Image

Spiritual circle.jpg

தீமையை நீக்கும் உணர்வை “முன்னனியில்” வைத்துக் கொள்ளுங்கள் மிகப் பெரிய பாதுகாப்புக் கவசம் அது

ஒவ்வொரு நேரத்திலும் யாம் உபதேசித்த உணர்வு கொண்டு ஒரு கம்ப்யூட்டரில் செயல்படுத்துவது போல் நீங்கள் வரிசைப்படுத்திக் (PROGRAMS AND COMMANDS) கொள்ளலாம்.

அதன் துணை கொண்டு வாழ்க்கையில் ஒருவருடைய தீமைகள் உங்களுக்குள் வந்தாலும் அல்லது அந்தத் தீமையைக் கேட்டாலும் அடுத்த நிமிடம் தீமைகள் உங்களுக்குள் வளராது தடுத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுதெல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்று எண்ணினால் இது (உங்களுக்கு) முன்னாடி வலிமை பெறுகின்றது.

அதே சமயத்தில் எதிரே திடீரென்று ஒரு வாகனம் வந்தாலும் நம்மை ஒதுங்கச் செய்யும்.

1.வீட்டில் தன் பையன் இப்படிச் செய்துவிட்டான்

2.அவன் எனக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்

என்று காலையில் எழுந்தவுடன் இந்த எண்ணத்தில் சோர்வடைந்துவிட்டால் இந்த உணர்வுகள் முன்னனியில் வந்துவிடுகின்றது.

அது முன்னாடி வந்துவிட்டால் நாம் போகும் பாதையில் ஒரு சைக்கிள் வருவது கூடத் தெரியாது. ஒரு பெரிய வாகனம் வருவதும் தெரியாது.

அப்பொழுது நம்மை அறியாமலே விபத்துக்கள் நடந்துவிடும்.

எதன் உணர்வு நம்மைச் சிந்தனையைக் குறைக்கச் செய்ததோ இதைப் போல் நம் வாழ்க்கையில் நடந்துவிடுகின்றது.

ஆனால், நாம் தவறு செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நாம் நுகர்ந்த உணர்வுகள் அது முன்னனியில் வந்துவிடுகின்றது. அது நம்மை இயக்கிவிடுகின்றது.

இதையெல்லாம் மாற்றி உங்கள் வாழ்க்கையில் வெளியில் செல்லும் பொழுதெல்லாம் துருவ நட்சத்திரத்தை எண்ணி இந்த வலிமையான உணர்வுகளைச் செலுத்திக் கொள்ளுங்கள்.

அப்பொழுது அதை முன்னிலைப்படுத்திச் செல்லும் போது

1.தீமை என்றால் விலகி வரும் உணர்வுகளையும்

2.தீமை வந்தால் விலகிச் செல்லும் உணர்வுகளையும்

3.சிந்தித்துச் செயல்படும் ஆற்றல்களையும்

4.வாழ்க்கையில் தெளிந்து வாழக்கூடிய உணர்வுகளையும்

நமக்கு அது ஊட்டிக் கொண்டேயிருக்கும்.

அதை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்பதற்குத்தான் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றேன். நீங்கள் கூர்ந்து இதைப் பதிவாக்கிக் கொண்டால் நிச்சயம் உங்கள் நல்ல குணங்களைக் காக்க முடியும்.

ஆகவே, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுங்கள். குரு அருள் உறுதுணையாக இருக்கும்.

என்றும் தெளிந்த நிலையும் நீங்கள் பெற முடியும்.., “பெறுவீர்கள்..,” “பெற்றுவிடுவீர்கள்..,” என்ற தன்னம்பிக்கையில் தான் உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.

என் குருநாதர் நம்பிக்கையில் தான் எனக்குள் சொன்னார். அதே வழியில் தான் உங்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறோம்.

விண்ணுலகம் சென்ற மகரிஷிகள்தான் இங்கே மெய்ஞானத்தை உணர்த்துகின்றனர்

Image

Sages, siddhas.jpg

விண்ணுலகம் சென்ற மகரிஷிகள்தான் இங்கே மெய்ஞானத்தை உணர்த்துகின்றனர்

  1. அருணகிரிநாதர்

உதாரணமாக அன்று அருணகிரிநாதருக்கு சொத்து சுகம் எல்லாம் இருந்தது. கடைசியிலே அவருக்கு கஷ்டம் வரப்படும் பொழுது உடல் முழுவதும் நோயாகி வேதனைப்பட்டார்.

என்ன வாழ்க்கை…? என்று நினைத்தார் இனி என்ன…? சாகப் போகிறோம். இன்றைக்கு இது நாள் வரை செய்த “கெட்டது அனைத்தும் போகட்டும்”. இனிமேல் அடுத்து நல்ல சரீரம் பெறவேண்டும் என்று கோபுரத்தின் மேல் ஏறி விழப்போனார்.

அந்த ஏக்கத்திலே இருக்கும் பொழுது அந்த சந்தர்ப்பம் என்ன செய்கின்றது? ஒரு நிமிடத்திற்குள் “உயர்ந்த சக்தி” உள்ளே வந்துவிடுகின்றது.

  1. இராமலிங்க அடிகள்

அதே போன்று இராமலிங்க அடிகளுக்குத் தான் செய்த தவறுக்காகத் தன் அண்ணியை அண்ணன் உதைக்கிறார் என்று ஐயோ இப்படி ஆகிவிட்டதே என்று அங்கே ஒரு மூலையில் உட்கார்ந்து ஏக்கத்தில் இருக்கும் பொழுது ஒரு “ஞானியின் அருள்” அவருக்குள் வந்து எத்தனையோ சக்திகளைச் சொன்னார்.

  1. இராமகிருஷ்ண பரமஹம்சர்

இராமகிருஷ்ண பரமஹம்சர் என்ன செய்தார்? மந்திரக்காரர்கள் காளி கோவிலுக்கு வந்து அடுத்தவர்களுக்கு ஏவல் செய்யப்படும்போது “அடப்பாவிகளா, காளி கோவிலில் வந்து ஆட்டையும் மாட்டையும் கொல்கிறீர்களே” என்று எண்ணுகின்றார்.

தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு இப்படியும் செய்கிறார்களே என்ற ஏக்கத்திலே இருக்கும்போதுதான் அந்த “நல்ல உணர்வான ஆத்மா” இவர் உடலிலே சேர்ந்து அத்தனை பெரிய ஞானத்தைப் பேசினார்.

இராமகிருஷ்ண பரமஹம்சருக்குத் தெரியாது. அவர் பாட நிலையற்ற நிலைகள் கொண்டு கோவில் பூசாரியாக இருந்தாலும் உணர்வின் ஏக்கத்தாலே ஏங்கப்பட்டு இந்தப் பூஜைகள் கூடாது என்று ஒதுக்கிவிட்டு இந்த உணர்வின் ஆற்றலை முழுமையாக அறிந்துணர்ந்தார்.

1.பூஜை என்பது

2.மெய் ஒளியைத் தனக்குள் தனக்குள் சுவாசித்து

3.நம் உயிரான ஈசனிடத்திலே நாம் பாய்ச்சும் இந்த ஆராதனைதான்

என்று இராமகிருஷ்ண பரமஹம்சர் பலமுறை சொல்லியிருக்கிறார்.

ஆனால், ஆராதனையும் அபிஷேகத்தினுடைய தன்மையும் ஊக்குவித்துவிட்டார்கள். ஏனென்றால், அவர் வழியில் வந்தவர்கள் அவரவர்கள் பிழைப்புக்காக வேண்டிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த மெய்ஞானி சொன்னதைப் புகழ்ந்து வருகிறார்கள். ஆனால் அந்த மெய்ஞானி சொன்னதை இழந்துவிட்டார்கள்.

  1. விவேகானந்தர்

ஆனால், விவேகானந்தர் தான் இறைவனைப் பார்க்கவேண்டும் என்று பிடியாகப் பிடித்தார்.

அவர் தான் படித்த நிலைகள் கொண்டு அரசியல் பண்பைத் தெரிந்தார். உலகத்தையே அறிந்தார். தான் அறிய வேண்டும் என்ற வேட்கையிலே வந்தார்.

இங்கே படிப்பறிவு இல்லாத இராமகிருஷ்ண பரமஹம்சரிடத்திலே வந்தவுடன் என்னவாயிற்று?

