இன்றைய மனித வாழ்க்கையில் நம்முடைய சபதம் எதுவாக இருக்க வேண்டும்…?

இன்றைய மனித வாழ்க்கையில் நம்முடைய சபதம் எதுவாக இருக்க வேண்டும்…?

 

உயிரை ஈசனாக வணங்குங்கள். உடலைச் சிவனாக மதியுங்கள். கண்ணைக் கண்ணனாக மதியுங்கள்.

காரணம்… நல்லது கெட்டதைக் கண்ணன் உணர்த்துகின்றான். அவன் காட்டிய நெறியின் படி கெட்டது என்று வரும் பொழுது புறப்பொருளை நீக்கும் வழிகள் கொண்டிருக்கின்றோம்.

ஆகவே
1.நம்மை அறியாது புகும் தீமைகளைப் புறப் பொருளை அகற்றுவது போன்று
2.அந்த மகரிஷியின் அருள் ஒளியால் துடைக்க வேண்டும் என்று எண்ணுங்கள்… துடைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

உடலான சிவத்திற்குள் தீய குணங்கள் பட்டபின் நோயாக மாறுகின்றது. அதைத் துடைப்பதற்கு… சிவனுக்கு அந்தத் தீமைகள் வராத வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணுங்கள்.

1.யாரோ உடல்…! என்று எண்ண வேண்டாம்
2.உங்களுடைய உடல் என்றும் எண்ண வேண்டாம்
3.நம் உயிரான நிலைகள் தான் இத்தனையும் படைத்திருக்கின்றான்
4.நமக்குள் செயலாற்றும் நிலைகள் கொண்டு அதை இயக்கும் சக்தியாக அதுவே இருக்கின்றது.

அதை உணர்ந்து இந்தப் பொறுப்பினை நீங்கள் எடுத்துக் கொண்டால் மனித வாழ்க்கையின் புனிதத் தன்மையை அடையலாம்.

1.தான் யார்… நான் யார்…? இந்தப் பிள்ளை யார்…? என்று பிள்ளையார் சுழி போட்டுக் காட்டிய நிலைகளை
2.முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு எல்லாம் நாயகனாக மனித உடலைக் கொடுத்து
3.உடலில் இருக்கக்கூடிய கணங்களுக்கெல்லாம் ஈசனாக உயிரே இயக்குகின்றது என்ற நிலைகளை உணர்ந்து கொள்ளுங்கள்.

மூஷிகவாகனா…! எந்தெந்த குணங்களை நாம் சுவாசித்தோமோ இந்த உணர்வின் தன்மை கொண்டு அதே வாகனமாக அன்றைய செயலும் இன்றைய சரீரமாக வைத்திருக்கின்றது உயிரான ஈசன்.

கணங்களுக்கு அதிபதி கணபதி ஆகவும் அவனே இருக்கின்றான். நாம் எந்தெந்தக் குணங்களை எண்ணுகின்றோமோ அதை அதிபதியாக்கச் செய்து அதன் வழியே மற்றதை ஒடுக்கும் நிலைகளைக் கொண்டு வருகின்றது.

1.உயிரான ஈசனிடம் ஒன்றி ஒளியாகப் பெறுவோம்…
2.என்றும் நிலையாக இருக்கக்கூடிய அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டுமென்று
3.அதைப் பெறும் நிலையாகச் சபதம் எடுத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் எந்தத் துன்பங்கள் வந்தாலும் நோய்கள் வந்தாலும் அதை எல்லாம் நீக்க மகரிஷிகளின் அருள் ஒளி சக்தி பெற வேண்டும் என்று எண்ணி எடுத்து ஆத்ம சுத்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நான் வெறும் வாக்காக சொல்லவில்லை… வெறும் சொல்லாகச் சொல்லவில்லை… அருமருந்தாக உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.

நீங்கள் எண்ணி எடுத்து உங்கள் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள். குருநாதர் எனக்கு இப்படித்தான் அருளினார். உங்களுக்கும் அதே உணர்வின் தன்மையைத் தான் பதிவு செய்கின்றேன்.

பதிவை மீண்டும் எண்ணி
1.வாழ்க்கையில் துன்பத்தைத் துடைக்கும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவேன்
2.என்னை அறியாது வந்த இருளை நீக்குவேன்
3.மெய் ஒளியைக் காண்பேன்… மெய் வழி செல்வேன்
4.அந்த மகரிஷியின் அருள் ஒளி வட்டத்தில் என்றும் நிலையான அழியாத பெரு வீடு பெறுவேன்
5.பத்தாவது நிலையான ஒளி நிலை பெறுவேன் என்று
6.உங்கள் எண்ணத்தில் அதை எல்லாம் எடுத்து வளர்த்துக் கொண்டீர்கள் என்றால் நீங்கள் அதுவாக ஆகின்றீர்கள்.

அதை எல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று நான் (ஞானகுரு) பிரார்த்திக்கிறேன்.

உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்களப்பா…! – ஈஸ்வரபட்டர்

உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்களப்பா…! – ஈஸ்வரபட்டர்

 

நம்மைச் சுற்றியுள்ள பல ஒலிகளிலும்… நம்முடன் எதிர் கொண்டு கலந்துறவாடிப் பேசுபவர்களின் ஒலி அலையிலும்… நம் எண்ண ஈர்ப்பைச் செலுத்தும் நிலையில்… அதற்குகந்த சுவாச… அணு… வளர்ப்பு… உணர்வு சக்திகளைத்தான்… இவ்வாத்ம உயிர் சேமிக்கின்றது.

நம் வளர்ச்சித் தன்மையின் குணப்பிடியே இதில் தான் உள்ளது.

அது மட்டுமல்லாமல்
1.நாம் வாழக்கூடிய இல்லங்களிலும் நாம் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களிலும்
2.ஜீவனுடன் கூடிய உணர்வின் எண்ண ஒலி நாதம் வெளிப்படுத்தும் அலைத் தன்மையின் ஈர்ப்புத் தன்மை
3.எவ் ஒலி கொண்ட எண்ணத்தின் செயலாக குண நிலை சுவாசம் பதியப்பட்டதோ
4.அந்தந்த குணங்களின் அலைகளை இல்லங்களின் சுவர்களும் தரையும் ஈர்த்து
5.அவ்வொலி அலையின் எதிர் அலை சுழற்சி அவ் இல்லத்தில் சுழன்று கொண்டே தான் இருக்கும்.

அதை எல்லாம் சீர்படுத்தத்தான் பழங்கால மனையியல் சாஸ்திரங்களில் தெரிந்தோ தெரியாமலோ சில “நிலைக்கற்களை…” இல்லங்களில் பதிய வைப்பதிலிருந்து… சுவருக்குப் பூசும் “கலவை…” முதல் கொண்டு சில விதிமுறை வழி நிலை ஏற்படுத்தினர்.

பூமியின் தன்மை எப்படி அதன் குண ஈர்ப்புக்குகந்த அமில வெக்கையை வெளிப்படுத்துகின்றதோ அதைப் போன்றே
1.எண்ணத்தில் வெளிப்படுத்தும் உணர்வு குண நாத அலைகள்
2.இல்லங்களில் வாழ்பவர்களின் குண அலையின் எதிர் ஒலி ஒளி
3.அங்கே பரப்பிக் கொண்டே தான் இருக்கும்.

