ஓம் என்ற பிரணவத்தை “சிவனுக்கே ஓதினான் முருகன்” 

Image

Swami malai murugan

ஓம் என்ற பிரணவத்தை “சிவனுக்கே ஓதினான் முருகன்”

 

உடலான சிவனுக்குள் நின்று இந்த ஆறாவது அறிவு (முருகன்) இது இன்னென்ன பொருள்;  ஒரு பொருளுடன் ஒரு பொருள் மோதும் பொழுது நமது பூமி சுழல்கின்றது.

அது சுழலும்போது ஏற்படக்கூடியதுதான் ‘’பிரணவம்’’. நாம் சுவாசித்தது உயிரிலே பட்டு அந்த உணர்வின் தன்மை ஜீவ அலைகளாக இயக்குவதுதான் ‘’பிரணவம்””, என்ற இந்தத் தத்துவத்தை உடலான சிவனுக்குக் காது வழியாகச் சொல்லுகின்றான்.

நாம் சுவாசித்த உணர்வினுடைய நிலைகள் ஒலி அலைகளாகப் பட்ட பின் செவிகளிலே பட்டுச் சிவனுக்கே ஓதினான்,

இதைத் தான் “தகப்பன்சாமி” என்று கதை எழுதுவார்கள்.

மனித உடலுக்குள் நாம் சுவாசிப்பது அனைத்தும் உயிரிலே பட்டு உணர்வின் எண்ணங்களாக மூச்சலைகளாக வெளியிடுகின்றோம். உணர்வின் காந்த அலைகளாக அது படரும் போது நம் செவிகளில் பட்டு அந்த ஒலியின் தன்மை கொண்டு செயல்படுத்தச் செய்கின்றது,

உங்கள் காதைப் பொத்திக் கொண்டபின் நீங்கள் பேசிப் பாருங்கள். சிந்தனை செய்ய முடியுமா…? முடியாது.

ஏனென்றால் காதைப் பொத்தியபின் நீங்கள் ஒலிகளை எழுப்பினாலும் அதை உங்களால் கேட்க முடியாது போகின்றது.

1.ஒலி கொண்டு ஒலியை எழுப்பிய பின் (உயிரிலே பட்டு)

2.அதன் மூலம் தான் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு

3.அறிவாக அறியச் செய்து உடலை இயக்குகின்றது.

4.இதைத்தான் ஆறாவது அறிவின் செயலாகக் காட்டினார்கள்

5ஆகையினாலேதான் “சிவனுக்கே ஓதினான் முருகன்…”

6.தன் உணர்வின் எண்ணத்தை

7.தான் சுவாசித்து வெளியிட்ட உணர்வின் தன்மையை

8.தன் செவிகள் கொண்டு அந்த உணர்வின் நிலைகளில் செயல்படுத்தும் தன்மை

9.இதுதான் ஆறாவது அறிவு தகப்பன்சாமி.

ஞானிகள் உடலைச் சிவமாகக் காட்டினார்கள். இந்த உடலிலிருந்து வெளிப்படும் மணத்தை ஆறாவது அறிவாகக் காட்டினார்கள்.

சுவாசிக்கும் உணர்வின் ஒலிகள் செவியில் பட்டு உயிரில் பட்டு உடலுக்குள் எப்படி உணர்த்துகின்றது என்பதைத்தான் அவ்வாறு காட்டியுள்ளார்கள்.

அந்த ஆறாவது அறிவைச் சீராகப் பயன்படுத்தி நாம் ஏழாவது அறிவாக ஒளியாகச் சப்தரிஷி என்ற நிலையை அடைய வேண்டும்.

தீய வினைகள் நமக்குள் சேர்ந்து இருதயத்தின் (வால்வுகளை) இயக்கத்தை எப்படிப் பாதிக்கின்றது…? 

human-heart-fact

தீய வினைகள் நமக்குள் சேர்ந்து இருதயத்தின் (வால்வுகளை) இயக்கத்தை எப்படிப் பாதிக்கின்றது?

ஒருவன் நம்மைத் திட்டிப் பேசிவிட்டான் என்றால் அவனை எண்ணி எண்ணி “என்னை இப்படிச் சொன்னான்…! இரு நான் அவனை ஒரு கை பார்க்கின்றேன்…! என்று” சொன்னால் அந்தக் கடுமையான உணர்வுகள் திரும்பத் திரும்ப வினைகளாக வந்து கொண்டே இருக்கும்.

நான் ஒன்றுமே சொல்லவில்லை… அதற்குள் “இப்படிச் சொல்கிறார்களே…!” என்று சொன்னால் அது பகைமையான வினைகளாக வந்து கொண்டே இருக்கும்.

இத்தகைய வினைகள் நம் உடலுக்குள் உருவான பின் வினைக்கு நாயகனாக கை வலிக்கும், உடல் வலிக்கும் குடல் வலிக்கும் எல்லாம் வலிக்கும். இதெல்லாம் வரும்.

உதாரணமாகச் சலிப்பு சலிப்பு என்று சலிப்புப் பட்டுப் பாருங்கள், அடுத்தாற் போல குடல் புண் “அல்சர்” வரும்.

சலிப்பு சலிப்பு என்று எடுத்துப் பாருங்கள். தொண்டையில் என்ன செய்யும்? புளித்த ஏப்பம் மாதிரி வந்து (ஒரு விதமான பசப்பு தொண்டை வயிறு குடல்களில் பரவி இருக்கும்)  காவலாகக் காத்துக் கொண்டு இருப்பதை எல்லாம் எடுத்துவிடும்.

“இரு நான் பார்க்கிறேன்… இரு நான் பார்க்கிறேன்…! என்று உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னால் இது கோப உணர்ச்சி.
1.இருதயத்தில் உள்ள இரத்த வால்வுகளை
2.அந்தப் பிஸ்டனை இழுக்க விடாதபடி எரிச்சலாகும்.
3.எரிச்சலாகி அதிகமாக வீங்கிப் போய்விட்டது என்று சொன்னால்
4.இழுக்கும் போது வெறும் காற்றுத் தான் வரும் இரத்தம் வராது.

இது காற்றை இழுத்து மறுபடியும் பம்ப் செய்தது என்றால் கிர்… என்று போகும். உடலில் உள்ள நரம்பெல்லாம் பார்த்தால் “டைட்…” (இறுக்கம்) ஏறும்.

இந்த உணர்வின் தன்மைகள் இரத்தத்தில் கலந்து சர்க்குலேஷன் ஆகும் போது இரத்தம் சிறு மூளைக்குப் போய் வருவதற்கு முன்னாடி தலை “கின்…” என்று இருக்கும்.

தலையைப் பிடித்துக் கொண்டு “என் தலையை இடுக்கிப் போட்ட மாதிரி இருக்கின்றதே…! என்று நம் சிந்தனையை இழக்கச் செய்துவிடும்.

