தொழிலின் நிமித்தம் “துரோகம் செய்தான்… பாவி…!” என்று எண்ணினால் நண்பர்களுக்குள் ஏற்படும் விளைவுகள்

Image

Divine keys

தொழிலின் நிமித்தம் “துரோகம் செய்தான்… பாவி…!” என்று எண்ணினால் நண்பர்களுக்குள் ஏற்படும் விளைவுகள்

 

நண்பர்களுக்குள் நன்றாகப் பழகிய நிலையில் இருவரும் சேர்ந்து தொழில் செய்வார்கள். அப்பொழுது ஒருவருக்கு ஒருவர் நன்றாக சந்தோஷமாக இருப்பார்கள்.

ஆனால் சந்தர்ப்ப பேதத்தால் வியாபாரத்தில் திடீரென்று மந்தமாகி விட்டால் என்ன ஆகின்றது…? சந்தேக உணர்வு வருகின்றது. எனக்குத் துரோகம் செய்து விட்டான் என்ற நிலையில் ஒருவருகொருவர்
1.நீ துரோகம் செய்துவிட்டாய் என்று ஒருவரும்
2.இல்லை நீ தான் எனக்குத் துரோகம் செய்தாய் என்று இன்னொருவரும் சொல்ல
3.அந்தக் கோப உணர்வுகள் பதிவாகி விடுகின்றது.

இருவரும் சேர்த்து தொழில் செய்த நிலைகளில் பொருள்கள் நஷ்டமான பின் இரண்டு பேருமே இதையே எண்ணுகின்றார்கள்.

அவனை நம்பி வந்தேன்… எனக்குத் துரோகம் செய்தான்…! அதனால் எனக்கு நஷ்டமாகிப் போனது…, என்று இரண்டு பேருமே அடிக்கடி சொல்வார்கள்.

இப்படி ஏற்பட்ட பின் இரண்டு பேரும் பிரிந்து சென்றாலும்
1.இதே நினைவுடன் அவர்கள் எங்கே போய் எந்தத் தொழில் செய்தாலும் சரி
2.அந்த உணர்வுகள் இயக்கப்பட்டு நல்லதை அவர்கள் பெறவே முடியாது…!
3.இவரும் சரி… அவரும் சரி… இரண்டு பேருமே கெடுகின்றார்கள்.

ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு இருக்கும் நிலையில் இது எல்லாம் எதைக் காட்டுகின்றது…?

சந்தர்ப்பவசத்தால் சிறு திரையாக வந்து நம் நல்ல குணங்களை எல்லாம் மறைத்து விடுகின்றது. அதனால் நம்முடைய சிந்தித்துச் செயல்படும் அறிவு இழக்கப்படுகின்றது.

நம்மை இருள் சூழச் செய்யும் தீமைகளைப் பிளந்து நாம் தெளிந்த மனதுடன் எப்படி வாழ வேண்டும்…? என்று காட்டினார்கள் ஞானிகள். இதை நினைவுபடுத்தும் நாள் தான் “சித்திரை புது வருடப் பிறப்பு…”
எப்படி…?

நமது வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ சந்தர்ப்பத்தால் திரை மறைவாக்கும் நிலைகளிலிருந்து விடுபட
1.எங்கள் நண்பர்கள் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்.
2.எங்கள் குழந்தைகள் உயர்ந்த கல்வி பெற வேண்டும்.
3.அவர்கள் சிந்திக்கும் தன்மை பெறவேண்டும்.
4.குடும்பத்தில் நாங்கள் கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்து வாழ வேண்டும்.
5.குடும்பத்தில் உள்ளோர் யாருடன் பகைமை இருந்தாலும் நாங்கள் ஒன்று சேர்த்து வாழும் தன்மை பெற வேண்டும்.
6.மகரிஷிகளின் அருள் உணர்வுகள் நாங்கள் அனைவரும் பெற வேண்டும் என்று
7.எல்லோரும் சொன்னால் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் பகைமையை மறந்து விடுகின்றோம்.
8.அறியாது வந்த சிறு சிறு திரைகளை நீக்கி விடுகின்றோம்.
9.பேரருள் பேரொளியை நமக்குள் பெருக்கிக் கொள்கின்றோம்
10.மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறுகின்றோம்.
11.செல்வச் செழிப்புடன் மகரிஷிகளின் அருள் ஒளி வட்டத்தில் வாழும் தகுதியைப் பெறுகின்றோம்

ஒவ்வொரு புது வருடமும் இவ்வாறு நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற நிலைக்கு வர வேண்டும்.

சர்க்கரைச் சத்து… இருதய நோய் போன்ற நோய்களை நீக்கும் பயிற்சி

dhanurasana

சர்க்கரைச் சத்து இருதய நோய் போன்ற நோய்களை நீக்கும் பயிற்சி

உங்கள் உடலில் நோய்கள் இருந்தால் கீழ்க்கண்ட முறையில் ஆத்ம சுத்தி செய்யுங்கள்.
1.மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெற வேண்டும்
2.எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்
3.எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும்.
4.எங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று
5.சிறிது நேரம் புருவ மத்தியில் எண்ணி அந்த உணர்வுகளை உடலுக்குள் கொண்டு செல்லுங்கள்.

சர்க்கரைச் சத்து:–
சர்க்கரைச் சத்து அதிகமாக இருந்தால் அதைக் குறைப்பதற்கு நீங்கள் கூடுமான வரை (படத்தில் காட்டியபடி) இதே மாதிரி வைத்துக் கொண்டு படுத்து எங்களுக்குள் இருக்ககூடிய சர்க்கரைச் சத்து சமமாக வேண்டும் என்ற எண்ணத்தை எடுத்து மூச்சை இழுங்கள்.

சர்க்கரைச் சத்தைக் குறைக்க ஒரு ஐந்து நிமிடம் இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள்.

(குறிப்பு) வயிற்றில் ஆபரேசனோ அல்லது இருதய ஆபரேசனோ அல்லது கர்ப்பமாக இருப்பவர்களோ இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது. ஆபரேசன் செய்து இரண்டு வருடங்களுக்கு மேல் இருந்தால் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

ஆஸ்துமா போன்ற நோயோ சர்க்கரைச் சத்தோ இருந்தால் ஆத்ம சுத்தி செய்து விட்டு முறைப்படி இந்தப் பயிற்சி செய்தோமென்றால்
1.நாம் எடுக்கும் உணர்வுகள் நேரடியாக உடலுக்குள் சென்று
2.நம் உடலிலுள்ள நோய்களை அகற்ற இது உதவும்.

ஆபரேசன் செய்தவர்கள் அல்லது கர்ப்பமாக உள்ளவர்கள் பயிற்சிக்குப் பதிலாக
1.மேல் நோக்கிப் பார்த்து விண்ணிலே நினைவினைச் செலுத்தி
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று உங்கள் உயிருடன் ஒன்றி
3.மகரிஷிகளின் அருள்சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து நாங்கள் உடல் நலம் பெற வேண்டும் என்று
4.திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப எண்ணி ஏங்கிச் சுவாசியுங்கள்.

நிச்சயம் அந்த நோய்கள் குறையும்.

உணவு உட்கொள்ளும் பொழுதெல்லாம்
1.நாங்கள் உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் எங்கள் உடலில் “நலம் பெறும் சக்தியாக மலர வேண்டும்…” என்று
2.ஒரு இரண்டு நிமிடமாவது எண்ணி அந்த உணர்வுடன் சாப்பிடுங்கள்.

இருதய வலி:–
இருதய வலி இருந்தால் இடுப்பிலே நான்கு விரலையும் பிடித்துச் சிறிது பின்னால் சாய்ந்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.மகரிஷிகள் பால் நினைவின் ஆற்றலைச் செலுத்தி
2.மூச்சை இழுங்கள்… ஒரு நொடி நிறுத்துங்கள்…
3.பின் மூச்சை வெளியில் விடுங்கள்.

