உடல் வாழப் போகிறோமா…? உயிர் வாழப் போகிறோமா…?

Image

உடல் வாழப் போகிறோமா…? உயிர் வாழப் போகிறோமா…?

 

மனிதர்களாக இன்று வாழ்பவர்கள் எல்லோருமே எந்த நோக்கத்தில் எந்த ஆசையில் எதற்காக வாழ்கிறீர்கள் என்றால் உடனடியாகச் சொல்வது நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பார்கள். சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பார்கள்.

மேலும் சாப்பிடவில்லை என்றால் உயிர் வாழ முடியாது என்பார்கள்.

இதில் மறைந்திருக்கும் மெய் என்ன என்றால் சாப்பிட்டால் உடலில் வாழலாம். இந்த உலகில் சிறிது காலம் வாழலாம் அவ்வளவு தான்.

“நான் யார்…?” என்ற கேள்வி கேட்டாலே உடலைத்தான் நாம் நான் என்று சொல்வோம்.

நான் என்றால் இந்த உடல் இல்லை. நான் என்றால் உயிர் தான்.

உயிரால் உருவாக்கப்பட்டது தான் இந்த உடல். விண்ணிலிருந்து வந்த உயிர் பூமியின் ஈர்ப்புக்குள் சிக்கி பூமியில் விளைந்த சத்தை எடுத்து அதனால் உருவானது தான் இந்தச் சரீரம்.

மண்ணால் உருவாக்கப்பட்ட சரீரம் மீண்டும் மண்ணுக்குள் தான் போகிறது என்பதையே இராமாயணம் கடைசியில் காட்டுகிறது.

உயிர் நட்சத்திரங்களின் கதிரியக்கச் சக்தியால் உருவான ஒளிக்கற்றைகளால் உருவானது. விண்ணிலே உருவானது தான் நம் உயிர்.

உயிருக்கு என்றுமே அழிவில்லை. மகரிஷிகளும் ஞானிகளும் அந்த உயிரின் ஆற்றலை அறிந்து உயிர் எப்படித் தோன்றியது என்று அறிந்து இயற்கையின் இரகசியங்களை அறிந்துணர்ந்தவர்கள்.

அவர்கள் அனைவருமே விண்ணிலே இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

எவ்வாறு…?

இருபத்தியேழு நட்சத்திரங்களின் சக்தியைத் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டார்கள். அது தான் விண்ணின் ஆற்றல் என்பது.

அந்தச் சக்திகளை மனிதனாக வாழும் பொழுது தமக்குள் விளைய வைத்து உயிராத்மாவை பேராற்றல்மிக்கதாக வளர்த்துக் கொண்டார்கள்.

அவர்கள் இந்தப் பூமியில் விளைந்ததை உணவாக எடுக்கவில்லை. விண்ணின் ஆற்றலை உணவாக எடுத்தார்கள்.

விண்ணின் ஆற்றலை உணவாக எடுத்ததால் வேகா நிலை பெற்று உயிரைப் போன்றே அழிவில்லாத நிலையாக பேரொளியாக இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

அகண்ட பேரண்டத்தில் வரும் அனைத்தையும் தனக்குச் சாதகமாக்கி உணவாக உட்கொண்டு ஒளியாக வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்தப் பூமிக்குள் விளையும் உணவை உட்கொண்டால் மீண்டும் மீண்டும் உடல்கள் பெற்று மண்ணுலகில் புழுவாக பூச்சியாக பறவையாக மிருகமாக மனிதனாக மாறி மாறி வேதனைப் பட்டு பட்டு “உடல் (வாழ்க்கை) வாழலாம்…”

– அல்லது –

மகரிஷிகளைப் போன்று விண்ணின் ஆற்றலைப் பெற்று உயிருடன் ஒன்றி என்றுமே விண்ணிலே “உயிர் (வாழ்க்கை) வாழலாம்…”

1.நாம் உடல் வாழப் போகின்றோமா…? – அல்லது

2.உயிர் வாழப் போகின்றோமா…?

3.மண்ணுலகில் வாழ விருப்பமா…! – அல்லது

4.விண்ணுலகில் வாழ விருப்பமா…!

முடிவு செய்து கொள்ளுங்கள்.

உயிரினங்களின் ரூப மாற்றம் எப்படி நடக்கின்றது…? புழு குளவியின் ரூபம் எப்படிப் பெறுகின்றது…!

Image

Bees and beetles

உயிரினங்களின் ரூப மாற்றம் எப்படி நடக்கின்றது…? புழு குளவியின் ரூபம் எப்படிப் பெறுகின்றது…!

 

ஒரு கண்ணில்லாத புழுவை குளவி அது கூட்டிலே எடுத்துக் கொண்டு வந்து தன் இனமாக மாற்றுகின்றது எப்படி என்று பார்ப்போம்.

குளவி முதலில் மண்ணைப் பிசைகின்றது. குளவிக்கு உமிழ் நீர் ஊறுகின்றது. உமிழ் நீர் ஊறுவதற்குத் தக்கவாறு அது மண்ணைத் தோண்டுகிறது.

1.உமிழ் நீரை மண்ணுக்குள் கொட்டி

2.மண்ணைப் பிசையும் பொழுது

3.“கொய்ங்…கொய்ங்.. கொய்ங்..கொய்ங்…,” “டுய்ங்…டுய்ங்… டுய்ங்…டுய்ங்…,” அதைப் போன்று

4.குளவி தன் ரீங்காரத்தால் இறைகின்றது.

இறக்கையில் வரும் நாதங்கள் அந்த உணர்வுகள் மண்ணுக்குள் இணைகின்றது. பறந்து பறந்து அந்த நாதத்தைக் கொடுக்கிறது. தன் உணர்வின் ஓலிகளை அதன் மேல் கொடுக்கின்றது.

ஆரம்பத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்து தான் மண்ணும் வளர்ச்சியின் தன்மை பெற்றது.

1.மண்ணிற்குள் கலந்திருக்கக்கூடிய அந்தக் காந்த ஈர்ப்புக்குள்

2.குளவி தன் நாதங்களைச் செருகுகின்றது.

3.செருகிய நிலைகள் கொண்டு உருண்டைகளாகச் சேர்த்து அந்தக் குளவி கூடுகட்டுகின்றது.

4.கூடு கட்டிய பின் புழுவைத் தேடிச் செல்கின்றது.

