உயிரை மணியாக்கும் ரசமணி

உயிரை மணியாக்கும் ரசமணி

 

சூரியனிலிருந்து வரக்கூடிய பாதரசம் அது மற்றதுடன் மோதி விஷத்தைப் பிரித்து வெளியே செல்லப்படும் பொழுது அந்தப் பாதரசத்தால் வெப்பமும் அதனால் ஈர்க்கும் காந்தமும் வருகின்றது.

வெப்பமும் காந்தமும் வந்தாலும் அந்தக் காந்தம் கடைசியில் பலவீனமான விஷத்தின் தன்மையை அது கவர்ந்து கொள்கின்றது. கவர்ந்து கொண்டபின்…
1.வெப்பம் உருவாக்கும் சக்தியாகவும்
2.காந்தம் அரவணைக்கும் சக்தியாகவும்
3.விஷம் இயக்கும் சக்தியாகவும் மாறுகின்றது.

இப்படி இந்த மூன்றும் ஒன்றாக ஆனால் அது ஒரு இயக்க அணுவாக மாறுகின்றது. ஆனால் இந்தப் பாதரசம் உலகம் முழுவதற்கும் எல்லாவற்றிலும் கலந்துள்ளது.

1.பாதரசம் எல்லாத் தாவர இனங்களிலும் உண்டு
2.ஒவ்வொரு செடியிலும் எடுத்துக் கொண்டாலும் அந்தப் பாதரசம் உண்டு
3.நம் உடலிலிருக்கக்கூடிய உயிரணுக்களில் துடிப்பு ஏற்பட வேண்டுமென்றால் ஜீவ அணுக்களிலேம் இதே பாதரசம் உண்டு
4.நமது உயிரிலேயும் அந்தப் பாதரசம் உண்டு
5.எல்லா அணுக்களிலும் பாதரசம் உண்டு.

ஆனாலும் இந்தப் பாதரசம் எது எதிலே கலந்து கொள்கின்றதோ அதன் உணர்வு ஒட்டியே வாழும்.

இதைப் பிரிப்பதற்கு என்ன செய்வது…? என்பதற்குண்டான விளக்கங்களை குருநாதர் உபதேசிக்கின்றார்.

ஏனென்றால் இன்றைய வாழ்க்கையில் அன்புடன் பண்புடன் பரிவுடன் வாழ்ந்தாலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு உதவி செய்கின்றோம்.

ஆனால் கேட்டறியும்போது அவர் படும் கஷ்டம் நம்மை அறியாமலே நமக்குள் வந்து விடுகின்றது. இப்படி ஒருவருக்கொருவர் நாம் இணைந்து தான் வாழ்கின்றோம். யாரும் பிரிந்தில்லை.

இருந்தாலும் மற்றவர்கள் வெளிப்படுத்தும் வேதனை என்பது வலிமையானது… கோபம் என்பதும் வலிமையானது… குரோதம் என்பதும் வலிமையானது…!

ஆக நல்ல குணங்களைக் காட்டிலும் அவர்கள் செயல்படுத்தும் இத்தகைய குணங்களை நாம் நுகரப்படும் பொழுது…
1.அந்த வலிமையான உணர்வுகள் நம் நல்ல குணங்களை ஆட்கொண்டு
2.நல்ல குணங்களைச் செயலற்றதாக்கி நம் உடலுக்குள் நோயாக மாறுகின்றது.

நாம் செய்த நன்மைகளுக்குள் நம்மை அறியாமல் வந்து சேரும் நோய்களை எப்படி நீக்குவது…? அந்தத் தீமைகளை எப்படிப் பிரிப்பது…? நமது வாழ்க்கையை நாம் எப்படி வழி நடத்த வேண்டும்…? என்பதற்குத் தான் குருநாதர் இதை எல்லாம் படிப்படியாக வழி காட்டுகின்றார்.

ஆதியிலே உயிரணுவாகத் தோன்றிய பின் அகஸ்தியன் எத்தனையோ வகையான உணர்வுகளை எடுத்தாலும் விஷத்தின் தன்மையைச் சிறுகச் சிறுகப் பிரித்து உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி ஒளி உடலாக மாற்றிக் கொண்டவன்… இதே பாதரசம் தான்…!

இந்த உணர்வின் தன்மையை ஒளியாக… இருளை நீக்கி ஒளியின் உணர்வாகும்போது “ரசமணி…!”
1.தன் உயிரின் தன்மையை மணியாக்கப்படும்போது பிறவி இல்லை என்ற நிலை அடைகின்றது
2.அப்படி அடைந்தது தான் துருவ நட்சத்திரம்
3.அதிலிருந்து வெளி வரக்கூடிய உணர்வுகள் இருளை நீக்கும் அருள் சக்தி பெற்றது.
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் ஒவ்வொருவரும் பருக வேண்டும் என்ற நிலைக்குத் தான்
5.குருநாதர் எமக்கு (ஞானகுரு) இதைத் தெளிவாகக் காட்டினார்.

குருநாதர் காட்டிய அதே வழியில் தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை உங்களுக்குள்ளும் பதிவாக்கி அதைப் பெறும்படி தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்றேன்.

பரணி நட்சத்திரத்தின் ஆற்றல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

பரணி நட்சத்திரத்தின் ஆற்றல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

1.தன்னையே தான் அறிந்துணரும் செயல்பாட்டில்
2,அண்டத்தையே அறிந்து கொள்ளும் அந்தத் திறனில்
3.இந்தப் பிண்டத்தையும் அறிந்து கொள்ள மனித மன ஞான எண்ண வழிச் செயல் முறையின் முயற்சியே
4.மகரிஷிகள் அருள் உணர்வுடன் ஒன்றி சக்தியளித்துச் சக்தி பெறும் சூட்சமத்தில்
5.தன் ஆன்மா வீரிய வளர்ச்சி பெற்று உயர் ஞானம் கொள்ளும் பக்குவத்திற்கு
6.இந்தச் சரீரத்தின் (எலும்புகள்) மூலம் சேமிக்கும் சேமிப்பு அவசியமாகும்.

மகரிஷிகளின் ஆற்றலை ஈர்த்துச் செயல் கொள்ளும் உடல் உறுப்புகளில் “எலும்புகளின் அமில குண சக்தி வளர்ச்சியின் முதிர்வு…!” ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகின்றது.

பிராணிகளில் ஊர்வனவாக இருக்கும் நத்தை, ஆமை, சிப்பி, சங்கு இத்தகைய உயிர்த் தொகைகள் தனது உயிர்ச் சக்தி வளர்ச்சிக்கு ஆயுட்காலம் எப்படி உள்ளது…?

உருவின் செயல் சிறு வடிவில் இருக்கும் சங்கு
1.ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீரின் சக்தியில் வளர்கிறது.
2.தன் வளர்ச்சிக்குகந்த சுவாச அமில குணத் தன்மைகளை ஆகாரமாக ஈர்த்திடும் நிலையில்
3.”பரணி நட்சத்திரத்தின்…” சக்தியையும் சேமித்து வளர்ச்சிப்படுத்திக் கொள்கின்றன.

மனித உடல் வளர்ச்சி தாயின் கருவிலே உருக் கொள்ளும் நிலையில் சரீரமாகி வெளியில் வந்து தன் வாழ்க்கையில் உலக நடை முறைக்கு ஆற்றல் கொள்ளும் பக்குவமே தாயின் கருவில் சிசுவாக இருக்கும் பொழுது பெறும் “பரணி நட்சத்திரத்தின்…” ஆதிக்க வலுவின் மூலம் கிடைக்கும் எலும்புகளின் வளர்ச்சி தான்.

