏமாறுவான்.
3.ஏமாற்றும் தன்மை வரும் போது சோர்வு வரும்.
4.சோர்வு வரும் போது வளரும் தன்மை குறைவு.
5.வளரும் தன்மை குறையும் போது வேதனை.
6.வேதனை என்ற உணர்வு வரும் போது நோய்.

இதைப் போன்ற நிலைகள் மனிதர்களை மாற்றி அமைத்து விடுகின்றது.

குருநாதர் காட்டிய வழியில் நடந்து மகா மகான்களாக நீங்கள் ஆக வேண்டும். விஞ்ஞான வழியில் வந்த அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மக்களை மீட்க வேண்டும்.

அஞ்ஞான வாழ்க்கையாக இயக்கச் செய்யும் இந்தக் காற்று மண்டலத்தையே நம்மால் மாற்ற முடியும். அஞ்ஞான வாழ்க்கையாக இயக்கும் நிலை இந்தக் காற்றில் இருந்தாலும் அதை நுகராது தடுக்கும் தன்மையும் நமக்கு வரும்.

அனைவரும் காலை துருவ தியானத்தில் இதைப் போல செய்து அனைவரும் நலம் பெற வேண்டும் என்று எண்ணும் போது அனைவருக்கும் அருள் பாலிக்கும் உணர்வுகள் கிடைக்கிறது.

1.அடிக்கடி ஆங்காங்கு கூட்டு தியானங்கள் செய்யுங்கள்.
2.தியானம் செய்த பின் அந்த குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
3.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் தபோவனத்தில் வெளியிட்ட நூல்களைப் படித்துக் கொள்ளுங்கள்
4.உங்களால் சொல்ல முடியவில்லை என்றாலும் அந்த நூல்களை மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுங்கள்.
5.படிக்கும் போது மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அங்கே சக்தி வாய்ந்த அலைகளாகப் படருகின்றது.

ஒவ்வொரு உயிரையும் ஈசனாக மதிக்கும் நிலையும் உயிரால் உருவாக்கப்பட்ட உடலை ஆலயமாகவும் மதிக்க முடிகிறது. மனிதனாக உருவாக்கிய நற்குணங்களைக் காக்கும் நிலையும் வருகிறது.

பிறரைக் காக்க வேண்டும் என்று எண்ணும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள்ளேயே வளருகின்றது.

நம் உடலைக் காக்கின்றோம். உயிரியான ஈசனை உணர்கின்றோம். மெய் உணர்வைப் பெருக்குகின்றோம். அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து மெய் ஞான வாழ்க்கைக்குச் செல்லுகின்றோம்.

விஞ்ஞான உலகத்தால் அஞ்ஞானமாக வாழ்ந்து அசுர உணர்வு கொண்டு மதத்திற்கு மதம் இனத்திற்கு இனம் அசுரர்களாக மாறும் நிலை வந்து விட்டது.

இதனின் நிலைகளை உணர்த்தும் விதமாக – நம் உடலுக்குள் அடிக்கடி தீங்கான நிலைகளை எடுக்கும் போது
1.இந்திரலோகத்துக்குள் அசுரன் புகுந்து
2.எங்களைச் செயலற்றதாக மாற்றுகின்றான் என்ற காவியத் தொகுப்பே உண்டு,

வேதனை வெறுப்பு கோபம் என்ற நிலைகளை வளர்த்து விட்டால் நல்ல காரியத்தைத் தடுக்கும் நிலைகள் நம் உடலுக்குள் வருகிறதென்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காட்டினார்கள்.

மனித உடலான இந்திரலோகத்தில் பகைமை உணர்வுகள் நுழைய இடம் கொடுத்தால் அந்தப் பகைமை உணர்வுள் ஆட்கொண்டு அது நம்மைச் செயலற்றதாக மாற்றுகின்றது.

பழி தீர்க்க வேண்டும் என்ற அசுர உணர்வுகளாக மாற்றுகின்றது. அசுரனாக மாறி அசுர செயல்களைச் செய்தால் பிறிதொன்றைக் கொன்று உணவாக உட்கொள்ளும் புலியாகவோ நாயாகவோ நரியாகவோ மாற்றுகின்றது.

இது போன்ற அசுர உணர்வுகளிலிருந்து மாறி அருள் ஞானியின் உணர்வுகளை எடுத்து அனைவரும் மெய் ஞான வாழ்க்கை பெற வேண்டும் என்றும் மெய் ஞானியின் உணர்வுகள் அனவருக்குக்குள்ளும் வளர வேண்டும் என்றும் அவர் உடலுக்குள் அறியாது சேர்ந்த தீமையின் நிலைகள் நீங்க வேண்டும் என்றும் ஆங்காங்கு கூட்டு தியானங்களை ஏற்படுத்துங்கள்.

ஒருவர் துன்பப்பட்டால் தனித்து இருப்பதற்கு மாறாக அந்தக் குடும்பத்தில் ஒன்று சேர்ந்து கூட்டுத் தியானத்தை மேற்கொண்டு ஒரு கலசத்தைத் வையுங்கள்.

1.கலசத்திற்கு முன் அமர்ந்து 48 நாள் இந்த நினைவை நீங்கள் கொள்ளுங்கள் என்று சொல்வோம்.
2.அதை வைத்து அவர் தொடரும் போது சிறுகச் சிறுக அவர் குடும்பத்தில் உள்ள குறைகள் நீங்கும்.
3.நினைவாற்றலைப் பெருக்கிக் கொண்டிருக்கும் அருள் உணர்வுகள் வளரும்.
4.பகைமை உணர்வுக்கு இடம் கொடுக்காமல் அருள் வழியில் வளரச் செய்யும்.

இந்த உணர்வைச் செலுத்தப்படும் பொழுது பகைமையற்ற வாழ்க்கையை நமக்குள் வாழச் செய்கிறது.

நீங்கள் எடுப்பது மகரிஷிகளின் குரு அருள். உங்கள் சொல்லையும் செயலையும் பிறர் நுகரும் போது நீங்கள் அங்கு ஈசனாக உருவாக்க வேண்டும்.

இதன் வழி நாம் பக்குவப்பட்டு உலகைக் காத்திடும் நிலை வர வேண்டும். வருவீர்கள்…! நீங்கள் ஒவ்வொருவரும் மகானே…!