மகரிஷிகளையும் ஞானிகளையும் புகழ்ந்து பேசுவதால் நமக்கு எந்தப் பலனும் இல்லை – அவர்கள் பெற்ற ஆற்றலை நாம் பெற்று அவர்களைப் போன்ற ஞானியாக வேண்டும்  

Image

மகரிஷிகளையும் ஞானிகளையும் புகழ்ந்து பேசுவதால் நமக்கு எந்தப் பலனும் இல்லை – “அவர்கள் பெற்ற ஆற்றலை நாம் பெற்று” அவர்களைப் போன்ற ஞானியாக வேண்டும்

 

நெல் விளைய வேண்டும் என்றால் உமியையா போடுவார்கள்…?

1.ஒருவன் தவறு செய்கிறான் என்று தெரிந்தால்

2.அவன் செய்யக்கூடிய அந்தத் தவறுகளை

3.நாம் செய்யக்கூடாது என்ற எண்ணங்களே நமக்குள் வர வேண்டும்.

அவன் குறை செய்கிறான் குற்றம் செய்கிறான் என்று நாம் எண்ணிக் கொண்டேயிருந்தால் அந்தக் குறைகள் நமக்குள் வந்தே தீரும்.

அதை நாம் நீக்குதல் வேண்டும். நீக்குவதற்குத்தான் குருநாதர் காட்டிய மெய் வழியை உங்களுக்குக் கொடுக்கின்றோம். அவர் வழியில் சென்றால் அந்தத் தவறுக்குள் நன்மை எடுக்கும் நிலைகள் வருகிறது.

உமி இல்லை என்றால் அரிசி இல்லை. எதிலுமே எதனின் இயக்கமும் – அந்த விஷம் இல்லை என்றால் நல்ல உணர்வின் இயக்கமும் இல்லை.

உணர்வின் இயக்கங்கள் இப்படி விஷம் கலந்துதான் வருகின்றது.

எப்படி சூரியன் அல்ட்ரா வயலெட் என்ற நஞ்சை எப்படிப் பிரிக்கின்றதோ இதைப் போல் வாழ்க்கையில் நுகர்ந்து அறியப்படும்போது வரும் தீமைகளை அகற்ற மகரிஷிகளின் அருள் உணர்வை அதனுடன் சேர்த்து இந்த விஷத்தின் தன்மையை அடக்குதல் வேண்டும்.

இதை நாம் அவசியம் செய்து பழகிக் கொள்ள வேண்டும். அதுதான் அங்குச பாசவா.

அதை விடுத்துவிட்டு குருநாதரை நான் ரொம்ப மதிக்கிறேன். அவர் மிக மிக உயர்ந்த உயர்ந்த கருத்துக்களை எல்லாம் சொல்கிறார் என்று புகழ்ச்சியாக எண்ணிக் கொண்டு கடைசியில் என்னைக் குழியில் தள்ளி விடாதீர்கள்.

எனக்கு இது தேவையற்றது. நான் யாருடைய போற்றுதலுக்கும் வரவில்லை.

உங்களை உயர்ந்த நிலைகளில் ஆக்கும் நிலைகளுக்கு மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கொடுத்த ஆணைகளைச் சிறப்பித்துப் பழகுங்கள்.

அவர் காட்டிய அருள் வழியில் மெய் ஞானத்தை வளர்த்து நீங்களும் அவரைப் போன்ற மெய் ஞானியாக வளர வேண்டும். உங்களால் முடியும். உங்களை நீங்கள் நம்புங்கள்…!

யாம் சொல்லும் தியானத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை…!

blessed meditation

யாம் சொல்லும் தியானத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை…!

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் எல்லா மகரிஷிகளின் உணர்வுகளையும் உங்களுக்குள் பதிவு செய்கிறோம்.

சிலரை நீங்கள் பார்க்கலாம். அறியாத நிலைகளில் சில உணர்வுகள் அவர்களை இயக்கும். குருநாதர் காட்டிய அருள் வழியில் மெய் உணர்வு கொண்டு அவர்களை அறியாது இயக்கக்கூடிய அந்த நிலைகளிலிருந்து மாற்றுதல் வேண்டும்.

யாரையும் நாம் குற்றவாளியாக ஆக்க வேண்டியதில்லை.

தியானத்தில் உங்களுக்குப் பவர் கொடுக்கிறோம். எல்லோருக்கும் செய்வதைக் காட்டிலும் தியானம் செய்யும் உங்களுக்கு அந்த பவரைக் கொடுக்கிறோம்.

பொது வாழ்க்கையின் நிலையில் உங்களை ஒரு கட்டுப்பாட்டிற்குள் நான் கொண்டு வரவில்லை. நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றோ இப்படித்தான் நடக்க வேண்டும் என்றோ நான் யாரையும் சொல்ல வரவில்லை.

தர்மத்தையும் நியாயத்தையும் ஞானிகளின் உணர்வுகளையும் அது எப்படி இயக்குகிறது என்ற நிலைகளையும் உங்களுக்குள் பதியச் செய்கிறேன். அதை நீங்கள் வளர்த்துக் காட்ட வேண்டும்.

“இது தான் சட்டம்…!” என்ற நிலைகள் வந்தால் அந்தக் கட்டுப்பாடு தளர்ந்து விடும். சில நாள் கூட நிற்காது. கட்டுப்பாடு எல்லாம் ஒரு திறை மறைவு தான்.

எதன் நிலைகள் எந்த நிலைகள் எதன் வழி வந்தாலும் ஒரு சட்டத்தை இயற்றி இப்படித்தான் வர வேண்டும் என்று கொண்டு வந்தால் அந்தக் கட்டுக் கோப்பு நிலைத்திருக்காது.

அருள் ஞானிகள் சென்ற பாதையை உபதேச வாயிலாகப் பதிவாக்குகின்றோம். அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அதன் வழிகளில் நீங்கள் இயங்கத் தொடங்கினால் அது இயங்கும். அப்படி இருந்தால் தான் எதையும் மாற்ற முடியும்.

ஞானிகளின் உண்மையின் நிலைகளைப் பதிவு செய்யப்படும்போது இதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் அது உங்களை உயர்த்திக் காட்டும். அருள் வழியில் மனதார ஏற்றுக் கொண்டால் போதும். அதனால்தான்
1.உங்கள் உயிர் எதை இயக்குகின்றது?
2.அது எப்படி உடலை உருவாக்குகிறது?
3.நாம் எண்ணிய எண்ணங்கள் எப்படி இயங்குகின்றது?
4.இதிலிருந்து நாம் எப்படி எதை உருவாக்க வேண்டும்? என்று தெளிவாக்கிக் கொண்டே வருகின்றோம்.

