பூமியைச் சமப்படுத்திய “அகஸ்தியன் உணர்வுகள் தான்” இன்று தேவைப்படுகின்றது

பூமியைச் சமப்படுத்திய “அகஸ்தியன் உணர்வுகள் தான்” இன்று தேவைப்படுகின்றது

 

இன்றைய உலகம் மிகவும் துரித நிலைகள் கொண்டு மாற்றமாகிக் கொண்டே உள்ளது.

மனிதனுக்கு மனிதன் காட்டு விலங்குகள் எப்படி ஒன்றுக்கொன்று அஞ்சி வாழ்கின்றதோ இதைப் போன்றுதான் கிராமந்தோறும்… ஊர் தோறும்… நகரம் தோறும்… ஒவ்வொரு நொடிக்கும் அஞ்சி வாழும் தன்மை வந்து விட்டது.

பின் தொழிலை எப்படி நீங்கள் பார்ப்பது…? கிடைப்பதைத் தட்டிப் பறித்து உணவாக உட்கொள்ளும் இந்த உணர்ச்சியின் தன்மை வளர்ந்து விட்டது.

இதைப் போன்று நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில்…
1.காற்று மண்டலத்தில் கலந்துள்ள அகஸ்தியன் கண்ட பேருண்மைகளை நாம் தியானித்து
2.இந்த உணர்வின் தன்மை நமக்குள் பெருக்கி
3.அத்தகைய மூச்சலைகளைப் பெருக்குவோம் என்றால் சிந்திக்கும் மனிதர்கள் உருவாவார்கள்.

ஆகவே தீமையிலிருந்து மீட்டிடும் அருள் சக்திகளை நமக்குள் உருவாக்க முடியும்…! என்ற இந்தத் தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.

ஒரு நூலால் கனமான பொருளைத் தூக்க முடிவதில்லை. அது அறுந்து விடுகின்றது. ஆனால் பல நூல்களை இணைத்துக் கனமான… கடினமான பொருளையும் தூக்க முடிகின்றது.

கதிரியக்கப் பொறியின் உணர்வுகளை… அந்த அழுத்தத்தை அதிகமாகச் சேர்க்கும் பொழுது இராக்கெட்டை விண்ணில் உந்திச் செலுத்துகின்றான் விஞ்ஞானி. அது சிறுதுளி என்று இருக்கும் பொழுது ஒரு இயந்திரத்தைத் தான் இயக்க முடிகின்றது

1.அத்தகைய உந்து விசையின் உணர்வுகள் வலு கொண்டு வருவது போல
2.நமது உணர்வுகளும் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை எடுக்கப்படும் பொழுது
3.உந்துதலின் தன்மையை அதிகமாக எடுத்துச் செலுத்தினால்
4.அது தீமை என்ற நிலைகளைக் கலைக்கவும்… மோதலில் இதைக் கருக்கவும் செய்யும்.

ஆகவே உங்களில் இதைப் பக்குவப்படுத்தி இந்த அருள் உணர்வின் தன்மை வளரச் செய்து கொண்டால் பூமியில் வரும் தீமைகளை அகற்ற முடியும்… நம்மையும் காத்துக் கொள்ள முடியும்.

விஞ்ஞானத்தால் வரும் பேரழிவுகளில் இருந்து நம்மைக் காத்து கொள்ள வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்தால் தான் அது முடியும்.

1.இருபத்தியேழு நட்சத்திரங்களிலிருந்து வெளிவரும் எதிர் நிலையான உணர்வுகளை… (அந்தத் தூசிகளை)
2.மின்னல்களைக் கவர்ந்து தனக்குள் ஒளியாக மாற்றிக் கொண்டே உள்ளது துருவ நட்சத்திரம்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நாம் நுகர்ந்தால் நமக்குள் வரும் விஷத் தன்மைகளை மாற்றி விட்டு
1.நமக்குள் அறிவின் ஞானமாக வளரச் செய்யும்… உயிருடன் ஒன்றி வாழச் செய்யும்
2.இதையெல்லாம் உங்கள் மனதில் தெளிவாக்கிக் கொண்டால்
3.உங்கள் சிந்தனை மிகவும் உயர்ந்ததாக மாறும்
4.வாழ்க்கையில் வரும் எத்தகைய பகைமையான உணர்வுகளும் உங்களைச் சாடாது
5.பகைமை உணர்வு என்று தாக்கும் உணர்வை உங்களால் அறியவும் முடியும்
6.பகைமையை நீக்கும் அறிவின் வளர்ச்சியும் உங்களுக்குள் வளரும்

இதை வளரச் செய்வதற்கு நமது குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.

உங்களிலே இதைப் பதிவாக்கும் போது…
1.என்னால் என்னை அறியச் செய்யும் சக்தியாக
2.குரு அருள் தன்மை கொண்டு நான் என்னை அறிய முடிகின்றது.

இதைப் போலத் தான் இந்த உலகிலே வாழும் நீங்கள்… சந்தர்ப்பவசத்தால் நீங்கள் நுகரும் உணர்வுகள்
1.உங்களைத் தவறான வழிக்கு அது அழைத்துச் சென்றாலும்
2.உயிரான ஈசனை ஈஸ்வரா…! என்று வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தை இணைத்தால்
3.தவறின் பாதையில் இருந்து அது திசை திருப்பி
4.உங்களை அருள் வழியில் அழைத்துச் செல்ல இந்த உணர்வின் தன்மை உதவும்.

ஏனென்றால் இத்தகைய நிலைகள் “இன்று” தேவைப்படுகின்றது. அதை நீங்கள் பெறுவதற்குண்டான உணர்வைத்தான் இப்பொழுது இந்த உபதேச வாயிலாக உங்களுக்குள் பாய்ச்சப்படுகின்றது.

கார்த்திகை ஜோதி… தீப வணக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

கார்த்திகை ஜோதி… தீப வணக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணம் கொண்டே வாழ்க்கை நிலைகளுக்குப் போதனையாக உரைத்து வந்ததில்… மனதின் பக்குவம் பெற முயற்சிக்க வேண்டும்.

உலக வாழ்க்கை நெறி முறைகளில் எதிர் மோதல் குணங்கள் அலை அலையாக வந்து நம் மீது மோதினாலும்
1.துடுப்பிட்டுச் செல்லும் படகு அலைகளின் மீதே சென்று சேர வேண்டிய இடம் சேர்வதைப் போல்
2.நம் நிலையிலும் எல்லா உணர்வுகளையும் சமப்படுத்த வேண்டும் என்ற அந்த நல் எண்ணத்தின் உந்துதலாக
3.அதன் வழி முறைகளை நம் சிந்தையில் இருத்திச் “சித்தன் நிலை…” பெற வேண்டும்.