தேடிச் சென்று ஒரு புழுவைத் தூக்கி வந்து கூட்டுக்குள் வைத்து லேசாக அதைக் கொட்டுகின்றது. கொட்டியபின் புழுவிற்குக் “குளவியின் நினைவே…” வருகின்றது. அதனால்

1.புழுவின் உயிரின் துடிப்பின் வேகம் அதிகமாகக் கூடுகின்றது.

2.இயக்கச் சக்தியின் நிலைகள் அதிகமாகின்றது.

தேள் கொட்டினால் எப்படித் துடிக்கின்றோமோ விஷமான பூச்சி கடித்தால் எப்படித் துடிக்கின்றோமோ இதே போல புழுவைக் குளவி கொட்டிய பின் இந்த உணர்வுகள் தூண்டி எழுந்து வேகத்தின் நிலைகள் அதிகமாகின்றது.

கொட்டிய வேகத்தில் விஷத்தின் தன்மைகள் அந்தப் புழுவின் மேல் தோலை உடனடியாகக் கருகச் செய்து விடுகின்றது. கருகிய பின் சருகு போல ஆகின்றது.

சருகு போல ஆனபின் குளவி இரண்டாவது முறை கொட்டுகின்றது. அதன் துடிப்பு நிலை இன்னும் அதிகமாகின்றது.

1.ஒரு கோழி முட்டையில் எப்படி மேலே ஓடு உருவாகின்றதோ

2.அதே போல புழுவின் தசைகள் அனைத்தும் அழுகி

3.சருகு போலக் “கருவாக” உருவாகின்றது.

இரண்டாவது தடவை குளவி கொட்டியதும் அந்த விஷத்தன்மை பாய்ந்து புழுவை உருவாக்கிய தசைகள் அனைத்தும் அணுக்கள் அனைத்தும் அதீதமாகத் துடிக்கும் நிலைகள் பெறுகின்றது.

இந்த நிலையில் புழுவைக் கூட்டிற்குள் வைத்து மண்ணை வைத்து மூடி விடுகின்றது. மூடிய பின் (விஷத்தின் தாக்குதலால்) அந்தக் கருவுக்குள் அடங்கிய புழுவின் உயிரின் துடிப்பின் வேகம் அதிகமான இயக்கமாகும் பொழுது காந்தம் அதிகமாகின்றது.

புழுவின் உயிருக்குள் இருக்கக்கூடிய காந்தம் வேகத் துடிப்பாகும் பொழுது வெளியில் இருக்கக்கூடிய காந்தங்களை ஈர்க்கும் நிலைகள் வருகின்றது.

மண் கூட்டில் ஏற்கனவே விஷத்தைக் குளவி உமிழ்த்தியிருப்பதால் அதன் வழியாகத் தனக்குள் ஈர்க்கும் நிலைகள் வருகின்றது.

உயிரின் துடிப்பு வேகத்தால் காந்தப்புலன் அதிகமாகி ஈர்க்கப்படும் பொழுது தன் உடலுக்குள் இருக்கக்கூடிய அழுகிய புழுவின் தசைகளை ஆவியாக மாற்றுகின்றது.

1.ஒரு மத்தாப்பை நெருப்பு வைத்துக் கொளுத்தினால்

2.அதில் பல ரூபங்கள் எப்படி வருகின்றதோ அதே போல

3.உயிரின் துடிப்பிற்குள் அந்த அலைகள் வரும் பொழுது

4.குளவியின் உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆடைகளைச் சேர்த்து

5.அது குளவியின் ரூபமாக மாறுகின்றது.

புழுவாக இருந்து குளவியாக உரு பெற்றபின் தாய்க் குளவி போல் உமிழ் நீர் சுரக்கின்றது. அந்தக் கூட்டுக்குள் உமிழ் நீரைக் கொட்டுகின்றது.

மண் கூடு ஈரமான பின் துவாரமிட்டுத் தன்னிச்சையாக வெளியே வருகின்றது. முதலில் புழுவை அடைத்து வைத்த அந்தக் குளவி வந்து திறப்பதில்லை.

வெளியே வந்த பின் முதலில் இருந்த குளவி எதைச் செய்ததோ
இந்தக் குளவியும் தாய்க் குளவியின் உணர்வுக்கொப்ப அதே வேலையைச் செய்கின்றது.

ஒரு மாங்கனி உருவான பின் தனக்குள் சேர்த்துக் கொண்ட ஆற்றலை அந்த விதையைப் பூமியில் நடும் பொழுது தன் உணர்வின் ஆற்றலை அது பெருக்கி அந்த உணர்வின் தன்மை இயக்கப்பட்டு மாமரத்தின் இலையைப் போன்ற ரூபங்களை உருவாக்குகின்றது.

அது எடுத்துக் கொண்ட உணர்வுகள் பல அணுக்களாகச் சேர்த்து அது வெளியில் வந்து மீண்டும் பல அணுக்கள் கலக்கப்படும் பொழுது
வேறொரு புது வித்தாக மாறுகின்றது.

இதே போலத்தான் புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் அத்தனை சக்தியும் நமக்குள் விளைந்து விளைந்து மனிதனாக நாம் உருப் பெற்றிருக்கின்றோம் என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

“தன்னைத்தான் அறிதல்…” என்ற நிலையில் உயிரின் இயக்கங்களை அறிந்து கொள்ள… நம்மை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இதைச் சொல்கிறோம்.

இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதை…!

Astral path and way kakana mani

இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதை

 

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் நம் உணர்வின் எண்ணங்களுக்கு விண்ணை எட்டிப் பிடிக்கும் ஆற்றலையும் விண்ணிலே ஊடுருவிச் செல்லகூடிய நிலைக்கும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வலுவின் துணை கொண்டு ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தது என்றால் அதை உந்தி விண் செலுத்தும் ஆற்றலையும் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் எல்லோரும் நன்றாக இருந்தாலும் கூட யாராவது ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் “ஐய்யய்யோ.., இப்படி இறந்துவிட்டாரே…” என்று எண்ண வேண்டியதில்லை.

நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த இந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணித் தியானித்தால்
1.அந்த ஆன்மா “ ஜிர்..ர்ர்…ர்ர்..” என்று
2.(அவர்) மேலே போய்விடலாம்.
3.அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) தேவை.