தீமையை வென்ற அருள் ஞானியின் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும். அதை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். இது முக்கியம்.

உங்களை யாம் எந்த்க் கட்டுப்பாட்டிற்குள்ள்ளும் வ்ரக் சொல்லவில்லை…, ஞானிகளின் கண்ட உண்மைகளை உணர்த்துகின்றோம் – அதை நீங்கள் வளர்த்துக் கொண்டால் போதும்…! – ஞானகுரு

சொத்து சுகத்துடன் வாழ்ந்திருந்தாலும் கடைசியில் குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கின்றார்கள்…! சில வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள்

Gana gurusamiji

சொத்து சுகத்துடன் வாழ்ந்திருந்தாலும் கடைசியில் குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கின்றார்கள்…! சில வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் 

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் நீ தயங்காதே
பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ
மின்னலைப் போலே மறைவதைப் பாராய் என்று
குருநாதர் அடிக்கடி பாடுவார்.

உதாரணமாக செல்வம் சொத்து எல்லாம் ஆரம்பத்தில் சம்பாரித்திருப்பார்கள். வயதான காலத்தில் நோய்வாய்ப்பட்டு நடமாட்டம் குறைந்து படுக்கையில் இருப்பார்கள்.

அந்த மாதிரி நேரத்தில் வீட்டில் இருக்கும் தன் பையனிடமோ மற்றவர்களிடமோ “தாகமாக இருக்கிறது… கொஞ்சம் தண்ணீர் கொடுப்பா…!”  என்பார்கள்.

உடனே தண்ணீரைக் கொடுக்காதபடி “உனக்கு வேறு வேலையே இல்லை… போ..!” என்று இவர்கள் திட்டிக் கொண்டு இருப்பார்கள்.

மெய் ஞானிகள் கண்டுணர்ந்த பேருண்மைகளை அறியும் வண்ணம் குருநாதர் எனக்குப் (ஞானகுரு) பல உபதேசங்களைக் கொடுப்பார்.

அதே சமயத்தில் அதை எனக்குள் ஆழமாகப் பதிவு செய்து உண்மையை நான் உணர்வதற்காக வேண்டி என்னைக் கடுமையாகத் திட்டுவார். அப்பொழுது எனக்குச் சோர்வு வரும்.

நான் சோர்வடையும் அந்த மாதிரி நேரங்களில் குருநாதர் என்னை அழைத்துச் சென்று இந்த மாதிரி நோயால் வாடும் ஆள்கள் இருக்கும் குடும்பங்களை நிறையக் காண்பிப்பார்.

மனமே இனியாகிலும் மயங்காதே
பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா?

1.ஏனென்றால் அவர் நேற்று நன்றாக இருந்தார்.
2.சந்தோஷமான உலகமாக அவருக்கு இருந்தது.

அதிலே அவர் எடுத்து வளர்த்துக் கொண்ட உணர்வு உடலில் சேர்ந்து நோயானவுடன் “கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கொண்டாப்பா…!” என்கிறார்.

சும்மா போகும் பொழுதும் வரும் பொழுதும் ஏதாவது வேலை சொல்லிக் கொண்டேயிருப்பது…! “இது தான் உன் வேலை” என்று பையன் திட்டுகிறான்.

இவர் நன்றாக இருக்கும் பொழுது என்ன செய்கிறார்?

தன் பையனை அவன் சிறு பிள்ளையாக இருக்கப்படும் போது  அவனைக் காக்க வேண்டும் என்பதற்காக “அங்கே போயிடாதடா… இங்கு போயிடாதடா…!” என்று சொல்லி இருக்கின்றார்.

மீண்டும் மீண்டும் பையன் அந்தக் குறும்புத்தனம் செய்யும் பொழுது சங்கடப்பட்டு இவர் சொல்கிறார். பையனைக் காத்துவிடுகின்றார். ஆனால்…,
1.இவர் வயதான காலத்தில் நோயில் விழுந்து விட்ட பின்னாடி
2.அதே சங்கடம் இங்கே பையனுக்கு வருகின்றது.
3.இவருக்கு வேறு வேலையே இல்லை “எப்போது பார்த்தாலும் “நச்… நச்…” என்று எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பார் என்கிறான் பையன்.

தன் பையன் நன்றாக இருப்பதற்காக வேண்டிச் சங்கடப்பட்டுச் சொன்னார். அந்தச் சங்கடமான உணர்வு நோயாக வந்து விட்டது. இவர் நோயில் விழுந்து விட்டார்.

அதே சமயத்தில் நோயானபின் “அப்பாவிற்குக் குடிக்கத் தண்ணீர் கொண்டு வாடா…” என்று சொன்னால் பையன் செய்யாதபடி திட்டிக் கொண்டிருக்கின்றான்.

இது நடந்த நிகழ்ச்சி. அப்படியே இந்த உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகின்றார் குருநாதர்

இதைப் போன்று மூன்று இலட்சம் பேரைக் (குடும்பங்களைக்) காண்பித்து “மனமே இனியாகிலும் மயங்காதே…!” என்ற பாட்டின் மூலமாக எனக்கு ஒவ்வொரு நிமிடமும் உண்மைகளைத் தெரியும்படிச் செய்தார். அறிய வைத்தார்.

மின்னலைப் போலே மறைவதைப் பாராய்
நேற்று இருந்தார் இன்று இருப்பது நிஜமோ
நிலையில்லாத இந்த உலகம் உனக்குச் சதமா…?

நிலை இல்லாத இந்த உலகத்திற்கு “நீ ஏன்டா (என்னிடம்) வாதாடுகிறாய்…?” என்று மெய்ப் பொருளைக் காட்டுவார்.

குருநாதர் கடுமையாகத் திட்டுவார். அதே சமயத்தில் அதற்குண்டான உதாரணத்தைக் காட்டுவார். இந்த உணர்வுகள் உனக்குள் எப்படி வேலை செய்கின்றது…? என்று  முழுமையான அனுபவமாகக் கொடுப்பார்.

பார்…! செல்வத்தைச் சம்பாதித்து வைத்தார்கள். அவன் நன்றாக இருக்க வேண்டும்… இவன் நன்றாக இருக்க வேண்டும்… தான் நன்றாக இருக்க வேண்டும்…! என்று சொல்லி முயற்சி செய்வார்கள்.

குடும்பத்தின் மேல் உள்ள பாசத்தால் பதறிப் போய் வேலை செய்வார்கள். பிள்ளைகளைத் திட்டவும் செய்வார்கள். சம்பாதித்த காசை பிள்ளைக்குக் கொடுக்கவும் செய்வார்கள்.

