துருவத்தின் வழியாக வரும்.. துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசிப்பதே… “துருவ தியானம்”

dhuruva-meditation

துருவத்தின் வழியாக வரும்.. துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் சுவாசிப்பதே… “துருவ தியானம்”

அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து அறிந்தனால் துருவ நட்சத்திரமானான். இன்று நம் பூமிக்கு வருவதனைத்தையும் அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒளிச்சுடராக மாற்றி ஒளியின் சுடராக உருவாக்கிக் கொண்டே உள்ளார்கள்.

துருவ நட்சத்திரம் தன் இனப் பெருக்கத்தை ஒளிச் சுடராக மாற்றி இன்றும் நமது பூமியில் பரவிக் கொண்டுள்ளது. அந்தத் துருவப் பகுதியில் இருந்து வரும் அந்தச் சக்தியை நாம் பருகும் நிலைக்குத்தான் இந்த உபதேசமே.

அவர்கள் இருவரும் நஞ்சினை வென்று இந்த உடலிலேயே ஒளி அதாவது ஒளியாக மாற்றும் உணர்வுகள் பெற்றார்கள்.

இந்த வாழ்க்கையில் நம்மையறியாது எத்தனையோ விஷத்தன்மைகளை நுகர நேர்கின்றது. அதனால் விஷ அணுக்கள் நம் உடலுக்குள் உருவாகின்றது.

உருவான அந்த விஷமான அணுக்கள் இந்த மனிதனின் உடலைக் கரையச் செய்யும் அல்லது மாற்றி அமைக்கும். இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் தப்ப அந்தத் துருவ நட்சத்திரதிலிருந்து வரும் உணர்வுகளை நாம் நுகர்தல் வேண்டும்.

எப்படி வராகன் தீமைகளை வென்றிடும் உணர்வு பெற்று மனிதனாக உருவாக்கியதோ இதைப் போல மனிதனான பின்
1.தீமையை வென்றிடும் அந்த உணர்வின் எண்ணம் கொண்டு
2.நாம் அந்தத் தீமையை வென்றிட்ட அருள் மகரிஷியின் உணர்வை நாம் நுகரவேண்டும்.

துருவ மகரிஷியின் ஆற்றலை நாம் பெற்று விட்டால் நமக்குள் அதை உருவாக்கி நம் உடலிலே வளர்த்துக் கொண்டபின் இந்த உடலை விட்டு நாம் செல்லும்போது இந்தப் புவியின் பிடிப்பை அகற்றி விட்டு விண் செல்ல முடியும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் சுழன்று கொண்டிருக்கும் ஏழாவது நிலைகள் கொண்ட சப்தரிஷி மண்டலத்துடன் சென்று நாம் ஐக்கியமாக முடியும்.

இன்று சூரியனின் காந்த சக்தி துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளைக் கவர்ந்து துருவப் பகுதியின் வழியாக நம் பூமிக்குள் பரவச்செய்து கொண்டிருக்கின்றது.

நமது குருநாதர் ஈஸ்வரபட்டர் எந்தத் தருணத்தில் எனக்குள் (ஞானகுரு) அதை உபதேசித்து அந்த உணர்வைக் கவரும்படி செய்தாரோ அதைப் போல் உங்களுக்கும் ஏற்படுத்துகின்றோம்.

துருவ மகரிஷி துருவ நட்சத்திரமானபின் அதிலிருந்து வெளிப்படும் உணர்வை சூரியன் காந்த சக்தி கவர்ந்த அலைகளாக மாற்றி நம் பூமிக்கு வந்து கொண்டிருக்கும் அந்த அதிகாலை நேரத்தில் அந்த அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் அந்த உணர்ச்சியைத் தூண்டச்செய்கின்றோம்.

1.”செவி வழி” இந்த உணர்வின் தன்மை உணர்ச்சிகளை ஊட்டி
2.உங்கள்  நினைவின் ஆற்றலைக் கவரும் “கண்களால்” ஈர்க்கச் செய்வதும்
3.இப்போது யாம் உபதேசிக்கும்போது உங்கள் நினைவுகள் உணர்வுகள் அனைத்தும் “துருவப் பகுதியில் துருவ நட்சத்திரத்தின் நினைவுடன்” உங்கள் எண்ணங்களைச் செலுத்தச் செய்வதும் இந்த உணர்வுகளைத் தூண்டச்செய்வதும்
4.அதை உங்கள் கண்களில் நினைவாக்கப்படும்போது கண்களின் கருவிழி அந்த நினைவின் ஆற்றலை உங்கள் உடலுக்குள் இருக்கும் “ஊனுக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பதிவாக்குகின்றது”
5.ஊனுக்குள் பதிவாகும் இதே உணர்வின் தன்மையை “விண்ணை நோக்கி” நீங்கள் ஏகும்போது
6.உங்கள் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன்கள் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து நம் பூமிக்கு வரும் துருவ மகரிஷியின் உணர்வுகளைக் கவர்ந்து உயிரின் தன்மை கொண்டு “உயிர் வழியாக” உங்களை சுவாசிக்கச் செய்து
7.”நஞ்சினை வென்றிடும்” உணர்வின் அணுக்களாக உங்களுக்குள் அது உருவாக்கச் செய்வதற்கே இந்தத் துருவ தியானம்.

 

ஏனென்றால் நமது குருநாதர் இத்தருணத்தில் தியானிக்கும்படி எமக்குள் எப்படி உருவாக்கினாரோ அதே போன்று உங்களுக்குள்ளும் இது உருவாக்கப்பட்டு அந்தச் சக்திகளை நீங்களும் பெறுவதற்குத்தான் இந்தத் “துருவ தியானத்தை” அமைத்திருக்கிறோம்.

மூன்றாவது வகுப்பு படித்த என்னால் ஞானத்தைப் பெற முடிகிறது… உங்களால் பெற முடியாதா…?

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டம்.jpg

மூன்றாவது வகுப்பு படித்த என்னால் ஞானத்தைப் பெற முடிகிறது… உங்களால் பெற முடியாதா…? 

தையல் வேலை பார்ப்பவர்களும் சில வகையான பின்னல் ஆடைகளை நெய்பவர்களும் இருக்கின்றார்கள்.

நம்மிடம் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் பழக்கப்படுத்தி வைத்திருப்பதால் அவர்கள் கைகள் தன்னாலேயே வேலை பார்த்துக் கொண்டிருக்கும்.

நேர்த்தியாகத் தைப்பார்கள், பின்னுவார்கள். அவர்கள் தைத்த ஆடைகள் சீராக இருக்கும். பின்னல் ஆடைகளும் நன்றாக இருக்கும்.

ஆனால் பழக்கமில்லாதவர்கள் பார்த்துப் பார்த்துத் தைத்தாலும் பின்னினாலும் நேராக வராது. கோணல் மாணலாகப் போய்க் கொண்டிருக்கும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியை நான் (ஞானகுரு) கடைப்பிடித்தேன். நான் படித்தது மூன்றாம் வகுப்புதான். அது கூட முழுமையாகப் படிக்கவில்லை.

