விவேகானந்தருக்கு இராமகிருஷ்ணர் “தொட்டுக் காட்டியது என்ன…?

Ramakrisna Paramahamsar

விவேகானந்தருக்கு இராமகிருஷ்ணர் தொட்டுக் காட்டியது என்ன…?

“கடவுளைப் பார்க்க வேண்டும்..,” என்ற மிகுந்த வேட்கை கொண்டவர் விவேகானந்தர்.

தான் கல்விச் சாலையில் படித்தாலும் அன்று பக்தி மார்க்கங்களில் உள்ள நிலைகள் கொண்டு கடவுளை அறிய வேண்டும் என்று அவருடைய வீரிய உணர்வுகள் கொண்டு பல நிலைகள் எடுத்தாலும் அவருக்குச் சரியான “விடை” கிடைக்கவில்லை.

பித்தரைப் போன்று இருக்கும் இராமகிருஷ்ண பரமகம்சரிடம் செல்பவர்களுக்குத் தக்க விடைகள் கிடைக்கின்றது என்று அறிந்த பின் அவரை அணுகுகின்றார் விவேகானந்தர்.

கடவுள் என்பது எப்படி இயக்குகின்றது என்று அவருக்குள் (பரமகம்சர்) அறிந்த சக்தியின் தன்மை கொண்டு

1.விவேகானந்தர் தன்னைத் தேடி வருகின்றார் என்பதை உணர்ந்து
2.தான் படுத்திருக்கும் இடத்திற்குக் கீழ் பாய்க்கு அடியில் முட்களையும் வேதனைப்படுத்தக்கூடிய சில பொருள்களையும் போடுகின்றார் இராமகிருஷ்ணர்.

இதை உற்றுப் பார்த்தபின் விவேகானந்தர் கேட்கின்றார். இது… என்ன..?” முட்கள் போட்டிருக்கின்றது.., இதன் மேல் உட்கார்ந்திருந்தால் வலிக்கவில்லையா…!

அப்பொழுது பரமகம்சர் சொல்கின்றார்.

1.(எனக்கு) “வலிக்குமே…” என்று நீ நினைக்கின்றாய். நான் இதைப் பார்க்கவில்லை…! அதனால் எனக்கு வலிக்கவில்லை…!
2.எனக்கு வலி தெரியவில்லை என்கிறார்.
3.அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தினால் தான் “எனக்குள் அது இயக்கும்” என்று விவேகானந்தருக்கு உணர்த்துகின்றார்.

பின் அவரைத் தொட்டுக் காட்டுகின்றார். அவர் உடலைத் தொட்டபின் அந்த உணர்வுகள் விவேகானந்தருக்குள் பாய்ந்தபின் சில உண்மையின் நிலைகளை உணர்கின்றார்.

உனக்குள் நின்று இந்த உணர்வின் செயல்கள் எவ்வாறு இயக்குகின்றது…? “இது தான் கடவுள்”.

1.என்னை முள் குத்தும் என்று நீ எண்ணுகின்றாய்
2.அந்த உணர்வின் சக்தி உன் உயிரின் தன்மை
3.அது உள் நின்று அது உணர்த்துகின்றது.
4.அந்த உணர்த்திய சக்தி உனக்குள் வந்த பின் “வேதனைப்படுவேன்.., என்று உணர்த்துகின்றது”. இது தான் கடவுள்.
5.நீ எண்ணியது எதுவோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு உள் நின்றே அது உணர்த்துகின்றது.
6.இவ்வாறு தான் கடவுள் அது செயலாக்குகின்றான் என்ற நிலையை அன்று விவேகானந்தருக்குத் தெளிவுபடுத்திக் காட்டினார் இராமகிருஷ்ணர்.

கடவுளின் செயலாக்கங்கள் – உயிர் எவ்வாறு உள் நின்று இயக்குகின்றதோ அதைப் போல எனக்கு வேதனை என்று எண்ணும் பொழுது இந்த உணர்வின் தன்மை உனக்குள் நின்று வேதனை என்ற உணர்வை உணர்த்துகின்றது.

1.கடவுளின் இயக்கம் இதுதான்.
2.கடவுளைக் கண்ணால் பார்க்க முடியாது.

உனக்குள் இருந்து உயிர் இயக்கினாலும் அவனை நீ காணமுடியவில்லை. உனக்குள் பல கோடி குணங்கள் இருப்பினும் அதனை நீ காண முடியவில்லை.

நினைவின் ஆற்றல் வரும் பொழுது தான் உனது ஆன்மாவாக மாறுகின்றது. நுகர்ந்தபின்தான் உன் உயிரின் இயக்கங்கள் இவ்வாறு இயக்குகின்றது என்று தெளிவுபடுத்தினார் இராமகிருஷ்ண பரமகம்சர்.

நமது உயிர் கடவுளாக நின்று இயக்கினாலும் நாம் எந்தெந்த குணங்களை எடுக்கின்றோமோ அதுவே நமக்குள் கடவுளாக நின்று நம்மை இயக்குகின்றது.

இந்தப் பேருண்மையைத்தான் அன்று இராமகிருஷ்ண பரமகம்சரும் எடுத்துச் சொன்னார்.

அதன் பின் தான் அப்பொழுது அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு தான் அன்று விவேகானந்தர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்தார்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்…?

Divine Master Guru

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் தரிசனம் எப்பொழுது கிடைக்கும்…? 

மெய்ஞானிகள் காட்டிய அருள் வழியில் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி நாம் பெறவேண்டும் என்று இந்த உயிருடன் உராயச் செய்யும் பொழுதுதான் நமக்குள் பேராற்றல்கள் கூடுகின்றது.

