உட்கொள்ளும் உணவு பிடிக்கவில்லை என்றால் எப்படி வெளியே தள்ளுகிறோமோ அது போல் தீமைகளை உந்தி வெளியே தள்ள வேண்டும்

உட்கொள்ளும் உணவு பிடிக்கவில்லை என்றால் எப்படி வெளியே தள்ளுகிறோமோ அது போல் தீமைகளை உந்தி வெளியே தள்ள வேண்டும்

 

காலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை உங்களைப் பெறச் செய்கின்றேன்… அதற்குத்தான் உபதேசங்கள் வாயிலாக இங்கே பதிவாக்குகின்றேன் (ஞானகுரு)

மீண்டும் மீண்டும் இதை நினைவு கொண்டால் அந்த அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்கின்றது. இருளைப் போக்கிடும் சக்தியாக வளர்கின்றது.

1.ஆகவே உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் சங்கடங்களைப் பார்க்கின்றீர்களோ
2.உடனே ஓ…ம் ஈஸ்வரா… என்று உங்கள் கண்ணின் நினைவைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நுகர்ந்து உங்கள் உடலுக்குள் இணைத்துக் கொள்ளுங்கள்.

அதிகாலையில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைச் சூரியன் துருவப் பகுதி வழியாகக் கவர்ந்து நமக்கு முன் பரவச் செய்கின்றது அந்த நேரத்தில் அதை நுகரும் பொழுது உங்களுக்குள் அதீதமாக வளருகின்றது.

ஏனென்றால் அன்றாடம் காலையில் இருந்து இரவு வரை பார்த்தால் எத்தனையோ உணர்வுகள் நம் மீது மோதுகின்றது. சலிப்பு சஞ்சலம் சங்கடம் வெறுப்பு கோபம் வேதனை போன்ற இத்தனை உணர்வுகளும் நமக்குள் பதிவாகின்றது.

1.இந்த பதிவின் தன்மைகள் அனைத்தும் நம் ஆன்மாவில் இருக்கின்றது.
2.நம் உடலில் உள்ள அணுக்கள் அது ஒவ்வொன்றையும் வரிசையாக நுகர்ந்து சுவாசிக்க ஆரம்பித்தால்
3.அந்த உணர்வுகள் உயிரிலே மோதிய பின் அந்த எண்ணங்கள் எல்லாம் வரத் தொடங்குகின்றது.

நாம் சும்மா உட்கார்ந்து இருந்தாலும் கூட… அவன் சண்டை போட்டான்… இவன் ஏமாற்றினான்… தொழில் இந்த மாதிரிப் போய்விட்டது… என்ற எண்ணங்கள் எல்லாம் வருகின்றது.

ரோட்டில் சென்றாலும்… நமக்குச் சம்பந்தமே இல்லை என்றாலும் கூட எத்தனையோ இது போன்று நமக்குள் அன்றாடம் பதிவாகிக் கொண்டே வருகின்றது.

இப்படிப் பதிவான உணர்வுகள் விளைய ஆரம்பிக்கும் போது நமக்குள் அந்த உணர்வுகள் அதனதன் உணர்வை உணவாக எடுத்து ஆன்மாவிலிருந்து நுகருகின்றது.

நுகரும் பொழுது உயிரில் பட்ட பின் அந்தந்த உணர்வை அறிய முடிகின்றது இந்த உணர்ச்சிகள் இரத்தத்தில் கலக்கிறது அப்பொழுது நல்ல அணுக்கள் சோர்வடைகிறது… சிந்திக்கும் தன்மை இழக்கப்படுகின்றது.
1.இந்த இடத்தில் யார் தவறு செய்தது…?
2.யாரும் தவறு செய்ய வில்லையே…!

ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில் வேதனைப்படுவர்களைப் பார்க்கின்றோம். இந்த வேதனையான உணர்வின் தன்மை உயிரிலே பட்டு அது வேதனைப்படச் செய்யும் அணுக்களாக உருவாகின்றது.

ஆனால் இது போன்ற தீமைகளை எல்லாம் துருவ நட்சத்திரம் நீக்கியது. அந்த அரும் பெரும் சக்திகளை நுகரும் சந்தர்ப்பத்தைத் தான் இப்பொழுது ஏற்படுத்துகின்றோம் இந்த உபதேச வாயிலாக.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்தால்
2.அது தீமையை நீக்கும் சந்தர்ப்பமாக நமக்குள் வருகின்றது.

இயற்கையில் சந்தர்ப்பவசத்தால் நுகரும் உணர்வு தான் பரப்பிரம்மம் ஆகின்றது. ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தை மனிதன் உருவாக்கி அருள் உணர்வுகளை உயிர் வழி நுகர்ந்து உருவாக்கினால் அது பிரம்மம் ஆகின்றது. பிரம்மாவை சிறைப்பிடித்தான் முருகன்…!

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலைகள் கொண்டு தீமை வருகிறது என்று தெரிந்து கொண்டபின் அந்தத் தீமையை நீக்க வேண்டும் என்று உணர்வாக எடுத்தால் தான் அதை உருவாக்க முடியும்.

இதுவும் சந்தர்ப்பம் தான். அப்பொழுது தீமையை நீக்கும் சக்தியாக அது வரும். இது நம்மால் முடியாதா…?

என்னைத் திட்டினான்…! என்று சந்தர்ப்பவசத்தால் எடுத்துக் கொண்டபின் “இரு நான் உன்னைப் பார்க்கிறேன்…!” என்று நாம் சொல்கின்றோம். இந்தத் தீமையான உணர்வு நமக்குள் உட்புகாது தடுக்க வேண்டும் அல்லவா…?

தடுக்காமல்… சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகளை அப்படியே விட்டுவிட்டால் நிச்சயம் அந்தத் தீமையான உணர்வுகள் உடலிலே விளையும்.

சாபங்கள் இடுவதும்… கொதித்துப் போய்ப் பேசுவதும்… அடிப்பேன் என்பதும்… குத்துவேன் என்பதும்… கொன்று விடுவேன்… என்றும் இது போன்ற உணர்வெல்லாம் உடலுக்குள் சேர்ந்து கொள்ளும்.

1.விளைந்த பின் உடலிலுள்ள ஒவ்வொரு அணுவிலும் ஊசி குத்துவது போன்று குத்த ஆரம்பிக்கும்.
2.அந்த மாதிரியாக ஆன பின் ஐய்யய்யோ.. அம்மம்மா…! வேதனையாகச் சொல்லும் நிலை தான் வரும்.

பிறரை கொல்ல வேண்டும் எண்ணினோம்…! அந்த உணர்வுகளை நுகர்ந்த பின் அது நம் உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று புசிக்கத் தொடங்குகிறது.

அப்பொழுது நாம் தான் அந்த வேதனையை அனுபவிக்கின்றோம்.

பிறரைக் குத்த வேண்டும் என்று எடுத்துக் கொண்ட அந்த உணர்வுகள் இரத்தத்தில் கலந்த பின் அதனின் வீரியத் தன்மை உடலில் உள்ள நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது.

1.ஆகவே நாம் அருள் உணர்வு பெற வேண்டும் என்று இங்கே தடுத்து நிறுத்தி விட்டு
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி மற்றவர்களும் பெற வேண்டும் என்று அவர்களுக்கு ஊட்டி
3.அந்தத் தீமையை உந்தித் தள்ள வேண்டும்… அப்போது தான் நம்மைக் காக்க முடியும்.

அத்தகைய “ஒரு காக்கும் சக்தி வேண்டும்…” என்பதற்குத்தான் அதிகாலை நேரத்தில் உயர்ந்த உணர்வின் தன்மையாக அந்தத் துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

பதிவாக்கிக் கொண்ட பின் அடிக்கடி நீங்கள் அதை நினைவுக்குக் கொண்டு வந்து தீமையை அகற்றும் வல்லமையை நீங்கள் பெற வேண்டும்.