குருநாதர் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எனக்குள் பதிவாக்கினார். அவர் சொன்ன முறைப்படி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எனக்குள் வளர்த்துக் கொண்டேன்.

எப்படிப்பட்ட தீமைகள் வந்தாலும் அதை மாற்றி அமைக்க முடிகின்றது. எளிதில் தீமைகளை அகற்றும் நிலைகளைப் பெற்றேன். ஆகவே

1.எனக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்வதும்

2.உங்களுக்குள் தீமைகள் புகாது தடுக்கும் சக்தியாக அந்த அருள் உணர்வுகளை ஊட்டுவதும் என்னால் முடிகின்றது.

நீங்களும் பழகிக் கொண்டால் நிச்சயம் உங்களால் முடியும்.

உங்கள் வாழ்க்கையில் பல தீமைகள் வந்தாலும் தீமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டாலும் அவர்களுக்கு உதவி செய்தாலும் அந்தத் தீமை என்ற உணர்வுகள் உங்களுக்குள் வளராது தடுக்கும் “உபாயத்தைத்தான்..,” கொடுக்கின்றோம்.

இதை நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் இந்த உணர்வின் தன்மை உங்களுக்குள் செயலாக்குகின்றது.

இன்று ஒரு கம்ப்யூட்டர் மூலம் ஒரு இயந்திர மனிதனை உருவாக்குகின்றார்கள். இயந்திர மனிதனை உருவாக்கியபின் அதை வைத்துப் பல வகையான வேலைகளைச் செய்ய வைக்கின்றார்கள்.

உதாரணமாக இங்கே குப்பைகள் விழுந்துவிட்டால் அதைக் கண்டபின்.., “எலெக்ட்ரானிக் ஆகி” உடனே அந்தக் குப்பையை உறிஞ்சி எடுத்துக் கொள்கின்றது.

குப்பை இல்லை என்றால் பேசாமல் போய்விடுகின்றது.

அதே சமயத்தில் “தனக்கு ஆகாதவன் வருகிறான்..,” என்றால் பணப் பெட்டியையோ மற்றதையோ திருடும் நோக்கத்துடன் வருகின்றான் என்றால் “அது எலெக்ட்ரானிக் ஆக மாற்றி” எதிரி வருகின்றான் இதை உடைக்கப் போகின்றான் என்று “அறிவிப்பு” கொடுக்கின்றது.

ஏனென்றால், மனிதனால் செய்யப்பட்ட இயந்திரம் எலெக்ட்ரானிக் மூலம் இத்தகையை உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது. இதை போன்று தான்

1.உங்கள் உயிர் “எலெக்ட்ரிக்”.

2.நுகரும் உணர்வுகள் “எலெக்ட்ரானிக்” (உணர்ச்சிகளாக மாற்றுகின்றது உயிர்)

இருளை நீக்கி ஒளியான உணர்வாக மாற்றிக் கொண்டவர்கள் மகரிஷிகள். அப்படிப்பட்ட உயர்ந்த அழுத்தத்தைக் கொண்ட மகரிஷிகளின் அருள் உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அப்பொழுது உங்கள் நினைவினைச் சிறிது கூட்டினால் (எலெக்ட்ரானிக் அழுத்தத்தைக் கூட்டி) மகரிஷிகளின் உணர்வின் அழுத்தம் பிறருடைய பகைமை உணர்வுகளை உங்களுக்குள் வராதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

அந்தச் சக்தி நீங்கள் பெறவேண்டும்.

உங்களை இயக்குவது உயிர் ஈசன். நுகர்ந்த உணர்வின் தன்மை உருவாக்குவது ஈசன்.

உருவாக்குவது ஈசன் என்று தெரிந்து கொண்ட பின் வேதனையான உணர்வுகள் உயிரிலே பட்டால் நாம் எதைச் சேர்த்தோமோ அதன் வழியில் தான் அழைத்துச் செல்லும்.

ஆனால், அந்தத் தீமைகளை நீக்க வேண்டும் என்று எண்ணினால் அதன் வழியில் நம்மை அழைத்துச் செல்லும்.

எனக்கு குருநாதர் இந்த உணர்வின் அழுத்தத்தை எப்படிக் கொடுத்தாரோ அதே போலத்தான் உங்களுக்கும் அந்த ஆற்றலைக் கொடுக்கின்றோம்.

குருநாதர் ஏகாந்த நிலைகள் கொண்டு இன்று சப்தரிஷி மண்டலத்தின் அங்கமாக வாழ்ந்து கொண்டுள்ளார். அவர் பெற்றதை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது அவர்கள் பெற்ற அனைத்தையும் நீங்கள் எளிதில் பெற முடியும்.

உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்தினால் “என்ன வாழ்க்கை…?” என்று வெறுப்படைய வேண்டியதில்லை

Image

Spiritual path.png

பயணத்தின் பாதையை அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்தினால் “என்ன வாழ்க்கை…?” என்று வெறுப்படைய வேண்டியதில்லை

 ஒரு வேலையின் நிமித்தமாக மருமகள் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வருகின்றது.

ஏம்மா…, இவ்வளவு நேரம் ஆகிவிட்டது..,? என்று அப்பொழுது மாமியார் கேட்டால் போதும்.

“மாமியார் இப்படிக் கேட்பார்கள்..,” என்று நினைத்தே மருமகள் வந்தது.

மாமியார் கேட்ட அந்த உணர்வைச் “சுவாசித்தவுடன்..,” இப்பொழுது நான் வருவதற்கு முன்னாடி.., “என்ன அவசரம் ஆகிவிட்டது..?” என்ற இந்த பதில் தான் மருமகளிடமிருந்து வருகின்றது.

அடுத்து, “இப்பொழுது நான் என்னத்தைக் கேட்டுவிட்டேன்.., என்று உனக்கு இந்த மாதிரிக் கோபம் வருகிறது?” மாமியார் கேட்கிறது.

ஆக, இந்த உணர்வு இப்படி வந்து விடுகின்றது? இதை மாற்றுவதற்கு என்ன வழி?

வெளியில் காரியம் முடிந்து வரும் போது சிறிது நேரம் ஆகிவிட்டால் திரும்பி வரும்போதே..,

1.“அத்தைக்கு நல்ல மனது வரவேண்டும்,

2.நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளும் நிலை வரவேண்டும் என்று இந்த உணர்வுகளை எடுத்துக் கொண்டு செல்லவேண்டும்.

3.வெளியில் வேலை முடித்துவிட்டு வருவதற்குச் சிறிது கால தாமதமாகிவிட்டது என்று மருமகள் பொறுமையுடன் சாந்த உணர்வுடன் சொல்லலாம்.

அப்பொழுது மருமகள் சொல்லும் பதில் இங்கே ரிமோட் ஆகாது.., “வெறுப்பு வராது”.