1.இந்த வாழ்க்கையில் நாம் ஒவொருவரும் நம் உயிரைக் கடவுளாக மதிப்போம்.
2.அவனால் உருவாக்கப்பட்ட இந்த உடலை ஆலயம் என்று மதிப்போம்.
3.அனைத்தையும் அறிந்திடும் அறிவாக இருக்கும் நம் உயிரை ஆண்டவனாக மதிப்போம்.
4.ஆறாவது அறிவு கொண்டு தீமைகளை அகற்ற முடியும் என்ற வலு கொண்டு தியானிப்போம்.
5.நம்மை உருவாக்கிய தாய் தந்தையரைக் கடவுளாக மதித்து நம்மைக் காத்தருளிய தெய்வமாக மதிப்போம்
6.நல் வழி போதித்த நம் அன்னை தந்தையரை குருவாக மதித்து அவர்கள் அருளால் நாம் மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம்.
7.நம்மை வளரச் செய்த முன்னோர்களையும் குலதெய்வங்களையும் விண்ணிலே செலுத்தி அழியா ஒளிச் சரீரம் பெறச் செய்வோம்.
8.அவர்களின் துணை கொண்டு இந்த வாழ்க்கையில் வரும் இருளைப் போக்க முடியும் என்றும் மனிதன் என்ற முழுமை அடைய முடியும் என்ற நிலைகளில் நாம் பிரார்த்திப்போம். தியானிப்போம் தவமிருப்போம்.

மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் காட்டிய அருள் வழியில் அவர் அனுபவபூர்வமாக அறிவித்த இந்த உணர்வின் தன்மையை நாம் எல்லோரும் பெறமுடியும்.

குருநாதர் கண்டதை நாம் எல்லோரும் காண முடியும். வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்.

கார்த்திகேயா என்று தெளிந்திடும் ஆறாவது அறிவு கொண்ட நாம் ஞானிகள் காட்டிய அந்த அருள் வழியில் தெளிந்திட வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.

1.மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்று
2.தீமையிலிருந்து விடுபட்டு “தீமையிலிருந்து விடுபட்டேன்…” என்று எப்பொழுது சொல்கிறீர்களோ
3.அப்பொழுது அந்த இடத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இருக்கின்றார் என்று அர்த்தம்.

உறுதியாக அதை உணரலாம்.

 

குருவின் காணிக்கை

Image

குருவின் காணிக்கை

 

நம் தாய் நாம் கருவிலிருக்கும் பொழுதும் குழந்தையாக இருக்கும் பொழுதும் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள் என்று கர்ப்பமாக இருக்கும் தாய்மார்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

எத்தனையோ வேதனைகளை நம் தாய் தந்தையர் அனுபவித்து நம்மை வளர்ப்பதறாகப் பல இன்னல் பட்டார்கள். அவர்கள் உயிர் கடவுளாக நின்று நம்மை மனிதனாக உருவாக்கி  தெய்வமாக நம்மைக் காக்கின்றார்கள்.

அதே சமயம் நாம் தவழ்ந்து நடக்கும் பருவத்தில் குருவாக நின்று இது நல்ல வழி நீ இந்த வழியில் இப்படிச் செல் என்று முதல் குருவாக இருந்து வழி காட்டியதும் நம் தாய் தந்தையர் தான்.

1.அத்தகையை குருவாக இருந்த தாய் தந்தையரை எப்படி மதிக்க வேண்டும்?

2.அவருக்குச் செய்யவேண்டிய காணிக்கை என்ன” என்பதை ஞானிகள் விநாகர் தத்துவத்தில் காட்டியுள்ளார்கள்.

எனக்காக அல்லும் பகலும் விழித்து என்னைக் காத்தருளிய தெய்வங்களான அன்னை தந்தையர் அந்த அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்.

அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும்,

என்னை வளர்ப்பதற்காக அவர்கள் வாழ்க்கையில் பட்ட வேதனைகளால் உருவான நஞ்சுகள் அனைத்தும் நீங்க வேண்டும். அவர்கள் உடல்களில் உள்ள தீய வினைகள் அனைத்தும் அகல வேண்டும்.

என் அன்னை தந்தையர் என்றுமே மகிழ்ச்சியாக வாழ்ந்திடும் அந்த அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று இந்த உணர்வின் தன்மையை ஓங்கிச் செலுத்துதல் வேண்டும்.

1.விநாயகர் சிலையை நாம் பார்த்து

2.இத்தகையை வினைகளை நமக்குள் சேர்த்து

3.இதைக் கணங்களுக்கு அதிபதியாக்கி

4.தாய் தந்தைருக்குக் காணிக்கையாகச் சேர்க்கும்படி விநாயகர் தத்துவத்தில் சொல்லியிருக்கின்றார்கள்.

எங்கள் அன்னை தந்தையர் குருவாக இருந்து காட்டிய நல் வழியில் நாங்கள் செயல்பட வேண்டும்.

அவர்கள் காட்டிய பாதையில் மகிழ்ந்திடும் நிலைகள் நாங்கள் பெறும்போது “எங்கள் செயலைக் கண்டு…, என் அன்னை தந்தையர் மகிழ்ந்திட வேண்டும்.., ஈஸ்வரா” என்று உயிரை வேண்டுதல் வேண்டும்.

நம் அன்னை தந்தையருக்கு இதைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும்.

1.குருவின் காணிக்கை அதுதான்.

2.தெய்வத்திற்குப் பணிந்து செய்வதும் அது தான்.

3.கடவுளுக்குச் செய்யும் சேவையும் அது தான்.

விநாயகர் தத்துவப்படி நாம் இதைச் செயல்படுத்தி தாய் தந்தையர் மகிழ்ந்திடச் செய்ய வேண்டும் என்று நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அகஸ்தியன் அவர் மனைவி அவர் தாய் தந்தையர் நான்கு பேரும் இணைந்து உருவானது தான் துருவ நட்சத்திரம். அந்த அகஸ்தியனால் உருவாக்கப்பட்டது தான் “விநாயக தத்துவம்”.

 

அன்றாடம் நாம் செய்ய வேண்டிய “தலையான கடமை…!”

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் குலதெய்வங்களின் உயிரான்மாக்களை விண்ணிலே சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

எங்கள் மூதாதையர்கள் உடலை விட்டுப் பிரிந்து சென்று பல காலம் ஆகிவிட்டது. “எப்படிச் செலுத்துவது முடியுமா…?” என்று சிலர் எண்ணலாம்.