கடைசியில்..,
1.இத்தனையும் செய்தேனே “பையன் இப்படிப் போகின்றானே…!”
2.அவன் எதிர் காலம் என்னாகுமோ என்ற வேதனைப்படுவார்கள்
3.அந்த வேதனையும் கோபமும் அதிகமாகிக் கை கால் வராமல் நோயாகிப் படுத்த படுக்கையாகின்றார்கள்.

படுத்துக் கொண்ட நேரத்தில் “முடியவில்லையே… கண்ணு…! கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா…” என்றால் “இந்த வருகிறேன் போ…!” என்பான்.

அட… இன்னும் காணோமே… தண்ணீர் தவிக்கின்றதே… கொடுக்கவில்லையே…! என்று சொல்லித் தவிக்கும் ஆள்களைக் குருநாதர் நிறையக் காண்பித்தார்.

நோயாக இருக்கின்றார்கள். அப்போது உடலுக்கு முடியாத நிலைகளில்
1.கூட ஒரு தரம் கொஞ்சம் வேகமாகச் சொல்லி விட்டால்
2.எப்போது பார்த்தாலும் கத்திக் கொண்டு… செ.., “சனியன் சீக்கிரம் தொலைந்தால் பரவாயில்லை…!” என்று சொல்லாகச் சொல்லிவிடுகிறார்கள்.

மூன்று இலட்சம் பேர் குடும்பங்களில் மூன்று இலட்சம் விதமாக உணர்வுகள் எப்படி இயங்குகின்றது? இதெல்லாம் தீய வினையாக சாப வினையாக பாவ வினையாக ஒவ்வொரு உடலிலும் எப்படிச் சேர்கின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா என்று காட்டுகிறார் குருநாதர்.

மனித வாழ்க்கையில் இது வருகின்றது. பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? மின்னலைப் போல…, சுகம் பூராம் போகின்றது பார்…! அனுபவிக்க முடிகின்றதா…? என்கிறார் குருநாதர்.

1.சொத்து எல்லாம் அவருக்கு இருக்கின்றது
2.ஆனால் இவருக்குச் சுகமெல்லாம் போய்விட்டதே..!
3.நரக லோகத்தில் அல்லவா இப்பொழுது வசிக்கின்றார்.
4.யாரும் கவனிக்க மாட்டேன் என்கிறார்கள் என்ற நரக லோகத்தில் தான் வாழ முடிகின்றது.
5.சொர்க்கலோகத்திற்குப் போக முடியவில்லை. ஏனென்றால் அவர் எண்ணமே இங்கு இல்லை.

இதைத்தான் அடிக்கடி அடிக்கடி மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்கு உணர்த்திக் காட்டுவார். அந்த அனுபவத்தைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக வேதனைப்பட்டு வேதனைப்பட்டு வேதனையை அனுபவிப்பதற்காக நாம் மனிதச் சரீரம் பெறவில்லை.

வேதனைகளை நீக்கிய… தீமைகளை நீக்கிய… மெய் ஞானிகளின் அருள் சக்திகளை எடுத்து எடுத்து நமக்குள் சிறுகச் சிறுச் சேர்த்து வேதனையிலிருந்து விடுபடும் வாழ்க்கையாக வாழ்ந்து உடலுக்குபின் அழியா ஒளியின் சரீரமாக அடைவது தான் மனிதனின் கடைசி எல்லை.

1.மெய் ஞானிகள் அடைந்த உன்னத நிலைகளை நாம் பெறுவதே
2.நமக்கு அழியாச் சொத்து.
3.அதுவே பேரானந்தப் பெரு நிலை.

குரு வழியில் பெற்ற உயர்ந்த சக்தியை உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள்

Image

அகஸ்தியமாமகரிஷி - பாபனாசம்
குரு வழியில் பெற்ற உயர்ந்த சக்தியை உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள்

காலை துருவ தியானத்தைக் கடைப்பிடிக்க அந்தந்தக் குடும்பத்தில் முயற்சி எடுங்கள். நான்கிலிருந்து ஆறு மணிக்குள் ஒரு பத்து நிமிடமாவது தியானியுங்கள்.

காலையில் ஆறரை மணிக்குச் சூரியனின் ஒளிக்கதிர்கள் துருவ நட்சத்திரத்தின் ஒளி அலைகளைத் தாங்கி வருகின்றது. அதைப் பெறும் பாக்கியமாகத்தான் உங்களில் பதிவாக்கி உள்ளது.

அந்த நேரம் “குளிக்க வேண்டுமே…!” என்று எண்ணாதீர்கள். உங்கள் ஆன்மாவைக் குளிக்க வைக்கின்றீர்கள்.

உடலைக் குளிக்க வைக்க நீரைப் போடுகின்றோம். நம் ஆன்மாவைக் குளிக்க அருள் ஞானிகளின் உணர்வைப் போடுகின்றோம். அதை வைத்துத்தான் தூய்மையாக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திலும் தவறாது இதைச் செய்து பழகுங்கள்.
1.“நேரமில்லை…!” என்று விட்டு விடாதீர்கள்.
2.“முடியவில்லை…!” என்று விட்டு விடாதீர்கள்.

ஏனென்றால் அந்த நேரத்தில் மகரிஷிகளின் ஆற்றல் நீங்கள் எல்லோரும் பெற வேண்டுமென்று எண்ணுகின்றேன். குருவினுடைய உணர்வின் அலைகளை உங்களுக்குள் பதிவு செய்திருக்கின்றேன். அதை எளிதில் பெறுவதற்கு உங்களை நான் தியானிக்கின்றேன் தவமிருக்கின்றேன்,

இந்த உணர்வின் சத்து குருவின் அருள் இங்கே படர்ந்துள்ளது. அதை எடுத்து நீங்கள் வளர்ந்தால் தான் அந்த அலைகள் இங்கே குவியும்.

நெல் செடியின் உணர்வின் சத்துக்கள் காற்றிலே பரவி இருக்கின்றது. நாம் வயலிலே நெல்லை ஊன்றும்போது அது எந்தச் செடியிலிருந்து விளைந்ததோ அந்த சத்தினை அது கவர்ந்து தன் இனத்தைப் பெருக்கித் தன் மகசூலைக் கொடுக்கின்றது.

இதைப் போல குரு பெற்ற அந்த உயர்ந்த சக்தியை ஞான வித்தாக ஊன்றுகின்றோம்.

1.அனைவருக்குள்ளும் இது பெருக்கப்பட்டு
2.இந்த உணர்வின் அலைகள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டால் தான்
3.தீமை கொண்ட இந்த உலகிலிருந்து மக்களை மீட்க முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளை வளர்த்து அதை அனைவரும் பெற வேண்டுமென்ற எண்ணத்துடன் காலை துருவ தியானத்தை ஆரம்பியுங்கள்.