மூச்சுக் காற்று பற்றிய இரகசியம் – ஈஸ்வரபட்டர்

மூச்சுக் காற்று பற்றிய இரகசியம் – ஈஸ்வரபட்டர்

 

“உஷ்ண நாதமே காக்கும் விஷ்ணுவாக…!” என்ற சொல் சூட்சமத்தில் மனித சரீரத்தில் செயல் கொள்ளும் உஷ்ண நாதம் உடலினுள் ஓடிடும் 72000 நாடி நரம்புகளில் செயல்படுகிறது.

அவைகள் செயல்படும் கதியை… எண்ணம் கொண்டு செயல்படுத்தும் பஞ்சேந்திரியங்களும்… அவைகளின் தொழில் நிகழ்வுக்குப் பஞ்ச பூதங்களில் காற்றின் அமிலக்கூறு மின்காந்தச் செயலாக நடைபெறுகின்றது.

அதி தீவிரச் செயல்பாடு கொண்ட நாடிகள் ஆயிரத்து எட்டும் சரீரத்தில் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தளைகள் கிளைத்துள்ள சுவாசத்தின் முக்கியக் கேந்திரத்தில் செயல்படும் நாடி ஒன்றும் கிளைத்துச் செல்லும் அந்த இடத்தில் வட்டமிட்டுச் சுழன்றே செல்கின்றன.

பச்சை வண்ண ஒளி காட்டும் பத்துத் தளைகள் கிளைத்தது போல் காணப்படும் தொப்புள் கொடி பஞ்ச பூத சரீரத் தத்துவத்தில் நீரமில சக்தி கொண்டது.

அண்டத்தையே பிண்டத்தில் கண்ட ஆத்ம ஞானிகள் நல்லெண்ணச் சுவாசம் கொண்டு இந்தச் சரீர கதியின் செயல்பாட்டைக் கொண்டே பரவெளியில் படர்ந்துள்ள பரமாத்மாவை உணர்ந்து தெளிந்தனர்.

பஞ்ச பூதத் தத்துவப்படி (ஆகாயம் நீர் காற்று அக்கினி மண்)
1.”ஆகாயம்…” என்பதே கண்டம் என்றிட்ட சரீரத்தில் உள்ள தொண்டைப் பகுதியும்
2.அங்கு செயல்படும் நாடிகள் தொண்டையின் குழிப்பகுதியில் பதினாறு தலையுள்ள கிளைகள் போல் ஓடுவதும்
3.ஆகாயத்தின் மேகத்தின் வண்ணம் போலத் தோன்றி மிகுந்த ஒளி போல் விளங்குவதையும்
3.அந்த நாடிகளே ஜீவ பிம்பச் சரீரத்தில் சுவாசத்தின் தன்மைக்குச் செயல்படும் நாடிகள் என்றும்
4.பதினாறு தலையுள்ள அந்த நாடிகள் ஒன்றாக இணைந்து சர்ப்பத்தின் அசைவைப் போல் தெளிவாக உருவம் காட்டி
5.”பஞ்ச பூதத் தத்துவத்தில் நீரமில சக்தி…” செயல்படும் தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பத்துத் தலை அமைப்பாக உள்ள பச்சை வண்ண நாடியை
6.சர்ப்பம் வட்டமிட்டுச் சுருண்டு கிடக்கும் அமைப்பாக அமைத்துக் கொண்டுள்ளன.

உடலில் இருதயம் அமைந்துள்ள இடத்திலுள்ள மற்றொரு நாடி “பஞ்சபூதத் தத்துவத்தில் காற்றமிலச் செயல்பாடாக…” இயற்கை கதிச் செயலாக தலை சாய்த்த மலராகத் தோற்றம் காட்டுகிறது.

பன்னிரெண்டு தலைகளாக நிலைத்திட்ட அந்த நாடி வயிற்றில் தொப்புள் பகுதி நாடியைச் சுற்றி இரைப்பையில் போடப்படும் உணவுகளளைச் செரிக்கச் செய்யும் கருவியாகச் செயல்படுகின்றது.

தொப்புள் பகுதியைச் சுற்றி வட்டமிடும் மற்றொரு நாடி
1.“பஞ்ச பூதத் தத்துவத்தில் அக்கினிக் கேந்திரமாக…”
2.ஆண் பெண் குறி என்ற மர்ம ஸ்தானத்தில் ஆறு தலை போல் கிளைத்து
3.உயிர் உற்பத்தி ஸ்தானமாகச் சரீரத்தில் செயல்படுகின்றது.

“பஞ்ச பூதத் தத்துவத்தில் மண்ணமிலத் தன்மையாக…” மற்றொரு நாடி நான்கு தலைகளுடன் கூடி மலவாயில் என்ற மூலத்தில் தொடங்கி தொப்புள் பகுதியில் அமைந்துள்ள பச்சை வண்ண நாடியைச் சுற்றிச் செல்கின்றன.

இந்தப் பஞ்ச பூத அமைப்புகள் அனைத்தையும் செயல் நடத்திடும் “கட்டளைக் கேந்திரம்…” (உயிர்) சிரசின் நெற்றிப் பகுதியில் உள்ளது.

சூரிய சந்திர அக்கினி என்ற மூன்று நாடியாகத் தொடங்கி… ஆகாயம் என்ற கண்டப் பகுதி… காற்று என்ற இருதயப் பகுதி… நீர் என்ற வயிற்றுப் பகுதி… அக்கினி என்ற குறிப் பகுதி… மண் என்ற மூலப் பகுதி… இவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு அந்தக் கட்டளைக் கேந்திரம் செயல்படுகிறது.

அதே சமயத்தில் சிரசின் உச்சிப் பகுதியில்
1.ஆயிரம் தலையுள்ள நாடிகள் ஒன்றாக இணைந்த அந்த இடத்தை
2.நீல வண்ண ஆத்மாவின் ஜோதி தத்துவமாகக் காட்டினான் அன்றைய ஞானி.

அதை எல்லாம் காட்டியிருந்தாலும் இன்றைய உலக நடைமுறை வாழ்க்கைச் செயலில் பரபரப்பான எண்ணச் செயலில் மனிதர்களின் சுவாசத்தின் கதி என்பது…
1.ஒரு நாளில் இலட்சக்கணக்கான மூச்சலைகளாகச் சுவாசத்தின் கனமாகச் சுவாசத்தில் ஓடும் பொழுது
2.பல வகையான எண்ணங்கள் மோதிடும் செயல்பாட்டில்
3.சக்தி வலுவிழந்து விடுகின்ற நிலையே இன்று அதிகம் உள்ளது.

மூச்சையும் காற்றையும் பற்றிச் சிந்திப்பாரும் இல்லை. அதைப் பற்றி அறிய விரும்புவாரும் இல்லை… அதனின் இரகசியத்தை அறிய முயற்சிப்போரும் இல்லை…!

காற்று நூல்…! என்ற வழி வகையில் பஞ்ச பூதங்களாக அமைவு காட்டிய இடங்களில் செயல்படும் நாடிகளில் “சுவாசகதி…” ஓடுவதைத் தியான வழி கொண்டு கண்டு அன்றே தெளிந்தார்கள் சித்தர்களும் ஞானிகளும்.

மின்னலுக்குள் இருக்கும் இரகசியங்களும் அதனின் ஆற்றல்களும்

மின்னலுக்குள் இருக்கும் இரகசியங்களும் அதனின் ஆற்றல்களும்

 

மின்னல் பூமியிலே ஊடுருவிப் பாயும் பொழுது ஒரு கர்ப்பிணிப் பெண் அதை நுகர்ந்தால் கருவில் இருக்கக்கூடிய குழந்தை சிதைந்து விடும்…! இது சாதாரண நிலைகள் கொண்டது.

