துன்பங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை மெய் ஒளியைக் கூட்டிக் கொள்ளும் நல்ல சந்தர்ப்பமாக மாற்றுங்கள்

Image

crisis and hope.jpg

துன்பங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களை மெய் ஒளியைக் கூட்டிக் கொள்ளும் “நல்ல சந்தர்ப்பமாக மாற்றுங்கள்”

ஒவ்வொரு நிமிடமும் நமது குருநாதர் அருள்வழி கொண்டு அவரின் ஆற்றலின் துணை கொண்டு மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெற்று அருள் ஒளிகளினுடைய நிலைகளை நீங்கள் பெறுவதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை நிகழ்த்துகின்றோம்.

இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சாதாரண வாழ்க்கையில் சொன்னது போல,

1.“என்னத்த…,” என்ற சோர்வை விடுத்துவிடுங்கள்.

2.உங்கள் நல்ல உணர்வுகள் அழிந்துவிடாதபடி

3.நாம் நிச்சயம் “மகரிஷிகளின் அருள் ஒளியை பெறுவோம்” என்று எண்ணுங்கள்.

4.இந்த மனித வாழ்க்கையில் சேர்த்த இருளை நீக்கிவிட்டு ஒளி நிலை பெறுவோம் என்று “உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்”

அவ்வாறு செயல்படும் பொழுது வாழ்க்கையில் எத்தகைய துன்பங்களைச் சந்தித்தாலும் துன்பங்கள் வரும் நேரங்களில்தான் அந்த மெய் ஒளியின் உணர்வை நாம் கூட்டும் நல்ல சந்தர்ப்பமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

உங்களுக்குள் வரக்கூடிய துன்பத்தை மறந்து பழகுங்கள்.

“நாம் மெய்ஞானியின் அருள் ஒளியைப் பெறுவோம்…,” அந்த அருள் ஒளியாலே நம் சொல்லும் செயலும் நம் பேச்சும் மூச்சும் உலகத்தை ஒளியின் சுடராக்கச் செய்யும். ஒருவரை மகிழச் செய்யும் எண்ணங்களாக நம் பேச்சும் மூச்சும் இருக்கும் என்று எண்ணுங்கள்.

அந்த நிலைகளை நாம் பெறுவோம் என்ற நிலைகளில்

1.எத்தகைய துன்பங்கள்,

2.எந்த நேரத்தில் வந்தாலும்,

3.நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் சக்திகளைப் பெற்றுத் துன்பங்களிலிருந்து விடுபடுவோம் என்று உறுதி கொள்ளுங்கள். அந்த உறுதியான நிலையைப் பெறுவதற்குண்டான சந்தர்ப்பம் இது.

எந்த மகரிஷிகள் அவர்கள் எதை விளைய வைத்தார்களோ அந்த உணர்வலைகளை “சிலிகன்களை…” (SILICON) உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றோம்.

இனி இதைக் கூட்டிப் பெருக்குவது உங்கள் கையில்தான் இருக்கின்றது. நீங்கள் பெறவேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது. ஆகவே அதை யாம் பதிவு செய்கின்றோம்.

நீங்கள் அனைவரும் அதைப் பெற வேண்டுமென்ற ஆசையில் யாமும் ஒளி நிலை பெறுகின்றோம். என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறச் செய்யும்.

யாம் எடுத்துக் கொண்டது என் பேச்சும் மூச்சும் உலகம் நன்மை பெறவேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தி அதை யாம் பரப்புகின்றோம்.

இதையே நீங்களும் எடுத்து உங்கள் உடலுக்குள் இதன் நிலைகளைப் பெருக்கும்போது உங்களுக்குள்ளும் உங்கள் பேச்சும் மூச்சும் பிறருடைய நிலைகளை அது நன்மை பெறச்செய்யும்.

1.துன்பங்களிலிருந்து விடுபடுங்கள்,

2.துன்பங்களை எண்ணாதீர்கள்.

3.துன்பங்களை மறந்து பழகுங்கள்.

4.அதை மறக்க மெய் உணர்வுகளைச் சுவாசியுங்கள்.

என்றுமே ஏகாந்தமாக மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்து வாழுங்கள். மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுவீர்கள்.

Image

Full moon day.jpg

அமாவாசை அன்று “இருண்ட நாளில்” முன்னோர்களை அழைக்கின்றோம் – ஞானிகள் சொன்னது என்ன?

அந்த மெய்ஞானிகள் காட்டிய மெய்வழியில் விண்ணின் ஆற்றலை நாம் பெறவேண்டும். அதன் துணை கொண்டு நம்முடைய குலதெய்வங்களை விண் செலுத்த முடியும். பிறவா நிலை அடையச் செய்யலாம்.

கங்கையில் கொண்டு போய் சுட்ட சாம்பலைக் கரைத்தாலோ அல்லது புதைத்து விட்டால் பிண்டம் செய்து வைத்துக் கரைத்து விட்டால் அவர்கள் செய்த பாவங்கள் போகாது.

பாவங்களை மீண்டும் “நாம் சுமந்து கொள்கிறோம்” என்று தான் அர்த்தம்.

அமாவாசை அன்று அவர்களுக்குப் பல உணவுகளைப் படைத்து எங்கள் முன்னோர்களை அழைக்கின்றோம் என்பார்கள்.

அமாவாசை அன்று இருண்ட நிலைகள் கொண்டது. உடலை விட்டுப் பிரிந்த ஆன்மாக்களை இருண்ட நிலைகளில் திருடர்களைப் போன்று அழைக்கின்றோம்.

அவ்வாறு அழைத்து அந்த ஆன்மாக்களை மீண்டும் இருள் கடலில்.., நமக்குள்.., “பிறவிக் கடனுக்கு அழைக்கின்றோமே” தவிர அமாவாசை விரதங்கள் என்பது தவறான முறைகள்.