அதே போன்று நுரையீரல்களில் இரத்தத்தை இழுத்துப் பிஸ்டன் மூலமாகப் பம்ப் செய்வதற்கு முன்னாடி இதனுடைய நுண்ணிய அலைகள் எல்லாவற்றையும் மாற்றிவிடும்.

1.அதனால் மூச்சுத் திணறல் ஆகிவிடும்.
2.பின் மாரடைப்பு என்ற நிலை ஆகிவிடும்.

நாம் தவறு செய்ய வில்லை. ஆனால் நாம் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த வினைகள் நமக்குள் “எவ்வளவு பெரிய வேலைகளை எல்லாம் செய்கிறது…!” என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சந்தர்ப்பத்தால் வினைகள் பல சேர்ந்து வினைக்கு நாயகனாக அது உடலை இயக்குகின்றது. “சதுர்த்தி…” இதை நிறுத்த வேண்டும் என்று குருநாதர் எனக்குச் (ஞானகுரு) சொன்னார்.

1.நீ சுவாசித்த உணர்வுகள் தீய வினைகளாக உனக்குள் இப்படியெல்லாம் வந்து சேர்கின்றது
2.அதை நீக்க நீ அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்க வேண்டும்.
3.மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து உடல் உறுப்புகள் எல்லாவற்றிலும் பாய்ச்சினால் அந்த உறுப்புகள் சீராக இயங்கும்
4.தீய வினைகள் அகலும் என்று சொன்னார்.

அதைத் தான் உங்களிடம் சொல்கிறோம்.

அதை நீங்கள் எத்தனை பேர் பதிவு செய்து கொள்கிறீர்களோ அந்தப் பதிவு செய்த நிலைகளுக்கொப்பப “ஓஹோ…! இப்படி வந்து நம் உடலுக்குள் பதிந்து விடுகிறதா…!” அதை நீக்க வேண்டும் என்று உங்கள் எண்ணம் வந்தால் தான் நீக்க முடியும்.

“தேவர்கள் அசுரர்கள் – பாசிட்டிவ் நெகட்டிவ்” எதிர் நிலையான  இயக்கத்தின் சூட்சமம் வியாசகர் சொன்னது

Image

churning milky ocean

“தேவர்கள் அசுரர்கள் – பாசிட்டிவ் நெகட்டிவ்” எதிர் நிலையான  இயக்கத்தின் சூட்சமம் வியாசகர் சொன்னது

 

 

ஆரம்பத்தில் ஓர் உயிரணு ஓர் தாவர இனத்தை அது உணவாக உட்கொண்டு தான் உடல் பெறுகின்றது.

அப்படி உடல் பெற்றாலும் மற்றொரு தாவர இனச் சத்தை நுகரப்படும் போது இந்த உயிரணுவிற்குள் (உடலுக்குள்) போராட்டமாகி இந்த உணர்வின் நிலைகள் மாறுபட்டு விடுகின்றது. அப்பொழுது

1.அந்தத் தீமையிலிருந்து தற்காத்துக் கொள்ளும் இயக்கமாகத்

2.தன்னைக் காத்திடும் உணர்வுகள் இணைந்து

3.அது புது உணர்வின் தன்மையாக உருவாகின்றது.

ஒரு உயிரணு மற்ற தாவர இனங்களை நுகரும்போது அதனால் ஏற்பட்ட போர் முறைகள் தனக்குள் நோயாக விளைகின்றது.

நோயாக விளைந்தாலும் இரண்டறக் கலந்து அது உணர்வின் ஞானமாக விளைந்து அது உடலுக்குள் இணைந்தபின் முதலிலே எடுத்துக் கொண்ட உணர்வின் தசைகள் மாறுகின்றது.

அந்தத் தசைகள் உருமாறும் தன்மையில் அதற்குள் இணைந்த உணர்வின் மணங்கள் (புது) எண்ணமாகி அது எவ்வாறு இணைந்து கொண்டது என்ற நிலையை வியாசக பகவான் நான்காயிரம் ஆண்டுகளுக்குள் தெளிவுபடுத்தியுள்ளார்,

அன்று எழுத்தறிவு கிடையாது. ஆனால் அவர் சந்தர்ப்பம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் கண்ட உண்மைகளை தனக்குள் நுகர்ந்தறிந்து வெளிப்படுத்தினார்.

மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்துப் பாற்கடலில் கடையும் போது கடைந்தவற்றில்

1.தான் விழுங்கியது அனைத்தும் தேவர்கள் என்றும்

2.மலமாகக் கழித்ததை அசுரர்கள் என்றும் காட்டினார்.

ஒரு பொருளை உணவாக எடுத்து உட்கொள்ளும் பொழுது உட்கொண்டது அனைத்தும் உடலுக்குள் உருப்பெறும் சக்தியாகவும் அதிலே கலந்து மனிதனாக உருவானபின் கழிவின் சத்தையெல்லாம் மலமாகவும் வெளிப்படுத்துகின்றோம்.

அந்தக் கழிவு நஞ்சின் தன்மை கொண்டது என்றும் அந்த நஞ்சினை உணவாக விழுங்கியது அனைத்தும் நஞ்சு கொண்டதாக மற்றொன்றை அழித்திடும் நிலையாக வருகின்றது என்றும் தெளிவாக உணர்த்தியுள்ளார் வியாசகர்.

உட் கொண்ட நிலைகளில் கழிவுகளை அகற்றும் போது அந்தத் தீமைகளை அகற்றி வெளியே சென்றாலும் அது இன்னொரு தீமையின் நிலைகளை வளர்த்து அதனின் நிலைகள் வளர்ச்சி ஆகின்றது.

இதைத்தான் அசுரர்கள் தேவர்கள் என்றும் நெகட்டிவ் பாசிட்டிவ் என்று காட்டினார்.  ஒரு இயக்கத்தின் தன்மை வேண்டும் என்றால் “எதிர் நிலை… மறைகள்” இருந்தால் தான் இயக்கும்.

இதைப் போல தான் மனித உடலுக்குள்ளும் ஒரு உணர்வின் தன்மை எதிர் நிலையானால் தான் நம் உடலிலுள்ள அணுக்களும் இயங்கும். ஆனால்

1.எதிர் நிலையான உணர்வின் தன்மைகள் அதிகரித்து விட்டால்

2.நல் நிலையின் தன்மைகள் இங்கே ஒடுங்கி விடுகின்றது.

3.நல் நிலையான உணர்வின் தன்மைகள் எதிர் நிலையாக ஓங்கி வளர்ந்தால்

4.தீமைகளை அது ஒடுக்கி விடுகின்றது.

உதாரணமாக காரத்தை நாம் வாயிலே போட்டால் நம் உமிழ் நீர் அனைத்தும் காணாது போய் விடுகின்றது.

ஆனால் மற்ற பொருளுடன் இந்தக் காரத்தை இணைத்தால் உமிழ் நீரை நன்கு சுரக்கச் செய்து உணவை தாராளமாக உட்கொள்ளச் செய்கின்றது. உமிழ் நீர் சுவை மிக்கதாக மாறுகின்றது.

