அஸ்ஸாம் காட்டில் உள்ள இரத்தத்தை உறிஞ்சும் கொடிகளையும் பூக்களையும் காட்டினார் குருநாதர்

Blood scuker.jpg

அஸ்ஸாம் காட்டில் உள்ள இரத்தத்தை உறிஞ்சும் கொடிகளையும் பூக்களையும் அதற்குண்டான வலுவையும் உணர்த்தினார் குருநாதர்

தாவர இனங்களுக்குண்டான சக்திகளைப் பற்றிய அனுபவம் பெறுவதற்காக குருநாதர் எம்மைக் காட்டிற்குள் அழைத்துச் சென்றார்.

ஒரு இடத்தில் குருநாதர் என்னை நிற்கச் சொன்னார். அப்பொழுது அங்கே ஒரு கொடி.., “தன்னாலே அது நகர்ந்து வருகின்றது”. அதை நான் முதலில் கவனிக்கவில்லை.

அந்தப் பக்கம் ஒரு செடி இருக்கின்றது பார் என்றார் குருநாதர். ஓடிப்போய்ப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்தக் கொடி அப்படியே.., நகர்ந்தே வருகின்றது.

அந்தக் கொடி நகர்ந்து வரப்படும்போது ஒரு குச்சியை ஊன்றச் சொன்னார். குச்சியை ஊன்றிய உடனே “குச்சியைச் சுற்றிக் கொண்டு.., என் கைக்கு வருகின்றது”.

மனித உடலில் உள்ள அந்த உணர்வின் நிலைகள் அந்தச் செடிக்குத் தேவை.

அது பட்டுவிட்டது.., கையில் சுற்றி விட்டது என்றால் அதை அறுத்து விட்டால் பரவாயில்லை. இல்லை என்றால் நம் இரத்தத்தை அப்படியே குடித்துவிடும். அப்படியே “சொத்…” என்று விழுக வேண்டியதுதான்.

இது அஸ்ஸாம் மலைப்பகுதிக்கு செல்லப்படும்போது நடந்த சம்பவம். அங்கே சில இடங்களுக்குச் செல்லப்படும் போது சில பூக்கள் பார்த்தால் ரொம்ப அழகான பூக்களாக இருக்கின்றது.

அந்தப் பூக்களில் உள்ள தேனை தேனீக்கள் எடுக்கப்போகின்றது. அதனுடைய மூக்கு நீளமாக இருக்கின்றது. தேனை எடுக்கப் போகும்போது அந்தத் தேனீயை அப்படியே கோர்த்து இழுக்கின்றது அந்தப் பூ.

இந்த விஷத்தின் தன்மை அதற்குள் பட்டபின் இது எடுத்து அப்படியே முழுதாகவே செத்துக் கிடக்கின்றது. அந்தப் பூவிற்கு அவ்வளவு வலு இருக்கின்றது.

நான் அதை எடுத்துப் பார்த்தேன். எடுத்து வைக்கும் பொழுது ஒரு விட்டில் பூச்சியை அதற்குப் பக்கத்தில் வைத்தேன். வைத்தவுடன் அந்தப் பூச்சியில் இருக்கும் சத்தை இழுக்கின்றது. பூச்சியை வெறும் சக்கையாக்குகின்றது.

அந்தப் பூவை முகர்ந்து பார்த்தால் நமக்கு ஒன்றும் இல்லை. குருநாதர் நுகரும்படிச் செய்தார். விஷம் இல்லை. ஆனால், இந்த உடலில் இருப்பதை “எப்படி இழுக்கிறது…?” என்பதனைக் காட்டுகிறார்.

இதெல்லாம் குருநாதர் பரிட்சாந்திரமாக இயற்கையில் உள்ள தாவர இனங்களுக்கு “எப்படி எல்லாம் சத்து உண்டு…!” என்று அறியச் செய்வதற்காகக் காட்டினார்.

சில பட்சி இனங்கள் தன் உணவை காயோ அல்லது பழத்தையோ முழுதாக வித்துடன் சேர்த்துத் தன் உணவை விழுங்குகின்றது.

இது அதனின் மலத்துடன் வெளி வந்தபின் அந்த வித்து ரொம்பவும் துரிதமாக விளைகின்றது.

அரச மரத்தை எடுத்துக் கொண்டால் அரசம் பழத்தைக் குருவிகள் சாப்பிடுகின்றது. அது எங்கேயாவது போய் தன் மலத்தை இட்டால் அந்த மலத்திலிருந்து வரக்கூடிய வித்து அரச மரமாக விளைகின்றது.

அத்தகையை வித்து ஒரு கொடி மீது விழுந்து அரச மரமாக விளையப்படும் போது அதற்கு குருவியிடம் இருக்கக்கூடிய ஜீவித சக்தியை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது.

அப்படி அது வரப்படும்போது காற்றிலிருந்து இருக்கக்கூடிய நீரைப் பிரித்தெடுக்கக் கூடிய சத்தை அது பெறுகின்றது. அரச மரத்தின் இலைகளைப் பார்த்தால் இலையின் நுனி ஊசி போன்று இருக்கும்.

அதன் வழியாக நீர்ச்சத்தை இழுத்து உள்ளுக்குள் செலுத்துகின்றது. காற்றில் இருக்கும் நீரை வடித்துத் தனக்குள் ஜீவனாக்குகிறது.

அதை எடுத்து எடுத்து விழுதுகளில் பரப்புகின்றது. விழுதுகளைப் பரப்பியபின் அது நீர் இருக்கும் பக்கம் விழுதுகளைப் பாய்ச்சுகின்றது.

1.தாவர இனங்களில் அதன் உணர்வுகளுக்கு
2.எத்தனை விதமான நிலைகளில் “எதனதன் கலவையில்… எது எது…, சேர்கின்றதோ… அதன் வழி வளர்கின்றது” என்றும்
3.தனக்குப் பாதுகாப்பான நிலைகள் அது எப்படி வருகின்றது என்பதையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.இதைப்போல அதில் விளைந்ததை உணவாக வித்தாக உட்கொள்ளும் பட்சிகளுக்கும் மற்ற நிலைகளுக்கும்
5.அதற்குண்டான ஞானங்களும் அதற்குண்டான உணர்வுகளும் எப்படி விளைகின்றது என்று உணர்த்துகின்றார்.
6.அதே உணர்வுகள் அது கரு முட்டையாக்கப்படும்போது (தன் குஞ்சுகள்) அது ஒவ்வொன்றுக்கும் எந்தெந்த நிலைகள் ஏற்படுகின்றது என்பதனையும் உணர்த்துகின்றார்.

ஆகவே, இந்த அணுக்களின் வளர்ச்சியின் உணர்வுகள் அது தான் இயல் இசை நாடகம்.

ஒரு செடியில் உண்டான “இயல்..,” அந்த வாசனையின் உணர்வுகள் “இசையாக”  மாறுகின்றது. அதன் உணர்வுக்குத்தக்க அந்த “உடலின் அமைப்பு” மாறுகின்றது.