ஞானிகள் சொன்னது அதுவல்ல.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியைக் கூட்டமைப்பாகக் கவர்ந்து அந்த மெய் உணர்வின் தன்மைகளை வலுவான எண்ணம் கொண்டு தியானிக்க வேண்டும்.

பின், உடலை விட்டுப் பிரிந்த உயிரான்மாக்கள் அனைத்தும் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து அழியா ஒளிச் சரீரம் பெறவேண்டும் என்ற ஏக்க உணர்வுடன் இந்தப் புவி ஈர்ப்பின் பிடிப்பை விட்டு “உந்திச் செலுத்த வேண்டும்”.

எல்லோரும் ஒன்று சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்து சென்ற அந்த உயிரான்மாக்களை “விண்ணிலே வீசி” அங்கே சப்தரிஷி மண்டலத்திற்குள் இணையச் செய்து (இருள் சூழ்ந்த) உடலில் கலந்த நஞ்சினை “அங்கே.., கரைக்க வேண்டும்”.

உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்துவிட்டு அங்கே சப்தரிஷி மண்டலத்துடன் ஒளியின் சுடராக நிலைக்கச் செய்யும்  நிலையே “பௌர்ணமி நாள்”.

இது தான் ஞானிகள் சொன்னது.

இன்று அமாவாசை நாள். இன்றைக்கு நான் “கறி” சாப்பிட மாட்டேன் அதை சாப்பிட மாட்டேன்.., இதைச் சாப்பிட மாட்டேன்… என்று சொல்வார்கள்.

எங்கள் அம்மா அப்பாவிற்குப் படைத்துவிட்டு அவர்களின் நினைவாகவே நான் இருந்தேன் என்றால் அது இருள் சூழ்ந்த நிலைகளுக்கே நாம் அவர்களை அழைக்கும் முறை.

ஏனென்றால்,

1.மந்திர ஒலியால் சுவாசிக்கப்பட்ட உணர்வுகள்

2.மீண்டும் ஒலி கொண்டு எழுப்பும் பொழுது அதற்குள் சிக்கப்பட்டு

3.அதை ஆவி வேலைகளுக்கு தன் பசியைப் போக்குவதற்காக மந்திரவாதிகள் வேண்டிய வேலைகளுக்குத்தான் ஆகும்.

4.ஆக, மந்திர ஒலிகளைக் கூட்டி அந்த ஆன்மாக்களைக் கவர்ந்து கொள்ளும் நிலைதான்.., “அமாவாசை.., இருளுக்குள் செய்யும் நிலை”.

5.மறைந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொள்ளும் முறை இது.., ஆகவே இது பிழை கொண்டது.

6.எந்தச் சாஸ்திரியாக இருந்தாலும் சரி.., இது இல்லை என்று எவராலும் மறுக்கவும் முடியாது.

7.உறுதியாகவே உங்களிடம் சொல்கின்றேன்.

“காரணம்..,” மக்களின் நிலைகள் பக்தி என்ற நிலைகளில் “உண்மைகள் மறைக்கப்பட்டு…,” தீமையின் செயல்களிலேயே நாம் போய்க் கொண்டிருக்கின்றோம்.

ஏனென்றால், அன்றைய அரசர்கள் “தான் சுகமாக வாழ” உடலுக்குள் விளைந்ததைத் பிரித்தெடுத்து அதன் வழிகளில் மற்றவர்களைச் செயலிழக்கச் செய்வதற்காகச் செய்யப்பட்டவைகள் தான் அது.

அரசர்கள் இன்று இல்லை என்றாலும் “அதன் தொடர் வரிசையில் வந்தவர்கள்” இன்றும் அந்த வேலைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதிலிருந்தெல்லாம் நாம் விடுபட வேண்டும்.

நம் முன்னோர்களை நாம் இன்னொரு உடலுக்குள் மீண்டும் உடல் பெறும் நிலைகளுக்குச் செல்லவிடாது  தடுக்க வேண்டும். அருள் ஒளியின் சுடரை ஏற்றி அவர்களைப் பிறவியில்லா நிலை அடையச் செய்தல் வேண்டும்.

இது நமது தலையாயக் கடமையாகும்.

முன்னோர்களின் உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்கள் சப்தரிஷி மண்டலத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று நாம் எண்ணுவது தான் அவர்களுக்கு நாம் கொடுக்கும் “ஆகாரம்”.

அந்த அருள் ஒளியை அவர்கள் எடுத்து அங்கே வளரத் தொடங்குவார்கள்.

சப்தரிஷி மண்டலங்களிலிருந்து எங்கள் முன்னோர்கள் என்றென்றும் எங்களுக்கு நல்லாசி வழங்கிட வேண்டும் என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

நம் முன்னோர்களை நாம் சப்தரிஷிகளாக ஆக்க வேண்டும். இதுதான் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்குக் காட்டிய “அழியா ஒளிச் சரீரம் பெறும்.., விண் செல்லும் மார்க்கம்”.

நல்லவராக எண்ணும்போது அவரிடமுள்ள தவறையும், தவறானவராக எண்ணும்போது அவரிடமுள்ள நல்லதையும் அறிய முடியவில்லை

Image

Good and bad.jpg

நல்லவராக எண்ணும்போது அவரிடமுள்ள தவறையும், தவறானவராக எண்ணும்போது அவரிடமுள்ள நல்லதையும் அறிய முடியவில்லை

உதாரணமாக இப்பொழுது ஒருவர் தன் மகன் மீது பாசமாகப் பிரியமாக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

அவருடைய மகன் தீய பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பவனாக   இருந்தாலும்

1.அவன் மீது  பாசம்  வைத்திருந்ததால்,

2.அவன்  எந்தத் தவறு செய்திருந்தாலும்

3.தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்.

அதே சமயத்தில் அவருடைய இரண்டாவது மகன் நல்லவனாக இருப்பான். தந்தையே தவறு செய்திருந்தாலும் தவறு என்ற வகையில் மகன் தந்தையை வெறுக்கும் பொழுது தந்தையும் அவன் மீது வெறுப்பைக் காட்டுவார்.