ஆக, எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற மோதல் வரும் பொழுதுதான் உணர்வின் தன்மை அறிய முடிகின்றது. நாம் எண்ணும் உணர்வு நமக்குள் வந்து ஆன்மாவாக மாறுகின்றது.

இதைப் போன்ற நிலையில் எதிர்த்து வரும் போது நமக்குத் தெரியாமலே இயக்குகின்றது.

1.நாம் ஏன் கோபிக்கின்றோம்?

2.எதற்காக வேண்டிக் கோபிக்கின்றோம்?

3.எதற்காக வேதனைப்படுகின்றோம்?

4.இதுவெல்லாம் நம்மை அறியாமலே இத்தனையும் நடக்கின்றது.

5.கடைசியில் பிடிக்கவில்லை என்றால் “என்ன வாழ்க்கை..?” வெறுக்கும் தன்மை வந்துவிடுகின்றது.

வெறுப்பாகிவிட்டால் என்ன சொல்வோம்?

அப்புறம் எதைச் சொன்னாலும் “என் வாழ்க்கையில்.., எனக்கு எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் ஆகிவிடுகின்றது…,” என்ற இந்த உணர்வை எடுத்து நாம் வெறுத்துக் கொள்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபடுதல் வேண்டும்.

ஏனென்றால் மனிதனாகத் தோன்றியவன் முழு முதல் கடவுள். சந்தர்ப்பத்தால் என்றைக்கு மிருக நிலையிலிருந்து மனித உடல் பெற்றோமோ நாம் முழு முதல் கடவுள்

“ஓ…ம்” என்ற பிரணவத்தை சிவனுக்கே ஓதினான் முருகன். வாழ்க்கையில் வரும் தீமை என்ற உணர்வை நீக்கி அந்த அருளைப் பெருக்கும் பொழுது இந்தப் பிரணவத்தை மாற்றி (தீமை உருவாகதபடி) இருளை நீக்கி உணர்வின் தன்மை அறிவாகின்றது கார்த்திகேயா.

ஆகவே, இந்த வாழ்க்கையில் வழியறிந்து செயல்படும் சக்தி பெற்றது ஆறாவது அறிவு.

கணவனும் மனைவியும் இணைந்த நிலையில் அருள் மகரிஷிகளின் உணர்வை எடுக்க வேண்டும். பெண்பால் இல்லை என்றால் ஆண்பாலுக்கு ஜீவன் இல்லை. அடுத்து வளராது.

கணவனும் மனைவியும் இதைப் போல அருள் மகரிஷிகளின் அருள் சக்திகளை எடுத்து பெண்பால் உணர்வுடன் ஒன்றி வாழ்ந்து நமக்குள் நன்மை பயக்கும் உணர்வை விளைய வைத்து “இந்த வாழ்க்கையின் பயணத்தை.., அழியா ஒளிச் சரீரம் நோக்கிச் செலுத்துங்கள்”.

என் வினை என்னைப் பிடித்து ஆட்டுகின்றது… என்று சொல்கிறோம் அது எந்த வினை…?

sternum.jpg

என் வினை என்னைப் பிடித்து ஆட்டுகின்றது… என்று சொல்கிறோம் அது எந்த வினை…?

நம் உடலில் வரும் நோய்களை விஞ்ஞான அறிவுப்படி சில மருந்துகளைக் கொடுத்துத் தடுத்து நிறுத்துகின்றோம். ஆனால், நோய் உருவாவதற்குக் காரணமான நிலைகளை முழுமையாக மாற்ற முடியவில்லை.

காரணம் என்ன…?

நாம் உற்றுப் பார்க்கும் உணர்வுகளைக் கண்ணில் உள்ள கருவிழி “ஊழ்வினை” என்ற வித்தாக நம் விலா எலும்புகளில் பதிவாக்கிவிடுகின்றது.

ஊழ்வினை என்றால் இயக்கம்.

உதாரணமாக நமக்கு வேண்டியவர் ஒருவர் வேதனைப்படுகிறார் என்றால் அவரை உற்றுப் பார்க்கின்றோம். அப்பொழுது நாம் நுகர்ந்த உணர்வுகள் கருவிழியால் பதிவாக்கப்பட்டு ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகி விடுகின்றது.

அப்பொழுது அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றோம். அதன் உணர்வுப்படி இயக்கி அவருக்கு உதவியும் செய்கின்றோம்.

ஆனால் அவர் உடலில் விளைந்த வித்தை நமக்குள் பதிவாக்கிய பின் அது என்ன செய்யும்?

அது வலிமையான வித்தாக இருக்கும் பொழுது அவர்கள் பட்ட வேதனையைக் கவர்ந்து அவர்கள் உடலில் நோய்கள் உருவாக்கியது போல நம் உடலிலும் வேதனையை உருவாக்கும் அணுக்கள் பெருகிவிடுகின்றது.

அத்தகையை அணுக்கள் பெருகியபின் நமக்கும் உடல் நலக் குறைவாகின்றது. அப்பொழுது மருந்து கொடுத்து நோயைத் தடுத்துக் கொள்கின்றோம்.

இருந்தாலும் கருவிழியால் கவரப்பட்டு விலா எலும்புகளில் பதிவான ஊழ்வினை என்ற வித்தை அழிக்க முடியாது. நம் உடலில் மானிட்டர் போன்று குருத்தெலும்பு இருக்கின்றது.

நாம் வேதனைப்பட்ட உணர்வை விலா எலும்புகளில் பதிவாக்கும் பொழுது அது இழுக்கும். அப்பொழுது அந்த நேரத்தில் பார்த்தோம் என்றால் “பட…பட…பட…பட..,” என்று துடிக்கும்.

1.ஒரு அதிகமான சந்தோஷம் ஆனாலும் படபடப்பு வரும்.
2.பயமானாலும் அந்த உணர்ச்சிகள் வரும்.
3.எதை ஆசைப்படுகின்றோமோ அது கிடைக்கும் என்று இருந்தால் அந்தப் படபடப்பு வரும்.

இன்றைக்கு தரித்திரமாக இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். “ஒரு இலட்ச ரூபாய்” பரிசு விழுந்தது.., என்று கேள்விப்பட்டால் உங்கள் இருதயத் துடிப்பைப் பார்க்கலாம்.

அந்த ஆசையில் வேகமாக வருகின்றது. அப்பொழுது உங்கள் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுவெல்லாம் அந்தந்த நிகழ்ச்சிகளைச் சொன்ன உணர்வைப் பதிவாக்கியபின் அதன் உணர்வைக் கவர்ந்தாலும் உயிருக்குள் பட்டவுடன் சிலருக்கு மயக்கமே வந்துவிடும்.