ஆகவே உயிர் சக்தியின் வலுவுக்கு வலுக் கொண்டிடும் சேமிப்பாகப் பரணி நட்சத்திரத்தின் அமில குண ஆதிக்கத்தை எலும்புகளில் சத்தாகப் பேராற்றல் கொள்ளும் பக்குவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

1.நான் (ஈஸ்வரபட்டர்) சுட்டிக் காட்டும் இந்தத் தியான வளர்ப்பின் மூலம்
2.எலும்பின் வீரிய குண விரியத்தை உணர்ந்து
3.சுண்ணம் என்றிட்ட அமில குணங்கள் அடர்வு கொண்டு
4.தன் வளர்ச்சியின் சிறப்பிடத்தைப் பெறும் பொழுது
5.இருபத்தியேழு நட்சத்திரங்களின் ஒளியையும் சேமிக்கும் சக்தியாக அந்த எலும்புகள் செயல்படும்.

சரீரம் தன் வினைப்பயனை அனுபவிக்கும் பொழுது உடல் நலம் குன்றி… உயிர்ச் சக்தி இந்தக் கூட்டினை விட்டுப் பறக்கும் பொழுது… “சரீரம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு யார் மூல காரணம்…?” வேதனைப்படாமல் எப்படி உடலை விட்டுப் பிரிவது…?

1.நம்மை நாம் உணர்ந்து கொண்டு
2.நல்வினைப் பயனாக ஆக்கச் செயலுக்குண்டான எண்ணம் கொண்டு செயல்படும் பொழுது
3.உடலில் உள்ள எலும்புகள் மகரிஷிகள் பெற்ற ஒளி காந்த சேமிப்பைப் பெற்றிருக்கும் பொழுது
4.மூலாதாரம் தொடங்கி எழும் வீரியச் சக்தி முதுகுத் தண்டுவடம் வழிப்போந்து நெற்றிப் பொட்டை அணுகித் தாக்கி
5.உயிர் பறிக்கும் அந்தச் செயலை சரீர அவஸ்தை இன்றி எந்தவிதத் தடங்கலும் இன்றி உயிரை வெளியேற்றலாம்.
6.ஞானிகள் கபாலம் மூலம் தன் உயிர் சக்தியை வெளியேற்றுவர்.

மனித உடலை அவஸ்தையிலிருந்து காப்பவைகள் எலும்புகளின் தொடர்பே. இருந்தாலும் அந்த எலும்புகளில் முற்றிய நோய் இருந்தால் சரீரத்தில் குறைவுபட்டிருக்கும்.

பரணியின் அமில குணத்தைக் கொங்கணவ மாமகரிஷியை எண்ணி ஈர்த்துத் தியானிப்பதன் மூலம் அதைச் சொஸ்தப்படுத்த முடியும்.

1.பரணி நட்சத்திரத்தை எண்ணி ஈர்க்கும் பொழுதே
2.இந்தத் தொடரினை வழி காட்டிய கொங்கணவ மாமகரிஷியையும் எண்ணி
3.சரீரக் கட்டளைக் கேந்திரத்தில் செயல் கொள்ளும் கார்த்திகை நட்சத்திரத்தையும் எண்ணி
4.ரச மூல அமிலச் சுக்கிரனையும் (வியாழன்) எண்ணி
5.இந்த முத்தொடரையும் சூரியச் சமைப்புடன் பெற்றால் எலும்புகளின் வலுக்கூடும்.

முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவது தான் நம் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்

முன்னோர்களின் உயிராத்மாக்களை விண் செலுத்துவது தான் நம் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்

 

குருநாதர் காட்டிய அருள் வழியில் தியானப் பயிற்சி கொடுக்கின்றோம் (ஞானகுரு).

இந்தப் பயிற்சி மூலம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுப்படுத்திக் கொண்டு நம்முடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் உயிர் ஆன்மாக்களை விண் செலுத்துவது தான் முதல் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நம்மைக் காக்க… நம்மை வளர்க்க… அவர்கள் எத்தனையோ வேதனைப்பட்டு இருக்கின்றார்கள். அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள் கூட்டி அந்த ஆன்மாக்களின் விண் செலுத்துவதே முறை…!

நம்முடைய முன்னோர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தில்
1.சந்தர்ப்ப பேதத்தால் விபத்துக்களில் சிக்கி இருப்பார்கள்…
2.ஒரு சிலர் தற்கொலை கொலை கூடச் செய்திருப்பார்கள்…
3.எத்தனையோ வகையான சாபங்கள் இட்டும் அவர்கள் மடிந்து இருக்கலாம்.

இதைப் போன்ற உணர்வுகள் குல வழி என்று தொடரப்படும் போது குடும்பங்களில் கர்ப்பமுறும் தாய் கருவிலே இது இணைந்து பூர்வ புண்ணியமாக அமைந்து விடுகின்றது.

அப்படிப் பிறக்கும் குழந்தைகளின் குடும்பங்களில் ஏராளமான இன்னல்கள் வந்து விடுகின்றது. பிறக்கும் குழந்தைகள் தவறு செய்யவில்லை என்றாலும் இது போன்று இயக்கமாகின்றது.

ஆகவே எந்த வழியில் முன்னோர்கள் உயிரான்மாக்கள் உடலை விட்டுச் சென்றிருந்தாலும் அவருடைய உணர்வுகள் நமக்குள் இருப்பதனால்
1.அவர்களை அறியாது இயக்கிய விஷத்தன்மைகள்…
2.அவர்களை மாய்க்கச் செய்த அந்த விஷத்தின் தன்மைகளை
3.கூட்டுத் தியானங்கள் மூலம் விண் செலுத்த முடியும்… சப்தரிஷி மண்டலத்தில் இணைக்க முடியும்.
4.ஏனென்றால் அவர்கள் கடும் விஷத்தையும் முறித்தவர்கள்.

குடும்பத்தில் இருப்போர் அனைவரும் ஒன்று சேர்ந்து கூட்டமைப்பாகத் தியானித்து எங்களுடன் வாழ்ந்து வளர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற முன்னோர்களின் உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று உந்தித் தள்ளி அங்கே அனுப்பப்படும் பொழுது அந்த அலைகளுடன் கலந்து விஷத்தின் தன்மை குறைந்து விடுகின்றது.

முன்னோர்கள் துர்மரணமடைந்திருந்தாலும் கூட அவர்கள் ஒளி உடல் பெறுகின்றனர். துர்மரணத்திற்குக் காரணமான அந்த உணர்வுகளும் மடிந்து விடுகின்றது. அவர்கள் ஒளி உடல் பெற்றுச் சப்தரிஷி என்ற நிலை அடைகின்றனர்.

இப்படி அடையச் செய்தால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள் (துயரப்பட்டது நோய்வாய்ப்பட்டது) நம்மிடத்தில் பதிந்திருந்தாலும் இருளை நீக்கிப் பொருள் காணும் உணர்வாக அது செயல்படுத்தும்.

குடும்பத்தில் நமக்குத் தெரியாமல் அறியாமலே சூட்சமத்தில் எத்தனையோ வகையில் தீமைகள் நடக்கின்றது.

காரணம் பாசமும் பற்றும் கொண்டு இருந்தாலும் நம்முடன் வாழும் போது நோய்வாய்ப்பட்டிருந்தார் என்று நாம் எண்ணுகின்றோம். ஆனால் உடலை விட்டுப் பிரிந்த பின் யார் மீது பற்று உள்ளதோ அந்த உடலுக்குள் வந்து அவர் உடலில் இருந்த தீமைகளும் இங்கே இயக்கத் தொடங்கி விடுகின்றது.

இதைப் போன்ற நிலை ஆகாதபடி நாம் தடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடன் வாழ்ந்து வளர்ந்தவர்கள் எந்த நேரம் உடலை விட்டுச் சென்றாலும் நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு ஏழாவது நிலையாக அவர்களை ஒளியின் தன்மை பெறச் செய்ய வேண்டும்.

நம் தூதுவராக அங்கே விண்ணுக்கு அனுப்பினால் அவர்கள் முதலில் ஒளி உடல் பெறுகின்றனர். அடுத்து நாமும் பிறவியில்லா நிலை அடையலாம். வழி வழி நாம் இதைச் செய்தால் இதன் வழி சீராக வருகின்றது.