“இவன் அயோக்கியன்.., நம்மையே குற்றம் சாட்டுகின்றானே.., இவன்  மோசமானவன்.., அப்பனையே எதிர்க்கிறான் பார்” என்று தந்தை மகனையே வெறுக்கத் தொடங்கிவிடுவார்.

1.அவன் நல்லதையே செய்தாலும்,

2.அவனுடைய தந்தை அவனைக் குற்றவாளி என்றுதான் எண்ணுவார்.

3.ஆனால், முதல் மகன் தவறு செய்கின்றான். தவறு செய்தாலும் “மகனே.., நீ நல்லவன்டா…” என்று அவனை ஆதரிப்பார்.

ஏனெனில், இந்த உணர்வுகள் இரண்டும் ஒன்றிக் கொள்ளும்.

மற்றவர்கள் முதல் மகன் செய்த தவறுகளைக் குற்றங்களாக அவன் தந்தையிடம் கூறினாலும் அவர் ஏற்றுக் கொள்ளாமல்.., “இவன் இது போன்ற தவறுகளைச் செய்ய மாட்டான்…, நல்லவன்” என்று சொல்வார்.

ஆனால், இரண்டாவது மகனைப் பார்த்து, “அயோக்கியன்.., இவன் தவறு செய்வான்” என்றுதான் கூறுவார்.

முதல் மகன் மீது பாசம் அதிகமாக இருப்பதால் அவன் செய்த தப்பை ஏற்றுக் கொண்டாலும் “தப்பு இல்லை…” என்றுதான் அவருக்குச் சொல்ல வரும்.

இது இயற்கையின் செயலாக்கங்கள்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அதனின்  உணர்வை  நம்முடன் இணைக்கப்படும் பொழுது அதே  உணர்வின் தன்மை நமக்குள் செயல்படுகின்றது.

1.தம் பையனைக் கண் கொண்டு பார்த்து,

2.அவன் தப்பு செய்திருந்தாலும் கூட,

3.அவனை நல்லவன் என்று எண்ணும் பொழுது,

4.அந்த உணர்வு கொண்டு அவருக்குள் படமாக்கி,

5.அவனை அவரிடத்தில் நல்லவனாக்குகின்றது,

இதைத்தான் கீதையிலே, “நீ எதை எண்ணுகின்றாயோ, அதுவாகின்றாய்” என்று உரைக்கப்பட்டது.

தந்தை செய்த தவறுகளையெல்லாம் முதல் மகனும் செய்து வருவான். இந்த நஞ்சின் உணர்வின் தன்மை அவருக்குள் வளரப்படும் பொழுது அது அவரிடத்தில் “கடும் நோயாக” விளைகின்றது.

ஆனால் அந்த சமயத்தில், தந்தைக்கு உதவ வேண்டிய முதல் மகனோ தந்தையால் நல்ல பிள்ளை என்று பாராட்டுப் பெற்றவன் கடும் நோயில் தவிக்கும் தந்தையைப் பார்த்து…,

1.“நீ செய்த செயல்களுக்கு நீ அனுபவிக்கின்றாய்

2.நான் என்ன செய்யட்டும்…!” என்று சொல்வான்.

நல்ல பிள்ளை என்று எவனைச் சொன்னாரோ…, அவனைப் பார்த்து “அடேய்.., பாவி” என்று தந்தை தம் மகனைப் பார்த்துச் சொல்லும் நிலை பின் நாட்களில் வரும்.

இதை நாம் பார்க்கலாம். சில குடும்பங்களில் உணர்வின் இயக்கங்கள் இப்படி இருக்கின்றது.

எந்த உணர்வுகளைக் “காந்தம் கவர்ந்து” தன்னிடத்தில் இணைக்கின்றதோ அதனின் இயக்கமாகத்தான் அது இயக்கும் வேறொன்றையும் இயக்காது

“நாம் நுகரும் உணர்வுகள்” (கவர்ந்து சுவாசிக்கும்) நம்மை எப்படியெல்லாம் இயக்குகின்றது என்று இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Divine Paddling

Image

Divine paddle

There is  a vision in which is seen a bank of river in which there is a boat and paddle. We get into the boat and to cross the river and go to the other bank.

The boatman does not allow the boat to go along the stream, but by paddling he moves the boat across the stream and we reach the other bank  and get down from the boat.

Just like the above we, who are born by the attachment to this world, to cross the river of the life and get to the other bank have to paddle against the stream of life and go to the divine world.

If the boat in which we have to travel and the ability of the boatman are good, our travel becomes easy. If the cage our body is healthy and the soul in a state in which it has good thoughts like a good boat the life will be like the ability of the boatman and the mutual relationship between the two life mates.

When the boat is in good and the boatman is an able person then the journey is easy. We will come across several obstacles in our path and we have to overcome them like paddling against the flow of the stream and then reach the other bank.

We cannot go in the path in which the boat moves by itself. The water will drag the boat in its course.

Whatever comes to us let them come as they are given to us by God and he will look to us. This way of thinking is like allowing the boat to go in the way in which it stream takes it.

Whatever difficult state may happen we should not proceed in that way but use our strength and get over them like paddling up stream and it is only then that our life will be good.

The birth that we have taken now is due to our defects that we had not overcome in our previous birth. By other bank it is meant that the path of Gnana and enlightenment which we should know and follow.

“பாவ வினை” என்று சொல்கின்றோம்.., பாவ வினை என்றால் என்ன?

Image

Mercy.png

“பாவ வினை” என்று சொல்கின்றோம்.., பாவ வினை என்றால் என்ன?

இப்பொழுது பஸ்ஸில் அடிபட்டு ஒருவன் துடித்துக் கொண்டிருக்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். அவன் துடிக்கும் உணர்வுகள் பாவ வினைகள்.