1.பகைமை கொண்டிருந்தால் பகைமை கொண்டவர் உடலுக்குள் சென்றிருப்பார்கள்.

2.பாசத்துடன் வாழ்க்கையில் சென்றிருந்தால் பாச உணர்வு கொண்ட உடலுக்குள் சென்று பேயாக உருவாகி அங்கே நோயாக உருப்பெறச் செய்வார்.

3.துர் மரணம் அடைந்து எந்தப் பக்தியுடன் சென்றதோ அத்தகைய பக்தி கொண்ட உடல்களில் சென்றிருக்கும்.

இதைப் போன்ற நிலைகளில் ஆன்மாக்கள் அந்த உடல்களை விட்டு வெளி வந்தபின் அதைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்.

ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்து சென்றால் சாதாரணமாக அதனின் இரத்த சம்பந்தம் உள்ள அவரைப் பற்றி எண்ணுபவர்கள் இருக்கும் வரை கடைசி நிலைகளில் எந்த உணர்வை அதிகமாக எண்ணியிருந்ததோ அந்த இடங்களில் தான் சுழன்று கொண்டிருக்கும்.

குறைந்தது மற்றொரு உடல் பெறுவதற்கு அதனுடய முந்தைய நிலைகள் மறக்கப்பட்ட பின் 150-200 ஆண்டுகளுக்குப் பின் தான் மறு (புதிய பிறப்பு) உடல் பெறும்.

(ஆனால், மிருக உடல்களுக்குள் சென்றிருந்தால் விண் செலுத்த முடியாது)

பௌர்ணமி அன்று வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்று சேர்ந்து

1.அகஸ்தியமாமகரிஷிகளின் அருள் சக்தியும்

2.துருவ மகரிஷிகளின் அருள் சக்தியும்

3.துருவ  நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும்

4.சப்தரிஷி மண்டலங்களின் பேரருள் பேரொளியும்

நாங்கள் அனைவரும் பெறவேண்டும் என்று தியானித்தல் வேண்டும்.

அந்த வலுவின் துணை கொண்டு எங்கள் குலங்களின் தெய்வங்களான முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டல ஒளி அலைகளுடன் கலந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும் என்று உந்தித் தள்ளினால் எளிதில் செலுத்திவிடலாம்.

நாம் உடலுடன் உள்ளோம். அவர்கள் உயிரான்மாக்கள் எடையற்றது. இயந்திரம் போன்று நாம் உந்தித் தள்ள முடியும். மறுபடி இன்னொரு உடலுக்குள் போகாதபடி நாம் விண்ணிலே செலுத்த முடியும்.

மூதாதையர்களின் ஆன்மாக்களைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தால் தான் நாம் அங்கிருந்து எளிதில் சக்திகளைப் பெற முடியும்.

இந்த வாழ்க்கையில் வரும் எத்தகையை தீமைகளிலிருந்தும் விடுபட முடியும். நமக்குப் பின் நம் குழந்தைகள் நம்மை விண் செலுத்துவார்கள்.

அன்றைய ஞானிகள் சென்றடைந்த எல்லையை நாம் அடையலாம். சாஸ்திரப்படி இது தான் ஞானிகள் சொன்னது.

அதை விட்டு விட்டு சுட்ட சாம்பலைக் கொண்டு போய் ஆற்றிலேயும் கடலிலேயும் கரைத்தால் அதனால் எதுவும் பலன் இல்லை.

1.இந்த உடல் நமக்குச் சொந்தமில்லை.

2.நமக்குச் சொந்தமானது உயிர் ஒன்று தான்.

3.உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறுவதே அழியாதது. அதுதான் வேகா நிலை.

4அப்படி அடைந்தவர்கள் சப்தரிஷிகள் இன்று சப்தரிஷி மண்டலமாக வாழ்கின்றார்கள்.

5.நம் முன்னோர்களைச் சப்தரிஷிகளாக ஆக்க வேண்டும். நம்மால் முடியும்

நமக்குள் மகரிஷிகளின் அருளைக் கலக்கச் செய்யும் “சரியான முறை…”

Image

Soul cleansing

நமக்குள் மகரிஷிகளின் அருளைக் கலக்கச் செய்யும் “சரியான முறை…”

 

வாழ்க்கையில் நம்மை அறியாமல்

1.எந்தெந்த உணர்வுகள் தீமைகளாக இயக்குகின்றதோ

2.அவை எல்லாவற்றிலும் அருள் மகரிஷிகளின் உணர்வைக் கலந்து கலந்து கலந்து

3.ஊழ்வினையாக ஞான வித்துக்களாகப் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்த பின் அந்த மகரிஷிகளின் அருள்சக்தியால் என் தீமைகள் “விலக வேண்டும்… விலக வேண்டும்… விலக வேண்டும்…! என்ற எண்ணங்களைச் செலுத்திப் பழக வேண்டும்.

அப்பொழுது நமக்குள் அந்தப் பேராற்றல் மிக்க சக்திகள் சிறுகச் சிறுகச் சேர்ந்து நம்முடைய எல்லா உணர்வுகளிலும் எல்லாக் குணங்களிலும் எல்லா எண்ணங்களிலும் சேர்க்கின்றது.

ஏனென்றால் உடலில் ஏற்கனவே அறியாது சேர்ந்த தீமையான உணர்வுகளைக் குறைக்க இவ்வாறு தான் செயல்படுத்த வேண்டும்.

தீமை வரும் சமயம் அவ்வப்பொழுது ஆத்ம சுத்தி செய்து கொண்டே வந்தாலும் முந்தைய பழைய பதிவின் ரெக்கார்ட் நம் உடலுக்குள் அணுக்களாக விளைந்திருக்கின்றது.

ஒரு ஒலி நாடாவில் ஏற்கனவே மற்றவைகளைப் பாடிப் பதிவாக்கியிருப்பார்கள். அப்படிப் பாடிய பாடலை அழிக்காமல் மீண்டும் அதிலே பதிவு செய்தால் அடுத்துப் பதிவாக்குவதை நாம் அர்த்தம் காண முடியாது…!

