உயிரை மதிக்க வேண்டியதன் அவசியம்

உயிரை மதிக்க வேண்டியதன் அவசியம்

 

உதாரணமாக நாம் உணவாக உட்கொள்ளும் கிழங்கு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது நல்ல கிழங்கு… இந்தக் கிழங்கைச் சாப்பிட்டால் “உடலுக்கு நல்லது” என்று சொல்கின்றார்கள்.

நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.

இன்னொருவர் வருகின்றார்…! ஐய்யய்யோ… இந்தக் கிழங்கைச் சாப்பிட்டார்… அவருக்கு வயிற்று வலி வந்து விட்டது… மிகவும் சிரமப்பட்டார்…! என்று சொல்கிறார்.

ஏனென்றால் சில வகையான கிழங்குகள் அது சக்தி வாய்ந்தது. ஆனால் அந்தக் கிழங்கை அவர் சாப்பிட்ட நேரம் எது…?

அவர் உடலிலே நோயாக இருக்கும் பொழுது.. ஜீரணிக்க முடியாத அந்த நேரத்தில் அவர் கிழங்கைச் சாப்பிட்டார். அதனால் அவருக்கு வயிற்று வலி வந்தது. அது தான் உண்மை.

ஆனால் “அவர் கிழங்கைச் சாப்பிட்டார் அதனால் மிகவும் அவஸ்தைப்பட்டார்…! என்ற உணர்வை ஊட்டிவிடுகின்றார்.

இதைக் கேட்பவர்கள் அந்தக் கிழங்கைக் கண்ணிலே பார்த்த உடனே எண்ணங்கள் பலவீனமடைந்து விடுகிறது. அதே உணர்வு வந்து உமிழ் நீரைக் கூட்டியவுடன் சாப்பிட்டால் என்ன நடக்கின்றது..?

அதே உபாதை இங்கே வந்து விடுகின்றது. வந்ததும் என்ன நினைக்கின்றோம்…?

கிழங்கைச் சாப்பிடாதே…! என்று அந்த ஆள் சொன்னார். அது சரியாகப் போய்விட்டது. நமக்கும் வயிறு வலிக்கிறது என்ற உணர்வு தான் இயக்கமாகின்றது.

1.ஏனென்றால் இது எல்லாம் நாம் எண்ணி எடுத்துப் பதிவாக்கும் உணர்வின் இயக்கங்கள்.
2.நம் உயிர் தான் இதை எல்லாம் இயக்குகின்றது.
3.நாம் எதை எண்ணுகின்றோமோ அது நம்மை ஆட்சி புரிகின்றது
4.இந்த ஈசன் தான் நம்மை ஆட்சி புரிகின்றான்…!

நன்றாக யோசனை செய்து பாருங்கள்.

இதை எல்லம் தெளிவாக உணர்த்துவதற்குத்தான் குருநாதர் என்னை (ஞானகுரு) சாக்கடை அருகில் அமரச் செய்து சாக்கடை உபதேசமாகக் கொடுத்தார்.

பன்றி சாக்கடைக்குள் முகர்ந்து பார்த்து அதில் மறைந்துள்ள உணவுப் பொருளை “அந்த நல்லதை மட்டும் எடுத்து எப்படிச் சாப்பிடுகிறது பார்த்தாயாடா…?” என்று காட்டுகின்றார்.

ஏனென்றால் வராக அவதாரம் என்கிற பொழுது…
1.கழிவை எல்லாம் நீக்குகிறது… அதை நுகரவில்லை.
2.நல்லதை மட்டும் நகர்கின்றது…!

வாழ் நாள் முழுவதும் இப்படி நல்லதாகவே நுகர்ந்த பிற்பாடு என்ன செய்கிறது…? பன்றி உடலில் உள்ள கெட்டது எல்லாம் பலவீனமாகி வெடித்துவிட்டு வெளியிலே வந்து இந்த உயிர் என்ன செய்கிறது…?

மனிதனாகப் பிறக்கின்றது. தீமைகளை நீக்கும் உறுப்புகள் உருவாகிறது.

1.அதாவது… எந்தத் தீமைகளை நீக்கியதோ அதற்குத் தக்கவாறு மனித உடலின் உறுப்புகள் உருவாகி
2.அந்த உறுப்புகளான பிற்பாடு தீமையை நீக்கக் கூடிய சக்தியை உன் உடல் பெறுகின்றது
3.நஞ்சை மலமாக மாற்றி நல்ல உணர்வை உன் உடலாக மாற்றுகின்றது என்றார் குருநாதர்.

பன்றியிலிருந்து தான் உயிர் உன்னை மனிதனாக உருவாக்கியது என்று தெளிவாக்குகின்றார் குருநாதர்.

இதைத் தான் கடவுளின் அவதாரம் “வராகன்…” என்றும் அந்த வலிமைமிக்க சக்தியைப் பெற்றுத்தான் உயிர் நம்மை மனிதனாக்கியது என்றும்… எத்தகைய தீமைகளையும் நீக்கக் கூடிய வல்லமை பெற்ற இந்த நிலையில் “நம் உயிரான ஈசனை மதிக்க வேண்டுமா இல்லையா…?” என்று வினா எழுப்புகின்றார் குருநாதர்.

நாடி என்ற காற்று நூல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

நாடி என்ற காற்று நூல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

காலச்சக்கரம் சுழல்கின்ற இயற்கைத் தன்மையில் எண்ணம் கொண்டு ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன்…
1.அறிவின் ஞானத்தால் முதன்மையாகத் தன்னை உணர்ந்து கொண்டு
2.பின் மெய்யின் மூலத்தை உண்மை ஞானமாக்கும் உயர் ஞான வளர்ச்சிக்குச் செயல் கொள்ள
3.”சுய முயற்சி…” என்ற ஊக்கத்தால் தான் நல்லாக்கம் பெறுகின்றான்.

வானை நோக்கி ஏகி உயர் ஞானத்தினால் வான இயலின் கருத்தை அறிய வேண்டிய செயலில் நம் பிரபஞ்சத்தில் உள்ள நவக் கோள்களும் சூரியனை மையப்படுத்திச் சுழன்றே ஓடிடும் ஓட்ட கதியில் நவஜோதித் தத்துவமாக ஈர்த்தெடுத்து உயிராத்மாவின் சக்தியையே உயர்த்திட “நீல வண்ண…” இராமனாகக் காட்டியதுவும் அதற்குத்தான்.