ஆனால் “எங்களுடன் வாழ்ந்தீர்கள்… சம்பாதித்துக் கொடுத்தீர்களே… இப்படி எங்களை விட்டுப் போய்விட்டீர்களே…!” என்று பாசத்துடன் எண்ணினால் அந்த ஆன்மா நமக்குள் வந்து அவர் பட்ட கஷ்டத்தை நமக்குள்ளும் இயக்கும்.

இந்த உடலுக்குள் வந்து மீண்டும் வேதனையைத் தான் வளர்க்கும். இந்த உடலை விட்டு வெளியிலே செல்லும் போது கடைசியில் மனிதனல்லாத உயிரினமாகத் தான் பிறக்கும்… நம்மையும் அதே வழியிலே வீழ்த்திவிடும்.

இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நாம் தப்ப வேண்டும். நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் மூதாதையர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்வோம். அதற்கு அந்த அருளைப் பெறுவோம்.

1.இதைச் செய்வதற்குக் காசு பணம் எதுவும் தேவையில்லை
2.எல்லோருக்கும் அனுமதி கொடுக்கின்றோம்… தாராளமாகச் சொல்கின்றோம்
3.உங்களால் முன்னோரை விண் செலுத்த முடியும்
4.தீமைகளை நீக்க முடியும்… நன்மைகளைப் பெற முடியும்
5.ஆகவே நன்மை பெறும் சக்தியைத்தான் கொடுக்கின்றோம்.

திட்டியவனை எண்ண்ணும் பொழுது… அது தீமைகளைத் தான் செயல்படுத்தும். வேதனைப்படுவோரை எண்ணும்போது அது வேதனைப்படுத்தும் உணர்வாக வருகின்றது… மற்றவர்களையும் வேதனைப்படுத்தும் நிலைதான் வருகின்றது.

அதே போன்று
1.தீமைகளை நீக்கும் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்கிக் கொண்டால்
2.தீமையை நீக்கும் அருள் சக்தியாக நிச்சயம் வளரும்.

கடலிலே செல்லப்படும் பொழுது அதிலே எத்தனையோ அலைகள் வருகின்றது. அதிலே ஒரு தீவிற்குப் போக வேண்டுமென்றாலும் அந்த அலைகளைக் கடந்து தான் செல்ல வேண்டும். ஆனால் பெரிய அலை வந்து விட்டால் அதிலே மூழ்கி விடுகின்றோம்.

ஆக… உங்கள் வாழ்க்கையில் வெறுப்பும் வேதனையும் கோபமும் போன்ற கடினமான அலைகள் வரும் போது அதிலே நீங்கள் கவிழ்ந்து விட்டால் கோபப்பட்ட உடலுக்குள்ளோ அல்லது வெறுப்படைந்த வேதனை அடைந்த உடலுக்குள்ளோ சென்று அங்கே அதே தீமைகளைத் தான் வளர்க்க முடியும்.

இதையெல்லாம் கடந்து வர வேண்டும் என்றால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். அந்தத் துருவ நட்சத்திரத்தைத் துடுப்பாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த மனித உடலில் பெற்ற பாவங்களை நீக்க முடியும். பிறவி இல்லா நிலை அடைய முடியும்.

ஆகவே தீமையை நீக்கும் ஒன்பதாவது நிலையிலிருந்து பத்தாவது நிலையான கல்கி ஒளி நிலை அடையக்கூடிய தகுதி பெற்றால் விஜய தசமி.

1.விண்ணிலே தோன்றிய உயிர் பூமிக்குள் வந்து
2.ஒளியின் உணர்வாக மாறி விண்ணிலே மீண்டும் ஐக்கியமாகி
3.என்றும் ஏகாந்த நிலைகள் பெறுவதுதான் யாம் (ஞானகுரு) சொல்லும் இந்த மார்க்கம்…!

எண்ணத்தால் நம் உயிரான்மாவைச் சுகமாக்க வேண்டும்… உடலை அல்ல…! – ஈஸ்வரபட்டர்

எண்ணத்தால் நம் உயிரான்மாவைச் சுகமாக்க வேண்டும்… உடலை அல்ல…! – ஈஸ்வரபட்டர்

 

கண்டெடுத்த இரசாயணத்தைக் கண்ணாடியில் பூசித் தன் பிம்பத்தைத் தானே காணும் நிலையில் தான் துள்ளீர்கள்.

மாயக் கலியில் அவதரித்த செயற்கை யுகம் கொண்ட மனிதர்கள் எல்லாம்
1.தன் எதிரில் உள்ள பிம்பத்தைத்தான் அந்தக் கண்ணாடியில் காண்கின்றார்கள்.
2.ஆனால் எல்லாவற்றையும் அன்றே எந்தக் கருவியும் இல்லாது கண்ணால் கண்டான் சித்தன்.

உலக நிலையையும்… மற்ற மண்டலங்களின் நிலையையும் அறிந்து வாழ்க்கைக்கு என்ன பயன்..? என்றும் சிலர் எண்ணலாம்.

1.ஆத்ம நிலையைத் தன் வழிக்கு ஏற்க வந்தவர்களுக்கு அறிந்திடத் தான்
2.இந்தப் பாட நிலையையே கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

மனிதனுக்குள் எந்த நிலையில் சக்தி நிலை கலந்துள்ளது…? என்று அறிந்து கொள்ளுங்கள்.

இந்தப் பூமி எப்படிச் சூரியனிலிருந்து வரும் அணுக் கதிர்களைத் தன் சக்தியில் ஈர்த்துப் பல நிலைகளை நமக்களிக்கின்றாளோ… பூமித் தாயின் அந்தச் சக்தி எல்லாமே இந்தப் பூமியில் வாழ்ந்திடும் நமக்கும் “அந்த ஈர்க்கும் தன்மை எல்லாமே உள்ளது…!”

1.சூரியனிலிருந்து வெளிப்படும் தன்மை எல்லாவற்றையுமே நாம் நேராகவே நம் நிலைக்கு ஈர்த்திடலாம்.
2.நம் உடலில் வரும் நோய்களை நீக்கவும்
3.அந்தச் சூரியனிலிருந்தே பல வகை மூலிகைகள் கொண்ட மருந்தின் நிலையை நம் உடலுக்கு நாம் ஈர்த்திடலாம்.
4.நம்மைச் சுற்றியுள்ள ஒலிகள் நம் செவியில் பட்டுக் கேட்பதைப் போல் நாம் காணாத இடத்திலுள்ள ஒலிகளையும் ஈர்த்திடலாம்.

நாம் எடுக்கும் சுவாசத்தில் அந்த ஒலியுடன் கலந்துள்ள ஒளியை நாம் ஈர்க்கும் பொழுது எங்கெங்கோ நடக்கும் நிலையையும் நாம் ஈர்க்கும் தன்மை கொண்டு
1.அந்த ஒளியின் பிம்பம் படும் நிலையில் உள்ள எல்லாவற்றையுமே
2.இருந்த இடத்திலிருந்தே நாம் கண்டிடலாம்.

இந்த மனித சக்திக்குக் கால நிலை… பூகம்பம் வரும் நிலை… பெரும் மழை வரக்கூடிய நிலை…! இது எலலாவற்றையுமே உணரும் தன்மை நம் உடலில் இருக்கின்றது.

ஆனால் இதை உணராது நம் நினைவை மாற்றி விடுவதால் இதை எல்லாம் அறிந்திடாமல் தவற விடுகின்றோம்.

பூமிக்கு ஈர்ப்பு நிலை என்னும் காந்த சக்தி உள்ளது போல் இந்தப் பூமியில் உதித்த உயிர் அணுக்கள் எல்லாவற்றுக்குமே அந்தச் சக்தி உள்ளது என்றாலும்
1.மனித உடல் பெற்ற ஆத்மாக்களுக்கு அனைத்தையுமே அறிந்திடும் சக்தி உள்ளது.
2.செயல்படுத்தும் தன்மை வாய்ந்த உறுப்புகளும் உள்ளன.