ஆனால் அன்று வாழ்ந்த அகஸ்தியன்…
1.தாய் கருவிலேயே அந்த மின்னலைத் தணிக்கும் சக்தியைப் பெற்றதனால்
2.பிறந்த பின் அவன் மின்னலின் ஒளிக் கற்றைகளை நுகர்ந்தான்
3.தன் உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிக் கொண்டான்.

அந்த நஞ்சினை அடக்கிடும் அந்த உணர்வின் சக்தி அவனுக்கு எப்படிக் கிடைத்தது…? என்பதைத் தான் அகஸ்தியன் பெற்ற அந்த நிலைகளை குருநாதர் அனுபவபூர்வமாக எனக்குக் (ஞானகுரு) கொடுத்தார்.

அகஸ்தியன் பிறந்த பிற்பாடு அவனின் வளர்ச்சியில் எந்தெந்தச் செடிகளில் அந்த நட்சத்திரத்தின் தன்மைகள் (மின்னல்) இருந்தது என்பதை அந்தப் பல கோடி தாவர இனங்களையும் அறிந்து கொள்கின்றான்.

மின்னல் வரும் பொழுது பார்த்தோம் என்றால் சில செடிகள் அபூர்வமாக விளையும்… அவைகளின் வளர்ச்சி வீரியத் தன்மை கொண்டதாக இருக்கும்.

எந்த நட்சத்திரத்தின் உணர்வு அந்தச் செடியில் இருந்ததோ அந்த மின் கதிர்களை இழுத்துச் சத்தாக உரமாக எடுத்து அதன் இயக்கமாக வளரும்.

ஆனால் இரண்டு நட்சத்திரங்களின் சக்தி உராய்ந்து மின்னலாகப் பரவி மோதப்படும் பொழுது செடிகளில் பட்டால் அது கருகி விடுகின்றது.

அதாவது
1.மின் கதிர்களை நுகரப்படும் பொழுது செடிகளுக்கு அது உரமாகிறது
2.மின்னலின் தன்மை அந்த செடியிலே அழுத்தமாக மோதி ஊடுருவும் போது செடிகள் கருகி விடுகின்றது.

ஏனென்றால் இரண்டு மின் அலைகள் அது மோதும் போது அதனின் அழுத்தம் வரும் பொழுது இந்தச் செடியோ மரமோ கருகி விடுகின்றது

ஆனால் மின் கதிர்கள் பாயும்போது
1.எந்தெந்த நட்சத்திரத்தின் மின் கதிர்களை அந்தச் செடி உட்கொண்டதோ அந்தச் செடி செழிப்பாக வளர்கிறது.
2.அதனால்தான் குருநாதர் அடிக்கடி “மின்னலைப் பார்…” என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார்.

அந்த மின்னலின் இரகசியங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு இந்த மாதிரி எத்தனை வழிமுறைகளில் தெரியப்படுத்துகின்றார்.

மின்னல்கள் சில பேர் உடலில் பாயும்போது சூறாவளி போன்று மோதிய பின் அவர்களுக்குத் தெரியாதபடியே காக்கா வலிப்பு போன்ற நோய்கள் எல்லாம் வந்து விடுகின்றது. இது எல்லாம் சுழற்சியின் தன்மையால் வருவது.

ஆனால் குருநாதர் என்னை மின்னலைப் பார்க்கச் சொல்லும் போது இது எப்படி எல்லாம் வளருகிறது…? அது எந்த நிலை…? என்ன செய்கிறது…? என்கிற வகையில் தெளிவாக எனக்குக் காட்டினார்.

அகஸ்தியன் தாய் கருவில் இருக்கும் போது தாய் உடலில் பல விதமான உணர்வுகள் தாக்கப்பட்டு அவன் பிறந்த பின் அந்த மின் கதிர்களை நுகர்ந்து வளர்த்துக் கொண்டான்.
1.ஒரு மின்னெட்டாம்பூச்சி எப்படி உருவாகி வந்ததோ… எலக்ட்ரிக் மீன் எப்படி உருவாகி வந்ததோ…
2.அதே மாதிரி உணர்வுகள் இவன் உடலுக்குள் உணர்ச்சிகளாக ஆகி விளையத் தொடங்கியது.

இது அவனுடைய சந்தர்ப்பம்.

அப்படி விளைந்த பின் தான் இவனுடைய உணர்வுகள் கொண்டு எந்தெந்தச் செடிகளிலிருந்து என்னென்ன சக்திகள் வருகிறது…? என்று அவனால் நேரடியாகப் பார்க்க முடிகின்றது.

அதே சமயத்தில் ஒரு நட்சத்திரத்தின் சக்தி இன்னொரு நட்சத்திரத்தின் சக்தியுடன் மோதி அந்த மின் கதிர்கள் போகும்போது அதை எந்தெந்தச் செடிகள் உட்கொள்கிறது…? அது எதனால் உரமாகிறது…? என்பதையும் காணுகின்றான்.

இரண்டு நட்சத்திரங்களின் சக்திகள் மோதுவது போல்… அதிலே உருவான செடிகளிலிருந்து வரக்கூடிய மணத்தைச் சூரியன் கவரப்படும் பொழுது அது இரண்டும் மோதலாகி புது விதமான செடிகள் எப்படி உருவாகின்றது…? என்று அது அனைத்தையும் காணுகின்றான்.

தாய் கருவில் வளர்ந்து பிறந்த பிற்பாடு அகஸ்தியனுடைய வளர்ச்சியில் இதையெல்லாம் அறிந்து கொள்கின்றான் தன் அனுபவத்தில்.

காட்டிற்குள் அழைத்துச் சென்று இதை எல்லாம் குருநாதர் நேரடியாக என்னைக் காணும்படி செய்தார். நேரடியாகப் பார்த்ததைத் தான் உங்களிடம் சொல்கின்றேன்.

ஆனால் குருநாதர் சொல்லும் போது கொஞ்சம் கவனம் பிசகினாலும் உண்மையை அறிய முடியாது. அதைப் போன்று யாம் இப்பொழுது உபதேசிக்கும் போது நீங்கள் ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டால்தான் உங்களால் மீண்டும் இதை நினைவுக்குக் கொண்டு வந்து அந்த உண்மைகளை அறிய முடியும்.

1.ஆகவே இதை உற்றுக் கவனித்து
2.அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் இருளை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன்
3.நீங்கள் எடுத்துப் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

விஞ்ஞான உலகில் இன்று பரவிக் கொண்டிருக்கும் கதிரியக்கச் சக்திகளிலிருந்து விடுபடுவதற்குத் தான் இதையெல்லாம் உங்களுக்குள் உணர்த்துகின்றேன்.

மகரிஷிகளும் சப்தரிஷிகளும் தேடிக் கொண்டிருப்பவர்களில் நாம் ஏன் ஒருவராக இருக்கக்கூடாது – ஈஸ்வரபட்டர்

மகரிஷிகளும் சப்தரிஷிகளும் தேடிக் கொண்டிருப்பவர்களில் நாம் ஏன் ஒருவராக இருக்கக்கூடாது – ஈஸ்வரபட்டர்

 

பிண்டத்தைக் (உடல்) கொண்டே அண்டத்தையும் வான இயல் தொடர்பில் எல்லாம் அண்ட சராசரங்களையும் தன் ஞான விழிப் பார்வை கொண்டு அறிந்து உலகினுக்கு ஈந்த “மகா மகான்களும்… மகா மகரிஷிகளும்…” எத்தனையோ பேர் உண்டு.

எதைக் கொண்டு அதை எல்லாம் அவர்கள் உணர்ந்தார்கள்…?