ஏனென்றால் பேருண்மைகளைப் புகட்டுவதெல்லாம் உயர்வு தாழ்வு முறைகளுக்கு அல்ல. மருத்துவ குணங்களாகப் புகட்டினலும் “எண்ணத்தின் நிறைவன்றோ சரீர சுகம் அளிக்கின்றது….!”

நம் உடல் நோய் அகல மருத்துவன் அளித்திடும் மருந்து வீரியம் கொண்டு எதிர் மோதல் குணத் தன்மைகளில் நோயை விலக்கிட்டாலும்…
1.மீண்டும் அதே நிலை காணப்படுவதெல்லாம் எண்ணத்தின் செயல் தான்.
2.ஆக… நோய் உடலிலா…! எண்ணத்திலா…? அல்லது…
3.நம் சுவாச நிலையின் இயல்புத் தன்மையை மாற்றி விட்டாலே
4.எண்ண ஈர்ப்பைப் பெற்றிடும் செயல்கள் இயற்கை கொண்டா…? என்ற தொடருக்கும் விடை கிடைக்கும்
5.எண்ணத்தைச் சிதறவிடாது நிலைப்படுத்தும் முனைப்பில் நல்லாக்கம் பெற்றிடலாம்.

கார்த்திகை ஜோதியைப் பார்க்கின்றோம். அதன் சூட்சமப் பொருள் புரிந்ததா…? இன்றைய நடை முறைக்கு அது எல்லாம் பெரும் சடங்காக மாறி விட்டது.

அன்று சித்தன் கண்ட உண்மைப் பொருள் என்ன…?

பௌர்ணமி நிலவின் ஒளி சக்தியும் நட்சத்திர அலைகளின் சங்கமிப்பும் பூமியின் ஈர்ப்பில் செயல் கொண்டே சில சூட்சம வித்தின் தன்மைகள் பூமித் தாய் நமக்கு அளித்திடும் செயலை மறைபொருளாகக் காட்டினர்.

அந்த ஜோதியின் உட் பொருளை உணர்த்த… கார்த்திகை மார்கழி தை மாதங்களில் பருவ நிலையின் குளிர்விப்பும் கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியில் பூமி ஈர்த்துப் பெற்றிடும் சக்தியின் செயலையே அந்த மாதத்தில் “தீபமேற்றி வணங்கிடும் முறையாகக் காட்டப்பட்டது…!”

எல்லாக் காலங்களிலும் தான் பூமித் தாய் தன் சக்தியை வளர்ச்சிப்படுத்துகின்றாள். இருப்பினும் இயற்கையின் செயலில் அன்றைய சித்தர்கள் மருத்துவத்தின் ஆய்வில் உயர் ஞானம் கொண்டே அறிந்த காயகல்ப முறையே “கார்த்திகை ஜோதி…” என்று தீப வணக்கமாகக் கூறப்பட்டது.

1.இந்த மாதக் காலங்களில் சிற்றின்ப நுகர்வுகள் விடுத்து
2.தன் மனதை… தன் சிந்தையை ஒருமுகப்படுத்தித் தியானிக்கச் செய்து…
3.பூமித் தாய் வெளிப்படுத்தும் சூட்சம சக்தி அலைகளைப் பெற்றிட
4.ஞானிகளால் சிஷ்யர்களுக்கு உணர்த்திய வழி முறைகள் தான் அது…!

தியான நிலையறியாத வாய்மையின் சக்தி கொண்டோரும் இந்தச் சக்தியைப் பெறுகின்றனர்.

உள் நின்று இயக்கும் “உயிர்” எப்படி… எதனால் கடவுளாகின்றது…?

உள் நின்று இயக்கும் “உயிர்” எப்படி… எதனால் கடவுளாகின்றது…?

 

உலகில் வாழும் மனிதர்கள் எத்தனையோ கோடித் தெய்வங்களை வணங்கினாலும் அந்தத் தெய்வம் காக்க வருவதில்லை. சற்று சிந்தித்துப் பாருங்கள்… இதையெல்லாம் எங்கே உருவாகின்றது என்று…!

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ இவை அனைத்தும் நம் சிரசின் பக்கம் இருக்கும் உயிர் தான் இயக்குகிறது… உருவாக்குகிறது. அதை “ஈஸ்வரலோகம்…” என்று ஞானிகள் காரணப் பெயர் இடுகின்றனர்.
1.நாம் நுகரும் உணர்வுகள் எதுவோ
2.அதை அணுவாக உருவாக்கும் கருவாக
3.உடலுக்குள் உருவாக்கி விடுகின்றது நம் உயிர்.

அப்படி உருவாக்கிய உணர்வுகள் நம் இரத்தத்தில் கலக்கப்படும் பொழுது “பிரம்மலோகமாக…” மாறுகின்றது. அதே சமயம் நம் உடலுக்குள் அந்தக் குறித்த காலத்தில் வளரத் தொடங்குகிறது.

கோழி அடை காப்பது போன்று என்னை இப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்… இப்படிச் செய்தான்…! என்று இந்த உணர்வின் தன்மை எண்ணினால் அந்தக் கரு முழுமையடைந்து அணுவின் தன்மை அடைகின்றது.

அப்படி அணுவின் தன்மை அடைந்த பின் அது தன் உணவுக்காக ஏங்குகின்றது.

உதாரணமாக முட்டைக்குள் இருக்கும் குஞ்சு வெளி வந்தபின் புற நிலையில் இருக்கக்கூடிய உணவை அகநிலையில் உட்கொள்ளும் நிலை வருகின்றது.

இதைப் போன்றுதான்…
1.உடலில் உருவான இந்த அணு முழுமை அடைந்த பின்
2.நம் உடல் உறுப்புடன் ஒன்றி இரத்தத்தில் வரும் உணர்வினை
3.உணவாக உட்கொள்ளும் பழக்கம் வந்து விடுகின்றது.

ஆகவே அந்த அணுவின் தன்மை அடைந்தால் பிரம்மலோகம் என்ற நிலை அடைகின்றது.

