நாம் எண்ணியபடி நடப்பதும் நாம் எண்ணாமலே நடப்பதும் எதனின் தொடர் கொண்டு செயல்படுகிறது…? ஈஸ்வரபட்டர்

நாம் எண்ணியபடி நடப்பதும் நாம் எண்ணாமலே நடப்பதும் எதனின் தொடர் கொண்டு செயல்படுகிறது…? ஈஸ்வரபட்டர்

 

1.மொழி அமைப்பின் கோர்வையில் பொருள்களின் நுட்பங்களைக் கற்பவரும்
2.கற்றறிந்து… பொருள் புரிந்து… அறிந்து… தெளியும் வகைகள் புலப்பட “எழுத்தில் வடிக்கும் ஆசானும்…”
3.தன்னுடைய அறிவியல் தொடர்பில் தான் பெற்ற அனுபவ ஞானத்தையும் இணைத்தே
4.ஏட்டின் வாயிலாக வெளிக் கொணர்ந்து அளித்த தன்மைகளில்
5.கற்றுக் கொண்ட அறிவு… கற்றவர் அளித்திட்ட பிற பட்டங்கள் (GRADUATION) இவை எல்லாம் எதற்குத் துணை போனது…?

கற்ற கல்வியைப் பறைசாற்ற பெரும் விவாத மேடையன்றோ அமைத்து விட்டான் இன்றைய மனிதன்…! ஆய்ந்து அறிதல் என்பது எண்ணத்தின் செயல்பாட்டில் எந்த நிலை பெற்றுள்ளது..?

எண்ணத்தின் செயல்பாடு தான் “நான்…” என்றால் வெறும் உலக நடைமுறைகளின் புகழ் தேடிச் செல்லும் நிலைக்குத் தான் சென்று விட்டது இன்றைய “அறிவு…”

எண்ணத்தின் செயல்பாடு அனைத்தும் ஆத்மாவின் சிந்தனை வசமானால் ஆத்மாவா…. நான் என்பது…?
1.எண்ணத்தின் அலையே சுவாசமாகி…
2.சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி…! என்று பாடுகின்றோம்.

ஜீவ பிம்ப சரீரம் கொண்ட பிறகு நான் என்பது யார்…? என்ற முயற்சியாக வினா எழுந்துள்ளது. எண்ணத்தின் செயல்பாட்டிலும் பொருள் உள்ளது. அது மாத்திரம் “நான்” ஆகிவிடாது.

சரீரம் பெற்ற நிலையில் அன்றாடம் செயல் கொள்ளும் காரண காரியங்களில் பஞ்சேந்திரியங்கள் செயல்படும் தொழிலுக்கு “நொடிக்கும் குறைவான நேரத்தில்…” மனிதர்கள் எத்தனை எத்தனை செயல்கள் புரிகின்றார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உண்ணுவதும்… உறங்குவதும்… புறத் தொழில் புரிவதும்… கழிவுகளை நீக்குவதும்… பார்த்தல்… கேட்டல்… நுகர்தல்… சுவைத்தல்… ஸ்பரிசித்தல்… அனைத்துக் காரியங்களும் தொழிற்படு வினையாக
1.எண்ணத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட அந்தக் காரியங்கள்
2.எண்ணாமல் என்பதே… இயல்பாக… “இயற்கையாகச் சரீரத்தின் நடைமுறைச் செயல் அனைத்திலும்…”
3.ஆத்மாவின் தொடர்பின்றி நடந்தனவா…?

சரீரத்தின் உட்பொருளாகச் செயல்படும் நாடிகளின் சுவாச அலைகளில் எண்ணம் கொண்டு செயல்பட்டது எது…?

எண்ணத்தின் அலையே சுவாசமாக… சுவாசத்தின் உணர்வே ஆத்மாவாகி… என்ற அந்த எண்ணச் செயல்பாட்டின் மூலத்தையே அறிந்து கொள்ள வேண்டும்.

சுவாசத்தின் நல்வினைச் செயல்பாடே ஒளி தான்.

“நான்…” என்பதே எண்ணத்தின் செயல்பாடு என்றால் அதைத் தெரிந்து கொண்ட பின் அங்கு ஆத்மாவைக் கைக்கொள்ள வேண்டும்.
1.நாம் ஆத்ம பலம் பெற வேண்டும்..!” என்று
2.உரைத்த சொல்லின் உண்மையை உணர்ந்து பார்க்க வேண்டும்.

ஆத்மா பலம் பெற்று விட்டால் உள் நிறைந்த சக்தி அந்த மூலச் சக்தியுடன் கலந்து செயல்பட… மூல சக்தியாகச் சக்தி பெற்ற ஆத்மா
1.தான் கொண்ட உயிருடன் இணைந்து
2.பேரின்ப லயத்தில் திளைத்துக் கலந்துவிடும் சூட்சமம் தான் “நான்…!”

இப்பொழுது நான்…! என்பது யார் என்று புரிந்ததா…?

கை வலி… கால் வலி… மூட்டு வலி… தலை வலி… மேல் வலி… இவை வரக் காரணமும் அதை நீக்கும் வழி முறையும்

கை வலி… கால் வலி… மூட்டு வலி… தலை வலி… மேல் வலி… இவை வரக் காரணமும் அதை நீக்கும் வழி முறையும்

 

நாம் கோபமோ ஆத்திரமோ படுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி அந்த வேதனையான நிலைகளில் சுவாசித்துக் கொண்டிருக்கும் பொழுது கடினமான ஒரு பொருளை அந்த வேதனையுடன் தூக்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம்.

1.அப்பொழுது சுவாசிக்கும் இந்த உணர்வுகள் உடல் முழுவதற்கும் பாய்ந்தவுடன்
2.இந்த உடலை மடக்கிய நிலைகள் கொண்டு பிராணவாயு செல்லும் பொழுது இங்கே தேங்கிச் செல்லும்.

மூட்டிற்கு மூட்டு அது தேங்கிச் செல்லும் பொழுது அந்த மூட்டினுடைய நிலைகளில் அவயங்கள் வேலை செய்யும் பொழுது, அந்த வேதனையான நிலைகள் வந்தவுடன் அந்த வேதனையான விஷமான உணர்வுகள் அங்கங்கே தேங்கிவிடும்.
1.அது சுவாசத்திற்குள் சென்று கரைக்கும் நிலையை இழந்து
2.அது ஓடிச் சென்று வெளியிலே வரும் முன்பாகவே – நாம் சுவாசிப்பது உள் செல்வதனாலே,
3.இது ஒவ்வொரு இடத்திலும் தேங்கிக் கொள்ளும்.

இதனால்தான் சிலருக்கு மூட்டு வலி ஏற்படுகின்றது.

சிலருக்குத் தொழில் நிலைகளில் வேலைகள் செய்யும் சந்தர்ப்பத்தில் எல்லம் இந்த வேதனையை எடுத்தார்கள் என்றால் அதற்குத் தகுந்த மாதிரி மூட்டுகளில் வலி வரும்.

நமது பூமி சுழலும் பொழுது விண்வெளிகளிலே இருக்கக்கூடிய காந்த அலைகளுடன் மோதுகின்றது. இதைப் போன்று நாம் எந்தக் குணத்தின் தன்மை கொண்டு உணர்வுகளைச் சுவாசிக்கின்றோமோ அது உயிரிலே பட்டு எண்ணங்களாக இயங்குகின்றது.