இந்த ஜீவ பிம்ப சரீரத்தில் ஒலி ஒளி மணம் சுவை உணர்வு ஸ்பரிசச் செயல் மூலமாக
1.ஓசை கொண்டு கேட்டல்
2.ஒளி கொண்டு பார்த்தல்
3.சுவை கொண்டு சுவைத்தல்
4.மணம் கொண்டு நுகர்தல்
5.தேகமாகப் ஸ்பரிசித்தல் என்ற நிலைகளில் என்று
6.ஐம்புலனின் இயக்கமாகச் செயல்படும் இத்தன்மைகள் அனைத்தையும்
7.அறிவின் ஆற்றலால் அறிந்துணர்ந்து… தெளிந்ததை… ஆக்கபூர்வமான செயலாக
8.ஞான வழியின் தொடர்பில் பஞ்சேந்திரியங்கள் ஒளிபடும் செயலுக்கு வரைமுறை ஏற்படுத்தி
9.மனக்கட்டுப்பாடாக அவர்கள் வழி வகுத்துத் தந்ததே “சுவாச நாடிகள் பற்றிய காற்று நூல்…!”

எண்ணம் கொண்டு எடுக்கும் சுவாச அலையில்… காமத்தின் அடியாக எழும் மோகமாக… கீழான ஈர்ப்புச் செயலாக… “சரீரத்தின் அடிப்பகுதி இனிப்பு என்று காமச் சுவையைக் காட்டியது…” உலக நடைமுறை வாழ்க்கையில் உடல் தொடர்பாக இன்பம் பெறுதல் ஆகும்.

ஆனால் இந்த மோகத்தை வென்ற ஞானி..
1.உயர் ஞான சித்திகளைப் பெற்று விட்டால்
2.அந்தக் காமச்சுவை கொண்ட மோகம் என்பது
3.“மேல் கரும்பாக… அவர்களுக்குச் சுவையற்றதாகத் தான் தோன்றும்…!”

மண்ணினுள் வாசம் செய்யும் அந்தப் பிராணியைக் காட்டியதே (எலி) மனத்தினுள்ள அந்த மோகத்தைக் காட்டவே..!

ஆண் பெண் என்ற உடல் கலப்பில் மூலாதாரத்தில் குதம் என்று பெயர் நாமப்படுத்திக் காட்டிய அந்த இடத்தில் நான்காகக் கிளைத்த அந்த நாடியானது… கால் கட்டை விரலிலிருந்து மேல் எழுந்து குறி ஸ்தானத்தில் பின்னிப் பிணையும் சூரிய சந்திர நாடிகளுடன்
1.உடல் தொடர்பால் இரண்டும் இணைந்து செயல்படும் பொழுது
2.விந்தின் செயலில் அக்கினி ஜுவாலையாகச் சூரியன் போல் பிரகாசித்து
3.அது சிற்றின்ப அறிவிற்குச் செயல்பட்டு விடுகின்றது.

ஆனால் ஒளி என்ற விந்து… சிரசின் உச்சிக்கு “நாத விந்துவாக.. மேலான அறிவாக…”
1.ஆத்ம ஞானி அதைச் சூரியப் பிரகாசமாக ஆக்கும் செயலில்
2.தன் ஆத்மாவே சிவலிங்க வடிவில் ஜோதியாகத் தெளிவுறும்.

இதுவே பாம்பு உள்ள இடத்தில் எலி இல்லை என்பது…!

நல்லெண்ணம் கொண்டு நல் சுவாசம் எடுத்திட வேண்டும் என்று கூறியதில் தியானத்தின் வழித் தொடர்பில் தன்னை உணர்ந்து அறியும் பக்குவம் பெற்றிட வேண்டும் என்ற ஆரம்ப வழித் தொடர்பிலும்… ஆத்ம வலுவைப் பெற்றிட வேண்டும் என்ற எண்ணச் செயலிலும்… வைராக்கியச் சிந்தனையின் எண்ண வலு கொண்டே
1.உண்மையின் பாதையில் செல்லும் ஞானச் செல்வங்களே…!
2.நீங்கள் அனைவரும் இன்னும் உயரிய நிலை பெறவேண்டும் என்று
3.பேரன்பு கொண்டே ஈஸ்வரபட்டன் வாழ்த்துகின்றேன்…!

குருவை உடலோடும் ஏற்றுக் கொள்ளலாம். சூட்சம ஒளிச் சரீரம் பெற்றவர்களையும் குருவாக ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் குரு என்பவன் சிஷ்யனின் உண்மை ஞானம் அறியும் உயர் ஞான அறிவிற்கு “ஞானப் பால் ஊட்டுபவனாக இருக்க வேண்டும்…!”

1.அன்பு சித்தர்களும்… அன்பு மகரிஷிகளும்… அன்பு சப்தரிஷிகளும்.. பாசம் கொண்டே தேடி வந்தது
2.இந்தக் கலியில் உண்மையான ஞான வித்துக்களைத் தான்…!

அதில் ஏன் நீங்களும் ஒருவராக இருக்கக்கூடாது…?

மின்மினிப் பூச்சிகள் உருவாகும் விதமும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன விதமும்

மின்மினிப் பூச்சிகள் உருவாகும் விதமும் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆன விதமும்

 

சில வண்டுகள் முட்டை இடுகின்றது. அது முட்டை இடும் பொழுது
1.அந்த முட்டைகள் மீது மின்னல் பாய்ந்தால் அந்த மின் கதிர்கள் நேரடியாகத் தாக்கினால்
2.அந்த உணர்வுகளை எடுத்துக் கவர்ந்து மின் மினிப்பூச்சியாக மாறுகின்றது.
3.அதாவது முட்டைக்குள் மின்னல் பாய்ந்தபின் மின்னட்டாம் பூச்சியாக மாறுகின்றது.

குருநாதர் இதையெல்லாம் காட்டுகின்றார்.

மின்னல்கள் கடலிலே தாக்கும் பொழுது மணலாக மாறுகின்றது. அதனுடைய வீரியம் குறைந்து விடுகின்றது. ஆனால் அதற்குக் கீழே ஏதாவது ஒரு மீனினம் இருந்தது என்றால் இந்த மின்னல் தாக்கிய உடனே அந்த உடலில் ஊடுருவி அது சாகின்றது.

அது இறந்த பிற்பாடு இந்த உணர்வுகள் பாய்ந்த நிலைகள் கொண்டு அடுத்த சரீரம் அது எலக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

முதலிலே மின்னல் பாய்ந்த பின் இந்த உணர்வின் வலுவான பின் மீன் அழிகின்றது. ஆனால்
1.இந்த உயிரோடு சேர்த்து அந்த மின்னலின் தன்மை கருவாகின்றது
2.அடுத்த கணமே அது எலக்ட்ரிக் மீனாகின்றது.

பொதுவாக மின்னல்கள் தாக்கும் சந்தர்ப்பங்கள் எல்லாம் கடலில் அதிகமாக இருக்கின்றது. மீன் இனங்கள் மீது அது பட்டால் அதற்குள் கலந்து விடுகின்றது… எலெக்ட்ரிக் மீனாக மாறுகின்றது.

உதாரணமாக நீர் உயரத்தில் இருந்து கீழே வேகமாக விழுந்தாலும் (நீர் வீழ்ச்சி) நாம் அதன் வழி சென்றால் அது நம்மைக் கீழே அழுத்தி விடும்.

ஆனால் இந்த எலக்ட்ரிக் மீன்கள் அதில் வரக்கூடிய காந்தப்புலனை எதிர்த்து மேலே செல்கின்றது.
1.அதிலுள்ள மேக்னட் வரப்படும் போது மீனுக்குள் காந்தம் அடைகின்றது.
2.அதை எடுத்து மேலே செல்லுகின்றது.
3.அதனுடைய காந்தப் புலனறிவு எப்படி இருக்கின்றது…? என்று பார்க்கலாம்.