வந்தவுடனே அவர் தொட்டவுடனே ஏதோ ஒரு “கரண்ட் ஷாக்..,” ஏதோ ஒரு சக்தி இருக்கின்றது என்ற நிலைகள் கொண்டு அவர் எடுத்துக்கொண்ட உணர்வை விவேகானந்தர் தனக்குள் பெறுகிறார்.

அதன் வழி கொண்டு தனக்குள் உணர்கின்றேன் என்ற நிலைகள் கொண்டு இவருடைய படித்த அறிவின் தன்மையை மற்றவர்களுடன் இணைக்கும் தன்மை வருகின்றது.

ஆனால் இணைக்கும் தன்மை வந்தாலும் சக்தியின் தன்மையை, அவர் காட்டிய அந்த படித்த வர்க்கத்தின் நிலைகள் கொண்டு பிராணாயமத்தினுடைய தத்துவத்தை அந்த அரசர்கள் காட்டிய நெறியில் உட்புகுந்துதான் அந்த பாட நிலைகளில்தான் வந்தார்.

  1. ஆதிசங்கரர்

அதே போன்று ஆதிசங்கர் வெளிப்படுத்தியது காற்றிலிருக்கக்கூடிய சக்தியை நீ சுவாசிக்கும் பொழுது உனக்குள் இருக்கக்கூடிய ஈசனுக்கு இந்தச் சுவாசமே அபிஷேகமாகின்றது.

நீ எந்த குணத்தை எண்ணுகின்றாயோ அந்த குணத்தின் தன்மை உயிரான நிலைகளில் அபிஷேகம் ஆகின்றது.

நீ பாலைப் போன்ற மணம் பெறவேண்டும் என்ற எண்ணத்தை எடுக்கும் பொழுது உடலுக்குள் மகிழ்ச்சியாகின்றது. தேனைப் போன்ற சுவையான நிலைகள் பெறவேண்டும் என்று சுவாசிக்கும் பொழுது உன் உடலுக்குள் இருக்கக்கூடிய அணுக்கள் இனிமை நிறைந்ததாக மலர்கின்றது என்ற இந்தத் தத்துவத்தை ஆதிசங்கரர் சொன்னார்.

ஒரு ரோஜா மலர் என்றால் அதன் மணத்தின் தன்மையை எடுத்துத்தான் மலரின் தன்மை வருகின்றது. அந்த ரோஜா மலரை நாம் பார்த்து அந்த மலரின் மணம் நாங்கள் பெறவேண்டும் என்று ஏங்கி சுவாசித்தால் அந்த மணம் நமக்குள் இருக்கக்கூடிய ஈசனுக்கு செருகேருகின்றது.

ஆனால், துவைதம் என்பது அந்தப் பொருளை எண்ணி எடுப்பதே தவிர யாகங்களைச் செய்து, வேள்விகளைச் செய்து மந்திரத்தினாலே எடுப்பது அல்ல.

ஆக, இதையெல்லாம் ஒரு மனிதனுக்குள் இயக்குமேயானால் மனிதனுடைய உயிருக்குள் உணர்வை நீ மாற்றுகிறாய் என்ற நிலைகளைத்தான் அன்று அரசனின் நிலைகளைச் சாடப்படும் பொழுது ஆதிசங்கரருக்கு எதிர்ப்பு வருகின்றது.

அவருக்குப் பின் வந்தவர்கள் பீடங்களை அமைத்துக் கொண்ட அதன்வழி கொண்டு துவைதத்தின் தத்துவத்தை மனிதனுக்குள் எண்ணத்தை அன்று அரசன் காட்டிய நிலைகள் கொண்டு தன்னையறியாமல் இன்றைக்கு மக்களையும் சூனியமாக்கி அதிலிருந்து விடுபடும் நிலையே இல்லாது இன்றும் நாம் இருக்கின்றோம்.

வேள்விகள் செய்தால்தான் நம் பாவம் போகும் என்றும் வேள்விகள் செய்தால்தான் அம்மா அப்பா மோட்சம் போக முடியும் என்ற நிலைகளில்தான் இருக்கின்றோம்.

ஆனால் அதைச் செய்யவில்லை என்றால் பிழை வந்துவிடுமோ என்று எண்ணுகின்றோம். ஏனென்றால் விஷத்தை நஞ்சை நமக்குள் ஊட்டிவிட்டார்கள்.

நஞ்சின் தன்மை கொண்டுதான் ஒரு பிடியிலே சிக்குகின்றோம். நஞ்சுக்குள் சிக்கிவிட்டால் நாம் நஞ்சின் தன்மை அடைகின்றோம்.

6.மகரிஷிகளின் உணர்வலைகள்தான் இங்கே மெய்யை உணர்த்துகின்றது

இவையெல்லாம் நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் நெறிகள்.

1.இங்கே  இதை உபதேசிப்பது நான் அல்ல.

2.மெய்யை உணர்ந்த பல மகரிஷிகளின் உணர்வலைகள்

3.அவர்களுடன் நான் தொடர்பு கொள்ளப்படும் பொழுது,

4.அவர்களின் உணர்வலைகள்தான் உணர்த்தியது.

5.நீங்கள் இப்பொழுது கேட்பது, சுவாசித்தது அனைத்துமே அந்த மகரிஷிகளின் உணர்வலைகளைத்தான்.

அந்த உணர்வலைகள் உங்களுக்குள் பதிவாகின்றது. அந்தப் பதிவின் நினைவு கொண்டு ஆதிசங்கரர் சொன்னது போல் காற்றிலிருக்கும் அந்த ஆற்றல் மிக்க சக்திகளை எங்கிருந்தும் பெறமுடியும்

அதே சமயத்தில் அங்கே விண்ணின் ஆற்றலையும், இந்தப் புவிக்குள் இருக்கும் சக்தியையும் நீங்கள் பெறமுடியும். உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.

“எல்லோரும் நல்லவராக வேண்டும்” என்று எண்ணினால் அந்த எண்ணம் நல்ல சொல்லையும் நல்ல செயலையும் நம்மைச் செய்ய வைக்கும் – அதற்குத்தான் சிலையை வைத்துள்ளார்கள்

Image

Ganesa Idol.jpg

“எல்லோரும் நல்லவராக வேண்டும் என்று எண்ணினால் அந்த எண்ணம் நல்ல சொல்லையும் நல்ல செயலையும் நம்மைச் செய்ய வைக்கும் – அதற்குத்தான் சிலையை வைத்துள்ளார்கள்

ஒருவர் தீமையான செயலைச் செய்கின்றார். தீமை செய்யும் தீயவர்கள் இருப்பினும் “அவர்கள் நல்லவராக மாறவேண்டும்” என்ற இந்த உணர்வை நாம் நுகர்ந்தால்

1.நமக்குள் அந்த நல்ல உணர்வைக் கொண்டு வருகின்றது.

2.நல்ல உடலாக மாற்றுகின்றது.

3.நல்ல சொல்லாகவும் செயலாகவும் நம்மைச் செயல்பட வைக்கின்றது.

ஒருவரை நல்லவன் என்று நாம் எண்ணினாலும் அவன் வெளிப்படுத்தும் கோபமான உணர்வை நாம் நுகரப்படும் பொழுது என்ன ஆகும்?

பாலிலே பாதாமைப் போட்டாலும் அந்தப் பாலில் ஒரு துளி விஷம் பட்டால் பாதாமிற்குச் சக்தியில்லை.

அதைப் போன்று தான் நாம் நல்லதை எண்ணிச் செயல்படும் பொழுது கெட்டவன் என்று இருந்தாலும் “அவன் சொல்லையோ செயலையோ கேட்டுத்தான்.., பார்த்துத்தான்..,” நாம் உணர்கின்றோம்.

அப்படி உணரப்படும் பொழுது நம் உடலில் தீய உணர்வின் வலிமை சேர்ந்து விடுகின்றது. ஆகவே

1தீயவர்கள் என்பவர்கள் எவரும் இல்லை.

2சந்தர்ப்பம் அந்தத் தீய செயலைச் செய்ய வைக்கின்றது.

3அந்த உணர்வுகள் உடலிலே தீயதாக விளைகின்றது.

4.தீய அணுக்கள் விளைந்து தீயதாக அந்த உடலை இயக்குகின்றது.

