என்றைக்குமே நம் உடலுக்குள் நன்மை செய்யும் சக்தி

என்றைக்குமே நம் உடலுக்குள் நன்மை செய்யும் சக்தி

 

பூமியிலிருந்து வெளிப்பட்ட எல்லா உணர்வுகளும் சூரியனால் கவரப்பட்டுப் பரமான இந்தப் பூமியில் பரமாத்மாவாக (காற்று மண்டலத்தில்) இருக்கின்றது.

மனிதர்கள்
1.இந்தப் பரமாத்மாவில் இருந்து தான் ஒருவரை நாம் நினைக்கப்படும் போது
2.நம் கண்ணின் கருவிழி பதிவாக்கியதைக் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலனறிவு பரமாத்மாவிலிருந்து நமது ஆன்மாவாக மாற்றுகின்றது.
3.நம் ஆன்மாவாக மாற்றி இங்கே சேர்த்த பின்
3.உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கொப்ப உயிர் அதை உள்ளே இழுத்து
4.அது அதற்கு உணவாகக் கொடுக்கின்றது… ஜீவான்மாவிற்கு அது போய்ச் சேருகின்றது.
5.இரத்தத்தின் வழி கொண்டு உடல் முழுவதும் பாய்ச்சுகின்றது.
6.இது உடலில் உள்ள ஜீவான்மாக்களுக்கு உணவாகப் போய்ச் சேருகின்றது.

இதைத்தான் இராமாயணத்தில் ராமன் குகனை முதலில் தன் சகோதரனாக ஆக்கிக் கொள்கின்றான். குகன் படகிலே செல்பவன். நம் உடலில் ரத்தங்கள் தான் ஆறாகவும் ஓடையாகவும் ஓடுகின்றது உடலான குகைக்குள்.

அருள் ஒளியின் சுடரை அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுக்கப்படும் பொழுது
1.பகைமையற்ற நிலைகள் கொண்டு நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அந்த அருள் சக்திகளைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது.
2.அந்த உணர்வின் தன்மைகள் நம் உடலுக்குள் நட்பாக உருவாக்குகின்றது.

அதனால் தான் ராமன் முதலில் குகனை நடப்பாக்கிக் கொள்கின்றான் என்று காட்டியுள்ளார்கள.

சீதா… அந்த உயர்ந்த குணத்தின் சத்தை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது இரத்தத்தில் உயர்ந்த குணங்களைக் கொண்டால் “என்றைக்குமே நம் உடலுக்குள் நன்மை செய்யும்…” என்று என்பதுதான் இதனுடைய பொருள்.

காடு வனாந்தரங்களுக்குள் சென்றாலும் பகைமையற்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்கும் சந்தர்ப்பம் உருவாகின்றது. அதனால்தான் முதலில் குகனை நண்பனாக்க வேண்டும் என்று நம் இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் முறையைக் கொடுக்கின்றார்கள்.

அருள் மகரிஷிகள் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளுக்கும் அந்தச் சக்தி செல்கின்றது.
1.உறுப்பில் எங்கெங்கெல்லாம் தீங்கு விளைவிக்கின்றதோ அதை இந்த சக்திகள் அடக்குகின்றது.
2.நமக்கு மன அமைதி கிடைக்கிறது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.