1.நாடாக்களின் முதலில் ஒன்றைப் பதிவு செய்திருந்தாலும்

2.அதில் மீண்டும் பதிவு செய்யும்போது

3.விஞ்ஞான அறிவு கொண்டு அந்தப் பதிவானதை அழித்து விட்டுத் தான்

4.மீண்டும் பதிவு செய்வார்கள்.

இதைப்போல நாம் மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஏற்கனவே நமக்குள் பதிவான குணங்களைத் துடைக்க வேண்டும். துடைத்துப் பழக வேண்டும்.

மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தித் துடைக்க வேண்டும்.

ஒரு முறை துடைத்து… மீண்டும் அந்த எண்ணம் வந்தது என்றால்…! மீண்டும் “ஓ…ம் ஈஸ்வரா…” என்று உயிரை வேண்டி மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும். எங்கள் ஜீவாத்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று அதை மீண்டும் துடைக்க வேண்டும்.

“அதிலும் நினைவு குறைந்தால்… மீண்டும் மீண்டும் துடைத்து விட்டு…” யார் நம்மை ஏசினார்களோ தவறாக எண்ணினார்களோ மகரிஷிகளின் அருள் சக்தியால்

1.எங்கள் பார்வை அவர்களை நல்லதாக்கவேண்டும்.

2.எங்கள் உணர்வுகள் அவரை நல்லதாக்கவேண்டும்.

3.எங்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குள் நல்ல எண்ணங்கள் வரவேண்டும் என்று

4.பிறரிடம் விளைந்த தீய வினைகள் நமக்குள் வராதபடி தடுத்துப் பழக வேண்டும்.

இதற்குப் பெயர் தான் விநாயகர் சதுர்த்தி.

அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் பதிவு செய்து உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களுக்குள்ளும் கலக்கச் செய்வதே “ஆத்ம சுத்தியின் மூலக் கூறு…!”

புறத் தூய்மையும் மனத் தூய்மையும்

Image

Mindful bliss

புறத் தூய்மையும் மனத் தூய்மையும்

 

உதாரணமாக அப்பொழுது தான் குளித்து முடித்துத் தூய்மையாக வந்திருக்கின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுது அந்த நேரத்தில் ஒருவர் நம்மைச் சந்தித்துத் தன்னுடைய வேதனையான நிலைகளைச் சொல்கிறார் என்றால் நாம் குளித்து விட்டு வந்திருந்தாலும் அதைக் கேட்ட சிறிது நேரத்தில் உடலில் “பிசு…பிசு…” என்று ஆகிவிடும்.

அவர் சொல்வதைக் கேட்கும் பொழுது சலிப்பு சஞ்சலம் என்ற நிலைகள் இப்படி வேதனையாகப் பேசுகின்றார்களே என்ற உணர்வு வரும். அந்தச் சலிப்பு வந்த பின் உங்கள் உடலில் பிசு பிசுப்பு வரும். நீங்கள் பார்க்கலாம்.

அப்பொழுது குளித்ததனால் என்ன பயன்?

1.ஒருவன் கோபமாகத் திட்டியிருப்பான். அதை நாம் பார்த்திருப்போம்.

2.அந்தக் கோப உணர்வுகள் “நம் ஆன்மாவில் (நாம் சுவாசிக்கும் நம்முடைய ஈர்ப்பு வட்டம்) இருக்கும்”.

3.உடலில் அழுக்குடன் இருக்கும் பொழுது இது தெரியாது.

4.குளித்து விட்டு வந்தபின் பார்க்கலாம்…, “நம் ஆன்மாவில் இருப்பது எரியுதே… எரியுதே…, என்று எரிச்சலாவதைப் பார்க்கலாம்”.

எத்தனை குளித்தாலும் இந்த ஆன்மாவில் பட்ட எரிச்சலைப் போக்க முடியாது. எரிச்சலைப் போக்க வேண்டும் என்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா. எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் ஈஸ்வரா. எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஒரு பத்து நிமிடம் தன் உடலுக்குள் இதைச் செலுத்தித் தூய்மைப்படுத்துதல் வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும் நாங்கள் பெறவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடமாவது எண்ணுதல் வேண்டும்.

பின் எங்களைப் பார்ப்போருக்கெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். மலரைப் போன்ற மணமும் மகிழ்ந்து வாழும் அருள் சக்தி அவர்கள் பெறவேண்டும் என்று எண்ணி எடுத்தல் வேண்டும்.

ஏனென்றால் மனம் அமைதியாக இல்லை என்றால் புறத் தூய்மை செய்து பல நறுமணங்களைப் போட்டாலும் புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டாலும் மகிழ்ச்சி காணாமல் போய்விடும்.

ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்துத் தூய்மை செய்யும்  பழக்கம் வந்து விட்டால் நம் மனதைப் பாதிக்கும் நிலைகளிலிருந்து விடுபடலாம்.

எல்லா நன்மைகளும் இருந்தாலும் அதில் சில தீமைகள் இருக்கின்றது – மகரிஷிகளின் உணர்வால் அதைச் சமப்படுத்திக் கொள்ள முடியும்

Image

divine-bliss-light

எல்லா நன்மைகளும் இருந்தாலும் அதில் சில தீமைகள் இருக்கின்றது – “மகரிஷிகளின் உணர்வால் அதைச் சமப்படுத்திக் கொள்ள முடியும்”

 

 

எப்படித்தான் இருந்தாலும் காற்று அடிக்கிறது மழை பெய்கின்றது வெயில் அடிக்கின்றது குளிர் அடிக்கின்றது. காற்று மழை வெயில் குளிர் ஆகிய நான்கு காலங்களும் மாறி மாறி வருகிறது.

இதைப் போலத் தான் மகிழ்ச்சியாகச் சென்றாலும் நாம் போகும் போதே திடீரென்று

1.ஒருவன் குறுக்கே போகின்றான்… கீழே விழுந்து அடிபடுகின்றான்.

2.அதைப் பார்த்தவுடனே பதட்டமாகி வேதனைப்படுகின்றோம்.

3.பயம் வந்து குளிர் போல நமக்குள் நடுக்கமாகிவிடுகிறது.

இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். அப்போது எரிச்சலான பேச்சுக்களை ஒருவருக்கொருவர் பேகிக் கொள்கின்றனர். நாம் பார்க்கின்றோம்

1.அதைக் கேட்டு நுகர்ந்தவுடனே நமக்கும் எரிச்சலாகின்றது.

2.அப்பொழுது வெயிலாகின்றது.

அதே சமயம் ஒருவருக்கொருவர் பரபரப்பான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் போது நம் மனதில் பெரும் புயலாகின்றது.

ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். அதைப் பார்க்கும் போது

1.பெரும் புயலாக நம் எண்ணங்களைச் சிதறச் செய்து

2.நம்மையே ஓட வைக்கின்றது.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய இந்த நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறி (காலங்கள்) வந்து கொண்டே இருக்கின்றது.

சகஜ வாழ்க்கையில் குளிர் அதிகமாக அடித்தால் “வெயில் வந்தால்…” பரவாயில்லை என்று சொல்லுகின்றோம்.

வெயில் அதிகமாக அடிக்கப் போகும் போது காற்று இல்லை என்றால் “காற்று வந்தால்…” பரவாயில்லை என்று நினைக்கின்றோம்.

காற்று அதிகமாக வந்தவுடன் என்ன சொல்கிறோம்? ஐயோ…! காற்று இப்படி அடிக்கின்றதே… என்னால் தாங்க முடியவில்லையே…! என்கின்றோம்.

ஆக மொத்தம் எல்லாவறையும் விரும்புகின்றோம். ஆனால் அந்தந்தக் காலங்கள் வந்தால் அது மேலேயே வெறுக்கின்றோம். நான்கு காலத்திலேயும் இப்படி அதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

ஒரு பொருளைக் காய வைப்பதற்காக வெயில் வேண்டும் என்கின்றோம். ஆனால் அந்தப் பொருளைக் காய வைப்பதற்கு முன்னாலே வெயில் அடித்தால் “அப்பப்பா… உடம்பெல்லாம் எரிகின்றது…!” என்கின்றோம்.

அந்தப் பொருளும் காய வேண்டும். அதனாலே (வெயிலால்) வேதனையும் படுகின்றோம்.

1.நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம்.

2.அடுத்த நிமிடம் அதனால் வேதனைப்படுகின்றோம்.

துவைத்த துணிகளைக் காய வைக்கக் காற்று அடிக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம், அது அதிகமாகப் போய்த் துணியைத் தூக்கி எரிந்தது என்றால் “துணியைத் தூக்கி எரிந்து விட்டதே…!” என்று வேதனைப்படுகின்றோம்.

இதைப் போல எல்லா நன்மைகள் வந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றது.

அதற்காக வேண்டித்தான் அந்த மெய் ஞானிகளினுடைய எண்ண அலைகளை உங்களுக்குள் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் அடிக்கடி எடுத்தால் அந்த உணர்வுகள் வந்து உங்கள் உடலுக்குள் தீமைகளை அடக்கிச் சமப்படுத்தும். அதாவது

1.வேதனையையும் கோபத்தையும் வெறுப்பையும் சமப்படுத்தி

2.உங்களுக்குள் ஞானத்தையும் சாந்தத்தையும் ஊட்டிப்

3.பொருளறிந்து செயல்படும் உணர்வாக இயக்கி

4.உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சியுறச் செய்யும்.

“அகஸ்தியன் கண்ட மெய் வழி”

Universe - Cosmos

“அகஸ்தியன் கண்ட மெய் வழி”

ஆதியிலே விஷத்தின் தாக்குதலால் தான் வெப்பம் உருவானது. வெப்பத்தின் தன்மை வரும் போது தான் ஆவியானது. ஆவியின் தன்மை தான் விஷமானது. விஷத்தின் தாக்குதல் தான் மீண்டும் வெப்பமாகின்றது.

வெப்பத்தின் நிலை வரும் போது தான் அது நகர்ந்து ஓடுகின்றது. அப்போது காந்தம் என்ற உணர்வு உருவாகின்றது. காந்தம் என்ற உணர்வு உருவானபின் தன் அருகிலே இருப்பதைக் கவர்ந்து மோதி வெப்பமாகின்றது.

இதிலிருந்த விஷத்தின் தன்மை எதன் மணத்தை அது நுகர்ந்ததோ அதன் மணத்தை வெளிப்படுத்தும் அணுவாக ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது.

இப்படித்தான் உலகம் உருவானது என்பதனை அகஸ்தியன் அணுவின் இயக்கத்தை அறிந்துணர்ந்தான்.

ஆகவே அதன் வழி சிறுகச் சிறுக சிறு துளி பெரு வெள்ளம் போல
மேரு என்ற மலையை மத்தாக வைத்து வாசுகி என்ற பாம்பைக் கயிராக வைத்து பாற்கடலைக் கடைந்தார்கள் வியாசகர் சொன்னார்.

பல அணுக்களின் தன்மையால் பூமி உருவானது என்ற நிலையை அன்று வியாசகர் அகஸ்தியன் கண்ட உண்மையை வெளிப்படுத்தினார்.

சிறுகச் சிறுக சேர்ந்த உணர்வுகள் அதனின் சுழற்சி வேகம் கூடக் கூட நெருப்பாக மாறி அந்த பூமிக்குள் வெப்பத்தின் தன்மை அதிகரித்து அதிகரித்து பாறைகள் எல்லாம் உருகி உருகி கடைசியில் அமில சக்தி அடைகின்றது நட்சத்திரமாக.

அமில சக்தியான பின் அது தூவும் உணர்வுகள் தான் அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வளர பால்வெளி மண்டலமாக மாற்றுகின்றது.

ஒரு நூலாம்படைப் பூச்சி தன் மலத்தால் நூலாம்படையாக வலை விரித்து அதில் சிக்கும் மற்ற உயிரினங்களை உணவாக எடுத்துக்
கொள்கின்றது.

இதைப்போலத்தான் நட்சத்திரங்களும் தன் அமிலங்களைக் கக்கப்படும் போது வலை போன்று விரிந்து அகண்ட அண்டத்தில் பரவி வரும் உணர்வுகளை இது கவர்ந்து அதை உணவாக உட்கொண்டு சூரியனாக மாறுகின்றது.