இதைப்போன்று தான் தீமைகளுக்குள் நல்லவைகள் அதிகரித்து விட்டால் தீமைகள் ஒடுங்குகின்றது. தீமை சிறிதாக இருக்கும்போது நன்மைகள் பலவாக இருந்தால் ஒரு நொடியில் அமிழ்த்தி விடும்.

நஞ்சினை வென்று தீமைகளை ஒடுக்கிய அருள் ஞானியின் உணர்வுகள் மிக சக்தி வாய்ந்த அணுக்களாக இங்கே நமக்கு முன் உண்டு.

அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த ஒளியான அணுக்களை ஒவ்வொரு உயிராத்மாவும் பருகும் நிலைகளுக்குத்தான் “தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர்…!” என்ற தத்துவத்தை அந்த மெய் ஞானியான வியாசகர் வெளிப்படுத்தினார்.

நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிடும் திறன் நாம் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அவர் சொன்ன தத்துவத்தின் உண்மை நிலை.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் வழி முறை

Bramha - creation

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறும் வழி முறை 

அகஸ்தியன் தாய்க் கருவிலே பெற்ற பூர்வ புண்ணியத்தால் நஞ்சை வென்றிடும் சக்திகளை அவன் பெற்றான்.

அதன் வழில் நஞ்சை நீக்கும் ஆற்றல்கள் அவன் உடலுக்குள் வளர்கின்றது. அவன் ஒருவரிடம் வளர்ந்தது மட்டுமல்லாதபடி திருமணம் ஆனபின் தன் மனைவியிடமும் அதையெல்லாம் சொல்லுகின்றான்

அவர்கள் இருவரும் அருள் உணர்வுகளை எடுக்கும் போது நஞ்சை வென்றிடும் உணர்வின் அணுக்கள் இருவர் உடலிலும் விளைகின்றது.

நஞ்சை வென்றிடும் உணர்வுகளை இருவரும் வளர்க்கப்படும் போது பேரண்டத்திலிருந்து வரும் எத்தகைய கடும் விஷமாக இருந்தாலும் அதை ஒடுக்கி ஒளியாக மாற்றும் தன்மையாக வருகின்றார்கள்.

ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக ஆகின்றார்கள்.

அகஸ்தியன் எப்படித் தன் வாழ் நாளில் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றினானோ இதைப்போல நாமும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நினைத்த மாத்திரத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வினைக் கவர கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒருவர் சண்டை இடுகின்றார் என்றால் உணர்வின் வேகம் அந்த வலிமை வருகின்றது.

எனக்கு இப்படித் “துரோகம் செய்தான் பாவி…! என்றால் அமெரிக்காவில் இருந்தாலும் இந்த உணர்வுகள் புரையோடி உணவு உட்கொள்ளும் போது நிலையை மாற்றிவிடும். நுரையீரலுக்குள் போனால் மரணம் கூட சம்பவிக்கும்.

வாகனம் ஓட்டும் போதோ தொழில் செய்யும் போதோ “துரோகம் செய்தான்…” என்று எண்ணினால் இந்த உணர்வு சிந்திக்கும் தன்மையைச் செயலிழக்கச் செய்து அங்கே எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றது.
1.அப்போது அவர்களுக்கு அங்கே நஷ்டம்.
2.இங்கே நினைக்கும் பொழுது இவருக்கும் நஷ்டம்.

அதே சமயத்தில் “நண்பன் எனக்கு நல்ல சமயத்தில் உதவி செய்தான்…!” என்று எண்ணினால் விக்கல் ஆகின்றது. இவனுக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுகின்றது,

அங்கே விக்கல் ஆகும் போது “யாரோ நினைக்கின்றார்கள்…” என்று அங்கேயும் நல்ல செயலை உருவாக்குகின்றது.

நல்ல குழந்தை என்று மெச்சிக் கொண்டு இருக்கின்றோம். ஆனால் படிக்கப் போன இடத்தில் ஒரு மாதமாக நமக்குத் தகவல் வரவில்லை என்றால் “என்ன ஆகிவிட்டதோ…?” என்று இங்கே வேதனைப்படுகின்றோம்.

யாருடைய உணர்வு நம் உடலில் இருக்கின்றதோ வேதனைப்பட்டு மீண்டும் நினைவை அவர்கள் பால் பாய்ச்சப்படும் போது அந்த குழந்தையின் உடலிலே விஷத்தின் தன்மை பாய்ந்து அங்கே சிந்திக்கும் தன்மையை இழக்கச் செய்கின்றது.

தொழில் செய்து கொண்டிருந்தால் தவறிழைத்துக் குற்றவாளி ஆக்கிவிடும். வெளியிலே நடந்து செல்லும் போது சிந்தனை தவறி மேடு பள்ளம் தெரியாது இடறிக் கீழே விழுகச் செய்துவிடும் ஆக்ஸிடென்டும் ஆகும்.

இதெல்லாம் எங்கிருந்து வருகின்றது? இயற்கை எப்படி நம்மை மாற்றுகின்றது? என்று அந்த இயக்கத்தின் உண்மைகளை உணர்ந்து கொண்டால் அதை நம்மால் மாற்றியமைக்க முடியும். பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்.

சந்தர்ப்பத்தால் வேதனையான உணர்வு வரும் போது உயிர் அதை பிரம்மமாக்கி நமக்குள் சிருஷ்டிக்கின்றது.

ஆனால் ஆறாவது அறிவு கொண்டு வேதனையை நீக்கும் உணர்வைப் பெறவேண்டும் என்று இச்சைப்பட்டால் தீமைகளை அகற்றும் உணர்வுகள் நமக்குள் சிருஷ்டியாகும். இது சந்தர்ப்பம்.

இதைப் போன்ற சந்தர்ப்பத்தை நாம் உருவாக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தப் பேரொளியான உணர்வுகளைக் கலந்து கலந்து அடிக்கடி உபதேசிக்கின்றோம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறவேண்டும் என்று தியானித்துத் தன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் கணவன் எண்ண வேண்டும் அதே போல தன் கணவனுக்குக் கிடைக்க வேண்டும் என்று மனைவியும் எண்ண வேண்டும்.

கணவன் மனைவி இரு உணர்வும் கருவாக்கி ஒளியின் அறிவாக மாற்றி நஞ்சை வென்றிடும் சக்தியை இப்படிக் கூட்டிக் கொள்ள முடியும்.

ஞானகுரு உபதேசித்த அருள் வழிப்படி துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றால் நம் தீமைகள் போக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வர வேண்டும். ஆனால்
1.குருநாதர் செய்வார்…,
2.”அவர் தான் செய்து தர முடியும்…!” என்று எண்ணினால் இது பிழையாகும்.

ஒரு செடியின் தன்மையை உருவாக்கிக் கொடுத்து நீரை ஊற்றி அதை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று கொடுக்கின்றோம்.