அந்த மீனுக்குக் கையும் இல்லை கால்களும் இல்லை. ஆனால் எதிர்த்து நீந்திக் கொண்டு மேலே போகின்றது. அந்தக் காந்தப் புலனறிவு அதற்குள் ஈர்த்துப் போகின்றது.. இது எப்படி…? என்று காட்டுகின்றார் குருநாதர்.

சூரியனிலிருந்து வரக்கூடிய உணர்வுகள் செடியில் தாக்கப்பட்ட உடன் அது எந்த உணர்வோ தாய்ச் செடியின் சத்தை எடுத்து அது வளர்கின்றது.

அதைப் போன்று தான் அக்காலத்தில் வாழ்ந்த மனிதன் வான் வீதியின் உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டான். அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி இப்படித்தான் துருவ நட்சத்திரமாக ஆனான்.

அகஸ்தியனால் கண்டுணர்ந்து அவன் அறிந்து கொண்டது தான் மேலே சொன்ன அத்தனை நிலைகளும். இதை எல்லாம் அகஸ்தியன் அறிந்து கொண்ட பின் என்ன செய்கின்றான்…?

அந்த மின்னலின் உணர்வுகள் வான்வீதியிலே வரும் பொழுது அந்த ஒளிக்கற்றைகளை நுகரகின்றான். துருவ நட்சத்திரமாக ஆனான்.

அவனுக்கு இந்தச் சக்தி எப்படி வந்தது…? தாய் கருவிலிருக்கும் போது அவன் பெற்ற சக்தி தான் அது.

தாயின் கருவில் இருக்கும் பொழுது அவனுடைய தாய் தங்களைப் பாதுக்காத்துக் கொள்வதற்காக
1.விஷத் தன்மைகள் எதுவும் தன்னைத் தாக்கி விடாதபடியும்
2.உயிரினங்களுக்கு எதிரான மூலிகைகளையும் பச்சிலைகளையும் போட்டு வைத்து இருக்கின்றார்கள்.
3.உடலிலே அரைத்துப் பூசிக் கொள்கின்றார்கள்.

அதே சமயத்தில் அந்த மணங்களை அந்தத் தாய்மார்கள் சுவாசிக்கிறார்கள். கணவன் மனைவி ஒன்றி வாழும் போது சந்தர்ப்பத்தில் கர்ப்பம் ஆகின்றார்கள்.

அந்த சமயத்தில் கர்ப்பிணியாக இருக்கும் தாய் மின்னலைப் பார்த்தாலும் அது அடங்குகிறது. கருவிலிருக்கும் குழந்தைக்கும் அந்த ஆற்றல் கிடைக்கின்றது.

ஏனென்றால் கர்ப்பமான அந்தத் தாய் சுவாசிக்கும் நஞ்சை வென்றிடும் உணர்வுகள் எல்லாம் இரத்தத்தின் வழியாக கருவிலிருக்கும் குழந்தைக்கும் உணவாகப் போகின்றது.

1.அப்போது அந்த மின் கதிரின் உணர்வுகள் அதற்குள் அடங்கி வளரக்கூடிய தன்மை வருகின்றது.
2.இப்படிப் பத்து மாதங்களும் வளர்ச்சி அடைந்து பிறந்த பின்
3.எத்தகைய விஷங்களையும் முறிக்கக் கூடிய சக்தி பெற்றவனாக அகஸ்தியன் வளர்கின்றான்.

தியானத்தின் மூலம் அறிதல் உணர்தல் தெளிதல் என்ற நிலைக்கு வளர வேண்டும் – ஈஸ்வரபட்டர்

தியானத்தின் மூலம் அறிதல் உணர்தல் தெளிதல் என்ற நிலைக்கு வளர வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

பஞ்ச பூதங்களை ஆகாயம் காற்று நீர் நெருப்பு நிலம் என்று கூறுகின்றோம். ஆகாயம் என்ற பால்வெளிச் சூட்சமத்தில் பரவிப் படர்ந்துள்ள மற்ற நான்கும் ஒன்றுடன் ஒன்று கூடி
1.காந்தத்துடன் நீரமிலம்
2.காந்தத்துடன் காற்றமிலம்
3.காந்தத்துடன் வெப்பமிலம் என்று
4.இப்படிக் காந்தத்துடன் பிரிதிவியாகும் அமிலங்களின் கலப்பால் பல பல உருவாகின்றன.

கோடானு கோடி நிறங்களாகவும் மணங்களாகவும் அதிலிருந்து உயிரணுக்கள் ஒன்றுடன் ஒன்று ஈர்ப்பின் குணத் தொடரில் இணைந்து உயிராத்மாவாக பஞ்சபூதத் தத்துவமாக உருவாகின்றது.

மனம்… அறிவு… நினைவின் ஆற்றல்… செயலாக்கத்தின் உந்துதல்… என்று இவை அனைத்துமே எண்ணமாகக் காந்தத்தின் நிறைவாக ஆத்மா என்றிட்ட ஜீவனாகத் தான் ஈர்த்துக் கொண்ட அமில வீரியமாகப் பூமியில் பிறப்பிற்கு வருகின்றது.

ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய உயிரணுக்கள் வானத்தில் உதித்துக் கொண்டே தான் உள்ளன.

இருந்தாலும் இந்தப் பூமியுடன் தொடர்பு கொண்டுள்ள “இருபத்தியேழு நட்சத்திர அமிலங்களின்…” நிலைத் தொடர்பு கொண்டு தான் உடல் பெற்றுப் பிறப்பிற்கு வந்திட முடியும்.

1.அண்ட வித்து முட்டையாகப் பிறப்பிற்கு வருகின்ற கரு நிலை உயிரணுக்களும்
2.நீருக்குள் தோன்றிடும் கரு நிலை உயிரணுக்களும்
3.வேர் பகுதியில் தோன்றி கிளைத்தெழும் உயிர் கருக்களும்
4.இந்தப் புவியில் சரீர வியர்வை கொண்டு வாசனைத் தொடர்புடன்
5.இதே தன்மையாக சூரிய வெப்பம் பட்டு உதிக்கும் உயிரணுக்கள் என்றும்
6.பல செயல் நிலைகள் இயற்கையின் கதியில் நடைமுறையில் உள்ளன.
7.உயிரணுக்கள் செயல்படும் தன்மைகளில் உள்ள அனைத்து இரகசிய நிலைகளையும் வகைப்படுத்தியே அளிக்கின்றோம்.

ஜீவ பிம்ப சரீரத்தைக் கொண்டு உயர் ஞான வளர்ச்சிக்குண்டான வழி முறைகளைச் செயல்படுத்திட உடலுக்குள் செயல்படும் உண்மையின் சாரங்களை
1.அந்த மறைக்கப்பட்ட மறை பொருளை
2.அறியச் செய்யும் நிலைக்குத்தான் இதை உணர்த்துகின்றேன்.
3.ஆனால் பாடத்தின் கடினத் தன்மையை விண்டு தருவதில் தான் தாமதம்.

அனைத்தையும் தியானத்தின் வலுவைக் கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
1.ஞானத்தை அறிதலும்
2.அதன் தன்மைகளை உணர்தலும்
3.சிந்தனையில் தெளிதலும் என்ற நிலைக்கு வளர்தல் வேண்டும்.

நாம் எடுக்கும் எண்ணம் நல் எண்ணமாக நல் சுவாசம் கொண்டு தியான வழிதனில் உணர்வுகள் பக்குவப்படுத்தப்பட வேண்டும்.
1.அதுவே மனத்தின் பக்குவமாக
2.சிந்திக்கும் ஆற்றலை நாம் ஒருமுகப்படுத்திப் பெறவேண்டிய நல் நிலை என்று உணர்தல் வேண்டும்…!

உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்று ஏன் வைத்தார்கள்…?

உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்று ஏன் வைத்தார்கள்…?

 

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… என்று சொல்லும் பொழுதெல்லாம் நம் உயிரை ஈசனாக மதித்து நம் உடலுக்குள் இருக்கும் அனைத்துக் குணங்களுக்கும் உணர்வுகளுக்கும் “உயிரே குருவாக இருக்கின்றது…” என்பதை நினைவு கொள்ள வேண்டும்.

நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ… எந்தக் குணத்தை நுகர்கின்றோமோ… அந்தக் குணமே உயிரிலே பட்டு நம்மை ஆட்சி புரிகின்றது.

உதாரணமாக ஒரு கோபமான குணத்தை நுகர்கிறோம் என்றால் உயிரிலே அந்த உணர்ச்சிகள் இயக்கப்பட்டு நம்மைக் கோபக்காரனாக ஆக்கி அது தான் நம்மை ஆட்சி புரியும் (நாம் இயக்குவது அல்ல அந்த உணர்வே இயக்குகிறது).

அதே போல் ஒரு வேதனைப்படுவோரைப் பார்த்தால் அந்த உணர்வை நுகர்ந்தால் வேதனையின் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த வேதனையான உணர்ச்சிகள் தான் நம்மை ஆட்சி புரியும்.

அதே சமயத்தில் சாந்தமும் ஞானமும் கொண்டு நாம் பேசினால் அதன் உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு நம் வாழ்க்கையில் ஞானத்தின் உணர்வாக அது தான் நம்மை ஆட்சி புரிகின்றது.

ஆகவே நமது வாழ்க்கையில் நாம் நுகரும் உணர்வுகள் எவையோ அவை அனைத்தும் உயிரிலே பட்டபின் அந்த உணர்ச்சிகளே அந்தந்தச் சந்தர்ப்பங்களில் நம்மை ஆள்கின்றது. அதன் வழி தான் நம் சொல் செயல் எல்லாமே அமைக்கின்றது.
1.இதற்கு உயிர் பொறுப்பல்ல…
2.உடல் பொறுப்பல்ல…
3.நாம் நுகர்ந்த (அந்தந்த) உணர்வு தான் பொறுப்பு…!

அதை உனர்த்துவதற்குத்தான் விஷ்ணுவைச் சங்கு சக்கரதாரி என்று காட்டுகின்றார்கள். உயிரின் துடிப்பால் ஏற்படும் வெப்பம் தான் விஷ்ணு. நாம் நுகர்ந்த உணர்வு உயிரிலே பட்டபின் அந்தச் சப்தத்தை எழுப்புகின்றது. உடல் முழுவதும் சக்கரம் போல் சுழன்று சொல்லாகவும் செயலாகவும் இயக்குகிறது.

உதாரணமாக…
1.ஒரு காரமான உணர்வை நுகர்ந்தால் ஆ… என்று அலறுகின்றோம்.
2.ஒரு கசப்பான உணர்வை நுகர்ந்தால் ஓய்… என்கிறோம்.
3.அரிப்பின் தன்மை கொண்ட விஷத்தின் தன்மையை நுகர நேர்ந்தால் உச்… உச்… என்று சொல்கின்றோம்.

இவ்வாறு நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப (மணங்கள்) உயிரிலே பட்டு அந்தந்த உணர்ச்சிகள் நம்மைச் செயல்படுத்துவதும் அந்த உணர்வின் வழிப்படியே நமக்குள் எண்ணங்கள் வருவதும் நம்மை இயக்குவதும் போன்ற நிலைகள் நடக்கின்றது.

இப்படி நாம் எண்ணக்கூடிய உணர்வுகள் பலவாறு இருந்தாலும் அந்த உணர்வின் தன்மையை (உதாரணமாகக் கோபம் என்றால்) மீண்டும் மீண்டும் எண்ணிப் பல முறை எடுத்தால் இந்த உணர்வுகள் நம் உடலில் உள்ள இரத்தத்தில் கலந்து கோபத்தை உண்டாக்கும் கருத்தன்மை அடைகின்றது.

அதனால்தான் நம் இரத்த நாளங்கள் இருக்குமிடத்த்தை இந்திரலோகம் என்று சொல்வது. அதாவது இந்திரீகம்… என்று சொல்வதை இந்திரலோகம் என்று காரணப் பெயராக வைக்கின்றார்கள்.

நாம் சுவாசித்தது உயிரிலே மோதும் பொழுது சங்கு… நாதங்களாக எழும்பி அந்த உணர்ச்சிகள் தான் நமக்குள் இயக்குகின்றது.

இருந்தாலும் இதை இயக்குவது யார்…? நம் உயிரான ஈசன் தான், உயிருக்குக் காரணப் பெயர் ஈசன் என்று ஞானிகள் வைக்கின்றார்கள். ஈசன் என்றால்…
1.உருவாக்குபவன்…
2.உணர்த்துபவன்…
3.இயக்குபவன்…! என்று பொருள்.

ஆனால் நாம் நுகர்ந்தது எந்த உணர்வாக இருந்தாலும் அதைப் பல முறை எண்ணி எடுத்துக் கொண்டால் நம் உடலுக்குள் சென்று இரத்தத்திலே கருவுற்று அணுவாக உருவாகத் தொடங்குகின்றது.

ஆகவே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்திலும் “எதை நுகர வேண்டும்…?” என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

உயிரின் இயக்கத்தை அக்காலங்களில் கடவுளாகக் காட்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

உயிரின் இயக்கத்தை அக்காலங்களில் கடவுளாகக் காட்டிய முறை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

மனிதச் சரீரத்தில் செயல்படும் சுவாசத்தையே சூரிய சந்திர அக்கினி என்றும் மும்மலங்கள் என்றும்… முக்குணங்கள் என்றும்… உயிராத்மா பிறப்பபிற்கு வரும் தொடர்பில் “மும்மல நீக்கம் பெற வேண்டியதன்…” முக்கியத்துவத்தையும் காட்டினார்கள் ஞானிகள்.

உலக வாழ்க்கை நடைமுறையில் மும்மலங்களின் செயல்பாடே கீழாம் அறிவு என்றும் இந்த முக்குணங்களை அறிந்து தெளிந்து தியான வழித் தொடர்பில் நீல வண்ண ஆத்மாவாகச் சக்தி பெற்றுப் பேரானந்தப் பெரு வாழ்வு பெற வேண்டும் என்று உணர்த்தினார்கள்

சரீரத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நாடிகள் எழுபத்தி இரண்டாயிரத்திலும் சகலத்தையும் ஆட்டுவிக்கும் நாடிகளான
1.பொன் போல் நிறம் காட்டிய சூரியன் என்ற வலது நாசித் துவாரமும்
2.சந்திரகலை என்ற இடது நாசித் துவாரமும்
3.அக்கினி என்ற மறைமுக நாடியையும் அறிந்து கொண்ட ஞானிகள்
4.அண்ட சராசரங்களின் செயலை அதாவது அந்த ஆதிசக்தியின் சூட்சமத்தையே
5.மனித உடலான ஜீவ பிரம்ம சரீரத்திலேயே கண்டனர் ஞானிகள்.

உயிராத்மா பிறவி எடுத்து எடுத்துத் தான் எடுத்துக் கொண்ட சரீரம் கடைசியில் மரணத்தின் பிடியில் ஆட்படுவதையே அன்றைய சித்தன் “காளியின் உருவமாக…!” அமைத்துக் காட்டினான்.