நஞ்சு கொண்ட உலகிலிருந்து மக்களை மீட்டுவோம் என்ற உணர்வை வளர்க்க வேண்டும்.

1.மக்களைப் பகைமை கொண்டு பார்க்காதீர்கள்
2.பகைமை உள்ளவர் என்று எண்ணாதீர்கள்
3.தீமையான உணர்வுகள் கொண்டவர் என்று எண்ணாதீர்கள்.

தீமையான விஷக் கருணைக் கிழங்கையும் நவேக வைத்து அதனுடன் புளியும் காரமும் உப்பும் போட்டு சுவை கொண்டதாக மாற்றிச் சந்தோஷமாகச் சாப்பிடுகின்றோம்.

இதைப் போன்றுதான் எவராக இருந்தாலும் தீமை என்ற நிலைகள் மாற்றி அவர்கள் “தீமையற்றவர்களாக வாழ வேண்டும்…” என்று உங்களுடைய எண்ணத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்.

தீமையற்றவர்களாக அவர்கள் வாழ்வதற்காக அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் அவர்கள் பெற வேண்டுமென்று “தவம்” இருங்கள்.

கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்து ஒரு குடும்பமாக அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

பூமியைச் சமப்படுத்த அதைத் திசை திருப்பிய “அகஸ்தியனின் ஆற்றல்கள்”

Image

தென்னாடுடைய சிவனே போற்றி

பூமியைச் சமப்படுத்த அதைத் திசை திருப்பிய “அகஸ்தியனின் ஆற்றல்கள்”

 

 

இயற்கையில் விளைந்த நிலைகளைக் கண்டுணர்ந்து அதைச் சீராக்கும் நிலைகள் பெற்றவன் மெய் ஞானியான அகஸ்தியன்.

மெய்யை உணர்ந்த அந்த அகஸ்தியனால் தான் இன்றும் இந்தப் பூமி நிலைத்து நின்று ஒரு சீராகச் சுழல்கின்றது.

1.தென்னாடுடைய சிவனே போற்றி

2.எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று

3.அந்த அகஸ்தியரைத்தான் நாம் போற்றித் துதித்துக் கொண்டு இருக்கின்றோம்.

ஆதியிலே பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தன் எண்ணத்தை விண்ணுலகில் செலுத்தி அணுவின் ஆற்றலை அறிந்துணர்ந்து இந்தப் புவியின் மாற்றத்தையும் கண்டுணர்ந்ததவன் அகஸ்தியன்.

சூரியன் தனக்குள் வரும் நஞ்சினைப் பிளந்து நல்ல உணர்வினை ஒளியாக மாற்றுகின்றது. அதே சமயத்தில்

1.பூமிக்குள் நஞ்சுகள் அதிகமாகக் குவிக்கப்படும் போது

2.சூரியனின் காந்த ஈர்ப்புக்குள் சிக்காது மறைவாக வரப்படும் போது

3.அந்தப் பகுதி சரியாக இயங்காத நிலையாக இருந்தது.

அந்தப் பகுதியைச் சீராக்குவதற்காகத் “தான் இருந்த பகுதியை” (தென் பகுதி) விண்ணை நோக்கி ஏகி அந்த உணர்வின் தன்மை கொண்டு அந்தப் பகுதியைச் சூரியன் பக்கமாகச் சுழலச் செய்ய வைத்தவன் மெய் ஞானி அகஸ்தியன்.

அணுக் கதிரியக்கங்களைக் கண்டுணர்ந்த விஞ்ஞானிகள் பூமியின் ஒரு பகுதியில் அணு குண்டுகளை வெடிக்கச் செய்தால் அதிலிருந்து கிளம்பும் புகை மண்டலம் சூரியனிலிருந்து வரும் வெப்ப காந்தங்களைத் தடைபடுத்தி பூமியின் இயக்கத்தை செயலிழக்கச் செய்துவிடும்.

சூரியனின் வெப்ப காந்தம் படவில்லை என்றால் அந்தப் பகுதி உறை பனியாகிவிடும். பின் நிலை தடுமாறி சுழற்சியின் தன்மையாகி கடல் பகுதிகள் இடம் மாறி நம் தமிழ் நாடு எல்லாம் காணாமல் போய் விடும்.

இதைப் போன்ற நிலைகளை விஞ்ஞானிகளால் வெறித்தனமாக நாளை செய்யவும் முடியும்.

ஆனால் அன்று மெய் ஞானியான அகஸ்தியன் தன் உணர்வின் எண்ணத்தை நினைவின் ஆற்றலை விண்ணிலே பாய்ச்சி வெப்பங்களைக் குவிக்கச் செய்து பூமியை நேர்க் கோட்டிலே சுழலச் செய்தான்.

ஒரு பக்கம் உறை பனியானாலும் மற்ற பக்கம் அதைக் கடல்களாகக் உருகச் செய்தான். அதனால் இன்று வரை பூமி சீராக ஓடிக் கொண்டுள்ளது.

இதைத்தான் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சிறு குட்டிக் கதையாகச் சொல்லி இருப்பார்கள்.

சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் ஆகும் போது கூட்டங்கள் அதிகரித்து விட்டால் இந்தப் பூமியின் நிலையே மாறிவிடும். அதைச் சமப்படுத்துவதற்காகக் “கூழையாக இருக்கும் அகஸ்தியனை… சிவன் கூப்பிட்டு “நீ தெற்கே போ…!” என்றான்.

தெற்கிலே தோன்றிய அந்த அகஸ்தியன் பூமியைச் சூரியன் பாகம் சீராகத் திருப்பியதால் தென் பகுதியில் வெயில் அதிகமாகவும் மற்ற பக்கம் வெயில் தணிந்து குளிர் பகுதியாகவும் ஆகி சம நிலை பெற்றது.

பூமியைச் சமப்படுத்திய இந்த உணர்வு கொண்டு எதை நுகர்ந்தானோ அந்தத் துருவப் பகுதியில் நின்று அதன் வழி வருவதை உணவாக உட்கொண்டு துருவ நட்சத்திரமாக இன்றும் செயல்படுத்திக் கொண்டுள்ளான்.

இதையெல்லாம் சாதாரணமாக நினைக்க வேண்டாம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் இந்த உணர்வின் தொடர் வரிசையை அனைவருமே காணலாம்.

அகஸ்திய மாமகரிஷியின் உணர்வை நுகர்ந்த மனிதர்கள் எல்லோரும் மகரிஷிகளாகி விட்டார்கள். நாமும் அந்த அகஸ்தியரின் அருள் பெறவேண்டித் தியானிப்போம்.