அதனால் அவனுக்குள் எத்தனை இம்சைகள் பட்டானோ வேதனைப்படுகின்றானோ நாம் உற்று பார்த்தால் அதனின் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

அதே மாதிரி ஒருவன் ஆட்டினை அதைக் கத்தக் கத்த அறுத்துக் கொல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அதைப் பார்த்தவுடன் நம் முகம் சுளிக்கின்றது. அவன் செய்கின்றான் பாவம். நாம் உற்றுப் பார்க்கின்றோம்.

ஆட்டிடமிருந்து வெளிவரும் வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் பாவ வினைகளாக வந்துவிடுகின்றது. ஆடு அது துடிதுடிக்கும் உணர்வுகள் நமக்குள் வந்துவிடுகின்றது.

மற்றொரு ஜீவனை ஒரு நாய் கடித்துக் குதறுகின்றது. இந்த வகையில் அங்கே பாவங்கள் நடக்கின்றது. அது துடிக்கும் உணர்வுகளைப் பார்க்கின்றோம்.

அதைப் பரிவு கொண்ட மனதுடன் பார்க்கும் போது அதனின் உணர்வுகள் நமக்குள் பாவ வினையாக வந்து சேர்ந்து விடுகின்றது.

1.ஒன்றை அது மற்றதைக் கொன்று புசிக்கும் பொழுது “அது எப்படித் துடித்ததோ…,”

2.ஒன்று மற்றொன்றைத் “தாக்கும் பொழுது..,” அந்த உணர்வின் அலைகள் படர்ந்ததோ

இரண்டு உணர்வின் வித்தாக இது நமக்குள் பதிவாகின்றது.

ஆக, அங்கே எப்படி ஒன்றை ஒன்று விழுங்குகின்றதோ அதே போன்று நமக்குள்ளும் நம் நல்ல குணங்களை ஒன்றை ஒன்று விழுங்கி செயலற்றதாக மாற்றி பாவ வினைகளாக நமக்குள் விளைந்து தீய வினைகளாக உருவாகிவிடுகின்றது.

பாவ வினைகளையும் தீய வினைகளையும் நீக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

பல கோடிச் சரீரங்களில் நாம் தீமைகளை அகற்றித் தீமைகளை அகற்றிடும் சக்தியாக வளர்ந்து வந்துள்ளோம்அவ்வாறு வளர்ந்து. இன்று ஆறாவது அறிவு கொண்ட நிலையில் மனிதனாக வந்தோம் என்பதை நாம் அறிதல் வேண்டும்

விண்ணிலிருந்து வரும் ஆற்றலை நுகர்ந்து நஞ்சினை வென்று தனக்குள் வந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றி உணர்வை ஒளியாக மாற்றியவர்கள் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே உண்டு. அதை நாம் எளிதில் பருகுவதற்குத்தான் விநாயகரை வைத்துக் காட்டினார்கள் ஞானிகள். அந்த விநாயகர் தத்துவத்தை உணர்த்தியவன் அகஸ்தியர்.

இந்த மண்ணுலகில் தீமைகளை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அகஸ்தியர் இன்று விண்ணுலகில் துருவ நட்சத்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளார்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீய வினைகள் சாப வினைகள் அகல வேண்டும் ஈஸ்வரா என்று விநாயகரைப் பார்க்கும் பொழுது இப்படி எண்ணுதல் வேண்டும்.

இந்த நல்ல வினைகளை நாம் ஒவ்வொருவரும் சேர்க்க வேண்டும். நல்ல வினைகள் நமக்குள் சேர்க்கச் சேர்க்க இதனின் கணக்குகள் கூடி நாம் பார்த்த பாவ வினைகளின் கணக்குகள் குறைந்து சிறுத்து விடுகின்றது.

நமது குருநாதர் இயற்கையின் நிலைகள் எது எது எப்படி இயங்குகின்றது? நமக்குள் தீமைகள் எப்படி வருகின்றது. தீமைகள் நமக்குள் எப்படி விளைகின்றது? அந்தத் தீமையை விளைவிக்கும் நிலைகளிலிருந்து நாம் எப்படித் தப்ப வேண்டும் என்பதை உண்ர்த்தினார்.

பல கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கிடையிலும் அவர் காட்டிய அருள் வழியில் அனுபவபூர்வமாக யாம் கண்டுணர்ந்ததைத்தான் உங்களிடம் உபதேசிக்கின்றோம்.

1.உங்களை அறியாது வரும் தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும்.

2.தீமைகள் உங்களை அணுகக் கூடாது.

3.உங்கள் பார்வையினாலேயே தீமைகள் அகல வேண்டும் என்ற நிலைக்கே தான் இந்த உபதேசத்தைக் கொண்டு வருவது.

யாம் சொல்லும் உபதேசக் கருத்துக்களை நீங்கள் உங்களுக்கு வேண்டிய உணர்வை உட்கொண்டால் தான் அந்த உணர்வின் தன்மை வரும்.

உபதேசிக்கும் அருள் உணர்வுகளை ஏற்றுக் கொள்வோம். தீமையை நீக்கும் உணர்வின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்வோம். நம்மை அறியாது வந்த தீமைகளைப் போக்குவோம் என்ற இந்த உணர்வுகள் உங்களுக்குள் வர வேண்டும்.

 

என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல் என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா

Image

Prayer.jpg

என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்.., “என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா”

அன்றாட வாழ்க்கையில் நம் ஆசைகள் எங்கெல்லாம் செல்கிறது?

உதாரணமாக நாம் கோபமான உணர்வுடன் இருந்தால் நம்முடைய செயலாக்கங்கள் எப்படியெல்லாம் மாறுகிறது?

1.சமையல் செய்தால் குழம்பைச் சீராக வைப்பீர்களா?

2.ஒரு கணக்கைச் சரியாகப் பார்க்க முடிகிறதா?

3.கோபத்துடன் இருந்தால் ஒரு இயந்திரத்தைச் சீராக இயக்குவீர்களா?