கால நேரம் இரவு பகல் என்ற செயல்களை மனிதன் அறிந்து கொள்ள விநாடி நிமிடம் மணி என்று அறிவுப் பூர்வமாக உபகரணங்கள் கொண்டு காலத்தைக் கணித்தாலும் பண்டைய காலத்தில் வாழ்ந்த சித்தன் காலத்தை எப்படிக் கணித்தான்…? எதைக் கொண்டு காட்டினான்…?

பிண்டத்தைக் கொண்டே அண்டத்தை அளந்தான்.
1.பிண்டமாகிய இந்தச் சரீரத்தில்
2.சுவாசத்தின் ஓட்ட கதியில் உயர் ஞானத்தைச் செலுத்தி அறிந்து கொண்டான்.

தன்னை உணர்ந்த நிலையில் இந்தச் சரீரத்தின் உள்ளே நடக்கும் சகல காரியங்கள் கொண்டே வான இயலையும் உலக வாழ்க்கைக்குகந்த நல் நெறிகளையும் உலகினுக்கு ஈந்தான்.

நாழிகை என்று அன்று காட்டியது சொல் நாமத்தில் தான் இன்றைய மாறுபாடு. அறுபது நாழிகையை ஒரு நாள் என்று தன் சுவாசத்தைக் கொண்டே காலத்தைக் கணித்தான் அன்றைய சித்தன்.

சுவாசத்தையே சூரியன் என்றும் சந்திரன் என்றும் அக்கினி என்றும் வகைப்படுத்தி அதன் செயல்பாட்டைக் “கலைகள்…” என்றும் காட்டினான்.

1.நாசியின் இடது துவாரத்தைச் சந்திரனாகிய இடகலை என்றும்
2.நாசியின் வலது துவாரத்தைச் சூரியன் பிங்கலை என்றும்
3.இந்த வகைகளில் ஓடிடும் சுவாசத்தின் வேகத்தை உஷ்ண அலை கொண்டு மறைமுகமான அந்தச் சுவாசத்தையே
4.மறைமுகமான அக்கினி – சுழுமுனை என்றும் பெயர் வைத்தான்.

சுவாசங்களின் ஓட்டத்தைக் கொண்டே அனுபவ ஞான அறிவினால் தெளிந்து… உலகோதய நடைமுறைச் செயல்களுக்கும் மெய் ஞானத்தைப் பெறும் வழிகளுக்கும் அதனின் சூட்சமங்களை உணர்த்திக் காட்டினான்.
1.சமமாக ஓடும் சுழுமுனைச் சுவாசமே (உயிர் வழிச் சுவாசம்)
2.”யோக சுவாசம்…” என்று சொன்ன சொல்லிலும் உண்மை உண்டு.

சூரிய கலையில் ஓடும் சுவாசத்தையும் சந்திர கலையில் ஓடும் சுவாசத்தையும் கொண்டு உட் சென்று வெளி வரும் சுவாசங்களில் முழுமையை மாத்திரம் கணக்கிட்டு அக்கினி என்ற சுழுமுனை சுவாசத்தை விலக்கி உலக வாழ்க்கையில் நன்மை தீமை என்ற காரியார்த்த நடைமுறைகளுக்குப் பயன்படும் விதமாக மூச்சலைகளின் எண்ணிக்கை கொண்டு காலத்தைக் கணித்து “அறுபது நாழிகை ஒரு நாள்…” என்று காட்டினான்.

மூலம் குறி நாபி இருதயம் கண்டம் அறுகோணக் கருவறை உச்சி என்றும் உச்சியின் மேல் பகுதி சிரசைக் கடந்த ஆகாயம் என்ற சூட்சமச் செயல்களை உணர்வதோடு அல்லாமல்
1.இந்தச் சரீரத்தில் ஓடிடும் சகல நாடிகளையும் அறிந்து
2.அவற்றில் பத்தைத் தெளிந்து
3.அவற்றிலும் சிறப்பு மூன்று என்று காற்று நூலை அறிந்துணர்ந்தான் சித்தன்.

பயப்படுபவர்களை மட்டும் என்றும் நம்ப முடியாது… நம்பக் கூடாது…!

பயப்படுபவர்களை மட்டும் என்றும் நம்ப முடியாது… நம்பக் கூடாது…!

 

சந்தர்ப்பத்தால் ஒருருவருகொருவர் கருத்து வேறுபாடு ஆகி சண்டை வந்து விட்டால் அவரை உதைக்க வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம். அப்பொழுது அந்த உணர்வை உருவாக்கிக் கொடுக்கின்றது நம் உயிர்.

“உதைக்கப் போகின்றோம்…” என்ற அந்த வார்த்தையை அவர்கள் கேட்டவுடன் அதே உணர்வு அங்கே இயக்கப்பட்டு நம்மைத் திரும்ப உதைக்கச் சொல்கின்றது… அல்லது பயமுறுத்தச் செய்கின்றது…!

1.உதைத்து விடுவோம் என்ற பயமான பின்
2.தன்னைத் தாக்கி விடுவான்…! என்ற நிலையில் “பயந்து தாக்கும் நிலை” வந்து விடுகின்றது.
3.அதாவது… பயமுறுத்துகின்றான்… நம்மைக் கொன்று விடுவான்… என்ற எண்ணத்தில்
4.எதிராளி நம்மைக் கொல்வதற்கு முன் திருப்பி வேகமாக… பயத்தால் கொன்று விட வேண்டும் என்ற உணர்வு இயக்கப்படுகின்றது

ஆகவே பயப்படுபவர்களை மட்டும் என்றும் நம்ப முடியாது…!

தைரியமாக இருப்பவரிடம் நம்பிக்கையுடன் இருக்கலாம். அதை அடித்து விடுவேன்… இவனை அடித்து விடுவேன்… என்று சொல்பவர்களை நம்பலாம்.

ஆனால் ஒருவர் பயப்படுகிறார் என்று சொன்னால்
1.பந்திக்கு முந்து என்று சொல்வது போல் “பட்…” என்று அடித்து விடுவார்
2.பயப்படுபவர்கள் எந்த நிமிடத்தில்… எதைச் செய்வார்கள்…! என்று சொல்ல முடியாது
3.ஏனென்றால் பலம் இல்லை என்கிற போது “நம்மைத் தாக்கி விடுவான்…!” என்று அவன் முந்திவிடுவான்.