ஒரு ஐந்து அல்லது ஆறு தடவை இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

நம் சுவாச நாளங்களில் இரத்தங்கள் போகும் பாதைகளில் அடைப்புகள் இருக்கும். நாம் புகை பிடிக்கவில்லை என்றாலும் பீடி சிகரெட் பிடிப்பவர்களை உற்றுப் பார்த்து அதைச் சுவாசித்தால்
1.அது நம் சுவாசத்தின் வழியாகச் சுவாசப் பைக்குள் சென்று
2.இரத்தம் போகும் பாகங்களில் சென்று உறைந்து விடும்.

உறைந்து விட்டால் அந்தப் பகுதிக்கு இரத்தம் போகாமல் அடுத்த பக்கம் பகுதி போய் விடும். இந்தப் பக்கம் அடைபட்டுப் போய்விடும். அதாவது நுரையீலுக்குள் மற்ற இடங்களுக்கு இரத்தம் பாயும் நிலைகளைத் தடைப்படுத்தும்.

இது அடைபட்டு விட்டால் இதே போல அடுத்த பக்கமும் அடைபடும்.

இரண்டு மூன்று பாதைகளில் ஏதாவது ஒரு பாதையாவது இருந்தால்தான் சீராக இரத்தம் போகும்.
1.போகும் பாதைகளெல்லாம் அடைபட்டு விட்டால்
2.இருதயம் சீராக இயங்காதபடி HEART ATTACK போன்ற நிலைகள் வந்து விடும்.
3.நெஞ்சு வலி அதிகமாகி மடியச்செய்து விடும்.

இதைப்போன்ற நிலைகள் வராமல் தடுக்க இடுப்பிலே கை வைத்துச் சாய்ந்து அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்ற சுவாசத்தை எடுத்து மகரிஷிகளின் உணர்வுகளை உள்ளுக்குள் செலுத்த வேண்டும்.

அப்போது அந்த அடைப்புகளை எல்லாம் நீக்கிவிடும்.

ரொம்பவும் தொல்லை கொடுத்தது என்றால் தியானம் செய்யும் அன்பர்கள் நான்கு பேரோ ஐந்து பேரோ சேர்ந்து
1.விபூதியையோ அல்லது தண்ணீரையோ முன்னாடி வைத்து
2.மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வை அதற்குள் பாய்ச்சி
3.அவர் இருதயங்களில் உள்ள வலி நீங்கி அது சீராக இயங்கி அவர் நலம் பெற வேண்டும் என்று எண்ணி
4.அந்தப் பொருளைக் கொடுங்கள்.

அவர் குடிக்கும் போது உங்கள் பார்வையைச் செலுத்தி மகரிஷிகளின் அருள்சக்தி அவர் பெற வேண்டும். அவர் இருதயம் சீராக இயங்க வேண்டும் அவர் நலம் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.

(அவர் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுவதற்கு முன் நமக்குள் அதை வலுவாக ஏற்றிக் கொள்ள வேண்டும்)

அவ்வாறு அவர்களுக்கு நீங்கள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பாய்ச்சப்படும் போது அது நல்லதாகும். இது பழக்கத்திற்கு வர வேண்டும்.

இந்தப் பயிற்சிகளைச் செய்து வந்தாலே நாளடைவில் உங்கள் உடல் நோய் குறைந்துவிடும். குறைந்த பட்சம் ஒரு பத்து நிமிடம் – இருபது நிமிடம் வரையிலும் செய்யலாம்.

அப்புறம் அதற்கடுத்துச் சும்மா இருக்கும் பொழுதெல்லாம் மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் என்று உடலுக்குள் பரப்புங்கள். அந்த மகரிஷிகளின் எண்ண அலைகளை உடலுக்குள் பாய்ச்சும் போது நம் உடல் தூய்மையாகும்.

அப்போது அந்த மகரிஷிகளின் பால் பற்று வரும்.

1.நம் உடல் நலம் பெறுவதற்கு நமக்கு நாமே
2.இம்முறைப்படி நாம் செய்து கொண்டோம் என்றால் நன்றாக இருக்கும்.

நமக்குள் பொங்கச் செய்ய வேண்டிய சக்தி

Pongalo pongal

நமக்குள் பொங்கச் செய்ய வேண்டிய சக்தி…!

தண்ணீரில் ஒரு நிறத்தைக் கலந்தால் தண்ணீர் அந்த நிறத்தின் தன்மையாக முழுமையாக இருக்கிறது. அதற்குள் சிறிதளவு (நல்ல) தண்ணீரை மீண்டும் ஊற்றும் போது அதே நிறமாகத் தான் தெரிகிறது.

ஆனால் அதிகமாக நல்ல நீரை ஊற்ற ஊற்ற அந்த நிறம் மாறுகிறது.

அழுக்குத் தண்ணீர் இருக்கிறது. அதிலே இந்த நன்னீரை விட விட அழுக்கு தண்ணீர் பொங்கி வெளியே வருகிறது. நல்ல நீர் சேரச் சேர,,, சேர… அழுக்கின் தன்மை குறைந்து முழுவதும் நல்ல நீராக வருகின்றது.

இதைப் போலத் தான் நுகர்ந்தது (சுவாசிப்பது) உயிரிலே படும் போது உணர்வாகின்றது. உடலுக்குள் செல்லும் போது உடலில் உள்ள எதிர் அணுக்கள் அதை மாற்றப்படும் போது அது எப்படி ஆகிறது…?

ஏனென்றால் அதனுடைய வலு அது.

அதைக் குறைக்க வலுவான உணர்வுகளை அதிகமாகச் சுவாசிக்கும் போது அது எப்படி அடங்குகின்றது…?
1.சுவாசித்ததை முதலில் எதிர்க்கிறது.
2.ஆனால் அதைக் காட்டிலும் வலிமையானதை அதிகமாக்கி விட்டால் குறைகிறது.

“சொல்வது புரியவில்லை…!” என்று விட்டுவிடாதீர்கள்.

நான் (ஞானகுரு) படிக்காதவனாக இருந்தாலும் குருநாதர் ஒவ்வொரு சமயத்திலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை இணைத்து அதனுடைய செயலாக்கங்கள் உன்னுடைய உடலில் எப்படி உரு மாறுகிறது என்பதனை அனுபவ ரீதியாகக் கொடுத்தார்.

நாம் நல்லவர்களாக இருப்பினும் மனித வாழ்க்கையில் சந்தர்ப்பத்தால் நுகர்ந்த குறையான உணர்வுகள் நல்ல குணங்களுக்குள் கலந்து விடுகின்றது.

அதைக் குறைக்க வேண்டும் என்றால் நமக்குள் பொங்க வேண்டியது எது…?
1.நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளைப் பொங்கச் செய்து (அதிகமான அளவில் கூட்டி)
2.நமக்குள் வந்த இருளைத் தணியச் செய்ய வேண்டும்
3.பொருளறிந்து செயல்படும் உணர்வின் அறிவைக் கூட்ட வேண்டும்

அப்பொழுது வெகு தொலைவிலிருந்து வரும் இருள்களையும் அகற்றிடும் அருள் சக்தியைப் பெறுகின்றோம். அந்தத் துருவ நட்சத்திரம் அதைத்தான் செய்கிறது.

வெகு தொலைவில் வரும் உணர்வுகளைப் பலவீனப்படுத்தி உணர்வின் ஒளியாக மாற்றி ஒளியின் உடலாக இருந்து கொண்டிருக்கும் அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த உணர்வினை நாம் நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

1.உயிர் ஒளியாக இருக்கிறது
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாம் பெறுகின்றோம்.

 

அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள்
1.அந்தத் துருவ தியான நேரத்தில்
2..பொங்கும் மங்கல உணர்வின் தன்மையை நினைவு படுத்தி
3..நீங்கள் எங்கே இருந்தாலும்
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்கெல்லாம் கிடைக்க வேண்டும் என்று
5.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் பிரார்த்தனை செய்து கொண்டேயிருக்கின்றேன்

அந்த நேரத்தில் நீங்களும் துருவ நட்சத்திரத்தை எண்ணி அந்தப் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று சிறிது எண்ணினாலும் அந்த நறுமணங்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைச் சேர்த்துத் தீமையை விளைவிக்கும் நிலைகளை நீக்கி உணர்வின் தன்மை ஒளியாக உருவாக்கும் போது கல்கி.