விஞ்ஞானத்தின் விளைவால் வரும் அழிவுகளிலிருந்து நம்மைக் காப்போம். உலகைக் காப்போம்.

கரையான் புற்றில் அமரச் செய்து மெய் ஞானிகளின் உணர்வை எடுக்கச் சொன்னார் குருநாதர்

Image

karaiyan-_-termites

கரையான் புற்றில் அமரச் செய்து “மெய் ஞானிகளின் உணர்வை” எடுக்கச் சொன்னார் குருநாதர்

 

“தெரிந்து கொள்ள வேண்டும்…” என்பதற்காக வேண்டி குருநாதர் ஒவ்வொரு நாளும் பல அனுபவங்களை எனக்குக் கொடுத்தார்.

முள்ளில் உட்காரச் சொன்னார். எறும்புக் குழியில் போய் உட்காரச் சொன்னார். எறும்புக் குழியில் உட்கார்ந்தாலும் பரவாயில்லை. கரையான் புற்றில் உட்காரச் சொன்னார்.

கரையான் புற்றிலே உட்கார்ந்தவுடனே என் வேஷ்டி எல்லாம் காணாமல் போய்விட்டது. அப்படியே சல்லடைக் கண் மாதிரி ஆகிவிட்டது. எழுந்தால் வேஷ்டியே இல்லை. துணியைப் பூராம் அரித்துவிட்டது.

வெளியிலே நான் எப்படிப் போவது…! கரையான் புற்றில் உட்கார்ந்து கொண்டு அதைச் செய்யச் சொல்கின்றார்.

காரணம் வேஷ்டித் துணி மண்ணில் விளைந்து வந்த பருத்தி தான். ஆனால் அந்தக் கரையானின் மலம் பட்டவுடனே அந்தத் துணி காணாமல் போகின்றது.

1.மண்ணிலிருந்து செடியாக வந்து பருத்தியாக வந்தது.

2.துணியாக நெய்த பின் அதற்குள் மறைந்த சத்தைக் கரையான் எப்படிக் கரைத்துச் சாப்பிடுகின்றது.

3.கழிவை மீண்டும் மண்ணாக எப்படி மாற்றுகிறது என்ற

4.இந்த இரண்டையும் காட்டுகின்றார் குருநாதர்.

இதே மாதிரித் தான் ஒவ்வொரு பொருளையும் உணவாக உட்கொள்கிறோம். கழிவை வெளிப்படுத்துகின்றோம்.

அதே போல் ஒவ்வொரு எண்ணத்தையும் எண்ணி எடுக்கின்றோம். நமக்குள் சேர்த்து அதிலுள்ள சத்தை எடுத்துக் கொள்கிறோம்.

நாம் எண்ணும் எண்ணத்தில் இருக்கக்கூடிய சத்தை எடுத்து அது என்ன செய்கின்றது? நம்மிடம் இருக்கக்கூடிய உணர்வைக் கரைத்து இது எடுத்துத் தன்னுடன் சேர்த்து வளர்கின்றது. கழிவைப் பூராம் தட்டிவிட்டு விடுகின்றது.

தீமையான எண்ணங்களையும் உணர்வுகளையும் அணுக்களையும் அகற்ற நாம் என்ன செய்ய வேண்டும்?

“ஈஸ்வரா…” என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி விண்ணிலே நினைவைச் செலுத்தி அந்த மெய் ஞானிகளின் உணர்வுகளை எடுத்து நமக்குள் சேர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

1.கரையான் கழிவை மண்ணாக மாற்றியது போல்

2.அந்த அருள் உணர்வுகள் நம்மிடம் உள்ள தீமைகளை மண்ணாக மாற்றிவிடும்.

3.அருள் உணர்வின் தன்மை ஒளியான அணுக்களாக நமக்குள் உருப்பெறும்.

உயிரான ஈசனுக்கு நல்ல உணர்வுகளைத்தான் கொடுக்க வேண்டும் – கெட்டதைக் கொடுத்தால் கெட்டதை உருவாக்கிவிடும்

Image

உயிரான ஈசனுக்கு நல்ல உணர்வுகளைத்தான் கொடுக்க வேண்டும் – “கெட்டதைக் கொடுத்தால் கெட்டதை உருவாக்கிவிடும்”

 

நாம் சங்கடமாக எண்ணினாலும் துன்பமாக எண்ணினாலும் இந்த உணர்வின் தன்மை உயிரிலே படும்போது இந்த உணர்வின் நிலைகள்தான் நம்மை இயக்கிவிடுகின்றது.

அதனால் இந்த உடலுக்குள் இருக்கக்கூடிய நம் ஈசனுக்கே கெடுதல் செய்கின்றோம். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கோபமான நிலைகளையோ வெறுப்பான நிலைகளையோ அல்லது ஆத்திரமான உணர்வுகளையோ நாம் சுவாசிக்கும் பொழுது நம் உயிரில் பட்டுத்தான் அதற்குப் பின் வெளியிலே நாம் சொல்கின்றோம்.

யாரைத் திட்டினாலும் முதலில் நாம் தான் அனுபவித்துக் கொள்கின்றோம். கீழே சேறு இருக்கிறதென்றால் அந்தச் சேற்றைக் கையில் அள்ளும் பொழுது முதலில் நாம் அசிங்கப்படுகின்றோம்.

இதைப் போலத்தான் ஒருவன் கெட வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் எடுத்துக் கொண்டால் முதலில் நமக்குள் தான் அந்த உணர்வுகள் சாடி நம் உடலுக்குள் நல்ல குணங்கள் அனைத்துமே கெடுகின்றது.

1.முன் பகுதி தெரியாது

2.பின் பகுதி நம் உடலுக்குள் அழுகிய சரீரமாக உண்டாக்கி

3.அந்த வேதனையின் தன்மையைப் பார்க்கலாம்.

ஏனென்றால் உயிர் பிரம்மம். யாரை ஏமாற்றினாலும் உயிரான ஈசனிடம் ஏமாற்ற முடியாது. நாம் கொடுத்ததைப் பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டித்துவிடுவான்.

மெய் ஞானிகளின் அருள் ஒளியைச் செலுத்தினால் தான் தீமைகளை அகற்றி உயிரான பிரம்மனிடத்தில் மகிழ்ச்சியை ஊட்ட முடியும்.

யார் சங்கடமான நிலைகளைச் சொன்னாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியை நாம் சுவாசித்து இந்த ஒளியினைப் பாய்ச்சும் பொழுது

1.பிறருடைய உணர்வுகள் தீயதாக இருந்தாலும்

2.அதை மாற்றும் ஆற்றல் நமக்குக் கிடைக்கின்றது.