இரத்தத்தின் வழியாக உணவாக உட்கொள்ளும் நிலை வரும் பொழுது அந்த அணுக்கள் நம் உடலுக்குள் தன் இனத்தைப் பெருக்கும் சக்தி பெறுகின்றது.

ஒரு வித்தினை நிலத்திலே ஊன்றினால் அந்த வித்து செடியாக… மரமாக வளர்ந்து… தன் இனத்தை உருவாக்குகின்றது. ஒரு கோழி முட்டை இட்டுக் குஞ்சு பொரித்தால் அந்தக் குஞ்சுகள் வளர்ச்சியாகி அது மீண்டும் முட்டைகள் இட்டுப் பல குஞ்சுகளை வளர்க்கும் தன்மை வருகின்றது.

இதைப் போலத்தான் எந்தெந்தக் குணங்களை எண்ணி எடுகின்றோமோ அத்தகைய அணுக்களின் இன விருத்தி நம் உடலுக்குள் அதிகமாகின்றது.

இப்படி வளர்ச்சியாகி வளர்ச்சியாகித்தான் நாம் எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று மனிதனாக உருவாகி வந்துள்ளோம்.

காட்டிலே வாழும் மான் சந்தர்ப்பத்தால் புலியைப் பார்த்து விட்டால் அதனிடமிருந்து தப்ப எண்ணுகின்றது. ஆனால் புலியின் உணர்வை எண்ணி எண்ணி அதன் உணர்வினை மான் அதிகமாக நுகர்கின்றது.

ஆக… புலியின் உணர்வை மான் பயத்தால் நுகர்ந்த பின் மானின் உயிரான ஈஸ்வரலோகத்தில் அந்தப் புலியின் உணர்வைக் கருவாக உருவாக்கும் அணுக்கள் அங்கே பெருகி விடுகின்றது.

1.அப்பொழுது மானின் சாந்தமான உணர்வுக்குள் அது ஊடுருவி அதை மடியச் செய்து விடுகின்றது
2.அது தன் நினைவை இழக்கச் செய்கின்றது.

புலியோ மானின் தசைகளை உணவாக உட்கொண்டு விடுகின்றது. மான் புலிக்கு இரை ஆகின்றது.

ஆனால் புலியின் உணர்வை மானின் உயிர் கருவாக மாற்றி அந்த (மானின்) உடலை விட்டுச் சென்றபின் புலியின் உடலுக்குள் சென்று புலியின் ரூபம் அடைகின்றது.
1.அப்பொழுது கடவுள் யார்…? இந்த உயிரே கடவுள்.
2.உயிர் தான் இத்தகைய நிலையைச் செயல்படுத்துகிறது…!
3.பல கோடிச் சரீரங்களில் ஒன்றிலிருந்து மீண்டு ஒன்றுக்குள் இரையாகும் பொழுது நரக வேதனைப்பட்டு
4.அதன் நிலை கொண்டு கொன்ற உடலுக்குள் உயிர் அழைத்துச் சென்று
5.இப்படி உருமாறி… உருமாறி உருமாற்றி… நம்மை மனிதனாக உருவாக்கியது உயிர் தான் என்ற நிலையை
6.அகஸ்தியன் தன் வாழ்க்கையில் கண்டறிந்த பேருண்மை இது…!

சுவாசத்திற்கும் நாடிகளின் இயக்கத்திற்கும் உண்டான தொடர் இயக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சுவாசத்திற்கும் நாடிகளின் இயக்கத்திற்கும் உண்டான தொடர் இயக்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

நாம் எடுக்கும் எண்ணத்தின் வழியாக உணர்வுகளின் சம நிலை மாற்றப்படும் பொழுது சுவாசம் கனமாகின்றது. கனமான சுவாசத்தால் ஓட்ட நிகழ்வாக ஐம்புலன்களில் செயல்படுத்தும் நாடிகளின் இயக்கம் மாறுகின்றது.

எண்ணத்தின் உணர்வுக்கொப்ப ஆங்காங்கு ஓடும் காற்றின் சுதியே நாடிகளாகச் செயலுக்கு வரும் பொழுது துடிப்பின் நிலைகள் மாறுகின்றது.

உதாரணமாக நாம் எடுக்கும் எண்ணம் “பயம்…” கொண்ட செயலாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது விழி படம் எடுத்து நாசி சுவாசம் எடுத்துச் செயல்படும் பொழுது
1.விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) படபடத்து
2.சரீரம் முழுவதையும் சிலிர்க்கச் செய்திடும் செயலாகச் செயல்பட்டு
3.நாடியின் இயக்கம் மூலாதாரம் தொடங்கி விழிப் பார்வையில் அமையப் பெற்று
4.எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாசத்தின் வழி விழிக் காற்றாகச் செயல்படுகின்றது.

மார்பு தொடங்கி நாபியின் வழி ஓடி மூலாதாரத்தில் இணையும் ஓர் நாடி இதே தொடரில் எண்ண உணர்வுகளுக்கொப்ப விக்கலையும் சலிப்பு சோர்வு கொண்ட கொட்டாவியையும் சரீரத்தில் உருவாக்கிக் காட்டுகின்றது.

1.“குரு…!” என்று அழைக்கப்படுகின்ற ஓர் நாடி சரீரத்திலும் உண்டு.
2.அது செயல்படும் விதங்களின் உண்மையை உணர்ந்து கொண்டால்
3.விந்துவே நாத விந்து எனும் “பிந்து” (உருவாக்கும் சக்தி – CREATOR) என்ற செயல்பாட்டைத் தெளிந்து கொள்ளலாம்.

அந்த நாடி மூலக்காற்றுடன் செயல்படும் முன் மேலும் இரு நாடிகளை இணைத்துக் கொண்டு
1.உணவுகளின் கழிவுகளையும் சிறு நீரையும் வெளியேற்றுவதோடு
2.ஆண்களின் குறி ஸ்தானத்தில் விந்துவையும் உணர்வுக்கொப்ப வெளியேற்றிச் செயல் புரிகின்றது.

சரீரத்தில் கால் எலும்புப் பகுதிகளும் இடுப்பு எலும்புப் பகுதிகளும் சேரும் இடத்தில் “ஓர் மறைமுக நாடி” இயங்குகிறது.

அது சீதம் கபம் என்ற நிலைகளை உருவாக்கி நோயின் அறிகுறியைக் காட்டுகின்றது. அதாவது இருதய நாடிகளின் தொடர்பு கொண்டு காற்றின் செயலாகச் செயல்பட்டு அந்த உபாதைகளை வெளியே காட்டிடும் காற்றாகச் செயல்படுத்துகின்றது.