1.ஆத்ம சக்தியை வலுக்கூட்டிக் கொள்ளாத ஜீவன்கள்
2.சரீரத்தில் மறைந்துள்ள சக்தியைத் தன் உயிராத்ம வலுவிற்கு ஈர்த்துச் செயல் கொள்ளாத ஜீவன்கள்
3.உலகப் பிடிப்பில் நாத விந்துச் சக்தியின் வலுவை இழந்து
4.எண்ணிறந்த பிறவிகள் எடுத்து மீண்டும் மீண்டும் அவஸ்தைப்படுவதையே
5.காளி என்ற உருவில் பயமுறுத்தும் தன்மைக்குச் சித்தர்களால் காட்டப்பட்டது.

அதே சமயத்தில் வினைக்கு நாயகன் விநாயகா என்று உயிரை முதன்மைப்படுத்தி உருவகமாகவும் காட்டியுள்ளார்கள். பின்னிப் பிணைந்த நிலையில்
1.இரு நாகர்கள் எழுந்து நின்று ஒன்றை ஒன்று பார்ப்பது போல் உருவமும்
2.இரண்டிற்கும் நடு மையத்தில் சிவலிங்கமும்
3.விநாயக உருவத்திற்கு எதிர்புறம் மூஷிகமும் (எலி) காட்டினார்கள்.

மனித உடல் பெற்ற பின் தன்னைத் தான் உணர்ந்து மேலான நிலை பெறுவதற்காக வேண்டி கீழான நிலையை விலக்கி விட்டுத் தன் உயிராத்மாவை ஜோதி நிலை பெறச் செய்ய ஜோதித் தத்துவமாக உயிரும் ஆத்மாவும் ஒன்றாகக் கலந்து உயர் நிலை பெறவே அனைத்துப் போதனைகளும் கொடுக்கப்பட்டன.

இந்த மனிதச் சமுதாயம் நல் நிலை பெறவேண்டும் என்று புகட்டப்பட்ட பாட நிலைகளில் எத்தனை உயிராத்மாக்கள் உண்மையின் பொருளை உணர்ந்து கொண்டனர்…?
1.எண்ணத்தைத் தெளிந்து ஒவ்வொரு உயிராத்மாவும்
2.சுயப்பிரகாசமாக ஒளிச் சரீரம் பெற்றிடவே இந்தப் பாடங்கள்…!

மூவுலகம் என்ற சுவாசத்தின் தன்மைகளை அறிந்து வான இயலாகக் காலத்தைக் கணித்த ஞானி சரீர பிம்பத்தைக் கொண்டே உயர் ஞானம் சித்திக்கும் வழியையும் காட்டினான்.

1.வலது சுவாச நாடி வலது கால் பெருவிரல் தொடங்கி மேல் எழுவதைப் போல்
2.இடது சுவாச நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் கிளம்பி
3.கபாலத்தை நோக்கிச் சிரசின் உச்சிக்குச் செல்லும் பொழுது
4.அந்த இரண்டு நாடிகளும் உடலின் குதம் என்ற மூலத்தில் எழும் அக்கினி மண்டலத்தில் பின்னிப் பிணைந்து பிரிந்து
5.மேலெழுந்து அதற்கும் மேல் உள்ள மர்ம ஸ்தானத்தில் சந்தித்து இரண்டு நாடிகளும் பின்னிப் பிணைந்து
6.மேலெழுந்து இரண்டாகப் பிரிந்து இடுப்பின் பகுதியை வட்டமிட்டு சரீரத்தின் வயிற்றுப் பகுதியில் நாபி என்ற இடத்தில் மீண்டும் பின்னிப் பிணைந்து
7.மேல் எழுந்து பிரிந்து மார்புப் பகுதியை வட்டமிட்டு
8.மீண்டும் சிரசின் உச்சிப் பகுதிக்கும் உள் நாக்கின் மேல் பகுதிக்கும் நடு மையத்தில் நெற்றிப் பொட்டின் உள்ளிடத்தில் பின்னிப் பிணைந்து
9.சிரசின் உச்சியில் அந்த இரண்டு நாடிகளும் எதிர் எதிராகச் சந்தித்துக் கொள்வதைக் காட்டுவதற்கே
10.விநாயகர் அருகே நாகர்களைக் காட்டியது…!

ஒவ்வொருவரும் ஆத்ம லிங்க ஜோதித் தத்துவத்தை உணர்ந்து வலுப் பெற்றிடுங்கள்…!

துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டுதான் தீமைகளை வடிகட்டுதல் வேண்டும்

துருவ நட்சத்திரத்தின் உணர்வு கொண்டுதான் தீமைகளை வடிகட்டுதல் வேண்டும்

 

உதாரணமாக அழுக்குத் தண்ணீரில் நல்ல நீரைத் தொடர்ந்து ஊற்றிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? அழுக்கு நீர் குறைந்து கடைசியில் காணாமல் போய்விடும்.

அதே போல் நல்ல தண்ணீரில் அழுக்கு நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் என்ன ஆகும்…? அது அழுக்காக மாறும். இப்படி இது இரண்டும் மாறி மாறி எது அதிகமோ அதன் வழி தான் செயல்படும்.

இதைத் தான் குருநாதர் எம்மை (ஞானகுரு) சாக்கடை அருகே அமரச் செய்து பன்றியின் செயலாக்கங்களையும் உணர்த்தி “கடவுள் என்றால் யார்…?” என்று காட்டுகின்றார்.

1.உன் உயிரே உள்நின்று இயக்குகின்றது… அது கடவுள்…!
2.நீ நுகர்ந்த உணர்வே உள்நின்று… அதுவும் கடவுளாக இயக்குகின்றது
3.நுகர்ந்த உணர்வு உள்நின்று இயக்கும் போது அதுவும் கடவுள் தான்.

ஆகவே சுவாசிக்கும் உணர்வின் தன்மை உள்நின்று உணர்த்துவது… இந்த “உயிர் தான் கடவுள்…” என்று உணர்ந்தபின்
1.ஆறாவது அறிவு கொண்டு வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கத் தெரியவில்லை என்றால்
2.நுகர்ந்த உணர்வின் வலு எதுவோ அதன் வழிதான் உன் வாழ்க்கை வழி நடக்கும்…! என்றார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

நேற்றைய செயலாக இன்று நாம் மனிதச் சரீரம் பெற்றிருந்தாலும் இன்றைய செயலால் தான் நாளைய சரீரம் உருவாகிறது என்ற பேருண்மையைச் சாக்கடையில் அமரச் செய்து எனக்கு உணர்த்தினார் குருநாதர்.

இதை எல்லாம் குரு எமக்குச் சொல்லச் சொல்ல… அவர் உபதேசம் கொடுக்கக் கொடுக்க… அங்கே எத்தனையோ நாற்றம் இருந்தாலும்
1.நாற்றத்தையே காணோம்… எங்கேயோ போய்விட்டது
2.சாக்கடை அருகில் அமர்ந்து இருந்தாலும் எந்த நாற்றமும் எனக்கு வரவில்லை
3.எங்கேயோ அழைத்துச் செல்கின்ற உணர்வு தான் இருந்தது.

அப்பொழுதுதான் வான மண்டலத்தின் உணர்வுகளை எடுக்கச் செய்கிறார் குருநாதர்.

வானிலே ஒன்றை ஒன்று வென்று ஒன்றின் உணர்வு ஒன்றுக்குள் ஆகி… விஷத்தின் தன்மை தணிந்து… “ஞானத்தின் உணர்வு ஒளியாக எப்படி மாறுகின்றது…?” என்று வான மண்டலத்தைக் காட்டுகின்றார் குருநாதர்.

இந்தப் பிரபஞ்சம் எப்படியோ அப்படித்தான் உன் உயிர் உன் உடலுக்குள்ளும் பிரபஞ்சத்தைப் போன்று உருவாக்குகிறது. அந்தந்த உறுப்புகளாக உருவாகிறது.