“வள்ளியைத் திருமணம் செய்து கொள்” என்று விநாயகர் முருகனிடம் சொல்கிறார் – வள்ளி திருமணம்

Image

valli murugan

“வள்ளியைத் திருமணம் செய்து கொள்” என்று விநாயகர் முருகனிடம் சொல்கிறார் – வள்ளி திருமணம்

 

முருகனுக்கு இரண்டு சக்திகள் இச்சா சக்தி கிரியா சக்தி என்பது அன்று ஞானிகள் சொன்ன பேருண்மையினுடைய நிலைகள்.

அதாவது வள்ளி – வலிமை மிக்க சக்தி நம் உடலிலிருந்து வரக்கூடியது ஆறாவது அறிவு. வள்ளி திணைக் காட்டிலே காவல் இருக்கின்றாள்.

தான் விளைய வைத்ததை மற்ற குருவிகள் கொத்திச் சாப்பிட்டுப் போகாமல் அதைப் பாதுகாக்கின்றாள்.

அதைப் போல இந்த மனித உடலில் நாம் எத்தனையோ  கோடிச் சரீரங்கள் எடுத்த நமக்குள் சேர்த்திருக்ககூடிய நல்வினையைக் காக்கும் நிலையான திணைக்காட்டில் காவல் இருக்கும்போது குருவியை எப்படி விரட்டுகின்றாள்?

இதைப் போல நம் உடலில் வளர்த்த நல்லுணர்வைக் காக்கக்கூடிய உணர்வை நாம் சுவாசிக்கும்போது நம் உயிரிலே பட்டவுடன் தெய்வ ஆணை.

நாம் சுவாசித்தது இந்த உடலில் தெய்வமாக மாறி அந்த ஆணைப்படிதான் நம்மை செயலாக்குகின்றது. இதுதான் வள்ளி தெய்வானை.

வள்ளி திருமணத்தில்oooooooo இன்னொன்றையும் காட்டியிருக்கிறார்கள்.

முருகனுக்கு அண்ணன் விநாயகர்.  அந்த ஆதிமூலத்திலிருந்து  தோன்றிய ஆறாவது அறிவான சக்தியைத் தான்  நமக்குள் இது காப்பாற்றும் அலைகளாக இருக்கின்றது

1.‘’இதை நீ கல்யாணம் செய்து கொள்’’

2.உன்னைக் காத்துக் கொள்ளக்கூடிய உணர்வாக எடுத்துக் கொள் என்று

3.உடலிலிருந்து வந்த வலிமையான (வள்ளி) சக்தியைக் காட்டினார்கள்.

வள்ளி திருமணத்தில் இதைத் தெளிவாகக் காட்டுகிறார்கள், பச்சையாகவே காட்டுகிறார்கள். அதை உணர்ந்து கொள்வார் யாருமில்லை.

ippadiஇப்படி ஆகிவிட்டதே என்று சோர்வடைவதை விட அருள் சக்திகளைச் சுவாசித்து தன்னையும் காக்க வேண்டும் பிறரையும் காத்திடும் நிலை வர வேண்டும் என்பதற்கே அவ்வாறு காட்டுகிறார்கள்.

தொழிற்சாலையில் வரும் பிரச்சனைகளைச் சதுர்த்தி செய்யுங்கள்…!

Ganesh sathurthy

தொழிற்சாலையில் வரும் பிரச்சனைகளைச் சதுர்த்தி செய்யுங்கள்

ஒரு தொழிற்சாலையில் நாம் வேலை செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

ஒரு சிலர் வெளியிலே விளையாடுவது போல வேலை செய்யும் இடத்திலும் பொறுப்பில்லாமல் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள்.

கம்பெனிக்குள் இருவர் விளையாடுவதை நாம் கண் கொண்டு  பார்க்கப்படும் பொழுது நம் உணர்வுக்கும் அவர் செயலுக்கும் மாறுபட்ட நிலைகள் நடக்கப்படும் பொழுது அவர் உடலில் விளைந்த அந்தப் பொறுப்பற்ற செயல்களின் உணர்வலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது.

அவர்களை நாம் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அவர் உடலிலிருந்து வரக்கூடிதை நம் கண் கவர்ந்து நம்மைச் சுவாசிக்க வைக்கிறது. சுவாசிக்கும் பொழுது
1.பொறுப்புடன் வேலை பார்க்கும் நிலைக்கும்
2.பொறுப்பற்ற நிலையில் அவர்கள் செயல்படுவதற்கும்
3.இரண்டு நிலைகளாக நம் உயிருக்குள் கலந்து
4.”பொறுப்பற்ற செயல்களைச் செய்கின்றார்களே…!” என்று
5.ஊழ்வினையாக “வித்தாக” நமக்குள் பதிவாகின்றது.

பதிவான பின் பொறுப்புடன் இருக்கும் நமக்கு அவர்கள் செயல்களைப் பொறுக்க முடியாது “இப்படிச் செய்கின்றார்களே.,.!” என்ற வேதனை நம்மை அறியாமலே வருகின்றது.

இப்படி வேதனைப்படும் பொழுது உடலுக்குள் இருக்கும் நல்ல உணர்வுடன் இந்த வேதனை உணர்வுகள் இரண்டறக் கலந்து விடுகின்றது.

வேதனை நம் நல்ல குணத்துடன் கலந்த பின் அடுத்து நாம் முகத்தைச் சுளித்து “வேலை பார்க்கும் இடத்தில்… இப்படி விளையாடுகிறீர்களே…?” என்று கேட்கின்றோம்.

பதிலுக்கு அவர்… “நீ என்ன பெரிய ஆளா…! என்னைக் குறை கூறுவதற்கு…?” என்று சொல்வார்.

எதிர் நிலையான உணர்வுகள் இப்படி இயக்கப்படும் பொழுது சிந்தித்துப் பதில் சொல்ல முடியாத நிலையில் இந்தச் சந்தர்ப்பம் ஒருவருக்கொருவர் வெறுப்பாகி “பழி தீர்க்கும் உணர்வுகளாக” இருவர் உடலிலும் பதிவாகிவிடுன்றது.

அவர்கள் செய்யும் தவறைச் சுட்டிக் காட்டும் நிலைகள் வந்தவுடன்
1.அவர்கள் கண்ணின் பார்வையே
2.வேறு தினுசாக மாறுபட்டு விடுகின்றது.

“என்ன…! இவன் இப்படிப் பார்க்கிறான்…!” என்று பொறுப்புடன் உள்ளவர் கவனிக்கும் பொழுது மீண்டும் இவருடைய கொதிப்பு அதிகமாகி சுவாசித்த உணர்வுகள் சிந்திக்கும் திறன் அற்றுக் கோபத்தின் எல்லை கடந்த நிலை ஆகிவிடுகின்றது.