“இல்லாதவர்களுக்குத் திடீரென்று…, பணம் கிடைக்கின்றது” என்று வந்தபின் அதைத் தாங்கும் இயல்பற்று அந்த இருதயங்களுடைய “நரம்பு மண்டலங்கள்.., சிதைந்து விடுகின்றது”. அல்லது
1.அந்த உணர்ச்சிவசப்பட்டு வேகத் துடிப்பாக எடுக்கும் பொழுது
2.இருதயத்தை இயக்கும் சிறு மூளை பாகங்கள் இதனுடைய அழுத்தம் அதிகமான பின்
3.கடத்திச் செல்லும் நரம்பு மண்டலம் ஒரு சைக்கிள் ட்யூபில் கொஞ்சம் பலவீனமானால் ஒரு பலூன் மாதிரி உப்பி எப்படி வெடித்துவிடுகின்றதோ
4.இதைப் போல் சிறு மூளையில் உள்ள நரம்பு மண்டலங்களில் அது வெடித்துவிடும்.
5.பிறகு வைத்தியமே இல்லை. மரணம் தான்.

இதை போன்று ஆசையின் அளவுகள் பெறும் பொழுதும்.., நமக்குள் வேதனை என்ற உணர்வு வரும் பொழுதும் இந்த மாதிரி ஆகிவிடுகின்றது.

இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் யாரும் தவறு செய்யவில்லை.

பண்பும் பரிவும் ஈகையும் கொண்டு பிறருடைய துயரங்களை நாம் கேட்டுணர்ந்து அவர்களுக்கு நாம் உதவி செய்தாலும்1.அவர்களுடைய வலிமையான உணர்வுகள் நம் உடலுக்குள் ஊடுருவி2.நம் நல்ல குணங்களைச் செயலற்றதாக மாற்றிக் கொண்டேயுள்ளது.

நீங்கள் எத்தகையை வைத்தியத்தைச் செய்து உடல் நோயை மாற்றினாலும் பின் இதன் நிலைகளில் நாம் ஊழ்வினை என்ற வித்தை அந்த ஆணிவேரை நாம் மாற்ற முடியாது.

ஊழ்வினை என்ற அந்த வித்தை மாற்றுவதற்குத்தான் உங்களுக்குள் மீண்டும் மீண்டும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஆழமாகப் பதிவாக்கிக் கொண்டுள்ளோம்.

துருவ நட்சத்திரத்தை எண்ணி ஏங்கி அதிலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று திரும்பத் திரும்ப நீங்கள் எண்ணினால் உங்கள் விலா எலும்புகளுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதிவாகின்றது.

அதனின் வலிமையை நாம் கூட்டிக் கொண்டே வந்தால் அந்த வலிமையால் நமக்குள் முந்திய நிலைகள் இருப்பினும் இப்பொழுது சேர்க்கும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதை மாற்றி அமைக்கும் சக்தியாக அதற்கு அருகிலேயே (ஏற்கனவே பதிவான வித்திற்கு) உருவாகும்.

1.துருவ நட்சத்திரத்தின் கணக்குகள் கூடக் கூட ஏற்கனவே உள்ள தீமையின் நிலைகள் சிறுத்துவிடுகின்றது.
2.தீமைகளின் வலிமையைக் குறைத்து நன்மை செய்யும் கணக்காக மாற்றிக் கொள்கின்றோம்.
3.அதாவது தீமை செய்யும் வித்துக்களை நன்மை செய்யக்கூடிய வித்துக்களாக மாற்றுகின்றோம்.

உதாரணமாக குழம்பு வைக்கின்றோம் என்றால் மிளகாய் தனித்துக் காரமாக இருக்கின்றது, அதைப் போன்ற மற்ற பொருள்களும் அதனதன் சுவைகளைக் கொடுக்கின்றது. நாம் தெரிந்து கொள்கின்றோம்.

எல்லாவற்றையும் சமப்படுத்தி அதன் உணர்வுகளைச் சுவையாக மாற்றிக் கொள்கின்றோம்.

வேதனைப்படுகின்றான் கோபப்படுகின்றான் கொதிப்படைகின்றான் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான் ஏமாற்றுகின்றான் என்ற உணர்வுகளை எடுத்துக் கொண்டால் நமக்குள் பதிவாகி அதனின் உணர்வின் இயக்கமாக நம்மை மாற்றுகின்றது.

அதை எல்லாம் நாம் மாற்ற வேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைக் கலந்து அவைகளை மாற்ற முடியும். அதைச் சுவையாக மாற்றிக் கொள்ள முடியும்.

உங்களால் முடியும், உங்களை நீங்கள் நம்புங்கள்.

குறை குறை என்று குறைகளையே பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆவோம்? நாம் அடைய வேண்டிய எல்லை எது?

Image

Big dipper - Ursa major.jpg

குறை குறை என்று குறைகளையே பேசிக் கொண்டிருந்தால் என்ன ஆவோம்? நாம் அடைய வேண்டிய எல்லை எது?

  1. குறைகள் நம் வாழ்க்கையில் எப்படியெல்லாம் வருகின்றது?

இந்த வாழ்க்கையில் நாம் என்னதான் வைத்திருந்தாலும் குறைகள் வருகின்றது.  இந்தக் குறைகளை நீக்க “மனம் பலம்” தேவை.

நமக்குள் இன்னொரு சக்தி ஆட்டிப்படைக்கிறது. அதற்குச் சாப்பாடு தேவை. அது நம்மை இயக்குகின்றது.

நீங்கள் வேப்ப மரத்தில் விளைந்த வித்தை நிலத்தில் ஊன்றினால், அதுதான் அதற்குத் தேவை. ரோஜாப்பூவைக் கொண்டு கொடுத்தால் அது சாப்பிடுமா என்றால் இல்லை. அதற்கு எதிரி.

அதே மாதிரி செடி கொடிகள் ஈர்ப்பில் உள்ளது போல் அதே குணத்தின் தன்மை கொண்டோர் அதை ஏற்றுக்கொள்ளாது இப்படி நம் வாழ்க்கையில் இதேபோல் நிலை உருவாக்கி நம்மை உருமாற்றிக் கொண்டே இருக்கிறது.

மனிதன் ஆனபின் நமது எல்லை எது? இதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறோம்.

1.நாம் நன்றாக உள்ளோம் என்று எண்ணிக் கொண்டு

2.பிறரைப் பற்றிக் குறை கூறுபவர்களெல்லாம் அந்தக் குறையைச் சேர்த்து எடுத்துக் கொண்டபின்

3.அவர்கள் செத்தார்கள் என்றால் “இவர்கள் உடலுக்குள்தான் வருவார்கள்” என்று தெரியாமலேயே இருக்கிறார்கள்.

4.இவர்கள் உடலில் எந்த எந்தக் குறையைப் பேசுகின்றார்களோ அந்தக் குறையை வளர்க்கும்.

5.இவர்களுக்குள்ளும் மீண்டும் அந்தக் கஷ்டத்தைதான் உருவாக்கும்

எங்கு போனாலும் தப்ப முடியாது. உயிரின் வேலை அதுதான். கீதையில் “நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகிறாய்” என்று தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

  1. குறை பேசுபவர்களின் நிலை என்ன?

