Acts of departed souls from bodies

Image

Soul protection.jpg

Acts of departed souls from bodies

Today in several parts of the earth we see some persons remembering about their previous life and giving the names of their father mother and other relations in that life.

How does this happen?

There are some people who are said to be haunted by some spirit or some devil has entered  into them. No devils comes and enters into any body.

The spirits in the spirit world to execute their wishes enter into the bodies of like minded persons and act. A soul without a body that has entered into  a body will leave the body only when the soul which belongs to that body leaves that body.

In some cases the soul without a body that enters into another body is more powerful than the original soul of that body and by over powering that soul exerts its influence.

In such cases we say a devil has entered into the body. The bodies into which such powerful souls have entered do not survive for a long time but have an early death.

At that time the original soul and the other soul separate. The second soul that had entered into the body forgets all about its previous birth as it has entered into another body.

It feels the relations of the body in which it has entered are its relations. No soul takes birth as long as its blood relations are alive.

When a soul which has entered another body and comes out of that body when that body dies takes rebirth in another womb it remembers about the life of the body in which it had entered in its previous life.

This is how some persons remember their relations in their previous birth. It is only some of the souls that had entered into another body and then taken a rebirth that are able to tell about previous births.

All the souls that enter into other bodies cannot take a rebirth. Only those souls that entered into other bodies with good thoughts and acted will be able to take another birth.

“வெளியிலிருந்துதான் நமக்குள் தீமை வருகின்றது” – எப்படி…?

meditation force.jpg

“வெளியிலிருந்துதான் நமக்குள் தீமை வருகின்றது” எப்படி…?

நான் உலக அனுபவம் பெறுவதற்காக குருநாதர் என்னைக் காட்டிற்குள் செல்லச் செய்தார்.

பல தொல்லைகளான இடங்களுக்குப் போனவுடனே என் உடலில் பதட்டம் வருகின்றது பயம் வருகின்றது.

அப்பொழுது குருநாதர் அதை உன்னால் அடக்க முடியவில்லை என்றால் “அது தானே உன்னை இயக்குகின்றது.., அது தானே உன்னை ஆட்சி புரிகின்றது.., நீ அல்லவா அதை அடக்க வேண்டும்…,” என்பார்.

அது உள்ளே சென்று உன்னை இயக்குகின்றது. உன்னை வேதனைப்படச் செய்வது யார்?

1.”வெளியில் இருந்து தான்” உன் உடலுக்குள் போகின்றது.
2.அதை நீ தடுத்துப் பழக வேண்டும் அல்லவா.
3.நான் தீமையைத் தடுக்கும் ஆயுதம் கொடுத்திருக்கின்றேன்.
4.நீ ஏன் அதைப் பயன்படுத்தித் தடுக்கவில்லை?
5.தடுக்கவில்லை என்றால் அது அந்த வேலையைச் செய்யும் என்று என்னைத் தெளிவாக்கினார்.

சில பேர் தியானம் இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டு அந்தத் தியானம் ஒன்றைத்தான் சொல்கின்றார்களே தீமையைத் தடுத்துப் பழகும் ஆற்றலைச் செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று உணரவில்லை
1.என்னை இப்படிப் பேசுகின்றான்.., நான் எத்தனை நாள் பொறுத்துக் கொண்டிருப்பது…?
2.கடன் கொடுத்தவன் பணம் திரும்பத் தர மறுக்கின்றான்.., நான் எத்தனை நாள் தான் பொறுத்துக் கொண்டிருப்பது…? என்று இப்படி மாற்றிக் கொள்கின்றார்கள்.

நாம் எண்ணியதைத்தான் நம் உயிர் உருவாக்குகின்றது. கண்கள் அந்த வழியைக் காட்டுகின்றது.

குருநாதர் எமக்கு உபதேசித்தது ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாகவும் ஒவ்வொரு உடலையும் கோவிலாகவும் மதித்து நீ செயல்பட வேண்டும் என்றார்.

அப்பொழுது “அவர்களிடமிருந்து பகைமை மறைந்து.., அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்” என்ற எண்ணம் எனக்கு வருகின்றது.

அவர்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்த வேண்டும் என்று எண்ணும் பொழுது “என் உடலான.., இந்த ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துகின்றேன்”.

“நீங்கள் நன்றாக ஆக வேண்டும்” என்று நான் எண்ணினால் எனக்குள் நல்ல நிலை ஆகின்றது.

இப்பொழுது யார் நமக்குத் தீமைகள் செய்தார்களோ அவருக்கும் “நல்லது செய்யக்கூடிய எண்ணம் வரவேண்டும்” என்று சொன்னால் அந்தத் “தீமையின் உணர்வுகள்” நமக்குள் வருவதில்லை.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று சொன்னால் அவரைப் பற்றிய “வெறுப்பான உணர்வுகள்” நம் உடலுக்குள் வருவதில்லை.

அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும் என்று இப்படித்தான் எண்ண வேண்டுமே தவிர அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று சொன்னால் அவர் கெட்டதைத்தான் நல்லதாக்கும். அவர் செய்யும் தவறுக்கு ஊக்கம் கொடுத்த மாதிரி ஆகிவிடும்.

1.அவர் எல்லோருக்கும் நன்மை செய்யும் எண்ணம் வரவேண்டும்.
2.எல்லோரிடமும் பண்பும் பரிவும் காட்டும் எண்ணங்கள் வரவேண்டும்
3.அந்த அருள் ஞானம் அங்கே வர வேண்டும் என்று சொன்னால் இந்த உணர்வுகள் அவர்களைத் தவறு செய்ய விடுவதில்லை.

அப்பொழுது இதை நாம் வெறுமனே சொல்ல முடியாது.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று இதைக் கலந்து நம் எண்ணங்களுக்கு “முதலில்” வலிமை கொடுக்க வேண்டும்.

இப்படி நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் உங்கள் குடும்பத்தில் “எத்தகையை சங்கடங்கள் வந்தாலும்” மாற்றி அமைக்கலாம்.

ஒரு விபத்தையோ மற்ற அதிர்ச்சி தரக்கூடிய நிலைகளை உற்றுப் பார்த்தால் உடனடியாக ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

விபத்தில் உடலை விட்டு ஆன்மா பிரிந்திருந்தால் அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

அடிபட்டிருந்தால் அவர்களுக்கு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி கிடைக்க வேண்டும். அவர்கள் பூரண குணம் அடைந்து சீக்கிரம் எழுந்து நடக்க வேண்டும்.

அந்த அருள் சக்தி கிடைக்க வேண்டும் என்று இப்படித்தான் நாம் நினைக்க வேண்டும்.

உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் போகின்றோம். ஆனால், தீமைகளை நமக்குள் புகாது தடுக்கும் நிலையை எண்ணாதபடி நாம் செய்தோம் என்றால் அங்கே நடந்த விபத்தின் வேதனைகள் நமக்குள் வந்து நடுங்கச் செய்துவிடும்.

அதைப் பார்த்ததும்.., உடனே “கிடு.., கிடு.., என்று உடல் நடுக்கமாகிவிடும். நம்முடைய அடுத்த நல்ல செயல்கள் அனைத்துமே தடையாகி “இரண்யன்” ஆகிவிடும்.