அதனால்தான் “இயல் இசை நாடகம்” என்ற நிலையில் அந்த உடலின்  தன்மையில் உணர்வுகள் எப்படி என்ற நிலையில் “வேதங்களின் மூலங்கள்” தெளிவாகக் கூறுகின்றது.

 

பிறருடைய உணர்வுகள் நம்மை இயக்காது தடுக்க என்ன செய்ய வேண்டும்…?

lord eswara shiva

பிறருடைய உணர்வுகள் நம்மை இயக்காது தடுக்க என்ன செய்ய வேண்டும்…? 

தொழிலுக்குப் போய்விட்டு வரும் கணவர் வீட்டில் வந்து “கஷ்டம்” என்று சொல்லும் பொழுது “இப்படி.., வேதனையுடன் கஷ்டத்துடன் இருக்கிறாரே…? என்று மனைவி எண்ணினால் என்றால்
1.அவருடன் பிரியமாக இருக்கும் பொழுது
2.இந்த உணர்வுகள் அவருடைய உடலைச் சுற்றி அமைந்து
3.அவர் சிந்தனையைக் குறைந்துவிடும்
4.சிந்தனை குறைந்துவிட்டால் கோபமாகப் பேசும் நிலை ஏற்படும்.
5.சொல்ல வேண்டிய சொல்லை விட்டுவிட்டு வெறுப்பின் உணர்வைச் சொல்லத் தொடங்கி விடுவார்கள்.

ஆகவே, தொழிலில் பல நிலைகளைப் பார்த்துவிட்டு அந்தச் சோர்வோடு ஆண்கள் வீட்டிற்குள் வந்தால் பெண்கள் என்ன செய்யவேண்டும்?

குறிப்பறிந்து மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று ஆத்மசுத்தி செய்துவிட்டு
1.மகரிஷிகளின் அருள்சக்தி கணவர் உடல் முழுவதும் படரவேண்டும்
2.மகரிஷிகளின் அருள்சக்தியால் மனபலம் பெற்று மனவளம் பெறவேண்டும்
3.அவர் பார்ப்பதெல்லாம் நல்லவையாக இருக்க வேண்டும் என்று பெண்கள் தியானித்துப் பழக வேண்டும்.

அதே மாதிரி கணவர் தொழிலுக்குப் போகிறார் என்றால் “அங்கே சென்று சங்கடப்படுகின்றாரே..,” என்று எண்ணவே கூடாது.

கணவர் தொழிலுக்குச் சென்றுவிட்டால் முதலில் சொன்ன பிரகாரம் மனைவி ஆத்மசுத்தி செய்து துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பின், கணவன் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர் பார்ப்பதெல்லாம் நலம் பெறவேண்டும். அவரைப் பார்ப்பவர்களுக்கு நல்ல எண்ணம் வரவேண்டும், அவர் செயல் எல்லாம் புனிதம் பெறவேண்டும். அவர் சொல் கேட்பவர்கள் அனவரும் நல்லவராக வேண்டும் என்று இங்கே இருந்து எண்ண வேண்டும்.

அதைப் போன்று உதாரணமாக சிநேகிதருக்குள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கிறோம். அமெரிக்காவில் இருக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த மாதிரிச் சண்டை போட்டான். பாவி.., அவன் உருப்படுவானா…? என்று சொன்னால் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கே புரை ஏறுகிறது.

தொழில் செய்யும் பொழுது புரை ஓடியதென்றால் பார்க்கும் கணக்கில் தவறாக விட்டுவிடுவார்கள். அதே சமயத்தில் நாம் எண்ணும் பொழுது நம் கணக்கும் தப்பாகப் போய்விடும். ஏனென்றால் இதே உணர்வு தான்
1.நம்மையும் இயக்குகிறது
2.அவர்களையும் இயக்குகின்றது.

ஆகையினால், இந்த மாதிரி நினைவுகள் எப்பொழுது வந்தாலும், “ஈஸ்வரா…” என்று சொல்லித் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் என்று சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.

1.நண்பர் அவரை அறியாமல் சேர்ந்த இருள்கள் அகல வேண்டும்
2.அவர் பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணிவிட்டால் நமக்குள் அந்த வெறுப்பின் உணர்வுகள் வராது
3.நம் மீது அவர் வெறுப்பாக  இருந்த உணர்வுகள் நம்மைச் சாடாது
4.வெறுப்பின் நினைவு வரும்பொழுதெல்லாம் அந்த உணர்வை இப்படி மாற்றிப் பழகவேண்டும்.

காரணம் நம் உடலில் விளைந்த அந்த வெறுப்பான அணுக்கள் கோபித்துச் சொன்ன உணர்வுகள் அதாவது.., அந்த உணர்ச்சிகள் உந்தித்தான்.., “ஆகாரத்திற்கு அது ஏங்குகிறது”.

அப்பொழுது அந்த உணர்ச்சிகள் உந்தப்படும் பொழுது, அந்த நிலை வருகிறது. அந்த மாதிரி நேரங்களில் எல்லாம் இவ்வாறு மாற்றிப் பழக வேண்டும்.

இவ்வாறு செய்துகொண்டு வந்தோம் என்றால் நமது வாழ்க்கையில் “தனுஷ்கோடி”. உணர்வுகள் “எல்லாவற்றையும்” சேர்த்துக்கொண்டு வருகின்றோம். கடைசி நிமிடம் வரையிலும் தீமைகளை நமக்குள் போகாதபடி பாதுகாப்பது அது தான்.

தீமைகளை அகற்றக்கூடிய வல்லமை துருவ நட்சத்திரத்துக்கு உண்டு. நமது வாழ்க்கையில் எந்தெந்த குணங்கள் வருகிறதோ தீய குணங்களை தீய செயல்களைப் பார்க்கும் பொழுது இந்த மாதிரி
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சுவாசித்தோம் என்றால்,
2.அதைத் தணித்து நமக்குள் சக்தி வாய்ந்ததாக மாற்றும்.

இதைப் போன்று உடலுக்குள் வரும் இந்த உணர்வுகளை எல்லாம் உயிர் இருக்கும் பொழுது ஒளியாக மாற்றிவிட்டோம் என்றால் உடலை விட்டு நாம் வெளியில் செல்லும்பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் பற்று அதிகமாகின்றது
2.துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்புக்குள் செல்கின்றோம்.

“தொக்கியுள்ள..,” உணர்வையெல்லாம் அங்கே கரைத்து விடுகின்றது. உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகின்றது.

இதுதான் ஞானிகள் காட்டிய அருள் வழிகள்.

“சாமி செய்யும்..,” என்றால் சாமி ஒன்றும் செய்யாது

Image

kadavuL.jpg

“சாமி செய்யும்..,” என்றால் சாமி ஒன்றும் செய்யாது

1.நல்ல எண்ணத்தை வேதனையுடன் கலந்தால் என்ன ஆகும்

பக்தி என்ற நிலைகளில் ஆராதனை செய்துகொண்டு “சாமி செய்யும் என்றால் ஒன்றும் செய்யாது”.