ஏற்கனவே பதிவு செய்த நிலைகளை எடுத்துக் குறைகளை வளர்க்கத் தெரிகிறது. குறைகளைத் துடைக்கத் தெரியவில்லை.

குறைகளைத் துடைக்கத் தெரியவேண்டும். துடைப்பதற்குத்தான் ஆத்மசுத்தி என்ற ஆயுத்தைக் கொடுத்திருக்கிறேன். அதை நாம் பயன்படுத்துகிறோமா? பயன்படுத்த வேண்டும்.

இந்த உணர்வுகள் நம்மை இயக்குகிறது. அதற்காகத்தான் யாம் ஒவ்வொரு நிமிடத்திலேயும் சொல்லி வருகின்றோம்.

சாமி சொல்கிறார்…, அவருக்கென்ன…? குருநாதர் அவருக்குச் சக்தி கொடுத்திருக்கிறார். அதனால் அவரது நிலைகள் சரியாக இருக்கிறது என்று இப்படி எண்ணுகிறார்கள்.

ஆனால், பெண்கள் மத்தியில் கொஞ்சம் குறைகள் வந்தால் “அதைத் தாங்காது” குறைகளை எண்ணி குறைகளை அடுத்தாற்போல் வளர்ப்பார்கள். அவர்கள் அதிகமாக வளர்ப்பார்கள்.

மீண்டும் என்ன செய்வார்கள்? அலுங்காமல் அடுத்தவரிடம் குறையைப் பேசுவார்கள். இதை அடுத்தவர்கள் கேட்டார்கள் என்றால் இந்தக் குறைகள் அப்படியே “விஷம்” போல வரும்.

கொஞ்சம் பாலில் பாதாமைப் போட்டு அதிலே எல்லாம் போட்டு, கடைசியில் விஷத்தைக் கொஞ்சம் ஊற்றி விட்டோம் என்றால் எல்லாவற்றிலும் இந்த விஷம் கலந்துவிடும்.

பாதாமின் சக்தியை நீங்கள் பார்க்க முடியாது. ஏனென்றால் அந்த அளவில் பக்தியில் வந்துள்ளோம்.

ஆடாகவும் மாடாகவும் இருக்கும்போது தன்னை விட வலு உள்ளதை எண்ணும்போது நரியைப் பார்த்தால் அதனிடமிருந்து தப்பிக்க எண்ணி நரியாகப் பிறக்கிறது. புலியைப் பார்க்கும்போது புலியாகப் பிறக்கிறது.

அதைக்காட்டிலும் மோசமான பாம்பு கடித்து விட்டது என்றால் ஆடாக இருப்பது அந்தப் பாம்பை நினைத்து அந்த விஷத்தை நினைத்துப் பாம்பாகப் போகின்றது.

இப்படி உணர்வுகள் எதன் தன்மையாகிறதோ ஆடு நரியாகவும் போகிறது, புலியாகவும் போகிறது. பாம்பாகவும் போகிறது. கடைசியில் தரையில் ஊர்ந்தும் போகிறது. அதைக் காப்பாற்றிக் கொள்கிறது.

சந்தர்ப்பத்தால் இவையெல்லாம் உருவாகி வருகிறது.

ஆகவே, இன்று நாம் மனிதனாக இருக்கிறோம் என்றால் நமது அடுத்த எல்லை எது?

  1. அகஸ்தியனைப் போன்று பிறரை உயர்த்திடும் எண்ணம் வேண்டும்

அகத்தியனைப் பற்றி ஏற்கனவே பல தடவை சொல்லி இருக்கிறேன்.

1.இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை எல்லாம் வென்றான்.

2.நம் பூமி நுகரும் பாதையை எண்ணினான்.

3.அது இங்கு தாவர இனங்களாக மாற்றுகிறது என்று அறிந்து கொண்டான்.

4.தாவர இனத்தை உயிரினங்கள் சாப்பிடுகிறது என்று தெரிந்தான்.

5.தமக்கு எது வேண்டும் என்று கணவன் – மனைவி ஒன்றாகச் சேர்ந்தார்கள். அகஸ்தியன் தான் பெற்ற சக்தி மனைவியும் பெறவேண்டும் என்று எண்ணினான்.

அகஸ்தியன் துருவன் ஆனான். அவன் துருவ வழியில் கண்ட நிலைகளைத் தன் மனைவிக்குச் சொன்னான். இந்த உணர்வு அங்கு வளர்ந்தது. அந்த உணர்வின் சக்தி அவர்களிடம் பெற்றது. அது வளர்ந்து கொண்டே வந்தது.

அகஸ்தியனின் மனைவி என்ன செய்கிறது…? தன் கணவர் உயர்ந்த சக்தி பெறவேண்டும். தானும் அவர் பெற்ற உயர்ந்த சக்திகளைப் பெறவேண்டும் என்று எண்ணுகின்றது மனைவி.

மனைவி உயர்ந்த நிலை பெறவேண்டும் அது என் வழியில் இருக்க வேண்டும் என்று அகஸ்தியன் எண்ணுகின்றான்.

இதுவெல்லாம் இரண்டு பேரும் சேர்த்துத் தன் பார்வையில் பிள்ளைகள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும். நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்.

“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்” என்று அந்த உணர்வின் எண்ணங்களைக் கொண்டு வந்தார்கள்.

அந்த நல்ல எண்ணம் கொண்டு எந்தத் துருவத்தை உற்றுப் பார்த்து நுகர்ந்தார்களோ அங்கே போய் “துருவ நட்சத்திரமாகி” என்றும் பதினாறு என்று ஏகாந்தமாக பேரானந்தப் பெருநிலை பெற்று மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அகஸ்தியனைப் பின்பற்றியவர்கள் அனைவரும் கணவன் மனைவி ஒன்றாகி “ரிஷிபத்தினி” என்ற நிலைகளில் சப்தரிஷி மண்டலங்களாக துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அழியாத நிலைகள் கொண்டு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

ஆக, நாம் அனைவரும் அவர்கள் வழியில் சென்று பிறவியில்லா நிலையை அடைவோம். மற்றவர்களையும் பெறச் செய்வோம்.

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம் – பிறந்த பலனை அடையும் வழி

Image

Divine light.jpg

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம் – பிறந்த பலனை அடையும் வழி

மனிதனாகப் பிறப்பது மிகவும் அபூர்வம். இந்த நிலைகளிலே நாம் பெற வேண்டியது ஒளிச் சரீரம்.

மனிதனுடைய ஆசைக்குள்.., நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்குள் “சிக்கிவிட்டால்”, அது நம்மை படுபாதாளத்திற்கே இட்டுச் செறுவிடும்.