மற்றவர்கள் சொல்லும் வார்த்தையைக் கேட்க மாட்டார்கள். பயந்த உணர்வு கொண்டு தாக்கிவிடுவார்கள். தனக்கு இடைஞ்சல் செய்து விடுவான்… தன்னைத் தொல்லைப்படுத்துவான்… என்று உணர்வுகள் அவர்களுக்குள் வரப்படும் பொழுது… பயத்தால் தன்னை அறியாது தவறு செய்வார்கள்… நிச்சயமாக…!

ஆனால் “வேண்டும்…” என்று செய்வதில்லை.

உதாரணமாக சமையல் செய்யும் போது சிறிது பயம் ஆகிவிட்டால் குழம்பில் உப்பையோ சீரகத்தையோ காரத்தையோ அளவாகப் போட முடியுமா…? என்று பார்க்கலாம். ஒரு கணக்கையே சரியாக எழுத முடியுமா…? என்று பார்க்கலாம்.

சரியாக எழுத முடியாது.

அப்பொழுது இந்தப் பயம் என்ன செய்கின்றது…?

1.நம்மையும் வாழ விடுவதில்லை
2.சிந்திக்க வேண்டிய செயலையும் செயல்படுத்த முடிவதில்லை
3.பயத்தால் தவறு செய்யும் உணர்வுகளே அதிகமாகின்றது.

ஆகவே பயம் என்ற உணர்வு வந்தாலே மகரிஷிகளின் அருள் உணர்வுகள் கொண்டு அதைத் தடுத்துப் பழக வேண்டும். இல்லை என்றால் நம்மைக் குற்றவாளியாக்கிக் கொண்டே இருக்கும்.

அதே சமயத்தில் பயமான உணர்வை நமக்குள் அதிகமாக நுகர்ந்து விட்டால் நம் உடலில் உணர்ச்சிகள் கிடு…கிடு… என்று ஆகி நடுக்க வாதமே தோன்றும்.

ஒரு பேனாவை எடுத்துக் கையெழுத்தைக் கூடச் சரியாகப் போட முடியாது. ஒரு சாமானை எடுத்துச் சீராக வைக்க முடியாது.

ஏனென்றால் அந்தப் பய உணர்வுகள்
1.உடலுக்குள் அணுக்களாக விளைந்தால் அணுவின் மலமாகும் பொழுது
2.நம்மை இயக்கும் நரம்பு மண்டலங்களுக்குள் வரக்கூடிய இந்த உணர்ச்சிகள் அது வித்தியாசமாக மாறும்.

பயத்தால் ஒரு பொருளைத் தூக்க முடியவில்லை என்று சொன்னால் அதற்குக் காரணம் “நம் நரம்பு மண்டலங்களில் இழுக்கக்கூடிய இந்த அழுத்தம்… வலு இழந்து இருக்கின்றது…!” என்று அர்த்தம்.

இரத்தத்தில் வருவதைத் தான் அணுக்கள் எடுத்துச் சத்தாகக் குடிக்கின்றது. அந்த அணுக்களின் மலம் அமிலமாக மாறுகின்றது இதைப்போல சில நரம்பு மண்டலங்கள் அது அது மாற்றிக் கொள்ளும் தன்மை வருகின்றது.

பய உணர்வுகள் அதிகமாக வந்தால் நடுக்கத்தின் தன்மை கொண்டு பலவீனமான உணர்ச்சிகளைத் தூண்டும். நரம்பு மண்டலம் கிடு…கிடு… என்று ஆகிவிடுகிறது

எழுந்து ஒழுங்காக நடக்க முடியுமா…? என்றால் முடியாது. அப்போது என்ன செய்கின்றது…? நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் இத்தனை பெரிய பிழைகளை உண்டு பண்ணுகின்றது.

ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.

1.ஆகவே நம் உயிரின் தன்மை கொண்டு
2.நாம் எப்படி நல்ல உணர்வுகளை எடுக்க வேண்டும்…? என்பதைத் தெளிந்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் நான் எதை எடுத்தாலும் எதை எண்ணுகின்றேனோ… அதை நீ உருவாக்கி விடுகின்றாய்… அதை நீ ஆட்சி செய்கின்றாய்..! ஆகவே என இசையில் நீ இசைப்பாய்… என் நினைவில் நீ வருவாய்…! என்று உயிரிடமே நாம் வேண்டி
1.நீ எப்படி எல்லாவற்றையும் தெரிவிக்கின்றாயோ…
2.அறியச் செய்கின்றாயோ… அறிவை ஊட்டுகின்றாயோ… தெளிவாக்குகின்றாயோ…
3.அந்தத் தெளிவின் தன்மை நான் பெற வேண்டும் ஈஸ்வரா என்று அவனிடமே வேண்டுகின்றோம்

எண்ணியதை எண்ணியவாறு உருவாக்கித் தருவது நமது உயிர் தான்…! இதை உணர்தல் வேண்டும்.

பஞ்ச லிங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பஞ்ச லிங்கம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

எண்ணம் கொண்டு பிறப்பிற்கு வரும் உயிரணுக்கள் சரீர வளர்ச்சி பெற்று உயிராத்மாவாக மனிதன் என்ற அமில காந்தத் தொடரைப் பெற்றுத் தன்னைத்தான் வளர்ச்சிப்படுத்தும் நிலைக்கு வருகின்றது.

அதனின் தொடரில் பஞ்ச பூதங்களின் கூட்டமைப்பாகச் செயல்படும் கால கட்டங்களில் அணுக்களாக மேன்மேலும் ஈர்த்தே தோல் தசை நரம்புகள் இரத்தம் எலும்புகள் மயிர் முதலிய அவயங்கள் வளர்கின்றது.

இவைகளுக்கு ஜீவன் கொடுக்க “ஐந்து கேந்திர நாடிகள்…” உடலிலே செயல் கொண்டாலும் இவைகளுக்கும் வழி நடத்திடும் கட்டளைக் கேந்திரம் என்று அழைக்கப்படும் “சிரசின் சூத்திர நாடியாக…!” அனைத்தும் செயல் கொள்கிறது.

இத்தகைய பிறப்பின் செயலில் தன்னை உணர்ந்திடும் பக்குவத்திற்கு எதை முக்கியமாக்க வேண்டும்…?

காலம் குறுகியது…! நேரத்தைக் கடமையின் தொடரில் பெற்றே பயன் கொள்ளும் ஒவ்வொரு செயலின் நிகழ்வுக்கும் யாம் உரைத்த உரையின் உட்பொருளைச் சித்தத்தில் ஊன்றிப்பார்.

பஞ்சலிங்கம் என்பதே மனிதச் சரீரம் தான்…!