அதே காற்று உயிராத்மா பிரிந்த பிறகு உடலை மாற்றம் கொள்ளச் செய்து சரீரம் முழுவதும் (நீராக) வியாபித்தே
1.சரீர பிம்பத்தையே பெருக்கச் செய்து
2.வெடிக்கும் விதமாகச் செயலாக்குகின்றது.

பெண்களின் தாய்மைப் பேறு காலத்தில் சிசுவை வெளியேற்றத் தாய் தன் உணர்வு கொண்டு உந்தித் தள்ளும் நிலைக்கும் இந்த மறைமுகக் காற்றே உதவுகிறது.

இதே போல் சுவாசத்தின் ஓட்ட கதியில் சரீரத்தையே வழி நடத்திடும் செயல்களில் செவிகளில் செயல்படும் நிலைகளும் மற்றும் பல நிலைகளும் உண்டு.

மனித உடலுக்குள் நுண்ணிய நிலைகளில் செயல்படும் நாடிகளையும் அதற்குக் காரணமான காற்றின் இயக்கங்களையும் சிறுகச் சிறுகக் கோடிட்டுக் காட்டியுள்ளோம்.

புருவ மத்தியில் “ஈஸ்வரா…” என்று எண்ணி ஏங்கித் தியானித்தால் புருவத்தின் (ஈசன்) வழியாகச் சுவாசித்தால் முழுமையும் உங்களால் அறிய முடியும். உணரவும் முடியும்.

நம் எண்ணத்தால் வந்த நோயை அதே எண்ணத்தால் போக்க முடியும்

நம் எண்ணத்தால் வந்த நோயை அதே எண்ணத்தால் போக்க முடியும்

 

உதாரணமாக இந்த மனித வாழ்க்கையில் நம்மை அறியாது அடிக்கடி வேதனை என்ற உணர்வுகளை நுகர்ந்தால்
1.இந்த விஷத் தன்மைகள் கூடி சிறுநீரகங்களின் இயக்கம் பாதிக்கப்படுகின்றது.
2.இரத்தத்தில் கலந்து வரும் அசுத்தங்களை நீக்கும் சக்தியை அது இழந்து விடுகின்றது.
3.விஷத் தன்மைகள் இரத்தத்தில் கலந்த பின் இருதயத்தையும் செயலிழக்கச் செய்கிறது.
4.இதனால் “உப்புச் சத்து” என்ற நிலை உருவாகி வருகின்றது.

உப்பை வெளியிலே வைத்தால் அந்த வைத்திருக்கும் இடங்களில் எப்படிக் கசிவாகின்றதோ இதைப் போல நுரையீரல் கல்லீரல் போன்ற உறுப்புகளில் கசிவு அதிகமாகி விட்டால் அதனால் அவர்களுக்கு அடிக்கடி “வாந்தி” வரும்.

சர்க்கரையைச் சமப்படுத்தும் சக்தியும் இழந்து விட்டால் அதுவும் இணைந்து விடும். இத்தகைய நிலை ஏற்பட்டால் உணர்வின் உந்து விசை அதிகமாகிவிடும். இரத்தக் கொதிப்பும் இதனுடன் சேர்ந்து கொள்ளும்.

இத்தகைய நிலைகள் தோன்றி நமக்குப் பல தொல்லைகளைக் கொடுப்பதும் வேதனை உணர்வு அதிகமாகி இந்த உடலை விட்டே ஆன்மா பிரியும் தன்மையும் வந்துவிடுகின்றது.

ஆனால் இத்தகைய நோய்கள் இருப்பினும் இது போன்ற நிலைகளிலிருந்து விடுபடுவதற்கு
1.அதிகாலை துருவ தியானத்தின் மூலம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்று
2.அதைச் சீராகப் பயன்படுத்தினால் உங்கள் உடலில் எத்தகைய நோய்கள் இருப்பினும் அதை நீக்க முடியும்.

யாம் (ஞானகுரு) சொல்லும் முறைப்படி தியானித்தால் உங்கள் உடலில் அறியாது சேர்ந்த தீய வினைகளால் விளைந்த நோய்களை நீங்களே அகற்ற முடியும்.

1.உங்கள் எண்ணத்தால் தான் நோய் வந்தது…
2.அதே எண்ணத்தைக் கொண்டு நோய் நீக்கும் அருள் சக்தியை எடுக்கப் பழகிக் கொண்டு
3.அறியாது வந்த நோயினைப் போக்க முடியும் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.
4.உங்களால் முடியும்… நீங்கள் அந்தச் சக்தியைப் பெறுவீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா… என்ற இந்த நினைவுடன் எண்ணி ஏங்கித் தியானித்து விட்டு மீண்டும் கண்ணை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ரத்த நாளங்களில் கலந்து உடல் முழுவதும் படர வேண்டும் என்று திரும்பத் திரும்ப கண்ணின் நினைவை “உடலுக்குள் சர்க்குலேசன் (CIRCULATION) செய்வது போன்று செலுத்துங்கள்…!”

உதாரணமாக… கிட்னியில் குறைபாடு இருந்தால் உங்கள் நினைவினை அங்கே அந்தப் பாகத்தில் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் சிறுநீரகங்கள் முழுவதும் படர்ந்து சிறுநீரகத்தை உருவாக்கிய அணுக்கள் நஞ்சினை நீக்கிடும் அருள் சக்தி பெற வேண்டும். அந்த உறுப்பு சீராக இயங்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

வாத நோயோ கீழ்வாதம் முடக்குவாதம் போன்ற நோயோ ஆஸ்த்மாவோ சர்க்கரைச் சத்தோ இதைப் போல எந்த நோயாக இருப்பினும் அந்தந்த நோய் நீங்கி எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் பரவ வேண்டும். எங்கள் உடலில் அந்த அரும் பெரும் சக்தி படர வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

1.கண்ணன் கருவில் இருக்கும் குழந்தைக்கு உபதேசித்தான்… என்பது போல்
2.உங்கள் கண்ணின் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அந்தப் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி விட்டு
4.அடுத்த கணம் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி
5.இரத்த நாளங்களில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை கலக்கச் செய்ய ஏங்கித் தியானியுங்கள்.