1.குருநாதரே செடியையும் வளர்த்துக் கொடுப்பார் என்று சொன்னால்
2.அது எப்படி இருக்கும்…!

ஏனென்றால் குழந்தை மீது உள்ள பாசத்தால் “உணர்வுகள் ஒன்றாகும்போது…” நீங்கள் எண்ணி எடுக்கும் வேதனை உணர்வுகள் அது குழந்தையைத் தாக்கி அங்கே தீமையை உருவாக்குகின்றது.

இதைப் போன்று தான் உங்கள் உடலிலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைப் பதிவு செய்கின்றேன். அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று சதா தவமிருக்கின்றேன்.

நான் எண்ணுகின்ற மாதிரி நீங்களும் குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்னை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் என்று எண்ணி எடுத்துக் கொண்டால் இது உங்களுக்குள் அரும் பெரும் சக்தியாக உருவாகும்.

1.உங்கள் எண்ணத்தால் தான் உங்களைக் காக்க முடியும்.
2.நான் காப்பாற்றுவேன் என்று சொன்னால் நான் கடவுள் அல்ல.
3.உங்கள் உயிர் தான் கடவுள்.

ஆகவே குருநாதர் சொன்னபடி  “துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும்” என்று எண்ணி அதை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள்

குப்பைக்குள் மறைந்த மாணிக்கத்தை எடுப்பது போல் இந்த மனிதச் சரீரத்திலிருந்து தான் “உயர்ந்த குணத்தை விளைய வைக்க வேண்டும்…!” என்றார் குருநாதர்

Image

குப்பைக்குள் மறைந்த மாணிக்கத்தை எடுப்பது போல் இந்த மனிதச் சரீரத்திலிருந்து தான் “உயர்ந்த குணத்தை விளைய வைக்க வேண்டும்…!” என்றார் குருநாதர்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் ஏழ்மையாக இருந்து ஒரு பித்தரைப் போன்று இருந்து தான் உலகம் இப்படி இருக்கிறது என்று எல்லா நிலைகளையும் எமக்குச் (ஞானகுரு) சுட்டிக் காட்டினார்.

குப்பையிலிருந்துதான் மரம் சத்து எடுக்கிறது, ஆகவே குப்பையான இந்தச் சரீரத்திலிருந்து தான் சத்தான எண்ணங்களைக் கூட்ட வேண்டும் என்றார்.

1.சரீரத்தைக் குப்பையாக எண்ணினாலும்

2.உனக்குள் இருக்கக் கூடிய நல்ல எண்ணத்தை – அந்த “வைரத்தை…!”

3.குப்பையான சரீரத்திலிருந்து விளையச் செய்..! உனக்கு அதுதான்… “சொந்தம்” என்றார் குருநாதர்.

ஒவ்வொரு மனிதனுடைய உடலிலும் எத்தனையோ வகையான துன்பங்கள் இருக்கிறது. துன்பங்களையும் துயரங்களையும் விளைவிக்கக் கூடிய பல எண்ணங்கள் இருக்கிறது.

அத்தகைய துன்பத்தையும் துயரத்தையும் விளைவிக்கக் கூடிய எண்ணங்களிலிருந்து மக்களை மீட்க வேண்டும். அவர்களிடமிருந்து மகிழ்ச்சியை எதிர்பார்க்க வேண்டும்.

“அந்த மகிழ்ச்சியே… உனக்குச் சொர்க்கம்…!” என்றார் குருநாதர்.

ஆகவே குருநாதர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிக்கும் நாம் திடீரென்று யாரையுமே முதலில் பழித்துப் பேசிவிடக் கூடாது. குறைபாடுகள் இருந்தாலும் அணுகி அதை நிவர்த்தி பண்ணுவதற்கு என்ன வழியோ அதற்காக வேண்டி நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

1.சொல்லிப் பார்ப்போம்.

2.அவரால் முடியவில்லை என்றால் அது அவருடைய சந்தர்ப்பம்.

3.அதற்காக வேண்டி “முடியவில்லையே…! அவர் தவறு செய்கிறாரே…!” என்ற உணர்வை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது.

“தவறுகள் செய்கிறார்களே…!” என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தால் அவர்களுடைய தவறான உணர்வைத்தான் நமக்குள் வளர்த்துக் கொள்கிறோம். இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே நாம் செய்ய வேண்டியது…,

1.யார் எதைப் பேசினாலும் குறைத்துப் பேசினாலும்

2.வாழ்க்கையிலே அவர்கள் உயர்ந்த நிலை பெறவேண்டும்

3.அவர்கள் அறியாது அவர்களுக்குள் துன்பத்தைத் தோற்றுவிக்கும் உணர்வுகளிலிருந்து மீள வேண்டும் “ஈஸ்வரா” என்று

4.ஒவ்வொரு உயிரும் கடவுள் என்ற நிலையில் “நேசிக்கும் உணர்வாக…”

5.உயிரான ஈசனிடம் வேண்டி நாம் சுவாசிக்கும் பொழுது இந்த உணர்வு நமக்குள் விளைகின்றது.

அடிக்கடி இப்படிச் செய்து எண்ணத் தொடங்கினால் அவர்களுக்கு நல்லது உண்டாகும். அதனால் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும்.

குருநாதர் எண்ணத்தை வைத்து குருநாதர் எண்ணங்களை எடுத்து மெய் ஞானியாக ஆனேன் – ஞானகுரு

Image

 

Astral path and way

“குருநாதர் எண்ணத்தை வைத்து குருநாதர் எண்ணங்களை எடுத்து…” மெய் ஞானியாக ஆனேன் – ஞானகுரு

 

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிற்குள் அழைத்துச் சென்று குளவியைக் காட்டுகின்றார். குளவி புழுவைத் தூக்கி வந்து விஷத்தைப் பாய்ச்சி அதைத் தன் இனமாக ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்றது.

உயிரினங்களில் தன் இனத்தைப் பெருக்க வேண்டும் என்ற உணர்வுகளில் இனச் சேர்க்கை வேறு.

1.இனத்தை உருவாக்க வேண்டும்

2.தன் இனமாக ஆக்க வேண்டும் என்ற உந்துதல் வேறு.

குளவி தனக்குள் எண்ணிய உணர்வின் தன்மையைப் புழுவின் மேல் பாய்ச்சுகின்றது. தனக்குள் ஊறும் உமிழ் நீரைக் கூடாகக் கடி அந்தப் புழுவினை அங்கே இணைக்கப்படும் பொழுது தன் உணர்வின் இயக்கங்களை அதன் மேல் தாக்குகின்றது.

இதற்குள் இருக்கும் விஷத்தின் தன்மை தாங்காது புழுவுக்கு, அந்தக் குளவியின் நினைவே வருகின்றது. புழுவின் உடலில் அந்த உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது அதிலே பதிந்துவிடுகின்றது.

குளவி தன் விஷத்தால் புழுவைத் தாக்கும்போது புழுவின் நினைவலைகள் குளவியால் தாக்கப்பட்ட உணர்வு கொண்டு எவ்வாறு இணைக்கின்றது.