அப்படி இயக்கினாலும் அந்த வேதனையான உணர்வுகளை நாம் சுவாசித்து அது நம் உடலுக்குள் செல்லும் பொழுது அந்த வேளைகளில் கூர்ந்து செயல்படும் பொழுது கவன நிலைகளில் எடுக்கப்படும் பொழுது கண் குத்தல்… மண்டைக் குத்தல்… போன்ற நிலைகள் வரும்.

அதைப் போன்று சுவாசத்தினுடைய நிலைகள் சிந்தனையினுடைய நிலைகளை அதிகமாகச் சேர்த்தால் மூக்கு துவாரத்திற்குள் சில நிலைகள் வரும்.

அடிக்கடி சிந்தனை செய்து கொண்டு குனிந்திருந்து சில வேலைகள் செய்து கொண்டிருந்தால் மடக்கிய நிலைகள் கொண்டு பிடரியில் பிடரி சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

சில நேரங்களில்… ஒரு புறம் சாய்ந்திருந்து இடைஞ்சலான நிலைகளில் நாம் இருந்தால் நாம் சுவாசிக்கும் பிராணவாயு செல்லும் பொழுது சப்பைகள் மூட்டுகளிலே போய் இந்த வேதனையைக் கொடுக்கும். சாதாரணமாக இதை நிவர்த்தி பண்ண வேண்டுமென்றால், வைத்தியர்களால் கொஞ்சம் சிரமம்தான்.

ஏனென்றால்…
1.நரம்பியல்களிலே இருக்கக்கூடிய நிலைகள்
2.எலும்புகளிலே ஒட்டியிருக்கக் கூடிய காந்தத்தினுடைய சக்தி
3.நாம் எடுக்கக்கூடிய இந்த அமிலத்தின் தன்மை (ACID POWER) நமக்குள் ஈர்க்கப்படும் பொழுது
4.அதே சமயத்தில் நாம் பிராண வாயுக்களை எடுத்து அதன் ஓரத்திலே இயக்கித்தான்
5.அதற்குள் இருக்கக்கூடிய வெப்ப காந்த அணுக்களை இயக்கச் செய்து நரம்பியலின் தன்மைகளை இயக்க வேண்டும்.

அப்பொழுது அந்த நரம்புகளில் விஷத் தன்மைகள் பாய்ந்து விட்டால் அதே இடத்தில் அது துடித்துக் கொண்டு ஒரு குறிப்பிட்ட இடங்களில்தான் அது வேலை செய்யும். இதைப் போன்ற நிலைகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

சில பேர் கவலைப்பட்டுக் கொண்டே நின்று கொண்டிருந்தால் வேதனையை அதிகமாக உண்டாக்கும். கை நிமிர்த்துவதே கஷ்டம்… பிடரியில் அதிகம் வலி ஏற்படும்.

எந்த அளவிற்குக் குனிந்து கொண்டிருந்தார்களோ அதற்குத்தகுந்த மாதிரி விஷங்கள் படர்ந்திருக்கும். நிமிர்ந்தவுடன் வலி அதிகமாக இருக்கும்.

வேதனையும் கவலையும் கூடிய நிலையில் நாம் சுவாசித்து அந்த பிராண வாயுக்கள் செல்லும் பொழுது…
1.அதற்குள் நாம் சுவாசித்த உணர்வின் விஷத்தன்மைகள்
2.நம் உடலில் எல்லா இடங்களுக்கும் போய்,
3.எல்லா இடத்திலும் பாய்ச்சி அவற்றை இயங்கச் செய்யும்.

இதையெல்லாம் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள்.

இதை நாம் வெல்ல வேண்டுமென்றால் நம் எண்ணத்தினாலேதான் எடுக்க வேண்டும். எண்ணத்திற்கு வலு கூட்ட வேண்டுமென்றால் தியானமும் ஆத்ம சுத்தியும் தேவை.

1.ஓ…ம் ஈஸ்வரா… என்று அழுத்தமாக நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி,
2.“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்” என்ற சுவாச உணர்வுகளை
3.நம் உடலுக்குள் பாய்ச்சச் செய்வதே ஆத்ம சுத்தி.

ஆத்ம சுத்தி செய்துவிட்டு நமக்கு எங்கெல்லாம் நோவு இருக்கின்றதோ அந்த இடத்தில் “கூர்மையான நிலைகளில், நினைவைச் செலுத்தி” மகரிஷிகளின் அருள் உணர்வுகளைப் படரச் செய்யுங்கள்.

அந்த வேதனையை உண்டாக்கும் உணர்வின் சக்திகள் மறைந்து எங்கள் உடலிலே மகரிஷிகளின் அருள் ஒளி வளர வேண்டும் என்று சிறிது நேரம் நீங்கள் தியானித்தால் போதும்.

உங்கள் உணர்வின் சக்தியைக் கொண்டு நீங்கள் ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டுமென்று உடலில் நோவு வரும் இடங்களில் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்த நோவின் தன்மை குறையும். மகரிஷிகளின் அருள் சக்தி அந்த இடத்திலே அதைக் கரைக்கும்.

இவ்வாறு தியானமும், ஆத்ம சுத்தியும் செய்து வந்தால்… வாத நோயோ ஆஸ்த்மாவோ குஷ்ட ரோகமோ கேன்சர் நோயோ இருந்தாலும் அதை உங்களால் நிவர்த்தி செய்ய முடியும்.

ஒருவருக்கொருவர் பதிவாகிக் கொள்ளும் உணர்வின் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

ஒருவருக்கொருவர் பதிவாகிக் கொள்ளும் உணர்வின் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

 

உதாரணமாக ஒரு இடத்தில் விபத்து நடந்தது என்றால் அதை ஒரு மனிதன் கண்ணுற்றுப் பார்த்த பின் நண்பரிடத்தில் இதைச் சொல்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த மாதிரி மோதி விபத்தாகி விட்டது.. அடிபட்டு உடல்கள் சிதைந்து விட்டது…! என்று அவன் பார்த்த உணர்வுகளைச் சொல்லப்படும்போது அதை நுகர்ந்து பதிவாக்கி விட்டால் இது நம் ஆன்மாவாகிறது.

இரவு புலனடங்கித் தூங்கும் பொழுது…
1.நாம் எங்கேயோ சென்ற மாதிரியும்
2.அங்கே விபத்தான மாதிரியும்
3.யாரோ துரத்துவது மாதிரியும் போன்று கனவுகளாக வருகின்றது.

இது எல்லாம் நமக்குள் பதிந்த உணர்வுகள் உடலுக்குள் சென்ற பின் நுண்ணிய உணர்வுகளாக இயக்கி நாம் புலனடங்கித் தூங்கினாலும் அந்த உணர்ச்சிகள் நம்மைத் தட்டி எழுப்புகின்றது… அறியச் செய்கிறது…!

ஆனால் விடிந்தவுடன் இதை எல்லாம் நினைவுக்கு வரும் போது கலக்கம் வருகின்றது. காரணம் நாம் இரவிலே நுகர்ந்த உணர்வுகள் அது பதிந்து தீமையான அணுக்களாக வளர்ச்சி அடைகின்றது.

நம்மை அறியாது வரும் கனவுகள் எல்லாம் இப்படித்தான் இயக்குகிறது. ஒரு சிலருக்கு இதனால் சில தீமையின் விளைவுகளும் ஏற்படக் காரணமாகின்றது.

இது போன்ற உண்மையின் இயக்கத்தை நீங்கள் அறிய வேண்டும்… இந்த மனித உடலில் அறியாது வரும் தீமைகளை அகற்ற வேண்டும் என்பதற்குத்தான் நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றிய அருள் ஞானிகளின் உணர்வினை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாக்குகின்றோம்.