ஆனால் மனிதன் உண்டு… உடுத்தி… உறங்குவது தான் வாழ்க்கை…! என்ற சுகத்தை எண்ணுகின்றான்.

இந்தச் சுகம் எத்தனை நாளைக்கு…?

1.தன் எண்ண சுகத்தைக் கொண்டே ஆத்மாவைச் சுகமாக்கிடாமல்
2.இந்த உடல் சுகத்தைத்தான் பெரிதாக எண்ணி வாழ்கின்றான்.

ஆகவே இந்த உடல் என்னும் கூட்டிற்கு அனைத்துச் சக்திகளையும் அறிந்து வாழும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்து நமக்கு முன் வாழ்ந்த பெரியவர்கள் சித்தர்கள் ஞானிகள் மகரிஷிகள் அடைந்த பேரானந்த நிலையை அடைய முற்படுங்கள்…!

அதிகாலையில் தினசரி எடுக்க வேண்டிய உண்மையான விரதம்

அதிகாலையில் தினசரி எடுக்க வேண்டிய உண்மையான விரதம்

 

உதாரணமாக நம்மிடம் ஒருவர் கடன் வாங்கிச் சென்ற பின் திரும்பக் கொடுக்கவில்லை என்றால் “அவர் எனக்குத் தொல்லை கொடுக்கிறார்…” என்று தான் எண்ணுகின்றோம். கோபமும் வேதனையும் படுகின்றோம்.

கடனைத் திரும்பக் கொடுக்க முடியவில்லை என்று அடிக்கடி அவர்களும் வேதனைப்பட்டால்
1.அந்த உணர்வுடன் வியாபாரம் செய்தால் நஷ்டம்தான் வரும்… வியாபாரம் ஆகாது…!
2.அவர்களுக்கு வியாபாரம் ஆகவில்லை என்றால் நமக்கும் பணம் வராது.
3.இத்தகைய நிலையில் நாம் அவர்களைத் தேடிச் சென்றாலும்
4.பணம் கொடுக்கவில்லை என்றால் அவர்களைச் சாபமிடும் நிலைகள் தான் வருகின்றது

இதை எல்லாம் மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா… என்று உயிரைப் புருவ மத்தியில் எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும்… எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… எங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அனைத்து அணுக்களிலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று முதலில் நாம் தியானிக்க வேண்டும்.

பின்… நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
1.அவர் குடும்பத்திலுள்ளோர் அந்தச் சக்தி பெற வேண்டும்
2.அவர் செய்யும் தொழில் முழுவதும் படர வேண்டும்
3.அவருடைய தொழில் நன்கு விருத்தியாக வேண்டும்
4.அவருடைய வாடிக்கையாளர்கள் பெருக வேண்டும்
5.அவருக்குத் தொழிலில் லாபம் வர வேண்டும்
6.நம்மிடம் வாங்கிச் சென்ற பணத்தினைத் திரும்பக் கட்டும் சக்தி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்
7.அவர்களும் நன்றாக ஆவார்கள்… வர வேண்டிய பணமும் வந்து சேரும்.

இந்த முறைப்படி அவரை எண்ணி நாம் தியானிக்கும் போது அவர் மேல் பட்ட வேதனையோ கோபமோ நமக்குள் அணுவாக உருவாகாது… நோயாகவும் மாறாது… நம்முடைய வியாபாரமும் கெடாது.

ஆனால் கடனை அவர் திரும்பக் கொடுக்கவில்லை என்று வேதனைப்பட்டால் நம் வியாபாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கிறது. மன நோயாகி உடல் நோயும் ஆகின்றது.

ஆகவே நம் ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்ற நிலையில் பயன்படுத்தி அதிகாலையில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை எடுத்து மேலே சொன்ன மாதிரித் தியானிக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.

அதே போல பிள்ளைகளை நினைக்கும் பொழுது சரியாகப் படிக்கவில்லையே என்று நினைக்கின்றோம். ஆனால் அப்படி நினைத்து வேதனைப்படாது
1.அவன் கல்வியில் சிறந்த ஞானம் பெற வேண்டும்
2.கருத்தறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும்
3.உலக ஞானம் பெற வேண்டும்
4.குடும்பப் பற்று வளர்ந்து… குடும்பத்தைக் காக்கும் அந்த அருள் ஞானம் பெற வேண்டும் என்று இப்படித் தான் எண்ண வேண்டும்.

இதே போல் குடும்பத்தில் உள்ளோர் யாராவது குறைகளைக் கூறினால் அவர் குறையிலிருந்து விடுபட வேண்டும் என்று அந்த உணர்வினை எடுத்தால் அவருடைய குறை உணர்வு நமக்குள் வராது.

இது தான் உண்மையான விரதம்…!

அருள் ஒளியை நமக்குள் பெருக்கப் பெருக்க நம்முடைய சொல்லும் செயலும் பிறருடைய தீமைகளை நமக்குள் விடாதபடி தடுக்கும் சக்தியாக வரும்.
1.அதே சமயத்தில் அவர்கள் நம்மை எண்ணும் போதெல்லாம்
2.இந்த உணர்வுகள் அவர்களைத் திருந்தி வாழச் செய்யும்.

ஆகவே நாம் அதிகாலை எழுந்தவுடன் துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்திகளை வலு ஏற்றிக் கொண்டு பிறரின் தீமையான உணர்வை நுகராதபடி குறைந்தது 10 நிமிடமாவது இந்த எண்ணத்தைக் கூட்டிப் பழக வேண்டும்.

பின் எங்கள் குடும்பத்தில் பண்பும் பரிவும் பெற வேண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் வாடிக்கையாளர்கள் பெற்று நலமும் வளமும் பெற வேண்டும்.

நாங்கள் தொழில் செய்யும் இடங்களில் அந்த அருள் ஒளி படர வேண்டும் என்று ஒரு பத்து நிமிடமாவது துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை எல்லோருக்கும் கிடைக்கச் செய்ய நாம் தியானிக்க வேண்டும்.

1.அப்பொழுது அந்த அதிகாலை நேரத்தில் தீமைகளை நுகராது
2.அருள் ஞானத்தை உணவாக உட்கொள்ளும் பழக்கம் வந்து விடுகின்றது
3.பற்று அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் வருகின்றது
4.மற்றவர்கள் மீது பற்றற்ற நிலைகளை நாம் மாற்றிக் கொள்ள முடிகின்றது

அதே சமயத்தில் அவர்களையும் அந்த உயர்ந்த உணர்வை துருவ நட்சத்திரத்தைப் பற்றுடன் பற்றும் படி செய்கின்றோம். இது எல்லாம் இந்த வாழ்க்கையில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள்.

“ஹேமப் பறவை” என்ற விண்ணின் ஆற்றல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

“ஹேமப் பறவை” என்ற விண்ணின் ஆற்றல் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

“காமதேனு பாலை ஊட்டிடுவாள்…!” என்று சொன்ன சொல்லில் அது எப்படி..? என்ற வினா எழும்பும். அன்றைய சித்தன் இந்த அரிய உயிரணுக்களின் சக்தியை “ஹேமம்” என்ற நாமப்படுத்தி பறவையாகக் காட்டினார்கள்.

பூமியின் தொடர்பிற்கே வந்திடாத வண்ணம் பூமியின் காற்று மண்டல ஈர்ப்பு வட்டத்திற்கு மேல் ஹேமப் பறவைகள் பல்கிப் பெருகி உள்ளன…! என்று சுட்டிக் காட்டினர்.
1.அதைப் பற்றிய சூட்சமத்தை அறிய வேண்டும் என்றால்
2.ரிஷித் தன்மைக்குத் தன் சக்தியை உயர்த்திடும் எண்ணம் கொண்டு செயல்பட வேண்டும்.