இன்று நாம் மகிழ்ச்சியாக இருப்போம். நாம் சுவையான லட்டுகளையும் மற்ற பதார்த்தங்களையும் விரும்பிச் சாப்பிடுவோம்.  சாப்பிடும் பொழுது ஆனந்தப்படுவோம்.

ஆனால், உடல் ஏற்றுக் கொள்ளாத நிலைகள் வரப்படும் பொழுது “வயிற்றை வலிக்கிறது..,” என்கிற நிலை பின்னர்தான் தெரியும்.

இன்று உங்களை நான் ஏமாற்றலாம்.

ஆனால், எனக்குள் இருக்கின்ற ஈசனான உயிர் நான் எதை எடுக்கின்றேனோ.., எதைச் சுவாசிக்கின்றேனோ.., அந்த உயிரான ஈசனிடம்தான் அது படுகின்றது. “அதை மாற்ற முடியாது”.

அந்த உணர்ச்சி உடலுக்குள் இயங்குகின்றது. இந்த உணர்வின் சத்து என் உடலுக்குள் அமுதாகச் சுரக்கச் செய்கின்றது.

நான் எடுத்துக் கொண்ட உணர்வின் சத்து என் உடலிலிருந்து அகலாது. “நான் எடுத்துக் கொண்ட நிலைகள்” எனக்குள் அணுவாக திசுவாக உடலாக மாறும்.

ஒருவரை.., “இன்று நான் அவரை என்ன செய்கிறேன்..? பார்…! என்று எண்ணினால் இந்த உணர்வின் தன்மை “அதிவேகமான உணர்வுகளை எடுத்து.., அவனை நான் உதைக்க வேண்டும்..,” என்று சொல்லும்.

1.அதே உணர்வுகள் எனக்குள் சுவாசித்தவுடனே,

2.”எதை ஒழிக்க வேண்டும்..,” என்று சொன்னேனோ

3.அதே உணர்வுகள் எனக்குள் வந்து நோயை உண்டாக்கும்.

இந்த உயிர் இல்லை என்றால் இந்த உடல் ஒன்றும் செய்யாது. அந்த ஈசன் வெளியிலே சென்றுவிட்டால்.., “உடல் நீசமாகும்”.

ஆக, ஈசன் உள் நின்றிருக்கும் பொழுது “எடுக்கும் (சுவாசிக்கும்) உணர்வின் மணமே

1.நம் உடலின் எண்ணம்

2.நம் உடலின் செயல்

3.நம் உடலின் மணம்

4.அந்த மணத்திற்குள் மறைந்த உணர்வே உடலின் அமைப்பு – “அடுத்த பிறவி”.

இது இயற்கையின் நியதி. நாம் இவைகளிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால்.., ஒரே வழி தான்.

1.நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசனின் துணை கொண்டு

2.மெய்ஞானியின் அருள் ஒளியினுடைய தன்மைகளைச் சரியான நிலைகளிலே யாம் சொல்லும் முறைப்படி இந்தத் தியானங்களை எடுத்து

3.ஆத்ம சுத்தியும் பயிற்சியும் செய்து தீமைகளைத் துடைத்துப் பழக வேண்டும்.

இதைப் போன்று இந்த உணர்வின் ஆற்றலின் தன்மையை நாம் ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்து நமது குருநாதர் காட்டிய அருள் வழியினுடைய நிலைகளில் செயல்பட வேண்டும். வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் தொடர்ந்து அருள் உணர்வுகளை நமக்குள் சேர்க்கச் சேர்க்க நம் உயிரான்மாவில் “மகரிஷிகளின் அருள் மணங்கள் பெருகி” அந்த மணத்திற்கொப்ப மகரிஷிகள் வாழும் எல்லையை அடைய முடியும்.

மனிதன் முழுமை அடையும் வழி இதுதான். மனிதன் அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம் தான்.

பல கோடிச் சரீரங்களிலிருந்து நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரான ஈசனுக்குச் செய்யும் சேவை இது தான்.

Live as Light

Image

Inner self

Today we see the external appearance and do not probe into the inside. Man has grown all his desires. In the same way we decorate our bodies and houses etc..,

We have to decorate our inner self with love and get Gnana. Appreciate the beauty of the soul as you do the body and get absorbed in Gnana.

We should know the will power that lies in us. Every soul should become righteous. Once a person realizes his state he can get the Divine light from any Sages he meditates upon.

Live as Light, the light of Gnana, the Divine Light

Let all of you get the grace of Nature which is in all in all.

இரசமணி சித்தர் – ஈஸ்வரபட்டர்

Image

Eswaraya gurudevar.JPG

இரசமணி சித்தர் – ஈஸ்வரபட்டர்

தான் பெற்ற மெய் உணர்வுகளை மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பல பேரிடம் எடுத்துரைத்தார். ஆனால் அவர்கள் எல்லாம் என்ன செய்து விட்டார்கள்?

எனக்குக் காசைக் கொடுத்தால் கோவிலைக் கட்டி நான் எத்தனையோ செய்துவிடுவேன் என்று சொல்கிறார்கள்.

குருநாதர் பல சக்திகளைக் காட்டினார்.., நோய்களைப் போக்கும் பல மூலிகைகளைக் காட்டினார் என்றால் அதை வைத்துச் சொத்தைச் சம்பாரிக்க வேண்டும் என்ற நிலைக்குத்தான் வந்தார்களே தவிர அழியாத சொத்தை அந்த அருள் ஞானப் பொக்கிஷத்தை வாங்க யாரும் வரவில்லை.

சிலருக்குப் பாதரசத்தைச் (இரசமணி) செய்து கொடுத்தார். அதில் என்னவெல்லாம் தெரிகிறது பார்..,! என்று காண்பிப்பார். மேலும் அதில் என்னென்ன தெய்வங்கள் எல்லாம் தெரிகின்றது என்றும் காண்பிப்பார்.

பாதரசத்தால் கவர்ந்து கொண்ட உணர்வுகள் எந்தெந்த உணர்வுகளைச் சேர்த்துக் கொள்கின்றதோ.., அந்த உணர்வின் “ரூபங்கள்” வரும்.

எல்லாம் சேர்த்துச் சூரியனிலிருந்து வரக்கூடிய அந்தப் பாதரசமே எதைக் கவர்ந்து கொண்டதோ அதன் வழிகளில் எப்படி இயங்குகின்றது? என்பதனை எமக்குத் தெளிவாக்குகின்றார்.

ஏனென்றால், இன்று நாம் வெயில் என்று பார்க்கின்றோமே இது சூரியனிலிருந்து வெளி வரும் பாதரசம் தான். சுக்குநூறாகத் தெறித்து ஒளி அலைகளாகத் தெரிகின்றது. இதைச் சூரியனின் வெப்ப காந்த அலைகள் என்பார்கள்.

குருநாதர் செய்து கொடுத்த (இரசமணி) பாதரசத்தில் இந்தச் சாமி தெரிகின்றது அந்தச் சாமி தெரிகின்றது என்று சொல்வார்கள். “காளிதேவி தெரிகின்றது.., மாரியம்மன் தெரிகின்றது..,” இப்படி இவர்கள் எண்ணம் எதுவோ அங்கே அதைப் பிரதிபலிக்கும்.