சூரியனாகி அதனுடைய வளர்ச்சியில் தன் ஈர்ப்பு வட்டத்தில் இந்தப் பிரபஞ்சத்தையே உருவாக்குகின்றது. இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கும் சக்தி பெற்ற தன் வளர்ச்சியிலே மனிதனை உருவாக்குகின்றது.

நமது சூரியக் குடும்பத்தில் பூமியில் உருவான மனிதன் சில் உண்மைகளைக் கண்ட பின் மின்னல்கள் தாக்கி கடல்களிலே படும்போது மணல் ஆவதை அதற்குள் இருக்கும் நிலையை வடிகட்டி கதிர் இயக்கப் பொறிகளாக மாற்றுகின்றான்.

இன்று அணு குண்டுகளாகவும் லேசர் கதிரியக்கங்களாகவும் அதை உருவாக்கி விட்டார்கள்

தன்னுடைய உடல் ஆசைக்காக வேண்டி நாட்டு ஆசைக்காக வேண்டி உலகை அழித்திடும் தன்மைகளாக அது இந்த உலகம் முழுவதற்கும் பரவி விட்டது.

நம் பூமியில் விளைவதை சூரியன் கவர்ந்தாலும் அது கவர்ந்து செல்லும் பாதையில் மற்ற கோள்களும் இந்தக் கதிரியக்கங்களை கவர்ந்து இன்று நமது பிரபஞ்சமே கதிர் இயக்கமாக மாறிவிட்டது.

மனிதனின் விஞ்ஞான அறிவால் ஏற்படுத்தப்பட்ட இந்த நிலையால் உலகமே இருள் சூழும் நிலைக்கு வந்து விட்டது. சூரியனும் சிறுகச் சிறுக செயல் இழந்து கொண்டு இருக்கின்றது. அது செயலிழக்கும் பொழுது அதனுடன் சேர்ந்த நம் பூமியும் அது செயல் இழக்கும்.

இங்கே வாழும் மனிதர்களும் அசுர உணர்வு கொண்டு தீவிரவாதம் என்ற நிலைகளில் ஒருவருக்கொருவர் கொன்று சாப்பிடும் நிலை வருகின்றது.

பாதரசங்களை உருவாக்கும் சூரியனுக்குள் விஞ்ஞானக் கதிரியக்கச் சக்திகள் கலக்கப்பட்டு அந்த பாதரசங்களைக் கருகிய விஷத் தன்மையாக மாற்றி உமிழ்ந்து கொண்டுள்ளது.

சூரியன் செயல் இழக்கும் தன்மையால் சூரியனால் உருவாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும் செயலிழக்கும் நிலை ஆகின்றது. நான் (ஞானகுரு) சொல்வது வெறும் சொல்லாகச் சொல்லவில்லை.

இந்த உணர்வுகளை நீங்கள் பதிவாக்கிக் கொண்டு மீண்டும் அதை நினைவாக்கினால் சூரியனின் இயக்கத்தை நீங்கள் உணர முடியும். சூரியன் தொடர் கொண்டு இந்தப் பிரபஞ்சம் இயங்குவதையும் நீங்கள் உணர முடியும்.

ஆனால் இதிலிருந்து தப்பிய இந்தத் துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் என்றுமே அழிவதில்லை. எத்தகைய நஞ்சானாலும் அதை மாற்றி விடுகின்றது.

நம் பூமியின் துருவத்திற்கு நேராக இருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எப்போதும் நீங்கள் பெறலாம். நீங்கள் அதைப் பெறக்கூடிய தகுதியை ஏற்படுத்தத்தான் அடிக்கடி வலியுறுத்துகின்றோம்.

உங்கள் நினைவாற்றலை அங்கே துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்கின்றோம். பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவான பின் நினைவைக் கூட்டி நஞ்சை வென்று உணர்வை ஒளியாக மாற்றும் திறன் நீங்கள் ஒவ்வொருவரும் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு ஒரு பக்கம் விஷத்தைப் பரப்பினாலும் அதில் இருந்து மீட்டுக் கொள்ளும் அரும் பெரும் சக்தியாக உங்களுக்குள் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை உபதேசிக்கின்றோம். இப்பொழுது பதிவாகின்றது.
1.இதனை நீங்கள் நினைவு கூறுங்கள்.
2.கூட்டுத் தியானம் செய்யுங்கள்
3.கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று பாய்ச்சுங்கள்.
4.கருவிலே வளரும் சிசு இதைப்பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

இதைப்போல எண்ணி இவ்வுலகில் வரும் விஷத் தன்மைகளை மாற்றி இந்தப் பிரபஞ்சமே அழிந்தாலும் நாம் அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைந்து வாழ முடியும்.

1.“ஆறாவது அறிவு ஏழாவது நிலையாக”
2.உலக இருளை மாய்த்திடும் அருள் கூட்டத்துடன் நாம் இணைந்து
3.அமைதியும் சாந்தமும் பெற்று ஏகாந்த நிலையாக எதிர்ப்பே இல்லாத நிலையாக
4.என்றும் அருள் ஒளிச்சுடராக பேரானந்த நிலையாகச் சந்தோஷ உணர்வுடன் நாம் வாழ முடியும்.

“நெகட்டிவ் பாசிட்டிவ்…” என்ற எதிர்மறையான உணர்வின் இயக்கங்கள் வந்தாலும் தீய வினைகளாக அதை நமக்குள் சேர விடக்கூடாது

Image

vinayaga sathurththi

“நெகட்டிவ் பாசிட்டிவ்…” என்ற எதிர்மறையான உணர்வின் இயக்கங்கள் வந்தாலும் தீய வினைகளாக அதை நமக்குள் சேர விடக்கூடாது

 

ரோஜாப்பூ மணத்தை நாம் விரும்பி எடுத்துக் கொண்டால் அந்த ரோஜாப்பூவின் மணத்தைப் பற்றித் தான் நாம் பேசுவோம்.

