உயிருக்குள் அடிக்கடி நடக்கும் குருச்சேத்திரப் போர்…! – பேருண்மைகள்

உயிருக்குள் அடிக்கடி நடக்கும் குருச்சேத்திரப் போர்…! – பேருண்மைகள்

 

தாவர இனங்கள் உருவாவதை அந்த இலையின் ரூபங்கள் அதிலே சுவைகள் எவ்வாறு மாறி இருக்கின்றது…? உயிரணுக்கள் அதை நுகரப்படும் பொழுது எப்படி ரூபமாகிறது…?

பல உணர்வுகள் கொண்டு… பல பல தாவர இனச் சத்தைக் கொண்டு அதனின் நிலைகள் கொண்டு உடலானாலும் அந்தத் தாவர இனச் சத்தின் மணத்தின் தன்மையால் அதனின் மணம் எண்ணமாகி அந்த உணர்வின் சத்தை நுகர்ந்து உடலாக மாற்றி அது இயங்கிக் கொண்டிருக்கிறது.

அப்படி இயங்கினாலும்
1.அடுத்து இதைப் போல மற்றொரு புது நிலைகளை அது நுகரப்படும் பொழுது
2.உயிரான குருசேத்திரத்தில் தன் உடலுக்குள் ஏற்கனவே சேர்த்துக் கொண்ட நிலைகளுக்கு அது எதிர்மறையாகிப் போர் நடக்கின்றது.

நமது பூமியில் எவ்வாறு மற்ற தாவர இனங்கள் வரும் பொழுது ஓர் நஞ்சு கொண்ட உணர்வு பட்டவுடனே எப்படிச் சுழிக் காற்றாக மாறுகின்றதோ அதைப் போல
1.இந்த உணர்வின் தன்மை புதிய நிலைகளைச் சேர்த்தால் கலக்க உணர்வுகளாக மாறிக் கலக்குகின்றது.
2.இது குருச்சேத்திரப் போராக மாறுகின்றது.

இவ்வாறு நமக்குள் பழமையான எண்ணங்கள் இருப்பினும் அந்த உணர்வின் சத்தை நமக்குள் இது கவர்ந்து உள் செல்லுகின்றது.

நம் உயிரின் தன்மை துடிப்பாக இருக்கும் பொழுது முந்திய தாவர இனங்களுடைய சத்தை உணவாக உட்கொண்டு அதை நுகர்ந்து அது உணவாக மாறும் நிலைகள் கொண்டு இலைகள் எவ்வாறு ரூபங்கள் ஆகின்றதோ அதே போல உயிரணு அந்தத் தாவர இனச் சத்தை நுகர்ந்த பின் அதே உருக் கொண்ட “ஜீவணுவாக…” நமக்குள் மாறுகின்றது.

அந்த ஜீவ அணு மீண்டும் இதைப் போல உணவாக உட்கொண்டாலும் அதன் சத்து ரத்தமாக மாறினாலும் அதனின் உணர்வின் செல்களே அதனின் வெப்பத்தால் ஆவியாகச் சுவாசித்து அந்த அணுவின் தன்மை எதனின் ரூபமோ அதனின் அமைப்பாக மலம் வரும் பொழுது மனித உடலுக்குள் உறுப்புகள் வருகின்றது.

மிருகங்களுக்கு உறுப்புகள் வேறாக இருக்கும். தேள் இனங்களுக்கு உறுப்புகள் வேறு… புழுக்களுக்கு உண்டான உடல் அமைப்புகள் வேறு… பட்சிகளுக்கு உடல் உறுப்புகள் வேறு… அது உட்கொண்ட உணர்வின் தன்மைக்கொப்ப ஜீவணுக்கள் உருவாகி அதனின் மலமாக உமிழ்த்தும் உணர்வுகள் அது உறைந்து அதனின் ரூபமாக அமைகின்றது.

தேன் கூட்டைத் தேனீக்கள் எவ்வாறு அமைக்கின்றதோ… ஒவ்வொரு குளவியும் மண்ணை எடுத்து அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எவ்வாறு கூட்டை அமைக்கின்றதோ இதைப் போல குருவி இனங்கள் கூடு கட்டுவதும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அந்த உணர்வுகளின் இயல்புகளுக்கு ஒப்ப அதனின் இயக்கச் சக்தியும் அது உருவாகும்.

இதைப் போல் தான்
1.நுகர்ந்த நிலைகள் ஜீவணுக்களாக மாறுவதும் அதனின் உணர்வுகள் இயங்குவதும்
2.இவ்வாறு தான் நாம் மாறி மாறி உறுப்புகளின் தன்மை அடைந்து மனிதனாக வளர்ச்சி பெற்று வந்துள்ளோம்.

உயிரின் நிலைகள் கொண்டு நினைவின் அலைகள் வரப்படும் பொழுது கண்ணின் பார்வையில் படுகின்றது. கண்ணுக்குள் பார்க்கப்படும் பொழுது நாம் எதை எண்ணுகின்றோமோ
1.எதிர்மறையாக நாம் காணும் நிலைகளில் அது படம் எடுத்து…
2.கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தப்புலன் பார்த்திடும் உணர்வை இழுத்துக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றி
3.நாம் சுவாசித்து உயிருக்குள் நினைவுடன் இயக்கப்படும் பொழுது குருச்சேத்திரப் போராக மாறுகின்றது.

எப்படி சுழிக் காற்று மாறுகின்றதோ அது போல்
1.நமக்குள் உணர்வின் தன்மை சீராக ஒன்றாக இணைந்தால் முகம் சுழிக்காது.
2.ஆனால் பிறரின் நிலைகள் மாறுபட்ட நிலைகள் வரும் பொழுது முகம் சுழிப்பதும் வெறுப்பின் உணர்வுகளும் உடலுக்குள் தோன்றுகின்றது…
3.உணர்வின் அலைகளாக மாற்றுகின்றது… குருசேத்திரப் போராக இது மாறி இந்த உணர்வின் நிலைகள் நமக்குள் அது ஜீவ அணுவாக மாறுகின்றது.
4.அதனின் உணர்வுகள் உறுப்பாக விளையப்படும் பொழுது எத்தனையோ மாற்றங்கள் வருகின்றது.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.