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்தும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் வரும் சக்திகளை நாங்கள் பெற வேண்டும்…! என்று ஏங்கித் தியானித்தால் இந்த வாழ்க்கையில் அறியாது வரும் தீமைகளை அகற்றி நஞ்சின் தன்மைகளை மாற்றிடும் நிலை வருகின்றது.

அதிகாலை துருவ தியானத்தின் மூலம் தொடர்ந்து நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

கடவுளின் அவதாரம் வராகன் என்று காட்டியதில்…
1.நாற்றத்தைப் பிளந்து நல்ல உணர்வினை நுகர்ந்து மனிதனாக எப்படி உருவாக்கியதோ
2.மனிதனான பின் நச்சுத் தன்மைகளை எல்லாம் நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றிய
3.அருள் மகரிஷிகளின் உணர்வை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் சேர்த்து
4.எதிர்காலத்தில் வரும் நச்சுத்தன்மையை நீக்கிடும் அந்த அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும்.

திரும்பத் திரும்பச் சொல்கிறேன் (ஞானகுரு) என்றால் உங்கள் வாழ்க்கையில் இருளினை அகற்றி உணர்வினை ஒளியாக மாற்றும் அந்தத் திறன் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.

உங்கள் செவிகளில் இப்பொழுது பதிந்தாலும் ரேடியோ டி.வி. அலைகள் போன்று இந்த அருள் உணர்வுகள் பரவுகின்றது.

உங்கள் நண்பரிடத்தில் சொன்னால் அவருக்குள்ளும் இது பதிவாகிறது. அவரும் சிந்தித்து அந்த உணர்வினை நுகர்ந்து வரும் பகைமை உணர்வினை வளராது தடுக்க இது உதவும்.

அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறத் தியானிப்போம்… தவமிருப்போம்.

தன் உயிராத்மாவுடன் உரையாடுவதே உண்மையான மௌனம் – ஈஸ்வரபட்டர்

தன் உயிராத்மாவுடன் உரையாடுவதே உண்மையான மௌனம் – ஈஸ்வரபட்டர்

 

யாம் கூறி வரும் தியானத்தின் வழியாக “மௌனமான நிலை கொண்டே அருள் சக்தி பெற்று வளர்த்திடுங்கள்…!” என்று உணர்த்தி வருவதெல்லாம் உயிராத்மாவின் சக்தி வலுவைக் கூட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.

ஒவ்வொரு உயிராத்மாவும் பெற்ற தனித்துவத் தன்மையில் மேலும் வளர்ச்சி கொள்ளத் தான் கடைப்பிடிக்கும் தியானமாகத் தன் உயிராத்மாவை எண்ணி…
1.ஆத்ம பலம் பெற வேண்டும் ஈஸ்வரா…! என்ற சிந்தனையின் வசமாக
2.ஒளிப் பிரவாகத்தினுடைய தொடர் நிலை பெறத் தான் “மௌனம்…”

மௌனம் என்றால் என்னப்பா…?

1.ஆத்மாவை எண்ணியே.. சக்தி வலுக் கூட்டும் சம்பாஷணையே (உரையாடல்) மௌனம்…!
2.மௌனம் என்றால்… பேச்சு என்ற வாய்ச் சொல் உரை அல்ல…!

கல்லாவின் பால் என்று கூறுவதெல்லாம் ஆத்மா பெறும் சக்தியின் பரிபூரணத்தைத்தான்…!
1.ஏட்டறிவின் வழி கற்றவர் அன்றி… படிப்பறிவில்லாத எவரும்…
2.தன்னை எண்ணிடும் சிந்தனையின் வசமானால் கலலா அறிவு சித்திக்கும்.

கல்லா அறிவின் தொடரில் அண்ட சராசரங்களையும் அறிந்து கொண்டே “தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும்…” எண்ணத்தின் செயல்பாட்டிற்கு வர வேண்டும்.

அதற்குச் சக்தி ஊட்டிடும் செயலாக…
1.அந்தச் சக்தியின் வளர்ப்பாகத் தன்னை வளர்த்து
2.ஆதி சக்தியின் சக்திக்கே சக்தியூட்டி
3.அதனுடன் ஒன்றிடும் செயல்பாட்டின் நிகழ்வாக ஆக்கம் பெற வேண்டும்.

உயிரணு குழந்தையாகப் பிறப்பிற்கு வந்த பின்… தன் முன் தொடர் அறியாத் தன்மையில் அதே உயிரணு எண்ணம் கொண்டு ஆத்மாவாகும் சூட்சமங்களை யார் விளக்கிடுவார்…?

சகலத்திலும் சகலமாகக் கலந்துள்ள அண்டம்… பால்வெளி எங்கும் வியாபித்துள்ள… ஒளி காந்த சக்தியாக நிறைவு பெற்றுள்ள “மூல சக்தி…!” அதை அறியத்தானே சப்தரிஷிகளும் முயலுகின்றனர்.

1.ஆதி சக்தியின் சக்தியாக ஒன்றிச் செயல் கொள்ளும் சப்தரிஷிகளின்
2.ஒலி ஒளியாகச் செயல் கொள்ளும் சூட்சமங்களை எல்லாம்
3.மெய் ஞான விழிப்பறியும் “ஞானச் செல்வங்கள்” அறிந்து கொண்டு
4.என் நிலைக்கு உயர்ந்து வாருங்கள்…! என்றே அழைக்கின்றேன்.

ஆத்மாவாக உதித்திடும் ஆதி சக்தியின் மூல சக்தி உயிரணுவின் எண்ணத்தின் ஈர்ப்பில் வலு வீரியத்தின் தன்மைக்கொப்ப ஒளி காந்தமாக ஒன்றி உயிராத்மாவாகப் பிறப்பிற்கு வந்திட… எண்ணமே வலுவாகப் பிறந்த பின்… தன்னை உணர்ந்து “நான் என்பது யார்..?” என்ற வினாவில்
1.கற்ற கல்வி உரைக்கின்றதே எண்ணத்தின் செயல்பாடு என்றால்…
2.அந்த எண்ணத்தில் எது செயல்பட வேண்டும்…?

ஆத்மாவின் பலம் பெற வேண்டும் என்ற எண்ணத்தின் செயல்பாட்டில்
1.ஆத்மா என்பது யார்…? என்ற நிலையில்
2.உயிர் மீண்டும் பிறப்பிற்கு வராத் தன்மை செயல் கொள்ள வேண்டும்.

மூலச் சக்தியின் பிம்பமாம் ஆத்மா வலுக் கொண்டு உயிரணுவில் ஒன்று கலந்து சூழ்ந்தே “பிரகாசிக்கும் ஜோதியாக ஆக வேண்டுமப்பா…!”

உங்களைக் காக்க வேண்டும் என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம் – ஞானகுரு

உங்களைக் காக்க வேண்டும் என்பதற்குத்தான் உபதேசிக்கின்றோம் – ஞானகுரு

 

இன்று பார்க்கின்றோம்… விஞ்ஞான அறிவால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்று கம்ப்யூட்டரைத் தயார் செய்து கொண்ட பின் பூமியிலிருந்து வரும் எதிர் அலைகள் அந்த எக்கோ (ECHO) வருவதை அளந்தறிகின்றனர்.