தன்னை உணரும் பக்குவத்தில் உயிர் ஆத்ம முலாம் வலுக் கொள்ளும் செயலுக்கு உடலினுள் அமைந்துள்ள மூலம் மூலாதாரம் நாபி இருதயம் கண்டம் என்றிட்ட ஐந்து கேந்திர நாடிகள் உண்டு.

அதிலே நாபி நாடியை ஞானிகள் நீரமிலச் சக்தியுடன் தொடர்பு படுத்திக் காட்டிய தொடரில் எண்ணம் கொண்டு உயிர் ஆக்கத்தினை வளர்ச்சி கொள்ளும் பக்குவத்திற்குத் தியானத்தை வழிமுறையாகப் பெற வேண்டும்.

நம் பூமியின் தொடருக்கும் இதே தன்மைகள் உண்டு.

பூமியின் காந்த ஈர்ப்பின் தொடர்பில் சூரியன் உள்ளிட்ட மற்ற கோளங்களுடன் தொடர்பு கொண்டு தனக்குள் இயற்கைக் கனி வளங்களைச் சுவாசத்தின் மூலம் உள் நிறைத்தே வளர்ச்சி பெற்று வருகிறது.

அந்த ஈர்ப்பு நிலைகள் பூமிக்குள் எப்படி எங்கே உள்ளது…?

கடலினுள் இருந்தே எழுந்து லிங்க வடிவில் சுயம்பாகக் காந்தப் பாறைக்குள் மரகத வண்ண வடிவாகத் தோன்றிடும் தன்மைகளில் பூமித் தாயின் அத்தகைய ஈர்ப்பு சக்திகள் செயல்படுகின்றது.

1.சூரியன் ஒளிக்கிரணங்கள் பாய்ந்திடும் செயலிலும்
2.சுழல் வேகம் கொண்டு மேலிருந்து அந்தப் பாறைகளின் மீது விழும் நீர்ச் சக்தியின் தொடர்பிலும்
3.அதனால் ஏற்படும் “அதீத காந்தப்புலம்..”
4.பூமியின் பல்வேறு இடங்களில் இயற்கையாகச் செயல் கொள்ளும் இரகசியத் தன்மைகளில்
5.பாரதத் தேசத்தின் தென் கோடியில் மகரிஷிகளால் சூழப் பெற்ற ஓர் இடம் உண்டு.

பூமியின் கரைப்பிளவுகளில் உள் மறைவாக கடல் பூமியில் உள் நுழைந்து கடல் பகுதியிலிருந்து காணும் பொழுது வெளியிலே தெரியாதபடி “மரகத வண்ணப் பஞ்சலிங்கங்கள் உண்டு…!”

கடலினுள் அமைந்த அந்த ஐந்து மரகத லிங்கங்களில் மையத்தில் அமைந்த லிங்கத்தின் மீதே மலை உச்சியிலிருந்து விழும் நீர் விழுந்து மற்ற லிங்கங்களின் மீது மோதிடும் செயலில்
1.சூரிய ஒளிக்கதிர்களினால் பற்பல வண்ணங்கள் ஏற்படும் இடத்தின் காந்தப் புலமாக
2.அந்த இடமே மகரிஷிகளால் சூழப் பெற்றுள்ளது.

மலையின் உச்சியில் சங்கு வடிவமாக அமைந்துள்ள இயற்கை ஊற்றில் நீர் பீறிட்டு மேலே கிளம்பி கடலினுள் அமையப் பெற்ற மரகத லிங்கம் மீது விழும் ஊற்று நீரும் தனித்துவத் தன்மை கொண்டது.

யாரும் நெருங்கிடாத வண்ணம் இயற்கையின் அமைப்பில் மறைபொருளாக உள்ளது.
1.இயற்கை வனப்பால் ஆகாயத்தில் இருந்தும் காண முடியாது.
2.தரை மார்க்கமாகப் பகலிலும் இருளாகத் தோன்றும் கானகத்தினுள் விலங்கினங்களைக் கடந்து சென்றாலும் மரத்தில் வாழும் இரு இனத்தவரால் தடுக்கப்படும் ஓர் சூட்சமம் உள்ளது.
3.ஞானிகள் அறிவர் ஞயம்பட உரைத்தலை.

அரபிக் கடல் தவழும் கேரளத்தின் தென் கோடியில் மேற்கு மழைத் தொடர்ச்சியில் உள்ளது அந்த இடம்.

உயிரைப் போன்று ஒளியின் ஸ்வரூபமாக நாம் ஆக வேண்டும்

உயிரைப் போன்று ஒளியின் ஸ்வரூபமாக நாம் ஆக வேண்டும்

 

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! கருணைஸ்வரூபா… என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா…! என்று பாடுகின்றோம்.

நம் உயிர் ஒளியாக இருந்து நாம் கவர்ந்த உணர்வினை (சுவாசித்தது) எல்லாம் நமக்குத் தெரியப்படுத்துகிறது.

ஒரு விளக்கைப் போட்டு அதில் எந்த வர்ணங்களை இடுகின்றோமோ (பூசுகின்றோமோ) அந்த வர்ணம் தான் வெளிச்சமாகத் தெரியும்.

வெளிச்சமாகக் காட்டும் போது நிறம் என்ற நிலைகளை மாற்றி விட்டால்… ஒளி வெண்மையாகத் தான் தெரியும். ஆக அப்படி வெள்ளையாக இருப்பதைப் போன்று எங்கள் மனம் தூய்மையாக வேண்டும்.

நீ எப்படி ஒளியாக இருந்து தூய்மை ஆக்குகின்றாயோ அதைப்போல எனது உணர்வுகளும் அதே நிலை பெற வேண்டும் என்பதற்குத்தான் ஓ…ம் ஈஸ்வரா குருதேவா… கருணைஸ்வரூபா என்னை ஆட்கொண்ட அருள்வாய்…! என்று உயிரிடம் வேண்டுகின்றோம்.

1.நீ எப்படி அந்த வெளிச்சமாக இருக்கின்றாயோ அதே போல
2.என் எண்ணம் பிறருக்குச் சொல்லப்படும் பொழுது வெளிச்சமாகி
3.அவர்கள் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவும்
4.நல்ல உணர்வுகள் பெறவும்… தெளிந்த மனம் கொண்டு வாழ்ந்திடவும் இது உதவ வேண்டும்.

இங்கே யாம் (ஞானகுரு) உபதேசிக்கும் போது இதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் நீங்கள் இருந்தால் இந்த உணர்வின் தன்மை உங்கள் செவிகளில் பட்டு அது ஆட்சி புரியும்.