அதவாது நம் நல்ல குணங்களைக் கொன்றுவிடும். அதனால் தான் இரண்யன் என்று பெயர் வைக்கின்றார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் மனிதன் நாம் எப்படி வாழ வேண்டும் என்ற நிலையாகக் காவியங்களாக படைத்துள்ளார்கள் ஞானிகள். ஏனென்றால் இயற்கையை நாம் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்படிக் கருத்தினைத் தெளிவாக்கிக் காட்டினார்கள்.

அந்த மெய்ஞானிகள் உணர்த்தியதைத்தான் உங்களுக்குள் சிறுகச் சிறுகச் சொல்லி வருகின்றோம்.

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் – 7

Image

Abishekam - temple.jpg

  1. ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்

சாமி சிலைக்கு ஞானிகள் பல வகையில் அபிஷேகம் செய்யச் சொன்னதன் நோக்கம்

 

கோவிலுக்குச் செல்பவர்கள் இன்று நடைமுறையில் எல்லா அபிஷேகங்களையும் செய்வார்கள்.

செய்துவிட்டு “சாமிக்கு அபிஷேகம் செய்து.., நான் என்னத்தைக் கண்டேன்? சாமிக்காக வேண்டி.., நான் எத்தனை நாள் விரதம் இருந்தேன்? எந்தச் சாமியைக் கும்பிட்டு நான் என்ன பண்ணுவது..,?

இப்படித்தான் எண்ணுகின்றார்கள்.

ஏனென்றால், வாழ்க்கையில் தீமையான உணர்வுகள் வருவதை அவ்வப்பொழுது துடைக்காமல் விட்டுவிட்டால் என்ன ஆகும்? ஆக, அழுக்குச் சேர்ந்துவிட்டால் நல்லதைக் காண முடியுமா? முடியாது.

ஒரு பாத்திரத்தில் அழுக்குப்படுகின்றது. உடனே அதைச் சுத்தப்படுத்திவிட்டால் அழுக்குகள் போய்விடும். சுத்தப்படுத்தாது விட்டுவிட்டு அப்புறம்.., “சுரண்டு… சுரண்டு.., என்று சுரண்டினால்.., பாத்திரம் தேயத்தான் செய்யும்”.

நல்ல உணர்வுகளை நமக்குள் பெறுவதற்காக வேண்டித்தான் ஞானிகள் சிலைகளை வைத்தார்கள். நாம் யாராவது சிலைகளை மதிக்கின்றோமா?

ஆனால், இப்பொழுது நாம் எப்படி மதிக்கின்றோம்?

1.கல்லைக் கடவுளாக்கிவிட்டோம்.

2.நம் மனதைக் கல்லாக்கிவிட்டோம்.

3.அந்தக் கல் தான் நமக்குச் செய்கின்றது என்று நினைக்கின்றோமே தவிர

4.“கல்லில் காட்டப்பட்ட.., அந்த ஞானத்தை எடுக்கச் சொன்ன நிலைகளை..,”

5.ஞானிகள் சொன்னதை யாரும் நாம் எடுப்பதில்லை.

கோவிலில் பாலாபிஷேகம், தேனாபிஷேகம், சந்தனாபிஷேகம் செய்வது எதற்காக என்று நாம் தெரிந்து கொள்தல் வேண்டும்.

1.பாலைப் போல மணம் பெறவேண்டும்.

2.தேனைப் போன்ற இனிமையான வாழ்க்கை நாங்கள் வாழ வேண்டும்.

3.சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெறவேண்டும்.

4.பன்னீரைப் போன்ற நறுமணம் நாங்கள் பெறவேண்டும்.

5.மகிழ்ந்து வாழும் சக்தி நாங்கள் அனைவரும் பெறவேண்டும்.

6.எங்கள் குடும்பத்தில் உள்ளோரும் நாங்கள் பார்க்கும் குடும்பங்களில் உள்ளோரும் மகிழ்ந்து வாழும் சக்தி பெறவேண்டும்.

இப்படிப்பட்ட நல்ல மனம் வர வேண்டும் என்று எண்ணுவதற்குத்தான் ஞானிகள் அதைச் செய்யச் சொன்னார்கள்.

இப்படி எண்ணினால் நாம் எண்ணிய அந்த நல்ல மணங்கள் அனைத்தும் புருவ மத்தியில் உயிரில் படுகின்றது. அப்பொழுது நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் நடக்கின்றது.

நாம் எண்ணி எடுத்த பால் தேன் சந்தனம் மலர்கள் என்று “அந்தந்த மணத்திற்குரிய.., உணர்ச்சிகள் தோன்றுகின்றது”. அந்த உணர்வுகள் எல்லாம் நம் இரத்தத்தில் கலக்கின்றது. அப்பொழுது பகைமை உணர்வுகளை நாம் மறக்கின்றோம்.

அதே சமயத்தில் பிறரின் தீமையான உணர்வு நமக்குள் வராது தடுக்கப்படுகின்றது. அருள் உணர்வுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்க்கின்றோம்.

ஆகவே, பகைமைகளை மறப்பதற்கும் நல்ல உணர்வுகளைச் சேர்ப்பதற்கும் தான் கோவிலில் உள்ள சிலைக்குத் தேனாபிஷேகம், பாலாபிஷேகம் சந்தனாபிஷேகம் பன்னீர் அபிஷேகம் செய்கின்றோம்.

வழக்கத்தில் உள்ளவர்கள் பாலாபிஷேகம் செய்யும் போது பாருங்கள். ஒரே ஆனந்தமாக இருப்பார்கள்.

“ஆகா..,” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே

1.“ஐயோ.., பையன் இப்படி இருக்கின்றானே..,

2.வாங்கியவர்கள் பணம் திரும்பக் கொடுக்க மாட்டேன் என்கிறார்களே..,,

3.கொடுத்தவன் என்னை இப்படி ஏமாற்றிவிட்டாரே…,

4.நான் எல்லோருக்கும் நல்லது செய்கின்றேன், என்னைப் பற்றிக் குறையாகப் பேசுகின்றார்களே…,”

இந்த உணர்வுகளெல்லாம் முன்னாடி இருந்து கொண்டு அங்கே காட்டப்படும் நல்லதையே நினைக்கவிடாது.

அதே மாதிரி தியானத்தில் இருக்கும் பொழுது பார்க்கலாம்.

எப்படித்தான் உட்கார்ந்திருந்தாலும் கூட உள்ளுக்குள் இருப்பது முன்னடி வந்துவிடும். வந்தவுடன் அவன் அப்படிப் பேசினான், இவன் இப்படிச் செய்கின்றான் என்று இது அத்தனையும் எண்ணத்திற்குள் ஓடும்.

ஏனென்றால், இதெல்லாம் நம் ஆன்மாவில் இருக்கின்றது. நம் ஆன்மாவில் உள்ளது அதில் எதனின் வலுவோ அதுதான் நம்மை இயக்கும்.

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் எல்லாம் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால் ஆன்மாவில் உள்ள தீமை செய்யும் உணர்வுகள் எல்லாம் அனாதையாகிவிடும். அனாதையானதை ஈர்க்கும் சக்தியாகும்போது சூரியன் அதனைக் கவர்ந்து கொண்டு மேலே சென்றுவிடுகின்றது.