1.உயிர் ஒளியாக இருக்கிறது
2.உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றிடும் அருள் சக்தி நாம் பெறுகின்றோம்.

இராவணனின் மகன் “இந்திரஜித்…” மாயமாகச் செயல்படுபவன் என்று இராமாயணம் காட்டுகின்றது – விளக்கம்

Image

Indrajith

இராவணனின் மகன் “இந்திரஜித்… மாயமாகச் செயல்படுபவன்…” என்று இராமாயணம் காட்டுகின்றது – விளக்கம்

 

ஒரு மனிதன் அவன் வாழும் பொழுது அரக்க உணர்வுடன் செயல்படுகிறான் என்று வைத்துக் கொள்வோம். வீட்டில் உள்ள மற்றவர்கள் “அவன் அப்படிப் பேசுகின்றான்… இப்படிப் பேசுகின்றான்.. பல தகாத செயல்களை எல்லாம் செய்கிறான்…” என்பார்கள்.

ஆனாலும் அவன் உடலை விட்டு உயிர் வெளியில் போன பிற்பாடு அவன் அரக்கத்தனமாகச் செயல்பட்ட உணர்வுகள் அனைத்தும்
1.அந்த வீட்டிற்குள் பரவியிருக்கின்றது.
2.அவனைச் சார்ந்த எல்லோரிடமும் இது பதிவாகி இருக்கின்றது.

அப்படிப் பதிவாகியிருந்தாலும் அவனைப் பற்றி அடிக்கடி எண்ணினால் நம் உடலில் என்ன செய்யும்…? (ஆனால் அவன் இறந்து விடுகின்றான்)

ஒரு அரக்கனைக் கொன்றால் பல ஆயிரம் அசுரர்கள் எழுந்து வருகின்றனர் என்று இராமாயணத்தில் காட்டியிருப்பார்கள்.

ஒரு புலி இறந்தது என்றால் என்ன செய்யும்…?

அசுர உணர்வு கொண்ட அணுக்கள் தான் புலி உடலை உருவாக்கியது. புலி இறந்தபின் புலியை உருவாக்கிய ஜீவ அணு இதிலிருந்து வரக்கூடிய சத்தை எடுத்து உயிரணுவாகிப் புழுவாக மாறுகின்றது.

முதலில் அணுவாக இருந்தது. புலியின் உயிர் வெளியில் போனவுடனே இதைச் சாப்பிட்டு உயிரணுவாக மாறுகின்றது. புலி உடலைத் தின்றபின் அதில் உருவான புழுக்கள் பூராம் மடிந்த பிற்பாடு வெளியில் வருகின்றது.

புலி எதையெல்லாம் கொன்று தின்றதோ அந்த உணர்வுக்கொப்ப அந்தந்த உடல்களில் இந்த அணுக்கள் போய் உண்ணியாகவும் ஈயாகவும் உருவாகின்றது. நாய்களில் பார்க்கலாம். மாடுகளில் பார்க்கலாம்.

ஒரு ஈ மாதிரி இருக்கும். உள்ளுக்குள் புகுந்து இரத்தத்தை உறிஞ்சி விடுகிறது. மாடுகளில் உண்ணியாக வருகிறது. நம் உடல்களில் பேனாக வரும். அதனால் ஒரு விதமான அரிப்பு வரும். நம் உடலில் கண்ணுக்குத் தெரியாத உண்ணியாக வருகிறது.

அதாவது புலி இறந்தாலும் அந்த உடலிலிருந்து பல உயிரணுக்கள் வெளிப்பட்டு புலியைப் போன்று மற்ற உடல்களில் இருக்கும் இரத்தத்தை உறிஞ்சி உணவாக உட்கொள்ளும் உயிரினங்களாக வருகின்றது.

அதே போன்று தான் “ஒரு மனிதன் அவன் செத்துவிட்டான்…!” என்று நினைக்கின்றோம். ஆனால் அவன் உடலில் உருவான தீமையான அணுக்கள் நம் உடல்களில் வந்து பல தீமைகளைச் செய்கிறது.

இதையெல்லாம் வராமல் தடுக்க வேண்டுமா இல்லையா…?

அதைத்தான் ஒரு அசுரன் இறந்தால் அதிலிருந்து பல அரக்கர்கள் எழுகிறார்கள் என்று இராமயாணத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

ஒவ்வொரு குடும்பங்களிலும் பார்த்தோமென்றால்
1.இப்படிச் செய்தானே… பாவிப்பயல்… தொலைந்தானா…! என்று நினைத்தார்கள் என்றால்
2.அங்கே பரவி இருக்கும் அவன் உணர்வுகள் உள்ளுக்குள் போய்
3.ஒவ்வொரு உடலிலும் உள்ளுக்குள் போய் நரகவேதனைப் படச் செய்கின்றது.

சில குடும்பங்களில் இடைஞ்சலாக இருப்பவர்கள் தொலைந்து போய் விட்டால்… சரியாகப் போகும்… அப்பொழுது தான் “நிம்மதி…!” என்று நினைப்பார்கள்.
1.ஆனால் போன பிற்பாடு தான்
2.அந்த உணர்வுகள் எல்லோர் உடலிலேயும் பெருகத் தொடங்கி விடும்.
3.ஆகவே அவன் எங்கே இறந்திருக்கின்றான்…?

இதை நாம் மாற்ற வேண்டுமா இல்லையா…!

அதற்குத்தான் அந்த இராமயாணக் காவியத்திலே உயிரின் இயக்கத்தால் வந்த நிலையும் பத்தாவது நிலை அடையக்கூடிய இராவணன் எந்த நிலையில் இருக்கின்றான்…? என்று காட்டுகின்றார்கள்.

இந்த உடலை உயிர் உருவாக்கினாலும்… உடலில் வளர்த்துக் கொண்ட அந்த அணுக்கள் அனைத்தும் “மீண்டும் எப்படி அசுர குணங்களை வளர்க்கின்றது…? என்பதைத்தான் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அதாவது அங்கே “இந்திரஜித்” என்ன செய்கின்றான்…? இராவணனின் மகனான இந்திரஜித்
1.அவன் செத்தாலும் கூட யாருக்கும் தெரியாமல்
2.மறைந்திருந்தே செயல்படுவான் என்று சொல்கிறார்கள்.

எப்படி…!

ஒருவன் கொடூரமாகச் சாகின்றான். பழி தீர்க்கும் உணர்வோடு வெளியில் வருகின்றது. ஆனால் தன் உணர்வைச் செயலாக்க இன்னொரு உடலுக்குள் வந்து விட்டது என்றால்
1.இவனுக்குத் தெரியமலேயே அவனை ஆட்டிப் படைக்கின்றான்…
2.பேயாக வந்து ஆட்டுகிறான் அல்லவா…!
3.எத்தனை ஆசைப்பட்டானோ அவன் செத்த பிற்பாடு பேயாக வந்து ஆடுகின்றான்.

பார்க்கின்றோம் அல்லவா…!

இவனுக்குள் விளைந்த இந்த உணர்வுகள் அவனைக் கொல்ல வேண்டும் என்ற உணர்வுகள் மடிந்த பின் இத்தனை வேலையும் செய்கின்றது.

அவனுக்குப் பிறந்த குழந்தையும் அதன் வழியில் வளரப்படும் போது அவனும் இப்படித் தான் வருகின்றான். அதையும் பார்க்கின்றோம்.

இதைப் போன்ற நிலைகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்…? இதற்காகத்தான் குருநாதர் என்னை “நீ கல்யாணராமனை நேசி…! என்றார்.

அதாவது அகஸ்தியனும் அவன் மனைவியும் ஒன்றிய நிலைகள் கொண்டு
1.தான் பெற்ற சக்தி தன் மனைவி பெறவேண்டும் என்றும்
2.தன் கணவன் பெறவேண்டும் என்றும்
3.அன்பு கலந்த நிலைகளில் ஒருவருக்கொருவர் உயர்த்திடும் நிலையாக
4.இரு மனமும் ஒரு மனமாகி இரு உணர்வும் ஒன்றாகி இரு உயிரும் ஒன்றென இணைந்து
5.”துருவ மகரிஷியாக…!” ஆனார்கள்.