“மறைக்கப்பட்ட விஷயமாக” இது இருந்தாலும் அந்த மகரிஷிகளின் ஆசியுடனே இப்பொழுது அதைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்துகின்றோம்.

பூமியைச் சுற்றி ஓடும் அந்த அரிய உயிரணுக்களின் தொடர் வட்டமே அனைத்தின் கூட்டுத் தொகுப்பில் “காமதேனு…” என்று அழைக்கப்படுகிறது.

அவைகளின் சுவாசத்தில் ஈர்த்து வெளியிடும் சக்திப் பிரவாகம் பால் அமுதமாக வருவதை
1.ஒளி காந்த சக்தியாக ஈர்த்திடும் பக்குவத்தில்
2.அந்த ஈர்ப்பின் வலுச் செயலுக்கு நாம் அந்த ஆகாரத்தைப் பெற வேண்டும்.

அகண்ட அண்டத்தில் (UNIVERSE) உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படும் விரிவாக்க மூல சூட்சமத்தை அறிந்துணர்ந்து தெளிந்த பின் தனித்தன்மை வாய்ந்த செயல் நிகழ்வாக ஒளி நட்சத்திரங்களாக நாம் சுழன்று ஓடும் செயல் வளர்ப்பிற்குண்டான சகல சக்திகள் நம்முள்ளும் உண்டு.

யோகிகளுக்கு ஆத்மனும்… ஞானியர்களுக்குப் பரப்பிரம்மமும்… சொல் நாம வேறுபாடே தவிர அனைத்தும் ஒன்று தான்.
1.தன் எண்ணத்தின் வலுவால்
2.நல் வினைப்பயனால் சகலத்தையும் அறியும் சக்தியால்
3.ஆத்மாவாக உணர்ந்தறியும் உயிர் சக்தியின் கலப்பால்
4.சூட்சமச் சரீரமே சூட்சமத்தில் வாழும்
5.ஒளி காந்த உயிரோட்டமாக நிலை நின்று ஒளிரும் வளர்ப்பே
6.ஆதிசக்தியின் மூலசக்தியாகக் கலந்திடும் செயலுக்கு வாயிலாகின்றது.

பரப்பிரம்ம ஆத்ம சூட்சமம் பதியும் ஒவ்வொரு செயலையும் இந்தச் சரீர உணர்வுடன் ஒன்றி வளர்க்க அறிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும் பூமியின் தொடர்பில் சூரியக் குடும்ப வீரிய அலையின் சக்தி பரவிப் பாய்வதையும் அது ஒன்றாகக் குவிந்து வருவதையும் அறிந்தனர்,

1.தங்களுடைய உயர் ஞான அறிவின் வளர்ப்பால்
2.உள் நுணுக்கு… நுண் சூத்திரம்… என்ற கணித முறைச் சூத்திரங்கள் பலவற்றைக் கையாண்டு
3.அவைகளை எல்லாம் ஆக்கச் சக்திக்காகப் பயன்படுத்தும் வகைப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு மண்டலங்களின் சுவாசத் தன்மைகளில் அந்த மண்டலங்கள் ஈர்த்துச் சமைத்து வெளிவிடும் சுவாச அலைகளை ஈர்த்திடும் செயலில் பல குண அமிலத் தன்மை கொண்ட அலைகள் உண்டு.

அவைகள் எல்லாம் ஒன்றாகக் குவிதலும் குவிந்த பின் விரிந்திடும் நிலைகளையும் அதற்கென்ற கருவிகளை வைத்து இன்றைய விஞ்ஞானம் விளக்கமாக அறிவின் தொடரில் அறிந்து கொண்டது.
1.அறிந்தாலும் அதை அழிவுக்கே பயன்படுத்துகின்றார்கள்.
2.வளர்க்கும் ஆக்கச் சக்தி இல்லை.

மண்டல இயக்கங்களின் மோதலினால் உருவாகும் அந்த நுண்ணிய “மின் காந்த அலைகளை… ஒளி காந்த சக்திகளை…” எல்லாம் அழிவின் சக்திக்கே கொண்டு செல்கிறார்கள் இன்றைய மனிதர்கள்.

ஆனால் அன்றைய சித்தர்களும் மெய் ஞானிகளும் படைப்பின் படைப்பை ஒளி சக்தியின் வளர்ப்புக்காக அதைக் காத்திட்டார்கள்.

பாவம்… கஷ்டப்படுகின்றார்கள்…! என்று பிறரை எண்ணினால் வரும் விளைவுகள்

பாவம்… கஷ்டப்படுகின்றார்கள்…! என்று பிறரை எண்ணினால் வரும் விளைவுகள்

 

மனிதனின் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் நாம் நல்லதைச் செய்தாலும் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிந்து தான் அவர்களுக்கு நாம் உதவிகளைச் (தர்மத்தை) செய்கின்றோம்.

ஆனால் அவர்கள் கஷ்டப்பட்ட உணர்வுகளோ வலிமை கொண்டது… நாம் நுகரும்போது அது வாலி (எதிர்நிலை) ஆகிவிடுகின்றது. நாம் நல்லதுதான் செய்கின்றோம். இருந்தாலும்…
1.மற்றவர்கள் துன்பப்பட்ட உணர்வுகள் நமக்குள் வந்த பின்
2.இரக்கம் ஈகை என்று நமக்குள் இருக்கும் நல்ல குணங்களை மடியச் செய்து விடுகின்றது.

பாவம்… அவர்களின் தரித்திரம் இப்படி இருக்கின்றது…! என்று ஏங்கி நாம் சுவாசித்ததை நம் உயிர் அந்த உணர்வால் உணரச் செய்கிறது. அந்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறுகின்றது.

அவர்கள் பட்ட வேதனையும் சோர்வான உணர்வுகளும் நமக்குள் உமிழ் நீராக மாறி… நாம் சாப்பிட்ட ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது.

சிறுகுடல் பெருங்குடல் உருவாக்கிய அணுக்களில் இந்த விஷத்தின் தன்மை பட்ட பின் அது ஜீரணிக்கும் சக்தியை இழந்து விடுகின்றது. சிறு குடல் பெருகுடலை உருவாக்கிய அணுக்கள் அந்த விஷத்தால் மயக்கம் அடைகின்றது.

உதாரணமாக ஒரு விஷத்தினை உட்கொண்டால் உடல் முழுவதும் படர்ந்து நம்மை எப்படி அது மயக்கம் அடையச் செய்கின்றதோ அதே போல்
1.நாம் சுவாசித்த மற்றவரின் வேதனையான உணர்வுகள் உமிழ் நீராக மாறி
2.சிறு குடலுக்குச் சென்ற பின் சாப்பிட்ட ஆகாரத்தை ஜீரணிக்கும் சக்தியை இழக்கச் செய்து விடுகின்றது.
3.மற்றவர்கள் பட்ட வேதனை எதுவோ அதன் உணர்வு நம்மை அன்றைய தினம் இந்த உபாதை (அஜீரணம்) அடையச் செய்கின்றது.

செல்வம் இருந்தது என்ற நிலையில் நல்ல சத்துள்ள ஆகாரத்தைத் தான் சாப்பிட்டோம். பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணினோம்… உதவியும் செய்து விட்டோம்.

ஆனால் உதவி செய்யும் போது நாம் கேட்டுணர்ந்த வேதனையான உணர்வுகளைச் சுவாசிக்கும்போது நமக்கு இந்த நிலை (உடலில் உபாதை) ஆகின்றது.

ஆனால் அவர்கள் பட்ட வேதனை நமக்குள் எப்படி வருகிறது…?

அவர்கள் உடலில் விளைந்த வேதனைப்படும் உணர்வுகள் வெளிப்படும் போது சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம் கவர்ந்து கொள்கிறது. அந்த வேதனையை இயக்கச் செய்யும் அணுவாக மாறுகின்றது.