கோவிலுக்குச் சென்று.., “தீமை செய்யும் உணர்வுகளை” நாம் ஒவ்வொருவருமே அனாதையாக்க வேண்டும். அதற்காகத்தான் ஆலயத்தை அமைத்தார்கள் ஞானிகள்.

வீட்டிலோ அல்லது மற்ற இடங்களிலோ இங்கே தியானத்தில் உட்கார முடியவில்லை என்றாலும் கூட “அங்கே கோவிலுக்குச் சென்று.., அந்தச் சிலையைப் பார்த்தாவது..,” அந்த நல்ல உணர்வுகளை எடுத்தீர்கள் என்றால் தீமை செய்யும் உணர்வுகள் அனாதையாகின்றது.

ஆக, தீமைகள் நமக்குள் புகாதபடி தடைப்படுத்திவிடுகின்றோம். ஏனென்றால் நமக்குள் ஈர்க்க மறுப்பதைச் சூரியன் கவர்ந்து மேலே சென்றுவிடுகின்றது.

மற்றவர்களின் ஈர்ப்பு இருக்கும் பொழுது தீமைகளை இங்கே ஈர்க்கின்றது. நாம் அதை இழுக்கத் தவறினால் சூரியன் கவர்ந்து சென்றுவிடுகின்றது.

அன்றைய காலங்களில் எழுத்தறிவு இல்லை. அதற்காகத் தான் இந்த முறைகளைக் கையாண்டார்கள். நம் ஞானிகள் ஞானிகள் காட்டிய இந்த முறையில் ஆலயங்களை நாம் மதித்தால் பகைமைகளை மறக்கலாம்.

நாம் பகைமைகளை மறப்பதற்கும் நல்ல உணர்வுகளை நமக்குள் சேர்த்துக் கொள்வதற்கும் தான் ஆலயங்களில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் நிலைகளைக் காட்டினார்கள் ஞானிகள்.

நாம் அபிஷேகம் செய்ய வேண்டியது நம்மை ஆண்டு கொண்டிருக்கும் நம் உயிரான ஈசனுக்கு. வெறுப்பையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் வேதனையையும் சலிப்பையும் நம் உயிரான ஈசனுக்கு அபிஷேகம் செய்யக் கூடாது.

அவனுக்கு நாம் அருள் மணங்களையும் அருள் உணர்வுகளையும் தான் அபிஷேகம் செய்யவேண்டும்.

உலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்

Agastiya rishi.png

உலகிலேயே “ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக” தமிழ்நாடு உயர்ந்த நிலை பெறும்

உங்கள் நண்பருக்கோ உறவினர்களுக்கோ நோய் என்று கேள்விப்பட்டால்.., “ஐயோ.., உனக்கு இப்படி ஆகிவிட்டதா…? என்று வேதனைப்படாதீர்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று ஏங்குங்கள். உங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

அந்த நோயால் வேதனைப்படுபவர் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர் நோயிலிருந்து விடுபட வேண்டும். அந்த அருள் சக்திகளைப் பெறும் ஆற்றல் அவருக்குள் வரவேண்டும். அருள் வழியில் அவர் நலமாக வேண்டும் என்ற இந்த உணர்வைப் பெறச் செய்யுங்கள்.

ஒருவருக்குக் கடுமையான தலைவலியே வருகின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்துக் கொண்டு.., “ஒரு மரத்தில் அவர்களைக் கையை வைக்கச் சொல்லி.., உங்கள் தலைவலி நீங்கிப் போகும்..” என்று சொல்லுங்கள்.

தலைவலி நீங்குகின்றதா இல்லையா…? என்று பாருங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் “தீமையை நீக்கக்கூடிய.., சக்திவான்களாக” மாறவேண்டும்.

நான் (ஞானகுரு) சொன்னால் உங்கள் தீமைகள் போகின்றது. ஏன் நீங்கள் சொன்னால் மற்றவர்கள் தீமைகள் போகக் கூடாதா..,? நான் தான் செய்ய வேண்டுமா…?

நாம் அனைவருமே ஞானிகளாக உருவானால் “உலகிலேயே ஞானத்தை வளர்க்கும் பெரும் சக்தியாக.., நமது தமிழ்நாடு.., அந்த உயர்ந்த நிலையாகப் பெறும்”.

உலகைக் காக்கும் அந்த “அகஸ்தியன்” பெற்ற உணர்வை நாம் மீண்டும் வளர்த்து உலகில் உள்ள மக்களுக்குத் தெளிவான உணர்வுகளை ஊட்டும் நிலைகளை நாம் பெறுதல் வேண்டும்.

விஞ்ஞான நிலைகளால் இன்று இந்த உலகமே திசை திரும்பும் நிலைகள் வந்து கொண்டு வருகின்றது.

முன்பு ஒரு காலத்தில் இந்தப் பூமி ஒரு பக்கம் உறைபனியாக நீள வடிவாக வரப்படும் பொழுது தலை கீழாகக் கவிழும் தன்மை வந்தது.

அப்பொழுது அகஸ்தியன் தன் சக்தியினால் அந்த இடத்தைத் திருப்பி அது வரக்கூடிய திசையை மாற்றி அதன் உணர்வை உறையும் இடமாக்கி இதைக் கரைக்கச் செய்து கடலாக மாற்றி இன்றும் பூமியில் அவன் மாற்றி வைத்த நிலைகள் தான் நாமும் வாழ்கின்றோம்.

அன்று இந்தப் பூமி கவிழாது சமப்படுத்தியவன் அந்த அகஸ்தியனே. அதனால் தான் பின் வந்த ஞானியர்கள் அகஸ்தியனைக் கூழையாகப் போட்டுக் காண்பித்திருப்பார்கள்.

1.அகஸ்தியன் உடல் வலிமையைக் காட்டவில்லை.
2.அவன் தன் “எண்ணத்தின் உணர்வின் ஆற்றலால்”
3.அகண்ட அண்டத்தையும் “எட்டிப் பிடிக்கும்..,” ஆற்றல் கொண்டவன் என்றும்
4.மிகவும் சக்தி வாய்ந்தவன் என்பதற்கே கூழையாகக் காட்டினார்கள்.

இப்பொழுது விஞ்ஞான அறிவால் உலகமே நச்சுத் தன்மை பரவிக் கொண்டிருக்கும் நிலையில் மனிதனின் சிந்தனை குறைந்து உருக்குலையும் நேரம் வரும் இந்த நிலையில் அந்த அகஸ்தியன் துருவ நட்சத்திரமான அந்த ஆற்றலின் துணை கொண்டு இந்தப் பூமியில் மக்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் தீமைகளிலிருந்து விடுபடச் செய்தல் வேண்டும்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற நிலைகளில் அன்று தென்னாட்டிலே தோன்றிய அகஸ்தியனின் ஆற்றலை எந்நாட்டவரும் பெறும்படி நாம் செய்ய முடியும்.

அப்பொழுது இந்தப் பூமியும் பரிசுத்தமாகின்றது. நம் ஆன்மாவும் தூய்மையாகின்றது. இந்தக் குறுகிய காலத்தில் நாம் இந்த வளர்ச்சி பெறமுடியும்.