தன் வளர்ப்பின் ஞானச் செயலை வளர்க்க இந்த மனித ஆத்மாவானது தான் வளர்ந்து வெளிப்படுத்திய அலைத் தொடர்பிலிருந்தும் தன்னுடன் வாழும் சுற்றத்தின் உணர்வுத் தன்மையின் ஈர்ப்புப் பிடி குண நிலையிலிருந்தும் மீட்டுக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் சமம் கொண்ட ஈர்ப்பலை எண்ண உணர்வுடன்
1.உயர் ஞானிகளிடம் தொடர்பு கொண்ட நிலையில்
2.தன் ஜெப ஞானம் அவசியம் இருக்க வேண்டும்.

இதை எதற்காகப் பகர்கின்றேன் என்று அறிந்து கொள்ளுங்களப்பா…!

இன்றைய விஞ்ஞான செயற்கை யுகத்தாரால் இக்காற்று மண்டல முழுமைக்குமே இக்காந்த மின் அலையைப் பிரித்தெடுத்து ஒலி அலையாகச் செயற்கை முறையில் பல செயலுக்காக எடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

ஒளிக் காட்சி… வானொலி… மற்றும் பல ஒலி அலைகளின் அரசியல் ஒலித் தன்மை தொடர்பு நிலைக்கும்… அரசாங்க வழி நிலைக்கு உகந்த சில அலைத் தொடர்பு சாதன நிலையினாலும்… இக்காற்று மண்டலத்தில் பலவிதமான அலைகளைப் படரவிட்டுள்ளார்கள்.

இன்று… இது இல்லாத இடமே இல்லை…! என்று கூடச் சொல்லலாம்.

ஆகையினால் ஜீவ சக்தி கொண்ட மனித உணர்வின் எண்ணமே இவ்வலைத் தொடர்பைக் கேட்பதினால் சுயமாகச் சிந்திக்கும் ஞான நிலையற்று விட்டது.

1.இத்தகைய செயற்கை அலையையே இன்று அனைவரும் சுவாசிப்பதால்
2.தன் உணர்வின் ஞான எண்ண ஈர்ப்பே… தன் ஞானத்தைத் தான் வளர்க்கும் செயலற்ற தன்மையினால்
3.மின் அலைத் தொடர்பு கொண்ட செயற்கை நாத மோதலினால்
4.ஜீவத் துடிப்பு நாதமே தன் நிலை மழுங்கிய உணர்வு செயலாகச் செயற்கையுடன் சிக்குண்ட மனித ஞானம் தான் பேசுகின்றது இன்று,..!

தன் வளர்ப்பின் உண்மை ஆத்ம ஞானத்தை உணர்ந்து இப்பிடி உணர்வின் இறுக்கத்திலிருந்து தன் வளர்ப்பை வளர்க்கும் உண்மை நிலை உணர்ந்து உயர் ஞானிகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்…!

துன்பம் வரும் போது அதைக் கணக்குப் பார்க்க வேண்டியதில்லை… அது வரும்… போகும்… அவ்வளவு தான்…!

துன்பம் வரும் போது அதைக் கணக்குப் பார்க்க வேண்டியதில்லை… அது வரும்… போகும்… அவ்வளவு தான்…!

 

இன்றைய விஞ்ஞான உலகம் மிகவும் விஷத்தன்மையாகச் சென்று கொண்டிருக்கின்றது. எவ்வளவுதான் சம்பாதித்து வைத்து இருந்தாலும் கூட… அதை என் பணம் என்று உறுதியாகச் சொல்வதற்கு முடியவில்லை.

1.ஏதோ ஒரு வகையில் வலு கொண்டவன்
2.நம் பணத்தைத் தட்டிப் பறிக்கும் நிலையில் தான் உலகமே இன்று உள்ளது.

ஓரளவுக்கு பணம் வசதியாக இருப்பவர்கள் வசதி இல்லாதவர்களை ஏமாற்றிக் கொஞ்சம் தள்ளி விட்டு விடுவார்கள். ஏதாவது ரொம்பவும் மீறி விட்டால் அடுத்து சண்டைக்குச் செல்கின்றார்கள். இன்னும் கொஞ்சம் சிக்கலாகின்றது.

உன்னால் என்ன செய்ய முடியும்…? என்று கடைசியில் கோர்ட்டுக்குச் செல்கின்றார்கள். அங்கே சென்றால் வக்கீல்களுக்கும் நீதிபதிகளுக்கும் பண வசதி உள்ளவர்கள் காசைக் கொடுப்பார்கள்.

காசு தான் அங்கே வேலை செய்யும். நீதி இப்படித்தான் இருக்கின்றது வலு இருக்கும் பக்கம் தான் அந்த நீதி செல்லுபடியாகும். இல்லாதவர்கள் வேதனைப்படத்தான் செய்வார்கள்.

வசதியும் அதிகாரமும் உள்ளவர்கள் மற்றவரை அடித்துப் பறிக்கும் அந்த ராட்சஸ உணர்வாகத் தான் செயல்படுகிறது. அவர்களுக்கே அது சாதகமாகப் போய்ச் சேருகின்றது.

பொருளை இழந்தவர்களோ…
1.இப்படிச் செய்கின்றார்களே… இப்படி ஆகிவிட்டதே…! என்று எண்ணப்படும் பொழுது
2.அதே ராட்சஸ உணர்வு அவர்களை அழித்துவிட வேண்டும் என்று கூறுகின்றது.

கடைசியில் எல்லை கடந்தது என்றால் உன்னைச் சுட்டுப் பொசுக்கி விடுவேன்…! என்று வருகின்றது.

நீ வா…! நானும் உன்னை இரண்டில் ஒன்று பார்க்கிறேன்…! என்று இந்த அசுர குணங்கள் தான் ஓங்குகிறது. அழித்துவிடும் நிலையே வருகின்றது.

1.இந்த உணர்வுகள் உடலிலே விளைந்ததும் ஓம் நமச்சிவாய… சிவாய நம ஓம்… என்று
2.அழிக்க வேண்டும் என்ற உணர்வுகள் இருவருக்குமே மாற்றி விடுகின்றது.

இதையெல்லாம் அன்றே ஞானிகள் மிகவும் தெளிவாகக் காட்டி உள்ளார்கள்.

காரணம் யாரும் தவறு செய்யவில்லை… தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. சந்தர்ப்பத்தில் நுகர்ந்த உணர்வுகள் இத்தகைய தீமையின் விளைவுக்குக் கொண்டு செல்கிறது.

இதையெல்லாம் மாற்ற வேண்டும் அல்லவா. அந்தத் தீமையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு இந்தத் தியானம் அவசியம் தேவைப்படுகிறது.

1.இந்த மனித உடலை வைத்துத் தான் அந்த மெய் ஒளியை நாம் பெற முடியும்.
2.அந்த மெய் வழியைப் பெறுவதற்குத் தான் மகரிஷிகளும் ஞானிகளும் எத்தனையோ முயற்சி செய்தார்கள்.

அந்த அருள் சக்திகளை நீங்கள் எண்ணி எடுத்தீர்கள் என்றால் இந்த வாழ்க்கைக்குத் தேவையான செல்வமும் ஓரளவுக்கு நமக்கு வந்து சேரும். மனமும் அமைதி பெறும். குடும்பமும் நலமாக இருக்கும்.

