மாறுபட்ட உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…?

மாறுபட்ட உணர்வுகள் நம்மை எப்படி இயக்குகின்றது…?

 

நாம் வெண்மையான துணியைப் போட்டிருக்கின்றோம். ரோட்டிலே செல்லும் போது எங்கேயோ வெளிப்பட்ட தூசி காற்றிலே மிதந்து வந்து நம் சட்டை மீது படுகிறது.

எங்கேயோ மிளகாயைக் காய வைத்திருப்பார்கள். அதைத் தட்டி உலர்த்திக் கொண்டு இருக்கப்படும் பொழுது அது காற்றுக்குள் கலந்து நம் மீது பட்டு விடுகின்றது… நமக்கு எரிச்சலாகின்றது.

ஒரு சந்தன மணமோ அல்லது வேறு ஒரு வாசனைப் பொருளிலிருந்து வெளிப்படக்கூடிய உணர்வுகளும் காற்றிலே பரவி வருகின்றது. அதை இன்னொருவர் சுவாசிக்கின்றார். அது அவருக்கு அங்கே மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது. நாம் வந்த அதே பாதையிலே தான் அவர் வந்திருப்பார்.

ஆனால் நாமோ…
1.நமக்கு கப கப என்று எரிச்சலாக இருந்தது… முதுகிலே எரிச்சலானது என்று சொல்வோம்.
2.ஆனால் நான் அந்தப் பாதையில் தானே வந்தேன்… எனக்கு அப்படி இல்லையே என்று அவர் சொல்வார்.
3.காரணம்… ஒரு நொடிக்கு நொடி காற்றலைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

அதைப் போன்று தான் நாம் கடையில் உட்கார்ந்து வியாபாரம் செய்யும் பொழுது லாபத்தைப் பெருக்கலாம் என்று எண்ணுவோம்.

கடைக்கு வரும் ஒரு சிலர் குடும்பக் கஷ்டத்துடன் வருவார்கள். எப்படியும் அவர்களுக்குச் சாமான் தேவைப்படும். அந்தக் கஷ்டத்துடன் இங்கே வருவார்கள். அந்த உணர்வோடு நம்மிடம் அரிசி என்ன விலை…? பருப்பு என்ன விலை…? என்று கேட்பார்கள்.

அந்தக் கஷ்டத்திற்குத் தகுந்தாற்போல் சொல்லிக் கேட்கும் பொழுது நமக்குச் சரியாக இந்த உணர்வுகள் காதிலே விழுகாது. நாம் அவரிடம் என்னையா கேட்கின்றாய்…? என்று அழுத்தமாகக் கேட்போம்.

இந்த அரிசி தான் என்ன விலை…? என்று கேட்பார்.

அந்த உணர்வு அழுத்தமாக நம் செவிகளில் படும்பொழுது அவர் குடும்பத்திலே வீட்டிலே கஷ்டமாக விளைந்தது நம் உணர்வுக்குள் பட்டு நாம் சுவாசித்து நம் உடலுக்குள்ளும் அது சேரத் தொடங்குகிறது.

நாம் யாரும் ஒருவருக்கொருவர் பிரிந்து செல்வதில்லை.

27 நட்சத்திரங்களும் வான் வீதியிலே வரக்கூடிய விஷத்தின் தன்மை முறித்து பிரபஞ்சத்திற்குள்ளே அனுப்பினாலும் அதனுடைய வட்டப் பாதையில் எந்தக் கோள் செல்கின்றதோ அது இழுத்து அதைத் தனக்குள் சேர்க்கின்றது.

சனிக்கோளின் சக்தி அதிகமாகப் படரும் பொழுது நம் பூமி அந்தப் பகுதிக்குச் சென்றால் மழையாகப் பொழிகின்றது. அந்த சனிக்கோளிலிருந்து வரக்கூடியது புதன் கோளில் பட்டால் வெடிக்கும் தன்மையாக வருகின்றது.

1.வெப்பத்தில் நீரை ஊற்றினால் எப்படி வெடித்துச் சிதறுகின்றதோ அதைப் போன்று ஆகின்றது.
2.ஒவ்வொரு கோளுக்கும் சனிக்கோளின் சத்து எதிர்மறையாகிறது.

புதன் கோளில் சூரியன் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் அந்த வெப்பத் தணல்கள் இதற்குள் பட்ட உடனே வெடிக்கும் தன்மையாக வருகின்றது.

இதைப்போல சில பாறைகளிலே பட்டபின் நீர் அதிலே பட்டால் அது இஞ்சாத நிலைகள் ஏற்படும். இதைப் போன்று மற்ற கோள்களில் சனிக்கோளின் சத்து பட்டால் அதை வெறுத்து நீரின் தன்மையை வெப்பத்தின் தன்மை கொண்டு வெப்ப அலைகளாக மாற்றி விடுகின்றது.

நீரைக் கொதிக்க வைக்கும் போது அந்த நீரின் சக்தி மாறி கொதிப்படைந்த வெப்பத்தின் தணல் கொண்டு ஆவியாக மாறுகின்றது. இதைப்போலத் தான் சில கோள்களில் எதிர் நிலையாகின்றது.

இவைகள் எப்படியோ அது போன்று தான் நல்ல குணங்கள் கொண்டு நாம் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தாலும் பிறருடைய துன்பமான உணர்வுகளைக் கேட்டுணரும்போது உயிரிலே பட்டபின் நம் உணர்வுடன் கலக்கும் போது எதிர்மறையாகி வித்தியாசமான நிலைகள் உருவாகிறது.

