விவேகானந்தருக்கு இராமகிருஷ்ணர் “தொட்டுக் காட்டியது என்ன…?

Ramakrisna Paramahamsar

விவேகானந்தருக்கு இராமகிருஷ்ணர் தொட்டுக் காட்டியது என்ன…?

“கடவுளைப் பார்க்க வேண்டும்..,” என்ற மிகுந்த வேட்கை கொண்டவர் விவேகானந்தர்.

தான் கல்விச் சாலையில் படித்தாலும் அன்று பக்தி மார்க்கங்களில் உள்ள நிலைகள் கொண்டு கடவுளை அறிய வேண்டும் என்று அவருடைய வீரிய உணர்வுகள் கொண்டு பல நிலைகள் எடுத்தாலும் அவருக்குச் சரியான “விடை” கிடைக்கவில்லை.

பித்தரைப் போன்று இருக்கும் இராமகிருஷ்ண பரமகம்சரிடம் செல்பவர்களுக்குத் தக்க விடைகள் கிடைக்கின்றது என்று அறிந்த பின் அவரை அணுகுகின்றார் விவேகானந்தர்.

கடவுள் என்பது எப்படி இயக்குகின்றது என்று அவருக்குள் (பரமகம்சர்) அறிந்த சக்தியின் தன்மை கொண்டு

1.விவேகானந்தர் தன்னைத் தேடி வருகின்றார் என்பதை உணர்ந்து
2.தான் படுத்திருக்கும் இடத்திற்குக் கீழ் பாய்க்கு அடியில் முட்களையும் வேதனைப்படுத்தக்கூடிய சில பொருள்களையும் போடுகின்றார் இராமகிருஷ்ணர்.

இதை உற்றுப் பார்த்தபின் விவேகானந்தர் கேட்கின்றார். இது… என்ன..?” முட்கள் போட்டிருக்கின்றது.., இதன் மேல் உட்கார்ந்திருந்தால் வலிக்கவில்லையா…!

அப்பொழுது பரமகம்சர் சொல்கின்றார்.

1.(எனக்கு) “வலிக்குமே…” என்று நீ நினைக்கின்றாய். நான் இதைப் பார்க்கவில்லை…! அதனால் எனக்கு வலிக்கவில்லை…!
2.எனக்கு வலி தெரியவில்லை என்கிறார்.
3.அதன் மேல் எண்ணத்தைச் செலுத்தினால் தான் “எனக்குள் அது இயக்கும்” என்று விவேகானந்தருக்கு உணர்த்துகின்றார்.

பின் அவரைத் தொட்டுக் காட்டுகின்றார். அவர் உடலைத் தொட்டபின் அந்த உணர்வுகள் விவேகானந்தருக்குள் பாய்ந்தபின் சில உண்மையின் நிலைகளை உணர்கின்றார்.

உனக்குள் நின்று இந்த உணர்வின் செயல்கள் எவ்வாறு இயக்குகின்றது…? “இது தான் கடவுள்”.

1.என்னை முள் குத்தும் என்று நீ எண்ணுகின்றாய்
2.அந்த உணர்வின் சக்தி உன் உயிரின் தன்மை
3.அது உள் நின்று அது உணர்த்துகின்றது.
4.அந்த உணர்த்திய சக்தி உனக்குள் வந்த பின் “வேதனைப்படுவேன்.., என்று உணர்த்துகின்றது”. இது தான் கடவுள்.
5.நீ எண்ணியது எதுவோ அந்த உணர்வுக்குத் தக்கவாறு உள் நின்றே அது உணர்த்துகின்றது.
6.இவ்வாறு தான் கடவுள் அது செயலாக்குகின்றான் என்ற நிலையை அன்று விவேகானந்தருக்குத் தெளிவுபடுத்திக் காட்டினார் இராமகிருஷ்ணர்.

கடவுளின் செயலாக்கங்கள் – உயிர் எவ்வாறு உள் நின்று இயக்குகின்றதோ அதைப் போல எனக்கு வேதனை என்று எண்ணும் பொழுது இந்த உணர்வின் தன்மை உனக்குள் நின்று வேதனை என்ற உணர்வை உணர்த்துகின்றது.

1.கடவுளின் இயக்கம் இதுதான்.
2.கடவுளைக் கண்ணால் பார்க்க முடியாது.

உனக்குள் இருந்து உயிர் இயக்கினாலும் அவனை நீ காணமுடியவில்லை. உனக்குள் பல கோடி குணங்கள் இருப்பினும் அதனை நீ காண முடியவில்லை.

நினைவின் ஆற்றல் வரும் பொழுது தான் உனது ஆன்மாவாக மாறுகின்றது. நுகர்ந்தபின்தான் உன் உயிரின் இயக்கங்கள் இவ்வாறு இயக்குகின்றது என்று தெளிவுபடுத்தினார் இராமகிருஷ்ண பரமகம்சர்.

நமது உயிர் கடவுளாக நின்று இயக்கினாலும் நாம் எந்தெந்த குணங்களை எடுக்கின்றோமோ அதுவே நமக்குள் கடவுளாக நின்று நம்மை இயக்குகின்றது.

இந்தப் பேருண்மையைத்தான் அன்று இராமகிருஷ்ண பரமகம்சரும் எடுத்துச் சொன்னார்.

அதன் பின் தான் அப்பொழுது அவர் உணர்த்திய உணர்வின் தன்மை கொண்டு தான் அன்று விவேகானந்தர் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதித்தார்.

Leave a Reply