நோயோ துன்பமோ வந்தால் அந்தத் துன்பத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்…
1.அது பாட்டுக்கு வரும் போகும்…
2.அது வந்து விட்டது என்றால் அது பாட்டுக்குப் போகும்
3.நாம் அந்த மகரிஷியின் அருள் ஒளி பெற வேண்டும்
4.என் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் ஒளி படர வேண்டும்
5.எனக்குள் அந்த அழுக்கு சேராத நிலையில் நிற்க வேண்டும்.
6.என் சொல்லைக் கேட்பவர்களுக்கு அந்த இனிமையான நிலை வரவேண்டும்
7.என் பார்வை அனைவருக்கும் நல்லதாக இருக்க வேண்டும்
8.இந்த சக்தி எனக்குள் விளைந்து கொண்டே இருக்க வேண்டும் ஈஸ்வரா…! என்று
9.உங்கள் உயிரிடம் சொல்லி முறையிடுங்கள்.
10.அவன் அதைப் பதிவு செய்து அதையே இயக்குவான்.

எப்படி ஒரு செடி அதனுடைய சத்தைச் சேர்க்கின்றதோ… அதை இழுத்து வளர்க்கிறதோ… அதைப் போன்று இந்த மனித வாழ்க்கையில் நாம் இருந்தாலும் அந்த ஞானிகளை எண்ணி நம் ஆன்மாவை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.

இந்த மாதிரியே எண்ணிக் கொண்டிருந்தால்
1.மகரிஷிகளின் அருள் சக்திகள் நம் உடலில் இருக்கக்கூடிய எல்லா உணர்வுகளிலும் விளையும்.
2.உடலை விட்டுச் சென்றால் அந்தச் சப்தரிஷி மண்டல ஈர்ப்பு வட்டத்திற்ககுள் நாம் செல்கின்றோம்.

திரைப்படம் போல் நம் மனதிற்குள் எப்படி ஒளி ஒலி வருகிறது…? ஈஸ்வரபட்டர்

திரைப்படம் போல் நம் மனதிற்குள் எப்படி ஒளி ஒலி வருகிறது…? ஈஸ்வரபட்டர்

 

நாம் சுவாசத்தால் எடுக்கும் மணத்தைக் கொண்டு தான் இவ்வுயிராத்மா அவ்வலையைச் சேமிக்கின்றது என்று முதல் பாடத்திலிருந்தே சொல்லி வருகின்றேன்.

1.அமிலத்தின் மோதலின் நாத ஈர்ப்பு உயிரணுத் தன்மை
2.எந்தெந்த அமிலமுடன் எவ்வலைச் சேர்க்கை சேர்ந்து அதன் நாதமாகப் பிறக்கின்றதோ
3.அந்த நாதத்திற்குகந்த சேமித அணுத் தன்மை தான்
4.எக்கூட்டுச் சேர்க்கை சேர்ந்ததோ அதன் வளர்ப்பு அணுவாகப் பிறக்கின்றது.

இவ்வுடல் பிம்பத்தின் எண்ண உணர்வில் எடுக்கும் சுவாச நாதத்தின் மோதலின் அணுத் தன்மையால் தான் இஜ்ஜீவ பிம்ப உடல் வளர்ந்து அதன் மூலம் இந்த ஆத்மா வலுக் கொள்கின்றது.

இப்பிம்ப உடலின் உணர்வு அணுக்களின் வளர் தன்மையில்
1.நாதத்தின் இனிமையான இசையின் (சங்கீதம்) தன்மையால் மகிழ்ச்சியானாலும்
2.அதிர்வு… வெடி… இடி.. இவற்றைப் போன்று பயங்கர ஒலி ஏற்பட்டால்
3.ஈர்ப்பின் நிலை செவிக்கு ஏற்கும் மோதலைக் கொண்டு
4.இச்சுவாச அலை உணர்வில் அச்சப்படக்கூடிய அணுக்களைத் தன் ஈர்ப்பில் வளர்க்கின்றது.

இந்த மனித ஆத்ம நாத… ஒலி… ஈர்ப்பு… செவி செயல் தன்மை… மற்றெல்லா ஜீவராசிகளைக் காட்டிலும் ஒலி ஈர்ப்பு விகித வீரியத் தன்மை கொண்டது.

மற்ற ஜீவராசிகள் “ஒளி பாய்ச்சி… சுவாச மண நுகர்வுத் தன்மை கொண்டு தான்” அதன் ஈர்ப்பு நாதத் தன்மை உள்ளது.

பார்வையின் ஒளி பட்டு… சுவாச மணத்தின் நுகர் தன்மை மனிதனைக் காட்டிலும் மிருக நிலைக்கு (சிலவற்றுக்கு) கூடி இருந்தாலும்… மனிதனை ஒத்த செவி ஈர்ப்பு நாத வளர் சக்தி மற்ற மிருகங்களுக்குக் குறைவு.

1.உணர்வால் எடுக்கும் எண்ண நிலைக்கொப்ப
2.சுவாச மோதல் வளர்க்கும் அணு வளர்ச்சி அலை சக்தியால் தான்
3.இந்த உடலைச் சுற்றியுள்ள ஆத்மா வலுப் பெறுகின்றது.

ஆத்மாவின் நிலைக்கொப்ப உணர்வுகளைத் தான் இந்த உடல் வெளிப்படுத்துகின்றது.
1.ஆத்மாவின் உணர்வையும்
2.உணர்வின் ஆத்மாவையும்
3.இவ்வெண்ணத்தின் ஈர்ப்பு நிலை கொண்டு ஒளி பாய்ச்சி… ஒலி கேட்டு…
4.இந்த மனித ஆத்மா மாற்றி அமைக்க முடியும்.

ஒளி பாய்ச்சி ஒலி ஈர்ப்பின் நிலைக்கொப்ப இவ்வண்ணக்கலவை (படம்) அமில வளர்ப்பு மோதலின் பிம்ப நிலையை எப்படிக் காண்கின்றோமோ அதைப் போன்றே
1.இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்க்கும் எண்ணத்தின் ஓட்ட நிலையை
2.இந்தப் பிம்பமல்லா ஆவி அணுச் சேர்க்கையின் நிலை முறையை
3.பிம்பத் தன்மை மாறிய அமிலக்கூட்டின் ஆத்ம வடிவுகளை
4.அமில உருவாக பிம்பமில்லாத் தன்மையில் நிழல் பட உருவத்தில் காண முடியும்.

இவ்வொளி பாய்ச்சி ஒலி ஈர்த்து இவ்வெண்ண ஓட்ட நிலைக்கொப்ப எதனையுமே அறியும் ஆற்றல் சப்தரிஷிகளுக்கு உண்டு.

எத்தகைய ஜீவ பிம்ப மாற்றம் கொண்ட ஆவி அமிலச் சேர்க்கை ஆத்ம உயிர்களையும்… அருகிலுள்ள இடங்களையும்… அல்லது எண்ணத்தில் செலுத்தும் எந்த இடமாக இருந்தாலும் இவ்வெண்ணத்தைச் செலுத்திச் செயல்முறைப்படுத்தும் நிலையில் காண முடியும்.

ஞானத்தின் வழித் தொடரில் இது சாத்தியமே…!

இதைப் போன்றே அச்ச அதிர்வு நிலையினாலும் ஒலி ஒளி படங்களைக் காண முடியும்…! சில ஆத்மாக்களின் அலைத் தொடர்புடன் இது வரும்.

அதாவது ஒளி ஒலி ஈர்ப்புத் தன்மையில்… அச்ச உணர்வுடன் உடலை விட்டுச் சென்ற ஆவி உலக உயிரின் தொடர்பில்… சில கோவில் விழாக்களில் எழுப்பப்படும் சில மண ஒலி ஈர்ப்புத் தன்மையில் அதே உணர்வு கொண்ட அலை உணர்வு மோதல் எற்பட்டவுடன்… என்ன நடக்கின்றது…?