ஆனால், இதை விட்டுவிட்டு… இந்தச் சரீரத்தை இங்கே புதைக்கலாமா… அல்லது அங்கே எரிக்கலாமா… என்று “அழுகக்கூடிய சரீரத்திற்கு” முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

இறந்தவர் ஞாபகார்த்தமாகச் சமாதியைக் கட்டினேன்… அதற்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் அதை மிகவும் விரும்பிச் செய்து கொண்டிருந்தால் மீண்டும் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் தான் சிக்க வேண்டும்.

1.இந்த நாய் எப்படியோ போகின்றது
2.பூராம் குப்பை என்று இதைத் தூக்கி எறிந்து விட்டு
3.அந்த உயிரான்மா அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்.
4.அதை நிலைத்த இடத்தில் நிலையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி
5.சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் இந்த உடலிலிருந்துதான் உயிரான்மாவை ஒளியாக மாற்ற வேண்டும்.

இந்த உணர்வின் நிலையை மெய் ஒளியாக்கி இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அனைவருமே அந்த மெய்ஞானிகள் சென்ற இடத்திற்குச் செல்ல வேண்டும்.

1.இந்த உடல் மண்ணிலிருந்து பெற்ற சக்தி தான் இது.
2.மண்ணுடன் கலந்து இந்த உடல் மக்கட்டும்.
3.மண்ணுக்குள் இருந்து சத்தை எடுத்து ஒலி ஒளியாக மாற்றிய பின்
4.ஒளியின் சரீரமாக நாம் பெறவேண்டும்.

மகரிஷிகள் காட்டிய மெய் வழி இது.

“குரு தட்சிணாமூர்த்தி…”

Image

LORD DHAKSHINAAMOORTHI

“குரு தட்சிணாமூர்த்தி…”

 

யோகம் என்று சொல்கிறோம் யோகி என்றும் சொல்கிறோம். அதையே இன்று “யோகா…” (YOGA) என்று சொல்கிறார்கள்.

சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள உண்மைகளைப் பார்த்தால் குரு தட்சிணாமூர்த்தி என்று சொல்கிறோம்.

மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு விண்ணுலகம் செல்லும் மார்க்கத்தைக் கற்றுத் தருபவரே  தட்சிணாமூர்த்தி என்று குருவாகக் காட்டினார்கள்.

பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தென் பகுதியிலே தோன்றிய அகஸ்தியன் தான் முதன் முதலில் விண்ணின் ஆற்றலைப் பெற்றவர் ஆவார்.

மண்ணுலகில் நஞ்சினை வென்று விண்ணுலகம் சென்ற அகஸ்தியர் தான் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்.

அதைப் பின்பற்றி அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெற்றவர்கள் அனைவருமே மகரிஷிகளாகிவிட்டார்கள். சப்தரிஷி மண்டலமாக இன்றும் சுழன்று கொண்டுள்ளார்கள்.

இந்தப் பூமியில் தோன்றிய யாராக இருந்தாலும் அகஸ்தியனின் உணர்வு சிறிதாவவது இருந்தால் தான் விண்ணின் ஆற்றலை அறியும் நிலைக்கே செல்ல முடியும்.

ஆரம்ப நிலையில் அகஸ்தியர் வாழும் பொழுது தென் பகுதியிலிருந்து தெற்கே நின்று தான் வடக்கில் துருவத்தின் வழியாக நம் பூமி கவரும் அனைத்து ஆற்றல்களையும் பெற்றார். நஞ்சினை வென்றார். துருவன் ஆனார்.

திருமணமாகி தான் பெற்ற சக்திகளை மனைவிக்கும் கொடுக்கும் பொழுது துருவ மகரிஷியாக ஆனார். இருவரும் சேர்த்து எந்தத் துருவத்தை உற்று நோக்கினார்களோ அந்த எல்லையில் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளார்கள்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பெற வேண்டிய யோகமே ஒளியின் சரீரம் பெற்று விண்ணுலகம் செல்வதாகும். அந்த யோகத்தைக் கற்க வேண்டும் நமக்குள் வளர்க்க வேண்டும் என்றால் அந்த அகஸ்தியரின் உணர்வு அவசியம் தேவை.

தென்பகுதியில் ஏற்படும் வெப்பமே வட துருவத்தில் பனிப் பாறைகளைக் கரையச் செய்து நம் பூமியினைச் சீராகச் சுழலச் செய்கின்றது.

அவ்வாறு பூமியின் வெப்ப நிலைகளைச் சீராக்கிச் சமப்படுத்தியவர் அகஸ்தியர். அகஸ்தியர் உணர்வால் தான் இந்தப் பூமி சம நிலையில் உள்ளது.

அதைப் போன்று தான் அதில் உருவான மனிதர்களான நாம் அகஸ்தியரின் இன மக்களாக உருவான நாம் அவர் அருளைப் பெற்று நம் வாழ்க்கையில் வரும் எத்தகைய இடையூறுகளையும் இன்னல்களையும் சமப்படுத்திச் சீராக்க முடியும்.

தெற்கே தோன்றிய நிலையையும் விண்ணுக்குச் செல்லும் மார்க்கத்தையும் மனிதன் அடைய வேண்டிய அந்த யோகத்தையும் கற்றுத் தரும் நிலைகளுக்குத்தான் பின் வந்த ஞானிகள் குரு தட்சிணாமூர்த்தி என்று உருவம் அமைத்துக் காட்டினார்கள்.

இந்த மண்ணுலக வாழ்க்கையன உடல் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு உயிருடன் ஒன்றிய வாழ்க்கையாக விண்ணுலகில் நிலையான  வாழ்க்கையாக வாழ்வதே நமக்கு “யோகம்…”

விண்ணுலக ஆற்றலை எடுக்கும் அந்தப் பயிற்சி செய்ய வேண்டும். அதற்கு அவசியம் விண் சென்ற குருவின் (குரு தட்சிணாமூர்த்தி)  துணை வேண்டும்.

அந்த நிலை பெறுபவர்களைத்தான் யோகி என்று சொல்ல முடியும்.

அதை விடுத்து அவரை வணங்கினால் சொத்து வரும் சுகம் வரும் புகழ் கிடைக்கும் என்றால் மீண்டும் இந்த மண்ணுலகில் தான் சுழல முடியும்.