நாம் அவர்களை உற்றுப் பார்க்கும் போது அந்த உணர்வு தான் நம்மை இயக்குகின்றது. இயக்கிய உணர்வுகளை நாம் நுகர்ந்தால் அது உமிழ் நீராக மாறி உடலில் கலக்கப்படுகின்றது.

1.வேதனை என்றாலே விஷம்.
2.ஆக விஷமான உமிழ் நீராக அது மாறி ஆகாரத்துடன் கலந்து அமிலமாகி இரத்தமாகின்றது.
3.அந்த வேதனையான உணர்வுகள் இரத்தத்தில் குடிகொண்டு
4.விஷத்தின் தன்மையை இயக்கும் ஒரு கருத்தன்மை அடைகின்றது.

இப்படி… மற்றவர்கள் உடலில் விளைந்த வேதனையின் உணர்வுகள் அணுக்களாக விளைந்து நம் உடலில் உள்ள நல்ல குணங்களைக் கொல்ல ஆரம்பித்து விடுகின்றது.

ஆனால் நாம் யாரும் தவறு செய்யவில்லை. இருந்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் இதைப் போன்று பல நிலைகள் வருகின்றது.

அதே போல் தொழிலுக்குச் செல்கின்றோம். அங்கே பிறர் செய்யும் தவறுகளைப் பார்க்கின்றோம்… பிறர் சொல்லும் குறைகளைக் கேட்கின்றோம். வெறுப்பு வேதனை போன்ற உணர்வுகளை நுகர்கின்றோம்… அறிகின்றோம்…!

குறைகளையும் தவறுகளை நீக்க அதற்கு வேண்டிய உபாயங்களைச் சொல்கின்றோம். உபாயங்களைச் சொல்லிவிட்டு வந்த பின் நம் உடலில் தீமை வருகின்றது…! எப்படி…?

குறைகளைச் சொல்வார்கள்… அது என்ன… ஏது…? என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று விரும்புவோம். ஆனால் அவர்களோ சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கடைசியில் நம்மைச் சோர்வடையச் செய்து விடுவார்கள்.

1.அன்றைய தினம் இதை எல்லாம் கேட்டு
2.அதன் பின் வந்து ஆகாரத்தை உட்கொண்டால் சரியாகச் சாப்பிட முடியாது
3.அதே உணர்வின் இயக்க அணுவாக இரத்தத்தில் மாறுகின்றது.
4.இரத்தத்தில் இப்படி மாறிய பின் உடல் முழுவதும் படர்கின்றது.
5.நம் உடலில் கெட்ட அணுக்கள் சேர ஆரம்பிக்கிறது.

இப்படித்தான் நமக்குள் தீமைகள் வருகின்றது.

ஏனென்றால் நாம் எண்ணிய உணர்வுகளை நம் உயிர் ஓ..ம் நமச்சிவாய… ஓ..,ம் நமச்சிவாய…! என்று உடலாக (நமதாக – சிவமாக) ஆக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் எண்ணுவது அனைத்தையும் ஓ… என்று பிரணவமாக்கி ம்… என்று நம் உடலாக மாற்றிக் கொண்டே இருப்பது தான் உயிரின் வேலை.

சலிப்படைந்த சங்கடப்பட்ட உணர்வுகள் எல்லாம் நமக்குள் ஓ…ம் நமச்சிவாய என்று நம் உடலுக்குள் ஆனபின்… அவர் இப்படிப் பேசினார்… அதிலே குறைகள் இப்படி இருந்தது… நான் உதவி செய்தேன்…! என்று எல்லாம் முதலிலே சொல்வோம்.

ஆனால் கடைசியில் பார்த்தால் நமக்குள் உருவாகும் அணுக்கள் விளைந்த பின் நம் உடலிலும் அதே உணர்வின் இயக்கமாகி “சிவாய நம ஓ…ம் என்று அதே உணர்வின் சொல்லாக வரத் தொடங்கி விடுகின்றது.

1.ஆக… அவன் உடல் நலிந்தது நம்முடைய உடலும் நலியத் தொடங்குகிறது
2.அவன் உணர்வு குறைந்தது… நம்முடைய நல்ல குணமும் குறையத் தொடங்குகிறது.

இதை எல்லாம் மாற்ற வேண்டுமா இல்லையா…?

சத்ரு…மித்ரு… என்று வந்தாலும் அதிலே காக்கும் திறனாகப் பெற வேண்டிய “உன்னத சக்தி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

சத்ரு…மித்ரு… என்று வந்தாலும் அதிலே காக்கும் திறனாகப் பெற வேண்டிய “உன்னத சக்தி” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

 

ஒவ்வொரு உயிர் அணுக்களின் (உயிரினங்கள்) உயர் அமில வீரிய குணச் செயலின் தொடர் என்பது சுழல் சக்தி எண்ணமாக… பிரம்மத்தின் பிம்பமாக… சரீரச் செயல் வாழ்க்கையாகப் பூமியின் ஈர்ப்பில் செயல்படுகிறது.

அந்த உயிரினங்கள் தன் வாசனை குணத்திற்கொப்ப ஈர்ப்பின் பக்குவமாக வளர்ச்சிப்படுத்திக் கொண்டு செயல்படும் அனைத்திலுமே
1.இரு குண அமிலங்கள் சந்திக்கும் நேர் தொடரில் கலந்து
2.சத்ரு…மித்ரு… என்ற செயல் நடக்கிறது.

அதனால் அந்த இரு குண அமிலங்களில் எது வீரியத் தன்மையோ அதன் குணத்திற்கொப்ப மற்றொன்று அதனுள் கலந்து மற்றொன்றாக உருவாக்கிடும் செயல் நடக்கின்றது.

இப்படிப்பட்ட எதிர் மோதல்களைத் தன் வாழ்க்கை நடை முறையில் சந்திக்கும் பொழுது
1.அந்த நேரத்தில் அந்த எண்ண மோதல்களை
2.அறிந்து… உணர்ந்து செயல் கொண்டிடும் அவகாசக் காலம் ஒரு நொடிப் (நொடிக்குள்) பொழுதின் காலம் தான்.

அந்த நொடிப் பொழுதில் அறிந்ததை உடனே தெளிதலும் தெளிந்ததின் பொருள் விளங்கி எதிர் மோதல் குணங்கள் தன்னைப் (ஆன்மா) பாதித்திடா வண்ணம் காத்துக் கொள்ளும் நிலைக்கு வருகின்றது.

அது மட்டுமல்ல…!

1.அந்த எதிர் மோதல் குணங்களையே மாற்றியமைத்து நற்குண நீர் பாய்ச்சி
2.தன்னுள் எதிர் மோதல் குணங்களையே அமுதமாக உட்கொண்டுவிடும் வல்லமை பொருந்தியவர்கள் தான்
3.”சித்சத்துவ பரமார்த்த புருஷர்கள்…!”

பிராணிகளில் மான் தன் குட்டிக்குப் பாலைப் புகட்டும் பொழுது அது எடுக்கும் உணர்வின் தன்மை எப்படிப்பட்டது…?

பாலை ஊட்டும் பொழுதே இயற்கையாகச் செயல் கொள்ளும் தொடரில் தன்னைப் புசிக்க வரும் கொடிய விலங்குகளின் உணர்வுகள் காற்றிலே அலைகளாக வரும் பொழுது தன் மீது வந்து மோதியவுடன் அந்த வாசனையை அறிந்து கொள்கிறது.

1.உடனே தன் சுவாசத்தின் ஈர்ப்பினால் எதிர் மோதல் குணங்களை அறிந்து
2.தான் சுரந்திடும் பாலைத் தடைப்படுத்தி நிறுத்தி விடுகிறது.

தன் குட்டிக்கும் அதே உணர்வை ஊட்டி ஒரு நொடிக்குள் நடைபெறும் இயற்கையின் சூட்சம உணர்வில் அது எடுக்கும் அச்ச உணர்வு கொண்டு விரைந்து தப்பி ஓடிவிடும்.

ஏனென்றால் அதற்குள் இருக்கும் குண அமிலச் சுரப்பிகள் இயற்கையின் வழி வரும் (மற்ற கொடிய மிருகங்கள்) அந்த வாசனைக்கொப்ப உணர்வு கொண்டு அந்தச் (மானின்) சரீரத்தைச் செயல்படுத்தச் செய்கிறது.

அதாவது ஒரு கட்டளைக் கேந்திரமாகச் (CONTROLLING STATION) செயல்படும் எண்ணத்தின் பிடர்தல் உந்துவிசை கொண்டு எந்த உணர்வுகள் அச்சத்தை ஊட்டியதோ (ஈர்த்ததோ)
1.அதே உணர்வுகளில் நொடிக்குள் மாறு கொண்ட விநோத செயல்பாட்டை அறிந்து
2.தன்னைத் தற்காத்துக் கொள்ளும் செயல்கள் துரித கதியில் செயல்படுகிறது.

இதே செயல் முறை தான் கௌதம புத்தருக்கும் அன்று ஏற்பட்டது.

புத்தர் தான் பெற்ற அனுபவ ஞானத் தொடரில் சரீர அவஸ்தைகளிலிருந்து மனிதன் விடுபட்டு இந்தச் சரீரத்தைக் காத்திட வேண்டும் என்றால் மனிதன் விடுபட வேண்டிய குணங்களில் “அதி ஆசையை முதன்மையாகக் காட்டினார்…!”

ஆக பிறவித் துன்பங்களுக்குக் காரணமே “ஆசை” என்ற சொல் நாமப்படுத்திச் சூட்சமங்களை உள் மறைத்து உயிரான்ம சக்தியை வலு கொண்டதாக ஆக்கிடும் செயலில் புத்தருக்குப் பரிபூரணத்துவம் உண்டு.

நம் உயிரான்ம சக்தியைக் காத்திடும் பஞ்ச உறுப்புகளில் எதிர் மோதல் தன்மைகளைப் பக்குவமாக விலக்கிடும் உணர்வுகள் கொண்டு அறிந்து செயல்படும் பிடர்தல் செயல்பாட்டின் பொழுது
1.உயிரான்ம சக்தியில் ஏற்கன்வே பதிவு செய்த செயலை வீரியமாக்கிடாமல்
2.ஆன்மாவில் பதிந்த பின் சுவாசத்தின் வழி கொண்ட சரீர உணர்வுகளில் செயலாக்கத்திற்கு
3.ஞான விழிப்பார்வை கொண்டு “நொடி நேரச் செயல்பாடாக…”
4.அருள் உணர்வுகளைத் தியானத்தின் மூலம் வலுக் கூட்டிக் கொண்டு
5.அதனைப் பார்வை வழியாச் செயல்படுத்துதல் வேண்டும்
6.ஆனால் அப்பொழுது செயல்படும் செயலின் ஈர்ப்பில் அச்ச உணர்வுகளைக் கூட்டிக் கொள்ளக் கூடாது.

காத்திடும் பக்குவமும்… எதிர் மோதல் குணங்களையே தன் ஒளி காந்தத்தால் வசமாக்கி.. அன்பு கொண்டு ஈர்த்திடும் செயலாக… தன் எண்ண அசைவு கொண்டு செயலாற்றிடல் வேண்டும்.

காட்டிலே புத்தரைக் கொல்ல வந்த கள்வன்… அவன் எடுத்த விரக்தியின் உச்சகட்ட ஆவேச உணர்வுகள் “சாது என்றோ… சம்சாரி என்றோ…” அறிந்து கொள்ளாத செயல்பாடாக இருந்தது.

அவனின் அறிவின் மௌடீகம் எவ்வளவு கொடுமையாக வீரியமாக அவனுக்குச் செயல்பட்டாலும்
1.அதை ஒரு நொடிக்குள் மாற்றியமைத்துச் சமப்படுத்திய புத்தனின் செயலாற்றும் திறன்
2.எல்லா ஞானச் செல்வங்களும் (மனிதர்கள்) பெற வேண்டும்.

குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை

குரு காட்டிய நெறியைக் கடைப்பிடிக்க வேண்டிய முறை

 

உங்கள் வாழ்க்கையில் சலிப்பு சஞ்சலம் வேதனை பகைமை போன்ற உணர்வுகள் எப்பொழுது தோன்றுகிறதோ அப்போதெல்லாம்…
1.“ஈஸ்வரா…” என்று கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் வைத்து
2.உங்கள் நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதனின்று வரும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

“கண்களை மூடி” அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்… உங்கள் உடலில் உள்ள அணுக்கள் பெற வேண்டும் என்று உங்கள் நினைவினை உடலுக்குள் செலுத்துங்கள்.

1.இப்படி இரண்டு மூன்று தடவை மீண்டும் மீண்டும் செய்தீர்கள் என்றால்
2.உங்கள் கவலைகள் நீங்கும்… அருள் உணர்வுகள் பெருகும்
3.அதன் வழி உங்களுக்குள் மன வலிமையும் கிடைக்கும்
4.பகைமையை அகற்றும்… சிந்திக்கும் ஆற்றலும் வரும்
5.மகிழ்ச்சி என்ற உணர்வுகள் தோற்றுவிக்கும்.

இவ்வாறு நீங்கள் தியானிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

மற்றவர்களுக்கு இதைச் சொல்லிக் கொடுக்கும் பொழுது
1.மகரிஷியின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும்
2.எங்கள் கஷ்டங்கள் எல்லாம் நீங்க வேண்டும்…
3.தொழில் வளம் பெற வேண்டும்… எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்
4.எங்கள் குழந்தைகள் தெளிந்த நிலைகள் கொண்டு வளர வேண்டும்
5.கணவன் மனைவி நாங்கள் ஒன்றி வாழ வேண்டும்
6.உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டிய முறை இது தான்…! என்று
7.இப்படிச் சொல்லி அவர்களுக்குள் பதிவு செய்யுங்கள்.

வாழ்க்கையில் அறியாது வரும் இருள் சூழ்ந்த நிலைகளிலிருந்து மீள…
1.நாம் சொல்லும் முறைகளை அவர்களும் கேட்டால்
2.”நல்லபடியாக நடக்கும்” என்று நீங்கள் சொல்லும் பொழுது அருள் உணர்வின் தன்மை அவர்கள் பெற்று
3.அவர்கள் எதை நாடி வந்தார்களோ அந்தச் சக்தியைப் பெறக்கூடிய தகுதி கிடைக்கின்றது

ஆனால் சாமியிடம் (ஞானகுரு) சென்றால் எல்லாம் நடக்கும்…! என்று வெறுமனே சொன்னால் அந்த ஆசையின் நிமித்தம் ஆவேசம் கொண்டுதான் வருகின்றார்கள்.

மனோதத்துவ ரீதியில் ஆசையைத் தூண்டும் போது ஆசை தான் மென்மேலும் வளரும். தீமையை நீக்கும் உணர்வுளைப் பெற வேண்டும் என்று நாம் சொல்லக்கூடிய உணர்வுகளை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

1.ஆகவே பண்பட்ட நிலைகள் கொண்டு நாம் செயல்பட்டால்
2.அருள் உணர்வை அவர்களுக்குள் பெறக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினால்
3.உங்களுக்கும் நல்லது… அவர்களுக்கும் நல்லது.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரை எண்ணி… உயிரை எண்ணி… அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த அருளைப் பெறுங்கள். உங்களுக்கு அது கிடைக்கும் என்று சொல்லிப் பழகுங்கள்.

உங்கள் வாக்கு அவர்களுக்கு நல்லதாகும். அதே உணர்வை எடுத்து அவர்கள் இயக்கத் தொடங்கும் பொழுது உயர்ந்த சக்திகளைப் பெறுகின்றார்கள்… அவர்கள் தீமைகளும் அகலுகிறது.