5.தீயவனாக மாற்றி உடலுக்குப் பின் “இன்று மனிதன்.., அடுத்து.., மனிதனல்லாத நிலையை..,” உருவாக்கிவிடுகின்றது.

ஆனால், நமக்கு ஞானிகள் காட்டிய நிலைகளில் “தன்னை அறிந்து” செயல்படும் தத்துவம் தான் “விநாயகர் தத்துவம்”.

நாம் புல்லைத் தின்றோம் தழைத் தாம்புகளைத் தின்றோம் கனிகளைத் தின்றோம். மனிதனானபின் சுவை மிக்க உணவைப் படைத்துச் சாப்பிடும் இந்த உடலைப் பெற்றோம்.

ஆகவே இந்தப் பிள்ளை யார்…? நீ சிந்தித்துப் பார்…! என்று கேள்விக் குறியைப் போட்டு திரும்பும் இடமெல்லாம் விநாகரை வைத்துக் காட்டியுள்ளார்கள். ஆக உயிரால் வளர்க்கப்பட்டது தான்.

எனது சொத்து.., எனது உடல்.., என்று தான் இருக்கின்றோமே தவிர நான்…! எனது…! என்பது.., “எங்கும்.., என்றும்.., இல்லை!”

நான் என்பது நான் நானாவேன். “உயிர் தான்..,” எல்லாவற்றிற்கும் “நான் உருவாக்கினேன்..,” என்று.

இந்த உயிரைப் போல உணர்வினை அருள் ஒளியாக உருவாக்கினால்.., “உயிருடன் ஒன்றிய நான்” – “நானாகின்றது”.

அந்த நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

உயிர் “ஈசன்”

நுகர்ந்து கொண்ட உணர்வு “வினை”.

அந்த வினைக்கொப்ப உடலின் நிலை “விநாயகா”.

உணர்வின் தன்மை உறையும்போது அதனின் மலம் உடலாகும் பொழுது “சிவம்”.

தீமைகளை நீக்கிய உணர்வு ஒவ்வொன்றும் நம் உடலில் அறிந்து கொள்ளும் ஆற்றல்கள் அதிகரிக்கின்றது. இது தான் “கார்த்திகேயா”.

சிவனின் பிள்ளை மூத்தவன் விநாயகன் இளையவன் கார்த்திகேயன். எல்லாவற்றையும் அறிந்திடும் உடல் பெற்றது என்ற நிலையை நமது ஆறாவது அறிவைத் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.

விநாயகர் கோவிலுக்குச் சென்றால்.., நாம் என்ன நினைக்கின்றோம்…?

1.அங்கே குறைகளைச் சொல்வதும்

2.அல்லது என்னைச் சோதிக்கின்றான் என்பதும்

3.அர்ச்சனை அபிஷேகத்தைச் செய்து குறைகளைச் சொல்லி அதைத்தான் விரும்புகின்றோமே தவிர

4.குறைகள் நமக்குள் எப்படி வந்தது?

5..அந்தக் குறைகளை எப்படி நீக்குவது..? என்ற நிலை இல்லை.

குறைகளை எப்படி நீக்குவது என்று கேட்டு யாராவது தீமையை நீக்கும் ஆற்றலை எண்ணுகின்றோமா..,? தீமை செய்பவர்களின் வலிமையைப் பற்றித்தான் “அதிக நேரம்” எண்ணிக் கேட்கின்றோம்.

தீமைகளைத் துடைக்கும் மார்க்கம் தான் நமது குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் செலுத்துவது.

கடுமையான விஷங்களை மாற்றி உணர்வை ஒளியாக மாற்றிச் சென்றவன் அகஸ்தியன். அவன் தான் இன்று அந்தத் துருவ நட்சத்திரமாக உள்ளான்.

அதை நாம் நுகர்ந்தால் அவன் எப்படி விஷத்தை நீக்கினானோ அதை நாமும் நீக்கலாம். அவன் சென்ற எல்லையை அடையலாம்.

தீமைகளை எப்படி ஒளியாக மாற்றவேண்டும் என்பதை நாமெல்லாம் அறிந்து நம்மை நாம் தெரிந்து “தெளிவான வாழ்க்கை வாழ்வதற்குத்தான்” இந்தச் சிலைகளை எல்லாம் வைத்தார்கள் ஞானிகள்.

சர்க்கரைச் சத்திலிருந்தும் இருதய சம்பந்தப்பட்ட கோளாறுகளிலிருந்தும் விடுபடுங்கள்

Image

Immune system.jpg

சர்க்கரைச் சத்திலிருந்தும் இருதய சம்பந்தப்பட்ட கோளாறுகளிலிருந்தும் விடுபடுங்கள்

நம் உடலில் ஏதாவது குறை ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டி இருக்கின்றது.

அப்படி அணுகும்போது டாக்டர் சொல்லுகிறார், “ஒரு உறுப்பு கெட்டுவிட்டது. அதன் அணுக்கள் சரியாக வேலை செய்யவில்லை” என்று கூறி அதற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள்.

பிறகு இதைச் சரி செய்வதற்காக நமக்குப் பலவித கட்டுப்பாடுகள் கொடுக்கின்றார்கள். மனிதனாக இல்லாத அளவுக்கு நமக்குக் கட்டுப்பாடு செய்கின்றார்கள். இதனுடைய நிலைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

மிக்க செல்வத்தோடு நாம் சந்தோஷமாக இருக்கும்போது சந்தர்ப்பவசத்தால் குடும்பத்திற்குள் வெறுப்பான நிலைகள் கொண்டு செயல்படும்போது

1.வெறுப்பின் உணர்வுகள் நமக்குள் அதிகமாகச் சேர்க்கப்படுகின்றது.

2.வேதனை என்ற உணர்வும் அதிகமாகச் சேர்க்கப்படுகின்றது.

இதனால் நாம் உட்கொள்ளும் சுவைமிக்க உணவுடன்.., இந்த “வேதனை உணர்வுகள்.., இணையாது போய்விடுகின்றது”.

ஆக, சர்க்கரைச் சத்தைச் சரியான அளவில் ஜீரணிக்கும் நம் உறுப்புகள் செயலற்றதாக மாறுகின்றது. அப்படிச் செயலற்றதாக மாறிவிட்டால் நிச்சயம் நமக்குள் சர்க்கரைச் சத்து இரத்தத்தில் இருக்கத்தான் செய்யும்.

விஞ்ஞான அறிவு கொண்டு இதைக் குறைப்பதற்காக அவ்வப்பொழுது எதிர்மறையான மருந்துகளைக் கொடுத்து இந்த இரத்தத்திலே அதை மாற்றுகின்றனர்.

நாம் அடிக்கடி வேதனையும் சலிப்பும் சஞ்சலமும் அதிகமாக எடுத்தோம் என்றால் அடுத்தகணம் பார்த்தால் இரத்தத்திலே சர்க்கரைச் சத்து உள்ளது என்பார்கள்.

அதே சமயத்தில் நாம் சத்தான உணவை உணவாக உட்கொள்ளும்போது அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி இந்த சலிப்பு சஞ்சலம் என்ற நிலைகள் அதிகரிக்கப்படும்போது

1.அதனால் கொழுப்பின் சக்தி அதிகமாகின்றது

2.அதுவும் நம் இரத்தநாளங்களுடன் கலக்கின்றது.

3.இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கின்றது என்று சொல்வார்கள்.

4.இந்த இரத்தம் வடிகட்டுப்படுவதற்காகக் கிட்னிக்குச் செல்லும்போது கிட்னிக்கு இந்த கொழுப்புச் சத்தை வடிகட்டும் தன்மை இல்லை.

5.இரத்தத்தில் வரும் பலவீனமான இந்த உணர்வுகளை கிட்னி அது சீராக வடிகட்டாத இந்த உணர்வுகள் மீண்டும் நம் உடல் உறுப்புகளில் செல்கிறது.

கிட்னியில் பரிசுத்தப்பட்ட இரத்தம் இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து இந்த உணர்வுகள் அது உடல் முழுவதும் பரவச் செய்யும்போது அது “மூன்றுவிதமான குழாய்க்குள்” ஊடுருவிச் செல்லுகின்றது.