நாம் நன்றாகப் பேசிக் கொண்டிருப்போம்… வியாபாரம் நன்றாக இருக்கின்றது. ஆனால் சங்கடப்பட்டவர்களை வேதனைப்பட்டவர்களுடைய குடும்ப கஷ்ட நஷ்டங்களைப் பற்றி அதைப் பேசி நாம் அதைக் கேட்டால் அந்த உணர்வோடு சரக்கை எடுத்துக் கொடுத்தால் போதும்.

அதற்குப்பின் சிறிது நேரம் கழித்துப் பார்த்தால்
1.நம் உடலில் என்னமோ மாதிரி இருக்கிறது கிறு கிறு என்று வருகிறது தும்மல் வருகிறது
2.உடலில் பளீர் பளீர் என்று குத்துவது போல் உள்ளது என்று நாம் சொல்லத் தொடங்குவோம்.

இந்த மாதிரி இருந்தால் அடுத்து சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால் அதற்கு முன் என்ன நடந்தது…? எப்படிப் பேசினார்கள்…? என்று நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்படிப் பேசியவர் வீட்டிலே பின் தொடர்ந்து சென்று அங்கே எந்தச் சூழ்நிலை இருக்கிறது…? என்று பாருங்கள். அந்தக் குடும்பத்தில் அவருக்குக் கஷ்டமாக இருந்திருக்கும். அவர் அதை நுகர்ந்து நம்மிடம் வெளிப்படுத்தியதால் நாம் வியாபாரத்தில் இருந்தாலும் நம்மை அறியாமலே இத்தகைய நிலை ஆகிவிடுகின்றது.

கோளின் தன்மை ஒன்றுக்குள் ஒன்று கலந்து தான் சுழல்கிறது. எதுவும் தனித்து வாழ்வதில்லை.
1.ஒன்றின் சக்தி எடுத்து மற்றது வாழ்வது போல மனிதராக நாம் இருந்தாலும்
2.வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் நாம் சந்திக்கும் பொழுது இத்தகைய நிலைகள் மாறிவிடுகிறது.

நேற்று இருந்த நிலை இன்று இல்லை. நேற்று மகிழ்ச்சியாக நாம் இருந்திருந்தாலும் இன்று துன்பப்படுபவரைப் பற்றி நாம் கேட்டால் அந்த உணர்வு நம்மை இயக்கத் தான் செய்யும்.

மகிழ்ச்சியாக இருந்து அங்கே செல்ல வேண்டும் இங்கே செல்ல வேண்டும் என்று எண்ணி இருப்போம். அன்று குண்டு வைத்தார்கள்… ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார் என்று கேள்விப்பட்ட பின் எல்லோருடைய நிலையும் பதட்டம் உருவாகி பயமான உணர்வுகளும் ஆகி ரோட்டிலே நடந்தால் என்ன ஆகுமோ…/ ஏதாகுமோ…? என்ற பய உணர்வு அதிகமாகி ஒருவருக்கொருவர் செல்லப்படும் பொழுது மனதிற்குள் சோர்வும் சஞ்சலமும் பயமும் ஏற்பட்டது என்பது அந்தச் சூழ்நிலையில் இருந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

சந்தர்ப்பத்திலே இந்த உணர்வுகள் நல்ல குணங்களுடன் சேர்க்கப்பட்டால் ஒவ்வொரு நொடியிலும் விஷத்தன்மையாக மாறுகிறது… நமக்குள் அது சேருகின்றது.

மனிதர்கள் நம்முடைய ஆறாவது அறிவு கொண்டு கசப்பையே நாம் சுவையாக மாற்றுகின்றோம். காரத்தையும் நாம் சுவையாக்குகின்றோம்.

இவ்வாறு உயர்ந்த சக்திகளை பெற்ற நாம்… மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் எல்லோரையும் சந்தித்துத் தான் ஆக வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருப்பார்கள். அவைகள் எதிர்மறையாக நமக்குள் மாறும்.

நமது நண்பர் நம்மை மகிழ்ச்சியாகச் சந்திக்கின்றார். ஆனால் அதே நண்பர் மற்றவரிடம் வேதனையும் கஷ்டத்தையும் கேட்டுணர்ந்து வருகின்றார். அந்த உணர்வான சத்து அவருக்குள் கலக்கின்றது.

அந்த நண்பருடன் நாம் பாசத்துடன் கலந்து உறவாடப்படும் பொழுது அவர் உடலில் உருப் பெற்ற அந்த உணர்வு நம்முடலில் கலந்து விடுகின்றது. அவர் உடலிலே அது அதிகமானாலும் இந்த உணர்வின் தன்மை பாசத்துடன் நாம் பார்க்கப்படும் பொழுது நமக்குள் வந்து விடுகின்றது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா.
1.சந்தர்ப்பம் இவ்வாறு இயக்கினாலும் நல்ல சந்தர்ப்பமாக அதை மாற்றி அமைப்பதற்குத் தான்
2.தியானமும் ஆத்ம சுத்தியும் உங்களுக்குத் தொடர்ந்து பயிற்சியாகக் கொடுத்துக் கொண்டு வருகின்றோம்.
3,மகரிஷிகளின் அருள் சக்தியை ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம் உடலுக்குள் சேர்த்துத் தீமையிலிருந்து நாம் விடுபட வேண்டும்.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.