கோபமான உணர்வுகள் தோன்றியவுடனே கார உணர்ச்சியாகி நம்மிடமிருந்து வெளிப்படும் சொல் அதைக் கேட்பவருக்கும் எரிச்சலூட்டும் நிலையாக வந்து விடுகின்றது.

ஒரு மிளகாயை நம் உடல் மீது தேய்த்தால் அது எப்படி எரிச்சலூட்டுகின்றதோ அது போல் அவர்கள் செய்யும் தவறான உணர்வுகள் நம் கோப உணர்ச்சிகளைத் தூண்டி காரமான உணர்வுகளைச் சுவாசிக்கச் செய்து எரிச்சலூட்டும் உணர்வுகள் விளைந்து விடுகின்றது.

ஒரு பலகாரம் சுடும் பொழுது ஏதாவது கை தவறி காரம் அதிகமாகப் பட்டுவிட்டால் பலகாரத்தில் காரம் அதிகமாகி “உஷ்… உஷ்…” என்று ஊதிச் சாப்பிடுவோம். பலகாரத்தை வெறுக்கும் நிலைகள் வரும்.

அதைப் போல் அவர்களுடைய பொறுப்பற்ற செயல்கள் நமக்குள் வந்து
1.அவனைக் கவனித்துப் பார்க்கும் பார்வையால்
2.இவன் ஏன் நம்மை இப்படிப் பார்க்கிறான் என்ற நிலைகள் அங்கே விளைந்து
3.அவர்கள் சொல்லிலும் சில தடுமாற்றமான சொல்கள் வருகின்றது.

அதனால் பொறுப்புடன் உள்ளவருக்கு எரிச்சலூட்டும் உணர்வுகளைத் தனக்குள் படைக்க வேண்டிய சந்தர்ப்பம் உருவாக்கி விடுகின்றது.

அந்த நேரத்தில் “ஏம்ப்பா…, இப்படிப் பொறுப்பில்லாமல் வேலை செய்கிறீர்கள்…?” என்று தான் சொல்ல முடியுமே தவிர “தன்னுடன் இணைத்துச் சொல்லும்… சொற்கள் வராது…!”

இப்படிக் கேட்டவுடனே ஏற்கனவே பொறுப்பற்ற செயலைச் செய்தவர்களிடமிருந்து இன்னும் கொஞ்சம் எரிச்சலான பதில் வரும்.

மேலதிகாரிகள் வரும் பொழுது அவர்களிடமும் நம்மை இந்த விஷயத்தைச் சொல்லத் தூண்டும்.

அப்போது எரிச்சலூட்டும் சொற்களைக் கேட்டவுடன் அந்த மேலதிகாரியும் எரிச்சல் பட்டு எரிச்சலான உணர்வுகள் அவர் உடலிலும் விளைகின்றது.

நல்ல உணர்வுக்குள் எரிச்சல் பட்டதனால் ரிப்பொர்ட் சொன்னதை வைத்து மேலதிகாரி நேராக அந்தப் பொறுப்பற்ற செயல் செய்தவரைக் கேட்கப்படும் பொழுது எரிச்சலான பதிலைச் சொல்கின்றனர்.

அதற்குப் பின் “யார் சொன்னது…? எவர் சொன்னது…?  நான் செய்ய வில்லையே…!” என்று வெறுப்புடன் பழி தீர்க்கும் உணர்வாக விளைந்து விடுகின்றது அந்த சந்தர்ப்பம்.

“நீ இவ்வளவு தூரம் மேலதிகாரியிடம் சொல்லும் அளவிற்கு வந்து விட்டாயா…?” என்ற நிலைகளில் எரிச்சல்பட்டு இவர் வெறுக்கும்படியாக அவர்களும் சில செயல்களைச் செய்யத் தொடங்குவார்கள்.

அப்பொழுது இந்தத் தொழில் செய்யும் இடத்திலே நிம்மதியற்ற நிலைகள் ஆகி பொறுப்புடன் வேலை செய்பவர் வேதனையுடனும் வெறுப்புடனும் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றார்,

அதை அதிகமாக அவர் சுவாசிக்கும் பொழுது கை கால் எரிச்சல் கண் எரிச்சல் எரிவாதம் போன்ற நோய்கள் உருவாகி விடுகின்றது.

வேலை செய்யும் இடத்தில் இவ்வாறு நடக்கும் இந்தச் சம்பவங்களை மற்றவருடன் பேசும் பொழுது “இப்படிச் செய்கிறான் அப்படிச் செய்கிறான்…” என்று எரிச்சலாகச் சொன்னவுடனே இதைக் கேட்டு அவர்களும் “ஏம்ப்பா நீ இப்படி எரிஞ்சி எரிஞ்சி பேசுகிறாய்…?” என்பார்கள்.

அப்புறம் அந்த பொறுப்பான உணர்வு கொண்டவர்கள்
1.“யாரிடத்தில் போய் நியாயத்தைச் சொல்வது…!
2.எவரிடத்தில் நியாயத்தைச் சொல்வது…!
3.எல்லோருமே பித்தலாட்டக்காரர்களாகவே இருக்கிறார்கள் என்ற உணர்வுக்கு வந்துவிடுவார்.

இது கடைசியில் கடும் நோயாகி விடுகின்றது. வேலை செய்யும் தொழில்கள் அனைத்திலுமே இது போன்ற நிலை உள்ளது.

கூட்டமைப்பாக வேலை செய்யும் பொழுது மேலதிகாரி என்ற நிலையில் கண்கானிக்க வரும் பொழுது ஒருவருக்கொருவர் குறை கூறும் நிலை ஏற்படுகின்றது.

அப்பொழுது குறை இல்லாததை அதே குறை உணர்வை இவர் மேல் சுமத்தப்படும் பொழுது பொறுப்புள்ளவர் தவறே செய்யவில்லை என்றாலும் தவறு செய்யாததைத் தவறு என்று சொல்லும் பொழுது பொறுப்பாக உள்ளவருக்கு மிகவும் கொடூரமாக ஆத்திரம் வந்து விடுகின்றது.

இதனால் பெரும் வேதனைகளை அனுபவித்து அந்த உணர்வின் செயல்கள் அவர் உடல்களிலே பரவத் தொடங்கி விடுகின்றது.

அந்த வேதனையான உணர்வுகள் அனைத்தும் ஊழ்வினையாகப் பதிவாகி வினைக்கு நாயகனாக அவர் எண்ணிய மணங்கள் அவர் ஆன்மாவாக மாறிவிடுகின்றது.