ஆனால் இந்த கொலஸ்டரால் என்ற உணர்வின் தன்மை அதிகமாகச் சேர்க்கப்படும்போது வேதனையோ வெறுப்போ அல்லது நாம் தொழில் செய்யும் நிலைகளில் கஷ்டமோ என்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும்போது இருதயத்தின் துடிப்பு அதிகரிப்பதைக் காட்டிலும் படபடப்பு அதிகமாகும்.

இது அதிகமாகும்போது இதனுடைய நுழைவு வாயிலில் அதிகமாகச் சேர்க்கப்படும்போது இருதயத்திற்குள் சிறிது சிறிதாகச் சேர்ந்து  கொலஸ்டரால் என்ற நிலைகள் அங்கு தேங்கத் தொடங்குகின்றது.

அவ்வாறு தேங்கிவிட்டால் நமது இருதயத்தில் இந்த கொழுப்புச் சத்து அதிகமாகி நாம் சுவாசிக்கும் உணர்வுகள் வெளிப்படுத்த முடியாத நிலை ஆகிவிடுகிறது. அதாவது

1.இரத்தத்தில் இருந்து ஆவியாக மாற்றி

2.ஆவியின் தன்மை எல்லா இடங்களுக்கும் அனுப்பி

3.இதன் வழி கொண்டு எதன் உணர்வினை ஆவியாக மாற்றுகின்றதோ

4.அதன் உணர்ச்சிகளை ஊட்டும் இந்த உணர்வுகள்

5.தீமையைப் பிளக்கும் தன்மைகளை இழந்துவிடுகின்றது.

தீமையைப் பிளக்கும் தன்மை இழந்து தீமையின் அணுக்கள் அதிகமாகப் படும்பொழுது “இருதயத்தில் இருந்து பிரியும் சக்தி” அது குறைகின்றது.

இதைப்போல அதன் உணர்வுகள் அதிகரிக்க அதிகரிக்க சில சில உறுப்புகளில் இந்த கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது அதன் வடிகட்டும் தன்மை இழக்கப்படும்பொழுது உடல்களில் கொழுப்புச் சத்து அதிகமாகத் தேங்கி அதன் அணுக்கள் பெருகத் தொடங்கிவிடுகின்றது.

இதன் அணுக்கள் பெருகத் தொடங்கிவிட்டால் உடல் முழுவதற்கும் “நீர்ச்சத்து.., அதிகமாகும்”. “இரத்தத்தின் தன்மை.., குறையும்”.

அடுத்து அதில் ஆசிடாக மாற்றும் இந்த உணர்வுகள் விஷத்தன்மை உடையதாக மாற்றப்படும்பொழுது நமது உடலில் நரம்பு மண்டலங்களில் என்ன நடக்கிறது?

ஒரு பொருளை நாம் தூக்குகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த நரம்பு மண்டலங்களுக்குள் அந்த ஆசிட் என்ற வாயுவில் அதிகமான இந்த விஷத்தன்மை கலந்ததால் பொருளை நாம் தூக்கும்போது அதனால் வரும் வேதனை “பொருளைத் தூக்க முடியாத நிலை ஏற்படும்”.

இதைப்போன்ற நிலைகள் இது எதனால் வருகிறது? அடிக்கடி கவலை, சஞ்சலம் என்ற உணர்வுகளை அதிகமாகச் சுவாசிக்கும்போது இந்த விஷத்தன்மைகள் கூடி இந்த நிலையாகின்றது.

இதையெல்லாம் மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்? அதற்குத்தான் இந்தத் தியானப் பயிற்சியை யாம் கொடுக்கின்றோம்.

உறுப்புகளைச் சீராக இயக்கச் செய்வதற்கு நீங்கள் இந்த தியானத்தை எடுத்து

1.எந்த உறுப்பின் தன்மை இயக்கவில்லையோ

2.உங்கள் எண்ணத்தை அந்த உறுப்பின்பால் செலுத்த வேண்டும்.

3.அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த உறுப்புகள் முழுவதும் படரவேண்டும்,

4.உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அந்த சக்தி பெறவேண்டும்.

5.அந்த உறுப்புகள் சீராக இயங்க வேண்டும்.

நோயை நீக்க மருத்துவர்கள் ஊசி மூலம் மருந்தை ஏற்றி எப்படி “INJECTION” செய்கின்றனரோ அதைப்போன்று உடலுக்குள்.., “துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைச் செலுத்துதல் வேண்டும்”.

எந்தெந்த உறுப்புகள் சரியாக இயங்கவில்லையோ துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைக் கண்ணின் நினைவு கொண்டு “அங்கேல்லாம்” ஊடுருவிப் பாய்ச்ச வேண்டும்.

எங்கள் உடலிலுள்ள கொலஸ்ட்ராலோ அல்லது சர்க்கரைச் சத்தோ இதையெல்லாம் மாற்றியமைத்து உறுப்புகள் “சீராக வேண்டும்” என்று எண்ணுதல் வேண்டும்.

உங்கள் எண்ணத்தால் உங்களைக் காக்கலாம். உங்களை நீங்கள் நம்புங்கள்.

“இந்தக் கூட்டமைப்பு” ஆயிரமாகும்… ஆயிரம் பல இலட்சங்களாகும்…

Holy Group

இந்தக் கூட்டமைப்பு ஆயிரமாகும் … ஆயிரம் பல இலட்சங்களாகும்…

இன்றிருக்கக்கூடிய காற்று மண்டலத்தை…
1.யார்.., எந்த நிலையில் நச்சுத் தன்மையாக ஆக்கியிருந்தாலும்…
2.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்து
3.நம் உடலுக்குள் அருள் ஞானத்தை உருவாக்கும் சக்தி பெறுகின்றோம்.
4.அந்த நச்சுத் தன்மை நம்மைப் பாதிக்காது தப்ப முடியும்.

இந்தக் குறுகிய காலத்திற்குள் இந்த உடலில் இத்தகைய நிலையை உருவாக்கினால் என்றும் ஏகாந்த நிலை கல்கி ஒளியின் உடலாக மாற்றும்.

இதில் சிரமம் ஒன்றும் இல்லை. உங்களுக்குள் யாம் பதிவு செய்ததை எண்ணினால் காற்றிலிருந்து எளிதில் பெற முடியும்.

விஞ்ஞான அறிவு கொண்டு டி.வி க்களில் இன்னென்ன அலைவரிசை என்கிற பொழுது ஒவ்வொரு இடத்திலிருந்தும் வெளிப்படும் உணர்வைக் கவர்கின்றது.

இன்ன அலைவரிசை என்கிற பொழுது இந்த இடம்.., இந்த நாடு.., என்று அறிந்து அதை எடுத்துக் கொள்கிறோம்.

இதைப் போன்று தான் மக்கள் பேசும் தவறான உணர்வுகள் நமக்குள் பதிவு உண்டு அவர்களை எண்ணினால் அந்த அலை\வரிசைப்படி நமக்குள் கோபம் வரும்.., சங்கடம் வரும்.., வேதனை வரும்.

இத்தனையும் வருகின்றது.

ஆனால்… “இத்தனை தீமைகளையும் நீக்கிய…” உணர்வின் அறிவு கொண்ட அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நம் குருவின் துணை கொண்டு அதைக் கவர்ந்தால் “அந்த அலைவரிசை” நமக்குள் வந்து
1.தீமைகளை நீக்கும்
2.சிந்தித்துச் செயல்படும்
3.நம் வாழ்க்கையை உயர்த்தும்

இந்த உயர்ந்த உணர்வு வரும் பொழுது இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை என்ற நிலையை நாம் அனைவரும் அடைய முடியும்.

அருள் ஞானிகளாக நீங்கள் மாறி உங்கள் பார்வையில் சர்வ தோஷங்களும் நீங்க வேண்டும். உங்கள் பார்வை சர்வ பிணிகளையும் போக்க வேண்டும். உங்கள் பார்வை எல்லோரையும் ஞானியாக்க வேண்டும்.

இத்தகையை.., “கூட்டங்கள்” அமைந்தால் தான் பேதங்களை மாற்ற முடியும். குருவின் அருளை நிச்சயம் நீங்கள் பெறுகின்றீர்க்ள்.

இதைப் படிப்போர்.., உபதேசத்தைக் கேட்போர்.., அனைவரும் இதன்படி செய்தால்
1.பல ஆயிரம் பேராக மாற்றலாம்
2.பல ஆயிரம் பேர் பல இலட்சக்கணக்கான பேரை மாற்றலாம்.
3.இந்தப் பூமியைப் பரிசுத்தப்படுத்தலாம்.