அந்தத் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி அதைத் தியானித்தால் நம்மை அறியாமல் இயக்கும் கொடூரமான அச்சுறுத்தும் உணர்வுகளிலிருந்து விடுபட முடியும்.

எதிர் நிலையான உணர்வுகளை மாற்றி பகைமையை அகற்றி அன்பு கலந்ததாக “நல்ல உணர்வுகளாக இயக்கச் செய்ய முடியும்…!’ என்று தெளிவாக்கினார் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர்.

அகஸ்தியன் மாமிசம் சாப்பிடவும் இல்லை…! மற்றவர்களை மாமிசம் சாப்பிடச் சொல்லவும் இல்லை…! – ஏன்…?

Image

dhuruva maharishi-agastyan

அகஸ்தியன் மாமிசம் சாப்பிடவும் இல்லை…! மற்றவர்களை மாமிசம் சாப்பிடச் சொல்லவும் இல்லை…! – ஏன்…?

 

இராமாயணத்தில் அகஸ்தியரின் வல்லமையைப் பற்றிச் சொல்லியிருப்பார்கள்.

அகஸ்தியர் காட்டுக்குள் செல்லும் போது வாதாபி என்ற அரக்கனும் அவனுடைய சகோதரனும் அவரை வழி மறிக்கின்றார்கள்.

ஏனென்றால் அந்தப் பாதையில் வருகின்றவர்களுக்கெல்லாம் அவர்கள் விருந்து கொடுப்பார்கள். வாதாபி என்பவன் ஆடாக மாறிக்கொள்வது. அதை அறுத்துச் சமைத்து வந்தவருக்கு விருந்து கொடுப்பார்கள்.

சாப்பிட்டு முடித்தவுடனே “வாடா வாதாபி…!” என்று சொன்னால் விருந்து சாப்பிட்டவர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியில் வாதாபி வருவான். பின் அவரை அந்த இரண்டு பேரும் உணவாக உட்கொள்வார்கள்.

இது தான் அவர்களுடைய வழக்கம். இந்த மாதிரி ஒரு கதையைக் கூறியிருப்பார்கள். இதனுடைய உண்மை நிலை எது….?

அகஸ்தியன் சர்வ சக்தியும் பெற்றவன். அரக்கர்கள் விருந்து கொடுக்கின்றோம் என்று சொல்லும் பொழுது “நான் மாமிசம் சாப்பிடுவதில்லையப்பா…! என்று அகஸ்தியன் சொல்கின்றான்.

மற்றொரு ஜீவன்களைக் கொன்று புசிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. மனிதனுக்கு வேண்டிய தாவர இனங்களை உருவாக்கி அதைச் வேக வைத்துச் சமைத்துச் சாப்பிடும் பழக்கம் கொண்டவன் தான் அகஸ்தியன்.

மற்ற பிராணிகளை அவன் சாப்பிட்டதில்லை. ஏனென்றால் மற்ற உயிரினங்களைக் கொன்று சாப்பிட்டால்
1.எந்தப் பிராணியைச் சாப்பிட்டோமோ அந்த மணம் நம் உயிரான்மாவில் அதிகரித்து
2.இறந்த பின் அந்தப் பிராணியின் உடலுக்குள் நம் உயிர் நம்மை அழைத்துச் செல்லும் என்பதைத்
3.தெளிவாக அறிந்தவன் அகஸ்தியன்.

அதே போல் வேக வைக்காத பச்சைக் காய்கறியைச் சாப்பிட்டுப் பாருங்கள். உங்கள் உடலில் எந்தக் காயைச் சாப்பிட்டீர்களோ அந்த மணம் வரும். அந்த மணம் அடுத்து என்ன செய்யும்…!

உயிர் போனதும் அந்தச் செடியிடம் நம்மை அழைத்துக் கொண்டு போகும். அல்லது அந்தப் பச்சைக் காய்கறியை எந்த மாடோ ஆடோ அதிகமாகச் சாப்பிட்டதோ நம்மை நேரே அதனிடம் இழுத்துக் கொண்டு போகும்.

காய்களைப் பச்சையாகச் சாப்பிட்டாலும் அந்த உணர்வுகள் அங்கே இழுத்துக் கொண்டு போய் மனிதனல்லாத நிலையைத்தான் உருவாக்கச் செய்யும் என்று தெளிவாகக் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

“மனிதன் அடைய வேண்டிய எல்லை எது…?” என்று அறிந்து உயிருடன் ஒன்றிய உணர்வுகளை ஒளியாக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான் அகஸ்தியன்.

“இது எப்படி உருவாகின்றது…?” என்ற நிலையை அனுபவ ரீதியாக அறிந்து கொள்வதற்காக குருநாதர் காடு மேடெல்லாம் அலையச் சொன்னார். அறிந்து கொண்டபின் தான் உங்களுக்கு இதைத் தெளிவாகச் சொல்கிறோம்.

சாமியாரை நம்புகின்றீர்கள்… ஜோசியத்தை நம்புகின்றீர்கள்… மந்திரத்தை நம்புகின்றீர்கள்…! உங்களை நீங்கள் நம்ப மறுக்கின்றீர்கள்.

ஆனால் நீங்கள் எண்ணியதையெல்லாம் இயக்குவது உங்கள் உயிர் தான் என்ற நிலையில் நம்பிக்கை இருந்தால் யாம் உபதேசிக்கும் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதிவாக்கிக் கொள்ளுங்கள்.

மீண்டும் நினைவுபடுத்தினீர்கள் என்றால்
1.உங்கள் உயிர் அதை உருவாக்கும்
2.இருளை அகற்றும்… மெய்ப் பொருள் காணச் செய்யும்.
3.வாழ்க்கையில் பிறவியில்லா நிலைகள் அடையச் செய்வது உங்கள் உயிர் தான் – நானல்ல.

நான் கண்டேன். எனக்குள் எடுத்தேன். நீங்களும் அதைப் பெற வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். அதனால் இது எனக்குள் விளைகின்றது.

1.நீங்கள் நலமாக வேண்டும் என்ற நிலையில்
2.உங்கள் கஷ்டத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை
3.கஷ்டத்திலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்று தான் எண்ணுகின்றேன்
4.அப்போது உங்கள் துன்பம் எனக்குள் வருவதில்லை
5.அருள் ஒளி எனக்குள் வருகின்றது… வளர்கின்றது
6.நான் அந்த மகரிஷிகள் வாழும் இருப்பிடத்திற்குப் போகின்றேன்.

இதே மாதிரி நீங்கள் செய்து பாருங்கள். துன்பங்களை அகற்றலாம். இதில் என்ன கஷ்டம் வந்து விட்டது…? இது உங்களால் முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் துருவனாகி துருவ நட்சத்திரமான அதனின்று வரும் பேரருள் பேரொளியை நாம் பெறுவோம்.

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்று நம் உயிரான நிலைகளில் மூடி மறைத்திருக்கும் தீமை என்ற திரைகளை நீக்கிப் பேரோளி என்ற உணர்வினைப் பெருக்குவோம்.

அருள் ஆனந்த சக்தியைப் பெருக்குவோம். அருள் ஆனந்தத்தைப் பெருக்குவோம். ஆனந்த வாழ்க்கை வாழ்வோம். மலரைப் போல மணம் பெறுவோம்.

எல்லோரும் மகிழ்ந்து வாழும் சக்தியைப் பெறுவோம்.

அறுபது வருடத்திற்கு ஒரு முறை வரும் ஆண்டை “ஈஸ்வர ஆண்டு” என்று அழைத்தார்கள் ஞானிகள் – விளக்கம்

Image

lord-eswara-192020

அறுபது வருடத்திற்கு ஒரு முறை வரும் ஆண்டை “ஈஸ்வர ஆண்டு” என்று அழைத்தார்கள் ஞானிகள் – விளக்கம்

 

“ஈஸ்வர வருடம்…” என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,

சூரியன் உருவாகி ஒரு பிரபஞ்சம் உருவானாலும் அதில் உயிரணு தோன்றி தான் நுகரும் உணர்வுகள் அனைத்தையும் அணுவாக மாற்றி உருவாக்கும் உணர்வு பெற்றது.

