
நாம் வெளிவிட வேண்டிய மூச்சலைகளும் அதனின் ஆற்றல்களும்
விவசாயம் செய்வோர் உங்கள் பயிரினங்கள் வளர்ச்சியில் வாடியிருந்தால் சப்தரிஷிகளின் அருள் சக்தி எங்கள் பயிரினங்களில் படர்ந்து அங்கே தீமையான உயிரணுக்கள் நீங்கி சப்தரிஷிகளின் அருள் சக்தியால் உருவாகும் அணுக்கள் விளைந்து அதனின் சத்தாக விளைந்து தாவர இனங்கள் செழித்து ஓங்க வேண்டும் என்று உங்கள் உணர்வினைப் பாய்ச்சுங்கள்.
ஏனென்றால்
1.இன்று மனிதன் இடும் மூச்சலைகளும்
2.உடலில் இருந்து வரக்கூடிய இந்த நினைவும்
3.உடலில் இருந்து வெளிவரும் கழிவும் சூரியனின் காந்த சக்தி கவருமே என்றால்
4.அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் கொசுவாக… மூட்டைப் பூச்சியாக… வண்டுகளாக… தேள்களாக… புழுக்களாக… கிருமிகளாக உருவாகின்றது.
இதைப் போன்று நாம் எதை உணவாக உட்கொண்டோமோ அந்த உணவால் எடுத்துக் கொண்ட மணமும் உணர்வின் எண்ணமும் நமக்குள் விளையப்படும் போது இந்த உடலுக்குள் விளைந்த உணர்வின் சோர்வும் நாம் பயிரிடும் பயிர்களைப் பார்க்கப்படும் பொழுது
1.நம்மில் விளைந்த எண்ணமும் சோர்வடைந்த உணர்வும்
2.நம் உடலில் இருந்து எண்ணிய அந்த மணமும்
3.அந்தத் தாவர இனத்துடன் கலக்கப்படும் பொழுது கிருமிகளாக உருவாகி அந்தப் பயிர் இனத்தையே அழித்து விடுகின்றது.
அதை மாற்றியமைக்க… தியானத்தின் மூலம் சப்தரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வலுவாக்கி சப்தரிஷிகளின் அருள் சக்தி பயிரினங்களிலே படர வேண்டும்; அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நல்ல அணுக்கள் உருவாக வேண்டும்; அதனின் மலத்தின் சக்தி இந்தத் தாவர இனத்திற்கு உரமாக வேண்டும் ;தாவர இனங்கள் செழித்து வளர வேண்டும் என்று உங்கள் நினைவினைப் பாய்ச்ச வேண்டும்.
1.விவசாய நிலங்களில் பூச்சிகளைக் கொல்ல பூச்சிக்கொல்லி என்று மருந்துகளை தூவுவதற்குப் பதில்
2.நீங்கள் எடுக்கும் அந்தச் சப்தரிஷிகளின் உணர்வின் தன்மையைத் தூவுங்கள்.
மேலும் சப்தரிஷிகளின் அருள் சக்தி மேக மண்டலங்களில் கூடி மேகங்கள் கூடி நல்ல மழை பெய்து ஏரி குளங்கள் நிரம்பி தாவர இனங்கள் செழித்து இந்த ஊரும் உலகமும் நலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தினை உங்கள் நினைவினை மேகக் கூட்டங்களில் செலுத்துங்கள்.
சப்தரிஷிகளின் அருள் சக்தி அங்கே படர வேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த உணர்வு மேகங்களில் கலந்து அந்த நீர் துளியாகப் பரவும் போது அதன் வழி கொண்டு தாவர இனங்களில் பரவி தீமைகளை அகற்றும் சக்திகள் பெறும். உங்களை நீங்கள் நம்புங்கள்.
1.ஆறாவது அறிவால் பிறந்த நாம் கடவுளின் அவதாரத்தில் முழுமை பெற்றவன்.
2.மிருக நிலைகளில் இருந்து என்று மனிதனாகப் பிறந்தோமோ இவை அனைத்தும் முழு முதற்கடவுள் என்று சொல்வார்கள்.
அதனால் தான் விநாயகரின் சிரசில் மிருகத்தின் தலையைப் போட்டு மனிதனின் உடலைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள். முழு முதற் கடவுளாகப் பெறும் நாம் எதனையுமே சிருஷ்டிக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அந்த விண்ணின் ஆற்றலைப் பருகி ஒளியின் சரீரமாக நம்மில் வளர்த்திட முடியும்.
ஏனென்றால் தன்னைக் காத்திடும் உணர்வுகள் கொண்டு உயிர் நம்மை மனிதனாக உருவாக்கியது. அதே காத்திடும் உணர்வின் எண்ணம் கொண்டு… தீமையை அகற்றிய அருள் ஞானியின் உணர்வுகளை நமக்குள் புகுத்தி… தீமையற்ற உலகமான உடலை அமைத்து உயிருடன் ஒன்றி… என்றும் நிலையான ஒளிச் சரீரமாக நாம் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையில் இன்று வாழ்ந்திட வேண்டும் .
காரணம்…
1.இன்றும் போர்க்காலங்களில் மனிதனின் விளைந்த பழி தீர்க்கும் உணர்வுகள் இந்தப் பூமியிலே படர்ந்து
2.இதனின் நினைவலைகள் நமக்குள் பரவிப் பரவி நம்மை அறியாது நல்ல குணங்களைச் செயலற்றதாக இன்று இயக்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில்
3.நாம் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெற்று நம்மை அறியாது சேர்ந்த தீமைகளை அகற்ற வேண்டும் என்றும் ,
4.நாம் பார்ப்போர் அனைவருக்கும் சப்தரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்றும்
5.அதன் மூலம் பகைமைகளை நீக்கி பகைமையற்ற உணர்வை நாம் சிருஷ்டிக்க முடியும்…
6.நம் உடலிலும் அந்த நிலையை உருவாக்க முடியும்.
இதைப்போல நாம் பார்ப்போர் நிலைகளிலும், இதைக் கேட்டுணர்ந்தோர் நிலைகளிலும் தீமையை அகற்றும் சக்தியை பெறச் செய்ய முடியும் என்ற இந்த தன்னம்பிக்கையில் வாழ்ந்திட வேண்டும்” என்று பிரார்த்திக்கின்றேன்.
நாம் அனைவரும் கூட்டமைப்பாகத் தியானித்த இந்த சக்தி தியானத்தில் உள்ளோர் அனைவரும் பெற வேண்டும் என்று ஏங்குவோம்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.