1.நான் (ஞானகுரு) எதை எண்ணுகின்றோமோ அதுதான் என்னை ஆட்சி புரிகின்றது…
2.அப்பொழுது ஆட்சி புரிவது எது…? என்னுடைய எண்ணம்..!
3.ஆட்சி புரிய வைப்பது எது…! நமது உயிர்.

இந்த உணர்வின் தன்மையை நுகர்ந்த பின் அந்த உணர்ச்சிகளை இயக்கி நாம் எண்ணிய உணர்ச்சி நம்மை இயக்குகின்றது. ஆனால் அதை இயக்கச் செய்வது நமது உயிர் தான்.

1.இருள் என்ற நிலைகள் வரும் பொழுது நம் மனமும் இருண்டு விடுகின்றது… சொல்லும் செயலும் இருண்டு விடுகின்றது
2.அதைக் கேட்போர் உணர்வுகளும் இருண்டு விடுகின்றது.

ஆகவே இதை எல்லாம் மாற்றுவதற்கு நீ எப்படி வெளிச்சமாக இருக்கின்றாயோ அதே போல் என் சொல் பிறரை அந்த வெளிச்சமான நிலைக்குத் தெளிந்த நிலைகள் கொண்டு தெளிவான வாழ்க்கை வாழ உதவ வேண்டும். கருணையுடன் என்னை நீ ஏற்றுக் கொள்வாய்…!

ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா… குருதேவா…! என்னை ஆட்கொண்டருள்வாய்.

ஆதிசக்தி என்பது விஷம்…!
1.ஆதியிலே அந்த விஷம் தாக்கித்தான் வெப்பமாகின்றது (நெருப்பு)
2.அந்த வெப்பத்தின் தன்மை தான் வெளிச்சமாகின்றது
3.ஆக அந்த உணர்வின் தன்மை இயக்கியது விஷம் தான்.

இப்போதும் நம் உயிரின் தன்மை வெப்பம் ஆவதற்குக் காரணமே அந்த விஷம் தான். விஷத்தின் தன்மை தாக்கப்பட்டுத் துடிக்கும் போது தான் வெப்பம் ஏற்படுகின்றது. வெப்பமாகும்போது ஈர்க்கும் காந்தம் வருகின்றது.

ஆகவே இந்த வழியில் ஆதிசக்தியின் அருள் பெற்ற ஈஸ்வரா…! அந்த ஆதிசக்தியின் இயக்கத்தின் தொடர் கொண்டு அந்த அருள் பெற்று நீ இன்று என்னை உருவாக்குகின்றாய்.

கருணைஸ்வரூபா…! என்னை ஆட்கொண்டருள்வாய் ஈஸ்வரா…!

1.நஞ்சை எப்படி நீ ஒளி ஆக்கினாயோ அது ஒளியாக ஆனதோ அதே போல
2.இருளை நீக்கி ஒளி என்ற அந்த உணர்வுகளை நான் பெற வேண்டும்
3.அந்தக் கருணை நான் பெற வேண்டும்
4.நீ இருக்கும் அந்த ஒளியின் ஸ்வரூபமாக நான் ஆக வேண்டும் என்பது தான் இந்தப் பாடலின் நோக்கம்.

மூவுலகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

மூவுலகம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழிலின் செயல்களை அகண்ட அண்டத்திலும் சரி… பூமிக்குள்ளும் சரி… ஒரு உயிரணுவிற்குள்ளும் சரி… படைப்பின் இயக்கங்களைப் பற்றிப் பகர்ந்திட வேண்டும் என்றால் சொல் நாமப்படுத்தித்தான் கூற முடியும்.

அந்தச் சொல் நாமப் பொருளின் சூட்சமத்தை அறிந்து தெளிந்திட தியான வளர்ப்பில் மனம் ஒருமைப்படும் செயலில் ஒவ்வொரு உயிராத்மாவும் உணர்ந்து அறிந்து கொள்ள முடியும்.

மூல சக்தியான ஒளி காந்தத்திற்குள் நீர் அமில சக்தியையும்
1.அதனுள் கோடானு கோடி வண்ணமிலம்
2.கோடானுகோடி குண அமிலம்
3.கோடானு கோடி மண அமிலம் என
4.முத்தொடரையும் தன்னுள் ஐக்கியம் கொண்டு “விஸ்வரூப சக்தியாகக் காட்டப்பட்டதே ஆதிசக்தி…!”

பால்வெளி சூட்சமத்தில் எங்கும் நிறைந்திருக்கும் ஆதிசக்தியின் செயல் நிகழ்வுகள் கோடானு கோடியாகக் குணங்களும்… மணங்களும்… நிறங்களுடன்.. ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல்படும் செயலாக உள்ளது.

அதன் மூலம்
1.பிறிதொன்றை உருவாக்கியும்
2.ஈர்ப்பின் தொடர்பில் தன்னை வளர்ச்சிப்படுத்தியும்
3.அதே தொடர்பில் பிறிதொன்றை வளர்த்துக் கொண்டும் பரந்து செயல்படும் அந்தச் செயலை
4.மூவுலகம் என்ற சூட்சமப்படுத்திக் காட்டியதை முழுமையாக யாராலும் விளக்க முடியாது.

உதாரணமாக ஒரு உயிரணு மூன்று நட்சத்திரத்தின் சக்திகளைக் கொண்டதாக இருந்தாலும் அதில் எது வீரியமோ அதுவே உயிரின் சக்தியாகவும் மற்ற இரண்டும் குண வளர்ப்பிற்குத் துணையாகவும் இயங்குகிறது.

உயிரணு தனக்குள் ஈர்த்திடும் செயல் நிலைக்கொப்ப பிறப்பிற்கும் (சரீரமாக) வருகிறது. அதனின் இயக்கங்களையும் செயல்களையும் சித்தர்களால் பெயர் நாமப்படுத்தி விளக்கப்பட்டுள்ளது.

தன்னைத்தான் உணரும் பக்குவத்தில் தன் உயிருக்குள் இயங்கும் மூலச் சக்திகளைத் தியானத்தின் மூலம் உணரலாம். உயிரை அறிந்திட மனதில் உள்ள சஞ்சலங்களை எல்லாம் அகற்றிடும் வைராக்கிய சிந்தனை வேண்டும்.