1.இந்தப் பூமியையும் நம் உயிராத்மாவையும்
2.அந்த அகஸ்தியன் துணை கொண்டு
3.அவன் சென்ற வழியில் நாமும் சென்று
4.இந்த உடலுக்குப் பின் அனைவரும் ஒளியின் உடலாகப் பெறும் சக்தியை நாம் பெறுவோம்.

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் – 6

Image

vilakku poojai.jpg

  1. ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்

விளக்கு பூஜையின் தத்துவம் என்ன?

பொதுவாக நமது பெண்கள் மாலை ஆனதும் தீபம் ஏற்றி விளக்கு பூஜை செய்கிறார்கள். இதை தவிர மாதந்தோறும் கோயில்களிலே 108 விளக்கு பூஜை 1008 விளக்கு பூஜை என்று கூட்டு தியானம் செய்கிறார்கள்.

இப்பொழுது கோவிலில் போய் விளக்கை ஏற்றி வைத்து வணங்குகின்றார்கள்.

ஆனாலும், அதே சமயத்தில் இவர்கள் வீட்டில் என்னென்ன கஷ்டங்கள் இருக்கின்றதோ இதை எல்லாம் போக்க வேண்டும் என்ற உணர்வை எண்ணி விளக்கை வைத்து அந்த ஆண்டவனுக்கு இப்படி ஜெபித்து வந்தால் நன்றாக இருக்கும் என்று செய்கிறார்கள்.

வழக்கமாக விளக்கு பூஜை செய்யும்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? புஷ்பத்தை எடுத்து அங்கே போட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

அந்த நேரத்தில் இதற்காக சில பேர் மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு போடுவார்கள். ஆக இதனால் பலன் ஏதுமில்லை.

இதெல்லாம் பக்தி மார்க்கங்களில் ஒன்று சேர்த்து வாழ்வதற்கு ஒர் இணைப்புப் பாலமாகத்தான் அமைகின்றனரே தவிர அவர்கள் இந்த விளக்கு பூஜையினால் பலன் இல்லை. ஒன்று சேர்த்து வாழ முடியும்.

இந்த விளக்கு பூஜை நடந்து முடிந்த பிற்பாடு பாருங்கள். ஒருத்தருக்கொருத்தர் இந்த குறைபாடுகள் தான் வரும்.

ஆக குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா? இல்லை. நாம் “புற நிலைக்காக..,” விளக்கை வைத்துச் சென்றால் சரியில்லை.

நாம் பாலில் பாதாமைப் போட்டு அதிலே ஒரு துளி விஷத்தைக் கலந்து அந்த உணவைச் சாப்பிட்டால் நம்மை இறக்கச் செய்கின்றது.

இதைப்போலத் தான் விஷத்தன்மை கொண்ட உணர்வுகளில் இருந்து நாம் இதை விடுபடவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

விளக்கைப் பொருத்தியபின் அங்கிருக்கக்கூடிய பொருள்கள் அனைத்தும் தெரிகின்றது.

விளக்கை வைத்தால் எப்படிப் பொருள் தெரிகின்றதோ..,

1.”அந்தச் சுடரைப் போல.., எல்லாவற்றையும் அறிந்திடும்.., அருள் உணர்வுகள்” நாங்கள் பெறவேண்டும்.

2.விஷத்தன்மையை வென்ற மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறவேண்டும்.

3.எங்களை அறியாது வரும் இருள்களை நீக்கிடும் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும்

என்று இப்படித்தான் எண்ணுதல் வேண்டும்.

ஏனென்றால், நாம் வாழ்க்கையின் நிமித்தம் செல்லும் பொழுது நம்மை அறியாமல் நம் சந்தர்ப்பங்கள் உண்மை நிலைகளை அறியவிடாது மறைத்து விடுகின்றது. அப்பொழுது நமக்குள் இருள் சூழ்ந்து நாம் செய்வதறியாது சிந்தனை குறைகின்றது.

இருள் சூழச் செய்யும் அத்தகைய நிலைகளை நாம் மாற்றுவதற்குத்தான் ஞானிகள் சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும் வண்ணம் இதை உருவாக்கினார்கள்.

1.சிந்தனை குறையும் நிலைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ளவும்

2.சிந்தித்துச் செயல்படும் திறனை வளர்க்கவும்

3.மனிதர்கள் தம் வாழ்க்கையில் தெளிந்து தெரிந்து தெளிவான வாழ்க்கை வாழ்ந்திடும் ஆற்றல் பெறுவதற்காகத்தான் விளைக்கைக் காட்டினார்கள்.

ஆகவே விளக்கைக் காட்டும் பொழுது நாம் எண்ண வேண்டியது எது?

1.பொருளறிந்து செயல்படும் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா

2.எங்கள் குடும்பத்தில் அனைவரும் பொருளறிந்து செயல்படும் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா

3.இந்த ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலை பெற அருள்வாய் ஈஸ்வரா.

இந்த அருள் ஒளியின் சுடரை நாம் நமக்குள் பெருக்கும் பொழுது வாழ்க்கைப் பயணம் இனிதாகின்றது. வழியறிந்து செயல்படும் ஞானம் கிடைக்கின்றது.

அந்த ஞானம் கிடைக்கும் பொழுது அருள் செல்வத்தால் என்றுமே மகிழ்ந்து வாழ முடியும். மற்றவர்களுக்கும் நாம் தெளிந்திடும் ஞானத்தை ஊட்ட முடியும்.

மக்கள் அனைவரும் ஞானத்தால் வெறுப்பை மறந்து அரவணைத்து ஒன்று சேர்ந்து வாழும் அருள் சக்தி பெற முடிகின்றது.

இவ்வாறு தெய்வீக அன்பையும், தெய்வீகப் பண்பையும் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்று எண்ண வைத்தார்கள் ஞானிகள்.

“நம் எண்ணங்களை ஒன்று சேர்த்தால்” என்றுமே சந்தோஷமாக வாழலாம் நாம் ஒவ்வொரு சரீரத்திலும் நல்ல உணர்வுகளைச் சுவாசித்து தன்னை தற்காத்துக்

Image

Happiness.jpg

“நம் எண்ணங்களை ஒன்று சேர்த்தால்” என்றுமே சந்தோஷமாக வாழலாம்

நாம் ஒவ்வொரு சரீரத்திலும் நல்ல உணர்வுகளைச் சுவாசித்து தன்னை தற்காத்துக் கொள்வதற்காக எடுத்துக் கொண்ட “அந்த உணர்வுகளே..,” நம்மை மனிதனாக உருவாக்கியது.

அதாவது சிந்தித்துச் செயல்படும் ஆற்றலும் சிந்தித்துச் செயல்படும் இந்த உணர்வின் எண்ணமும் அதற்குத்தக்க அங்கங்களும் அமைந்து அந்த உணர்வின் ஆற்றலால் எதையுமே சிருஷ்டிக்கும் தன்மை கொண்ட மனித உடலை நாம் பெற்றுள்ளோம்.

பரிணாம வளர்ச்சி பெற்று மனிதனாக வந்த நாம் இன்று என்ன செய்கின்றோம்?