1.சாமி செய்யும் என்ற நல்ல எண்ணத்தை நாம் வேதனையுடன் கலந்து ஜெபித்தால்

2.அந்த வேதனை கலந்து நல்ல குணமும் சேர்ந்து உங்களுக்குள் வேதனையைத்தான் ஊட்டும்.

3.கடைசியிலே நமக்குள் அந்தத் தெய்வத்தை நினைக்கும் பொழுதெல்லாம் வேதனையைத்தான் நினைக்கத் தோன்றும்.

நமக்குள் இருக்கக்கூடிய உணர்வுகளைத்தான் தெய்வமாக உணர்த்தப்பட்டு அதை முன்னிறுத்தி இந்தக் குணம் உங்களுக்கு இன்னது செய்யும் இந்த குணம் நம் உடலிலே இருக்கிறது.

உடலிலே இருக்கக்கூடிய அவற்றின் இயக்கச் சக்திகளை அதற்குப் பெயர்களை வைத்துத் தெய்வ உருவங்களாகக் காட்டி அதன் செயலாக்கங்களாக கதைகளாகச் சொல்லி வைத்திருந்தார்கள்.

ஆனால், நாம் ஆராதனை செய்துவிட்டுச் “சாமி செய்யும்…” என்றால் எப்படிச் செய்யும்?

  1. தியானம் செய்வதைப் பெரிய மலை என்று எண்ணுகின்றோம்

தியானம் என்றால்… என்னமோ.., “பெரிய மலை” என்று எண்ணுகிறோம். நமக்குள் நல்லதைப் பெறும் வழிதான் அது. திரும்பத் திரும்ப நினைத்து அந்த ஆற்றலைப் பெறுகின்றோம்.

“நம் எண்ணத்தினாலேதான்..,” எடுக்க வேண்டும். எண்ணத்திற்கு வலு கூட்ட வேண்டுமென்றால் இந்தத் தியானமும் ஆத்ம சுத்தியும் தேவை.

அந்த எண்ணத்திற்கு வலு கொடுப்பதற்கு குரு என்ற நிலைகளில் நமது குருநாதர் எமக்குக் கொடுத்தார். அந்தச் சக்தியை யாம் வளர்த்துக் கொண்டோம்.

அப்படி யாம் வளர்த்த சக்தியைச் சொல்லாலே.., பேச்சாலே.., இந்த உணர்வாலே.., கொடுத்து உங்களுக்குள் நீங்களும் வளர்த்துக் கொள்ள வழி சொல்லித் தருகிறோம்.

அவ்வளவுதான்.

யாம் கற்றுக் கொண்டோம். அதை உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். தெரிந்து கொண்ட நிலையை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

வாத்தியார் பாடத்தைச் சொல்லிக் கொடுத்து இன்னென்ன பொருளை இப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுத்ததை மீண்டும் செய்யத் தொடங்குகின்றோம். இதைப் போலத்தான் இந்த தியானம் என்பதின் நிலைகள்.

  1. எண்ணும் எண்ணமே இறைவன், இறையின் செயலே தெய்வம்

“அழுத்தமாக” ஓம் ஈஸ்வரா என்று நம் உயிரைப் புருவ மத்தியில் எண்ணி,

2.“அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்” என்ற சுவாச உணர்வுகளை

3.நம் உடலுக்குள் பாய்ச்சச் செய்வதே ஆத்ம சுத்தி.

“கூர்மையான நிலைகளில் நினைவைச் செலுத்தி” அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உடல் முழுவதும் படரச் செய்யுங்கள்.

உங்களுக்குள் தீமை செய்யம் அணுக்களை இது நன்மை செய்யும் அணுக்களாக மாற்றும். நல்ல சிந்திக்கும் திறன் கிடைக்கும். வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் என்ற தெளிவான வழியைக் காட்டும். மகிழ்ந்து வாழச் செய்யும்.

இந்த சக்தியை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குள்ளும் பாய்ச்சப்படும் பொழுது இந்த உணர்வுகள் அங்கேயும் சென்று வேலை செய்யும்.

தீமைகள் அகலும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

வீட்டிற்குள்ளேயோ தொழில் செய்யும் இடங்களிலேயோ மற்ற இடங்களிலேயோ பகைமைகள் வருகின்றது. அந்தப் பகைமையை நீக்கச் செய்யும் இடம்தான் கோவில்.

அதாவது கோவிலுக்குள் வந்தால் ஒருமை. மக்கள் அனைவரும் ஒன்றி வாழ மகிழ்ந்து வாழத்தான் அன்றைய ஞானிகள் கோவிலை அமைத்தார்கள்.

1.நம் குறைகளைச் சொல்லவோ

2.வேதனைகளை வெளிப்படுத்துவதற்கோ

3.மற்றவரை வேதனைப்படச் செய்வதற்கோ கோவில் இல்லை.

மனிதனைப் பண்படுத்தி அடுத்த நிலையாக மனிதன் தெய்வீக நிலை பெறச் செய்ய உருவாக்கப்பட்ட இடம்தான் “கோவில்”. இதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

1.எண்ணும் எண்ணமே இறைவன்.

2.இறையின் செயலே தெய்வம்.

இதைத்தான் கீதையிலே “நீ எதை நினைக்கின்றாயோ நீ அதுவாகின்றாய்” என்று அன்று வியாசக பகவான் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

யாம் (ஞானகுரு) ஒலி பரப்பும் அருள் உணர்வுகளை நீங்கள் பதிவாக்க வேண்டிய முறையும் அவசியமும் – விளக்கம்

Image

Spiritual preaching.jpg

யாம் (ஞானகுரு) “ஒலி பரப்பும்” அருள் உணர்வுகளை நீங்கள் பதிவாக்க வேண்டிய முறையும் அவசியமும் – விளக்கம்

பல முறை சொல்லியிருக்கின்றார். நானும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன். சாமி (ஞானகுரு) நேற்றுச் சொன்னதைத்தான் இன்றும் சொல்கிறார். திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றார் என்பார்கள்.

ஆனால், காலையில் சொன்னதை “சாமி என்ன சொன்னார்…?” என்று மறுபடி கேட்டால் “தெரியாது..,” என்பார்கள்.

ஆனால், யாம் திரும்பச் சொல்லும்பொழுதுதான் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றது.

இதற்குத்தான் மறைந்ததை மீண்டும் உங்கள் நினைவுக்குக் கொண்டு வந்து அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அந்த மகரிஷிகளின் சக்தியை யாம் பெறச் செய்கின்றோம்.

முதலில் பதிவு செய்துவிட்டாலும்

1.சாமி நேற்றுச் சொன்னதைத்தான் சொல்கிறார் என்று (நினைவினை) வேறு பக்கம் திரும்புவார்கள்.

2.தான் கேட்பதைத் தடைப்படுத்திக் கொள்வார்கள்.

3.தனக்குத் தண்டனையே கொடுத்துக் கொள்வார்கள் என்று கூடச் சொல்லலாம்.