மண்ணுலகில் தோன்றிய மனிதன் “விண்ணுலகம் செல்வதே கடைசி எல்லை…”

புராதணக் கோவில்களில் நம்மை மேல் நோக்கிப் பார்த்துச் சுவாசிக்கும்படி வைத்துள்ளார்கள் அங்கே சென்றால் “நாம் மேல் நோக்கிச் சுவாசிக்கின்றோமா…?” –

Image

Spiritual Third eye

புராதணக் கோவில்களில் நம்மை மேல் நோக்கிப் பார்த்துச் சுவாசிக்கும்படி வைத்துள்ளார்கள் அங்கே சென்றால் “நாம் மேல் நோக்கிச் சுவாசிக்கின்றோமா…?” –

 

கோவிலுக்குச் சென்றால் கீழே விழுந்து வணங்குவதைத்தான் அறிந்திருக்கின்றோம். அதைத்தான் நமக்குச் சொல்லியுள்ளார்கள்.

ஆனால் புராதணக் கோவில்களில் எல்லாம் பெரிய கொடி மரம் வைத்துள்ளார்கள். மேலே அண்ணாந்து பார்க்கும் படியாகத்தான் அதை வைத்துள்ளார்கள்.

அதே போன்று கோபுரங்களும் மிகவும் உயரமாக வைத்துள்ளார்கள். உச்சியைப் பார்க்க வேண்டும் என்றால் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்.

இதையெல்லாம் ஏன் இப்படி வைத்திருக்கின்றார்கள் ஞானிகள்?

அவைகளைப் பார்த்து நாம் வணங்க வேண்டும் என்றால் இரண்டு கைகளையும் மேலே தலைக்கு மீது தூக்கி ஒன்று சேர்த்துத்தான் வணங்க முடியும்.

இப்படி மேல் நோக்கிப் பார்த்து விண்ணிலிருந்து வரும் விண் சென்ற அந்த மகரிஷிகள் ஆற்றல்களை எண்ணி ஏங்கிச் சுவாசிப்பதற்கே அதை வைத்துள்ளார்கள். உயர்ந்த எண்ணங்களை நாம் எண்ணி எடுக்க வேண்டும்.

மலை மீது (உச்சியிலேயும்) பல கோவில்களை நம் ஞானியர்கள் நிர்மாணித்துள்ளார்கள்.

சில கோவில்களில் அந்தக் கோபுரங்களில் அமைக்கப்பட்ட சந்துகள் வழியாக விண்ணின் ஆற்றல் நேரடியாக மூலஸ்தானத்தில் இருக்கும் தெய்வத்தின் புருவ மத்தியிலே விழும்படியாகவும் வைத்துள்ளார்கள்.

யாராக இருந்தாலும் அவர்களை அறியாமலே

1.கண்ணின் நினைவு தன்னிச்சையாக மேலே கூர்மையாகச் செல்லும்படியாகவும்

2.புருவ மத்தியிலிருக்கும் உயிருடன் ஒன்றும்படியாகவும்

3.முக்கண் என்று உயிர் வழி சுவாசிக்கும்படியும் இதையெல்லாம் வைத்துள்ளார்கள்.

ஆக பூமி சமைத்து வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சுவாசிப்பதை விடுத்துவிட்டு விண்ணிலிருந்து வரும் ஆற்றலை எடுக்கப் பழகுவதற்கே கோடி மரத்தையும் கோபுரத்தையும் உயரமாக வைத்துள்ளார்கள். மலையிலும் ஆலயங்களைக் கட்டியுள்ளார்கள்.

ஆலயத்தில் கைகளைக் குவித்துக் குனிந்து வணங்குகின்றோம். கீழே விழுந்து வணங்குகின்றோம்.

இவைகள் எல்லாம் அன்றைய அரசர்கள் மக்களைத் தனக்குக் கீழ் கொண்டு வருவதற்காகப் பாத பூஜை பாத நமஸ்காரம் என்ற நிலையில் சரணாகதி தத்துவமாக உருவாக்கி விட்டார்கள்.

அதன் வழியில் தான் நாம் இன்றும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.

பாத பூஜை பாத நமஸ்காரம் செய்தால் அதற்காக வேண்டி மெச்சி நமக்கு எல்லாம் செய்வார்கள் என்று மனிதனுக்கு அடுத்த நிலை பெறுவதற்கு மாறாக மீண்டும் மீண்டும் இந்தப் பூமிக்குள் உடல் பெறும்  நிலைக்கு உருவாக்கிவிட்டார்கள்.

விண் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அவசியம் மேல் நோக்கிய சுவாசம் தேவை. மேல் நோக்கிப் பார்ப்பதற்கே ஆலயங்கள்.

உங்கள் சகஜ வாழ்க்கையில் எத்தகையை சிக்கல்கள் வந்தாலும் மிகப் பெரிய இக்கட்டான நிலை வந்தாலும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி விண்ணிலே நினைவைச் செலுத்தி இதிலிருந்து விடுபடும் உபாயமும் சக்தியும் ஆற்றலும் பெறவேண்டும் என்று எண்ணினால் வழி கண்டிப்பாகக் கிடைக்கும்.

நீங்கள் ஆற்றலைப் பெறுவீர்கள். வந்த தீமைகளை நீக்கி மகிழ்ச்சியும் பெறுவீர்கள். மிகப் பெரிய அனுபவம் ஆகும்.

கோ புரம் = கோ – மிகப் பெரிய; புரம் – இடம்

கோ வில் = கோ – மிகப் பெரிய; வில் – உள்ளே

அண்டத்தின் ஆற்றலை நமக்குள் இருக்கும் ஈசனின் துணை கொண்டு பெற முடியும் என்பதைத் தெளிவாக்கியுள்ளார்கள்.

உள் நின்று (நமக்குள்) இயக்கும் கடவுளை மறக்காமல் இருப்பதற்காகத்தான் கோவில் உள்ளே பார் என்று மூலஸ்தானத்தில் சிறிதாகச் சாமி சிலையை வைத்துக் காட்டியுள்ளார்கள்.

நமக்குள் இருக்கும் கடவுளை ஈசனை நாம் வணங்குகின்றோமோ காணுகின்றோமா அறிய முற்படுகின்றோமா…! கோவிலுக்குச் சென்றால் அவைகளை நிர்மாணித்த ஞானிகளை எண்ணுகின்றோமா… …!

