பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

Image

பரமாத்மா ஆத்மா ஜீவாத்மா உயிராத்மா

 

நமக்கு முன் உள்ள காற்று மண்டலத்திலிருந்துதான் சுவாசிக்கின்றோம். எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ (பரமான இந்தப் பூமியில்) இந்தப் “பரமாத்மாவிலிருந்து தான்.., நம் ஆன்மா” எடுக்கின்றது.

அந்த அலைகள் நம் நெஞ்சுப் பகுதியின் அருகில் வருகின்றது. மூக்கின் துவாரங்கள் கீழ் நோக்கி இருப்பதால் அதைக் கவர்ந்து சுவாசத்திற்குள் செல்கின்றது.

மூக்கின் வழியாக சுவாசிக்கப்பட்ட உணர்வுகள் “கவன ஈர்ப்பு நரம்பு” கவரும் புருவ மத்தியில் உள்ள நம் “உயிரிலே” மோதுகின்றது.

உயிரிலே மோதியபின் “ஒ…ம்”…, வேதனைப்பட்ட உணர்வலைகளைச் சுவாசித்தால் வேதனையை நமக்குள் ஊட்டும் உணர்ச்சிகளை உயிர் ஊட்டுகின்றது.

அந்த உணர்வின் தன்மையை நம் உயிர் நுகர்ந்து உடலுக்குள் சென்றபின் ஜீவான்மாவாக மாறுகின்றது. அதாவது உடலுக்குள் நுண்ணணுக்கள் விளைந்து வேதனைப்படும் அணுவாக ஜீவ ஆன்மாவாக மாறுகின்றது.

இப்படி எந்தெந்த குணங்களை நாம் எடுத்துச் சுவாசிக்கின்றோமோ அதையெல்லாம் உயிர் ஜீவ அணுக்களாக ஜீவான்மாவாக உடலாக நம் உயிர் விளைய வைக்கின்றது.

இந்த ஜீவான்மாவில் விளைந்ததைத்தான் “உயிரான்மா” எடுக்கின்றது. பாலிலிருந்து வெண்ணையைப் பிரிப்பது போல் நம் உடலுக்குள் விளைந்த சத்தை உயிர் உயிரான்மாவாக மாற்றிக் கொள்கின்றது.

உயிரான்மாவில் இருக்கும் சத்துக்கொப்பத்தான் நாம் அடுத்த உடல் பெறமுடியும்.

வெளியில் இருப்பது பரமாத்மா

எண்ணி எடுத்தால் ஆத்மா

உடலுக்குள் சென்றால் ஜீவாத்மா

உயிருடன் இணைந்துவிட்டால் உயிராத்மா

சித்திரக்குள்ளர்கள் 

Image

“சித்திரக்குள்ளர்கள்…!”

நீர் மூழ்கிக் கப்பலை (SUBMARINE) உபயோகித்துப் பல காலம் கடலுக்கடியில் அமிழ்ந்து “ஆராய்ச்சி செய்யலாம்” என்று எண்ணிச் செயல்பட்டனர்.

 

இந்த நாட்டைச் சேர்ந்த நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போய்விட்டது அதில் இருந்தவர்கள் இறந்து விட்டார்கள் என்றெல்லாம் நீங்கள் பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள்,

 

இப்படி அணுக் கதிரியக்கத்தால் அவன் ஓட்டிய அந்தக் கப்பலினால் தீமைகள் விளைகின்றது என்று தெரிந்து கொண்டனர்.

 

அதிலே பட்ட கசிவான அணுவின் தன்மைகள் (RADIOACTIVE) மற்ற பொருள்களுடன் இணைந்தபின் இது எங்கே சென்றாலும் அந்த (தன்) நாட்டுக்கே ஆபத்து என்ற நிலைகள் உணர்ந்து கொண்டனர்.

 

அதை எப்படி மறைப்பது…! என்று எண்ணுகின்றார்கள்.

 

மறைக்க வேண்டும் என்று எண்ணினாலும் அதை அடக்குவதற்காக கடலின் கண நீரிலிருந்து ஹைட்ரஜனைத் தயார் செய்தார்கள்.

 

செய்தாலும் கடலுக்குள்ளே இவன் இருக்கப்படும் பொழுது சிதைந்த உடல்கள் செயலிழந்த நீர் மூழ்கிக் கப்பலின் விஷக் கதிரியக்கங்களும் அதன் கழிவுகளும் மீண்டும் கடலுக்குள் பரவிப் படர்ந்து கொண்டுள்ளது.

 

அப்படிக் கசியும் அணுக் கதிரியக்கங்கள் கடல் வாழ் உயிரினங்களின் உடல்களிலும் இனப் பெருக்கங்களாகிக் கலந்து அதுவும் பெருகிவிட்டது.

 

இன்று மனிதன் உணவாக உட்கொள்ளும் கடல் வாழ் உயிரினங்களின் உடல்களில் அணுக்கதிரியக்கங்கள் சேர்ந்து விட்டது.

 

1.எந்த விஞ்ஞான அறிவு கொண்டு அணுக்கதிரியக்கங்களைக் கண்டுபிடித்தானோ

2.கசிந்ததை எப்படி மறைக்க வேண்டும் என்று முயற்சித்தானோ

3.மீனை இன்று இரசித்து உணவாக உட்கொள்ளும்போது அந்தக் கதிரியக்கச் சக்தி “மீண்டும்” மனிதனுக்கே வருகின்றது.