4.நன்மைகளைப் பெற முடியாதபடி தீமைக்கே இடமளிக்கும் நிலை வந்துவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை விடுத்து நீங்கள் மீண்டும் மீண்டும் பெறவேண்டும் என்றுதான் இதை உபதேசிக்கின்றேன்.

இராமாயணமோ மகாபாரதமோ கந்த புராணமோ விநாயக புராணமோ இவை அனைத்தும் ஒரே கதையாகத் தான் எழுதி வைத்துள்ளார்கள்.

அதற்காக வேண்டி.., “நேற்று நீ அதைப் படித்தாய் இன்றைக்கு ஏன் நீ கந்த புராணத்தை மாற்றிப் படிக்கக்கூடாது…! நேற்றுச் சொன்னது தானே படிக்கின்றோம்…, என்று யாராவது கேட்கின்றீர்களா…?”

கேட்கவில்லை.

“சாமி சொல்லும்போது மட்டும்..,” நேற்றுச் சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார் என்கிறார்கள்.

இதே மாதிரி கீதாச்சாரத்தை எடுத்துக் கொண்டால் நேற்றுச் சொன்னதைத்தான் இன்றைக்கும் சொல்கிறார்கள். மகாபாரதப் போர் என்றால் இயற்கையின் உண்மைகளைச் “சொன்னதைத்தான் திருப்பிச் சொல்வார்கள்”.

பள்ளிக்குச் சென்று எஞ்சினியரிங் (ENGINEERING) படிக்கின்றீர்கள் என்றால் அந்தப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்து அதை நீங்கள் படித்துத் தெரிந்து கொள்கிறீர்கள்.

அப்பொழுது.., “நேற்றுப் படித்ததை இன்றைக்கு ஏன் படிக்க வேண்டும்…!” என்று விட்டுவிட்டால் படித்தது மீண்டும் என்றைக்கு நினைவுக்கு வருவது…?

ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார். பள்ளியில் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டோம். அப்புறம் ஏன் நீங்கள் படிக்கின்றீர்கள்…?

அங்கே பள்ளியில் சொல்லிக் கொடுத்தவுடன் மீண்டும் என்ன செய்கிறோம்? புத்தகங்களை எடுத்து மீண்டும் மீண்டும் படித்து மனதில் நிறுத்திக் கொள்கிறோம் அல்லவா.

இதைப் போன்று தான்

1.உங்களுக்குள் அருள் ஞானிகளின் உணர்வுகளை ஆழப்பதியச் செய்து

2.அந்த உணர்வுகளை உங்களை அறியாமல் இயக்கச் செய்து

3.உங்களை அறியாமலே தீமைகளை அகற்றச் செய்வதற்காக இதைச் செய்கின்றோம்.

ஒரு தடவை தீமை செய்வதை உற்றுப் பார்க்கின்றீர்கள். அதனைப் பதிவு செய்து கொண்டால் “அந்த நினைவு வரும் பொழுதெல்லாம்” உங்களுக்குக் கோபம் வருகின்றது.., ஆத்திரம் வருகின்றது.., அவரை எப்படித் தாக்குவது..? என்ற உணர்ச்சிகளை உங்களுக்குள் தூண்டிக் கொண்டுதான் இருக்கும்.

இதைப் போன்று தான் உங்களுக்குள் “மீண்டும்.. மீண்டும்.. மீண்டும்.. மகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெறவேண்டும்..,” என்ற ஏக்க உணர்வுடன் இதை யாம் சொல்லும் பொழுது உங்களுக்குள் உணர்வுகள் பதியப் பதியப் பதிய இந்த நினைவுகள் அது எடுத்துக் கொண்டே இருக்கும்.

அப்பொழுது அதனின் வளர்ச்சியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கு உங்கள் நினைவினைக் கூட்டி அருள் உணர்வுகளைத் தூண்டச் செய்து நமக்கு முன் இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் கவரும் நிலைக்கே இதைச் சொல்வது.

ஆனால், “என்னமோ” சாமி சொல்லிக் கொண்டிருக்கிறார். “நேற்றுச் சொன்னார்.., சொன்னார்.., சொன்னார்..,” என்ற நிலைகளில் இல்லாது அதை நாம் “பெறவேண்டும்… பெறவேண்டும்… பெறவேண்டும்..,” என்று ஏங்கிப் பெறுதல் வேண்டும்.

நேற்று கோவிலுக்குச் சென்று விநாயகரைப் பார்த்தோம் “இன்று” ஏன் விநாயகரைப் பார்க்க வேண்டும்…? நாளை வேறு ஒருவரைப் பார்க்கலாம் அல்லவா..!

இன்று முருகனைப் பார்த்து வணங்கப்படும் பொழுது நேற்றுப் பார்த்த அதே முருகனை இன்று ஏன் பார்க்க வேண்டும்…? இப்படிப் புதிதாகப் பார்க்கின்றோமா…?

நேற்றே முருகனைப் பற்றித் தெரிந்து கொண்டோம். அபிஷேகம் வேறு செய்தாகிவிட்டது. திரும்ப ஏன் முருகன் கோவிலுக்குச் செல்கின்றீர்கள்…?

ஏனென்றால்..,

1.சில பேர் வினாக்களை ரொம்பவும் எழுப்புவார்கள்.

2.சாமி எல்லாவற்றையும் சொல்கிறார்.

3.திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று மிகவும் சுலபமாகச் சொல்லிவிடுகின்றார்கள்.

4.ஆனால், அவர்கள் ஏன் திரும்பத் திரும்பப் புத்தகத்தைப் படிக்கின்றார்கள்…?

5.திரும்பத் திரும்ப முருகனைப் போய் பார்க்கின்றார்கள்…?

6.திரும்பத் திரும்ப விநாயகரைப் போய் பார்க்கின்றார்கள்…?

7.திரும்பத் திரும்ப மாரியம்மனைப் போய் பார்க்கின்றார்கள்…?

8.ஒரு தடவைதான் பார்த்தாகிவிட்டதே… திரும்ப அதை ஏன் சொல்வானேன்…?

9.ஒரு தடவை தான் அங்கே கோவிலுக்குள் சென்றோம் மறுபடியும் அங்கே ஏன் செல்ல வேண்டும்?

10.தெரிந்து கொண்டோம் அல்லவா! இந்தச் சாமி நல்லது செய்யும் என்றார்கள். பார்த்துவிட்டோம். அப்புறம் ஏன் திரும்பப் போய் அதைக் கும்பிட வேண்டும்…?

யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளைக் கேட்டு திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்று சாதாரண நிலைகளில் “வினாக்கள் எழுப்பிக் கொண்டிருப்போர்.., அதிகம் பேர் இருக்கின்றார்கள்”.

ஏனென்றால் யாம் உயர்ந்த நோக்குடன் சொல்லும் பொழுது இப்பொழுது அந்த உபதேசக் கருத்திற்கு அது எதிர்மறையாக வருவது என்ன செய்யும்?