நல்லதாக இருந்தாலும் சரி… கெட்டதாக இருந்தாலும் சரி… திரும்பத் திரும்ப அதையே பேசினால் “அது தான் நம் ஆன்மாவில் நிற்கும்”

soul-protections

நல்லதாக இருந்தாலும் சரி… கெட்டதாக இருந்தாலும் சரி… திரும்பத் திரும்ப அதையே பேசினால் “அது தான் நம் ஆன்மாவில் நிற்கும்”

இப்போது நம்மை ஒருவர் திட்டிவிட்டால் நாம் என்ன நினைக்கின்றோம்…? என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்…! என்றே நாம் பேசுகின்றோம்.

இந்த உணர்வின்தன்மை நாம் ஜெபிக்கப்படும் போது சூரியனின் காந்தப்புலனறிவுகள் சும்மா இருப்பதில்லை. பேசுவதை எல்லாம் அது எடுத்து அலைகளாகக் கவர்ந்து கொள்கின்றது.

என்னை இப்படிப் “பேசினார்கள்… பேசினார்கள்…” என்று சொன்னால் அது அவர்கள் காதில் விழுந்தது என்றால் அவர்கள் நம்முடன் சண்டைக்கு வருவார்கள்.

கேட்கவில்லை என்றாலும் இந்த உணர்வின் சத்தைக் காந்த அலைகள் இழுத்து நம் உடலுக்குள் விளைய வைத்துக் கொண்டே இருக்கும்.

1.இதை மீண்டும் மீண்டும் எண்ண எண்ண
2.விளைய வைத்தது எல்லாவற்றையும் உடல் இழுத்து வைத்துக் கொள்ளும்.
3.நமக்குப் (உடலுக்கு) பின்னாடி முன்னாடி இதுதான் நிற்கும்.

இப்படி இந்த உணர்வுகள் நமக்கு முன் நின்று கொண்டே இருந்தால் “என்னை இப்படிப் பேசினான்… என்னை இப்படிப் பேசினான்… அவன் மோசமானவன்…!” என்று சொல்லிக் கொண்டேயிருப்போம்.

இப்படி பேசினான் என்று சொல்லும்போது வேறு என்னென்னமோ கலந்து நாம் பேச ஆரம்பித்து விடுகின்றோம். இந்தப் பேச்சின் தொடர்கள் அனைத்தும் வெறுப்பை ஊட்டும் உணர்வாக வந்துவிடுகின்றது.

வெறுப்பு கொண்டு பேசுவது அனைத்தையும் சூரியனின் காந்த அலைகள் கவர்ந்து கொண்டு
1.நாம் பேசப் பேசப் பேச
2.நம் உடல் பக்கம் முன்னாடியே நிறுத்திவிடும்.
3.முன்னாடி நின்றவுடனே என்ன செய்கின்றோம்?
4.மீண்டும் எங்கே பார்த்தாலும் அந்த நினைவு தான் வரும்.

வெறுப்பான நிலைகளில் இருந்தால் பெண்கள் சமையல் செய்யும் பொழுது குழம்பு வைக்கும் போது பார்க்கலாம்.

எந்தக் குணத்தின் அடிப்படையில் வெறுப்பாக இருக்கின்றீர்களோ – எரிச்சலான நிலைகள் இருந்தால் மிளகாயை அதிகமாகப் போட்டுவிடுவீர்கள்.

“என்னை இப்படியே பேசி கொண்டு இருக்கின்றார்களே…,” என்று வேதனையான நிலைகள் இருந்தால் உப்பை அதிகமாகப் போட்டு விடுகின்றீர்கள்.

உங்களை அறியாமல் உப்பை கையில் அள்ளிப்போட வைக்கும். வேண்டும் என்றால் பாருங்கள்.

சங்கடப்பட்டு நீங்கள் எதை எதை வெறுக்கின்றீர்களோ அன்றைக்குக் குழம்பு வைக்கும்போது உப்பை அதிகமாகப் போட்டு விடுவீர்கள். என்ன உப்பு இப்படி அதிகமாக இருக்கின்றது…? என்று வீட்டில் சண்டை வரும்.

கோபமாக இருந்தீர்கள் என்றால் இரண்டு மிளகாயாவது கூடச் சேர்த்துப் போட்டு விடுவீர்கள். அப்பறம் எரிச்சலாக இருக்கும்.

அதே மாதிரி நீங்கள் சலிப்பு சஞ்சலத்துடன் இருந்தால்  சீரகத்தை அதிகமாக அள்ளிப் போட்டு விடுவீர்கள். சீரக வாசனை அடித்தால் உமட்டலாகும்.

அந்தந்தக் குணத்திற்குத்தகுந்த மாதிரி அன்றைக்கு குழம்பு வைக்கச் சொல்லும். குழம்பின் சுவையும் அப்படித்தான் இருக்கும்.

ஒருவரிடம் அன்றைக்குச் சலித்துப் பேசினீர்கள் என்றால் புளிக் குழம்பு வைக்கவேண்டும் என்று சொல்லச் சொல்லும். ஆனால் புளியை அதிகமாகக் கரைத்துவிட்டு உப்பைக் குறைத்துவிடுவீர்கள். கடைசியில் புளிப்பு அதிகமாகிப் போய்விடும்.

ஏனென்றால் சலிப்பை ஜாஸ்தி எடுத்துக் கொண்டால் நிச்சயம் புளிக் குழம்பு தான் வைக்க வேண்டும் சாதித்துப்
1.புளிக் குழம்பை உங்களை வைக்க வைத்து விடும்.
2.வைத்தாலும் உப்பு போடாமல் விட்டு விடுவீர்கள். புளி ஜாஸ்தி ஆகிவிடும்.
3.வேண்டும் என்றால் உங்கள் அனுபவத்தில் பாருங்கள்.

(சலிப்பாக இருக்கும் பொழுது) அதே போல் இட்லியையை புளிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து உப்பு போட்டுக் கரைத்து வைத்தால் மறுநாள் காலையில் இட்லி புளித்துக் கொண்டு இருக்கும்.

அப்பறம் இட்லியைத் தின்றால் “கல்..” மாதிரி ஆகிப் போகும்.

“ஐய்யய்யோ…! நான் சரியாகத் தானே போட்டேன் இப்படி ஆகிவிட்டது என்பார்கள். அந்தந்தக் குணத்திற்குத் தகுந்தவாறு நாம் எடுத்துப் பேசும் உணர்வுகள் துரித நிலைகள் கொண்டு இவ்வாறு இயக்கிவிடும்.

மனிதனுடைய ஆற்றல் அந்த அளவிற்கு உள்ளது.

திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப குறையான உணர்வுகளைப் பேசும் போது இந்த உணர்வுகள் இப்படி வந்து விடுகின்றது. இதைப் போலானாலும் கூடப் பரவாயில்லை. நம் உடலில் சாப்பிட்ட ஆகாரத்தையும் இந்த நிலைக்கு ஆக்கி விடுகிறது.

வியாபாரத்தில் போய் உட்கார்ந்து சரக்கை எடுத்து விலையைச் சொன்னோம் என்றால் நாம் எந்த புளிப்பாக இருக்கின்றோமோ வாடிக்கையாளர்களையும் சலிப்பாக எண்ண வைக்கும்.

துணியை காட்டினல்… “என்ன துணி இது..? போ…!” போய்க்கொண்டு இருப்பார்கள்.

1.நம் சொல் அவர்கள் காதில் கேட்டு
2.இந்த உணர்வு கண்ணிலே பார்த்தவுடன்
3.அந்தச் சரக்கை மட்டமாகச் சலிப்பால் புளிப்பாக அந்த உணர்வு போகச் சொல்லிவிடும்.

அதே மாதிரி வெறுப்பான எண்ணங்களைப் பேசி பேசி இந்த அலைகள் எனக்கு முன்னால் இருக்கும் பொழுது நாம் அடுத்தவர்களிடம் பேசும் பொழுது  இதுவும் கலந்து தான் வரும்.

நண்பர்களிடம் பேசும்போது நாம் ஏதாவது சந்தோஷமாக சொல்லப் போனோம் என்றால் அவர் காதில் கேட்டவுடனே வெறுப்பாக இருப்பார்கள். நாம் பேசுவதெலாம் அவருக்கு வெறுப்பாக இருக்கும். கூட ஏதாவது பேசினால் இன்னும் கொஞ்சம் வெறுப்பாகி விடும்.

நாம் சுவாசித்ததே நமக்கு வாகனமாக வருகின்றது என்பதற்காகத்தான் மூஷிகவாகனா  என்று காட்டுகின்றார்கள். நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்.

நான் மாம்பழத்தை தேட வேண்டும் என்கிறபோது மாம்பழத்தைத் தேடிப் போகின்றேன். ஒருவனை உதைக்க வேண்டும் என்கிற போது அவனைக் குறி பார்த்துப் பேசித் தேடிக்கொண்டே போகின்றேன்.

இதே போல் நாம் எண்ணிய நிலைகளை அதைச் சுவாசிக்கும் போது மூஷிக வாகனா…! நாம் சுவாசித்த இந்தக் குணம் இந்த உடலை அழைத்துச் செல்லுகின்றது.

இவ்வளவு பக்குவமாக ஞானிகள் கொடுத்திருக்கின்றார்கள். ஆகையினால் ஞானிகள் காட்டிய அருள் வழியில் நாம் எதைச் சுவாசிக்க வேண்டும்? எதை நம் வாகனமாக்க வேண்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியில் ஞானிகளின் அருள் வித்தை உங்களை எண்ண வைக்கின்றேன். அந்த எண்ணத்திற்குண்டான அருள் வித்தைப் பதிக்கின்றேன்.

அந்த மகரிஷிகளின் அருள்சக்தி பெற வேண்டும் ஈஸ்வரா என்று நீங்கள் எண்ணப்போகும் போது உங்களுக்கு அதைக் கிடைக்கும்படி செய்கின்றோம்.

அதை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால் சந்தர்ப்பத்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் தீமைகளை எல்லாம் அடக்கி நல்லதாக மாற்றுகின்றது.

உங்கள் சொல் செயல் பேச்சு மூச்சு பார்வை அனைத்தும் புனிதம் அடைகின்றது. மகிழ்ந்து வாழும் அருள் சக்தி கிடைக்கின்றது. செய்து பாருங்கள்.

இனி வரும் காலத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் இணைப்பில் இருப்பதே நமக்குப் பாதுகாப்பு…!

Maharishikaludan Paesungal

இனி வரும் காலத்தில் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் இணைப்பில் இருப்பதே நமக்குப் பாதுகாப்பு…! 

1.திரும்பத் திரும்ப இதைப் பதிவு செய்தாலும்
2.ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு உணர்வின் ஆற்றலை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
3.ஒரேயடியாக எல்லாச் சக்திகளையும் பெற முடியாது.
4.அப்படிக் கொடுக்கவும் முடியாது.

ஒன்றை எடுத்து ஒன்றின் சக்தி வளர்ந்த பின் அதனின் துணை கொண்டு விண்ணின் நிலைகளை ஒவ்வொன்றையும் வளர்க்கும் நிலைக்கு நீங்கள் வர முடியும்.

நான் (ஞானகுரு) பல பெரிய ஆற்றல்கள் பெற்றிருந்தாலும் அதை எனக்குள் ஜீரணிக்கும் நிலைகள் குரு பலம் கொண்டு தான் அதைப் பெற்றேன்,

ஆகையினால் எந்தக் கரண்டுடன் (இயக்கச் சக்தி) நீங்கள் தொடர்பு கொள்கின்றீர்களோ அதனின் நிலைகளைத்தான் நீங்கள் பெற முடியும்.

ஒரு TRANSFORMER இருக்கும் பொழுது வேறு லைனில் இணைப்பைக் கொடுத்தால் அந்தப் பக்கம் மாற்றிக் கொண்டு போய்விடும்.

மெய் ஒளியின் தன்மை கொண்டு அந்த உணர்வின் தன்மையை வளர்க்கும் நிலையாக அதற்குத் தகுந்த மாதிரி கரண்டை உற்பத்தி செய்ய வேண்டும்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழிப்படி
2.அந்தக் கரண்டின் தொடர் வரிசையில் செல்லும் பொழுது தான் அதை நாம் பெறக்கூடிய தகுதி பெறுகின்றோம்.