ஒரு வேப்ப மரத்திலிருந்து வெளிப்படும் கசப்பான உணர்வைக் கண்டதும் மற்ற உணர்வலைகள் “எப்படி ஓடுகின்றதோ..,” இதைப் போல அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் சேர்க்கப்படும் பொழுது பூமியில் படர்ந்துள்ள
1.“சர்வ தீமையான உணர்வலைகளையும்… ஓடச் செய்யலாம்”
2.அல்லது அந்த உணர்வுகள் இயங்காது தடைப்படுத்தலாம்.

ஏனென்றால் அன்றாட வாழ்க்கையில் நாம் எல்லோருடனும் பழகுகின்றோம். பார்க்க நேர்கின்றது, கேட்க நேர்கின்றது.

இப்படி நமக்குள் பலருடைய உணர்வுகளும் பதிவாகி இருப்பதால் அதை இழுக்கக்கூடிய சக்தி வருகின்றது. அதனால் நம் உடலில் கெட்ட அணுக்கள் வளரக் காரணமாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் ஏங்கி எடுத்து தீமைகள் புகாது தடுத்தால் “காலையில் ஆறு மணிக்கெல்லாம்.., நாம் இழுக்க மறுத்த அந்தத் தீமையான உணர்வுகளை” சூரியன் மேலே கவர்ந்து சென்றுவிடுகின்றது.

நம்முடைய ஆன்மா சுத்தமாகின்றது.

நமக்கு எப்பொழுது தொல்லை வந்தாலும் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி தீமைகள் புகாது தடுத்துப் பழகுங்கள்.

குருநாதர் காட்டிய வழியில் நம் ஆத்மாவைச் சுத்தம் செய்ய வேண்டிய முறை இதுதான். ஆத்ம சுத்தி என்பது இதுதான்.

நம் குருநாதர் “ஒவ்வொரு உயிரையும்” ஈசன் என்று மதித்தார் எல்லோரும் நலம் பெறவேண்டும் என்றும் அருள் ஞானிகளாக வளர வேண்டும் என்று தான் இந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றார்.

ஆகவே, அஞ்ஞான வாழ்க்கை நமக்குள் புகுந்து இயங்கிடாது அந்த அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியில் “மெய் ஞான உலகை..,. நமக்குள் சிருஷ்டிப்போம்”.

புறக்கண் – அகக்கண் – நெற்றிக்கண் – முக்கண் – மூன்றாவது கண்

Image

Third eye - மூன்றாவது கண்.jpg

புறக்கண் – அகக்கண் – நெற்றிக்கண் – முக்கண் – மூன்றாவது கண்

வேதனை என்ற உணர்வு வந்தால் உடனே நாம் எதைத் தியானிக்க வேண்டும்? துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று நம் உயிரான ஈஸ்வரனிடமே வேண்டித் தியானிக்க வேண்டும்.

நீங்கள் கண்ணிலே பார்த்துப் புற நிலைகள் கொண்டு நுகர்கின்றீர்கள். இது புறக் கண்.

நுகர்ந்தபின் உயிர் என்ன செய்கின்றது? அகக் கண்ணாக இருக்கின்றது.

அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை நம் உடலுக்குள் உணர்த்துகின்றது. உணர்வின் சக்தியாக நம்மை இயக்குகின்றது.

1.நம் கண் புறக் கண்

2.உயிர் அகக் கண்

3.இந்த உடலுக்குள் இருக்கப்படும் போது இந்த உடலான சிவனுக்கு நெற்றிக் கண் – உயிர்.

நம்முடைய சிவ தத்துவத்தில் இவ்வளவு அழகாகக் கொடுத்துள்ளார்கள். நாம் நுகர்வது நம் உயிரில் பட்டுத்தான் அந்த உணர்வுகளை அறியச் செய்கின்றது.

அதே சமயத்தில் மனிதனான நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை இந்தக் கண்ணால் எடுக்கின்றோம். எடுத்து உயிரான நிலைகளில் இணைக்கின்றோம்.

அகஸ்தியன் எப்படி ஒளியின் சரீரம் பெற்றானோ அந்த உணர்வின் தன்மை பெறவேண்டும் என்று அந்த உணர்ச்சிகளை இங்கே எடுத்துச் செல்லப்படும் போது

1.கண்ணின் நினைவினைக் கொண்டு

2.முக்கண் என்ற நிலைகளில் இதை இழுத்து

3.இங்கே ஆன்மாவில் இருப்பதை இழுப்பதைக் காட்டிலும்

4.ஈஸ்வரா என்று தடைப்படுத்தி

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெறவேண்டும் என்று புருவ மத்தியில் இணைத்தல் வேண்டும்.

அந்த உணர்வின் தன்மை நம் உடலுக்குள் செல்லப்படும் போது இங்கே வரும் தீமைகளைத் தடைப்படுத்துகின்றது.

அப்பொழுது அந்த உணர்வுகள் நம் உடலுக்குள் செலுத்தப்படும் போது அந்த உணர்வுகள் வலுப் பெற வலுப் பெற இந்த ஆன்மாவிலிருந்து தீமைகளை நீக்கிவிடுகின்றது.

கோபமாக இருக்கும் போது ஒருவர் நல்லது சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா..,?

வேதனையாக இருக்கும் போது சிரித்து ஆடி சந்தோசப்படலாம் என்று ஒருவர் வந்தால்…, எப்படி இருக்கும்?

வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். சந்தோசப்பட வேண்டும் என்ற நிலையில் உங்கள் முன்னாடி ஒருவர் வந்து ஆடினால் என்ன செய்வீர்கள்?

“நம்மைக் கிண்டல் செய்கிறார்.., கேலி செய்கிறார்..,” இப்படிப் பண்ணிக் கொண்டிருக்கின்றார்.., என்று உதைக்கத்தான் வருவீர்களே தவிர “நல்லதை விடுவோமா?”

இந்தப் புறக் கண் அந்த உணர்வின் தன்மையை வலிமை பெறச் செய்துவிடுகின்றது.

ஆகவே, இதைத் தடைப்படுத்தி ஈஸ்வரா என்று அகக் கண்ணின் உணர்வின் தன்மையை நமக்குள் எடுக்கப்படும் போது அதன் வழி உணர்வுகளை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

சிறிது நேரம் இழுத்தவுடனே ஈஸ்வரா என்று உயிரிடம் நினைவினைச் செலுத்தி அவனிடமே வேண்டுதல் வேண்டும்.

ஏனென்றால், அவன் தான் நாம் நினைப்பதையெல்லாம் உருவாக்குகின்றான்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும், எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று இந்தப் “புறக் கண்ணின் நினைவை.., அகக் கண்ணுடன் இணைத்து” அதன் வழி உடலுக்குள் செலுத்த வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

நாம் ஒருவரிடத்தில் பழகுகிறோம் என்கிற பொழுது எனக்குத் துரோகம் செய்தான் என்று எண்ணும் போது உடனே அது அங்கே இயக்குகின்றது.

1.அதே உணர்வு நம்மை இயக்குகின்றது.

2.நமக்குள் அந்தத் தவறைச் செய்ய வைக்கின்றது.

3.சிந்தனை இழக்கச் செய்கின்றது.

ஆனால், இதைப் போல நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நாம் உணர்வை உந்தப்படும் போது உள்ளுக்குள் இழுக்காது தடைப்படுத்தப்படுகிறது.

இந்த உணர்வின் தன்மை வலிமையான பின்.., “இங்கே நிற்பதற்கு வழி இல்லை”. தீமைகளைத் “தள்ளிவிட்டு விடுகின்றது”.

Super human powers

Image

Path of Gnana.jpg

Super human powers

It is the same man that becomes God, angel and also devil the God of death. The one who has good thoughts in him absorbs good acidity becomes a God and the one who has bad thoughts and absorbs bad acidity becomes a devil.

Nature sees and laughs at the produce grown in different states, out of the seeds sown by it. Nature sows the same kind of seed and seeing the produce got out of them it goes on sowing further and further.

It takes the good produce and sows again the bad ones at a certain time. Now this is a time it picks up the good products which it likes.

It goes on selecting the good ones rejecting the others to grow again. We should realize this and go in the right path of love and gnana and not be caught in the net of the devils.