4.கோப உணர்ச்சியோடு ஒரு காரைச் சீராக ஓட்டுவீர்களா?

அந்தக் கோப உணர்ச்சியுடன் ஓட்டும்போது யாராவது குறுக்கே வந்தால் “அடிடா.. அவனை..,” என்று வீட்டில் இருக்கும் கோபத்தை அவனிடம் காட்டினால் ஆக்சிடெண்ட் ஆகிவிடும்.

பிரேக் போடுவதற்கே மனது வராது.

எவனைப் பார்த்தாலும் “இப்படிச் செய்கிறார்களே” என்று அவனை அடித்துவிடுவோம். அல்லது அதே மாதிரி ஒருவன் குறுக்கே வந்தான் என்றால் கோபத்துடன் படக்.., என்று திருப்பினால் பக்கத்தில் எங்காவது மோதி இடித்துவிடுவோம்.

பிரேக் போட மாட்டோம்.

ஆக அந்தக் கோபத்துடன்தான் இயங்குவோமே தவிர பிரேக் போட்டு சமப்படுத்தி சீரான நிலைகளில் கொண்டு போகவேண்டும் என்ற நிலைகள் வராது. சீரான நிலைகள் கொண்டு செயல்படும் நிலைகள் அங்கே இழக்கப்படுகிறது.

வீட்டில் கணவன் மனைவி மேல் ஒருவருக்கொருவர் கோபம் வந்தாலும் சரி, குழந்தை மேல் கோபம் வந்தாலும் சரி அல்லது எதிரி மீது கோபம் வந்தாலும் சரி

1.நாம் நுகரும் உணர்வுகள் நம்மை இயக்கி

2.நாம் வாழ்வதற்கு “இடையூறாக இருக்கிறார்கள்” என்று

3.இந்த ஆசைதான் வருகிறதே தவிர

4.”நம்மைக் காக்கும் ஆசைகள்” அங்கே இழக்கப்படுகிறது.

கையில் விளக்கு இருந்தால் பாதையைச் சீராகத் தெரிந்து மேடு பள்ளங்களைத் தெரிந்து செல்ல முடியும். விளக்கை அணைத்து விட்டால் தெரியுமோ…?

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபடவேண்டும். என்றால் “நம் ஆசை…, எதன் மேல் இருக்க வேண்டும்?”

ஆகவே தான்

1.என் நினைவை எங்கெங்கோ அலைவிட்டு

2.என் ஆசை என்னுள்ளே வளர்ந்திடாமல்

3.என்னுள்ளே என்றும் நீ இருந்துவிடு ஈஸ்வரா என்று ஏங்குகிறோம்.

தீமைகளையெல்லாம் நீக்கி நீ ஒளியாக இருக்கின்றாய். அதை எனக்குள் ஒளியாக உருவாக்க வேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டுதல் வேண்டும்.

நாம் நம் உயிருடன் ஒன்றிட வேண்டும். அந்த ஒளியாக மாறவேண்டும் என்றுதான் நாம் ஓம் ஈஸ்வரா.., ஓம் ஈஸ்வரா.., என்று அவனிடமே நாம் வேண்டுகிறோம்.

அவனுடன்…, அவனாகி.., “அவனாகவே” நாம் ஆகவேண்டும்.

இந்த உணர்வெல்லாம் ஒளியாக மாறும் போது துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து பிறவியில்லா நிலை அடைந்து சிருஷ்டிக்கும் உணர்வு பெற்று நாம் “ம்கரிஷிகளாக” ஆகின்றோம்.

இராமன் குகனை நட்பாக்கினான் – விளக்கம்

Image

Raman - Guhan.jpg

இராமன் குகனை நட்பாக்கினான் – விளக்கம்

உங்களுக்கு மனம் பக்குவப்பட வேண்டும். அதற்காக வேண்டி.., “வாருங்கள் போகலாம்..,” என்று சொல்லி உங்களை நான் காட்டுக்குள் அழைத்துச் செல்ல முடியுமா…?

அப்பொழுது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன சொல்வார்கள்? “சாமியார் வருகிறார்” என்றால் ஒரு வேளை குடும்பத்தை விட்டு இவரும் “ஓடி விடுவாரோ.., என்னமோ…!” என்று சொல்லிப் பெண்கள் பேசத் தொடங்குவார்கள்.

இந்த மாதிரியெல்லாம் இன்று உலக நிலைகள் இருக்கின்றது.

ஆனால், உங்கள் உடலே ஒரு காடு. அந்தக் காட்டிற்குள் என்னென்ன நடக்கின்றது என்று தான் இராமாயணத்தில் காட்டுகின்றார்கள்.

காட்டிற்குள் இராமனும் சீதாவும் செல்லும் பொழுது குகன் என்ன செய்கின்றான்? நீரைக் கடந்து செல்வதற்குப் படகு கொடுக்கின்றான். அதனுடைய விளக்கம் என்ன?

“நாம் எதை எண்ணுகின்றோமோ..,” அந்த உணர்வுகள் அனைத்துமே “இரத்தத்தில் தான்” கலந்து செல்கின்றது.

நல்ல இடத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நாம் போகக்கூடிய இடத்திற்கு போகின்றோம். அதனால் தான் குகனைப் பற்றிச் சொல்கின்றார்கள்.

1.நாம் எடுக்கும் உணர்வுகளிலிருந்து இயங்கி

2.இந்த “இரத்தம்”

3.நம் உடலில் எவ்வளவு பக்குவமாகக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது?

4.அங்கங்கே அவரவர்களுக்கு வேண்டிய இடத்தில் கொண்டு போய் இந்த உணவைக் கொடுக்கின்றது.

5.உடலிலுள்ள எல்லாவற்றிற்கும் உணவு இந்த இரத்தத்தின் வழியாகத் தான் செல்கின்றது என்பதைப் பச்சையாகவே காவியத்தில் காட்டுகின்றார்கள்.

இதையெல்லாம் சற்றுச் சிந்தனை செய்து பாருங்கள்.