1.பாதரசத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் எதுவோ

2.அந்த உணர்வின் இயக்கமாக நமக்குள் “தெய்வமாக” எப்படி இருக்கின்றது?

3.ஆகவே, நம் உயிரை எப்படி மணியாக்க வேண்டும்?

உயிர் ஒளியைப் போன்று ஆனது. இருளை நீக்கி எல்லாம் ஒன்றாகச் சேர்த்துப் பிறவியில்லா நிலை அடையும் மார்க்கத்தைத்தான் குருநாதர் அந்தப் பாதரசத்தை வைத்து இரசமணியாகக் காட்டினார்.

குருநாதர் பைத்தியக்காரர் போல் இருக்கும் பொழுது அவருடன் பழகியவர்கள் எல்லாம் தங்கம் செய்யும் நிலைகளைப் பாதரசத்தை வைத்துச் சொல்லிக் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு இதைப் பாருங்கள் அதைப் பாருங்கள் என்றெல்லாம் உடல் ஆசை கொண்டு (இன்றும்) சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால் இரசமணியில் பல சத்துக்களைச் சேர்த்துச் சேர்த்து தங்கத்தைச் செய்துவிட்டால் சிரமமில்லாமல் வாழலாம் அல்லவா. இப்படிப்பட்ட ஆசைகள் வந்துவிடுகின்றது.

நம் வாழ்க்கையில் ஒருவர் ஒன்று சொல்லிவிட்டால் அதைக் கேட்டவுடன் நம் மனது மங்கிவிடுகின்றது. அந்த மனதை மங்காமல் இருக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்?

அதற்காக வேண்டித்தான்.., குருநாதர் “மனதைத் தங்கமாக்கும்..,” நிலைகளைச் சொன்னார். எனக்குக் குருநாதர் கொடுத்தது

1.உணர்வை எல்லாம் ஒளியாக்கி

2.ஒளியின் தன்மையாக

3.இந்த இரசமணியாக்க வேண்டும்

4.உணர்வுகள் அனைத்தையும் உயிருடன் ஒன்றச் செய்து உங்கள் உயிரை ஒளியாக ஆக்குவது தான் இரசமணி.

அதே சமயத்தில் அழுக்குச் சேராமல் இருப்பது தங்கம். தங்கத்தைப் போல் உன் மனதை எப்படிப் பெறவேண்டும் என்று காட்டுக்குள்ளும் மேட்டுக்குள்ளும் அழைத்துச் சென்று ஆசைகளை ஊட்டிப் பல நிலைகளையும் பேருண்மைகளையும் உணர்த்தினார்.

அவர் உணர்த்திய அருள் ஞான உணர்வுகளைத்தான் உங்களுக்குள் சிறுகச் சிறுகச் வெளிப்படுத்துகின்றோம்.

சாப அலைகள்… பழி தீர்க்கும் உணர்வுகள் வந்து குடும்பங்கள் எப்படி நசுங்குகிறது…? – நடந்த நிகழ்ச்சி

Curse.jpg

சாப அலைகள்… பழி தீர்க்கும் உணர்வுகள் வந்து குடும்பங்கள் எப்படி நசுங்குகிறது…? – நடந்த நிகழ்ச்சி

குருநாதர் இந்த உலகில் மூன்று இலட்சம் பேரைச் சந்திக்கச் செய்து எமக்கு (ஞானகுரு) நேரடியாகப் பல உண்மைகளைக் காட்டுகின்றார்.

ஒவ்வொரு மனிதனும் தவறு செய்யாமலேயே அவரவர் சந்தர்ப்பம் வாழ்க்கையில் வந்த நிலைகள் எவ்வாறு ஊடுருவி அந்தக் குடும்பங்களில் சேர்கின்றது?

ஒற்றுமையாக வாழ்ந்த நிலைகள் எனக்குப் பங்கு குறை, உனக்குப் பங்கு குறை என்று வரும் பொழுது “சாப அலைகள்” எப்படி வருகின்றது?

தொழில் செய்யும் பொழுது பாசததால் தவறு செய்துவிட்டால் அந்தத் தவறால் “பழி தீர்க்கும் உணர்வுகள்” எப்படி வருகின்றது?

வந்தபின் அந்த உணர்வுகள் அவர்களுக்குள் விளைந்து அதனால் அந்தக் குடும்பங்கள் எப்படி நசுங்குகின்றது?

அதே சமயத்தில் தன் உணர்வால் அன்னை த்ந்தை சம்பாதித்து வைத்திருந்தாலும், கடைசியில் சொத்து வரவேண்டும் என்று அண்ணன் தம்பிக்குள் சண்டை போட்டு தாய் தந்தையை அனாதையாக விட்டுவிட்டு அவருடைய சாபங்கள் என்னென்ன வேலை செய்கிறது?

இதையெல்லாம் மூன்று இலட்சம் பேரின் உணர்வுகளைக் காட்டுகின்றார். அப்படி உலகம் முழுவதற்கும் எமக்குள் காட்டிய நிலைகளைத்தான் அனைத்தையுமே உங்களிடம் வெளிப்படுத்துகின்றேன்.

அதில் முதல் மனிதனாகக் காட்டியது என்னுடைய உறவினர் ஒருவர். அவர் ஒரு தரகர். ரேஷன் கடை காண்ட்ராக்ட் எடுத்து நல்ல முறையில் நடத்தினார்.

பழனியில் இருந்தவர்களுக்கெல்லாம் அவரைப் பற்றித் தெரியும்.

பழனி முருகனுக்கு அபிஷேகம் செய்வது விழாக் காலங்களில் மார்கழி போன்ற மாதங்களில் 1000, 2000 பேர்களுக்குச் சாப்பாடு போட்டு ஏராளமான தர்மங்களைச் செய்தவர்.

ஒரு முறை பழனி மலை மேலே ஏறும் பொழுது, அங்கே விநாயகர் கோவிலுக்கு அருகில் போனவுடன்.., அப்படியே “கை கால் வராமல்” கீழே விழுந்துவிட்டார்.

ஆக, கை கால் வேலை செய்யவில்லை, வாயும் பேச வரவில்லை.

இவர்கள் எல்லாம் கூட்டத்தோடு போனதால் மேலே போகாமல் இவரைத் தூக்கிக்கொண்டு கீழே வந்து டாக்டரிடம் கொண்டு செல்கிறார்கள்.

பார்த்தால் “பிரஷர் அதிகமாகிவிட்டது..,” என்று சொல்கிறார்கள். பல டாக்டர்களிடம் பார்க்கிறார்கள். ஒரு மாதம் ஆகிவிட்டது. பின் இரண்டு மாதம் ஆகிவிட்டது. “சரியாகவில்லை”.