உடல் இல்லாத ஆத்மாவின் மோதலும் உடலுடன் உள்ள ஜீவ பிம்ப ஆத்மாவின் மோதலும் ஒன்றுபட்டவுடன் அதன் தன்மையில்
1.அது சேமித்து வாழ்ந்த நிலைக்குகந்த தன்மை உணர்வு செயல் எல்லாவற்றையும் இங்கே இயக்கப்பட்டு
2.உடலுடன் உள்ளவர் தன்னையறியாமல் ஆடி அதன் நிலை எல்லாம் பேசத் தொடங்கும்.
3.பல மொழிகளிலும் பேசும்
4.அதன் சுவைக்குகந்த உணவை எல்லாம் கேட்டு அதை உட்கொள்ளும்
5.தெய்வமே வந்து தனக்கு உணர்த்தியதைப் போல் பேசும்.
6.(சாமியாடி அருளாடி மருளாடி வாக்கு சொல்வது எல்லாம் இது தான்)

கடைசியில் இவ் ஈர்ப்பலையின் நிலைக்கொப்ப ஆத்ம எண்ணம் சென்று விட்டால் “தன் நிலை மறந்து…” எவ்வலைத் தொடர் ஆத்மாக்களின் எண்ணத்தையெல்லாம் எடுத்ததோ அவ்வாத்மாவின் நிலைப்படி தான் இந்த ஜீவ ஆத்மா (உடலுடன் உள்ளவர்) வாழ முடியும்.

ஆகவே இந்நாதத்தால் எடுக்கப்படும் உருவங்கள் தான் அனைத்துமே…! இந்நாதச் சேர்க்கை எண்ணத்தை உணர்ந்து மெய் ஒலி பெற்று மெய் ஒளியாக உருவாகுங்கள்.

அன்று ரிஷிகள் நடத்திய யாகம் எது…? ஈஸ்வரபட்டர்

அன்று ரிஷிகள் நடத்திய யாகம் எது…? ஈஸ்வரபட்டர்

 

ஏழு வகைக் குணச் சேர்க்கையில் அமிலத் தன்மை கொண்ட இந்தப் புவியின் நாத ஈர்ப்பு வளர்ச்சியின் உண்மையறிந்த ரிஷிகள் தன் ஞானத்தின் தொடர் சித்து நிலை கொண்ட காலத்திலேயே இவ்வொலி நாதத்தின் ஈர்ப்பைத் தன் ஆத்ம உயிர் சேமிதம் கொள்ள யாக பூஜை முறை மேற்கொண்டார்கள்.

இப்புவியின் மணம்.. சுவை… உலோகம்… இவற்றைப் போன்று ஏழு தன்மை கொண்ட வஸ்துக்களை அதிகமாக யாக குண்டத்தில் செலுத்தி அதிலிருந்து வரும் புகையினால் தன் சுவாச ஈர்ப்பிற்கு எடுக்கும் நிலையைப் பக்குவப்படுத்தினார்கள்.

1.இப்புகை மண்டலத்தின் அமில விகித நிலையைக் கொண்டு
2.எந்தெந்த அமிலச் சேர்க்கையின் புகை சுவாச நிலையைத் தன் ஈர்ப்பிற்கு எடுக்கின்றதோ
2.அதே மந்திர ஜெபத்தை ஜெபித்துக் கொண்டே அவ்வலைத் தொடரைக் கவர்ந்து
4.அதன் மூலம் மற்ற மண்டலங்களின் வழித் தொடர் அலை ஈர்ப்பைப் பெறுவதற்கு
5.உடல் பிம்ப இயந்திர அணுக்களின் வளர்ப்பை இயங்கச் செய்து
6.உயிராத்மாவின் செயலைக் கொண்டு அவ்வலைத் தொடரின் சக்தியை
7.தன் ஜீவ சக்தியுடன் கூடிய அணு மண்டல ஆத்ம உயிரின் வளர்ப்பிற்கு வலுவாக்கிக் கொண்டார்கள்.

வீணையின் நாதத்தில் சேர்க்கப்படும் அத்தந்திகளின் நிலையைக் கொண்டு எப்படி ஒலி மாறுபடுகின்றதோ… அதைப் போன்றே இவ் எண்ண ஒலி நாதத்தில் ஜெபிக்கப்படும் ஜெப ஒலியின் தன்மை கொண்ட அதனதன் தொடர் குண வலுவை எல்லாம் இந்த ஆத்ம உயிர் எடுத்துக் கொள்கின்றது.

1.ரிஷிகளும் சித்தர்களும் ஜெபமெடுத்த உண்மைத் தன்மைகளை எல்லாம்
2.பூஜை யாக வழித் தொடரில் நம் முன்னோர்கள் நமக்குச் சுட்டிக் காட்டியிருந்தாலும்
3.அதன் உண்மைகளை அறிய முடியாத விகிதத்தில் தான் இன்று நாம் உள்ளோம்.

இப்புவியின் வளர்ப்பிலிருந்தே தன் ஜீவ பிம்பத்தின் தன் ஞான வளர்ப்பை அறிந்து கொள்ளும் செயல் யாவையுமே இந்தப் பூஜை வழிபாட்டில் இம்மந்திர நாதத்தால் பல சக்திகளைப் பெற்றனர்.

நாற்பத்தி எட்டு நாள் விடாமல் யாகம் செய்தார்கள்…! என்றும்… சில ரிஷிகள் சில குறிப்பிட்ட மரங்களில் நதி ஒரங்களிலிருந்து ஜெபமிருந்தார்கள்…! என்றும் அறிந்திருப்பீர்கள்.

1.அந்த ஞானிகள் தன் வலுவின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள
2.தன் உயிராத்மாவின் வளர்ப்பிற்கு பல அலைத் தொடர்புகளை எடுத்து
3.வலுவாக்கிக் கொள்ளும் வளர்ப்புக்குத் தானப்பா இந்த வழிபாட்டுத் தன்மையை ஜெபம் கொண்டு எடுத்தார்கள்.

இஜ்ஜெபத்தால் ஓதிய தியான ஈர்ப்பின் வலுத் தன்மை சேர்க்கையாக தன் உடல் கூறு அமில வளர்ப்பே அவ்வலைத் தொடர்பின் வளர்ப்பாக தன் உயிராத்மா வளர்ந்த பிறகு அவர்கள் சொல் நாதத்தின் வாக்குத் தன்மையின் பலிதமும் இப்பார்வையின் தன்மையிலேயே நினைத்த நினைப்பு நடைபெறும் வலுவைக் கூட்டிக் கொள்கின்றனர்.

அவர்கள் பார்வை பட்டாலே… எந்தக் குணத்தில் அப்பார்வை செலுத்துகின்றனரோ அவ்வமில ஈர்ப்பு… இச்சுவாசத்தின் அலையினால் அந்த இடத்தில் பாய்ந்து அதன் தன்மை தான் அங்கே நடக்கும்.

இஜ்ஜெபத்தால் தியானம் கொண்டு தன் வலுவை வளர்த்துக் கொண்ட ஆத்மாக்களின் (மகரிஷிகள் சித்தர்கள் ஞானிகள்) ஈர்ப்பு நிலையானது
1.நேராக மேலிருந்து வரும் விண்ணின் ஆற்றல் மிக்க அலைத் தொடரை
2.உடலின் மேல் சிரசில் படச் செய்தனர்.