 

இந்த உணர்வின் தன்மை வளரப்படும் பொழுது இதனின் கடைசி எல்லை எது…? ஆக இப்பொழுது இருக்கும் இந்த

1.மனித உடலையே இழக்கச் செய்து

2.மனிதனின் நினைவை இழக்கச் செய்து

3,மனிதக் கருக்களை உருமாற்றி

4.மனிதனின் உண்மையான உருவத்தை மாற்றி – “சிதைவுண்டு”

5.அதனின் நிலைகள் இனி வரும் எதிர்காலம் “சித்திரக் குள்ளர்களாகப் பிறப்பார்கள்”.

 

இந்த அணுக்கதிரியக்கங்கள் பதிந்த நிலைகள் சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக வளர்ந்து இப்பொழுதுள்ள இந்த உருவம் மாறி “சித்திரக்குள்ளர்களாக” மாறும் நிலை வரும்

 

ஒரு செடிக்கும் ஒரு மரத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஆனால், கதிரியக்கங்களால் பூமி கொதிகலனாகி துருவப் பகுதிகள் உருகி நீர் நிலை பெருகி இந்த நிலங்கள் குறையப்படும் பொழுது ஒரு செடியைப் பார்த்தாலே அது மரத்தைப் போன்று ஆகி அதனின் வளர்ச்சியிலே கூழையாகி செடியே மரமாகிவிடும்.

 

விஞ்ஞான அறிவால் மனிதன் குறுகிய நிலைகள் கொண்டு மீண்டும் இத்தகைய நிலை பெறும் தகுதியைத்தான் பெறுகின்றோம்.

இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கும் இத்தகைய நிலையில்

1.விஞ்ஞானத்தை எல்லோருக்கும் எளிதாகப் புகட்ட முடிகின்றது.

2ஆனால், மெய்ஞானத்தைப் புகட்டும் நிலைகள் வந்தால் எதிர் நிலையாகின்றது.

3.நாம் ஏற்க மறுக்கின்றோம்.

4.அந்த அளவிற்கு விஞ்ஞானத்தின் வீரிய உணர்வுகள் நம் உடலுக்குள் அணு செல்களாக வளர்ச்சி அடைந்துவிட்டது.

நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேதமந்திர சொரூபாய வெகு கோடி – “அருணகிரிநாதர் பாடியது”

Image

Sri Arunagirinathar

நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேதமந்திர சொரூபாய வெகு கோடி – “அருணகிரிநாதர் பாடியது”

 

அருணகிரிநாதர் தான் வாழ்ந்த காலத்தில் செல்வச் செருக்கினால் பல தவறுகள் செய்தார். தவறை உணர்ந்தபின் அடுத்த பிறவியாவது நல்லதாகப் பிறக்க வேண்டும் என்று கிளிக் கோபுரத்தின் மீது ஏறி உயிரை மாய்த்திட எண்ணுகின்றார்.

அருணகிரியின் சகோதரியோ தன் தம்பியின் மீது கொண்ட பாசத்தால் பல ஞானிகளை எண்ணி அந்தத் தத்துவங்களை எல்லாம் தன் தம்பி பெற வேண்டும் என்று எண்ணியது.

1.தன் தம்பி “நல்லவனாக வேண்டும்… நல்லவனாக வேண்டும்…” என்ற உணர்வுகளை

2.அதிகமாகத் தனக்குள் வளர்த்துக் கொண்டது.

அப்படி இருந்தாலும் “அவன் திருந்தினபாடில்லை என்ற நிலையில் ஆசையின் நிமித்தமாகப் பொருளைக் கேட்டுக் கட்டாயப்படுத்தும் பொழுது “என் உடலையே நீ பயன்படுத்திக் கொள்…” என்ற நிலையில் சகோதரி மூர்ச்சையாகி மரணமடைகின்றது.

ஆன்மா பிரிந்தாலும் தம்பி மீது பாசமாக இருந்ததால் அருணகிரியினுடைய உடலுக்குள் செல்கிறது.

அவரைக் காத்திட வேண்டும் என்ற எண்ண உணர்வுகளை அதிகமாக வளர்த்ததால் அவர் உடலுக்குள் சென்ற பின் அருணகிரியின் நினைவலைகளைத் தூண்டச் செய்து

1.அவர் கீழே விழுந்து தன் உடலை மாய்த்து விட வேண்டும் என்ற நிலைகளை மாற்றி

2.அவரைக் கீழே விழாத படி தடுக்கின்றது.

ஞானிகளையும் மற்றவர்களையும் வணங்கி அந்த ஞானத்தின் சக்தி அருணகிரிநாதருக்குக் கிடைத்து ஞான வழியில் செல்ல வேண்டும் என்று ஏங்கிய நிலையில் ஒரே உணர்வுடன் வாழ்ந்து வந்தார் அருணகிரியின் சகோதரி. (திருமணமும் அவருக்கு ஆகவில்லை.)

அவர் உடலில் விளைவித்த அந்த உணர்வின் ஆற்றல்கள்  அருணகிரிநாதர் உடலுக்குள் நின்று உணர்ச்சிகளைத் தூண்டி ஞானத்தின் வழித் தொடர் கொண்ட உணர்வுகளைப் பெறச் செய்தது.

ஆக காற்றிலே படர்ந்து கொண்டிருக்கும் மெய் ஞானிகளின் உணர்வுகளை அருணகிரிநாதர் சுவாசிக்கப்படும் பொழுது

1.அவர் அறியாத நிலையில் இருந்தாலும்

2.ஞானிகளால் வெளியிடப்பட்ட அந்த உண்மைகளை

3.அவர் பாடலாகப் பாடத் தொடங்கி விடுகின்றார்.