1.மனிதனின் வாழ்க்கையில் தீமையை விளைவித்துக் கொண்டிருக்கும் உணர்விற்கு

2.இது (அருள் உணர்வுகள்) தடைப்படுத்தும் பொழுது அந்த உணர்ச்சிகளைத் தூண்டி கேட்க விடாது தடைப்படுத்தும்.

காரணம் நீங்கள் அல்ல. இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவர் நம்மைக் கடுமையாகத் திட்டினார் என்றால் அதைக் கூர்ந்து பதிவாக்குகின்றோம். பதிவானால் தான் அவரைப் பற்றிய எண்ணங்கள் உங்களுக்குள் வரும்.

அப்படி அவர் திட்டவில்லை என்றால் அவர்களைப் பற்றிய பதிவு இல்லை, நினைவுக்கு வருவது மிகவும் கடினம்.

எதுவுமே பதிவு இல்லை என்றால் நம்மால் நினைவுபடுத்த முடியாது. அந்த அறிவும் நமக்கு வராது. ஒரு கம்ப்யூட்டரில் எதைப் பதிவு செய்தோமோ அதைத்தான் இயக்க முடியும்.

இதைப் போன்று தான் எப்படியும் அந்த மகரிஷிகள் பெற்ற பேராற்றல் மிக்க சக்திகளை உங்களுக்குள் வித்துக்களாக ஊன்ற வேண்டும் என்ற ஆசையில் சொல்கிறோம்.

அந்த வித்துக்கள் வளர்ந்தால் தீமைகளை நீக்கக்கூடிய சக்தியைப் நீங்கள் பெறுகின்றீர்கள்.

“மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் இட்ட கட்டளைப்படி” ஒவ்வொரு உயிரையும் கடவுள் என்று யாம் மதிக்கின்றோம். அந்த ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலையாகத்தான் யாம் இதைச் செய்து கொண்டிருக்கின்றோம்.

In Spiritual path we should not find fault or get disgusted with any soul

Image

Divine truth.jpg

In Spiritual path we should not find fault or get disgusted with any soul

The state of Divine Light by one person will not be the same as another. Each body will proceed in the way in which it sows its seed for the spiritual progress of its acidic characters.

If two persons in different places sow the same kind of paddy seeds, the growth of their plants and their yield will depend upon the soil of the place, water, climate and the growth of the thoughts of the persons.

When the paddy grown in one field is sown in different places the output and tastes differ. In the same way the light of Gnana will shine according to the ways in which it is absorbed and worked out.

Taking one person’s state as a standard, other’s state should not be reckoned as low or high.

All the people who have proceeded in the path of Gnana, after they get Salvation and attain the state of Sabdha rishis act only in the circle in which they have grown with their acidity and character.

The way in which one person worships will not be same as another person does. The way in which one person proceeds in Gnana will not be the same as another does.

Even after getting the state Sabdha rishis one will not be like another; one planet that rotates will not be like another.

We should realize that one lives with the powers of another and all the powers come from the Almighty – Nature. We should not find fault or get disgusted with any soul.

Grow your Gnana in the way in which you have grown your acid power which is most active in you. As our elders have said we will reap only what we have sown.

ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா… – விளக்கம்

om-eswara-gurudev-judge

ஒ…ம் ஈஸ்வரா… குருதேவா… – விளக்கம்

நாம் “ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று சொல்கின்றோம்.

பக்தி மார்க்கங்களில் சொல்லும் பொழுது.., “ஈஸ்வரன் எங்கேயோ இருக்கின்றான்.., குருதேவர் எங்கேயோ இருக்கின்றார்..,” என்ற எண்ணம் இல்லாதபடி இந்தச் சொல்லின் நிலையை முதலிலே தெரிந்து கொள்வது நல்லது.

நமது சாஸ்திர விதிகளின்படி, “ஓ…ம்” என்பது பிரணவம், நமது உயிர் நமக்குள் ஜீவனாக இருந்து கொண்டிருக்கின்றது. இதற்குப் பெயர் “ஓ”.

“ஓ” என்றால் ஜீவன் என்று பெயர். நமக்குள் உயிர் ஜீவனாக இயங்குகின்றது என்று பொருள்.

இந்த உயிர் எதையெல்லாம் கவருகின்றதோ அவையனைத்தும் “ம்” என்று நமது உடலாக அமைந்துவிடுகின்றது.

நாம் எண்ணியது எந்தக் குணமோ அந்தக் குணத்தின் தன்மை நமது உடலானாலும் அந்த குணத்திற்கு குருவாக இருப்பது உயிர். நாம் எண்ணியதை இயக்கி அந்த உணர்வின் சக்தியை உடலாக மாற்றும் நிலைதான் ஈஸ்வரன் என்பது.

என்னை உருவாக்கிக் கொண்டிருக்கும் நிலைக்கு “ஈஸ்வரா…” இந்த உடலிலுள்ள குணங்கள் அனைத்திற்கும் நமது உயிரே குருவாக இருக்கின்றது “குருதேவா…”

ஆகவே, நாம் ஒம் ஈஸ்வரா குருதேவா என்று நமது உயிரைச் சொல்கின்றோம்.

நமது உடலில் எத்தனையோ வகையான குணங்கள் இருக்கின்றது. நாம் பரிணாம வளர்ச்சியில் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் நம் உடலில் எத்தனையோ எண்ணங்கள் இணைந்தாலும், எண்ணினாலும், இவையனைத்திற்கும் நமது உயிரே குரு.

அதுதான் ஓம் ஈஸ்வரா குருதேவா என்பது.

உதாரணமாக ஒருவருக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றேன். அது “ஓ” என்று இயங்கி, “ம்” என்று எனது உடலாக அமைகின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வின் சத்து நமது உடலாக மாறுகின்றது.

அந்த குணத்தின் தன்மை உடலாக அமையப்படும் பொழுது, நாம் எண்ணிய குணத்தின் சக்தி உடலுக்குள் இயங்குகின்றது. இதுதான் ஓம் நமச்சிவாய. உடலுக்குள் இயங்கிய குணத்தின் சக்தி சொல்லாகவோ, செயலாகவோ வெளிப்படுவது சிவாய நம ஓம்.

1.நாம் யார்? கடவுள் யார்?
2.ஆண்டவன் எங்கிருக்கின்றான்?
3,நம்மை இயக்குவது எது…? என்ற உண்மைகளை
4.அந்த மெய்ஞானிகள் கண்ட நிலைகளைத்தான் யாம் சொல்லி வருகின்றோம்.

பங்குனி உத்திரம் – உச்சம் – உத்தராயணம்

Image

Panguni uththiram.jpg

பங்குனி உத்திரம் – உச்சம் – “உத்தராயணம்”

பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள் என்றும் தேரோட்டம் வைத்திருப்பார்கள்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உத்தராயணம் என்றும் நிலையாக என்றுமே ஒளி நிலை பெற நினைவுபடுத்தும் நாள் தான் அது.