So if we use the acid power in us in the path of gnana so that we can get super human powers. When the power in that path increases the other acid powers in us will also follow in the same path.

The quality of one will not change but will remain under the control of stronger power.

தியானத்தில் நமக்குள் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி

Group meditation.jpg

தியானத்தில் நமக்குள் சக்தியைக் கூட்டிக் கொள்ளும் வழி

நீங்கள் எல்லோருமே அரும் பெரும் ஞானியாக வேண்டும். தெய்வீகக் குணங்களை எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு நீங்கள் அந்த அருள் ஞானத்தை ஊட்டுங்கள்.

ஒரு தெளிவான நிலையை உருவாக்குங்கள். இந்த நாடு நலம் பெறவேண்டும் என்று உறுதிப்படுத்துங்கள்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தியை பெறவேண்டும் என்று ஏங்குங்கள். குருவின் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறவேண்டும் என்ற ஆசையை ஊட்டுங்கள்.

1.அனைவரையும் அந்தச் சக்திகளைப் பெறச் செய்யுங்கள்.
2.அவர்கள் இச்சைப்படட்டும்.
3.அருள் உணர்வுகளை அவர்கள் நுகரட்டும்.
4.அது இச்சா சக்தி.., கிரியா சக்தி.., என்று அந்த ஞான வழியில் வளரட்டும்.

ஆனால், “என்னைத் திட்டினானே… அவனை விடுவதா..,?” என்று இச்சைப்பட்டால் அந்த உணர்வான பிற்பாடு அந்த ஞானத்தின் வழி கொண்டு அவனுக்குத் தொல்லைகளைத்தான் கொடுக்கச் செய்யும்.

ஒருவர் நல்லதாக வேண்டும் என்று துருவ நட்சத்திரத்தை இச்சைப்பட்டு எடுத்துக் கொண்டால் “நல்லதாக வேண்டும்..,” என்று அந்த ஞானத்தின் வழி நம்முடைய உணர்வுகள்.., “உணர்ச்சிகள் அங்கே இயக்கும்”.

நம்மையும் நல்லதாக்கும். அவர்களையும் நல்லதாக்கும்.

இன்று குடும்பத்தில் எடுத்துக் கொண்டோம் என்றால் எல்லா நியாயத்தையும் பேசுவார்கள். கடைசியில் பார்த்தோம் என்றால் அவரவர்கள் சுயநலத்திற்கு வந்துவிடுவார்கள்.

ஆகவே, பொது நலத்தில் சுயநலம் வேண்டும்.

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நான் எண்ணினால் நீங்களும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்று மரியாதை செலுத்துகின்றீர்க்ள்.

ஆனால், என்னை நீங்கள் எல்லோரும் மதிக்கின்றீர்கள் என்று சொல்லிக் கொண்டு “நான் பெரியவன்…” என்று அதிகாரம் செய்தால்… எப்படி இருக்கும்?

ஏனென்றால், எல்லோரும் ஒன்றாகச் சேர்த்து நாம் வலுவாக இயக்குகின்றோம். நீங்கள் மதிப்பதால் தான் எல்லோரும் மதிக்கும் நிலை வருகின்றது.

என்னை எல்லோரும் மதிக்கின்றார்கள் என்று எண்ணித் தலை கீழாக நின்று கொண்டு “என்னிடம் தான் சக்தி இருக்கின்றது.., என்று சொன்னால்.., சரியாகுமா..,? ஆகாது.

இந்தச் சக்திகளை உங்களிடமிருந்து தான் நான் பெறுகின்றேன். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எனக்குக் காட்டியது அதுதான்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மெய் ஞானிகளின் அருள் ஞான வித்தை ஊன்றினால் அதை அவர்கள் பருகும் பொழுது நமக்கு அந்தச் சக்தி கிடைக்கும்.

ஆகையினால் தான் உங்களிடம் அருள் ஞானத்தை விளைய வைத்து அந்தப் பேரன்பு கொண்ட நிலையை எனக்குள் எடுக்கும் பொழுது “எனக்கும்.., சக்தி கூடுகின்றது”.

நீங்களும் இதே மாதிரி மற்றவர்களுக்குள் ஞானத்தை விளையச் செய்து சக்தியைக் கூட்டிக் கொள்ளலாம். உங்கள் மனதைப் பண்படுத்தி அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் நாம் அனைவரும்
தெய்வீக அன்பைப் பெறுவோம்
தெய்வீகச் சக்தியைப் பெறுவோம்
தெய்வீகச் சக்தியை வளர்ப்போம்
தெய்வீக உலகமாக மாற்றுவோம்

“ஊன்.. உடம்பு.. ஆலயமடா…!” – திருமூலர்

திருமூலர்.jpg

“ஊன்.. உடம்பு.., ஆலயமடா…!”

உதாரணமாக நெல் பயிரை விளைய வைத்து அதை நாமும் உட்கொண்டு மகிழ்கின்றோம்.

அதே சமயத்தில் இதை மற்றவரும் உட்கொண்டு மகிழ்ந்திட வேண்டும்.., “அவர்களும் நன்றாக இருக்க வேண்டும்..,” என்று எண்ணித்தான் நாம் அந்தப் பயிர்களை விளையச் செய்வோம்.

“யாரும் இதை வாங்கக் கூடாது.., உட்கொள்ளக் கூடாது..,” என்ற எண்ணத்தில் விளைய வைப்பதில்லை.

இதைப் போல மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவரின் அருள் சக்திகளை நாம் பெற்று அவர் வழியைப் பின்பற்றி பேரானந்தப் பெருநிலையை நாமும் பெறுவோம்.

அவரின் அருளை நாம் பெறவேண்டும் என்றால் நாம் பார்ப்போரெல்லாம் பேரானந்தப் பெருநிலை பெற வைக்க வேண்டும்.

அவர்கள் பேரானந்தப் பெருநிலை பெறும் உணர்வலைகள் வருவதை நாம் நுகர வேண்டும். நமக்குள் பேரானந்தத்தை வளர்த்திட வேண்டும்.

ஆகவே, குரு அருளை வளர்ப்போம். மற்றவர்களையும் நாம் பெறச் செய்வோம். ஏனென்றால், ஈஸ்வரபட்டாய குருதேவர் நமக்கு “எவ்வளவு பெரிய.., ஞானப் பொக்கிஷத்தைக் கொடுத்துள்ளார்..,” என்று எண்ணுங்கள்.
1.குறைகளை அகற்றுங்கள்.
2.மெய்ப்பொருளைக் காணும் உணர்வை உயர்த்துங்கள்.
3.உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்குங்கள்
4.அதையே தவமாக்குங்கள்… மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானியுங்கள்.
5.தியானம் என்பது முதலில் அந்த உயர்ந்த சக்தியை நமக்குள் வளர்த்துப் பழகுவது.

ஒரு பாத்திரத்தில் நாம் பல பொருள்களைப் போட்டுச் சமைக்கின்றோம் என்றால் அதில் சமைத்த பொருள்களுக்கொப்பத்தான் வாசனை வரும்.

எல்லாப் பொருள்களையும் நாம் போட்டுச் சமைத்தபின் “சிறிதளவு.., உப்பைப் போட்டுப் பார்க்கலாமே..!” என்று தன் இஷ்டத்திற்குச் சேர்த்தால் என்ன ஆகும்?

சமைத்த அந்த உணவைச் சாப்பிடுபவர்கள் அனைவரும் “உப்பு அதிகமாகிவிட்டது..,” என்று தான் சொல்வார்கள். இதைப் போன்று நாம் சமைக்கும் உணர்வின் சுவையே அதைக் கேட்போரின் நிலைகள் மனம் மகிழும்.

நமக்குள் அருள் ஞானியின் உணர்வுகளைத் தியானத்தால் எடுத்து அனைவரும் பெறவேண்டும் என்று ஏங்கி அனைவருக்கும் அதைக் கிடைக்கச் செய்யவேண்டும்.

அதைத்தான், “மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று தியானிப்போம். மகரிஷிகளின் அருள் சக்தி அனைவரும் பெறவேண்டும் என்று தவமிருப்போம்”.