காரணம்… இந்த உயிர்த் துடிப்பின் வளர்ப்பைக் கொண்டு சுவாச இயந்திரம் இயங்குகின்றது. அப்பொழுது பூமியின் ஈர்ப்பு பிடிப்பு குறைந்து விடுகின்றது.

ஆக பூமியின் கீழ் நோக்கிய சுவாச எண்ண அலையுடன் வாழும் தன்மையில் பல எண்ண மோதலின் சிக்கலுடன் இந்தக் கனம் கொண்ட சுவாசம் எடுக்க எடுக்க இப்புவிப் பிடிப்பின் சுழல் பிடிப்பாகத் தன் இருக்க முடியும்.

இதிலிருந்து விடுபடத்தான்… சப்தரிஷிகள் தன் ஞானத்தால் தன் வலுவின் சக்தியைப் பார்வையிலும்… சொல்லாற்றலிலும் எத்தன்மையையும் வளர வைத்தனர்.

இந்தப் புவியில் வாழும் ஆத்மாக்களான நாமும் இந்த வலுத் தன்மையை வலுவாக்கிக் கொண்டோமானால் அதன் வளர் தன்மையில் செயல் வழித் தொடராக அவர்கள் வாழும் இடத்தை அடையலாம்.

1.இந்நாத ஈர்ப்பின் வீரிய சக்தி கொண்ட
2.மனித ஆத்மாவின் செயலினால் மட்டும் தான் (நம்மால்)
3.இந்த வலுவின் வலுவைக் கூட்டிக் கொள்ள முடியும்.

உயிரிடமிருந்து (கடவுளிடமிருந்து) தப்பவே முடியாது…!

உயிரிடமிருந்து (கடவுளிடமிருந்து) தப்பவே முடியாது…!

 

உதாரணமாக விஷத்தைக் குடித்து விட்டார்கள் என்றால் அவர்கள் எண்ணம் எல்லாம் போய்விடுகின்றது. நினைவுகள் இழந்து உடலையும் அழித்து விடுகின்றது.

விஷத்தை அருந்தி உடலை விட்டுச் செல்பவர்கள் எங்கே செல்வார்கள்…?
1.அடுத்து பாம்பாகவோ தேளாகவோ தான் பிறப்பார்கள்.
2.வேறு எங்கும் செல்ல முடியாது.

மனித உடலை விட்டுப் பிரிந்த உடனே அடுத்த உடலுக்குள் செல்வார்கள். யார் மீது பற்று இருந்ததோ அந்த உடலுக்குள் செல்லும். அல்லது சாகும் போது யார் நினைவை அதிகமாகக் கொண்டு வருகிறார்களோ அந்த உடலுக்குள் செல்லும்.

அங்கே சென்றவுடன் அந்த உடலிலும் விஷத்தைக் குடிக்க வைத்துச் சாக வைப்பார்கள். கடைசியில் இதிலே விளைந்த அந்த விஷமான உணர்வு உயிரோடு ஒன்றி இணைந்து தான் இருக்கும்.

வேறு எங்கும் தப்ப முடியாது…!

வாழும் போது இங்கே எப்படி இம்சைப்பட்டார்களோ விஷத்தைக் குடித்தபின் சாகும் போது எத்தனை துடிதுடித்தார்களோ உயிர் இழந்த பின்னும் அதே துடிப்பு உயிரான்மாவில் கொண்டே இருக்கும்.

அடுத்த உடலுக்குள் போனவுடன் இதே துடிப்புடன் அவர்களுக்குள்ளும் தற்கொலை செய்யும் உணர்வைத் தூண்டிக் கொண்டே இருக்கும். இந்த வேலையைச் செய்து கொண்டே தான் இருக்கும்.

1.சிலர் நினைக்கலாம்… வாழ்க்கையில் வந்த கஷ்டத்திலிருந்து விடுபடுவதற்காக
2.நான் தற்கொலை செய்து கொள்கின்றேன்…! உலகத்தை விட்டுப் போகிறேன் என்று…!
3.எங்கே போவது…? அவனிடம் (உயிரிடம்) இருந்து தப்பவே முடியாது.
4.தப்பு பண்ணினால் தப்பு தான்… ரைட் செய்தால் ரைட் தான்…
5.மார்க் போட்டுக் கொண்டே இருப்பான் இந்த உயிர்.

இதைத்தான் ஞானிகள் கீதையிலே சுருக்கமாகச் சொல்லி உள்ளார்கள். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகின்றாய் என்று.

அதே போல் பிடிக்கவில்லை என்று… ஒருவரைச் சுட்டுக் கொன்று விடுவேன் என்று நினைக்கலாம்… கொன்றும் விடலாம். அந்த சுட்டுப் பொசுக்கும் எண்ணம் என்னிடம் வருகின்றது.

1.சுட்டவுடன் அவன் துடித்த உணர்வு எல்லாம் இங்கே வந்து விடுகிறது.
2.அந்த ஆன்மாவும் இங்கே வந்து விடும்.
3.அதே எண்ணத்தை கொண்டு எண்ண எண்ண அவனின் உணர்வு எனக்குள் வந்து
4.என்னைச் சுட்டுப் பொசுக்கிக் கொண்டே இருக்கும்.
5.உயிருடன் ஒன்றி இந்த இம்சையைப் பட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டியதிருக்கும்.

இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

நாம் நினைக்கின்றோம் உடலை விட்டுப் போனால் ஒன்றும் தெரியாது என்று…! ஆனால் இப்பொழுது நல்லது என்று இருக்கும் போது அதைத் தெரிந்து கொண்டால் திருத்திக் கொள்ளலாம்… திருத்தவும் முடியும்.

ஆனால் உடலை விட்டுச் சென்றால் என்ன நடக்கும்…?

1.உயிருடன் ஒன்றிய அந்த இம்சைப் படுத்தும் உணர்வுகள்
2.நீ செய்தாய் அல்லவா… நீ படு…! என்று உயிர் இந்த வேலையைச் செய்யும்.

ஏனென்றால் அவன் (உயிர்) கடவுள். அவனுக்கு அழிவில்லை. நாம் அவனைப் போன்றே நாமும் அழியாத நிலை பெற வேண்டுமென்றால்
1.அருள் ஞானத்தின் தன்மையை சிருஷ்டித்தால் அதை நமக்குக் கொடுப்பான்.
2.ஞானிகள் அருள் உணர்வுகளை வளர்த்துக் கொண்ட பின் உடலை விட்டுப் போனால்
3.நம்மை அழியாத ஒளிச் சரீரமாகப் படைப்பான்…?

ஏனென்றால் அத்தகைய திறன் வாய்ந்தவர்கள் தான் நாம். முழுமுதற் கடவுளாக நாம் சிருஷ்டிக்கும் உடல் பெற்றவர்கள்.

ஆனால் நாம் மனிதனாகப் பிறந்த இந்த நல்ல சந்தர்ப்பத்தை இழந்து விட்டால் தீர்ந்தது… எல்லாம் போய்விடும்.

ஆகையினால் நாம் அனைவரும் அந்தப் பத்தாவது நிலையான கல்கி என்ற “ஓளியாக மாறும் பாதையில்… ஞானிகள் சென்ற பாதையில்…” செல்வோம். மனித வாழ்க்கையில் அறியாது வந்த இருளைப் போக்குவோம்.