கம்ப்யூட்டர் சாதனத்தில் நாடாக்களில் இந்த விஷமான உணர்வின் (கெமிக்கல்) ஓலி அலைகளைப் பதிவாக்கி வைத்து… அதன் முகப்பில் இருக்கக்கூடிய நிலைகள் (PROBE) பூமியை உற்று நோக்கிக் காட்டப்படும் பொழுது… பூமிக்குள் இருக்கும் நிலைகளைக் காட்டுகின்றது.

அதாவது…
1.இவர்கள் பாய்ச்சும் உணர்வின் தன்மை அந்த எலக்ட்ரிக்கின் உணர்வின் அதிர்வுக்குத் தக்கவாறு
2.அதன் நிலைகளில் அந்த மணத்தையும் உணர்ச்சியின் வேகங்களையும் கண்டறிந்து நாடாக்களில் பதிவு செய்கின்றனர்.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த மிருகங்களின் உடல்கள் மண்ணுடன் மண்ணாக மறைந்திருக்கும் நிலைகளையும்… பாறைகளாகக் கூட ஆன நிலைகளையும் கண்டறிந்து… அங்கே தேடிச் சென்று குறைந்தது 100 அடிக்குக் கீழ் அமிழ்ந்து கிடப்பதைத் தோண்டி எடுத்து அந்த உருவத்தையே கண்டறிகின்றனர்.

உடைந்த எலும்புகளை ஒன்று சேர்க்கின்றான். அப்படிச் சேர்த்துக் கொண்ட பின் இதை கம்ப்யூட்டரில் இணைத்து அதில் வரும் அலைகளை எடுத்து
1.அதனுடைய தசைகளின் அமைப்பையும் அதன் உணர்ச்சியின் செயலாக்கங்களையும்
2.வாழும் போது அந்த மிருகம் எதை எல்லாம் உணவாக உட்கொண்டது என்றும்
3.உணர்வின் அதிர்வுகளைக் கண்டு அந்த மிருகத்தின் உருவத்தையே கம்ப்யூட்டர் காட்டுகின்றது.
4.விஞ்ஞான உலகில் இதைப் பார்க்கின்றோம்… விஞ்ஞானம் இன்று அதை நிரூபிக்கின்றது.

முந்தைய காலங்களில் எல்லாம் திருடர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் கைரேகை பட்டால் அதை வைத்துத்தான் பார்ப்பார்கள். ஓரே கைரேகை உள்ளவன் என்று இருந்தாலும் அந்த ரேகைகளைக் கண்டு ஒத்துப் பார்த்து “இவன் தான்…” என்று அது கண்டுணர்ந்தார்.

இப்பொழுது அதுவெல்லாம் இல்லை…! எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையைக் கொண்டு வந்து விட்டார்கள்.

ஓரு கைரேகை பட்டால் அவனின் உணர்வின் அதிர்வுகள் அங்கே பதிவாகி இருக்கின்றது என்று அதை வைத்துக் கம்ப்யூட்டரில் அந்த அதிர்வினைப் பதிவாக்கி ஆயிரம் மடங்கு கூட்டுகின்றனர்.

1.அப்பொழுது இந்த உணர்வின் ஒளிக்கற்றைகள் மோதப்படும் போது
2.அந்த மனிதன் எப்படிப்பட்ட ரூபம் உள்ளவன்…?
3.அவனுடைய குணங்கள் என்ன…? எப்படி இருக்கின்றான்..? என்று அவனின் ரூபத்தையே காட்டுகின்றது கம்ப்யூட்டர்.

இப்படி எல்லாம் நுண்ணிய நிலையில் விஞ்ஞான அறிவு இன்று காட்டிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் நாம் எவ்வாறு வாழ்கின்றோம்…? என்றால் இன்னும் அறியாமையில் தான் வாழுகின்றோம்…!

1.மனிதனுக்கு மனிதன் தாக்கிக் கொல்லும் உணர்வு தான் வருகின்றதே தவிர
2.மனிதனைக் காக்க வேண்டும்… தன்னைக் காக்க வேண்டும் என்ற உணர்வு இம்மியளவும் வரவில்லை…
3.இயந்திரத்தின் துணை கொண்டு எல்லாமே செயல்பட்டாலும் அந்த இயந்திரம் கூட ஒன்றைக் கட்டுப்படுத்துகின்றது (CONTROL)
4.ஆனால் மனிதன் தன் மனதைக் கட்டுப்பபடுத்த முடியாதபடி
5.பிறரின் உணர்ச்சியின் தன்மை கொண்டு தவறுகள் செய்வது… கொலைகள் செய்வது… தன் இச்சைக்குச் செயல்படுத்துவது
6.தான் இன்பத்தைப் பெறுவதற்காக மற்றவருக்குத் துன்பத்தை ஊட்டுவது என்று
7.இது போன்ற நிலையில்தான் இந்த உலகம் இருக்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து மீளுவதற்குத் தான் இந்த உபதேசத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம் (ஞானகுரு).

ஏனென்றால் யாம் சொல்வது சாதாரணமானது அல்ல. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த மெய் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கி விட்டால் அது உங்களைத் தெளிவுபடுத்தும் சக்தியாக வரும்.

உங்கள் உயிர் எலக்ட்ரிக் என்று இயக்கம் கொண்டது. அதிலே இந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகளை இணைக்கப்படும் போது
1.வாழ்க்கையில் எதிர்ப்படும் உணர்வுகளில்
2.இது பிழை கொண்டது… இது தேவையற்றது…! என்று அதை நீக்கி
3.உங்களைக் காக்க இது உதவ வேண்டும் என்பதற்குத்தான் இதைப் பதிவு செய்கின்றேன்

உங்கள் கவனத்தைத் திருப்பாது உற்று நோக்கி இந்த உபதேசத்தின் உணர்வினை ஆழமாகப் பதிவு செய்து கொள்ளுங்கள். இன்றைய விஞ்ஞான உலகிலிருந்து உங்களைக் காத்திடும் சக்தியாக இது வரும்.

காயகல்பம் பற்றிய சூட்சமங்கள் – ஈஸ்வரபட்டர்

காயகல்பம் பற்றிய சூட்சமங்கள் – ஈஸ்வரபட்டர்

 

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றிக் கொண்டும் பால்வெளியில் உள்ள மற்ற கோள்களின் தொடர்பு கொண்டே பல சக்திகளை ஈர்த்துச் சமைத்துச் சுவாச அலைகளாக வெளிவிடுகின்றது.

பூமி சூரியனைச் சுற்றி வரும் நிலையில் நெருங்கியும் விலகியும் சுழன்றோடும் நீள் வட்டத் தொடரில் பூமியில் ஏற்படும் இயற்கை மாற்றங்களை “பருவ காலங்கள்…” என்று அன்றே ஞானிகள் கண்டுணர்ந்தார்கள்.

ஒவ்வொரு பருவ காலத்தையும் அந்த இயற்ககையின் செயல் நிகழ்வுகளைத் தன் சரீர உணர்வு கொண்டு அனுபவ ஞானத்தால் உணர்ந்து கொண்டார்கள்.

அவ்வாறு உணர்ந்து கொண்ட அந்த இயற்கையின் சூழலில்
1.அண்டத்தின் அதி உன்னதத் தன்மைகள் அனைத்தையும்
2.சமுதாய நல அமைப்பிற்கு நல் வாழ்க்கை நெறிகளாக
3.பல வழிகளில் பேருண்மைகளை நமக்குக் காட்டினர் அன்றைய மகரிஷிகள்.