அந்த உணர்வுகள் அதற்குள் இருக்கக்கூடிய காந்தப் புலனறிவு எவ்வாறு இயக்குகின்றது எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது என்பதை உணர்த்துகின்றார்.

அதே சமயத்தில் எம்மை ஓங்கி அடிக்கின்றார். அடித்தவுடன் அவரைத் திடீரென்று பார்க்கின்றேன். குருநாதர் மேல் திருப்பம் வருகின்றது.

திடீரென்று திரும்பியவுடன் அவர் உணர்த்தும் உணர்வின் அலையை அந்த மெய்ஞான உணர்வை எடுத்து

1.எம் எண்ணத்தில் கவரச் செய்கின்றார் இழுக்கச் செய்கின்றார்.

2.அவர் உணர்த்தும் மெய் உணர்வைக் கவர்ந்து இழுத்தவுடன் சிரிக்கின்றார் குருநாதர்.

அதாவது…, குருநாதர் அடித்தவுடன் திரும்பிப் பார்க்கின்றேன். அவருக்குள் விளைந்த சக்திகள் அவர் எண்ணத்தால் வெளியிடுவதை உடனே உற்றுப் பார்த்தவுடன் அந்த உணர்வுகள் வருகின்றது.

அப்பொழுது அவரை எண்ணியபின் அவர் அடித்ததை மறந்து குளவி எப்படி விஷத்தால் புழுவைத் தாக்கியபின் அந்தப் புழு வேதனையை நீக்கிவிட்டு குளைவியையே எண்ணுகின்றதோ அதே மாதிரி குருநாதரையே எண்ணுகின்றேன்.

1.குருநாதருடைய எண்ணத்தை வைத்து

2.குருநாதருடைய நிலைகளை எண்ணப்படும் பொழுது

3.அவர் கண்டுணர்ந்த மூலத்தின் உணர்வுகளை

4.அவருக்குள் இணைத்ததை எனக்குள் (ஞானகுரு) இணைக்கின்றார்.

5.இப்படித்தான் குருநாதர் மெய் உணர்வின் தன்மையை எம்மைப் பெறச் செய்தார்.

ஆதிசங்கரர் 2000 ஆண்டுகளுக்கு முன் “நிரூபித்துக் காட்டிய அத்வைதத்தின் (சூட்சமத்தின்) பேருண்மைகள்”

Adi Sankara Advaitam

ஆதிசங்கரர் 2000 ஆண்டுகளுக்கு முன் “நிரூபித்துக் காட்டிய அத்வைதத்தின் (சூட்சமத்தின்) பேருண்மைகள்”

காசியில் இருக்கும் விநாயகருக்கு நீ யாகங்கள் செய்து வந்தால்தான் நல்லது என்று ஆதிசங்கரரிடம் சொல்கிறார்கள் துவைதவாதிகள்.

ஆதிசங்கரர் நாம் அதைச் செய்ய வேண்டியதில்லை என்றார். இந்த உடலுக்குள் உணர்வின் எண்ணங்கள் உண்டு. அதை எண்ணத்தாலே எடுத்துச் சுவாசிக்கும்போது எண்ணிய சக்திகளைப் பெற முடியும் என்றார்.

1.நம் உயிரின் துடிப்பைக் கூட்டி
2.எண்ணத்தின் வலு கொண்டு
3.மெய் ஞானியின் அருள் உணர்வைச் சுவாசிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டினார்.

அன்றிருக்கக்கூடிய துவைதவாதிகள் அரசர்கள் இவருக்கு எதிர்ப்பு நிலை ஆகின்றனர். ஜைன மதம் ஒரு பக்கம் தாக்குகிறது. இந்து மதம் ஒரு பக்கம் தாக்குகிறது.

இவர் போகும் பக்கமெல்லாம் எதிர்ப்பு. இந்த உண்மையை எடுத்துச் சொல்லும்போது எதிர்ப்பு தான் அதிகமாகிறது.

அந்தத் துவைதவாதிகள் அனைவருமே மனித உடலில் விளைந்த அந்த மந்திரத்தை எடுத்து வேலை செய்கின்றார்கள்.

ஒருவனுக்கு வயிற்று வலி வரவேண்டுமா…! வயிற்று வலியுடன் இறந்தவன் எந்த மந்திரத்தாலே இறந்தானோ அந்த உணர்வின் தன்மையை மந்திரத்தால் எடுத்து அடுத்தவர் உடலில் செருகினால் போதும். அவனுக்கும் வயிற்று வலி வரும்.

வாத நோயால் இறந்தவனுடைய உடலில் இருந்து பிரித்து மற்றொருவனுக்கு அந்த மந்திரத்தைச் செருகினால் அவனுக்கு வாத நோய் வந்துவிடும். “இதுதான் ஏவல்…!”

தெய்வத்திற்கு சக்தி இருக்கிறது என்ற நிலையில் இங்கே சிலைகள் செய்து உருவங்களாக அமைத்து கதைகளாகச் சொல்லி அவர்கள் எடுத்துக் கொண்ட நிலைகளுக்குச் செயல்படுத்தினார்கள்.

(நாம் இன்றும் இன்னென்ன செயல்களுக்கு இன்னென்ன மந்திரத்தை ஜெபித்தால்தான் நல்லது என்று தவறான பாதையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்)

அன்று அத்வைதத்தின் உண்மையினுடைய நிலைகளை அன்று ஆதிசங்கரர் வெளிப்படுத்தி அதை ஸ்தாபித்துக் காட்டினார்.

ஆனால் அன்றைய துவைதவாதிகள் நீ வேள்விகள் செய்யாவிட்டால் அவஸ்தைப்படுவாய் என்று ஆதிசங்கரரிட்ம் சொன்னார்கள். சொன்னதோடு மட்டுமல்லாது ஏவல் செய்து இவருக்கும் வயிற்றுவலி வர வைத்துவிட்டார்கள்.

வயிற்று வலி வந்தபின் ஆதிசங்கரர் கடும் நிலைகளில் சுவாசித்து அத்வைத நிலைகளில் தன் வயிற்று வலியை நிவர்த்தி செய்தார். நிவர்த்தி செய்து அந்தத் தத்துவத்தைத் தன் நிலையை நிலைநாட்டிக் காட்டுகின்றார்.

வேதியர்கள் அன்று துவைதத்தின் தத்துவத்தை இவரிடத்தில் வாதிட்டு பல எத்தனையோ வேலைகளைச் செய்தார்கள். அதையெல்லாம் மாற்றித் தன் நிலைகளை அங்கே வெளிப்படுத்தினார் ஆதிங்கரர்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் 2000 ஆண்டுகளுக்கு முன் அன்று நடந்த அந்த உணர்வின் அலைகளை எடுத்து எமக்குக் (ஞானகுரு) நேரடியாகவே காட்டினார்.