ஆனால் இங்கே “பட்டி மன்றம்” வைத்துப் பேசினார்கள் என்றால் என்னவெல்லாம் பேசுகின்றார்கள்?

இராமனைப் பற்றிப் பேசுபவர்கள் இராமனுக்கு.., “எல்லா உதவியும்” செய்தது.., யார் தெரியுமா…?

குகன்.

அந்த இடத்தில் வான்மீகி எழுதிய காவியத்திற்கு இவர்கள் கற்பனை கட்டுகின்றார்கள்.

ஒவ்வொரு ஞானியும் எத்தனையோ காவியங்களைப் படைத்துள்ளார்கள். அதை இன்று பட்டி மன்றம் வைத்து வாதித்து இவர்கள் ஒரு புத்தகத்தை எழுதுகின்றார்கள்.

இன்று இருப்பவர்கள்.., அதைப் படிப்பவர்கள் எல்லோரும் மண்டையைப் போட்டுப் பிய்த்துக் கொள் என்கிறார்கள்.

அதே மாதிரி கந்தப் புராணத்திலும் சரஹணபவா.., குகா.., இங்கேயும் குகனாகின்றது. கந்தா – வருவதை அறிந்து; கடம்பா – உருவாக்கத் தெரிந்து கொண்டவன் – இந்த ஆறாவது அறிவு முருகன்.

1.தெரிந்து கொள்ளும் உணர்வின் தன்மை எழுப்பும் பொழுது

2.குகன் அந்த நல்ல வழிக்குக் கொண்டு போகின்றான்.

இராமாயணத்திலும் குகனைப் பற்றிக் கொடுக்கின்றார்கள். இங்கே கந்த புராணத்திலும் அதே தத்துவத்தைக் கொடுக்கின்றார்கள்.

ஏனென்றால் ஒவ்வொரு காவியத் தொகுப்பிலும் குகன் முக்கியமானவனாக வருகின்றான்.

இராமயாணக் காவியத்தில் இராமன், குகனை நண்பனாக ஆக்கிக் கொண்டான் என்று உரைத்திருப்பார்கள். குகன் ஆற்றில் படகை ஓட்டி வாழ்க்கை நடத்தி வருபவன் என்றும் உரைத்திருப்பபார்கள்.

ஆக, நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை ஆறாகவும், நம் எண்ணங்களால் உருவாக்கிய உணர்வுகள் எதுவோ அவைகள் நமது இரத்த நாளங்களில் சுழன்று வருவதை உணர்த்துவதற்குத்தான் இராமயாணத்தில் இராமனின் நண்பன் குகன் என்று உரைத்தார்கள்.

1.நமது இரத்த நாளங்களில் நட்புள்ள உணர்வுகளாகச் சேர்த்து விட்டால்

2.நமக்குள் வெறுப்பை உண்டாக்கும் நோய்களை உண்டாக்கும் உணர்வுகளை

3.நாம் ஒவ்வொன்றாகச் சமப்படுத்திவிடலாம் என்பதை உணர்த்துவதற்குத்தான் இவ்வாறு காவியங்களைப் படைத்தார்கள்.

நாம் எண்ணும் எண்ணங்களில் பகைமை உணர்வைக் கலந்து அதன்வழி செல்லப்படும் பொழுது நமது உடலில் நல்ல அணுக்களை உருவாக்கியவைகளுக்குப் பகையாகி அவைகளுக்கு நல்ல உணர்வுகள் கிடைக்காவிடாமல் தடைப்படுத்துகின்றது.

தீய உணர்வின் அணுக்கள் நல்ல உணர்வின் அணுக்களை விழுங்க எண்ணும். ஏனென்றால் அவைகளுக்கு வரும் நல்லுணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது, நல்ல அணுக்கள் மடியும்.

இதனை உணர்த்துவதற்குத்தான் முதலில் குகன் என்ற நிலையை உருவாக்கினார்கள்.

இதில்  இராமன் குகனை நட்பாக்கினான் என்று அதாவது

1.நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கருவாக்கி உருவின் தன்மை பெறச் செய்து

2.உயர்ந்த துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நமக்குள் அணுக்களாக விளையச் செய்தால்

3.அது உடலில் பதிந்திருக்கும் பகைமையுணர்வுகளை நீக்கி மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு அழைத்து செல்லும்.

4.அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும் மகா ஞானிகளின் அருளுணர்வின் ஒளியலைகளை நமக்குள் பெருக்கும் பொழுது அது நம்மை அருள்வழியில் அழைத்துச் செல்லும்.

ஞானிகளால் உருவாக்கப்பட்ட நம்முடைய காவியங்கள் தெளிவானது. அதன் மூலங்களை நாம் அறிந்து கொண்டால் விண் செல்வது மிகவும் சுலபம்.

அகஸ்தியனின் ஆற்றல்கள் காலத்தால் மறைந்தே போய்விட்டது “அப்பொழுதே ஜீரணமாகிவிட்டான்.., வாதாபி” – விளக்கம்

Image

Agastiyar.JPG

அகஸ்தியனின் ஆற்றல்கள் காலத்தால் மறைந்தே போய்விட்டது “அப்பொழுதே ஜீரணமாகிவிட்டான்.., வாதாபி”  விளக்கம்

அகஸ்தியர் தன் தாயின் கருவிலிருக்கும் பொழுது பெற்ற ஆற்றலால் இந்தப் பிரபஞ்சத்தையும் அகண்ட அண்டத்தையும் அறியும் ஆற்றல் பெற்றார்.

27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் ஒளிக் கதிர்களை நுகரும் ஆற்றல் பெற்றார். நஞ்சை அடக்கி ஒளியின் அறிவாக மாற்றிடும் ஆற்றல் பெற்றார்.

27 நட்சத்திரங்களின் கதிரியக்க மின்னல்களைத் தமக்குள் அடக்கிடும் உணர்வின் தன்மை வரும் பொழுது எதையும் வென்றிடும் தன்மையை அகஸ்தியர் பெற்றார்.