4.மரணத்திற்கு பதில் “நாத விந்துகள் ஆதி நமோ நமோ…” என்று பாடினார்.

ஒவ்வொரு உணர்வின் தன்மையும் அதற்குள் இருக்கக்கூடிய மணமும் ஒரு அணுவுக்குள் எது சேர்ந்ததோ அதுதான் “ஆதி…”

1.அதை மனிதனுக்குள் நாம் சுவாசிக்கப்படும் பொழுது

2.அந்த உணர்வின் இயக்கமாக நமக்குள் சேர்கின்றது.

3.அதுதான் “நமோ நமோ” நம் உடலுக்குள் அது சேர்கின்றது என்று காட்டினார்.

“நாத விந்துகள் ஆதி நமோ நமோ… வேத மந்திர சொரூபாய நமோ நமோ… வெகு கோடி…!”

நாம் எடுத்துக் கொண்ட “ஆதி…”யின் சக்தி நம் உணர்வாக நமக்குள் சேர்கின்றது. அதாவது ஆதியிலே தோன்றிய அந்த உணர்வுகளை (சுவாசிக்கும்போது) உடலாக சேர்த்துக் கொள்கிறோம்.

வேத மந்திர சொரூபாய… நமோ நமோ…, வேகு கோடி… சுவாசிக்கும் உணர்வுகளுக்கொப்ப பல பல ரூபமாக… வெகு கோடியாக… ஆகின்றது.

சுவாசிக்கும் நிலைகளைப் பற்றி நாம் அறிந்து கொள்ள இங்கே வெகு கோடி என்ற இந்தத் தத்துவத்தை அவர் வெளிப்படுத்துகின்றார்.

சூட்சம சக்திகளைப் பெறச் செய்யும் இடம் தான் ஆலயங்கள் – ஆதி சங்கரர் சொன்னது

Image

சூட்சம சக்திகளைப் பெறச் செய்யும் இடம் தான் ஆலயங்கள் – ஆதி சங்கரர் சொன்னது

 

“சூட்சமத்தில் இருக்கும் சக்தியை…!” ஆலயத்தில் அந்த உருவத்தைக் காட்டும் பொழுது காவியமாகப் படைத்ததை எண்ணத்தில் பதிவு செய்து நம் எண்ணம் கொண்டு தான் எடுக்க வேண்டும் என்று அன்று 2000 ஆண்டுகளுக்கு முன் ஆதிசங்கரர் உணர்த்தினார்.

ஆலயத்திற்குச் சென்று “எல்லோரும் நலம் பெறவேண்டும்” என்று நாம் எண்ணினால் “எல்லோரையும் நலமாக்கும் சக்தியாக…, நமக்குள் உருவாகிறது” என்று தான் ஆதிசங்கரர் சொன்னார்.

அவருக்குப் பின் வந்த சீடர்கள் என்ன செய்தார்கள்? (யாரையும் குறை கூறவில்லை).

குருவை மறந்தார்கள். மதத்தைக் காக்க எண்ணினார்கள். மடாதிபதியானார்கள்.

அதன் வழிகளில் தான் இன்றும் தெய்வத்திற்கு அபிஷேகத்தைச் செய்து ஆராதனை செய்துவிட்டு யாகங்களைச் செய்துவிட்டு அப்படிச் செய்தால் “அதற்காக மகிழ்ந்து தெய்வம் நமக்குச் செய்யும்” என்ற உணர்வை நமக்குள் பரப்பிவிட்டார்கள்.

ஆதிசங்கரர் உணர்த்திய மூலம் காலத்தால் மறைந்து போய்விட்டது. மெய்ப்பொருளை நாம் பெறும் தகுதியும் இழந்துவிட்டோம்.

1.உயிரைக் கடவுளாக்கி

2.நம் உடலை ஆலயமாக்கி

3.உணர்வைத் தெய்வமாக்கி அதுவே இறைவனாக்கி

4.அதன் வழியில் நாம் எப்படிச் செயல்பட வேண்டும்? என்று தான் நம் சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது.

ஞானிகள் காட்டிய வழிப்படி நாம் ஆலயத்தில் வழிப்பட வேண்டும். அங்கே காட்டப்பட்டுள்ள தெய்வ சக்திகளை நாம் பெறுதல் வேண்டும்

தெய்வ குணங்களை வளர்ப்போம். உலகைக் காக்கும் எண்ணங்களை நமக்குள் வளர்ப்போம். நம் மூச்சும் பேச்சும் “உலக நன்மை பயக்கும் சக்தியாக” வளரட்டும்.

உலக மக்கள் அனைவரும் அவர்கள் உயிரைக் கடவுளாக மதித்து மெய்ப்பொருள் காணும் திறன் பெறவேண்டும் என்று நாம் ஏகோபித்த நிலையில் இந்த உணர்வைப் பரப்புவோம்.

ஆலயங்களுக்குச் சென்று உலக மக்கள் அனைவரும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம் பிரார்த்திப்போம் தவமிருப்போம்.

ஆதிசங்கரர் சொன்னது போன்று சூட்சமத்தில் இருக்கும் ஆற்றல்மிக்க அருள் சக்திகளை எல்லோரும் பெறச் செய்வோம். உலக மக்கள் அனைவரும் தெளிந்து வாழ்ந்திட எண்ணுவோம்.