இப்படி ஆதிசங்கரர் அதைச் செயல்படுத்தும்போது அன்று அரசர்கள் சிலைகளுக்கு முன்னால் யாகங்கள் வளர்ப்பதும் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதும் பால் ஊற்றிப் பிற நிலைகள் செய்வதும் தான் உண்மையான பக்தி என்ற நிலைகளில் அவர்கள் வாதிட்டனர்.

ஆனால் ஆதிசங்கரர் சொன்னது நம் உயிர் தான் நெருப்பு. நாம் எண்ணும் எண்ணங்கள் சுவாசமாகி உயிரான ஈசனிடத்தில் (நெருப்பில்) அந்த சுவாசங்கள் பட்டு அது உடலாக உறைகின்றது.

நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகிறோமோ அந்தக் குணமே நம் உயிரில் பட்டு அந்த அபிஷேகங்கள் நடக்கின்றது. அவ்வாறு அபிஷேகம் செய்யும்போது நம் உடலிலுள்ள நல்ல குணங்களுக்குப் போய் சேருகின்றது. நல்ல குணங்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுகின்றது.

ஆலயங்களின் தத்துவமே அது தான் என்று தெளிவாகக் காட்டினார்.

“ரிஷிப் பிண்டமாக…” அன்று எப்படித் தோன்றினார்கள்…!

agastya-rishi pindam

“ரிஷிப் பிண்டமாக…” அன்று எப்படித் தோன்றினார்கள்…!”

பல காலங்களுக்கு முன் ஆண்ட அரசர்கள் தங்கள் மனைவி கறுவுற்றிருக்கிறாள் என்று தெரிந்தாலே அதாவது நான்கு அல்லது ஐந்து நாள்களாக இருந்தாலும் அடுத்த கணம் கர்ப்பமான அந்தத் தாய்க்குப் பல விதமான விஷங்களை உட்கொள்ளச் செய்கின்றார்கள்.

ஒரு தலை முடியின் நுனியில் விஷத்தைத் தொட்டு அதை ஆகாரத்துடன் கலந்து அதைக் கொடுப்பார்கள்.

உணவுடன் கலந்து செல்லும் விஷம் இரத்தத்துடன் கலந்து கருவிலே இருக்கும் குழந்தைக்குள் ஊடுருவி அந்த விஷத்தையே வளர்த்து பலம் பெற்ற குழந்தையாக சக்தி வாய்ந்ததாக உருவாகின்றது.

ஆடு மாடுகளுக்கும் மற்ற மிருகங்களுக்கும் விஷத்தின் தன்மை உடலில் உள்ள அணுக்களில் அதிகமாக இருப்பதனால் தான் அவைகளின் உடலில் வலிமை அதிகமாக இருக்கின்றது.

பல விதமான விஷங்களை அந்தக் கர்ப்பமான தாய்க்குச் சிறுகச் சிறுகக் கொடுத்து எந்த விதமான விஷங்களும் குழந்தையைப் பாதிக்காதவண்ணம் வலு கொண்டவனாக அரச குடும்பத்தில் வளர்ந்து வரும்படிச் செய்வார்கள்.

அடுத்து குருகுலம் என்ற நிலையில் அரசர்களுடைய சட்டங்களையும் அரசாட்சி செய்யும் நிலைகளையும் தன் குல வழியில் அந்தக் கர்ப்பிணிக்குக் கதைகளாகச் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அந்த ராணியும் அதைக் கேட்டுக் கொண்டேயிருக்கும்.

“தன் நாடு.. எதிரி நாடு… தனது சட்டம்… எதிரியினுடைய நிலைகள்…” அதிலே எந்தெந்த நிலைகள் வெல்ல வேண்டுமோ அந்த உணர்வுகளை எல்லாம் தாயின் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஊட்டினார்கள்.

ஆகவே தன் நாட்டைப் பாதுகாக்கும் வலிமையும் நாட்டின் உண்மை நிலைகளை உணரச் செய்யும் நிலைகளையும் அன்று அரச காலங்களில் இவ்வாறு செய்தார்கள்.

இதனால் குழந்தை பிறக்கும் பொழுதே ஒரு வல்லமை மிக்க வீரனாக அவன் பேச்சிலும் செயலிலும் வலிமை மிக்கவனாகவும் நாட்டை அறிந்து கொள்ளும் அறிவுள்ளவனாகவும் வருகின்றான்.

ஐந்தே வயதானாலும் அவன் அரசாட்சியைப் பற்றி அறிந்திடும் நிலைகள் பெறுகின்றான். பல போதனைகளைக் கொடுத்து நாட்டைப் பாதுகாக்கும் நிலைகள் கருவிலிருந்தே வளர்ச்சி அடையப்படும் பொழுது

1.அவன் மரணத்தைப் பற்றி எதுவும் எண்ணுவதில்லை.
2.மற்றவர்கள் தன்னைத் தாக்கிடாது
3.எதிரிகளை வீழ்த்திடும் உணர்வையே அவர்கள் ஊட்டினார்கள்

ஏனென்றால் எதிரிகளிடம் அடிபணிவதில்லை. எதிரிகளை வீழ்த்திடும் உணர்வின் தன்மை தான் அந்த அரசர்களுக்கு உண்டு.

அன்று அந்த அரசர்கள் வைத்திருந்த வாளையும் கத்திகளையும் ஆயுதங்களையும் எந்த வகையில் பயன்படுத்தியிருக்கின்றார்கள் என்று பார்த்தால்
1.அவைகளை நம் இரண்டு கைகளினால் கூடத் தூக்க முடியாது
2.ஆனால் அவர்கள் அதை ஒரு கையில் வைத்துப் போர் முறையில் கையாண்டிருக்கின்றார்கள்.

ஆனால் ரிஷிகளாக வாழ்ந்தவர்கள் என்ன செய்தார்கள்?

கர்ப்பம் என்று தெரிந்தால் அந்தக் கணவனும் மனைவியும் அவர்கள் பெற்ற பெரும் சக்தியினை அடிக்கடி பாட நிலையாக ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வார்கள்.

தீமையிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வைத் தன் உடலிலே சேர்த்து அந்த அணுக்களைப் பெருக்கி
1.கர்ப்பமுற்ற தாயின் தன் ஆன்மாவில் வலு கொண்ட நிலைகளாக
2.அருள் வட்டமாக வளைகாப்பாக இணைத்து
3.கருவில் வளரும் குழந்தை உலக ஞானமும் உலகைக் காத்திடும் அருள் ஞானமும்
4.பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்ற உணர்வினை
5.ஒருவருக்கொருவர் உணர்த்தி அருள் ஞானத்தைப் போதித்துக் கொள்வார்கள்.

அப்படி வளர்ந்த அந்தக் குழந்தைகள் அருள் ஞானக் குழந்தைகளாக விளைந்து உலக ஞானம் பெற்று உலகுக்கே மெய் ஞானத்தை ஊட்டும் நிலையாக வந்தார்கள்.