டி.பி.யிலிருந்து கேன்சர் வரை எந்த நோயாக இருந்தாலும் இதைப் போல் உங்கள் எண்ணத்தை உடலுக்குள் செலுத்தினால் அந்த நோயை நிச்சயம் நீக்க முடியும். உடல் நலம் பெற முடியும். மகிழ்ந்து வாழ முடியும்.

ஐம்புலனை இயக்கும் நாடிகள் மூலம் தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஐம்புலனை இயக்கும் நாடிகள் மூலம் தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதனின் அன்றாட சமுதாய வாழ்க்கையில்
1.காட்சிப் புலனறிவு… (கண்)
2.செவிப் புலனறிவு… (செவி)
3.உணர்வுப் புலனறிவு… (மெய்)
4.நுகர்தல் புலனறிவு… (மூக்கு)
5.சுவைத்தல் புலனறிவு… (வாய்) என்று
6.ஜீவ சரீரம் கொண்டு அறிந்து தெளிந்து கொண்டே உள்ளோம்.

இருந்தாலும் புலனறிவால் கவரப்பட்ட அந்த நிலைகள் ஏற்கனவே நமக்குள் பதிவான நிலைகளுடன் கலக்கப்படும் பொழுது… தோன்றும்
“எண்ணங்களும்… உணர்வுகளும்…” இரு வினைச் செயல்களாகச் செல்கிறது.

ஐம்புலனறிவு என்ற அந்தக் கருவிகளின் செயலில்
1.சரீரத்தில் உணர்வுகளின் வழியாக மோதிடும் இரு வகைச் செயல்பாட்டின் முறைகளை
2.அறிவின் ஆற்றல் தொடர் கொண்டு தெள்ளத் தெளிந்த மகரிஷிகளும் ஞானிகளும்
3.இந்த மனித சமுதாயம் உயர் நிலை பெறுவதற்காக உணர்த்திய மருத்துவம் மனோத்துவம் என்ற வகைகளில்
4.அவர்களால் புகட்டப்பட்ட அந்த நல்லாக்கப் பணிகளை
5.இன்றைய சமுதாய அமைப்பு முழுமையாக ஏற்றுக் கொண்டு நற்பயன் பெற்றதா…?

சக்தி சிவன் என்ற மூச்சையே வகைப்படுத்தி அதிலுள்ள உண்மைகளைக் கூறினாலும் நடைமுறை வேறாகி விடுகிறதப்பா…! உட்பொருளைக் கூறுவதிலும் தயக்கம் தான்.

எண்ணம் கொண்டு நல் சுவாசத்தினால்
1.ஆத்ம பரிசுத்தமும்… ஆத்ம பலமும்… பேரின்பப் பெரு வாழ்வும் பெற
2.இங்கே உணர்த்தப்பட்டுக் கொண்டு வரும் தியான வழி மூலம்
3.உடல் என்ற கூட்டில் “சிவனின் சித்திரம் தீட்டப்பட…!” சரீரம் காக்கப்பட வேண்டுமப்பா…!

“ஈஸ்வரா…!” என்று ஒலி நாதம் கூட்டுகின்ற சுவாச ஓட்டம் கண்டத்தில் (தொண்டை) செயல்படும் பொழுது அங்குள்ள நாடிகளின் சுவாசமே கதியாகும் விதம் உணர்வின் உந்துதல் கூட்டிச் செயல்படும் நிலைக்கு “ஒலிக் காற்று…” என்று பெயர். அது சாப்பிடும் ஆகாரத்தை உள்ளிழுத்து விழுங்கவும் செயல்படுகின்றது.

விழி (கண்கள்) படம் எடுத்துச் செயல்படும் நிகழ்வுக்குச் சுவாச ஓட்ட நாடிகள் அங்கு செயல்படுவதை “விழிக் காற்று” என்று பெயர். இரு விழிகளையும் செயல்படுத்தும் அந்த நாடியானது மூலாதாரம் வரை செல்கிறது.

விழிப் பார்வையில் செயலில் காட்சிகள் மட்டுமா காண்கின்றாய்…?

சோம்பல் ஏற்படுத்துவதும்… வேதனையின் பால் முக்கல் முனகல் முதலிய சரீரம் கொண்டு உணர்ந்திடும் அனைத்துச் செயல்களும்…
1.சுவாசத்தில் சுதியும்… விழிக் காற்றும்…
2.எண்ணம் கொண்டே செயல்படுத்தும் நாடிகளும் செயல்படுகின்றன.

விழிகளைக் காத்திடும் ரப்பைகள் (இமைகள்) செயலுக்கும் ஓர் நாடி செயல்படுகிறது. காற்றின் செயலாக ரப்பைகள் இமைத்தலும் மற்றும் உணர்வுகளின் வழியாக மனிதன் சிரிக்கின்ற சிரிப்பும் அந்தச் சிரிப்புக்கும் அழகு உணர்வுகளுக்கும் செயல்பட்டே மூலாதாரத்துடன் இணைந்து செயல்படுகிறது,

1.கண்ணில் நீர் பெருக்கமும்
2.உடலையே கலகலத்துக் குறு குறுக்கும் உணர்வால் “தும்முதல்…!” என்று செயல்படுத்தும் காற்றும்
3.நாசி வழிப் பாதையில் ஓரிட அமைவு பெற்ற நாடியாகச் செயல்படுகின்றது.

எண்ணம் கொண்டு தான் அனைத்துமே…! என்றாலும் பிணிகள் இந்தச் சரீரத்தில் தோற்றம் காட்டுவதெல்லாம்
1.ஆங்காங்கு அமையப் பெற்ற சுவாச நாடிகளின் வழியும்
2.ஆங்காங்கு சுதியுறும் காற்றின் செயல் கொண்டே உபாதைகளை (வலிகளை) உணர்த்தும்.

இதை எல்லாம் தெளிவாக உணர்தல் வேண்டும்.

தீமை வரும் பொழுதெல்லாம்… டி.வி.யில் சேனலை மாற்றுவது போல் நம் நினைவைத் துருவ நட்சத்திரத்திற்கு மாற்ற வேண்டும்

தீமை வரும் பொழுதெல்லாம்… டி.வி.யில் சேனலை மாற்றுவது போல் நம் நினைவைத் துருவ நட்சத்திரத்திற்கு மாற்ற வேண்டும்

 

இந்தத் தியான வழியினைக் கடைப்பிடித்து வருவோர் எப்பொழுதுமே “விழித்திருத்தல்” (CONSCIOUS) வேண்டும். சந்தர்ப்பவசத்தில் எத்தகைய தீமை வந்தாலும் அதைத் தடுக்கும் விதமாக நாம் எடுக்கும் தியானத்தை உஷார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்படுகின்றோம். அவருக்கு உதவி செய்வதற்காகச் செல்கின்றோம். பார்த்ததும் அவருடைய கஷ்டத்தைக் கேட்டறிகின்றோம்.

அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

அவருடைய நோயினைக் கேட்டு அறிந்து கொண்டபின் ஈஸ்வரா…! என்று உயிரை வேண்டி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்… எங்கள் ஜீவணுக்கள் ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று நம் ஆன்மாவைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும்.

நோயுற்றிருக்கும் அந்த நண்பனிடம்…
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறுவாய்..
2.நோயிலிருந்து விடுபடுவாய்… உன் உடல் நலம் பெறும்…! என்ற உணர்வுகளைச் சொல்ல வேண்டும்.
3.அவருடைய வேதனை நமக்குள் புகாதபடி இப்படி விழித்திருத்தல் வேண்டும்

ஏனென்றால் வேதனைகளை எல்லாம் வென்றது துருவ நட்சத்திரம்.

1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று
2.நமக்குள் தீமை வராது நம் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொண்டு
3.மற்றவர்களுக்கும் இந்த உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால்
4.அவர்களையும் காக்க முடியும்… நம்மையும் காக்க முடியும்.

இத்தகைய தெளிவான உணர்வு கொண்டு செயல்பட்டு நோயுற்றவரிடம்… துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று ஏங்கி இருங்கள்… உங்கள் நோய் நீங்கிவிடும்…! என்று சொல்லுங்கள். இந்த உணர்வை நாம் அவர்களுக்குள் வித்தாகப் பதித்து விட வேண்டும்.

ஏனென்றால் நோயிலிருந்து அவர் விடுபட முடியாத நிலை இருக்கும் பொழுது இந்த உணர்வைப் பாய்ச்சி அவருக்குள் இந்த உணர்வை ஏற்ற வேண்டும்.

அவரும் நாம் சொன்னபடி இதை எண்ணத் தொடங்கினால் அவர் நோய் நீங்கக் காரணமாகின்றது. அவர் ஓரளவுக்கு மன உறுதியைப் பெறவும் இது உதவுகின்றது.

நமது வாழ்க்கையில் எதிர்ப்படும் பல தீமையின் உணர்வுகளை நாம் கேட்டறிந்தாலும் மேலே சொன்ன முறைப்படி செய்து… துருவ தியானத்தில் எடுத்துக் கொண்ட இந்த உணர்வின் வலிமை கொண்டு… நம்மைக் காத்து நம் நண்பர்களையும் காத்திட வேண்டும்.

ரேடியோ டிவிகளில் ஒலி/ஒளிபரப்பு செய்யும் பொழுது எந்த அலை வரிசையில் வைக்கின்றனரோ அந்த அலையைத் தான் அது கவர்கின்றது… நாம் கேட்கவோ காணவோ முடிகின்றது.

ஆனால் பிடிக்கவில்லை என்றால் வேறு அலை வரிசைகளை உடனுக்குடன் மாற்றுகிறோம்.

இதைப் போன்றுதான் அன்றாட வாழ்க்கையில் நாம் பலருடைய உணர்வுகளைக் கேட்டாலும் நுகர்ந்தறிந்தாலும் அந்தத் துயரத்தின் உணர்வுகள் நமக்குள் வந்தால் அடுத்த கணமே…
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.இந்த அலை வரிசையை நமக்குள் எடுத்துத் தீமைகள் புகாது தடுத்து நிறுத்த வேண்டும்.

நாம் எடுத்துக் கொள்ளும் அந்த துருவ நட்சத்திரத்தின் உண்ர்வு கொண்டு நண்பனைக் காக்கவும் மற்றவரைக் காக்கவும் இது உதவும்.

இதை ஒரு பழக்கமாக நாம் வளர்த்துக் கொண்டால் நமது வாழ்க்கையில் அறியாது சேரும் தீய வினைகள் இருந்து உடனுக்குடன் நாம் விடுபட முடியும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் அந்த மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி நடந்து பிறவியில்லா நிலை அடைந்த அந்த அருள் ஞானிகளின் உணர்வினை நாம் பெற்று நமது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த உடலுக்குப்பின் பிறவியில்லா நிலையை நாமும் அடைதல் வேண்டும்.

இதன் மூலம் பல கோடிச் சரீரங்களைக் கடந்து நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரான ஈசனை நாம் யாரென்று அறிய முடிகின்றது
1.அவனையே வேண்டி… அவனுள்ளேயே கேட்டு
2.நாம் விரும்பியதை இங்கே உருவாக்க முடியும்

தெளிந்த மனம் கொண்டு நாம் அருள் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்ததை அவன் (உயிரான ஈசன்) உருவாக்கி அவன் வழியிலேயே நம்மை வழி நடத்தி நம்மைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வான்.

ஆகவே ஞானிகள் காட்டிய வழி சென்றால் இந்த வாழ்க்கையில் நாம் பேரின்பப் பெருவாழ்வு என்ற நிலை அடையும் சக்தி பெறுகிறோம்.

நாடிகள் சங்கமிக்கும் நெற்றிப் போட்டு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நாடிகள் சங்கமிக்கும் நெற்றிப் போட்டு பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதனின் ஜீவ பிம்ப சரீரத்தில் உள்ள உட்கருவிகள் செயல்படும் விதங்களை உண்ர்ந்து கொண்டால் பல கிளையாக மூச்சலைகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். நல் ஆக்கத்தின் செயலுக்கு அனைத்துச் சக்திகளையும் அளிப்போம்.

சூரிய கலை என்ற சிவ நாடியும் சந்திரகலை என்ற சக்தி நாடியும் சரீரத்தில் செயல்படுகிறது. இந்த இரு நாடிகளுக்கும் பொதுவான அக்கினி நாடி சரீரத்தின் மையப் பகுதியில் நேர்கோடாகச் செயல் கொள்கிறது.

அக்கினி நாடியானது மூலாதாரத்தில் மூல அக்கினியுடன் ஆங்குள்ள நான்கு தலை போல அமையப் பெற்ற நாடியுடன் இணைவதற்கு முன் கண்ட நாடி மார்பு நாடி நாபி நாடி குய்ய நாடி ஆகியவைகளுடன் இணைந்தே செயல்படுகிறது.