நாம் எதையெல்லாம் நன்மை என்று எண்ணுகின்றோமோ “அந்த நல்லதை எண்ணி.., நாம் செயல்படும் நிலைகளில்” ஒருவர் தவறு செய்யும் பொழுது நாம் அதை உற்றுப் பார்க்கின்றோம்.

இது நம்முடைய சந்தர்ப்பம்.

பிறர் செய்யும் தவறைப் பார்த்த பின் சலிப்பு, சங்கடம், சஞ்சலம், கோபம் குரோதம், அவசரம், ஆத்திரம், அந்த உணர்வின் நிலைகளை நம் எண்ணத்தால் நமக்குள் சேர்த்துவிடுகின்றோம்.

இவை அனைத்துமே விஷமான உணர்வுகள்.

அதே மாதிரி வீட்டில் எல்லோரும் நல்லதை நினைக்க வேண்டும் என்று நினைப்போம். “அப்படி இருக்க வேண்டும்.., இப்படி இருக்க வேண்டும்..,” என்றெல்லாம் நினைப்போம்.

ஆனால் பையனுக்குக் கல்யாணம் ஆனபின் “பையன்.., இப்படியெல்லாம் செய்கின்றானே…!” என்ற வேதனையை எடுத்துக் கொள்வோம்.

வேதனை என்பது விஷம். வேதனை என்ற சொல்லுக்குள் “அனைத்துமே விஷம்”. சமையல் செய்யும் பொழுது, பலகாரங்களை நல்ல முறையில் பக்குவமாகச் செய்துவிட்டுக் கடைசியில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் என்னவாகும்…?

சுவை அனைத்தும் மாறிவிடும்.

பையன் செய்யும் தவறைப் பார்த்தபின் நாமும் அதைப் போன்ற நிலையை அடைகின்றோம்.

எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றோம். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் குடும்பத்திலும் தொழில் செய்யும் இடத்திலும் கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை நாம் அதிகமாக நுகர வேண்டியிருக்கின்றது.

இப்படி நம் வாழ்க்கையில் காலையிலிருந்து இரவு படுக்கப்போகும் வரை எத்தனையோ பேர்களைப் பார்க்கின்றோம். ஏமாற்றுபவர்களை வேதனைப்படுபவர்களை சங்கடப்படுபவர்களை கோபப்படுபவர்களை நாம் எல்லாவற்றையும் பார்க்க நேர்கிறது.

இந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் ஓம்.., நமச் சிவாய, ஓம்.., நமச் சிவாய என்று சதா சிவமாக நம் உடலாக மாறிக் கொண்டேயிருக்கிறது.

நம் உயிர் உடலுக்குள் அவைகளை உருவாக்கிக் கொண்டேயுள்ளது. அதன் வழியில் நம்முடைய உணர்வையே அது மாற்றி விடுகின்றது. அதை மாற்ற வேண்டுமல்லவா?

அதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

நாம் தீமைகளை மறந்து பேரருளின் உணர்வை நமக்குள் சேர்த்துச் சிவமாக்கி எல்லோருக்கும் அந்த நல்ல நிலைகள் பெறவேண்டும் என்ற உணர்வை உடலாக்கினால் நமக்குள் ஒன்று சேர்த்து வாழும் உணர்வுகள் வரும்.

“நம் எண்ணங்கள்.., ஒன்று சேர்த்தால்..,” என்றைக்குமே சந்தோஷமாக இருக்கும். அதுதான் “கல்யாணராமா..,”

இராமாயணத்தில் ஜனக சக்கரவர்த்தி சீதாவை திருமணம் செய்ய சுயம் வரத்தை ஏற்படுத்துகிறார்.

எல்லோரும் வருகிறார்கள். அவரவர்கள் திறமையைக் காட்டுகிறார்கள். திறமையைக் காட்டினால் சீதாவைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று காட்டுகிறார்கள்.

அப்பொழுது இராமன் என்ன செய்கிறான்? தீமை செய்யும் அந்த வில்லை ஒடித்துவிடுகின்றான்.

ஏனென்றால், நம் உடலில் கெட்டதை ஒடிப்பது என்றால் அவ்வளவு சாமானியமானதல்ல. இராமாயணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

தீமை செய்யும் தனுசை இராமன் ஒடித்துவிடுகிறான். அப்பொழுது சீதாவை அரவணைத்துக் கொள்கிறான்.

சீதாவை அரவணைக்கும்போது “கல்யாணராமா”. பிறர் மேல் உள்ள வெறுப்பான குணத்தை நாம் நீக்கிவிட்டால் அந்த வெறுப்பான உணர்வுகள் நீக்கியபின் இரண்டு எண்ணங்களும் ஒன்றாகி விட்டால் கல்யாணராமா.

நம் உடலிலிருக்கும் தீமையை நீக்கி பிறர் மேல் இருக்கும் வெறுப்பான உணர்வை நீக்கிவிட்டு பிறர் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணிவிட்டால் நம் உடலுக்குள் ஒன்று சேர்த்து வாழும்.

1.நமக்குள் இருக்கும் எண்ணங்களை எப்படி ஒன்று சேர்க்க வேண்டும்?
2.பகைமை உணர்வு வளராதபடி எப்படித் தடுக்க வேண்டும்?
என்று தான் கோவில்களிலே உருவம் அமைத்து அருவ நிலையைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஆனால், அந்த ஞானிகள் காட்டிய நிலைகளை நாம் இப்படி நினைக்கிறோமா..? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

அரளிப் பூவிற்குண்டான மருத்துவ குணம்

arali.jpg

“அரளிப் பூவிற்குண்டான மருத்துவ குணம்”

நூறு சதவீதம் ரோஜாப்பூவும் நூறு சதவீதம் வேப்பிலையும் நூறு சதவீதம் விஷச் செடியும் இதெல்லாம் கலந்தால் “அரளிச் செடியாக..,” மாறுகின்றது.

அரளி விதையை நாம் “சாப்பிட்டோம் என்றால்” ஆளைக் கொல்கின்றது. அரளிப் பூவின் “மணத்தை நுகர்ந்தால்’ தீயதை மாற்றுகின்றது.

சிலர் கால்கள் இரண்டும் ரொம்ப நாளாக வலிக்கின்றது என்பார்கள், சிலருக்குக் காலையில் எழுந்தவுடன் குதி கால்களில் நடக்க முடியாது. சிலருக்குக் காலில் நீர் வடியும்.

அரளிப் பூவை இலேசாக ஒரு ஓட்டில் போட்டு வறுத்து தேங்காய் எண்ணையில் போட்டு காலில் நீர் வடிபவர்களுக்குப் போட்டோம் என்றால் அந்த விஷ நீரை எடுத்துவிடும். கால்களில் இருக்கும் விஷ நீர் எல்லாவற்றையும் எடுத்துவிடும். கால் வலி பறந்து போகும்.

ஆனால், அரளி விதையைச் சாப்பிட்டால் ஆளைக் கொன்றுவிடும். இதைப் போன்று “ஒவ்வொரு உணர்வுகளும்., எப்படி இயக்குகின்றது..,? என்பதனை குருநாதர் அனுபவபூர்வமாகக் கொடுத்தார்.

காட்டுக்குள் அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் நேரடியாகக் காட்டிய நிலைகளைத்தான் உங்களிடம் சொல்கின்றோம்.

