இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதை…!

Astral path and way kakana mani

இறந்தவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதை

 

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் நம் உணர்வின் எண்ணங்களுக்கு விண்ணை எட்டிப் பிடிக்கும் ஆற்றலையும் விண்ணிலே ஊடுருவிச் செல்லகூடிய நிலைக்கும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அந்த வலுவின் துணை கொண்டு ஒரு உயிராத்மா உடலை விட்டுப் பிரிந்தது என்றால் அதை உந்தி விண் செலுத்தும் ஆற்றலையும் பெற்றுப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் எல்லோரும் நன்றாக இருந்தாலும் கூட யாராவது ஒருவர் உடலை விட்டுப் பிரிந்தால் “ஐய்யய்யோ.., இப்படி இறந்துவிட்டாரே…” என்று எண்ண வேண்டியதில்லை.

நாம் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து உடலை விட்டுப் பிரிந்த இந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று எண்ணித் தியானித்தால்
1.அந்த ஆன்மா “ ஜிர்..ர்ர்…ர்ர்..” என்று
2.(அவர்) மேலே போய்விடலாம்.
3.அதற்கு இந்த ஒற்றுமை (கூட்டுத் தியானம்) தேவை.

ஆனால், இதை விட்டுவிட்டு… இந்தச் சரீரத்தை இங்கே புதைக்கலாமா… அல்லது அங்கே எரிக்கலாமா… என்று “அழுகக்கூடிய சரீரத்திற்கு” முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை.

இறந்தவர் ஞாபகார்த்தமாகச் சமாதியைக் கட்டினேன்… அதற்கு அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்ற நிலையில் அதை மிகவும் விரும்பிச் செய்து கொண்டிருந்தால் மீண்டும் இந்தப் புவியின் ஈர்ப்புக்குள் தான் சிக்க வேண்டும்.

1.இந்த நாய் எப்படியோ போகின்றது
2.பூராம் குப்பை என்று இதைத் தூக்கி எறிந்து விட்டு
3.அந்த உயிரான்மா அங்கே விண்ணுக்குச் செல்ல வேண்டும்.
4.அதை நிலைத்த இடத்தில் நிலையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி
5.சப்தரிஷி மண்டலத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

இந்த உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் இந்த உடலிலிருந்துதான் உயிரான்மாவை ஒளியாக மாற்ற வேண்டும்.

இந்த உணர்வின் நிலையை மெய் ஒளியாக்கி இந்த உடலை விட்டுச் சென்றால் நாம் அனைவருமே அந்த மெய்ஞானிகள் சென்ற இடத்திற்குச் செல்ல வேண்டும்.

1.இந்த உடல் மண்ணிலிருந்து பெற்ற சக்தி தான் இது.
2.மண்ணுடன் கலந்து இந்த உடல் மக்கட்டும்.
3.மண்ணுக்குள் இருந்து சத்தை எடுத்து ஒலி ஒளியாக மாற்றிய பின்
4.ஒளியின் சரீரமாக நாம் பெறவேண்டும்.

மகரிஷிகள் காட்டிய மெய் வழி இது.


Discover more from அன்பு மகரிஷிகளுடன் பேசுங்கள்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply