துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஊழ்வினை என்ற வித்துக்குள் சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவம்

துருவ நட்சத்திரத்தின் சக்தியை ஊழ்வினை என்ற வித்துக்குள் சேர்க்க வேண்டியதன் முக்கியத்துவம்

 

உதாரணமாக விளக்கெண்ணெய் இருக்கின்றது. அதற்குண்டான வித்திலே பச்சைப் பாம்பின் தைலத்தை இறக்கி அதை மாற்றி அந்தப் பச்சை பாம்பின் உணர்வுகளை விளக்கெண்ணெய் வித்திற்குள் கலந்து விட்டால் அதிலிருந்து ஆட்டி எண்ணையை எடுத்து விளக்கை எரித்தால் “சுற்றிப் பாம்புகளாகத் தெரிய வரும்…”

இந்த உணர்வின் தன்மை எதுவோ அதைப்போல ஒவ்வொரு நிலைகளிலும் இதை உருவாக்க முடியும்.

அதாவது…
1.எண்ணெய்க்குள் சில ஜீவ அணுக்களின் நிலைகளைச் சேர்த்து அந்த எண்ணெயை விளக்கிலே ஊற்றிப் பொருத்தினால்
2.அந்த உணர்வின் மணத்தைக் கொடுத்தால் வித்தியாசமான நிலைகள் உருவாகும்.

அதே போல் புலியின் உணர்வை எடுத்து அந்த வித்துக்களுக்குள் ஊற வைத்து அந்த வித்தை ஊன்றினால் அந்த எண்ணெய் வித்துக்களாக உருவாக்கப்பட்ட பின் அதிலிருந்து ஆட்டி எண்ணையை எடுத்து எரித்தால் எங்கே பார்த்தாலும் புலிகள் வருவது போல அச்சுறுத்தும் உணர்வுகள் தோன்றும்.

இது எல்லாம் இயற்கையின் சில நியதிகள்.

குருநாதர் அனுபவரீதியிலே அதற்கொத்த வித்துக்களை எடுத்து அதை எவ்வகையில் ஊற வைக்க வேண்டும்…? மற்ற சத்துக்களை எப்படிக் கலக்க வேண்டும்…?

அதில் இணைந்த பின் வித்துக்களாக உருவானதை எடுத்து ஆட்டியபின் அந்த எண்ணெயை எடுத்துப் பொருத்தப்படும் பொழுது…
1.வித்தியாசமான அந்த எண்ணையின் ஒளி அலைகள்
2.இந்த உணர்வுகளை எப்படிக் குவித்துக் காட்டுகிறது என்று குருநாதர் தெளிவாக எனக்குக் காட்டினார்.

இதைப் போன்று நம் உடலில் ஊழ்வினை என்ற வித்துக்களாக எலும்புக்குள் இருப்பினும் துருவ நட்சத்திரத்தின் வீரிய உணர்வை அதற்குள் செலுத்த வேண்டும்.

அக்ரிகல்ச்சரில் தாவர இன வித்துக்களை விஷக்கிருமிகள் தாக்கிடாது அதற்கென்று சில அமில சக்திகளை அதனுடன் சேர்த்து ஊற வைத்து விடுவார்கள்.

அதற்குப் பின் அதை எடுத்து நிலத்தில் ஊன்றப்படும் பொழுது
1.அந்த உணர்வின் சத்து வலுப்பெற்றால் மற்ற கிருமிகள் அந்தச் செடிகளைத் தாக்குவதில்லை.
2.எதிர்த்துத் தாக்கும் அந்த உணர்வின் சக்தி அந்த வித்துக்களுக்குக் கிடைக்கப் பெறுகின்றது.

இதே போலத் தான் நமது வாழ்க்கையில் பிறருடைய வேதனை உணர்வுகளோ கோபப்படுவோர் உணர்வுகளோ ஊழ்வினை என்ற வித்தாகின்றது. இப்படி எத்தனையோ உணர்வின் செயலாக நமக்குள் தீமையின் வித்துகள் செயல்படுகின்றது.

அந்தந்த மனிதர்களை உற்றுப் பார்த்தால் அவர் உடலில் இருந்து வரக்கூடிய உணர்ச்சியை உணர்வை ஊழ்வினை என்று வித்துக்களாக எலும்புக்குள் பதிவாகி விடுகின்றது.

ஒரு வித்தினை நிலத்தில் ஊன்றினோம் என்றால் பூமியின் துணை கொண்டு அந்த உணர்வைக் கவர்ந்து அதே செடியாக வளர்கின்றது. ஆனாலும் அந்தச் செடிக்குள் இதைப் போல வித்தியாசமான நிலைகளில் மற்ற உணர்வுடன் அதை இணைக்கச் செய்து அந்த வித்துக்களை ஊன்றும் பொழுது கிருமிகளோ பூச்சிகளோ வருவதில்லை.

இதைப் போன்று
1.தீமை என்ற உணர்வை நுகர்ந்தறிந்தாலும் அடுத்த கணம் ஈஸ்வரா என்று கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றித் துருவ நட்சத்திரத்துடன் இணைத்து
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் உடலில் உள்ள ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் என்று பெற வேண்டும் என்று பதிவு செய்த உணர்வுடன் இதைக் கலந்து விட்டால்
4.அந்த நோயின் உணர்வுகளை தீமையின் உணர்வுகளைச் சுருக்கி
5.அவர்கள் நோயிலிருந்து விடுபட வேண்டும் அவர்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணி விட்டால்
6.அந்த உணர்வுடன் கலந்து அருள் ஞான வித்தாக நமக்குள் மாறுகின்றது. இது மனிதனால் உருவாக்கப்படும் நிலை.

இயற்கையின் நிலையை உயிர் உருவாக்கினாலும்… மனிதன் ஆறாவது அறிவு கொண்டு உயிருடன் இணைத்து எதை மாற்ற வேண்டுமா அதை மாற்றி அமைக்கும் சக்தி பெற்றவன். அது தான் முருகன் என்ற நிலைகளில் ஆறாவது அறிவுக்கு முருகு மாற்றி அமைக்கும் சக்தி என்று காட்டுகின்றார்கள்.

முருகா என்றால் அழகா என்று எதையும் மகிழ்ச்சி அடையச் செய்யும் சக்தியாக ஆறாம் அறிவுக்கு உண்டு என்று காரண பெயரை வைத்துத் தெளிவாக்குகின்றார்கள் ஞானிகள்.

துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெறுகின்றோம். அந்த வலுப்பெற்ற நாம் அனைவருமே வாழ்நாள் முழுவதும் எத்தகைய தீமைகளைப் பார்த்தாலும் அறிந்த பின் அந்த உணர்வுகள் உடலில் விளையாதபடி ஈஸ்வரா என்று உயிரை எண்ணித் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று அதை முந்திச் செலுத்தி விட்டால் தீமையான உணர்வுகளை ஒதுக்கி அதை மாற்றிவிடும்.

நம் இரத்த நாளங்களில் இத்தகைய அருள் உணர்வுகள் பட்டபின் தங்கத்திற்குள் திரவகத்தை ஊற்றிய பின் தங்கம் பரிசுத்தமாவது போன்று விஷத்தின் தன்மைகளைக் கரைத்து விடுகின்றது.

1.துருவ நட்சத்திரத்தின் சக்தி நம் உடல் உறுப்புகள் முழுவதும் படரும் பொழுது
2.நம் உடலில் உள்ள கிட்னியிலும் மற்ற உறுப்புகளிலும் விஷத்தை வடிகட்டும் ஆற்றல்மிக்க சக்தியாக நாம் பெறுகின்றோம்.
3.விஷத்தைக் குறைத்து ஒளியின் சக்தியாக நாம் பெறும் தகுதி பெறுகின்றோம்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.