அதையெல்லாம் வாக்குடன் கொடுக்கின்றேன், புரிந்து கொள்ளுங்கள். யாம் சொன்னதை அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்த நம்பிக்கையோடு செய்யவேண்டும். கொஞ்சம் முயற்சி செய்யவேண்டும்.

சாமி சொல்கிறார்.., இதையெல்லாம் செய்தால் சரியாகுமா…? அதெப்படி சரியாகும்..,? என்ற மனது வந்துவிட்டால் என்னவாகும்?

இரண்டு நாளைக்குப் பார்ப்பார்கள். மூன்றாவது நாள் விட்டுவிடுவார்கள். சோம்பேறித்தனம் வந்துவிடும். ஏனென்றால், இந்த மனம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

சரியாகப் போகும் என்று மனதில் எண்ணினால் இதெல்லாம் சரியாகிவிடும். நீங்கள் செய்து பாருங்கள்.

இதை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன் என்றால் நீங்களும் நமது குருவைப் போல பிறருடைய தீமைகளைப் போக்கும் ஞானிகளாக மாற வேண்டும்.

இந்த உணர்வுகளைக் காற்றிலே பரவச் செய்யவேண்டும். நமக்குள் வரும் விஷத் தன்மைகளை அகற்ற வேண்டும்.

மனிதனுக்குள் இனம் மதம் மொழி என்ற பேத நிலைகளில் பரவிக் கொண்டிருக்கும் அசுர உணர்வுகள் அனைத்தும் உங்கள் மூச்சலையால் நீக்கிடல் வேண்டும்.

ஒவ்வொருவரு மனிதனையும் சிந்தித்துச் செயல்படும் ஞானிகளாக மாற்ற வேண்டும். மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எப்படித் தீமைகளை மாற்றினாரோ அதைப் போல நீங்கள் ஒவ்வொருவரும் குரு வழியில் உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்தல் வேண்டும்.

பிறருக்குத் தீமைகள் புகாது தடுத்தல் வேண்டும். இந்த உணர்வின் அலைகள் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் படரவேண்டும்.

உயர்ந்த ஞானிகளாக மாறவேண்டும்.

 

கோவிலில் விளக்கை வைத்து ஏன் காட்டுகிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கின்றோமா? உணர்ந்திருக்கின்றோமா?

Image

vilakku poojai.jpg

  1. ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்

கோவிலில் விளக்கை வைத்து ஏன் காட்டுகிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்கின்றோமா? உணர்ந்திருக்கின்றோமா?

 

நாம் ஒருவரை ஒரு வேலைக்கு அனுப்பும்போது நம் வழக்கத்தில் எப்படிச் சொல்கிறோம்?

“எப்பொழுது பார்த்தாலும் தவறாகத் தான் செய்வார்கள்..,” என்ற நிலையிலேயே தான் நாம் சொல்லி வருகிறோம்.

நல்லபடியாக அந்த வேலையைச் செய்து வாருங்கள் என்று சொல்வதில்லை. அதற்கு மாறாக, “தவறாகச் செய்துவிட்டு வந்துவிடாதீர்கள்..,” என்றுதான் சொல்கிறோம். “வேண்டுமென்றே தவறாகச் செய்துவிடாதீர்கள்..,” என்றும் சொல்வோம்.

நாம் சொல்லும் வாக்குப்படிதான் அங்கே நடக்குமே தவிர “நல்லது செய்து வருவதற்குண்டான.., ஊக்கத்தை நாம் கொடுக்கிறோமா..?” என்றால் இல்லை.

அதற்குத்தான் கோவிலிலே “விளக்கை” வைத்துக் காட்டுகிறார்கள்.

1.நம் வாழ்க்கையில் நிதானித்து.., சிந்தித்துச் செயல்படும் அந்த நல்ல வழியைக் காட்டுவதற்குத்தான் அங்கே விளக்கைக் காட்டுகிறார்கள்.

2.பொறுமை வருவதற்குத்தான் அங்கே விளக்கைக் காட்டுகிறார்கள்.

கோவிலிலே தீபாரதனை காட்டுகிறார்கள். அப்பொழுது தீபத்தின் ஒளியால் அங்கே இருக்கும் அனைத்துப் பொருள்களும் தெரிகிறது.

நம் உடலுக்குள் நல்ல குணங்கள் மறைந்திருக்கின்றது. அப்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்?

1.நமக்குள் உள்ள நல்ல குணங்களைத் தெரிந்து

2.மற்றவர்களுக்கு நல்லதை – அந்தத் தெளிவாக்கும் நிலைகளை நாம் சொல்லிப் பழக வேண்டும்.

3.அதற்காகத் தான் கோவிலிலே விளக்கை வைத்துக் காட்டுகிறார்கள்.

ஆனால், விளக்கைக் காட்டும்போது எத்தனை பேர் இப்படி எண்ணுகிறோம்?

கோவிலிலே அந்த விளக்கைக் காட்டும் போது பார்த்தோம் என்றால் அவரவர்கள் குடும்பத்திற்குத் தக்கவாறு வீட்டில் உள்ள கவலைகளையும் சஞ்சலங்களையும் வேதனைகளையும் எண்ணுவோம்.

1.வீட்டில் பையன் சொன்னபடி கேட்க மாட்டேன் என்கிறான்,

2.வியாபாரத்தில் கொடுத்தவன் கொடுக்கவில்லை,

3.பக்கத்து வீட்டுக்காரன் நான் ஒன்றும் செய்யாமலே எனக்குப் பல தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறான்

என் கணவர்.., (அல்லது) என் மனைவி என்னை எதிர்த்துப் பேசிக் கொண்டிருக்கின்றார்…, என்னை மதிப்பதே இல்லை..,

என்று அவரவர்களுக்குத் தக்கவாறு நுகர்ந்த உணர்வுகள் கொண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றோம்.

பொருளறிந்து செயல்படும் திறன் நாம் எல்லோரும் பெறவேண்டும் என்பதற்குத்தான் “வெளிச்சத்தைக் காட்டி” நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளை எப்படிக் காக்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் அங்கே விளக்கைக் காட்டுகிறார்கள்.

எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும், தொழில் செய்வோர் அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

தொழில் செய்யும்போது நீயா.., நானா..,? என்று போட்டியின் நிலைகள் வரும் பொழுது நாம் தெரியாமால் ஒரு வார்த்தையைச் சொல்லிவிடுவோம் அல்லது அவர்கள் சொல்லிவிடுவார்கள்.

அப்பொழுது.., ஏன் சொன்னார்கள்.., எதனால் சொன்னார்கள்..,? ஏன் அவ்வாறு நம் மீது கோபித்தார்கள்..,? என்று  ஒரு நிமிடம் நாம் சிந்தித்தோம் என்றால்

1.அவர்கள் கோப உணர்வு நம்மை இயக்காது.

2.அந்தக் குற்ற இயல்புகள் அங்கே வராது.

“ஈஸ்வரா..,” என்று நம் உயிரை எண்ணி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும், உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இதை எடுத்தோம் என்றால் தீமையான உணர்வுகளை நிறுத்தி விடலாம்.