எல்லா ஆலயங்களுக்கும் சென்று அங்கே காட்டப்பட்டுள்ள “தெய்வ குணத்தைப் பெறவேண்டும்..,” என்று தியானிப்போம். இந்த ஆலயத்திற்குள் வரும் ஒவ்வொருவரும் அந்தத் தெய்வ குணத்தைப் பெறவேண்டும் என்று தவமிருப்போம்.

அங்கே வைத்திருக்கும் கனியைப் போன்று மலரைப் போன்று பாலைப் போன்று பன்னீரைப் போன்று சந்தனத்தைப் போன்று அந்த நறுமணங்கள் அனைத்தும் நாங்கள் பெறவேண்டும்.

இந்த ஆலயத்திற்கு வரும் அனைவருக்கும் அந்த நறுமணங்கள் கிடைக்க வேண்டும் என்று இதை நமக்குள் பெருக்குதல் வேண்டும்.

மலரைப் போன்ற மணமும் மகரிஷிகளின் அருள் சக்தியும் மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியும் நாங்கள் பெற வேண்டும். இந்தக் கோவிலுக்கு வரும் அனைவரும் அந்த நிலை பெறவேண்டும் என்று நாம் தவமிருக்க வேண்டும்.

அதற்குப் பதில் கோவிலுக்குள் போய்.., “நான் தவமிருந்து.., இந்தத் தெய்வத்தைப் பெறப் போகின்றேன்…” என்றால் இது தவமில்லை.

இந்த உடலான கோவிலுக்குள் அருள் ஞானத்தின் தன்மை கொண்டு
1.அனைவருடைய அன்பையும் நீங்கள் பெருக்க வேண்டும்
2.அனைவரும் மகிழ்ந்திட வேண்டும் என்று இங்கே கூட்டிட வேண்டும்.

இது தான் கோவில். நம் உடலே கோவில்..!

இதைத்தான் திருமூலர் “ஊன்… உடம்பு.., ஆலயமடா…!” என்று பாடினார்.

அவர் சொன்ன நிலைகளை “சிறிதளவாவது உணர்ந்திருக்கின்றோமா..?” சற்று சிந்தித்துப் பாருங்கள்.

 

 

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் – 8

Image

Sastram.jpg

  1. ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்

சாஸ்திரம் என்பது மெய் – சாஸ்திரப்படி நாம் வாழ்கின்றோமா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்

விநாயகனைப் பார்க்கும் போது அந்த மகரிஷிகளின் அருள் ஒளியைத் தனக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும் அதுவே தனக்குள் விதியாக இருந்து ஒன்றி வாழும் நிலையாகத் தனக்குள் முழுமை பெறவேண்டும் என்ற இந்த உணர்வை அன்று சாஸ்திரங்களாக ஞானிகள் உருவாக்கினார்கள்.

சாதாரண மக்களும் இதைப் பெறும் நிலையாக திரும்பும் பக்கமெல்லாம் விநாயகனைக் காட்டி நமக்குள் அதைப் பதியச் செய்துள்ளார்கள். நாம் ஏற்றுக் கொண்டோமா?

விநாயகரோ, முருகனோ சரஸ்வதியோ, இலட்சுமியோ இராமனோ, கிருஷ்ணனோ அனைத்தும் சாஸ்திரத்தில் உண்மை.

ஈசன் என்று சொல்வது நமது உயிர் ஈஸ்வரனாக இயக்குகின்றது. சாஸ்திரப்படி உண்மை. நமக்குள் இயக்கிக் கொண்டிருக்கும் உணர்வின் தன்மை கொண்டு உயிருக்குள் வெப்பமாவது விஷ்ணு சாஸ்திரப்படி உண்மை.

வெப்பத்தின் இயக்கத்தால் ஈர்க்கும் காந்தங்களாக வரும் இந்த நிலை நமக்குள் இலட்சுமி – கவரும் சக்தி கொண்டு காந்தம், என்ற நிலைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

மனிதனாக உருவான பின் கண்ணுக்குள் இருக்கும் கருவிழி மற்றொன்றை இழுத்துத் தனக்குள் பதிவு செய்வது ருக்மணி சாஸ்திரப்படி பெயரை வைத்தான் ஞானி.

அந்தக் காந்தப்புலனால் கவர்ந்திடும் இந்த நிலையை சாஸ்திரப்படி சத்தியபாமா.

எவர் தவறு செய்தாலும் எப்பொருளைப் பார்த்தாலும் இந்த உணர்வின் அலைகளைத் தனக்குள் ஆன்மாவாக மாற்றி நாம் நுகரும் உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த உணர்வின் அலையாக நமக்குள் உண்மையைச் சொல்கிறது சத்தியபாமா.

உண்மையைத் தனதாகக் காட்டுகின்றது. தனக்குள்ளே உணர்த்துகின்றது என்று காராணப் பெயரை வைத்தானே

அதெல்லாம் கடவுள் அல்லவா…?

நமக்குள் கண்கள் – கண்ணனாக இருந்து இதனின் உணர்வைக் கண் கவர்ந்து நாம் சுவாசித்து உயிருடன் இயக்கப்படும் பொழுதுதான் கண்ணன் தான் சங்கநாதம் ஊதியபின் தான் குருக்ஷேத்திரப் போரே.

எதனின் நிலையை நாம் நுகர்கின்றோமோ நமக்குள் பதிவு செய்த நல்ல எண்ணங்களுக்கும் நல்லவை ஆகும் போது அந்த மகிழ்ச்சியின் நிலைகள் அதற்குள் மகிழ்ச்சியாகின்றது.

மாறுபட்ட நிலையாகி எதிர் நிலையாகும் போது போர் முறையே வருகின்றது. நமக்குள் மனக் கலக்கமும் வருகின்றது என்று காட்டினானே சாஸ்திரத்தில் அது பொய்யா…?

இவர்கள் சொல்கிற மாதிரி

1.கண்ணன் திருடன் என்றும் பல லீலைகள் ஆடுகின்றான் என்றும் இந்தச் சாஸ்திரங்களைத் தலைகீழாக மாற்றிச் சொல்லி

2“கண்ணன் எனக்குச் சொந்தமானவன்.., என்றும் “வட கிளை.., தென் கிளை..,” என்ற நிலைகளும்

3.பார்த்தசாரதிக்கு நைவேத்தியம் செய்தேன்…, சாங்கியங்களைச் செய்தேன்..,

அதனுடைய நிலைகள் இருப்பது அந்தக் கண்ணன் அந்தச் சாஸ்திரம் அது பொய்யா…? அது மெய்யா…? என்று சிந்தித்துப் பாருங்கள்.

அண்டத்தின் நிலைகள் இந்தப் பிண்டத்திற்குள் எவ்வாறு இயக்குகிறது என்றும் ஒவ்வொரு சரீரத்திலேயும் சேர்த்துக் கொண்ட நம்மை மீட்டிக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக இந்த மனித உடலை உருவாக்கியது “இந்தக் கணங்களுக்கெல்லாம் ஈசனாக.., (கணேசா) இருந்தது உயிர்” என்று அவன் சாஸ்திரத்தை வகுத்தானே அது பொய்யா…?

சூட்சமமாக மறைந்திருக்கும் சக்தியின் நிலைகள் உடலாக உறைந்தது “சிவம்” என்று சொன்னானே அது பொய்யா…?

நாம் எண்ணும் எண்ணம் எதுவாக இருந்தாலும் விஷ்ணுவான உயிர் தனக்குள் கவர்ந்து கொண்ட காந்தம் இலட்சுமி கவர்ந்து அந்த உயிருடன் இயக்கப்பட்டு சுழலின் நிலைகளில் அந்த எண்ணத்தை ஜீவ அணுவாக உருவாக்குவதை “விஷ்ணுவின் மகன் பிரம்மா” என்று சொன்னானே.., அந்தச் சாஸ்திரம் பொய்யா…?

அந்த உணர்வின் சக்தி ஜீவ அணுவாகி உயிருடன் ஒன்றி இயக்கி உடலாககச் சிவமாக மாற்றினானே, இது பொய்யா…? நன்றாக இதைச் சிந்தித்துப் பாருங்கள்.