 

 

உங்கள் தலை வலியையும் மேல் வலியையும் போக்குவதற்காக நான் உபதேசிக்கவில்லை – உங்களுக்கு வரும் தீமைகள் எதுவாக இருந்தாலும் நீங்களே அதை அகற்றிக் கொள்ளும் சக்தியைத்தான் கொடுக்கின்றோம் (ஞானகுரு)

Image

உங்கள் தலை வலியையும் மேல் வலியையும் போக்குவதற்காக உபதேசிக்கவில்லை – உங்களுக்கு வரும் தீமைகள் எதுவாக இருந்தாலும் நீங்களே அதை அகற்றிக் கொள்ளும் சக்தியைத்தான் கொடுக்கின்றோம் (ஞானகுரு)

 

ஒரு விவசாய ஆபீசில் எவ்வளவோ நாள் பக்குவப்படுத்தி ஒரு வித்தைக் கொடுத்த பின் அதற்கு நீரை ஊற்றிப் பக்குவமாகப் பராமரித்து வளர்த்தால் அது “தக்க பலன் தரும்…” என்று சொல்வார்கள்.

அது போல் குருநாதர் கூட 12-13 வருடம் பெற்ற உணர்வுகளை வித்தாக அருள் வாக்காக உங்களுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.

அந்த அருள் வாக்குக்குள் மூலம் உங்கள் நினைவலைகளைக் கூட்டி அதன் மூலம் காற்றில் படர்ந்துள்ள ஆற்றல்மிக்க மகரிஷிகளின் அருள் சக்திகளை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்காகத்தான் இதைச் சொல்கிறோம்.

“ஞானிகள் சென்ற வழிகள்” அது தான்.

சாமியாரிடம் சென்றால் தலை வலி போகும் வயிறு வலி போகும் என்று எண்ணினால் அந்த நிலையிலேயே நிற்க வேண்டியது தான்.

சாமி (ஞானகுரு) சொன்ன வழியில் அந்த மகரிஷிகளின் ஆற்றலைப் பெற்றால்

1.அந்தத் தலை வலியும் வயிற்று வலியும் போக்க முடியும் அது தன்னாலே போகும்

2.அறியாது வரும் இருள் சூழ்ந்த நிலைகள் விலகும்

3.மெய் ஒளியின் தன்மை வளரும் என்ற இந்த நிலைகளுக்கு வரவேண்டும்.

உங்களையறியாது வரும் துன்பத்தை நீக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை வளர்த்துக் கொண்டால் துன்பத்தை நீக்கிவிட்டு

1.இன்பத்தை வளர்க்கும் என்றும் நிலையான இன்ப நிலைகள் பெறும்

2.பெரு வீடான பெரு நிலைகள் பெற முடியும் என்றுதான்

3.உங்களுக்குள் லேசாகச் சொல்கிறேன்.

மகரிஷிகளை நாம் தேடிச் சென்றால் மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும் – அனுபவத்தில் பார்க்கலாம்

Image

Divine Sages Light

மகரிஷிகளை நாம் தேடிச் சென்றால் மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும் – அனுபவத்தில் பார்க்கலாம்

 

வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் அதற்குள் மீண்டும் மீண்டும் தூசிகள் வந்து கொண்டே தான் இருக்கும். அதே மாதிரித்தான் அன்றாட வாழ்க்கையில் குறைகள் இல்லாத மனிதர்கள் கிடையாது.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் நம் மீது மோதும். அதற்குத்தக்க நம் சொல்லும் செயலும் மாறும்.

இருந்தாலும் சந்தர்ப்பத்தால் நம் மீது மோதுவது தீமையான உணர்வுகளாகவே இருந்தால் அதைச் சரியான முறையில் அகற்றத் தெரியவில்லை என்றால் வாழ்க்கை இருள் சூழ்ந்துவிடும்.

சிந்தனை குறைந்த செயல்களை நம்மைச் செய்ய வைத்துவிடும். பின் நல்லதை நாம் தேடிக் கொண்டு தான் இருக்க வேண்டும்.

ஆகவே அத்தகைய இருளை நீக்க வேண்டும் என்றால் ஓட்டையாக (குறைபாடு) உள்ளதை… “அதை உடனே தட்டியெறிந்து விட்டு” முழுமையான நிலைகளில் செயல்பட்டால்தான் சரியாகும்.

ஒரு பாத்திரத்தில் ஓட்டை உடைசல் அடைக்கிற மாதிரி அப்பொழுதுக்கு மட்டும் ஏதாவது சாமியைப் பார்ப்பதோ மந்திரத்தைச் செய்தோ மாயங்கள் செய்தோ சாமியாரைப் பார்த்தோ செய்வோம்..,

1.“பின்னாடி எல்லாம் சரியாகிப் போய்விடும்” என்றால்

2.எல்லாம் கழன்று ஓடி விடும்.

அந்த மாதிரி இல்லாதபடி நல்லதைக் காக்கும் நிலையாக இருளைப் போக்கும் நிலையாக மெய் ஒளியின் தன்மையை நமக்குள் வளர்ப்பதற்கு அந்த மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளைப் பெறவேண்டும்.

நல்லது வரும் பொழுது மகரிஷிகளை எண்ணுகின்றோமோ இல்லையோ தீமைகள் வரும் சமயம் அதை மாற்ற உடனடியாக அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று நம் நினைவின் ஆற்றலை மகரிஷிகளின் பால் மேல் நோக்கிச் செலுத்த வேண்டும்.

இந்தப் பழக்கம் வந்துவிட்டாலே கெட்டது வரும் சமயம் எல்லாம் மகரிஷிகளின் எண்ணங்களும் சேர்ந்தே வரும். அப்பொழுது கெட்டதை நிறுத்திவிட்டு மகரிஷிகளின் உணர்வை வலு சேர்த்தால் நம் செயல் ஞானிகளின் செயலாக மாறும்.

கெட்டது கெட்டதும் அல்ல நல்லதும் நல்லதல்ல. எதுவாக இருந்தாலும் அதற்கும் மகரிஷிகளின் அருள் ஒளியைக் கலக்கும் பக்குவத்திற்கு நாம் வருதல் வேண்டும்.

மகிழ்ச்சி நம்மைத் தேடி வரும். அனுபவத்தில் பார்க்கலாம்.

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா…! என்று சொன்னாலே “உயிரையும் வழி காட்டக்கூடிய குருவையும்” எண்ணியதாகும்

lord-eswarar

ஓ…ம் ஈஸ்வரா குருதேவா என்று சொன்னாலே… “உயிரையும் வழி காட்டக்கூடிய குருவையும்” எண்ணியதாகும்

“ஓ…ம் ஈஸ்வரா… குருதேவா…” ஒவ்வொரு நிமிடமும் நம் குருவான உயிரிடம் வேண்டுகின்றோம். நம் குருநாதர் பெயரும் அதுவாகும்.