வானியல்… புவியியல்… உயிரியல்… என்றே மூன்று வகைக் கோணத்திலேயும் இயற்கையின் செயல்பாட்டை அவர்கள் உணர்ந்து தெளிந்தனர்.

அதே சமயத்தில் அந்த வானியல் தன்மைகள் பூமியின் தொடர்பில் ஏற்படுத்திக் கொள்ளும் கிரியைகள் அனைத்தையும் தன் சரீரத்தில் கண்ட பொழுது உயிரியல் தத்துவமாக அதை உலகிற்கு உணர்த்திக் காட்டினார்கள்.

1.அறிந்ததை அறிந்ததாக எண்ணப் பெட்டகத்தினுள் வைக்கப்பட்டு
2.மௌனம் என்ற பூட்டால் பூட்டப்பட்டு
3.உணர்ந்து கொண்ட உணர்வின் அனுபவ ஞானங்கள் அனைத்தும் (காலத்தால்) மறைக்கப்பட்டதால்
4.வாழ்க்கையின் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டிய பல செயல்களை அவர்கள் உரைத்திருந்தாலும்
5.இன்றைய சமுதாயத்தின் எண்ணங்களால் மாற்றமே காணப்படுகின்றது.

காயகல்பத் தொடருக்கு உணர்த்தப்பட்ட மண் வள குணத் தன்மைகள் மறைபொருளாகவே இருக்கட்டும்…!

1.வியாழன் கோளிலிருந்து வெளிப்படும் அலைகளைப் பூமி அதிகமாக ஈர்த்திடும் காலகட்டங்களில்
2.பருவ காலத்தின் சுழற்சியில் குளிர்விப்பு குணத் தன்மைகளும்
3.கார்த்திகை மாதம் தொடங்கி… மார்கழியில் செயல் கூடி.. தை மாதத்தில் உருவாகும் “உவர் அமில அடர்வாக…”
4.பூரணச் சந்திரனின் “தண் ஒளி…” (குளிர்ச்சியான) கலந்திடும் செயலின் உருக்கோலமும் வண்ணமும் காட்டி
5.இரவுக் காலங்களில் பூமியின் வெக்கையால் மண் நெகிழ்ந்தே இருக்கும் நிலையில்
6.அமில அடர்வின் குணம் லேசான தன்மையாக வெளிப்படும் செயலை அறிந்து கொள்ள வேண்டும்.
7.ஆகாய நீர் உரித்தே எடுத்துக் கொள்ளவும்
8.சூரிய வெப்ப அலையில் அந்த நீரினுள் மறைத்துக் கொள்ளவும்
9.சுடாத நெருப்பில் காய்ச்சிக் கொள்ளவும்
10.உயர் ஞானத் தெளிவாகத் தெரிந்து கொள்ளவும்………

இந்த உண்மைகளைக் கண்டுணர்ந்து அனுபோக மருத்துவ முறைப்படி இதையே குரு என்ற பெயர் நாமமிட்டு குருக்கோளின் (வியாழன்) தொடர்பினால் பெற்றதையே ஔஷதங்களில் கலந்து உடல் பிணிகளை அகற்றிடும் செயலுக்கே செயல் கொண்டனர்.

அனுபவ முறைகளைச் செவிப்புலனறிவால் அறிந்து கொண்ட சிலரால் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திச் செல்வம் சேர்த்திடும் நிலைக்கும் இதே முறையைப் பயன்படுத்துகின்றனர்.

1.ஆனால் இந்தச் செயல்கள் அனைத்தையும் மெய் ஞான வளர்ச்சிக்குப் பயன்படுத்தினால் – “காயகல்பமாக…”
2.மேன்மேலும் ஆக்கத்தின் செயலுக்கு உண்மையைக் காட்டும்.
3.அதைப் பெற்று நீங்கள் உயர்ந்திட எமது ஆசிகள். (ஈஸ்வரபட்டர்)

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய் ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன்… உயிர் வளர்த்தேனே…! (திருமூலர்)

“கல்லா அறிவு…” பெற்றவர்கள் தான் மெய் ஞானிகள் – ஈஸ்வரபட்டர்

“கல்லா அறிவு…” பெற்றவர்கள் தான் மெய் ஞானிகள் – ஈஸ்வரபட்டர்

 

மனிதன் கொண்ட அறிவின் ஞானம் மொழி அறிவால் கற்றறிந்து உணர்கின்ற வகையில் உள்ளது.

மொழி அறிவென்பது மருத்துவம் மனோதத்துவம் உயிரியல் புவியியல் வானியியல் சித்தாந்தம் வேதாந்தம் வாழ்வியல் பொருளாதாரம் என்ற ஒவ்வொரு வகையின் தன்மைகளிலும் மனிதன் தான் கொண்ட அனுபவ ஞானத்தால் சமுதாய அமைப்பு முறை பெற்றுள்ளது.

அதிலே மேன்மேலும் கற்ற அறிவின் வளர்ச்சி உயர வழி வகை காட்டியது எந்த நிலையப்பா..?

அன்று ஆண்ட அரசர்கள் காலம் தொட்டே உண்மை நிலை அறியாத் தன்மையில் சமுதாய அமைப்பில் குறிப்பிட்ட ஓர் பிரிவினர் மட்டும் “தங்களைக் கடவுளின் குழந்தைகள்…” என்றே பறைசாற்றி வந்தனர்.

மக்கள் என்றுமே மாக்களாக இருந்திட்டால் தங்கள் குலம் வாழ வழி உண்டு…! என்ற கருத்தாய்வாகக் கொண்டு அரசனுக்கு அரசியல் சாசனங்களை வழியமைத்துத் தந்தனர். ஆனால் சித்தர்களும் மகரிஷிகளும் கொடுத்த உண்மைகளை அறியவிடாது அதைச் சீர் கெடுத்துவிட்டனர்.

மொழியறிவின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட அசை நூல் (இலக்கண நூல்) வகையினைப் பின்பற்றுகின்றார்கள்.

ஆனால் அசை நூலாலும் விளங்கிக் கொள்ளா தன்மையாகக் காரணப் பெயர் காட்டிப் பொருள்களுக்கெல்லாம் மறைபொருளாகச் சித்தர்களால் இடுகுறிப் பெயர்கள் இடப்பட்டு மனித குலத்திற்கு மிக மிகத் தேவையான மருத்துவ முறைகள் கூறப்பட்டது.

ஆனால் மனிதர்களால் அந்தப் பொருள்களின் குணங்களை உலக ஆசையின் எண்ணத்தினால் அறிந்து கொள்ள வகையின்றி அவை அனைத்தும் மறைந்து விட்டன என்றே எண்ணுகின்றார்கள்.

1.அசை நூல் கொண்டே உரையும்… உரை நடையும்… மற்றும் கவிப் பாடல்கள் பலவற்றை அறிந்திட்டாலும்
2.கற்ற கல்வியின் செருக்கால் இலக்கண நூல் கொண்டு ஆயிரம் விளக்கங்களைக் கூறினாலும்
3.மறை பொருள் தன்மையின் காரணங்களை அறியாதது இவன் கொண்ட செருக்கினாலயே ஆகும்.

அந்தச் செருக்கு என்பது உண்மை ஞானத் தொடருக்குப் பகையப்பா…!
1.செருக்கின் தொடரில் எழும் கோபம் உண்மை ஞானத்தை உணர்ந்து கொள்ள வழி காட்டாது.
2.உணர்வில் கோப குணத்தை வளர்ச்சிப்படுத்திக் கொண்டால் உணர்விலேயே கோபமுள்ளவன் உண்மையை உணர்வது எதுவப்பா..?