உயிரை ஈஸ்வரன் என்றும் உயிராக உருவான நாளை ஈஸ்வர வருடம் என்றும் ஞானிகளால் பெயரிடப்பட்டது.

நாம் எண்ணும் எண்ணங்கள் அந்த உணர்வுகள் எதுவோ அந்த உணர்வின் இயக்க அணுவாக மாற்றி அணுவின் மலம் நம் உடலாக மாறுகின்றது.

1.உயிர் நுகர்ந்த உணர்வுகள் அணுவாகப்படும் போது
2.அந்த அணுவின் வளர்ச்சி தன் இனத்தைப் பெருக்கும் நாளாகவும் அது அடைகின்றது
3.அதனால் தான் ஈஸ்வர வருடம் என்று சொல்வது.

பல கோடிச் சரீரங்களில் உடல் பெற்ற நிலைகளில் உடலின் உணர்வுகள் தீமைகளை அகற்றி அகற்றி அகற்றிப் பரிணாம வளர்ச்சி அடைந்து அடைந்து இன்று நம்மை மனிதனாகப் பரிணாம வளர்ச்சியில் முதுமையின் நிலைகளை அடையச் செய்து உள்ளது உயிர்.

அதே சமயத்தில் மனிதனான பின் பல கோடி உணர்வுகளைக் கடந்து உணர்வின் தன்மைகளை அருள் ஒளியாக மாற்றிடும் பருவம் பெற்றது இந்த மனித உடல்.

பல கோடித் தீமைகளிலிருந்து விடுபடும் உணர்வும் தீமையை நீக்க அருள் ஞானத்தை உருவாக்கும் தன்மை பெற்றது இந்த மனித உடல், அதனால் தான் மனித உடலிலிருந்து வெளிப்படும் மணத்தைக் கார்த்திகேயா என்று காரணப் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

தன்னைக் காத்திட வேண்டும்… காத்திட வேண்டும்…! என்ற உணர்வினைக் கூட்டிக் கூட்டிக் கூட்டி இந்த உடலைக் காத்திடும் உணர்வின் தன்மை கொண்ட ஆறாவது அறிவைச் சேனாதிபதி என்றார்கள் ஞானியர்கள்.

பாதுகாக்கும் உணர்வு கொண்ட மனித உடல் பெற்றிருந்தாலும் சந்தர்ப்பத்தால் வேதனை வெறுப்பு இதைப் போலக் கடும் உணர்வுகளை அறிய நேர்ந்தால் உணர்வை நுகர்ந்து தான் அறிகின்றோம்.

1.ஒருவன் வேதனைப்படுகின்றான் என்று உற்றுப் பார்த்தால் போதும்.
2.அவன் உணர்வை நமது கரு விழி நமக்குள் பதிவாக்கி விடுகின்றது.
3.அவனின்று வெளிப்படும் வேதனையின் உணர்வை நுகரச் செய்கின்றது கண்ணின் காந்தப் புலனறிவுகள்
4.நுகர்ந்த உணர்வுகள் உடல் முழுவதும் பரவி உணர்த்துகின்றது. உணர்கின்றோம்
5.அந்த உணர்ச்சிகள் இந்த உடலையே இயக்குகின்றது.

இருப்பினும் நாம் நுகர்ந்த உணர்வுகள் அனைத்தும் நம் உயிர் எப்படி இயக்கச் சக்தியாக இயங்கிக் கொண்டு உள்ளதோ இதைப்போல நுகர்ந்த உணர்வை அணுவாக மாற்றி (அதையும்) ஓர் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றது.

அவ்வாறு மாறினாலும் நமது உயிர் ஈசனாகவும் நாம் நுகர்ந்த உணர்வு அணுவாக உருவாக்கப்படும்போது தனது இனத்தை அது உருவாக்கும் சக்தி பெறுகின்றது. அதாவது
1.நம் உயிர் ஈசனாக இருப்பினும்
2.நம் உடலுக்குள் உருவான அணுவின் தன்மையும் ஈசனாகவே அமைகின்றது.

ஒருவர் செய்யும் உணர்வினைத் தவறென்றோ… தவறில்லை என்றோ… அச்சுறுத்தும் நிலையென்றோ… அச்சுறுத்தாத நிலை என்றோ…! அறிந்தாலும் நுகர்ந்த உணர்வின் தன்மையை உயிர் அந்த அணுவாக உருவாக்கி விடுகின்றது.

அதனால் தான் உயிரை ஈசன் என்று சொன்னார்கள் ஞானிகள்.

வான்வீதியிலே ஓரு உயிரணு தோன்றி தான் உருவான நிலைகள் கொண்டு மனிதனாக வளர்ச்சியாகி அவ்வாறு மனிதனை உருவாக்கிய நிலையை நினைவுபடுத்தும் நாள் தான் “ஈஸ்வர ஆண்டு” என்பது.

அறுபது வருடத்திற்கு ஒரு நாள். இந்த வருடம் கழிந்தால் இனி அறுபது வருடம் கழித்துத் தான் இந்த ஈஸ்வர ஆண்டே வரும்.

மனிதனான பின் அறுபதை எட்டும் போது முதுமையின் உணர்வை அறிந்தான். பல தீமைகளின் உணர்வை அறிந்தான். இருப்பினும்
1.தீமையை அகற்றும் உணர்வை எவர் செயல்படுத்துகின்றனரோ
2.அவரே அருள் ஒளியை உருவாக்கும் அருள் ஞானியாகின்றார்கள்
3.அப்படிப் பெற்றவன் தான் அகஸ்தியன் “துருவனானான்.. துருவ மகரிஷியானான்… துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்…!”

அவனின்று வெளிப்பட்ட உணர்வினைப் பின் வந்த மக்கள் நுகர்ந்தறிந்த பின் அவன் ஒளியின் உணர்வாக உருவாக்கியது போன்று இந்த உடலில் உள்ள அணுக்களை ஒளியின் சரீரமாக மாற்றும் பண்பு பெற்றார்கள்.

நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரும் அகஸ்தியன் வழியில் ஒளியாக மாற்றி இன்றும் ஏகாந்த நிலை கொண்டு வாழுகின்றார்… வளர்கின்றார்… வளர்ந்து கொண்டுள்ளார்…!
1.அவரிடமிருந்து வெளிப்படும் உணர்வினை
2.அவர் காட்டிய வழியில் நமக்குள் பதிவு கொண்டு
3.மீண்டும் அதை நினைவுக்குக் கொண்டு வந்தால் அருள் ஒளியை வளர்க்க முடியும்.
4.வாழ்க்கையில் வரும் இருளை அகற்ற முடியும்.
5.மகரிஷியின் அருள் உணர்வை நமக்குள் உருவாக்கிப் பிறவியில்லா நிலையை அடைய முடியும்.

ஆகவே ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் ஒளியை நமக்குள் உருவாக்கும் வருடமே “ஈஸ்வர ஆண்டு…!”

நல்ல நேரம் கிடைக்காதா…! நல்ல நேரம் வராதா…? என்று ஏங்குவோரை ஏமாற்றும் நிலை தான் இன்று உலகெங்கிலும் உள்ளது – ஏமாற்றுவோரிடமிருந்து விடுபடுங்கள்…!

Jaadhagam - nadi

நல்ல நேரம் கிடைக்காதா…! நல்ல நேரம் வராதா…? என்று ஏங்குவோரை ஏமாற்றும் நிலை தான் இன்று உலகெங்கிலும் உள்ளது – ஏமாற்றுவோரிடமிருந்து விடுபடுங்கள்…!

சிலர் ஜாதகம் ஜோதிடத்தைப் பார்த்து விட்டு இருக்கின்ற நேரத்தையும் வீணாகக் கெடுத்துக் கொண்டிருப்பார்கள்.

நான்கு விதமான பஞ்சாங்கம் இருக்கும். அந்த நான்கும் நாலு விதமாக இருக்கும். அதைப் பார்க்கும் ஜோதிடக்காரர்கள் அவன் ஒன்றை சொல்வான். இவன் இன்னொன்றைச் சொல்வான்.