ரிஷி என்பவர் ரிஷிப் பிண்டமாகி விடுகின்றார்கள்.

நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான் – இருபத்தியேழு நட்சத்திரங்களின் எதிர் நிலையான மோதல்கள் தான் “இயக்கச் சக்திக்கு…” மூல காரணமாகும்

Image

zodiac stars

நம் உயிரும் ஒரு நட்சத்திரம் தான் – இருபத்தியேழு நட்சத்திரங்களின் எதிர் நிலையான மோதல்கள் தான் “இயக்கச் சக்திக்கு…” மூல காரணமாகும்

 

ஒவ்வொரு நட்சத்திரமும் இன்னென்ன குணங்கள் கொண்டது என்று ஞானிகள் கண்டுணர்ந்துள்ளார்கள். இருபத்தேழு நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் சுழன்று வரப்படும் போது ஒரு நட்சத்திரத்திற்கு ஒரு நட்சத்திரம் அது ஒத்து வராது.

மனிதர்கள் நாமும் ஒரு எண்ணம் கொண்டவர் இன்னொரு எண்ணம்  கொண்டவருடன் ஒருவருக்கொருவர் சேர்வதில்லை.

அதைப் போன்று தான் ஒரு நட்சத்திரத்தின் கதிரியக்கமும் இன்னொரு நட்சத்திரத்தின் கதிரியக்கமும் ஒன்று சேராது..

கார்த்திகை நட்சத்திரம் அதனின் ஒளிச் சுடர் கொண்டு ஒரு தாவர இனத்திற்குள் தன் உணர்வின் சக்தியை இயக்கும்போது

1.தன் உணர்வின் சத்தைத் “தான்… தான்…” என்று அறிந்து

2.தனக்குள் மோதும் மற்ற நிலைகளிலிருந்து

3.அது தெளிந்து உணர்ந்து இயக்கும் சக்தியாக ஆகின்றது.

அத்தகைய (கார்த்திகை நட்சத்திர அலைகள் கலந்த) மணத்தை மனிதர்கள் நாம் நுகரும் போது தெளிந்து உணர்ந்து செயல்படும் அறிவாக  அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

ரோகினி நட்சத்திரம் அதனின் ஒளிச் சுடர் ஒரு பொருளிலே பட்டால் தன்னை மறைத்துக் கொண்டு “மறையும் (மறைக்கும்) நிலைகள் பெற்றது” அந்த நிலைகள்.

விஷம் எப்படி ஒரு பொருளுக்குள் பட்ட பின் அதை மறைத்து  தெளிந்திடாத நிலைகள் ஏற்படுத்துகின்றதோ அதைப்போல அந்த உணர்வின் தன்மையை எடுத்துக் கொண்ட பின் மற்றொரு பொருளை அறியவிடாது மறைக்கின்றது,

ரோகினி நட்சத்திரத்தின் உணர்வின் சத்து மற்றதுடன் கலக்கப்படும் போது இது மறைகின்றது என்ற நிலையை அன்று காட்டினார்கள் ஞானிகள்.

இதை ஆதாரமாக வைத்துத்தான் ஒரு நட்சத்திரத்தின் இயக்கமாக உயிரை வைத்து அன்று சாஸ்திரங்கள் எழுதினார்கள்.

1.ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இன்னென்ன நிலைகள் நடக்கும்

2.அதே சமயத்தில் இன்னென்ன கோள்கள் மாற்றமாகின்றது,

3.அந்தக் கோளுடன் இணைக்கப்படும் போது உணர்வின் தன்மைகள் மாறுகின்றது என்று

4.அன்று மெய் ஞானிகள் வானஇயல் சாஸ்திரத்தை எழுதினார்கள்.

ஒரு நட்சத்திரத்தின் இயக்கம் மற்ற கோளுக்குள் இணையும்போது ஒவ்வொன்றாக மாறி கோளிற்குள் பாறையாக எப்படி மாறுகின்றது?

பாறைக்குள் மாற்றத்தின் தன்மை அடைந்து அது தன் மணத்தை வெளிவிடும் போது இதே போல் மற்ற நட்சத்திரத்தின் சத்தை எடுத்து உருவான பாறையின் மணத்திற்கும் வீரிய சக்தியால் ஒன்றுக்கொன்று எப்படி எதிர்ப்பாகின்றது?

எதிர்ப்பாகும் பொழுது சுழற் காற்றாக மாறி ஒன்றுக்குள் ஒன்று மோதி எதனின் உணர்வை இதற்குள் அடக்குகின்றதோ அதனின் தன்மை இணைந்து புது உருமாற்றமாக எவ்வாறு மாறுகின்றது?

இதனின் செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது? அந்த உணர்வின் சத்தை எடுக்கப்படும் போது தாவர இன சத்தின் தன்மைகள் எப்படி மாறுபடுகின்றது?

தாவர இன சத்துக்கள் ஒரு நட்சத்திரத்தின் நிலைகள் கொண்டாலும் மற்ற எதிர் நிலையான நட்சத்திரங்கள் இதனுடன் மோதப்படும் போது எதிர் நிலையான நிலைகள் மறைந்து “நெகட்டிவ்… பாசிட்டிவ்…” என்று எப்படி இயக்கம் வருகின்றது?

நம் உயிரின் தன்மை எப்படித் துடிக்கின்றதோ இதைப் போல தாவர இனங்களுக்குள் எதிர்நிலையான உணர்ச்சிகள் மோதும் போது அந்த உணர்வால் ஈர்க்கும் ஆற்றலை எப்படிப் பெறுகின்றது?

அத்தகைய ஈர்க்கும் ஆற்றலுக்குள் ஒவ்வொரு நட்சத்திரத்தின் இயக்கங்கள் கலந்து எதனின் ஆற்றல் அதிகமாகின்றதோ அதற்குள் எதிர்மறையான உணர்வுகளாகத் தோன்றி ஆக்கச் சக்தியான ஈர்ப்பலைகளாக மாறித் தாவர இனங்கள் எவ்வாறு விளைகின்றது?

இதை எல்லாம் ஆதியிலே அறிந்துணர்ந்தவர் அகஸ்தியர்.

இருபத்தேழு நட்சத்திரத்தின் உணர்வுகள் பாறைகளாக ஆனாலும் எதிர் நிலையான மறைகளாகிக் கலவை ஆகும் போது கார்த்திகை நட்சத்திரத்தின் சத்து அதிகமாக அதற்குள் இணைந்தால் அது மற்றதை அடக்கிக் கோமேதகம் மேதகம் வைரம் வைடூரியம் என்று உருவாகின்றது.

ஒன்றுடன் ஒன்று மோதுவதால் உண்டாகும் எதிர்ப்பு நிலையும் மற்ற நட்சத்திரங்களின் எதிர்ப்பு நிலையும் வரப்போகும் போது மூன்றும் மோதி இணைகின்றது.