மெய்யறிவே வாலறிவாக்கும் செயலுக்குக் கற்ற கல்வியும்… அந்தக் கல்வியினால் பெற்ற அனுபவமும்… ஆத்திரம் கொண்டு புறப் பொருள் குணத் தன்மைகளை அதைச் சரீரத்தினுள் ஏற்றுக் கொண்டால் மாத்திரம் “உயர் ஞானம் சித்திக்குமா…?”

ஒரு மருத்துவன் நோயின் குணத்தை அறிந்து அதற்குண்டான மருத்துவத்தைச் செய்தாலும் நோய்வாய்ப்பட்டவன் தான் பிழைத்தெழ வேண்டும்…! என்ற எண்ணத்திற்கு உணர்வுகள் கூட்டிக் கொள்ள வேண்டும் அல்லவா..?

அதற்கு எது முக்கியம்..?

நோய்வாய்ப்பட்டவன் அவனுக்குள் இருக்கும் பயத்தையும் விரக்தியையும் விலக்கிக் கொள்ள மன உறுதி தேவை. ஏனென்றால் அனைத்திற்கும் மூலம் கோபமே.

கல்வி அறிவு என்பது பல நூல்களைக் கற்று அந்த நூல்களில் உள்ள கருத்துக்களின் உட்பொருளை அறிந்து… தெளிந்து… கற்ற கல்வியின் நீதி போதனைகளைத் தன்னுள் ஏற்று அந்த வழி நல் வழியாக இருந்தால் அதைக் கைக் கொள்ளுதல் (கடைப்பிடித்தல்) என்ற வகையில் தான் கொண்ட குணங்களுக்கொப்ப கற்ற கல்வி அறிவின் செயல் கொள்ளும்.

ஏட்டின் வாயிலாகக் கற்ற கல்வியின் தொடரில் சிந்தனையின் தெளிவில் பெற்றிடும் ஞானம் நற்பண்புகளைக் காட்டுமேயானால்
1.ஏட்டின் வழி அறிந்து கொண்டிடாத…
2.கல்லா அறிவின் வாயில் திறந்தே… சிந்திக்க வேண்டியது என்பது வள்ளுவ நாயனாரின் வாக்கு.

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்…! என்பதில்
1.செவிக்குணவு என்பதே இன்றைய கால கட்டத்தில்
2.உண்மையின் பொருளை ஆராய்ந்து ஆய்வின் வழி உண்மையை உரைத்தல் என்பதெல்லாம் மாறு கொண்டு
3.”பட்டிமன்றங்கள்…” என்ற பெயரில் கற்ற கல்வியின் செருக்கைத் தான் கொண்ட புலமையையும் சொல்லின் ஆற்றலையும் வெளிப்படுத்தி
4.பெரும் ஆரவாரப் புகழ் தேடும் வழியாக்கிக் கொண்டதே “வெறும் ஏட்டுக் கல்வியினால் கற்ற ஞானம்…”

1.செவிக்கு உணவு… வயிற்றுக்கு உணவு… என்பது போன்றே
2.உயிருக்கு ஊட்ட வேண்டிய உணவை அறிந்து கொள்ள
3.கற்ற கல்வியின் ஞானம் செயல் கொள்ள வேண்டும்.

கல்லா அறிவை ஏடறிவின் அளவுகோலால் அளந்திட முடியாது.

ஆனால் கல்லா அறிவை ஆய்வதற்கு ஏடறியும் ஒரு நிலைக்களன் என்பதிலும் பண்பு வேண்டும் என்பதற்காகக் கல்வியின் செருக்கால் ஏற்பட்ட “நான்” என்பதை நீக்கி விட்டால் பகை இல்லையே…!

பகை என்பது என்ன..? தான் கொண்ட எண்ணமே பகையாகும்.

வாய்மொழியால் யாரையும் தூசித்திடல் ஆகாது. வாய்மை மொழியே தான் கொண்ட எண்ணத்தின் பண்பு நிலையால்
1.கல்லா அறிவு என்னும் மெய் ஞானம் பெற்ற மகான்களை எண்ணி
2.அவர்களிடம் ஆசி பெற வேண்டும்.

உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கினால் தான் தியானத்தின் மூலம் சக்தியை நீங்கள் கூட்ட முடியும்

உபதேச வாயிலாகக் கொடுக்கும் ஞானிகளின் உணர்வைப் பதிவாக்கினால் தான் தியானத்தின் மூலம் சக்தியை நீங்கள் கூட்ட முடியும்

 

குருநாதர் எவ்வழியில் எமக்கு (ஞானகுரு) வழி காட்டினாரோ அந்த வழியை நீங்களும் பின் தொடரும் பொழுது அந்த மெய் ஞானிகள் சென்ற வழிகளில் எல்லோரும் அங்கே செல்வதற்கு ஏதுவாகும்.

அன்றைய ஞானிகள் காட்டிய ஒவ்வொரு உணர்வின் சக்தியும், அவர்கள் உடலிலே விளைய வைத்த ஆற்றல் மிக்க சக்திகள் நமக்கு முன் ஒலி/ஒளி அலைகளாகப் படர்ந்து கொண்டுதான் உள்ளது.

யாம் இப்பொழுது பேசும் போது இந்த உணர்வின் ஒலி அலைகளை சூரியனின் காந்த சக்திகள் கவர்ந்து ஆற்றல் மிக்க எண்ண அலைகளாக, அது படர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

1.இன்று ரேடியோக்களிலோ மற்ற டி.வி.க்களிலோ ஒலிபரப்புச் செய்யும் இந்த உணர்வின் சக்தியை
2.இயந்திரத்தில் அதே அலைவரிசையில் வைத்து
3.பட நிலைகளையும்… ஒலி அலைகளையும்… நாம் பார்க்கின்றோம், கேட்கின்றோம்.

இதைப் போன்றுதான் நாம் பேசும் சாதாரணp பேச்சாக இருந்தாலும் சூரியனின் காந்த சக்தி கவர்கின்றது. ஞானிகள் மகரிஷிகள் அவர்கள் உடல்களில் எடுத்துக் கொண்ட இச்சக்திகள் அவர்கள் உடல்களிலிருந்து வெளிப்படுத்திய நிலைகளும் சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு இன்றும் அது சுழன்று கொண்டிருகின்றது.

அந்த ஞானிகளின் ஆற்றல் மிக்க அச்சக்தியைப் பெறுவதற்குத்தான், இந்தத் தியானம் என்ற நிலைகளில் நம் குருநாதர் காட்டிய நிலைகள் கொண்டு இங்கே உணர்த்துகின்றோம்.

நமது உயிரின் ஆற்றலை நமக்குள் இயக்கக்கூடிய சக்தியை நாம் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
1.ஒரு மேக்னட்டில் “காந்தத்தை” அதிகமாகக் கூட்டச் செய்யும்போது,
2.அந்த “சுழற்சியின்” வேகத்தைக் கொண்டு கரண்ட் உற்பத்தியாகின்றது.

அதைப் போல…
1.நம் உயிரின் இயக்க ஓட்டத்தின் நிலைகள் கொண்டு நமக்குள் காந்தப் புலனை அதிகமாகக் கூட்டி
2.அதன் வழி கொண்டு நமக்குள் ஆற்றலின் சக்தியைப் பெருக்கச் செய்வதுதான் அந்த நிலை.
3.நாம் அதை நினைவில் கொண்டுதான் இயக்கப்பட வேண்டும்.