அவர் எதையாவது உற்று நோக்கி உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால் அதனைக் கருக்கிவிடும்.

“வாதாபி” என்ற ஒருவன் அசுர குணம் கொண்ட ராட்சஸன், அவனுடைய சகோதரனும் ஒரு ராட்சஸன்.

இவர்கள் இருவரும் இருவரில் ஒருவர் ஆடாக உருமாறுவதும் பின் ஆடாக இருப்பவனை வெட்டி சமைத்து விருந்தாளிக்கு உணவாகப் பரிமாறுவார்கள்.

அவர்கள் உணவாக உட்கொண்டபின் “வாடா…. வாதாபி…“ என்றால் சாப்பிட்டவரின் குடலைப் பிளந்து வெளியே வந்து விருந்தாளியை அவர்கள் இருவரும் உட்கொள்வார்கள் என்ற நிலையில் காவியத் தொகுப்புகள் உண்டு.

அதனின் உட்பொருளை நாம் அறிந்தோமோ?

மலைவாழ் பகுதிகளுக்கு வந்து பேரருள் பெறவேண்டும் என்று எண்ணி வருபவர்களை இப்படி வேட்டையாடிக் கொன்று புசித்துள்ளார்கள்.

அகஸ்தியர் அப்பகுதிக்குச் செல்லப்படும்போது வழக்கமான அதே முறையில் அகஸ்தியரை ராட்சஸர்கள் வரவேற்றுள்ளார்கள்.

அகஸ்தியர் அவர்கள் அளித்த உணவை உட்கொண்டபின் “வாடா… வாதாபி….” என்று அழைக்கின்ன்றான்.

“அவன் அப்பொழுதே ஜீரணமாகிவிட்டான்…” என்று கூறுகின்றார்.

ராட்சஸனுக்கு ஆத்திரம் வருகின்றது. “உன்னைக் கொன்று புசிக்கப் போகிறேன்” என்றான். ஆனால் அகஸ்தியரின் வேகத் துடிப்பு அவரின் பார்வை ராட்சஸனைக் கருக்கிவிடுகின்றது.

ஆக இதுபோன்று அகஸ்தியரை அவர் கண்டறிந்த உண்மையின் நிலைகளையும் அவரின் ஆற்றல்களையும் காவியங்களில் ஓரிரு இடங்களில் மட்டும் காண்பித்திருபார்கள்.

இராமாயணத்திலும் மகாபாரத்திலும் அகஸ்தியர் போவார்.., வருவார்.., என்றளவில் மட்டுமே உரைத்திருப்பார்கள். “அகஸ்தியர் அனைத்திலும் வல்லவர்” என்று மட்டுமே கூறி நிறுத்திவிடுவார்கள்.

இதனால் அகஸ்தியர் கண்டுணர்ந்த பேருண்மைகளை நாம் அறிய முடியாமலே போய்விட்டது. இதனின் உண்மைகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்தல் வேண்டும்.

யாம் இவைகளை, உங்களுக்கு விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், குறைந்தது 10 வருடங்களாவது அமர்ந்து உங்களுக்கு உபதேசிக்க வேண்டும்.

நீங்களும் இது போன்று 10 வருடம் அமர்ந்து கேட்கவேண்டும். ஆனால் யாம் உங்களிடம் சுருங்கச் சொல்லி அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமான நிலைகளைச் சிறுகச் சிறுக உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.

27 நட்சத்திரத்தின் ஆற்றலையும் அகஸ்தியன் தனக்குள் சேர்த்து இன்று துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.

இந்த உணர்வின் தன்மையினை நீங்கள் உங்களிடத்தில் பதிவாக்கி மீண்டும் நினைவு கூறப்படும்போது உங்களில் பேரறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.

அகஸ்தியன் எப்படி நஞ்சை வென்றானோ அந்த ஆற்றலையும் நீங்கள் பெற முடியும்.

உதாரணமாக கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிலைகள் கொண்டு கம்ப்யூட்டர் பிற இயந்திரங்களை இயக்கவும் நிறுத்தவும் இயந்திரத்தில் பணிகளை மாற்றவுமான செயல்களை செய்விக்கின்றது. அதைப் போன்று

1.ஞானிகளின் அருள் உணர்வுகள் உங்களிடத்தில் பெருகும்போது,

2.ஒன்றை நாம் பார்க்கும்பொழுதே நன்மை தீமைகளை அறியச் செய்து,

3.தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வினை உருவாக்கும் தன்மை உங்களிடத்தில் விளைகின்றது.

Gnana is not for us only, it is for all

Image

Wisdom

Gnana is not for us only, it is for all

In this world which is in vapour, with the power of sound light and water several treasures like gold forms and other states are created.

In the same way the thoughts of the human souls mix and by the breath they take many states are happening.

All beings are from sound light and water in the form of vapour. When the water is mixed with milk or oil it does not show its state separately.

In the same way as water is mixed in all things God’s power is mixed in all. Even when our thoughts are mixed with all things we should get our Gnana being all in all.

Even after getting Gnana when one gets the state of the self the Gnana will not act. Gnana is not for us only.

Realizing that our Gnana is meant for making others get Gnana, the power of Gnana should be like water.

தியானம் செய்ய நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கு…

Life meditation.jpg

தியானம் செய்ய நேரம் இல்லை என்று சொல்பவர்களுக்கு… 

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் என்றுமே பெறவேண்டும் என்று எண்ணுங்கள். உங்கள் வாழ்க்கையே தியானமாக்குங்கள்.

ஏனென்றல், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலேயும் தீமை என்று வந்தால் அந்தத் தீமை புகாது தடுக்க அருளை உங்களுக்குள் பெருக்கிக் கொள்ள இது உதவும்.

அம்மா அப்பா அருளால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.