துருவ நட்சத்திரம் சர்வ தீமைகளையும் வென்று ஒளியாக மாற்றியது. ஆக, ஈஸ்வரா என்று எண்ணி நிறுத்தும்போது பிறர் வெறுப்பின் உணர்வுகள் உள்ளே புகாது காத்துக் கொள்ள முடியும்.

இதைத் தான் இராமன் வாலியை மறைந்திருந்து தாக்கினான் என்று உணர்த்தியுள்ளார்கள். “மறைந்திருந்து.., தீமையின் செயலாக்கங்களை அடக்கினான்..,” என்றுதான் காட்டுகிறார்கள்.

கோவிலுக்குச் சென்றால் தெய்வீகப் பண்புகள் நாங்கள் பெறவேண்டும், தெய்வீகச் செயலாக எங்கள் செயல் அமைய வேண்டும், இந்தக் கோவிலுக்கு வருவோர் அனைவரும் அந்த தெய்வீகச் சக்தி பெறவேண்டும் என்று நாம் எண்ணினால் ஒருவருக்கொருவர் தீமைகளை மறக்கின்றோம்.

“எல்லோரும் ஒன்றுபட்டு வாழும் நிலை வருகிறது”.

இந்தத் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று ஆலயத்தில் காட்டியுள்ளது போன்று நாம் அனைவரும் ஞானிகள் உணர்த்திய அந்த தெய்வ குணத்தைப் பெறுகிறோம்.

திருடு போன பொருள்களை “எண்ணத்தின் வலிமை கொண்டு” நிச்சயமாக மீட்டிக் கொள்ள முடியும்

Power of human thought.jpg

திருடு போன பொருள்களை “எண்ணத்தின் வலிமை கொண்டு” நிச்சயமாக மீட்டிக் கொள்ள முடியும்

இன்று நீங்கள் சொத்தை அதிகமாகச் சேர்த்து வைத்திருந்தால் அடுத்தாற்போல் உங்கள் மனது எப்படி இருக்கின்றது?

துடுக்.., துடுக்.., துடுக்.., என்று கடிகாரம் அடித்த மாதிரி இருக்கும். “எங்கேயாவது.., திருடி விட்டார்கள்..,” என்று பத்திரிக்கையில் படித்தால் போதும்.

இரவெல்லாம் துடுக்.., துடுக்.., என்று இருக்கும். இவ்வளவு நகைகளையும் எங்கே ஒளித்து வைப்பது…! இவ்வளவு பணத்தையும் எங்கே ஒளித்து வைப்பது..?

வைத்தாலும் இந்த மனது என்ன செய்யும்?

எங்கேயாவது.., “சறுக்..,” என்று சப்தம் கேட்டால் போதும். உடனடியாக முழிப்பு வந்து “பட..படா.., பட.., படா..,” என்று துடிக்க ஆரம்பித்துவிடும்.

ஏனென்றால், கொள்ளை கொலை என்று இன்றிருக்கக்கூடிய உலகத்தில் நாம் எண்ணும் பொழுது இவ்வாறு நமக்குள் வந்துவிடுகின்றது.

நிறையப் பேர் என்ன சொல்கிறார்கள்? சம்பாரித்து வைத்த என் நகைகளைக் காணோம் என் பணத்தைக் காணோம்.., 50 பவுனைக் காணோம் என்று அலறுகின்றார்கள்.

போனால் போகின்றது என்று அதை விடாதீர்கள்.

1.எடுத்துக் கொண்டு போனவனுக்கு நல்ல புத்தி வரவேண்டும்.
2.யாரிடமாவது அவன் சிக்க வேண்டும்.
3.சீக்கிரமே போலீசில் சிக்கிவிடுவான்.
4.சிக்கிக் கொண்டபின் நம் பணம் திரும்ப வரவேண்டும்.
5.தவறு செய்ததை அவன் சிந்திக்க வேண்டும்.
6.தான் செய்த தவறை உணர வேண்டும்

“இந்த மாதிரி எண்ணி.., உங்கள் தியானத்தில் எடுத்துப் பாருங்கள்”. உங்கள் காசு வருகின்றதா இல்லையா என்று பாருங்கள்.

இந்த உணர்வு.., “வேகமாக” வேலை செய்யும்.

பெரும்பகுதியாவனவர்கள் திருடு போனபின் எப்படி எண்ணுகின்றார்கள்?

உங்கள் நகைகளை எல்லாம் எண்ணி “அய்யோ.., போய்விட்டதே.., எல்லாம் போய்விட்டதே.., போய்விட்டதே.., என்று எண்ணினால் என்ன ஆகும்?

இப்பொழுது அதுவும் போய்விட்டது. அன்றைய தினம் நீங்கள் சம்பாரித்த பணத்தையும் எங்கேயாவது வைத்துவிட்டு “அதையும் காணோமே..,” என்று தேட ஆரம்பித்துவிடுவீர்கள்.

இந்தப் பதட்டம் இப்படி வந்துவிடும்.

அதே மாதிரி கையில் ஒரு பையை (BAG) எடுத்துச் செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பதட்டத்திலேயே அதைyum எங்கேயாவது வைத்துவிட்டு என்ன செய்வோம்?

கையில் வைத்திருக்கின்றோம் என்ற எண்ணம் கூட வராது. நாம் எந்தச் சிந்தனையில்லாமல் வந்து விடுவோம்.

“ஐய்யய்யோ.., என் பையை வைத்துவிட்டு வந்துவிட்டேனே..,! இதுவும் எங்கே போனதோ..,? என்ற இந்தப் பதட்டம் கையில் இருக்கின்ற பொருளையும் விட்டுவிடச் செய்துவிடும்.

இதுவெல்லாம் நமக்குள் எது செய்கின்றது? காரணம் என்ன? என்றால் நாம் அல்ல. நாம் தவறு செய்யவில்லை.

என் பொருள் எல்லாம்.., “திருடு போய்விட்டதே” என்று நாம் நுகர்ந்த உணர்வுகள் நம் நல்ல சிந்தனையை இழக்கச் செய்கின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்தெல்லாம் விடுபட நம் குருநாதர் காட்டிய வழியில் அந்த அருள் சக்திகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

1.திருடிச் சென்றவன் நல்லவனாக வேண்டும்.
2.உதவி செய்பவனாக வர வேண்டும்.
3.பிறருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் அவனுக்கு வரவேண்டும்.
4.போலீசில் சிக்க வேண்டும்.
5.அப்பொழுது அவனுக்கு நல்ல ஞானம் கிடைக்க வேண்டும் என்று
6.இப்படிப்பட்ட உணர்வைத்தான்  நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
7.காணாமல் போன பணம் வருகின்றதா.., இல்லையா.., என்று பார்க்கலாம்.

அதையே எண்ணி வேதனையாக எண்ணிக் கொண்டிருந்தால் “இருக்கும் பணத்தையும்” எங்கேயாவது விட்டுவிட்டு இருப்பீர்களே தவிர வேறு ஒன்றும் இல்லை.

ஆகவே உங்களுக்கு எல்லாச் சக்திகளையும் கொடுக்கின்றோம். “நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்”.