குற்றம் செய்தோரை எண்ணும்போது இந்த உணர்வுகள் நமக்குள் இயக்கியவுடன் அந்தக் கோப உணர்ச்சிகள் எவ்வளவு துரிதமாக இயக்குகின்றது…?

இதைப் போன்றுதான்…
1.நம் உயிரின் நினைவலைகளை…
2.அந்த மெய் ஒளி பெற வேண்டுமென்று ஆற்றலின் நினைவை நாம் கூட்டும் போதுதான்,
3.அந்த இயக்கச் சக்தியின் ஓட்டத்தை அதிகமாகக் கூட்டி
4.நாம் எண்ணிய சக்தியைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

அந்த தகுதியைப் பெறச் செய்வதற்குத்தான் மகரிஷிகள் ஒவ்வொருவரும் அந்த இயற்கையின் உண்மையின் இயக்கச் சக்தியை எவ்வளவு தெளிவாக உணர்த்தி உள்ளார்களோ அதையும் உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

நீங்கள் உணர்கிறீர்களோ… இல்லையோ… ஒன்றுமறியாத வாயில்லாத நாடாக்களில் (MEMORY DRIVES) கம்ப்யூட்டர் மூலம் இப்பொழுது எப்படிப் பதிவாக்குகின்றனரோ இதைப் போல
1.உங்களுக்குள் இருக்கக்கூடிய “மேக்னட்…”
2.நீங்கள் கூர்ந்து கவனிக்கும் போது உங்களுக்குள் ஈர்த்துத் தனக்குள் பதிவு செய்கின்றது

அதாவது…
1.புகைப் படங்கள் எடுக்கப்படும்போது “கேமரா” எப்படி அதனுடைய நிலைகளைப் பதிவாகின்றதோ,
2.மைக்கின் முன் பேசுவதை, “மைக்” ஈர்த்து எப்படிப் பதிவாக்குகின்றதோ அது போல
3.உங்கள் எண்ணங்கள் செம்மையாக… “சாமி (ஞானகுரு) சொல்வதைப் பெற வேண்டும்” என்ற ஏக்க உணர்வுடன்
4.உங்கள் கண்ணின் நினைவலைகளில் ஏங்கி இருந்தாலே போதுமானது.

அதுவே பதிவாகி… மீண்டும் நினைவவலைகள் வரப்படும்போது, மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறும் தகுதியை நீங்கள் பெறுகின்றீர்கள்.

“சாமி என்னமோ சொல்கின்றார்…” ஏதோ சொல்கின்றார்… என்று இல்லாதபடி நினைவுகளை வேறு பக்கம் திசை திருப்பாது
1.உபதேசிக்கின்றவரை வரையிலும் உற்றுக் கேட்போம் என்று
2.உங்கள் நினைவின் எண்ணங்களை எவ்வளவு தூரம் பதிவு செய்கின்றீர்களோ
3.அந்தப் பதிவின் ஆற்றல் மிக்க சக்தியை… மகரிஷிளின் அருளாற்றலைப் பெறும் தகுதி பெறுகின்றீர்கள்.

அதைப் பெறச் செய்வதற்குத்தான் உங்கள் உயிரின் இயக்கத்தின் ஓட்டங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதைத் தனக்குத்தானே தனக்குள் இயங்கும் ஆற்றலை அறியவில்லை என்றால் பிறரின் நிலைகளை அறிந்து கொள்வது மிகக் கடினம்.

நாம் எண்ணும் எண்ணங்கள் நமக்குள் இயக்குவதை நாம் கட்டுப்படுத்தாமலோ… அல்லது நமக்குள் எண்ணிய எண்ணங்களை அறிந்து கொள்ளும் திறனற்றவர்களாகவோ… நாம் இருந்தோம் என்றால்
1.பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து வந்த உயிர் மனித உடலைப் பெற்றபின்
2.பரிணாம வளர்ச்சி பெற்ற மற்ற மிருக உணர்வுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமலே சென்று கொண்டிருக்கும்.

ஆகவே மனித உடல் பெற்றபின்… மெய்யுணர்வின் தன்மையை நமக்குள் வளர்த்து அறிந்துணர்ந்து செயல்படும் ஆற்றல் மிக்க சக்தியை வளர்ப்பதே நல்லது.

இங்கே கொடுக்கப்படும் உபதேசங்கள் ஒவ்வொன்றையும் எந்த அளவுக்குக் கூர்மையாகக் கவனிக்கின்றோமோ அந்த அளவுக்கு மெய் உணர்வின் தன்மையை…
1.நாம் எடுத்துக் கொண்ட ஞானிகளின் சுவாசமும்…
2.எடுத்துக் கொண்ட ஞானிகளின் எண்ணத்தின் உணர்வும்…
3.நமக்குள் அவதார புருஷனாக மாறுகின்றது.

அகஸ்தியன் அவன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்

அகஸ்தியன் அவன் குழந்தைப் பருவத்தில் பெற்ற ஆற்றல்கள்

 

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவான அகஸ்தியனை அவன் தாய் தந்தையர் “கடவுள் பிள்ளை” என்றே எண்ணுகின்றனர்.

ஏனென்றால் அந்தக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு காட்டுப் பகுதிக்குள் போனால் மற்ற துஷ்ட மிருகங்கள் எல்லாம் ஒடுங்கி விடுகின்றது. “அந்தக் குழந்தையினால் இவர்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கின்றது…”

ஆனால் மிருகங்களிடமிருந்தும் நஞ்சு கொண்ட விஷ ஜெந்துக்களிலிருந்தும் தப்ப
1.முதலில் பச்சிலையைத் தான் இவர்கள் நுகர்ந்தார்கள்… பல பல மூலிகைகளைத் தான் உபயோகப்படுத்தினார்கள்.
2.அதன் வழி அகஸ்தியன் என்ற அந்தக் கருவின் தன்மை விளைந்தது.

அந்தக் குழந்தையை கையில் எடுத்துச் செல்லப்படும் போது மற்ற மிருகங்கள் அருகில் வருவதில்லை என்று கண்டுணர்ந்த பின் அவன் கடவுள் பிள்ளை என்று போற்றுகின்றனர்.

அந்தக் குறுகிய காலத்தில் அங்கே வாழும் ஒரு ஐம்பது குடும்பங்களில்… ஒரு நூறு பேர் இருக்கும் இடங்களில் அவனைப் போற்றித் துதிக்கும் நிலை வருகின்றது.

உதாரணமாக பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள் உமிழ்த்தும் துகள்களால் “மின்னல்கள்” வருகிறதென்றால் அது எல்லாம் விஷத் தன்மை கொண்டது.

1.ஆனால் அந்தக் குழந்தை அதை உற்றுப் பார்த்து அதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதும் மகிழ்வதும் போன்ற தன்மைக்கு வருகின்றது.
2.இதே போல் சூரியனையௌம் கண் கூசாது உற்றுப் பர்க்கின்றான்,

இன்று நாம் தீபாவளிக் காலங்களில் மத்தாப்புக்களைக் கொளுத்தினால் அவைகளிலிருந்து பொறிகள் எப்படி வருகிறதோ அது போல் சூரியன் மற்ற கோள்கள் நட்சத்திரங்கள் இவை வெளிப்படுத்தும் கதிர்கள் மோதி வான்வீதியில் பல வர்ணங்களில் எப்படி வருகின்றது…? என்று அவன் வேடிக்கை பார்க்கின்றான்.