கடைசியில் போட்டுக் குழப்பி…
1.இவரிடம் பார்த்தால் நன்றாக இருக்கிறது என்று ஒருவரிடம் போவார்கள்
2.இல்லை.. இல்லை…! அவரிடம் போனால் தான் சரியாகக் கணித்துச் சொல்கிறார் என்று மற்றொருவரிடம் போவார்
3.முதலில் சொன்னதற்கு அதற்கு மாறாகிப் போகும்.
4.இப்படி இந்த உணர்வுகள் மாறி மாறி இங்கே சுவாசித்தது எல்லாம்
5.ஜாதகத்தையே மாற்றிவிடும்.
6.ஜாதகத்தால் நமக்கு எந்தப் பலனும் இல்லை.
7.நான் அவரிடம் போனேன்.. அப்புறம் இவரிடம் போனேன் என்று கால நேரம் தான் விரயமாகும்.

அதைக் காட்டிலும் வாஸ்து சாஸ்திரம் நியூமராலஜி என்று வந்து விட்டது. தவறாக நினைத்து விடாதீர்கள்.

குடும்பத்தில் முன்னாடி எல்லாம் நன்றாகத் தான் வாழ்ந்திருப்பார்கள். அதில் தற்சமயம் சந்தர்ப்பத்தால் ஏதோ நஷ்டமோ கஷ்டமோ ஏற்பட்டு விட்டது என்றால் என்ன சொல்வார்கள்…?

வாஸ்து சாஸ்திரம் பார்க்க அவர்களைக் கூப்பிட்டு வந்ததும்
1.ஓஹோ.. இப்படி ஆகிவிட்டதா…!
2.உங்கள் ராசிக்கு வீட்டில் இருக்கும் நிலையை (வாசலை) மாற்றி
3.வேறு இடத்தில் வாசலை அமைத்தால் சரியாகும் என்பார்கள்.

அம்மா அப்பா தன் பிள்ளைகளுக்கு பெயரை நன்றாக வைத்திருப்பார்கள். ஆனால் நியூமராலஜிப்படி உங்கள் ராசிப் பிரகாரம் உங்கள் பெயரில் உள்ள இந்த எழுத்தை மாற்றி விட்டால் எல்லாம் கூடி வரும் என்பார்கள்.

இதே மாதிரி வியாபாரத்தில் எடுத்துக் கொண்டோம் என்றால் அமெரிக்காவிலிருந்து ஒரு மருந்து வருகின்றது. அதை எல்லாம் விற்று விட்டீர்கள் என்றால் அதற்கப்புறம் மேல் கொண்டு அதிக இலாபம் வரும். நீங்கள் வாங்கி விற்க விற்க அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்பார்கள். “செயின் கோர்வை..” என்று அதைச் சொல்வார்கள்.

எப்படியெல்லாம் ஏமாற்றிப் பிழைப்பதற்குண்டான வழிகள் இருக்கின்றதோ அத்தனை வழிகளையும் இன்று மனிதன் செய்து கொண்டிருக்கின்றான்.

இயற்கையின் உண்மையை நாம் பெற வேண்டும் அதை அறிய வேண்டும் என்ற நிலையே அற்றுப் போய் விட்டது.

எப்படியோ சரி… காசைக் கொடுத்து விலைக்கு வாங்குகிற மாதிரி
1.எனக்கு இன்றைக்கு எப்படியாவது நல்ல நேரம் வர வேண்டும்
2.யார் எதை வேண்டுமானாலும் என்னமோ சொல்லி விட்டுப் போகிறார்கள்…!
3.நாம் அவர்களிடம் போய்க் கேட்போம்…
4.நல்ல நேரம் வந்தது என்றால் வரட்டும்…! என்று
5.இப்படித் தான் நம் சிந்தனைகள் செல்கிறது.

அடுத்தவர்களைத்தான் நம்ப வேண்டும் என்று எண்ணுகிறோமே தவிர நமக்குள் இருக்கும் ஆற்றலை அறிய முடியவில்லை.

இதைத் தெரிவிப்பதற்காகத்தான் “பிள்ளையார்…” இந்தப் பிள்ளை யார்..? நீ நன்றாகச் சிந்தித்துப் பார்…! மனிதனாக உருவானால் “முழு முதல் கடவுள்..” சிருஷ்டிக்கும் சக்தி பெற்றவன் மனிதன் என்று முச்சந்தியிலேயே வைத்து விநாயகரைக் காட்டுகின்றார்கள் ஞானிகள்.

1.உயிரே கடவுள். உடலே கோவில்
2.உடலில் உள்ள 1008 குணங்களும் 1008 தெய்வங்களாகக் கொலு வீற்றிருந்து இயக்குகின்றது.
3.நீ எதை எண்ணுகின்றாயோ அதைத்தான் உன் உயிர் உருவாக்குகின்றது… படைக்கின்றது.. என்று
4.ஆலயத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்.

அந்த ஞானிகள் காட்டிய வழியில் அருள் சக்திகளை நாம் பெற்றால் இந்த வாழ்க்கையில் வரும் பேரிருளை நீக்கிப் பேரொளி என்ற நிலை பெறலாம். உங்களால் முடியும். உங்கள் அனுபவம் பேசும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்…!

தெய்வத்தைக் கைவல்யப்படுத்தி வைத்திருக்கிறேன் என்று 108.. 1008… 100008… மந்திரம் சொல்வோர்…!

Mathras chanting

தெய்வத்தைக் கைவல்யப்படுத்தி வைத்திருக்கிறேன் என்று 108.. 1008… 100008… மந்திரம் சொல்வோர்…!

தெய்வச் சிலையைப் பார்த்து உன் காரியங்கள் நடைபெற வேண்டும் என்றால் கூட்டி அதற்குண்டான மந்திரத்தை நீ இத்தனை தடவை சொன்னால் உனக்கு இன்ன பலன் உண்டு என்று சொல்லியிருப்பார்கள்.

அதன் வழியில் நாம் பக்தி கொண்டு சிலையைப் பார்த்து இது தான் முருகன் என்றும் இது தான் காளி என்றும் நாம் மந்திரத்தைச் சொல்லி அதனின் உணர்வை ஜெபித்து அதைப் பெறவேண்டும் என்ற ஆசையில் ஆழமாகப் பதிவாக்கி விடுகின்றோம்.

இப்படிப் பதிவான உணர்வுகள் நாம் இறந்த பிற்பாடு என்ன ஆகின்றது…?

எந்தத் தெய்வத்தை எதன் ரூபத்தில் காட்டினார்களோ அடுத்தவர்கள் அந்தத் தெய்வத்தை ஏங்கிப் பார்க்கும் நிலையில்
1.அதனின் உணர்வின் அலையாக அவர்களுக்குள் ஈர்க்கப்பட்டு
2.அந்தப் பக்தி கொண்ட ஆன்மாக்களுக்கு
3.நாமே அந்தத் தெய்வமாகக் காட்சி கொடுக்கும் நிலை வரும்.

எப்படி..?

எந்தச் சிலையைப் பார்த்து மந்திரத்தை ஜெபித்து எதனின் உணர்வின் அலைகள் எனக்குள் பதிவானதோ உடலை விட்டுச் சென்ற பின் “நான் பார்த்த அந்தத் தெய்வம்…” அவர்களுக்குக் காட்சியாகத் தெரியும்.

அதாவது கேமராவில் (VIDEO) ஒரு படத்தை எடுத்து அதை அலைகளாக மாற்றி மீண்டும் திரைகளில் இடப்படும் போது அதே உருவத்தைக் காணுவது போன்று தெரியும்.

1.பக்தி மார்க்கங்களில் எதனை வழிபட்டு
2.எதனின் உணர்வை எதனை எண்ணி அந்த வழி பெறுகிறோமோ
3.தெய்வத்திற்கு என்னென்ன புஷ்பங்களைப் போடுகிறோமோ
4.என்னென்ன நிறங்களில் உடைகளை உடுத்துகின்றோமோ
5.இதைச் சூரியனின் காந்தப் புலனறிவு கவர்கின்றது
6.கண்ணுற்றுப் பார்க்கும்போது நமக்குள் படமாகப் பதிவாகின்றது.
7.நுகர்ந்த உணர்வோ உயிரில் படுகின்றது.
8.அந்த உணர்வுகள் உடல் முழுவதும் படர்கின்றது.