பல ஆயிரம் பேர் சேர்ந்து தேரை இழுப்பது போல நாம் பல ஆயிரம் பேர் ஒன்று கூடி ஆறாவது அறிவின் தன்மை கொண்டு உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாக நிலை கொண்டோரின் நிலைகளை நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் நாம் பல தரப்பட்ட மனிதர்களைப் பார்க்கின்றோம், அவர்களைப் பற்றி நாம் அறிய நேர்கின்றது. அவர்களுடைய எண்ணங்கள் நமக்குள் இருக்கின்றது.

1.இந்த ஆறாவது அறிவால் நாம் வலம் வந்து

2.பலருடைய எண்ணங்கள் நமக்குள் இருந்தாலும்

3.உயர்ந்த ஞானியின் உணர்வை நமக்குள் கவர்ந்து

4.நமக்குள் செயலாக்க வேண்டும் என்ற நிலைக்குத் தான் இந்தத் தேரோட்டம்.

ஏழாவது நிலை அடைந்த அந்த மகரிஷிகளால் உருவாக்கப்பட்டுத் தன் உடலிலே ஒளியாக மாற்றிய உணர்வுகள் இன்று நம் பூமியில் உள்ளது.

அதை நாம் அனைவரும் பருகும் நாளாக வைக்கப்பட்டது தான் பங்குனி உத்திரம். இதைக் காவியங்களாகத் தீட்டி கந்த புராணத்தில் காட்டினார்கள் ஞானிகள். காலத்தால் அது மறைக்கப்பட்டு விட்டது.

இன்று காவடி ஆட்டங்கள் ஆடி பல இடங்களிலிருந்து அபிஷேகத் தீர்த்தங்களும் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தால் அதை மெச்சி நமக்குச் செய்வான் என்று எண்ணுகின்றோம்.

ஊருக்கு ஊர் ஒவ்வொரு இடத்திலும் தாளங்களுடன் காவடி ஆட்டங்கள் ஆடி

1.நான் முருகனுக்காக வேண்டியுள்ளேன்.

2.“என் கடமைகளைச் செய்ய உள்ளேன்..,” என்று பிறரிடம் யாசித்து

3.அந்த உணர்வின் தன்மை கொண்டு ஆலயத்திற்குச் செல்லும் மார்க்கமாகத்தான் வைத்துள்ளார்கள்.

நமக்குள் அருள் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை எடுத்தால் அது உத்தராயணம்…, உத்திரம்.

சூரியன் எவ்வாறு அது ஒளிச் சுடராக இருக்கின்றதோ இதைப் போல ஒவ்வொரு உயிரும் தான் வளர்த்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு அந்தந்த உடலிலே விளைந்த உணர்வுகளை நாம் ஒருக்கிணைந்து சேர்க்கப்படும் பொழுதுதான் ஒளியின் சுடராக நம் உணர்வுகள் ஒன்றி வருகின்றது.

சூரியன் 27 நட்சத்திரங்கள் உமிழ்த்துவதையும் நவக்கோள்கள் உமிழ்த்துவதையும் அது கவர்ந்து அதிலுள்ள நஞ்சினைப் பிரித்து ஒளிச் சுடராக மாற்றுகின்றது.

இதைப் போல் தான் நம் உடல் நஞ்சினை மலமாக மாற்றி அந்த உணர்வின் தன்மை தெளிந்த நிலைகள் கொண்டு தீமைகளை அகற்றிடும் எண்ணங்களாக வளர்ந்து வந்தது.

அங்கே பால்வெளி மண்டலமாக அமைத்த நட்சத்திரங்களைப் போன்று நம்முடைய எண்ணத்தால் நமக்குள் தீமைகள் வராது அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் “பால்வெளி மண்டலங்களாக” அமைத்திட வேண்டும்.

அப்படி மகரிஷிகளின் உணர்வைப் பால்வெளி மண்டலமாக மாற்றிக் கொண்டால் தீமையின் நிலைகளை அது விழுங்கிவிடும்.

நமக்குள் வரும் பொழுது தெளிந்த நிலையாக மாற்றி உணர்வின் தன்மை ஒளியாக மாற்றும் நிலை தான் உத்தராயணம் என்பது. “பங்குனி உத்திரம் – உச்சம்”.

ஆகவே ஞானிகள் எவ்வாறு நிலை கொண்டு இன்று விண் வெளியில் சுழன்று கொண்டுள்ளார்களோ அவருடன் நாம் இணைய வேண்டும்.

தியானம் செய்வதன் நோக்கம்

Image

Meditation, Healing.jpg

தியானம் செய்வதன் நோக்கம்

1.தியானம்

இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஞானிகள் மகரிஷிகள் தங்கள் உடலில் விளைய வைத்த ஆற்றல் மிக்க அருள் சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு இன்றும் நமக்கு முன்னால் இந்த பூமியில் சுழன்று கொண்டுள்ளது.

அந்த அருள் சக்திகளை நாம் பெறும் நமக்குள் சேர்க்கும் சந்தர்ப்பமே தியானம்.

மேலும் அந்த மகரிஷிகள் தங்கள் புலன்களாலே பல நறுமணமான மணங்களை தங்களுக்குள் சேர்த்து அதைச் சமைத்து விளைய வைத்து, வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அந்த அருள் மகரிஷிகளின் மணங்களை நமக்குள் நுகரும் சந்தர்ப்பமும் இந்தத் தியானம்தான்.

நம்மிலே பலர் தியானம் என்றாலே மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை (CONCENTRATION). அதெல்லாம் நம்மால் முடியாது.., என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால்

1.மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும்

2.அதன் மூலமாக தீமைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் வளர்ப்பதற்காகவும் தான்

3.நாம் தியானமே செய்கின்றோம் என்பதுதான் உண்மை.

மேலும் இந்தத் தியானத்தை நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமையான உணர்வுகளைச் சந்திக்கின்றோமோ, பார்க்கின்றோமோ, கேட்கின்றோமோ, அப்பொழுதுதான் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்து அவ்வப் பொழுது நமக்குள் சேரும் தீமைகளைத் துடைக்கும் நிலைதான் இந்தத் தியானம்.

கையில் அழுக்குப்பட்டால் நாம் என்ன செய்கின்றோம். நல்ல நீரை விட்டுத்தான் கழுவுகின்றோம். மறுபடியும் அழுக்காகின்றது. மீண்டும் நல்ல நீரை விட்டுத் தூய்மைப்படுத்துகின்றோம்.

இது போன்று தான் நம் வாழ்க்கையின் நிலைகளில் எத்தனையோ பேரைச் சந்திக்கின்றோம், பார்க்கின்றோம் அவர்கள் நல்லது கெட்டதை நாம் அறிய நேர்கின்றது, சுவாசிக்க நேர்கின்றது.

அதையெல்லாம் நாம் அப்படியே விட்டுவிட்டால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்குள் மற்றவர்கள் பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் கலந்து அவைகள் மாசுபடும். நம் நல்ல குணங்களை இயக்க முடியாது.