சூரியனும் மற்ற கோள்களும் அதனின் உணர்வுகளின் மோதலினால் ஏற்படும் இந்த மின் பொறிகளைப் பார்த்து அவன் அறியாமலே அதைக் கண்டு சிரிக்கின்றான்.

1.அங்கே வானிலே நடக்கும் நிகழ்ச்சிகளில்
2.அதில் வரும் விஷத்தின் தன்மை அவனுக்க்ள் ஒடுங்கும் பொழுது
3.சாந்தமான நிலை கொண்டு அகஸ்தியன் பார்க்கின்றான்.

விஞ்ஞான அறிவு கொண்டு ஆராய்ச்சி செய்பவர்களும் சூரியனைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கென்ற கண்ணாடிகளில் விஷத் தன்மைகளை அடக்கும் அந்தச் சக்திகளைப் பூசி அதனைக் கலக்கப்பட்டு அதன் வழிகளிலே தான் பார்க்கின்றனர்.

சூரியனை நேரடியாக இவர்கள் பார்ப்பதில்லை. அந்தக் கண்ணாடிகள் மூலம் பார்க்கும் போது அதிலிருந்து வரும் அல்ட்ரா வயலட் என்ற விஷம் இவர்களைத் தாக்குவதில்லை.

அதே போலத் தான் நட்சத்திரங்கள் பல வகைகளில் ஒன்றுக்கொன்று உராயப்படும் போது தூசிகள் வருகின்றது. அவைகள் மோதினால் மின்னல்களாக மாறுகின்றது.

அந்த மின்னல்களையும் இந்தக் கண்ணாடி வழி தான் விஞ்ஞானிகள் கண்டு அதனுடைய கலர்களையும் அதனுடைய இயக்கத் தன்மைகளையும் காணுகின்றார்கள்.

அன்று வாழ்ந்த அகஸ்தியனோ இத்தகைய தன்மைகளை நேரடியாக உற்றுப் பார்க்கின்றான்.
1.அவன் கருவிழி அதைப் பதிவாக்குகிறது.
2.அதிலிருந்து வெளி வரும் ஆற்றல்களை அவன் கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன் நுகரச் செய்கின்றது.

அப்படி அவன் நுகர்ந்த உணர்வோ உயிரான ஈஸ்வரலோகத்தில் இணைந்து
1.அந்த விஷத்தின் தன்மையை அவன் உடலுக்குள் இருக்கும் அணுக்களுக்கு
2.வீரிய சக்தியாக ஊட்டும் சக்திகளாக மாறுகின்றது.

இது எல்லாம் அகஸ்தியனின் சந்தர்ப்பம்…! அவன் உணர்வை நாம் நுகர்ந்தால் நாமும் அவனைப் போன்ற ஆற்றல்மிக்க மெய் ஞானியாக ஆகலாம்.

பிறப்பு இறப்பு என்று இருந்தாலும் அதிலே “வளர்க்கப்பட வேண்டியது எது…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பிறப்பு இறப்பு என்று இருந்தாலும் அதிலே “வளர்க்கப்பட வேண்டியது எது…?” என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

சூரியனை மையப்படுத்திக் கொண்டு பூமி சுழன்று ஓடும் நிலையில் ஏற்படும் இயற்கையின் பருவ மாற்றங்களின் செயலால் பரவெளியில் படர்ந்துள்ள அமில குணத்தன்மைகளைப் பூமி தன் ஈர்ப்பின் சுவாசம் கொண்டு ஈர்த்துக் கொள்கிறது.

அவ்வாறு பூமி தன்னை வளர்ச்சிப்படுத்திடும் செயலில் எண்ணம் கொண்டே ஆத்மாவாக உயிரணுக்கள் பல பிறப்பிற்கு வருகின்றன.

1.ஜீவன் என்ற சரீர பிம்பம் பெறும் இந்த உயிராத்மா
2.இயற்கையின் கதியில் சரீரம் கொண்டு வளர்ச்சி கொள்ளும் செயலின் தொடராக இருந்தாலும்
3.தான் பெற்ற இந்தச் சரீரத்தையே “இறப்பு…” என்ற கதி நிகழ்வுக்கு உட்பட்டே வினைச் செயல் புரிகின்றது.

ஒரு உயிரணு சிசுவாக வளர்ச்சி கொள்ளும் காலத்தில்… தான் எடுத்துக் கொண்ட (ஏற்கனவே முந்தைய பிறவியில்) எண்ணத்தின் செயலில் உணர்வுகளாகத் தாய்மை கொண்ட எண்ணமுடன் தன் உணர்வுகளையும் கூட்டித்தான் உருவத்திற்கு வருகின்றது.

அந்த உருக்கோலம் கொள்ளும் பிம்பத்திற்கு வேண்டிய ஆகாரத்தைத் தாயின் இரத்த நாளங்களுடன் ஒன்றியே எடுத்து வளர்த்துக் கொள்கிறது.

பஞ்ச பூதங்களின் அமைப்பாகத் தனக்கு ஒவ்வொரு அவையங்களும் அமைவு கொள்ள தாயின் ஆகாரத்திலிருந்து அமில குணத் தன்மைகளை ஈர்த்துக் கொள்கிறது.

1.எந்தத் தாயின் சரீரத்தில் இணைந்து தன்னை உருவாக்கிக் கொள்கின்றதோ
2.அந்தச் சரீரத்தில் அமைந்துள்ள சகல நாடிகளில் ஓடும் சுவாசத்தின் செயல் தன்மைகளையும் ஈர்த்துத் தான் அந்தச் சிசு முழுமை பெறுகிறது.

முழுமை பெற்ற பின்… தாயின் உடலிலிருந்து வெளியேறும் உந்துதலை உணர்த்தி… அந்த உந்துதலின் செயலைத் தாய்க்கும் ஊட்டுகின்றது.

அந்த உந்துதலில் தாயின் சரீரத்தில் செயல்படும் நாடிகளில் உலவிடும் “மறைமுகக் காற்று ஒன்று…” பிறப்பின் செயலுக்குத் துணை புரிந்து சிசு வெளியேற உதவுகிறது.

ஆகவே பிறப்பு… வளர்ப்பு… இறப்பு… என்ற இந்த மூன்று வகையான தொடரின் சூட்சமத்தை இயற்கையின் கதியில் அறிந்து கொள்ள வேண்டும்.

1.பூமித் தாயின் செயலுக்கும்
2.பூமி ஈர்த்து வெளிக்கக்கும் சுவாச அலைகளில் பூமிக்குள் நிறைந்திருக்கும் காற்றின் தொடர்பிற்கும்
3.பற்பல செயல்கள் நடைபெற்றுக் கொண்டே உள்ளது.

கடல் நீரிலிருந்து உப்பு விளைவதுவும்… கற்பாறைகளின் முதிர்விலிருந்து உப்பு வெளிப்படுவதுவும்… மண்ணின் குணத்தன்மைகளில் சில இடங்களில் உயர் அமிலமாகி… அதுவே பொருளாக வெளிப்படும் செயலுக்கும் காற்றின் தொடர்பு உண்டு.

இது எல்லாம் தன்னை உணர்ந்திடும் பக்குவமாக… இயற்கையின் கதியைத் தன்னுள் கண்டுணரச் செய்திடும் தெளிந்த உயர் ஞானமாக… மெய் ஞானமாக… ஞானிகளால் உலகினுக்குப் போதனைகளாகக் கொடுக்கப்பட்டது.

அந்த மெய் ஞானிகளின் நிலையை நாமும் பெற்று மெய் ஞானிகளாக வளர்ந்து காட்ட வேண்டும்.