ஆசையின் நிமித்தம் அந்தத் தெய்வத்தை வழிபட்டு அதன் வழிகளில் பெருகி வந்தாலும் இந்த உடலை விட்டுப் பிரிந்த பின் இன்னொரு பக்தி கொண்ட ஆன்மா இதே போல செய்தால் அந்த ஆன்மா அங்கு சென்று அருளாடும்.

அதே சமயத்தில் மந்திரம் செய்பவர்கள் என்ன செய்வார்கள்…?

இன்னென்ன மந்திரம் கொண்டு ஜெபித்தால் இந்தத் தெய்வத்தைக் கைவல்யப்படுத்திக் கொள்ளலாம் என்று மந்திரத்தை ஜெபிப்பான் என்றால்
1.இந்த உணர்வின் தன்மை கொண்டு
2.அதே தெய்வத்தை நாமும் பதிவாக்கியதால் நாம் வளர்ந்து கொண்ட அந்த நிலைகள் கொண்டு
3.நம் உயிரான்மா அந்த மந்திரவாதி கையிலே சிக்கும்.

அவன் கையிலே சிக்கிய பின் அவர்கள் செய்யும் மந்திர வேலைகளுக்குப் பயன்படுத்துவார்கள். அதாவது
1.காட்சிகளாகக் காட்டுவதும்
2.பல தீய வினைகளைச் செய்வதும்
3.பல பொருள்களை வரவழைப்பதும் போன்று
எத்தனையோ வேலைகளைச் செய்து மற்றவரையும் ஏமாற்றுவார்கள்.

உதாரணமாக ஒரு மனித உடலில் உருவான உணர்வினை ஒரு தாவர இனத்திற்குள் பதிவாக்கி விட்டால் மீண்டும் இந்த உணர்வினை எண்ணத்தினால் செயலாக்கினால் அந்த இலை… “அப்படியே நகன்று வரும்…!”

ஒரு தேங்காயை வைத்து மனித உணர்வின் தன்மையைப் பதிவாக்கிய பின் இந்த உணர்வின் தன்மை அதிலே ஏற்றி அதைச் சுழலச் செய்ய வேண்டும் என்று எண்ணினால் “தேங்காயே சுழலும்…!”

1.நாம் அனைவரும் இதைக் கண்டு வியந்து
2.அவரிடம் அபரிமிதமான சக்தி இருக்கிறது என்றும்
3.அவர் சொல்லைக் கேட்டால் தெய்வத்தின் அருளைப் பெறுவோம்
4.நம் செல்வத்தைப் பெருக்குவோம் என்ற இப்படிப்பட்ட ஆசைகளில் தான்
5.நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது…!

1.கற்றவரும் சரி… கல்லாதவரும் சரி…
2.தெய்வமே இல்லை… கடவுளே இல்லை என்று சொல்வோரும் சரி…
3.தன்னைக் காக்க இத்தகைய மந்திரங்களைத் துணையாகக் கொண்டு
4.”தான் தப்பிக்க வேண்டுமே…!” என்ற இந்த உணர்வு கொண்டு தான் அலைகின்றனர்.

கடவுள் இல்லை…! என்பதும் கடவுள் இருக்கிறார்…! என்பதும் தனது நம்பிக்கை எதன் மேல் பற்று கொண்டதோ அதுவே… நமது உடலுக்குள் “கடவுளாகவும் தெய்வமாகவும் இயக்குகின்றது…!” என்பதை நாம் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

 

விஷ்ணு கோவில்களில் எல்லாம் ஆஞ்சநேயரை ஏன் வைத்துள்ளார்கள்..?

Jai Anjanaeya

விஷ்ணு கோவில்களில் எல்லாம் ஆஞ்சநேயரை ஏன் வைத்துள்ளார்கள்…? – 

 

இயற்கையின் உண்மையின் உணர்வுகளை நாம் அறிய முடியாதபடி திரித்து அவைகள் காலத்தால் தடைப்படுத்தப்பட்டது. இன்றும் நாம் தேடிக் கொண்டேயிருக்கின்றோம்.

எது உண்மை…! எது பொய்..? இராமன் நிஜமாகவே இருக்கிறார் என்று எண்ணுகிறார்கள். ஞானிகள் சொன்னது… என்ன..?

ஒரு உணர்வை நாம் நுகர்கின்றோம். நுகரப்படும் பொழுது இராமனின் பக்தன் – வாயு புத்திரன் “ஆஞ்சநேயன்…!”

1.எந்தக் குணத்தின் தன்மை நமக்குள் எண்ணமாகின்றதோ
2.அது நம்மிடமிருந்து சொல்லாக வெளியில் வரும் பொழுது
3.வாயுவாகத்தான் வருகின்றது.
4.கண்ணில் பார்க்கின்றீர்களா…? இல்லையே…!

அது அடுத்தவர் உடலுக்குள் போனவுடனே இந்த உணர்வை
1.அந்த எண்ணங்களைச் (காற்று) சுவாசிக்கும் பொழுது
2.இராமன் இட்ட கட்டளையின் பிரகாரம் அவர்களை இயக்குகின்றது.
3.எவ்வளவு அழகாகக் கொடுத்துள்ளார்கள் ஞானிகள்.

விஷ்ணு கோவில்களில் எல்லாம் பாருங்கள்…! ஆஞ்சநேயர் இருக்கும். சிவன் ஆலயத்தில் எல்லாம் பாருங்கள். விநாயகர் இருக்கும்.

இதையெல்லாம் நாம் கொஞ்சம் தெரிந்து கொண்டோம் என்றால் நம் சாஸ்திரம் எவ்வளவு பெரிய உண்மையைக் கொடுத்திருக்கின்றது…? என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதை எல்லாம் இழந்துவிட்டு இன்று நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

ஏமாற்றுபவர்கள் கையில் சிக்கிக் கொண்டு இந்த யாகத்தைச் செய்தால் பாவம் போகும் என்றும் அந்த மந்திரத்தைச் செய்தால் கஷ்டம் போகும் என்றும் “பாவத்தைச் செய்து… கஷ்டத்தைத்தான் தேடிக் கொள்கிறோம்…!”

நம்மை மீட்டுவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா…? நான் (ஞானகுரு) எதுவும் தவறாகச் சொல்லவில்லை…!

ஞானிகள் கொடுத்த இயற்கையின் பேருண்மைகளைக் காலத்தால் அரசர்கள் மாற்றிவிட்டார்கள். எப்படியோ…, இன்று வாழ வேண்டும்…! என்று நாம் விரும்புகின்றோம்.

அதற்குண்டான நிலைகளைச் செய்து ஏதோ இன்றைக்கு அந்தக் கஷ்டம் போனால் போதும்…! என்ற நிலையில் இருக்கின்றோம்.

தலை வலியை ஒருவர் போக்குகிறார் என்றால் அங்கே போவோம். தலை வலி கொஞ்ச நேரத்தில் போகும்.

உடனே “ஆஹா…!” நான் அங்கே போனவுடன் சரியாகி விட்டது என்பார்கள். இரண்டு நாள் கழித்தவுடன் அந்த உணர்வுகள் இங்கே இருக்கும். மீண்டும் முளைத்துவிடும்.

வயலில் களைகளை எடுக்கின்றோம். எடுத்தாலும் மீண்டும் மீண்டும் முளைக்கின்றது.
1.ஒரு தடவை எடுத்தவுடன் முழுமையாகப் போய்விட்டது
2.இனி வராது என்று சொல்ல முடியுமோ…!

நாம் உற்றுப் பார்த்து நுகர்ந்தது எல்லாம் ஊழ்வினை என்ற வித்தாக எலும்புக்குள் பதிவாகி இருக்கின்றது. இது முழுமையாகப் போக வேண்டும் என்றால் அதைக் காட்டிலும் சக்தி வாய்ந்த ஆற்றல்களை நாம் எடுக்க வேண்டும்.

அதற்காக வேண்டித்தான் மெய் ஞானிகளின் உணர்வுகளை ஊழ்வினை என்ற வித்தாக எல்லாம் கலந்து (MIXING) உங்களிடம் பதிவு செய்கின்றோம்.