ஏனென்றால் இன்றைய உலகம் மிகவும் விஷத் தன்மையாக மாறிக் கொண்டுள்ளது. மிகவும் துரிதமாக மாறிக் கொண்டுள்ளது. அதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் தப்ப வேண்டும். அந்த விஷத் தன்மைகளை நீக்கும் உணர்வுகளை நாம் பெற்றுப் பழக வேண்டும்.

1.ஒரு வேப்பமரம் எப்படித் தன் கசப்பின் தன்மை கொண்டு மற்றதை அருகில் விடுவதில்லையோ
2.ஒரு ரோஜாச் செடி தன் நறுமணத்தால் மற்றதை அருகில் விடுவதில்லையோ…
3.இதைப்போல நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உடலுக்குள் வளர்த்து
4.தீமைகள் புகாது ஒரு பாதுகாப்பு கவசமாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.
5.தீமைகள் வராதபடி அந்த அருளைப் பெருக்கி கொள்ள வேண்டும்.

அந்தச் சக்திகளை நீங்கள் பெறுவதற்குத் தான் இதை உபதேசிக்கின்றோம்.

ஏனென்றால் “எல்லாம் தெரிந்து…” வரவில்லை. தெரியக்கூடிய ஆற்றலின் தன்மை கொண்டு வரும் பொழுது அதன் அறிவாக நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும்.

ஆறாவது அறிவு கார்த்திகேயா என்ற நிலையில் நாம் அதன் உணர்வைப் பெறப்படும் பொழுது எதையும் தெரிந்து கொள்ள முடியும். தெளிவான வாழ்க்கை வாழவும் முடியும்.

இந்த உடலுக்குப்பின் நாம் என்றுமே அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் தான் வாழ வேண்டும். பிறவியில்லா நிலை அடைய வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை எல்லையாக வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். மீண்டும் பிறவிக்கு வராதபடி தடுக்கும் ஆற்றலைப் பெறுதல் வேண்டும்.

ஆகவே மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று… அனைவருக்கும் பேரின்பம் கிடைக்கச் செய்யும் சக்தியாக நீங்கள் வளருங்கள். உங்களால் முடியும்… அனுபவத்தில் பாருங்கள்.

1.உயர்ந்த சக்தியை நீங்கள் பெறுவதன் மூலம்
2.மற்றவருக்கும் அந்த அருளைப் பாய்ச்சும் போது அவர்களும் அந்த அருளைப் பெற முடியும்.
3.உங்களில் விளைந்த அருள் சக்திகள் அவர்களுக்குள்ளும் விளையைத் தொடங்கும்.

ஏழு பிறவிகள் என்றால் அது எது…? ஈஸ்வரபட்டர்

ஏழு பிறவிகள் என்றால் அது எது…? ஈஸ்வரபட்டர்

 

பிறவிகள் ஏழு என்று கூறுவதே தாவரங்கள், நீர் வாழ் உயிரினங்கள், நிலம் வாழ் ஊர்ந்திடும் உயிரினங்கள், உலவிடும் மிருகங்கள், பறக்கும் இனங்கள், மனிதன், தெய்வப் பிறவி..! இவை அனைத்தும் பொதுச் சொல்லாகப் பரிணாம வளர்ச்சி பெற்று வளர்ந்திடும் இயற்கையின் சுதியில் உயிர் தொகைகள் வாழ்ந்திடும் செயலைக் குறிப்பது ஆகும்

1.ஒவ்வொரு உயிரும் இந்த ஏழு பிறவியில் எதிலே பிறப்புக்கு வந்தாலும்
2.அந்தப் பிறவியிலேயே எண்ணிலடங்காத பிறப்புக்கு வந்திடவும் கூடும்.
3.எடுத்துக் கொண்ட குணங்களின் வலுவால் பிறிதொன்றில் அகப்பட்டே உழலவும் கூடும்.

ஆனால் விவாதம் புரிகின்றவன் கூறுகின்றான்… மனிதனாகப் பிறப்பதுவே ஏழு பிறவி என்று. மனிதனாக ஏழு பிறவிகள் பெற்று முடித்து விட்டால் “அடுத்த நிலை என்ன என்று உரைத்திட முடியுமோ…?”

1.மனிதன் சமமான எண்ணம் கொண்டு தன்னை உணர்ந்திடும் ஞானத்தால் அன்றி
2.வேறொன்றால் பிறவித் தளையை அகற்ற முடிந்திடாது.

எண்ணிறந்த பிறவிகள் பெற்றே இளைத்தேன்…! என்ற கூற்றுப்படி மனிதப் பிறவி அமைந்திடும் நிலை பற்றிச் சிவவாக்கியம் கூறுகின்ற “இறப்புக்குப் பின் மனிதன் பிறப்பது இல்லை… இல்லையே..! என்ற சூட்சமப் பொருளை அறிந்து கொண்டாயா…?

மனிதன் என்ற பிறவி வாய்க்கப் பெற்றாலும் தன்னை உணர்ந்திடும் வழியில் “பூரணமாக மனிதன்…” என்ற முழுமைத்துவம் பெற்றிடல் வேண்டும்.

மனிதன் என்ற பூரணத்துவ சக்தி பெற்றுவிட்டால் பிறப்பின் தளை அகன்றுவிடும்.
1.பிறவா நிலை பெறும் தெய்வத் தன்மை பெறுவதையே
2.மறை பொருளாகக் கூறுகின்றதப்பா சிவவாக்கியம்.
3.பிறவி நோயை அகற்ற முயல்பவனே மனிதன்.

பிறவி நோய் களைய வந்த சித்தர்கள் சரீர நோயகற்றும் மருத்துவச் செயலுக்கும் செயலாக்கினார்கள்.

தன் அனுபவ ஞானத்தால் சரீர பிம்பங்களை வெளிப்பார்வையில் நேருக்கு நேர் கண்ணுற்றுப் பார்த்து ஆய்ந்துரைத்த மருத்துவக் குறிப்புகளில் போகரால் உணர்த்தபட்ட ஏழு பிறவிகள் என்ற முறையுமுண்டு.

உயிரணுக்கள் உதித்திடும் சூட்சமச் செயலில் ஏழு பிறவியின் தொடர்களைப் பற்றி முழுவதையும் நாம் உரைத்து விட முடியாது.

ஏனென்றால் சப்தரிஷிகளின் இரகசியங்கள் அனைத்தையும் சொல்லாகச் சொல்லி அதன் மூலமாக அறிந்திட முடியாது.
1.ஆகாயச் சித்தனின் அருள் பெறவேண்டும் ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிரை எண்ணி
2.வான இயல் சூட்சமங்கள் அனைத்தையும் அறிவின் ஞானத்தால் அறிந்து கொண்டே உயர்ந்திட வேண்டும்.

போகர் தான் கண்ட மருத்துவ அனுபவத்தால் உரைத்த உண்மை என்ன என்றால் ஒருவர் உருவத்தைப் போல் எழுவர் உலகம் எங்கும் உண்டு. ஆனால் ஒருவர் பெற்ற வீரியம் மற்றொருவருக்கு அமைந்திடாது.

ஒருவரை ஒருவர் சந்தித்திடும் வாய்ப்பும் அமைந்திடாத தன்மையில் குரலின் ஒலி நாதத்தின் மாறுபாட்டை உணர்ந்திடும் சூட்சமத்தை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஆகாயச் சித்தனும் உரைத்திடப் போகின்றான். அவன் பரிசுத்தம் என்னும் பிரம்மத்தைப் பூண்டவனப்பா…!
1.சிந்தனையைத் தூண்டிடும் வினா ஒன்றைப் போட்டு விட்டேன்.
2.அதனின் ஈர்ப்பு நிலை பெற்றே “என்னை (ஈஸ்வரபட்டரை) முந்திச் செல்ல…” என்றும் ஆசிகள்.