அவர் மலைக்குப் போன நிலையும் வந்த நிலையும் குருநாதர் நடந்த இந்த நிலைகளை எம்மிடம் காட்டுகின்றார். இதைக் காட்டிவிட்டு “அவரைப் போய்ப் பார்..,” என்றார்.

அங்கே சென்றால்.., “எதற்காக வந்திருக்கிறீர்கள்…?” என்று உள்ளே விடவில்லை.

இந்த மாதிரி நல்லையா மருமகன் வந்திருக்கின்றேன்.., “அவரைப் பார்க்க வேண்டும்”. இந்த மருந்தைக் கொடுத்தால் அவர் உடல்நிலை சரியாகும்.., “எழுந்து நடப்பார்” என்று அங்கே சொல்கிறேன்.

பார்த்தால் உள்ளேயிருந்து அவருடைய சப்தம் கேட்கிறது. அவரால் முடியவில்லை. தண்ணீர் வேண்டும்.., சாப்பாடு வேண்டும்.., அது வேண்டும்.., என்று சப்தம் போடுகிறார்.

“சனியன்…,” தொலைந்து போ…! சும்மா…, சப்தம் போடுகிறாய்…! “பேசாமல் கிட..,” யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தாலும் இந்த மாதிரிப் பண்ணுகிறார் என்று இவர்கள் குய்யோ முறையோ என்று அழுகிறார்கள்.

அவருடைய பையன் என்ன செய்கிறான்? “உன்னை.., இரண்டு சாத்து (அடி) சாத்தினால்தான்.., சரியாக இருக்கும்” என்கிறான்.

எவ்வளவோ பணம் சம்பாரித்து வைத்துள்ளார்கள். ஆனால் “அடித்தால்தான் சரியாகும்” என்று அவர் பையன் சொல்கிறான்.

என்னிடம் பையன் வந்து…, “ஐயா! இந்தச் சனியனுக்கு எதைப் பண்ணினாலும் மறந்து போகும். நீங்கள் பேசாமல் போங்கள். நீங்கள் வந்ததற்கு.., நன்றி” என்று சொல்லி “என்னைப் பார்க்கவிடாமல்” செய்தார்கள்.

குருநாதர் முதலிலேயே என்னிடம்.., “இப்படித்தான் நடக்கும்.., என்று சொல்லித்தான் நீ அதைப் போய்ப் பார்..,” என்றார்.

அவர்களிடம் நான் என்ன சொல்லியும் கேட்கவில்லை.

கடைசியில் அவர் சாகப் போகும்போது என்னென்ன எண்ணினாரோ “அந்தக் குடும்பத்தில் அனைத்தும் சிக்கலாகி” மில் என்ன ஆகியது? பையன்கள் என்ன ஆனார்கள்? எல்லாம் போய்விட்டது.

குருநாதர் இதையெல்லாம் தெளிவாகக் காட்டுகின்றார். இது நடந்த நிகழ்ச்சி.

இதைப் போல, பம்பாய்க்கு நான் கால் நடையாக நடந்து போனேன். குருநாதர் போகச் சொல்லியிருந்த இடங்களில் நான் போய்ப் பார்க்கிறேன். பார்க்கப்படும்போது அவர்கள் எந்தெந்த நிலையில் இருக்கிறார்கள்?

அப்பொழுது இவர்களைப் படம் எடுத்த மாதிரிக் காட்டுகிறார் குருநாதர். அதற்கப்புறம் அங்கே போகிறேன்.

அங்கே போய் உட்கார்ந்து இரவெல்லாம் அவர்கள் என்னென்ன செய்கிறார்கள்? அவர்கள் குடும்பம் எப்படி? அந்தக் குடும்பத்தில் எப்படியெல்லாம் என்று பார்க்கச் சொன்னார் குருநாதர்.

இதைப் பார்க்கச் சொன்னதோடு மட்டுமல்ல. “அவர்கள் கஷ்ட நஷ்டங்களை.., நீ எண்ணியவுடனே.., உனக்குள் அந்தக் கஷ்டம் வருகின்றது”.

என்னென்ன தொல்லை வருகிறதோ அவர்கள் படுகிற வேதனை எல்லாம் உனக்குள் மனக்கலக்கம் இதெல்லாம் எப்படி வருகின்றது? என்று காட்டுகிறார்.

நீ எண்ணிப் பார்க்கும் பொழுது..,
1.“உனக்குள் எப்படி அந்தத் தீமைகள் வருகிறது?”
2.இந்த உடலுக்குள் இந்த உணர்வுகள் எப்படி இயங்குகின்றது? என்று இதையும் காட்டுகின்றார்.

சாதாரணமாக, மனிதர் நல்லவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் கஷ்டப்படுவதைக் கேட்டுக்கொண்டிருந்த உடனே கேட்டுக் கொண்டிருந்த உணர்வுகள் நல்லவர் உடலிலே எப்படிச் சேருகின்றது?

இதை அறிந்து கொள்வதற்கு நீ போகிறாய். அவருடைய துயரங்கள் எல்லாம் உனக்குள் வந்த உடனே “எந்த வேதனையாக மாறுகிறது” என்று தெளிவாகக் காட்டினார் குருநாதர்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே, தவறு செய்யாமலே தீமைகள் எப்படி வருகின்றது? இதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ளும் சக்தியாகத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தைக் காட்டினார் குருநாதர்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நாம் நுகர்ந்து நமக்குள் அறியாது சேரும் தீய வினைகளையும் சாப அலைகளையும் நாம் நீக்கிப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

அதே போல துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் எல்லோரும் பெறவேண்டும் என்று எண்ணினால் அவர்கள் உணர்வுகள் நம்மை இயக்காது நம்மை நாம் காத்துக் கொள்ளலாம்.

Balanced state

Image

Balanced state.jpg

Balanced state

If we want fulfillment of our life we have to get Gnana and Super human powers and go into the subtle states. Then only the life-atom will not have another birth.

The soul that has gone out of the body cannot attain any power.

It is by the power of Gnana that we can save ourself from the attacks of several atoms that have entered into the body. No Sabdha Rishi or Sage will help a soul which has not entered into the path of Gnana.

To get into the attraction of Gnana we should have the power to convert all the twelve kinds of acidity in us to our state in a moment.

Then only we will be able to see the light of Gnana in us. People may think as to why  we should trouble ourself to get into this state?

But this is the only way to get redemption for our life-atom. By mere bhakti, praying to God for washing our sins we cannot see the Divine Light of Gnana.

Unless we have control over our life-atom , do not become a slave for anything , but remain in a balanced state, it is difficult to enter the path of Gnana. Gnana can be obtained only when the soul is in the human body.

In our further births we should not get into the bodies of animals. We should not be caught in the grip of any of numerous souls that are wandering  in the spirit world without bodies.

Oh Human Souls, make your thoughts yours, be in a balanced state uphold truth, love and righteousness and make yourself fit to get enlightenment and enter the subtle state.