“ஆட்டுவிக்கும் சக்தி…!” என்பது கண்ணுக்குப் புலப்படாத நிலையில் வளர்ச்சி கொண்டிடும் பரவெளியின் செயலைத்தான் மூவுலகம் என்று சொன்னார்கள் மகா ஞானிகள்.
1.ஒவ்வொரு உயிரணுவும் தன்னை வளர்ச்சிப்படுத்திக் கொள்ளும் செயலுக்கும்
2.அதே தொழில் புரியும் மற்ற மற்ற நிலைகளுக்கும் நாமத்தில் வேறுபாடே தவிர செயல் அனைத்தும் ஒன்றே…!

மூவுலகம் என்பது எவை…?
1.கோடானு கோடி நிறங்கள் ஓர் உலகமாக
2.கோடானு கோடி மணங்கள் ஓர் உலகமாக
3.கோடானு கோடி குணங்கள் ஓர் உலகமாக
4.நிறம் மணம் குணம் என்றிட்ட அமிலத் தன்மைகளுடன் கலந்து வியாபித்துச் செயல்படும் நிலையில்
5.உயிரணுக்கள் சரீரம் கொண்ட பிறகு முத்தொழிலின் செயல்பாடு ஒவ்வொரு சரீரத்திலும் உண்டு.

மூவுலகம் என்றால் அதல.. சுதள… பாதாளம்…! என்ற எண்ணமா…?

இவைகள் எல்லாம் உலகிற்கு நீதியைப் புகட்டி… நற்பண்பின் வளர்ப்பில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள… மனதின் திறனை வலுக் கொள்ளச் சொல்லப்பட்ட தத்துவங்களாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

சிவ சக்தி என்பது ஆண் பெண் சரீரத்திற்குள்ளும் சிவ சக்தியின் தொடர்பை அறிந்து கொள்பவன்
1.தாய்க்குகந்த சக்தி அனைத்தையும்
2.இந்த மனிதச் சரீரப் பிண்டத்திற்குள்ளேயே (தனக்குள்) அறிந்திட முடியும்.

துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானம் செய்யும் போது நம் உடலுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்கள்

துருவ நட்சத்திரத்தை எண்ணித் தியானம் செய்யும் போது நம் உடலுக்குள் ஏற்படும் நல்ல மாற்றங்கள்

 

ஈஸ்வரா… என்று கண்ணின் நினைவினை உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
1.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.நினைவு அனைத்தையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருளை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
4.உயிர் வழி கவர்ந்து புருவ மத்தியில் ஏங்கி தியானியுங்கள்.

இப்பொழுது உயிரிலே அந்தச் சக்திகள் ஈர்க்கப்படும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு மோதும் பொழுது அங்கே வெளிச்சம் வரும். இந்த உடலுக்குள் மகிழ்ச்சி வரும்.

1.உடலுக்குள் தீமை இருந்தால் எரிச்சல் வரும்… அது குறையும்… அந்தத் தீமை நீங்கும்.
2.எப்படி நெருப்பிலே ஒரு விஷத்தின் தன்மை பட்டால் அதிலிருந்து புகை வெளி வருகின்றதோ அதைப் போல
3.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் நம் உடலில் படும் பொழுது
4.தீமை என்ற உணர்வுகளைக் கருக்கி வெளி வரும்போது அந்த உணர்ச்சிகள் தெரியலாம்.
5.தீமைகள் அகலும்… நன்மைகளை உணர முடியும்… நன்மைகள் பெருகும்…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் இவ்வாறு எண்ணி ஏங்கித் தியானியுங்கள். இது உங்களுக்கு ஒரு பயிற்சி…!

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து எங்கள் இரத்த நாளங்களில் உள்ள ஜீவணுக்களும் ஜீவான்மாக்களும் பெற வேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினை இரத்த நாளங்களில் செலுத்தி ஏங்கித் தியானியுங்கள்.

இத்தகைய வீரிய உணர்வுகள் பெருகும் பொழுது அது ஓரளவுக்கு நம் இரத்தத்தில் உள்ள தீய அணுக்களை நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

வெறுப்பு வேதனை சலிப்பு சங்கடம் கோபம் குரோதம் பயம் ஆத்திரம் போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்தால்
1.அது உமிழ் நீராக மாறி அதுவே இரத்தமாக மாறி
2.இரத்தத்தில் அந்தந்த உணர்ச்சிகளைத் தூண்டும் அணுக்களாக – “கரு முட்டைகளாக…” விளைந்து விடுகின்றது.

ஏனென்றால் இப்படி அது எது விளைந்ததோ அதன் உணர்வை அது இயக்கும். தீமையான உணர்வாக அது இயக்கத் தொடங்கும்.

அதை மாற்ற வேண்டும் என்றால் அந்தக் கருமுட்டைகளுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவைச் செலுத்தப்படும் பொழுது துருவ நட்சத்திரத்தின் உணர்வு கலந்த… அண்ட நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

ஒரு தட்டான் பூச்சி தான் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு எந்தப் பூ மீது அமர்ந்து தன் முட்டைகளை இடுகின்றதோ அந்தப் பூவைப் போல நிறம் கொண்ட ஒரு பட்டாம் பூச்சியாக வருகின்றது.

தட்டான் பூச்சி தான் பல வண்ணங்களில் பட்டாம் பூச்சிகளாக மாறுகின்றது. நெல் செடிகளில் தட்டான் பூச்சி முட்டை இட்டால் நெல் பூச்சிகளாக உருவாகின்றது.

இதைப் போன்று தான் நம் உடலுக்குள் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பரவச் செய்து
1.இரத்த நாளங்களில் உள்ள அந்த அணுக்கருக்களுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணையச் செய்தால்
2.அது நல்ல கரு முட்டையாக மாற்றி நல்ல அணுக்களாக நமக்குள் உருவாக்கிக் கொள்ள முடியும்.

இதன் வழியில் உடலிலே நோய் வராது தடுக்க முடியும். பகைமைகளையும் வேதனைகளையும் அகற்றிக் கொள்ள முடியும்.

அசைவமான உடலிலிருந்து அழியா வளர் சக்தியான சைவைத்தை வளர்த்திடல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்

அசைவமான உடலிலிருந்து அழியா வளர் சக்தியான சைவைத்தை வளர்த்திடல் வேண்டும் – ஈஸ்வரபட்டர்

 

சைவ சித்தாந்தத்தின் உண்மை நிலை என்ன…?

1.ஒளி நிலையாக ஒளிர்வது அனைத்தும் சைவமாகவும்
2.சைவத்தை வளர்க்கும் மாற்றுத் தன்மை யாவும் அசைவமாகவும் ஆகின்றது.
3.இந்த உயிர் சைவம்…. உடலோ அசைவம்…!
4.பூமி அசைவம்… பூமி பெறும் ஒளியோ சைவம்…!

