
மக்களை வழி நடத்துபவர்களுக்கு காந்திஜி சொன்னது
அரசியல் நடத்துபவர்கள் அனைவரும் சற்று சிந்திக்க வேண்டும்.
நம் நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் நல்ல குணங்களை அவரவர்கள் உடலிலே சுதந்திரமாக இயக்கப்பட வேண்டும். நம் நாட்டு மக்கள் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உணர்வினை அனைவரும் வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
1.பகைமை கொண்டு ஒருவரை அழித்து விடலாம் என்று நினைத்தால் அழிக்கவே முடியாது.
2.அது வளருமே தவிர குறையாது. காந்திஜி அன்று அதைத்தான் சொன்னார்.
இந்த உடலைத்தான் அவன் வீழ்த்தினான்.. என் உணர்வை வீழ்த்த முடியாது. அவனுக்கு அந்தத் திறன் இல்லை. இந்த உடலை வீழ்த்தினாலும் அவன் அந்த உயர்ந்த நிலை பெறும் தகுதி பெற வேண்டும் என்று நாம் எல்லோரும் எண்ணுவோம் என்றால் அடுத்து நாம் செய்யும் தவறுகளில் இருந்து நாம் மீள்வோம் என்று காந்திஜி இதைத்தான் சொன்னார்.
ஒவ்வொரு நிலைகளிலும் நமக்குள் தெளிவான நிலைகள் வளர வேண்டும்.
1.ஒவ்வொரு மனிதனின் உயிரையும் கடவுளாக மதித்தால் வேண்டும்.
2.அந்தக் கடவுள் என்ற நிலை வரப்படும் பொழுது ஒவ்வொன்றையும் அறிந்துணர்ந்து செயல்படும் எண்ணங்களாக அங்கே உருவாக்க வேண்டும்
3.அன்று காந்திஜி நமக்கெல்லாம் வழிகாட்டியாக அதைத் தான் உணர்த்தி உள்ளார்.
திடீரென்று ஏதாவது ஆனால் அம்மா…! என்று அலறுவோம். ஆனால் அவர் என்ன செய்தார்…? சுடப்பட்டு குண்டு நெஞ்சிற்குள்ளே பாய்ந்தாலும் அந்த உணர்வின் வேகம் அவர் கொள்ளவில்லை.
அஞ்சிடும் உணர்வுகள் அவருக்குள் வரவில்லை… “ஹரே ராம் ஹரே ராம்…” என்று இதைத்தான் சொன்னார்.
கடைசி மொழியாக அவர் சொன்னது… அவன் செய்த அந்தச் செயலை மற்றவர்கள் யாரும் எடுத்து விட வேண்டாம்.
1.அவனுக்கு எந்தத் தீங்கும் செய்ய வேண்டாம்.
2.அந்தக் குணத்திலிருந்து அவனை மீட்டிடும் பக்குவத்தைக் கொண்டு வாருங்கள் என்று நான் காந்திஜி சொன்னார்.
Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்
Subscribe to get the latest posts sent to your email.