ஏனென்றால், இனி வரும் எதிர்காலத்தில் விஷத் தன்மையான உணர்வுகள் உலகம் முழுவதும் பரவப்படும் பொழுது அதிலிருந்து “உங்களை நீங்கள் மீட்டிக் கொள்ள வேண்டும்” என்பதற்குத்தான் இதைச் சொல்கின்றோம்.

உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லிப் பதிவாக்குகின்றோம். இந்த உணர்வுகள் எல்லாம் காற்றிலே படர்கின்றது.

“அதை நீங்களும் எடுத்து.., அந்த அருள் உணர்வுகளைப் பாய்ச்சி.., என் பணம் கிடைத்துவிட்டது..,” என்று சந்தோஷப்பட்டு நீங்கள் சொல்ல வேண்டும்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரைப் போன்று நீங்களும் “பிறருடைய தீமைகளைப் போக்குபவர்களாக” மாற வேண்டும். “நல்ல சிந்தனை உள்ளவர்களாக.., மற்றவர்களையும் மாற்றியமைக்கும் சக்தி.., நமக்கு உண்டு” என்ற நிலைக்கு வர வேண்டும்.

சோகத்திற்கும் சலிப்பிற்கும் சஞ்சலத்திற்கும் வெறுப்பிற்கும் வேதனைக்கும் “உங்கள் உணர்வை.., உயிரிலே மோதவிடாதீர்கள்”.

மனிதனை உருவாக்கிய நல்ல சிந்தனைகள் கொண்டு நாம் வாழ்ந்து வந்தாலும் இந்த விஷமான உணர்வுகள் உயிரில் மோத விடும்பொழுது “அதை மாற்றியமைத்தல் வேண்டும்”.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். எத்தகையை தீமைகளையும் மாற்றியமைப்போம்.

நன்மைகள் பல செய்யத் துணிவோம்,

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள் – 3

Image

Kopuram.jpg

  1. ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட உண்மைகள்

நம்முடைய தத்துவங்களும் அதை உணர்த்தும் ஆலயங்களும் சாதாரணமானதல்ல – தீமைகளை அகற்றிடும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் இடமே ஆலயம்

ஒரு ரோஜாச் செடியிலிருந்து வெளி வரும் மணம் ஒரு வேப்ப மரத்திலிருந்து வரும் மணத்திற்கு அருகில் வந்தால் அதை நீக்கி விடுகின்றது.

வேப்ப மரத்தின் மணம் ரோஜாச் செடியின் மணத்தை உந்தித் தள்ளிவிடும். அருகில் வரவிடாது.

அதைப் போன்று தான் ஒரு வேதனைப்பட்டவன் உணர்வுக்குள் ஒரு மகிழ்ச்சியான உணர்வைச் சொன்னால் இதை நீக்கிவிடும். மீண்டும் அந்த வேதனைதான் வரும்.

இந்த வேதனையான உணர்வுகள் நமக்குள் வந்துவிட்டால் என்னதான் சொன்னாலும் கூட நல்லதைக் கண்டாலும் விஷத்திற்குள் அதைக் கலந்தது போன்று ஆகிவிடும்.

அந்த வேதனை என்ற நிலை நல்ல சொல்லுக்குள் கலந்து அவர்கள் சிந்தனைகளை இழக்கத்தான் செய்யுமே தவிர சிந்தனையை ஊட்டாது. சிந்திக்கும் திறனை விடாது.

“விஷத்தைக் குடித்தபின் நீங்கள் சிந்திப்பீர்களா..,?” சிந்தனையை முழுவதும் இழக்கச் செய்து ஆளைச் சுருட்டிவிடும்.

ஒரு வேதனையான உணர்வு தனக்குள் வந்தால் வாலி. ஆக, யார் அவரைப் பார்த்தாலும் அவர்களுடைய சம வலுவைப் பெற்றுக் கொள்வான் என்று இயக்கத்தின் வலிமை பெறுகிறான் என்று காரணப் பெயரை வைத்து அன்று தெளிவாகச் சுட்டிக் காட்டினார்கள் ஞானிகள்.

சாதாரண வாழ்க்கையில் இருக்கப்படும் பொழுது இந்தத் துயரத்தையும் துன்பத்தையும் தவறு செய்பவர்களையும் இதையெல்லாம் வாழ்க்கையில் நாம் அறிய வேண்டியதிருக்கின்றது.

அறிந்த அந்த உணர்வுகள் நமக்குள் பதிவானாலும் நுகர்ந்து தீமை என்று விலகிச் செல்கின்றோம்.

தீமை என்று விலகிச் சென்றாலும் அடிக்கடி தீமை என்ற உணர்வுகள் வந்து தீமையை உணர்த்தும் நிலை ஆனாலும் கடைசியில் தீமையையே வளர்க்கும் அணுக்கள் நம் உடலுக்குள் பெருகிவிடுகின்றது.

எதைத் தீமை தீமை தீமை என்று எண்ணுகின்றோமோ அதன் உணர்வுகள் தனக்குள் கணங்களுக்கு அதிபதியாகிவிடுகின்றது. இதைத்தான் சிவனுக்குள் நந்தீஸ்வரா.

அதிகமான நிலைகளில் அதைச் சுவாசித்தால் அதன் கணக்கின் பிரகாரம் உன்னுடைய செயல் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? என்று சாஸ்திரங்களில் தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

நெற்றிக் கண்ணைத் திறந்தால் சிவன் சுட்டுப் பொசுக்கிவிடுவான் என்று சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

நமக்குள் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வைப் பதிவாக்கி மீண்டும் கண்ணுக்குள் நினைவுக்குக் கொண்டு வந்து ஈஸ்வரா என்று நெற்றிக் கண்ணான உருவாக்கும் அவனிடம் அந்த அருள் உணர்வை உருவாக்கும்படி வேண்டுதல் வேண்டும்.

மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை காலமறிந்து கருத்தறிந்து செயல்படுதல் வேண்டும், விநாயகருக்கு அங்குசத்தைக் கையில் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக மனிதனாக உருவான பின் அந்தக் கடும் அங்குசத்தை வைத்துத் தீமைகளை அடக்கும் வல்லமை பெற்றவன் என்ற இந்த நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ளது.

ஆகவே, ஒரு நோயாளியைப் பார்க்கும் பொழுது என்ன செய்யவேண்டும்? நமக்குள் பதிவாக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி அதைக் கண்ணின் நினைவுக்குக் கொண்டு வந்து இந்த உணர்வின் நிலையை உயிரான ஈசனிடம் புருவ மத்தியில் ஒன்றுதல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும், எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று உடலுக்குள் செலுத்தி இந்த உணர்வின் வலிமை பெறச் செய்தல் வேண்டும்.

அப்படி வலிமை பெறச் செய்யும் பொழுதுதான் நாம் நுகர்ந்தறிந்த தீமையான உணர்வின் தன்மையை இங்கே பிளக்கின்றது “நரசிம்மா”. நம் ஆன்மாவில் பட்ட தீமையின் நிலைகளை இது அப்புறப்படுத்துகின்றது.

இப்படி நம்மை அறியாமல் வேதனைப்படச் செய்யும் “தீமைகளை அகற்றிடும் ஆற்றலை.., வளர்த்துக் கொள்ளும் இடம் தான் ஆலயங்கள்”.