மூலாதாரத்தில் செயல்படும் இந்த மறைமுக நாடியை அனுசரித்தே சிவ சக்தி நாடிகள் (சூரிய சந்திர நாடிகள்) செயல்படுகின்றன.
1.இந்த மூன்று நாடிகளும் சந்திக்கும் “நெற்றிப் பொட்டே…”
2.”திரிவேணி சங்கமம்…!” என்று சூட்சமப் பொருளாகக் கூறப்படுகின்றது.

சிரசின் உச்சிப் பகுதியில் ஆயிரம் தலையுள்ள நாடிகள் வட்ட வடிவில் கிளைத்து அதனுள் மறைமுகமாக எட்டு நாடிகள் செயல்படுவதைத்தான் “ஆயிரத்தி எட்டு இதழ் கொண்ட தாமரை…” என்று கூறுவதின் மறை பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

சிற் சில காலகட்டங்களில் சிரசினுள் சிறு மூளைப் பகுதி இருக்கும் இடத்திற்குக் கீழ் பிடரி என்று சொல்லும் இடத்தில் வெப்பம் அலைகளாக வெளிப்படுவதை உணரலாம்.

இந்த வெப்ப அமில குணங்களை மீண்டும் சுவாசத்தில் ஈர்த்துக் கொள்ளும் செயலும் உண்டு.

எட்டு சூட்சம நாடிகள் சிறு மூளைப் பகுதியிலிருந்து வெளித் தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திட வாசனை மலர்களைச் சூடிக் கொள்ள அன்று வழி காட்டினார்கள் ஞானிகள்.

ஒவ்வொரு மலரிலும் அதற்கென்று வாசனை இருந்தாலும் இயற்கை அளித்திட்ட அந்த நறுமணங்களில் ஒன்றுக்கொன்று எதிர் மோதல் செயல்பாடுகள் உண்டு.

1.சிறு மூளை வெளித்தள்ளும் வெப்ப அமில குணங்களை நல் நிலைப்படுத்திக் கொள்ள
2.அன்றைய காலங்களில் நறுமண மலர்களைச் சூடிக் கொள்ளும் வழக்கம் பெண்களுக்கு மட்டுமல்லாது ஆண்களுக்கும் இருந்தது.

ஆனால் இன்றைய கால நடைமுறைகளுக்கு அது பொருத்தமற்றதாக மாறு கொண்டு விட்டது.

1.நாம் காட்டும் தியான வழித் தொடரில்
2.எண்ணத்தின் உந்தும் செயல் கொண்டு
3.சிரசின் பின்புறம் சிறுமூளைப் பகுதியில் ஓர் காற்று மண்டலத்தையே ஏற்படுத்தி
4.ஆத்ம சக்தியை வலுக் கூட்டிக் கொள்ளும் சூட்சமும் உள்ளது.

சரீரத்தில் உள்ள உள் கருவிகளுக்கு ஜீவ ஆக்கமளித்திடும் காற்று நாடிகளை முழுமைப்படுத்தி அளித்திடவே இதை எல்லாம் சிறுகச் சிறுக உணர்த்துகின்றேன்.

விஞ்ஞான உலகில் வரும் விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி அழியும்… ஞானத்தின் தன்மை வளரும்

விஞ்ஞான உலகில் வரும் விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று மோதி அழியும்… ஞானத்தின் தன்மை வளரும்

 

இந்த உடல் வாழ்க்கையில் நாம் சேர்த்த சொத்து நம்முடன் வருகின்றதா…? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.
1.நமக்கு அழியாச் சொத்து அந்தத் துருவ நட்சத்திரம் தான்.
2.அதைத் தான் கொண்டு போக வேண்டும்.

என் பிள்ளை என்றோ அல்லது என் குடும்பம் என்றோ எனக்கு இடைஞ்சல் செய்கின்றார்கள் என்று யாரை எண்ணி இந்த உணர்வை அதிகமாக வளர்க்கின்றோமோ அந்தச் சொத்தைத் தேடி வைத்தோம் என்றால் உடலை விட்டுச் செல்லும் போது… அங்கே… அந்த உடலுக்குள் தான் புக முடியும்.

புகுந்த பின் அவர்களையும் தரித்திரம் ஆக்கிவிட்டு நஞ்சின் உணர்வினைச் சேர்த்து அடுத்து ஆடாகவோ மாடாகவோ தான் பிறக்க நேரும்.

இல்லையென்றால் பேயாகப் போய் மற்ற குடும்பத்தையும் அழித்து நாய் பாம்பு தேள் போன்ற விஷமான உயிரினங்களாகப் பிறக்க வேண்டி வரும்.

இது போன்ற தன்மையிலிருந்து மீள வேண்டும் என்பதற்குத்தான் குருநாதர் எனக்கு (ஞானகுரு) அனுபவ ரீதியில் எல்லாம் கொடுத்தார்.

அது மட்டுமல்ல… இந்த விஞ்ஞான உலகில் இன்று கடுமையான விஷங்கள் பரவிக் கொண்டிருக்கின்றது. எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த விஷத்தன்மைகள் நம்மைப் பாதித்து விடக் கூடாது.

ஏற்கனவே இரண்டாயிரத்தில் உலகம் அழியும் என்றார்கள். ஆனால் விஷ உலகம் தான் அழிகின்றது.

இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின் கருவில் வளர்ந்த ஏராளமான குழந்தைகளுக்கு ஆசீர்வாதம் (ஞானகுரு) கொடுத்துள்ளோம்.

கருவில் வளரும் அந்தக் குழந்தைகள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். இந்த உலகைக் காக்கும் அருள் ஞானம் பெற வேண்டும் என்று அந்த ஆர்வத்தில் வரும் பொழுது அந்தத் தாய்மார்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்திருக்கின்றோம்.

ஆதியிலே தாயின் கருவிலே அகஸ்தியன் இருக்கும் போது அவன் எப்படி அந்த விண்ணுலக ஆற்றலைப் பெற்றானோ… உலகை அறிந்தானோ… அவன் உணர்வை எடுத்து வளர்ந்த அந்த மாதிரியான குழந்தைகள் உருவாகி வளர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்த விஞ்ஞான உலகில் வரும் தீமைகளை அவர்கள் நீக்கப் போகின்றார்கள். விஷத்தின் தன்மை ஒன்றுடன் ஒன்று அது மோதி அழியும். ஞானத்தின் தன்மை வளரும்.