அதாவது பூமிக்குள் வரும் போது எதிர் நிலைகளாகி கார்த்திகை நட்சத்திரமும் ரேவதி நட்சத்திரமும் எதிர்க்கும் நிலையான மற்ற நட்சத்திரத்திங்களுடைய நிலைகள் மூன்றும் மோதி இரண்டறக் கலந்து ஒரு கருவாக உருவாகின்றது.

ஏனென்றால் மும்முனையாக எதுவும் மூன்று மண்டலமாகத்தான் இயக்கும். வெப்பம், காந்தம் விஷம் இது மூன்றும் இயக்குவது போல

1.வெப்பம் உருவாக்குவதும்

2.காந்தம் தனக்குள் அணைத்துக் கொள்ளும் ஆற்றலும்

3.விஷம் மற்ற உணர்வின் தன்மை துடிக்கச் செய்யும் விசையாக

ஒரு நட்சத்திரத்தின் இயக்கம் அது எவ்வாறு இருக்கின்றதோஅந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மூன்று அணுக்களாக மூன்று மண்டலங்களாக இயக்குகின்றது.

வெறும் கற்பாறைகளானாலும் அந்தப் பாறைக்குள் மோதும் நிலைகள் கொண்டு ஈர்க்கும் நிலை பெற்று அது கருவாகி வடித்துக் கொண்ட சக்தியாக வைரக் கல்லாக விளைகின்றது.

இதனுடைய வீரியத் தன்மை ஆனபின் வெடித்து முழுமை அடைந்து வைரமாக வெளி வருகின்றது.

நட்சத்திரங்களின் விஷத்தன்மைகள் ஒன்றுக்கொன்று மோதும் நிலலைகளில் வான மண்டலங்களின் இயக்கங்களையும் பூமிக்குள் வரும் போது பாறைகளாகவும் மண்களாகவும் வைரங்களாகவும் அதனதன் ஈர்ப்பால் என்னென்ன மாற்றங்கள் ஆகின்றது என்பதை குருநாதர் நேரடியாகக் காட்டினார்.

இருபத்தியேழு நட்சத்திரங்களைப் பற்றி அகஸ்தியன் கண்ட உண்மைகளை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதை வெளிப்படுத்துகின்றோம்.

“வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் சக்தியை எடுக்க வேண்டும்

spiritual-bodies

“வேதனையிலிருந்து விடுபட வேண்டும்…” என்ற எண்ணத்துடனே ஞானிகளின் சக்தியை எடுக்க வேண்டும்

எனக்குக் (ஞானகுரு) கல்வி அறிவு இல்லை என்றாலும் அந்த மகா ஞானியின் உணர்வலைகளை குருநாதர் பதிவு செய்ததை நினைவு கொண்டு அந்த ஆற்றல் மிக்க சக்தியை நுகர்கின்றேன்.

அவ்வாறு நுகர்ந்தறிந்து என் உயிருக்குள் மோதச் செய்யும் போது அந்த ஞானியின் ஆற்றல்மிக்க உணர்வுகளே ஞானமாக என்னைப் பேசச் செய்வதும் இதை நீங்கள் நுகர்ந்தறியும் போது உங்களுக்குள்ளும் அது ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

பதிவான உணர்வின் சக்தியை நாம் அனைவரும் ஒன்றாக எண்ணி ஏங்கி ஈர்க்கும் நிலைகள் வரும் போது காற்றிலே மறைந்துள்ள மாமகரிஷிகளின் அருள் ஆற்றலை நாம் கூடியுள்ள இப்பகுதிக்கு ஈர்க்கும் தன்மை வருகின்றது.

1.அந்த மகா ஞானிகள் பிறவி அற்ற நிலைகள் கொண்டு
2.எந்த மனிதன் ஈர்ப்புக்குள்ளும் சிக்காது
3.தன் உணர்வின் தன்மை ஒளியாக மாற்றிக் கொண்டவர்கள்.
4.இருள் சூழ்ந்த நிலைகளை மாய்த்திடும் சக்தி வாய்ந்தவர்கள்.

நம் வாழ்க்கையில் வரும் வேதனை கலந்த உணர்வு கொண்டு
1.வேனையான எண்ணத்துடன் நாம் கவர நினைத்தால்
2.அந்த ஞானியின் உணர்வலைகள் நஞ்சு கலந்த உணர்வின் அருகில் வராது
3.இதனுடைய சக்தியை இழக்கச் செய்துவிடும்.
4.ஞானியின் உணர்வைப் பெறும் தகுதியை இழந்துவிடுவோம்.

அந்த மாதிரி ஆகாதபடி ஞானியின் உணர்வுகளை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

நல்ல வினைகளாக ஞான வித்துக்களாக உங்களுக்குள் உருவாக்கும் வண்ணம் தான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் உபதேசிக்கின்றோம்.

உதாரணமாக மனிதனின் வாழ்க்கையில் குடும்பத்திலும் சரி தொழிலிலும் சரி பொறுப்பற்ற நிலைகளில் செயல்படுபவர்களை நாம் கண் கொண்டு பார்க்கப்படும் பொழுதெல்லாம் எரிச்சலும் கோபமும் ஆத்திரமும் வேதனைகளும் வருகின்றது.

அதைப் போன்ற உணர்வுகள் நம் உடலுக்குள் சேர்ந்து நம் ஆறாவது அறிவைச் செயலற்றதாக்கும் தன்மையிலிருந்து நாம் நம்மை மீட்டிக் கொள்ள வேண்டும். ஏனென்றால்
1.பொறுப்புடன் செயல்படும் நல்ல உணர்வுக்குள்
2.பொறுப்பற்ற உணர்வுகள் கலந்து
3.பொறுப்பான உணர்வைத் தாழச் செய்துவிடுகின்றது.
4.அதிலிருந்து மீள மகரிஷிகளின் அருள் சக்திகளை நமக்குள் சேர்க்க வேண்டும்.

தங்கத்திலே திரவகத்தை ஊற்றிச் செம்பையும் வெள்ளியையும் ஆவியாக மாற்றியது போல அந்த அருள் ஞானியின் உணர்வை நம் உடலுக்குள் செலுத்தும் போது நல்ல உணர்வுடன் இரண்டறக் கலந்த தீய வினைகள அது செயலிழக்கச் செய்துவிடும்.

ஆகவே வாழ்க்கையில் வேதனை வேதனை என்று வேதனைகளையே எண்ணாதீர்கள்.
1.மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த வேதனையிலிருந்து விடுபடுவேன் என்று எண்ணி ஏங்கி எடுத்துப் பாருங்கள்.

அந்த அருள் சக்தி உங்களுக்குள் இணைந்த பின் “மன வலிமையும்… ஒரு புது உணர்ச்சியும்…” ஏற்படும். தொடர்ந்து அந்த மகரிஷிகளின் உணர்வுகளை எடுக்க எடுக்க
1.வேதனைகள் அகன்று நல்ல சிந்தனைகள் தோன்றும்.
2.மனதில் அமைதியும் உற்சாகமும் ஏற்படும்.