நான் பேசுவதில்லை… குரு கொடுத்த அருள் தான் இயங்குகிறது… இயக்குகிறது

நான் பேசுவதில்லை… குரு கொடுத்த அருள் தான் இயங்குகிறது… இயக்குகிறது

 

உதாரணமாக… கம்ப்யூட்டரில் பதிவு செய்து விட்டால் எதை நாம் அதிலே பதிவாக்கி வைத்திருக்கின்றோமோ அதற்குத் தக்கவாறு அந்த உணர்வை எடுத்து உடனே இயக்கிக் காட்டும்.

1.கம்ப்யூட்டரை வைத்து எந்தப் பொருளைப் பாதுகாக்க வேண்டும் என்று நாம் பதிவாக்கி வைத்திருக்கிறோமா
2/அந்தப் பொருளைப் பாதுகாத்தே தீரும்… ஆணையிட்டு வைத்திருப்பதற்குத் தக்க அந்தப் பொருளை அந்தக் கம்ப்யூட்டர் இயக்கச் செய்யும்.

ஆக கம்ப்யூட்டரில் பதிவு செய்தது போன்று எம்முடைய உபதேசங்களை நீங்கள் அறிய வேண்டும் என்று பதிவு செய்யும் நிலைக்கொப்ப அந்த அருள் உணர்வு உங்களுக்குள் இயக்கும்.

ஏனென்றால்
1.எத்தனையோ கோடி உணர்வுகளை குருநாதர் எனக்குள் பதிவு செய்து வைத்திருக்கின்றார்… கொஞ்ச நஞ்சமல்ல.
2.குருநாதர் எனக்குள் பதிவு வைத்தது எண்ணிலிடங்காதது.
3.அதையெல்லாம் தனித்து… பிரித்து உங்களுக்கு எல்லாவற்றையும் “ஒன்று போலச் சொல்ல வேண்டும்…” என்றால் எனக்கு ஆயுளும் பத்தாது.

அந்தந்தக் கால நிலைக்கொப்ப அது அதைக் குறித்துத் தெளிவுபடுத்திச் செய்ய வேண்டும். அந்த உணர்வுக்கொப்பத் தான் என்னுடைய சொல்லும் வரும்… பேச்சும் வரும்.

ஆகையினால் எதை எண்ணி எடுக்கின்றிர்களோ அதற்கு மேல் எனக்கும் மீண்டும் அந்த உயர்ந்த சக்தியை வளர்ப்பதற்கு உதவுகிறது. சொல்வது அர்த்தமாகிறது அல்லவா.

எனக்குள் அதை மீண்டும் நினைவு கொண்டு ஜீவன் ஊட்ட முடிகின்றது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.