கண்ணின் நினைவு கொண்டு உங்கள் நினைவு முழுவதையும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். அதனின்று வரும் பேரருள் பேரொளியை ஏங்கிப் பெறுங்கள்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வைத்தான் உங்களுக்குள் ஏங்க வைத்து அதை நுகரச் செய்து அந்த வலிமையை ஊட்டிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த வலிமையின் துணை கொண்டு உங்கள் உடலிலுள்ள அணுக்களுக்கு இந்தச் சக்தியை ஊட்ட முடியும்.

உங்கள் கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள். துருவ நட்சத்திரம் எப்படி இருக்கும் அது எங்கே இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை.

உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவர் அமெரிக்காவில் எங்கேயோ இருக்கின்றார். அவர் இந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்படுகின்றார் என்று கேள்விப்பட்டவுடன் உங்களுக்குள் பதிவாகின்றது.

அது நினைவாகும் பொழுது என்ன செய்கின்றது? அவர் அங்கே “எப்படிச் சிரமப்படுகின்றாரோ..! என்ன செய்கின்றாரோ..?” என்று உங்களுக்குள் அந்த உணர்ச்சிகள் உங்களுகுள்ளும் இயங்குகின்றது.

இதைப் போல துருவ நட்சத்திரம் எங்கேயோ இருக்கின்றது. உங்கள் கண்களால் பார்க்க முடியவில்லை. குருநாதர் எனக்குக் காட்டினார். பார்த்தேன்.

அவர் காட்டிய நிலைகள் கொண்டு அதனின் ஆற்றலைப் பெற்றேன். அந்த உணர்வினை இப்பொழுது உங்களுக்குள்ளும் பதிவாக்கிக் கொண்டேயிருக்கின்றேன்.

பதிவானதை நீங்கள் எண்ணினீர்கள் என்றால் அடுத்து உங்கள் கண்களாலேயும் பார்க்க முடியும். இப்பொழுது உபதேசித்துக் கொண்டிருக்கும் பொழுது
1.அந்த அருள் ஒளிகள் இங்கே படர்ந்து வருவதையும் உங்களால் பார்க்க முடியும்
2.நீல நிற ஒளி அலைகள் சுழன்று வருவதைப் பார்க்கலாம்.
3.ஒரு வெல்டிங்கைத் (WELDING) தட்டினால் “பளீர்..,” என்று வெளிச்சமாவது போல் தெரியும்.
4.ஏனென்றால், பழக்கப்பட்டோர் உணர்வுகளில் இதைப் பெற முடியும்.

பேசுவது நான் அல்ல. மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் உணர்வே இங்கே பேசுகின்றது.

அவர் ஒளி என்ற உணர்வைப் பெற்றார். அது உங்களுக்குள் வந்து அதைப் பெறும் தகுதி பெறக் கூடிய சந்தர்ப்பம் தான் இப்பொழுது சொல்லும் இந்தத் தியானம்.

ஏனென்றால் அவர் ஒளியான உணர்வை நீங்களும் பெற முடியும் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை உங்களுக்குள் பதிவாக்குவது.

1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று உங்கள் கண்ணின் நினைவினைச் செலுத்துங்கள்
2.உங்கள் உடலிலுள்ள எல்லா நினைவுகளையும் ஒன்றாக இணைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்துங்கள்
3.அதனின்று வரும் பேரொளியைப் பெறவேண்டும் என்று ஏங்குங்கள்
4.மெதுவாகக் கண்களை மூடுங்கள்.
5.உங்கள் புருவ மத்தியில் வீற்றிருக்கும் உயிரான ஈசனிடம் நினைவினைச் செலுத்துங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நீங்கள் எண்ணத்தைச் செலுத்தும் பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு இங்கே வரும் பொழுது உங்கள் உடலுக்குள் இருக்கும் தீமையான அணுக்களுக்குத் தீமையின் உணர்வுகள் போகாதபடி இப்பொழுது எடுக்கும் தியானத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நினைவினைச் செலுத்துங்கள்.

இப்பொழுது
1.புருவ மத்தியில் இருக்கும் உயிரான ஈசனிடம் அந்த “ஈர்க்கும் சக்தி” பெருகும்
2.சிலருக்கு வெளிச்சமும் தெரியும்.
3.சிலருக்கு அந்தப் புருவ மத்தியில் “உறுத்தல்” இருக்கும்.

“இதுதான் துருவ நட்சத்திரத்தைத் தியானிக்க வேண்டிய முறை”

தினசரி காலையில் “படுக்கையில் எழுந்தவுடன்” ஒரு 10 நிமிடமும் இரவு “படுக்கும் முன்பு” ஒரு 10 நிமிடமும் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உடலுக்குள் உள்ள சஞ்சலம் சலிப்பு வெறுப்பு கோபம் போன்ற உணர்வுகளால் விஷத்தின் தன்மையால் ஏற்பட்ட விஷத்தின் தன்மையால் உருவாக்கப்பட்ட அணுக்களுக்கு ஆகாரம் போகாது இப்படித் தடுத்துப் பழகுதல் வேண்டும்.

உங்கள் உயிர் என்ற உணர்வுகளில் நமது குருநாதர் காட்டிய அருள் உணர்வுகளை (மேலே சொல்லப்பட்டவைகளை) இதை ஏற்றி வைத்துக் கொண்டு வெளியிலே செல்லுங்கள்

விபத்துக்களிலிருந்து தப்பலாம். தீமைகளிலிருந்து நோய்களிலிருந்து விடுபடலாம். எதிரி என்று இருந்தால் அவர் உணர்வுகள் நமக்குள் இயக்காது தடைப்படுத்திக் கொள்ளலாம். நமது உணர்வுகள் அவரை மாற்றவும் செய்யும்.

உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமையான சந்தர்ப்பமாக இருந்தாலும் அந்த நேரத்திலும் அதை மாற்றிட இதைப் போன்று தியானத்தைச் செய்யுங்கள்.

உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும். உங்கள் பேச்சும் மூச்சும் உலக மக்களைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக மாறும்.