1.அகஸ்தியன் இந்தத் தெற்கிலே தான் தோன்றினான்
2.மீண்டும் இந்த தெற்கிலிருந்து தான் தீமைகளை நீக்கும் சக்தியும் உருவாகின்றது.

விஞ்ஞான உலகில் பேரழிவு வருகின்றது அங்கே…!
1.ஆனால் ஞானத்தின் வழி இங்கே வருகின்றது.
2.இது பேரழிவிலிருந்து மனிதனைத் தப்பச் செய்யும்.

உங்களை நீங்கள் நம்புங்கள். இதனுடைய நிலைகளை நீங்கள் அனுபவித்துப் பார்க்கலாம். இந்த உடலை விட்டுச் சென்றால் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

துன்பங்கள் ஒவ்வொரு நிமிடத்தில் அறியாது வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும். அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெற வேண்டும் என்று இதை கூட்டிக் கொள்ளுங்கள்.

ஒரு நோயாளியைப் பார்க்க நேர்ந்தால் அவர் நோய் நீங்கி உடல் நலமாக வேண்டும் என்ற இந்த உணர்வை மட்டும் நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்.

அதுவே நமக்குச் சொந்தமாக அழியாத சொத்து ஆகின்றது உடலுக்குப்பின் பிறவி இல்லை என்ற நிலை அடையலாம்.

ஆனால் என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிச் செய்தான் என்று அதை எல்லாம் சொந்தமாக்கி விடாதீர்கள். ஏனென்றால் அந்தச் சொந்தத்தை எடுத்தால் மீண்டும் பிறவிக்கு வந்து விடுகின்றோம்.

ஆகவே…
1.அருளைச் சொந்தமாக்குவோம்
2.இருளை அகற்றுவோம்
3.மெய்ப் பொருள் காண்போம்
4.மெய் வழி வாழ்வோம்
5.அருள் ஞானம் பெறுவோம்
6.அருள் வாழ்க்கை வாழ்வோம்…!

இயல்பான வாழ்க்கையில் கனமான சுவாசம் இருக்கக்கூடாது – ஈஸ்வரபட்டர்

இயல்பான வாழ்க்கையில் கனமான சுவாசம் இருக்கக்கூடாது – ஈஸ்வரபட்டர்

 

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தையும் கால அடிப்படையில் ஞானமாக அறிந்து கொண்ட செயலுக்கு அறுபது நாழிகைகளில் அன்றைய நடைமுறை வாழ்க்கையில் சற்றேறக்குறைய அறுபத்தி ஓராயிரத்தி இருநூற்றி ஐம்பது மூச்சலைகளைக் கணக்கிட்டனர் ஞானிகள்.

ஆனால் ஆத்ம வலுவைப் பெற்று விட்டால் இயற்கையின் சுவாச கதியில் சரீரத்தில் சுவாச சுதி குறைவுபடும் என்றனர்.
1.குறைவுபடும் என்பது கனமற்ற பேரானந்த சுவாசத்தைச் சுட்டிக் காட்டி
2.சுவாச கனத்தை நீக்கி நற்சுவாசம் எடுத்திடவே குறிப்பு காட்டப்பட்டது.

நாடிகளின் வழி ஓடும் சுவாசக் காற்று
1.அதிகாலையில் மூலப்பகுதியில் அறுநூறு முறைகள் ஓடுகின்றன என்றும்
2.ஆண் பெண் குறியில் உச்சிப் பொழுதுக்கு முன்பாகவே ஆறாயிரம் சுவாச ஓட்டங்களும்
3.உச்சிப் பகுதியிலிருந்து நாபிப் பகுதியின் சுவாச ஓட்டம் ஆறாயிரம் முறைகளும்
4.இருதயப் பகுதியின் சுவாச ஓட்டம் நடு ஜாமம் வரை ஆறாயிரம் முறைகளும்
5.அதிகாலைப் பொழுதிற்குள் கண்டப் பகுதியில் ஆயிரம் முறைகளும்
6.நெற்றிப் பொட்டில் காற்றின் நரம்போட்டச் செயலில் ஆயிரம் முறைகளும்
7.சிரசின் உச்சியில் ஆயிரம் முறைகளும்
8.ஆக இருபத்தி ஓராயிரத்தி அறுநூறு சுவாச ஓட்டங்களே நடைபெறும்.

“சுவாச ஓட்டம் குறைகிறது…!” என்று விபரக் கணக்கிட்டுக் காட்டினால் மூச்சை அடக்கிவிடும் செயலுக்கு வந்துவிடக் கூடாது.

நற்குணங்களாக நல்லெண்ணம் கொண்டாலே சுவாசத்தின் கனம் குறைந்துவிடும். இயற்கையாக ஓடும் சுவாசத்தில் “எண்ணத்தின் வலுவே முக்கியம்…!”

இந்த உண்மைகளை எல்லாம் கூறுவது என்பது… அறிந்து கொள்வதற்காகவே தவிர மூச்சலைகளை எண்ணச் சொல்லவில்லை. அன்று ஞானத்தால் ஞானிகள் தெளிவுபடுத்தியதையே எளிமையாக உணர்த்தினேன்.

என்று உரைத்தது…? என்ற வினா எழும்பலாம். பரிணாம வளர்ச்சி பற்றிப் பல பாடங்களில் கூறி வந்துள்ளேன்.

இன்று பக்குவப்படுத்திச் சமைத்திடும் அறுசுவை உணவு வகைகள் அன்றைய மனித ஞானத்தில் உதித்ததுவா…? உணவின் முறைகளே எத்தனை பக்குவம் பெற்றுவிட்டது…?

ஆரம்ப உயிரணு முதல் கோடி கோடியாகப் பல்கிப் பெருகிவிட்ட உயிர்ச் சக்திகள் மனிதன் என்ற வளர்ச்சியின் நிலைப் பக்குவம் பெற்றிட… பரிணாம முதிர்வு எத்தனை எத்தனை காலங்கள் கொண்டே ஞான வளர்ப்பு பெற்றிருக்கின்றது…?

கரும்பின் சாறு சிதறிடாமல் காக்கின்ற கணுவுகள் போல் உயர் ஞான சக்தியின் வளர்ப்பை மகரிஷிகள் அன்பு கொண்டே காத்து வந்துள்ளனர்.
1.கரும்பின் சாறை எடுத்து உண்ணுவதற்கே எளிதாகத் தருகின்றோம்.
2.பெற்று வளர்ச்சி நிலை பெற ஆசிகள்.