புழுவிலிருந்து மனிதனாகத் தோன்றும் வகையிலும் நம் உடலிலுள்ள காந்தப்புலன் தன்னுடன் இணைத்து கண்ணுக்குள் இருந்த காந்தமும் அதனுடன் இணைந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்கி அந்த உணர்வின் சத்தாக நமக்குள் உணர்த்தி இயக்கியதே “பார்த்தசாரதி” என்றும் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை “கண்ணன் அர்ச்சுனனுக்கு உறுதுணையாக இருந்தான்.., வித்தைகளைக் கற்றுக் கொடுத்தான்..,” என்று சாஸ்திரத்தைச் சொன்னானே.., அது பொய்யா…?

வட கிளை தென் கிளை என்று பார்த்தசாரதி கோவிலில் நாங்கள் சொல்வதுதான் உண்மை நீங்கள் சொல்வதுதான் உண்மை யானைக்கு எப்படி நாமமிட வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் போட்டார்கள்.

அந்தக் கடவுள் என்ன ஆனது?

இவர்கள் கடவுளுக்காக வேண்டி வாதாடுகின்றார்களே..! கடவுள் இவர்களுக்கு உண்மையின் நிலையை உணர்த்துகின்றாரா…? அல்லது கடவுளுக்காக வேண்டி வாதாடுகின்றார் என்றால்.., “கடவுளைக் காட்டிலும் இவர்கள் பெரியவர்களா…!

நமக்குள் (உள்) நின்று நாம் எண்ணிய உணர்வின் தன்மை எவ்வாறு இயக்குகின்றது என்று சாஸ்திரத்தைக் காட்டினானே அது பொய்யா…? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இதையெல்லாம் மதங்களாக்கப்பட்டு மதங்களின் அடிப்படையில் கொண்டு வாழ்க்கையை உயர்த்திட வேண்டும் என்று வாழ்ந்தாலும்

1.எத்தனை காலம் நீ வாழ்ந்திடப் போகின்றாய்?

2.அப்படி வாழ்ந்தவர்கள் எத்தனை பேர் இன்று இருக்கின்றார்கள்?

3.பிறரைப் பழித்தோ பிறரை அழித்தோ பிறரை இம்சித்தோ தனக்குச் செல்வத்தைச் சேர்த்தவர்கள் “எத்தனை கோடிப் பேர்.., இருக்கின்றார்கள்…? வாழ்கின்றார்கள்…?

தெய்வத்தின் பெயரால் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவித்து மடாதிபதிகள் என்ற பெயரால் செய்து இன்று எத்தனை மடாதிபதிகள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்…?

பல நிலைகள் தனக்குள் மதத்தின் அடிப்படையில் சுகங்களைத் தேடினாலும் மக்களுக்கு நீ என்ன சேவை செய்தாய்…? உண்மையினுடைய நிலைகளை எதை நீ உணர்த்தினாய்…?

ஆக சாஸ்திர விதிகளின் தன்மை கொண்டு தனக்கு மாறாக நடந்தால்.., அவனைக் கொன்று புசிக்கத்தான் மடாதிபதிகளால் முடிந்ததே தவிர “அவனை வாழ வைக்கும் வழி இல்லை”.

அரச காலங்களில் கொடுத்த அந்த நிலைகளைத் தனக்கென்று சாதகப்படுத்தி மக்களுக்கு இன்று உணர்த்த நிலைகள் கொண்டாலும் விஞ்ஞான அறிவு கொண்ட நிலைகளில் மடாதிபதிகள் மக்களுக்கு ஆக வேண்டி என்ன செய்தார்கள்?

இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்த்தோமா…? உலகெங்கிலும் இந்த நிலைதான். நான் பெரிதா…? நீ பெரிதா…? என்று ஆட்சி புரிவதில் சண்டை வரும்.

இன்று கோவில்களில் “நான் பெரியவன்.., நீ பெரியவனா..,!” என்னுடைய ஆட்சிதான் இருக்கும் என்று அங்கேயும் தகராறு.

ஆலயங்களில் எவன் வலு பெற்றதோ அவனின் நிலைகள் கொண்டுதான் அர்ச்சனைகள் செய்வதோ அபிஷேகங்கள் செய்வதோ எல்லாமே.

எல்லா ஆலயங்களிலும்.., இதே நிலை தான்.

ஆண்டவன் என்று யார் மதித்தோமோ அந்த ஆண்டவனைப் பழித்திடும் நிலையாக நம்முடைய செயல்கள் அமைந்து கொண்டிருக்கின்றது.

ஞானிகள் மக்களைக் காப்பதற்காகக் காட்டிய நிலைகளைத் தன் சுகபோகத்திற்காக மெய்ப் பொருளை அழித்துவிட்டு இன்று உலகெங்கிலும் தீமைகளை விளைவிக்கும் நிலைகளே உருவாகிவிட்டது.

மகான்களைப் போற்றித் துதித்தாலும் அந்த மகான்களுடைய நிலையைத் “துளி அளவாவது..,” நமக்குள் எடுத்து மனிதனைக் கடவுளாக உருவாக்கப்பட்டது அவனை மதிக்க வேண்டும் என்ற நிலைகள் வேருடன் புதைந்துவிட்டது. மறைந்துவிட்டது.

ஞானிகள் காட்டிய அருள் வழிகளை நம் உடலுக்குள் நம் காந்தம் கவர்ந்த உணர்வின் செயலாக நாம் அறிந்தாலும்.., “அந்த அறிவின் ஞானம் அனைத்தும் மகா சரஸ்வதி..,” என்று மனிதனின் அறிவிற்குள் ஞானம் வளர்ந்தது என்று சொன்னானே அது பொய்யா…?

கவர்ந்து கொண்ட உணர்வனைத்தும் படைக்கும் திறன் பெற்றது பராசக்தி. மனிதனுக்குள் அனைத்தும் உணர்ந்து ஒவ்வொன்றும் உருவாகும் ஆற்றல்மிக்க இச்சக்தி “நமக்குள் பராசக்தியாக வீற்றிருக்கிறது” என்று சொன்னானே அது பொய்யா…?

இவ்வாறு உருவாக்கும் நிலைகள் கொண்டு நம் ஆறாவது அறிவு மாற்றியமைக்கும் திறன் கொண்டதும் “பிரம்மாவைச் சிறைப்பிடித்தான் முருகன்” மனிதனின் ஆறாவது அறிவு கொண்டு உலகையே படைத்திடும் நிலையும் ஒவ்வொன்றயும் புதிதாகச் சிருஷ்டிக்கும் தன்மை பெற்றது மனிதனின் அறிவு.

அத்தகையை மனிதனின் அறிவின் தன்மையை – நமக்குள் கடவுளாக இருக்கும் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு இன்று எதைச் சிருஷ்டிக்கின்றோம்?

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்?

கொலை செய்யும் உணர்வுகளைச் சிருஷ்டிக்கின்றோம். மற்ற மதத்தை உருவாக்கி மற்ற மதத்தை அழித்திடும் உணர்வை மனிதனுக்கு மனிதன் போர் செய்யும் நிலைகளும் மனிதனுக்கு மனிதன் அழித்திடும் நிலைகளைத்தான் நாம் உருவாக்கியுள்ளோம்

1.நம் ஆறாவது அறிவின் துணை கொண்டு மனிதனை மனிதனாக மதித்து நடக்க வேண்டும்.

2.மனிதனின் வாழ்க்கையில் மனிதனாகப் பிறந்த நிலைகளை மதிக்க வேண்டும்

3.இந்த உடலை விட்டு நாம் சென்றபின் நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அந்த ஞானிகள் இத்தனை சாஸ்திரங்களையும் உருவாக்கினார்கள்.

4.மக்கள் அனைவரும் அந்த எல்லையை அடைய வேண்டும் என்று தான் வழி காட்டியுள்ளார்கள்.

5.விநாயக தத்துவத்தில் காட்டியபடி நாம் மகரிஷிகளின் உணர்வை நமக்குள் வினையாகச் சேர்க்க வேண்டும்.

6மகரிஷிகளின் அருள் உணர்வைத் தனக்குள் விளைய வைக்க வேண்டும்.

7.மகரிஷிகளின் அருள் உணர்வை விளைய வைத்தால் அதன்வழி நம் வாழ்க்கையில் வந்த எத்தகைய இருளையும் போக்கிட முடியும்.

8.மெய்ப் பொருளைக் காண முடியும் மெய் ஒளி பெற முடியும்.

ஆகவே, நாம் அனைவரும் ஞானிகள் காட்டிய சாஸ்திரத்தைக் கடைப்பிடிப்போம்.