உலக மக்கள் அனைவரும் பேரருள் பெற்று பேரொளியாகி மரணமில்லாப் பெருவாழ்வாக அழியா ஒளியின் சரீரம் பெறவேண்டும் என்று வேண்டுவோம்.

ஆதிசங்கரரின் அருளாற்றல் மிக்க சக்தி நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா.

நேரத்தில் “நல்ல நேரம்” என்றோ “கெட்ட நேரம்” என்றோ எதுவுமே இல்லை

Image

நேரத்தில் “நல்ல நேரம்” என்றோ “கெட்டே நேரம்” என்றோ எதுவுமே இல்லை

 

ஜோதிடம் சொல்வதும் நாடி சாஸ்திரங்கள் எழுதுவதும்  இவையெல்லாம்

1.ஒருவன் கற்பித்த உணர்வும் இதனுடன் இணைத்துக் கொண்ட உணர்வும் எதுவோ

2.எவர் பதிவு செய்து கொண்டாரோ அந்தப் பதிவு செய்தோர் கொண்ட உணர்வு தான் இங்கே இயக்குகின்றது.

3.அதிலே நன்மை என்ற நிலைகள் வராது,

4.தீமை என்ற உணர்வுகளைப் பதிவு செய்து தீமையின் நினைவாற்றலைத்தான் கூட்டும்.

5.தீமை செய்யும் உணர்வே தான் வருமே தவிர ஞானிகள் தீமையைப் பிளந்த உணர்வுகள் இங்கே சிறிதளவும் வராது.

 

நாடி சாஸ்திரமானாலும் சரி சாஸ்திர விதிப்படி ஜாதங்கள் குறித்தாலும் சரி இப்படி உருவாக்கப்பட்ட நிலைதான்.

இயற்கையில் ஒரு மனிதனுக்கு ஜாதகம் இல்லை. ஜாதகம் கணிப்பது “மனிதன் எண்ணத்தில்தான்”.

1.எதை எதையோ கூட்டிக் கழித்து

2.எந்த உணர்வின் எண்ணங்களைப் பதிவு செய்தார்களோ

3.அந்தப் பதிவின் நிலைகளை நாம் “தலைவிதியாக” வைத்து

4.அதனை மீண்டும் “விதியாக” மாற்றி

அதன் வழிகளிலே தான் நாம் வருகின்றோம்.

நமக்குள் பழக்கப்படுத்திவிட்டால் ஆயிரம் தான் சொல்லுங்கள். மீண்டும் ஜாதகத்தைத் தேடி இன்னும் நல்ல நேரம் வருகின்றதா? கெட்ட நேரம் வருகின்றதா? என்றுதான் தேடிச் செல்ல முடியும்.

நேரத்தை உங்களால் மாற்ற முடியாது. இந்த உடலுக்கு நல்ல நேரம் வேண்டும் என்று தேடி அலைவீர்கள். பதிந்த உணர்வுகளில் ஆசை ஓங்கிக்கொண்டு இருக்கும்.

அது நிறைவேறவில்லை என்றால் வேதனைகள் கூடிக்கொண்டுதான் இருக்கும். தன்னை அழித்திடும் உணர்வே விளைந்து கொண்டிருக்கும். பின் அதனின் நிலைகள் மனித உருவைச் சீர் குலையச்செய்யும் நிலைதான் வரும்.

1.ஒருவருக்கு மிகவும் உடல் நிலை சீர்கெட்டது என்றால் நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா…?

2.விபத்து நடந்த இடத்தில் அடிபட்டவர்களை நல்ல நேரம் பார்த்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறோமா…?

3.மருத்துவமனைக்குச் சென்றபின் நல்ல நேரம் பார்த்து அந்த நல்ல நேரத்தில் தான் நோயாளியையும் அடிபட்டவரையும் மருத்துவர் பார்க்கின்றாரா…?

நமக்குப் பசிக்கும்பொழுது உணவை உட்கொள்கின்றோம். இயற்கை உபாதைகளையும் உடனே கழிக்கின்றோம். நேரம் காலம் பார்த்துக் கழிக்கின்றோமா…?

சற்று சிந்தித்துப் பாருங்கள். ஆகவே, நாம் எதை நமக்குள் பதிவாக்கியிருக்கின்றோமோ அதுதான் இயக்குகின்றது.

நல்லதை எண்ணிக் கொண்டிருக்கும் நேரம் எல்லாம் நல்ல நேரம் தான். கெட்டதை எண்ணிக் கொண்டிருக்கும் நேரமெல்லாம் கெட்ட நேரம் தான். இது தான் என்னுடைய அனுபவம்.

காற்றை “வலுக் கட்டாயமாக…” இழுத்துப் பிராணாயாமம் செய்பவர்களின் நிலைகள்

Image

Pranayam

காற்றை “வலுக் கட்டாயமாக…” இழுத்துப் பிராணாயாமம் செய்பவர்களின் நிலைகள்

இந்தப் பிராணாயாமம் என்று சுவாசத்தை மூக்கின் வழி கொண்டு  வலுக் கட்டாயமாகச் சுவாசிப்பார்கள்.

நம் உடலுக்குள் வேகமாக சுவாசிக்கும் நிலையில் அந்த உறுப்புகள் துருத்தி போன்று விரிந்தும் கூடியும் வரும்.  அப்போது அதை அடக்கி இழுக்க வேண்டும் என்ற உணர்வினை  இந்த சுவாசப்பை இழுக்கப்படும் போது மூக்கு வழி கொண்டு சுவாசித்து உள் செலுத்துகின்றது.