கசப்பான உணவை ருசியாகச் சாப்பிட்டுப் பழகிவிட்டால் அந்தக் கசப்பின் தன்மையைப் பற்றி ரசித்துப் பேசுகின்றோம்.

இனிப்பான பதார்த்தங்களை விரும்பிச் சுவைத்துச் சாப்பிட்டால் “ஆஹா எப்படி இருக்கின்றது…!” என்று சொல்கின்றோம்.

காரத்தை ருசியாக வைத்து அது முன்னிலையில் வைத்து காரத்தைச் சாப்பிட்டவர்கள் “ஆஹா இதைச் சாப்பிட்டால் எப்படி இருக்கின்றது…!” என்று சொல்வார்கள்.

காரத்தைச் சாப்பிட்டவர் காரத்தைப் பற்றி ரசித்துச் சொல்லும் போது இனிப்பை விரும்பிச் சாப்பிட்டவர்களுக்கு வெறுப்பு வரும்.

கசப்பை விரும்பிச் சாப்பிட்டவர்கள் கசப்பைப் பற்றி ரசித்துச் சொல்லும் போது இது மற்றவர்கள் கேட்டு அறிந்தபின் அந்தக் கசப்பான உணர்வு வெறுப்பை உண்டாக்கும்.

இதைப் போல நெகட்டிவ் பாசிட்டிவ் என்ற உணர்வுகள் நமக்குள் எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டி தீய வினைகளாகச் சேருகின்றது.

ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னைக் காத்திடத் தன் கௌரவத்தை வளர்த்துக் கொள்ள மற்றவர்களுடன் பேசும் போதே

1.”அடேயப்பா…! பெரிய ஆள் மாதிரி நீ என்ன…,

2.எல்லோரையும் விடப் பெரியவனா…?” என்று சொன்னால் போதும்.

பார்…! நான்கு பேர் மத்தியில் என்னைக் கேவலமாகப் பேசிவிட்டாய். உன்னை என்ன செய்கின்றேன் பார்…? என்று இப்படித் தன் கௌரவம் போய்விட்டதே என்று அவர் பேசத் தொடங்கிவிடுவார்.

இவர் என்ன… இல்லாததைச் சொல்லுகின்றார்…! என்னைக் கேவலமாகப் பேசுகின்றார் என்று எண்ணி பதிலுக்கு இவரும் இதைச் சொன்னார் என்றால் அந்தச் சந்தர்ப்பம் உடனே பழி தீர்க்கும் உணர்வுகளாக உருவாகின்றது.

இந்த உணர்வுகள் நமக்குள் ஒரு வித்தாகி பழி தீர்க்கும் உணர்ச்சிகளைத் தூண்டி நமக்குள் ஒவ்வொரு குணங்களையும் செயலற்றதாக ஆக்கிவிடுகின்றது.

பழி தீர்க்கும் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் ஊட்டி நம் நல்ல எண்ணங்களை அது செயலாக்க விடாதபடி நமக்குள் கடுமையான வினைகளாகின்றது.

நம்மை அழித்திடும் உணர்வாக அந்த வினைகள் வளர்கின்றது. இதை நாம் நிறுத்த வேண்டும்.

 

அதற்குத்தான் விநாயகர் சதுர்த்தி என்று காட்டினார்கள். நம்மை அறியாது சேரும் தீய வினைகளை உடனுக்குடன் நிறுத்திப் பழக வேண்டும்.

ஒரு வித்து தெரியாமல் மண்ணிலே விழுந்தாலும் அது தன் இனமான சத்தைக் கவர்ந்து வளரத் தொடங்கிவிடும். பின் அது தன் விழுதுகளைப் பாய்ச்சி பெரிதாகவே வளர்ந்துவிடும்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.பிறர் செய்கைகள் நமக்குப் பிடிக்கவில்லை பிடிக்கவில்லை என்று

2.வெறுப்படைந்தாலும் அல்லது கோபப்பட்டாலும் அல்லது வேதனைப்பட்டாலும்

3.அது நமக்குள் தீய வினைகளாகத்தான் சேரும்.

அதை மாற்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று அந்த நல்ல சக்திகளை நல்ல வினைகளாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தீமைகளைப் பற்றற்றதாக ஆக்கி மகரிஷிகளின் உணர்வைப் பற்றுடன் பற்றும் பழக்கம் நமக்கு வரவேண்டும்.

இந்த உலகம் மறையும் முன் அகஸ்தியர் உணர்வைப் பெற்று விண் செல்ல வேண்டும்

இந்த உலகம் மறையும் முன் அகஸ்தியர் உணர்வைப் பெற்று “விண் செல்ல வேண்டும்”

1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகஸ்தியரும்
2.அவர் ஞானம் பெற்ற நிலையும்
3.துருவத்தின் ஆற்றலை அறிந்து “துருவ நட்சத்திரமாக” ஆன நிலையும்
4.காலத்தால் மறைந்தே போய்விட்டது என்று சொல்லலாம்.

அகஸ்தியரை “எல்லாவற்றிலும் வல்லவர்” என்று சொல்லி மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் ஓரிரு இடங்களில் அவர் வருவதாகக் காட்டி அத்துடன் நிறுத்திவிட்டார்கள்.

நம் பூமியிலிருந்து “விண்ணுக்குச் சென்ற முதல் மனிதன்” என்ற நிலை விநாயகர் தத்துவத்தின் மூலம் காட்டியிருந்தாலும் அதை வெறும் சாங்கிய சாஸ்திரமாக மாற்றிவிட்டார்கள்.

அவர் தான் பெற்ற விண்ணின் ஆற்றல்களைத் தன் இன மக்கள் எல்லோரும் பெறவேண்டும் என்று தென்னாட்டிலே தோன்றிய அந்த மகா ஞானி வெளிப்படுத்திய நிலைகளைச் சுத்தமாகவே மறைத்துவிட்டார்கள். சரணாகதி தத்துவத்தில் திசை திருப்பிவிட்டார்கள்.

காலம் கடந்த இந்த நேரத்திலாவது மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய வழியில் அகஸ்தியரைப் பற்றி அறிந்து கொண்டோம். ஆகவே நாம் விண் செல்ல வேண்டும்.