அவர் தனக்குள் அந்த உயிரின் நிலைகள் ஒன்றி இந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் உருவாக்கி குருவின் நினைவைக் கொண்டு உணர்வின் ஆற்றலைப் பெற்றார். ஆகையினால்

1.ஈஸ்வரா குருதேவா என்றால் அவர் பெயரும் “ஈஸ்வரா…” என்று வருகின்றது.
2.எனக்கு (ஞானகுரு) அந்த உணர்வின் தன்மையைக் கொடுத்ததனால்
3.”ஈஸ்வரா குருதேவா…” என்று என் உயிரை எண்ணினாலும்
4.குருவை எண்ணியது போன்று தான்.

எனக்குள் (அவர்) இருந்து குருவாக இருந்தும் அந்த உணர்வின் தன்மை படைக்கப்படும் போது அந்த (உயிர்) குருவாகின்றது.

“ஈஸ்வரா குருதேவா” என்பது உயிர் ஈசனாக இருந்து இயக்கி உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.

1.உருவாக்கும் அந்த ஈசனுடன் ஒன்றி
2.இந்த உணர்வின் தன்மை ஒளியாக மாற்றி விண் சென்று
3.நாம் குருவாக… உலகத்திற்கு வழிகாட்டியாக… வளர வேண்டும்.

நாம் இடும் மூச்சலைகள் பிறருடைய துன்பத்தை மாய்க்கக்கூடிய நிலைகளாக வரவேண்டும்.

நாம் சொல்லும் நிலைகள் பிறரை இன்பத்தில் ஆழ்த்தி இன்பமான நிலைகளை உருவாக்கி மகிழ்ச்சி அடையச் செய்ய வேண்டும்.

1.அவருக்குள் இருள் சூழச் செய்யும் விஷத்தை மாய்த்து
2.உணர்வின் ஒளிச் சுடராகப் பெறும் அந்த தகுதியை
3.நாம் பெறச் செய்ய வேண்டும் என்று குருநாதர் காட்டினார்.

ஏனென்றால் எனக்குள் பல இன்னல்களோ அல்லல்களோ வந்தாலும் அது எனக்குள் சேராதவண்ணம் தடுக்க மெய் ஒளியின் தன்மையை உனக்குள் எவ்வாறு சேர்த்துக் கொள்ள வேண்டும்…? என்று உபதேசித்து உணர்த்தினார்.

அந்த உணர்வின் எண்ண அலைகளை எனக்குள் ஆழமாகப் பதியச் செய்தார். அவரைப் பின் தொடர்ந்து பதிவான உணர்வுகளை நான் நினைக்கப்படும் போது அந்த உணர்வின் ஆற்றல் எனக்குள் விளைகின்றது.

அவர் எனக்குள் படைத்த அந்த அருள் உணர்வின் ஆற்றல்களை உங்களுக்குள் வித்தாகப் பதிவாக்கவே இதை உபதேசிக்கின்றேன்.

வயலைப் பண்படுத்தி அதற்குள் விதைகளை விதைத்த பின் அந்த விதையின் தன்மை காற்றிலிருந்து தன் இனமான சத்தை எடுத்துத் தன்னை வளர்த்துக் கொள்கின்றது.

அதைப் போல யாம் பதிவாக்கும் ஞான வித்துக்களை வளர்த்து அந்த மெய் ஒளியைப் பெறும் தகுதியை நீங்கள் எல்லோரும் பெற வேண்டும்.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அந்த அருள் ஞான வித்தால் நாம் எல்லோரும் அந்த நிலைகள் பெறுவோமேயானால் விஞ்ஞான அறிவின் அழிவிலிருந்து நாம் மீண்டு மெய் ஞானியின் நிலைகளுக்கு நாம் செல்வோம்.

எதுவாக இருந்தாலும் இயற்கையினுடைய நிலைகள் இனம் இனத்துடன் தான் சேரும்.

1.மெய்ஞானியின் அருள் ஒளியை நாம் பெற வேண்டும் என்று எண்ணும்போது
2.அந்த இனத்துடன் இணைந்து அந்த ஆற்றலைப் பெற்று வளர்ந்து
3.அவர்கள் எங்கே விண் சென்றார்களோ அங்கே செல்ல முடியும்.
4.அந்த நிலையில் செல்வதற்குத்தான் இதை உணர்த்துகின்றோம்.

குருநாதர் அருளிய ஆற்றல் மிக்க அந்த சக்தி எனக்கு மட்டும் சொந்தமல்ல. “நம் அனைவருக்குமே சொந்தம்…” ஒன்றில்லாமல் ஒன்று இல்லை. ஒன்றுடன் ஒன்று ஒன்றித்தான் இணைந்து செயல்படுகின்றது.

சிறு துளியாக மழை பெய்தால் பூமிக்குள் அது ஈர்க்கப்படுகின்றது. மறைந்துவிடுகின்றது.

ஆனால் பெருந்துளியாக மழை பெய்யும்போது என்ன செய்கின்றது? அங்கு இருக்கக்கூடிய நிலைகள் பெரும் வெள்ளமாகப் பெருகி வலுக் கொண்டதாகி எல்லாவற்றையும் இழுத்துத் தன்னுடன் அழைத்துச் செல்கின்றது.

இதைப் போல நாம் அனைவரும் மெய் வழியில் ஒரே உணர்வாக ஆற்றல் மிக்க மெய் ஞானியின் உணர்வை “ஓ…ம் ஈஸ்வரா…” என்று எண்ணி நமக்குள் எடுக்கும்போது பெரும் வெள்ளமாகத் திகழ்கின்றது.

நம்மை அறியாமல் ஆட்டிப்படைக்கும் துன்பங்களையும் இருள் சூழச் செய்யும் உணர்வுகளையும் மாய்த்து மெய் ஞானியின் அருள் ஒளியில் அருள் வெள்ளமாக நாம் சென்றடைய முடியும்.

மெய் வழியில் மெய் ஒளியின் தன்மை பெறும்
1.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாம் அனைவரும் பெற முடியும்.
2.உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
3.நமக்குள் அத்தகைய ஆற்றல்கள் உண்டு.

அந்தச் சக்தியின் துணை கொண்டு இந்த மனித உடலிலிருந்து தான் இந்த மகா ஞானிகள் உணர்த்திய உயர்ந்த நிலையை நாம் பெற முடியும்.

இது எல்லோருக்கும் சாத்தியமானது தான்.