இப்போது அதிகமாக இழுக்கும் போது அசுத்த உணர்வுகளைத் தான் நம் உறுப்புகளிலே செலுத்துகின்றது.

நம் சிரசில் இருக்கும் பெரு மூளையில் உருவாகும் ஒரு சளி நாம் சுவாசிக்கும் உணர்வுக்குள் வரும் அசுத்தத்தை நீக்கி அதை வடிகட்டி உள்ளே அனுப்புகின்றது.

கட்டாயப்படுத்ததி எடுக்கும் உள் சுவாசம் அதிகரிக்கும் போது வடிகட்டும் திறன் இழந்து விட்டால் நமது சுவாச நுரையீரல்களில் இவை அனைத்தும் அசுத்த நிலைகளாகின்றது.

அதே சமயம் விஷத்தன்மை கொண்ட வலுவும் பெறுகின்றது. இப்படிப் பல முறைகள் செய்து விட்டால் அந்த மனிதனுக்கு வீரிய சக்தியும் இருக்கும்.

பிராணாயாமம் செய்தவருக்குள் வாயுவின் தன்மை அதிகரித்து உடலில் உள்ள வாய்வு நரம்புகளில் ஊடுருவி “இங்கே குடு..குடு.., என்று ஓடுகின்றது.., அங்கே குடு..குடு… என்று ஓடுகின்றது…” என்றெல்லாம் சொல்வார்கள்.

இதுவெல்லாம் நாம் எண்ணியதை அதற்குத்தக்கவாறு நம் உயிர் உருவாக்குகின்றது.., உயிர்உருவாக்கத் தவறுவதில்லை.

அது தான் கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய்”
என்று இந்தக் கண்ணின் நிலைகளைக் கீதாச்சாரத்தில் காட்டியிருப்பார்கள்.

ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினால் நம் கண் அவரைப் பார்த்த பின் அரவணைக்கச் செய்கின்றது.

அதே சமயத்தில் இவரை எப்படியும் தொலைத்துக் கட்ட வேண்டும் என்று எண்ணி விட்டால் அதன் வழி கொண்டு இந்தக் கண் அவனைக் கண்டபின் உணர்ச்சியின் வேகங்கள் கூடி அவனை எவ்வழியில் மடக்குவது என்று உணர்வுகளை ஊட்டுகின்றது.

நாம் எண்ணியதை வழி காட்டுவது கண்ணே. கண்கள் வழி கூடி உற்றுப் பார்க்கப்படும் போது அந்த உணர்வைச் சுவாசித்து நம் உயிரிலே உராயப்பட்டு உணர்வின் தன்மை தனக்குள் இயக்குகின்றது.

கண்ணன் சங்க நாதம் ஊதிய பின் தான்… “குருக்ஷேத்திரப்போர்…!” என்று காவியங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

1.எண்ணத்தின் தன்மை கொண்டு நாம் எண்ணும் போது
2.இந்த உணர்வின் தன்மை சுவாசித்து உயிரிலே படும் போது தான்
3.அந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
4.இவையெல்லாம் வேதங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எதுவும் குறை இல்லை.

கண்களின் துணை கொண்டு புருவ மத்தியில் நினைவைச் செலுத்தி விண்ணிலிருந்து வரும் மகரிஷிகளின் அருள் சக்திகளை எண்ணி ஏங்கித் தியானித்து

1.உயிர் வழியாக நமக்குள் சேர்ப்பதே
2.”ஞானிகள் சொன்ன பிராணாயாமம்…!”

 

அணுவின் அகத்தை அறிந்தவர் “அகத்தியர்” – ஐந்து புலனறிவு

Image

5-senses

அணுவின் அகத்தை அறிந்தவர் “அகத்தியர்” – ஐந்து புலனறிவு

 

பூமி சுழலும் போது வட துருவத்திற்கு நேராக எது எல்லாம் பிரபஞ்சத்தில் மிதந்து கொண்டிருக்கின்றதோ அந்தச் சத்தையெல்லாம் நமது பூமி கவர்ந்து வட துருவத்தில் உறையச் செய்கிறது என்பதை அகஸ்தியர் கண்டுணர்ந்தார்.

அதே சமயம் வெப்பத்தால் கரைந்து நீராகப் பல வகையில் சென்றாலும் அதிலிருந்த சத்தின் தன்மைகள் ஆவியாகப் படரப் படும் போது நமது பூமிக்குள் மீண்டும் வரும் வெப்ப காந்தங்கள் அதைக் கவர்ந்து அதனதன் நிலைகள் கொண்டு இயக்கச் செய்கிறது.

1.நமது பூமியில் வெளிப்படும் ஒவ்வொன்றையும் இந்தக் காந்தம் கவரும் போது

2.எத்தகைய சத்தோ அதை அந்த அணுவுடன் இயக்கப்படும் போது மணம் அது ஞானமாக மாறுகிறது.

3.அதற்குப் பெயர் சரஸ்வதி என்று வைக்கின்றார் அகஸ்தியர்.

வெப்பம் காந்தம் விஷம் மணம் என்று நான்கு நிலை அடைந்த பின் இவை அனைத்தையும் சேர்த்துக் கூட்டாக வரும் போது ஐந்தாவது “உணர்வு…” ஐந்து நிலைகள் கொண்டு ஐந்து விதமான செயல்களைச் செய்யும்.