அந்த மெய்ஞானி காட்டிய உணர்வுகளை நாம் பெறவேண்டும் எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும். இந்த உலகம் மறையும் முன் மக்களைக் காக்க வேண்டும் என்றார் குருநாதர்

அனைத்து மக்களின் உணர்வுகளும் நமக்குள் உண்டு. அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற உணர்வு நமக்குள் வருகின்றது.

நாமும் ஒளி நிலை பெறுகின்றோம் மற்றவரும் ஒளியாகின்றார்கள். பிறவி என்ற நிலையை அகற்றி அருள் ஒளி பெறும் அருள் வாழ்க்கையாக அமைகின்றது.

இருளை அகற்றும் சக்தியாக அந்த “அகஸ்தியரைப் போன்ற… மகா ஞானியாக…” நாம் அனைவரும் மாறவேண்டும்.

பதஞ்சலி எப்படித் திருமூலர் ஆனார்…?

Image

thirumoolars

பதஞ்சலி எப்படித் திருமூலர் ஆனார்…?

 

குருநாதர் காட்டிய வழியில் சிதம்பரத்திற்குப் போய் பாம்பு (பதஞ்சலி) போன மூலை முடுக்கு எல்லாம் போய் வந்தேன் (ஞானகுரு).

பைத்தியக்காரன் போல குருநாதர் மாதிரியே அந்த உணர்வை நுகர்ந்து போனேன். நான் பைத்தியக்காரன் மாதிரிப் போகவில்லை என்றால் “திருடன்…” என்று உதைத்து விடுவார்கள்.

ஒரு கிழிந்த சட்டையும் கிழிந்த வேஷ்டியும் போட்டுக் கொண்டு தான் போனேன். யாருக்கும் தெரியாது. ஏனென்றால் எந்த இடத்திற்கு எந்த வேஷம் போட்டுப் போனால் நல்லது என்று அவ்வாறு செய்தது.

பதஞ்சலி கூடுவிட்டுக் கூடு பாயும் யுக்திகளைக் கற்றவர். பல பாட நிலைகளையும் கற்றுணர்ந்தவர். அரசனாக இருந்த அவர் தன்னுடைய ஆசையின் நிலையில் ஒரு சந்தர்ப்பம்… “பாம்பு” உடலுக்குள் செல்கின்றார்.

“என் உடலைப் பாதுகாப்பாக வைத்திரு…!” என்று சேனாதிபதியிடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றார். பதஞ்சலி சென்றபின் சேனாதிபதி பதஞ்சலியின் மனித உடலை அழித்து விடுகின்றான்.

அவருடைய ஆசையும் அதோடு அழிந்து விடுகின்றது.

மகரிஷிகள் காட்டிய உண்மைகளைத் தன் சுயநலங்களுக்காகத் திருப்பிய இந்த நிலைகள் அவை எல்லை கடந்து எவ்வாறு சென்றது என்று பிறகு உணர்கின்றார் பதஞ்சலி.

பாம்பின் உடலிலிருந்து சூது வாதற்ற ஒரு மாடு மேய்ப்பவன் உடலைத் தீண்டி அவனுடைய உணர்வுக்குள் கலந்து தன்னுடைய யுக்திகளை ஊட்டி தான் படித்த உணர்வுகளை அங்கே வெளிப்படுத்தினார்.

உடலின் இச்சைக்குச் செய்த நிலைகளில் சிக்கி பின் வேறு உடலில் வந்து தான் சிந்தித்த பின் மகரிஷிகள் கண்ட உண்மைகளை அவர் அறிந்தார்.

1.பேரண்டம் எவ்வாறு உருவானது என்றும்

2.மனிதன் எப்படி உருவானான் என்ற நிலைகளையும்

3.தான் கண்டுணர்ந்த உணர்வை மக்களுக்கு எடுத்துக் காட்டுகின்றார்.

“தில்லை நடராஜா…” என்று ஒரு எல்லையாக இருந்து நிற்காமல் சுழலும் நிலை வரும் பொழுது தான் அதில் விளைந்த உணர்வின் தன்மையை அவர் காட்டினார்.

ஒன்றுடன் ஒன்று இணைந்த நிலைகளுக்கொப்ப உணர்வுகளும் எண்ணங்களும் அதன் செயலாக்கங்களும்

1.உணர்வுக்கொப்ப உடலும்

2.உணர்வுக்கொப்ப ரூபமும்

3.உடலுக்கொப்ப ஒலியும் என்ற நிலைகளை அவர்

4.தில்லை அம்பலத்தாண்டவா…! என்று தெளிவாகப் பாடினார்.

ஏனென்றால் முதலில் ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான் அவர். ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை ஆள முடியவில்லை. பிறிதொருவர் கையில் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.

அந்த உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின் நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாக பூமியில் நகர்ந்தே எவர் எதைச் செய்கிறார்கள் பல செயல்களைக் காண விரும்பினார்.

அப்படிப் பார்க்கும் நிலையில் மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள் ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.

அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள் வரப்படும் பொழுது எதிரி எப்படி…? என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின் அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.

பாம்பு எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக் கொண்டு தீண்டி தன் உடலை பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற நிலையைத்தான் பாம்பின் உடலுக்குள் சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.

1.தன்னை அறிந்து கொண்ட பின் தான்

2.தான் செய்த தவறை உணர்கின்றான்.

மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.

உலக மக்கள் அதைப் பெறவேண்டும் என்று உணர்த்தினான். ஒளியின் சரீரமாகி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.

அத்திரி இந்த உடலுக்குள் வந்த பின் திருமூலராகி மூலத்தின் உணர்வின் கருத்தை உயிரான மூலத்துடன் ஒன்றி ஒளியின் மூலமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளான்.

ஒவ்வொரு ஞானியும் மெய்யை எப்படி அறிந்தார்கள்? ஒளியாக எப்படி ஆனார்கள் என்று குருநாதர் எமக்கு உணர்த்தியதை வெளிப்படுத்துகின்றோம்.