நம் நல்ல குணங்களைக் காக்க நமக்கு ஒரு சக்தி வேண்டுமல்லவா. அதை எண்ணிச் சுவாசித்துப் பெறுவது தான் தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று நமக்குள் சேர்ப்பது தான் தியானம்.

இவ்வாறு, தொடர்ந்து நாம் தியானித்து வரும் பொழுது, அந்த மகரிஷிகள் பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள், நமக்குள் சிறுகச் சிறுகச் சேரும்.

நம் வாழ்க்கையையே தியானமாக்கும் பொழுது எத்தகைய தீமைகளிலிருந்தும் நாம் விடுபட முடியும். இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைய முடியும்.

2.தியானம் செய்யும் முறை

ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா… புருவ மத்தியில் உள்ள நம் உயிரான ஈசனை வணங்கி தாய் தந்தையரை வணங்கி வழி காட்டும் குருவை எண்ணி அவர்கள் அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்குங்கள்.

ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கி கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்துங்கள்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்கி, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்துங்கள்.

கண்களின் காந்தப் புலனறிவால் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து உயிரில் (புருவ மத்தியில்) அந்த அழுத்தம் பட வைத்து உயிர் வழி நுகருங்கள்.

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான நிலையில்

1.அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்

2.அது எங்கள் இரத்த நாளங்களில் கலந்திட வேண்டும்

3.அது எங்கள் உடலில் உள்ள ஜீவ ஆன்மா ஜீவ அணுக்களில் படர வேண்டும்.

4.அது எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திலும் படரவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி

5.நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.

மனிதராகிய நாம் நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும் உணவாகக் கொடுக்கும் பழக்க்ம் தான் இந்தத் தியானம்.

அப்பொழுது எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும் அதை அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் ஒளியின் சுடராக மாற்றிவிடும்.

உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரம் பெறுவதே தியானத்தின் நோக்கம்.

வேடிக்கையாகப் பார்த்தாலும் நாம் நுகரும் உணர்வுகள் (சாப அலைகள்) என்ன செய்யும்…! என்று தெரிந்து கொள்ளுங்கள்

Image

Curse, quarrel.jpg

வேடிக்கையாகப் பார்த்தாலும் நாம் நுகரும் உணர்வுகள் (சாப அலைகள்)

என்ன செய்யும்…! என்று தெரிந்து கொள்ளுங்கள்

பிறரை ஏசிப் பேசும் நிலைகள் கொண்டு ஒருவன் சாபமிடும் நிலைக்கு வருவான். அந்த மாதிர் எந்த மனிதன் தன் எண்ணத்தில் துரிதமாக இருக்கின்றானோ மற்றவர்கள் “எவ்வளவு நல்லது சொன்னாலும்.., சாபமிடுவதை.., அவன் நிறுத்த மாட்டான்”.

அதே சமயத்தில் யாரை அவன் சாபமிடுகின்றானோ அந்தச் சாப வினையைக் கேட்டவனும்.., “அதை விடுவேனா..,” என்று அதே உணர்வு கொண்டு அவனும் அத்தகையை நிலைகளைச் செய்வான்.

ஓம் நமச்சிவாய.., சிவாய நம ஓம்.., முதலில் சாபமிட்டவன் உடலில் விளைந்த தீமைகளின் வினைகள் இவருக்குள்ளும் பதியப்பட்டு அதே உணர்வுகள் இங்கே எதைப் பேசுகின்றார்களோ அதை எதிர்மறையாகப் பேசச் செய்யும்.

இவ்வாறு அந்த உணர்வின் தன்மைகள் வேகமாக இயக்கப்படும் பொழுது மற்றவர்கள் இதைப் பார்த்துக் கேட்பார்கள். அட.., இரண்டு பேரும் ஏன் இந்த மாதிரி ஏசிப் பேசுகின்றீர்கள்.., “விட்டுவிடுங்கள்” என்று சொன்னாலும் இந்த உணர்வுகள் எடுக்காது.

“உங்களுக்கு என்ன தெரியும்..!” என்று சொல்வார்கள்.

இருவரில் எவரையாவது.., அவன் தான் பேசுகின்றான்.., “நீ ஏன் அதை விட்டுவிட்டுப் போகலாம் அல்லவா.., போ..,” என்று சொன்னால் என்ன ஆகும்.

“நீ அவனுக்குத்தான்.., சாதகமாகப் பேசுகிறாய்” என்ற உணர்வுகள் அங்கே நல்லதைச் சொன்னாலும் எதிர்த்துத் தாக்கும் நிலை வரும்.

இதைப் போல ஒருவர் ஏசுவதைக் கண்டு சரி விட்டு விடுங்கள் போகட்டும் என்று சொன்னால் உடனே அவன் என்ன சொல்வான்?

“பார்… அவன் எப்படிப் பேசுகின்றான் பார்..,” என்பான்

ஆக, இவன் ஏசிப் பேசிவிடுவான். அடுத்தவனுக்குள் இது பட்டவுடன் இந்த உணர்ச்சிகள் பொங்கிவிடும்.

1.அவன் ஒரு சொல்லைச் சொல்லி இருப்பான்

2.ஆனால் இவன் பத்து சொல்லைச் சொல்வான்.

இவ்வாறு அந்த உணர்வின் வேகத் துடிப்பு வரும் பொழுது இருவருக்குமே தர்மத்தையோ நியாயத்தையோ மற்ற நல்ல வழிகளைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மிளாகாய்ச் செடி தனக்குள் காரமான உணர்வை எடுத்துத்தான் அந்த மிளகாயின் வித்து உருவாகும். அந்த வித்தின் தன்மை தன் செடியின் சத்தைக் கவர்ந்து தன் இனத்தின் தன்மையைத்தான் அது விருத்தி செய்யும்.

இதைப் போல ஒருவருக்கொருவர் பேசிய உணர்வுகள் அது வித்தாகும் பொழுது இந்த மனிதன் எவ்வளவு சாபமிட்டுப் பேசினானோ இவனுக்குள்ளும் அதே உணர்வைச் சுவாசித்துச் சாபமிட்டுக் கொண்டேயிருப்பான்.

இந்தச் சாபமிடுவதைக் கேட்டுணர்ந்தோரும் அவர்களும் சாபத்தை விட்டுக் கொண்டேயிருப்பார்கள். இந்த அலைகள் படர்ந்து.., படர்ந்து.., இவர்களுக்குள் உள்ள நல்ல குணங்கள் இயங்காது தடைபடுத்திவிடுவார்கள்.

இந்தச் சாப அலைகள் இருவருக்குள்ளும் விளைந்து இவர்கள் எதையெல்லாம் சொன்னார்களோ இவை அனைத்தும் அங்கே படர்ந்து அங்கே இருவருடைய குடும்பங்களிலும் இவர்கள் வீரியமாகப் பேசுவார்கள்.

அதே சமயத்தில் இந்த வீரிய உணர்வுகள் இவர்கள் குடும்பத்தில் பாசத்தையும் பற்றையும் விட்டு அதனால் ஒருவருக்கொருவர் வெறுப்பை உருவாக்கிவிடும்.

