எல்லா நன்மைகளும் இருந்தாலும் அதில் சில தீமைகள் இருக்கின்றது – மகரிஷிகளின் உணர்வால் அதைச் சமப்படுத்திக் கொள்ள முடியும்

divine-bliss-light

எல்லா நன்மைகளும் இருந்தாலும் அதில் சில தீமைகள் இருக்கின்றது – “மகரிஷிகளின் உணர்வால் அதைச் சமப்படுத்திக் கொள்ள முடியும்”

 

 

எப்படித்தான் இருந்தாலும் காற்று அடிக்கிறது மழை பெய்கின்றது வெயில் அடிக்கின்றது குளிர் அடிக்கின்றது. காற்று மழை வெயில் குளிர் ஆகிய நான்கு காலங்களும் மாறி மாறி வருகிறது.

இதைப் போலத் தான் மகிழ்ச்சியாகச் சென்றாலும் நாம் போகும் போதே திடீரென்று

1.ஒருவன் குறுக்கே போகின்றான்… கீழே விழுந்து அடிபடுகின்றான்.

2.அதைப் பார்த்தவுடனே பதட்டமாகி வேதனைப்படுகின்றோம்.

3.பயம் வந்து குளிர் போல நமக்குள் நடுக்கமாகிவிடுகிறது.

இரண்டு பேர் சண்டை போடுகின்றனர். அப்போது எரிச்சலான பேச்சுக்களை ஒருவருக்கொருவர் பேகிக் கொள்கின்றனர். நாம் பார்க்கின்றோம்

1.அதைக் கேட்டு நுகர்ந்தவுடனே நமக்கும் எரிச்சலாகின்றது.

2.அப்பொழுது வெயிலாகின்றது.

அதே சமயம் ஒருவருக்கொருவர் பரபரப்பான விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அதை நாம் பார்க்கப்படும் போது நம் மனதில் பெரும் புயலாகின்றது.

ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். அதைப் பார்க்கும் போது

1.பெரும் புயலாக நம் எண்ணங்களைச் சிதறச் செய்து

2.நம்மையே ஓட வைக்கின்றது.

இப்படி ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் வரக்கூடிய இந்த நிலைகள் ஒவ்வொன்றும் மாறி மாறி (காலங்கள்) வந்து கொண்டே இருக்கின்றது.

சகஜ வாழ்க்கையில் குளிர் அதிகமாக அடித்தால் “வெயில் வந்தால்…” பரவாயில்லை என்று சொல்லுகின்றோம்.

வெயில் அதிகமாக அடிக்கப் போகும் போது காற்று இல்லை என்றால் “காற்று வந்தால்…” பரவாயில்லை என்று நினைக்கின்றோம்.

காற்று அதிகமாக வந்தவுடன் என்ன சொல்கிறோம்? ஐயோ…! காற்று இப்படி அடிக்கின்றதே… என்னால் தாங்க முடியவில்லையே…! என்கின்றோம்.

ஆக மொத்தம் எல்லாவறையும் விரும்புகின்றோம். ஆனால் அந்தந்தக் காலங்கள் வந்தால் அது மேலேயே வெறுக்கின்றோம். நான்கு காலத்திலேயும் இப்படி அதைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

ஒரு பொருளைக் காய வைப்பதற்காக வெயில் வேண்டும் என்கின்றோம். ஆனால் அந்தப் பொருளைக் காய வைப்பதற்கு முன்னாலே வெயில் அடித்தால் “அப்பப்பா… உடம்பெல்லாம் எரிகின்றது…!” என்கின்றோம்.

அந்தப் பொருளும் காய வேண்டும். அதனாலே (வெயிலால்) வேதனையும் படுகின்றோம்.

1.நன்மைக்காக வேண்டி எண்ணுகின்றோம்.

2.அடுத்த நிமிடம் அதனால் வேதனைப்படுகின்றோம்.

துவைத்த துணிகளைக் காய வைக்கக் காற்று அடிக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம், அது அதிகமாகப் போய்த் துணியைத் தூக்கி எரிந்தது என்றால் “துணியைத் தூக்கி எரிந்து விட்டதே…!” என்று வேதனைப்படுகின்றோம்.

இதைப் போல எல்லா நன்மைகள் வந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றது.

அதற்காக வேண்டித்தான் அந்த மெய் ஞானிகளினுடைய எண்ண அலைகளை உங்களுக்குள் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற எண்ணத்தை நீங்கள் அடிக்கடி எடுத்தால் அந்த உணர்வுகள் வந்து உங்கள் உடலுக்குள் தீமைகளை அடக்கிச் சமப்படுத்தும். அதாவது

1.வேதனையையும் கோபத்தையும் வெறுப்பையும் சமப்படுத்தி

2.உங்களுக்குள் ஞானத்தையும் சாந்தத்தையும் ஊட்டிப்

3.பொருளறிந்து செயல்படும் உணர்வாக இயக்கி

4.உங்கள் வாழ்க்கையே மகிழ்ச்சியுறச் செய்யும்.

Leave a Reply