நாம் நுகர்ந்த (சுவாசிக்கும்) உணர்வுகள் உடல் உறுப்புகளில் கலக்கப்பட்டாலும்
1.தீமை என்று வந்தால் அதை நீக்கும்… அதை வடிகட்டும் தன்மை நமக்குள் இல்லை என்றால்
2.மீண்டும் தேய்பிறையாகி மனிதனல்லாத பிறவிக்குப் போய் விடுவோம் என்று காட்டுகின்றார்.

ஆனால் அந்தத் தீமைகளை வடிகட்ட வேண்டும் என்றால் குருவின் பலம் வேண்டும். குருவின் பலம் பெற வேண்டும் என்றால் துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை இங்கே சேர்க்க வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வின் தன்மை கொண்டுதான் வடிகட்டுதல் வேண்டும் என்று உணர்த்துகின்றார்.

ஆகவே நம் உயிரை ஈசனாக மதித்து… உயிரைக் குருவாக எண்ணி… ஆறாவது அறிவின் துணை கொண்டு நாம் எடுக்கும் அந்த அருள் ஒளியைக் குருவாக்கினால் இருளை நீக்கிப் பொருள் காணும் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பெற முடியும்.

அத்தகைய நிலையைக் காட்டுவதற்குத் தான் குருநாதர் அடிக்கடி எலெக்ட்ரிக் போஸ்டில்.. கல்லைக் கொண்டு தட்டிக் கொண்டே இருப்பார்.

ஏன் சாமி…? போஸ்டில் கல்லைக் கொண்டு தட்டுகிறீர்கள் என்று கேட்டேன்.

எவன்டா கேட்டான்…? நீ தான்டா கேட்கின்றாய்…! என்பார். நான் தட்டுகிறேன்… ஆனால் ஏன்…? என்று நீ கேட்கிறாய்.

நான் டெலிஃபோன் செய்கிறேன்… தந்தி கொடுக்கின்றேன்…! “ஆண்டவனுக்கு…” என்பார்.

அதாவது தட்டும் ஓசை என்பது… உயர்ந்த உணர்வின் தன்மை கொண்டு ஒலி ஆக்கப்படும் போது
1.காதிலே படுகிறது… உணர்வு ஒளியாகிறது.
2.அந்த உணர்வின் தன்மை இருளை நீக்குகிறது
3.எல்லோருக்கும் இந்த ஒளியான உணர்வு கிடைக்க வேண்டும் என்று நான் தட்டுகின்றேன்…! என்றார்.

போஸ்டில் (பைத்தியம் போல்) தட்டுவதை வைத்து இப்படியெல்லாம் நொடிக்கு நொடி எனக்கு உபதேசித்தார் குருநாதர்…!

உயரிய சுவாசம் எடுத்தால் நீல வண்ண ஜோதியைக் காணலாம் – ஈஸ்வரபட்டர்

உயரிய சுவாசம் எடுத்தால் நீல வண்ண ஜோதியைக் காணலாம் – ஈஸ்வரபட்டர்

 

பரப்பிரம்ம சூத்திரத்தையே அறிந்து கொள்ளும் முயற்சிக்கு அறிவின் உயர் ஞானம் கொண்டு செயல்படுத்தப்படும் முயற்சியாகத் தன்னைத்தான் உணர்ந்து கொண்டு
1.”ஆதி அந்த மூலமாம் ஆதிசக்தியுடன் கலந்திடவே…!”
2.காற்று நூல் கொண்டு தானே சக்தி ஈர்த்து ஆத்ம வலுவைக் கூட்டிக் கொண்டு
3.உயிராத்ம சக்தியை ஜோதியாக்கி ஆதி சக்தியின் மூலத்தில் ஒவ்வொருவரும் கலக்க வேண்டும்.

சுவாசம் செயல்படுவதைச் சூரியன்… சந்திரன்… அக்கினி… என்று பெயர் நாமப்படுத்தி அவற்றின் குணங்களை எண்ணம் கொண்டு எடுத்த உயர் ஞானத்தால்
1.தியானத்தால் அறிந்து கொள்ளும் முயற்சியில்
2.முதலில் காட்சியாக மூலத்தில் எழுந்த நிறங்களைக் காண முடியும்.
3.சீராகத் தியானிப்பவர்கள் பல வண்ண ஒளி அலைகளைக் காண முடியும்

இயற்கையின் செயல்பாட்டைத்தான் மனித ஞானத்தால் அறிந்து கொள்ள இயலுமே அல்லாது அந்த ஆதிசக்தியின் மூலத்தை அறிந்தவர் யார்…?

எந்த நிலையிலும் பேரானந்தத்தையே அனுபவிக்க முடிகின்றதே தவிர அந்தப் பேரானந்ததத்தை எப்படிச் சொல்லால் விளக்குவது என்றே தெரியவில்லை.

பிரம்மம் என்றும் “பிரம்ம அட்சரன்…!” என்றும் சூட்சமமாகக் காட்டப்பட்டதின் பொருளைத் தெளிந்து கொண்டால் உயிரணுக்களின் செயல்பாட்டில் வான இயல் தத்துவம் விளங்கும்.

சுவாசத்தைக் கொண்டு மூலத்தில் எழுந்த முத்தொடரை அறிவதில் வலது நாசி துவார காற்றோட்டத்தில் வெண்மை நிறமும் அதன் குணம் மாயை என்றும்
1.சூரிய சக்தியில் செயல்படும் ஈஸ்வர சக்தியை உயிர்ச் சக்தி என்றும் அறிந்து கொண்டால்
2.பரவெளியில் அட்சரன் என்று மறைபொருளாகக் காட்டப்பட்டதன் உண்மையை உணரலாம்.

பிரம்மம் என்றால் சகல அணுக்களும் அவற்றிலிருந்து உண்டான சகல பொருள்களும் தான். மனிதனும் ஒரு பொருள் தான், ஆனாலும்
1.பிரம்ம அட்சரன் என்று சொல்லால் வேறுபடுத்திக் காட்டியது
2.உயிராத்மாவின் கலப்பாக எண்ணமும்
3.அதனுள் இட்ட மாயை அஞ்ஞானம் ஆணவம் என்ற ஆதிசக்தியின் முத்தொடர் விளையாட்டை அறிந்து கொள்ள இயலுமோ…?

ஒவ்வொரு உயிராத்மாவும் மனிதன் என்ற பிறப்பில் இந்த முத்தொடரைத் தெளிதல் வேண்டும்.
1.மாயையிலிருந்து அஞ்ஞானமும்
2.அஞ்ஞானத்திலிருந்து ஆணவமும் உணர்ந்து தெளிந்து
3.தன் உயிரான்மாவிற்கு வலுக் கூட்டும் செயலாக
4.நீல வண்ண உயிராத்மாவாக ஆவதே ஆக்கம்.

வலது நாசித் துவாரத்தில் ஓடுகின்ற கால் ஞானத்தால் வெண்ணிறத்தைக் காட்டியது.

இடது நாசித் துவாரம் சந்திரகலை என்றும் அதனுள் செல்லும் கால் கரிய நிறத்தைக் காட்டியது ஆணவம்.

இரண்டிற்கும் சமமான சுவாச ஓட்டம் சுழுமுனை என்ற அக்கினியாகச் சிவப்பு நிறத்தைக் காட்டியது அஞ்ஞானம்.

1.இவற்றிலிருந்து நற்சுவாசம் கொண்டு
2.நல் எண்ணத்தால் தன் உயிராத்ம சக்தியின் வலுவைக் கூட்டிக் கொள்ள
3.நீல வண்ண ஆத்மாவாக ஆதி சக்தியுடன் கலக்கும் செயலே மெய் ஞானம்.