பாசத்துடன் இருப்போரின் நிலைகளும் இவருடன் பேசப்படும் பொழுது இந்த வெறுப்பான அந்த உணர்வுகள் பற்று கொண்ட அவருக்குள் ஈர்ப்புக்குள் அதிகமாகிவிடும்.

ஆனால், ஏசியவர் தப்பிவிடுவார்கள். குடும்பத்தில் பாசத்துடன் உள்ளோரின் நிலைகளில் இது படப்பட்டு அந்த உணர்வுகள் அது துரிதமாக விளைந்து நோயாக மாற்றி அவனை முதலில் வீழ்த்தும்.

அண்ணன் தம்பிக்குள் இதைப் போன்று ஒருவருக்கொருவர் பார்த்து விடும் சாப அலைள் உற்று நோக்கப்படும் பொழுது அவர்களுக்குள் தீய வினைகள் ஆகி நோயாக மாறி அவர் குடும்பத்திலேயே வெறுப்பின் தன்மை வந்துவிடும்.

அவர்கள் தாயோ தந்தையோ அவர்கள் “அதை விட்டு விடுடா..,” என்று சொன்னாலும் அந்த வேக நிலையில் “நீ பேசாமல் இரு..,” என்பார்கள்.

ஆனாலும் அவர்கள் இட்ட சாப அலைகள் அவர்களுக்குள்ளே படர்கின்றது. இது “அவர்களுடன் போனாலும் பரவாயில்லை”.

அதே சமயத்தில் அவர்கள் குடும்பத்தில் கர்ப்பமாக இருந்தால் அதே சாப அலைகள் தன் வீட்டிலிருப்போரின் நிலைகளுக்குள் நுகரப்பட்டு அவரின் “கருவிலிருக்கும் குழந்தைக்கும்” இந்தச் சாப அலை படர்ந்து விடுகின்றது.

அதே போன்று ஒருவருக்கொருவர் சாபமிடுவதை மற்றவர்கள் இதை வேடிக்கையாப் பார்ப்பார்கள்.

ஆனால் “வேடிக்கையாகப் பார்ப்போரின் நிலைகளும் இது பாய்ந்து” அவர்கள் குடும்பத்திலும் படரும். கருவுற்றவர்கள் இருந்தால் அந்தக் கருவிலிருக்கும் குழந்தைக்கும் இது பாயும்.

உதாரணமாக ஒருவருக்கொருவர் சாபமிடும் போது “கால் முடமாகும்…, உன் கண்கள் குருடாகிவிடும்..,” என்று பேசியிருந்தால் அதைக் கர்ப்பமான தாய் கேட்டுணர்ந்தால் உணர்வுகள் வேடிக்கையாகப் பார்த்திருந்தாலும் கருவில் விளைந்து அது இணைந்துவிட்டால் அது கால் முடமாகும்.

அல்லது கண்கள் குருடு என்று பேசினால் அதே உணர்வினுடைய தன்மைகள் இங்கே கண் வளர்ச்சியின் தன்மையைத் தடைப்படுத்தும்.

இவ்வாறு தான் மனிதன் பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த நிலைக்கு வந்த பின்னும் இந்த உணர்வின் இயக்கங்கள் அது இப்படியெல்லாம் இயங்கத் தொடங்கிவிடுகின்றது.

நிம்மதியாக வாழும் குடும்பத்திற்குள் சண்டகளும் சச்சரவுகளும் ஏன் வருகின்றது என்று நமக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று பத்திரிக்கை வாயிலாகவும் டி.வி வாயிலாகவும் இன்னும் எத்தனையோ சாதனங்கள் வழியாக பல இடங்களில் ஒருவருக்கொருவர் ஏசிப் பேசும் நிலைகளையும் அசுரத்தனமாகத் தாக்குவதையும் அப்படியே காண்பிக்கின்றார்கள்.

எல்லாவற்றையும் பார்க்கின்றோம், கேட்கின்றோம். நமக்குள்ளும் அதே கொதிப்பும் ஆத்திரமும் வருகின்றது. நாமும் அவர்களைத் தாக்க வேண்டும் என்ற உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

ஆகவே அவ்வாறு கேட்டுணர்ந்த பார்த்துணர்ந்த தீமை செய்யும் நிலைகளைச் சுத்தப்படுத்துகின்றோமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

தவறு நாம் யாரும் செய்யவில்லை.

ஒரு இடத்தில் விளைந்த தீமை எல்லோருக்குள்ளும் சென்று அதனின் இயக்கமாக எல்லோரையும் அது இயக்குகின்றது. இதை நிறுத்த வேண்டுமல்லவா.

ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதனின்று வெளிப்படும் பேரருள் பேரொளியை நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

ஏசிப் பேசுவோர் உடல்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படர வேண்டும். அவர்கள் உண்மையை உணர வேண்டும். சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் பெறவேண்டும் என்று நாம் இவ்வாறு எண்ணி நம்மைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

தூய்மைப்படுத்தவில்லை என்றால் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப

1.கடுமையான நோய்கள் வரும்

2.குடும்பத்தில் ஒற்றுமை குலையும்

3.பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியம் இருக்காது

4.தொழில்கள் நசிந்து போகும்

5.வேலை பார்க்கும் இடங்களில் தொல்லைகள் வரும்

6.நிம்மதி இழந்து தவிக்க நேரும்

7.கடைசியில் மனிதனல்லாத உருவைத் தான் பெறச் செய்யும் நம் உயிர்.

நம் குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலில் அதனின் வலிமையைக் கூட்டிக் கொள்ளுங்கள்.

உங்கள் சொல் செயல் புனிதம் பெறும். உங்கள் மூச்சால் மற்றவர்களுக்கும் நல்லதாகும். “இந்தப் பாதுகாப்புக் கவசம்..,” நமக்கு அவசியம் தேவை.

வளர்ச்சியின் பாதையில் வந்த மனிதன் நாம் இனி அடுத்த நிலையான “தெய்வ நிலைக்குச் செல்ல வேண்டும்”.

Where is the God whom we are talking…?

Image

God.jpg

Where is the God whom we are talking…?

The state of life should be a calm one. That is a full life. Life is not chanting manthras on God being in one state and reach him.

Where is the God whom which we are talking?

The state of Almighty is one joining the other. When wind and water strike each other light is created. When sound and light strike each other then life is created.

The life starts breathing  only after it is acted upon by sound, light and water. As soon as it starts breathing the acidic characters strike on the life atom it starts absorbing and begins to rotate.

Like this it takes it path for its breath depending upon the absorbing power, the state of acidity in its character that it has gathered and by striking on the earth it takes the path of growth.

Any life atom does not get life unless it strike against each other, they become three four and many start rotating as planets and all the lives in the planet.

Where is God who is separate? What is the state that is obtained by remaining  calm in one state and during meditation?

The principle of the shining truth which has no end remains in the rotation. The growth of life in this rotation and striking against one another which forms in shapes and planets are the living beings.

There is no separate God. That which shines in everything and in everything is God.