“ஓ… ம்…” என்ற நாதத்தின் சூட்சம சக்தியின் ரகசியம் – ஈஸ்வரபட்டர்

“ஓ… ம்…” என்ற நாதத்தின் சூட்சம சக்தியின் ரகசியம் – ஈஸ்வரபட்டர்

 

நாதத்தால் வளர்ந்த விந்துவின் ஜீவ வளர்ப்புத்தான் இப்புவி வளர்ப்பு யாவையுமே…!

பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மை கொண்ட அமில மோதல் நாத முதற் கொண்டு… இப்புவியின் சுழற்சி நாதக் காற்று வளர்ப்பு ஒலி ஒளி நீராகி… இத்திடம் கொண்ட சத்துத் தன்மையின் நாத ஈர்ப்பின் சுழற்சியால் புவியில் இப்புவியின் வெக்கை அலை வெளிப்படுகிறது.

அந்த வெப்ப அலையால் ஈர்க்கப்படும் ஒலி நாதமான ஓ..ம் என்ற நாதத்தின் குணத் தன்மை ஒலியாகி.. ஒளியாகி… நீரான வளர் சுழற்சியில்..
1.ஓ..ம் எனக் கொண்ட நாத ஒலியின் தொடர் நாத விந்து வளர்ப்பு தானப்பா
2.இப்புவி நாத வளர்ப்பு யாவையுமே…!

விளக்கம்:-
இந்தப் புவி வளர்த்த நீரில்… சூரியனின் அலை ஈர்ப்பை இப்பூமி ஈர்த்து…
1.நீரின் மேல் சூரிய ஒளி பட்டு இப்பூமி ஈர்த்து
2.இப்பூமி வெளிப்படுத்தும் ஆவியான வெக்கை நிலை (வெப்பம்) மேல் நோக்கிச் செல்கிறது.

அதைப் போன்றே எரிக்கப்படும் எரி பொருளின் புகையானது மேல் நோக்கிச் செல்கின்றது.
1.இப்புவியில் வளரும் யாவும் மேல் நோக்கி வளர்கின்றது.
2.ஆனால் கனம் கொண்ட வளர்ப்பு யாவும் புவி ஈர்ப்பின் பிடியுடன் கீழ் நோக்கி வளர்கின்றது.

புவி வளர்ப்பா…? பால்வெளி மண்டலத்தின் வளர் தன்மையா…? இவ்வளர் நிலை யாவையும்…!

இந்தப் புவியில் வளரும் தன்மையின் வளர் சக்திக்கு நாதத்தின் வித்துத் தன்மையின் செயலுக்கே ஜீவ நாடி… இந்த “ஓ…ம்…” என்ற புவி நாதம் தான்.

இந்தப் பால்வெளி மண்டலத்தின் செயல் தன்மையில்… அந்தந்த மண்டல ஈர்ப்பு ஒலித் தன்மை கொண்டு நாதச் சேர்க்கையின் வளர் உயிரணுக்கள் ஒவ்வொரு மண்டலத் தன்மைக்குகந்த நிலையில் வளர்கின்றது.

மண்டலச் சுழற்சிக்கு மாறுபட்டுள்ள பால்வெளி மண்டலத்தில் காற்றுத் தன்மையே இல்லாத மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் எத்திசை என்ற செயலற்ற நிலையில் உள்ள இடங்களிலும் சில ஜீவராசிகள் பிறந்து மடிந்து வாழ்கின்றன.

காற்றுத் தன்மையே இல்லா நிலையில் ஜீவன்கள் எப்படிப் பிறக்கின்றன..?

இவ்வமிலத்தின் சேர்க்கை நிலையில் சிறு சிறு அமிலக்கூட்டின் மோதலின் ஒலி ஈர்ப்பின் ஜீவனாகி இவ்வொளியின் நாதமுடன் வளர்ச்சி கொண்ட வளர்நிலைக்குகந்த மிகக் குறுகிய கால சில அபூர்வச் செயல் கொண்ட ஜீவத் தன்மைகள் தோன்றி அதன் கனம் உந்தித் தள்ளப்பட்டு பிறப்பெடுத்தவுடன் மடிந்து கனம் கொண்ட அப்பிறப்பு அமிலக் கூட்டுச் சேர்க்கை உந்தித் தள்ளப்பட்ட நிலையில் தான் தனக்குகந்த மண்டல ஈர்ப்பின் வளர்ப்புத் தன்மைக்கு வலு நிலை கொண்ட வளர்ப்பு அமிலச் சத்து கிடைக்கின்றது.

1.இந்தப் பால்வெளி மண்டல செயல் வளர்ப்பு நிலை இல்லாவிட்டால்
2.மண்டல ஈர்ப்பு வளர்ப்பு செயல்படாது.

சூரிய மண்டலம் ஜீவராசிகள் வாழ முடியாத இடம். ஜீவ வளர்ப்பே இல்லாநிலை என்றெல்லாம் உணர்த்துகின்றனர். ஆனால்
1.இந்த அண்டகோடி அனைத்து வார்ப்பு நிலைகளிலும்
2.“இந்நாத விந்தற்ற நிலை இல்லா இடம் எதுவுமே இல்லை…!”

வளர்ப்பின் வளர்ப்புத் தன்மை கொண்ட வளர் வளர்ச்சி செயலுடன் ஒன்றின் செயல் தொடர் வளர்ப்பு “நாத விந்துக்கள் தான்” இம்மனிதனும் இம்மற்றெல்லா மண்டலங்களுமே…!

1.இந்நாத ஈர்ப்பு மோதலில் துடிப்பில்லா விட்டால்
2.எச்செயலின் வளர்ப்பு வளர்படுவதில்லை

வளர்ப்பின் வளர்ப்பே இந்நாதம் தான்…!

எண்ணத்தால் எடுக்கும் நாதத்தை உயர் நாதச் செயலாகச் சேமிக்கும் பொழுது தான் இந்த உயிர் காந்தத் துடிப்பின் சக்தியை இவ்வாத்மா சேமித்து அதன் வளர்ப்பிற்குகந்த அணு வளர்ச்சியின் வலுவைத் தன் வலுவாக்கி ஜீவ சக்தி வாழ முடிகின்றது.

இதன் தொடர்பில்…
1.தனக்குச் சாதகமான வலுத் தன்மையைக் கூட்டிக் கொள்ள
2.இந்த மனித எண்ண நாதத்திற்குத் தான் உண்டு.

இதன் தன்மையை உணர்ந்தவர்கள் தான் நம் ஞானிகளும்.. சித்தர்களும்… மகரிஷிகளும்…!

அந்தத் தத்துவ ஞானச் செயல் மணிகளாகப் பல ஞானிகள் இஜ்ஜெப முறையின் நாத ஒலி கொண்ட சில மந்திர ஒலிச் சேர்க்கையின் செயல் கொண்டு செயல்படுத்தினர்.

அதன் மூலம் அச்செயல் வளர்ப்பின் தன்மை கொண்ட
1.பல கோடி ஆண்டுகளாக வளர்ச்சி கொண்ட…
2.இச்சூரிய குடும்பமல்லா பல சூரியனின் வளர்ச்சி பெற்ற ரிஷி அலையின் தொடர் நிலை பெற
3.இந்த மந்திர நாத யாக ஜெப பூஜை வழிபாட்டில் ரிஷித் தன்மை வளர்ப்பு ஞானிகளாக ஒளிர்ந்தனரப்பா…!

தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்காதபடி அதை வகுந்திட வேண்டும்

தீமை செய்யும் உணர்வுகள் நம்மை இயக்காதபடி அதை வகுந்திட வேண்டும்

 

நரசிம்ம அவதாரம் என்றால்… ஒருவர் ஏசினாலோ பேசினாலோ அந்த உணர்வை நான் நுகரக்கூடாது. ஆனால் எதிரில் வரும் நிலைகளை நுகராமல் இருக்கவும் நம்மால் முடியாது.

உதாரணமாக நான் ரோட்டில் செல்லும் போது எங்கே போகின்றீர்கள்…? என்று கேட்கின்றார்கள்.
1.இந்தப் பாதையில் தானே செல்வார். வசதியான இடமாக இருக்கின்றது.
2.தட்டி எறிந்துவிட்டு என்னிடம் இருக்கும் பணத்தை பிடுங்கிச் செல்லலாம் என்று வருகின்றார்கள்.

ஆகவே இதை நான் கூர்ந்து கவனிக்கவில்லை என்றால் என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியாது.

ஆனாலும் திருடும் எண்ணம் கொண்டு தான் கேட்கின்றார்கள். அவர்கள் பேசிக் கொண்டு போகட்டும். நான் ஏன் அதைக் கேட்க வேண்டும்…? என்று இருக்க முடியுமா…!

1.அவர்கள் பேசிய உணர்வின் தன்மை எனக்குள் வரும் பொழுது அதைக் கேட்டு நுகர்கின்றேன்… அறிந்து கொள்கிறேன்…!
2.அது என்னைக் காத்துக் கொள்ள உதவுகின்றது.

இருந்தாலும் என்னைக் கொன்று விட்டுப் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் எண்ணும் பொழுது அதைப் பார்த்தவுடனே எனக்கு பயமாகின்றது.

கொன்று விடுவேன் என்று சொன்னாலும்… சும்மா போகலாம்… சாமி சொன்னார் எனக்கு ஒன்றும் வராது…! என்று அப்படியே இருக்க முடியுமா…!

“என் காரியம்” என்று வரும் போது இந்தப் பாதையில் போகாமல் இருக்க முடியாது. அந்தப் பாதை வழியாகத்தான் நான் செல்ல முடியும்.

அவன் சொல்கிறான் நாம் பாட்டுக்குப் போகலாமே என்றால் அது அசட்டுத் தைரியம் தான்.

நாம் தர்மம் செய்பவர்கள்… எல்லோருக்கும் நன்மை செய்பவர்கள் தான்…! இப்போது ஒரு புலி இங்கே வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். புலி அதனுடைய பசியைப் போக்க நம்மைச் சும்மா விடுமா…? அது நம்மை அடித்துக் கொள்ளத்தான் எண்ணும்.

அது போல் அசுர குணம் கொண்டவர்கள் அந்தத் தவறைத் தான் செய்வார்கள். என்னை அடித்து விட வேண்டும் என்று பயத்தை ஊட்டுகிறார்கள். காதிலே கேட்டவுடன் உடல் நடுக்கம் ஆகின்றது

நாம் நல்லதை எண்ணிச் செயல்பட்டாலும் கூட அசுர உணர்வு கொண்டு பிறர் எண்ணிய உணர்வுகள் இங்கே உடலை இயக்குகிறது. பிறரின் நிலைகளை அறிந்து கொள்ள இது உதவுகின்றது

அறிந்த பின் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று உயிரை புருவ மத்தியில் எண்ணி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி படர வேண்டும் என்று வலு சேர்த்துக் கொண்டு நாம் செல்ல வேண்டும்.

குழம்பு வைக்கும்போது சுவை கெட்டு விட்டால் அதை மாற்றுவதற்கு மீண்டும் எத்தனையோ செய்கிறோம்.

கருணைக் கிழங்கு விஷம் என்று தெரிகிறது. அதனுடைய நமநமப்பைக் குறைப்பதற்குப் புளியைக் கரைத்து அதனுடன் சேர்க்கின்றோம். பின் வேக வைக்கின்றோம். அதை அடக்கி விடுகின்றோம். அப்பொழுது அது சுவைமிக்கதாக மாறுகின்றது.

இது போல்…
1.வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு நிலையிலிருந்தும் நம்மை நாம் மீட்டுக் கொள்ள
2.மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு அடக்கிக் கொண்டே வர வேண்டும்
3.தீமைகளைப் பிளந்து கொண்டே வர வேண்டும்.

அது தான் நரசிம்மா…!

மெய் ஒலியைப் பெறும் வழி முறை – ஈஸ்வரபட்டர்

மெய் ஒலியைப் பெறும் வழி முறை – ஈஸ்வரபட்டர்

 

எங்குமே… எதிலுமே… “எல்லாமே” ஒலியின் தன்மை கொண்டு உருவாக்கப்படுவது தான்…! உருவாக்கப்படும் நற்சக்தியும் தீய சக்தியும் எதுவாக இருந்தாலும்.. இந்த ஒலி கொண்டு தான் பிறக்கப்படுகின்றது.

இவ்வொலி நாதம் கொண்டு அமையப்படுவது தான் உயிரணுக்கள் யாவையுமே.
1.இந்த நாத விந்துச் சேர்க்கை செயலில் எடுக்கப்படும்
2.சுவாசத்தின் நிலைக்கொப்பத்தான் உயிராத்மாவின் செயலும் உள்ளது.

நெற் பயிரில் அந்தப் பலன் தருவாயிலும் “இக்காற்றலையின் நாதச் சேர்க்கையைத் தன் ஈர்ப்பில் சேமிக்கப்படும் நிலைக்கொப்பத்தான்” அக்கதிரின் மணியில் அரிசியின் நிலை வளர்கின்றது.

ஒரு கதிரில் வரும் நெல் விதையில் எல்லாமே மணியாக இருப்பதில்லை… பதர்களும் உண்டு…!

அதைப் போன்றே கனிகளாக உருவாகும் பொழுதும் ஒரு செடியில் பூக்கும் பூக்களிலும் ஒன்றை ஒத்த நிலையில் ஒன்றில்லாமல் ஒரே செடியில் பூக்கும் பூக்களிலும் சில சிறுத்துக் கரடு தட்டிய நிலையில் வரும்.

இதைப் போன்றே உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் அது எடுக்கும் நாதத்திற்குகந்த விந்துத் தன்மை தான் வளர்கின்றதப்பா…!

இந்நாதத்தால் எடுக்கும் உருவகத் தன்மையில் நம் சித்தர்கள் காட்டிய செயல் முறையின் “ஆரம்பத் தன்மை தான்…” பக்தியால் ஜெபிக்கும் “ஜெப நாதப் பாடல்கள்…!”

1.அன்பென்ற பக்தி பூண்டு
2.ஆசை என்ற நாத இனிமையைக் கூட்டி ஜெபப்படுத்தும் முறை தான்…
3.இவ்வுயிராத்மாவிற்குச் சக்தியைக் கூட்டும் “ஆரம்பச் சேர்க்கை வழி காட்டி முறை…!”

இப்புவியின் வளர்ப்புடனே நல் வளர்ப்பாக பல நாயன்மார்கள் இப்பாடலின் நாதத்தில் சுழல் விகிதத்தில் செயல்பட்ட முறை தான் பக்தியின் நாத ஜெப முறை.