1.கண்களால் பார்க்கின்றோம் அதிலிருக்கக் கூடிய  காந்தம் இழுத்து மற்றதை நுகர்ந்து அறியச் செய்கிறது.

2.காதால் கேட்கின்றோம்  அந்த ஒலிக்கு உண்டான உணர்வின் அலைகளை இயக்கச் செய்து அந்த உணர்வைத் தட்டியெழுப்புகிறது.

3.அந்த உணர்ச்சிகளை சுவாசிக்கச் செய்து கண்ணின் நிலைகளை இயக்கி அதைத் திரும்பிப் பார்த்து அந்த உணர்வைக் கவருகிறது.

நாம் எடுத்துக் கொண்ட இந்த உணர்வுகள் அனைத்தும் உடலிலே படும்போது அந்த உணர்வின் தன்மையை அது உணர்த்துகின்றது.

இப்படி நம் புலனறிவுகள் அதாவது

1.மணமாக வரும் போது நுகரச் செய்கின்றது.

2.வாயில் போடும் போது சுவையாகத் தெரிகின்றது.

1.ஒவ்வொரு அணுவிற்குள்ளும் ஐந்து புலனறிவுகள் தான்

2.மனிதனுக்கும் இதே ஐந்து புலனறிவுகள்

3.மிருகங்களுக்கும் இதே ஐந்து புலனறிவுகள்.

4.பாம்பிற்கு மட்டும் நான்கு புலனறிவுகள் அதற்குக் காது இல்லை.

விஷத்தின் தன்மை ஆற்றல் மிக்கதாக அங்கே பாம்பிற்கு இருக்கிறது.

இந்த உண்மையின் நிலைகளை ஒரு அணுவின் ஆற்றல் எப்படிப்பட்டது என்றும் அணுவிற்குள் அணுவின் இயக்கத்தையும்  அன்று அகஸ்திய மாமகரிஷி தெளிவுறத் தெரிந்திருந்தார்.

அகம் என்ற நிலையில் அணுவிற்குள் இருக்கும் உள் நிலைகளை (அகம்) “அகத்தை…” அறிந்து வெளிப்படுத்தியதால் தான் அகத்தியர் என்று காரணப் பெயர் பெற்றார்.

இன்று அணு விஞ்ஞானிகள் என்று சொல்கிறார்கள். ஆனால் முதல் மெய் ஞானியான அந்த அகஸ்தியன் தான் அணுவின் இயக்கத்தை அறிந்தவன்.

அந்த அணுவின் ஆற்றலைத் தனக்குள் வளர்த்து உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக துருவ நட்சத்திரமாக உள்ளான். அவன் உணர்வைக் கவர்ந்தால் நாமும் நம் அகத்தை அறியலாம். அகண்ட அண்டத்தையும் அறியலாம்.

போதை மருந்து உட்கொள்வோர்… விஷம் குடித்து இறப்போர்… அவர்கள் முடிவு அடுத்து பாம்பாகத்தான் பிறக்க நேரும்…!

Image

don't become slave

போதை மருந்து உட்கொள்வோர்… விஷம் குடித்து இறப்போர்… அவர்கள் முடிவு அடுத்து பாம்பாகத்தான் பிறக்க நேரும்…!

 

இன்று மனித வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான நிலைகளாகி வீழ்ந்து விட்டால் என்ன செய்வார்கள்?

சில பேர் வசதியாக இருப்பார்கள். வசதியற்ற நிலைகளில் இருந்தால் ஆண்களாக இருந்தால் அந்தத் துன்பங்களை மறப்பதற்காகப் போதை வஸ்துக்களைப் பயன்படுத்திச் சிந்தனையற்றவர்களாகி விடுகின்றனர்.

பெண்களாக இருந்தால் துன்பத்தைத் தாங்க முடியவில்லை என்றால் “என்ன வாழ்க்கை..!” என்று இந்த உடலை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

விஷத்தை அருந்தி மனித  எண்ணமே இல்லாதபடித் தன் உடலை அழித்துக் கொள்கின்றனர்.

எந்த விஷத்தை உட் கொண்டு உடலை விட்டுப் பிரிந்து சென்றார்களோ அந்த விஷத்தின் தன்மை உயிராத்மாவில் பரவி விஷம் கொண்ட பாம்பின் ஈர்ப்பிற்குள் சென்று மறு பிறவியில் பாம்பாக உருவாக்கி விடும்.

இதை இவர்கள் மறந்து விடுகிறார்கள்…!

வீட்டில் கஷ்டம் வந்தால் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து விட்டு என்ன வாழ்க்கை என்று இவர்கள் வெறுக்கலாம். கடைசியில் சமாளிக்க முடியாத நிலைகளில் விஷத்தை உட்கொண்டால் மீண்டும் பாம்பாகப் பிறக்கிறார்கள்.

ஆண்கள் தன் மனதை மாற்றுவதற்காக வேண்டி போதைப் பொருள்களுக்கு அடிமையாகித் தன்னை மறந்து நல்ல எண்ணங்களை எல்லாம் இழந்து கடைசியில் உடலை விட்டு இந்த உயிராத்மா செல்லும்போது மந்திரக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

போதை வஸ்துக்களை யார் யார் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மாமிசமும் உட் கொள்வார்கள். அந்த மாமிசம் இருந்தால் தான் அது அவர்களுக்கு நல்லதாக இருக்கும்.

இந்த இரண்டையும் அவர்கள் பயன்படுத்தினால் அந்த உயிராத்மாக்களை மந்திரக்காரர்கள் வெகு சுலபமாகப் பிடித்து விடுவார்கள்.