இருள் இருந்தால் தான் ஒளியைப் பாய்ச்சி உண்மையை அறிய முடியும். ஆகவே அசைவமான உணர்வைச் சைவமாக்கிடும் சித்தம் கொண்டு ஒளியின் ஒளியாக ஒளி நிலையை வளர்க்க வேண்டும்.

அசைவமான உடலிலிருந்து அழியா வளர் சக்தியான சைவைத்தை வளர்த்திடல் வேண்டும்.

ஜீவ பிம்ப சரீர அசைவ உணர்வினால்
1.சைவ ஆத்மாவை எண்ணத்தின் சித்தம் கொண்டு
2.சிவ சக்தி நிலை பெறச் செய்ய வேண்டும்.

அசைவமான உடலிலிருந்து தான் உயர்வான எண்ணங்களைச் சமைத்துச் சைவமான இந்த உயிராத்மாவை வளரும் நிலைக்குக் கொண்டு செல்ல முடியும்.

ஏனென்றால் ஜீவனற்ற ஆத்ம உயிர்களினால் எண்ணத்தின் சமைப்புத் தன்மைக்கு அசைவ நிலை இல்லாததினால் வளரும் நிலைக்கு வழியில்லை.
1.சமைக்கப்படுவது அனைத்தும் அசைவம்.
2.வளர்வது அனைத்தும் சைவம்.

மாறு கொண்டு சுழலும் நிலையிலிருந்து பகுத்தறியும் ஆற்றலின் சித்தத்தினால் இந்த உயிராத்மாவையே சைவ சித்தமாக்கிடல் வேண்டும்.

இந்தக் கலியான உலகில் யாம் (ஈஸ்வரபட்டர்) சொல்லும் முறைப்படி தியானித்தால் அன்று சித்தர்கள் மகரிஷிகள் கண்டுணர்ந்த இயற்கையின் பேருண்மைகளை அறியலாம்.

அணுவுக்குள் அணு மாறுபடும் நிலைகளையும் பூமியின் உள் நிலை மற்ற கோளங்களின் செயல் முறைகளையும் அறிந்திடலாம்.

சைவத்தின் சித்தத்தால் தன் நிலை உணர்ந்து அனைத்து நிலையையும் அறியும் அந்த அருள் ஞான சக்தி மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு உயிராத்மாவிற்கும் உண்டு.

அதை உணர்த்துவதே சைவ சித்தாந்தம்…!

நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் பிரதி உபகாரம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்…!

நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நாம் பிரதி உபகாரம் எப்படிச் செய்து கொண்டிருக்கின்றோம்…!

 

நம் குடும்பத்தில் அனைவரும் நமக்கு நன்மை செய்துள்ளார்கள் நன்மை செய்தபின் அந்த நம்மை செய்தவர்களை நாம் எப்படி எண்ணுகின்றோம்…?

1.அவரால் நான் பாதுகாக்கப்பட்டேன்…
2.எனக்கு எல்லா வகையிலும் நன்மைகளை வழிவகுத்துக் கொடுத்தார் என்று அவரை எண்ணி ஏங்குகின்றோம்.

ஆனால்… சந்தர்ப்பவசத்தால் அவர் உடலை விட்டுப் பிரிந்தால் அவரை நாம் மீண்டும் எப்படி எண்ணுகின்றோம்…? நம் எண்ணங்களை எப்படிச் செலுத்துகின்றோம்…?

எனக்கு எவ்வளவோ உபகாரம் செய்தார்… போய்விட்டாரே…! எனக்கு இனி யார் உதவி செய்வார்கள்…? என்று மிகவும் வேதனைப்படுகின்றோம்.

அதற்கு முதலில்… அவர் நோயுடன் வாடும் பொழுது “நல்ல மனிதர் இப்படி நோயுடன் வாடுகின்றார்…” என்ற உணர்வை நாம் பதிவாக்கிக் கொள்கின்றோம்.

அவர் உடலை விட்டுப் பிரியும் பொழுது…
1.நல்ல மனிதர் போய்விட்டாரே என்று வேகமாக எண்ணும் பொழுது
2.அந்த உணர்வு அவர் வேதனைப்படும் காலத்தில் எடுத்த உணர்வு நமக்குள் இருப்பதனால்
3.அந்த உயிரான்மா நமக்குள் வந்து விடுகின்றது.

நமக்குப் பல நல்லதைச் செய்தார். ஆனால் உடலை விட்டு பிரியும் பொழுது அவரை எண்ணி நாம் ஏங்கி இழுக்கப்படும் பொழுது அவர் ஆன்மா நம் உடலுக்குள் வந்து விடுகிறது.

வந்த பின் அவர் எந்தக் கஷ்டங்களை எல்லாம் பட்டாரோ அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளரத் தொடங்கி விடுகின்றது.

ஆகவே அவரை எங்கே இழுக்கின்றோம்…?

எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினார் ஆனால் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினாலும்
1.நம்முடைய அறியாமை… பண்பும் அன்பும் கொண்டு பரிவுடன் நாம் எண்ணும் பொழுது
2.அவர் ஜீவன் பிரியப்படும் பொழுது வேகமான உணர்வுடன் நாம் எண்ணும் பொழுது நமக்குள் வந்து விடுகின்றது.

நம் உடலுக்குள் வந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் ஈர்க்கப்பட்டு நம் உடலிலும் அது கவரப்பட்டு நமக்கும் அவர் உடலில் இருந்த நோய் வரத் தொடங்கி விடுகின்றது.

அந்த ஆன்மா நமக்குள் வந்தபின் இங்கேயும் அந்த நோயின் விஷத்தை வளர்த்து நாமும் இறந்தபின் அடுத்து மனித உடலுக்குள் செல்லாதபடி உடலை விட்டுச் சென்றபின் விஷத்தின் தன்மை கொண்ட உடலுக்குள் தான் செல்வோம்.

மாடு ஆடு இவைகளெல்லாம் தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்குள் அதன் விகிதாச்சாரப்படி விஷத்தைத் தன் உடலை மாற்றிக் கொள்கின்றது.