அந்த ஞானிகள் கொடுத்த உணர்வின் சக்தியை உபதேசமாகக் கொடுக்கும் பொழுது செவி வழி கேட்கின்றீர்கள். அந்த உணர்வுகள் அலைகளாக மாறுகின்றது,

சுவாசிக்கும் பொழுது அந்த உணர்வின் தன்மையை உயிர் உங்களுக்குள் அணுவாக உருவாகும் கருவாக மாற்றுகின்றது.

எப்படியாவது உங்களிடம் ஆழமாகப் பதிவாக்க வேண்டும் என்பதற்காக கூடக் கொஞ்சம் நேரம் உபதேசித்து உங்களை நுகரும்படி செய்கின்றோம்.

அந்த ஞானிகளின் சக்தி வளர்ந்து விட்டால்
1.வரும் தீமைகளின் பிடியிலிருந்து நீங்கள் விடுபடலாம்
2.தீமையின் பிடியிலிருந்து மற்றவர்களையும் விடுபடச் செய்யலாம்.
3.அந்தச் சக்தியை நீங்கள் எல்லோரும் பெறவேண்டும் என்ற பேராசையில் தான் இதைச் சொல்கின்றேன்.

குருநாதரின் அருள் என்றென்றும் உங்களுக்கு உறு துணையாக இருக்கும். எமது அருளாசிகள்.

வாலி – குகையை விட்டு வெளியில் வராதபடி கல்லைப் போட்டு மூடினார்கள் – விளக்கம்

Image

Vali vadam - sukreevan

வாலி…, குகையை விட்டு வெளியில் வராதபடி “கல்லைப் போட்டு மூடினார்கள்…! – விளக்கம்

 

இராமயாணத்தில் இராமன் மறைந்திருந்து வாலியைத் தாக்கினான் அதாவது குகையில் கல்லைப் போட்டு அடைத்து மறைத்து விடுகின்றான் என்று காட்டுகின்றார்கள்.

எதற்காக இப்படிக் காட்டுகின்றார்கள்..? இதன் உட் பொருள் என்ன..?

நமது அன்றாட வாழ்க்கையில் கோபப்படுவோரையும் வேதனைப்படுவோரையும் சங்கடப்படுவோரையும் பார்க்கின்றோம்.

அத்தகைய உணர்வுகள் நமக்குள் வந்து தீமைகள் செய்யாது இருக்க வேண்டும் என்றால் அதைத் தடுக்க வேண்டும். தடுப்பதற்காக வேண்டித் தான் வாலியைக் கல்லைப் போட்டு இராமன் அடைத்தான் என்று காட்டினார் வான்மீகி மகரிஷி.

ஆகவே தீமையான உணர்வுகள் வந்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்…? அடுத்த கணம் “ஈஸ்வரா…!” என்று சொல்லிப் புருவ மத்தியில் உயிரை எண்ண வேண்டும்.
1.அந்த நேரத்தில் தீமையைத் தடுக்கும்
2.மிக..மிக…மிக…மிகப் பெரிய சக்தியை
3.துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை உங்களுக்குக் கொடுக்கின்றோம்.
4.சாதாரணமாக எண்ண வேண்டாம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை உங்களுக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் பதியச் செய்கின்றோம். கொஞ்சம் அதை நீங்கள் நினைவுக்குக் கொண்டு வந்தால் போதும்.

தீமையான உணர்வுகள் வரப்படும் போது புருவ மத்தியில் இடைமறித்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
1.இங்கே புருவ மத்தியில் (மிகவும் முக்கியம்)
2.கண்ணின் நினைவைக் கொண்டு வந்து விட வேண்டும்.

ஏனென்றால் முதலில் கண்ணின் நினைவைத் தீமை செய்வோரின் மேல் வைத்தோம். அவர்களை நமக்குள் ஊழ்வினை என்ற வித்தாகப் நம் கண்கள் பதிவாக்கிவிடுன்றது.

கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலன் அவர்கள் உடலிலிருந்து வந்த தீமையான உணர்வுகளை நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. அதிலிருந்து நுகர்ந்தவுடனே உயிரில் பட்டு அந்த உணர்ச்சியை ஊட்டி நம்மை இயக்குகின்றது.

விஷ்ணு என்ன செய்கின்றான்…? வரம் கொடுத்து விடுகின்றான்.

உயிரில் பட்டவுடன் அந்த ஒலியை எழுப்புகின்றது. அந்த உணர்ச்சிகள் நம் உடல் முழுவதும் பரவச் செய்கின்றது. விஷ்ணு சங்கு சக்கரதாரி. உணர்வின் ஒலியை எழுப்பி உடல் முழுவதும் சுழலச் செய்கின்றது என்று ஞானிகள் காட்டியுள்ளார்கள்.

நாம் வலிமை கூடியர்களாக இருந்தால் அவர்களுடன் சண்டைக்குப் போகின்றோம். நாம் வலு குறைந்தவர்களாக இருந்தால் அவர்களைப் பார்த்துப் பயப்படுகின்றோம்…!
1.போக்கிரியாக இருந்தால் இப்படிப் பேசுகின்றானே… இப்படிச் செய்கின்றானே…! என்று நாம் ஏதாவது வாயைத் திறக்கின்றோமா…?
2.நமக்கு அந்த வேதனை என்ற உணர்வு வருகிறது.
3.கார உணர்வோட வேதனையைச் சேர்த்தவுடனே என்ன செய்கிறது?
4.மிளகாய் அரைத்ததைக் கையில் வைத்தால் காந்தலும் எரிச்சலும் ஏற்படுகின்ற மாதிரி நம் உடலில் உருவாகின்றது.

அழகான துணிகளைப் போடுகின்றோம். அழகாக இருக்கின்றோம். ஆனால் யாராவது சிறு சொல்லைச் சொன்னால் தாங்க முடியவில்லை.

உயிர் வெளியில் போய் விட்டது என்றால் என்னவாகின்றது…? உடலை விட்டு உயிர் போய் விட்டது என்றால்
1.பெரிய கோடீஸ்வரர் மகனாக இருந்தாலும் கூட…
2.சீக்கிரம் தூக்கித் தள்ளி விடுப்பா… என்றுதான் நாம் சொல்கின்றோம்.
3.எல்லாச் சொத்து இருந்தும் அதை அனுபவிக்க முடிகின்றதா? இல்லையே…!

நமக்கு எல்லோருக்கும் தெரிந்தாலும் நம் உடலில் எடுத்துக் கொண்ட வேதனையான உணர்வுகளுக்கு அதற்குச் சாப்பாடு தேவை. இந்த உணர்ச்சிகளை உந்தி நம்மைச் சிந்தனை இல்லாதபடி ஆக்குகின்றது.

அப்போது நாம் அந்த வேதனையான உணர்வு உள்ளுக்குள் போகாமல் தடுத்துக் கொள்வதற்காக வாலியை இராமன் என்ன செய்தான்…?
அவனைக் கொல்லவில்லை. கல்லை வைத்துக் குகையை மூடி விடுகின்றான். வாலி வெளியில் வர முடியவில்லை.

துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வைப் புருவ மத்தியில் கண்ணின் நினைவைக் கொண்டு போக வேண்டும்.
1.உயிரான ஈசனிடம் வேண்டுங்கள். அவனிடம் கேளுங்கள்.
2.இத்தனையும் உருவாக்கியது… இத்தனையும் தெரிய வைக்கின்றது அவன்தானே…!
3.ஈசனை எங்கேயோ அல்லவா தேடுகின்றோம்…!
4.நாம் கேட்பது நுகர்வது எல்லாவற்றையும் இயக்கிக் காட்டுபவன் அவனே தான்…!

ஆகவே “ஈஸ்வரா…!” என்று துருவ நட்சத்திரத்தைக் கொண்டு இங்கே அடைத்து விட்டால் புருவ மத்தியின் வழியாகத் தீமையான குணங்கள் உடலுக்குள் புக முடியாது.

தீமை செய்யும் உணர்வுகள் உடலுக்குள் போகாமல் அதைத் தடுக்க வேண்டும் என்ற நிலையைத்தான் அவ்வாறு காட்டுகின்றார்கள்.