இஜ்ஜெப முறையின் வளர்ச்சியால் நம் பூமியின் சுழல் நாதமான ஓ…ம் என்ற நாதத்தை உள் நாதமான ஓமுக்குள்.. ஓமாக… நம் உயிராத்மாவின் நாதத்தை… இப்புவிக்கே நாதம் தந்த சகல ரிஷிகளின் நாத அலையுடன் கலக்கவிட வேண்டும்.

1.ஓமுக்குள் ஓமாக இருந்து
2.அவ்வலை நாதத்துடன் தியானத்தில் எண்ணத்தைச் செலுத்தி
3.அவ்வலைத் தொடரின் தொடர்பலையை நம் சுவாசத்தால்
4.எச்சப்தரிஷியின் அலைத் தொடர்புடனும் தொடர் கொள்ள முடியும்.

எண்ணத்தால் செலுத்தும் சுவாச நாதம் கொண்டு அவ்வலையின் தொடர்பை நம் ஆத்ம உயிர் தன் ஈர்ப்பின் வளர்ச்சிக்கு எடுத்து அதை வளர்த்துக் கொள்ள முடியும்.

ஒவ்வொன்றின் தன்மையும்
1.“தனித் தன்மை கொண்ட உயர் நாதச் செயலாகத் தான்”
2.ரிஷித் தன்மையின் “வளர் வளர்ப்பு…” செயல் நிலை செயல்படுகிறது.

அவர்கள் வளர்ப்பாக நாம் உருவாக வேண்டும் என்றால்… அது உயிர் வழியாக எடுக்கும் தியானத்தின் சுவாச அலைத் தொடரின் வழி முறைச் செயலினால் தான் முடியும்.

தியானத்தில் எடுக்கும் இந்தச் சக்தியால் இப்பிம்பக் கூட்டின் ஜீவ சக்தி அணு வளர்ச்சிச் சேர்க்கையின் செயல் கொண்டு நம் எண்ணத்தால் எடுக்கும் சப்தரிஷிகளின் அலைத் தொடர்பின் சக்தியை இவ்வுயிராத்மா வளர்த்துக் கொள்ள முடியும்.

“காந்த ஈர்ப்பு சக்தி கொண்டது தான் இவ்வுயிராத்மா…” என்று ஏற்கனவே தெளிவாக்கினேன்.
1.எண்ணத்தின் செயலைக் கொண்டு எடுக்கும் இந்தத் தியான நிலையின் தொடர் நிலைக்கொப்ப
2.இப்புவி ஈர்ப்பின் பிடியிலிருந்து ஞான வளர்ச்சிச் செயலையும் சித்துத் தன்மை வளர்ப்பையும்
3.இவ்வலைத் தொடர்பின் எண்ண நாதச் சேர்க்கையைக் கொண்டு
4.உடல் என்ற இயந்திரத்தின் உதவியால்
5.இவ்வுயிராத்மாவையே உயர் ஞானக் கூட்டு ஆத்மாவாக உயர்த்த முடியும் – “இவ்வெண்ண நாதத்தால்…!”

நாம் செய்யக்கூடிய தியானத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்…!

நாம் செய்யக்கூடிய தியானத்தைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்…!

 

1,துருவ நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் பெருக்கி
2.இந்த உணர்வின் தன்மையை நாம் உலகமெங்கும் பரவச் செய்யும் பொழுது
3.இந்தப் பூமியில் இருக்கக்கூடிய நச்சுத் தன்மைகளை நீக்க முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெற்று அதை உங்களுக்குள் விளைய வைக்கும் சந்தர்ப்பத்தைத் தான் இந்த உபதேச வாயிலாக ஏற்படுத்திக் கொடுக்கின்றோம் (ஞானகுரு).

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க சூரியனுடைய காந்த சக்தி இதைக் கவரப்படும் போது சிறுகச் சிறுக ஒரு அடர்த்தியின் தன்மையாக வரும்.

அதன் மூலம் விஞ்ஞான அறிவால் வரும் விஷத் தன்மைகளோ மற்ற எதிர்ப்பு நிலைகளோ வந்தால் தடுக்க முடியும்.

1.சூறாவளி போன்ற கடுமையான காற்றுகள் வரும் பொழுது நம் பக்கம் அது வராதபடி அதனின் திசைகளை மாற்ற முடியும்.
2.நாம் எடுக்கும் தியானத்தினால் இது முடியும்… உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்க்கலாம்
3.யாம் (ஞானகுரு) சொன்ன முறைப்படி எண்ணிப் பாருங்கள்… அது திசை மாறிப் போகும்.

அதே போல் அந்த மகரிஷியின் அருள் உணர்வுகள் மேகங்களில் படர்ந்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சினோம் என்றால் நம்முடைய எண்ணமும் அந்தப் பார்வையும் அதில் சேர்கின்றது.

மேகங்களில் அருள் உணர்வுகளைச் சேர்க்கப்படும் பொழுது அங்கே பெய்யும் அந்த மழை நீரால் தீமைகளை அகற்றிடும் சந்தர்ப்பம் உருவாகின்றது.

எந்தெந்த உணர்வுடன் மக்கள் ஆங்காங்கு இருக்கின்றார்களோ அதற்குத்தக்க தான் அங்கே மழை பெய்வதும் இருக்கும். ஊரில் உள்ள மக்கள் நல்ல உணர்வுடன் ஒன்றுபட்டு வாழ்ந்தால் அங்கே சீராக மழை பெய்யும்.

உதாரணமாக அந்த ஊர் மக்கள் வெறுப்பும் சண்டையும் சச்சரவும் குரோதமும் கொண்டிருந்தால் அங்கே மழை பெய்வது அரிதாகின்றது.
1.காரணம் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மோதல் ஏற்படும் பொழுது
2.மற்ற பக்கம் பெய்யும் ஆனால் இங்கே மழையை விலக்கித் தள்ளிக் கொண்டு போய்விடும்.

ஒவ்வொரு நிமிடமும் அன்பு கலந்து அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்று ஏங்கித் தியானித்து மேகங்கள் கூடி நல்ல மழை பெய்ய வேண்டும் என்ற உணர்வை வானிலே பரவச் செய்தால் அந்தப் பகுதிகளில் நிச்சயம் நல்ல மழை பெய்ய வைக்கலாம்.
1.உங்களை நம்புங்கள்…
2.மனிதனுக்கு அவ்வளவு பெரிய சக்தி உண்டு…!

ஒரு பாடலை இனிமையாகப் பாடி அந்த இந்த உணர்வின் ஒலி கொண்டு அதை வைத்து அக்காலங்களில் மழை பெய்ய வைத்திருக்கின்றார்கள்.

மழை இல்லாது ஒரு வறட்சி என்று வந்து விட்டால் பெண்கள் எல்லோரும் கூடி குடங்களை எடுத்துக் கொண்டு ஒரு காட்டுப் பக்கம் செல்வார்கள்.

அங்கே இருக்கக்கூடிய கல்லுக்கோ மற்றதுக்கோ அந்த நீரை ஊற்றிய பின் சிறிது நேரத்தில் மேகங்கள் கூடும், மழையை இங்கே அழைத்துக் கொண்டு வருவார்கள்.

இது எல்லாம் அக்காலங்களில் செயல்படுத்தினார்கள். இன்றும் சில இடங்களில் இது போன்று உண்டு.

முன்னோர்களாகிய நம் ஞானிகள் காட்டிய அருள் வழியில் வழி நடந்தால் இனி வரும் எத்தகைய தீமைகளிலிருந்தும் தப்ப முடியும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.