மாமிசத்தையும் போதை மருந்தையும் வைத்து அதற்கென்று சில மந்திரங்களைச் சொன்னால் போதும். உயிராத்மா அந்த மந்திரக்காரனின் கைகளில் போய்ச் சிக்கிவிடும்.

அவனிடம் சென்றபின் பல பல செயல்களைச் செய்யும். கெட்டதையும் செய்யும். நல்லதையும் செய்யும்.

ஒருவருக்கு தலை வலி போக வேண்டுமென்றால் இந்த ஆத்மாவை இழுத்துச் சேர்த்துக் கொள்வார்கள். அவர் நோய் தீரும்.

ஆனால் மந்திரக்காரன் கையில் சிக்கிய ஆன்மா அந்த உடலில் உள்ள நோயையெல்லாம் தன் உயிராத்மாவில் சேர்த்துக் கொள்ளும். மந்திரக்காரன் ஆட்டிப் படைக்கும் சக்தியாக இருக்கும்.

ஒருவருக்குத் தொல்லை கொடுக்க வேண்டுமென்றால் இந்த உயிராத்மாவை அங்கே ஏவி விடுவார்கள். தொல்லை கொடுக்கும் நிலைகளை அங்கே உருவாக்கி அந்த உணர்வைத் தனக்குள் விளைய வைத்து இன்னும் அதிகமான விஷத் தன்மையாகும்.

1.முதலில் மந்திரக்காரன் கையில் சிக்கும்.

2.பின் பல உடல்களிலிருந்து வேதனையெல்லாம் சேர்க்கும்.

3.அந்த வினைக்கு நாயகனாகப் பாம்பாய் பிறக்கும்.

இன்று மந்திரங்களைக் கற்றுக் கொண்ட உயிராத்மாக்கள்  இன்னொரு உடலுக்குள் சென்று அவருடைய நோயை நீக்க.. “டேய் உனக்கு நோயெல்லாம் போய் விடும்…!” என்று மந்திரத்தைச் சொல்லி ஜபிப்பார்.

அவர் உடலில் இருந்த நோயெல்லாம் இந்த மந்திரக்காரன் உடலில் வந்து சேர்ந்துவிடும். நோயாளிக்கு உடல் நலமாகிப் போகும்.

இவர் காளியோ முருகனோ ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரைச் சொல்லி தான் மந்திரத்தை ஜபிப்பார். அந்த உணர்வின் தன்மை இங்கு வரும் போது “எல்லாருக்கும் நன்மை செய்கிறான் முருகன்…! என்று பெயரைச் சொல்வான்.

அந்த முருகன் யாரென்றே தெரியாது…!

முருகன் பெயரைச் சொல்லியோ காளியின் பெயரைச் சொல்லியோ இவ்வாறு செய்யும் போது அந்த உணர்வின் எண்ணங்களே இவர் உடலில் சேர்த்து அதே வேலையை அங்கே செய்யும்.

நான் தான் காளி…! நான் தான் மாரி…! நான் தான் முருகன்…! என்று இந்த ஆத்மா சொல்லும். ஆனால் இந்த உடலில் எதை எதைச் சேர்த்ததோ மற்ற உடலிலிருந்து விஷத்தை எடுத்து அது அவர்களுக்கு நல்லதாகும்

என் தாய் உனக்கு நல்லது செய்தாள்…! என் முருகன் உங்களுக்கு நல்லது செய்தார்…! என்று இவர்கள் சொல்லலாம்.

ஆனால் அதே சமயத்தில்

1.அங்கே இருக்கக்கூடிய விஷத்தின் தன்மைகள்

2.தன் உடலிலே அதிகமாகச் சேர்க்கப்பட்டு விஷம் அதிகமாகி

3.இந்த உயிரையும் பிரிக்கச் செய்து மீண்டும் இதே வேலைகளுக்குப் பயன்படுவார்.

4.வேதனையான விஷங்கள் அதிகமாகி விட்டால் கடைசி முடிவு

5.மந்திரம் சொல்வோரும் சரி… மந்திரக்காரர் கையிலே சிக்குவோரும் சரி…, “அவர்களின் முடிவு பாம்பு தான்…!”

மறைந்த உண்மைகளை எல்லோரும் அறிய வேண்டும்…!

Gnanaguru blessings (2)

மறைந்த உண்மைகளை எல்லோரும் அறிய வேண்டும்…! 

மாமகரி ஈஸ்வராய குருதேவர் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தார்.

மகரிஷிகள் கண்ட மெய் உணர்வுகளையும் இயற்கையின் உண்மைகளையும் உபதேசித்தார். அனுபவ வாயிலாகக் காட்டுக்குள் அழைத்துச் சென்று மனித நடமாட்டமே இல்லாத இடங்களில் வைத்துச் சில நிலைகளை நேரடியாகவே காட்டினார்.

அவ்வாறு குருநாதர் எமக்குக் கற்றுக் கொடுத்த நிலைகளை எல்லாம் என்னுடன் வைத்துக் கொண்டு உங்களிடம் சொல்லாமல் மறைத்துக் கொண்டிருந்தால் என்னாகும்?

எனக்குள் மறைந்துவிடும்.

உங்களுக்குள் இதை உணர்த்தப்படும் பொழுது உங்களுடைய பார்வையால் சொல்லால் பேச்சால் மூச்சால் பலருடைய தீமைகளை மீட்டிடும் சக்தி உங்களுக்குள்ளும் வளர வேண்டும் என்ற “ஆசையில் தான்” சொல்கிறேன்.