மானும் யானையும் புலியும் நரியும் நாயும் இவை எல்லாம் அதனதன் உணர்வுக்கொப்ப விகிதாச்சாரப்படி அந்த உறுப்பில் எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப
1.விஷத்தின் இயக்கத்தால் தான் அதன் ரூபங்கள் உருவாகின்றது.
2.உயிரால் அந்த உணர்வின் பொறிகள் உருவாக்கப்பட்டு அதன் வழி அந்தந்த உடல்கள் எப்படி மாறுகின்றது என்பதனை
3.குருநாதர் உயிரின வாழ்வில் ரூப மாற்றங்கள் எவ்வாறு என்று தெளிவாகக் காட்டுகின்றார்.

ஆகவே இந்த வழியினை எல்லாம் தெளிந்து கொண்ட பின்னும் நமக்கு எவ்வளவோ நன்மை செய்தார் என்றாலும்… இனி அவர் பிறவி இல்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?

அவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில்… நோயினால் வேதனைப்படுகின்றாரே…!
1.இதிலிருந்து விடுபட்டு இனி அவர் ஆனந்த நிலைகள் பெற வேண்டும்
2.அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
3.எல்லோருக்கும் நன்மை செய்த அந்த ஆன்மா இன்னொரு உடல் பெறாத நிலையில்
4.அவர் உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று யாராவது நாம் எண்ணுகின்றோமா…?

இல்லை…!

அதற்கு மாறாக அவரை மீண்டும் பிறவிக்கு இழுத்துச் சென்று நமக்குள் அவரின் வேதனையான உணர்வுகளை உருவாக்கப்பட்டு நாமும் இறந்த பின் மீண்டும் மனிதனல்லாத உருவாக உருவாக்கத்தான் நாம் பயன்படுத்த முடிகின்றது.

ஆனால் நாம் அவர்களை மீண்டும் பிறவிக்கு வராதபடி அந்த ஆன்மாவைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய முடியும்… பிறவி இல்லா நிலையும் அடையச் செய்ய முடியும்.

அது தான் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய மெய் வழி…!

சைவ சித்தாந்தம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சைவ சித்தாந்தம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒன்றை ஒன்று அழித்துத்தான் ஒன்று வளர்கின்றது. சைவத்திற்கு எதிர்ப்பதம் ஒன்றுண்டு. ஏனென்றால் அழியும் மாறு கொண்ட நிலை இல்லாவிட்டால்… “வளர்ப்பிற்கே வழியில்லை…!”

ஜீவ ஆத்ம உடலும் ஒவ்வொரு அணு வளர்ப்பு முறையும் இரண்டும் ஒன்றாகி வளரும் தன்மையில் உடல் பிம்பங்கள் அனைத்துமே அசைவம் தான்.

1.இந்த உடல் என்ற கோளத்தில் நாம் உட்கொள்ளும் உணவும்
2.எண்ணத்தால் எடுக்கும் உணர்வும் இரண்டும் சமைக்கப்படும் பொழுது அணுத் தன்மையாக மாறுகிறது

அது அனைத்தும் சைவத்திற்கு எதிர் நிலை அசைவமாகின்றது.

ஆதி சக்தியின் படைப்புகள் அனைத்தும்
1.அமிலம் ஆண் சக்தியாகவும்
2.திடம் கொண்டு செயல்படும் ஜீவ சக்தி பெறுவது பெண் சக்தியாகவும்
3.சிவ சக்தி வளர்ப்பான ஆதிமூலம் (விநாயகர்) முதல் உணர்வு நிலை கொண்டு வழித் தொடர் வளர்கின்றது.

அண்ட கோளங்கள் அனைத்திலுமே – தான் எடுக்கும் அல்லது தனக்குள் சேரும் நிலைக்கொப்ப தொடரின் செயல் நிலை வளர்கின்றது. வளர்ப்பின் வளர் தன்மையில் எடுக்கக்கூடிய ஒலிக்கொப்ப ஒளித் தன்மை பெறுகின்றது.

ஒளியின் வளர்ப்பில் ஒலி ஒளி சுழற்சியில்… ஒன்றின் தொடர் கொண்டு ஒவ்வொன்றின் மோதலில் பலவாகி… தான் எடுக்கும் எண்ணத்திற்கொப்ப வழிப்படுத்தும் வளர்ச்சியில் “உயர்வு நிலை கொண்டவன் தான் மனிதன்…!”

மனித உடலுக்குள் “சைவமான எண்ணத்தை… அந்தச் சித்தத்தை வளர்க்கும் ஞானமாக… அதை வளர்க்கும் நிலைக்குச் “சைவ சித்தம்” வளர வேண்டும்.
1.சைவம் என்றால் வளர்ப்பு…!
2.சித்தம் என்றால் உண்மையின் உயர்வு நிலை…!

ஆகவே உயர்வை வளர்க்கும் சைவ சித்தமாக எண்ணத்தைப் பகுத்தறியும் வழி முறைக்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் என்ற கோளத்தில்
1.எண்ணத்தில் எடுக்கும் உணர்வை நற்குணச் சமைப்பாக்கி
2.உடல் கோளத்தில் உயிர் குருவைச் சைவ சித்தமாக்கி
3.மெய் ஒளியைப் பெறும் நிலையாகத் தன் ஆத்ம ஜோதியை ஒளியாக்க வேண்டும்.

சலிப்பு சோர்வு கோபம் அதி காமம் வெறி குரோதம் இந்த இச்சையில் உணர்வுகளும் எண்ணங்களும் கூடும் பொழுது உடலின் ஒவ்வொரு அங்க அவையங்களும் உடல் அணுக்கள் ஒவ்வொன்றும்
1.தன் சைவ சித்தத்தை வளர்க்காமல் அசைவத்தின் அழிவு நிலைக்குச் செல்கிறது.
2.ஆகவே சரீர உணர்வில் எடுக்கும் தீய குணத்தால் தன் சித்தத்தை அழிக்கும் தன்மைக்குச் செல்லக் கூடாது.

அன்பு பாசம் பரிவு வீரம் ஞானம் சாந்தம் என்ற நற்குணங்கள் கொண்டு வளரும் வழித் தொடரில் சித்தமாகி மகரிஷிகள் ஞானிகள் வெளிப்படுத்தும் ஒளி சக்திகளை ஆத்ம குருவை வளர்க்கும் தொடருடன் செயல்படுத்தினால்
1.ஒளி நிலைக்குச் சென்று வளர்க்கும் வழித் தொடரில்
2.சைவ சித்த சத்திய உண்மையை
3.ஆதி சக்தியின் சிவ சக்தியாக
4.ஆத்ம ஒளி உயரும் வழிக்கு உயர்வு கொள்ள முடியும்.