நாம் மனித உடல் பெறும் பொழுதே இளமையிலிருந்தே நஞ்சினை நீக்கி நல்ல உணர்வினை உடலாகச் சேர்த்து உடலிலிருந்து வரக்கூடிய நறுமணங்களை கெட்டதை நீக்கும் உணர்வின் ஆற்றலாக ஆறாவது அறிவாக ஒவ்வொருவரும் பெற்றிருக்கின்றோம்.

ஆனாலும் நமது மனதில் பிறர் செய்யும் அந்த நிலையால் நமக்குள் விளைந்த உணர்வுகள் கார உணர்வுகளாக மாறி அந்த ஆறாவது அறிவைச் சரியாகச் செயல்படுத்தாது வேதனையும் வெறுப்பும் எரிச்சலும் விளைந்து கொடூரமான நோயாகி உடலை நலியச் செய்து நல்ல எண்ணத்தையே சீர்குலைத்து விடுகின்றது. அதே போல
1.ஒரு விஷச் செடி எவ்வாறு அதன் விஷத்தின் தன்மையைக்
2.காற்றிலிருந்து கவர்ந்து அது செழித்து ஓங்கி வளருகின்றதோ
3.அந்தப் பொறுப்பற்றவருடைய உடலிலே வீரியத் துடிப்பாக
4.வேகத்தின் நிலைகள் கொண்டு விஷத்தின் தன்மையாக வளரும்.

ஒரு பாம்பின் தன்மை அது சீறிப் பாயும் பொழுது அது உடலில் உள்ள நஞ்சினைப் பாய்ச்சி மற்றவர்களுடைய பலத்தைக் குறைக்கச் செய்யும்.

ஒரு பாம்பு சீறி பாயும் பொழுது கண்ணால் பார்த்தவுடனே அந்த நஞ்சின் தன்மை ஊடுருவி நம் பலங்கள் குறைகின்றது.

அதைப் போல பொறுப்பற்றவர்களுடைய செயல்கள் பிறர் துன்பப்படுவார்கள் என்ற சிந்தனையில்லாது அவர்களுடைய செயல்களும் சொற்களும் அது வெளிப்பட்டு நாளுக்கு நாள் நஞ்சு அதிகமாகி சிந்தனையற்றவராக ஆக்கி விடுகின்றது.

அவர் உடலிலுள்ள ஆறாவது அறிவு நஞ்சினை நீக்கிடும் அறிவாக இருந்தாலும் அது மாசுபட்டுவிடுகின்றது. பாம்பாகத்தான் அடுத்து பிறப்பார்.

மனிதனான பின் நஞ்சு கலந்ததை வினையாகச் சேர்த்து நல் வினைகள் அனைத்தையுமே சிறுகச் சிறுகக் குறைத்து தீய வினைகளுக்கு நாயகனாக உடலில் உறுப்புகள் மாற்றமடைந்துவிடுகின்றது.

மனிதனின் சொற் தொடர்கள் அனைத்தும் பிறருடைய மனதைப் புண்படுத்தும் சொல்லாகவும் வெறுக்கும் நிலையாக அடைந்து விடுகின்றது.

இவ்வாறு வரும் வேதனைகளிலிருந்து மீள்வதற்குத் தான் அந்த அருள் ஞானியின் உணர்வுகளை உங்கள் உடலில் சக்தி வாய்ந்ததாக உபதேசித்து ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவு செய்கின்றோம்.

அந்த ஞானிகளின் அருளை நாம் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்,  மெய் ஞானிகளின் அருள் சக்தியை எடுத்துப் பிறருடைய உணர்வின் தன்மை நமக்குள் ஆட்டி படைக்காத நிலையாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தீயவினைகளைத் தடுத்து நிறுத்தும் சக்திகளை மனிதர்கள் நான் வளர்த்துக் கொள்ளும் நாள் தான் விநாயகர் சதுர்த்தி.

என் உடலுக்காகத்தான் இத்தனை பாடும் படுகிறேன் என்று சொல்கிறோம் – “உயிருக்காக நாம் என்ன செய்கிறோம்… என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்…!

Image

என் உடலுக்காகத்தான் இத்தனை பாடும் படுகிறேன் என்று சொல்கிறோம் – “உயிருக்காக நாம் என்ன செய்கிறோம்… என்று சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்…!

 

1.நம் உடலில் எத்தனையோ கௌரவங்களை எதிர்பார்க்கிறோம்.

2.எவ்வளவோ துணி மணிகளைப் போடுகின்றோம்,

3.பலவிதமான பொருளைகளை உபயோகித்து உடலை அழகுபடுத்துகின்றோம்.

எல்லாம் இருந்துவிட்டாலும் யாராவது ஒருவர் நம்மை ஒரு சொல் லேசாகக் குறைத்துச் சொல்லிவிட்டால் “இப்படிச் சொல்லிவிட்டாயே இரு உன்னை நான் பார்க்கிறேன் என்ற நிலைதான் வருகின்றது.

நம்மையறியாமலேயே இந்த நிலையைச் செய்கின்றோம். ஒருவர் சொன்னால் தாங்க முடியவில்லை.

 

அதே சமயத்தில் இந்த உடலிலிருந்து உயிரான ஈசன் போய்விட்டால் என்ன செய்கிறோம்? அடுத்து அம்மா அப்பா கணவன் மனைவி குழந்தை என்று பார்த்து வீட்டிற்குள்ளேயா வைத்துக் கொள்கிறோம்?

கிடையாது…! தூக்கி ரோட்டில் போட்டு விடுகின்றோம். பின் கட்டைகளைப் போட்டு நெருப்பை வைத்து எரித்து விடுகின்றோம். அல்லது மண்ணைப் போட்டு மூடிவிடுகின்றோம்.

வாழும் காலத்தில் எத்தனையோ பெரிய கௌரவத்தை வைத்துக் கொண்டிருந்தாலும் உயிரான ஈசன் போய்விட்டால் இந்த நீசமான உடலுக்கு என்ன வேலை?

ஆகவே நீசமாகப் போகும் இந்த உடலுக்காக நாம் ரோஷப்பட வேண்டியதில்லை. கௌரவத்தை எதிர்ப்பார்க்க வேண்டியதில்லை.

நம்மைப் பிறர் குறையாகச் சொல்வதைக் கேட்டு ரோஷப்படுவதற்குப் பதிலாக உயிரான ஈசனை மதித்து அருள் ஒளியைச் சுவாசித்தால் உடலில் விளைந்த ஒளியான உணர்வுகள் உயிராத்மாவுடன் ஒன்றி அவனுடன் சேர்ந்து ஒளியாக அடையலாம்.

உடலுக்காக வாழாமல் உயிருக்காக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.