சிந்தனையை மறைக்கச் செய்யும் நிலைகளை மாற்றியமைத்துத் தெளிந்த மனம் கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் உணர்வாக அந்த ஞானத்தின் வழிகளில் ஒவ்வொருவரும் வாழ்ந்திட வேண்டும்.

பள்ளியில் படித்த பின் “படித்தை நினைவு கொண்டார்களா…?” என்பதைத் தேர்வின் மூலமாகப் பரீட்சித்துப் பார்க்கின்றனர்.

படித்தது நினைவு வந்தால் தேர்வில் எழுதிவிடுகின்றார்கள். நினைவுக்கு வந்தால் சிந்திக்கும் தன்மை வருகின்றது. சிந்தித்துச் செயல்படும் அந்தச் செயலாக்கத்தின் படி தேர்வில் தேர்ச்சி பெறுகின்றார்கள்.

அதைப் போன்று தான் யாம் உபதேசிப்பதை லேசாக எண்ணிவிடாதீர்கள். உங்களுக்குத் தீமை வரும் பொழுதெல்லாம் நினைவுக்குக் கொண்டு வாருங்கள்.

தீமைகளை எப்படி மாற்றுவது…? என்று சிறிது நேரம் சிந்தனை செய்தால் சிந்தித்துச் செயல்படும் அந்த அருள் ஞானம் உங்களுக்குள் வருகின்றது.

அந்த ஞானத்தால் உங்கள் தீமைகளை எளிதில் போக்கிக் கொள்ள முடியும்.

ஆகவே
1.தீமையை நீக்கிடும் அந்த அருள் சக்திகளை நீங்கள் பெறவேண்டும்
2.உங்கள் உணர்வுகள் உங்கள் சொல்லைக் கேட்போருக்கும் ஞானத்தை  ஊட்டி
3.அவர்களுக்குள் மறைத்திருக்கும் தீமைகளை அவர்களும் நீக்கி
4.நீங்கள் பெற்ற அருள் உணர்வை அவர்களும் பெற்று அவர்களும் தீமைகளை நீக்க வேண்டும்.
5.நீங்கள் எல்லோரும் ஞானியாக வேண்டும் என்பற்குத்தான் உங்களுக்குள் இதைத் தெளிவாக்குகின்றேன்.

 

மரண பயத்தின் உணர்வுகளுக்குள்… “மகரிஷிகளின் உணர்வை இணைத்தால்…” பயமான உணர்வுகளுக்கு அது அச்சுறுத்தலாகும்…!

dhuruva maharishi-agastyan

மரண பயத்தின் உணர்வுகளுக்குள்… “மகரிஷிகளின் உணர்வை இணைத்தால்…” பயமான உணர்வுகளுக்கு அது அச்சுறுத்தலாகும்…! 

நாம் நல்ல குணம் கொண்டு இருந்தாலும் நம் சந்தர்ப்பம் ஒரு அச்சுறுத்தும் உணர்வை நுகர்ந்து விட்டால் நல்ல குணத்துடன் சேர்ந்து அது பதிந்து விடுகின்றது.

அந்த அச்சுறும் உணர்வுகள் நமக்குள் விளைந்துவிட்டால் நல்ல குணங்களைக் காக்கும் செயலை இழந்து விடுகின்றது.

அந்த அச்சுறுத்தும் உணர்வின் தன்மையை மாற்றிடும் உணர்வைச் சொல்லாக இங்கே உபதேசிக்கின்றேன்

சொல்லாகச் சொல்கிறேன் என்றால் அந்த அருள் ஞானிகள் நுகர்ந்த அந்த எல்லையில் என்னுடைய நினைவாற்றல் சென்றது. அதை நான் பெற முடிந்தது. பெற்று அதை வளர்த்துக் கொண்டேன்.

1.யாம் பெற்ற நிலையில் அந்த ஞானிகள் பெற்றதை யாம் இங்கே நினைவு கொண்டு சொல்லும்போது
2.உங்கள் நினைவாற்றல் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அந்த எல்லைகளுக்கே சென்று
3.அங்கே உருவான அந்த அருளாற்றல்களை நீங்களும் நுகர முடியும்.

உதாரணமாக ரோட்டில் இன்ன இடத்தில் ஆக்சிடென்ட் ஆனது என்று கேள்விப்பட்ட உடனே “ஆ…” என்று பதிவாகி விடுகின்றது.

பின் அதை யாராவது சொன்னால் மீண்டும் நினைவு வந்து அந்த இடமே தெரிய (படம் போல்) ஆரம்பித்துவிடும். இதைப் போல

1.குருநாதர் கொடுத்த அந்த அருள் வழியில் யாம் உபதேசிப்பதை
2.நீங்கள் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுதெல்லாம்
3.அவர் கண்டுணர்ந்த பல தீமைகளை வென்ற அந்த அருள் உணர்வுகள் உங்களுக்குள் வரும்.

மகரிஷிகளின் உணர்வைச் சேர்க்கச் சேர்க்க அந்த அச்சுறுத்தும் உணர்வுகள் மாறி தெளிந்த உணர்வாக வலிமை மிக்கதாகச் சிந்தித்துச் செயல்படுத்தும் உணர்வாக மாறும்.

மன பலம் பெறுவீர்கள். மன உறுதி கொண்டு நல்லதைச் செயல்படுத்தும் சீரான நிலைகள் வரும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.